Friday, June 2, 2023

பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

-

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா பார்ப்பனர்களையும் குற்றவாளிகளாக பார்ப்பது தவறு என்று வாதிடுகிறார். மருத்துவர் ருத்ரன் சென்ற ஆண்டு அவரது வலைப்பபதிவில்  ஆர்.வியின் கருத்தை அவரது  ஜேனாடைப்பே தீர்மானிக்கின்றது என்று எழுதியதை ஆர்வி பலமுறை கண்டித்திருக்கிறார். பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.பார்ப்பனியம், ஜெனோடைப் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய மையமான கருத்து எது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. நிதானமாக படியுங்கள். தெளிவாக கருத்துக்களை முன்வைத்து வாதிடுங்கள்.

வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். ஏன் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் கூட விவசாயிகளாக இல்லை? ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித்துகள் தங்களை தாழ்ந்த சாதி என்று முன்னர் கருதிக் கொண்டிருந்தார்கள்? ஏன் இப்போது அவ்வாறு கருதுவதில்லை?

இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? வெங்காயம்! எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதுதான் காரணம் என்று வேறுபட்ட காரணங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலாளர்கள் எதற்காக அந்த விவாதத்தை நடத்துகிறார்கள்? தமது அறிவின் மேன்மையை நிரூபிக்கவா? அல்லது நோய் முதல் நாடுவதன் மூலம் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவா?

இந்த விவாதத்தில் காரணம் குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் விவாதிப்பவர்களிடையே நோக்கத்தில் ஒற்றுமை இருக்கிறதா? சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.

இப்படி ஒரு நோக்கம் இல்லாமல் வெறும் அகெடமிக் இன்டெரெஸ்ட்டுக்காக நடத்தப்படும் விவாதமாக இது இருக்க முடியாது. அல்லது நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை.

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் சாதிப்பிரச்சினை தொடர்பாக இப்போது ஆர்வியுடைய கவலை. ஜெனோடைப்பின் பெயரால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம், மதம், சாதி அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்;  இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .. இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா, அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா, ஆர்வி எதை சிபாரிசு செய்கிறார்?

ஜெனோடைப் என்று ஒரு வார்த்தையை டாக்டர் ருத்ரன் சொன்னதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் அளவுக்கு, அந்த ஜெனோடைப்பை சித்தாந்தமாக்கி பல நூற்றாண்டுகளாக அதனையே ஒரு மதமாகவும் உறுதிப்படுத்தியிருக்கும் நபர்கள், அவர்களில் பெரும்பாலோர் “தற்செயலாக” ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது ..என்பனவற்றைப் பற்றி ஆர்வி எவ்வளவு கவலைப்படுகிறார்? அல்லது கோபப்படுகிறார்?

இதனை எளிமைப்படுத்திக் கூறுவதானால், “பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது. உடனே இந்த ஜெனோடைப் கொள்கையை லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட்டின் லேப்புக்கு அனுப்பி நிரூபிக்கத் தயாரா என்ற அளவுக்கு தாண்டிக் குதிக்கிறார்கள். இது அறிவியல் மீது உள்ள பிடிப்பு தோற்றுவிக்கும் கோபமா, அல்லது வேறா? கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தால், அல்லது சுய பரிசீலனை செய்து பார்த்தால் விடை கிடைக்கும்.

“நான் அப்படி இல்லை”, அல்லது “நான் சாதியை ஆதரிக்கவில்லை” என்ற எதிர்மறையான தன்னிலை விளக்க ஸ்டேட்மென்டுகள், தார்மிக ரீதியில் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

“நான் அப்படி இல்லை” என்பது கிடக்கட்டும். என் சாதியைச் சேர்ந்தவர்கள் (பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை) பெரும்பாலான பேர் என்னைப் போல ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வி போன்றோர் விடை தேடவேண்டும். “இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ” என்பது பதிலாக முடியாது. சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது. ஏனென்றால், you have grown, drinking from that cup.. அந்தக் கோப்பையிலிருந்து அருந்தித்தான் நீங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி எனக்கு அரசல் புரசலாகத்தான் தெரியும்” என்ற தனது கூற்று அறியாமை ignorance சார்ந்ததும் மன்னிக்கத்தக்கதும் அல்ல, மாறாக அறம் வழுவியது, immoral, எனவே குற்றவுணர்வு கொள்ளத்தக்கது என்பதை ஆர்வி புரிந்து கொள்ள முடியும். “மோடி பிரதமராக வேண்டும்” என்று “கருத்து” வைத்திருக்கும் டோண்டு ராகவன் தனக்கு ஃப்ரெண்டாக இருக்க முடியாது என்பதை ஆர்வி உணர்ந்து கொள்ளவும் முடியும்.

மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு அறிவுசார் சுய இன்ப நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றால் விவாதத்தின் “உணர்ச்சி”, விவாதிப்பவர்களின் (கவனிக்க ஆர்வியை மட்டும் சொல்லவில்லை) அறிவை நெறிப்படுத்த வேண்டும். விவாதிப்பவர்களுக்கு ஒத்த நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஒத்த நோக்கம் இருப்பின், தன்னுடைய கூற்றை “சரி” என்று நிரூபித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை விட, சமூகத்தில் உள்ள தவறைச் “சரி” செய்வதின் மீதான நமது அக்கறைக்கு முதலிடம் கொடுப்போம். அப்போது மட்டுமே நடுநிலையான, பக்கசார்பற்ற அறிவியல் ஆய்வுகளும் சாத்தியப்படும்.

  1. ‘ சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .’
    You got it wrong. Even Shankaracharya has no right to perform those rituals in temples.So even his touch would not be permissible.It is a question of customary rights.There are many temples where brahmins are not priests and there too not all can enter the sanctum sanctorum and perform rituals. There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. The answer was obvious- govt. had no right to interfere or make changes in them. The court affirmed the fundamental right to follow ones faith and right to prevent governments from overstepping its limits. Can the government make changes in rituals at mosques and churches. If it cannot why target hindu temples. The Hindus have the consitutionally guaranteed rights and no government can be allowed to trample upon them or modify them.You communists want to destroy Hinduism because you are against Hinduism AND
    India as a sovereign nation.Your anti-caste ideology is a mask for your anti-Hindu AND anti-India
    ideology. We know that too well, Mr.Vinavu.

