Saturday, February 4, 2023
முகப்புஉலகம்ஈழம்வீழ்ந்தது ஈழம்! 'மார்க்சிஸ்டு' மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

-

Aftermath_IDP_TamilNational_00

“இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். “ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது இலங்கைத்தமிழர் என்றுதான் சொல்லவேண்டும்” என்ற கொள்கை உறுதி கொண்ட கட்சிகளில் யார் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தக் கூடும் என்ற ஆவலுடன் எட்டிப்பார்த்தேன்.

“இந்த முள்கம்பி வேலிக்குள் எப்போது ரோஜா பூக்கும்?” என்று ரொம்ப கவித்துவமான ஒரு கேள்வியுடன் விளம்பரத் தட்டி வரவேற்றது. சோறும், தண்ணியும், கழிவறையும் இல்லாமல் சேறும் சகதியும் சூழ்ந்த மண்ணில் பன்றிக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் நிலையை மேற்கண்டவாறு வருணிக்கும் மெல்லிதயம் படைத்தவர்கள் நிச்சயமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினராகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே கால் வைத்தேன்.

அருணன் பேசிக்கொண்டிருந்தார். “மாநில சுயாட்சிதான் தீர்வு என்று நாங்கள் சொன்னபோது சில நண்பர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொன்னார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் மாநில சுயாட்சிதான் தீர்வு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதா, இல்லையா?” என்று முழங்கினார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே மேடையில் உட்கார்ந்திருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். மார்க்சிஸ்டு கட்சியின் இந்தக் கொள்கையை 25 ஆண்டுகளுக்குப்பின் நிரூபித்துக் காட்டியவரே அவர்தானே! ஆனால் ராஜபக்சேயைக் காணோம். தோழர்.என்.ராமையும் காணோம். செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன், அ.சவுந்தரராசன் ஆகியோர்தான் அருணன் பேச்சுக்கு தலையாட்டி ஆமோதிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

“மாநில சுயாட்சியே தராதவன் எப்படி தனி ஈழம் கொடுப்பான்?” என்று தனது அடுத்த கணையை ஏவினார் அருணன். அதானே, குறைந்த பட்சக் கூலியே கொடுக்காத முதலாளி, சோசலிசத்துக்கு எப்படி ஒத்துக் கொள்வான்?

சி.ஐ.டி.யு சவுந்தர்ராஜன் தலையாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த கொள்கை பூர்வமான கேள்வியை தேர்தல் பிரச்சாரத்தின்போது புரட்சித்தலைவியிடம் ஏன் இவர்கள் எழுப்பவில்லை என்பது பற்றி அருணன் ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையை ஊடுருவிப்பார்க்கும் ஆய்வுக் கண் கொண்ட அருணன், நடந்து முடிந்த ஈழப்போர் குறித்த தனது ஆய்வு முடிவை வெளியிட்டார். “ஒரு வேளை புலிகளை ஒழித்து விட்டோம் என்று இந்திய அரசு மகிழ்கிறதோ என்று கூட எனக்கு ஐயம் ஏற்படுகிறது.” அருணன் கண்டுபிடித்துச் சொன்ன இந்த உண்மை இத்தனை நாள் நம்முடைய மண்டைக்கு உரைக்கவில்லையே என்று எண்ணியபோது ரொம்ப கூச்சமாக இருந்தது.

அடுத்து வந்தார் வழக்குரைஞர் செந்தில்நாதன். “சில தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பெரிய துரோகம் செய்கின்றன. இங்கிருந்து இலங்கைக்கு சென்றுவந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் அதை சொர்க்கம் என்கிறார். அவர் நினைத்தால் ராஜபக்சேவுக்கு போன போட்டு பேசுவார்” என்று ஆரம்பித்தார். சரி, இந்து ராமை உண்டு இல்லை என்று பிரித்து மேயப்போகிறார் நம்ம வக்கீல் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். அந்த மேட்டரை அப்படியே விட்டு விட்டு அங்கே இங்கே என்று கொஞ்ச நேரம் போக்கு காட்டினார். பிறகு, திடீரென்று “இந்து போன்ற பத்திரிகைகள் மாற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்து தான் ஏற்கனவே கெட் அப்பை மாற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் போட்டியாக பொம்பளை படமெல்லாம் போட ஆரம்பித்து விட்டதே, இன்னும் என்ன மாறச்சொல்கிறார் செந்தில்நாதன் என்று யோசித்தேன். அப்புறம்தான் விசயம் புரிந்தது. கட்சியின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஜாடையாக இந்து பத்திரிகையை ஒரு குத்து குத்தியிருக்கிறார் செந்தில். மாநிலக்குழு கேட்டால் “இல்லை” என்று நிரூபித்து விடலாம். சக தோழர்களிடம் “பார்ப்பானை ஒரு பிடி பிடித்துவிட்டதாக பெருமையும் பேசிக்கொள்ளலாம்” வக்கீலா கொக்கா?

