Tuesday, October 3, 2023
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது... குத்தும் !!

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

-

பிடி கத்திரிக்காய்இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

படிக்க

 1. இது குறித்த விவாதங்களாவது திசைதிருப்பப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 2. உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ? ஆழமான சிந்தனை.

  • Bt Brinjal – இதில் Bt என்பது ஒரு உயிரி  soil bacterium Bacillus thuringiensis .வழமையான கத்திரிக்காய் போல அல்லாமல் இது பேசில்லஸ் பாக்டீரியாவின் மரபணு (GENE) எடுத்து கத்திரிக்காயின் மரபணுவுடன் சேர்த்து பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உயிரி.

   இது போன்ற முறையில் உருவாக்கப்பட்ட BtCotton தான் இந்திய நிலத்தையும் மலடாக்கி கடனையும் உருவாக்கி ஆந்திர விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மண்னையே தரிசாக்கும் என்றால் மனித உடல் என்னாவது……

   • இல்லை. பி.டி காட்டன் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தது. இன்று யாரும் கண்டுகொள்வதில்லை. பி.டி.காட்டன் வெற்றிகரமாக பயிரடப்படுகிறது. அதை பற்றிய சமீபத்திய ஆய்வு :

    http://www.apaari.org/wp-content/uploads/2009/10/bt-cotton-2nd-edition.pdf

    ஆனால் பி.டி. பிர்ஞ்சால் பற்றி இன்னும் முழுமையான ஆய்வுகள், தகவல்கள் இல்லைதான். அவசரப்படாமல், நிதானமாக அணுகவேண்டும். வளர்ந்த நாடுகளில் ஜி.எம். உணவுகள் தனியாக விற்பனையாகின்றன.
    விவாதங்கள் தொடர்கின்றன.

    • ///Author: peace
     Comment:
     //ஜி.எம். உணவுகள் தனியாக விற்பனையாகின்றன.//இது தவறான தகவல்./// ஜி.எம் உணவுகள் என்று பேக்கிங்களில் மிக மிக தெளிவாக குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவை அங்காடிகளில் தனியாக வைக்கபடுகின்றன. அதைதான் குறிப்பிடேன்.

    • Only 40% of people in the U.S. know that some of the foods they are buying and eating are genetically modified (GM), according to a new survey conducted by the International Food Information Council (IFIC), an industry group funded by food, beverage and agricultural industries. Additionally nearly 1 out of 4 people incorrectly believes that such foods are not being sold in the United States.

     Currently, the use of genetically modified food is a subject of enormous global controversy. Environmental and consumer groups have demanded that the U.S. Food and Drug Administration (FDA) follow the lead of the European Union, Japan and other nations by requiring labels on GM foods to allow consumers to know what they are buying. The U.S. government claims that such mandatory food labels are not necessary because genetically modified food ‘poses no inherent safety risk’.

     Back in 1992 the U.S. Food and Drug Administration determined that genetically engineered (GE) foods are in most cases ‘the same as or substantially similar to substances commonly found in food’ and thus are not required to undergo specific safety tests prior to entering the market.

     The FDA has refused to require labeling of genetically engineered foods, despite overwhelming American support for mandatory labeling. Since the agency has refused to protect consumers, some food companies are now taking action by labeling certain products or ingredients “non-gmo”, which means “made without genetically modified organisms”.

     The U. S. may soon be the only country in the world which does NOT require labeling of genetically engineered food.//

    • சொந்த அனுபவம். நம் ஊர் மாதிரிதான் காய்கறி வாங்குகிறேன். எந்த எச்சரிக்கையும் கிடையாது.

    • உண்மையில் அறிவியல் ஆய்வுகள் என்ன சொன்னாலும் அதற்கு  மறுப்பாக மற்றொரு ஆய்வின் முடிவு இருக்கும். (இது போன்ற long term consequences கண்டுபிடிப்பதில்). உண்மையில் BT ஆதரவாளர்கள்/கம்பெனிகள் விரும்புவதும் அறிவியல்பூர்வமான விவாதங்களை தான். நிச்சயமாக அவர்களால் சாதகமான ஆய்வறிக்கை கொடுக்கமுடியும்.(உண்மையாகவும் இருக்கலாம்.)
     ஆதலால் இதனை எதிர்ப்பதில் ஐரோப்பாவில் வேறுவிதமான விவாதங்களே நடக்கின்றன.  இன்றைய சமூகத்தில், உலகளவில் எழுபது சதவீத விவசாயிகள் சிறுவிவசாயிகள் தான்.  விதைபொருள் ஒரு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது எந்தவிதத்தில் நல்லது என்று தெரியவில்லை. இருபது முப்பது வருடங்களில் மூன்று / நான்கு நிறுவனங்கள் உலகத்தில் விவசாயத்தை கட்டுப்படுத்தும்.  கேப்பிட்டலிசத்தை  ஆதரிக்கும் பலரும் கூட இதை முழுவதுமாக ஆதரிக்கவில்லை.

    • மணி, மிகச்சரியான வாதம். //இருபது முப்பது வருடங்களில் மூன்று / நான்கு நிறுவனங்கள் உலகத்தில் விவசாயத்தை கட்டுப்படுத்தும// இதுதான் அபாயகரமான பிரச்சனை. மற்றது அல்ல… மான்சான்டோ, கார்கில் உள்ளிட்ட கம்பெனிகள் திட்டமிடுவது இதற்காகத்தான். இங்கு விவாதிக்கப்படவேண்டிய விசயமும் இதுதான்

 3. தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை. எழுத்து நடையில் வில்லவன் தனித்து தெரிகிறார். வாழ்த்துக்கள் வில்லவன். தொடர்ந்து எழுதுங்கள்.

 4. போலி கம்யூனிசம், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருத்துவம், பாஸிசம் போன்ற வார்த்தைகள் இன்றி வினவில் இப்படி ஒரு பதிவா? வினவின் சுய விளம்பரமோக பித்து தெளிந்துவிட்டதா? எப்படி? என்று அதிசயப்பட்டால்……, வினவு அல்ல…., வில்லவன்…!

  மிகச்சிறந்த பதிவு. நாட்டுக்கும் மக்களுக்கும் மிக மிக அவசியமான பதிவு. தமிழ்மண மகுடமோ, இருபது ஆதரவு ஒட்டுக்களோ, முன்னூறு மறுமொழிகளோ, தொள்ளாயிரம் ஹிட்சோ, ஒன்பதாயிரம் பார்வைகளோ அவசியம் இல்லை. மன நிறைவு. நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக ஒரு பதிவு போட்ட மன நிம்மதி, ஆத்ம திருப்தி. அதுபோதும் திரு.வில்லவன். ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து எழுதிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிவை முழுதும் படித்தவுடன் நிலைமையின் விபரீதம் உரைக்கிறது. இப்படி நடக்குமா? இது உண்மையாக இருக்குமா? என்ன ஆதாரம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கள், பதிவின் உள்ளேயே இருக்கிறது. அப்படிஎன்றால் இதனை எப்படி ஒழிப்பது? கடைசி வரிகள் அதற்கும் பதிலாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன.

  ஒருவேளை டில்லி முற்றுகை கைகொடுக்கவில்லை என்றால், அடுத்தவழி – ஒட்டுமொத்த சமூக பகிஷ்கரிப்பு…! யாரும் வாங்காத கத்தரிக்காயை யார் விதைத்து நஷ்டமடையப்போகிறார்? அதற்கு முக்கிய ஆயுதம், சமூக விழிப்புணர்வு. இப்பதிவை உலகம் அறிய பரப்புவதே இப்போது ஒவ்வொரு தனிமனிதன் கையிலும் இருக்கும் முக்கிய முதற்பனி. என்னால் முடிந்தவரை எனக்குத்தெரிந்த அனைத்து மக்களுக்கும் இப்பதிவை, ஈமெயில் அனுப்பி விடுகிறேன். இனியென்ன….இதை படித்த நீங்களும் ஆரம்பித்துவிட வேண்டியதுதானே…? மக்கள் புரட்சி என்றால் இப்படித்தான் அமையும்.

