Wednesday, October 9, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

-

tamilnadu1

முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.

கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்திறங்கிய கல்லுளி மங்கன் மன்மோகன் சிங், பத்திரிகையாளர் சந்திப்பில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்டிருப்பதாக அருளினார். நல்ல அக்கறை!

சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து, அதிகாரிகளை அனுப்பியும் அக்கறை கொண்டிருக்கும் காங்கிரசு பெருச்சாளிகள் என்ன திமிரிருந்தால் தங்களால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக பேசுவார்கள்? போரை நிறுத்தவில்லை என அன்றாடம் எக்காளமிட்டு வரும் ராஜபக்க்ஷே அரசு இறுதி யுத்தம் என்ற பெயரில் பாதுகாப்பு வலையப் பகுதியில் மிச்சமிருக்கும் மக்களை கூண்டோடு அழித்து வருகிறது. இந்த கொலை பாதகச் செயலுக்கு இந்திய அரசு உதவுவதை நன்றியோடு வெளிப்படையாகவே இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகிறது.

செருப்பை வீசினால் படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பான தூரத்தில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் மன்மோகன் சிங், பயங்கரவாதிகள் தாக்குவது இருக்கட்டும், தன்னை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி கூட பறப்பதை அனுமதிக்க முடியாது என விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக வந்திறங்கும் சோனியா இருவர் மீதும் சிறு துரும்புகூட படக்கூடாது என்பதற்காக எவ்வளவு கோடிகள் செலவு, எத்தனை போலீசார் பாதுகாப்பு?

ஆனால் கேட்பார் கேள்வியின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்படும் ஈழதமிழ் மக்களின் பிணங்கள் எவ்வளவு என்பது கூட எண்ண முடியாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாடகங்கள்? ஈழத்தை பிணக்காடாக மாற்றும் இலங்கை அரசின் செயலுக்கு பால் வார்க்கும் காங்கிரசு அரசு, காங்கிரசு அரசுக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அரசு, மத்தியில் பொறுக்கித் தின்பதற்காக தொகுதிகளை வெல்லவேண்டுமென்றால் கருணாநிதியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக ஈழத்தை வலிந்து பேசும் ஜெயலலிதா….இவர்கள் கையில் ஈழம்தான் என்ன பாடுபடுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சோனியா அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து தீவுத்திடலில் இறங்கி ஒரு இருபது நிமிடம் பேசிவிட்டு, போஸ் கொடுத்து விட்டு, கையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவை தியாகத்தின் திருவிளக்கு என்றார் கருணாநிதி. அன்னை சோனியா வாழ்க என்று முழங்கிய திருமாவளவன் கைகளை மேலே கூப்பி எப்படியாவது ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தொழுதார். தீவுத் திடலையே இராணுவக் கோட்டை போல முற்றுகையிட்ட போலீசின் பாதுகாப்பிற்குள் கூட்டிவரப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க காங்-தி.மு.கவின் தேர்தல் கூட்டம் ஒருவழியாக முடிந்தது.

சோனியா சென்னையில் இருந்த நேரம் அவரை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.க.இ.கவுன் அதன் தோழமை அமைப்புக்களும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் முன்பு இரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பி போ என்ற முழக்கத்துடன் எழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தின. பின்னர் பெண்கள், குழந்தைகள், பார்வையற்றவர்கள் தவிர 77 தோழர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வராதபடி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின் பழ.நெடுமாறன், பாரதிராஜா தலைமையில் தமிழார்வலர்கள், திரைப்படத்துறையினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களில் 109பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மெமோரியல் ஹால் அருகே தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பெண்கள் குழுவினர் முப்பது பேர் ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

ம.க.இ.கவின் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளியை இங்கே வெளியிடுகிறோம்.

[flashvideo file=”https://www.vinavu.com/wp-content/files/arpattam.flv /]

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


  1. கான்கிரசு எப்போதுமே தமிழனுக்கு எதிரிதான்!
    அடுத்த தலைமுறைக்கும்,இதை பறை சாற்றுவோம்!

  2. //மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.//

    இந்த ஈன, மான, ரோஷம் கெட்ட ஜென்மங்களால் எப்படி தான் பொய் பேசமுடிகிறதோ?பிழைப்பு நடத்த முடிகிறதோ? ஒரே நாளில் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவித்தமிழர்கள் இல‌ங்கை அரசால் வன்னியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு பெயர்தான் போர்நிறுத்தமா?

    இவர்களின் Special Envoy இலங்கைக்கு சும்மா பெயருக்கு போய் ராஜபக்ஷேக்களை சந்த்திது போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்தி உள்ளோம் என்று சொல்லி ஒரு மணி நேரம் கூட ஆகாது; இலங்கை அரசின் சிங்கள சாணக்கியர்கள் அறிக்கை விடுவார்கள். இந்தியா போர்நிறுத்தத்தை பற்றி பேசவே இில்லை என்று. It is a cycle.

    ஈழத்தமிழர்களைத்தான் இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. தமிழக உறவுகளே உங்களையாவது தயவு செய்து காப்பாற்றிகொள்ளுங்கள்.

  3. பிரபாகரன் ஒரு உலக மாவீரன் அவரை நினைத்து நாம் பெருமை பட வேண்டும் . தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் தமிழ் ஈழம் மலரும் .இலங்கை ராணுவம் வீழ்வது உறுதி . தனி தமிழ் ஈழம் அமைவது உறுதி. அதை எந்த கொம்பனாலும் ஒன்னும் தடுக்க முடியாது. விரைவில் ராணுவத்திருக்கு பதில் அடி உண்டு