    • //Even Shankaracharya has no right to perform those rituals in temples//

      Is it so. If yes, is this before the killing of Sankararaman or after. //many temples where brahmins are not priests// You are right. But Brahmins never visit these temples.

    • சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் – this sentence is just a symbol. Not knowing that, you went on describing the nitty-gritty of your religion.

      The sentence does not only mean what is overtly revealed, which you have understood and replied to, but it also means that, based on births, the brahmins discriinated against dalits racially in practising their religion, using genotype theory and exploiting the verses in Gita attributed to Lord Krishna. Who has asked you what your religious rituals are and who should and shouldnt enter your temples. Tell us, why one group of people were called by you, the brahmins, untouchables, meaning, even shadow will pollute your religiously and that pollution can be erased only with religious rituals. Dont say, it is not the case and cite your verses. It was and is still now, at certain places, the practice to treat dalits as religious pariahs whose company should be avoided by brahmins, and who should not enter temples as they pollute the god. Tell us why Lord Krishna does not say where these peopel were born, while he said all others were born from his different body parts. This essay deplores the semantic exercises RV did over the word, Genotype, as a subterfuge to escape the large question of upper caste and lower caste. YOUR ARE COMMITTING THE SAME ERROR AS RV DID, PLAYING OVER WORDS.

      • How can lord Krishna say about the parts of body from where these people were born. Do u believe in that..? It is simple common sense. These people just communicate their ideas as if it is Lord Krishna’s ideas, and as if it is told by lord Krishna.

        Do u think Lord Krishna ever published any book saying all these bull shit..?

    • வெங்காயம், எந்த பிராமணன் கருவறைக்குள் நுழைந்தாலும் 2 நாள் தீட்டு. அதே வாத்தியார் எந்த பிராமணன் வீட்டுக்குள்ளும் பின் வாசல் வழியாதான் போகனும். இதுதான்…….. இந்து மதம், பிராமணயிசம் வேறென்ன சொல்ல.

      • தக்காளி…இங்கு பேசப்படுவது…யார் கருவறைக்குப்போனால் தீட்டு என்பதல்ல. தலித்துக்களுக்கு ஏன் தீண்டாமையை வைத்தார்கள் உங்கள் மதத்தில். ஏன் பார்ப்பனனை ஒரு தலித்து தன்னையறியாமல் தீண்டிவிட்டால் அது ஒரு தீட்டாகிறது என்பதுதான் கேள்வி. ஏன் பார்ப்பன்னுக்கு மட்டும் பூணால்?

        கோயிலுக்கே போனாலும், கருவறையில் மட்டும்தான் பார்ப்பனர் நுழையமுடியாது. ஆனால் தலித்து கோயிலுக்குளே நுழைய முடியாதே! இதற்கென்ன வேல் பதில்?

        • தக்காளி, இது தமிழ் இந்துக்காக இட்ட பின்னுட்டம், தலித் நுழைந்தால் 48 நாள் தீட்டு, சீறிரங்கத்தில்தான் அதை கண்டோமே. கொலைகார சங்சராச்சாரி மட்டுமல்ல எந்த பிராமணனும் செல்ல முடியாது என்பதற்காக இட்ட பின்னுட்டம். மன்னிக்கவும் தவறு இருந்தால் ஒன்று தெரியுமா ஆண்டாண்டு கால மரபை மாற்ற முடியாது என வாதிடுகிறான் இவன். எவனாது குடுமியோடு அமெரிக்கா போயிருக்கான பார். இதுதான் இவர்கள் செய்கை

        • உங்கள் இந்துமதம் என்று போட்டிருப்பதாலும் உங்கள்
          பெயரிலிருந்தும் நீங்கள் கிறித்துவர் என்று தெரிகிறது.
          கிறித்துவ மதத்தில் தீண்டாமை இல்லையா? இல்லை
          என்பது மறுமொழியானால் மணப்பெண் மணமகன்
          தேவை விளம்பரத்தில் கிறித்தவ நாடார். முதலியார்
          என்று ஏன் விளம்பரம் செய்கின்றனர்?

      • வெங்காயம்,என்றதுமே த்ந்தை பெரியார் அவர்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறார், பார்ப்பண ஆதிக்க சக்தியே ஒளிப்பதற்க்காக பாடுப்பட்ட ஒரே தலைவர் பெரியார் , திட்டு திட்டுனு திட்டியும் திருந்தாத ஜென்மம் பார்ப்பண ஜென்மம், தான் தீட்டாவது புடலைங்காய்யாவது, திருந்தாத ஜென்மம் இருந்தால் என்ன இறந்தால் என்ன?????????

    • //There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. //ஆமாம்,,ஆமாம்…நீங்க சொல்றது எப்படி சரியாகாம போகும்? கோவில் கருவறைக்குள்ளே சூத்திரப்பசங்க போகலாமான்னு பேச்சு வந்தாக்க மட்டும் நாம மறக்காம ‘அரசுக்கு’ உரிமை ஏதுன்னு கேக்கணும்!! கோவில்ல எல்லாம் கெடா, கோழி வெட்டப்புடாதுன்னு அரசு தலையிட்டா..அப்ப எல்லாம் ‘அரசு மூக்கு நுழைப்பதை’க் கண்டுக்கப்புடாது..இந்திய அரசை யாராவது எதிர்த்தால் அரசியல் சட்டத்தின் எல்லா வழிமுறைகளின்படியும் அவர்களைத் தண்டிக்கணும்..அதே சட்டம் தீண்டாமையை சட்டப்படிக் குற்றமாக அறிவித்தாலும், சித்தியடஞ்ச பெரியவாள் சொன்னாளே ‘அதெல்லாம் (தீண்டாமை) ஷேமகரமானது’ அதனைக் கடைப்பிடிக்கணும்..இல்லையா? எல்லா இடத்திலேயும் நடைமுறையில் இருக்கும் பி.சி.ஆர். ஆக்ட், வன்கொடுமை தடுப்புசட்டம் கருவறைக்குள்ள மட்டும் செல்லுபடியாகக் கூடாது..நீங்க சொல்றது 100 சதம் சரி..ஆனா எவனாவது ‘ஏண்டா இந்திய சட்டம் அமுலாகுற இடத்திலேதானே கர்ப்பகிரகம் இருக்குது? அது மட்டும் பாகிஸ்தான்லயாடா இரூக்கு’ன்னு கேட்டா என்னங்க ‘தமிழ் இந்து’ங்கற முறையில நான் பதில் சொல்றது? பல ஆண்டுப் பழக்கம் இது..அரசு தலையிடக்க்கூடாது..வாஸ்தவம்தான்…ஏனுங்க..நம்ம வீட்டிலெ தாத்தாவோ அப்பாவோ மண்டையப் போட்டுட்டா, உயிரோடு இருக்கும் ஆச்சியையும், அம்மாவையும் அதே சுடுகாட்டுல கொளுத்தறதுதானே நம்ம தர்மம்.. ஏனுங்க செய்ய மாட்டேங்கறீங்க..இப்ப மட்டும் சதியை ஒழிக்க அரசு தலையிடறதை ஆதரீக்கலாமா?

