ஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில்
நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம்
இப்போது இல்லை,
தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய
பால்சுரந்த கிளைகளின் ஈரம்…
இலைகளின் வாசம்…
கொழுந்துகள் நுனியில் கூசும் சூரியன்…அனைத்தையும்
கொன்ற இடத்தில் கண்டேன் பலகையை;
“பசுமை சுய உதவிக்குழு”
உங்களை அன்புடன் அழைக்கிறது.
………
பெரிசுகள் ஒதுங்கி வெற்றிலைப்போடும்
அழகினைப்பார்த்து கிளிவாய் சிவக்கும்.
மிச்ச சுண்ணாம்பு தடவிய இடத்தின்
மேலே வழியும் மரக்கோந்து வள்ளத்தில்
கை நனைத்து கட்டெறும்புகள் வரையும்
உயிரோவியத்தை காண இனி வழியில்லை!
………
பழைய நினைவுகள் பாதையில் குறுக்கிட்டன…
அதோ…கல்யாண முருங்கை இலை
அடை சுட்டு சாப்பிட்டால்
அடாத சளி நீங்கும்,
இதோ… ஆடாதொடை
கசாயம் குடித்தால் கடும் ஜூரம் போகும்.
அதுதான் துன்னூற்றுப் பச்சிலை
மரு நீக்கும்
அதோ குப்பைமேனி
சொறி, சிரங்கு போக்கும்…
பச்சிலைகளை உறவாக்கி
பாட்டி கூட்டிச் சென்ற வழியெங்கும்
இப்போது கருவை முட்களில்
காய்த்துக் குலுங்கும் சாராய உறைகள்…
………
குட்டையின் புழுக்கம் தாங்காமல்
சட்டையைக் கழற்றிய நல்லபாம்பு
வாதாம் இலைச்சருகில் இறந்துகிடக்குது.
ஆலமரத்து டீக்கடையை
அடையாளம் தேடினாலோ,
“அதெல்லாம் இப்ப இல்லை
அதோ அந்த காய்ந்த வாய்க்கால் தாண்டினால்
முன்பு வேளான் வீடிருந்த இடத்தில்
உடைந்த பானைகள் குவிந்திருக்கும்
அதுக்கு கிழக்கால ஒரு பாழும் கிணறு
அதை ஒட்டி மடிச்ச கீத்து மேல
ஒரு பிளாஸ்டிக் தாள் போட்டிருக்கும்
அதான் இப்ப டீக் கடை” என ஊர் சொல்லுது.
………
வவ்வாலும் வீட்டிற்குள் வருவதில்லை
என்ன இருக்கிறது விவசாயி வீட்டில்?
வெறும்பானையை உருட்டி
வெறுத்துப்போன எலி
விழுந்து சாக கழனிப்பானை இல்லாமல்
வீட்டை விட்டே ஓடிவிட்டது.
ஓலையில் செருகிய
கருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது
வேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை
ஆடு மேய்கிறது.
………
பசும்புல் துளிர்க்க வழியின்றி
பன்றிகள் காலில் மிதிபட்டு
பட்டுப்போய்… பொட்டல் வெளியான
வயலின் நடுவே
ஜோடிக்கப்பட்ட மரத்தின் உச்சியில்
கொடி ஒன்று துளிர்க்கிறது
வேடிக்கைப் பார்த்தவர்களிடம் விசாரித்தால்
ஆகஸ்டு பதினைந்து!
—துரை. சண்முகம்
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு-2009
புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
…..
இன்னமும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. சாதிக் கொடுமைகள் இருக்கின்றன. சுற்றுச் சூழல் சீர் கெட்டு வருகிறது. பொது வாழ்வில் ஊழல் மித மிஞ்சி நிற்கிறது. ஓர மாநிலங்களில் அப்பாவி மக்கள் நசுக்கப் படுகிறார்கள். ஆங்காங்கே தீவிரவாதம் தலைகாட்டுகிறது.
ஆனால் 60 ஆண்டுகளுக்கு மின்பிருந்ததை விட பெண்களும், தாழ்த்தப் பட்ட மக்களும் முன்னேறி இருக்கிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ராணுவமோ, காவல் துறையோ கண்ணில் கூடப் படாமலேயே சகஜ வாழ்வு நடக்கிறது. எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கக் கட்சிகளும், கட்சி சாரா அமைப்புகளும் இருக்கின்றன. பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. சட்ட ரீதியாக எல்லாருக்கும் சம உரிமைக்கு வழி இருக்கிறது. எந்தத் தொழில் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
எனக்கென்னமோ இப்போதைய இந்தியாவின் மேல் குறைகள் இருந்தாலும் வேறு எந்த நாட்டை விடவும் இங்குதான் அன்பும், அறமும், மனித நேயமும், நம்பிக்கையும், பகுத்தறிவும், அறிவியலும், பொருளாதாரமும் வளர வழி இருப்பதாகத் தோன்றுகிறது. வேறு பட்ட கருத்துக்களுடன் நாம் பேசிக்கொள்ள வழி இருப்பதே அதற்கு சான்று. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
a quick reply:
//பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. //
All over the world, wherever there are capitalists, freedom of the press means freedom to buy up newspapers, to buy writers, to bribe, buy and fake “public opinion” for the benefit of the bourgeoisie.
