privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

-

vote-012கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஒரு பொருள் 2001-இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008-இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008-இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற “ஸ்வான்” என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு “எடில்சலாட்” என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற “யூனிடெக்” நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது.

இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் – மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆனபொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார்மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.

–          புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.//
    மிகவும் சரி. 1990 வரை பி.எஸ்.எம்.எல் மட்டும் தான் இருந்தது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதியே இல்லை. தொலைபேசி என்றாலே அது அரசின், பி.எஸ்.என்.எல் மட்டும் தான். ஏர்டெல், ஏர்செல், டாடா இண்டிகாம் எதுவும் கற்பனையில் கூட இல்லை. அதே நிலைக்கு திரும்பினால் ஊழல் இல்லாமல், அருமையான, மலிவான் சேவைகள் கிடைக்கும் தான்.

  2. லிபரன் கமிஷன் அறிக்கை வெளிக் கொண்டு வரப்பட்டுவிட்டது. இது நல்ல செய்திதான் எனினும், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை காங்கிரசு மாமாக்கள் வீச்சாக கொண்டு வ்ரப் போகும் வேளையில் திட்டமிட்டு மக்களின் கவனத்தை திருப்பும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது.

  3. தனியார்மயமாக்கலில் இரு வகைகள் உள்ளன : இதுவரை பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் ஒதுக்கப்ப்டட துறைகளில் தனியார்களை அனுமதிப்பது (விமான சேவை, டெலிகாம், தொலைகாட்சி, ரேடியோ, போன்றவை). மற்றொரு வகை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்களுக்கு விற்பது. இதில் இரண்டாவதை ம்ட்டும் எதிர்க்கிறீர்களா அல்லது முதலாவதையுமா ?
    ஊழல் உருவாகிறது என்பதாலேயே, தனியார்மயமாக்கலை எதிர்ப்பது, மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துவது போல. பொதுத்துறையாக இருக்கும் பட்சத்தில், அதற்க்குள் நடக்கும் ஊழல், நிர்வாக சீர்கேட்டை எப்படி ‘திருத்துவதாம்’ ? நஸ்டமடைந்தால், அரசு பணம் கொடுத்து காப்பாற்றும் என்ற கியாரண்டி இருபதாலேயே, பல பொதுத்துறை நிறுவன அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பில்லாமல் உள்ளனர். கூட்டுற்வு நூற்பாலைகள், சர்கரை ஆலைகள், என்.டி.சி மில்கள், போன்றவற்றில் வேலை செய்திருந்தால் தான் புரியும்.

    மேலும் பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html

    • திவாலான பல தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி அளிப்பது பற்றியும், மேலும் வங்கியில் வாங்கிய கடனை எந்த ஒரு முதலாளியும் ஒழுங்காக திருப்பி செலுத்தாதது பற்றியும்., மேலும் அரசு நிறுவனங்களையும் நிலங்களையும் தனியார் முத்லாளிகள் அடிமாட்டு விலைக்கு அபகரிப்பது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

      • கண்டிப்பாக அவற்றை எதிர்க்கிறேன். சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு எதிரானவை இவை. இன்னும் சொல்லபோனால் Sick Industries Act, BIFR போன்றவற்றையும் ஒழிக்க வேண்டும். பல கோடிகள் கடனாளியன் அமிதாப்பச்சன் தன்னை பாதுகாத்துக்கொள்ள BIFR (Burea of Industrial Finance for Reconstruction) அய் பயன்படுத்த முடிந்தது. போலி சோசியலிச காலங்களில் உருவானவை இவை. நீக்கப்பட வேண்டும்.

        • தற்போதைய‌ முதலாளித்துவ அரசுகள் எவ்வாறு செயல்படுகிறது? யாருக்காக செயல்படுகிறது? மேலே 4.1.1.ல் நீங்கள் எதிர்ப்பதாக கூறுபனவற்றை எவ்வாறு சரி செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

        • SICA, BIFR, AIFR, CDR, Revival , Restructuring, இவை எல்லாம் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு ஓத்து ஊதும் அமைப்புகள், முதலாளிகளை பாதுகாக்கவே இவ்வமைப்புகள் உள்ளன, SARFAESI ACT கொண்டு வந்தபோது மேற்கண்ட அமைப்புகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றனர். ஆனால் தொடர்நது இருந்து கொண்டுதானிருக்கிறது. இருக்கட்டும் இதனால் தனியார் முதலாளிகளுக்கு என்ன பயன் இதுதான் முக்கியம்

          1, BIFR ஒரு நிறுவனத்தை நொடிந்த நிறுவனமாக அறிவித்துவிட்டதென்றால் முதலாளி அனைத்து விதமான தொலைகளிலிருந்து விடுபடுகிறான் குறைந்தது 10 ஆணடுகள்.
          2. இதை பயன்படுத்தி கடன் பெற்ற வங்கிகள்+நிறுவனங்களிடம் அசலில் 10% தருவதாக பேரம் பேசி 20 முதல் 35% பேசி settle செய்கின்றனர். ரிசர்வ் வங்கியும் அசலில் 35% வசுல் ஆனால் வங்கிகளை அதிகமாக கேள்வி கேட்பத்தில்லை என்றொரு கொள்கை வைத்துள்ளது.
          3, நில மதிப்பீடு உயர்ந்து விடுகிறது.
          4. மறு அவதாரம் என்ற பெயரில் மீண்டும் கடன் பெற ஒரு வரைவு திட்டத்தை தயார் செயது அரசியல்வாதியோ, வங்கி தலைமையோ, அல்லது நீதிமன்ற ஆணையோ பெற்று மறுபடியும் பொதுமக்களின் வைப்பு நிதியினை கொள்ளையிடுகிற்னர்.

