நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?
நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை. பத்திரிகைகள், தமிழ் சானல்கள் எல்லாம் இதை உலக மகா பாதகம் போல கட்டியமைத்தன. ஈழத்தமிழன் சாவதை வேடிக்கை பார்த்த தமிழர் தளபதிகள் எல்லாம் அறிக்கைகளின் மூலம் களத்திலறங்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.
பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு புறநானூற்றுத் தமிழனின் பெருமையை மீட்டு வந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் இந்தப்பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. இதையே பெரியதிரையில் கோடம்பாக்கம் செய்து வருகிறது. கோடம்பாக்கத்து கவிராயர்கள் எல்லாம் அர்த்தமில்லாத லாலாக்கு டோல்டப்பிமா பாடல்களையும், அப்பட்டமான ஆங்கில வரிகளுக்கிடையில் சில தமிழ்வார்த்தைகளைச் சேர்த்தும் பாடுகிறார்கள். ரிலையன்ஷ் பிரஷ் பெயர்ப்பலகை ஆங்கிலத்திற்கு 90 சதவீதத்தையும், தமிழுக்கு போனால் போகிறதென்று பத்தையும் ஒதுக்கியிருக்கிறது.
தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் வீரத்தம்பிகள் தாக்கியிருக்க வேண்டுமென்றால் இவர்களைத்தானே பின்னியிருக்கவேண்டும்? அத்தகைய வீரமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பதைவிட அப்படி சிந்திப்பதற்கு மூளைகூட அனுமதி தராது. அப்படி சுயதணிக்கை செய்து கொண்டு தமிழைக் கொல்லும் தளபதிகளின் தயவில் வெற்றுக்கூச்சல் போடுவதுதான் அண்ணன் சீமானின் அரசியல் போலும். ஆனால் அந்த வெற்றுக்கூச்சலைக்கூட தெற்காசிய முதலாளியாகிவிட்ட கருணாநிதி அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விசயம்.
இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?
மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக் உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? விவேக்கின் இந்த நகைச்சுவைக்கு ஒரு சமூக அடிப்படையும் இருக்கத்தான் செய்கிறது. “மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது.
தமிழனைக் காட்டானாக சித்தரிப்பதைவிட இது கேவலமில்லையா? இதையெல்லாம் ஒரு புகாராக மலையாளிகள் என்றும் சொன்னதில்லையே? மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் தமிழர்கள் மலையாளிகளின் ஆளுமையையும், பண்பையும் கேலி செய்வதற்கு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது நகைச்சுவையாகவும் பின்னது காழ்ப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.
வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்.
ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள். பலான மலையாளப்படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள். அதுவும் மாமனாரின் இன்ப வெறி, காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன். தமிழ், மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம் இப்படித்தானே இருக்கிறது?
இன்னும் கேராளவின் கிரன் தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் ஓடுகின்றன. பாடல் போட்டிகளுக்கு வரும் மலையாளப்பாடகர்கள் பிரபலமான தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். 80,90களின் சாதாரண மலையாளிகளது விதம்விதமான வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் நல்ல மலையாளப்படங்களின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்தை தமிழ் மசாலா ஃபார்முலாவிற்குள் கொண்டு வந்ததுதான் தமிழ் படங்கள் கேரளத்திற்கு செய்திருக்கும் தொண்டு. தமிழில் கிளாமர் போட்டியில் தோல்வியடைந்த நடிகைகளை மலையாளத் திரையுலகம் குடும்பப் பாங்கானா பாத்திரங்களுக்கு பயன்படுத்துமென்றால், மலையாளத்தில் குடும்பப் பாங்கான பாத்திரங்களை நடிக்கும் இளம் நடிகைகளை கவர்ச்சி கன்னிகளாய் பிரபலமாக்குவதுதான் தமிழ்த் திரையுலம் செய்யும் எதிர்வினை.
