Thursday, December 12, 2024
முகப்புசெய்திகென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?

கென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?

-

shell_skull

1958 முதலே ஷெல் நிறுவனம் நைஜர் வளைகுடா பகுதியின் எண்ணெய் வளங்களைச் சூறையாடத் துவங்கயது. அன்று முதல் இன்று வரை, அப்பகுதி மக்களான ஒகோனி இனத்தவருக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் முரண்பாடு ஏற்படத் தொடங்கியது. 1958இல் நைஜீரியா ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று, அப்பகுதியில் ஷெல் நிறுவனம் 90 எண்ணெய் வயல்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.

1990களின் ஆரம்பம் முதலே மேலும் பல புதிய எண்ணெய் வயல்களைத் தேடி வேட்டையாடத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையினால் சுற்றுச்சூழல் மாசுபடத் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரமான மீன்பிடி, விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஒகோனி மக்களது அதிருப்தி முற்றி அகிம்சைப் போராட்டங்கள் முளைத்தன.

போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஒகோனி மக்களைக் காக்கும் இயக்கம் (MOSOP) நிறுவப்பட்டது. பிரபல பத்திரிகையாளரும், சமூக நல ஆர்வலருமான கென்சாரோ-விவா, இவ்வியக்கத்தின் மூலம் ஷெல் நிறுவனத்தின் அட்டூழியங்களை உலகறியச் செய்தார்.

1993இல் இவ்வியக்கம் ஒருங்கிணைத்த அமைதிவழிப் போராட்டத்தில் 3,00,000ஒகோனி மக்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறாக இவ்வியக்கம் மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது! போராட்டத்தை தளரச் செய்வதற்காக, ஷெல் ஒகோனி மக்கள் மீது பல அடக்குமுறைகளை ஏவியது. மக்களை நைஜீரிய இராணுவ உதவியுடன் கைது செய்வது, சித்திரவதை செய்தல், நாடு கடத்துவது, கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்வது போன்ற அராஜகங்களை நிறைவேற்றியது.

போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியின் உச்சக்கட்டமாக MOSOP இயக்கத்தைச் சேர்ந்த 9 முன்னணியாளர்களை, விசாரணையின்றி தூக்கிலிட்டுக் கொன்றது! இதற்கு முகாந்திரமாக அவர்கள் மீது பல பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டன, சித்திரவதைகள் அரங்கேறின!

மேற்சொன்னவாறு, ஒகோனி மக்கள் மீதும், 9 முன்னணியாளர்கள் மீதும் நிகழ்த்திய கொடுமைகளுக்காக ஷெல் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டியன் பத்திரிகைக்கு கூறியதாவது, “எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். 95இல் நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. நைஜீரிய அரசு கட்டவிழ்த்துவிட்ட இந்த அராஜகம் கண்டிக்கத்தக்கது. மக்களையும், முன்னணியாளர்களையும் காக்கும் பொருட்டு அரசிடம் எமது நிறுவனம் மேல் முறையீடு செய்தது.ஆனால் அது பலனளிக்காது போனது வருந்தத்தக்கது”.

கென்சாரோ-விவா என்கிற போராளி தான் தூக்கிலடப்படும் தருணத்தில், “அந்த நாள் நிச்சயம் வரும். ஒகோனி மக்களுக்கெதிரான குற்றங்களுக்காக அந்நிறுவனம் தண்டனை பெறும்,” என்றார். அந்த நாளும் வந்துவிட்டது. ஷெல் நிறுவனம் நைஜர் பகுதியில் நிகழ்த்திய குற்றங்களுப் பொறுப்பேற்க வேண்டிய நேரம் 12 ஆண்டுகள் கழித்து வந்துள்ளது.

Wiwa

ஷெல் நிறுவனம் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நியுயார்க் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. பல பன்னாட்டு நிறுவனங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இவ்வழக்கை மிகவும் கவனித்து வருகின்றனர். இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் பல பன்னாட்டு நிறுவனங்கள், பல நாடுகளில் அரங்கேற்றியுள்ள குற்றங்களுக்குப் பொறுப்பேற்று பதிலளித்து தண்டிக்கப்படும் நிலை உருவாகும்.