அப்புறம் ஜெயவர்த்தனா எப்படி ராஜீவ் காந்தியை ஏமாற்றினார் என்று விளக்கினார் செந்தில்நாதன். அடுத்து, ராஜீவ் காந்தி புலிகளை எப்படி ஏமாற்றினார் என்பதையும் விளக்காமலா போய்விடுவார் என்று காத்திருந்தேன். “80 களில் அமைதிப்படை சென்றதைப் போல இப்போதும் இந்தியா அங்கே போகவேண்டும். அதற்கு முழு நியாயமும் உண்டு” என்றார். முல்லைத்தீவில்தான் கடைசி வரை இந்திய இராணுவம் களத்தில் நின்றதே, இவருக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

“இந்தியா தலையிட வேண்டும். அதற்கு கருணாநிதி அழுத்தம் கொடுக்க வேண்டும். கருணாநிதிக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார் செந்தில்நாதன். கூட்டணிக் கட்சித்தலைவி அம்மாவுக்கு அழுத்தம் கொடுப்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. காரியம் நடக்க வேண்டுமென்றால் எங்கே, எவ்வளவு அழுத்த வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிஸ்டுகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

அடுத்து வந்தார் ச. தமிழ்ச்செல்வன். “ஓராண்டாக எங்களை எவ்வளவெல்லாம் அவதூறாகப் பேசினார்கள்? ஆனால் நாங்கள் வார்த்தைகளைப் பார்க்கவில்லை, அந்த உணர்ச்சிகளை மதிக்கிறோம்” என்றார். அடேயப்பா, எப்பேர்ப்பட்ட ஜனநாயகப் பண்பு! நம் காதில் விழும் சொற்கள் உண்மைதானா? காதை கசக்கி விட்டுக் கொண்டேன்.

“நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு கருத்து வேறுபாடுதான். இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மாநில சுயாட்சிதான் நமது தீர்வு” என்று பிரச்சினையின் இதயத்தைத் தொட்டார் தமிழ்ச்செல்வன்.

மாநில சுயாட்சி X சுய நிர்ணய உரிமை போயும் போயும் இந்தச் சின்ன கருத்து வேறுபாட்டுக்காகவா மார்க்சிஸ்டுகளை எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள்? அநியாயம்தான். சிங்குர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இப்படித்தான். ஆலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லா விசயங்களிலும் சிங்குர் விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்டு அரசுக்கும் கருத்தொற்றுமை இருந்த்து. மூணு போகம் விளையும் அந்த ஆயிரம் ஏக்கரை டாட்டாவுக்கு கொடுக்கலாமா, கூடாதா என்ற சின்ன விசயத்தில்தான் அங்கேயும் கருத்து வேறுபாடு. இது சின்ன விசயம் என்பது அந்த முட்டாள் விவசாயிகளுக்கும் புரியவில்லை. இங்கே ஈழத்தமிழ் மக்களுக்கும் புரியவில்லை.

“மே 18 அன்று நடந்த மனித அவலம் துயரம் தருகிறது. அதைவிட துயரம், புலிகளும் மக்களைக் கொன்றார்கள் எனபதை அறிந்த போது ஏற்பட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து யோசிக்கும்போது, அமைப்புகள், அதிகாரங்கள் எல்லாம் மக்களைக் கொல்வதாகத்தான் இருக்கிறது என்கிற விரக்தி ஏற்படுகிறது” என்றார் தமிழ்ச்செல்வன். கட்சி,அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு எழுத்தாளன் இதற்கு மேல் என்ன பேச முடியும்? இலக்கியவாதிகளும், என்.ஜி.ஓக்களும், பின் நவீனத்துவவாதிகளும் யோசிக்கவேண்டும். நந்திக்கிராம், லால்கர் சம்பவங்களின் போதும் இதே மாதிரியான விரக்தி தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத்தான் இப்படி சூசகமாகச் சொல்கிறார் என்பது புரிந்தது. “லால்கர்: சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கிகளில் எப்போது கேப் வெடிக்கும்?” என்ற தலைப்பில் த.மு.எ.ச ஒரு கூட்டம் போட்டிருந்தால் நிச்சயமாக தமிழ்ச்செல்வன் தனது விரக்தியை வெளியிட்டிருப்பார்.

இப்படிப் பேசியதற்காக “கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக” யாரேனும் தலைமைக்கு போட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற ஐயம் தமிழ்ச்செல்வனுக்கு வந்திருக்கும் போலும். மாநில சுயாட்சியில் தொடங்கியவர் மாநில சுயாட்சியிலேயே முடித்துடன், தமிழ் ஈழம் தீர்வல்ல என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தினார். கொள்கை பிறழ்ந்து விட்டதாக யாரும் அவரைக் குற்றம் சாட்டவே முடியாது.

கடைசியாகப் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராசன்தான் ஈழப்பிரச்சினையில் மார்க்சிஸ்டு கட்சியின் வர்க்கப்பார்வையைத் “தெளிவு” படுத்தினார். “அண்டை நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற அடிப்படையில் கூட இந்தியா தலையிடக் கூடாதா? இதனை சீனா பயன்படுத்திக் கொள்ளவோ, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பு தரலாமா? இதையெல்லாம் நாம் பேசவே தேவையில்லை. இது அடிப்படையில் இந்திய முதலாளிகளின் பிரச்சினை. தலையீடு செய்வதற்கு தனக்குள்ள ராஜீய வாய்ப்புகளை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இதைவிட வெளிப்படையாகவும் நேர்மையாகவும் யாராவது பேச முடியுமா? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய முதலாளிகளின் நலனுக்கானதுதான். ஆனால் இந்திய முதலாளி வர்க்கமோ தன்னுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடத் துப்பில்லாமல் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் கோட்டை விடுகிறது. இந்திய முதலாளி வர்க்கத்துக்கு நாம்தான் வேட்டி கட்டி விட வேண்டியிருக்கிறது என்ற தனது குமுறலைப் பதிவு செய்தார் சவுந்தரராசன்.