  • //போலி கம்யூனிசம், பார்ப்பனீயம், இஸ்லாம், கிருத்துவம், பாஸிசம் போன்ற வார்த்தைகள் இன்றி வினவில் இப்படி ஒரு பதிவா? வினவின் சுய விளம்பரமோக பித்து தெளிந்துவிட்டதா?//நெத்தியடி பாய், ஏன் இந்த கொலை வெறி, தேவையற்ற வார்த்தைகளை எழுதுவதை தவிர்ப்பது உங்களுக்கு மரியாதை தரும். இங்கீதம் பழகினால் நலம்.

 5. அதியமான்,

  நீங்கள் சொல்வது தவறு. பி.டி பருத்தி விளைவித்த ஆந்திர விவசாயிகள் சொல்லவியலாது துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.. அதற்கு நிறைய
  ஆதாரங்களும் ஆய்வு முடிவுகளும் உள்ளன.. இங்கே எத்தனை ஆதாரங்கள் / ஆய்வு முடிவுகளைக் கொடுத்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப்
  போவதில்லை End of the day, “உன் வயசு.. என் அனுபவம்” போன்ற சிவாஜி டயலாக்குகள் தான் உங்களிடம் தேறும்.. 🙂 எனவே எனது
  மறுமொழி இங்கே வரும் பொதுவான வாசகர்களின் கவனத்துக்காக.

  a) பி.டி எனப்படும் ஒருவகை பேக்டீரியாவின் மரபணுவின் கூறுகளை பாரம்பரிய ரக பருத்தியின் மரபணுவோடு இனைத்து தான் பி.டி பருத்தி
  உருவாக்கப்பட்டுள்ளது.. இதில் உடல் நலனுக்கு கேடானா க்ரை (Cry) ரக ப்ரோட்டீன் உள்ளது. குறிப்பாக மனிதர்கள் உட்கொள்ள தகாத
  க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வகை ப்ரோட்டீன் உள்ளது ( இது பிடி கத்தரிக்கும் பொருந்தும்)

  b) இதில் க்ரை1ஏசி உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறனை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை (mucosal immunogen)..

  c) பிலிபைன்ஸ் நாட்டில் பி.டி வகை பயிர்களை விளைவித்த தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் சிலர் மரணம் அடைந்துள்ளனர்
  ( ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMBanLongOverdue.php)

  d) ஆந்திராவில் பி.டி பருத்தி வயல்களில் வேலை செய்த விவசாயிகளுக்கு இன்னதென்று இனம் காணவியலாத பல மர்ம நோய்கள் தாக்கியுள்ளது.
  அவ்வயல்களில் மேய்ந்த ஆடுகள் நூற்றுக்கணக்கில் செத்துப்போய் உள்ளது (ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMeggplant.php )

  e) கம்யூனிஸ்டுகள் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் எனும் முன்முடிவுகளோடு இருப்பவர்கள் பி.டி கத்தரியைப் பற்றி க்ரீன்பீஸ்
  இயக்கத்தினர் சுயேச்சையான விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளை வாசித்துப் பார்க்கலாம். குறிப்பாக ப்ரென்ச் விஞ்ஞானியான
  செராலினி நடத்திய ஆய்வு முடிவுகள் பி.டி கத்தரி மனிதர்கள் உட்கொள்ளத் தகாதது என்று தெளிவாகச் சொல்கிறது

  f) விஞ்ஞானிகள் பிடி கத்தரிக்காயை சோதனைச் சாலை எலிகளின் மேல் பரிசோதித்த போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்பட்டது.
  சாதாரணமாக எலியின் குணம் என்னவென்றால் கண்ணில் கண்டதையெல்லாம் அது கடித்துக் கொண்டேயிருக்கும் – ஏனெனில் அதன் பல்
  நாளொன்றுக்கு இரண்டு மில்லி மீட்டர் வளரும் தன்மை கொண்டது.. எலி எதையும் கடிக்காமல் இருந்தால் பல் வேகமாக வளர்ந்து எதையும்
  சாப்பிடாமல் இறந்து போய் விடும். எனவே அது எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்கும். பரிசோதனைக்காக எலி இருந்த கூண்டுக்குள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்தரியை வைத்தபோது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் படிக்கு எலிகள் அந்த கத்தரியில் வாயே
  வைக்கவில்லை. பின்னர் வேறு வகைகளில் அந்தக் கத்தரியை எலி உட்கொள்ளுமாறு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி பிடி கத்தரிக்காயை
  உட்கொண்ட எலிகள் கடும்வயிற்றுப்போக்குக்கு உள்ளாகியிருக்கிறது; வெறிகொண்டதைப் போல நிறைய தண்ணீரை குடித்துக்
  கொண்டேயிருந்திருக்கிறது. மேலும் அதன் கல்லீரல் சாதாரண எலிகளைவிட மிகவும் சுருங்கிப் போய் இருக்கிறது; அவற்றின் ரத்த உறைவுத்
  தன்மையும் கூட குறைந்திருக்கிறது (prothrombin), மேலும் ரத்தத்தில் ஆல்கலின் பாஸ்பேட்டின் அளவு அச்சமூட்டும் விதமாக உயர்ந்து
  கொண்டேயிருந்திருக்கிறது. இறுதியில் அவை புற்று நோய் கண்டு செத்தே போயிருக்கிறது.

  மேலும் பி.டி ரக பயிர்கள் தாம் வளரும் வயல்களை மட்டுமல்லாது தனது சுற்றுப்புற வயல்களில் வளரும் பாரம்பரிய பயிர்களைக் கூட ஊடுருவி
  தாக்குதல் செய்யும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட ஒன்றாகும். இதன் மகரந்தங்கள் மிக எளிதில் பட்டாம்பூச்சிகள், தேனீக்களால் கடத்தப்பட்டு
  பக்கத்து வயல்களில் உள்ள நாட்டு ரக பயிர்களையும் ஊடுருவி அதன் இயல்பான தன்மையை மாற்றியமைத்து விடும் ஆற்றல் கொண்டது. பி.டி
  விதைகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், அவ்விதைகளை மறுவிதைப்பு செய்யமுடியாதபடிக்கு அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது – அதாவது விளைவித்த பி.டி கத்தரிக்காயிலிருந்து மீண்டும் விதையெடுத்து விதைக்க முடியாது – இதனை டெர்மினேட்டர் தொழில்நுட்பம்
  என்கிறார்கள்.

  g) பி.டி பருத்தி விளைவித்த விவசாயிகளுக்கு நாடெங்கிலும் வித விதமான தொல்லைகள் –

  1) பி.டி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் தண்ணீரை அதிகம் உறிஞ்சக் கூடியது.. எனவே ஆந்திரத்தில் ஒரே வயலில்
  ஒன்றுக்கு மேல் கிணரு வெட்டியிருக்கிறார்கள் ( கடன் வாங்கி )