          தொழில் வளர்ச்சி வங்கியொன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்திற்கு 3 கோடி கடனளித்தது, அதன் வட்டி எல்லாம் சேர்ந்து 2004 ஆம் ஆண்டு ரூ,9 கோடி என்ற நிலையில் அதன் சொத்து மதிப்பு 5 கோடிக்கும் குறைவாக இருந்தது. திடீரென நிலத்தின் மதிப்பு 2005-06 ஆண்டில் 30 கோடிக்கு உயர அந்த வங்கி பொது ஏலத்தின் மூலம் மொத்த வட்டியும் வசூலித்தது. ஆனால் இது எல்லா இடங்களிலும் சாத்தியமாகியதா என்றால் இல்லை. மேற்கண்ட இடம் நீதிமன்ற கட்டுப்பாடில் இருந்ததால் இது சாத்தியமாகியது. இதர இடங்கள் முதலாளி கட்டுபாடில் இருந்ததால் அவர்கள் நினைத்ததே நடந்தது. இதுதான் முதலாளிக்கு திறந்த-சுதந்திர சந்தை பொருளாதாரம் தந்த பரிசு. என்ரான், வெளிநாட்டு நிறுவனம் இந்திய வங்கிகளில் பெற்ற 9000 கோடி கடனை திருப்பி தராமலேயே திவாலாகி போனது. இது மற்றொரு சுதந்திரம். வாருங்கள்www.nic.bifr என்ற வலைதளத்திற்கு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் எத்தனை நூறு நிறுவனங்கள் எத்தனை ஆண்டுகளாய் மக்களையும் அரசையும் ஏமாற்றி வருகிறதென்று. என்பதுகளில் நொடிந்த நிறுவனமென அறித்தது இன்றுவரை தொடர்கிறது. இதுதான் இந்திய அரசியலமைப்பு

        • ///SICA, BIFR, AIFR, CDR, Revival , Restructuring, இவை எல்லாம் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு ஓத்து ஊதும் அமைப்புகள், ///

          இல்லை. உண்மையான சுதந்திர பொருளாதார அமைப்பில், தோல்வியடையும் நிறுவனங்கள் சட்டப்படி திவாலாகி, கடன் கொடுத்தவர்களுக்கு அவை திரும்ப கிடைக்க சுலபமான முறைகள் இருக்கும். ஜெர்மனி, நெதர்லாந், கனடா போன்ற நாடுகளில் அப்படி உள்ளது. இந்தியாவில் இருப்பதை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு முடிவு செய்ய வேண்டாம். இங்கு இது போன்ற பல விசியங்களில் நேர்மையில்லாத, crony capitalism உள்ளது / இருந்தது. அதன் மொத்த விளைவு இவை. there are no proper exit policy and backruptcy norms in India. debt recovery is still a complex and lenghty tortourous process. hence many distortions, etc

        • மன்னிக்கவும் தங்களது மதிப்பீடு மிகவும் தவறு. இந்தியாவில் வாழும் நான் எனது நேரடியான அனுபவத்தையே இங்கு பதிந்துள்ளேன். என்னால் நுற்றுக்கணக்கான உதாரணம் தர இயலும். இடப்பற்றாக்குறை கருதி ஒன்றை மட்டுமே அளித்தேன்.
          ஏறக்குறைய எனைய நாடுகளிலும் இதே நிலைதான் செய்திகளை படிக்கும்போது. உம். என்ரான். GM Motors Land Rover இப்படி நீண்டு கொண்டுதான் இருக்கிறது. இன்னொரு உம். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு EOW. நீதிமன்றம் மூலம் அளித்த தொகை 5% to 35%. ஆனால் அனுபவ் நடசேன், RBF. ரமேசு கார், மேக்ஸிமா, கலைமகள் சபா வாழ்க்கை நிலை மாறி விட்டதா அல்லது யாராகிலும் 100 சதம் பணத்தை திரும்ப பெற்றார்கள் என்று தங்களால் கூற முடியுமா

        • //ஏறக்குறைய எனைய நாடுகளிலும் இதே நிலைதான் /// இல்லை. இந்தியா அளவு மோசமான legal system with loopholes in debt recovery இல்லை. anyway in a genuine free market economy, NOT free market policies. இந்தியாவில் நடப்பவை பற்றி எமக்கும் சிறிது அனுபவ அறிவு உண்டு. DRT யில் நடப்பது பற்றியும் கொஞ்சம் தெரியும். இதெல்லாம் சந்தை பொருளாதாரம் அல்ல. அல்ல. ஓ.கே

        • வேல்,

          US govts bailouts of GM, etc are NOT free market polices. in a real free market system, the govt will not and should not interfere or ‘help’ any player of company. losses and bankruptices are as much a part of the sytem as profits and new ventures. these bankruptcies re-distribute the resources from less efficent areas and people to most efficenct areas and managers. it is a contiious and dynamic process.

          debt recovery is much much easier, simpler and quicker in Western nations than in pseudo-soclialist economies like India. hence..

        • DRT. DRAT. High Court. எல்லாம் செத்த பாம்புகள். DRAT க்கு 6 மாதங்களாக தலையே இல்லை. முதலாளிக்கு கொண்டாட்டம். DRT ஒன்றுமில்லா விசயத்திற்கு 3 ஆண்டுகள் வழக்கை நடத்துகின்றனர். 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட DRC இன்று வரை செயல்படுத்தபடவில்லை.

          அதற்காக வெளிநாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அற்புதமானவை என்று அர்த்தமல்ல. நேரடியான தொடர்புகள் குறைவு என்பதனால் அவை புனிதமானவையும் அல்ல.

          என்ரான் செயல் அதிகாரி இரண்டு மாதம் உள்ளே இருந்தான் இஃகே சத்யம் நிறுவனம் ஆறு மாதம் உள்ளே இருந்தனர். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்பதனால்..

          சரி விடுங்கள் அது என்ன சுதந்திர சந்தை பொருளாதாரம். வலுவுள்ளவன் கொள்ளை அடிக்கதானே. அதைப்பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் பின்பு வருகிறேன்.

      • லட்சம் கோடிகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கொடுத்து பட்ஜெட்டில் ஓட்டை விழுந்துள்ளது பற்றி அதியமான் என்ன சொல்கிறார்?

        அதையும் அவர் தவறு என்றே சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்

        • it depends. this figure is notional. Can u say, that all companies and MNCs enjoy immense tax breaks at current rates when compared to 80 % IT of 70s and 50 % excise duty and 200 % customs duty ?
          if there is any corruption or partiality or misuse in tax breaks they need to be exposed and stopped. and yes, we are for abolishing all kinds of concessions and let free market forces decide and play their dynamics. and ideally, tax rates should be in single digits.

