Monday, November 4, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

-

jayalalithathumbநேற்று இடப்பட்ட ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,  புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி..   – இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.

  1. உங்கள் வாதத்தை ஏற்க இயலவில்லை,, ஓட்டுப் போடாதேன்னு 25 வருசமா சொல்லிட்டு வர்றிய,, எத்தன பேரு கேட்டாங்க… 50 சதம் போட்டுக்கிட்டுத்தான் இருக்காக.. இன்னமும் 100 வருசம் அதே பேச்ச சொல்லிட்டு இருக்க அது என்ன பார்ப்பனீய மந்திரமா… அத மாத்தக் கூடாதா,, புரியல….

    கந்தசாமி

  2. அய்யா,, என்னால் உங்கள் வாதத்தை ஏற்க இயல வில்லை… நீங்களும் 25 வருசமா சொல்லிட்டு இருக்கிங்க,, ஓட்டு போடாதேன்னு,, 50சதம் மக்கள் போட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க.. இன்னம் எத்தன வருசம் சொல்லச் சொல்றிய,,, 100 வருசம் அதையே சொல்லிட்டுத் திரிய அது என்ன பார்பபான் ஓதற மந்தரமா… அத மாத்த வேண்டாமா….?

  3. People Run from Post to Pillar , seeking a solution , behind these Animals(two-legged!). Why is that , even after so much of deceit and agony, people are not able to think of a REAL alternative for this parliamentary democracy… ? Do we still have anything to lose except our selfishness?
    Its crystal clear that Fighting Back with anger is going to take us to where we should belong to… DO NOT VOTE ! should be our slogan and Revolution , the Dawn ! Lets, Team up !

  4. ஒட்டு போடாமல் விட்டால், காங்கிரசுக்குதான் அது ஆதரவாய் முடியும், எனவே இந்த முறை மட்டும் செயாவுக்கு ஓட்டு போடுவோம் என்ற நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது… “இடைக்கால நிவாரணங்கள்” கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த அறுபது வருடமாக ஓட்டு போட்டு… வேட்டி , சட்டையோடு இருந்த நாம் இன்று வெறும் கோவணத் துணியுடன் நிற்கிறோம்… இப்பொழுது இருக்கும் கோவணமும் பறிபோக இருக்கிற நிலையில் , “ஈழதம்மா” இலவச வேட்டி , சேலை தருகிறார் எனவே அவருக்கு ஒட்டு போடுங்கள் எனக் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது… நம்மிடம் இருந்து அனைத்தையும் பறித்தது இவர்களின் அரசியல் கூத்துக்கள் அல்லவா… என்பதுகளில் இந்தியா ஈழமக்களின் விடுதலைப் போருக்கு ஆதரவு, பிறகு இலங்கை, இந்திய சமாதானமாகி , இந்தியா கச்சத் தீவை இலங்கைக்கு மொய் எழுதி விட்டு.. அமைதிப்படை அனுப்பி தனது சிங்கள விசுவாசத்தை காட்டியது… இப்பொழுது மீண்டும் அது இலங்கையில் தனது மேலாண்மையை நிரந்தரமாக்க ஒரு இனத்தையே ஒழிக்க உதவி செய்கிறது… எந்தக் கட்சி ஆட்சியாய் இருந்தாலும் இப்படி தனது நலனுக்காக மட்டுமே இயங்கி வரும் அரசை எப்படி ஆதரிக்க முடியும்.. எதற்காக இன்னும் நாம் தேர்தலில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.. ?

    செயா, கருணாவை ஆதரிக்கும் அநாதை உள்ளங்களுக்கு… முடிந்தால் இந்த இருவரையும் கச்ச தீவு அருகில் இந்திய மீனவர்கள் மாதம் ஒருமுறையாவது சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதும் ,சித்திரவதைப்படுத்த படுவதையும், தடுத்து நிறுத்த சொல்லுங்கள்… தனது சொந்த மக்களை காக்க வழியில்லாத இரண்டு பெருச்சாளிகளுக்கு இன்னும் ஆதரவு அளித்தால் இருக்கும் கோவணத்தையும் இழந்துதான் நிற்கப் போகிறோம்…

  5. மூன்றாம் அணி என்பது ஜெயிக்கும் கூட்டணிக்கு தாவும் அணி. லாலுவைப் போல கலைஞரும் ”இருக்கோம் ஆனா இல்ல’ என நாசூக்க தனித்து போட்டியிட்டு இரு பக்க வாய்ப்புகளையும் திறந்து வைத்திருந்திருக்க வேண்டும். யாரும் இல்லை என ஜெ’யுக்கு வாக்களிப்பது முட்டாள்தனம்.

    வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுவதில் வைகோவிற்கு சளைத்தவரல்ல ஜெ. பெரியார் திக சொல்கிறது, ஜெ வாக்குறுதியை மீறினால் அவரையும் எதிர்ப்போம்ன்னு… அடப்பாவிகளா தலைக்கு தண்ணி தெளிச்சி தயார்படுத்துறது தெரியலயா உங்களுக்கு…

    பொடா தாடா’ன்னு ஒக்காந்து யோசிச்சு அந்த பொம்பள உள்ள தள்ளி காயடிக்க போகுது. ஈழத்தழிழர்களுக்கு அதிகபட்ச துரோகமிழைத்த விருது அப்போது யாருக்கு கிடைக்கிறது என பொருத்திருந்து தான் பார்ப்போம். ஆனால்… இதெல்லாம் 13தேதி வரை தான்.

    போரில் மக்கள் சாவது இயல்பென்று மறுபடி அறிக்கைகள் வந்து அலங்கரிக்கும்.