  4. ரத்தக் காட்டேரி சோனியாவின் தமிழக வருகை தமிழர்களின் அவமானத்தின் சின்னம். மனிதநேயத்திற்கு விழுந்த மரண அடி. தமிழகத்தின் கருப்பு தினம். காட்டிக் கொடுத்து மாமா வேலை பார்க்கும் சிதம்பரத்தை செருப்பால் அடித்த சீக்கியரின் சொரணையில் ஒரு துளியேனும் நம்மிடம் இருந்திருந்தால், ஈழத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டே போர் நிறுத்தம் நிகழ்ந்துவிட்டது என்று வேசியினும் கீழாய்ப்போய் பொய்களை பசப்பி திமிருடன் நம் மண்ணிலேயே வந்து ஓட்டுப் பிச்சை கேட்டு வந்திருப்பாளா இந்த இத்தாலிய இடிஅமீன்? நம்மில் பலரிடம் ஒத்த கருத்தில்லை. ம.க.இ.க போன்ற ஒரு சில இயக்கங்களைத் தவிர மற்றைய ஏனையோரும் ஏன் இணைந்து போராட முன் வரவில்லை? தமிழ் நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டாமா?! இதற்காக நாம் இன்னோர் முறை பிறந்து வரப்போவதில்லை. எனவே அனைவரும் போராட வாரீர் என இதன் மூலம் அழைக்கின்றேன்.
    ஒரு சில அறிவுஜீவிகள் சொல்வது என்னவென்றால், “இவ்வளவு மக்கள் சாவதை பிரபாகரன் தான் சரணடைவதன் மூலம் தடுத்திருக்கலாமே?!” என்பதுதான். பிரபாகரன் சரணடைந்தால் மட்டும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தந்துவிடுவானா அந்த ராசபக்சே? யார் சரணடைந்தாலும் யார் செத்தாலும் சிங்கள அரசின் இந்த இன அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

  5. கருநாநிதி அவர்கள் தேர்தலில் தோற்று யெயலலிதா வெற்றி பெற்றால் தமிழீழத்திற்கு தமிழக மக்களிடம் கிடைத்த அங்கீகாரம் ஆகும்.வந்த பின் யெயலலிதா மாறினால் பரவாயில்லை.

    புலிப்படை பல்ம் இழந்து விட்டது என்று சொல்லும் நிலையில் தமிழீழம் தான் தீர்வு என்று யெயலலிதா உரக்க சொன்னது மிகவு நிதானமான அரசியல் நகர்வுதான்.

    • தமிழீழதலைவி ஜெயலலிதா என்பதால் உங்கள் கருத்தை நானும் வழிமெழிகிறேன்.

      • //தமிழீழதலைவி ஜெயலலிதா……//

        ஈழவிடுதலை வரலாறு ஆயிரமாயிரம் அப்பாவி ஈழத்தமிழனின் இரத்தத்திலும், தியாகி சிவகுமாரன் முதல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈடிணையற்ற தற்கொடைகளாலும் அறுபது வருடங்கள் ஆனபின்னும் முடிவில்லாத வேதனையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

        எதை வைத்து ஜெயலலிதா தமிழீழத்தின் தலைவி என்று அவருக்கு பட்டம் கொடுக்கிறீரகள்? தமிழீழத்தின் தலைவி/தலைவர் பட்டம் என்பது ஈழத்தமிழர்கள் யாரை மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அது அவருக்குத்தான் பொருந்தும். ஈழத்தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட இதுவரை தூக்கி போடாத ஜெயலலிதாவுக்கு தமிழீழத்தின் தலைவி பட்டமா? முடிந்தால் நீங்கள் வழங்கிய பட்டத்தின் எந்த Criteria வை ஜெயலலிதா meet பண்ணியிருக்கிறார் என்று விளக்குங்கள்.

      • தமிழீழத்தை ஒபாமா அல்லது ஜெயலலிதா எடுத்து தந்தால் தமிழர்கள் காலம் பூராக அடிமையாக இருப்பார்கள். வாழ்க தமிழீழம்! வாழ்க தமிழனின் அடிமைப் புத்தி!!

  6. இன்னும் 48 மணி நேரத்தில் புலிகள் அழிக்கப் பட்டுவிடுவார்கள் என்று கோத்தபாய ராஜபக்சே சொல்கிறார்.
    அதன் அர்த்தம் அங்கு உள்ள தமிழர்கள் கொல்லப் படுவார்கள் என்பதே.
    பிரிட்டனும் பிரான்சும் ஈழ விவகாரத்தை ஐநா பாதுகாப்புக்கு சபைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றன ,அதற்கு பாதுகாப்புக்கு சபையில் உள்ள பதினைந்து நாடுகளில் பதினோரு நாடுகள் ஆதரவு அளித்தாலும் சீனா ,ரஷ்யா வியட்நாம் ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கிற படியால் அதனை கொண்டுவர முடியவில்லை.
    ரஷ்ய எதிர்ப்பின் பின்னணியில் இந்தியா இருப்பதாகாக் கூறப் படுகிறது.
    தற்போதைக்கு இந்தியா சுழற்சி முறையிலான நிரந்திரம் இல்லாத பத்து நாடுகளில் ஒன்றாக பாதுகாப்புக்கு சபையில் இல்லாவிட்டாலும் பின்னணியில் இருந்து இலங்கைக்கு முட்டுக் கொடுத்து பல காரியங்கள் செய்கிறது.

    இன்றைய ஈழத்தமிழரின் படுகொலைகள் ,இக்கட்டான நிலைக்கு பல நாடுகள் காரணமானாலும் முதன்மைக் காரணம் இந்திய காங்கிரஸ் அரசுதான்.
    இந்திய அரசின் பலத்த ஆதரவு காரணமாகத்தான் இலங்கை அரசு இவ்வளவு துணிவுடன் கோர தாண்டவம் ஆடுகிறது.

    இப்படி இருக்கும்போது ,
    ஒரு மாநிலத்தின் பொறுப்புள்ள முதல்வர் போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று பச்சை பொய் சொல்கிறார்.
    மக்கள் தொகையில் உலகத்தில் இரண்டாவது பெரிய நாட்டின் ,ஜனநாயக நாடு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டை ஆளும் கட்சியின் தலைவி மேடையில் இருந்து கொண்டு அங்கு போர் நிறுத்தம் வந்து விட்டது ,தமிழர்களுக்கு உதவுகிறோம் என்று அண்டப் புளுகு புளுகுகிறார்.
    வன்னியில் இரண்டாயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டுக்கொண்டு இருக்கும் நாளில் அங்கு தமிழர்களை இலங்கை அரசு கொல்லவில்லை என்று இந்தியாவின் பிரதமர் மண் மோகன் சிங்க் சொல்கிறார்.
    ஈழதமிழருக்கு செய்யும் கொடுமை ஒருபக்கம்
    ஆனால் தமது குடிமக்களான இந்தியத் தமிழரை இப்படி மோசமாக நடத்தி பித்தலாட்டம் செய்கிறார்களே.!

