முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

-

ratan‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!

_________________________________________

புதிய ஜனநாயகம் ஜூலை 2009
_________________________________________

 1. ரத்தன் டாடா பிளேடு பக்கிரியா?…

  வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே! https://www.vinavu.com/2009/07/15/tata/trackback/

 2. உலகை குலுக்கிய பொருளாதார மந்தத்தால், முதலாளிகள் தனக்கு கிடைக்கும் லாபத்தில் வந்த நட்டத்தை, அரசு மூலமாக பெரும்பான்மை மக்கள் மேல் தூக்கி போட்டுவிட்டார்கள். தனக்கு தொழிலே போச்சு என்பவர்கள் சிறுமுதலாளிகள் தான். பெரிய முதலாளிகள் தப்பித்து விட்டார்கள். ரத்தன் டாடா பழம் தின்று கொட்டை போட்ட முதலை. நஷ்டமடைவரா என்ன?

 3. பொருளாதார மந்தம் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் தலை குப்புற கவிழ்ந்து கிடந்தது. அதற்கடுத்து வந்த அமெரிக்க செனட் கூட்டத்தில்…இதுபற்றி விவாதிக்க தொடங்கும் பொழுது “விருந்து முடிந்துவிட்டது” என்று தான் தொடங்கினார்களாம்.

  அமெரிக்கா, செனட்டில் உட்கார்ந்திருப்பவன்கள், ஜனாதிபதி, பெரிய நிறுவனங்களின் பொறுப்புகளில் இருப்பவர்கள், தரகு முதலாளிகள், எல்லாருமே திருட்டு கம்மனாட்டிகள். ஒருத்தனுக்கும் எந்த இழப்பும் இல்லை. மாறாக இதை வைத்து நிறைய பேர் நிறைய கோடிக்கணக்கில் சம்பாதித்து தான் இருக்கிறார்கள்.

  • FLASH NEWS

   நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.

   வினவு

   • கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிகழ்வு இது. அந்தப் பெரியவருக்கு உரிய சிகிச்சையும் அவரைத் தாக்கிய தீட்சித ரவுடிகள் யாரெனக் கண்டறிந்து உடனடியாக தண்டனையும் வழங்க வேண்டும்.

    அதே நேரத்தில், போயும் போயும் கோவிலுக்குள் காலை வைத்து கண்டதை மிதிப்பானேன்! காயப் படுவானேன்! காட்டுமிராண்டிகள் இப்படித் தாக்கும் போது கடவுள் காப்பாற்றியதாக எங்கேயாவது சரித்திரம் இருக்கிறதா?

    மதங்களைப் பற்றி நான் எழுத முயற்சித்து வரும் கட்டுரை பூர்த்தி அடையும் வரை இந்தக் கோபத்தை அடக்க முடியாமல் இப்போதே கொட்டி விட்டேன்.

   • உழைக்காமல் தின்று கொழுத்து, கொழுப்பு செய்கிற வேலை இது. (உடனே சிலர் வேகமாக மணியாட்டுவது எவ்வளவு சிரமமான வேலை என்பார்கள்! )
    தீட்சிதர்கள் மேலே உள்ள கிரிமினல் மற்றும் திருட்டு வழக்குகளை விசாரிக்க விரைவுப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தீட்சிதர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே போக சொல்ல வேண்டும். இல்லையெனில், கோயிலை விட்டு வெளியே துரத்த வேண்டும்.

   • இதை இப்படியே விட்டுவிடுவதா… உங்கள் நடவடிக்கை என்ன? அரட்டையே பிரதானமாக இருக்கும் வலைப்பதிவுகளிலாவது விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே

   • சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கிய பார்ப்பன தீட்சித ரவுடிகளை கண்டித்து வெள்ளிக்கிழமையன்று சிதம்பரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

    இது மிகவும் திட்டமிட்டதாக்குதல். நேற்று இரவு சில பக்தர்கள் திருச்சிற்றம்பலத்தில் திருவாசகம் பாட சென்றபோது தீட்சித ரவுடிகள் காசு கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அதை தரமறுக்கவே அவர்களுக்கு ஆதரவாக ஆறுமுக சாமி பேசியவுடன் தாக்கியிருக்கிறார்கள். சில மாதங்களாகவே பார்ப்பன மதவெறிஅமைப்புக்கள் இப்பிரச்சினையை கையிலெடுத்து வருகின்றன.

 4. திருட்டு கம்மனாட்டிங்களை எல்லாம் தலையில தூக்கி கொண்டாடடறதுதான் நம்ம பழக்கம்…கோவை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் ஊர் முழுக்க திருடிப்பிட்டு மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்ப்பிக்கும் ஆசான் வேலையில் இருப்பதும் ஒரு உதாரணம். எல்லாம் காலக் கொடுமைங்க சாமி…
  http://timesofindia.indiatimes.com/NEWS-City-Chennai-Huge-amounts-flowed-into-trust-run-by-V-Cs-wife/articleshow/4778398.cms

 5. I think all the message are wrong
  1. TATA company already informed all the consumer what they are going to do and how they are going to implment also
  then when will get the car also

  The people and the same guy report this message
  Where the guy went last one year (he come to know now only )

  THanks

 6. இந்திய அரசு ‘ஏமாந்தாங்க’ – இங்கிலாந்து அரசி ‘ஏமாந்தாங்க’ – இந்திய மக்கள் வழக்கமா கையில தோசையில்லாம காசுக் கொடுக்க விரும்பாதவங்க – எப்படி ‘ஏமாந்தாங்க’ ?

  வாக்க காப்பாத்துவாரோ ?

 7. போதும் நிறுத்துங்கப்பா! பிச்சைக்காரக் கிழவனை பாட சொல்லி நாடகமாடிப்புட்டு, தீட்சிதர்களை மேசும் அசிங்கப்படுத்த அந்தக் கிழவனை வைத்தே சீனப்போட்டுக்கிட்டு இருக்காங்க! உடனே பார்ப்பான திட்டருத்துக்கு பத்து பேர் கிலம்பிடுவானுங்க. இத விட கோடி கோடியா பணம் புரளுர தேவாலயத்துல போய் உங்க வீரத்த காமிங்களேன்ப்பா பாக்கலாம்.

  • //போதும் நிறுத்துங்கப்பா! பிச்சைக்காரக் கிழவனை பாட சொல்லி நாடகமாடிப்புட்டு, தீட்சிதர்களை மேசும் அசிங்கப்படுத்த அந்தக் கிழவனை வைத்தே சீனப்போட்டுக்கிட்டு இருக்காங்க! உடனே பார்ப்பான திட்டருத்துக்கு பத்து பேர் கிலம்பிடுவானுங்க. இத விட கோடி கோடியா பணம் புரளுர தேவாலயத்துல போய் உங்க வீரத்த காமிங்களேன்ப்பா பாக்கலாம்// இதுதான் பார்ப்பன திமிர் என்பது! கோயில் சொத்துக்களை அமுக்கி, தின்ற திமிர், ஆறுமுகசாமியை பிச்சைக்காரன் என சொல்ல வைக்கிறது. தீட்சிதர்களை கோயிலை விட்டு மக்களே துரத்தியடிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • எந்த தேவாலயத்தில் ஜெபம் செய்ய காசு கேட்கிறார்கள்? என்று கூறினால் நன்றாக இருக்கும்.
   தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழன் சோற்றை தின்றுகொண்டு, தமிழை பேசியே தமிழனை ஏமாற்றிகொண்டு, கோயிலினுள் தமிழில் பாடாதே என்று கொழுப்பெடுத்து கூறும் பார்ப்பானை திட்டாமல் கொஞ்சவா முடியும்.
   கோயிலுக்கு கடவுளை தரிசிக்க வருபவர்களிடம் காசு வாங்கும் தீட்சிதர்கள் தான் பிச்சைக்கார நாய்கள்.
   தமிழில் ஏன் பாடக்கூடாது என்று அவர்களிடம் கேட்க உனக்கு தைரியமில்லையா? வெட்கமாயில்லை, தாய்மொழியை அவமானப்படுத்துவது.

 8. திருட்டு தீட்சிதனுக்கு கொழுப்பு அதிகமா இருக்கு. அவனை அங்கிருந்து தூக்குவது தான் தமிழக பக்தர்களுக்கு கிடைக்கும் உண்மையான நீதி.

 9. உண்டியல் காசுக்காக பூசாரி வேசம் போட்டுக்கொண்டு இருப்பது தீட்சிதன் தானே. பக்தர்கள் போடு காணிக்கையை அபேஸ் பண்ணுவது தீட்சிதன் தானே. அரசு உண்டியல் வைத்ததும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது தீட்சிதன் தானே. அப்போ பிச்சைகாரன் தீட்சிதன் தான்.

  சுயமரியாதை உணர்வோடு தமிழில் வழிபடும் உரிமைக்காக போராடியவர் ஆறுமுகசாமி. அவரை திட்டுரதுக்கு ஆயிரம் பார்ப்பானுங்க கிளம்புறாங்கப்பா!