கருணாநிதியைக் கேலி செய்து பேசியபோது மட்டும் கூட்டத்தினர் கை தட்டி ஆர்ப்பரித்தனர். மார்க்சிஸ்டு கட்சி இன்னமும் திமுக கூட்டணிக்கு மாறவில்லை என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மற்றப்படி த.மு.எ.ச வின் கலை இரவுக் கூட்டத்தில் காணும் களிப்பையும், சலசலப்பையும் இந்தக் கூட்டத்திலும் காண முடிந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

“என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

“அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

“படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

“அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார்.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

 1. வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ கொண்டாட்டம்!!…

  இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். https://www.vinavu.com/2009/08/20/tmaks/trackback/

  • ஏன்னே மாதவராசு யாரு பெரிய்ய கோவகாரராட்டம் போஸ் கொடுத்து போட்டோ போட்டு, நெம்புகோல் அதுஇதுன்னு வசனம் எழுதி, அப்புறம் கொழாயடி சன்டைக்கெல்லாம் நைட்டு ஃபுல்லா யோசிச்சு மனம் தளராதேன்னு பொரட்ச்சிகரமா கடுதாசி எழுவாறே….அவரா?

 2. //மாநில சுயாட்சி X சுய நிர்ணய உரிமை – போயும் போயும் இந்தச் சின்ன கருத்து வேறுபாட்டுக்காகவா மார்க்சிஸ்டுகளை எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள்? அநியாயம்தான். சிங்குர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இப்படித்தான். ஆலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லா விசயங்களிலும் சிங்குர் விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்டு அரசுக்கும் கருத்தொற்றுமை இருந்த்து. மூணு போகம் விளையும் அந்த ஆயிரம் ஏக்கரை டாட்டாவுக்கு கொடுக்கலாமா, கூடாதா என்ற சின்ன விசயத்தில்தான் அங்கேயும் கருத்து வேறுபாடு. இது சின்ன விசயம் என்பது அந்த முட்டாள் விவசாயிகளுக்கும் புரியவில்லை. இங்கே ஈழத்தமிழ் மக்களுக்கும் புரியவில்லை. //

  //கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

  “என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

  “அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

  “படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

  “அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

  “அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார்.//

  🙂 நல்ல எள்ளல்!

 3. வழக்கம் போல உங்கள் கோ.க.மு.க வேலையைக் காட்டியுள்ளீர்கள். கூட்டம் முடிஞ்சு இவர் வந்தாராம். ஒரு தோழரைப் பாத்துப் பேசினாராம். இவர் அவரை மடக்கி விட்டாராம். ஆஹா… என்ன சுவாரஸ்யமா எழுதுறீங்கப்பா…

  இதுவரை இலங்கைத் தமிழர்கள் என்றால் அது விடுதலைப்புலிகள்தான். மாற்று இயக்கமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டித் திரிந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மட்டுமே இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் பேச லாயக்கு என்ற பாசிசக் கருத்தை பலரும் திணித்து வந்தார்கள். நீண்ட காலம் கழித்து இப்போதுதான் தமிழ் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தைகளாக அவை மாறியுள்ளன.

  இலங்கைப் பிரச்சனையை பல கட்சிகளும் புழக்கடையில் போட்டுவிட்டன. ஆனால் அந்தக்கட்சிகள் பேசிய பேச்சுகள் கொஞ்சமா நஞ்சமா…?? விடுதலைப்புலிகளின் உத்தி பலன் தராது என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் மீதுதான் எவ்வளவு ஏச்சுகள்… பேச்சுகள்… மார்க்சிஸ்ட் கட்சி கூறியது உண்மையானதால்தான் தைரியமாக தீர்வு என்ன என்பதை இன்னும் முன்வைக்க முடிகிறது. இதைத்தான் இலங்கை அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.

  ராணுவத்தீர்வு என்பதற்கு சாத்தியமில்லை என்பதுதான் அது. விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டோம் என்று ஹாயாக உட்கார்ந்து கொள்ளாதீர்கள். தமிழர்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுக்காமல் முழுத்தீர்வு கிடைக்காது என்று தெளிவாகக்கூறுகிறது. இதற்கு ராஜபக்சே செவிமடுக்காவிட்டால் இவர்கள் கண்ட தற்காலிக வெற்றியும் நிலைக்காது. ஆப்கானிஸ்தானில் இறங்கி கொலை வெறியாட்டம் போட்டபோது அமெரிக்காவுக்கு எதிராக எழுந்த குரல்களுக்கு புஷ் சொன்ன பதில் இதுதான். நீங்கள் எங்களோடு இல்லையென்றால், அவர்களோடுதான் இருக்கிறீர்கள்.

  ஒன்று விடுதலைப்புலிகள் அல்லது ராஜபக்சே. இரண்டில் எந்தப்பக்கம் என்பதோடு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்.

  • அடேங்கப்பாஆஆஆஆ தீக்கதிர் உதவி ஆசிரியர் பிண்ணி பெடலெடுக்கறாரே..

   // அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்// என்னா தீப்பொறி பறக்கும் வரிகள்ள்ள்ள்ள்ள்… கடவுளே இந்த நார்சிஸ்டு கட்சியை நீதாம்பா காப்பாத்தனும்…sigh

  • ///தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ///

   அண்ணா என்னா சொல்றார்… ஈழம்னு சொன்னாலே அபச்சாரம்னு கூப்பாடு போடறார்.. அமைதின்னு பொத்தாம் பொதுவா சொன்னா…அது என்ன ஏசு ஜீவிக்கிறார்னோ, சாமி பாத்தப்பார்ன்னோ பாப்பான் பேசறத போலவா…? ஏன் சுத்தி வளைக்கணும்… இந்திய முதலாளி வர்க்கதின் முகம் கோணாமல் என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுகன்னு பளிச்சு சொல்லாம.. எங்காத்துக்காராரும் கச்சேரிக்குப் போறார்னு கூட்டம் போட்டு மாநாடு போட்டு.. சேச்சே….டயம் வேஸ்டு சாரே

  • //ஒன்று விடுதலைப்புலிகள் அல்லது ராஜபக்சே. இரண்டில் எந்தப்பக்கம் என்பதோடு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்//

   எந்த பக்கமும் அல்ல. எங்குமே நிற்கவில்லை. சும்மா இருந்து விட்டீர்கள் !
   பொது இடங்களில் கேட்டா மட்டும் சிலர் “ஆதவன் தீட்சண்யா” போல் உளறி கொட்டினீர்கள் !

  • நமது மார்க்ஸிஸ்ட் கட்சியினரை பற்றி ஒரு நகைச்சுவை சொல்வார்கள். அதாவது, இன்று மாலை ஏதாவது ஒரு ஊரில் ரோடு போடப்போவதாக அறிவிப்பு வெளியானால் அன்று காலை ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுநாள் காலை யெங்களின் போராட்டம் வெற்றி என்று போஸ்டர்கள் ஒட்டுவார்களாம். அது போல புலிகளை பாஸிஸ்டுகள் யென்று ஆரம்பம் முதலே விமரிசனம் செய்து, ஈழப்போராட்டம் திசைதிரும்பியதை சுட்டிக்காட்டியது நக்ஸல்பாரிகள்ட தான். ஆனால் இப்போது அதற்கு உரிமை கொண்டாட மட்டும் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் வந்துவிட்டனர்……… இவங்களுக்கு இதே வேலையா போச்சு…

 4. Koduppatharkku singalavanukku immi alavum manam illai, appuram enna maanila suyaatchi, thani eelaam? Tamil makkal thuyaram maranthu, ungalin kolkai ventrathu enru santhosam ponkum neengala makkalin kaavalarkal?

 5. //. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்.//

  அமெரிக்க் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அகில இந்திய அளவில் போர் எதிர்ப்பு போராட்டம் நடத்திய சிபிஎம் என்ற டாடாயிஸ்டு கட்சி, ஈழப் பிரச்சினையில் அப்படி எதுவும் செய்ய வில்லைஎயெ ஏன்?

  ஏன் இந்த பாராபட்சம்…?

 6. ஞானத்தை தேடி திருமலை
  பழனி,சபரிமலை
  கோயில்
  கோயிலாய் அலைவோரே
  கோடிகோடியாய் கோட்டினாலும்
  சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
  சீபீஎம் உறுப்பினர் சீடு….

  வர்க்கமென்ன வர்க்கம்
  வாடத முகமுண்டு
  யாரையும் வளைக்கும் திறனுண்டு
  அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
  நரியை பரியாக்கியவன்
  சிவனெனில் யானையை
  எறும்பாக மாற்ற மந்திரம்
  ஓதிக்கொண்டிருக்கிறார்
  தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….

  சாதுகடவுளென நினைத்தயோ
  அற்பனே நக்சல் பரி
  நந்திகிராம்,காரப்பட்டென
  தேவையெனில் ஆங்கார தரிசனமும்
  உண்டு
  சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
  சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
  பூசாரி வந்தாலும்
  மாறாத துரோகத்துக்கு
  காரணம் கண்டறிந்தாயோ
  புழுவே அதுதான் பிரம்மம்
  பரப்பிரம்மம்
  இன்னும் புரியவில்லையா
  புரியும் படி
  செப்புகின்றேன் அதுதான்
  சீபீஎம்

  http://kalagam.wordpress.com/2009/01/04/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/

 7. குகராத்தில் முசுலிம்கள் கொத்து கொத்தாக இந்து மதவெறி கும்பலால் கொல்லப்பட்ட போது சி.பி.எம். கட்சியினர் மக்கள் ஒற்றுமை மாநாடு என்று அரங்குகளில் பாதுகாப்பு தேடினர். காங்கிரசுக்கு மதவெறியை கட்டுப்படுத்த புத்தி சொல்லிக் கொண்டிருந்தனர். தங்கள் மாநிலங்களில் RSSஐ கட்டுப்படுத்தியிருப்பதாக மார் தட்டிக் கொண்டனர். ஈழத்தில் இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் கருணாநிதியை விஞ்சும் மவுனத்தைக் கடைப்பிடித்து விட்டு இப்போது திடீர் அக்கறை வந்ததற்கான காரணத்தை ஒரு வரியிலாவது — தள்ளுபடி விளம்பரத்தின் கிழே இருக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளை’ சைசிலாவது த.மு.ஏ.ச சொல்லியிருக்கலாம். ஈழம் தொடர்பாக தா. பாண்டியன் நிலைப்பாட்டையே கேலி செய்தவர் CPMன் மாநிலக் செயலாளர் வரதராசன். ஈழப் பிரச்சினையில் அதிக ஆர்வம் கொள்ளுவது இனவாதிகளுடன் தம்மை அடையாளப்படுத்தும் என்று அடக்கி வாசிக்கும சர்வ தேசியக் கொள்கையை எடுத்தது CPM. இப்போது த.மு.எ.ச கூட்டம் கட்சியின் கொள்கையை மீறுவதாக ஆகாதா என்ற கேள்விக்கு பதிலை இங்கு பின்னூட்டம் இடும் CPM நண்பர்கள் யாரேனும் சொன்னால் நல்லது.

