முகப்புசமூகம்சாதி – மதம்நந்தனை மறைத்தது நந்தி - நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

-

நந்தனை மறைத்தது நந்தி - நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

தில்லை நடராசர் கோயில் தீட்சிதருக்குச் சொந்தமானதல்ல, கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2009 இல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான உடனே கோயிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயிலுக்குள் உண்டியல் நுழைந்த்து. பின்னாலேயே சு.சாமியும் நுழைந்தார். அப்புறம் உயர்நீதிமன்ற முட்டை வீச்சு, போலீசு நடத்திய கலவரம்… இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதை.

தெரியாத கதையும் இருக்கிறது. நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதும், உண்டியல் வைக்கப்பட்டதும் நடந்த்தே தவிர, நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்வாக அதிகாரியிடம் கோயிலின் நிர்வாகத்தை, இதுவரை தீட்சிதர்கள் ஒப்படைக்கவில்லை. அதாவது, கோயிலின் நகை நட்டுகள், பண்ட பாத்திரங்கள், சொத்து ஆவணங்கள் முதலானவற்றை, அதாவது சாவிக்கொத்தை தீட்சிதர்கள் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. தீட்சிதர்களின் யோக்கியதை தெரிந்துதான் “தீர்ப்பை அமல்படுத்த தீட்சிதர்கள் ஒத்துழைக்கவேண்டும்” என்று நீதிபதி பானுமதி தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்.

இருந்தும் அவாள் ஒத்துழைக்கவில்லை. இவாள் (அரசாங்கம்) நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசை வைத்து நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை அமல் படுத்தியிருக்க முடியும். அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். கோர்ட் உத்தரவு வந்தவுடனே புல்டோசரை வைத்து இடிப்பதெல்லாம், தரைக்கடை வியாபாரிகள் போன்ற சாமானியர்களுக்கு கிடைக்கும் நீதி. தீட்சிதர்கள் சாமானியர்களா என்ன? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எவ்வளவோ “தைரியம்” சொல்லிப்பார்த்தார்கள். நடக்கவில்லை.

தற்போது தில்லைக் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் என்ற திருவிழா. அதற்கு “தீட்சிதர் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லைக் கோயில்” என்று கொட்டை எழுத்தில் போட்டு அழைப்பிதழ் அடித்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். அப்பறமும் அரசாங்கத்துக்கு சொரணை வரவில்லை. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீட்சிதர்கள் செய்துள்ள மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் இடைக்காலத்தடை வாங்கிவிட்டால், மறுபடியும் வழக்கை ஆண்டுக்கணக்கில் ஆறப்போடலாம் என்பது தீட்சிதர்கள் திட்டம். இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்தது இதுதான்.

இனிமேலும் இதனை அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நேற்று (23.06.09)சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. “புனிதமான சட்டமன்றத்தின் வாசலில் மக்கள் சத்தம்

போடக்கூடாது, உள்ளே மக்கள் பிரதிநிதிகள்தான் சவுண்டு கொடுக்கலாம்” என்பதனால், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து எல்லோரையும் கைது செய்த்து போலீசு.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை மிகவும் எளிமையானது. கோர்ட், வழக்கு, வாய்தாவெல்லாம் வேண்டாம். அரசு ஒரு சிறப்பு ஆணை பிறப்பித்து எல்லாக் கோயிலையும் போலவே தில்லைக் கோயிலையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்த மறுகணமே, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படாத தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

இவை மூன்றும்தான் கோரிக்கைகள். சட்டமன்றம் நடக்கிறது. இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வர இருக்கிறது. கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து மீட்கும் சாகசத்தை செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக, தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்குமா திமுக அரசு? பார்ப்போம்.