  6. தோழர் நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் “இந்திய ஆளும் வர்க்கத்தினர்களின் இருக்கும் பிரிவுகளை குறைந்த பட்சம் உபயோகிக்கவாவது ஜே யை ஆதரிக்கலாம்.. ஓட்டை பிரித்துப் போட்டால் அது திமுகவுக்குத்தான் லாபம்…“ என்ற தமிழின வாதிகளின் கூற்றில் நியாயம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.. இலங்கையில் உள்ள படுகொலைகளைத் தடுக்க வேண்டும்,, குழந்தைகள் பட்டினி கிடந்து சாவது தடுக்கப் பட வேண்டும்.. அதற்கு நீங்கள் கூறுவதெல்லாம், நீண்ட காலத் திட்டம்,, இடைக்காலத் திட்டம் என்ன,,,? இடைக்கால நிவாரணம் என்ன…? என்பதைப் பற்றிக் கூற வேண்டும்.. மார்க்சீய சல்லடை போட்டால் ஜே என்ன எந்த அரசியல் தலைவரும் அதில் சிக்கி வெளிவர இயலாது,, ஆக உடனடியாக என்ன செய்ய முடியும்….? தற்போது தேர்தல் என்ன சிறு துருப்புச் சீட்டைப் பயன் படுத்தி ஆளும் வர்க்கத்தினரை சிறு சலனம் ஏற்பபடுத்தகூட முடியாது என்பதை ஏற்க இயவில்லை.

    கந்தசாமி

  7. தோழர்,

    மிகச்சிறப்பான எதிர்வினை, கேள்விகள் கேட்டாலே “நீயும் செய்யமாட்ட எங்களையும் செய்ய வுடமாட்ட” என குழம்பித்திரியும் தமிழின வாதிகள் உண்மையில் இவர்களின் நடவடிக்கை ஈழமக்களுக்கு எதிரானது.பொத்தாம் பொதுவாக நாங்கள் சொவதுதான் சரி என கூறித்திரிகிறார்கள்.எப்படி கருணாவுடனான கூட்டை எதிர்த்தால் நீர் பார்ப்பான் என்பார்கள்.செயாவுக்கு ஏன் சேவகம் என்றால் இதையாவது செய்யுறோம் என்கிறார்கள்.

    ஏன் அவ்வளவு சிரமாக அதை செய்கிறீர்கள்.ஈழத்தில் போரை நிறுத்து அப்புறம் தேர்தலை நடத்து என அறிவிக்க வேண்டியதுதானே.அதுதானே ஈழமக்களுக்கு உதவி செய்வதாய் இருக்கும்.உடனே ஈழத்தை செயாவை முழுதாய் நம்பவில்லையாம் ஆனாலும் கருணாவுக்கு பாடம் கற்று கொடுக்க போகிறார்களாம்.

    தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் பாசக வோட கூட்டு தேர்தலுக்கு மாமியோட கூட்டு கேள்விகேகேட்ட நாங்க பார்ப்பனீயத்த ஒழிக்கபோறோம்னு பேச்சு” யப்பா பாவம் பெரியார விட்டுடுங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போவட்டும்.

  8. தற்போதய நிலையில் ஈழப்பிரச்னை ஒன்றுதான் கரை சேர்க்கும் என்பதால் வேண்டா வெறுப்பாகத்தான் ‘தனி ஈழம் அமைப்பேன்’ என்று ஜெயலலிதா சூளுரைக்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவும் கொடுக்கப் போகிறார்.

    ஈழப்பிரச்னையில் அப்பாவிகள் கொல்லப்படுவதால் நாம் ராஜபக்ஷேயை கண்டிக்கிறோம். அதே நேரம் தாங்கள் போரில் வெல்வதற்க்காக அதே ஈழத்தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் விடுதலைப்புலிகளை நாம் தட்டிக் கேட்கிறோமா? என்ற ரீதியிலும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.

    • //அதே நேரம் தாங்கள் போரில் வெல்வதற்க்காக அதே ஈழத்தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் விடுதலைப்புலிகளை நாம் தட்டிக் கேட்கிறோமா? என்ற ரீதியிலும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.//

      Suvanappiriyan, அப்படி யாரும் தப்பிதவறி நினைத்துவிடக் கூடாது என்பதில் தமிழ் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் எவ்வளவு அவதானமாக இருக்கிறார்கள். உண்மைகள் தெரியவர கூடாது என்பது தானே அவர்களுக்கு முக்கியம்..

  9. BJP distances itself from Eelam demand

    http://sify.com/news/fullstory.php?a=jfjs7yebbdd&title=BJP_distances_itself_from_Eelam_demand&?vsv=TopHP1

    2009-05-09 18:33:24
    Last Updated: 2009-05-09 18:34:25

    Chennai: The Bharatiya Janata Party (BJP) Saturday distanced itself from the demand for a separate Tamil homeland in Sri Lanka and said instead that the Tamils needed “peaceful honourable existence through self rule”.

    “Both AIADMK and DMK have wrongly backed the formation of Tamil Eelam in Sri Lanka. We believe in focussing on the relief for the suffering Lankan Tamils as that is what the people of Tamil Nadu want,” senior BJP leader
    M Venkaiah Naidu said.

    “After meeting the people in the length and breadth of Tamil Nadu, I have understood that the people here are angry with the Congress-DMK party combine for having failed to pressurise Sri Lanka to halt the war.

    “Instead of a separate homeland Eelam, Tamils have a crying need for a peaceful honourable existence through self rule,” Naidu said.

    “Chief Minister M Karunanidhi is unable to pressurise the central government to do something useful in the matter and on that count the people here are unhappy with DMK,” he observed.

    “The so-called interventions by National Security Advisor M K Narayanan, the shutdowns and the brief fast were ineffective and useless. Other Congress leaders like Rahul Gandhi are only paying lip sympathy to the Tamils,” Naidu added.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க