  • ஏதோ உங்க கும்பல் வீச்சரிவாளோட களத்துல குதிச்ச மாதிரில சிபிஎம்மக் குறை சொல்றீங்க… அதெல்லாம் சரி… போலி சுக்தேவ் அவர்களே… நீங்களாவது இலங்கைக்குப்போய் எங்களுக்கெல்லாம் புத்தி வர்ற மாதிரி செஞ்சு காமிங்களேன்…

   நீங்களாக சொல்லிக்கொள்வதா, மார்க்சிஸ்ட் கட்சியினர் மவுனம் சாதித்ததாக… உங்களுக்கும், ராஜபக்சேவுக்கும் பிடிக்காத விஷயங்களைப் பேசினோம். அவ்வளவுதான். இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி பேசுகிறது. அதனால்தான் எரிச்சல்பட வேண்டியவர்களுக்கு இயல்பாகவே எரிகிறது. இதில் கொள்கை மீறல் ஒன்றும் கிடையாது.

   • ஏனுங்க கணேஷ், கூட்டணி எல்லாம் தேர்தல் சமயத்துல மட்டும்தானுங்களா… இப்போ அம்மாவுக்கு ஒத்தாசை ஏதும் பண்றது இல்லீங்களா?

   • வாங்க கணேஷ்,வினாயகர் சதூர்த்தி பிஸியில இருப்பீங்க, இருந்தும் நேரம் ஒதுக்கி தானே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததற்கு மிக்க நன்றி!

    தயவு செய்து மார்க்ஸிஸ்டு கட்சியின் ஈழம் குறித்த நிலைப்பாடு, மற்றும் அங்கு எப்படி புரட்சி செய்வது அல்லது எப்படிப்பட்ட போராட்டம் செய்வது ஈழத்தின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம் என்பதை கோர்வையாக கணேஷ் விளக்கினால் விவாதம் செய்ய வசதியாக இருக்கும்.

    உதவி ஆசிரியரிடம் கற்றூக்கொள்ள நிறையவே இருக்கிறது.

   • சந்தர்ப்பவாதத்தின் கவசம் வசை. கணேஷுக்கு வேறு வழிமுறை என்ன இருக்க முடியும். 60 MP க்களை வைத்து தொடையைத் தட்டிக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை. ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்ற கும்பலிடம் அரசியல் நாணயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.

   • கொள்கை…..? ஏங்க கனேஷ்…? நீங்க மார்க்ஸிஸ்ட்தானே..? அப்புறம் யென் கொள்கை அது இது என்று பினாத்துகிறீர்.

  • சுகதெவ் உன் பெயருக்கும் விவாதத்திற்கும் சம்பந்தமே இல்லை. தயவு செய்து பெயரை மாற்றிக் கொள். மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி தவறாகப் பேசுபவன் மடையன் என்பது என் கருத்து. களத்தில் மக்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சந்தித்துப் போராடுபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். உங்களைப் போல் வெட்டி விவாதம் செய்பவர்கள் அல்ல. உண்மையான போராளியாக இருந்தால் களத்தில் இறங்கி போராடு கம்யூட்டர் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பிதற்றலாம் என்ற முடிவுக்கு வராதே. பெண்ணை ஒருவன் கற்பழிக்கும் போது அவளை காப்பாற்றாமல் பெண் விடுதலை பற்றி கவிதை எழுதும் கவிஞனும் நீயும் ஒன்றுதான்.
   இப்படிக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்

   • அம்மா பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!….? பெயரை மாற்றிக் கொல்ள வேண்டியது சுகதேவ் அல்ல. மாறாக நீங்கள் தான்… பார்ப்பன பாரதியின் புதுமைப் பெண் யென்பவள் பார்ப்பன இந்து தேசத்திற்கு வீரதிருமகனை(மகளை அல்ல)பெற்றுக்கொடுப்பதும், கணவர்களை பராமரிப்பதும் தானேயொழியே…. வேறு புரட்சி ஏதும் இருந்ததாக தெரியவில்லை….. எதற்கும் பாரதி பற்றிய நூல்களை சிரத்தையுடன் படிப்பது நல்லது….. குறிப்பாக அவரின் கட்டுரைகளை.

 8. கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தை தங்கள் பதிவு தீர்த்துவிட்டது.

  என்ன ஒரு வருத்தம்! உங்க பதிவு டிரைய்லர். போயிருந்தா… முழு நீள படம் பார்த்திருக்கலாம்.