  7. ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! – வினவு!…

    முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில…

  8. நெடுமாறன், பாரதிராஜா உள்பட 180 பேருக்கு ஜாமீன்
    http://thatstamil.oneindia.in/news/2009/05/12/tn-nedumaran-bharathiraja-released-on-bail.html

    சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டி கைதான இயக்குநர் பாரதிராஜா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் உள்ளிட்ட 180 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    சோனியா காந்தி சென்னைக்கு வந்தபோது, சைதாப்பேட்டை மறைமலைஅடிகளார் பாலத்தின் அருகில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 67 பேரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 113 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் வக்கீல் சங்கரசுப்பு உள்பட வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மாஜிஸ்திரேட்டு பெஞ்ஜமின் ஜோசப் முன்பு வந்தது. அப்போது பாரதிராஜா உள்பட கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த கைது முறையாக செய்யப்படவில்லை. மேலும், இவர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுக்கவே சிறையில் அடைத்து உள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என வக்கீல்கள் கோரினார்கள்.

    அரசு தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கைது பற்றி முறையாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்றார்.

    ஆனால் அரசுத் தரப்பு கோரிக்கையை நிராகரித்த மாஜிஸ்திரேட், பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 180 பேரையும் ரூ. 5000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    மேலும், 180 பேரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது. மேலும், தேர்தலில் வன்முறை ஈடுபடமாட்டோம் என்று பிரமாண ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிபதி விதித்தார்.

  9. துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக்காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும்கொடுமை’ என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

  10. இந்தியாவே ஈழப் போரை நிறுத்து!
    இத்தாலியின் அறுதலியே இந்தியாவை விட்டு வெளியேறு!
    மாமியார் மருமகள் சண்டையில் மனித குலத்தின்
    முதல் குலத்தையே கருவறுக்க நினைக்கும்
    இத்தாலியின் அறுதலியே இந்தியாவை விட்டு வெளியேறு!
    இந்தியாவே ஈழப் போரை நிறுத்து!
    மாமியாரைக் கொன்ற இனத்தை பிரதம மந்திரியாக்கி அழகு பார்த்தாய்
    மாமியார் பெற்றெடுத்த தமிழீழ புலிகளுக்கு கருமாதி செய்ய நினைக்கிறாய்!
    கறுப்புக் கண்ணாடிட்ட தமிழினத் துரோகியே ஈழப் போரை நிறுத்து!
    களப்பிரர் காலத்தை வென்று கறுப்புக் கண்ணாடிட்ட தமிழினத் துரோகியே
    உலகத்தை விட்டு வெளியேறு!

    • Well said………but you indians even TAMILNADU have put her on the TOP!!! because you people just vote for money …… i meant not you personaly but we ll see what is the result of tamilnadu election next days. Suthan From Germany

  11. அகில உலக ஜெயலலிதா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவருக்கு,

    என்ன கொடுமை சார் இது.

    //தமிழீழத்தை ஒபாமா அல்லது ஜெயலலிதா எடுத்து தந்தால் தமிழர்கள் காலம் பூராக அடிமையாக இருப்பார்கள். //

    ஜெயலலிதாவும் ஓபாமாவும் வாங்கித்தரவும் எடுத்துத்தரவும் இது ஒண்ணும் அவங்க வீட்டு சொத்து இல்லீங்க. இது ஈழத்தமிழர்களோட அடிப்படை உரிமை பிரச்சனைங்க. அடிப்படை உரிமை என்பது ஒண்ணும் Luxury Life இல்லீங்க.

    அடுத்தவங்க “எடுத்து”த்தர வராதுங்க சுதந்திரம் என்பது. அதுக்கு ஒவ்வொரு இனமான உள்ளவனும் தன் வரையில் முற்சி செய்யணும்.

    கொஞ்சம் தூக்கம் கலைஞ்சு யோசிச்சு பாத்தீங்கண்ணா இதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சாலும் புரியுமுங்க. ஜெயலலிதாவும் ஓபாமாவும் தமிழீழம் “எடுத்து” தருவாங்கன்னுட்டு, மறுபடியும் தூங்கிடாதீங்கண்ணா!

    • ஜெயலலிதா அம்மா மேலே நம்பிக்கை வைச்சிருக்கிறதா நடேசன் சொல்லி இருக்கார்.
      நீங்க தமிழீழ விரோதி போலிருக்கு.

      • அகில உலக ஜெயலலிதா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவருக்கு,

        //நீங்க தமிழீழ விரோதி போலிருக்கு.//

        First of all, I don’t appreciate people who lable me. That is a wrong impression you got about me. I hope, in the future, you would consider the fact that I am not against the Tamil Eelam concept or Eelam Tamils.

        We have been struggling to gain our legitimate political aspirations in Eelam for so long. We are all sick and tired of this bloody war in Sri Lanka. A polititian like Jeyalalitha might have given promises during the election campaign that she would work towards gaining Eelam Tamils’ rights or even Tamil Eelam if she is elected in this election. In my view, this is a “False Reassurance ” for people like me who are in agony and desparate to save thousands of innocent lives in Vanni. We have been dealing with death and despair for decades. Is it our destiny that we believe in these election promises and become despairing when the polititians don’t keep their election promises? Eealm Tamils have been deceived by Sri Lankan and Indian-Tamil Nadu polititians in the past.

        Enough is enough.

        We can not rely on these polititians only if we want freedom. Each and every single Eelam Tamil should contribute his or her part. Yes, we can give the polititians and govt. pressure to act immediately in Eelam Tamils issues. Would it be enoug to save Tamils in Vanni? If we all continue to raise our voice collectively despite the differences as a nation/community for Eelam Tamils, international Community and United Nation will act sooner than later. Then, we may need a polititian’s strong voice to support us. Until then, yes we have to be on streets chanting for Eelam Tamils all around the world. Continue to write, speak, demonstrate peaceful rallies for Eelam Tamils. I am positive that Nadesan.P, the political spoke person for LTTE, will NOT say “no” to all these.

        The Sri Lankan Govt. has been rejecting the request for a ceasefire by UK, France, Canada etc. Therefore, we can not stop until we get permanent ceasefire in Tamil Eelam.