ஷெல் மீதான வழக்கு 11 மாதகாலம் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஷெல் தரப்பில் 11 சாட்சியங்களும், ஒகோனி மக்கள் தரப்பில் 20 சாட்சியங்களும் ஆஜராவர். மக்கள் தரப்புச் சாட்சிகளில் முக்கியமானவர், சாரோ-விவாவின் மகன்! சாரோ-விவா ஜூனியரைப் பொறுத்தவரை இவ்வழக்கு தனது தந்தைக்கு நடந்த அநீதிக்கும், மரணத்துக்கும், நீதி கோரும் வாதமாக அமைவது மட்டுமின்றி தான் இழந்த 12 வருட வாழ்க்கைக்கும் பதில் தருவதாக அமையும் என்கிறார்.

அடுத்த முக்கிய சாட்சி சாரோ-விவாவின் சகோதரர் ஓவென்ஸ் விவா. 1995இல் ஷெல் நிறுவனத் தலைவர் ப்ரயன் ஆண்டர்சன், ஒகோனி மக்களது போராட்டம் கைவிடப்பட்டால் சாரோ-விவாவை விடுவிப்பதாக இவரிடம் பேரம் பேசியுள்ளார். ‘ஷெல் நிறுவனத்தில் வேலை’ என்கிற கையூட்டைப் பெற்றுக் கொண்டு, 9 MOSOP முன்னணியாளர்களைக் காட்டிக் கொடுத்து, அவர்கள் தூக்குமரம் ஏறக் காரணமான 2 சாட்சியங்களும் மிக முக்கியமானவை.

காரலோலோ கோக்பரா என்பவரது சாட்சியும் மிக முக்கியமானது. 1993இல் ஷெல், எண்ணெய் போக்குவரத்துக்கான குழாய் போடும் பணியில் இவரது கிராமத்தை அழித்தது. அதில் இவரது பயிர்களும் சிதைந்து அழிந்தன. இதற்கு எதிராக அக்கிராமத்து மக்கள் போராடினர். அப்போராட்டத்தை ஒடுக்க வந்த, ஷெல் நிறுவனத்தின் ஏவல் நாயான நைஜீரிய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் கோக்பரா தனது ஒரு கையை இழந்தார். ஷெல் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, சட்டரீதியான விளக்கங்களை இன்னும் அளிக்கவில்லை. மேலும் நிகழ்ந்த குற்றங்கள் அனைத்துக்கும் நைஜீரியா அரசுதான் பொறுப்பு எனவும், தமது வர்த்தக நடவடிக்கைகள் காரணமில்லை எனவும் இந்நிறுவனம் வழக்காடுகிறது.

ஷெல் நடத்திய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஒகோனி மக்களுக்கு பல மில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும்! வழக்குத் தொடுத்த ஒகோனி மக்கள் நட்ட ஈட்டுத் தொகையாக எதையும் கோரவில்லை. இவ்வழக்கில் தாங்கள் வெற்றியடைந்தால், அத்தொகையை முடிவு செய்யும் பொறுப்பை நீதிமன்றத்திடமே விட்டுவிட்டனர். “இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய – சர்வதேசிய சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்ற செய்தியை அறிவிக்கும்!”, என்று ஆயில் சேஞ் இண்டர்நேசனல் இயக்குநர் ஸ்டீபன் க்ரெட்ஸ்மன் கூறியுள்ளார்.

நைஜர் பகுதியில் எண்ணெய் வளங்களைக் கொள்ளை கொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட அனைத்து குற்றங்களிலும் ஷெல் நிறுவனத்தின் தடங்கள் பதிந்துள்ளதை நீதிமன்றம் உணரும். மேலும் பல வருட காலமாகத் தண்டனையிலிருந்து தப்பி இராணுவம் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஷெல் நிறுவனம், இன்று தன் மீதான குற்றங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

