privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

-

வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி – வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். ஆனால், ஈழத்தின் வன்னி-முள்ளிவாக்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் “இறுதிப் போர்” அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும் தாக்கிக் கைப்பற்றியது. அதன் பிறகும் புலிகள்  பின்வாங்கியபடியே நகர்ந்து சென்றனர். இறுதியாக, மே முதல் வாரத்தில், பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி; பொட்டு அம்மன், சூசை, நடேசன் ஆகிய தலைவர்கள் – தளபதிகள் உட்பட 2,000 விடுதலைப் புலிகள், சுமார் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களுடன் ஈழத்தின் வடகிழக்குக் கோடியில் நந்திக்கடலுக்கும், இந்துமா கடலுக்கும் இடையில் உள்ள முள்ளிவாக்கால் பகுதியில் ஒரு சில சதுரக் கிலோமீட்டர் பகுதிக்குள், அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 50,000 சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். சிங்கள இராணுவத்தின் முற்றுகையை முறியடித்து – புலிகளின் சொற்களில் கூறுவதானால் ஊடறுத்து – புலிகள் வெளியேறுவதற்கான வாய்ப்பு சிறிதுகூட இருக்கவில்லை. கடல் வழியே புலிகள் தப்பிவிடாமல் சிங்களக் கப்பற்படையோடு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன; ஏற்கெனவே கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

rajapakse_pranabஅந்த நிலையில், சிங்கள இராணுவம் தீர்மானகரமான தாக்குதல் நடத்தி இருந்தால், ஓரிரு நாட்களிலேயே புலிகளின் தற்காப்பு நிலைகள் அனைத்தையும் அழித்து, இறுதி வெற்றி ஈட்டியிருக்க முடியும். ஏற்கெனவே, புலித் தலைமையை, குறிப்பாக பிரபாகரனைப் போர்க்களத்திலேயே கொன்று விடவேண்டும், கைது செய்தாலும் உயிரோடு வைத்திருக்கக் கூடாது என்று அயலுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளை நேரடியாக கொழும்புக்கு அனுப்பி, இலங்கை அதிபரிடமும், இராணுவத் தலைமையிடமும் வலியுறுத்தியிருந்தது இந்தியா; இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை இறுதித் தாக்குதல்கள் நடத்துவதை தள்ளி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென்றே தனிச்சிறப்பாக இந்திய இராணுவ மற்றும் உளவுப்படை “ரா” அதிகாரிகள் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொருத்தவரைக்கும் ஒன்று சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு மடியவேண்டும்; அல்லது அவர்கள் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் சயனைடு குப்பிகளைக் கடித்து பெருந்திரளாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்; அல்லது மிக மோசமான வாப்பாக சிங்கள இராணுவத்திடம் சரணடைய வேண்டும். இவை தவிர, வேறொரு தெரிவு எதுவும் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கு சிங்கள – இந்தியக் கூட்டின் இராணுவ ரீதியான கொலைவெறித் தாக்குதல் முக்கியமானதொரு காரணம் என்றாலும், கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, முல்லைத் தீவுக்குள் முடங்கிய போதே தப்பிச் செல்வதற்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துக் கொண்டு, “பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது” என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான். இவ்வாறான “சுய அழிவு” முடிவெடுத்ததற்கான விளக்கம் எதுவும் புலித்தலைமையிடமோ, புலி விசுவாசிகளிடமோ ஒருபோதும் இல்லை.

ஆனாலும், இயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார்; இந்தியா வரும், அமெரிக்கா வரும்; ஜெயலலிதா, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் புலி விசுவாசிகள். புலித் தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று புலிகள் தங்கள் அழிவிற்குத் தாங்களே காரணமாகிப் போனார்கள். இதே போன்றதொரு குருட்டு நம்பிக்கையில்தான் பிரபாகரன் விசுவாசிகள் இன்னமும் இருத்தி வைக்கப்படுகிறார்கள்.

மே 13-ந் தேதியோடு இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து போயின. கழுத்துவரை பேரழிவு ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த சிங்கள இராணுவம் அடுத்த நாளே – மே 14-ந் தேதி வியாழக்கிழமை – “வங்கினுள் பதுங்கிய இரையான” புலிகளைத் தாக்கி அழிக்கும் இறுதித் தாக்குதலைக் கொடூரமான முறையில் தொடங்கியது. மூன்றே நாட்களில் எல்லாம் முடிந்து போயின. முள்ளிவாக்கால் கிராமத்தில் பதுங்கியிருந்த பல ஆயிரம் ஈழத் தமிழர்களும், புலித்தலைமை உட்பட புலிப்படைப் போராளிகள் அனைவரும் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.
புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் “புதினம்” என்ற இணையதளம், கடந்த ஆறாண்டுகளாகத் தனது நிறுவனத்தின் இரத்தமும் சதையுமாக இயங்கி, உண்மைச் செய்திகளை மட்டுமே அளித்துவந்த அந்த  செய்மதி  நிருபர், “என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம்” என்று நினைப்பதாகக் கூறி அனுப்பிய செய்தியைப் பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது:

“கடந்த இரண்டரை வருடங்களாக – உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் சிறீலங்கா நடத்திவரும் தமிழின அழிப்புப் போர், அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாக்கால் கிராமத்தில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர், செய்மதி  மூலம் சோன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

2009051957540101“பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சோல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது ‘சயனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்கா பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. “இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டு விடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சோல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது – மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.”