    • I suspect this person is from RSS who is running a blog in the name ‘tamilhindu’. It is full of abuses on all people who won’t fall into the line of Hindutva. I once saw a bluntly written article on Elam that Elam struggle is orchestrated by Christians. My comments there were summarily rejected by the blog owners. But here he enjoys everything. The person seems to be the same one who has come here and spews venom that the government interferes only on Hindu temples and not on other worship places. For this he has conveniently forgotten the history of government taking over the Hindu temples. These people owe much to Karunanidhi, in spite of his strong anti Brahmin stance, for renovating the old temple structures and regulating various other rituals to happen on a regular pattern in all major temples. While writing this, I am being handicapped of not knowing various other works of Hindu Endowments Department.

  2. அதியமான்ட்ட கூட விவாதிச்சுக்கிடலாம் பாருங்க நம்ம ஆர்.வி அண்ணாச்சியோட மட்டும் பேசுரது ரொம்ப சிக்கல். மனுஷன் வார்த்தையத்தான் பாத்துக்கிடுவாரு தவிர வாக்கியத்தோட பொருளை எப்பையுமே பேசமாட்டாருல்லா. இந்தக் கட்டுரையில ஆர்வியோட எப்புடி விவாதிக்கனும்முனு கனஜோரா கத்துக்குடுத்துருக்காக. வா, மக்கா வந்துஆட்டையப் போடலாம்லா?

      • RV’s credentials are suspect for two reasons, as I understand from reading him: He says poonul is the birth right of brahmins just as skull cap for mulsims and other distinctive features for other castes. He suppresses the fact conveniently that poonul is worn as a religious ceremony initiatiing one into brahminhood, Brahminhood is a religious act and makes the person intiiated accept varnashradharmam whereby he concedes the fact that the touch of a dalit will pollute him. RV is clever to suppress all this, and he equates poonul just as an act without any meaning. Next, he is dishonest, whereas persons like Dondu are honest, in the sense they dont pretend to believe in equality of castes. RV pretends to say everyone is equal. In short, RV is for parppaneeyam for which he plays with meanings.

  3. சிறிய பதிவு என்றாலும் மிக அருமையான சிறந்த பதிவு.
    விவாதிக்கும் முறை என்ன என்பதை சில விசயங்களில்
    மட்டுமே நின்று தொங்கிக்கொண்டிருப்பவர்களின்
    முகத்துக்கு நேரே உறைக்கும் பதிவு.

  4. சிறிய கட்டுரையே ஆனாலும் விவாதம் பற்றியும், அதில் தன்னிலை மற்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதிய மரபுரிமை வகிக்கும் பாத்திரம் பற்றியும் தெளிவாக விளக்குகிறது. சிறப்பான பதிவு!

  5. எழுத இயலாத ஒரு மெத்தனத்திலிருந்து மீள இப்பதிவு எனக்கு உதவுவது இருக்கட்டும்..ஜீனோடைப் விஷயம்…ஆர்வி என்பவர் என்னுடைய ஆங்கிலப்பதிவுக்கு “உனக்கு யார் இப்படி பேச அதிகாரம் கொடுத்தது” என்கிற தொனியில் ஒரு பின்னூட்ட்ம் போட, அந்நேரம் நான் அதைப்பார்த்ததால் உடனே இது உங்கள் பலநூற்றாண்டு கால ஜீனோடைப்பின் விளைவால் வரும் பேச்சா என்று கேட்டேன். அவரே அடிக்கடி புலம்புவது போல் அந்த என் பதில் அவர் பின்னூட்டம் இட்டஓரிரு நிமிடங்களில் சொன்னதுதான். என் பதிவு, காலங்காலமாய் அடிபட்டுக்கிடந்த தலித் இளைஞர்கள் திருப்பி அடிக்க முன்வந்ததைப்பற்றியது! அத‌ற்கு முன் ஆர்வி என் எந்த பதிவிலும் பின்னூட்டம் இட்டதில்லை.
    ஜீன்கள் சிலவற்றாஇ சந்ததியினருக்குத்த்ருகின்றன. எல்லரும் ஒரே ஆப்ரிக்கத்தாயின் பிள்ளைகள் என்று இருந்தாலும், என் அமெரிக்க நண்பன் என்னைப்போல் சிந்திப்பதுமில்லை நடந்துகொள்வதுமில்லை.மனித உருவ அமைப்புகளிலும் கூட அந்த ஆதியின் அப்பட்டமான நகல் இல்லைஎனும் போது, கொழுப்பும் குயுக்தியும் எப்போதிருந்து ஆரம்பித்திருக்கும்? ஆரம்ப ஜீன் தான் அடிப்படை என்றால் எல்லா மனிதர்களூம் தீட்டு பார்க்காமல் எல்லா கறியும் சாப்பிட்டிருக்கலாமே.இது விதண்டாவாதமென்றால்..ஒரு வேளை there is a genetic mutation in me!
    sorry if i have taken up space. i had to reply because it somehow links with me directly

  6. Dear VINAVU/RV/Dr.RUDRAN,
    ALL of you are just beating around the bush!!!. Brahmninsm is a way of life which no longer exists!. Brahmnis are running leather business hence he ie equal to a cobler!,They are running hotels,some evern brothels.. THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,..Have spoken to Vinavu a couple of times about this word used again and again,..Vinavu you’ve got an excellant tool with you and why don’t you use it for a better causeAnd why you people are bent on scratching the old healed wound called casteism!!!.In fact you must try to discourage any casteist remarks in this column,..