சித்ரா, சுஜாதா உள்ளிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான பின்னணிப் பாடகர்கள் தமிழ்ப்படங்களுக்காக பாடியிருக்கிறார்கள். அது போல தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவும் கேரளத்தில் பிரபலம். தமிழக அரசியல் செய்திகள் கூட மலையாளப் பத்திரிகைகளில் முதன்மையாய் இடம்பெறும். கேரளச்செய்திகள் அப்படி இங்கு இடம்பெறாது. ஜெயா, கருணாநிதி பற்றி சராசரியான மலையாளி அறிவானென்றால் இங்குள்ளோருக்கு நம்பூதிரிபாடும், நாயனாரும், கருணாகரனும், அச்சுதானந்தனும் அதிகம் தெரியாது என்பது உண்மையுங்கூட.
மொத்தத்தில் கேரளம் பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு வகைகளுக்கும் தமிழகம் என்ற பெரிய அண்ணனைத் தொடரும் சிறிய தம்பியாகத்தான் வாழ்கிறது. அதனால்தான் தமிழகத்தைப்பற்றி ஒரு சராசரியான மலையாளி அறிந்து வைத்திருக்கிறான். கொச்சி துவங்கி திருவனந்தபுரம் வரை நீங்கள் தமிழில் பேசியபடி எங்கும் செல்லலாம். வரலாற்றிலும், மொழியிலும், தேசிய இனத்திலும் தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்த இனம்தானே அது? அப்போது தமிழும் கூட ஒரு தேசிய இனமாக தலையெடுத்திருக்கவில்லை. அத்தகைய தொல்குடி உறவு இன்றும் தொடர்கிறது என்பதை வெத்துவேட்டு தமிழ் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நல்லது, கெட்டதுகள் எல்லாம் எல்லா தேசிய இனங்களுக்கும் சொந்தம்தான். ஒன்று முன்னேறியது, மற்றது பிற்போக்கானது என்றெல்லாம் இல்லை. தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை. கேரளத்தில் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கே கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதும், சங்கராச்சாரியை கைது செய்வதும் நடக்க முடிந்தது என்றால் கேரளத்தில் நடக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்க உரிமை கேரளத்தில் பலம் வாய்ந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை.
அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். கேரளத்தில் கல்வியறிவும், பெண்ணுரிமையும் அதிகம் என்றால் தமிழகம் பெண் சிசுக்கொலைகளோடுதான் இன்னும் இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி இரண்டு மாநிலங்களும் மற்றதின் நல்ல விசயங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கின்றன.
முல்லைப்பெரியாறு பிரச்சினை முற்றிலும் கேரள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. அதற்கு கணிசமான மக்கள் பலியாகியிருந்தாலும் அதை வைத்து மட்டும் மலையாளிகளை எதிரிகளென்று சித்தரிப்பது அயோக்கியத்தனம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமல்படுத்தினால் அணையின் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறிய சில ஆயிரம் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதற்காகவே கேரள அரசியல்வாதிகள் அதை அயோக்கியத்தனமாக எதிர்க்கிறார்கள். இதை வைத்து தமிழகத்தின் மீதான வெறுப்பை கேரள மக்களிடம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். அனால் கேரளத்தின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தை புறக்கணித்து விட்டு ஒரு நாள் கூட வாழ முடியாது.
எல்லா உயிராதாரப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளத்திற்கு செல்கின்றன. அதை வைத்து கேரளத்தின் எல்லையில் இருக்கும் தமிழக விவசாயிகள் பயனடைகிறார்கள். நாமக்கல்லின் கோழிக்கும் முட்டைக்கும் கேரளாவும் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இதை வைத்து கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டுமென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத்தினால் முதலில் பாதிக்கப்படுவது இங்குள்ள விவசாயிகள்தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்களிடம் தமிழகத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது. அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் கேரள போலிக் கம்யூனிஸ்டுகளை முல்லைப்பெரியாறு விசயத்தில் அம்பலப்படுத்துவதும் அவசியம்தான்.
நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசிபட்சமாக நடத்தலாம் என்றாலும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழனவாதிகளும் – வெறியர்களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறியடிக்க வேண்டும்.
எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.