-நன்றி: தி இந்து (28.05.09)
தமிழாக்கம்: யாழினி

பின்குறிப்பு: 08.06.09 திங்களன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராயல் டச் ஷெல் நிறுவனம் தூக்கலிடப்பட்டு கொன்ற அந்த போராளிகளுக்காக 15.5 மில்லியன் டாலர் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம் நைஜீரியாவில் நடந்த இந்த படுகொலைகளுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் நல்லெண்ணம் காரணமாக இந்த தீர்வுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்களோ இந்த ரத்தப்பணம் கிடைத்ததே பெரிய வெற்றி என திருப்தி அடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் இத்தகைய பணத்தை வீசிஎறிந்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சுரண்டலையும், கொலைகளையும் தொடரலாம் என்பதுதான் இந்த வழக்கின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி நைஜீரிய இராணுவம், அரசைப் பயன்படுத்தி இந்நிறுவனம் செய்துள்ள அநீதிகளுக்கு இந்த உடன்படிக்கையின்படி எந்த தண்டனையுமில்லை என்பதே உண்மை.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

    • இணைப்பிற்கு நன்றி பாலாஜி. வாசகர்கள், நண்பர்கள் ஷெல் குறித்து மேற்கண்ட பதிவுக்கும் சென்று படிக்குமாறு கோருகிறோம்.

    • பாலாஜி, அருமையான கட்டுரை, நன்றி.
      வினவு, இந்த கட்டுரையை தொடர்புடைய பதிவுகளில் சேர்க்கலாம்

  1. யாழினி என்றால், இங்கு வந்து பின்னூட்டம் ஈடுவாரே அவரா! வினவு தளத்தில் வாசகர்களின் பங்களிப்பு களை கட்டுகிறதே! ஒரு அருமையான கட்டுரையை தமிழாக்கம் செய்ததற்கு நன்றி.

  2. இதே போல பொலிவியாவில் அந்த நாட்டு துணை ராணுவத்தின் துணையுடன் 8 தொழிற்சங்க தலைவர்களை கொன்றுள்ளது கோகோகோலா நிறுவனம். இதனை அந்த நாட்டு நீதிமன்றமே பதிவு செய்துள்ளது.

  3. யாழினுக்கு பாராட்டுகள். வரவேற்க தக்க முயற்சி.
    ஆப்பிரிக்காவில் நடக்கும் மூலவளத்துக்கான சண்டையில் சிக்கிக் கொண்டு இருக்கும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. பன்னாட்டு நிறுவனகளின் இந்த லாப வெறி பல லட்சம் மக்களை கொன்று , வறுமையில் தள்ளுகிறது, ஷெல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு மொத்த லாபம் (Gross Profit) 8.4 பில்லியன் டாலர்கள். இதில் ஒரு சிறு துளியை எலும்பு துண்டாக வீசிவிட்டு மனித நேய முகமூடி அணிந்துகொண்டு மக்களை சுரண்டிக்கொண்டு இருக்கிறது..

    ஷெல் நிறுவனத்தின் வலை தளத்தில் உள்ள செய்தி அறிக்கை…

    Shell today agreed to settle a court case in New York related to allegations in connection with the Nigerian military government’s execution of Ken Saro-Wiwa and others in 1995, making a humanitarian gesture to set up a trust fund to benefit the Ogoni people.

    At the same time, the plaintiffs have dismissed all claims made in the litigation against Shell Petroleum NV, Shell Transport and Trading Company Limited and the Shell Petroleum Development Company of Nigeria Limited (SPDC).

    The settlement and other payments together total $15.5 million, which will provide funding for the trust and a compassionate payment to the plaintiffs and the estates they represent in recognition of the tragic turn of events in Ogoni land, even though Shell had no part in the violence that took place. In addition, they cover plaintiffs’ costs and fees.

    ..

    மக்களை இப்படி சுரண்டி, அவர்களை நிர்கதியாக்கி , அவர்களுக்கு உயிர் ஆதாரமாய் இருக்கும் நிலம், கடல், காடு என அனைத்தையும் மாசுபடுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் குவிக்கும் மலை போன்ற லாபம் ஒரு பக்கம், பல மில்லியன் மக்கள் உன்ன உணவின்றி , வேலை செய்ய தயாராய் இருந்தும் வேலை இன்றி பசியால் மரணிக்கும் அவலம் மறுபக்கம்…

    முரண்பாடுகளின் மொத்த வடிவம் முதலாளித்துவம்.