* Lenin’s Collected Works, Volume 32, pp.504-509
Well, Lenin was an extraordinarily intelligent man. But he hadn’t seen anything like the Indian Democratic system. I am sure his opinion was based on the 19th century values than dominated the world he lived in. My hunch is he wouldn’t have had too many issues with the press in the present Indian context. Of course, all this is mere speculation. Thanks anyway for quoting the great man.
What about this freedom of expression in this internet and blogs ?
i suppose comrades (who do not care for Bourgeoius type freedom and democracy) would prefer a right wing dictatorship like Burma or Religious oligarchy like Saudi in India !! in such a set up the first group to be suppressed inhumanly would be MaKaIka comrades and their alles. the org will be banned, members jailed or worse, all propoganda banned and websites blocked. would you prefer that comrades ?
//Author: K.R.Athiyaman
Comment:
What about this freedom of expression in this internet and blogs ?
i suppose comrades (who do not care for Bourgeoius type freedom and democracy) would prefer a right wing dictatorship like Burma or Religious oligarchy like Saudi in India !! in such a set up the first group to be suppressed inhumanly would be MaKaIka comrades and their alles. the org will be banned, members jailed//
கூச்சமில்லாமல் நகைச்சுவையாக எழுதும் அதியமானிர்க்கு:
தமிழரின் உரிமைக்காக பேசினால் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’, தடா, பொடா எல்லாம் சீனா காரனா போட்டான் ?? தமிழனுக்கு தனி நாடு வேணும் என்று பேச கூட உரிமை இல்லாத நாட்டில் அடிமை தமிழனுக்கு சுதந்திர தினம் எதற்குன்னு கவிதை எழுதினால், நீ ஏன் அடுத்தவனை சுட்டி காட்டுறீர் !!!
//What about this freedom of expression in this internet and blogs ?//
யாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் ?? இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா ??
just because the govt knows that internet penetration is very low. so they ignore at the moment. Obviously they ban blogging any time, if they think there will be a some serious movement against their power!!
ann,
நகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.
தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
முறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,
வெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை
எடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,
தனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதியான வழிகளில் பெரும்பாலோன மக்கள்
போராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை
எதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா
(ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்
சேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.
துப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு
கருதப்படுகிறது.
சரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது
தமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக ? ஸ்டாலின் காலத்தில் ரஸ்ஸியர்கள்,
பிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர
“சோவியத் குடியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்
சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
பெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா ?
and email threats are investigated. that is all. don;’t you know what BJP and hindthuva brigade are saying about Sonia and her family. or what is written and spoken about JJ’s personal life on net and in print media. do you know what DMK speakers speak ON stages about the personal life of JJ ? (while there can be no justification of JJ’s crimes, talking shit about her personal ife is different matter) what Theerpori Arumugam spoke in the past ? talking of freedom of expression…
நகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.
தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
முறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,
வெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை
எடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,
தனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதியான வழிகளில் பெரும்பாலோன மக்கள்
போராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை
எதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா
(ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்
சேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.
துப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு
கருதப்படுகிறது.
சரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது
தமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக ? ஸ்டாலின் காலத்தில் ரஸ்ஸியர்கள்,
பிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர
“சோவியத் குடியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்
சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
பெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா ?
ann, ////யாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் ?? இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா ??
just because the govt knows that internet penetration is very low. so they ignore at the moment. Obviously they ban blogging any time, if they think there will be a some serious movement against their power!!/////
email threats are investigated fully. that is all. but no objection to critise Sonia or any other leaders politics and action, etc. even their personal life details are talked about shamelessly. do you know what DMk speakers like Theepori Arunuma spoke ON stages ? about what was written about JJ or Indira Gandhi;s personal ives. (i do not support their cimies, but their personal matter is a different issue). Freedom of expression is alive in India to a greater extent. but still it is not as good as Europe or US. anyway, we all know about the freedom of expression allowed in your communist sorgam. could anyone have critised Stalin when he was alive in USSR ? why not ?
//ஜனனாயகம் மற்றும்
சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
பெரும் நகைச்சுவை.//
யோவ் உன்ன சொல்லி குத்தமில்லை.
வினவு: உங்க தளத்தில் உங்கள் பதிவில் உள்ள ஒரு சில கருத்துகளுக்கு ஆதரவாக பதில்ட்டால், நான் என்னமோ வினவின் மொத்த உருவம் என்று நினைத்து பதிலிடும் இந்த அரை வேக்காட்டை எப்ப பார்த்தாலும் முதலாளித்துவத்தின் மொத்த உருவமாய் அதன் வழக்கரிங்கராய் கருதி வாதாடுகிறீர்கள் ??
// தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
முறைகளில் தாம் பிரச்சனை. //
நீங்க முப்பது நாப்பது வருசமா கம்பி எண்ணிட்டு இப்ப தான் வெளியே வந்தவர் மாதிரி பேசுறீங்க. உங்களுக்கு சின்ன ஆதாரம் .
http://www.flickr.com/photos/8764176@N05/3836497932/
ஆமா, இப்ப சீமான், கொளத்தூர் மணி எல்லாம் பேசி தமிழ் நாட்டுல ரத்த ஆறா உள்ள ஓடுது??