அந்தக் கடைசி மூன்று நாட்களில் என்ன நடந்தது? புலித் தலைமை என்ன செய்தது? எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைத்தான் எஞ்சியுள்ள புலிகளின் பிரதிநிதிகளும், விசுவாசிகளும் பேச மறுக்கின்றனர். அல்லது முரண்பட்ட விளக்கங்களும் தகவல்களும் கொடுத்து, உண்மையை மூடி மறைக்கின்றனர். ஈழப் போரின் கடைசி மூன்று நாட்களில் நடந்த சம்பவங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைச் சுற்றித் தாம் கட்டியெழுப்பியிருந்த பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தால், அவை குறித்துப் பரிசீலிக்கவோ, மக்கள் முன் உண்மை விளக்கமளிக்கவோ மறுக்கின்றனர். அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிரான அவதூறுகளை ஆத்திரம் ஆத்திரமாகக் கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால், இந்த உண்மைகளைக் கண்டறிந்து, மக்கள் முன் வைப்பதன் மூலம்தான் ஈழ விடுதலைப் போரின் இந்தப் பேரழிவு – பேராபத்துக்குக் காரணமான எதிரிகளின் வக்கிரமான பாசிச இனவெறிப் பேயாட்டங்களை மட்டுமல்ல, சதிகாரர்களையும் துரோகிகளையும்கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வரமுடியும். ஆனால், நடந்த உண்மைகளை மூடி மறைப்பது ஈழத்தின் எதிரிகளையும் சதிகாரர்களையும் துரோகிகளையும் காப்பாற்றவே பயன்படும்.

சிங்கள இராணுவம் ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி தாக்குதலைக் கொடூரமான – வெறித்தனமான முறையில் நடத்திக் கொண்டிருந்த அதேசமயம், பல ஆயிரம் ஈழத் தமிழர்களை ஒரே நாளில் கொன்ற அவப்பெயர் தமக்கும், இறுதிவரைப் போராடி வீரமரணமடைந்த பெருமை புலித் தலைமைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சர்வதேச சதியிலும் ஈடுபட்டிருந்தது, சிங்கள பாசிச ஆளும் கும்பல். பிரபாகரன் உட்பட புலித் தலைமையையும், இறுதிவரை புலிகளோடு விசுவாசமாகத் தங்கியிருந்த தமிழர்களையும் படுகொலை செய்து விடுவது என்பதில் உறுதியாக இருந்தது. சிங்கள பாசிச ஆளும் கும்பலும் இராணுவமும். அவர்களுக்குத் தப்பிப் போவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, யுத்தமும் – சாவும் அவர்கள் தொண்டைக் குழிவரை வந்துவிட்ட நிலையில், புலித் தலைமையின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றிச் சரணடைய வைத்து இலகுவாகப் பலியிடுவது என்ற சதியை நன்கு திட்டமிட்டு, “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற தூண்டிலை அமெரிக்க – இந்திய – நார்வே நாட்டுச் சதிகாரர்கள் மூலம் புலித் தலைமையின் முன்பு வீசியது. புலித் தலைமையை முழுமையாக நம்ப வைக்க சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த பின், 15.5.2009-இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும். அந்த அறிக்கை இலங்கை அரசுடனான கூட்டுச் சதியை நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. “இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் 15.5.2009 அன்று அறிவிக்கின்றார். அத்துடன், “போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியுறவுத் துறைக்கு வழங்கியுள்ளது”. அதில் “போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்” என்கிறது, அந்த அறிக்கை.

xin_0901032610043101779510நார்வே அமைச்சர் எரிக் சோல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.5.2009 அன்று பல தரம் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததை, “இது மிகவும் கோரமானது” என்கிறார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நா.வைச் சேர்ந்த விஜயய் நம்பியாரும் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவையெல்லாம் இவர்கள் கூறியவைகள்தான். இந்தச் சதியின் மற்றொரு வெளிப்பாடாக மீண்டும் நம்பியார் இலங்கை சென்றார், எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றதும் இதற்காகத்தான். “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற சர்வதேச சதிகாரர்களால் வீசப்பட்ட தூண்டிலைப் புலித் தலைமை கவ்வியதா, இல்லையா? பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் சாவில் மிகவும் சர்ச்சைக்குரிய கூறாக விளங்குவது இதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மே 17-ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், “நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கிச் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்பட முடியாது. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல், மரணத்துக்குப் பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலைமையில், இந்த யுத்தத்தை சிறீலங்கா இராணுவம் இம்மக்களைக் கொன்று குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… மிகச் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக் கொள்வதை விட, வேறு தெரிவு எங்களுக்கு இல்லை” என்று அறிவிக்கிறார்.