  2) பிடி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் 30% அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை
  கொண்டது ( பி.டி பயிர்களுக்கு பூச்சி மருந்து தேவையில்லை என்பது பொய்) அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மருந்து தெளிக்க வேண்டும்..
  அதுவும் சாதாரண பூச்சி கொல்லி மருந்து / உரம் போன்றவை செல்லாது – அதிக விலையும் அதிக வீரியமும் கொண்டு மருந்துகளே தெளிக்க
  வேண்டும்.. இதனால் நிலம் பாழ்பட்டது ஒருபுறம் என்றால் கடனில் விழுந்தது மறுபக்கம்

  3) தர்மபுரி, சேலம் பகுதிகளில் பி.டி பருத்திச் செடிகள் மரம் அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்த பின்னும் பருத்திக் காய்கள் காய்க்கவில்லை!
  தர்மபுரி கலெக்டர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ5000/- இழப்பீட்டை மான்சாண்டோ விடம் இருந்து விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆந்திர
  அரசாங்கம் மான்சாண்டோ மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது

  4) விதர்பா பகுதிகளில் பி.டி பருத்தி நாட்டு ரக பருத்தியை விட மிகக் குறைவான சாகுபடியையே தந்திருக்கிறது

  5) மொத்தமாக எல்லாமும் சேர்ந்து விதர்பா, ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி விட்டுள்ளது. நிலமும் செத்துப் போய் விட்டதால் இப்போது அதில் விவசாயமும் பார்க்க முடியாமல் அக் குடும்பங்கள் தவித்துக் கிடக்கிறார்கள்

  h) பி.டி ரக வயல்களில் சாதாரணமாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விட மிக அதிக வீரியம் கொண்ட புதிய வகை பூச்சிகள் உருவாகி
  உள்ளது ( ம்யூட்டேஷன்) இப்பூச்சிகள், பி.டி வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் நாட்டுப் பயிர்களையும் தாக்கியிருக்கிறது ( இதையும்
  மீறித்தான் நாட்டு ரகங்கள் பி.டி ரகங்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது)

  தோழர் வினவு,

  முன்பு நாம் மான்சாண்டோ பற்றி கொண்டு வந்திருந்த
  ஒரு சிறு வெளியீட்டை இப்போது இணையத்தில்
  வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக்
  கருதுகிறேன்.. வாய்ப்பிருந்தால் அதனை பதிவு
  செய்யவும்.

  தோழமையுடன்,

  கார்க்கி

  • உங்கள் ஆலோசனைக்கும், விரிவான விளக்கத்திற்கு நன்றி தோழர் கார்க்கி. கூடிய விரைவில் மான்சாண்டோ வெளியீடை வெளியிட முயல்கிறோம்.

  • தோழர் கார்கி,
   ஆந்திராவில் மட்டும் ஏன் அப்படி ? சில நேரங்களில் தர்மபுரியில் ஆனது போல failure ஆகிறதுதான். நீங்க அளித்த விவரங்கள் அனைத்துமே பொய் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில பல பல பகுதிகளில் பி.டி காட்டன் இன்று வெற்றிகரமாக பயிரடப்படுகிறது. நான் அளித்த சுட்டி (2009 ஆய்வு) அய் முழுமையாக பார்க்கவும். பி.டி.காட்டன் கடும் எதிர்விளைவுகளை உண்மையில் ஏற்படுத்தியிருந்தால், இன்னேறம் அதை எதிர்த்து நாடு தழுவிய பெரும் போராட்டம் உருவாகியிருக்கும். ஆனால் நாளுக்கு நாள் பி.டி காட்டன் பயிரட்டப்ப்டும் அளவு அதிகமாகிறது. நான் அளித்த சுட்டியின் conclusions படித்து பாருங்க.

   விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள் ; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti, etc. பி.டி காட்டன் மற்றும் தாரளமயமாக்கள் தான் காரணம் என்றால், இந்தியா முழுவதும், அனைத்து பகுதிகளிலும், அனைத்து வகை விlவசாயிகளும் ஒரே அளவில் பாதிப்படைந்து, தற்கொலை விகிதமும் ஒரே அளவில் இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை.

   6 ஆண்டுகளுக்கு முன் இருந்து கடும் எதிர்ப்பு, இன்று பி.டி காட்டனுக்கு இல்லை. higher yields and lower costs resulting in more profits for BT cotton farmers : இதுதான் நடக்கிறது. அந்த சுட்டி மிக விரிவானது. ஆதாரபூர்வமான் ஆய்வு. உங்க சுட்டிகளையும் பார்க்கிறேன். மேலும்…

   • மேற்படி ‘ம.மா.விதை வகையறாக்கள்’ அமோக மகசூலே கொடுத்துவிட்டு போகட்டுமே. ஆனால், அவை மீண்டும் விதைக்க முடியாத ‘மலட்டு தாவரங்கள்’ என்றால் அது இயற்கைக்கு எதிரானது. அப்பட்டமான விதை விற்பனைக்கான மோனோபோலி சூழ்ச்சியே இது. இந்த ஒரு காரணமே போதும், இதை ஏற்காமல் இருக்க & எதிர்க்க.

    “உங்களுக்கு பிறக்கும் குழந்தை பலசாலியாக இருக்கும் ஆனால் இனப்பெருக்கம் செய்யாது” என்றால், எப்படி இந்த மாதிரியான ‘பி.டி.குழந்தைகளை’ ஏற்றுக்கொள்வது? அப்படியொரு ‘பலசாலி(?) குழந்தை’ அவசியம் இல்லை இந்த சமுதாயத்திற்கு. அப்படியும் ஏற்றால், பிற்காலத்தில் “oh! my dear impotent humans! buy a child for just one million dollars ” என்று ‘ஒரு American monopoly’ ஆன்லைனில் கூவி விற்கும். குழந்தை விலை அதிகமானால், வாங்கும் சக்தி போய், அடுத்த தலைமுறை இல்லை என்றாகி மனிதம் செத்துவிடும் அல்லவா? பின்னாளில் மனித சமுதாயத்திற்கு ஏற்படுவது இருக்கட்டும், தற்போது இப்படி ஒரு அவலநிலை ‘கத்தரிக்காய் சமுதாயத்திற்கு’ வர வேண்டுமா?

    திரு.கார்க்கி -யிடம் //நீங்க அளித்த விவரங்கள் அனைத்துமே பொய் என்று சொல்லவில்லை.// என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவுடன் இதை எதிர்க்காமல் இருப்பதும் ஆதரிப்பதும் மனித சமுதாயத்துக்கு எதிராக செய்யும் பாவச்செயல். மன்னிப்பில்லாத துரோகம். மேலும், ‘தண்டனைக்குறிய குற்றம்’ என்று அரசு அறிவிக்கும் நன்னாளை எதிர்நோக்கியுள்ளேன்.

  • ///Farmers from the Nimad region in Western Madhya Pradesh began complaining of health hazards after Bt cotton was planted. This prompted a three-member team representing a coalition of non-government organisations to carry out a preliminary survey in six villages in Nimad region between October and December 2005.
   ////
   தோழர் கார்கி, இது உங்க சுட்டியிலிருந்து. இந்தி்யாவில், இதர இடங்களில், பல லச்சம் விவசாய தொழிலாளர்கள் 2005க்கு பின்னும் பி.டி காட்டனை கையாள்கின்றனர். பி.டி காட்டன் தான் மேற்கொண்ட symtomsகளுக்கு காரணம் என்றால், இந்தியாவெங்கிலும் அதே போன்ற symtoms அனைத்து விவசாயத்தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கனும். ஆனால் இல்லை. ஏன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..