          MNCs and exporters were given huge concessions in 1991 due to terrible crisis and acute shortage of foreign exchange. they were EXCEMPTED from income tax then. so that they may grow and earn the much needed dollars then. Asuran, would u conisder this concession as wrong ? now, they are all into IT net. but SEZ concept is a fraud and discriminatory. the whole nation should be treated as a SEZ. and grabbing private lands by govt for giving to SEZs is a fraud and against property rights. the companies should buy from willing sellers of lands directly.

  4. இம்முறை 3ஜி ஸ்பெக்டரம் ஏலம் ‘நேர்மையாக’ நடை பெறும் என்று தோன்றுகிறது. ராசாவின் லீலைகள் இனி சாத்தியமாகும் வாய்ப்பு குறைவு. ஏல முறை..

  5. Can anybody please tell me who is the person responsible for fixing the rate for these wavelength …and to market it properly…. whether it is the duty of the Respective Central Mnister or Anytoher officials…. Whose responsibility is this……

  6. மாடு மேய்க்க கூட தகுதி இல்லாதவன் அமைச்சர இருந்தா இப்படிதான்.

    • மாடு மேய்க்க கூட தகுதி இல்லாதவன் என்பதெல்லாம் ஓவர். மெத்த படித்தவர்கள் இந்திய அரசியலில் செய்த திருட்டுத்தனம் மிக அதிகம்.

  7. கருணாநிதிக்கு முதுகுவலி, மூட்டுவலி, மலச்சிக்கல் வந்தாலே ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாகச் சாவார்களோ என்ற ஒரு மனப்பயம் எனக்கு எப்போதுமே உண்டு. அப்படித்தான் இந்த அலைக்கற்றை ஊழலை வெளிப்படுத்திவிடுவோம் என்று தி.மு.க வை, காங்கிரஸ் வன்னிப்படுகொலைகள் விடயத்தில் மிரட்டியதாக புலம் பெயர்ந்த தமிழர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா? இதை கேனத்தனமாக நான் காலம் கடந்து கேட்பதாக யாரும் நினைக்காமல், பதில் தெரிந்தால் சொல்லுங்கள். 

    • ரதி. நீங்கள் அரசியல் வாதிகளின் ஊழல் திறன்களைக் குறைத்து மதிப்பிடும் நல்ல மனதுக் காரராக இருக்கிறீகள். எந்த அரசியல் வாதியாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு அஞ்சுவானா? இதனாலெல்லாம் கட்சியின் மானமோ ஆட்சிக்கு வரும் வாய்ப்போ போகும் என்று நினைப்பானா?

      உங்கள் கேள்விக்கு பதில்.

      துளியும் உண்மையில்லை. எப்படியாவது “தி.மு.க. தமிழின ஆதரவுக் கட்சி. தமிழ் நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்திதான் வாழ்வு நடத்துகிறார்கள். ஆனால் காங்கிரசு சதி செய்து அவர்கள் கையைக் கட்டிப் போடு விட்டது” என்ற பொய்யை நிலை நாட்ட வேண்டுமென்று விரும்புபவர்கள் பரப்பும் வதந்திதான் இது.

      இணையத்தில் உணர்ச்சிவசப் படுபவர்கள் தவிர்த்து சராசரித் தமிழ் நாட்டுத் தமிழன் எவனும் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதை விரும்பவில்லை. இது கருணாநிதிக்கும் தெரியும். சோனியாவுக்கும் தெரியும். அங்கங்கு தலை தூக்கிய ஈழ ஆதரவை கண்டுகொள்ளாமலோ அடக்கியோ பரவ விடாமல் தவிர்த்ததன் மூலம் தமிழ்நாட்டில் சலசலப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டதில் காங்கிரஸ் தி.மு.க இருவரும் கூட்டுதான். மற்றபடி காசு வாங்கி ஓட்டுப் போட்டதால்தான் காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வந்தது, தி.மு.க. கைப்பாவையாக ஆகி விட்டது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள் என்பது எல்லாமே பொய். தமிழ்நாட்டு வாக்காளர்கள் காலங்காலமாக காசு வாங்கியிருக்கிறார்கள். ஆனால் பிற மாநிலங்கள் வாக்களிக்கும் தேசியக் கட்சியின் கூட்டணிக்குதான் எப்போதும் வாக்களிப்பார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த ஆட்சி இருப்பதுதான் தமிழனுக்கு முதல் விருப்பம். எனவே இந்தியாவிலிருந்து உதவி வராததற்கு புதுக் காரணங்கள் சொல்பவர்களை நம்பாமல் நாம் முன்பு பேசியபோது பரிமாறிக் கொண்ட கருத்துக்களை எண்ணிப் பாருங்கள். ஈழப் பிரச்சினையில் இந்திய ஆதரவு கிட்டாததன் காரணம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் புலி வெறுப்புதான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை.

      • புலி வெறுப்பு அரசிடமா? மக்களிடமா? வெறும் புலி எதிர்ப்பு மட்டும்தானா? இந்திய தரகு முதலாளிகளின் நலன் இல்லை என்கிறீர்களா? முதலாளிகளின் நலன்தான் முதன்மையானது என நான் நினைக்கின்றேன்.  .  

      • திரு. வித்தகன்,

        //ஈழப் பிரச்சினையில் இந்திய ஆதரவு கிட்டாததன் காரணம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் புலி வெறுப்புதான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை.//

        அப்படியா? ஒரு வேளை புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா ஈழப் பிரச்னையை தீர்த்து வைத்திருக்குமோ?

    • ரதி அவர்களுக்கு,

      தேர்தல் வெற்றிக்குப் பிறகு கருணாநிதி மத்திய அமைச்சரவையில் அதிக இடம் கேட்டு பேரம் பேசி இருக்கிறார். அதாவது சில முக்கியமான துறைகளை கேட்டு. அதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு கருணா சில சித்து வேலைகளை காட்டி அதிகாரத்துடன் கேட்டுரிக்கிறார். அதற்குத் தான் காங்கிரஸ் அலைக்கற்றை (spectrum) ஊழலை அம்பலப்படுத்தி விடுவோம் என்றவுடன் பேசாமல் அவர்கள் கொடுத்த துறைகளை மட்டும் பெற்றுக் கொண்டு வந்துள்ளார் கருணா… இது தமிழகத்தில் பேசப்பட்ட செய்தி.

      • உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரர் லெனின். மற்றப்படி, இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க புலிகள் என்றும், ராஜீவ்காந்தியின் கொலை என்றும் திரும்பத் திரும்ப அதையே சொல்லி ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள். நண்பர் வித்தகனும் அதையே சொல்லி புலிகள் மீது பழியைப் போடுகிறார். வித்தகனின் அறிவுத்தகமைகள் மீது எனக்குள்ள மதிப்பினால் அவருடன் அதிக விவாதம் செய்து இதையெல்லாம் விளக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். அவர் இந்தியாவை நேசிப்பதால் அப்படிச் சொல்கிறார், அவ்வளவுத்தான். 

        • ரதி,நீங்கள் முள்வேலிகம்பிக்குள் துயருறும் மக்களுக்காக உண்மையிலேயே வருந்துகிறீர்களா? அவ்வாறாயின் அம்மக்களின் இவ்விழிநிலைகளுக்கு காரணமான அனைத்து தரப்பினரின் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என எண்ணிப்பாருங்கள். போராட்டத்திற்காக‌ மக்கள் அணிதிரட்டப்பட்டிருந்தால் எந்த்வொரு துரோகமும் பாசிசமும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளும் தோற்றுப்போயிருக்கும். போராட்டத்தை மக்கள் தங்கள் தோள்களில் தாங்கி முறியடித்திருப்பார்கள். நான் போராளிகளை மட்டும் குறை சொல்கிறேன் என்று எண்ணவேண்டாம். பாசிசமும் ஏகாதிபத்தியமும் தன்னகத்தே குரூரமான மக்கள் விரோத தன்மை கொண்டதுதான். இவையிரண்டிற்கும் சாதகமான வழியேற்படுத்தி கொடுத்தனர் போராளிகள். இதை உள்வாங்கிக்கொள்ள முடியாததற்கான உங்களின் பிரச்சினைகள் புரிகிறது. என்ன செய்வது மருந்து கசப்பாக இருக்கிறதென்று குடிக்காமல் இருக்க முடியுமா! 

  8. புலி எதிர்ப்பு மக்களிடம் இருப்பதைத்தான் சொல்கிறேன். அரசியல்வாதிகளுக்கு என்ன நிலைப்பாடு வேண்டிக்கிடக்கிறது? காற்றடிக்கும் பக்கம் சாய வேண்டியதுதானே! ராஜீவ் காந்தி படு கொலை பிரபாகரனுக்குப் பெற்றுத் தந்துள்ள அவப் பெயரைப் புலி ஆதரவாளார்கள் குறைத்து மதிப்பிட்டது மிகப் பெரியதவறு. தரகு முதலாளிகளின் நலன் இருக்கலாம். ஆனால் மக்கள் கருத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

  9. லிப்ரென் அ¡¢க்கை ஒரு அரசியல் நாடகம்.
    விலைவாசி,ஸ்ப்க்ற்றம் ஊலல்,வரும் எலெக்ஸ்ன் யெல்லாம் கனக்கில் கொண்டு
    வீசப்பட்ட சினிமா ஸ்கிப்¡¢ட்
    அமொ¢ககா விலையாடும் பொம்மை நம்ம பிரதமர்
    எல்லா பபெரெலும் கைஎலுத்து பொடுவார்
    பின் ஔர் கதை சொல்வார்
    எதெல்லாம் அரசியலில சாகசம் தானெ

  10. வித்தகன், அதியமான் 
    உங்கள் இருவரினதும் பதில்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இருவருமே ஈழத்தமிழர்கள் பால் அக்கறை கொண்டவர்கள் என்பது (வித்தகன்-முன்னைய விவாதங்கள், அதியமான்- GSP + வரிச்சலுகை) நான் அறிந்ததுதான். ஈழப்பிரச்சனையில் இந்தியாவையும், இந்திய தேசியத்தையும் நேசிப்பவர்களின் பார்வைக்கும் ஈழத்தமிழர்களின் பார்வைக்கும் நிறையவே வேறுபாடுண்டு. கண்பார்வை நன்றாக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் ஈழத்துமண்ணின் மற்றும் ஈழத்தமிழனின் மேனியில் பட்ட காயங்களை வரிக்கு வரி விவரிக்கலாம். ஆனால், அந்த அடியை வாங்கியவனுக்குத்தான் தெரியும் அதன் ரணவலியும், தன்னை அடித்தவன் யாரென்பதும். சரி, ஒருவேளை, ஒரு பேச்சுக்காக எங்களை அடித்தவர்களை கூட நாங்கள் மன்னித்தாலும், எங்களை அடிக்கச்சொன்னவர்களை என்ன செய்யலாம்? இந்தியதேசியத்தை நேசிப்பவர்களின் முடிவுக்கே அதை விட்டுவிடுகிறேன். 

    வித்தகன், அரசியல், ஊழல் என்பவற்றால் ஒரு நாட்டின் குடிமக்கள் பாதிக்கப்படுவது பொதுவான “ஊழல்வினை”. ஆனால், ஈழத்தமிழர்களின் உயிர்வதையில், அவலத்தில் ஒருவேளை இந்த ஊழல் ஓர் பங்கு வகித்தது என்றால், அது ஒன்றும் சாதாரணமான விடயமாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த ஊழலுக்கும் ஈழத்தமிழனின் அழிவுக்கும் சம்பந்தம் இல்லை, அது உண்மையில்லை என்று நீங்கள் மறுக்கிறீர்கள். சராசரி தமிழ்நாட்டுத்தமிழன் இந்தியா ஈழப்பிரச்சனையில் தலையிடுவதை விரும்பவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், அது எந்தவிதத்தில் என்ற கேள்வி தொக்கிதிற்பதாக எனக்கு தோன்றுகிறது. இந்தியா தமிழின அழிப்புக்கு துணைபோகாமல் தள்ளியிருந்திருக்க வேண்டுமா? அல்லது, முற்றுமுழுதாக இலங்கைப்பிரச்சனையிலிருந்து விலகியிருக்கவேண்டுமா? எப்படி நினைக்கிறார்கள்? எது எப்படியோ, இனிமேல், எங்களின் விடுதலைக்கு யாரையாவது உதவுங்கள் என்று யாரையும் கேட்கக்கூடாது என்று என் மனம் நினைக்கிறது. அவர்களாக முன்வந்தது உதவினாலேயன்றி. இலங்கைப்பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டுமா இல்லையா என்பதை இந்திய முதலாளிய முதலைகளும் அமெரிக்காவும் தானே தீர்மானிக்கிறார்கள். ஆக, இதிலிருந்து மீளவேண்டியது ஈழத்தமிழன் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத்தமிழனும் தான்? அதை எப்போது உணர்வீர்கள்? 