அரசுக்கு எதிரான போராட்டங்களை எல்லா அரசுகளும் அவர்களின் அதிகாரங்களை நிலை நாட்ட அடக்கவே செய்கிறார்கள். அதில் சோசலிச அரசிற்கு முதலாளி துவ அரசு எந்த விதத்திலும் சளைத்ததல்ல. இவ்வளவு ஜன நாயக உரிமைகள் பேசும் அமெரிக்காவில் கம்யுனிசம் தடை செய்யப்பட கட்சி. G8 மாநாட்டு எதிர்ப்பை இருந்தால் பிரட்டன் ஆ இருந்தாலும் துப்பாக்கிகள் சுடும்.
jp. when you quote Lenin, then i conclude you are endorsing communist dictorship. that is all. and i cannot keep track of various ids here. ok. so no big deal. so what is your stand ? do you support Stalinisim then ?
Aringar Anna and Periyar asked for Dravida NAdu for decades in a democractic manner. It was part of DMK manifesto. And Akali Dal in its intial days asked for Punjabi Saba (so i think). they were all not banned. Seeman and Kollathoor MAni’s choice of words and methods are the issue here. not Thani thamil naadu or Eelam, etc. understand that first.
if any group argues for Thani thamil naadu in a peaceful way, no problem. there is a org called JKLF in Kashmir called JAmmu Kashmir Liberation Front which calls for independent KAshmir. they are NOT jihadisists and continue to operate in Kashmir till date. only when they induce violence, they are arrested. but otherwise they are free to propogate their views. ok.
இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..
இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….
ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?
ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15
எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்
ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்
அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.
சுதந்திரம் – பொய்யும் புனைசுருட்டும்..
http://vrinternationalists.wordpress.com/2009/08/14/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9/
வித்தகன்,
நீங்க சொல்றது மாதிரி இருந்த்தா நல்லா தானிருக்கும்!
ம்ம்ம்ம் …. கற்பனை நன்றாக தானிருக்கிறது. என்ன செய்ய உண்மை சுடுகிறதே?
தீவிரவாதம் தலைகாட்டுவதாக சொல்லும் நீங்கள், மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.
60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட மக்கள் முன்னெறி இருப்பதாக சொல்கிறீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்? எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?
***அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.***
ஏதோ சொல்றீங்க…. அப்படியே பப்பர் மிட்டாய் கொடுத்தீங்கன்னா சப்பிகிட்டே போயிடுவோம்.
சுதந்திர தின வாழ்த்து சொல்லும் போது, நாம் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கான்னு யோசிக்க கூடாதுன்னு தான் பப்பர் மிட்டாய் குடுக்குறாங்ய்களோ..
சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு…
//மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.//
உண்மைதான். அதுக்காக எல்லாத் தீவிரவாதியையும் போராளிகள்னு கொண்டாட முடியாதில்ல!
//60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்?//
இல்லைங்க. ஏழை எளிய மக்களுக்கு படிப்பறிவுக்கும் சுய தொழில் வாய்புக்கும் வழிமுறைகள் பெருகியிருப்பதைச் சொல்றேங்க. இன்னும் நெறய வாய்ப்புகள் அமையணும், செல்வம் இன்னும் சீராகப் பரவணும்ங்கிறது உண்மைதான். ஆனாலும் போற திசை சரியாகத்தான் இருக்கு. சிறு தொழில்கள் பெருக வாய்ப்புகள் இன்னும் மேல மேல வரும்னு நம்பறேன்.
//எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? //
வாழ்க்கைத் தரம் என்பதன் வரையறை என்ன? பசியால் செத்துப் பொகும், நோய் நொடிக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை சுதந்திரத்திற்குப் பின் ஏராளமாகக் குறைந்துள்ளது. சின்னஞ்சிறு ஊர்களிலும் போலியோ மலேரியா மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ வசதி அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு கடன்களும், சலுகை களும் கணிசமாகக் கிடைக்கின்றன. அவர்கள் பிள்ளைகள் படிக்கவும், வேலை தேட வும் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.
//எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?//
வெட்கக் கேடு. இனிமேல் அப்படி நிகழக் கூடாது.
ளிமாகோ! இப்படி கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்குத் தந்துள்ள உங்கள் நாட்டின் சுதந்திர தினத்திற்காக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வித்தகன்,
நீங்கள் கூறுவது போல் நடுத்தரவர்க்கத்திற்கு பல குறைகளும், நிறைய வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், 90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலே பல்வேறு விதமான உணவு தானியங்கள், காய்கறி, கனிகள் கிடைக்கும் போது உணவு இறக்குமதி தேவையா? நம் நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் வெங்காயம், ஆப்பிள், ஆரஞ்சு, உணவு தானியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து நம் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது சுதந்திரமா?
சுதந்திரம் இருக்குத்தான் செய்கிறது. ஆனால் எந்த வர்க்கத்துக்கு என்பது தான் மைய பிரச்சனை. பன்னாட்டு கம்பனிகளுக்கும், டாடா அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும், தான் முழு சுதந்திரம் உள்ளது.
//90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன. ///
prove this with data comrade. i disagree with this false info as a SSI entrepreneuer. actually there are many many new chances now for SSIs. try taking a tour of Sriperumbudur to Chengalpattu belt. and enquire about the thousands and lacs of new chances for suppliers and vendors to MNCs there. there is something called “ripple effect” ; also try to compare the Combatore and Karur districts with their situation in 70s. I grew up there in the 70s and 80s and knew something about the exlposive growth of industry, employment and tax revenue. the issues of pollution, etc are there, of course. but still somwething is better than nothing and you have no idea about the grim scene in the 70s.