விடுதலை இராசேந்திரனும், மணியரசனும் ஒரு பெரும் மலையாள அதிகாரிகளின் பட்டியலை வைத்து அப்போது இதை மாபெரும் கண்டுபிடிப்பாகவும் ஈழத்தின் துயருக்கு முக்கிய காரணமென்றும் சித்தரித்து வந்தார்கள். ஒரு அதிகார வர்க்கத்தின் இயங்குதன்மையைக் கூட புரிந்து கொள்ளாத இவர்களது முட்டாள்தனம் ஆச்சரியமளிக்கக் கூடியது. பாசிச ஜெயாவை வைத்து புலிகளுக்கு தப்பான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பின்பு தங்களது தவறுகளை மறைக்க இப்படி மலையாள துவேசத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை துரத்த வேண்டுமென்று பெ.மணியரசன் தலைவராக இருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யார்? சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இங்கிருக்கும் மலையாளிகளில் ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர்க்கடையில் வேலை செய்பவர்களாகவும், பெண்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களையா துரத்த வேண்டும்?
குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர். முன்னர் போல வளைகுடா நாடுகளுக்கு சென்று பிழைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் இத்தகைய இடப்பெயர்ச்சி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா மாநில மக்களுக்கும் ஏன் தமிழர்களுக்கும் கூட உண்டு.
சென்னையில் தேநீர்க்கடை வைத்திருக்கும் மலையாளிகளும் அங்கே வேலை செய்யும் மலையாளிகளும் அல்லும் பகலும் கடின உழைப்புடனே நாட்களைத் தள்ளுகிறார்கள். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு வரை ஒயாது. குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்கு எந்திரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு சென்னை மாநகரம் முழுமைக்கும் எல்லா நேரமும் இனிய தேநீர் வழங்கும் இந்த மக்களைப் பார்த்து வெளியேற்றுவோம் என்று சொன்னால் அந்த முண்டங்களை எதைக் கொண்டு அடிப்பது?
கையேந்தி பவனில் சம்சாவும், ஜிலேபியும் விற்கும் இந்தி பேசும் சிறுவனும் அம்பானியும் ஒரே தேசிய இனமா என்ன? இப்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையில் பல இன மக்களும் கலந்து விட்டார்கள். இரவுக் காவலுக்கு நேபாளத்துக் கூர்காக்கள், குழிதோண்ட கன்னட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பீகார் இளைஞர்கள், காங்கீரீட் கலவைக்கு தெலுங்கு தொழிலாளர்கள், பாலீஷ் வேலைக்கு ராஜஸ்தான் தொழிலாளிகள், ஒட்டல் வேலைக்கு வடகிழக்கு இளைஞர்கள் என்று பார்த்தால் இங்கே மட்டுமல்ல முழு தமிழக நகரங்களிலும் இந்தக் கலப்பு நடந்தேறி வருகிறது. இதேபோல தமிழக தொழிலாளிகளும் கேரளா, பெங்களூர், மும்பை என்று செல்கிறார்கள்.
இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத் திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின் விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?
இந்தியாவில் மொழிகளும், தேசிய இனங்களும் விதவிதமாக பிரிந்திருந்தாலும் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாக ஒன்றாக இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தேசிய இன அடையாளங்களைக் கடந்து ஒன்றானால்தான் அதே அடையாளமின்றி வர்க்க ரீதியாக சுரண்டும் முதலாளிகளை எதிர்க்க முடியும். சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.
அலைந்து திரிந்து ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி சூடாக, ஸ்டாராங்காக ஒரு தேநீர் குடிக்கும் போது அது நமது சேட்டன் போட்ட தேநீர் என்ற உழைப்பின் சுவையை நீங்கள் உணர்ந்திருந்தால் இந்த மலையாள துவேசத்தை வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டும். மலையாளிகளைத் துரத்தவேண்டும் என்று எக்காளமிடும் சிறு கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இது தேநீருக்கு செய்யப்படும் நன்றிக்கடன் அல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டிய வர்க்க ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் இந்தியாவின் எல்லாச்சாபக்கேடுகளையும் வீழ்த்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.
//தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை//
நம்பூதிரி எதிர்ப்பு இயக்கம்?!
ஐயோ!!! இந்த அநியாயத்த தட்டிக்கேட்க இங்க யாருமே இல்லையா?????????
இந்த வார்தையை கேரளாவில் வசிக்கும் ஒரு தமிழ் நடிகன் மலையாளிகளைப் பார்த்துக் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் ??? அவன் வீடுமட்டுமல்ல அனைத்து தமிழர்களின் வீடுகளும் நொறுக்கப்பட்டிருக்கும்.