    அதியமான், உங்கள் சுட்டிக்கு நன்றி. அதைப்படித்ததில் கட்டுரையாளர் மக்களின் அவலத்தை சொன்னதைவிட சிங்களராணுவத்தை சிலாகித்தும், போரின் பின்னான மீள்கட்டுமானப் பணிகளையும் பங்குச்சந்தை பற்றியும்தானே அதிகமாகப் பேசுகிறார்.  ஒருவேளை கட்டுரையாளருக்கு ஈழத்தில் முதலீடு செய்யும் நோக்கமோ என்னமோ? எனக்கென்னமோ, ஈழத்தில் எல்லாம் சரியாகிவிட்டது முதலாளிகளே ஈழத்தில் முதலீடு செய்து அவர்களின் வளங்களை சுரண்டுங்கள். அவர்கள் உங்களை எதிர்க்கக்கூடவே  கூடாது என்றால் வேலை தருகிறோம் என்று அவர்களை சரிக்கட்டுங்கள் என்பது போலுள்ளது கட்டுரையின் தொனி. சரி, அதைவிடுங்க. ஈழத்தில் வாழும் தமிழனுக்கு வேலை வேண்டும், இயல்புவாழ்க்கை வேண்டும், குறிப்பாக அடிப்படை உரிமைகள் வேண்டும். இதெல்லாம் ஈழத்தமிழனுக்கு இருப்பதாக பாவ்லா காட்டினாத்தான் சிங்கள பேரினவாதத்துக்கு மென்மேலும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன் கிடைக்கும், GSP+ வரிச்சலுகை கிடைக்கும், முதலீடுகள் குவியும். சர்வதேச நாணயநிதியம் கடன் தர மறுத்தால், மன்மோகன் சிங் இந்தியா அதை தரும் என்று வேறு சொல்வார்.  மொத்தத்தில் ஐரோப்பா, அமெரிக்காவுக்கு தாங்கள் மனிதத்தின் காவலர்கள் என்றும், இந்தியாவுக்கு தாங்கள் இந்திய தேசியத்தை கட்டியெழுப்புகிறோம் என்றும் எங்கள்/உங்கள்  தலையில் மிளகாய் அரைக்க வேண்டும். மொத்தத்தில் இந்தியதேசியம் முதலாளிகளின் நலன் சார்ந்தது தான். அது இந்திய குடிமக்களின் அல்லது ஈழத்தமிழர்களின் நலன் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாது என்பதை எப்போது உணர்வீர்கள்? 
    ஈழத்தமிழனுக்கு மட்டும் அறுபது வருடங்களுக்கு மேலாக ஏன் நீதி பிழைக்கிறது? அடிபட்டுக்கொண்டிருக்கிற எங்களுக்கு தெரியும் ஏன் என்று. ஆனால், ஈழத்தமிழனின் இரத்தமும், கண்ணீரும் இன்னமும் இந்தியவரலாற்றின் பக்கங்களை நனைத்துக்கொண்டிருக்கிறது. ஏனென்று இந்தியதேசியத்தை நேசிப்பவர்கள் உணராதவரையில் ஈழத்தமிழனுக்கும் சரி, தமிழ்நாட்டுத்தமிழனுக்கும் சரி விடிவு வராது.  

    நட்புடன் 

    ரதி 

    • ரதி. ஈழம் கிடைக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலையீடு இன்றி. அதுதான் இந்தியாவிற்கும் நல்லது. ஈழத் தமிழர்களுக்கும் நல்லது. இந்தக் குறிப்பிட்ட பதிவிலிருந்து அதிகம் விலக வேண்டாம் என்பதாலும் இது உணர்வு பூர்வமான விவாதம் எனவே நீண்டு கொண்டே போகும் என்பதாலும் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். என்னைப் பற்றிய உங்கள் வரிகளுக்கு என் நன்றியும் அன்பும்.

      • நண்பர் வித்தகன்,

        நானும் ஒன்றை கடைசியாக சொல்லி முடித்துக் கொள்கிறேன். ஈழம் கிடைக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு நன்றி. அதற்கு basic requirement என்னவென்றால் ஈழ விசயத்தில் இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடாது. That is, ஈழம் விடுதலை அடைய வேண்டும் என்றால் இலங்கை விவகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் கண்டிப்பாக இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடாது. Thats all. இதை இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் தான் (பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்கள்) இந்தியாவின் தயவு இல்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு விடுவு ஏற்படாது என்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    • /////எனக்கென்னமோ, ஈழத்தில் எல்லாம் சரியாகிவிட்டது முதலாளிகளே ஈழத்தில் முதலீடு செய்து அவர்களின் வளங்களை சுரண்டுங்கள். அவர்கள் உங்களை எதிர்க்கக்கூடவே கூடாது என்றால் வேலை தருகிறோம் என்று அவர்களை சரிக்கட்டுங்கள் என்பது போலுள்ளது கட்டுரையின் தொனி.////

      இல்லை. இது உங்களுடைய மேலோட்டமான, emotional interpretation. மேலும், வளங்களை சுரண்டுங்கள் என்பது ஒரு மகத்தான மாயை சொல்லாடல். கம்யூனிஸ்டுகளில் பல்லவி. 1991 முதல், இந்திய வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ‘சுரண்ட’ அனுமதிக்கப்பட்ட பின் தான் ஓரளவு இந்தியா உருப்பட்டது. பார்க்கவும் : http://nellikkani.blogspot.com/2008/01/blog-post.html

      இது பற்றி தோழர்களின் over simplified theories அய் மட்டும் பார்க்காமல், மறுபக்கத்தையும் படித்து உணருங்கள். கனடா ஒரு liberal democracy with free market economy. அதனால் தான் அங்கு செழுமை மற்றும் வளமை..