    • //THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world// What is the definition for True Brahmin. I am interested to know.

      //
      Brahmnis are running leather business hence he ie equal to a cobler// What made you to write a statement like this. Is this due to Genotype. Why don’t you think or say that both are humans hence equal.

    • பஞ்சாப் ரவி அவர்களுக்கு, மீன் மற்றும் இறால் பண்ணை நடத்திய பிராமண பெரிய மனிதர்களை தெரியும், எஸ் அன்ட் எஸ், சீறி ராம். போன்றோர் பிராமணர்களே. அவர்கள் என்ன கடலில் இறங்கி மீனும் இறாலும் பிடித்தார்களா. இல்லை எமாந்த விவசாயிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி விவசாயத்தோடு நிலத்தையும் பாழாக்கினர். அடுத்தவன் பணத்தில் தரகர் வேலை செய்தார்கள். அதுபோலவே காலணி ஏற்றுமதியும். இதில் பிராமணன் மட்டுமில்லை எனக்கு நேரிடையாகவே தெரியும் செட்டியார்கள், முஸ்லிம்கள் எத்தனை கோடி கடன் பெற்றார்கள். எத்தனை வங்கிகளை (பொது மக்களின் வைப்பு தொகையில் பெற்ற கடனை) எப்படி ஏமாற்றினார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் ஆட்டு தோலை உரித்து அதிலிருந்து செருப்பா செய்தார்கள். புரோக்கர்கள், இத்தாலியில் ஒரு புரோக்கரை தெரியும் அவனின் ஆர்டர் பெற்று நிறுவனமே இல்லாமல் எவனோ ஒருவனுக்கு அதை கை மாற்றி கொடுத்து பணம் பார்க்கும் இடைத் தரகர்களே அன்றி, வேறு அடையாளம் இவர்களுக்கு கொடுக்க இயலாது எந்த சாதிக்காரனாக இருந்தாலும்.

      THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,.. பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டாயிருக்கிறது என்பதை போலவே இதுவும்.

    • இதுநாள்வரை இந்துயிசம் என்பதே ஒரு வாழ்க்கைமுறை என்று கூறிவந்தனர். இப்போது பிராமணயிசமே வாழ்கைமுறை என்று இவர் கூறுகிறார்.

      ஓ மன்னிக்கவும் இரண்டும் ஒன்றுதான் என்பதை மறந்து இதை பதிந்துவிட்டேன்

    • ஏன்னா பஞ்சாப் ரவி, மலம் அள்ளும் பிராமணாள் எங்காச்சும் உண்டா ஓய்? “ஓனிக்ஸ் கம்பெணி மேனேஜர் என் அத்திம்பேருதான்..அதனால அவரு கூட சக்கிலியர்தான்”னு ஒரே போடா போட்டுராதேயும் ஓய்..

      • Why?Many brahmins are doing that in the middle east and the west where all of us have to do scavenging?The debate here shows only a desire to portray brahmins in bad light as though they do not have a right to follow certain personal beliefs and faith  with which others  have no right to question They think  thats demeaning to them It is out of their inferiority complex.

      • பிராமணன் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் அவனும் மற்றவர்களை போல தானே பிறந்திருப்பான்,ஏன் பிராமணன் மலத்தை அள்ளினால் என்ன தப்பு மலத்தை சக்கிலியர்கள் தான் அள்ள வேண்டும் என்று சட்டமா எழுதப்பட்டிருக்கிறது, பிராமணன் உலகத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியன்,என்பதை எவராலும் மறுக்க முடியாது, அதற்க்கான சரியான உதாரணம் எஸ் அன்ட் எஸ், சீறி ராம்

    • ravi, புணூல் போட்டு ஆவணிஅவிட்டத்தில் இன்றும் மாட்டுக்கொள்கிறார்கள். அதை ஆர்.வி பிறப்புரிமை என்கிறார். பூணால் போட்ட பார்ப்பனரைவிட போடாதவர் எண்ணிக்கையில் குறைவு. எனவே, பார்ப்பனீயம் இன்னும் ஜோராக இருக்கிறது.

  7. Good to know that TamilHindu understood that we are against Hindu-Indian-Nationalism(!). If court doesnt have the rights to intefere in the long-time followed faiths/beliefs , why laws like “Anti-Slaughter” were passed?! . So, its the Question of “whose” beliefs that the Govt. can interfere or trample and whose it cannot/should not…

    • பதிவு இந்து மதத்தைப்பற்றியது அல்ல. பார்ப்பனர்களின் சமூகநடத்தைப்பற்றி. அது எப்படி மற்றவர்களை, குறிப்பாக, மற்ற இந்துக்களைத்தாக்கிகிறது. எடுத்தக்காட்டாக, தலித்துகள், சாதி என்ற அஸ்திரத்தைப்பயன்படுத்தி. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள், திசை திருபப் முய்லாதீர்.

  8. there are times when we have to jump into the drainage to clear whatever is clogging. casteism is a convenient word to be used, brahminism is a synonym for the same i think that the topic of discussion here is about discrimination, opportunistic manipulation of social structure and a ‘habitual convenience’ to rule even if defacto. a brahmin running leather business would still not accept a dalit as his son/daughter in law. brahminism by the way not a casteist definition but a description of an attitude and life ethos.

    • Dr Rudhran, it seems that you are confused or i am not able to comprehend your language. I don’t think anyone can dispute the discrimination, opportunistic manipulation and everything else that is associated with casteism and brahminism. In india, brahimin / any other castes do do not accept other castes to be their son/daughter in law. So, your point ?   I don’t really understand what genotype is ! But if you mean the behaviour of parents / social environment  that he/she is brought up/ relatives define a person attitude, i completely agree with you unless he is intelligent enough to come out of the emotional pressures.

