privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???

கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???

-

chidambaram-shoe-cartoon

sep05-sikh1போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள்.

இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகாரக் கும்பலை வழிநடத்திய சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் இருவரும் குற்றவாளிகள் என பல வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.ஐ இருவரும் குற்றவாளிகள் இல்லை என பொய்யாக நற்சான்றிதழ் வழங்கியது. இதனால் இந்தக் கயவாளிகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரசு தீர்மானித்திருக்கிறது. அன்றைக்கு ராஜீவ் கொழுப்பெடுத்து சொன்னதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

shoe_thrown_on_cithambaram_by_jarnail_singh_1இந்த அநீதியை எதிர்த்துத்தான் தைனிக் ஜாக்ரன் எனும் தினசரியில் பணியாற்றும் ஜார்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் டெல்லி காங்கிரசு தலைமயகத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சி.பி.ஐயை கட்டுப்படுத்தும் ப.சிதம்பரத்திடம் கேட்டார். கொலைகாரர்களை அங்கீகரிக்கும் காங்கிரசின்shoe_thrown_on_cithambaram_by_jarnail_singh_4 நயவஞ்சக்த்தை அதெல்லாம் ஒன்றுமில்லையென சிதம்பரம் பதில் கூற மறுத்த் போதுதான் அவர் சினமடைந்து செருப்பை வீசீனார். பின்னர் தனது நடவடிக்கை தவறென்றாலும் தான் எழுப்பிய பிரச்சினையும் கேள்வியும் இன்னமும் விடையளிக்கப்படாமல் உள்ளதென தெரிவித்தார்.

ப.சிதம்பரம் இந்த நிருபரை பெருந்தன்மையாக மன்னித்து விட்டாராம். சீக்கிய மக்களைக் கொன்ற கொலைகாரக் குற்றவாளிகளையே வேட்பாளர்களாக நியமித்த கட்சியின் நடவடிக்கை மட்டும் குற்றமாகத் தெரியவில்லை. நிச்சயம் சீக்கிய மக்கள் இந்தக் கயவாளிகளை மன்னிக்கமாட்டார்கள்.

poster_shoe_on_chithambaram_by_jarnail_singhஈழத்திலும் இதுதான் நடந்து வருகிறது. தற்போது இந்திய இராணுவம் நேரடியாக வன்னிப்போரில் பங்கேற்றிருப்பது குறித்து பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும் போரில் பயன்படும் விசவாயு உட்பட நவீன நாசாகார குண்டுகளெல்லாம் இந்தியாவின் நன்கொடையாக இலங்கை இராணுவத்திற்கு அளிக்கப்பட்டு தமிழ் மக்களை கொன்று வருகின்றன. இந்தியா நடத்தும் இந்தப்போரை எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறந்து பேசுவதில்லை. மாறாக போரை நிறுத்துவதற்கு இந்தியாவிடமே தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் மன்றாடுகிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் தன்மான உணர்வை எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் புறக்கணிப்பின் மூலமே அதைச் செய்ய முடியுமென கூறுகிறோம்.

ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் இருப்பவர்களும் பங்கேற்கும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய சரியான செருப்படி!