        • ரதி

          உங்களுக்கு தமிழில் எழுதத் தெரியுமென்பதால் அதிலேயே எழுதலாமே? தேர்தலுக்காக ஈழம் வாங்கித் தருவேன் என ஜெயலலிதா பேசுவை இங்குள்ள ஈழ ஆதரவாளர்களும், புலம் பெயர்ந்த ஈழ மக்களில் கணிசமான பிரிவினரும் நம்புகிறார்களே ? இந்த நம்பிக்கை எப்படி ஏன் வந்தது என்பதை புரிந்து கொண்டாலும் அந்த நம்பிக்கை ஈழமக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒன்று என்பதை சொன்னாலும் பலர் ஜீரணிக்க மறுக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில நாட்களில் தேர்தல் முடிவுகளும், கூட்டணி பேரங்களும் முடிவு செய்யப்படும் நேரத்தில் ஜெயாவின் ஈழம் மெல்ல உதிர்ந்து மறையும்.

          வினவு

          • வினவு,

            இனிமேல் தமிழிலேயே எழுதுகிறேன்.

            /தேர்தலுக்காக ஈழம் வாங்கித் தருவேன் என ஜெயலலிதா பேசுவை இங்குள்ள ஈழ ஆதரவாளர்களும், புலம் பெயர்ந்த ஈழ மக்களில் கணிசமான பிரிவினரும் நம்புகிறார்களே ? //

            மிகவும் வேதனையோடுதான் சொல்கிறேன், ஜெயலலிதா இன்றுவரை இலங்கை அர‌சை வன்னியில் பாரிய குண்டுத்தாங்குதல்களை நிறுத்தச்சொல்லி குறைந்த பட்சம் ஒர் அறிக்கையாவது விட்டிருக்கிறாரா? ஒருவேளை, அதை நான் கவனிக்கவோ அல்லது படிக்கவோ தவறி விட்டேனா? தெரியவில்லை. போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்க்ள் என்று ஜெயலலிதா சொன்னது என் கனவா? திடீரென்று, இவர் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைப்பற்றி பேசும் போது எனக்கு நம்பிக்கை வர மறுக்கிறது.

            நான் எனது தனிப்பட்ட கருத்தை தான் எழுதினேன். ஈழ ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழமக்களில் கணிசமானவர்களின் கருத்தோடு என் கருத்து இந்த விடயத்தில் ஒத்துப்போகாமல் இருக்கலாம். நான் ஈழப்பிரச்சனையால் புலம் பெயர்ந்து வாழ்கிறேன். என்னைப்போல் அனேகமான புலம்பெயர்ந்தவர்களும் வன்னி உறவுகளை நினைத்து தாங்கமுடியாத வேதனையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜெயல‌லிதாவின் தேர்தல் வாக்குறுதி ஓர் காயத்திற்கு மருந்து தடவுவது போலுள்ளது என்றுதான் நினைக்கிறேன். அதுக்காக அவர்களை மனம் நோக முடியுமா? கருணாநிதிக்கு நிறையவே சந்தர்ப்பங்கள் கொடுத்தாகிவிட்டது. அவரால் ஒரு ஈழத்தமிழனின் உயிர் கூட காப்பற்றப்படவில்லை. இப்பொழுது, ஜெயலலிதாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், இவர் போன்ற அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் இறுதியில் எங்களை வேதனைப்பட வைத்த கதைகள் தான் அதிகம். ஒரு வேளை, ஏதாவது அதிசயம் நடந்து ஜெயலலிதா உங்களினதும் என்னதும் கருத்தை பொய்ப்பித்தால் சந்தோசப்படுவோம்.

            ஈழ ஆதரவாளர்களின் பேச்சுக்களும் ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்ற ரீதியில் இருந்ததனால் நானும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். இவர்களுக்கு என்னவாயிற்று என்று?

            எது எப்படியன்றாலும், எந்த அரசியல் வாதியின்” பேச்சிலும்” தீரப்போவதில்லை வன்னித்தமிழனின் வேதனை. ஈழப்பிரச்சனை இப்பொழுது மக்கள் போராட்டமாக உலகின் மூலைமுடுக்கில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுக்கப்படுகின்றன. இப்பொழுதுதான் ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக தமிழீழத்திற்காக குரல் கொடுக்கிறார்கள். இதை இப்படியே தொடர்ந்து செய்வோமானால் ஈழத்தமிழனுக்கு நிச்சயமாக விடியும் என்று நம்புகிறேன்.

            தனக்காக குரல் கொடுக்க முடியாத வன்னித்தமிழனுக்காக நாம் தொடர்ந்துபேசுவோம், எழுதுவோம், நாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு போராடுவோம். கூடவே, யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் அல்லல் படும் தமிழனையும் தயவு செய்து மறக்காதீரக்ள்.

      • முன்பு ஜெயலலிதா புலிகளுக்கு எதிரியாக இருந்தார். அப்போது நாங்களும் அவரை தமிழின எதிரி என்று சொன்னோம். தேர்தல் நேரம் பார்த்து தமிழீழம் வாங்கித் தருவேன் என்று ஜெயலலிதா பல்டி அடித்தார். British Tamil Forum போன்ற வெளிநாட்டு புலிகளின் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தேர்தல் தினம் அன்று கூட சீமான் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட சொல்லி பிரச்சாரம் செய்தார். ராமதாஸ், வைகோ போன்ற புலிகளின் தமிழக கூட்டாளிகளும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து விட்டனர். நிலைமை அப்படி இருக்கிறது. புலிகளுக்கு ஆதரவானவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவை ஆதரிப்பது தானே முறை? அப்படி ஆதரிக்காத ரதி போன்றவர்கள் தமிழினத் துரோகி, ராஜபக்சவின் கைக்கூலி என்று புலிகள் எமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

    • //If we all continue to raise our voice collectively despite the differences as a nation/community for Eelam Tamils, international Community and United Nation will act sooner than later. //

      பிரிட்டனில் வாழும் புலி ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

      இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் ஏனைய நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் வன்முறையாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

      British parliamentarians furious at pro Tamil Tiger demonstrations in London http://www.lankaenews.com/English/news.php?id=7667

      Latest Tamil Protest Sparks Angry Viewer Reaction

      http://www.citynews.ca/news/news_34563.aspx

      கடந்த 10.05.09 திகதியன்று பிரான்ஸிலுள்ள பெளத்த ஆலயத்தினையும், அதே நாளில் லண்டனிலுள்ள ஆலயத்தினையும் புலி ஆதரவு இனவெறியர்கள் தாக்கி நாசப்படுத்தியுள்ளனர்.

      இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் அமைந்துள்ள சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடமும் தாக்கப்பட்டிருக்கிறது.