சிறுதொழில்களுக்கு மார்ச்1990-இல் வங்கி மூலம் கிடைத்த கடன்கள் 11.5%. இதுவே மார்ச்2003-இல் கிடைத்த வங்கி கடன் வெறும் 4.9% மட்டுமே. (Source: RBI, Basic Statistical Returns)
பணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் சிறுதொழில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
சுனா பானா,, that is one relative statistics. can you give the total number of SSI untis on date when compared to 1990 and how many old units went out of business and new ones entered in this period. and compare with pre-1991 data. and your info shows that the economy is booming and more credit to large companies. that doesn;t mean SSI units are starved of credit. in fact, getting a loan is easy now and there is utmost competition among banks and orgs like TIIC to target SSIs. the most important issue is whether SSI’s are dying out.
even if they wane, no big deal. economics of sacle and new technologies constantly change the scene and new companies grow while old ones die. when tractors and powerlooms replaced ox and handlooms,. there was opposition intially. and loss of employment INTIALLY. but soon there was adjustment and new oppurtunities. and without these changes, agri and textile output could not have kept up with the growing population. We, the SSI entrepreneuers are NOT complaining while you do. by the way, what about my other points and posts ??
//பணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. /// sure. :)) and hence this cheap website for vinavu hosted in a server dead cheap (when compared to 15 years ago) and all this free blogs, cheap cells, millions of new jobs in many sectors and huge tax revenue for govt. and much much more.
ஏங்க அதியமான், நீங்க டிபனுக்கு செல்போனும், சாப்பாட்டுக்கு ஹார்ட்டிஸ்கும் சாப்புடறீங்களா?
எனக்கு தெரிந்த உண்மை சம்பவம். என் சொந்தக்காரப் பையன், 10 வருடத்திற்கு முன்பு சிறுதொழில் செய்வதற்காக PMRY (Prime minister Rozgar Yojana) திட்டம் மூலம் 1 லட்சம் லோன் வாங்க விண்ணப்பித்தான். ஒரு லட்சம் லோன் வாங்க 10 ஆயிரம் செலவு பண்ணிணான். 8 மாசமாக அலைஞ்சி செருப்பு தேஞ்சி போனது தான் மிச்சம்.
இப்படி கொடுக்கப்படும் சிறுதொழில் கடன்களும் காசுள்ளவனுக்குத் தான் கிடைக்கிறது.
இது தான் சிறுதொழில் செய்ய முன்வருவோருக்கு கிடைக்கும் “சலுகை”.
சுனா பானா,
உங்கள பரிச்சை பண்ணி பார்த்தேன். ஆனா தேரலையே !!
பார்க்கவும் :
http://www.dcmsme.gov.in/ssiindia/statistics/economic.htm#Industrial
http://www.dcmsme.gov.in/ssiindia/performance.htm
உங்க நண்பன் 10 % தொகை எப்படி “செலவு” செய்தாராம் ?
ஆரம்பத்திலியே லஞ்சம் !! அந்த 10,000 ரூபாய் முதலீட்டில்
நேர்மையாக ஒரு மிக சிறு கடை ஆரம்பித்திருக்கலாமே.
ஜான்,
சும்மா உளர வேண்டாம். உருப்படியாக வாதாட முயற்சிக்கவும்
உங்கள் ஆலோசனை நல்லா இருக்கு.
>>சிறு கடை ஆரம்பித்திருக்கலாமே.
ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
அரசும் காசுள்ளவனுக்கு தான் உதவுகிறது. வங்கியும் காசுள்ளவனுக்கு பின்புலம் பார்த்து தான் கடன் கொடுக்கிறது. இதில் இருந்து தெரியவில்லையா எந்த வர்க்கத்திற்கு சுதந்திரம் என்று.
இந்தியாவில்,
மேட்டுகுடியினருக்கு தான் முழு சுதந்திரம்,
நடுத்தர வர்க்கத்திற்கு ஓரளவு சுதந்திரம்,
ஏழைகளுக்கு சுதந்திரம் இல்லை.
///ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// no Su.Pa. this is gross genralisations and untrue.
u have no idea about the boom and energy unleashed in Coimbatore, KArur dts due to the efforts of self made entrepreneuers. and around chennai. and many of the present capitalists were former workers who made it big thru effort and hard work. the majority of entrepreneuers in Coimbatore, Thirupur, Karur region started as workers and made their way up slowly over the years.
and if you are honest and if your business is run on sound manner, there will be no problem in getting loans. for start ups too this applies. i know many many start ups who started with a tiny amount and grow later.
/////ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// //
சுனா.பானா,
ஒரு முக்கிய விசியதை விட்டுவிட்டேன்.
லஞ்சம் கொடுத்து கடன் பெற நினைப்பவர்கள் வாங்கிய கடனை ஒழுங்காக
திருப்பி தர மாட்டார்கள். இது போன்ற அரசு திட்ட கடனகள் எல்லாம் இனாம்தான்,
திருப்பி தர தேவையில்லை, ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் மிக மிக அதிகமாக
உள்ளது. விவசாய கடன்களிலும் தான். உண்மையில் திவாலாகி, கடனை திருப்பி
தர இயலாதவர்களை விட, இது போன்ற ஏமாற்றுபவர்கள் மிக மிக அதிகம்.
