Friday, June 2, 2023
முகப்புகலைகவிதைதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

-

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

ஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் அழகிரிக்கு நடுவிலேயும் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப் படம் பிளக்ஸ் பேனர்களில் பளபளக்க அவரின் நினைவு நாள் முளைப்பாரி, பால்குடம், வேல்குத்துதல், மொட்டையடித்தல் போன்ற சடங்குகளுடன் ஒடுக்கப்படுவோரின் விழாவாகவும் கோலகாலமாகவும் கடந்த மூன்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத்  தொடங்கினார்.

அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில்  தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.

இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர்.  இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது.  ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா? தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை   உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள்களாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து  தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

“நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும்  நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ?

இமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.

ஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால்  ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன்  என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது.  இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

தான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம்  செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா?

திருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.

சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.

அம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா? ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்

இவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா?  அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க  முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.

ஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம்  விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.

ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.

போலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான  சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.

ஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.

ஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா! முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது!  பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.

அதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.

தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.

ஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DECORAM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.

சாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம்? இது ஜனநாயக அரசாங்கமா? அல்லது மனு தர்ம அரசாங்கமா? இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.

பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே.  ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எடுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.

-கட்டுரையாளர்கள் தோழர்கள் சாகித், ஆனந்த்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

  1. தேவர்சாதி வெறிக்கெதிராய் தலித் மக்களின் போராட்டம்!…

    தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்! https://www.vinavu.com/2009/09/18/emmanuel-sekaran/trackback/

  2. அவசியமான அருமையான செய்தி தொகுப்பு. வாழ்த்துக்கள் தோழர் சாகித், ஆனந்த்.

    • அருமை உங்கலை போன்ரோர்கல் இருக்கும் வரை ஜாதி என்பது எப்பொலுதும் அழியாது. இந்த கட்டுரையை எலுதியவரே ஒரு ஜாதி வெரியர் என்ரு சொல்லலாம். யேன் யென்ரால் இரந்த வர்கலை பட்ரி அவதூரு பரப்புவது என்பதெ ஒரு அனகரிகமன செயல். இந்த கட்டுரையால் பல்வெரு ஜாதி வக்குவதந்தான் அதிகம். இதை புரிந்து கொல்லாத மன்னிக்கவும் முட்டல்கல் இருக்கும் வரை இதை பொன்ரு யார் கட்டுரை எலுதினலும் அதர்கு ஆதரவும் எதிப்பும் உன்டாகும். ஒருவர் ஒரு பொய்யை உரக்க சொன்னால் அது உன்மை ஆகது. தனக்கு என்ரு சுயநினைவு இல்லாதவர் யார் என்ன சொன்னாலும் எட்ரு கொல்வர்கல். யெப்பலுதும் யெசித்து செயல் படுங்கல். ஒட்ருமை யென்பது ஒருநால் உன்டாகும் . இந்த கட்டுரையை எலுதியவர்கு ஒரு வென்டுகொல் இதைனீக்கி விடுங்கல் இதை வைத்துநீஙகல் ஒரு பிலவைதான் உன்டக்குகிரீர்கல் ஒட்ருமையை அல்ல. என்னுடய எழுத்து பிழைகலை மன்னிக்கவும் ” வீரமற்ற விவேகம் கோழைத்தனம் விவேகம் அற்ற வீரம் முரட்டுத்தனம் ” மறத்தமிழன் N.K.பாலா

  3. தென் மாவட்டங்களில் நடக்கும் உண்மைகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருக்கும் கட்டுரையாளர்களுக்கு நன்றி. இது போன்ற கட்டுரைகள் வினவில் அடிக்கடி வரவேண்டும்.

  4. வினவு குழுவினருக்கு,

    இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை பற்றி அதிகம் தெரியாத எனக்கு இந்த பதிவு ஓரளவு விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி!

    இ. சேகரன் கொலைக்கு ஏதாவது வழக்கு போடப்பட்டதா? என்ன ஆயிற்று?

    காமராஜர் காலத்தில் நடந்த துப்பாக்கி சூடு என்றால் ஒரு ஐம்பது வருஷம் ஆகி இருக்கும். அதற்கு போன வருஷம் பி.டி. குமார் பழி வாங்க திட்டமிட்டாரா? என்ன ஒன்றும் புரியவில்லையே?

    நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா? இல்லை ஆதாரமே கிடையாதா?

    • பி.டி.குமார் தூவல் கிராமத்தில் ஐவர் கொலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தேவர் குரு பூசைக்குச் செல்லும்போது, தாழ்த்திவைக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதியான கீழக்கன்னிச்சேரி வழியாக தேவர் குரு பூசைக்குச் செல்லுபவர்களுக்கு தடையிருந்தும் அவ்வழியாகச் சென்றான். காவல் துறையினரும் தடுக்கவில்லை.

    • அறிவுஜீவி நிலையில் ஆர்வி எந்த வகையினைச்சார்ந்தவர் என்பது புரியவில்லை. படித்த பட்டம் பெற்று உயர் நிலையில் உள்ள நிறுவனமொன்றில் கைநிறைய சம்பளம் வாங்கும் தொழிலாளியாக அல்லது உயர் தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றை நடத்துபவராக பார்பனீயம், முதலாளித்துவம், தொழிலாளி, வாழக்கையின் கஷ்டம், சமூக நடைமுறைகள் ஏதும் அறியாது நகரங்களில் வாழும் “பொதுவான நல்லவர்கள்”, இந்த சமூகமே தன்னைப்போல் தான் வாழ்வதாகவும் என்னைப் போல் சிலர்தான் பிரச்சனையைக் கிளப்பி சமூகத்தை கெடுப்பதாக நினைக்கின்றனர். ஆர்வியும் இந்த வகையைச் சார்ந்தவரா? அல்லது எடக்கு மடக்கான கேள்விகளை எழுப்பி பலரும் சந்தேகமற்று புரிந்து கொள்ளச் செய்வோம் என்று நினைப்பவரா? அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாமல் கேள்விகளை எழுப்புகிறாரா என்பது புரியவில்லை.