      • உலகத்தமிழர் அண்ணா,

        இப்படித்தாங்க புலத்தில் தமிழன் தன் உறவுகளுக்கு வன்னியில் நடக்கும் கொடுமைகளை கண்டு சில சமயங்களில் கொத்தித்துப் போகிறான். போதாக்குறைக்கு எங்களை “பயங்கரவாதிகள்” என்று சில ஈழத்தமிழர்களே பட்டம் கட்டுகிறார்கள். இப்படியெல்லாம் கஸ்டங்களையும் அவப்பெயரையும் சில சமயங்களின் சந்திக்க நேரிடுகிறது. உங்கள் இணைப்பிற்கு நன்றி அண்ணா.

        உறவுகளே இதையும் கொஞ்சம் பாருங்கள்.
        http://www.yarl.com/forum3/index.php?showtopic=58296
        இறுதியில் உள்ள படங்களையும் பாருங்கள்.

      • ரதி அக்கா, நீங்களும், உங்களோடு இருப்போரும் அடுத்தவரை மடையர் என்று நினைப்பது தெரியும். அதனால் மடையருக்கு படம் காட்டும் போது கவனமா காட்டுங்கோ? ஏனென்றால் உங்களோட இருக்கிற மடையர்கள் ஒரிஜினலையும் மறந்து இணைச்சிடினம்? நீங்கள் இதுவரை காட்டிய படங்களில் இது முக்கியமான ஒரு படம்.

        The real drama of Pro LTTE media
        http://www.lankaenews.com/English/news.php?id=7678
        Here’s the original picture they published and below is the other. One cropped with what they want you to see, and the other with what really went on. This wasn’t the first time that Tamil media resorted to using manipulated photos, as we exposed their forgeries in a few of our earlier posts. What is amazing is that the so called legitimate media, with journalistic honour continue to pick these without any hesitation.

        Where is their unbiased reporting that they expact to deliver from the front line?

        • உன்னைப்போல ஒரு தமிழ் துரோகி இருந்தால் எங்கே நம் ஈழத்துக்கு விடுதலை. நீ ஒரு எட்டப்பன் அதனால் தன ஸ்ரீலங்கா ராணுவம் செய்யும் கொடுமைகளை பற்றி பேசவில்லை.

  12. இயற்கை அன்னையே! இயற்கை அன்னையே!!
    இரண்டாயிரத்து நாலிலெ சுனாமி தந்து
    ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட யுள்ளனர் என்று
    எச்சரித்த இயற்கை அன்னையே!!!
    சீனா இந்தியா பாகித்தானில் பூகம்பம் தந்து
    ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட யுள்ளனர் என்று
    எச்சரித்த இயற்கை அன்னையே
    முற்றிலும் இறந்த ஏழைத் தமிழ்ப் புலவன் இறைஞ்சுவது
    தென்னிலங்கையும் கொழும்பும் கடலினுள் மூழ்க
    ஒரெ ஒரு சுனாமியும் பூகம்பமும் தந்திடுவாய் இன்றெ இப்பொழுதெ
    முற்றிலும் இறந்த ஏழைத் தமிழ்ப் புலவன் இறைஞ்சுவது

  13. அகில உலக ஜெயலலிதா மன்றத்தை சேர்ந்தவருக்கு,

    //புலிகளுக்கு ஆதரவானவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவை ஆதரிப்பது தானே முறை? //

    இப்படி புலிகள் ஏதாவது அறிக்கை விட்டார்களா? அதாங்க, ஜெயலலிதாவை ஆதரியுங்கள் என்று. நான் அப்படி ஒரு செய்தியும் படிக்கலீங்க. அப்படி ஒண்ணும் எனக்கு தெரிய‌லைங்க.

    //அப்படி ஆதரிக்காத ரதி போன்றவர்கள் தமிழினத் துரோகி, ராஜபக்சவின் கைக்கூலி என்று புலிகள் எமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.//

    எனக்கு புலிகளோடு எந்த தொடர்பும் கிடையாதுங்க (I have no affliation with LTTE). அப்படி உங்களுக்கு ஏதாவது சொல்லியிருந்தாங்கண்ணா, அப்புறம், அது உங்களோட இஷ்டமுங்க.

    எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்குங்களே? இதுக்கு முன்னாடி நாம‌ எங்கயாச்சும் சந்திச்சிருக்கோமா?

    • //எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்குங்களே? இதுக்கு முன்னாடி நாம‌ எங்கயாச்சும் சந்திச்சிருக்கோமா?//

      ஏன் இருக்காது? நாங்கள் போகும் ஆர்ப்பாட்டங்களில் எல்லோரும் ஒன்றையே திருப்பித் திருப்பி சொல்ல வேண்டி இருக்கிறது.
      We want Tamileelam. Our leader Pirabakaran. இப்படி ஒருவர் சொல்வார். நாங்கள் திருப்பி சொல்வோம். நீங்கள் டொரோண்டோ போனாலும் லண்டன் போனாலும் இதே குரல்கள் உங்களுக்கு எங்கேயோ கேட்டது போல இருக்கும். எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் நாங்கள் சந்தித்திருப்போம். எங்களுக்கு எப்போதாவது சொந்த மூளை இருந்திருக்கிறதா? இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி சிறிலங்கா இராணுவத்துடன் சண்டை போட்டோம். இந்திய இராணுவம் வந்த பிறகு பிரேமதாசாவிடம் ஆயுதம் வாங்கி இந்திய இராணுவத்துடன் சண்டை போட்டோம். அப்போது பிரேமதாசாவை போற்றினோம். இந்திய இராணுவம் போன பிற்பாடு இலங்கை இராணுவத்துடன் சண்டை பிடித்தோம். அப்போது பிரேமதாசவை தூற்றினோம். சந்திரிகாவுக்கு ஜனாதிபதி வருவதற்கு ஆதரவு அளித்தோம். பிறகு சந்திரிகாவை எதிர்த்து சண்டை பிடித்தோம். சந்திரிகாவையும் போற்றினோம், பிறகு தூற்றினோம். வடக்கு கிழக்கில் தேர்தலை பகிஷ்கரித்து ராஜபக்ச ஜனாதிபதியாக உதவினோம். இப்போது ராஜபக்சவை தூற்றித் திரிகிறோம். ஒரு காலத்தில் அடித்து விரட்டிய இந்தியா இப்போது உதவிக்கு வர வேண்டும் என்று கெஞ்சுகின்றோம். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி கொள்கையை மாற்றுவது தான் எங்கள் கொள்கை.