அதன் பிறகு புலி ஆதரவு இணைய தளமான தமிழ் நெட்டிற்கு பத்மநாதனே வழங்கிய பேட்டியில் “எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறீலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சோல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது, இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சரணடைந்து, வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது. சர்வதேச சமூகமும் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து, சிறீலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சோல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் துக்கத்திலுள்ளோம்” என்கிறார்.
அதேசமயம் மே 17 அன்று, எப்போதும் இல்லாத வகையில் திடீரென்று புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சூசை, “மக்கள் வலையத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும், ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக செல்வராசா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்” என்று பேட்டியளித்திருந்தார். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் சனிக்கிழமை (16.05.09) மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். “இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்கிறார் கொஹனா. “அவ்வாறு அவர்கள் சரணடைந்தால், உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதுதானே” என்று கேட்டு நார்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கொஹனா அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்.

இவற்றையும், இவற்றோடு பிரபாகரனைச் சிங்கள இராணுவ வெறியர்கள் சித்திரவதை செய்தும், கோடாறியால் மண்டையைப் பிளந்தும் கொன்ற பின், அவரது உடலை அவமானப்படுத்தி சிதைக்கப்பட்ட உடலை ஒட்டு வேலை செய்து ஊடகங்களுக்குக் காட்டியதை, “வீடியோ” படமாக, டக்ளஸ் தேவானந்தா கருணா ஆதரவு இணைய தளங்கள் சிறிது நேரம் வெளியிட்டு அகற்றியதையும் ஆதாரமாக வைத்து, பிரபாகரன் உட்பட புலித் தலைமை சரணடைந்து படுகொலை செய்யப்பட்டதாக மே 21 அன்றே புலம் பெயர் தமிழரான இரயாகரனின் இணைய தளம் (Tamilcircle.net) செய்தி வெளியிட்டது.

பழ நெடுமாறன்அதன்பிறகு, மே 22 அன்று பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக – நலமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட செல்வராசா பத்மநாதன், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரபாகரன் வீரச் சாவெதியதாக பி.பி.சி.க்குப் பேட்டியளித்தார். செல்வராசா பத்மநாதனின் முதல் அறிக்கை அடிப்படையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறிவந்த நெடுமாறன் போன்ற தமிழினவாதத் தலைவர்கள், செல்வராசா பத்மநாதன் பிரபாகரன் சாவை உறுதி செய்தவுடன் “அவர் பன்னாட்டுப் போலீசு அமைப்பால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி, அவரது கூற்று ஏற்கத்தக்கதல்ல” என்று ஒதுக்கிவிட்டு, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர். ஜூன் 18-ந் தேதி அன்று, புலிகளின் வெளியகப் பணிப் பிரிவு புலனாவுத் துறை பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகன் “பிரபாகரன் சரணடையவோ, அல்லது கைது செய்யப்படவோ இல்லை; சிறீலங்கா படையினருடன் போரிட்டே வீரக்காவியம் ஆனார்” என்று கூறி, செல்வராசா பத்மநாதனின் நிலையை ஆதரித்துள்ளார். இதன் பிறகு தமிழகத் தமிழினவாதிகள் உட்பட, புலி விசுவாசிகள் பிரபாகரன் மரணம் குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.

இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. கடைசியாக ஜூன் இறுதியில் வெளியிடப்பட்ட ஜூனியர் விகடனில், இலங்கை இராணுவம் “சரீன்” மயக்க மருந்து கலந்த இரசாயனக் குண்டு போட்டு பிரபாகரனைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக எழுதுகிறது. பிரபாகரன் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை; போரிட்டே வீரக்காவியம் ஆனார் என்று புலிகளின் அயலுறவு புலனாவுத்துறை சோன்னாலும், இந்தப் போர் எப்போது, எங்கே எவ்வாறு நடந்தது என்று கூறவில்லை! அதுவும் ஆயுதங்களை அமைதியாக்கிக் கொள்வதாக புலிகள் அறிவித்த பிறகு, இவ்வாறான போர் நடந்திருக்கக் கூடுமா? இல்லை, சிறீலங்கா இராணுவம் கூறுவதைப் போல பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்லும்போது (ஊடறுத்துச் செல்லும்போது) சிறீலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அப்படியானால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டும் வீடியோ, பிரபாகரன் உடலை அவமானப்படுத்துவதாகக் காட்டும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களெல்லாம் வெறும் ஒட்டு வேலைகள்தானா?

இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. “மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப் படை அழைத்ததன் பேரில், வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப் படை சுட்டுக் கொன்றது” என்று புலிகளின் விசுவாசியான மணியரசன், தனது பத்திரிக்கையில் எழுதுகிறார்.