      அவரது “கூட்டாஞ்சோறு” -ல் பார்பனீயம் என்று சொல்லுவதே தவறு என்ற கருத்துக்கு எரிஞ்சியூர் பண்ணையார் கோபாலக் கிருஷ்ணனின் தீவைப்பு சம்பவத்தை எடுத்துக்காட்டு தந்தபோது அந்த எடுத்துக்காட்டுக்குள் பதில் தராமல் கருணாநிதியின் அரசை கவிழ்க்க நான்கு பேர் கூடி சதி செய்தால் அதனை பார்பனீயத்தின் சதி என்று கூறுவதா என்று வேறு கேள்விக்கு தாவிவிட்டார். அப்பொழுது, இது ஒரு அரை லுசு போல (தவராக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதைச் சொல்லியுள்ளேன்) என்று தொடராமல் விட்டுவிட்டேன். எமது கட்டுரைக்கு 50 ஆண்டுகளுக்குப்பின் பழிக்கப் பழி சபதமா என்ற கேள்வி அப்பாவித்தனமாக தெரிவதால் முந்தையதற்கும் இக் கேள்விக்கும் பதில் எழுதியுள்ளேன்.

      கருணாநிதியின் அரசை “சூத்திரன் ஆளக்கூடாது” என்ற அடிப்படையில் பார்பனரல்லாத வேறு உயர் சாதியினரால் சதி செய்யப்பட்டாலும் அது பார்பனீயச் சதி என்றுதான் பொருளாகும். ஏனெனில் சூத்திரன் நாடாளக்கூடாது என்பது மனு தர்மம்(சட்டம்). அதனை நிலை நிறுத்த செய்யப்பட்ட சதி இது. எனவே இது பார்பனீயச் சதியாகும். மாறாக ஜெயலலிதா, இராமதாசு மற்றும் திருமாவளனுடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரம் மற்றும் பொருளாதாரச் சுருட்டலுக்காக சதி செய்தால் அதனை எவரும் பார்பனீயச் சதி என்று கூறமாட்டார்கள். அதுவே ஜெயலலிதா சங்கராச்சாரியார் மற்றும் துக்ளக் சோவுடன் சதி செய்து கவிழ்க்க முயற்சி செய்தால் அதனை பார்பனீயச் சதி என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது? ஜெயலலிதா சங்கராச்சாரியார் மற்றும் துக்ளக் சோவுடன் சதி செய்து சதியை மறைக்க இராமதாசுவையும் திருமாவையும் இணைத்துக் கொண்டாலும் பார்பனீயச் சதி தான். இவை எடுத்துக்காட்டுக்களுக்காக மட்டும் தரப்பட்டாலும் அரசியலில் பார்பனீயச் சதி என்பது மறுக்க முடியாத பங்காற்றவே செய்கிறது. ஜெயலலிதா முதன்முறை தமிழகத்தின் முதலமைச்சரா ஆனபோது “இது நம்மாவாள் ஆட்சி” என்று பார்பனர்கள் அறிவித்து விழா கொண்டாடியதும் ஒரு சான்றாக உள்ளது. பார்பனீயச் சதியால் ஓட்டுவாங்குகிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். பார்பனீயச் சதி உள்ளதா இல்லையா என்பதே இதன் சாரம்.
      இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டனைத் தருகிறேன். எமது தோழர்கள் ராஜாங்கம், முகம்மது ஷபி, கணேசன், ஆனந்த் என்ற நால்வரும் ராகுல்காந்தி சிவகங்கை வந்தபொழுது இலங்கையில் நடந்த போருக்கான இந்திய பங்களிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். அதனால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்த தோழர்களை வேனில் வைத்து பாதுகாத்த போலீசு சித்திரவதை செய்தது. அப் போலீசுக்காரர்களில் சிவகங்கை மாவட்டத்தின் கட்டிக்குளம் என்ற ஊரினைச் சேர்ந்த முத்துக் கருப்பன் என்ற போலீசு தோழர்களின் சாதிப் பெயர்களைக் கேட்டு தாக்கினான். சொல்ல மறுத்த தோழர்கள் அடி தாங்காது அவரவர் சாதியைக் கூறிய போது பள்ளர் என்று கூறியத் தோழர்களை கூடுதலாக தாக்கினான். காரணம் முத்துக்கருப்பன் மறவர் சாதியைச் சேர்ந்தவன். எமது தோழர்களுக்கும் முத்துக் கருப்பனுக்கும் எவ்வித தொடர்போ முன் பகையோ இல்லை. ஆனால் பள்ளர் சாதி என்பதற்காகத் தாக்கப்பட்டனர். மனு தர்மம் செய்த சாதிய மோசடியின் அடிப்படையில் சாதி வெறியில் தாக்கிய இவனது செயலை பார்பனீய வெறி என்றுதானே கூறமுடியும்? மார்க்சிய கோட்பாட்டினை அடிப்படையாக்க கொணடு ஒருவர் செயல்பட்டால் அதனை கம்யூனிசம் என்று கூறுவது போல் இதனை பார்பனீயம் என்றுதான் கூற வேண்டும்.
      அடுத்த இவரது கேள்வி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப் பழியா என்பது. கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மறப்பதற்கு தனிப்பட்ட இருவரின் பகைமையால் நடந்த கொலையல்ல இது. கொலை செய்யப்பட்டவர்களின் நலனுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியும் அல்ல இது. சாதிய கட்டுமானத்தின் பின்விளைவு இது.
      1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்தாலும், அனைத்து கட்சிகளாலும் பொன்விழா நினைவுநாள் கொண்டாடியதை நீங்கள் அறிவீர்களா? இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும், எவரின் வளங்களைக் வெள்ளையன் கொள்ளையிட்டானோ அவர்களின் நாட்டிலேயே அவனது சொத்துக்களும் நிறுவனங்களும் தொடராக உரிமையுடன் செயல்பட இழந்தவர்களே பாதுகாக்கின்றனர். கொள்ளையிட்டவனுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுகின்றனர். அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு ஆக்கிரமிப்பு போர்களுக்கு படை அனுப்புகின்றனர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டபோதும் மக்களை ஏமாற்ற வெள்ளையனே வெளியேறு என்று விழா கொண்டாடுகின்றனர். இப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடக்கும்போது பி.டி.குமாரின் சபதம் ஒரு அதிசயமில்லை.
      ஆயிரம் ஆண்டுகளானாலும் சாதி ஒழியாதவரை பழையதை நினைவூட்டி சாதிவெறியூட்டுவது நிற்கப்போவதில்லை. ஏறக்குறை 150 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் இருந்ததை நினைவூட்டி “ஆண்ட பரம்பரை இன்னும் ஆளுவதில் என்ன குறை” என்று முழங்கும்போது 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை கையிலெடுப்பது அதிசயமில்லை. தன் சாதிய மக்கள் சுமை தூக்கும் தொழிலாளியாக, சாக்கனாங் கடைகளில் மது ஊற்றிக் கொடுக்கும் தொழிலாளியாக கடின வாழ்க்கை நடதத்துவதற்கு காரணமான இந்த அரசாங்கங்கள் மற்றும் பொருளாதார அமைப்பிற்கு எதிராக போராடவிட்டாலும் பரவாயில்லை. அரசாங்கங்களுடன் இணைந்துகொண்டு தன் சாதிய மக்களின் முதுகில் சவாரி செய்கின்றனர். இவர்கள் தமது அதிகாரத்திற்காக சாதி வெறியைத் தூண்ட எவ்வளவு பழைமையானதையும் கையிலடுப்பது சாத்தியமா என்ற கேள்விக்கே இடமில்லை.