  14. எனக்கும் ரதிக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், நான் ரதியின் விசிறியாகவே மாறி வருகிறேன். அவருடைய கருத்துகளை மிக வலிமையாகவும், அதே நேரத்தில் மிக மென்மையாகவும் எடுத்து வைக்கிறார். அவரது வலி, உணர்வுகள், சிந்தனை தெளிவு எல்லாம் வெகு துல்லியமாக வெளிப்படுகிறது.

    யாரோ ஒருவர் மாமியாரை கொன்ற இனத்தவருக்கு பதவி, ராஜீவ் கொலைக்கு பதிலாக இத்தனை பேர் உயிரா என்று கேட்டிருந்தார். என்னவோ கொலை செய்த பியாந்த் சிங், கெஹார் சிங்குக்கு பதவி கொடுத்த மாதிரி. இல்லை மன்மோகன் பிரபாகரன் மாதிரி ராஜீவை கொலை செய்ய கட்டளை இட்டாரா? அது எப்படி மன்மோகன் ஒரு சீக்கியர் என்பதாலேயே அவருக்கு கிடைத்த பதவி ஏதோ பெரும் கருணை மாதிரி பேசுகிறீர்கள்? இதை பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே. – http://koottanchoru.wordpress.com/2008/10/27/புரியாத-புதிர்/

    அப்புறம் புலிகளோடு போரிடுவது இலங்கை அரசு. இந்தியா செய்யும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டியதுதான் – ஒரு இனப் படுகொலைக்கு உதவி செய்வது பெரும் தவறு, அது பெரிய உதவியா, சின்ன உதவியா என்ற கேள்விக்கே இடமில்லை – ஆனால், இந்த உதவிகள் நின்றால் இலங்கை அரசுக்கு எந்த பின்னடைவும் ஏற்பட்டுவிடாது, இந்தியா செய்யும் உதவிகள் ஒரு பொருட்டே இல்லை. நம்முடைய தார்மீக கோபத்தை நம்மால் சோனியாவிடமும், கலைஞரிடமும், ஜெவிடமும்தான் காட்ட முடியும், ராஜபக்சேவை ஒன்றும் செய்ய முடியாது என்பதற்காக we cannot make a mountain out of a molehill. அந்த molehill-உம் கூடாது என்பதற்காக போராட வேண்டியதுதான், ஆனால் அது molehill என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ப்ராக்டிகலாக யோசித்தால் பா.ஜ.க. வந்தாலும் சரி, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணி வந்தாலும் சரி, யாரும் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பொங்கி எழப் போவதில்லை. எனக்கென்னவோ இந்த சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், மணி ஷங்கர் ஐயர் போன்றவர்கள் எல்லாம் அடி முட்டாள்களாக இருக்க மாட்டார்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அங்கே முக்கியமானவர்களாக இருப்பார்கள், இவர்கள் வாயை திறக்கக் கூடும், நடக்கும் உதவி நிற்கக் கூடும் என்று ஒரு நப்பாசை இருக்கிறது. நப்பாசைதான். ஆனால் மற்ற அணிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டிலிருந்து யாரும் முக்கியமான பதவிக்கு வரப் போவதில்லை, யாரும் வாயை திறக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைதான். இதை பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே. http://koottanchoru.wordpress.com/2009/04/27/இலங்கை-தமிழர்கள்-நிலை-உய/

    என் பதிவுக்கு ரதி எழுதிய மறுமொழியை இன்னொரு பதிவாக போட்டிருக்கிறேன். அந்த பதிவை இங்கே காணலாம். http://koottanchoru.wordpress.com/2009/04/30/ஒரு-இலங்கைத்-தமிழரின்-பா/

    என் கருத்துகளை இங்கே ( http://koottanchoru.wordpress.com/2009/05/06/ஈழம்-புலிகள்-இந்தியா-தமி/ ) மற்றும் இங்கே ( http://koottanchoru.wordpress.com/2009/05/07/1110/ ) மேலும் பதிவாக இட்டிருக்கிறேன். நான் புலிகளை எதிர்ப்பவன். அதே நேரத்தில் இப்போது இலங்கையில் நடப்பது இனப் படுகொலை, அது தடுக்கப்பட வேண்டும், இந்தியா இந்த படுகொலைக்கு துணை போகக் கூடாது, ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று உறுதியாக நம்புபவன். நம்மில பலரும் உணர்ச்சிவசப்படுகிறோம், ப்ராக்டிகலாக யோசிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. // தனக்காக குரல் கொடுக்க முடியாத வன்னித்தமிழனுக்காக நாம் தொடர்ந்துபேசுவோம், எழுதுவோம், நாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு போராடுவோம். கூடவே, யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் அல்லல் படும் தமிழனையும் தயவு செய்து மறக்காதீரக்ள். // என்று ரதி சொல்வது எனக்கு மிகவும் சரி என்று தோன்றுகிறது.

    • RV,

      நான் எழுதும் கருத்துக்களைப் பாராட்டியதற்கு நன்றி.

      //அவரது வலி, உணர்வுகள், சிந்தனை தெளிவு எல்லாம் வெகு துல்லியமாக வெளிப்படுகிறது.//

      அண்மையில் வனொலியில் ஓர் பாடல் கேட்டேன். “மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரும் பழ‌கிப்போகும்…..மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் …” இது என்ன திரைப்படம் என்ற ஆராய்ச்சியெல்லாம் நான் செய்யவில்லை.

      ஆனால், உங்கள் கருத்தை படித்தவுடன் எனக்கு அந்த பாடல் ஞாபகம் வந்தது. என‌க்கு இப்படி தோன்றியது, ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் மரணம், வலி, ஏமாற்றம் எல்லாமே பழகிப்போகும்.

      இப்போதெல்லாம் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது, தேற்றுவது என்று தெரியாமல், எங்களை நாங்களே தேற்றிக்கொள்வது எங்களுக்கும் பழகிப்போய்விட்டடது.