நிச்சயமா கேரளாவில் இந்தமாதிரி ஒன்றும் நடந்திருக்காது. தமிழ் நடிகன் கூறினதை சொல்லி கொஞ்சம் விவாதங்கள் தின பத்திரங்களில் பார்க்கலாம், அல்லது television சேனலில் பார்க்கலாம். வேறே ஒன்றும் நடந்த்ருக்காது, நடக்காது. மலையாளிகள் ஆத்திரம் குறைவாக மனப்பக்குவமாக நடந்திருப்பார்கள்
”தமிழர்களை இழிவுபடுத்தும் மலையாளத் திரையுலகம்!” இவ்வாறு எந்த மலையாளிகளாவது கட்டுரை எழுதுவானா?
இந்த தமிழனுங்கதான் இப்படி “சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!” கட்டுரை எழுதி இவனுங்களே, இவனுங்களுக்கு ஆப்பு வைப்பானுங்க. என்ன இருந்தாலும் ஜெயராம் பேசியது தவறுதான். அவனுக்கு யாரும் சார்பாக பேசவேண்டாம்.
ஒரே ஒரு முறை நீவிர் கேரளா பக்கம் சென்று சும்மா சைட் மட்டும் அடிச்சிட்டு வராம, கண்ணை திறந்து அந்த samudhaayathai purinthu kolla முயற்சி pannunga…
இங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் தமிழினவெறியர்களுக்கும் அவர்கள் குறை செல்லும் கன்னட, மலையாள இனவெறியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, மதவெறியில எப்படி நல்ல மதவெறி என்று ஒன்று இல்லையோ அது போலத்தான் மொழி- இன வெறியிலும். அதை உணரும் நல்ல உள்ளங்களுக்கு இந்த கட்டுரையை நான் டெடிகேட் செய்கிறேன்
அண்ணே வணக்கம் என்ன மறுபடி மறுபடி எழுத (அடிக்க)தூண்டறீங்க .எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்க நீங்க ரொம்ப நல்லவங்க.என்ன மறுபடி மறுபடி இழிவு படுத்தி எழுதுனாலும் பரவாயில்ல.இந்த பிரச்சினையில் எனது நிலை தெளிவானது.
“நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது”- –தாரிக் அலி
செயராமன் கருத்து குரூரமான வன்முறை அதை அழகாக எதிர்த்து கொண்டிருக்க முடியாது என்பது தான் எனது நிலை நான் சொன்னது இன உணர்வின் அடிப்படையிலானது தவிர அது வெறி அல்ல.எதற்கெடுத்தாலும் ஒரு லேபல் ஓட்டாதீங்க.
நான் சொல்ல வர்றது நம்மள மத்தவங்க எப்படி பாக்கறாங்க அப்படின்னு நேரடியான அனுபவத்துல இருந்துதான்.நீங்க எவ்வளவு தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் கேரளாவுல யோ கருநாடகவுல யோ எந்த ஆதரவும் கெடைக்காது அப்படி ஏதாவது அங்க போய் அதிகம் பேசினா அடி உதைக்கும் அவங்க தயங்க மாட்டாங்க.உங்களோட செயல் எல்லை தமிழ் நாட்டளவுல மட்டும் தான் இருக்கு.அதனால தான் உங்களுக்கு குறுகிய பார்வை தான் இருக்கு.பிரச்சினயோட மைய புள்ளிய விட்டுட்டு விலகி கருத்து சொல்றவங்கள இழிவு படுத்தியே முடக்க நெனைக்கறீங்க.அதனால தான் கொஞ்சம் கடுமையான வார்த்தைகள பயன் படுத்த வேண்டியதா இருக்கு.இப்படி தனக்குள்ளே பிரிஞ்சு அடிச்சுக்கறது தான் தமிழனோட தலை விதி.
அடையாள சிக்கல் அப்படிங்கறது இன்னிக்கு உலகம் பூரா நடந்துகிட்டு இருக்கு.தேசிய இனங்களை ஒடுக்கி ஒரே கட்டமைப்பா இருக்கலாம் நு நெனச்ச சோவித் union நிலை என்ன ஆச்சு.மொழி அளவுல சிறு வேறுபாடு மட்டும் இருக்கற செக் -ஸ்லோவாக் நாடுகள் ஏன் பிரிஞ்சது ?.தகவல் தொழில் நுட்பம் உலகத்தை ஒரு கிராமமா மாத்திருசுனு சொன்னா ஏன் புதுசு புதுசா நாடுகள் உருவாகிட்டே இருக்குது ?