பின்குறிப்பு:

சென்ற ஆண்டு சிற்றம்பல மேடையில் தமிழ் பாடச்சென்ற ஆறுமுகசாமியையும் உடன் சென்ற எமது தோழர்களையும் தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தாக்கிய தீட்சிதர்களின் ‘வீர’ சாகசத்தை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டப் போராடியவர்கள் மீது தெற்குவாயிலில் போலீசு நடத்திய தடியடியையும் நாடு பார்த்தது. மாலை சம்பவத்துக்காக 35 தோழர்கள் மீதும் காலை சம்பவத்துக்காக 11 தீட்சிதர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். சிதம்பரம் கிளைச்சிறையில் வைக்கப்பட்ட தீட்சிதர்கள் தனியே சமைத்து சாப்பிட அடுப்பும் அரிசி பருப்பும் வழங்கியது சிறை நிர்வாகம். இதெல்லாம் பழைய கதை.

புதுக்கதை என்னவென்றால், மாலை தடியடி வாங்கிய தோழர்கள் மீதான வழக்கில் சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது போலீசு. காலையில் போலீசு சூப்பரெண்டை தீட்சிதர்கள் அடித்தார்களே, அந்த வழக்கில் மட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நம்ப முடிகிறதா?

அரசியல் சட்டம் என்ற ஒரு கருமாந்திரம் இருப்பதால் வேறு வழியின்றி தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டார்கள். நீதி என்று வரும்போது.. மனு நீதிதான்.

தமிழ் நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதும், அங்கே தமிழர்களுக்கு தமிழில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும என்பதும்தான் பிரச்சினை. இந்த “அடாத” கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இப்படியொரு விடாத போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

 1. “ஒரு சப்பாணியை (அரசைத்) தூக்கி கொண்டு எவ்வளவு தூரம் தான் ஓடமுடியும்” – என்று ஒரு முறை தன் உரையில் குறிப்பிட்டார் தோழர் மருதையன். உண்மை தான். சுயமரியாதை இழந்து நிற்பதால் தான், தீட்சிதர்கள் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்.

 2. திமுக அரசின் மெத்தனபோக்கிற்கு காரணம்தான் என்ன. தீட்சிதர்களுக்கும் அரசுக்கும் ஏதாவது உள்குத்து உள்ளதா.

 3. இவை மூன்றும்தான் கோரிக்கைகள். சட்டமன்றம் நடக்கிறது. இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வர இருக்கிறது. கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து மீட்கும் சாகசத்தை செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக, தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்குமா திமுக அரசு? பார்ப்போம்//

  அதையும் புரட்சிகராமைப்புக்கள் தான் செய்ய வேண்டும், வழக்கம் போலவே மணி கிளம்பிவிடுவார்” இந்த பகுத்தறிவு ஆட்சியில் தான் இது சாத்தியமென்று இருட்டடிப்பதற்காக…………….

  தலைப்பு சூப்பரோ சூப்பர்ர்ர்ர்ர்

 4. இதுவரை நீதிபதி பானுமதியின் தீர்ப்பிற்கு எதிராக தடை உத்தரவு தரப்படவில்லை. அதை அமுல் செய்வதை நிறுத்துமாறும் உயர்நீதிமன்ற பெஞ்ச்
  எதுவும் ஆணை பிறப்பிக்கவில்லை.நீதிமன்ற உத்தரவை அமுல் செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை தீட்சிதர்கள் தடுத்தால்/ஒத்துழைக்க மறுத்தால் அரசு அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம். அரசு முறையாக உத்தரவை அமுல் செய்யாத போது பொது நல வழக்கு/நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முயற்சி செய்யலாம்.