 6. இது முக்கியமான பிரச்சினை, உயிர் பிரச்சினை , வாழ்க்கை பிரச்சினை. பல்லாயிரம் வருடங்களாக இங்கே சிறப்பான முறையிலே வெள்ளாமை செய்து மக்கள் சமுதாயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய விசயங்கள் வந்தால், அதை சோதனை முறையிலே ஒரு ஏக்கர் அல்லது 5 ஏக்கர் அளவிலே தொடர்ந்து ஒரு ஐந்தாண்டுகள் பயிர் செய்து பார்த்து அதிலே உள்ள நல்லது கெட்டது என்ன என்று பாருங்கள். நம்ம விவசாயிகளிடம் பரீட்சார்த்த முறையில் மட்டும் செய்து பார்க்க கொடுங்கள். அவர்களே நல்லது கெட்டது என்ன என்று சொல்வார்கள். மறுபடியும் விளையக் கூடிய விதைகளையோ கன்றுகளையோ தர இயலாத தாவரம் நமக்கு வேண்டாம். மயில்சாமி அண்ணா துறை அவர்கள் சிறந்த அறிவியலாளர் தான். ஆனால் அவரது துறை வேளாண்மை அல்லது உயிரி தொழில் நுட்பம் சம்பந்தப் பட்டதா? இப்படி விளம்பரத்துக்கு ஐசுவரியா அம்மையார் போன்றவர்களை கொண்டு வந்து நிறுத்தி வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டு செல்லாதீர்கள்.

 7. அதியமான்,

  எனது முந்தைய கமெண்ட்டில் இருக்கும் உடல்நலக் கேடுகள் பற்றி சொல்லியுள்ளதற்கு உங்களிடம் பதில் இல்லை.. பி.டி பருத்தியால் நல்ல
  லாபம் என்கிற ஒரு அம்சம் தான் உங்கள் வாதம். சரி அதையும் பார்ப்போம் –

  முதலில் நீங்கள் ஆதாரமாய் சுட்டிக் காட்டும் APAARI ( Asia Pacific Association of Agricultural Research Institutions) மற்றும் இது போல்
  இன்னும் ஒரு டஜன் “தன்னார்வ” “சுயேச்சை” ஆராய்ச்சி நிறுவனங்கள் பி.டி காட்டனின் “லாபம்” பற்றி நிறைய “ஆய்வு” கட்டுரைகள்
  வெளியிட்டிருக்கிறார்கள்.. அவற்றில் சிலவற்றை நான் படித்துமிருக்கிறேன்.. தங்களது தற்போதைய பி.டி.எஃப் கோப்பையும் படித்தேன்.. ஒன்றைப்
  புரிந்து கொள்ளுங்கள் – இவர்களெல்லாம் ஆசிய வளர்ச்சி வங்கியோடு இணைந்து இப்பிராந்தியத்தில் விவசாயத்தை நவீன பாணியில்
  முன்னேற்றப்போவதாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.. ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி போன்றவற்றின் மறைமுக
  நோக்கம் என்ன, அவை எப்படி வளர்முக நாடுகளின் மேல் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும் அதன் மூலம் அமெரிக்காவின்
  ஆதிக்கத்தையும் செலுத்த வகை செய்கிறது என்பதை Confessions of an economic hitman என்ற புத்தகத்தில் ஜான் பெர்கின்ஸ் விரிவாக விளக்கி
  உள்ளார்..

  அது மிக விரிவாக விளக்கப்பட வேண்டியது – தற்போதைக்கு சுருக்கமாகச் சொல்கிறேன், தற்போது உரக் கம்பெனிகளாகவும், மரபீணி மாற்ற
  விதைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிகளாகவும் இருக்கும் மான்சாண்டோ , கார்கில் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இரண்டாம் உலகப் போரின்
  போது ராணுவத்துக்கு வெடி மருந்துகள் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும், பின்னர் ராணுவத்துக்கு கெமிக்கல் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும்
  தான் இருந்துள்ளன. வியட்நாமில் வீசப்பட்ட ஏஜெண்ட் ஆரென்ச் போன்ற கெமிக்கலை விற்ற கம்பெனியும் கூட ( பேரு மறந்துட்டேன்) இப்போது ஏதோ ஒரு உரக்கம்பெனியுடன் தான் இணைந்துள்ளது. பல்வேறு இணைப்பு & கைய்யகப்படுத்துதல்கள் மூலம் அந்தக் கம்பெனிகள்
  இணைந்தும் / பிரிந்தும் தற்போதைய வடிவத்தில் உரம் / பூச்சிக்கொல்லி / விதைகள் விற்கும் கம்பெனிகளாய் இருக்கின்றன. போர்க்காலத்தில்
  உபரியாகப் போய் விட்ட ரசாயணங்களை பிற்காலத்தில் உரங்களாக சந்தைப்படுத்தி வளரும் நாடுகளின் வயல்களில் கொட்ட போடப்பட்ட
  திட்டம் தான் “பசுமைப் புரட்சி.”

  பசுமைப் புரட்சியின் ரசாயண உரங்களால் தாக்குண்டு நல்ல விளை நிலங்களெல்லாம் களர் நிலங்களாகப் போய் விவசாயம் நொடிந்துள்ள இன்றைய
  நிலையில் இவர்கள் உலகமயமாக்கல் சூழலில் மரபணுப் புரட்சி என்று புதிய வீரிய ரக பூச்சிக் கொல்லிகளோடும், டெர்மினேட்டர் விதைகளோடும்
  வந்திறங்கியுள்ளனர். இவர்கள் நோக்கம் என்னவென்ற கோணத்தில் நமது விவாதம் திரும்பினால் மீண்டும் ஒரு லாவனி அக்கப்போராகிவிடும்
  சாத்தியம் உள்ளதால், அதை இப்போதைக்கு தவிர்த்து விட்டு “பி.டி பருத்தியால் விளைந்த லாபம்” என்ன வென்பதை மட்டும் பார்க்கலாம்.

  முதலில் பி.டி காட்டன் விளைவித்ததால் தான் இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி தாறுமாறாக எகிறி விட்டது என்று APAARI சொல்லும் பொய்யை
  உடைத்து விடுவோம் 🙂 இந்த சுட்டியில் அந்தப் பொய்யை தவிடு பொடியாக்குகிறார் ஒருவர் முதலில் அதைப் பார்த்து விடுங்கள் – http://www.munlochygmvigil.org.uk/Indian_Cotton_Production.pdf

  1) மத்திய அரசாங்கமே பி.டி பருத்தி ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் படு தோல்வி கண்டிருக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளது
  இது பற்றிய செய்தி நோ9 நவம்பர் 27 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்துள்ளது

  2) அதே மாதம் மத்திய பிரதேசத்தில் பி.டி பருத்தியின் தோல்வி குறித்து விசாரிக்குமாறு மத்திய பிரதேச மாநில கவர்னர் அரசைக் கேட்டுக்
  கொண்டிருக்கிறார்.. மேலும் மத்திய பிரதேசத்திலும் பி.டி பருத்தி வயல்களில் மேய்ந்த மாடுகள் மர்மமான முறையில் செத்துப் போயிருக்கிறது..
  இது பற்றிய செய்தி சுட்டிகள் ( http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=109530

  http://news.webindia123.com/news/showdetails.asp?id=170692&cat=Health

  3) மஹிகோ ஜனவரி 28, 2007ம் ஆண்டு பி.டி பருத்தியை விதைத்து நட்டமடைந்தவர்களுக்கு ஓமலூரில் வைத்து நட்ட ஈடு கொடுத்திருக்கிறது – http://www.bharattextile.com/newsitems/2002867

  4) விழுப்புரம், கூடலூர், சேலம் பகுதியைச் சேர்ந்த 12000 விவசாயிகள் பி.டி காட்டன் விதைத்ததால் கடும் நட்டமடைந்துள்ளனர்.. அவர்கள்
  ஏக்கருக்கு 40,000 நட்டமடைந்துள்ளதாக இந்தாண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியானது. பாரம்பரிய ரகம் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை
  லாபம் தந்ததாகவும் பி.டி ரகமோ முப்பதாயிரத்தையே தாண்டவில்லை என்றும் அதே செய்திகளில் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

  5) கருநாடகத்தில் ராய்ச்சூர், தார்வாட், ஹவேரி ஆகிய மூன்று மாவட்டங்களில் க்ரீன்பீஸ் இயக்கத்தினர் மேற்கொண்ட ஆய்வுகளின் படி
  பி.டி பருத்தி விதைத்த விவசாயிகள் கடும் நட்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்..