ஆயுதங்களை அமைதியாக்குவதாகப் புலித்தலைமை விடுத்த அறிவிப்பிற்கு முதல் நாளே, அதாவது மே 16-ந் தேதி இரவே,  புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன் “ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் பாதுகாப்பு உறுதி கிடைக்க வேண்டும். புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அதிகாரியான விஜய நம்பியார் அங்கே இருக்க வேண்டும்” என்று இங்கிலாந்து “சண்டே டைம்ஸ்” நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வினுக்கு தொலைபேசி மூலம்  வேண்டுகோள் விடுத்தார். பிறகு, இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினரான ரோகன் சந்திரா நேருவை அழைத்து நடேசன் பேசியிருக்கிறார். மேரி கால்வின் – விஜய நம்பியார் வழியேயும் ரோகன் சந்திரா நேரு வழியேயும் அதிபர் இராஜபக்சேவுக்கு செய்தி போனது; சிறீலங்கா அரசு இந்தச் சரணடைவை ஏற்பதாக பாசிச இராஜபக்சே கூறியதாக, நேரு வழியேயும் விஜய நம்பியார் – மேரி கால்வின் வழியேயும் மே 17-ந் தேதி காலையே நடேசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மணியரசன் கூறுவதிலிருந்து சில மேற்கு நாடுகளும் இந்த ஏற்பாட்டில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்த ஏற்பாட்டை நம்பிச் சரணடையப் போனபோதுதான் நடேசனும் புலித்தேவனும் வேறு சிலருடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நடேசனும் புலித்தேவனும் மேற்கொண்ட சரணடைவு முயற்சிகள் எல்லாம் பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் ஒப்புதலுடன் நடந்தனவா, இல்லையா? பிரபாகரன் எதிரிகளுடனான பேச்சு வார்த்தைகள் எதிலும் நேரடியாக ஈடுபட்டதே இல்லை, அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதைத்தானே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவும் அப்படி நடந்ததுதானா? அல்லது பிரபாகரன் ஒப்புதல் இல்லாமலேயே நடந்ததா? அப்படியானால் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரைத் தியாகிகளாகப் புலி விசுவாசிகள் போற்றுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலிகளிடமும் அவர்களின் விசுவாசிகளிடமும் பதில் இல்லை. இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. பிரபாகரன் போரிட்டே மரணமடைந்தார், சித்திரவதை செய்து கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா? பிரபாகரன் வெளிப்படையாக சம்பந்தப்படவில்லை என்றாலும், சிறீலங்கா பாசிச கும்பலைப் பற்றி அறிந்திருந்தும் நடேசன் வழி மேற்கொள்ளப்பட்ட சரணடைவு முயற்சிகள் அரசியல், இராணுவ ரீதியில் சரியானவைதானா? அது பற்றிய ஆய்வுக்குள் எஞ்சியுள்ள புலிகளும், அவர்களின் விசுவாசிகளும் போக மறுப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