      • எனக்கு Karl Marx Theory பிடிக்கும் என்பதற்காக என்னை நான் மார்க்சிஸ்ட் ஆகவோ அல்லது கம்யூனிஸ்ட் ஆகவோ வரித்துக்கொண்டது கிடையாது. அவ்வளவிற்கு எனக்கு அதில் ஞானமும் கிடையாது. ஆனால், நானும் உழைக்கும் வர்க்கம் என்பதால் அதில் ஓர் ஈடுபாடு உண்டு. நான் என்னுடைய புரிதலில் சொல்கிறேன். எங்கள் உரிமைகளை பெற மார்க்சிஸ்ட்/கம்யூனிஸ்ட் பாதையில் தான் போராடவேண்டும் என்பதில்லையே. எந்த நியாமனான வழியிலும் போராடலாம். 

        ஈழத்தில் மீள்கட்டுமானப்பணிகள், வேலைவாய்ப்புகள் தேவைதான். ஆனால், தவித்த முயல் அடிப்பது போல் எங்களின் அவலங்களை காரணம் காட்டி சிங்கள பேரினவாதத்திற்கு அடிமையாய் இருந்தது போதாது என்று அந்நிய முதலாளிகளின் சுரண்டலுக்கும் அடிமைகள் ஆக வேண்டுமா நாங்கள்? பிறகு, ஈழமும் இன்னோர் ஆபிரிக்கா ஆகாதா? அதில் நிச்சயமாக எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக காங்கோவில் எவ்வளவோ மூலவளங்கள் உள்ளன. அதன் பயனை யார் அனுபவிக்கிறார்கள்? அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தானே. அந்த மக்களின் இழிநிலை யாரறிவார். இது சற்றே விவாதிக்கும் விடயத்திலிருந்து விலகியதுதான் ஆனாலும் கொஞ்சம் தொடர்புண்டு. அண்மையில், தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆதவன் திரைப்பட பாட்டு ஒன்று கொங்கோவில் படமாக்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் சூர்யாவின் காதாபாத்திரம் பாடுவது, அந்த மக்கள் துயரங்களை எல்லாம் மறந்து விட்டு வாழ்கையை தொடர வேண்டுமாம். அடிபட்டவனுக்கு அறிவுரையா தெரியவில்லை எனக்கு? அதை கேட்ட  போது மனம் வலித்தது. ஈழத்தமிழர்களாகிய நாங்களும் முன்னேறத்தான் துடிக்கிறோம். ஆனால், அடிபட்டதை மறந்துவிட்டல்ல. அதையே மனதில் வைத்து, வலிகளிலிருந்து பாடம் கற்று, இன்னொருமுறை யாருக்கும் அடிமைப்படாமல் முன்னேற நினைக்கிறோம். இதையெல்லாம் புரிந்துகொள்ள கொஞ்சம் உலக அறிவு இருந்தாலே போதும். கம்முனிச அறிவு தேவையில்லையே. முதலாளித்துவத்தை கம்யூனிஸ்ட் ஆக இருந்துதான் தான் எதிர்க்க வேண்டுமா? 

        இந்தியாவின் வளங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டத்தொடங்கியபின் தான் இந்தியா முன்னேறியது என்று பெருமைப்படுகிறீர்களா? எனக்கு புரியவில்லை. ஈழத்தில் எங்கள் மண்ணை, மக்களை, வளங்களை மற்றவர்கள் சுரண்டுவதை பெருமையோடு சொல்லுமளவிற்கு எனக்கு பரந்த மனப்பான்மை கிடையாது. மற்றது, கனடாவில் இருப்பது முற்றுமுழுதாக free marketing கிடையாது. அது Welfare or State Capitalism, தமிழில் அரசமுதலாளித்துவம் என்று நினைக்கிறேன், தான் உள்ளது. அரசாங்கம் நிறைய சட்டங்களின் மூலம் பொதுமக்களின் நலன்கள்  மற்றும்  தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலார்களின் உரிமைகள் என்பவற்றை பாதுகாக்கிறது. கனடாவின் அரசியல் பற்றி எனக்கு நிறைய விமர்சம் உண்டு. ஆனால், மனித உரிமைகளை மதிக்கும் விடயத்தில் எத்தனையோ நாடுகளோடு ஒப்பிடும் போது கனடா எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும். Liberal Democracy என்பதும் இன்னும் அதன் முழுமையான வடிவத்தை பெறவில்லை என்பதுதான் என் கருத்து. இன்று எந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியை யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள். 

        • /////இந்தியாவின் வளங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டத்தொடங்கியபின் தான் இந்தியா முன்னேறியது என்று பெருமைப்படுகிறீர்களா? ///// ரதி, பெருமைபடவும் இல்லை. சிறுமைபடவும் இல்லை. நீங்க subjective ஆக தான் பார்க்கிறீங்க. objective ஆக பார்க்க தேவையா detachment உங்களிடம் மிக குறைவாக உள்ளது.

          தமிழகத்தில் அந்நிய முதலீடுகளுக்கும், வட இந்திய நிறுவனங்களின் முதலிடுகளுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. (அந்நிய செலவாணி விசியம் தவிர). விளைவு ஏறக்குறைய ஒன்றுதான். இதில் சுரண்டல், வளங்களை கொள்ளையடித்தல், அடமைபடுத்தல் என்பதெல்லம் கம்யுனிஸ்டுகளின் வெற்று மொழி சொல்லாடல்கள். meaningless jargon and empty slogans.

          ஈழபகுதிகளில் எதிர்காலத்தில் சிங்டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செல் போன் மற்றும் இணைய சேவைகளை மிக மலிவாகவும், விரிவாகவும் செய்யப் போகிறார்கள். இதன் மூலம் உங்க ஈழ நண்பர்களுடனும், உறவுகளுடனும் மிக எளிதாக, மலிவான விலையில் தினமும் பேசப்போகிறீர்கள். இங்கு நாம் உரையாடுவது போல அவர்களுடனும் உரையாடப்போகிறீர்கள். இது போல பல பல நன்மைகள் உருவாகப்போகின்றன. முகாம்கள் இன்னும் சில காலத்தில் மூடப்பட்டு, மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்புகிறேன். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் அங்கு நிலைமை மேம்பட்டு, மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் அடிப்படை ஜனனாயகம் மேம்படும் என்றே நினைக்கிறேன். ராஜபக்சே நிரந்தரமாக ஆளப்போவதில்லை. மாற்றம் வரும். ஒரு ஜனனாயகவாதி எதிர்காலத்தில் வரலாம்.