    • the terrible effects of pollution, deforestation and cilmate change due to reckless destruction of forests is indeed true. and the unethical means thru which, the lands of local peopel are grabbed at very low prices too is evil and certainly not free market capitalisitc policy but fascisim. but to condemn all industrialisation and MNCs in a sweeping statement is wrong and incorrect. but for them, this conversation in this intenet and millions of cheap and new products, services, jobs and tax revenue will not be possible. and mankind is now dependent on petroleum products for survival. and to extract and sell them efficently and at low costs, MNCs are needed. there is no viable alternative to this. profits are needed to expand and for viablity. without profits this google and web hosting company which hosts vinavu site will not function nor will we get petrol or anything. ok.

      and communism is not the solution for all the problems,esp poverty alleivation. history has proved that.

    • நல்ல முயற்சி யாழினி, ஆங்கில கட்டுரையின் கருப்பொருள் அப்படியே சிதையாமல் வந்திரந்தாலும், வாக்கிய அமைப்புகளில் அதன் தாக்கம் தெரிகின்றது. இல்லாமல் சுதந்திரமான வாக்கியங்களாக இல்லாமல் (FLOW?) சிறு சிறு முற்றுப்பெற்ற ( SHORT CLOSED SENTENCES )வாக்கியங்களாக இருப்பது நெருடல்.தொடரும் முயற்சிகளில் இதை களைந்துவிட முடியும். வாழ்த்துக்கள்.

  4. ஷெல் நிறுவனமும், மற்ற பல பன்னாட்டு நிறுவனங்களும் பல மூன்றாம் உலக நாடுகளில் பல குற்றங்களை புரிந்து அல்லது அங்கு உள்ள ஃபாசிச ஆட்சியாளார்களுக்கு லஞ்சம் கொடுத்து, பல காரியங்களை சாதித்துகொண்டன் , கனிம வளங்கள் உள்ள நிலங்களை மலிவு விலைக்கு வாங்கின். இதெல்லாம் உண்மைதான். ஆனால் ஜனனாயகம் மற்றும் சட்டம் வலுவாக இருக்கும் பல நாடுகளுல் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுங்காக, குற்றம் புரியாமல், தங்கள் உற்பத்தியை பெருக்குகின்றன. எங்கெல்லாம் அடிப்படை ஜனனாயகம் மற்றும் சட்டம் (rule of law ) நியாமாக இல்லையோ அங்கு இது போன்ற குற்றங்கள் நடக்கும். நிறுவனங்கள் முதல் குற்றவாளிகள் என்றால், நேர்மை இல்லா ஆட்சியாளர்க்ள் இரண்டாவது குற்றவாளிகள். ஊழல்களுக்கும், பொருளாதார சுதந்திரத்திற்க்கு உள்ள நேரடி தொடர்பை பற்றிய ஒரு முக்கிய ஆய்வு பற்றி :

    http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
    Ethics, Corruption, and Economic Freedom
    by Ana Isabel Eiras
    Heritage Lecture #813
    இதே ஷெல் நிறுவனம் வளார்ந்த நாடுகளிலும், அரேபியா நாடுகளுலும் பெட்ரோயிய உற்பத்தியை செய்து கொண்டுதான் இருக்கிறது. அங்கு இது போன்ற குற்றங்களுக்கான சாத்தியங்கள் மிக குறைவே. ஆட்சி அமைப்பும், சட்ட்த்தின் பாரபட்சமற்ற மாட்சிமையும் மிக மிக முக்கியம். குற்றங்களை தடுக்க அவை மிக தேவை. இந்தியாவிலும் 1970கள் வரை ஷெல் நிற்வன உற்பத்தியும், பெட்ரோல் பங்குகளுன் இருந்தன. ஒழுங்காகத்தான் செயல் பட்டன். அவற்றை இந்திய அரசு “தேசியமயமாக்கி” சீரழித்தது. அதன் விளைவு : ஊழலும், உற்பத்தி செலவு அதிகரிப்பும், பற்றாகுறைகளும். பெட்ரோயிலிய துறை அமைச்சராக அனைத்து
    கட்சி அரசியல்வாதிகளும் துடிக்கின்றனர். காரணம் : மிக மிக மிக “பசையுள்ள துறை” ; வழி காட்டியவர் ஒரு தமிழர் : வாழப்பாடி ராமமூர்த்தி. நல்லா “சம்பாதித்தார்”…