 9. ஏன் ஈழத்தமிழர்கள் மேல் திடீர்ப்பாசம் இவர்களுக்கு? ஈழத்தமிழனின் பிரச்சனை என்னவென்றே தெரியாமல் ஈழப்பிரச்சனைக்கு தீர்வும் சொல்லும், புலிகளை விமர்சனம் செய்யும் இதுபோன்ற கூட்டத்தின் இம்சை தாங்க முடியவில்லை.

 10. ellaludan kalanthukaddi saakadiththirukkireerkal.ippadi oru ezhuththu padiththu neenda naadkalaayitru.yaarenre theriyaamalirukkum kadsikal ellaam eezhaththaarukku iranga vanthu viddaarkal.thodarnthu ippadiyaana methaavilaasangalai muriyadiyungal…vaazhththukkal..-raavan rajhkumar.

 11. THE MAKAAL KALAI ILAKIYA KAZHAGM is a ISO 9000:2009 Communist Part.. Rest of All parties are DUPLICATE.. this was cerified by MR.MARUTHIYAN, Scientist, International Standerd Certificate For Communist Parties ..
  SPECIAL NOTE:-1. They are very expect in MAAN KARATE..

  2. THEY ARE STILL FIGHT WITH POSTER AND NOTICES ..

  3. THEY WERE NEVER MADE ANY AGITATION AGAIST CAPITALIST, BECAUSE THEY ARE SPONSERS OF THEM.

   • அண்ணே கணேசு அண்ணே… நீங்கதான் எந்த வேசம் போட்டாலும் ரத்த கவிச்சி காட்டி குடுக்குதே ஆள்காட்டின்னு… அடுத்த தபா ஹிட்லர் வேசம் போடுங்க make up இல்லாம வரலாம்…

  • போலிகம்யூனிஸ்ட் நீங்கள் ஒரு டம்மி பீஸ்‍‍‍னு நினைக்கிறேன். என் கணிப்பு சரிதானே……?

 12. இந்த கம்ம்யூனிஷ்டுகளை பார்க்கும் போது முதலாளிகளே பரவாயில்லை, நெஞ்சிலே குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

 13. 🙂

  நானும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தேன். உங்கள் பதிவைப் படித்ததும் நடந்த நிகழ்வின் பரிணாமமே மாறிவிட்டது 🙂

  உங்களது எள்ளல் மற்றும் திட்டல் நடை எனக்கு எப்பவுமே உவப்பானது!

 14. அதுதான் எல்லாம் சிரி்ப்பாச் சிரிச்சுப் போச்சே..:( நீங்களும் சிரிக்க வைக்கிறீர்கள்… இது வேறு சிரிப்பு:) இந்தக் குத்தல், எள்ளல், நக்கல், நையாண்டி எல்லாம் பார்த்துத்தான் மனசு ஆறவேண்டியிருக்கு.

 15. சபாஷ் சரியான போட்டி. போர் தொடருட்டும். உங்க கும்பலின் வண்டவாளங்கள் வெளியே வரட்டும்.

  பொரட்சி ஓங்குக. வாழ்க கம்யுனிசம்.

 16. பகத் அவர்களுக்கு, சும்மா ஒப்புக்கு வர்றது… ஒரு கேள்வியப் போட்டுட்டு, பக்கத்துல உங்கள மாதிரியே வேலை வெட்டி இல்லாம உக்காந்துக்குட்டு இருக்குறவருகிட்ட பாரு… இப்ப அந்த கணேசு மூளையக் கசக்கிட்டு இருப்பான்னு கமெண்டு அடிக்குறது… முதல்ல போய் உங்க மகஇக ஆட்களுக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணுங்க…

  கலகம் அவர்களுக்கு – பரவாயில்லையே… கலகம்தான் பண்ணப்போறீங்களோன்னு நெனச்சேன்… முருகர் ரசிகர் போலருக்கு… எப்பவும் விநாயகர் நினைப்பா இருக்கீங்க… கலகம்னா ஏதோ புரட்சியத்தான் சொல்றீங்கன்னு தப்பா நெனச்சுட்டேன். மன்னிச்சுக்கோங்க…

  1. தனி ஈழம் தேவையில்லை.

  2. தமிழ்-சிங்களப் பாட்டாளிகள் இணைஞ்சுதான் புரட்சி.

  3. தற்போதைய நிலையில், இனரீதியாக பாகுபாடு இல்லாத சம உரிமைகளைக் கொண்ட அணுகுமுறைக்காகப் போராடுவது.

  அது சரி… இப்புடி எத்தனை பேரு கேள்வி கேட்டே பொழப்பு நடத்துறதுன்னு கௌம்பியிருக்கீங்க…

  நான் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை… அனுபவமே பாடம் நடத்தும். நன்றி…

  • pls pls
   pls pls
   pls pls
   pls pls
   அங்கு எப்படி புரட்சி செய்வது அல்லது எப்படிப்பட்ட போராட்டம் செய்வது ஈழத்தின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?

  • ஆமா இங்கு நீங்கள் புரட்சி செய்வது போலவே ஈழத்திலும் புரட்சி செய்ய வேண்டுமா?
   சிங்கள பாட்டாளிகளும் தமிழர்களும் இணைந்து புரட்சி செய்ய் வேண்டுமா ரொம்ப நல்ல விசயம். மார்க்சிஸ்டுக்குள்ள இப்படி ஒரு நல்ல மனுசன் இருக்குறது தெரியாமப்போச்சே 🙂

   • கேள்விய மட்டும் கேக்குறோம்ன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க, நீங்க மட்டும் சட்ட மண்றத்துலயும் நாடாளுமன்றத்துலயும் கேள்வியா கேக்குறீயளே யாராச்சு தப்பு சொன்னாகளா? அட சொல்லுங்க 😎 :poke:

  • தனி ஈழம் தேவை,இல்லை தேவையில்லை.