  • அதுதாங்க டெக்னிக்கு
   எல்லோருக்கும் முந்தி திருடன் திருடன்னு கத்திக்கிட்டே ஓடினா தப்பித்துக்கிடலாம் பாருங்க‌

   தோழமையுடன்

   செங்கொடி

  • //டாடா வோட லெவலுக்கு பிளேடு பக்கிரி என்பதெல்லாம் மதிப்பான பெயர்கள் //

   ஆமாங்க! ரொம்ப தப்பு பண்ணீட்டீங்க. அந்த மூதேவிக்கு இந்த பேரை வச்சுட்டீங்களே. பாருங்க பாவம் நம்ம சைதாபேட்ட பக்கிரி காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடலை. போயும் போயும் அந்த ……மாரியோட கம்ப்பேர் பண்ணீட்டாங்களேன்னு…

 10. நேனோ கார் வாங்க பதிவு செய்தவர்கள், இதையெல்லாம் தெரிந்துதான் செய்துள்ளனர். யாரும் இதுவரை
  குறை சொல்லவில்லையே. அதில் எதுவும் தில்லுமுல்லு அல்லது குற்றம் நடந்தாக தெரியவில்லை.
  இது, நீங்க‌ சொல்வ‌து போல‌ பெரிய‌ விசிய‌ம் அல்ல‌.

  ரட்டன் டாடா அதிக கடன் வாங்கி, அந்நிறுவனங்களை வாங்கியது மடத்தனம். பல வருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய டாடா குழுமம் இன்று தடுமாறுகிறது.

  இந்த விசியத்தில் தவறு என்றால், அது அய்ரோப்பிய நாடுகளின் அரசுகள், தனியார் முதலாளிகளுக்காக‌
  “உதவி” செய்த விசியங்க:. அது சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு விரோதமானது.
  குரோனி காபிடலசித்திற்க்கு வித்திடும் கொள்கை அது. ரோவர் மற்றும் இதர நிறுவனங்கள் திவால் ஆனால்,
  அதை அரசு “காப்பாற்ற” வரிப்பணத்தை செலவு செய்வது சரியல்ல. ஆனால் நடைமுறையில் இவ்வாறு
  அரசுகள் இருப்பதில்லை. தத்தம் நாட்டின் “முக்கிய” நிறுவனங்கள் திவலாகாமல் பாதுகாக்கவே முயல்கின்றன.
  இந்திய‌ அர‌சு அப்ப‌டி பெரிதாக‌ ஒன்றும் செய்வ‌தில்லை. செய்ய‌ ப‌ண‌மும் இல்லை.

  குஜ‌ராத் அர‌சு மான்ய‌ம் அளிக்க‌வில்லை. மே.வ‌ங்க‌த்தில் இருந்து டாடா ஆலை, வேறு மாநில‌த்திற்க்கு
  மாற‌ முய‌ன்ற‌ போது, ப‌ல‌ மாநில‌ங்க‌ள் க‌டும் போட்டி போட்ட‌ன‌. அத‌ற்காக‌ ப‌ல‌ ச‌லுகைக‌ள் அளித்த‌ன‌.
  அதில் சிற‌ந்த‌ பேக்கேஜ் ம‌ற்றும் இத‌ர‌ க‌ட்டுமான‌ விச‌ய‌ங்க‌ள், தொழிலாள‌ர்க‌ளின் திற‌மைக‌ள் ம‌ற்றும்
  மாநில‌ அர‌சின் ல‌ஞ்ச‌ அள‌வுக‌ள் போன்ற‌வையே, நேனோ கார் ஆலையை குஜ‌ராத்திற்க்கு கொண்டு சென்ற‌து.
  ஆனால் சுத‌ந்திர‌ ச‌ந்தை பொருளாதார‌ சித்தாந்த‌தின்ப‌டி, எந்த‌ ஒரு அர‌சும், எந்த‌ ஒரு தொழில் நிறுவ‌ன‌த்திற்க்கோ, தொழில் துறைக்கோ எந்த‌ பார‌ப‌ட்ச‌மும், ச‌லுகையும் அளிக்க‌ கூடாது. காட்டு பூக்க‌ள், தானே ம‌ல‌ர்வ‌து போல், இய‌ற்க்கையான‌ போக்கில் அர‌சு த‌லையிட‌க்கூடாது. ஆனால் ந‌டைமுறையில் அந்த‌ அள‌விற்க்கு உல‌கின் எந்த‌ அர‌சும் இருப்ப‌தில்லை.

 11. அதியமான் ! நானோ கார் வாங்க முன்பதிவு செய்பவர்கள் எல்லாம், கார் வாங்க நெடுநாளாக ஆசைப்பட்ட கீழ் மற்றும் மத்திய நடுத்தர வர்க்க மக்கள். அவர்களின் நீணடநாள கனவினை டாட்டா சாமார்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பேங்க லோன் பத்திரத்தில் கீழே, * நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஒரு வரி இருக்கும். அது இப்போதுதான் தெரிய வருகின்றது. உங்களைப் போன்ற மில் முதலாளிகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் குறைபடுவது தெரிய வாய்ப்பு இல்லை. உங்கள் பதிவிலேயே, குஜராத் அரசு மான்யம் அளிக்கவில்லை என்று சொல்லி விட்டு, பின்பு சலுகை அளித்து உள்ளதாக மெழுகுகிறீர்கள். மோடி என்ன தங்கள் பாட்டன் சொத்தையா எடுத்து அளித்தார். தமது கட்சியில் உள்ள அடிபொடிகள், சப்காண்டிராக்ட் எடுத்து துட்டு அள்ளதான் மக்கள் பணத்தை எடுத்து மொய் எழுதினார். உடனே நீங்கள், குஜராத் அரசுக்கு வரி மூலமாக பணம வரும் என்று கதைக் கட்டாதீர்கள். வரியும், மற்ற பணிகளுக்கான கமிழனாக பின்பு மோடியின் பைகளுக்கே செல்லும். //ஆனால் சுத‌ந்திர‌ ச‌ந்தை பொருளாதார‌ சித்தாந்த‌தின்ப‌டி, எந்த‌ ஒரு அர‌சும், எந்த‌ ஒரு தொழில் நிறுவ‌ன‌த்திற்க்கோ, தொழில் துறைக்கோ எந்த‌ பார‌ப‌ட்ச‌மும், ச‌லுகையும் அளிக்க‌ கூடாது. காட்டு பூக்க‌ள், தானே ம‌ல‌ர்வ‌து போல், இய‌ற்க்கையான‌ போக்கில் அர‌சு த‌லையிட‌க்கூடாது// அப்பா சாமி ! அஜித் மாதிரி வசனமா ? காட்டுப் பூக்கள் மாதிரி கேட்பாரற்று இருப்பவர்கள், உழைக்கும் மக்கள்தான்.

 12. ஒரு குறு விவசாயி ஐயாயிரம் ரூபாய் கடனை கட்டமுடியவில்லை என்றால் அவரது சொத்தை நீதிமன்றம் செல்லாமல் நேரடியாக ஜப்தி செய்யும் வசதி கூட்டுறவு வங்கிகளுக்கு உண்டு. ஆனால் ஆயிரம் கோடிகள் கடனை கூட கட்டாமல் தள்ளுபடி பெறும் வசதி டாடாக்களுக்கு உண்டு. நல்ல நீதி பரிபாலனம்.

 13. அறிவுடை நம்பி,

  நான் ஒரு மில் முதலாளி அல்ல ; ஒரு சிறு தொழில் முனைவோன். ஆனால் எதிர்காலத்தில் மில் முதலாளி ஆக விழைகிறேன். பைக்கில் செல்லும் உங்களை போன்ற ஒரு நடுத்தர வரகத்தினன் தான்.

  நானே கார் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், போலிஸில் புகார் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
  ஆனால் அவர்கள் காத்திருக்க தயராக இருக்கிறார்கள். ஏனெனில் காரின் விலை அப்படி மலிவு அல்லது பிற காரணிகள். ஓ.கே. இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல.

  குஜராத் அரசு வரி சலுகை அளிக்கா விட்டால், நேனோ தொழிற்சாலை வேறு மாநிலத்திற்க்கு சென்றிருக்கும்.
  வரி சலுகை என்றால் : முழு வரி விதிப்பில் ஆண்டுக்கு 200 ருபாய் வரி வருமானம் இருந்த்தால், இப்போது அளிக்கப்பட்ட சலுகையில் சுமார் 150 ரூபாய் வருமானம் வரலாம். ஆனால் தொழிற்சாலையே அங்கு வராவிட்டால், இந்த 150 ரூ உம் கிடையாது. சுழிதான். இதுதான் வரி சலுகையின் சூட்ச்சமம்.

  1972 வாக்கில் உச்ச பட்ச வருமான வரி விகுதம் சுமார் 98 % (ஆம் 98 சதம்). இன்று 33.33 சதம்தான்.
  அன்று இருந்த வரி விகிதமே இன்று தொடர்ந்திருந்தால், எத்தனை கோடி கோடிகள் வரி அதிகம் கிடைத்திருக்கும். ஆனால் நடைமுறையில் அன்று இருந்த 98 சத வரி விகுதம், தொழில் துறையை நசுக்கி,
  புதிய முதலீடுகள் உருவாகாமல் தடுத்து, இருந்தவர்களையும் வெளிநாட்டிற்க்கு விரட்டியது. பிர்லா தாய்லாந்தில் தனது முதலீடுகளையும், பல முக்கிய தொழிற்சாலைகளையும் விரிவு படுத்தினார். லக்ஸ்மி நிவாஸ் மிட்டல் நாட்டை விட்டே வெளியேறினார்.