  6) மேலும் பி.சாய்நாத் பி.டி காட்டன் விவசாயிகளை எத்தனை கடுமையாக பாதித்துள்ளனது என்பதைப்பற்றி நிறைய எழுதியுள்ளார் அதில் இரண்டு
  சுட்டிகளை இணைத்துள்ளேன் ( http://vidarbhacrisis.blogspot.com/2009/08/vidarbha-risking-another-bt-cotton.html

  http://www.indiatogether.org/2006/nov/psa-bumper.htm )

  மேலுள்ளதெல்லம் சில துளிகள் தான்.. இயற்கை விவசாயக் குழுக்கள் மரபணு மாற்ற பயிர்களின் வெற்றிச் செய்திகளை நேரடியாக சென்று
  ஆராய்ந்த போது மான்சாண்டோ தனது விற்பனையை அதிகரிக்க செய்துள்ள தகிடு தத்தங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

  உதாரணங்கள் சில –

  1) ஜபூவா பகுதியில் சாரங்கி எனும் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் நாராயண் பட்டிதார் எனும் விவசாயினுடைய வயல்களை ஒரு நாள் போட்டோ
  பிடித்துள்ளனர் மான்சாண்டோ கம்பெனியின் பிரதிநிதிகள். சில நாட்கள் கழித்து அம்மாநிலத்தில் அவ்விவசாயியுடைய போட்டோ / அவர் வயலின்
  போட்டோ வுடன் “ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் தரும் பிடி காட்டன்” என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது… விசாரித்ததில் அவருக்கு
  சொந்தமான மொத்தம் ஐந்து ஏக்கருக்கும் சேர்ந்தே 20 குவிண்டால் தான் மகசூல் தந்துள்ளது பி.டி காட்டன். அவருக்கே தெரியாமல் அவர்
  புகைப்படத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தியுள்ளார்கள்!

  2) தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தின் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டரின் மகனான பழனிச்சாமி என்பவர் பி.டி பருத்தி
  விளைவித்ததால் நான் வாங்கிய ட்ராக்டரைப் பாருங்கள் என்று பெருமையாக போஸ் கொடுக்கும் ஒரு போஸ்டர் அப்பகுதியில் பரவலாக
  காணப்பட்டது. விசாரித்ததில், மான்சாண்டோ வின் விற்பனை பிரதிநிதிகள் பழனிச்சாமியை அணுகி, ஏதோ போட்டியென்றும் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் மும்பைக்கு சுற்றுலா என்றும் சொல்லி அவர் கடனுக்கு வாங்கிய டிராக்டரின் முன் நிற்கச் சொல்லி புகைப்படம்
  எடுத்திருக்கிறார்கள்.. அதை திருட்டுத்தனமாக போஸ்ட்டரில் பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.. பழனிச்சாமியோ பி.டி. காட்டனின் ‘லாபத்தால்’
  தன்னால் ஒரு டிராக்டர் டயரைக் கூட வாங்க முடியாது என்று புலம்பியிருக்கிறார்.

  இது போல் கிண்டக் கிண்ட நூற்றுக்கணக்கான மான்சாண்டோ ப்ராடுகள் வெளியாகிறது.. நல்ல சரக்குன்னா ஏன் இத்தனை ஏமாத்து வேலை?

  அடுத்து பி.டி காட்டனை எதிர்த்து போராட்டமே இல்லை என்று அதியமான் சொல்வது சரியல்ல.. நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடந்து
  வருகிறது.. கொஞ்சம் கூகிளை தேடித்தான் பார்க்கலாமே அதியமான்?

 8. //எனது முந்தைய கமெண்ட்டில் இருக்கும் உடல்நலக் கேடுகள் பற்றி சொல்லியுள்ளதற்கு உங்களிடம் பதில் இல்லை.. ///

  இல்லை. சொல்லியிருந்தேன். அவை ஏன் அனைத்து (பி.டி.காட்டன் பயிடப்படும்) இடங்களிலும், அனைத்து காலங்களிலும் உருவாகவில்லை ?

  அதைதான் : /////K.R.அதியமான்
  says: December 3, 2009 at 12:36 pm
  ///Farmers from the Nimad region in Western Madhya Pradesh began complaining of health hazards after Bt cotton was planted. This prompted a three-member team representing a coalition of non-government organisations to carry out a preliminary survey in six villages in Nimad region between October and December 2005.
  ////
  தோழர் கார்கி, இது உங்க சுட்டியிலிருந்து. இந்தி்யாவில், இதர இடங்களில், பல லச்சம் விவசாய தொழிலாளர்கள் 2005க்கு பின்னும் பி.டி காட்டனை கையாள்கின்றனர். பி.டி காட்டன் தான் மேற்கொண்ட symtomsகளுக்கு காரணம் என்றால், இந்தியாவெங்கிலும் அதே போன்ற symtoms அனைத்து விவசாயத்தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கனும். ஆனால் இல்லை. ஏன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..
  ////

  சரி, பி.டி காட்டன் பயிருடும் பெரும்பான்மையான விவசாயிகள் மடையர்கள் அல்ல. லாபத்திற்க்காகதான் அனைத்து விவசாயிகளும், அனைத்து பயிர்களையும் வளர்க்கின்றனர். பிறகு என்ன நஸ்டத்திற்க்காகவா அல்லது தர்மத்திற்க்காகவா ? மிக விரிவால புள்ளிவிவரங்கள் மற்றும் அலசல்கள் கொண்ட சுட்டி அது. மான்ஸட்டோ செய்யும் தந்திரங்கள், ஃப்ராடுகள் மட்டும் சுட்டுகிறீர்கள். இன்று மான்ஸட்டோவிர்க்க்கு போட்டியாக பல இதர நிறுவனங்கள் களத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளன. விவசாயிகள் தொடர்கிறார்கள். அல்லது பி.டி.காட்டன் கூடாது என்றால் நாடு தழுவிய, போராட்டம் நடத்துங்கள். யார் வேண்டாம் என்கிறார்கள் ?

  • //சரி, பி.டி காட்டன் பயிருடும் பெரும்பான்மையான விவசாயிகள் மடையர்கள் அல்ல. லாபத்திற்க்காகதான் அனைத்து விவசாயிகளும், அனைத்து பயிர்களையும் வளர்க்கின்றனர். பிறகு என்ன நஸ்டத்திற்க்காகவா அல்லது தர்மத்திற்க்காகவா ? //

   விவசாயம் நஸ்டமான தொழிலா அல்லது லாபமான தொழிலா?

   விவசாயம இந்தியாவைப் பொறுத்தவரை படு நஸ்டமான ஒரு தொழில். இது இப்படியிருக்க இந்தியாவின் 60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் எனில், நஸ்டம் ஏற்படும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் எனில் அது அவர்களின் மடத்தனமா அல்லது வேறு வழியில்லாத வாழ்க்கை அவலமா?