//. 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்? எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?///
poverty ratio has declined dranstically since 1947. illetarcy and famines have declined vastly. but ,yes, India is corrupt, under developed and we have hell lot of problems and issues and poverty. but we were worse off in 1947 and could not have improved this much without this much maligned independence. with a population of nealy 1.1 billion we are managing poverty at this level. if the poverty ratio at 1947 level is still there, then imagine the total people below poverty today. it would be more than 50 % or nealy 60 crores.
our debate is about the ways and means to conquer poverty and other ills. well, we can learn from history of the world or be condemned to repeat the mistakes of the past,
அதியமானுக்கு ஒரு தெளிவுரை….
முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும், விலைவாசி உயர்வும், விவசாயத்தின் அழிவும் குறித்து.
Drought of justice, flood of funds
P. Sainath
Ask for expansion of the NREGS, universal access to the PDS, more spending on health and education — and there’s no money. But there’s enough to give away to the corporate world in concessions.
Sure, August is proving an unusual month. But what an extraordinary one July was! We celebrated the delivery of the cheapest car in the world and the costliest tur dal in our history within the same 31 days. And it took some work to get there. The price of tur dal was around Rs. 34 a kilogram just after the 2004 elections, Rs. 54 before the 2009 polls, Rs. 62 just after and, now at over Rs. 90, bids for three-figure status.
The euphoria of July also saw Montek Singh Ahluwalia declare that the “worst is behind us.” (Though it must be conceded that he said that even in June and, possibly, earlier.) That’s good. I only wish he had told us when the worst was upon us. It would have been nice to know. Otherwise, it gets hard to appreciate improvement.
As a matter of fact, Prime Minister Manmohan Singh and Agriculture Minister Sharad Pawar suggest that the worst could be ahead of us. And they don’t mean the swine flu. Both appear to have written off much of the kharif crop. They advise us to buckle up for a further rise in food prices due to the drought they now say affects 177 districts. That they’ve thrown in the towel on the kharif crop is evident in their calling for a more efficient planning of the rabi. Yet, the government had two months during which it could have opted for compensatory production of foodgrain in regions getting relatively better rainfall. But there was no effort at monsoon management.
Even today, there are very useful things that could be done to counter the worst ahead. A positive step taken by the Rural Development Ministry now allows small but vital assets like farm ponds to be created on the lands of farmers through the NREGS. A pond on every farm should be the objective of every government. (Incidentally, this would help hugely with the rabi season. It would also ease the hostility of quite a few farmers towards the NREGS.) A massive expansion of the NREGS will also help cushion the lakhs of labourers struggling to find work and devastated by rising food costs. But it would call for throwing out the entirely destructive 100-days-per-household limit on work under the scheme. With the Prime Minister calling for anti-drought measures on “a war footing,” this should be the time to do it.
The price-rise-due-to-drought warning is a fraud. Of course, a drought and major crop failure will push up prices further. But prices were steadily rising for five years since the 2004 elections, long before a drought. Take the years between 2004 and 2008 when you had some good monsoons. And more than one year in which we claimed “record production” of foodgrain. The price of rice went up 46 per cent, of wheat by over 62 per cent, atta 55 per cent, salt 42 per cent and more. By March 2008, the average increase in the prices of such items was already well over 40 per cent. Then, they rose again till a little before the 2009 polls. And have risen dramatically in the past three months.
The Agriculture Minister appears to have figured out that the stunning rise in the price of pulses may have little to do with drought. “There is no reason,” he finds, “for prices to rise in this fashion merely on a supply-demand gap.” He then goes on to find a valid reason: “blackmarketing or hoarding.” But remains silent on forward trading in agricultural commodities. Many senior Ministers have long maintained that “there is no evidence” that speculation related to forward trading has had any impact on food prices. (The ban on trading in wheat futures was lifted even before the results of the 2009 polls were announced in May. And existing bans on other items have been challenged in interpretation.)
The price rise since 2004 could be the highest for any period in the country barring perhaps the pre-Emergency period. For the media, of course, July was far more interesting for the political price in Parliament over the gas war between the Ambani brothers. When these two barons brawl, governments can fall. Also, how could atta be more interesting than airline tickets (the prices of which fell dramatically over several years)? Food prices might have gone up but airline travel costs went down and those are the prices that mattered.
So the price of aviation turbine fuel became a far more to-be-covered thing as private airlines threatened a strike demanding public money bailouts. At the time of writing, it appears the government will try and make things cheaper for them. These airline owners include some associated with the IPL, which got crores of rupees worth of tax write-offs last year. Maharashtra waived entertainment tax on the IPL. And with so many games held in Mumbai that proved a bonanza for the barons paid for by the public.
There’s always money for the Big Guys. Take a look at the budget and the “Revenues foregone under the central tax system.” The estimate of revenues foregone from corporate revenues in 2008-09 is Rs. 68,914 crore. (http://indiabudget.nic.in/ub2009-10/statrevfor/annex12.pdf) By contrast, the NREGS covering tens of millions of impoverished human beings gets Rs. 39,100 crore in the 2009-10 budget.
Remember the great loan waiver of 2008, that historic write-off of the loans of indebted farmers? Recall the editorials whining about ‘fiscal imprudence?’ That was a one-time, one-off waiver covering countless millions of farmers and was claimed to touch Rs. 70,000 crore. But over Rs. 130,000 crore (in direct taxes) has been doled out in concessions in just two budgets to a tiny gaggle of merchants hogging at the public trough. Without a whimper of protest in the media. Imagine what budget giveaways to corporates since 1991 would total. We’d be talking trillions of rupees.