      • ok fodder for the grazers….when you say bullshit you dont mean the excreta of the bovine, you mean crap/rubbish/nonsense/or simply indescribable yuk. words mean more than what they appear as when thy have a written fom, and many meanings are sub text- like brahministic attitudinal cultural (?)inheritance.

        • @@@ if you keep on repeating the same words, @@@ இதையாராவது ஆர்.வி யிடம் சொல்லுங்களேன். மருத்துவர் ஒருமுறை சொன்னதை ஆர்.வி ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு விவாதம் வளராமல் தடுப்பதற்கு அல்லது திசை மாறி போவதற்கு அது காரணமாக உள்ளது.

          இந்த பதிவு ஒரு தெளிவை ஏற்படுத்தும் வழிகாட்டலாக உள்ளது. நன்றி தோழர்களே

  9. வினவு கூறியது போலவே, ஆர் வி அவர்கள் எப்போதும் நேரிடையான பதில் தருவதில்லை. அவர் என்னுடைய பதில்களுக்கு மறுபதில் தருவதாக நினைத்து சம்பந்தமில்லா ஏதோ ஒன்றை கூறி தப்பித்தே வந்தார். அவருக்காகவே இந்த இடுகை எனம் போது………. பார்ப்போம் மாறுவரா? இல்லை எப்போது போல மாற்ற முயற்சிப்பாரா என்று

  10. //ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்?//

    உயர்ந்த சாதி என்ற எண்ணம் இடத்தாலும் வரும். கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்களை உயர்ந்த சாதி என்று கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் தான் நினைத்துக் கொள்ள முடியும். அதே போல் நாடார்கள் தங்களை உயர்ந்த சாதி என்று திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தான் நினைத்துக் கொள்ள முடியும். வன்னியர்கள் மற்றும் மற்ற சாதியினரும் அப்படித்தான் தாங்கள் பெருன்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்கள் உயர்ந்த சாதியினராக கருதிக் கொள்ளலாம். ஆனால் அவரவர்கள் இடம் மாறினால் அவர்கள் சாதியின் உயர்வு தாழ்வும் மாறுகிறது. எனவே சாதியின் உயர்வு தாழ்வை பிறப்பு மட்டும் இன்றி இடமும் தீர்மானிக்கிறதோ? அப்படி என்றால் தலித் மக்கள் மட்டும் எங்கும் கீழ் சாதியினராகவே பார்க்கப் படுவதேன்?

    • பார்ப்பனரின் உயர்ந்த ஜாதி எண்ணம் இடம் காலம் இவற்றால் மாறுவதில்லை தோழரே. அதுதான் பிரச்சனை இங்கே.

  11. நான் மணி

    எனக்கு கட்டுரையின் தலைப்பு பற்றியும், வினவு குறிப்பிடும் விவாதமுறைக்கான வழிகாட்டல் பற்றியும், தற்போது விவாதம் சென்று கொண்டிருக்கும் பாதை பற்றியும் சில கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் உள்ளன. விவாதிக்கும் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என்னுடையவை. அனைவரும் அனுமதிக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். (ஆர்.வி உட்பட)

    • தோழர் மணி,

      இந்தப் பதிவே விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதை மீண்டும் விவாதப் பொருளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என நீங்களே ஒப்புதல் கொடுத்திருப்பதாலும் அதை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. பதிவின் மையப்பொருள் தவிர மற்ற விவாதங்கள் திசையை மாற்றுவதாகவே இருக்கும்.

  12. ஒரு பாப்பாரக் குழந்தை அம்மையோட வயித்துல இருக்கச்சே அந்த பாப்பாவுக்கு பெயரு, எந்த சாமியைக் கும்பிடணும், எங்கே குடிக்கிற த்ண்ணி மோளணும், யாரு கூட நட்பு வச்சுக்கிடணும், யாரையெல்லாம் வீட்டுத சேக்கப்படாது, எந்த பொண்ணை கட்டணும், செத்துப்போன எந்த சுடுகாட்டுல எந்த ஐயரை வைச்சு சடங்கு செய்யணும் எல்லாம் தீர்மானிச்சுக்கிடுதாகளே, இதுக்கு என்ன சொல்லுதீக?

    • அலுவலக ரீதியான தொடர்பில் இருக்கும் பார்வர்ட் கம்யூனிட்டியை சேர்ந்த ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது, நியுமரலாஜி, நட்சத்திரம், ஜாதகம் என எல்லாமும் பார்த்து வைத்த பெயர் தருண் கிருஷ்ணா. பெயரை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது,
      முதல் எழுத்து D என எழுதக் கூடாதாம். ஏனென்றால், தருண் என்றால்… சூரியனாம். சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்து, குழுந்தையை பாதிக்குமாம். இதுவே, T எழுதினால் சுக்ரனின் அனுக்கிரகம் அதிகமாக கிடைக்குமாம்.

  13. To mean bullshit if you keep on repeating the same words, meaning gets lost but only the word sticks out. That is where these sub texts goes for a toss i suppose.-

    Manikantan

    You’re dreaming. Words can never be without meaning. If they are repeated, they may only get a new menaing as the original meaning get exhausted and withered away and finally distorted to give birth to new meanings. Even babies cries, which dont have words, have meanings intelligible to mothers. Then, think about words, with meanings with their original meanings, and getting distorted menaings and finally new meanings. This is the basic thing a lingusitic student is asked to explore in his study by examples. Take the word, Fuck. Original meaning all of us know. It still gives that meaning. But its repeated use in general conversations is so much that it was taken to mean an expression of annoyance. Now, not only for occasions that annoy you, but in other contexts too, it is used, getting new meanings. A well known example. So, never say, words are expressed without meaning.

  14. can you find a bramin girl named as valli? kannaki? or a boy as murugan? whereas the family is devoted to lord murugan temple archkas and enjoy the caste benefits as priests.they seggregate the lords of gods into the different castes to suit their needs and cheat the devotees inthe name of bakthi.Tirupathi,Guruvayur, Varansi are to quote as brahimins and other locals in the cities are as sathrian and the final village mariamman,kaliamman,ayyanar are daltis. we are not dare enough to question the social differnce though we think alike.