  அன்று இருந்த வரி அளவோடு ஒப்பிட்டால் இன்று கடுமையான சலுகைதான். அப்ப ?
  வரி விகுதம் குறைத்தின் விளைவை தான் பார்க்கவேண்டும். புதிய தொழில்கள் உருவாகி செவ்வனெ வளர்ந்ததால், இன்று பல பல ஆயிரம் மடங்கு அதிக வரி வசூல் மழை கொட்டுகிறது. 1980இல் வரி வசூலையும் இன்றைய அளவை ஒப்பிட்டாலே புரியும்.

  மாநில‌ங்க‌ளுக்குள் போட்டி. அதே போல் நாடுக‌ளுக்குள் போட்டி : புதிய‌ முத‌லீடுக‌ளை. தொழிற்சாலைக‌ளை வ‌ர‌வேற்று வ‌ள‌ம் பெற‌ போட்டி. அத‌ன் விளைவாக‌ வ‌ரி ச‌லுகை அளிக்க‌ முனைப்பு. புதிதாக‌ வ‌ரி வ‌சூலே உருவாகாம‌ல் இருப்ப‌தை விட‌ சிறிது ச‌லுகை காட்டி ந‌ல்ல‌ வ‌ரி வ‌சூல் ம‌ற்றும் வேலை வாய்ப்பை அதிக‌ரிக்க‌
  முய‌ல்வ‌தில் என்ன‌ த‌வறு ?

  பெரும் நிறுவ‌ன‌க்க‌ள் கூட‌ த‌ங்க‌ளில் சிற‌ந்த‌ வாடிக்கையாளர்க‌ளுக்கு ப‌ல‌ ச‌லுகைக‌ளை அளித்து, அவ‌ர்க‌ளை
  த‌க்க‌ வைக்க‌ முய‌ல்கின்ற‌ன‌. அத‌ற்க்கு இணையான‌துதான் இந்த‌ வ‌ரி ‘ச‌லுகைக‌ள்’ ;

  or the coice is yours. you can show no tax breaks and other saluhaihal and retain status quo with no new investements into your state or nation. that is all.

  • மக்கள் விரோத செயலையே மக்கள் நலனாக காட்ட முனைகிறார்கள். இப்படிக் காட்டுவதன் மூலம் மக்கள் விரோத பாசிஸ்டுகளை நல்லவர்களாக முலாம் பூசுகின்றனர்.
   நாட்டின் பெரும்பான்மையான‌ மக்கள் தங்களின்(விவசாயிகள்,நெசவாளர்கள்,சிறுவியாபாரிகள்,தொழிலாளர்கள்)எதிர்காலம் கேள்விக்குறியாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களோ வரிச்சுமையினால் முதலாளிகள் நாட்டை விட்டு போய் விட்டதாக கண்ணீர் விடுகின்றனர். ஏதோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து வரி கட்டுவதைப் போல் மோசடியாக கூறுகின்றனர். அதுவே பொதுக்கருத்தாக்க முயல்கின்றனர். உலகின் இன்னல்களுக்கு முதலாளிகளே காரணம் என்று தெரிந்திருந்தும் மோசடியாகவே ம்ழுப்புகின்றனர். இவர்களைப் போன்ற நல்லவர்களின் ஆதரவோடுதான் முதலாளித்துவம் மக்களை ஏய்த்து, ஏறி மிதிக்கின்றது.

 14. askar,

  you are generalising and nothing specific but cliches.

  ///நாட்டின் பெரும்பான்மையான‌ மக்கள் தங்களின்(விவசாயிகள்,நெசவாளர்கள்,சிறுவியாபாரிகள்,தொழிலாளர்கள்)எதிர்காலம் கேள்விக்குறியாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள்.///

  majority are commiting sucide ? prove this with data first.
  and argue about the net poverty ratio (some 26 % )when compared to the past.
  with data and proof. ok.

  I was talking about 1970s when many talented industrialists left India due to very high
  tax regime. not now. ok. now reverse is true.

  What is makkal virotha seyal ? this cheap internet and PC and cell and millions of new jobs ?

  //தோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து வரி கட்டுவதைப் போல் மோசடியாக கூறுகின்றனர். அதுவே பொதுக்கருத்தாக்க முயல்கின்றனர். ///

  i didn’t say that. but without running their units successfully and efficiently, how the hell do you
  expect tax revenue. and again compare the total tax revenue (adjusted for inflation) now when compared to the past. so what do you suggest. and what about the makkal virotha seyalhal of fascist dictaorhsips in the name communism in former USSR, etc. esp under Com.Stalin who was responsible for mass murder ?

  You are totally ignorant of economic realities.and facts. ok.

  • நண்பரே,
   உங்களுடைய கருத்துக்களை தமிழில் எழுதுனால் நன்றாக இருக்கும்.

  • அதியமானே,
   உங்களுக்கு உணவு ம்ற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பற்றி தெரியாதா? கம்ப்யூட்டர், செல்போன், முக்கியமா! உணவு முக்கியமா? எது குறைவாக இருக்க வேண்டும்?

 15. //and argue about the net poverty ratio (some 26 % )when compared to the past.
  with data and proof. ok.//

  கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்த தகவல், 80% பேர் ரூபாய் 20ல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பது.

  சில மாதங்களுக்கு முன்பு வந்த புள்ளிவிவரத்தின் படி உலகில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களில் 50% பேர் இந்தியாவில் உள்ளனர்.

  இந்திய விவசாய குடிகளின் ஆண்டு சராசரி வருமானம் வருடத்திற்கே சில நூறு ரூபாய்தான். இதுவும் அரசு புள்ளிவிவரம்தான்.

  இத்துனையும் சொன்ன பிறகு அதியமான் பின்வருவதைச் சொல்லுவார்.

  “அரசாங்க புள்ளிவிவரத்தப் பத்தி எங்களுக்கு தெரியாதா? அதெல்லாம் நாங்க ஏத்துக்க மாட்டோம். அது தவறான புள்ளிவிவரம்.”

  வாழ்த்துக்கள் அதியமான்

  • //கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்த தகவல், 80% பேர் ரூபாய் 20ல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பது.
   ///

   wronng quote. prove this with links, if you can. this means poverty ratio has INCREASED to some 75 %. and extremet poverty. nonsense.

 16. //You are totally ignorant of economic realities.and facts. ok.//

  எல்லாரும் தங்களது பெயருக்குக் கீழே சில ஸ்லோகன் இடுவார்கள். அது போல அதியமானுடைய ஸ்லோகம் மேலே உள்ளது.

  You are totally ignorant of historic facts

  You are totally ignorant of pure capitalism

  You are totally ignorant of Communism Blah blah blah

  சிலருக்கு இக்னொரன்ஸ் இஸ் பிலிஸ்…. சிலருக்கு இக்னொரன்ஸ் என்ற வார்த்தையே பிலிஸ்….

  • பூச்சாண்டி,

   I stand by my words. ok

   முதலில் நான் எழுப்பிய வினாக்களுக்கும், விவாதத்திற்க்கும் ஆதராபூர்வமாக‌
   பதில் அளிக்க முயலவும். உம்மைப்போன்றவர்கள் பொருளாதார விசயங்களில்
   அறியாமை மிக அதிகம் உடையவர்கள்தாம். அதனால் தான் அப்படி
   எழுதினேன்.

   பூச்சாண்டி பிடிக்கவும் எமக்கு தெரியும். ok.

  • and for annoymous buggers like you, everything is blahblah blah slogans because of lack of any originality or intellegence. all you can do is write some nonsense like this hiding behind some fake id.

   i challege you argue in my blog posts with data and logic, if you can. esp in my post about 1991 crisis and IMF. can you ?

 17. நெறி,,

  உணவு, உடை மற்றும் பல அடிப்படை பொருட்களின் விலை உயர்ந்துதான் உள்ளது. ஆனாலும், 60கள் மற்றும் 70களில் இருந்ததை விட ஏழை மக்களின் வாங்கும் திறன், அதைவிட அதிக வேகமாக அதிகரித்துள்ளது. அரிசி விலை, அன்று இருந்த‌ விகுத‌தில் இன்றும் தொட‌ர்ந்திருந்தால், கிலோ 50 ருபாய் இருக்கும். அத‌னால் தான் விவ‌சாயிக‌ளின் வ‌ருமான‌ம் குறைந்துவிட்ட‌து. கார‌ண‌ம் அதிக‌ உற்ப‌த்தி.

  உடை : இவ்விசிய‌த்தில், 45 வ‌ய‌திற்க்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு நேர‌டி அனுப‌வ‌ம் உண்டு. அத‌வாது 70க‌ள் வ‌ரை ஏழைக‌க‌ள் கிழ்ந்த‌ க‌ந்த‌ல்க‌ளை அணிவ‌து மிக‌ ச‌க‌ஜ‌ம். இன்று ஒரு நாள் உழைப்பின் கூலியில்
  ஓர‌ள‌வு ந‌ல்ல‌ உடை / புட‌வை வாங்க‌ முடிகிற‌து. கார‌ண‌ம் உற்ப‌த்தி தார‌ள‌ம‌ய‌மாக்க‌ப‌ட்ட‌தால். (முக்கிய‌மாக‌
  ரில‌ய‌ன்ஸ் பாலிஸ்ட‌ர் துணி உற்ப‌த்திய‌ல் செய்த‌ புர‌ட்சி ம‌ற்றும் மாபெரும் உற்ப‌த்தி அளவு ம‌ற்றும் திற‌ன்).