   தமிழ்-சிங்களப் பாட்டாளிகள் இணைஞ்சுதான் புரட்சி.
   இல்லை புரட்சியும் இல்லை
   மாநில சுயாட்சி தான் தீர்வு என்று இதைப்பற்றியெல்லாம்
   ஆருடம் சொல்வதற்கு முதலில் நீங்கள் யார் ?

   இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

 17. தீக்கதிர் சார்ப்பாகவும் தீக்கதிரின் தரத்திலும் எழுதிக் கலக்கும் கணேஷ் அவர்களே!

  ஈழம் சம்பந்தமாகவும் ஜெயா மாமியோடு கூட்டணி கட்டி நீங்கள் ஓட்டுப் பொறுக்கியதற்காகவும் மட்டுமே உங்கள் கட்சியின் நேர்மையான அணிகள் பலர் காறி உமிழ்ந்துவிட்டு வெளியேறியது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு விசயங்களும் கீழ் மட்டத்தில் கடுமையான அதிருப்தியைச் சம்பாதிக்கத் தொடங்கியதுமே ‘மார்க்சிய வகுப்பு’ எனும் பேரில் ஈழ (மன்னிக்கவும்) இலங்கைத் தமிழர் மீதான சி.பி.எம்.மின் நிலைப்பாட்டிற்காகவும் ஜெயாமாமியுடன் கொல்லைப்புறக் கூட்டு வைத்ததற்காகவும் சப்பைக்கட்டு கட்டினீர்கள். அதனுடைய பலனை தேர்தல் தோல்வி முடிவுகளின் மூலம் அறிந்து கொண்டீர்கள். போகட்டும்.

  ’இலங்கைத் தமிழர்’ களுக்காக நீங்கள் வடிக்கும் கண்ணீர் ஒரு புறமிருக்கட்டும். கடந்த அக்டோபர் அல்லது நவம்பர்’2008 -ல் ‘ஹிந்து’ பத்திரிக்கையின் மாலினி பார்த்தசாரதி எழுதிய ஈழ மக்கள் மீதான அவதூறுக் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையிலும் அதனைத் தொடர்ந்து ஈரோட்டிலும் போராட்டம் நடத்தினார்கள். ‘’இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக ராஜபக்‌ஷே போர் நடத்துகிறார்’’ என்றும் ‘’ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கே (தமிழகத்தில்) பேசுபவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள்தான்’’ என்றும் மாலினி தனது பத்திரிக்கையில் எழுதியிருந்தாரே அதைக் கண்டித்துதான் பெ.தி.க. வின் போராட்டம் இருந்தது.

  ஆனால், உங்கள் தீக்கதிர் அப்போது என்ன செய்தது தெரியுமா? மாலினி பார்த்தசாரதி எழுதியது அவதூறு என்று கூட சொல்லியிருக்கத் தேவையில்லை ‘’அது ஏற்புடையதில்லை’’ என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா? அப்படியா தீக்கதிர் எழுதியது? மாலினி பார்த்தசாரதி மாமிக்கும் ‘ஹிந்து’ கும்பலுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடுமையாக விமர்சித்து இரண்டுநாட்கள் தொடர்ந்து தலையங்கமே எழுதியது தீக்கதிர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

  இது ’மார்க்சிஸ்ட்’ இயக்கத்தின் ஈழப் புரட்டுகளுக்கு ஒரு சோற்றுப் பதம். நீங்கள் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு சொல்வது ஒருபுறமிருக்கட்டும் இங்கே காஷ்மீரத்து பிரச்சினைக்கும் அஸ்ஸாமுக்கும், இன்னபிற இந்தியாவிற்குள்ளான தேசிய இனச் சிக்கல்களுக்கும் உங்களுடைய பதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பதில்தானேயொழிய, சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் மார்க்சிய-லெனினிய முறையிலான தீர்வை நீங்கள் எங்கும் எப்போதும் வலியுறுத்தியதே கிடையாது.

  இந்திய தேசிய சிக்கலுக்கு ஒரு நேர்மையான, நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு பிறகு அந்நிய தேச சிக்கலுக்கு தீர்வு சொல்ல வாருங்கள்.

  ஏகலைவன்

  • ////////இந்திய தேசிய சிக்கலுக்கு ஒரு நேர்மையான, நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு பிறகு அந்நிய தேச சிக்கலுக்கு தீர்வு சொல்ல வாருங்கள்.////////

   இதற்கும் பதில் தெரியவில்லையா கணேஷ்?!

  • மதிப்பிற்குரிய, மரியாதை கொடுக்கமுடியாத ஏகலைவனே. தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் பாதிக்கப்படும் போதும், சாதியின் பெயரால் ஒதுக்கப்படும் போதும் ஏகலைவன் போன்றவர்கள் எங்கே போனீர்கள்? அவனை அடிமை என்று ஒதுக்கித் தள்ளும் போதும் அவர்களுக்காகவும் அனைத்துத் தமிழனுக்காகவும் குரல் கொடுத்து களம் கண்டு போராடியது மார்க்சிஸ்டுகள் மட்டுமே.
   ஏகலைவன் போன்றவர்கள் இங்கு பாதிக்கப்படக் கூடிய தமிழர்களை பார்த்ததில்லை போல. ஏகலைவனே இங்குள்ள இலங்கைத் தமிழர்களின் அகதிகள் முகாம்களில் போய் பார் அவர்கள் படும் துயரை, அதனை துடைக்கப்போராடுவது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மார்க்சிஸ்டுகளும் தான். களத்தில் போய் பார் உனக்கு உண்மை புரியும்.