 5. நான் சொல்வது சர்ச்சைக்குள்ளாக இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.. தீட்சிதர், பார்ப்பனீயம், etc etc ஆகிய வற்றை இந்தச் சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.. ஏன் போராட முன் வரவில்லை.. சமூகமே முழுவதுமாக A to Z பார்ப்பன சமூகமாகத்தான் இயங்குகிறது.. நான் சொல்ல வருவது என்ன வென்றால், பார்ப்பனர்களைக் கொண்டு அர்ச்சனை , பார்ப்பனர்கள் தலைமையில் திருமணம், இன்ன பிற என்று காது குத்தல் முதல் கலியாணம் வரை அவர்கள் தலைமையை சமூகம் மௌனமாக ஏற்கிறதே… வேண்டாம் என்று ஏன் நிராகரிக்க மறுக்கிறது… ஒருவேளை இங்குதான் நீங்கள் போராட வேண்டிய இடமோ தெரியவில்லை… அனைவரும் (பார்ப்பனர் தவிர) அவர்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வரலாமே.. யார் தடுப்பது,,? (உ-ம் சிதம்பரம் பிரச்சனையில் சரத்குமார் முந்தய கருத்து).. ஆக கருத்தியல் ரீதியாக சூத்திரர்கள் மாறாத வரை இவைகளைப் பற்றி முற்போக்காளர்கள் கத்திக் கொண்டே இருக்கவேண்டியதுதான். இலங்கைப் பிரச்சனையில் தமிழினத் தலைவர் செய்ததைப் போல.. பொறுப்புள்ள மனிதர்கள் துாக்கத்தினால், பல பொன்னால வேலைகள் துாங்குவதைப் போல….
  அரங்க. கந்தசாமி

 6. எல்லாம் சரிதான் அய்யா… ஆனால் சாமி என்ற இல்லாத விஷயத்தை அடைவதற்குப் போய் போராடுவானேன். அந்த வேலையை பிராமணர்களே செய்து கொள்ளட்டும். நியாயமாகக் காசு வரும், சமூகத்திற்கு உண்மையாக உதவும் தொழில்களில் மற்றவர்கள் முன்னெறுவோம்.

  கடவுளை என்று ஒதுக்கினேனோ அதற்குப் பின் யாராலும் என்னை சாதியின் பெயரால் அவமானப் படுத்த முடியவில்லை. கடவுளையும், மதச் சடங்குகளையும் தூக்கி எறியுங்கள். சாதி ஒடுக்குமுறை காணாமல் போகும்.

  • நோ பிரதர், நீங்க நினைக்கற மாதிரி சாமிய ஒழிச்சா சாதி ஓழியாது… சாதிய ஓழிச்சாதான் சாமி ஒழியும்… சாதிய ஓழிக்க அதன் உச்சானிகொம்புல உக்காந்து நாட்டாமை பன்னுற பார்ப்பனியத்த ஓழிக்கனும் ( டிஸ்கி – ஆர்.வி. பார்ப்பனியம் வேற பார்ப்பனன் வேற) இதெல்லாம் அதுக்காவ நடக்றதுதான்… தவுற அவனுங்க அங்க மொழி ஆதிக்கம் வேற செய்யறானுவ அத்தையும் எதுக்கத்தான் வேனும்.. வீரமணியும் கருணாநியும் கூடத்தான் சாமி கும்புடறதில்லை அதுக்காவ….

   • சாமியை ஒழிக்க வேண்டுமென்று நான் சொன்னதன் அர்த்தம் பார்ப்பனீயத்தை மதிக்கக் கூடாது என்பதன் உட்பொருளே. பார்ப்பனர்கள் செய்யும் காரியங்களை நாமும் செய்வதன் மூலம்தான் அவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் பார்ப்பனத் தொழலை சூத்திரன் செய்தால் அவனும் பார்ப்பனன் ஆகிவிடுவான் எனவே பார்ப்பனீயம் அழியாமல் தொடரும் என்பது எனது பயம்.

    உதாரணத்திற்கு, பிராமணர் அல்லாதவர்கள் கையில் கோவில் விவகாரங்கள் வழங்கப் பட்டால் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் கூட்டம் சில காலத்தில் பிராமணர்களைப் போலவே தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டும் உயர்வு நிலை தானாகவே வழங்கிக் கொள்வார்கள். கடவுள் சம்பந்தப் பட்ட தொழிலில் இருப்பவர்களின் உலகளாவிய குணாதிசயம் அது.