      அடுத்ததாக வின்சென்ட் போன்றவர்களின் கொலைக்கு ஆதாரம் கேட்டுள்ளார். வின்சென்ட் கொலை ஒருபுறம் இருக்கட்டும். பல நூற்றாண்டுகளாக சாதியப் படுகொலைகளும் தீவைப்புகளும் நடந்து வரும் வரலாற்றை இவர் படித்ததில்லையா? நாட்டு நடப்புகளை செய்தி ஊடகங்களில் இவர் பார்த்தது இல்லையா? வின்சென்ட் போன்றவர்களின் கொலைகள் மட்டும் அபூர்வமாக எங்கேயோ ஒரு இடத்தில் நடந்த கொடுரமா? இதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லை. இவர் ஒரு வரியில் என்ன ஆதாரம் என்று கேட்டுவிடலாம். கட்டுரையைத் தருபவர்கள் அச்செய்தியின் நம்பகத் தன்மையை நிருபிக்கும் பொறுப்புள்ளவர்கள். அதனால் ஆதாரங்களைத் ஒன்று திரட்டித் தர நிறைய வேலை செய்ய வேண்டும். இது போன்ற கேள்விகள் பல வேலைகளினூடே சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் மீது தேவையில்லாது வேலைப் பழுவைக் கூட்டி ஒதுங்கி ஓடச்செய்துவிடும். ஆதாரங்கள் அவசியமான ஒன்று என்றால் இவரது கேள்வி நியாயமானதே.

      எது அவசியமானது? எடுத்துக்காட்டாக காஞ்சி சங்கரமடம் ஜைனர்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதைக் கட்டுரையில் எழுதியுள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பலரும் அச்செய்தினை அறிந்திருந்தாலும் அதனையறியாத ஒருவர் ஆதாரங்களைக் கேட்டால் அதற்கான ஆதாரங்களான நூல்கள், ஆவணங்கள் போன்றவற்றை நேர்மையான முறையில் கட்டுரையாளர் தரவேண்டும். ஏனெனில் இது பழமையான ஒரு நிகழ்வு. நடப்பில் உள்ள செய்தி ஊடகங்களிலும் வந்துள்ளவைகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது சரியல்ல என்று நினைக்கிறேன். கட்டுரையின் குறிப்பான விஷயம் சாதிய ஓடுக்குமுறைதானே தவிர வின்சென்ட் போன்றோரின் கொலைகள் அல்ல. சாதிய ஒடுக்குமுறைக்கோ அல்லது இமானுவேல் சேகரனின் செயல்பாடுகளுக்கோ அல்லது முத்துராமலிங்கத்தின் சாதிய வெறிக்கோ ஆதாரம் கேட்டிருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும்.

      வின்சென்ட் போன்றோரின் கொலைகளின் பட்டியல்கள் மிக நீளமானது. அவைகளுக்கெல்லாம் வழக்குகள் உள்ளன. பல வழக்குகள் தள்ளுபடி செய்பட்டு பழிவாங்களும் நடந்துள்ளன. பல வழக்குகளில் போலீசு இன்னும் வலை வீசித் தேடி வருகிறது. இவைகள் அனைத்திற்கும் ஆவணங்களை அருங்காட்சியகத்தில் தூசிதட்டித் தேடித் தருகிறேன். அவைகளைப் பெற்றப் பிறகு ஆர்வி மேடையிலேறி 10 நிமிடம் சாதியத்திமிருக்கு எதிராக உரையாற்றுவாரா? விதண்டா வாதத்திற்காக கேட்கவில்லை. ஒரேவரியில் எழுப்பப்படும் கேள்வியால் அடுத்தடுத்த ஆக்கப் பூர்வமான வேலைகள் முடக்கப்பட்டாலும் அதற்குப் பலனாக ஏதும் நடந்தால் மன நிறைவு கிடைக்குமல்லவா! அதற்காகத்தானே நாம் பாடுபடுகிறோம்.

      • சாகித்,

        வினவு தளத்தில் நான் தாக்கப்படுவது புது விஷயம் இல்லை. ஆனால் நான் என்ன context என்றே தெரியாமல் முழிப்பது புது விஷயம். என் பின்புலம், பார்ப்பனீயம் என்ற சொல் எல்லாம் எதற்கு விவாதிக்கப்படுகிறது என்றே தெரியவில்லை. நீங்கள் சமூகத்தை கெடுப்பதாக நான் எங்கே சொன்னேன் என்றும் தெரியவில்லை. நீங்கள் யாரென்றே தெரியாதே! இந்த பதிவை எழுதியதற்கு நன்றி வேறு தெரிவித்திருந்தேன்! // இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை பற்றி அதிகம் தெரியாத எனக்கு இந்த பதிவு ஓரளவு விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி! //

        ஒரு சிறு விளக்கம். நான் வினவு தளத்துக்கு வருவது குறைந்துவிட்டது. நீங்கள் என்னை பற்றிய எழுதிய மறுமொழி இப்போது மறுமொழிகள் column -இல் இல்லை. சாதாரணமாக நான் புது பதிவுகளையும் புது மறுமொழிகளையும் மட்டுமே skim செய்பவன். உங்கள் விமர்சனத்தை almost miss செய்துவிட்டேன்.

        சரி கேட்டுவிட்டீர்கள். என் பின்புலத்தை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் ஒரு அரைக் கிழம். பட்டப் படிப்பு படித்திருக்கிறேன். அமேரிக்காவில் வாழ்கிறேன். பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். இவை எதுவும் வினவு தளத்துக்கு relevant இல்லை என்று நம்புபவன். பரிபூரண கருத்து சுதந்திரம், consistent application of a value system என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளவன். இது மட்டுமே relevant என்று நம்புபவன். வினவு தளத்தின் மீது எனக்கு உள்ள விமர்சனங்கள் பொதுவாக இவற்றை வினவு உடைப்பதால் ஏற்படுபவை.