  15. அகில உலக ஜெயலலிதா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவருக்கு,

    //We want Tamileelam. Our leader Pirabakaran. இப்படி ஒருவர் சொல்வார். நாங்கள் திருப்பி சொல்வோம்//

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் யார் சொல்லச் சொன்னார்கள். பிறகு ஏன் இங்கே வந்து “திருப்பி சொல்வோம்” என்று நொந்து கொள்கிறீர்கள். இப்படி சொல்வதற்கு பதிலாக போகாமலே விட்டிருக்கலாமே. செயற்பாட்டாளர்கள் யாரையும் வரும்படி வற்புறுத்துவதில்லையே. வன்னியில் தவிக்கும் உறவுகளில் அக்கறை இருந்தால் வாருங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

    தவிரவும் உங்கள் பதிலை படித்ததும் என் மனதில் தோன்றியதை சொல்கிறேன். நீங்கள் சிங்கள ஆட்சியாளர்களை போற்றினோம், தூற்றினோம் என்று அவர்களுக்காகத்தான் அதிகம் வருத்தப்படுவது போல் எனக்கு படுகிறது.

    //எங்களுக்கு எப்போதாவது சொந்த மூளை இருந்திருக்கிறதா? //

    “எங்களுக்கு” என்று யாரை சேர்த்து சொல்கிறீர்கள்? அது தவிர, உங்களிடம் என்ன இருக்கிறது, இல்லை என்பது உங்களுக்கு தானே தெரியும்.

    //We want Tamileelam. Our leader Pirabakaran. இப்படி ஒருவர் சொல்வார். நாங்கள் திருப்பி சொல்வோம்//

    புலம் பெயர்ந்த நாடுகளில் இப்போது ஈழம் சம்பந்தப்பட்ட விடயங்கள் எல்லாமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றன. தெருவில் நின்று ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதிலிருந்து அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளரகளை சந்திப்பது வரை. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களைப்பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். உண்மையாகவே அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தங்கள் படிப்பை துறந்து, தூக்கம் தொலைத்து வீதி வீதியாக அலைய வேண்டுமென்பது அவர்கள் தலையெழுத்தா? பனி, மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாது வாரக்கணக்கில் பாராளுமன்றத்திற்கு முன்னாலும் தூதரகங்களுக்கு முன்னாலும் நின்று யாருக்காக போராடுகிறார்கள்? அவர்கள் சொல்வதையும் சரியாகத்தான் சொல்கிறார்கள். செய்வதையும் மிகச்சரியாகவே செய்கிறார்கள். அவர்கள் சொல்வதை திருப்பி சொல்வதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    இங்கே வீதியில் நின்று போராட்டங்களை முன்னெடுக்கும் இளையோரில் அனேகமானோர் புலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது மிக சிறுவயதிலேயே புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் தங்கள் தலைவர் யார், தங்களுக்கு என்ன வேண்டும் என்று. வன்னித்தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல, அந்த மாணவர்கள் தாங்களாகவே பொறுப்பை உணர்ந்து தங்கள் மக்களுக்காக உழைக்கும் போது அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

    அவர்களின் பின்னால் இன்று புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஏறக்குறைய எல்லோருமே வயது வேறுபாடின்றி, கருத்து வேறுபாடின்றி செல்கிறார்கள். காரணம் அவர்கள் குறிக்கோள் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடம் அர்ப்பணிப்பு, Leadership skills என்று தலைமை தாங்கும் தகுதிகள் அனைத்துமே உள்ளன. Yes, I am proud to be a follower. அவர்கள் சொல்வதை திருப்பி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமோ அல்லது தாழ்வுமனப்பான்மையோ கிடையாது.

    உறவுகளே, உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. எங்கள் ஈழவிடுதலை தீயை பற்ற வைத்தவர் சிவகுமாரன் என்ற மாணவன் தான்.

    • //Yes, I am proud to be a follower. அவர்கள் சொல்வதை திருப்பி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமோ அல்லது தாழ்வுமனப்பான்மையோ கிடையாது.//

      மூளைச் சலவை செய்யப்பட்ட செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டத்திற்கு சொந்த மூளை எப்படி இருக்கும்?

      • அகில உலக ஜெயலலிதா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவருக்கு,

        //செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டத்திற்கு சொந்த மூளை எப்படி இருக்கும்?//

        ஆம், நாங்கள் செம்மறி ஆட்டு மந்தை கூட்டம் தான். எங்கள் இலக்கை அடையும் வரை “ஒற்றுமை”யாகவே நடப்போம். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டோம். குறுக்கே எந்த ஓநாய் வந்தாலும், அதற்கு நல்ல பாடமும் புகட்டுவோம்.

        //தமிழீழம் எடுத்து தருவதாக தமிழனின் காதில் பூ சுற்றிய ஜெயலலிதா தோல்வி. //

        என்னங்க இது, நீங்க ஜெயலலிதாவின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர். ஆனால், அவரின் தோல்வியில் இவ்வளவு சந்தோசப்படறீங்க. முரணாக இருக்கிறதே? பாத்துங்க, அந்த அம்மா கையில வைச்சுக்காதீங்க இந்த சேட்டையெல்லாம். அப்புறமா, உங்களை அவங்க கால்ல விழுந்து மன்னிப்பெல்லாம் கேட்க சொல்வாங்க. நீங்க சொந்த மூளையால் யோசிக்கற த்ன்மான சிங்கமாயிற்றே. அப்புறமா ரொம்ப அசிங்கமாயிடுங்க.

  16. தமிழீழம் எடுத்து தருவதாக தமிழனின் காதில் பூ சுற்றிய ஜெயலலிதா தோல்வி. தமிழ் நாட்டு பிரிவினையை தூண்டிய வைகோ தோல்வி. தமிழ் இனவாதிகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டார்கள். ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் இனி தமிழ் இனவாதிகளுக்கு எதிர்காலம் இல்லை. தமிழ் மக்களின் ஒற்றுமை வாழ்க. ஈழத்தமிழரை பிடித்திருந்த இனவாதப் பேய்கள் ஒழிந்தன.

  17. உலகத்தமிழர் அண்ணா,

    நிங்கள் Lanka News இன் படங்களை போட்டு நன்றாகவே படம் காட்டுகிறீரகள்.

    உறவுகளே என் இனத்தின் அவலத்தையும் இந்தியாவின் இலங்கைக்கான உதவியையும் நீங்களே பாருங்கள்.