கிரீன் ஹன்ட் ல நீங்க சட்டிஸ்கர் மக்களுக்கு போராடறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி ஈழ பிரசினையில நீங்க மத்த மாநில உழைக்கும் மக்கள் கிட்ட ஆதரவு கேட்டு அணுகி இருக்கலாமே ? அவங்களுக்கெல்லாம் ஈழம்கிற புரிதல் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் அதற்கு எதிரா போர் நடக்குது அப்படிங்கற அளவுல தான்.நானே என்னோட அலுவலக நண்பர்கள் கிட்ட விளக்கி சொன்னா பின்னாடி தான் அவங்களுக்கு ஓரளவு உண்மை தெரிஞ்சது.நீங்க இதை ஏன் செய்யல ? அத கொஞ்சம் தெளிவா விளக்க முடியுமா ? அதனால தான் நான் மறுபடியும் சொல்றேன் தமிழ் நாட்ட தாண்டி எங்கயும் உங்க செயல்பாடுகளே இல்ல.அப்படி நீங்க அணுகினாலும் உங்களுக்கு சுத்தமா ஆதரவு இருக்காது வேண்ணா அடி உதை கெடைக்கலாம்.இங்க பிழைக்க வர்ற தொழிலாளிகளுக்கு வேற வழி இல்ல அதனால ஏதோ உங்களுக்கு ஆதரவு பண்றதா நீங்க நெனச்சுட்டு இருக்கறீங்க. நீங்க சொல்ற புரட்சி, அழித்தொழிப்பு வேலைகள களத்துல இறங்கி செஞ்ச தோழர் தியாகு கடைசில அப்படி ஒன்னு சாத்தியமே இல்லன்னு ஒரு புரிதலுக்கு ஏன் வந்தார் ? அங்க தான் மொழி பிரச்சினை முன்னாடி வந்துச்சு அந்த எதார்த்தத உணர்ந்தனால தான் இன்னிக்கு தமிழ் தேசியம் பக்கம் போயிட்டாரு.உடனே அவர போலி கம்ம்யுநிஸ்ட் அப்படின்னு லேபல் ஓட்ட வேண்டாம்.
நீங்க சில விசயங்கள்ல உண்மையா இருக்கீங்க அத நான் ஒத்துக்கிறேன் ஆன அதுக்காக நாங்க மட்டுமே எல்லாத்துக்கும் அதாரிட்டி அப்படின்னு எல்லாத்தையும் திட்டறது எப்படின்னு தான் கேட்கிறேன் ?
உங்களோட இயங்கு தளம் ஒரு வரையறைக்கு உட்பட்டது.உங்களுக்கு நீங்களே வகுத்துருக்கிற எல்லைகளை தாண்டி நீங்க சிந்திக்கறதே இல்லை.உங்களோட செயல் திட்டத்த கொஞ்சம் வினவுலையே தெளிவா ஒரு பதிவாகவோ பல பதிவுகளாகவோ எழுதுனா கொஞ்சம் நல்லா இருக்கும்
என்னோட கேள்விகள் இது தான்
1.நீங்க நடத்தப் போற புரட்சி எப்ப வரும்? அதற்கு கால நிர்ணயம் என்ன ? அதனோட வேலை திட்டம் எந்த அளவுல இருக்குது ?
அதற்கு தேவையான ஆள் பலம், அறிவு பலம், கருவி பலம், எல்லாம் எப்படி திரட்ட போறீங்க ?
2. அதனோட எல்லை எந்த அளவுல ? இந்திய அளவுலையா ? தமிழ் நாட்டளவுலையா ? இந்திய அளவுல அப்படினா அதுக்கு எந்த மொழிக்காரன் தலைமை ஏற்பான் ? மொழி பிரசினையில நீங்க என்ன நிலை எடுக்கறீங்க ?
3.தமிழ் நாட்டத் தாண்டி எங்க எல்லாம் நீங்க செயல் படறீங்க ? மத்த மொழிகள்ல எல்லாம் வினவு இருக்குதா ? அங்கெல்லாம் உங்களுக்கு ஆதரவு எப்படி ?