   அதியமான் இதனை மடத்தனம் என்று சுலபமாக சொல்லிவிட்டு சென்று விடுவார். அதற்கு மேல் ஏகாதிபத்திய மறுகாலனிய பொருளாதார தாசருக்கு அதில் ஆய்வு செய்ய எதுவுமில்லை.

  • இவரை என்னவென்று சொல்லுவது, போராட்டம் நடத்துங்கள் என்று ஓதுங்கி கொள்கிறார் இத்தனை விவரம் சொல்லியும்.

 9. //விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள்; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti etc., //

  என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதில்
  debt trap & kanthu vatti இது இரண்டிலும் விவசாயிகள் போய் மாட்டிக் கொள்வதற்கு உள்ள பல காரணிகளில் ஒன்று தான் மரபீணி மாற்ற விதைகள்

 10. ////விவசாயிகள் தற்கொலைகளுக்கு பல்வேறு காரணிகள்; முக்கியமாக local factors and debt trap, kanthu vatti etc., //

  என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதில்
  debt trap & kanthu vatti இது இரண்டிலும் விவசாயிகள் போய் மாட்டிக் கொள்வதற்கு உள்ள பல காரணிகளில் ஒன்று தான் மரபீணி மாற்ற விதைகள்
  //// அப்படியா ? அப்ப, அது ஏன் பி.டி பயிர்கள் நடப்படும் அனைத்து (repeat : அனைத்து) இடங்களிலும் உருவாகவில்லை. ஏன் ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயிகள் இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் அளித்த சுட்டியில் அளிக்கப்ப்ட்டிருக்கும் தகவல்கள் உங்க logic அய் மறுக்கின்றனவே.

 11. அதியமான்,

  //ன். நம்து சேலம் மாவட்டத்தில், இன்று பி.டி காட்டன் சக்கை போடு போடுகிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. எப்படி ? 2005இல் நடந்தவைகளுக்கு வேறு இதர local factors கள் காரணிகளாக இருந்திருக்கலாம். மேலும்..//

  இல்லை இது தவறான தகவல். சக்கை போடு போட்ட ஒரு பயிருக்கு ஏன் அரசே முன்நின்று மான்சாண்டோ விடம் இருந்து நட்ட ஈடு பெற்றுத்
  தர வேண்டும்? முடிந்தால் நீங்கள் தர்மபுரி பகுதியில் உங்களுக்கு நன்பர்கள் இருந்தால் விசாரித்துப் பாருங்கள். பருத்திச் செடி மரம் போல
  விடுவிடுவென்று வளர்ந்த பின்னும் காய்க்காமல் ஏமாற்றியது. பருத்திச் செடி மரம் அளவுக்கு எங்காவது வளருமா? ஆனால் பி.டி பருத்தி அப்படித்தான்
  வளர்ந்தது!

  இன்னொரு பாதிப்பு ( இது அனேகமாக ஆந்திரா, தமிழ்நாடு, மகாராட்டிரா என்று எல்லா மாநிலத்திலும் நடந்தது) இந்தப் பயிர் தாறுமாறாக
  தண்ணீர் குடிக்கிறது + பூச்சி மருந்து குடிக்கிறது! மான்சாண்டோ சொல்றா மாதிரி பூச்சி மருந்து செலவு கம்மிங்கறது சரியான டுபாக்கூர்.

  நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  இது ஏன் எல்லா மாநிலத்திலும் நடக்கவில்லை என்று கேட்பீர்கள்.. இந்த மரபணு மாற்றம் ஒரே விதமான பாதிப்புகளை எல்லா இடங்களிலும்
  கொடுக்கவில்லை. வித விதமான பாதிப்புகள் – ஆனால் எல்லாம் ஆபத்தான் பாதிப்புகள்!

  உதாரணமாக பி.டி கத்தரியை எலிகளின் மேல் பரிசோதித்த போது – முதலில் அவை பி.டி கத்தரியை கடிக்க மறுத்துள்ளன. பின்னர் வேறு
  வகைகளில் எலிகளை ஏமாற்றியே அவற்றை உண்ணக் கொடுத்துள்ளனர் – ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளே ஏற்பட்டுள்ளது.
  ரத்த சோகை, வயிற்றுப்போக்கு, லிவர் சுருங்கிப் போனது, புற்று நோய் என்று வித விதமான பாதிப்புகள்.
  பி.டி சோயாவால் சீனாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் – அங்கேயும் எல்லோருக்கும் ஒரே விதமான சிம்ப்டம்ஸ் இல்லை – வித விதமான விம்ப்டம்ஸ்
  தான்! ( இப்போ சீனா பி.டி சோயாவை தடை செய்துள்ளது )

 12. அதியமான்,

  //நான் அளித்த சுட்டியில் அளிக்கப்ப்ட்டிருக்கும் தகவல்கள்//

  நீங்கள் குறிப்பிடும் APAARI ஏ ஒரு பிராடு கும்பல் என்கிறேன் நான். நான் கேட்பது, நீங்கள் ADB, WB, மான்சாண்டோ சார்பான ஆராய்ச்சி
  குழுவினர் விட்ட புருடாக்கள்.. அது போன்ற புருடாக்களையும் கவிதா கிருஷ்ணமூர்த்தி உடைத்திருக்கிறார் ( சுட்டி எனது இரண்டாவது
  கமெண்ட்டில் உள்ளது)

 13. ////நீங்கள் குறிப்பிடும் APAARI ஏ ஒரு பிராடு கும்பல் என்கிறேன்////

  அது உங்க கருத்து. எல்லோரும் அதை கேள்விகேட்க்காமால், ஆராய்ந்து சீர்துக்கிபார்க்காமல், அப்படியே ஏற்றுக்கொள வேண்டும் என்ற கட்டாயமில்லை. சரியா.

  தர்மபுரியில், மரம் அளவிற்க்கு வளர்ந்து, யீல்ட் இல்லாமல் நஸ்டம் உருவாக்கிய விசியத்தை பற்றி படித்திருக்கிரேன். சரி, இன்று அவ்விவசாயிகள் என்ன செய்கிறார்கள் ? பி.டி காட்டனை அறவே விட்டுவிட்டு சாதாரண பருத்தியை மட்டும் தான் பயிருடுகிறார்களா ? தகவலுக்காக கேட்கிறேன்.
  APAARi சுட்டி ஆய்வு ரிப்போர்கள் மிக மிக பரவலான, ஆழமான தகவல்களை அளிக்கின்றன. அவற்றை முழுவதுமாக உள்வாங்கி, தக்க ஆதாரங்களோடும், தர்கத்தோடும் அவை பொய்கள் என்று நிருபிப்பதுதான் முறை. சரி, போகட்டும். நமக்குள் ஏன் வாக்குவாதம். இந்திய விவசாயிகள் யாதார்த்தை உணர்ந்த புத்திசாலிகள் தாம் தொடர்ந்து ஏமாற அடிமடையர்கள் அல்ல. You can fool some of the people for some of the time. But you cannot fools ALL the people ALL the time என்ற பழமொழியை மிகவும் நம்புகிறவன். பி.டி காட்டன் கடும் சிக்கல்களை அளித்து, செலவை அதிகரித்து, லாபத்தை குறைப்பது உண்மை என்றால், விவசாயிகள் அதை விட்டுத் தள்ளுவார்கள். பழையபடி சாதாரண பருத்திக்கு திரும்புவார்கள். they know better and hence let them choose.

 14. அசுரன்,

  எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.
  விவசாயத்தில் லாபம் இன்று பொதுவாக குறைவுதான். ஆனால் அனைத்து வகையான பயிர்கள், பகுதிகளிலும் இல்லை. காரணிகள் சிக்கலானவை.