    கடவுள் வழிபாட்டால் தான் சாதி வேறுபாடுகள் வந்தது. சாதிகளால் கடவுள் வரவில்லை. கடவுள் வழிபாட்டை மதிக்கும் வரையில் எந்தப் போராட்டம் நடந்தாலும், அதற்கு என்ன முடிவு வந்தாலும் கடவுளை பூசிப்பவன் உயர்ந்தவனாகவும் மற்றவன் தாழ்ந்தவனாகவுமே நடத்தப் படுவான். கடவுளையே நிராகரிப்பதைத் தவிர இதற்கு வேறு முடிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 7. நீதியை மறைத்த ‘தொந்தி’…

  தில்லை நடராசர் கோயில் தீட்சிதருக்குச் சொந்தமானதல்ல, கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2009 இல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான உடனே கோயிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயி…

 8. இந்தியாவில் தான் சாதி இருக்கிறது. இங்கு சாதி தான் பார்ப்பனீயத்தின் ஆயுதம். இங்கு சாதியும் ஒழிய வேண்டும், பார்ப்பனீயமும் (நவீன பார்ப்பனீயத்தையும் சேர்த்து) ஒழிய வேண்டும். பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டாலே சாதி, மொழி தீண்டாமை ஒழியும், பெரும்பான்மையான மக்களுக்கு சம உரிமையும் கிடைக்கும். “அப்புறம் கடவுள் விட்ட வழி” என்று நில்லாமல் அடுத்து முன்னேற வேண்டியது தான்.

 9. வித்தகன் >> எனது எண்ண ஓட்டமும் தங்களுடையதை ஒட்டியே உள்ளது ..நான் தங்களை தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளேன்
  smartkvichu@gmail.com

 10. தில்லை நடராஜனையும் திருச்சி சிறீ ரங்கனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ? என்ற பாவேந்தரின் வரிகள் என்று நனவாகுமோ அன்றுதான்
  இந்த பார்ப்பன திருட்டு நாய்களின் கொட்டம் அடங்கும்.

 11. //////////சிதம்பரத்தில் நேற்றிரவு (14.07.2009) வழிபாட்டிற்கு சென்ற ஆறுமுக தேசிகரை அங்கிருந்த தீட்சதர்கள் தாக்கியுள்ளனர்.

  இதுகுறித்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறுமுக தேசிகர், அரசின் அனுமதியோ, கவனமோ இன்றி பக்தர்களிடம் பணம் வசூலிப்பதைக் கேள்விகேட்டதற்காக தான் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.////////

  வணக்கம் தோழர்,

  பெரியவர் ஆறுமுக சாமி மீண்டும் தாக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றனவே!!! உண்மையா???

  உண்மையெனில் நாம் தீட்சிதர்களின் மண்டயுடைப்பு போராட்டம் தான் நடத்தவேண்டும்!

  • சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு

   சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.

   இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.

   அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.

   அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில்,

   நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.

   ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)

   தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
   அடிவருடிகளின் ஒயிலாட்டம் http://kalagam.wordpress.com/

 12. //உண்மையெனில் நாம் தீட்சிதர்களின் மண்டயுடைப்பு போராட்டம் தான் நடத்தவேண்டும்!//

  மிகத் தவறான கருத்து. தேவையில்லாமல் இன்னுமொரு சட்டச் சிக்கலில் மாட்டி பிரச்சினை திசை திரும்பி விடும்.

  சுப்பிரமணிய சாமியின் மீது கோர்ட்டில் முட்டை வீசியது தவறு என்று நான் இந்தத் தளத்தில் ஏற்கனவே கருத்துப் பதிந்திருக்கிறேன். அதனால் வக்கீல்கள் போராட்டம் பிசுபிசுத்துப் போய், அவர்களை அடித்த காவலர்களை தற்காலிக நீக்கம் செய்தவுடன் போராட்டத்தைக் கைவிட வேண்டியதாகி விட்டது. அதே போன்ற தவறு திரும்ப நடக்க வேண்டாம்.

  Learn to play the victim if you want to garner maximum sympathy and support this time around, at least.

 13. பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

  1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

  2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

  3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

  இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

  1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

  2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

  3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் “உண்மைத் தமிழர்கள்” என அழைப்பது.

  முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

  1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

  2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

  3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

  4) தமிழ் பேசும் சமூகத்தினரை “அவர்கள் தமிழே கிடையாது” என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

  5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

  6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

  7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

  இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

  இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க