        • ////கனடாவில் இருப்பது முற்றுமுழுதாக free marketing கிடையாது. அது Welfare or State Capitalism, தமிழில் அரசமுதலாளித்துவம் என்று நினைக்கிறேன், தான் உள்ளது. அரசாங்கம் நிறைய சட்டங்களின் மூலம் பொதுமக்களின் நலன்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலார்களின் உரிமைகள் என்பவற்றை பாதுகாக்கிறது. கனடாவின் அரசியல் பற்றி எனக்கு நிறைய விமர்சம் உண்டு. ஆனால், மனித உரிமைகளை மதிக்கும் விடயத்தில் எத்தனையோ நாடுகளோடு ஒப்பிடும் போது கனடா எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும். Liberal Democracy என்பதும் இன்னும் அதன் முழுமையான வடிவத்தை பெறவில்லை என்பதுதான் என் கருத்து. இன்று எந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியைs யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள். /////

          Welfare state is a part of free market capitalism. the debate is about the extent and depth of the welfare mechanism, not about the need for it. ok. And Canada has extensive mineral wealth and oil resources which are ‘exploited’ by MNCs, etc. That is the reason for Canadian prosperity and high standard of living. (we envy you !!) and this statement “ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியை யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள்” is nonsense and typical cliche of communist propoganda (and it is funny that they should talk about this, given their track record of elections and democracy !!). ஒபாமா ஜனாதிபதியாவார் என்று் யாரும் திட்டமிடவில்லை. சதியும் இல்லை. அவரை எந்த முதலாளி சதி செய்து அதிபராக்கினார். கார்பரேட் நன்கொடைகள் சட்டப்படிதான் அங்கு செலுத்தப்படுகின்றன.

          கனடாவின் நிலை இன்னும் பரவாயில்லை. 100 % perfect ஆன ஜனனாயக அமைப்பு எங்கும் இல்லைதான். ஆனால் அதை நோக்கி செல்ல முயல்வதே அறிவுடைமை.

  11. ஐயோ…! இந்தியா நாசமாப் போக…

    இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம்.

    இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் மேலாக யார் மனதையாவது காயப்படுத்துமானால் வருந்துகின்றோம்.

    – 4tamilmedia Team

    “ஐயோ…! இந்தியா நாசமாப் போக..”

    இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.

    இன்று…மாலையில் களநிலைச் செய்திகளைச் சேகரிக்கச் சென்று கொண்டிருந்த போது, ” ஐயோ…! இந்தியா நாசமாப் போக..” என்ற அந்த அபலைத் தாயின் அலறல் கேட்டது. சுற்றி நின்றவர்களிடம் விபரம் கேட்டபோது, மூன்று பிள்ளைகளையும், தன் முழங்காலுக்குக் கீழேயுள்ள காற்பகுதியையும், இழந்துவிட்டஒரு பெண்ணின் ஆவேசமான கதறல் அது எனத் தெரிய வந்தது.

    எண்ணிப் பார்க்கின்றேன். உண்மையில் ஈழத்துமக்களின் மனங்களில் இந்தியா குறித்த நேசம் இப்படியாகவா இருந்தது ?.

    இந்தியா எமது அன்னைபூமி என்பார் சிலர். ஆன்மீக பூமி என்பார் சிலர். அந்த மண்ணில் ஒரு தரம் கால் பதித்தால் எந்த மனிதனது கவலைகளும் பறந்து போய்விடும் என்று ஒரு காலத்தில் பலர் சொல்லி மகிழ்வதைக் கேட்டிருக்கின்றேன். ஈழவிடுதலைப் போராட்டம் முகிழ்ந்த போதுகளில் கூட, இலங்கைஅரசு சொல்வதையோ, ஏன் விடுதலை இயக்கங்கள் சொல்வதையோ எம் மக்கள் அதிகம் நம்பியதில்லை. இந்தியா என்ற தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, மாநிலச் செய்திகள் கேட்கும் அவர்களின் ஆவலில் தெரியும்.

    இந்தியாவின் வெற்றிகள், வேதனைகள் அத்தனையையும், இந்தியமக்கள் எவ்விதம் அனுபவித்தார்களோ.. அப்படியே அனுபவித்தவர்கள். ஈழமக்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி மறைந்தபோது, இந்தியாவிலும் தமிழகத்திலும் எத்துனைபேர் அழுதார்களோ தெரியாது. ஆனால் ஈழத்தில் அத்தனைபேரும் அழுதார்கள். எத்தனையோ தாய்மார், அன்னையின் அந்திமக் கிரிகைககள் முடியும் மட்டும் உண்ணாதிருந்தார்கள். அத்தனை பாசமிக்க மக்களின் மத்தியிலிருந்ததான் இன்று இப்படியொரு கதறல்.

    இந்திய உறவுகளே!

    இந்தக் கதறலின் வலி உங்களுக்குப் புரியவில்லையா. புரிந்தும் வாழாதிருக்கின்றீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ.. அப்படியெல்லாம் சொல்லியாயிற்று. இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது என்பது, தமிழகத்தின் கடைநிலை மாந்தனுக்கும் புரிகிறது, எறிகணைகளின் வீச்சுக்களில் எரிந்து கொண்டிருக்கும் ஈழத்து மக்களுக்கும் புரிகிறது. ஆனாலும், தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைவர்களுக்கு மட்டும் புரியாமல் போய்விடுகிறது.