 15. //எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.//

  கரும்பு விவசாயம நஸ்டம், பருத்தி விவசாயம நஸ்டம் இப்படி நஸ்டமில்லாத விவசாயமதான் எது?

  எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பரிதாபகரமாக எல்லாவற்றையும் முயற்சி செய்து வீழ்கிறார்கள் விவசாயிகள். அதில் கொழுக்கிறார்கள் பன்னாட்டு தரகு முதலாளிகள். அதில் ஒன்று பிடி விதைகள்.

  விவசாயம பொதுவாக லாபம் எனில் அதன் வளர்ச்சி எவ்வளவு? ஏன் மிக அதள பாதாளத்தில் உள்ளது?

  இது இன்று நேற்றல்ல ௨௦ வருடங்களுக்கும் மேல் இப்படித்தான் உள்ளது. எனும் போது இத்தனை வருடங்களாக இந்த துறையை விட்டு ஏன் 60% மேலான மக்கள் வெளியேறவில்லை? ஏனேனில், இதை விட்டால் வேறு எந்தவொரு வாழ்க்கைத் தேவைக்கான வேலைவாய்ப்பும் இல்லை.

  அப்படியொன்று(வேலைவாய்ப்பு) உருவாக்கியதாக கதையளந்த LPGயின் நயவஞ்சகம் இங்கும் பல்லிளிக்கிறது.

  ஆக, 15-20 வ்ருடங்களாக நஸ்டம் ஒன்றை மட்டுமே தரும் துறையை விவசாயிகள் கட்டி அழுகிறார்கள் எனில், இதனை வைத்துக் கொண்டு பிடி விதைகளின் பெருமையை நாம் பேச முடியாது என்பதுதான் பொருள்.

  எனவே, வேறு ஏதாவது இருந்தால் முன் வையுங்கள் பேசலாம்

 16. அதியமான்,

  //விவசாயிகள் அதை விட்டுத் தள்ளுவார்கள். பழையபடி சாதாரண பருத்திக்கு திரும்புவார்கள். they know better and hence let them choose.//

  இது சாத்தியமில்லை! அது தான் மான்சாண்டோ வின் டெர்மினேட்டர் விதைகளின் ஸ்பெஷாலிட்டியே.

  மான்சாண்டோ விதை ஒரு வயலில் விதைக்கப்படுகிறது என்றால் – அதிக வீரியமான பூச்சிக் கொல்லிகள் அந்நிலத்தில் கொட்டப்படுகிறது +
  நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது + அந்த விவசாயி நட்டத்தில் வீழ்ந்தான் என்று அர்த்தம்!

  So… நிலம் மீண்டும் மரபு ரகங்களுக்கு மாற சாத்தியக்கூறுகள் குறைவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், தொடர்ந்து மான்சாண்டோ இந்திய
  அரசின் பின்புல ஆதரவோடு விதைச் சந்தையைக் கைப்பற்றுகிறது என்றால் பாரம்பரிய விதைச் சந்தை நிர்மூலமாக்கப்படுகிறது என்று அர்த்தம்.
  கோயமுத்தூரில் இருக்கும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகமே மான்சாண்டோ வின் கிளை நிறுவனம் போல் செயல்படுகிறது.
  மான்சாண்டோ வுக்காக இவர்கள் தான் கள ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.. அரசிடம் போய் நாட்டு ரக பருத்தி விதைகேட்டால் அவர்களே
  மான்சாண்டோ விடம் விவசாயிகளைத் திருப்பி விடுகிறார்கள். வேறு வழியே இல்லை, பிழைத்துக் கிடக்க வேண்டுமானால் எதையாவது செய்தாக
  வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்படும் விவசாயிகள் மான்சாண்டோ விதைகளை விதைக்கிறார்கள்.

  மேலும் மான்சாண்டோ ரக பயிர்களின் மகரந்தங்கள் இயற்கையான கடத்திகளின் மூலம் (தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் etc) வேகமாகப் பரவுகிறது (பதினைந்து மீட்டர்களுக்கு மேல் மகரந்தம் பரவாது – இதன் கணம் கூடுதல் என்று மான்சாண்டோ சொல்வது பொய்! இதுவும் சுயேச்சையான ஆய்வுகளில் நிறுவப்பட்டிருக்கிறது) தாம் விதைக்கப்பட்ட வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் வயல்களின் நாட்டு ரக பயிர்களையும்
  ஊடுருவுகிறது. இதன் மூலம் ஜெனிடிக் பொல்லூஷன் ஏற்படுகிறது – அதாவது நாட்டுரகங்கள் அழிந்து போகிறது / அல்லது அதன் தன்மை
  மாறுகிறது.

  இதை சும்மா வாதத்திற்காக சொல்லப்படுவதல்ல – இதன் தீவிரத்தை நீங்கள் உணர வேண்டும். பி.டி காய்கறியை உண்ணும் மனிதர்களிடம்
  மேற்கொண்ட ஆய்வில், அதன் விஷப்புரதமான க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் தாண்டி,
  இயற்கையான மெட்டபாலிக் சர்க்கிளையும் தாண்டி, பெருங்குடல் வரை அப்படியே இருக்கிறது – மேலும் வயிற்றில், குடலில் உள்ள ஜீரணத்துக்கு
  உதவும் நல்ல பேக்டீரியாக்களின் மரபணுவுக்குள் ஊடுருவி அதன் தன்மையையும் மாற்றியமைக்கும் அளவுக்கு ஊடுருவல் தன்மை கொண்டிருக்கிறது.

  இது அமெரிக்கா நிறுவ நினைக்கும் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பை சாத்தியமாக்கும் பொருட்டு வளர்முக நாடுகளின் மேல்
  தினிக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கையின் ஒரு சிறு அலகு தான் இது போன்ற மரபணு மாற்ற பயிர்களும் அதன் மூலம்
  ஒரு நாட்டின் விவசாயத்தின் தற்சார்பை அழிப்பதும். நீங்கள் மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை விளைவித்துள்ள / விளைவித்துவரும்
  மொத்த மாறுதல்களோடு சேர்ந்து இதை பருண்மையாகக் காண வேண்டும். ஏதோ புதிய தொழில்நுட்பம் / நல்ல லாபம் என்று இந்த நிகழ்ச்சிப்
  போக்கை மற்றவற்றிலிருந்து கத்தரித்துப் பார்த்தால் சரியான சித்திரம் கிடைக்காது.

  அதியமான், விவசாயம் விவசாயிகளைக் காப்பாற்றிய காலம் மலையேறிவிட்டது – இப்போது விவசாயிகள் தான் விவசாயத்தைக் காப்பாற்றுகிறார்கள்!

  திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை செய்யும் தஞ்சாவூர் பகுதி விவசாய குடும்பத்து இளைஞர்கள் பருவ மழைக்காலங்களில் ஊருக்கு பத்து நாள் லீவில் போய் விதைத்து விட்டு வந்து, பின் அறுவடையின் போது ஒரு பத்து நாள் லீவில் போய் வருவது சர்வசாதாரணம்.. இடைப்பட்ட நாட்களில்
  குடும்பத்தைச் சேர்ந்த வயதானவர்களே வயலைப் பார்த்துக் கொள்கின்றனர்.

  • திரு.கார்க்கி,
   எனக்கு பயமாக இருக்கிறது. ‘ஈ’ படம் வந்ததிலிருந்து, ‘bio-war’ பற்றி அறிந்து, அதுபற்றி படித்து, பின் அதையே நினைத்து, எந்த மாத்திரை மருந்தும் வாங்கும் பொழுதும் பயம். நிறைய தேடிவிட்டு, படித்து, யோசித்து பின்னர் அப்படியே வாங்கியவற்றை விழுங்கும்போதும் பயம்.