 1. தமிழ் தேசம் ஒழியட்டும் பார்பனியம் வெல்லட்டும்

  தமிழ் தேசியவாதிகள் சாதியவாதிகளாக இருப்பதாகவும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரு முதலாளிகளாக இருப்பதாகவும் ஈழத்தில் சண்டை போடத்தெரியாமல் சண்டை போட்டதாகவும் கண நேரமும் துப்பாக்கியும் கையுமாய் இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய ம.க.இ.க( மருதையன் கலை இலக்கிய கழகம்) காரர்கள் சமிபகாலமாக பேசத்தொடங்கி உள்ளார்கள்
  ”எவன் பொண்ட்டாட்டி எவனோடு போனாலும் பூசாரிக்கு தேவை தட்சணை” அப்படி எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ மருதையன் கலை இலக்கிய கழத்துக்கும் அதை வால் பிடித்து அடையாளம் தேடும் சில ’புரட்சிகர’ எழுத்தாளர்களுக்கும் சரியாப்பொருந்தும். ஈழத்தமிழர்களுக்கு( எங்கள் தொப்புள் கொடி உறவு) ஆதரவாய் தமிழ் நாடு முழுக்க போராட்டம் நடந்த போது ’எங்க அடிக்கிற’ அலையில காணம போய்டுவோம்ணு தங்கள் புள்ள புடிக்கிற வேலைய அங்கிருந்து ஆரம்பிச்சாங்க ( முத்துக்குமாரின் சாவு வீட்டுலை கூடுன இளைஞர்களை கவர அங்க நடத்துன கூத்து சரியான காமெடி பீஸூங்கோ) வந்த புள்ளைகள் எல்லாம் விவரமா இருந்ததுனால அவங்க பருப்பு எங்கையும் வேகல..
  தங்கள் அரசியல் ஞான புளுகு மன்னிக்கவும் புரட்சி ஏட்டில் ஈழத்தமிழர்கள் வேறு இனம் தமிழகத்தமிழர்கள் வேறு இனம் என்ற புதிய கண்டு பிடிப்பை இந்த கும்பல் கண்டு பிடிச்சிருக்கு. ஒரு வேலை நோபல் பரிசு கொடுப்பவனுக்கு தெரிஞ்சுட்டா இந்த ஆண்டுக்கான சமுகவியலுக்கான நோபல் பரிசு நம்ம கும்பலுக்குத்தான்( நோபல் பரிசு பன்னாட்டு பரிசு ஆச்சேனு அதையும் ஏத்துக்க மாட்டாங்க ஆனா எங்கையோ இடிக்குது என்னடானு கேட்டா நம்ம உளவுத்துறை அதை வாங்கி கொடுக்கிறது நம்ம பொறுப்புங்குறான் எப்பவும் கட்டுன பொண்ட்டாடியை விட கள்ள பொண்ட்டாட்டி உறவு தானே பெரிசு அது தான் உளவுத்துறை உறவு மட்டும் எப்பவுமே தொடருது) சரி விஷயத்துக்கு வருவோம். உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லுற இவுங்கா உள்ளுர்த் தமிழன் ஒன்றுபட்ட மட்டும் சிக்கல் போல
  தமிழ் தேசியம் பேசுறவுங்கள்ள சில பயபுள்ளைக சாதித்திமிறோட இருக்காங்கிறது உண்மைதான்.. அதுக்காக தமிழ்தேசியமே தப்புங்கிறது மார்க்ஸியம் பேசுற ம.க.இ.க தப்புங்கிறதானல மார்க்ஸியமே தப்புங்கற மாதிரில்ல ஆயிடும். சாதியத்த இப்படி பெடல் எடுக்கிற நம்ம ம.க.இ.காவிக்கு நம்ம வாழ்த்துக்கள். ஆனால் வாழ் நாள் முழுவதும் சாதி இழிவுக்காக போராடுன அம்பேத்காரையும் பெரியாரையும் இரட்டை மலை சினிவாசனையும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏன் பிடிக்காம போச்சுனு தெரியல ஏன்னா அம்பேத்காரு தொழிலாளர்களை சொரண்டுறது இந்த கம்யுனிஸ்ட்கள் தான்னு போட்டு ஒடச்சதுன்னாலையோ என்னமோ பெரியாருட்டையும் இவங்களுக்கு சிக்கலு ஏன்னா பெரியாரு பெரு முதலாளி ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியல தமிழ் தேசியவாதிகளை திட்டும் போது மட்டும் ம.க.இ.காவின் அடிவருடி எழுத்தாளர்கள் ஏன் பெரியாருக்கு கிட்ட மட்டும் ”மதி” மயங்கி கிடக்குறாங்கனு தெரியல ஒரு வேலை இது தான் ராஜ தந்திரமோ?
  ராணுவச்சண்டை பத்தி வாயும் ……………ம் கிழிய அளவு நியாயமான விமர்சனம்கிற பேருல இவனுக பண்ணுற அலப்பற தாங்க முடியல. முதல்ல எல்லாம் கிழிய இந்திய தேசியம் பேசுற இவனுக நொடிப்பொழுதும் இமையாம துப்பாக்கியும் கையுமா இந்திய மொதலாளிகளுக்கு எதிரா துப்பாக்கி சண்டை போடுற இவனுக புலிகள் போடுற ராணுவச்சண்டைபத்தி பேச எந்த அருகதையும் இல்ல எழுதுற எழுத்தாளனுக்கு பேனா கிடச்ச எதையும் எழுதலாம்கிற கொஞ்சம் மாத்திக்கட்டும்..ஆனா ஒன்னே ஒன்னுங்க எந்த பெரியாரை வச்சு தமிழ் தேசிய வாதிகளை கொறை சொல்லுறாங்களோ அவர் வார்த்தையில சொல்லுறதுன்னா பாம்ப கண்டாலும் விட்டுடு பார்ப்பான கண்ட அடிங்கிற வார்த்தை இன்னும் சரியாப் பொருந்துது இந்த மருதையன் கலை இலக்கிய கழத்துக்கு. தன்னுடைய இனத்தின் ஆதிக்கம் எங்க ஒழிஞ்சு போயிடும்னு கெட்டிய புடிச்சுக்கிட்டு தான் ஆரியன்னு கூவுற சாதித் திமிரு சூப்பரோ சூப்பரு…
  தமிழ் தேசியம் ஒழியட்டும், பார்பனியம் வெல்லட்டும்
  ஜார்ரே ஜகாங்கே அச்சா ம.க.இ.காவா இல்ல கொக்கா

  http://www.allinall01.wordpress.com

  • ச்ரிங்கோ, முத்துக்குமாரின் சாவு வீட்டுல மகஇக காரர்களின் பருப்புதான் வேகல, உங்க பருப்ப வச்சிகிட்டு நீங்க என்னங்கோ செஞ்சீங்கோ

 2. நல்ல ஆழமான விரிவான கட்டுரை…பல கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கின்றன….

 3. //அப்படியானால் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரைத் தியாகிகளாகப் புலி விசுவாசிகள் போற்றுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலிகளிடமும் அவர்களின் விசுவாசிகளிடமும் பதில் இல்லை. இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. பிரபாகரன் போரிட்டே மரணமடைந்தார், சித்திரவதை செய்து கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா?//

  இந்தக்

  கேள்விகளைத் தான் நானும் கேட்டேன். சுகதேவ், செந்தில் போன்ற புலிப் பினாமிகள் நான் சிங்கள பேரினவாதிகளை ஆதரிப்பதாக அவதூறுகளை கூறி வாயடைக்க வைக்க பார்த்தார்கள். எப்போதும் உண்மை கசக்கும்.

 4. This is a collection of all craps published on tamilish.
  You article shows why dont you have a single follower.
  Dont act as a researcher in the feild of LTTE and Srilanka.
  Really I am sorry your words has no life and all just to tell your imagination.
  Dont waste your time by writing imaginations if you not a person where the real informations are.
  Sorry.