  வ‌றுமைக்கோட்டிற்க்கு கீழ் இன்று 26 ச‌த‌ம் ம‌க்க‌ள்தாம். அதாவ‌து 110 கோடி ம‌க்க‌ள் தொகையில், 26 ச‌த‌ம்.
  அன்று 50 ச‌த‌த்திற்கும் அதிக‌ம். ஆனால் போக‌ வேண்டிய‌ தூர‌ம் மிக‌ மிக‌ அதிக‌ம். ஊழ‌ல், ம‌ற்றும் அராஜ‌க‌ம்
  மிக‌ மிக‌ அதிக‌மாக‌ இருப்ப‌தால், அர‌சின் செல்வுக‌ள் ச‌ரியான‌ ம‌க்க‌ளுக்கு செல்லாம‌ல் திருட‌ப்ப‌டுகிற‌து. இது ஒரு முக்கிய கார‌ணி.

  1980இல் வ‌ந்த “வ‌றுமையின் நிற‌ம் சிக‌ப்பு” ப‌ட‌த்தை பார்க்க‌வும். அன்று இருந்த‌ நிலைக்கு இன்று ப‌ர‌வாயில்லைதான்.

  inflation rate is currently far tolerable than the terrible days of 60s and 70s when 20 % was normal which impoverished crores due to high prices. read more about our economic history.

 18. அதியமான் ! ஏழை மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து இருப்பதாக நீங்கள் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். தாராளமயம் அவர்களுடைய சம்பளத்தினை வீழ்ச்சி அடையச் செய்து விட்டது – 10 வேலையிடங்கள் உருவானால், 1000 பேர் அதற்குப் போட்டிப் போடுகிறார்கள். ஆக, சம்பளம் குறைகிறது, தொழிலாளர்களின் பேரம் பேசும் திறம் குறைகிறது. அன்று 1000 வாங்கியவர்கள் இப்போது 3000-6000 குள் வாங்குகிறார்கள். ஆனால் விலைவாசிகள் மட்டும் 10 மடங்கு உயர்ந்து உள்ளது. நீங்கள் சொல்கின்ற லைசன்ஸ் ராஜ்ஜியம் (60 – 70) காலத்தில் கூட லோக்கல் முதலாளிகள் மக்களைச் சுரண்டினார்கள். //அரிசி விலை, அன்று இருந்த‌ விகுத‌தில் இன்றும் தொட‌ர்ந்திருந்தால், கிலோ 50 ருபாய் இருக்கும். அத‌னால் தான் விவ‌சாயிக‌ளின் வ‌ருமான‌ம் குறைந்துவிட்ட‌து. கார‌ண‌ம் அதிக‌ உற்ப‌த்தி.// ஆனால் மேலைநாடுகளில் இந்த நிலை இல்லையே ? அங்கே மட்டும் விவசாயப் பொருட்களின் விலைக்குறையவில்லையே – குறைகின்ற இடங்களில் மான்யம் அளிக்கிறார்கள் – ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டும் மான்யம் அளிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதுதான் விவசாய உணவு உற்பத்திப்பொருட்களின் விலைகுறைவிற்குக் காரணம். G8 இலேயே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் வளரும் நாடுகள் விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவது குறைவதாக ! ஒருபுறத்தில் விலைபொருட்களுக்கு விலைகிடைப்பது இல்லை – இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது – நவீன ரசாயன உரங்களால் மண்ணின் மலட்டுதன்மை மிகுந்து விட்டது – ஆக அதிகம் செலவு செய்து இந்த விளைச்சலைப் பெற வேண்டி உள்ளது. ஆனால் மறுபுறத்திலோ மற்ற பொருட்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரித்து விட்டன- விளைவு – வாங்கும் திறன் – விலைவாசிக்கேற்ற விதத்தில் உயர வில்லை.
  உடையைப் பற்றிச் சொல்லும் போது, ரிலையன்ஸின் புரட்சி பற்றிச் சொன்னீர்கள் – அண்ணன் அசுரன் ரிலையன்ஸின் பாலியஸ்டர் அயோக்கியத்தைப்பற்றி எழுதிய பதிவை (ஒரு மேல்நாட்டுப் பத்திரிக்கையாளர் எழுதியதை அசுரன் மேற்கோளிட்டு உள்ளார்) நான் நாளை தருகிறேன். பாருங்கள். உடை உற்பத்தி தாரளாமயமாக்கப்பட்டதால் முதலாளிகள்தான் லாபமடைந்தார்கள், மாறாக, மண்ணினை மாசுப்படுத்தும் இந்த தொழில் திட்டமிட்டமுறையில் ஏழைநாடுகளின் தலையில் கட்டப்பட்டது.

 19. அய்யா அதியமானே… கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்… இந்தியாவில் வருமைகோடு என்பது மாத வருமானம் ரூபாய் 538 நகரத்திலும், ரூபாய் 356 கிராமங்களிலும் அளவுகோலாக இந்திய அரசினால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.. இந்தக்கனக்குபடியே 28% சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர்.. இந்தியாவில் வருமான வேறுபாட்டு விகிதம் அதிகரித்துக்கொண்டு வருகிறது எனவும் அறிக்கை கூறுகிறது… இதெல்லாம் உங்களின் முதலாளித்துவத்தின் மகிமையினால்தானே..

  அண்ணே…கொஞ்சமாவது கருணை இருந்தால் யோசித்து பாருங்கள் ஒரு குடும்பம் ஏறக்குறைய மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய உணவு தேவையை பூர்த்தி செய்யுமா, மருத்துவத்திற்க்காக செலவிடுமா அல்லது அதனை கல்விக்காக செலவிடுமா?

  http://en.wikipedia.org/wiki/Poverty_in_India
  http://en.wikipedia.org/wiki/Below_Poverty_Line_(India)

  //Internationally, an income of less than $1 per day per head of purchasing power parity is defined as extreme poverty. By this estimate, about 45 percent of Indians are extremely poor. If the daily income per head is less than $2, then the family is described as poor and about 80 percent of Indians are poor. Income-based poverty lines consider the bare minimum to income to provide basic food requirements; it does not account for other essentials such as health care and education. That is why some times the poverty lines have been described as starvation lines.//

  30 வருடத்திற்கு முன்பு என்ன அளவுகோல் இருந்ததோ அதையே வைத்து இன்னமும் வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறார்கள்.. எல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் தயவுலதான்….!

 20. 80 கோடி மக்கள் தினமும் ரூ.20இல் வாழ்வதாக ஒரு தகவல். இப்போது 2 டாலர் (ரூ.100) என்று ஒரு தகவல். ஆக இந்த 80 கோடி / ர்ர்.20 என்பது புருடா. அதைதான் சுட்டினேன்.

  பகத்,

  இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் பழைய அடிப்படையை வைத்துத்தான். ஆனால் உலக வங்கியின் அறிக்கை : http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:21880725~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html

  1991க்கு பின் இந்தியாவில் வறுமை கோட்டிர்க்குள் வாழ்பவர்களின் நிகர விகுதம் வெகுவாக குறைந்துள்ளது.
  (ஆதாரம் : உலக வங்கி மற்றும் பல அமைப்புகள்) ; வறுமை கோடு என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.50 (ஆதாவது ஒரு டாலர்).

  ரிலயன்ஸ் செய்த பித்தலாட்டங்களை பற்றி உங்க அசுரனை விட நான் அதிகம் அறிவேன். நேரடி அனுபவம் உண்டு. ஆனால் ரிலையன்ஸ் மற்றும் பிர்லா ஆலைகள் உருவாகும் வரை கடுமையான துணி பஞ்சம். கள்ள சந்தைகள். கந்தல் ஆடைகள். அதை பற்றி பெரியவர்களிடம் விசாரித்து பாருங்கள்.

  1991வரை மூடப்பட்ட பொருளாதார அமைப்பு. (உங்க மாதுரி ஞானிகளின் வற்புறுத்தலால்); அதை நம்
  வறுமையை பல மடங்கு அதிகரித்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் 70களிலும், 80களிலும் மிக உச்சம் பெற்றது. 1991இல் இந்தியா திவாலன நிலையை அடைந்த்தது.

  எமது இந்த பதிவின் http://nellikkani.blogspot.com/2008/05/1991.html இறுதியில் எழுப்பிய வினாவிற்க்கு, இங்கு யாராவது ஆதாரபூர்வமாக பதிலளிக்க முடியுமா ?

  சரி. மாற்று வழி என்ன சொல்றீக ? செம்புரட்சியா ? எப்போது ? எப்படி ? அதன் பின் மட்டும் உருப்படியான‌
  தீர்வு பிறக்குமா என்ன ? வரலாறு வேறு விதமாக சொல்கிறதே ?

 21. //India Estimates: Similarly, estimates for India also indicate a continuing decline in poverty. The revised estimates suggest that the percentage of people living below $1.25 a day in 2005 (which, based on India’s PPP rate, works out to Rs 21.6 a day in urban areas and Rs 14.3 in rural areas in 2005 ) decreased from 60% in 1981 to 42% in 2005. Even at a dollar a day ( Rs 17.2 in urban areas and Rs 11.4 in rural areas in 2005 ) poverty declined from 42% to 24% over the same period//

  PPP means purchasing power parity and not in actuals.

  all estimates by various organisations across the world prove that poverty declined dranstically in India in recent decades. and in practical life we can perceive. that is by people who are over 45 and who have wider experience in life.