   இப்போது, இவற்றை படித்தபின் இதனை, நம்மீது நடத்தப்படும் ‘agri-war’ எனக்கொள்ளலாமா? இனிமேல், உணவு சாப்பிடும் முன்பும் பயத்தால் ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்.

   //விவசாயம் விவசாயிகளைக் காப்பாற்றிய காலம் மலையேறிவிட்டது – இப்போது விவசாயிகள் தான் விவசாயத்தைக் காப்பாற்றுகிறார்கள்!// —>ஆனால், எல்லா பக்கத்திலிருந்தும் விவசாயிகளுக்கு ஆப்பு வைக்கிறார்களே, இவர்களை எப்படி காப்பாற்றுவது?

  • ///தற்போது உரக் கம்பெனிகளாகவும், மரபீணி மாற்ற
   விதைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிகளாகவும் இருக்கும் மான்சாண்டோ , கார்கில் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இரண்டாம் உலகப் போரின்
   போது ராணுவத்துக்கு வெடி மருந்துகள் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும், பின்னர் ராணுவத்துக்கு கெமிக்கல் சப்ளை செய்யும் கம்பெனிகளாகவும்
   தான் இருந்துள்ளன. வியட்நாமில் வீசப்பட்ட ஏஜெண்ட் ஆரென்ச் போன்ற கெமிக்கலை விற்ற கம்பெனியும் கூட ( பேரு மறந்துட்டேன்) இப்போது ஏதோ ஒரு உரக்கம்பெனியுடன் தான் இணைந்துள்ளது. பல்வேறு இணைப்பு & கைய்யகப்படுத்துதல்கள் மூலம் அந்தக் கம்பெனிகள்
   இணைந்தும் / பிரிந்தும் தற்போதைய வடிவத்தில் உரம் / பூச்சிக்கொல்லி / விதைகள் விற்கும் கம்பெனிகளாய் இருக்கின்றன. போர்க்காலத்தில்
   உபரியாகப் போய் விட்ட ரசாயணங்களை பிற்காலத்தில் உரங்களாக சந்தைப்படுத்தி வளரும் நாடுகளின் வயல்களில் கொட்ட போடப்பட்ட
   திட்டம் தான் “பசுமைப் புரட்சி.”/////

   இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன் உரங்கள் என்ன ஸ்பெஸலா என்ன ? அல்லது அமெரிக்கா, அய்ரோப்பா, சீனா, சோவியத் ரஸ்ஸியா,
   கூபா, மற்றும் இதர நாடுகளில் இதே போன்ற ரசாயன உரங்களுக்கு பதிலாக
   ‘இய்ற்க்கை உரங்கள்’ மட்டும்தான் உபயோகப்படுத்தப் படுகின்றனவா ? மண் வளம்,
   உலகெங்கும் பாதிப்படைகிறதுதான். ஆனால் 40 வருடங்களுக்கு முன் நம் அவசர
   தேவைகளுக்கு அன்று சமயமில்லை. ஒரு emergency situation when the nation faced
   Famine and starvation due to acute shortage of food grains. We had to live on US wheat donations and we lived from ship to mouth.

   மாற்று வழி என்ன இருந்தது நமக்கு அன்று ? சொல்லுங்கள் கார்கி.

   இது அசுரனுக்கு நான் எழுதிய பதில் : ///சரி, நான் கேட்ட மிக முக்கிய கேள்வியான, பஞ்சத்தை போக்க மாற்று வழிகள் பற்றி ஒரு பதிலும் இல்லை. பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’ஆதிக்கம்’ என்ற பொய்யான
   மாயை சொல்லுக்கு பதிலானவை) உருவாக்காமல், உங்களை போன்ற ‘செம்புரட்சியாளர்களின்’ மேலான ஆலோசனைகள் படி சும்மா இருந்திருந்தால், விளைவுகள் என்ன ஆயிருக்கும் ? கடும் பஞ்சம் ; பல கோடி மக்கள் மடிந்திருப்பர்.
   நீர் பிறந்திருக்கவே மாட்டீர். (அப்பாடி, நிம்பதி !!)
   ///

   • திரு.அதியமான், திரு.கார்ர்க்கி,

    நீங்கள் இருவருமே இரண்டு துருவங்களில் நின்று கொண்டு ‘என்னுடைய இடம்தான் சரியானது’ என்று ஒருவர் மற்றவரை ‘இங்கே வாருங்கள்’ என்று உங்கள் பக்கம் இழுக்கிறீர்கள். இருவரும் ஒன்றாக வந்து மத்தியில் வாழுங்களேன்.

    மேலை நாட்டில் உள்ள நல்லவற்றை எடுத்து கைக்கொண்டுவிட்டு பின்பற்றுவோம். அவர்கள், நம்மை சோதனை ஓட்டத்திற்கு பயன் படுத்துவதையும், நம்மை நசுக்கி, நம் வாழ்வாதாரத்தை உறிஞ்சிக்கொண்டு, நம்மீது பேட்டன்ட் – மோனோபாலி ஆதிக்கத்தை செலுத்துவதிலிருந்தும் தற்காத்துக்கொள்வோமே? நம்மை நாமே அழித்துக்கொள்ள, தெரிந்தே அவர்களின் (அவர்களின் முந்தைய அறிய கண்டுபிடிப்புக்கான விலை?) சூழ்ச்சிகளில் விழுவானேன்?

    ‘கழுகளை’ எப்படி நமக்கு நல்லவற்றிற்கு பயன் படுத்துவோமோ அப்படி பயன் படுத்திக்கொண்டு அவை நம்மை தாக்க வரும்போது தற்காத்துக்கொள்வோமே? என் கதவி திறந்து வரவேற்க வேண்டும்? நாம் தேர்ந்தெடுத்த அரசு நம்மை பாதுகாக்கத்தானே? ‘அமெரிக்க கழுகை’ வேட்டையாடும் அதிகாரம் யாருக்கு? தனிமனிதனுக்கா? அரசுக்கா?

    • முஹ்ஹமத்,

     நீங்கள் சொல்வது போல் தேவையானதை வைத்துக் கொண்டு பாதிப்பானவற்றை தவிர்த்துக் கொள்ளும் அதிகாரமோ தைரியமோ இந்த
     அரசுக்குக் கிடையாது.2000க்குப் பின் உலகெங்கும் மக்கள் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர்.. அதை சம்பிரதாயமாக எதிர்க்கும் திராணி கூட இந்த அரசுக்கு இல்லை. நேரடியான அமெரிக்க அடிமைகள்!

     முதலில் இது மக்களின் அரசோ மக்களின் ஆட்சியோ அல்ல. இது மக்களுடைய ஜனநாயகமும் இல்லை – ஒரு புதிய ஜனநாயகம்; மக்களின்
     ஜனநாயகம் மலர வேண்டியது இன்றைய அவசர அவசிய தேவை! இப்போதுள்ள ஜனநாயகம் தரகு முதலாளிகளின் ஜனநாயகம் – உள்நாட்டு
     தேசிய முதலாளிகளின் ஜனநாயகம் கூட அல்ல.. Hold on அதியமான் – உடனே ரசியா, சீனா என்று விசா வாங்காமயே
     கிளம்பிடாதீங்க 🙂 – அடுத்து நீங்கள் இடப்போகும் அந்த மாதிரி ‘எல்லை தாண்டிய பயங்கரவாத பின்னூட்டங்களுக்கு’ நான் பதிலளிக்கவும்
     போவதில்லை 😉