    • Mohan54’s is a general complaint against tamil brahmins: they name their children in Sanskrit only. All over India, hindus name their children in Sanskrit, albeit with surnames in their own tongue, just as an ethnic identity: for e.g. Dilip Padgoanker. Aparna sen. The first names are in Sankrit followed by the second names in their mother tongue. But Tamil brahmins name all in Sanskrit, except the first initial which stands for the village their anccestors hailed from: e..g Rasipuram Krishnasamy Narayan (R.K.Naraiin)..

      I dont find this anomolous. Sanskrit names show their loyalty to the Vedic Relgion. Such loyalty is not found in any other community in TN; even Saiva Pillais owe the loyalty to a separatebrand of Hindu religion, called Saiva Sithandam, which takes something from Vaideega Matham – thats all. However, the charge does not strictly apply to all brahmins of TN. For instance, the Iyengaars sometimes adopt the names of Thirumaal as spelt by Azvaars, in pure Tamil: ஆராவமுதன், மணாளன், அழகிய நம்பி, அலர்மேல் வல்லி, செந்தாமரைக்கண்ணன், ஒப்பிலி (short for ஒப்பில்லாப்பன்) etc. In fact, in ancient times, the iyengaar names were in pure Tamil. It is a pity Iyenagaars have now deserted the names alvaars gave them. So also, the Iyers in ancient India. The trend of going for pure Sanskirt name appears to be modern: that is, not found in anicent
      When they dont worship village tamil deities, why should they name their children after such peith theivangal or demon gods and goddesses. If you worship, do it; dont compel others. Murugan? You are saying half truth. The Iyer brahmins do name their boys Murugan. I have seen umpteen number of Murugan Iyers, although it is not visible to you because the children with sanskrit names preponderate. Go to any place of arubadaiveedu. You will see the priests with murugan’s different names in pure tamil. It is therefore incorrect to say they dont want the names of Murugan. .

  15. Dayavu Seithu Thamizhil Pinnotam Idavum – பிளீஸ் புட் த பின்னூட்டம்ஸ் இன் டேமில்

  16. விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்ல இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.

    விவாதத்தை எடுத்து செல்கிறவர்கள், தமிழில் எழுதுவது நல்லது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் புரியாமல் அனைவருக்கும் புரியும் படி செய்யுங்கள்.

  17. ////தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது//// இதே கோபம் தேவர் ஜாதிக்காரர்களுக்கு வரவில்லை என்று அவர்களை எதிர்த்தும் கட்டுரை போட தைரியம் கிடையாது. தேவரீயத்தை எதிர்ப்போம் என்று முரசுகொட்டும் வீரம் எங்கே? செட்டியாரீயத்தை ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது.. நாடாரீயத்தி ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது. வன்னியரீயத்தை எதிர்ப்போம் என்று சொல்ல தைரியம் வராது. பிள்ளைமாரீயத்தை ஒழிப்போம் என்று சொல்ல தைரியம் வராது. இப்படி பல ஈயம் பித்தாளை பேரிச்சம்பழங்கள் தமிழ் நாட்டில் இருக்கு அடுத்த வேளை கூழுக்கு வக்கில்லாத பிராமணனாக இருந்தாலும் அந்த பிராமணனை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடிவு என்று என்னி ஒரு தரப்பாகவே காழ்புணர்ச்சியுடனும் கொலை வெறியுடனும் விஷம் பரப்புவது மனிதத்தன்மை இல்லாத செயலே. தமிழ் கோவில் களில் பார்ப்பனர்களிடம் தமிழில் தான் ஓத வேண்டும் என்று சட்டம் போடும் தைரியசாலிகள் இஸ்லாமியர்களிடம் மசூதிகளில் தமிழில் ஓதுங்கள் என்று சட்டம் போட தைரியம் வராது. கோழைகள். தமிழை மசூதிகளில் காக்க முற்படாத முதுகெலும்பில்லா கோழைகள். தங்கள் வீரத்தை எதிர்ப்பே இல்லாத பார்ப்பனர்களிடம் தான் காட்டுகிறீர்கள். கொஞ்சம் நிதானமாக இருங்கள். பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.

    • // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் //

      கன்னாபின்னாவென்று வரும் கோபத்தில் பதிவின் சாரம் மறந்து போய்விட்டது உங்களுக்கு. பார்ப்பனர்களை ஒழிப்பது என எங்கே இருக்கிறது? பார்ப்பினியம் என்று தானே இருக்கிறது.

      சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுகிற எந்த சாதியினரையும் கண்டிக்கிறோம். பழைய பதிவுகளை தேடிப்பிடித்து படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

      // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.//

      எங்கள் நோக்கம் திட்டுவது என்பதெல்லாம் கிடையாது. சாதியில்லா, ஏற்ற தாழ்வில்லா சமூகத்தை உண்டாக்குவது. உங்களுக்கு வருகிற கோபத்தை பார்த்தால், சாதி, சனாதன தருமம் ஒழிந்துவிடக்கூடாது என்பதில் தான் அக்கறை தெரிகிறது. எங்கள் பிழைப்பு இதுவல்ல. ஏற்கனவே எல்லோரும் வெலை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

    • செட்டியாரீயம், நாடாரீயம், வன்னியரீயம், தேவரீய்ம, பிள்ளைமாரீய்ம – போன்றவைகளுக்கும், பார்ப்பனீர்யத்தும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு.

      மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை. அவைகள் அல்லது அவர்கள் தம்மை, வைசியர், சத்திரியர் என்றெல்லாம் அழைத்துக்கொள்வதில்லை. த்ததம் வகுப்புபெயரிலேயே தம்மை அழைத்துக்கொள்கிறார்கள். மாறாக, பார்ப்பனர்கள், தமை, பிராமணர் என்று வருணசிரம்ப்பெயரை விடாப்பிடியாகக்கொண்டு, அச்சிரம்த்த்தில் சொன்ன படி சட்ங்குகள்ச் செய்து அவை தமக்கென்றே என்று சொல்லி பிறமக்களிட்மிருந்து தம்மைப்பிரித்துக்கொண்டு, அதே அம்மககளை தம்க்க எப்ப, எப்படி தேவையோ அப்படி பய்ன்படுத்தி வாழ்கின்றன. இப்படி தனியாகத் தம்மைப்பிரித்து வாழ்வதை அவர்கள் தாம் ஒழுக்கமாக வாழ்வதாகவும், பிறருக்க்த்த்தொல்லையில்லாமல் வாழ்வதாகவும் சொல்கிறார்கள். இதை பெரியார், ‘ஒரு பெண் தன் வீட்டில், ‘ இது ஒழுக்கமான் பெண் வாழும் வீடு’ என்று போர்டு போட்டால், மற்றவ்ர்கள் வீடுகள் தேவடியாக்கள் வாழும் வீடுகள் என்றுதானே பொருள்? இதைத்தான், பார்ப்பனீயம் செய்கிறது. மற்ற ஈயங்கள் செய்யவில்லை. இது மதத்தின் தொடர்பு இல்லாம்லிருந்தால் வேறு ஈயங்களோடு சேர்ந்ததாகு இருக்கும்; இதை மட்டும் குறிப்பிட்டு யாரும் சொல்ல்மாட்டார்கள். பார்ப்ப்னீயம், வெறும் பூணால் ச்மாச்சாரம் மட்டுமல்ல. அதோடு ப்லகூறுகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் பார்ப்பனர்கள் தம்நல் வாழ்வுக்காக மதம் என்ற பேரில் எழுதிக்கொண்டவை. என்வே, இங்கு அப்பார்ப்பனீயம்தான் பேசப்படுகிறது. இதை எதிர்னோக்க் மனதிடம் இல்லாமல், பார்ப்பனர்கள் அழிக்க மற்றவர்கள் நினைக்கிறார்கள் என கோழைத்தனமாக சொல்லி ஏமாற்றப்பார்க்கிறீர்கள்.

      • /////மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை.

        • //திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை //
          அப்படியா! பார்ப்பனர்கள் என்ன தொழிலில் இருக்கிறார்கள். எப்படியெல்லாம சிரமப்பட்டு வாழ்கிறார்கள் என கொஞ்சம் புரியவையுங்களேன். பார்க்கலாம்.

          தில்லையில், தீட்சிதர்கள் போடும் ஆட்டம் என்ன? ஆட்டைய போட்டு தின்றது என்ன? அவர்களின் ஆட்டத்தை ஒடுக்க எவ்வள்வு போராட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு ஆதரவாக நீதமன்றங்களிலும், அரசு நிர்வாகத்திலும் வேலை செய்ய, என்னென்ன லாபி வேலை பார்த்தார்கள் என்பது ஊரறியும்.

        • //உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? // அடேங்கப்பா..என்ன சாதுவானவங்க இவிங்க..இவிங்க ஹிட்லர் காலத்தில யூதர்கள் படும் வதையை அனுபவிக்கிறாங்க தெரியுமா..அசோகமித்திரனுக்கு அடுத்து நீங்க்கதான்ங்க இந்த உண்மையச் சொல்லி இருக்கீங்க! நாங்க அவமதிக்கிறோம்..அப்படித்தானே..தமிழ்ல பாடறதுக்காக போன சிவனடியாரை சிதம்பரத்திலே என்னவோய் செஞ்சீங்க? வீடு தேடி சென்னையில் அலைந்தால் ‘ஒன்லி பிராமின்ஸ்’ னு போட்டுக்கிட்டது யாரு ஓய்? திருவையாறிலே தமிழில் பாடச் சொல்லிப் போராடினவங்களை மண்டைய உடைத்தது யாரு ஓய்? சீரங்கம் கோயில் கருவறையில் நுழைந்தவர்களை ரத்தக்காயப்படுத்தியவர்கள் எல்லாம் யாரு ஓய்? அதெல்லாம் இருக்கட்டும்..சங்கர்ராமனை என்ன ஓய் பண்ணினீங்க? அவர் இத்தனைக்கும் சனாதனத்தைக் காப்பாத்தத்தானே லெட்டெ மேல லெட்டர் எழுதினார்..எழுதினதுக்கே அவரை சொர்கக்வாசலுக்கு அனுப்பிச்சிட்டேளே..உங்களை எப்போ யாரு அவமதிச்சா? இன்னமும் வர்ணாசிரமத்தைக் காப்பதற்காகவும் தன் மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்கவும்தானே..கோயில்களை தனியாரிடம் ஒப்படை என்றும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டு என்றும் கூச்சல் போடுறீர்?

  18. தமிழ் பிராமணாள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுவதில்லை என்பது ஒரு குறையாகவும், அன்னாருக்குத் தமிழ்ப்பற்று இல்லயென்பதாகவும், அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கு மோகன் அதைச்செய்கிறார். அவர் சொல்கிறார்: மாரியம்மன், காளியம்மன், அய்ய்னார் என்ற தெய்வங்களில் பெயர்களையும், முருகனின் பெயரையும் அவர்கள் இடுவதில்லை என்கிறார்.

    இது சரியா? முருகன் என்ற பெயரும், அத்தெய்வத்தின் பிறபெயர்களும் இடப்பட்ட அய்யர் குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். திருனெல்வேலியில் பெயர்கள் அப்படித்தான் இருக்கும். முருகனின் அறுபடைவீட்டுக்கோயில்களில் அர்ச்சகராக இருப்பவர்கள் பெயர் தமிழில் உண்டு. ஐயங்கார்களப்பொறுத்தவரை, சைவக்கடவுளர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு இடுவது தடைசெய்யப்பட்டதொன்று. அவர்கள் வைணவப்பெயர்கள் இடுவர். அவை பல தூயதமிழில் வரு. அத்திருப்பெயர்கள் ஆழ்வார்கள் இட்ட பெயர்கள். எடுத்துக்காட்டு: ஆராவமுதன், மணாளன், ஒப்பிலியப்பன் (அனைத்தும் குடந்தைப்பெருமாளை ஆழவாரகள் அழைத்தது), சுந்தரம், சுந்தரராஜன் (இவை திருக்கண்ணபுரம் பெருமாளுக்கு, மற்ற பெருமாளுக்கும் வரும்) அழகர்சாமி, அழகர் (இவை, மதுரைக்குப்பக்கத்தில் உள்ள கள்ளழகர் திருநாமம்), பெண்குழந்தைகளுக்கு, அலர்மேல் வல்லி, (இத்திருநாமத்தில் திரிபு அலமேலு, அம்மு), மதுரவல்லி (கூடலழகரின் துணைவியாரின் திருப்பெயர் – மதுரை). ஆதிகாலத்தில் தூய தமிழ்ப்பெயர்கள்தான், தற்போதுதான் மாற்றம். மற்றவர்களும் எப்படி? எல்லாரும், கார்த்திக், சஞ்சய், ராஹுல், விஜய், ஆனந்த், ப்ரியா, வைஷ்ணவி, ஸ்வாதி, ஐஸ்வர்யா, என்றுதானே இடுகிறார்கள்? ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிச்சதாம்? மற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..