    • நண்பர் அதியமான், சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ள நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் “ஒழுங்காக” வேலை செய்கின்றன என கூறுகிறீர்.. அதே சமயம் இந்தியாவில் பெட்ரோலியத் துறை “தேசியமாய் சீரழிந்தது” என கூறுகிறீர், ஏன் பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என பார்ப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு அரசு , சட்டம் என்கிற அமைப்புகள் தேவையா.. இதே நிறுவனங்கள் அரசின் கீழ் இயங்கும் போது நீங்கள் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி அந்த நிறுவங்களை “ஒழுங்காக” வேலை செய்வதை உறுதி செய்யக் கூடாதா …?
      இந்த நிறுவனங்களும், கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு வேண்டும் என்றே பெட்ரோலின் மாற்றாக மற்ற எரி பொருட்களை பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிக்காமல் செய்த சதிகள் ஏராளம்..
      நான் மேலுள்ள பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல் ஷெல் நிறுவனத்தின் மொத்த காலாண்டு லாபம் 8.4 பில்லியன் டாலர்கள்.. இதே தொகை ஒரு சோசலிச அரசிடம் இருந்தால் அணைத்து இந்திய மக்களுக்கும் 3 வேலை உணவு, இலவச கல்வி போன்றவற்றை மிக சுலபமாக கொடுக்க முடியும்…
      தற்பொழுது 70 சதவீத மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் பொறியியல் படிக்க ஆசைப்பட்டால் அவன் ஆண்டுக்கு எத்தனை லட்சம் கல்விகட்டனம் செலுத்த வேண்டும்… 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே கட்டணம் 9500 ரூபாயாக இருந்தது. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு நன்றாக இல்லாதலால் தான் கல்வியில் கொள்ளை நடக்கிறதா இல்லை தனியார் நிறுவங்கள் வந்த பின் கல்வியில் கொள்ளை நடக்கிறதா..?

      • ////ஏன் பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என பார்ப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு அரசு , சட்டம் என்கிற அமைப்புகள் தேவையா.. இதே நிறுவனங்கள் அரசின் கீழ் இயங்கும் போது நீங்கள் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி அந்த நிறுவங்களை “ஒழுங்காக” வேலை செய்வதை உறுதி செய்யக் கூடாதா …?///////
        சாத்தியமில்லை. வேண்டுமென்றால், செம்புரட்சி செய்து, அதன் பின் இவற்றை ‘திருத்த” முயற்சி செய்து பாருங்கள். அப்பதான் புரியும். திரிபுவாதிகள் உடனே தோன்றுவார்கள். களை எடுக்க வேண்டும்…

        நேர்மையில்லா நாடுகளில் எதுவும் சாத்தியமில்லை. அதாவது செம்புரட்சியோ அல்லது சீரமைப்பதோ.. எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. i have become cynical and pessimistic long back.

        No one can do anything now. We have all become corrupt and there is no remedy or solution. I appreciate your optimisim and idealism. and good luck to you.

        ///ஷெல் நிறுவனத்தின் மொத்த காலாண்டு லாபம் 8.4 பில்லியன் டாலர்கள்.. இதே தொகை ஒரு சோசலிச அரசிடம் இருந்தால் அணைத்து இந்திய மக்களுக்கும் 3 வேலை உணவு, இலவச கல்வி போன்றவற்றை மிக சுலபமாக கொடுக்க முடியும்…///

        true. for that the profit must be first made by legal means. without this revenue, no govt can spend on welfare. suppose if Shell is nationalsied by the local govts in Asia, Europe, etc. profits and efficiency will plunge and soon losses will mount.

        and one important fact : due to complex reasons of internation prices of crude oil, and dollar values, etc. no one is building new refineries, in spite of profits.hence there is going to acute shortage of petrol in future ; esp in India where the petro pricing is now a political hot potato and a mess. wait and see in 5 to 10 years. there will be acute shortage of petrol and diesel.