 22. /ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டும் மான்யம் அளிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். //

  yes, but we don’t care or obey them. ok. No one can stop India subsidising its farmers. but the problems is lack of money with govt of India to subsidise. see my old post about Indian agriculture and farmer sucides :

  விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

  http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html

  also see this :

  http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

  விலைவாசி ஏன் உயர்கிறது ?

 23. அதியமான் ! //Even at a dollar a day ( Rs 17.2 in urban areas and Rs 11.4 in rural areas in 2005 ) poverty declined from 42% to 24% over the same period/// ஒரு நாளைக்கு 17.2 என்றால், 30 நாளைக்கு 518. //which, based on India’s PPP rate, works out to Rs 21.6 a day in urban areas and Rs 14.3 in rural areas in 2005 ) decreased from 60% in 1981 to 42% in 2005.// ஒரு நாளைக்கு 21.6 என்றால், 30 நாளைக்கு 648. சரி purchasing power parity என்றே வைத்துக் கொள்ளுங்கள் – 518 அல்லது 648 க்கு என்ன வெங்காயம் purchas செய்ய முடியும் ? ஒன்று செய்யுங்கள் – சென்னையில் எனக்கு 518க்கு ஒரு paying guest ஆகவாவது ஒரு வீடு பிடித்துக் கொடுங்கள்.

 24. arivudainamnbi,

  yes this info is in old value of rupee and can you provide the correct and exact data ? that is did poverty ratio decrease or increase since 1991 under the actual line of Rs.50 a day.

  and most importantly, answer my question at the end of my post about 1991 crisis.

  and about viable alternatives ?

 25. //80 கோடி மக்கள் தினமும் ரூ.20இல் வாழ்வதாக ஒரு தகவல். இப்போது 2 டாலர் (ரூ.100) என்று ஒரு தகவல். //

  அதியமான் ஒரு தகவல் என்று கூறி புறம் தள்ளும் இந்த புள்ளிவிவரம் தேசிய புள்ளிவிவரத் துறையால் கொடுக்கப்பட்டது.

  Nearly 80 pct of India lives on less than 20 rupees a day

  http://in.reuters.com/article/topNews/idINIndia-28923020070810

  இந்த புள்ளிவிவரம் வந்த வருடம்2007. இத்ற்கு பிறகுதான் மிக அபரிமிதமாக விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளியது. ஆனால் இதே நேரத்தில் மக்களின் வருமானம் பெரிய அளவில் உயரவில்லை.

  பூச்சாண்டி

 26. மன்னிக்கவும் தேசிய புள்ளிவிவரத் துறை என்று குறிப்பிட்டுவிட்டேன். அது அமைப்புசாரா தொழில்முனைவு குறித்த தேசிய கமிசன் குடுத்துள்ள புள்ளிவிவரம் (National Commission for Enterprises in the Unorganised Sector (NCEUS) )

 27. 1981 க்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் இவர்கள் அடிபப்டையாக கொள்வது டாலரில் 1.25 அல்லது 1. ஆனால் 1.25 டாலர் என்பதன் ரூபாய் மதிப்பு 1981ல் இருந்ததற்கும், இன்றைக்கும் இருப்பதற்கும் உள்ள வேறுபாடும், அதே 1981ல் 1.25 டால்ர் இந்தியாவின் விலைவாசிக்கு நிகராக பெற்ற மதிப்பிற்க்கும், இன்றைய விலைவாசிக்கு நிகராக பெறுகிற மதிப்பும் ஒன்றா? ஒப்பிடக் கூடியதா?

  அதியமான் வறுமைக் கோட்டை அளவிட பயன்படுத்தும் அளவுகோல் மோசடியானது.

  • மிக சரியாய் சொன்னீர்கள் நண்பரே.. முப்பது வருடமாக ஒரே அளவுகோலை வைத்துக்கொண்டு வறுமையை ஒழித்துவிட்டோம் என பொய் கூப்பாடு போட்டு வருகின்றனர்…

   //Around 26 percent of India’s population lives below the poverty line, which is defined as 12 rupees per day, said officials.//

   2 டாலர் என்பதை எப்படி வந்தது என்பதை இதைப்படித்தால் உங்களுக்கு புரியும்…

   //This figure has been variously reported as either “2 dollars per day” or “0.5 dollars per day”. The former figure comes from the the PPP (Purchasing power parity) conversion rate, while the latter comes from the official exchange rate. Also note that this figure does not contradict the NSS derived figure, which uses calorie consumption as the basis for its poverty line. It just uses a more inclusive poverty line//

   ரூபாய் 12 என்பது வறுமைகோடு என்பதுதான் இந்திய அரசின் அளவுகோல்… நண்பர் அதியமானே நீங்கள் பொருளாதாரத்தில் அறிவு பெற்றவராக இருக்கலாம் பல நுண்ணிய விவரங்களை படிக்கும் நீங்கள் சகமனிதனின் வறுமையை பற்றி தெரியாமல் இருப்பது நன்றா..?

   இதனை விடுங்கள் ஒரு மனிதன் சராசரியாக உயிர் வாழ 1200 கலோரிகள் தேவை என நினைக்கிறேன்..( சரியாய் நினைவு இல்லை) இந்த அளவுகோலை எத்தனை சதவீத இந்திய மக்கள் பூர்த்தி செய்கின்றனர்… ? உலகிலேயே ஏன் இந்தியாவில் ஊட்டசத்து குறைவாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ளனர்…?

 28. ஒரு உதாரணத்திற்கு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் பெரிய அளவில் வேறுபடவில்லை.

  ஒரு டாலர் 2006 இறுதியில் Rs 44.25
  2007 இறுதியில் 39.81
  2008 இறுதியில்
  2009 ல் 49.92

  கடந்த மூன்று நான்கு வருடங்களில் ஒரு டாலர் என்பதன் மதிப்பு 10 ரூபாய் முன்னே பின்னே சென்றுள்ளது. ஆனால் இதே நேரத்தில் விலைவாசி உயர்வு என்பது பல பத்து ரூபாய்கள் ஏறிவிட்டது. பெட்ரோல் விலையும் 10 ரூபாய் மேல் ஏறிவிட்டது. இதனை ஒட்டி வீட்டு வாடகை, கல்வி தனியார்மயம், மருத்துவ சேவை விலை போன்றவற்றின் விலையோ ஒப்பிட முடியாத அளவு பல ஆயிரங்களில் ஏறிவிட்டது. யதார்த்தம் இப்படி இருக்கும் போது 1981க்கும் இன்றைக்கும் அதே 1.25 டாலர் வைத்து வறுமை கோட்டை அளவிடுவது பிளேடு பக்கிரி மோசடி போன்றது.

 29. இன்னும் சொன்னால் சுத்தமாக வித்தியாசமே இல்லை. 2006ல் 44 ரூபாயாக இருந்த டாலர் இன்று 47 ரூபாயாக உள்ளது. வெறும் மூன்று ரூபாய் ஏற்றம். இதே நேரத்தில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது.

  http://www.fxstreet.com/fundamental/economic-time-series/data/fedstl/exinus.aspx

  2006 01 44·2010
  2006 02 44·2300
  2006 03 44.3378
  2006 04 44.8245
  2006 05 45.1959
  2006 06 45·8886
  2006 07 46.3675
  2006 08 46·4461
  2006 09 46.0105
  2006 10 45·3552
  2006 11 44.7257
  2006 12 44.4835
  2007 01 44.2062
  2007 02 44.0195
  2007 03 43·7936
  2007 04 42.0176
  2007 05 40·5686
  2007 06 40·5905
  2007 07 40.2738
  2007 08 40·6791
  2007 09 40.1735
  2007 10 39.3661
  2007 11 39.3267
  2007 12 39·3750
  2008 01 39.2676
  2008 02 39.6735
  2008 03 40.1452
  2008 04 39·9668
  2008 05 42·0019
  2008 06 42.7633
  2008 07 42.7027
  2008 08 42.9057
  2008 09 45.5300
  2008 10 48·6155
  2008 11 48.8517
  2008 12 48.5132
  2009 01 48.6995
  2009 02 49·2484
  2009 03 51.1291
  2009 04 49.9655
  2009 05 48·5100
  2009 06 47·6736

 30. 1981ல் ஒரு டாலர் என்பது 8 ரூபாய் இன்றைக்கு ஒரு டாலர் என்பது 49 ரூபாய். 1981ல் ஒரு ஆரஞ்சு மிட்டாய் விலை ஐந்து பைசாவுக்கு ஐந்து(பொடிசா இருக்கும்) இன்று அதன் விலை 25 அல்லது 50 பைசா.

  1981ல் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டின் மாதாந்திர வாடகை ஒரு மத்தியத்தர நகரத்தில் 75 ரூபாய் அல்லது 100 ரூபாய் இன்று அதே வீட்டின் வாடகை 1500லிருந்து 3000 ரூபாய்வரை.

  1981ல் மதிய உணவு உயர்தரமானது 18 அல்லது 25 ரூபாய் இன்று 75 அல்லது 150 ரூபாய்.

  1981ன் 8 ரூபாயும் இன்றைய 49 ரூபாயும் ஒன்றா? அதியமான் அப்படித்தான் சொல்ல விரும்புகிறார்.