    (I have written in Tamil my earliier message, in deference to the wishes of many)

    • //ற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..//

      அப்படின்னா பாப்பர மதமும், கிராம தெய்வங்களும் வேறு மதங்களா?

      நன்றி கள்ளபிரான் அவர்களே

      • ஆம், பிராமண தெய்வங்களும், கிராம தெய்வங்களும் வேறு வேறே. கிராம தேவதைகள் நாம்மோடு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள். கூட்டமாக வாழ்ந்து, அக் கூட்டத்தின் தலைவனாய், வீரமிக்க செயல் பல புரிந்து, மடிந்த நபர்களையே, கடவுளாய் வணங்குகின்றனர். இவர்களுக்கு ஆறுகால பூசை கிடையாது, வருடத்திற்கு ஒருமுறை திருவிழா/கொடை நடைபெறுகிறது. நரித்தனமாய் பிராமணர்களே நீயும் இந்து என்று அவர்களை அழைத்து அவர்களின் சடங்குகளை இங்கேயும் புகுத்தி வருகின்றனர்.

        • இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எங்கள் சிற்றூரில் உள்ள நாட்டார் வழக்கு கோயிலில் முதலில் தெய்வங்கள் பெயரை, முதலில் கருப்பசாமியை கருப்பணசுவாமி என பெயர் மாற்றினார்கள். ஆடு, கோழி வெட்ட ஜெயலலிதா தடை செய்யப்பட்ட பொழுது, அதையே பயன்படுத்தி, ஏற்கனவே பிற்படுத்த பட்ட சாதியை சேர்ந்தவர்கள் அந்த கோயிலின் பூசாரி வகையினர் இருந்தனர். அந்த கோயிலை நிர்வாகம் செய்யும் செட்டியார் சாதியினர் அவர்களை வெளியேற்றி விட்டு, அய்யரை பூசாரியாக்க முயற்சித்தனர். பிறகு, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டார்கள். ஆனால், இன்னும் முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

  19. நண்பர் ஆர்வீ,

    தாங்லள் தயவு செய்து வந்து விவதியுங்கள், பார்ப்பனீய சிந்தனை ஒழிக்கப்பட வேண்டுமா இல்லையா? அமைதி அதற்கு சப்பை கட்டுகட்டுவது போல் ஆகிவிடும் .

    வினவு அவர்களுக்கு,

    ,மிகச்சிறப்பான கட்டுரை, பறையன் வாயில மலத்தை திணிச்சாங்கன்னு சொன்னா பாவம் என்று சொல்பவர்கள், அது நடந்ததே தப்பு என்று சொல்வதில்லை. இதில் பெரிய அரசியலே இருக்கிற்து தப்பு என்றால் தீர்வு தேவை இல்லை அல்லவா? ஒரு எடுத்துக்காட்டு பிரேமானந்தாவை கைது செஞ்சப்ப எந்த கள்ளன் போராட்டம் செஞ்சான், ஆனால் சங்கராச்சரிக்கு மேட்டர் தலை கீழ

    கலகம்

  20. இந்த பதிவை இத்தோடு நான்காவது முறை படித்துவிட்டேன், இவ்வளவு சிறிய பதிவு (500 வார்த்தை இருக்கமா?) ஆனால் எத்துனை பொருட்செறிவோடு உள்ளது. பார்ப்பனிய இந்து மதத்தை பற்றி எந்த ஒரு விவாதமானாலும் இந்த வழிகாட்டுதலை பயன்படுத்துவது சரியான திசை நோக்கி விவாதத்தை கொண்டு செல்லும்

    டிஸ்கி – இந்த முறையில் விவாதிக்க குறைந்த பட்ச நேர்மையும், சமூக அக்கறையும் தேவை, எனவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகள், போலி முற்போக்காளர்கள், (பல) மதவெறியர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை மட்டும் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

  21. The Problem lies with the word ‘Paarpaniyam’ or ‘Brahminism’ being continuously used against ‘Casteism’. Though it is largely accepted that ‘Brahmins’ were the perpetrators of such a social hierarchy, to call the system in the name of the caste which founded it, is excluding all other castes which are vehemently practicing casteism in the real sense.  The other castes which benefited largely by this system in India are going scot-free due to usage of the term ‘Brahminism’ time and again.  
    It is very much evident from a deep study into the history of India & various castes that the system had a liquid model, rather than a solid model which came to fore in the later times (Probably British era and post-Independence era). There were kings and landlords from each every caste possibly here. Parayars, Naadars, Pallars, Sakkiliyars, Thevars, kounders…everyone had their share of the pie when the system allowed for the raise and fall of their kiths and kins like a wave in the sea. The Only thing that never changed was the supremacy of the Brahmins in this Order. Whoever came to be in a dominant position in the society embraced ‘Brahmins’ and ‘Brahminstic’ rituals and beliefs and sub-ordinated themselves to their Pseudo Godly posture in the society. It seemed a mutual Symbiotic agreement between all other Castes and ‘Brahmins’, While all other castes were unaware of the fact that actually ‘Brahmins’ were using all other societies for their ‘Parasitic’ Livelihood. 
    Brahmins used the Inherent ‘Selfishness’ of mankind for their own means and ends. When the Moghuls came they were the first to join them as the Court Chief ministers while the lower strata went onto join the Army and other posts. When the British came They were the first to go and shake hands with them to keep their position in the society intact, while the others joined the lower ranks. It is not that the other castes didn’t knew they were being used for thousand of years by the ‘Brahminism’ – which was keen in having the lions share whoever may be in the dominant position. But these castes approved of it because of the position & wealth they were gaining by subjugating others. It is like the Priest Educating a common man ab