   • //தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் பாதிக்கப்படும் போதும், சாதியின் பெயரால் ஒதுக்கப்படும் போதும் ஏகலைவன் போன்றவர்கள் எங்கே போனீர்கள்?\\ ஜோதிபாசுவின் பேரனுக்கு பூணூல் கலியாணம் நடத்தும் போது எங்கே போனீர்களோ அங்கே தான் தோழரெ…………………………..

 18. //ஆனால், உங்கள் தீக்கதிர் அப்போது என்ன செய்தது தெரியுமா? மாலினி பார்த்தசாரதி எழுதியது அவதூறு என்று கூட சொல்லியிருக்கத் தேவையில்லை ‘’அது ஏற்புடையதில்லை’’ என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா? அப்படியா தீக்கதிர் எழுதியது? மாலினி பார்த்தசாரதி மாமிக்கும் ‘ஹிந்து’ கும்பலுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடுமையாக விமர்சித்து இரண்டுநாட்கள் தொடர்ந்து தலையங்கமே எழுதியது தீக்கதிர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை//

  தோழர் கணேஷ் இது உண்மையா? நீங்கள் என்னை போன்றவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்

   • இந்தக்கேள்விக்குதான் நான் பதில் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று வெளியான அந்தத் தலையங்கத்தை திரும்பவும் படித்தால் இது பொய்யான குற்றச்சாட்டு என்பது புரியும். கருத்துரிமைக்கு மதிப்பு தர வேண்டும் என்பதுதான் அந்தத் தலையங்கத்தின் மையக்கருத்து. எப்.எம்.உசேன் மீது பாஜக கும்பல் தாக்குதல் நடத்துவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்…??

 19. நண்பர்களே!
  இந்தக் கட்டுரை படித்ததில் என்று ஒன்றுமட்டும் புலப்படுகிறது. செய்யாத பாவத்திற்கு சிபிஎம்-காரர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். யாணை இளச்சிடுச்சினு காக்கா மேல ஏறி உட்கார்ந்த கதையாக இருக்கு உங்கள் விமர்சனம். தமிழகத்தில் ஈழத் தமிழர் என்ற பெயரால் நடக்கும் அட்டூழியங்களை பார்க்கும்போதும், உலக நிலைமைகளை கவனிக்கும் போதும் சிபிஎம் காரர்கள் சொல்லும் கருத்துதான் சரியானது என்று படுகிறது. இன்றைய தினமணி நடுபக்க கட்டுரையை படிக்கவும்.

  • நண்பர் கவாஸ்கர் அவர்களே!

   உங்களைப் போன்ற அப்பாவிகள் இருக்கும் வரை சி.பி.எம். கட்சியின் மக்கள் விரோத செயல்களை ஒன்றும் செய்துவிட முடியாது. தமுஎச என்கிற பெயரில் நடத்தப்படும் மனமகிழ் மன்றம் நடத்திய கூட்டத்தின் கேவலங்களை இக்கட்டுரை பட்டியலிட்டுள்ளது. இதற்கு ஒரு பதிலை நீங்கள் நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.

   ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக உங்கள் கட்சி கடைபிடித்துவருகின்ற நிலைப்பாடுகளை உங்கள் தீக்கதிரிலிருந்தும், சந்திப்பின் வலைதளத்திலிருந்தும் ஆதரங்களாக இங்கே தொகுத்திருக்கிறார்கள் தோழர்கள். இவ்வளவையும் பார்த்த பிறகும் சி.பி.எம்.மிற்காக பரிதாபபடுகிறீர்கள் என்றால் இதனை என்னவென்பது. உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள் நீங்கள்தான் நண்பரே!

 20. //கடைசியாகப் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராசன்தான் ஈழப்பிரச்சினையில் மார்க்சிஸ்டு கட்சியின் வர்க்கப்பார்வையைத் “தெளிவு” படுத்தினார். “அண்டை நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற அடிப்படையில் கூட இந்தியா தலையிடக் கூடாதா? இதனை சீனா பயன்படுத்திக் கொள்ளவோ, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பு தரலாமா? இதையெல்லாம் நாம் பேசவே தேவையில்லை. இது அடிப்படையில் இந்திய முதலாளிகளின் பிரச்சினை. தலையீடு செய்வதற்கு தனக்குள்ள ராஜீய வாய்ப்புகளை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார். //
  இதைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

  இவ்வளவு பச்சையாக ஏகாதிபத்திய வேலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை சொல்கிறதே!

  • ///////////இவ்வளவு பச்சையாக ஏகாதிபத்திய வேலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை சொல்கிறதே!///////

   இக்கருத்தை மறுக்காமல் நீங்களெல்லாம் மவுனம் சாதிப்பது இவ்விமர்சனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். அதற்காக சி.பி.எம். நண்பர்களுக்கு எமது நன்றி!