முகப்புஉலகம்ஈழம்புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

-

பிரபாகரனும் நோர்வே தூதுவரம்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். “தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்.” 9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் “சிங்கள ஏகாதிபத்தியம்” மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, “புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்” என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. “தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்” என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.

நன்றி: கலையகம்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

 1. புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்…

  இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது …

  • யோவ் மேல பாருய்யா எழுதியவர் பெயர் கலையரசன்னு இருக்கு,,, கீழே நன்றி கலையகம்மின்னு இருக்கு அப்புறம் என்ன சுட்டியா கிட்டியான்னு…நான்சென்ஸ் பெல்லோ

  • புலிகளின் (பிரபகரனின்) பாதக கொடூரமான செயல்களை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சொல்லப்படும் எந்த கருத்துக்களும், கட்டுரைகளும் உலகம் மட்டுமல்ல 95%க்கு மேல்லான தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளாது. இலங்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதும் கிடையாது

   • கேனப்பயலே, நீ ஏதுக்கலேன்னா, உடனே தமிழுலகமே, முழு உலகமே ஏத்துக்கதா?
    எங்களுக்கெல்லாம் காது குத்தி ரொம்ப நாள் ஆச்சு அப்பு.

  • DEAR VINAVU

   THERE HAS BEEN MENTION OF INTERVENTION OF OTHER COUNTRIES LIKE U.S,INDIA AND PAKISTAN IN SRILANKAS ETHNIC STIFE. BUT THERE IS NO MENTION OF ASIAN GIANT CHINA S
   INVOLVEMENT IN SRILANKA.CHINA SECURED PERMITS TOESTABLISH OIL WELLS IN THE SRILANKAN SHORES.CHINA ALSO INTENDS TO ESTABLISH BASES IN THE SRILANKAN SOIL AGAINST INDIA.
   RAJA PAKSHES GOVT MORE CLOSER TO CHINA AND CHINA WILL USE ITS VETO POWER IN UNITEDNATIONS TO THWART ANY RESOLUTION CONDEMNING SRILANKAS HUMAN RIGHTS VIOLATIONS IN UNITEDNATIONS.CHINA HAS MORE SHARE IN THE UNHILATION OF TAMILS

 2. நான் இந்த கட்டடுரை படிக்கும் போது நினைத்தேன் வினவு இலங்கைதமிழர் பற்றி முதல் தடவையாக பொறுப்புடன் உண்மை நிலையை சொல்கிறதே என்று . ஆனால் அப்படி இல்லை. அது கலையகத்தின் கட்டுரை. கலையகத்துக்கு பாராட்டுகள்.

  • இதல்லாம் ஒரு விமர்சனமா? உனக்கும் மொன்னையா இரயாகரன திட்டும் கூட்டத்துக்கும் என்னய்யா வித்தியாசம்? முடிஞ்சா ஆதாரத்தோட மறுத்து எழுது. இல்லோன்னா உன் பொறுப்பு சர்டிப்பிகேட்ட எடுத்துகிட்டு போயிட்டே இரு.

   • MamboNo8, இலங்கை தமிழர் பற்றி நீங்கள் தானா வினவு என்ற பெயரில் கட்டுரை எழுதுவது?

   • என்ன டீசிறி சார், உங்கள வினவு தவிர வேறு யாரும் கேள்வி கேட்க கூடாதா. அருமை அனானி அண்ணன் மேம்போ எண் 8 கேட்ட கேள்விக்கு உங்கள் கேள்வி பதிலாக அமையவில்லையே.

   • நன்றி அரை டிக்கெட்டு. நான் அப்படி நினைத்து விட்டேன்.தாரளமாக கேள்வி கேட்கலாம். நான் என்ன புலியா கேள்வியே கேட்க கூடாது என்று சொல்ல.

  • இது வேறையா? நல்ல கூத்து.. நான்தான் அன்னிக்கே எந்த ஆதாரத்துல எழுதறன்னு கேட்டாச்சே அதுக்கு இன்னு பதிலே இல்லை

 3. இக்கட்டான இந்த சமயத்தில், க‌ட்டுரை சர்வதேச நிலைகளை தெளிவாக எடுத்துரைக்கிறது. க‌லையரசன் சொல்கிற படி, இனி ஆயுதம் ஏந்தி போராடுகிற‌ விடுதலை போராட்டங்கள் எல்லாம் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.

 4. பதிவில் உள்ள எழுத்துக்கள் டல்லான கலரில் படிக்க ஏதுவாக இல்லை. எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்தால் நன்றாக இருக்கும்.

 5. வா பகையே… வா…
  வந்தெம் நெஞ்சேறி மிதி.
  பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
  வேரைத் தழித்து வீழ்த்து.
  ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
  நினைவில் கொள்!”

  ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
  ஆயினும் போரது நீறும், புலி
  ஆடும் கொடி நிலம் ஆறும்.
  பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
  பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
  பைகளும் ஆயுதம் ஏந்தும்.
  மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
  மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
  சிங்கள கூட்டங்கள் ஓடும்.

  Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

  Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

  ( Nile Raja )

 6. புலிகளின் தலைவரான நடேசன் கொல்லப்படுவதர்க்கு முன் லண்டனில் இருக்கும்
  Sunday Times correspondent, Marie Colvin இய தொடர்பு கொண்டு உயிர்களை காப்பார்ருமாறு மன்றாடியுள்ளார். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece
  இதன் மொழியாக்கம் http://inioru.com/?p=2701

  • இனிமேல் Marie Colvin “வெள்ளைப்புலி” என்று ராஜபக்ஷேக்களால் முத்திரை குத்தப்படுவார். கொழும்பில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்கும். அவ்வளவு தான். இதற்கு மேல் என்ன ஈழத்தமிழனுக்கு நீதியா கிடைக்கப்போகிறது?கருணாவும் ஆனந்தசங்கரிகளும் நிறைந்த ஈழத்த‌மிழ் சுமுதாயத்தில் ஒடுக்கப்படும் தமிழனுக்கு சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் வெறும் கனவுகளே.

   • ”சம உரிமை” காதில் தேன் பெருகுது, மகாகவி பாரதி சொன்னது போன்று. சுகமான பகற்கனா ! இது எப்படி சாத்தியப் படும் ?
    இலங்கையில் 85 வீதம் சிங்கள மக்களும், 12 வீ தம் தமிழ் மக்களும், மிகுதி 3 வீதம் சோனக, பறங்கிய, மலாய ஆகிய உதிரி இன மக்களும், கணக்கில் கண்டுகொள்ளாத இந்திய வம்சாவழி
    மலையக தமிழ் மக்களும் வாழுகின்றனர்.
    சனத்தொகை கணக்கு இவ்வாறு இருக்கும் போது இலங்கைத் தமிழனுக்கு எவ்வாறு ” சம உரிமை ” கேட்க இயலும் ?
    தூரத்தில் இருந்து வீரம் பேசும் உங்களைப் போன்றோரா இங்கு வந்து போராடி வென்று தரப் போகின்றீர்கள் ?
    பொழுது போக்கிற்காக வீணாக குட்டையை குளப்பாது ஆக்க பூர்வமாக புலி வால் பிடித்து புலியின் பதவிக் காலத்தில் ஏனையோரை குதறித் தள்ளிய இலங்கைத் தமிழர் முட்கம்பி முகாம்களில் அல்லலுறுகின்றனர்,
    அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய இயலுமாவென சிந்திச்சு ஆராயுங்கள் பார்க்கலாம் ? !

 7. புலிகலின் தோல்வியில் சிஙலவனைவிட அதிக மகிழ்சி கொண்ட ம க இ க கம்பேனி இனி ரயா தலைமைல ஒன்ரு பட்ட லன்கா வுக்கு போயி புர்ர்ர்சி நடதுவதை பார்க்க ரெஅடியா இருக்கோம்

  • ஆமா ஆமா அங்க நம்ம சுரேஷ் kooti…. போய்யா டோமரு நீ என்ன புடுங்குன ஈழப் பிரச்சனைக்கு அத மட்டும் பேச மாட்டியே? இத்தன நாள புலி புலின்னு நீங்க உட்ட உதாருதான் இப்ப புஸ்ஸூனு ஆயிருச்சே அப்புறு ஏன் இந்த ஜம்பம். அது போகட்டும் ஈழ விடுதலைக்கு என்ன திட்டம் அத பேசு ரயா புர்ர்ச்சி பண்ணுவாரா இல்ல பிராபாகரன் புரச்சி பண்ணிட்டாரான்னு அப்புறம் பேசலாம்

 8. நக்கீரன் என்ன ஆதாரம் கொடுத்தது? பழைய புகைப்படத்தை வெட்டி ஒட்டி எதையோ நிரூபிக்கப் பார்த்து மூக்குடைந்து இருந்த கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையையும் கோட்டை விட்டது. “தேனீ” இணைய தளத்தில் பழைய புகைப்படத்தோடு இந்த ஒட்டு வேலை அம்பலப் படுத்தப் பட்டது. இதில் அந்த அசிங்கமான புகைபடத்துக்கு கீழே “1000 மடங்கு நம்பகத்தன்மை உள்ள தகவல்” என்று சுய சான்றிதழ் வேறு. படிப்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற திமிர். இது போன்ற முட்டாள்தனமான முயற்சிகளால் ஈழத்தமிழர்களுக்கு பிரச்சினைதான் பெருகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க