4.வெறும் உழைக்கும் மக்கள் மட்டுமே பங்கு கொண்டா அந்த புரட்சி வெற்றி பெறுமா ?
5. பாட்டாளி வர்க்க “சர்வாதிகார ” அரசு அமைஞ்ச பின்னாடி அதுல அதிகார அமைப்பு ,நிர்வாகம் எல்லாம் எப்படி அமையும் ?
உடனே மார்க்ஸ் அ துணைக்கு கூப்படாதீங்க.அவர் கனவு கண்ட தேசம் எங்கயுமே அமையுல இனிமேலும் ம.க.இ.க வினாலாயோ அல்லது வினவுனாலையோ அது சாத்தியமே இல்ல.உடனே தமிழ் தேசியத்த பத்தி நீங்க கேக்கலாம்.மொழி அடிப்படையில மக்கள் ஒன்றாக இணையறது கண்டிப்பா நடக்கும் ஆனா நீங்க கனவு காண்கிற வர்க்க ஒற்றுமை இந்திய அளவுல நடக்கவே வாய்ப்பு இல்ல
இத உணருகிற காலம் வரும் அப்பொழுது நீங்கள் எங்களோடு தான் வருவீர்கள் அல்லது சூழலில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டிருப்பீர்கள்
நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் செயராமனுடன் இருப்பதாகத் தான் அர்த்தம். நடு நிலை என்ற ஈர வெங்காயம் எல்லாம் எங்களிடம் இல்லை.எளிதில் துரோகம் செய்யும் இயல்புடைய மக்களுக்கு கடுமையான நிலைப்பாடுகள் தான் தேவை.அவர்களிடம் தொடர்ந்து நாம் மென்மையாக பேச முடியாது.
இவ்வளவு தூரம் மலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கற நீங்க என்னிக்காவது ரயில் பயணம் எல்லாம் போயிருக்கிறீங்களா ? ரயில்வே ல அவங்க அடிக்கற கொட்டம்,எல்லா ரயிலையும் அவங்க ஊருக்கே அவங்களுக்கு சாதகமா திருப்பி விடறதா எதிர்த்து என்னிக்காவது பேசி உள்ளீர்களா ?
கேரளா,மலையாளிகளுக்கு ஆதரவாக சி.பி.எம் கட்சி உடைய நிலைப்பாடு செயல்பாட்டு அளவுல இருக்கு நீங்க கருத்தளவுல இருக்கிறீங்க அவ்வளவு தான் ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
எழில், இந்த பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாடு இதுதான், ஜெயராம் என்ற மலையாளத் திரையுலகின் தமிழ் நடிகனுடைய கருத்து கேவலமானது, கண்டிக்கப்படவேண்டியது. அவருடைய கருத்தை பணத்திமிர் கொண்ட ஒருவன் தனது வீட்டு வேலைக்காரியை பேசிய பேச்சாக பார்ப்பதுதான் சரியானதென்றாலும் அவர் மலையாளத்திரை நடிகராகிப்போனதால் இனப்பிரச்சனையாக பத்திரிக்கைகள் திசைமாற்றிவிட்டது… அந்த நோக்கில் பார்த்தால் கூட அவர் ஒரு தனிநபர், அவர் ஒட்டுமொத்த மலையாள இனத்தின் கருத்தை பேசியுள்ளார் என்பது அறிவியலற்ற வாதம் ஜெயராமினுடைய கருத்தை கண்டிக்கும் நாம் அவர் தமிழரை பேசியதைப்போலவே மலையாள இன மக்களை கேவலமாக பேசினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். ஜெயராம் என்னும் ஒருவரை முன்னிருத்தி ஒட்டுமொத்த மலையாள சமூகத்தையே கேவலமாக பேசுவதும் எழுதுவதும் எந்த வகையில் நியாயம். நாம் பேசுவது சரியென்றால் அவர் பேசுவதும் சரிதானே? நாம் இத்தனை பேர் மலையாளிகளை திட்டுவது சரியென்றால் அத்தனை மலையாளிகள், கன்னடர்கள் நம்மைத்திட்டுவதும் சரியே, அவர் அவர் இனம் அவரவருக்கு மேன்மை என்று விட்டுவிடலாமா?