        சில மாதங்கள் முன்பு வரை கூட்டாஞ்சோறில் வரும் மறுமொழிகளுக்கு எல்லாம் பதில் எழுதிவிடுவேன். உங்களுக்கு எழுதவில்லை என்றால் கவனக்குறைவுதான். சரி இப்போதாவது சொல்லிவிடுவோம் என்று பார்ப்பனீயம் பதிவில் உங்கள் பேரை தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி என்னதான் கேட்டீர்கள்? கீழ்வெண்மணி மகா அநியாயம் என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. In fact, சில மணி நேரங்களுக்கு முன்தான் இந்த பதிவை எழுதினேன் – http://koottanchoru.wordpress.com/2009/09/21/நாவல்களில்-கீழ்வெண்மணி/

        கருணாநிதி, ஜெ, சோ பற்றிய பாரா குழப்புகிறது. மனு நீதியை நிலை நாட்ட செய்யும் சதிகளும், பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் சதிகளும் பார்ப்பன சதிகள் என்று சொல்ல வருகிறீர்களா?

        உங்கள் “எளிமையான எடுத்துக்காட்டு” புரிகிறது. // மனு தர்மம் செய்த சாதிய மோசடியின் அடிப்படையில் சாதி வெறியில் தாக்கிய இவனது செயலை பார்பனீய வெறி என்றுதானே கூறமுடியும்? // என்று கேட்டிருந்தீர்கள். ஏன் ஜாதீய வெறி என்றால் புரியாதா? மோசடி ஜாதீய மோசடி; வெறி ஜாதி வெறி; ஆனால் உங்களால் செயலை ஜாதீய வெறி என்று சொல்ல முடியாது, பார்ப்பனீய வெறி என்றுதான் கூற முடியும். ஏன்? என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

        அறிவுடைநம்பி என்பவர் எழுதிய மறுமொழிக்கு சில மணி நேரம் முன்தான் மறுமொழி எழுதி இருந்தேன் – அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே திருப்பி தருகிறேன். // நான் தலைநகரங்களில் வசிப்பவர்களை capitalist என்று வரையறுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். capitalist இல்லாதவர்களும் capitalist ஆகும் ஒரு tendency இருக்கிறது என்று சொன்னால் அது எப்படி புரிந்து கொள்ளப்படும்?// பழைய தமிழ் வார்த்தைகளான பள்ளன், பறையன், காந்தி எடுத்துக் கொடுத்த ஹரிஜன் போன்றவை இன்று அடுத்தவர் மனதை புண்படுத்தக்கூடாது என்று ஒதுக்கப்படுகின்றன. எதோ ஒரு ஐம்பது ஆண்டுகளாக சொல்லப்படும் பார்ப்பனீயம் என்ற வார்த்தை மட்டும் கடவுளே வந்து சொன்னது, அதை விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது ஏன்?

        போன வருஷம் மசூதி இடித்ததற்கு இந்துக்களை பழி வாங்குவேன் என்றால் புரிகிறது. பல நூறு வருஷத்துக்கு முன் கோவில் இடித்ததற்கு பழி வாங்க மசூதியை இடிப்போம் என்றாலும் புரிகிறது. துப்பாக்கி சூட்டுக்கு யாரை பழி வாங்க? அரசையா? போலீசையா? துப்பாக்கி சூட்டுக்கும் தலித்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்கள் சொல்லாட்சி குழப்பிவிட்டது. நீங்கள் ஜாதி வெறி என்றே எழுதி இருக்கலாம். இது பழி வாங்குதல் அல்ல.

        // அடுத்ததாக வின்சென்ட் போன்றவர்களின் கொலைக்கு ஆதாரம் கேட்டுள்ளார். //
        உங்கள் புரிதல் தவறானது. நீங்கள் முதல் வரியை மட்டுமே // நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? // படித்தது போல இருக்கிறது. உங்களை ஆதராம் கொடுக்க சொல்லவில்லை என்பது அடுத்த சில வரிகளையும் படித்திருந்தால் புரிந்திருக்கும் – // இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா?நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா? இல்லை ஆதாரமே கிடையாதா?//

        கலைஞர் ஊழல் பேர்வழி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான் – ஆனால் அதை நிரூபிப்பது கஷ்டம். ஜெ ஊழல் பேர்வழி என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. உங்கள் முப்பாட்டனும் என் முப்பாட்டனும் வீட்டு பெண்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள் என்பது அனேகமாக உண்மையாக இருக்கும். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதில் இது எந்த வகை என்று சொல்லுங்கள் என்று கேட்டதை தவறாக புரிந்துகொண்ட பொங்கிவிட்டீர்கள்.

        பொதுவாக வினவு தளத்தில் ஒருவர் இப்படி நடந்தது என்று சொன்னால் அது by default , உண்மை என்றுதான் எடுத்துக் கொள்வேன். அப்புறம் 10 நிமிஷம் பேசுவீர்களா என்று கேட்டிருந்தீர்கள். நீங்கள் மேடை அமைத்துக் கொடுத்து, நானும் அந்த மேடைக்கு பக்கத்தில் இருந்தால் என்ன தடை? என்ன, 10 நிமிஷம் கோர்வையாக பேச வருமா என்று தெரியாது.

      • தேவரின் குரு பூஜையை முக்குலதோர் மட்டும் வழிபடுவதில்லை.நீங்கல் கருதும் தாழ்தபட்டோரும் தான் வழிபடுகிரார்கல். They go to pasumpon and worship him for 3 days. they also respect him as god. after then only we go to there for worship. This is because Lord thevar heplped them a lot. he gave them his palmriya for surviving. I dont know where are you from. before comment Lord thevar clear urself about him. i am here to know about Mr. Immanuel. U have mentioned because of Kamarajar he joint in Forward Block party. I clear you, that there was conflict between Mr.Nethaji and Mr.Gandhi. So that Nethaji came out separately from the Congress party and started Forward Black party. Even Mr. Gandhi also from Dalit Obviously ours lord Thevar supported him at the begining.you have mentioned that we controled Naadar caste. But this is false. Our lord thevar helped to Mr.Kamarajar for his M.L.A election. so that he was elected as an M.L.A by his support only. I m from madurai. there some pallars around my home but we have relationship with them friendly. Moreover i have some friends from dalit. I go to their home and have tea. he ill come to my home and havin tea in same vessels which we are using in my home. Boss everything because of money now. As a common man in india i just suggest you that Instead of thinking to be against us. plan to develop ur childs education make them as Dr. Ambetkar. Dr.Ambedkar was insulted at begining. but same paarpanas respected him after became a Lawyer. If u want help ur society do these things. after 20 yrs ur society will become wealthy.