    • 1. ஒரு அரசாங்கம் எதையும் செய்யாமல் , வெறும் வரி வசூலிக்கும் நிர்வாகமாக இருக்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என புரிந்து கொள்ளலாமா?

      2. (ஒரு சிறிய கேள்வி,… அரசாங்கத்திற்கு நான் ஏன் வருமான வரி செலுத்த வேண்டும்… நான் இருக்கும் வீட்டிற்கு வரி, நான் பயன்படுத்தும் மின்சாரம், தண்ணீர், சாலை, எரிபொருள், வாகனம்..என எல்லாவற்றிற்கும் வரி செலுத்திய பிறகும்… எதற்காக நான் அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்…? என் உழைப்பை கொடுத்து பெரும் வருமானத்திலும் வரி செலுத்த வேண்டுமா? )

      3. ஷெல் நிறுவனம், சட்டம் கடுமையாக உள்ள நாடுகளில் ஒழுங்காக வேலை செய்கிறது, நைஜீரியாவில் சட்டங்கள் போதவில்லை எனவே தான் ஷெல் நிறுவனம் இப்படி மக்களை சூறையாடுகிறது என கூறுகிறீர்… இதில் இருந் நான் புரிந்து கொண்ட விதத்தில், ஷெல் நிறுவனம் கட்டாயத்தின் அடிப்படியில், வேறு வழி இல்லாமல் எதோ தெரியாமல் செய்த தவறு என நீங்க ஆதரிக்கிறீர்கள். இதன் மூலம் பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரங்களை கெடுத்த நிறுவனத்தை இரண்டாம் பட்ச குற்றவாளி ஆக்குகிறீர்கள்..

      4. நண்பரே, உங்களுக்கு “ஒழுங்காக” வேலை செய்யும் அரசாங்கம், சட்டத்தின் மேல் நம்பிக்கை போய் விட்டது, நாம் எல்லாம் கரை படிந்து, ஊழல்மயமாய் விட்டோம் என வருந்துகிறீர்… நான் பலமுறை சொன்ன ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்கு மீண்டும் சொல்ல விரும்புகிறேன்..
      நீங்கள் மைக்ரோசாப்டின் விண்டோசை பயன்படுத்தி இருப்பீர்.. அந்த மென்பொருள் உலகெங்கும் எதிர்கொள்ளும் வைரஸ்கள் பலபல.. விண்டோசினால், எவ்வளவு மேம்பாடுகளுடன் , அதிநவீன வசதிகளுடன் எந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டாலும் ஒரு சில மணி நேரங்களில் அந்த மென்பொருளின் மீது நடக்கும் வைரஸ் தாக்குதல்கள் தொடங்கிவிடும்… இதனை தவிர்க்க வைரசை எதிர்க்கும் புதிய மென்பொருட்களை நீங்கள் பணம் கொடுத்து வாங்கி நிறுவ வேண்டி வரும்…
      ஒரு புறம் இப்படி இருக்க, மற்றொரு புறம் Ubuntu, Suse,.. போன்ற பல லினக்ஸ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது… அந்த மென்பொருளில் வைரஸ் தாக்குதல்கள் கிட்டத்தட்ட அறவே இல்லை என கூறலாம்.. அந்த மென்பொருளில், புதிய வசதிகளை புகுத்துவது, பழுதான பகுதிகளை சரி செய்வது, இப்படி எல்லாவற்றையும் உலகம் எங்கிலும் உள்ள லினக்ஸ் ஆர்வலர்களே செய்கின்றனர், “இலவசமாக”…. இத்தைகைய பொது உடைமைதான் இன்று இந்த உலகிற்கு தேவை..
      சற்று சிந்தித்து பாருங்கள் உலகில் உள்ள நிறுவனகள் எல்லாம் பணம் கொடுத்து, விண்டோஸ் மென்பொருளையும், அதற்க்கு காப்பாக வைரஸ் எதிர் மென் பொருட்களையும் வாங்கவில்லை என்றால் எவ்வளவு பணம் சேமிக்க முடியும் என்று..

      • 1.no. a govt;’s basic function is to maintain law and order, provide public goods and infrastructure and basic welfare for the really poor. that is : minimum govt that the libertatrian party of USA’s agenda. i had written about it.