 5. பொறுத்திருந்து பாருங்கள். ரதி என்பவர் வந்து இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் அழுது குழறி ஒப்பாரி வைத்து விட்டு செல்வார். தன்னை விட ஈழத்தமிழர் மேல் அக்கறை கொண்டவர் வேறு யாரும் இல்லை என்பது போல பாசாங்கு செய்வார். இங்கு வெளியாகும் ஈழம் தவிர்த்த கட்டுரைகளில் இவரை காணாமல் போனவர் பட்டியலில் வைத்து தேட வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் raw தலைமையிலான ஒட்டுக் குழுவுக்கு ஆள் சேர்க்க முயற்சித்தார். இப்போது வன்னி அகதிமுகாமில் உள்ள மக்களுக்கு உதவ கோருகிறார். வன்னி அகதி முகாம்களுக்கு செல்லும் உதவிப் பொருட்கள் அனைத்தும் ராஜபக்ஷேவிடம் அனுமதி பெற்று இலங்கை இராணுவத்தின் ஊடாகத் தான் போக முடியும். ரதிக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பதை அவரின் சொல்லும் செயலும் நிரூபிக்கின்றன. தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் ராஜபக்ஷேக்கள் என்று தூற்றுவதன் மூலம் தனக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையிலான உறவை மறைக்கப் பார்க்கிறார். இப்படியான மோசடிப் பேர்வழிகளை தான் இந்தக் கட்டுரை (புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.) அம்பலப்படுத்துகின்றது.

  • tecan
   சம்பந்தமே இல்லாமல் ரதியை ராவுக்கு ஆள் சேர்க்கிறார் என அவதூறு செய்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை மட்டும் தெரியப் படுத்துங்கள். வினவில் எவரது பின்னூட்டத்தையும் நாங்கள் தடுப்பது இல்லை. ஆனால் இதையே கேடாக பயன்படுத்துவது சரியல்ல. புலிகள் ஆதரவாளர்களும், புலிகளை விமரிசப்பவர்களும் ஒருவர் மாற்றி ஒருவரை எதிரியின் கையாள் என்று விமரிசிப்பதால் எந்தப்பயனும் இல்லை. இதை அனைவரும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

   வினவு

   • தவறு தான், வினவு. முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். ரதி, சுகதேவ், செந்தில், தமிழ்நிலா ஆகியோர் மற்றவர்களை சம்பந்தமே இல்லாமல் சிங்களவன், ராஜபக்ஷேவின் பிரச்சார பீரங்கி, பேரினவாத ஆதரவாளர் என்று அவதூறு செய்த போது நீங்கள் என் எதிர்க்கவில்லை? அப்போது தடுத்திருந்தால் இந்த நிலை வருமா? இதை புலி ஆதரவாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டுகிறேன். அவதூறற்ற கருத்துப் பரிமாற்றத்தை நானும் வரவேற்கிறேன்.

 6. சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா?////

  இதுவரை எழுதியவர்களில் இதுதான் இந்த ஆண்டின் முதலாவது முதலைக்கண்ணீர் தான் –நம்பர் வண் வினவு

  இது வரை எந்த மக்களும் கொல்லப்படவில்லையா அல்லது சித்திரவதை செய்யப்படவில்லையா ??

  கொல்லப்பட்ட மக்களை வைத்தே இது வரை செய்யலாமே ??? தவிர பிரிகேடியர் தீபன் உட்பட்ட தளபதிகள் இரசாயன ஆயுதத்தில் கொல்லப்பட்டதை வைத்து செய்யலாமே ??? க்
  கொத்தனிக்குண்டுகள் பற்றிய

  ஆக உங்களுக்கு இப்போது புலிகளை வைத்து எழுதுவதற்கு ஒரு அவல் தேவைப்படுகின்றது

  புலிகள் உயிரோடு இருந்தாலும் விடமாட்டீர்கள் செத்தாலும் விடமாட்டீர்கள்

  இது ஒரு ஆய்வல்ல இது வரை தமிழ் , ஒட்டுக்குழு ஊதுபத்திகளில் வந்ததின் தொகுப்பு

  இது தான் புதிய ஜனநாயகமா ???

  நன்று நன்று நன்னி சுட்ட பலகாரம்

  சிலர் பாடலகள் பாடி பரிசுகள் வாங்குவார்கள் சிலர் குற்றம் கண்டு பரிசில்கள் வாங்குவார்கள்

  நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியும் தானே

 7. சுவிஸ்சில்; புலிகள் இயக்கத்துக்கெதிராக புலிகளின் தீவிர ஆதரவாளர்கள்!

  By
  இனி • Jul 13th, 2009 •

  கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தினரும் இயக்கப் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் நிதிவைப்புகள், ஆயுதக் கொள்வனவு மற்றும் வர்த்தகம் போன்ற பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயற்பட்டு வந்த சுவிற்ஸர்லாந்தில் தற்போது புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகப் புலிகள் இயக்க ஆதரவாளர்களாக முன்னர் செயற்பட்ட பிரமுகர்களே பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூலமாக சுவிற்ஸர்லாந்தில் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்கள் பெருந்தொகையான பணத்தைக் காலத்துக் காலம் சேகரித்தும் வசூலித்தும் வந்துள்ளனர்.இவ்வாறு முன்னர் சுவிற்ஸர்லாந்தில் புலிகள் இயக்கத்துக்குப் பல்வேறு வழிகளிலும் நிதியுதவி செய்து வந்த தமிழ்ப் பிரமுகர்கள் உட்பட புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடங்கிய குழுவொன்றினால் தற்போது புலிகள் இயக்கத்துக்கெதிராக முறைப்பாடுகள் சுவிஸ் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுவினர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுவிற்ஸர்லாந்து வங்கிகள் மூலமாகவும் நேரடியாகவும் “குலம்’ எனப்படும் பிரபல புலிகள் இயக்கப் பிரதிநிதிக்கு இலட்சக்கணக்கான பிராங்க் பணம் வழங்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட சில சுவிஸ் வங்கிகளிலிருந்து மேற்படி குழுவினர் “குலம்’ எனப்படும் மேற்படி இயக்கப் பிரதிநிதிக்கு 30,000 பிராங்க் வரை கடன்களைப் பெற்றுக்கொடுத்திருந்தனர். தற்போது புலிகள் இயக்கம் ஸ்ரீலங்காவில் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி “குலம்’ எனப்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதி தலை மறைவாகிவிட்டார்.