        Ivan

        Indian

    • அய்யா ஆர்வி அவர்களே!
      உங்களைத் திட்டவேண்டும் என்பதற்காக //லூசுப்பய// என்றச் சொல்லை பயன்படுத்தவில்லை. அருகிலுள்ள நண்பர்களிடம் என்னடா லூசு பய மாதிரி பேசுறே என்று சொல்லுவது போன்ற உணர்வுடன்தான் எழுதினேன். அதனாலேயே அடைப்புக்குள் தவறாக நினைக்க வேண்டாம்… என்று எழுதியியுள்ளேன். அதுவும் தங்களுக்கு மனவருத்தை தந்திருந்தால் எனது தவறை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்கிறேன். சில நேரங்களில் விவாதத்தின் சூட்டினால் மரியாதைச் சொற்களுக்கு பதிலாக ஒருமைச் சொல் வந்துவிடும். எடுத்துக் காட்டிற்கு அஸ்கர் என்பவர் தங்களுக்கு ஒருமையில் மறுமொழி செய்தது போல். அவரும் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால் நேரடியான வன்மையானச் சொற்களால் திட்டினால் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். கருத்துப்பரிமாற்றத்துக்கு அதிக நேரம் ஒதுக்கலாம். தொழில் முறை தட்டச்சு பயிலாதவர்களுக்கு எளிதான வாய்புத் தருவாக அமையும். எனக்காகவும்தான் கூறுகிறேன்.
      பழிக்கு பழி வாங்குவோம் என்பதே பி.டி.குமாரின் சபதம். அந்த சபதம் யாரை பழிவாங்க என்பதை குறிப்பிடாவிட்டாலும் எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடியதுதானே!

      கொலைகள் பட்டப்பகலில் நடந்திருந்தாலும் போலீசு துணையுடன் சாட்சிகள் மிரட்டப்பட்டு வழக்கம்போல நீதி மன்றம் தள்ளுபடி செய்ததே பெரும்பாலான வழக்குகளின் நிலை. இந்த வகையில் ஒவ்வொரு வழக்குகளின் தீர்ப்புகளின் சொற்களையும் தனிப் புத்தகமாக வெளியிடலாம்.

      சோ, சங்கராச்சாரியார் பார்பனர்கள் என்பதால் பார்பனீயச் சதி என்று கூறுவதில்லை. ஆர்எஸ்எஸ் என்பது மனு தர்மத்தை நிலைநாட்ட அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் கால் ஊன்ற வழிவகை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டதால் அது பார்பனீயச் சதியாகியது. சோ, சங்கராச்சாரியாரின் உரைகளெல்லாம் இதற்கு சாட்சிகளாக உள்ளன.
      பார்பனீயம் என்றச் சொல் பார்பனர்களையும் சேர்த்து சுட்டுவதால் வெறுமனே சாதி வெறி என்று கூறினால் போதாதா என்பதுதானே உங்கள் கேள்வி?

      அகமதியாக்கள் என்ற இசுலாமியப் பிரிவைச் சேர்ந்த (சாதியைச் சேர்ந்த என்று கூடச் சொல்லலாம். காரணம் சாதி என்பதற்கான நடைமுறை என்னவோ அது அத்தனையையும் தான் உயர்நத பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும் நடைமுறை படுத்துகின்றனர்) பெண் புதைக்கப்பட்டப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட வன்முறை இசுலாமியக் கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டு நடத்தப்பட்டது. இசுலாமியர்களில் பெரும்பான்மையினர் இதை ஆதரித்து இருக்காவிட்டாலும் அவர்களின் பெயரால் இது நடத்தப்பட்டது. இதற்கு தலைமை ஏற்றவர்களின் வெறிச் செயல் என்றோ அல்லது தலைமை ஏற்ற அமைப்புகளின் வெறிச் செயல் என்றோ மட்டும் கூறமுடியாது. தலைமை ஏற்ற அமைப்பின் பெயரை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்களை கோட்பாடுவே வழி நடத்துவதால் இச் செயலை இசுலாமிய மதவெறி என்றுதான் கூறமுடியும். அவ்வாறில்லாமல் மாற்றுச் சொற்கைளப் பயன்படுத்தினால் சந்தர்ப்ப வாதத்தில் சறுக்கி விழுகிறோம் என்றே பொருள்படும். இதற்கு எதிராக குரல் கொடுக்காதவர் தன்னை ஜனநாயகவாதி என்று கூறிக் கொள்ள முடியாது.
      தாங்கள் பார்பனக் (பார்ப்பனராக) குடிப்பிறப்பாக இருப்பதால் பார்பனீயம் என்ற சொல் உங்களுக்கு இசைவற்றதாகத் தெரிகிறது என கருதுகிறேன். இசுலாமிய குடிப்பிறப்பில் பிறந்து நாத்திகனாக, கம்யூனிஸ்ட்டாக வாழும் நான் என்னெதிரில் இசுலாமிய மத வெறியர்கள் என்று எவராவது கூறினால் நான் வருத்தப்படக் கூடாது. அப்படியில்லாமல் எனக்கு நெருடல் துளி அளவேனும் ஏற்பட்டால் இன்னும் நான் மதத்தின தாக்கத்தில் இருந்துக் கொண்டு மாற்று மதங்களை விமர்சிப்பவர்களுடன் கூடிக்குலாவ ஜனநாயகம் வேடமிட்டவன் என்பதை விளகமாக கூறவேண்டுமோ?

      அகமதியாக்கள் பிரச்சனையில் அஸ்கர் என்பவர் இசுலாமியக் குடிப்பிறப்பாக இருந்தாலும் “இசுலாமிய மதவெறியும் ஆர்எஸ்எஸ் மதவெறியும் ஒன்றுதான். இரண்டிற்கும் வேறுபாடில்லை” என்று துணிச்சலாக கூறியுள்ளார். இவர் ஜனநாயகவாதி. இப்படிப்பட்டவர்களால்தான் இந்த சமுதாயத்தை மாற்ற முடியம்.
      தமிழில் பாடினால் தீட்டு என்பது மொழி வெறியா? சாதி வெறியா? அல்லது தியாகராயரின் வெறிச் செயலா?
      21ஆம் நூற்றாண்டின் முன்னேற்றத்தை கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலுள்ள உங்கள் சாதியினரின் நடைமுறைகளை தெருவில் இறங்கிப் பாருங்கள். 21ஆம் நூற்றாண்டு என்றால் என்ன என்று பிறகு சொல்லுங்கள்.

      பார்ப்பனீயம் என்பது சாதிய சிந்தனையற்றவர்கைளக் குறிக்காது. ஆர்வியும் அவ்வாறில்லாத ஜனநாயகவாதியாக இருப்பார் என்பேதே எனது எதிர்பார்ப்பு. மேடையில் ஏறி சாதியத்திற்கு எதிராக பேசவும் தயார் என்ற உங்களின் அறிவிப்பே போதும். தாங்கள் உங்களை முழுமையான ஜனநாயகவாதியாக மாற்றிக் கொள்ளும்வரை அவ்வாறான சங்கடமான செயல்களில் உடனே ஈடுபட வேண்டும் என்பது எமது விருப்பமல்ல.