 31. இது தவிர்த்து 1981ல் அரசுடமை என்ற வகையிலும், தேசிய பொருளாதாரம் ஓரளவு வலுவாக இருந்தது என்ற வகையிலும் குறைந்த விலை அல்லது இலவசமாக கிடைத்து வந்த சேவைகள்(மருத்துவம், பொதுப் போக்குவரத்து, கல்வி போன்றவை) இன்று பல பல மடங்கு உயர்ந்த விலையில் கிடைப்பதையும் ஒப்பிட்டு நோக்கினால் அதியமான் குறிப்பிடும் வறுமை கோட்டாளர் விகிதம் குறைந்த கதையின் உண்மை அர்த்தம் புரியும்.

 32. உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குப்வர்கள் மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயற்சிப்பது, காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம். அதியமானிடம் என்ன சொன்னாலும், திரும்ப திரும்ப //சரி. மாற்று வழி என்ன சொல்றீக ? செம்புரட்சியா ? எப்போது ? எப்படி ? அதன் பின் மட்டும் உருப்படியான‌
  தீர்வு பிறக்குமா என்ன ? வரலாறு வேறு விதமாக சொல்கிறதே // என்று கம்பியுனிஸத்தின் மீது சேறு அடித்துக் கொண்டுதான் இருப்பார். இருந்தாலும் ஒரு நப்பாசையோடு அவரின் (திரும்ப திரும்ப அரைபடும் மாவிற்கு) பதில் சொல்ல முயற்சிப்போம்.

  விஷம் 1 : .//அன்னிய முத‌லீடுக‌ளை, உல‌க‌ம‌ய‌மாக்க‌லை ‘எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்’.
  1991இல் திவால் நிலையில் இருந்த‌, மிக‌ மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
  ந‌ம் நிலைமையினை வேறு எந்த‌ ‘வ‌ழிக‌ளில்’ கையாண்டிருப்ப‌ர்க‌ள் ?//

  பதில் : ஸ்டாலின் 1935 இலேயே அன்னிய முதலீடுகள் இன்றி செய்து காட்டவில்லையா ? மக்களைப் பொறுத்தவரையில் மிகமிக முக்கியமான உண்மை – இறுதியான சமரசமற்ற மக்கள் கட்டுமானங்கள்தான். வேறு எந்த இடைநிவாரணமும் மக்களின் கலகத்தைத் தணிக்கவே பயன்படும்.

  விஷம் 2 : திருவாளர் அதியமான் அவர்கள் அவருடைய அடிபொடிகளான டோண்டு, தமிழ்மணி முதலான ரதகஜ துராதிபதிகளாடு நமது பதில் 1 க்கு, வேறு ஒரு மாவையே பதிலாகத் தருவார்கள். அது ‘இயற்கைக்கு விரோதமான கம்பியூனிசம்’ மற்றும் ஸ்டாலின்கால படுகொலைகள். இவர்களுடைய பாட்டன் சோல்யெட்சினுடைய புளுகைகளையே வெளுத்து வாங்கினாலும், இவர்கள் திருந்துவதாக இல்லை – இவர்கள் தான், தூங்குவதாக நடிக்கின்றவர்கள் ஆச்சே ! எப்படி எழுப்புவது ?

  ஸ்டாலின் மீதான அவதூறுக்கான பதிலடி சுட்டிகள் :

  1) தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்! (http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html)

  2)
  அந்த அமைச்சரும் மயங்கிச் சரிந்தார் – 8 நாட்களாக சாப்பிடவில்லை! (http://poar-parai.blogspot.com/2007/06/8.html)

  3) சோல்சனிட்சின் : “அவலத்தில்” பிறந்த இலக்கிய அத்வானி (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008)
  4) துரோகியின் மரணம் (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008)

  விஷம் 3 : லைசன்ஸ் கோட்டா -வினவு முதலிய கம்பியுனிஸ்டுகளின் கோரிக்கை – பதில் 3: அதியமான் முதலானவர்களின் சாதுர்யம் இதிலேயே அடங்கி உள்ளது. ரத்தன் டாட்டா பட்டைநாமம் போட்டார் என்று சொன்னால், அப்படியே 60-70,60-70 என்று கூவிக்கொண்டே, லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி, பின்பு இந்த நமது கூற்றினை அவர்களே மறுக்கவும் செய்வார்கள். ஆக படிப்பவர், பதிவு சொல்லவரும் கருத்தையும் தவறு என்று புரிந்து கொள்வார்.

  பதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=895:2008-04-26-08-52-54&catid=39:2007
  – இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்.

  விஷம் 4 : ரிலையன்ஸின் பாலிஸ்டர் சாதனை

  பதில் 3 :
  ஒரு வெளிநாடு எழுத்தாளர் ரிலையன்ஸின் பாலியஸ்டர் தில்லுமுல்லுகளைப் பற்றி எழுதிய ஒரு நூல் அது எனக்கு ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தால் பதிவிடுங்கள்.

 33. நான் பதிலளிக்க மறந்து போன பல விடயங்களுக்கு பூச்சாண்டி அவர்கள் மிக நன்றாக பதிலளித்துள்ளார். வாழ்த்துக்கள் பூச்சாண்டி.

 34. //விஷம் 1 : .//அன்னிய முத‌லீடுக‌ளை, உல‌க‌ம‌ய‌மாக்க‌லை ‘எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்’.
  1991இல் திவால் நிலையில் இருந்த‌, மிக‌ மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
  ந‌ம் நிலைமையினை வேறு எந்த‌ ‘வ‌ழிக‌ளில்’ கையாண்டிருப்ப‌ர்க‌ள் ?//

  பதில் : ஸ்டாலின் 1935 இலேயே அன்னிய முதலீடுகள் இன்றி செய்து காட்டவில்லையா ? மக்களைப் பொறுத்தவரையில் மிகமிக முக்கியமான உண்மை – இறுதியான சமரசமற்ற மக்கள் கட்டுமானங்கள்தான். வேறு எந்த இடைநிவாரணமும் மக்களின் கலகத்தைத் தணிக்கவே பயன்படும்.
  //

  அறிவுடைநம்பி என்ற பெயர பாத்து ஏமந்துட்டேன்.
  1991இல் நாம் இருந்து அப‌யாக‌ர‌மான‌ நிலை ப‌ற்றி ஒரு விள‌க்க‌மான‌
  ப‌திவு சுட்டியிருந்த்தேன். அதை முழுசா ப‌டிக்காம‌ல், 1935இல் ஸ்டாலின்
  (உண்மையில் ஸ்டாலின் கால‌த்தில் உருவான‌ செய‌ற்க்கை ப‌ஞ‌ச‌ம் ப‌ற்றி
  உக்ரேன் நாட்டில் விசாரியுங்க‌ள். எது அவ‌தூறு, எது உண்மை என்று
  விளங்கும்) உட‌ன் ஒப்பீடாம்.

  1991இல் இந்தியா ப‌ற்றி எம‌து சுட்டியில் முடிந்தால், அத‌ற்க்கு ஈடாக‌
  ஆதார‌த்துட‌ன் ப‌தில‌ளிக்க‌வும். முக்கிய‌மாக‌ அய்.எம்.எஃப் ப‌ற்றி.

 35. //பதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=895:2008-04-26-08-52-54&catid=39:2007
  – இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்///

  ராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. :))
  லைசென்ஸ் ராஜில் ந‌ட‌ந்த‌ கொடுமை ப‌ற்றி எம‌து சுட்டி :

  ஒரு மார்க்ஸிய‌ வ‌ர‌லாற்று நிபுணாரான‌, திரு.பிபின் ச‌ந்த‌ரா (ஜெ.என்.யு)
  எழுதிய‌ India after 1947
  நூலில், இந்த‌ லைசென்ஸ் ராஜ் ம‌ற்றும் அத‌ன் விளைவுக‌ள் ப‌ற்றி
  ப‌டித்துப் பார்க்க‌வும். ராய‌க்ர‌னை நாங்க‌ சீரிய‌சா எடுத்துக்க‌ர‌த‌ல்ல‌.

 36. அதவாது இன்று சுமார் 80 கோடி மக்கள் ரூ.20 இல் தினமும் உயர் வாழ்கிறார்கள் ? அப்படியானால்
  பஞ்சம், பட்டினி சாவு மிக மிக மிக மிக அதிகரித்து, குறைந்தது சில கோடிகள் பட்டினியால்
  மடிந்திருப்பார்கள். புரட்சி வந்து உங்க வேல சுலுவாயிருக்குமே.

  4இல் ஒரு இந்தியன் கடுமையான வறுமையில், பட்டினியில் இருப்பான்.

  அப்படி சொல்கிறது இந்த விவரம். நடைமுறையில் அப்படி இல்லையே.
  will write more later with stat..

 37. மதவாதிகள் தாம் தம் குரு அல்லது தேவதூதரை பற்றி விமர்சனம் எழுந்தால்,
  அவதூறு என்று வெகுண்டெழுவார்கள். ஸ்டாலின், மாவொ பற்றி உலகில்
  அனைத்து ஆய்வாளர்களும், (மார்க்ஸிய ஆய்வளர்கள் உள்பட) பெரும்
  கொலைகள் மற்றும் பஞ்சங்களுக்கும், மீறலகளுக்கும் காரணமானவர்கள்
  என்று ஏற்று கொள்கிறார்கள்.

  இன்னும் ஒரு 60 ஆண்டுகள் கழித்து, தமிழர் அல்லது ஒரு குழு,
  இலங்கையில் இனப்படுகொலை நடக்கவெ இல்லை. ராஜபக்சே
  மீது அவதூறு செய்கிறார்கள் என்று எழுதினால் எப்படி இருக்கும் ?
  உங்க கூற்றும் அதே. நாசி ப‌டுகொலைக‌ளை ம‌றுப்ப‌வ‌ர்க‌ளும்
  இன்றும் உள்ள‌ன‌ர்தான்.