        2.Good question. that is why most people (incl me) try to evade this 33 % tax which we can hardly afford. the combined tax burden in India is one of the highest ; hence the massive evasion and black money generation. tax rates should be brough down to single digits. for that wasteful govt expenditures (like defence, etc) should be drastically reduced. practically impossible.

        3. companies try to stay honest not only due to strong laws but basic culture of the company and the nation. for example, Infosys will never evade any tax. that is their company founders ethics and culture. each company is different and is like a human being with specific characters. and in a corrupt environment, where it is impossible to do business honestly, all companies try to cheat the foolsih and irrational laws. (like during license raaj days in India). did you read my link from my english blog about the relationship between corruption and economic freedon ?

        4. Microsoft : i am not sure about your info. MS provides free anti virus s/w from its site which is updated frequently. now a days virus is not much of a problem as it was some years ago.

        let us talk about IMB, Intel, Dell, Texas Instruments,Cisco, HCL, etc which has made possible this cheap internet and PCs and this argument here in cyberspace. 20 years ago no one would have belived this is possible.

        and finally there are always crooks and frauds among people in all nations. the point is to stop them or disable them.

  5. முக்கியமான கட்டுரை. ஷெல் compensation என்ற பெயரில் கடலை மிட்டாயை தூக்கி பாதிக்கப்பட்டவர்கள் மேல் வீசி எறிந்திருக்கிறது..

  6. நல்ல கட்டுரை. தோழர் யாழினி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    முதலாளித்துவம் என்பதே மோசடியின் வடிவம் என்பதும் அது உழைப்பாளி மக்களை உறிஞ்சிக் கொழுப்பதைத் தவிர வேறெதுவும் அறியாதது என்பதுவும் பல ஆயிரம் முறை கண்முன் காணக்கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், சில லட்சங்கள் முதலீட்டில் சிறியதொரு நிறுவணம் நடத்திவரும் அண்ணன் அதியமான் அவர்கள் தன்னையும் ஒரு இண்டர் நேஷனல் முதலாளி என்று நினைத்துக் கொண்டு அவரது ‘சொந்த’ வர்க்கத்துக்காக வாதிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது தொழிலில் அவர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் காரணமானவர்கள் யார் என்பதை அறிந்தும் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்று நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார், பாவம்.

    இப்போது கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக்கூட நேர்மையாகப் பரிசீலிக்க மனமின்றி ‘’எல்லா நாடுகளிலும் இப்படி நடபதில்லை’’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். ஷெல் என்ற ஏகாதிபத்திய சுரண்டல்வாத பாசிச முதலாளியின் நிறுவனம் தப்பிக்க வழியின்றி நைஜீரிய மக்கள் முன்பாகவும் உலக மக்கள் முன்பாகவும் சிக்கிக் கொண்டிருப்பதாலும் சில பில்லியன் டாலர் களைக் கொடுத்து தப்பிக்க முனைந்திருக்கிறது. ஆனால், அதன் கொள்கை பரப்புச் செயலாளரான அண்ணன் அதியமான் ஷெல் நிறுவனத்திற்கே எட்டாத பல குறுக்கு வழிகளை இங்கே அறிமுகப்படுத்துகிறார்.

    ஐயா அதியமான் அவர்களே,
    ஏனையநாடுகளில் இதே நிறுவனம் நேர்மையாக செயல்பட்டு வருவதாகக் கதைக்கிறீர்களே. அது எப்படிப்பட்ட நேர்மை என்பதையும் கொஞ்சம் விளக்க முடியுமா?

    உண்மை என்ன வென்றால், நைஜீரிய மக்களுக்கு தன் நாட்டின் மீதான அக்கறையும் தமது எதிர்காலத்தின் மீதான பயமும் அநீதியை எதிர்த்து நின்று முறியடிக்கும் திடமும் இருப்பதனால் ஷெல் நிறுவனத்தை எதிர்த்து நிற்கிறார்கள். இந்த தன்மைகள் ஏதுமற்று இருக்கும் பிற நாட்டவர் எது நடந்தாலும் கவலையில்லை என்கிற போக்கில் இருப்பதால் அங்கெல்லாம் உங்கள் ஷெல் முதலாளி ‘நேர்மையான’வராக வலம் வருகிறார் போலும்!