  சுவிஸ் வங்கிகளில் மேற்படி புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகப் பெற்ற பணத்தை மீளப் பெறுவதற்காக பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தலைமறைவாகிவிட்டார்.

  குறித்த குலம் மேற்படி சுவிஸ் தமிழர்கள் அடங்கிய குழுவினரிடம் முன்னர் தெரிவித்த தகவல்களில் யுத்தத்தில் அரச படையினரை புலிகள் இயக்கத்தினர் தோற்கடித்து தமிழ் ஈழம் அரசை அமைக்கப் போகிறார்கள் எனவும் ஆதரவாளர்கள் மூலமாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பெற்ற அனைத்துக் கடன்களையும் தமிழ் ஈழம் அரசு நிறுவப்பட்ட பின்னர் திருப்பித் தருவதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த தமிழர்களின் பேரில் கடன்கள் வழங்கிய சுவிற்ஸர்லாந்து வங்கிகள் தற்போது அவற்றை உடனே மீளச் செலுத்தும்படி அறிவித்துள்ளன. இதனால், பெரும் குழப்பத்துக்குள்ளாகியிருக்கும் மேற்படி புலிகள் இயக்க ஆதரவாளர்களாகிய தமிழர்கள் அனைவரும் தற்போது குலத்துக்கு எதிராக முறைப்பாடுகளை சுவிஸ் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளனர். சுவிஸ் புலனாய்வு பொலிஸ் பிரிவினர் “குலம்’ எனப்படும் மேற்படி பிரபல புலிகள் இயக்க பிரதிநிதிகளைத் தேடிப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிட்ட சில சுவிஸ் வங்கிகளிலிருந்து மட்டுமன்றி ஏனைய பல வங்கிகளிலிருந்தும் குறித்த புலிகள் இயக்க ஆதரவுப் பிரமுகர்கள் மூலமாக “குலம்’ இலட்சக்கணக்கான பிராங்க் பணத்தைக் கடன் தொகையாகப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றுள்ளார். தற்போது புலிகள் இயக்கத்துக்கு எதிராகப் பொலிஸ் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மேற்படி முன்னாள் புலிகள் இயக்க ஆதரவாளர்களே மேற்படி அனைத்துத் தகவல்களையும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

 8. பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009

  • தமிழ்வின் (லங்காசிறி) இணையதளத்தின் பொய்யான செய்தி. நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை மென்மேலும் துன்புறுத்திற்குள் ஆழ்த்தவும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் அதாவது நலன்புரி நிலையங்களிலுள்ள உறவினர்களான தமிழ் மக்களை பெருங்கவலைக்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கும் நிலைமையை உருவாக்கவும் மக்கள் மத்தியில் பரபரப்பான செய்திகளையும் வெளியிட வேண்டுமென்ற நோக்கில் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ்வின் இணையதளம் பொய்யான செய்திகளையே அதிகமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பண வருவாய் ஒன்றையே நோக்காகக் கொண்டும், தமது இணையதளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடனும் பொய்யான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு தமிழ்வின் (லங்காசிறி) போன்ற இணையதளங்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   தமிழ்வின் செய்தி:

   மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்
   [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 05:04.03 AM GMT +05:30 ]

   வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bD9ES24d3SWnL3b0277GGe4d34YpDce0ddZLuIce0dg2hr2cc0Rj0K2e

 9. வணக்கம். எனக்கு ஈழ விடுதலைப்போர் குறித்த நுன்னரசியல் தெரியாது! ஆயினும் அந்தப் போரின் இறுதி முடிவு தமிழீழம் அல்லது சிங்கள அரசின் கீழ் தன்னாட்ட்சி அதிகாரம் பெற்ற தமிழ் மாநில ஆட்சி என்பதாகவே என்ணிக்கொண்டிருந்த மிகச்சராசரி தமிழன் நான்.

  ஆனால் கண்ணெதிரே, என் இனம் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை தொலக்காட்சிகளில் கண்டபோது எப்படியும் மேற்சொன்ன ஏதாவது ஒரு நிலைபாட்டுக்கே இப்போர் வரும் என்று எம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் கணக்கில் கொண்டு எதிபார்த்தேன்!