  உக்ரேன் நாட்டில், பல கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின்
  மூதாதையினர் கடும் துனப்ங்களை ஸ்டாலின் ஆட்சியில் அனுபத்தவர்கள்.
  ஹோலடமர் என்று அதை சொல்வார்கள். நினைவு சின்னங்கள்,
  ம்யூசியம்கள் இருக்கின்றது. அம்மக்கள் அனைவரையும்,
  அமெரிக்க ஏகாதிபத்திய சதியால் அப்படி ந்ம்பச்செய்ய
  முடியாது. ஒவ்வோறு குடும்பத்திலும் இழப்பு இருக்கிறது.
  அதன் வலிகளை அவர்கள் அறிவார்கள். அதை பற்றி
  பல லச்சம் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் அவர்களே
  எழுதியுள்ளனர். அதை ஏற்காமல், அவதூறு என்று
  ஒற்றை வார்த்தையில் நிரகாரபது பகுத்தறிவல்ல.

  நெருப்புகோழியில் கதை தான் நினைவிற்க்கு வருகிறது.

  உண்மைக‌ளை யாராலும் அமுக்க‌ முடியாது.

 38. //அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.

  ///

  இது ராயகரனின் கண்டுபிடிப்பு. :))
  தரகு முதலாளிகள் என்றால் யார் அய்யா ? விள‌க்குக‌.

  அனைத்து தொழில் முனைவோர்களையும் முடங்க செய்தது அந்த‌
  முட்டாள்தனமான லைசென்ஸ் ராஜ். அனைத்து.
  அதற்க்கு அடிப்படை நேருவின் சோசியலிச பாணியும்,
  திட்டமிடலும்தான். அதனால் தான் நம் நேர்மையை
  முழுவதுமாக இழந்தோம். பெரு முதலாளிகள் முதல்
  தொழிலாளர் வரை, அரசியல்வாதிகள் மற்றும்
  அதிகாரிகள் அனைவரும் அடிப்படை நேர்மையை
  இழக்க அந்த அமைப்பு ஒரு முக்கிய காரணம்.
  இதை புரிந்து கொள்வது மிக கடினம். பார்க்க : http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

  நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

  • //நேருவின் சோசியலிச பாணியும்,
   திட்டமிடலும்தான். //

   அதியமான் ஒரு பொய்தியமான் என்பதை மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள அவரது கருத்துக்களை முன்பொருமுறை சவால் விட்டு நிரூபித்த பிற்பாடும் அதே பொய்களை வெட்கமின்றி கடைவிரித்து வருகிறார்.

   அவரது நோக்கம் என்றைக்குமே நேர்மையானது அல்ல.

   அசுரன்

   • 1991 புரட்சி (IMF) என்று பல முறை ஏதோ அரிய கண்டுபிடிப்புபோல் மீண்டும்/மீண்டும் கிளிப்பிள்ளை போல் வினவு தளத்திலும் வேறு சில தளத்திலும் உளரிக்கொண்டு இருக்கிறார். இந்த அரிய கண்டுபிடிப்பை ஏற்கனவே தோழர் மருதையன் நேர்காணல் பின்னூட்டத்தில் ஒருவர் பொய்தியமான் சாயத்தை தோலுரித்து காண்பித்தாயிற்று..இன்னும் எவ்வளவு முறைதான், எமது பதிவு, 1991 புரட்சி, இத்தியாதிகள் என்று கூறிக்கொண்டு இருப்பார் என்று தெரியவில்லை..

   • அசுரன்,

    நான் எழுதுவது பொய் என்று எப்போது நிருப்பித்தீர் ?

    நேருவின் “சோசியலிச” பாணி என்பது ஒரு சொல்லாடல்.
    சோசியலிசம் என்பது ஒரு சொல். அதற்க்கு உங்க அர்த்தம்
    வேற, இந்தியாவில் அர்த்தபடுத்திக்கொண்டது வேறு.
    இதை நாம் ஏற்கெனவே பல முறை விவாதித்து, ஒரு
    முடிவுக்கு வந்திருக்கிறோம். அதன் பிறகும் பொய்
    கிய் என்று ஏன் வார்த்தை விளையாட்டு ? வேண்டாமே.

    28 வயது சிறுவன் நீர். இப்போதுதான் பி.ஹெச்.டி
    செய்து முடித்திருக்கீக. இன்னும் வாழ்க்கை அனுபவம்
    ஏதும் இல்லை. வின்வு தளம் அளவிற்க்கு உங்க‌
    தளத்தில் மக்கள் அதிகம் பின்னோட்டம் இடாததற்க்கு
    (அப்படியே இட்டாலும் அனானி அல்லது போலி
    பெயர்களில் தான் இடுகிறார்கள்) காரணம் : ப‌யம்.
    நாய், பன்னி, கழுதை போன்ற வசவுகள் சர்வ‌
    சாதாரணமாக பிரயோக்கிப்படுவதுதான் காரணம்.
    செம்புரட்சி செய்ய இதெல்லாம் தேவை இல்லையே.
    நாகரீகமாக, நல்ல சொற்கள் மூலமே பிரச்சாரம்
    மற்றும் மாற்றத்தை கொண்டு வரலாமே.

    சரி,நாம் கடைசியாக விவாதித்த பின்,
    நல்ல நண்பர்களாகவே பிரிந்தோம். அதை அப்படியே
    தொடரவே விரும்புகிறேன். சரியா ?

   • Old Monk,

    ஒல்ட் மாங் குடித்தால் அப்படி தான் உளரல் போலத்தெரியும்.

    1991 வரை நடந்தது என்ன, ஏன் அதன் பிறகு மாற்றம்
    கொண்டுவரப்பட்டது என்பது பற்றி விரிவான பதிவு அது.

    ஒரிஜுனல் சரக்கு எதுவும் இல்லாமல், வெத்து வேட்டுகளான‌
    குடிகாரர்களுக்கு இதெல்லாம் உளரலாகத்தான் தெரியும்.

   • அவரது நோக்கம் என்றைக்குமே நேர்மையானது அல்ல.

    அசுரன்

    எனது நேர்மை பற்றி என்ன தெரியும் உமக்கு ?
    இப்படி பொதுப்படையாக வையாமல், ஆதாரத்துடன்
    நிருபிக்கவும். நேர்மையை பற்றி நீர் பேச வேண்டாம்.
    இணைய உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான‌
    வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தெரியும்.
    எம் நண்பர்களுக்கும், இதர பார்வையாளர்களுக்கும்
    தெரியும். you are too young and immature and hence your impertineance and lack of manners.

 39. வறுமை கோடு மற்றும் அளவு அலகுகளின் தன்மை
  மற்றும், அளவீடுகளுகளுக்கான மாற்றுவழிகள் பற்றி
  ஒரு முக்கிய சுட்டி :

  http://www.indiatogether.org/2006/mar/ddz-povline.htm A thin Indian line

  அய்.நா சபையின் அறிக்கை சுட்டி :

  http://www.unsiap.or.jp/participants_work/cos03_homepages/group4/boon-india-present.htm

 40. அய்யா அதியமானே… அதனைத்தான் நானும் கேட்கிறேன்.. ஏன் இந்தியாவில் உலகிலேயே அதிக குழந்தைகள் ஊட்டசத்து குறைந்து உள்ளன..? இது வரவிருக்கும் கொடிய வறுமைக்கு முன்னுரையே…
  மேல்தட்டு மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் உள்ள வருமான வேறுபாட்டு விகிதம் ஏன் அதிகரித்து கொண்டு வருகிறது…

  முதலில் 80 கோடி மக்கள் 20 ரூபாயில் வாழ்வது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள் என மல்லுக்கு நின்றவர்… ஆதாரத்தை காட்டியவுடன் இப்பொழுது அதெல்லாம் சும்மா என பீலா விடுகிறார்… இவர் ஆதரிக்கிற உலகவங்கி, இந்திய அரசின் அறிக்கை தெள்ளதெளிவாக இருந்த போதும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது ஏனோ?