      எமது விருப்பம் மாற்றம் மட்டுமே! மாறுவோம் உலகை மாற்றி அமைப்போம்!

      • ஸாஹித்,

        சில விஷயங்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி!

        நீங்கள் லூசுப்பய என்று சொன்னதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதை விட பல மடங்கு கடுமையான வசவுகளை, தனி மனித தாக்குதல்களை இங்கே பார்த்தாயிற்று. நீங்கள் லூசு என்றால் நான் பைத்தியமாக ஆகிவிடப்போவதில்லை. நீங்கள் அட என்ன புத்திசாலி என்றால் நான் பெரும் அறிவாளியாகவும் மாறிவிடப் போவதில்லை. இது உங்கள் கருத்துரிமை. நீங்கள் தவறான தகவல்களை கொடுத்துவிட்டு அந்த தவறை ஒத்துக்கொள்ளவும் மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் ஒழிய பொதுவாக நான் கடுப்பாவதில்லை. அஸ்கர் ஒருமையில் அழைத்ததிலும் ஒரு பிரச்சினையும் இல்லை. அவரிடம் எல்லா இடத்திலும் ஒருமை இல்லாவிட்டால் மரியாதை என்று இருந்தால் consistent ஆக இருக்குமே என்று மட்டுமே சொன்னேன். 🙂

        ஆனால் இன்னும் கொஞ்சம் idle curiosity பாக்கி இருக்கிறது. எதற்காக என் பின்னணி, பார்ப்பனீயம் என்ற சொல் எல்லாம் இங்கே கொண்டுவரப்பட்டது? நீங்கள் சமூகத்தை கெடுப்பதாக நான் எங்கே சொன்னேன்? என் பார்ப்பனீயம் பதிவில் என்ன கேட்டீர்கள், நான் பதில் சொல்லவில்லை? வெறும் idle curiosity -தான். ஏதோ தவறாக சொல்லிவிட்டீர்கள் என்றால் நீங்கள் எதையும் விளக்க வேண்டியதில்லை. 😉 பிரச்சினை எதுவும் இல்லை.

        வினவு கூட சமீப காலமாக எதையாவது சொல்லிவிட்டு அது தவறு என்று காண்பித்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். 🙂 அஹ்மதியா பதிவில் நடந்த விஷயம்.

        பெரிய விஷயம் இல்லை, இருந்தாலும் தெளிவாக்க மீண்டும் சொல்கிறேன். பழிக்கு பழி வாங்குவது என்று பி.டி. குமார் சபதம் செய்ததாக நீங்கள் எழுதவில்லை. துப்பாக்கி சூட்டுக்காக பழிக்கு பழி என்று எழுதி இருந்தீர்கள். பி.டி. குமார் எதற்காக பழி வாங்க நினைத்தார் என்பது உங்கள் கட்டுரையின் மையப் புள்ளியை எந்த விதத்திலும் மாற்றவில்லை. தவறாக புரிந்துகொள்ள, தேவை இல்லாமல் குழம்ப, வாய்ப்பிருக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

        பார்ப்பனீயம் பற்றிய இந்த வார்த்தைகளை மிகுந்த தயக்கத்துடனே எழுதுகிறேன். விவாதம் திசை திரும்ப வாய்ப்பிருக்கிறது. நான் எந்த ஜாதியில் பிறந்தவன் என்பதை குறிப்பிடுவதே எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம். இங்கே சிலர் டேய் நீ குடுமி, நீ அம்பி, உன் ஜெநோடைப்பில் பிரச்சினை என்றெல்லாம் எழுதாவிட்டால் நானும் வீம்புக்காக நான் பிறந்த ஜாதியை குறிப்பிட்டிருக்க மாட்டேன். பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்வது ஜாதி பிரச்சினைகளுக்கு பார்ப்பனர்கள் மட்டும் காரணம் என்று சொல்வது போல இருக்கிறது. ஜெர்மானியம் என்றால் நாசிசம் இல்லை. இஸ்லாம் என்றால் தீவிரவாதம் இல்லை. தேவரியம் என்றால் ஜாதி வெறி இல்லை. அப்படி நீங்கள் என்ன சொன்னாலும் அதையும் நான் எதிர்க்கத்தான் செய்வேன். பார்ப்பனீயம் என்பது சாதீய சிந்தனை இல்லாதவர்களை குறிக்காது என்று நீங்கள் சொல்வது காபிடலிசட் என்பது டெல்லியில் வாழ்பவர்களை மட்டுமே குறிக்கும் என்று நான் பழக்கத்தில் இருக்கும் வார்த்தைக்கு புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்துவது போன்றது. சாதீயத்தை பார்ப்பனீயம் என்றுதான் சொல்ல வேண்டும், ஜாதேயம் என்று சொன்னால் உலகம் குடி முழுகிவிடும் என்ற பிடிவாதம் ஏன்?

        அப்புறம் தஞ்சாவூருக்கு பல முறை போயிருக்கிறேன். ஒன்றும் பார்த்ததில்லை. பார்ப்பனர்களில் ஜாதி வெறி இல்லாதவர்கள் இல்லை என்பது என் வாதம் இல்லை. எல்லா ஜாதிகளிலும் இருப்பதை விட பார்ப்பனர்களில் சதவிகிதப்படி அதிகம் இல்லை, அவர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது தவறு என்பதுதான். பறையனுக்கு பள்ளன் இளக்காரம் என்று நீங்கள் அறியாதவரா?

    • intha katturai alithiyavam periya poi pesuvan pola thevar imanu velai kolai seiya villai pakain karamaka thevar samuthayathai sernthavarkalal kolai seiyya pattar thevar patriya books padinga avara pathi therium avar oru ma manithar theiviga manithar antru

  5. நண்பர் ஆர்வி,

    பெயர்களைச் சரியாக உச்சரிக்கவும். 🙂

    இம்மானுவேல் சேகர்(ன்- அல்ல) , முத்துராமலிங்கத் தேவன் (ர்-அல்ல)

    பாயாசம்

  6. அருமையான கட்டுரை. ஆதிக்க சாதி சங்கங்களை தனது வாக்கு வங்கி அரசியலுக்காக, அவர்களை ஆதரிக்கும், கட்சிகளும் முக்கிய ஒதுக்கப்பட வேண்டியவர்களே!
    //காமராஜர் காலத்தில் நடந்த துப்பாக்கி சூடு என்றால் ஒரு ஐம்பது வருஷம் ஆகி இருக்கும். அதற்கு போன வருஷம் பி.டி. குமார் பழி வாங்க திட்டமிட்டாரா? என்ன ஒன்றும் புரியவில்லையே?//
    என ஆர்.வி. கேட்பது போல் எனக்கும் தோன்றியது. அந்த பகுதி கொஞ்சம் விளக்கப்பட வேண்டும்.