    • ஆடு நனையுதென்று ஓநாய் அழுகின்றது. எத்தனை காலம் தான் ஈழத்தமிழன் முதுகில் சவாரி செய்வீர்கள்? ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை காட்டி இதுவரை எத்தனை மில்லியன் டொலர்கள் சம்பாதித்து விட்டீர்கள்? சொந்தமாக எத்தனை வீடு வாங்கி வைத்திருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் முழுக்க கனடாவுக்கு கூப்பிட்டு விட்டீர்களா? த்தூ.. மானம் கெட்ட ஈனப் பிழைப்பு.
      புலிகள் பிடித்து வைத்திருக்கும் மக்களை விட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஒபாமா சொன்னார். எல்லாம் முடிந்த பிறகு அமெரிக்காவின் காலடியில் சரணடைய சம்மதம் என்று பத்மநாதன் அறிக்கை விடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் இணக்கம்: செ.பத்மநாதன் [ LankaSri 16 மே 2009 ]

      இதைத்தான் கண் கெட்ட பின் சூரியநமஸ்காரம் எண்டு சொல்வாங்கோ. கெடுகுடி சொற் கேளாது எண்டும் சொல்வாங்கோ. நாங்கள் தனியாக நின்று தவறு செய்து விட்டோம். எல்லோரையும் பகைத்து விட்டோம். இப்போது மாற்றுக் கருத்துகளை கேட்க வருகிறோம். இப்படியெல்லாம் அறுந்த அரசியல் ஆய்வாளர்கள் தமிழ் வானொலியில் அழுது வடிக்கிறார்கள். இந்த ஞானமெல்லாம் உங்களுக்கு அப்பவே வந்திருக்கணும். இப்போ too late. ஒரு காலத்தில் நீங்கள் அகங்காரம் பிடித்து தலைகால் தெரியாமல் ஆடிய ஆட்டம் என்ன? இப்போது அடங்கிப் போய் கிடப்பதென்ன? நீங்கள் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடி காசி யாத்திரை போகப் போறீங்களா?

      • உலகத்தமிழர் அண்ணாச்சி,

        இந்த காணொளி நான் நினைத்ததைவிட அதிகமாகவே உங்கள் மனச்சாட்சியை பாத்தித்திருக்கிறது போலுள்ளது. அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அதுவும் யாரையோ நினைத்துக் கொண்டு என்னை திட்டுவது போலுள்ளது. நான் என் இனத்தின், சனத்தின் அவலத்தை தான் தமிழ்நாட்டு உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன். அதில் என் மனதின் பாரம் கொஞ்சம் குறைவது போல் உணர்கிறேன்.

        இன்றுவரை எனக்கு நீங்கள் எழுதிய எந்தவொரு பதிலிலும் எம் இனத்திற்காக ஒரு தடவையேனும் மறந்தும் கூட நீங்கள் வருத்தப்பட்டது கிடையாது. அது ஏன்? உங்கள் கோபம் வேறு யார் மீதோ இருக்க அதை என் மீது காட்டுகிறீரகள் என்று எனக்கு தோன்றுகிறது.

        //உங்கள் குடும்பம் முழுக்க கனடாவுக்கு கூப்பிட்டு விட்டீர்களா? //

        நான் கனடாவில் இருக்கிறேன் என்று ஒருபோதும் (NEVER) இந்த தளத்தில் சொன்னது கிடையாது. அப்படியிருக்க, நான் கனடாவில் இருக்கிறேன் என்று சொலிகிறீர்கள். அப்படியானால் நீங்கள் என்னை வேறு தளத்தில் சந்தித்திருக்கிறீர்களா? பிறகு ஏன் பெயர் மாற்றி வந்து சண்டை போடுகிறீர்கள். யார் நீங்கள்?

      • சாத்தான் வேதம் ஓதுகிறது. //இன்றுவரை எனக்கு நீங்கள் எழுதிய எந்தவொரு பதிலிலும் எம் இனத்திற்காக ஒரு தடவையேனும் மறந்தும் கூட நீங்கள் வருத்தப்பட்டது கிடையாது. அது ஏன்?//
        தமிழ் மக்களை அழிக்கும் போரை தொடர்வதற்கு ஆயிரக்கணக்கான டொலர் அள்ளிக் கொடுத்த உங்களுக்கு தமிழ் இனம் அழிவதைப் பற்றி கதைக்க என்ன தகுதி இருக்கிறது? எந்த வித கூச்சமும் இல்லாமல் கொலைகளை ஆதரிக்கும் நீங்கள் தமிழ் மக்கள் மேல் வருத்தப்படுவதாக நன்றாகவே நடிக்கிறீர்கள். You are a bloody Genocide profiteer. ஈழத்தமிழர்கள் பட்ட துன்பம் பற்றி கனடாவில் உல்லாசமாக வாழ்பவருக்கு என்ன தெரியும்? பத்து வயது பாலகனுக்கு துவக்கு கொடுத்து கொலைக்களத்திற்கு அனுப்புவதை ஆதரித்தவர்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நியாயப்படுத்துகிறவர்கள். பருவமடையாத அப்பாவி தமிழ் சிறுவர்கள் களத்தில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்ததை கண்டும் இரக்கப்படாத அக்கிரமக்காரர்கள். மனிதாபிமானம் இல்லாத இதயமற்ற பாவிகள். போர் நடக்க வேண்டும். ஈழத்தில் தமிழன் சாக வேண்டும் என்று இரத்த பலி கேட்கும் காட்டேரிகள். ஈழத்தமிழன் பிணத்தை காட்டி பணம் சேர்க்கும் அயோக்கியர்கள். இனப்படுகொலையை காட்டி தமிழீழம் பெறத் துடித்த நயவஞ்சகர்கள். உங்களுக்கு எல்லாம் ஈழத்தமிழர் பற்றி பேச அருகதை இல்லை. நம்புங்கள் நாளை தமிழீழம் கிடைக்கும். சொன்னது யார்? உங்களது பேச்சை கேட்டு 70000 தமிழர்கள் மாண்டது போதாதா? இன்னும் உங்களது இரத்த தாகம் அடங்கவில்லையா?

  18. உலகத்தமிழர்,

    மறுபடியும் நீங்கள் வேறு யார் மீதோ உள்ள கோபத்தை என்மீது displace செய்கிறீர்கள். இது அநாகரீகம், அவதூறு, அபாண்டம்.

    உங்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போலுள்ளது.

    You have to seek professional counselling/medical help. There is no point of displacing your anger at someone else. This is inappropriate and unacceptable. You are verbally abusing me. I am not your scapegoat.

    இதற்கு மேல் உங்களோடு பேசி பயனில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க