Imagine if we were able to calculate what the corporate mob has gained in terms of revenue foregone in indirect taxes. Those would be much higher and would mostly swell the corporate kitty for the simple reason that producers rarely pass on these gains to consumers. Let’s take only what the budget tells us (Annexure 12, Table 12, p.58). Income foregone in 2007-08 due to direct tax concessions was Rs. 62,199 crore. That foregone on excise duty was Rs. 87,468 crore. And on customs duty Rs. 1,53,593 crore. That adds up to Rs. 3,03,260 crore. Even if we drop export credit from this, it comes to well over Rs. 200,000 crore. For 2008-09, that figure would be over Rs. 300,000 crore. That is a very conservative estimate. It does not include all manner of subsidies and rate cuts and other freebies to the corporate sector. But it’s big enough.
Simply put, the corporate world has grabbed concessions in just two years that total more than seven times the ‘fiscally imprudent’ farm loan waiver. In fact, it means that on average we have been feeding the corporate world close to Rs. 700 crore every day in those two years. Imagine calculating what this figure would be, in total, since 1991. (Er.., what’s the word for the bracket above ‘trillion?’) Ask for an expansion of the NREGS, seek universal access to the PDS, plead for more spending on public health and education — and there’s no money. Yet, there’s enough to give away nearly Rs. 30 crore an hour to the corporate world in concessions.
If Indian corporates saw their net profits rise in April-June this year, despite gloom and doom around them, there’s a reason. All that feeding frenzy at the public trough. The same quarter saw 1.7 lakh organised sector jobs lost in the very modest estimate of the Labour Ministry. That’s not counting the 15 lakh jobs said to have been lost in just the export sector between September and April by the then Commerce Secretary.
And now comes the drought. A convenient villain to hang all our man-made distress on — and sure to oblige by adding greatly to that distress. A huge fall in farm incomes is in the offing. If the government wants to act on a war footing, it could start with a serious expansion of the NREGS (about the only lifejacket people in districts like Anantapur in Andhra Pradesh have at this point, for instance).
It could launch, among many other things, the pond-in-every-farm programme. It could restructure farm loan schedules. It could start getting the idea of monsoon management into its thinking. It could curb forward trading-linked speculation that was driving one of our worst price rises in history long before the drought was on the horizon. And it could declare universal access to the PDS. That cost could probably be easily covered by, say, cancelling the dessert from the menu of the unending corporate free lunch in this country.
Printer friendly page
Send this article to Friends by E-Mail
payasam,
i had read P.Sainath’s article already. while his reports are indepth and gives a accurate picture of the rural India, his conclusions and interpretations are nonsenses and absurd to the say the least. without liberlisation, the situation would be even more terrible now. any idea about the net govt revenue figures and spending until 80s ?
and if tax levels were maintaiend at pre-1991 levels, then total tax revenue too would be at the old levels. tax rates were highest in 1971 and were reduced slowly. but this propelled the industry to expand and grow and hence total tax revenue multiplied many times, which was unimaginable some decades ago.
and Sainath is giving a incorrect picture of tax breaks to industry. they are not Payments or handouts but reductions of rates for special purposes (and i agree this is distorting the economy and is liable for corruption) ; but without these discounts there will be no new tax revenue for govt coffers. and he is talking like a nut about the taxes lost in trillions if the pre-1991 levels are maintained till date. if the rates were maintained at the old rates, there will be no growth and rise in taxes as on date. and we would have been bankrupt long back.
While i appreciate the humanism and dedication of Thiru.Sainath, i must say he knows next to nothing about economics and growth. esp about tax policy, etc.
அதியமான் நான் ஒன்னும் உளரள, நீங்க சோறுதான் துன்றீங்கன்னு நான் நம்புறேன் ஆனா நீங்க அப்பப்ப, வினவு சைட்டு போட்டத கம்பூட்டர் வெல குறைஞ்சத, முதலாளித்துவ, தனியாரமைய சாதனையா சொல்லுறீங்க ஆனா இதே 15 வருசத்துல அரிசி பருப்பு வெல கன்னா பின்னான்னு கூடிப்போச்சு… கம்பூட்டர் வெல கொறஞ்சது சாதனைன்னா அரிசி விலை கூடினது தோல்வியில்லையா?… தயவு செஞ்சு தமிழ்ல எல்லாருக்கும் புரியர மாதிரி பதில் சொல்லுங்க
வறுமையை ஒழிப்பது பற்றி நல்லா பேசுறீங்க. இது வரை எந்த நாட்டிலாவது வறுமை ஒழிக்கப்பட்டிருக்கா.. Please teach from history
மயிராண்டிகளா அப்புறம் இன்னும் ஏண்டா, இங்கே இந்தியாவில் பொறுக்கிக்கொண்டு இருக்கீங்க, போய் சீனா, கியுபா, வட கொரியா ன்னு புடுங்க வேண்டியது தானே. ( ஆனா அங்கன போய் இத மாதிரி பிளாக் எழுதினா சூத்த கிழிசிடுவாங்க என்பது வேறு விஷயம்).
இங்கியே பொருக்கி தின்னுகினு நம்ப நாட்டையே குறை சொல்லி திரிகிறீர்கள்.
அகத்தியன். கெட்ட வார்த்தை பேசாம இதே கருத்தை சொல்லியிருக்கலாமே! தயவு செய்து சொல்லும் தகவலின் திசை ஆபாச மொழிகளால் மாறிப் போக விடாதீர்கள்.