  7. ஒடுக்கப்பட்டவன் என்கிற போர்வையில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக விக்ஷம் கக்கும் அம்பி ‘நிழலுடன்’ ஒரு சூடான விவாதம்.

    http://vrinternationalists.wordpress.com/2009/09/15/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/

  8. Very informative. Even though I grew up near Madurai we were never taught or talked about this history. The contemporary history taught in school should be changed to include this kind alternate views also.Otherwise overwhelming majority of the kids have no idea of what their immediate ancestors went through. But having said that your armed revolution or any other violence will not solve this problem. Kids should know about the sins their forefathers committed and the system should work on NOT forgetting but forgiving the old sins. That way we can make sure it never happens again.
    Anyway thanks for the informative article

  9. கோடாலிக் காம்புகள்.

    நல்ல பதிவு. தோழர் சாகித், ஆனந்த் இருவருக்கும் எனது பாராட்டுகள். தோழர் இம்மானுவேலும் முத்துரமாலிங்கமும் தங்களது சாதிக் கொடியை நட்டு வைத்துக் கொண்டு சண்டை போட்டார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். அப்போது போலிஸ் மந்திரியாக இருந்தவர் கக்கன்.

    இம்மானுவேல் தனக்கு சமமாக உட்கார்ந்து விட்டார் என்று… முத்துராமலிங்கத் தேவர் தனது ஆட்களுக்கு கண்ஜாடை காட்ட; கூட்டம் முடிந்து வெளியே வந்த இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கத் தேவரின் ஆட்கள் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டி கூறு போட்டார்கள். அப்படி ஒரு சாதி வெறி பிடித்த கும்பல் அவர்கள். இன்னும் திருந்தாத இவர்கள்தான் தமிழனின் வளர்ச்சியை தடுக்கும் உன்மையான கோடாலிக் காம்புகள்.

    • முதுகுளத்தூரிள் பேச்சுவார்த்தை முடித்து பரமக்குடி வந்தபின்பு இரயில்வேபீடர்ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து சாதி வெறி நாய் கலால் இமானுவேல் கொலை செய்யப்பட்டார், மதுரை பேருந்து நிலயத்தீலல்ல.

  10. மோதிக் கொள்ளும் அந்த இரண்டு ஜாதிகளும் தான் அடி முட்டாள்கள் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அதனினும் முட்டாளாக இந்த கட்டுரையாளர் இருக்கிறார்.”குரு” பூசைகளை மாறி மாறி நடத்தி அடித்துக் கொண்டால் தீர்வு வந்து விடுமா? அந்த ஜாதிகளில் உள்ளவர்களுக்கு எல்லாம் கிடைத்து விடுமா ?.கல்வி,இருக்க வீடு,சுகாதாரம் ,வாழ்க்கைத் தரம் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா ? அதற்கு ஏதுனும் அமைப்பை நிறுவி தாழ்த்தப் பட்ட மக்களிடம் ஏதேனும் வேலை செய்திருக்கீர்களா ? அதெல்லாம் செய்ய மாட்டீர்கள் அதை விட்டு ஏ.சி அறைகளில் அமர்ந்துகொண்டு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுகிற வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.இதில் ஆடு நனைகிறது என்று ஓநாய் வேறு (சாகித்) அழுகிறது .குரு பூசை போன்றவைகள் வெறும் கெத்து காட்டு கிற வேலை தானே தவிர அதனால் அந்த மக்களுக்கு ஒரு போதும் எந்த பயனும் இல்லை.

    • எழில் அவர்களே, இந்த பதிப்பை முழுவதும் படித்தேன் ஆனால் உங்களின் கமெண்ட் தான் தெளிவான முடிவுரை போல் இருந்தது.
      இந்த பதிப்பை எழுதியவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளது உங்கள் திருவாசகம்.  
      // ஆடு நனைகிறது என்று ஓநாய் வேறு (சாகித்) அழுகிறது .குரு பூசை போன்றவைகள் வெறும் கெத்து காட்டு கிற வேலை தானே தவிர அதனால் அந்த மக்களுக்கு ஒரு போதும் எந்த பயனும் இல்லை.// 
      உண்மையான் செய்தி, மக்களுக்கு பயனுள்ளதாக எழுதுவதை விட்டுவிட்டு
      சாதி வெறி பதிப்பை எழுதி வெந்த புண்ணில் வேளை பாச்சிகிறார்கள்.

      “தேவரும் தேவேந்திரும் ஒன்றே” என்று  Dr. N. சேதுராமன் அவர்கள் கூறுகிறார் 
      ஆதிக்க சாதியினர் என்று நீங்கள் சொல்லும் அவர்களே அடங்கிவிட்டர்கள். ஆனால் இவர்கள்தான் சாதி பத்தி பேசி ஆதிக்கம் செய்கிறார்கள். 
      மறைந்தவர்களை பற்றி பேசுவது மனித மாண்பு அல்ல 
      போயி வேள இருந்த பாருங்க இல்லன்ன சும்மா இருங்க அதைவிட்டு இந்த மாதிரி சாதி வெறி பதிப்பை எழுதி சதி அல்லது  சாதியை வளர்க்க வேண்டாம் சாகித், ஆனந்த் அவர்களே 

      • தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறி குறிப்பாக தேவர் சாதி வெறி இல்லையா என்ன? ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன் தேவர் குருபூஜை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பங்களை அளிப்பவர்கள் சேதுராமனின் அல்லக் கைகள்தானே? தேவரும் தேவேந்திர்ரும் ஒன்று என்றால் சேதுராமன் எதற்காக தேவர் சாதி சங்கத்தை நடத்துகிறார்? தேவேந்திர இளைஞர் யாருக்காவது அவரது குடும்பத்து பெண்ணை மணம் செய்தால் இந்த ஒன்று என்ற பிராடு முழக்கத்தை நம்பலாம். இன்னும் திமிரோடு வாழும் சாதி வெறியைக் கண்டிப்பது சதியா இல்லை அதை சமத்துவம் என்ற பெயரில் மறைப்பது சதியா? தோழர் சாகித் சாதி, மத நம்பிக்கைகளைத் துறந்த ஒரு கம்யூனிசத் தோழர். இன்றும் இசுலாமிய மதவாதிகள் அவருக்கு மிரட்டல் விட்டவாறுதான் இருக்கிறார்கள். அவரை ஒநாய் என்று இழித்து ரசிப்பது உங்களது கோர மனப்பான்மையைக் காட்டுகிறது. சாதி வெறி வேண்டாம் என்ற கருத்து இருந்தால் முதலில் தேவர் பூஜையை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையென்றால் இன்றைக்கும் அடங்கிப்போகாமால் கொந்தளிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் சேர்ந்து அந்த சாதி வெறிக்கு தக்க பாடம் புகட்டி சமாதி கட்டுவார்கள்.