  மே 19, 2009 வேறுமாதிரியாக விடிந்தது! இப்போது போர், தமிழீழம், ஏன் தன்னாட்சி என்பதுகூட வழக்கில் இல்லாத சொல்லாகிவிட்டது! தாய்நாட்டிலேயே அகதிகள், 3 குடும்பத்துக்கு 1டெண்ட், துன்புறுத்தல், கற்பழிப்பு, பிறநாட்டு ஊடகங்களுக்கு தடை என்பனவே செய்தியாகின்றன. உங்கள் செய்தியின் மூலம் இவை யாவற்றுக்கும் பின்ணனி பலரின் விதவிதமான துரோகங்கள் என்பது உறுதிப்படுகிறது.

  இந்திய சுத்ந்திரப்போர் இறுதிவடிவம் பெறும் முன் ப்ல்வேறு முறை ஒடுக்கப்பட்டது. பல போர்குழுக்கள் அழிக்கப்பட்டன! பல போராளிகள் கொல்லப்பட்டனர்! மிதவாதிகள், அரசியல்வாதிகளுக்கும் சற்றும் குறையாமல் தீவிரவாதிகளின் பங்களிப்பு பெரிய அளவில் ஆங்கே இருந்ததும் அடிமை இந்தியா சுதந்திரம் பெற்ற சரித்திரத்தையும் வெள்ளைக்காரனே எழுதினான்! ஆதலால்தான் நம் இந்திய மக்களின் வீரம் வரலாற்றில் மறக்கப்பட்டு, அகிம்சைப் போர்முறையே பாடபுத்தகங்களிலும் வரலாற்று பதிவுகளிலும் முதன்மை வகிக்கிறது! பலநூறு ஆண்டுகள் நடந்த சுதந்திரப்போர் மகாத்த்மாவின் பிறப்பு முதல் இறப்புவரை என சுருங்கிப்போய்விட்டது. போர்துர்ரோகிகள் இங்கிலாந்திலும், வெள்ளைக்காரன் காலனி நாடுகளிலும் குடியேறினர். அவர்கள் வாரிசுகள் நவநாகரீகமாக, கோடீஸ்வரர்களாக இப்போது இந்தியா வந்து போகிறார்கள்.

  நிற்க! என் தாய்நாட்டு சுதந்திரப்போரையே முன்மாதிரியாகக்கொள்கிறேன்! பத்திரிக்கையில் வருவதே உண்மை என்றும் அது மட்டுமே நிகழ்கிறது என்பதையும் மட்டுமே பொருட்டாக கொள்ளும் முன்…… செய்தியாக மாறும் வரை அது திட்டம், அது போர்முறை, அது புரட்சி! ஈழமண்ணில் ஓடிய எம் தமிழர் குருதியும், எம் தமிழ் தாய்மார்களின் தியாகங்களும், சத்தியமான எம் தமிழ் போரளிகளின் வீரமும்,கேவலம் அனுவிலும் சிறிய இத்துரோகங்களைக் கடந்து எம் தமிழ் மக்களை விடுதல் செய்யும்!

  கவணிக்க! மீண்டுமோர் போர் வரும்! மலம் தின்னும் அரசியல்வாதிகளை முன்னிட்டு மீண்டும் யாம் தாயகத்தமிழர்கள் பொறுமை காட்டோம்! மிதக்கும் தூரமுள்ள இலங்கை நடக்கும் தூரமாகும்! நாட்கள் கூடலாம், எம்மக்கள் விடுதலை நிச்சயம்! தமிழர் தன்னாட்ட்சியடைவதும், தம்க்கான நிலப்பரப்பை ஆளப்போவதும் உறுதி! விடுதலை செய்தி தவிர இப்போருக்கு முடிவு வேறு இல்லை!!

 10. pala has to wait to until the authenticity of prabhakaran’s death is proved. why pala always interested to putforth the news that come against the ltte and prabhakaran? when there are differences of opinion and the authenticity of an information is not established what makes pala to go for it? pala is under scanner. you have ur own whims and fans. correct it.

 11. /இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. “மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது./
  — இந்த “யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு” “ரஜினி திரனகமாவின்” கொலைக்கெதிராகவே,எல்.டி.டி.ஈ. யினருக்கு எதிராக துவங்கப்பட்டது!.ரஜனி திரனகமா,”எல்.டி.டி.ஈ.ராகவனின்” தற்போதைய மனைவி,நிர்மலா நித்தியானந்தனின் “தங்கை”!.ராகவனின் உறவினர்தான்,உலக செந்தமிழாய்ச்சி மாநாட்டில் தலைமையேற்கும்(மு.க.கனிமொழியுடன்)தமிழறிஞர்? க.சிவத்தம்பி!?.

 12. //இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கு சிங்கள – இந்தியக் கூட்டின் இராணுவ ரீதியான கொலைவெறித் தாக்குதல் முக்கியமானதொரு காரணம் என்றாலும், கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, முல்லைத் தீவுக்குள் முடங்கிய போதே தப்பிச் செல்வதற்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துக் கொண்டு, “பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது” என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான். இவ்வாறான “சுய அழிவு” முடிவெடுத்ததற்கான விளக்கம் எதுவும் புலித்தலைமையிடமோ, புலி விசுவாசிகளிடமோ ஒருபோதும் இல்லை.//

  After கிளிநொச்சி during jan 2009 what they LTTE can do? At least tell me about the right decision .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க