Dear Mr.Agathiyan,
இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்து அவன் வீசும் எச்சில் டாலர்களை பொறுக்கி தின்னும் மேட்டுக்குடி இந்தியாவை (அம்பானிகள், அரசியல்கள், ரவுடிகள், பொறுக்கிகள்….) தோலுரிப்பது தான் இந்த கவிதையின் நோக்கம். உரிக்கப்பட்டதால் சுள்ளென்று *** எரிகிறதா. உப்பை தடவவும் (TATA Saaaalt)
///அவன் வீசும் எச்சில் டாலர்களை பொறுக்கி தின்னும் மேட்டுக்குடி//// :)))))))) dollars are needed for ALL people of India to finance the vital imports like Petroleaum, etc. untll 1991 we were begging and borrowing for dollars from IMF.
can anyone here answer my basic question about dollars and IMF at :
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
பெட்ரோல் விற்பது அரபிய நாடுகள். வாங்குவது இந்தியா. இதற்கு ஏன் டாலர் பரிமாற்றம். விளக்குங்கள் அதியமான்.
விடிவெள்ளி.
not only petrol, most of world trade is done thru USD only. simple reason is that USD is more trusted than any other currency. that is most people trust USD which is backed by US economy (for all its ills) to be the safest one. and most Asian Central banks (like our RBi or China’s RBI) park their trillions of dollar assets in US govt bonds creating imbalances and making USD over priced.
and you will say all this is due to US conspiracy !! read my post about 1991 fully and answer the question at the end. also try this about the theories about US dollar conspiracy :
Petro dollars Vs Petro Euros
http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf
Athiyaman, I do not know about US conspiracy.
Why most people/countries trust USD to be safest one?
When USD considered to be the safest currency? When it became common currency?
ada adimadaiyaaaaaaaaaaa
vidivelli,
you have got the point correctly. trust of a currency of product or brand can only be EARNED slowly over time. there are no shot cuts or conspiracy. why do you trust intel chips or Cisco routers or Sony systems, etc ? same is true for currency. no idiot will trust our great Indian rupee. we print too much every year and reduct the net value of our rupee. hence they demand payment in dollars.
British sterling pound was the reserve currency of the world until 40s. the trust placed on USD is solely based on US economy and stablity. this too may change in future, unless US is able to correct its follies and stablise its economy.
in free markets, the value or trust can only be EARNED slowly. that is the key.
Athiyaman, I got your point. As you said British pound was the reserve currency till 40s, because it was the super power till second world war. And during the end of cold war US dominated the world. This resulted in US dollar supremacy.
So as per your view, gaining the “trust” means becoming imperialist country by suppressing and oppressing other countries.
“நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்
ஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்
அதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்
அதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்
அல்லது அணு குண்டு போட வேண்டும்
மக்களை கொல்ல வேண்டும்
சதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்
நாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..
//“நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்
ஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்
அதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்
அதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்
அல்லது அணு குண்டு போட வேண்டும்
மக்களை கொல்ல வேண்டும்
சதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்
நாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..///
crazy and untrue. no naton can impose its currency on the world as reserve currency thru the above means. you have not read my links.
and you cannot understand what earning trust or brand building thru good faith means. yet, you purchase only good quality products under established brands (brand value cocept is the same everywhere). e.g : you buy PC or cell from known brands, tea from known brands, etc. all these brands did not earn their trust or reputaton for qulaity overnight. but took decades..
K.R.A, i repeat my question. ” when and how DOLLAR established its hegemony”
கருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது
வேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை
ஆடு மேய்கிறது.//
அருமையாக எழுதியுள்ளீர்கள்…எல்லா வரிகளும் மனதை பிழையுது.
சி.கருணாகரசு.
கவிதையா, வெரிகுட். சீக்கிரத்தில் பொரட்சி வர செவ்வணக்கம் தோழர்.
ரவி அவர்களுக்கு,
புரட்சி வரும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அதற்குதானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போன்ற ஒரு ஆபாச இடுகையோடு மக்கள் பிரச்சினை பற்றிய இடுகைகளை இடுவது சிரமாக இருக்காது.ஏனெனில் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கிறீர்கள் போலும் . அதனால் தான் லக்கியால் பன்றிக்காய்ச்சல் இடுகையிலும் , தாங்கள் இங்கும் நையாண்டி செய்ய முடிகிறது.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், பார்ப்பன இந்து மதவெறி ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் அதற்கு புரட்சி தேவை என்கிறோம், சாத்தியம் இல்லைஎன்றால் விளக்குங்கள் வெறும் நக்கல் எங்களை கோபம் கொள்ள செய்கிறது. அதற்கான பதில் சிலரிடம் சூடாக கூட வரலாம். உடனே லக்கி சொன்னது போல “இங்கு வந்திருக்கவே மாட்டேன்” எனச்சொல்லபோகிறீர்களா?
மக்களை பாதிக்கும் அனைத்தையும் எதிர்க்கவே செய்கிறோம். ஒரு ரசிகனைப்போல், பக்தனைப்போல் அல்லாது இதற்குத்தான் இப்படித்தான் என மக்களுக்காக வாழவேண்டுமென்கிறோம் இருக்கிறோம். அதையும் தாண்டி உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்பதற்குத்தான் புரட்சி தேவை என்கிறோம். இதை விட தோழர்கள் சிறப்பாக விளக்குவார்கள் புரட்சியைப்பற்றி.