மனிதனிலேயே உயர்வு தாழ்வு இல்லையெனும்போது மனிதர்களாளான இனத்தில் மட்டும் மேன்மை எப்படி வந்தது?
நான் ஒன்றும் மலையாளிகளில் இனவாதிகள் இல்லையெனவில்லை, தமிழனை, கன்னடனை இழிவாக கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், தமிழ்நாட்டிலும் கொல்டியென்றும், கொலையாளியென்றும் பேசுபவர்களைப்போல! ஆனால் இனவெறியர்கள் மிக சிறுபான்மையினர், பெரும்பான்மைமக்கள் இனவாதிகள் அல்லர், சகஇனத்துடன் சுமூகமான உறவை பேணுவதையே விரும்புகின்றனர். ஜெயராமினுடைய கருத்தைக்கூட சில மலையாள நட்சத்திரங்கள், பத்திரிக்கைகள், பிளாகர்கள் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனரே. ஜெயராம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை ஒட்டி கேரளத்தில் ஒன்றும் தமிழர்களை விரட்டும் இனக்கலவரம் தோன்றிவிடவில்லையே… அதுபோலவே சீமானுடைய நடவடிக்கையை தமிழர்கள் கண்டிப்பதன் மூலம் நம்முடைய நல்லென்னத்தையும் நிரூபிக்கவேண்டும். அதுதான் சரியான வழி. ஜெயராமோ சீமானோ இதுபோன்ற சிறு சிறு சம்பவங்களையெல்லாம் பத்திரிக்கைகள் ஊதிப்பெருக்கி இனங்களுக்குள் விரோதத்தை வளர்கின்றனர், அதை முறியடித்து இனங்களுக்குள் இணக்கத்தை பேண வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
இல்லை என் இனம் உசத்தி அடுத்தவன் மட்டம் என்றால் தமிழினவாதிளுக்கும், மலையாள இனவாதிகளுக்கும் என்ன வித்தியாசம், வட்டால் நாகராஜூவுக்கும், பால் தாக்கரேக்கும், என்ன வித்தியாசம். சீமான் செய்வது சரியென்றால், பால்தாக்கரேவும், ஏன் சிங்களஇனவாதிகள் கூட சரியானவர்களாகிப் போகமாட்டார்களா??? இனவாத அரசியலில் நல்ல இனவாதம் கெட்ட இனவாதம் என்று ஒன்று உன்டா என்ன? சிங்கள பேரினவாதம் தன்னாட்டிலேயே போர்செய்து தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று அடிமையாக்கியதைப்போல சீமான் தலைமையில் படையெடுத்து, தமிழ்நாட்டிலுள்ள கேளர, கருநாடக, தெலுங்கு, இந்தி மக்களைக் கொன்று விரட்டுவதே இனவாதம் வெற்றியடைய உலகம் அறிந்த ஒரே வழி. ஆனால் ஜெர்மனி, இசுரேல், ருவான்டா, போஸ்னிய அனுபவங்களை தமிழினவாதிகள் மட்டும் பார்ப்பதில்லை, கன்னட, மலையாள, தெலுங்கினவாதிகளும் பார்க்கின்றனர், அவர்கள் ஊர்களிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். என்ன செய்யலாம்?????
நன்றி அண்ணே.இப்பதான் இவ்வளவு பக்குவமா சொல்றீங்க.உங்களோட கருத்துல எனக்கும் உடன்பாடு தான்.இனவாததுல நல்லது கெட்டதுன்னு ஒன்னும் இல்ல தான்.மலையாள எழுத்தாளர்கள் சக்கரியா ,தேவன் போன்றவர்கள் உண்மை நிலையை அவ்வப்போது தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் எங்கு பிரச்சினை ஆரம்பிக்கறது என்றால் செயராமனை கண்டித்து அதன் விளைவுகளை பற்றி தெளிவாக ஒரு பதிவெழுதி விட்டு பின்னர் நாம் தமிழர் இயக்கத்தின் செயல்பாட்டை கண்டித்திருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் நீங்கள் எடுத்த உடனே வரிக்கு வரி அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் எழுதி விட்டு ஏதோ போனால் போகிறதென்று மென்மையாக கண்டித்திருக்கிறீர்கள்.இது கட்டுரையின் உள்நோக்கத்தையே “கேள்விக்குறியாக்குகிறது ” .இதை நீங்கள் சேலம் ரயில்வே கோட்டம்,முல்லை பெரியாறு போன்ற பிரச்சினைகளின் போது மலையாள இனவாதத்தை கண்டித்து ஆவேசமான தலைப்பை எழுதி ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள் என்றால் உங்கள் நடு நிலைக்கு எந்த பங்கமும் வந்திருக்காது. தமிழர்களின் இனவாதம் என்பது மற்ற இனவாதங்களின் ஒரு விளை பொருள் தான்.கடைசி தெரிவாக இதற்குள் நுழைகிறார்கள்.நாம் தொடர்ந்து ஏமாற்ற படுகிறோம் என்று நமது பொது புத்தியில் இருக்கிறது.