    அதியமானின் நண்பன்,
    ஏகலைவன்.

    • //உண்மை என்ன வென்றால், நைஜீரிய மக்களுக்கு தன் நாட்டின் மீதான அக்கறையும் தமது எதிர்காலத்தின் மீதான பயமும் அநீதியை எதிர்த்து நின்று முறியடிக்கும் திடமும் இருப்பதனால் ஷெல் நிறுவனத்தை எதிர்த்து நிற்கிறார்கள்////

      wrong. the average nigerian is as corrupt and theiving as any Nigerian “leader”. there are armed gangs and war lords who control a lot of area. and they exort toll and money from all. and it is highly unsafe to live in Nigeria. try to live there for a year. then you will understand. i have friends working there. The Shell episode is just one symptom of the malise there. It is a hopelss situation and no chance for any improvement there. and civil war…

    • //அவரது தொழிலில் அவர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் காரணமானவர்கள் யார் என்பதை அறிந்தும் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்று நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார், பாவம்.//

      yaaraam ? can you explain. all i can say is you are totally ignorant of basic economics and how the surplus value of labour theory of Marx has been totally discredited in theory and in practise. i know something about the dynamics of business here, which affects small units like ours. instead of mouthing old clcihes about class war, exploitation, etc, try to argue to the point and with info and logic,. ok.

    • நண்பர் ஏகலைவன்,

      ரொம்ப சீரியஸா விவாதித்து களைப்ப இருக்கு.
      அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தது போல ஒரு beer summit
      ஏற்பாடு செய்து பேசலாமா ?

      பார்க்க : http://www.examiner.com/x-264-Celebrity-News-Examiner~y2009m7d30-Obamas-beer-summit-Who-drank-what-photos

      மிக சுவாரசியமாக இருக்கு. நம்ம இந்தியால‌
      இப்படி ஒரு போலிஸ்காருக்கும், கைது செய்யப்பட்ட‌
      பேராசியருக்கும், நம்ம பிரதமர் ஒரு பீர் விருந்து
      கொடுத்து சமாதனப்படுத்துவது நடக்குமா ?

      ஹூம்…

  7. மிகவும் நல்ல கட்டுரை.
    இது போன்ற மொழிபெயர்ப்பு கட்டுரைகளை
    தொடர்ந்து பதிவிடுங்கள்.‌
    மேலும்
    தோழர் கலையரசன்,ருத்ரன்,ரதி,வித்தகன்,ஓவியர் ரவி
    போன்ற பலர் வினவுக்கு பங்களித்து வருவதை நாம்
    அறிகிறோம்.அந்த வகையில் மொழி பெயர்ப்பின்
    மூலம் வினவு வாசகர்களுக்கு அறிமுகமாகியிருக்கும்
    தோழர் யாழினிக்கு வாழ்த்துக்கள்.

    பிறகு
    மேற்கண்ட பங்களிப்பு செய்யும் தோழர்கள் அனைவரையும்
    வினவு வாசகருக்கு அறிமுகம் செய்துள்ளது போல் யாழினி
    அவர்களை அறிமுகம் செய்யவில்லை என்பது ஒரு குறை.
    அவ்வாறு அறிமுகம் செய்வது மொழிபெயர்க்க வாய்ப்பும்,
    திறனும் உள்ள பிறரையும் உற்சாகப்படுத்தி பங்கேற்க
    வைக்கும்.

    பிழைப்பதற்காகவே ஒரு மொழியை அறிந்து
    வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் நுனி நாக்கில்
    முனங்கிக்கொண்டிருக்கும் போது
    ஒரு பார்வையாளர் நம்முடன் பங்கேற்பாளராவது
    முக்கியமானது தானே ?

  8. கென்சாரோ-விவா என்கிற போராளி தான் தூக்கிலடப்படும் தருணத்தில், “அந்த நாள் நிச்சயம் வரும். ஒகோனி மக்களுக்கெதிரான குற்றங்களுக்காக ஷெல் நிறுவனம் தண்டனை பெறும்,” என்றார். அந்த நாளும் வந்துவிட்டது. https://www.vinavu.com/2009/07/30/shell/trackback/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க