தயவு செய்து தாங்கள் ஏன் நையாண்டி செய்கிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள். தற்போதுதான் உங்களின் தளத்தினைப்பார்த்தேன். அந்த ஆபாச சுட்டியை தாங்கள் விருப்பப்பட்டால் இடவும் தயார்.அது நோக்கமல்ல.
விமர்சனம் செய்யுங்கள் எங்களை மெருகேற்றிக்கொள்கிறோம் அதை விட்டுவிட்டு இப்படி செய்தால் எப்படி? அதும் மூத்த பதிவரென்று வேறு உங்களை நண்பர் ஒருவர் சொன்னார். உங்களின் செயல் பாடு கலகத்தை போன்ற சிறுவர்களுக்கு வளர்ச்சிக்கானதாக அல்லவா இருக்க வேண்டும். பதில் சொல்வாரா ரவி(அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற சிலரும்)
கலகம்
மூத்திர பதிவர்னு சொல்லிருப்பாங்க. உங்களுக்கு சரியாய் கேட்டிருக்காது
செந்தழல் ரவி…. நீங்க கருத்து சொல்றீங்களா. நக்கல் அடிக்கிறீங்களா. புரியிர மாதிரி பேசுங்க.
விவசாயிகளை நக்கல் அடிப்பது அவர்களுக்கு புரியாதவரைக்கும் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொன்டாட்டமாத்தான் இருக்கும். விவசாயிகளுக்கு புரிஞ்சிரிச்சின்னா நீங்க எதிர்பார்க்கும் புரட்சி சீக்கிரம் வரும்.
Vinavu pls feel free to write like this again. India is not Maoist China or Stalinist Russia. None would hang you for writing like this. In fact not even .00005% of India’s population takes you and your great movement seriously. You can even observe aug 15 as a sad day. Nobody forces you to salute the flag on 15th august. So enjoy all the freedoms and facilities even as you remain ungrateful to India. India has seen so many stooges like you and has outlived them.
“In fact not even .00005% of India’s population takes you and your great movement seriously”
Let us remember that great movements started with only few individuals. Christianity began with Christ and his 12 disciples only. Marx had a believer in Engels only in the initial stage.
Mr.Hindu your FREE INDIAN STATE imprisoned and tortured Dr.Binayak Sen, a world famous Physician for expressing certain views. It is not an isolated incident. From kashmir to Kanya Kumari every nook and corner is full of stories like this. I salute the ‘ FREEDOM’ which allows you to selectively forget about these trivial incidents. GO CELEBRATE YOUR FREEDOM. HANG OUT WITH YOUR FRIENDS …………… pepsi, king fisher………..
அய்யா,
இந்திய இறையாண்மை என்பது பட்டாப்பட்டி நாடா மாதிரி. அது காஷ்மீரத்து, வட கிழக்கு மாநிலத்து, ஈழத் தமிழ் பெண்களை கற்பழிக்க மட்டுமே தளரும். மற்ற நேரத்தில் அது இறுக்கமாகவே இருக்கும். சுதந்திர தின அனுதாபங்கள்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் நமது அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சிலர் அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் கொடியாய் தொங்குவதை நம்பிக்கொண்டு இருக்கின்றனர், கொடியில் தொங்குவது தனது கோவணம்தான் என்பது தெரியாமல்…
60, 60 என்று வர வேண்டும் என்று நினைத்து ஏதேதோ எழுதி விட்டீர்கள்.
//அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…//
பொய். ஒரு வேளை உணவு உண்ணும் மக்கள் 12%. அதுவும் அநியாயம்தான். ஆனால் நீங்கள் சொல்வது போல 60% அல்ல.
//அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…//
உண்மை. அவர்களது தேவைகளும், குறைகளும் தீர்க்கப் படாமலே உள்ளன.
//குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…//
பொய். நாடு முழுவது எட்டாம் வகுப்பு வரையிலும் இலவச கல்வி உள்ளது. சில மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்களும் இலவசமாகத் தரப் படுகின்றன. நான் சிறிய ஊரில் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கற்றவன் தான். சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் பின்னர் அமெரிக்காவில் மேல் படிப்பு படிப்பதற்கும் (ஸ்காலர்ஷிப்புடன்) அந்தக் கிராமத்துப் பள்ளியில் படித்த அடிப்படைக் கல்வியால் ஒரு தடையும் வரவில்லை. நான் பட்டினி கிடந்ததில்லை, ஆனால் வறுமையிலிருந்து அதிக தொலைவிலும் இருந்ததில்லை. இன்று, என் நிலைமைக்கு நம் கல்விக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.
//ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…//
எல்லா நேரமும் உண்மையல்ல. அரசு மருத்துவ மனைகளின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பது நம் கடமை. ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் நோய்களுக்கு இலவச சிகிச்சை தரும் நம் மருத்துவ மனைகளால் ஏழைகள் பலன் பெறுவதை அடியோடு மறுக்காதீர்கள்.
//ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…//
இது conspiracy theory மட்டுமே.
//அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…//
கத்தி எடுப்பதற்கு இது எவ்வளவோ தேவலை. அக்கம் பக்கம் உள்ள நாடுகளைப் பாருங்கள். இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம். இங்கு, நான் பிரதமரையோ, ஜனாதிபதியையோ மேடை ஏறித் திட்டி விட்டு வீட்டில் போய் சீரியல் பார்க்க முடியும். சுதந்திரம்!