        • அன்பான இன்றய நண்பர்களே இந்த சாதி என்ற வார்தை நம் வாழ்கைஇல் தேவைஇல்லை . மனிதநேயம் வளர வழி செய்வோம் . அதிகம் படித்த மருத்துவ மேதைகள் கண்டுபிடித்த கிருமிதான் AIDS . அது பொல இந்த சாதி .சாதி ஒழிக என்ற பயரில் வெரியை தூண்டாதீர்கள் . நாம் யாருக்ம் தாழ்ந்தவர்கள் இல்லை நமக்கு தாழ்ந்தவர்கள் இல்லை

        • தென் மாவட்டங்களில் அடங்கிப் போகும் தேவேந்திரர்களைக் காண முடியாது வினவு!
          கார்த்திக் கூறுவதில் நல்ல செய்தியும் இருக்கிறது.

        • Dear Vinavu Comrades , I regret that again and again you are fueling the fire . The so called upper caste people in the region are extremely poor and socially backward. among them thevar rose and he was admired by both tribes . He never coo perated with the colonial government and opposed to the Justice party consisted of rich and powerful people ( Raja sir Annamalai chettiar, pattiveeran patti soundra pandi nadar )in that region . The same people to protect their interests joined congress and in a short time they became patriots under Kamaraj nadar. Kamaraj also protected The wealthy merchants of Virudu nagar ( Who were exploiting the poor farmers of the region and selling adulterated foods ) and also thefire industry and match industry owners also supported Kamaraj nadar . The anti establishment Thevar was a nuisance to their machinations and bitter ness and rivalry was created among the two tribes . I would like to ask you which college Immanuel studied and during which years he was in armed forces and also there is a theory that he partook in freedom struggle also . He was a member in Luthereran church and promised an M L A seat by Kama raj and he converted to HINDU religion and made his name Sekharan and was a trouble maker in parama kuddi Bazar . he went to the meeting and due to his rivalry in the Bazar he got murdered and later there was a worst state terrorism in Ram nad district and Thevar raised his voice and after 11 days his name was implicated and the trial was conducted and the judge ananda krishnan Aiyangaar declared that It was a shear political vendetta on the part of the govt he is still remembered by many people and why Vinavu is partial and communal like Pro sinhala Janatha vimukthi permuna which claims it selfa leftist organisation . working claas is supposed to consists of all castes and groups not scheduled castes alone d

      • karthick,

        தென்மாவட்டங்களில் போய் சென்று பாரும். ஆதிக்க சாதியினர் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.

        தோழமையுடன்,

        செந்தில்.

    • தங்களின் விமர்சனங்களூக்கு பதில் தருகிறேன். ஆனால் அதற்கு முன் தாங்கள் என்னை ஓநாய் என்று வருணித்தற்கு தெளிவான காரணத்தை கூறவும்.

    • Ezhil,

      Guru pooja not for showing cinema. This is for Thanksgiving, and reminding them with worship for their sacrifice. I am talking for Both Lord thevar and Mr. Immanuael.

  11. தோழர்கள் ஆனந்த் மற்றும் சாகித்தின் கட்டுரைக்கு பாராட்டுக்கள். ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். முத்துராமலிங்கத்தின் குருபூசையை நடத்துபவர்களின் நோக்கம், சாதியாதிக்கத்தை நிலைநாட்டுவதுதான்.ஆனால், இமானுவேல்சேகரனின் குருபூசையை நடத்துபவர்களின் நோக்கம்,சாதியாதிக்கத்தை ஒழிப்பதாகத்தான் இருக்கமுடியும். கொலைசெய்தவனின் சமாதியிலும் மலர்வளையம் வைத்துவிட்டு கொலைசெய்யப்பட்டவரின் நினைவிடத்திலும் மலர்வளையம் வைக்கும் சாதி வெறியர்களின் நடிப்பை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. இந்த சாதிவெறியர்களின் பகட்டான விளம்பரங்கள் போலித்தனமானது. இமானுவேல்சேகரனுக்கு மலர் வளையம் வைப்பவர்கள் அவரைக் கொலைசெய்த சாதிக்கு எதிராகப் பேசுவார்களா? ‍ தெக்கூர்பிச்சை.

  12. government ungaluku neraya salugaigal valanguthu (compare to other caste) athai stop panna sollunga naanga unagala samama nenekirom.Matravangaluku(other caste) enna salugaigal kodukirarkalo athaiye ungalukum koduka sollunga naanga ungala samama madhikirom. Ethuku thanithohuthi endrellam irukkuthu ellavatraiyum podhu thohuthiyakkatum appam naanga unagala samama nenekirom.

    • hi have you know the history you know u r enjoying the freedom who gave it ? British…Who got it from them ? your forefather’s…..Like that Quotas are given by the British….Who got it from them By our Leader Dr.B.R Ambedkar So Would u like to be a slave to the British Again no no….Like that Quotas are our Birth Right Know one have the rights to talk about

  13. நல்ல கட்டுரை. ஆனால் :

    ////தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! ////

    இது போன்ற மிக நீண்ட வாக்கியங்கள் குழ்ப்பி, அர்தத்தை மாற்றிவிடுகின்றன. இந்த வாக்கியத்தில், இமானுவேல் சேகரன் சாதிய ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தார் என்பது போல அர்த்தம் உருவாக்குகிறது. எனவே, எளிமையான, சிறிய வாக்கியங்களால் கட்டுரைகளை அமைக்கவும்.

    எழில் சொன்னபடி, குரு பூசை இமானுவேல் சேகரன் அவர்களுக்கு செய்வதால் பெரிய நன்மை எதுவும் வரப்போவதில்லை. வீண் பகையுணர்சி அதிகரிக்கவே வழி செய்யும்.
    நாடார் சாதி மக்கள் அமைதியாக, படிப்படியாக கடந்த 50 வருடங்களில் உழைத்து, படித்து, தொழில் செய்து முன்னேறியதை போல தலித்துகளும் முயல்வது தான் சரியான வழி. இட ஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்திகொள்ள முயல வேண்டும்..