  2400 கலோரி உணவு ஒரு நாளைக்கு உட்கொள்ளுபவர்களின் விகிதத்தை எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஏறக்குறைய 80 சதவீத மக்கள் போதிய சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது இல்லை.. இதனை இந்திய அரசு என்றும் வெளியிடாது… இதற்க்கு ஏதாவதொரு சப்பை காரணத்தை கூறி மறைத்து வருகிறது…

 41. //அறிவுடைநம்பி என்ற பெயர பாத்து ஏமந்துட்டேன்.
  1991இல் நாம் இருந்து அப‌யாக‌ர‌மான‌ நிலை ப‌ற்றி ஒரு விள‌க்க‌மான‌
  ப‌திவு சுட்டியிருந்த்தேன். // அய்யோ அய்யோ ! அதியமான் என்ற பெயரைப் பார்த்தும், நெல்லிக்கனி என்றப் பெயரைப் பார்த்து நாங்கள் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த கொடைவள்ளல் என்று நாங்கள் ஒன்றும் ஏமாந்து விடவில்லை. // எமது இந்த பதிவின் http://nellikkani.blogspot.com/2008/05/1991.html இறுதியில் எழுப்பிய வினாவிற்க்கு, இங்கு யாராவது ஆதாரபூர்வமாக பதிலளிக்க முடியுமா ? // உங்கள் பதிவின் இறுதியில் இருந்த கேள்வி //”அன்னிய முத‌லீடுக‌ளை, உல‌க‌ம‌ய‌மாக்க‌லை ‘எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்’.
  1991இல் திவால் நிலையில் இருந்த‌, மிக‌ மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
  ந‌ம் நிலைமையினை வேறு எந்த‌ ‘வ‌ழிக‌ளில்’ கையாண்டிருப்ப‌ர்க‌ள் ?” // அதற்கு உங்கள் அடிபொடி டோண்டு அளித்த பதில் //மாற்று வழிகளா? எந்த ஊரில் இருக்கிறீர்கள்? உலகம் முழுதுமே முன்னேறிய எல்லா நாடுகளும் பொருளாதார சுதந்திரம் மூலம்தான் முன்னேறியுள்ளன. சோவியத் யூனியனின் ராட்சச வளர்ச்சியை விதந்தோதுபவர்கள் அது எடுத்து கொண்ட விலை என்ன என்பதை காண மறுக்கின்றனர். ரஷ்ய மக்களின் உழைப்புக்கு அவர்கள் இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டும். அதன்றி ஸ்டாலின் என்னும் சைக்கோவின் கொடுங்கோன்மையால் லட்சக்கணக்கானவர்கள் செத்தனர் சைபீரிய அடிமை முகாம்களில். மனித இயற்கைக்கு புறம்பான கம்யூனிசத்தால் நாடே திவாலானது 1991-ல். நல்ல வேளை இந்தியா அந்த நிலை வரும் முன்னரே காப்பாற்றப்பட்டு விட்டது./// ஆக அதற்கு நான் ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. சரி நீங்கள் சொன்ன பிரச்ச்சனைக்கு சரியான வழி – ப.சிதம்பரத்திடமோ யாரிடமோ இல்லை. மாறாக மக்களிடமே இருக்கின்றது. ஸ்டாலின் காலத்தில் உங்கள் தாராளமய பிதாமகர்களே பயப்படும் அளவிற்கு சோவியத் யூனியன் வளர்ந்த்து. சரி !! ‘பணி செய்து கிடந்த உங்கள் ஊழியர் ப.சிதம்பரம் மற்றும் அவரது வாரிசுகள் 90களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளான பிறகு, மாத்தத்திற்கு 1 ஒரு கோடி சம்பள்த்திற்கு மட்டி சம்பளத்திற்கு வேலைப்பார்த்தார்கள்.

  //ராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. )
  லைசென்ஸ் ராஜில் ந‌ட‌ந்த‌ கொடுமை ப‌ற்றி எம‌து சுட்டி :

  ஒரு மார்க்ஸிய‌ வ‌ர‌லாற்று நிபுணாரான‌, திரு.பிபின் ச‌ந்த‌ரா (ஜெ.என்.யு)
  எழுதிய‌ India after 1947
  நூலில், இந்த‌ லைசென்ஸ் ராஜ் ம‌ற்றும் அத‌ன் விளைவுக‌ள் ப‌ற்றி
  ப‌டித்துப் பார்க்க‌வும். ராய‌க்ர‌னை நாங்க‌ சீரிய‌சா எடுத்துக்க‌ர‌த‌ல்ல‌.
  // அவர் எழுதியுள்ளது இருக்கட்டும், லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் டாடா, பிர்லாக்களெல்லாம் கல்லா கட்டினார்களே அது எப்படி ? ஆனால் மற்றய சிறு முதலாளிகள் எல்லாம் அழிந்தார்களே அது ஏன் ? // தரகு முதலாளிகள் என்றால் யார் அய்யா ? விள‌க்குக‌.// தரகு முதலாளிகள் என்றால் உம்மைப் போன்று மக்களின் உழைப்பைச் சுரண்டி, வெளிநாடுகளுக்கு விற்று டாலரில் எச்சில் பொறுக்குபவர்கள். //ஹோலடமர் என்று அதை சொல்வார்கள். நினைவு சின்னங்கள்,
  ம்யூசியம்கள் இருக்கின்றது. அம்மக்கள் அனைவரையும்,
  அமெரிக்க ஏகாதிபத்திய சதியால் அப்படி ந்ம்பச்செய்ய
  முடியாது//

  உக்ரேன் என்ன முழு ரஷ்யாவிலும் உள்ள அரசு ஆவண்ங்களை திறந்து விடும்படி, காடுக்கூச்சல் போட்ட மேற்கு மோசடிகள், கார்ப்பச்சேவ் அதனை திறந்து விட்டதும், வேறு வேலைப் பார்க்க போய் விட்டார்கள். மேலும் உக்ரைன் பட்டினிச்சாவுகள் என்று மேற்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டிய டாகுமெண்டிரிகள், இரண்டாம் யுத்த காலத்தில் ஜார் ரஷ்யாவில் ஏற்பட்டவை என்பது பின்பு நிருபணமானது. நீங்கள் சொல்கின்ற மியூசியங்கள் எல்லாம் அப்படிப்பட்டவைதான். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகளைப் பற்றி பதிவு பதிவாக விளக்கிய சுட்டிகளை எல்லாம் நான் கொடுத்துள்ளேன். ஆனால் திரும்ப திரும்ப நீங்கள் சொன்னதைதான் சொல்லி வருகீறீர்கள். தூங்குவது போல நடிப்பவர்களிடம் – விதண்டாவாதம் செய்ப்வர்களிடம் ஒன்றும் சொல்ல முடியாது. //அனைத்து தொழில் முனைவோர்களையும் முடங்க செய்தது அந்த‌
  முட்டாள்தனமான லைசென்ஸ் ராஜ். அனைத்து.
  அதற்க்கு அடிப்படை நேருவின் சோசியலிச பாணியும்,
  திட்டமிடலும்தான். அதனால் தான் நம் நேர்மையை
  முழுவதுமாக இழந்தோம். பெரு முதலாளிகள் முதல்
  தொழிலாளர் வரை, அரசியல்வாதிகள் மற்றும்
  அதிகாரிகள் அனைவரும் அடிப்படை நேர்மையை
  இழக்க அந்த அமைப்பு ஒரு முக்கிய காரணம்.// போடு போடு அட அடா பெருமுதலாளிகள் நேர்மையானவர்கள் என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டீர்கள். அந்த பெருமுதலாளிகள் லைசன்சு ராஜ்யம் போனபின்பு செய்த, அரசு நிறுவனங்களில் 49 தனியார் பங்குகள் அனுபதிக்கப்பட்ட பின்பு செய்த தில்லுமுல்லுகள், ரிலையன்ஸ் சகோதரச்சண்டையிலேயே வெளி வந்து விட்டதே. ஏன் vsnl இல் உங்கள் அபிமான டாடா விளையாடியதும் தாராளமயத்திற்கு பிறகுதானே. நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! இறுதியாக ஒன்று சொல்கிறேன். இந்த பதிவின் நோக்கம் – டாடாவின் யோக்கியதைப் பற்றியதுதான். லைசன்ஸ் ராஜ்ஜியம் என்பது ஸ்டாலினோ, மார்க்ஸோ கண்டுபிடித்து அல்ல. நாங்கள் அதற்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான். கொய்யா சபையின் அறிக்கையினைப் படித்துப்பார்த்தேன். Population below $1 a day (%) அண்டு வெண்டைக்காய் Poverty gap at $1 a day (%) அண்டு வெங்காயம் என்று ஓரு டாலர் என மோசடியான ஒரு அளவுகோலைதான் கடைப்பிடிக்கிறார்கள். இந்த டெக்னிக் எல்லாம், மக்கள் விழித்துக் கொள்ள கூடாது என்பதற்கே அவர்களைச் சாந்தப்படுத்துவதற்கேப் பயன்படுகிறது. மேலும் உங்கள் கொய்யா சபை, ஈராக் முதல் செச்ன்யா வரை ஏன் நமது ஈழம் வரை யாரைக் காப்பாற்றியது என்பதே கொய்யா சபையின் யோக்கியதப் பற்றி ஒரு சான்றாகும். ஆமாம் பூச்சாண்டி உங்கள் ஒரு டாலர் அளவுகோல் மோசடியானது என்று சொன்னால், கொய்யா சபையின் – அதே ஒருடாலர் அளவுகோல் பற்றிய பதிவைப் பதிலாக தருகிறீர்கள் ? என்ன எங்களைப் பார்த்தால் கேணைப் பயல் போல் தெரிகிறதா ?

  சாமி சாமி இனி மேல் விஷ வைரஸ்க்ளான முதலாளித்துவ கோமாளிகளிடம் பேசிப் பயனில்லை. ஆளை விடுங்கள் — வினவு அதியமான் கக்கும் விஷங்களை அம்பலப்படுத்தி ஒரு பதிவிடுங்க்ள்.

 42. பகத்,

  கடைசியாக நான் அளித்த சுட்டியை பார்க்கவும்.
  இன்னும் சரியான தகவல் இல்லைதான். அள‌வுகோல்க‌ள்
  ச‌ரியான‌வையாக‌ இல்லை.

  ரூ.20இல் 80 கோடி மக்கள் வாழ்வது உண்மையென்றால்,
  (அதாவது நான்கின், மூன்று இந்தியர்கள்) ; நாடெங்கிலும்
  க‌டும்