    படித்த மேதாவிகள், பல்லிளித்துச் சொல்கிறார்கள் இந்தியா எப்போதும் நல்லதே செய்யுமென்று. உங்கள் கறுப்புக் கண்ணாடிகள் கண்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தோம், ஆனால் மனதுக்கும் கூட என்பதை உணர்ந்துகொள்ளாதிருந்து விட்டோம். இந்திய மத்திய அரசின் செய்கை என்னவென்று உங்கள் எல்லோர்க்கும் புரிகிறது. ஆனால், உங்கள் பிராந்திய வல்லரசெனும் பெருங்கனவில், ஈழத்தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளை ஆராதிக்கின்றீர்கள். ஒன்று மட்டும் சொல்ல ஆசை. நீதிக்குப் பிழையான இந்த நெறிமுறையால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடக் கூடும். ஏனென்றால், அரசியலில் நீங்கள் கூட்டு வைத்திருக்கும் கொடுங் சிங்கங்கள் என்பதற்குமப்பால், ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும்’ என ஏதோஓரு நம்பிக்கை மொழி எங்கள் மொழியில் உண்டாமே. அது சத்தியமான வார்த்தையெனில், உங்கள் ‘அக்னி’களுக்கும், ‘பிருது’விகளுக்கும், அப்பால் ஏதோ ஒன்று உங்களை இல்லாது செய்யும் என்ற நம்பிக்கையில் கத்தியிருக்கின்றாள் அந்த அபலை. இன்னும் சொல்வதானால் ஏதுமற்றவள் அழுது குழறி, ஐயோ எனச் சொல்லி இட்டிருப்பது சபதம் அல்ல சாபம்.

  12. அதியமான், 

    எந்தவொரு பொருளாதார கொள்கைமூலமும் (Economic System) இதுவரை வறுமையை ஒழித்த நாடு உண்டா? Welfare Capitalism மூலம் கனடா தன் நாட்டு மக்களின்  பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க முடிந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாட்டின் வளங்களுக்கு ஏற்ப வாழ்க்கை தர சுட்டிகள் உயரலாம். ஆனால், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது தான் கேள்வி. அப்படியே உயர்ந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது, நிறைய போராடவேண்டியுள்ளது. வாழ்க்கைத்தரம் என்பதும் இங்கு மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடுகிறது. நீங்கள் கனடா என்றவுடன் அதன் பொருளாதாரம், வாழ்க்கை பற்றி எல்லாம் ஏதோவொரு மாயையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. இங்கேயும் எப்போது முதலாளி தொழிலை இழுத்துமூடிவிட்டு போவார், எப்போது என் வேலை பறிபோகும் என்ற கவலைகளுடன் தான் எங்களின் வாழ்வும் நகர்கிறது. ஆனால், கனடாவில் ஊழல் தலைவிரித்து ஆடவில்லை. முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கம் இருந்தாலும் மக்கள் நலனில் ஓரளவுக்கு அக்கறையோடும் இருக்கிறார்கள். காரணம், அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டுமல்லவா. 

    ஈழம் என்றாலும் சரி, தமிழ்நாடு என்றாலும் சரி குறைந்த விலையில் செல்லிடப்பேசி சேவை கிடைப்பது என்பதும், சிறிய சிறிய முன்னேற்றங்களும் மட்டுமே அடிப்படை வாழ்க்கை முன்னேற்றம் என்று ஆகுமா? சிறிய மீனைபோட்டு பெரியமீனை பிடிப்பது போல் தான் இதுவும். இது பற்றிய ஓர் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவரவேண்டும் என்று ஓர் மார்க்சிஸ்ட்/கம்யூனிஸ்ட்  நினைக்கிறார். அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் Cliche என்று ஆகுமா. அது அவர்கள் கொண்ட கொள்கையின் மொழி. நீங்கள் கூடத்தான் முதலாளியப் பொருளாதார முறையில் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்று அதன் மொழியில் பேசுகிறீர்கள். மொத்தத்தில் எல்லோரும் மக்களின் வாழ்க்கை அதன் தரம் முன்னேறவேண்டும் என்றுதான் நினைக்கிறீர்கள். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை (பொருளாதார கொள்கை) சரியென்று நினைக்கிறீர்கள். அவ்வளவு தான் நான் சொல்ல நினைப்பது. மற்றப்படி, அரசியல்வாதிகளும், முதலாளிகளும் ஒருவர் சூட்டில் மற்றவர் குளிர் காயும் வரை நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் எந்தவொரு பொருளாதாரக் கொள்கை மூலமும் முன்னேறாது. 

  13. //ஒரு நாட்டின் வளங்களுக்கு ஏற்ப வாழ்க்கை தர சுட்டிகள் உயரலாம். ஆனால், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது தான் கேள்வி. அப்படியே உயர்ந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது, நிறைய போராடவேண்டியுள்ளது. வாழ்க்கைத்தரம் என்பதும் இங்கு மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடுகிறது. நீங்கள் கனடா என்றவுடன் அதன் பொருளாதாரம், வாழ்க்கை பற்றி எல்லாம் ஏதோவொரு மாயையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. /// இல்லை. நீங்க தான் முழு விவரங்கள் தெரியாமல் மற்றும் economic history of the world பற்றி அறியாமல் பொதுப்படையாக பேசுகிறீர்கள். இயற்க்கை வளங்கள் மிக அதிகமுள்ள ஆப்பரிக்க நாடுகள் பலவும், கடும் வறுமையில், ஊழலில், அடக்குமுறையில் சீரழிகின்றன. ஆனால் கனடா பரவாயில்லை. எப்படி ? 100 சதம் வறுமையை எந்த அமைப்பிலும் ஒழிக்க முடியாது. (நடைமுறை சோசியலிச பரிசோதனைகளிலும் தான்). ஆனால் மிக மிக குறைக்கலாம். கனடாவில் நீங்க வாழ அதிர்ஸ்டம் செய்திருகிறீர்கள். job insecurity is nothing. would you like to live in India or Africa for a change ? Job insecurity is a small price to pay for the very high standarf of living there. and reg : telecom in Eelam : that is one example i said. there will be over all improvement in living standards slowly due to industrialisation and free markets. that is the past economic history of the world.

  14. //மற்றப்படி, அரசியல்வாதிகளும், முதலாளிகளும் ஒருவர் சூட்டில் மற்றவர் குளிர் காயும் வரை நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் எந்தவொரு பொருளாதாரக் கொள்கை மூலமும் முன்னேறாது./// true. but how did Canada improve so much in the past 100 years while Mexico is in bad shape ? Nigeria, immense oil and other resources is worse off. Colonilaism is over for good. the reasons are the economic and politcal system : free markets and liberal democracy Vs dictatorship and crony capitalism.

Leave a Reply to K.R.அதியமான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க