மேலும் செயராமனை போல நாமும் பேசுவது சரியா என்று கேட்கிறீர்கள் இல்லை தவறுதான் ஆனால் இதை பக்குவமான வார்த்தைகளில் கண்டித்திருக்கலாம்.இது ஒரு எதிர் வினை என்ற அளவில் எடுத்துகொள்ளப் பட்டிருக்கலாம்.சீமான் ஒன்றும் எல்லா மலையாளிகளையும் உடனே வெளியேத்த வேண்டும் என்றா சொன்னார் ? இல்லையே .
தமிழர்கள் செய்யும்போது கடைசியாக மட்டும் அது இனவாதமாக பார்க்கப் படுகிறது மற்றவர்கள் செய்தால் அது இன உணர்வு என்று ஆகிவிடுகிறது.
தனிப்பட்ட மலையாளியோ,கன்னடனோ,தெலுங்கனோ யாரும் இனவாதிகள் அல்ல.அவரவர் பொது புத்தியில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.முல்லை பெரியாரில் இவ்வளவு சண்டித்தனம் செய்யும் கேரளாவை கண்டித்து இது போன்ற எந்த நிகழ்வும் இல்லையே அப்போது தமிழர்கள் அமைதியாகத்தானே இருந்தார்கள்/இருக்கிறார்கள்.இவ்வளவு நாள் அதை பாத்து கொண்டிருக்கும் சராசரி தமிழனின் மனதில் என்ன எண்ணம் ஓடிகொண்டிருந்திருக்கும் ? அந்த எண்ணம் தான் இன்று பெட்ரோல் குண்டுகளாக வெளிப்படுகிறது.இதை நான் ஆதரிக்கவில்லை தான் ஆனால் இது ஒரு பதிலடி அவ்வளவே,இதற்க்கு அவர்கள் மீண்டும் நம்மை தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.பதிலடி கிடைக்கும் என்று தெரிந்தால் தான் எதிரி பயப் படுவான்.அன்று ஒகேனக்கல் பிரச்சினையில் வழக்கத்திற்கு மாறாக தமிழகம் கொஞ்சம் அதிகம் கொதித்தது அதனால் கன்னடர்கள் தணிந்தார்கள்.அப்பொழுது இங்கு எல்லைப்புற மாவட்டங்கள்,தேனி,பெரியகுளம் போன்ற தமிழகத்தின் நிரந்தர பச்சை பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் கன்னட ஒக்கலிகர்கள்,வாட்டாள் நாகராஜின் இனத்தவரான குரும்பர்கள் எல்லாம் எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதித்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் சங்கத்தின் மூலமாக கன்னட இனவெறியர்களான,நாராயண கௌடா,வட்டாள் நாகராஜிடம் பேசி இருக்க வேண்டும் . இனி அதெல்லாம் மாறத்தான் போகிறது தமிழ் நாட்டில் உள்ள கன்னடர்களும் கன்னட வெறிக்கேதிராக பேசவேண்டும்.இல்லை என்றால் அவர்கள் பேச வைக்கப் படுவார்கள்.இனங்களுக்குள் ஒற்றுமை என்பது எதுவரை ?அல்லது அதன் வரையறை என்ன ? உரிமைகளை விட்டுத் தந்துவிட்டு ஒற்றுமை என்பது தேவையா ?அதற்க்கு பெயர் ஒற்றுமை அல்ல இளிச்சவாயத்தனம்.அது இனிமேல் நடக்காது.நமது உரிமைகள் பாதிக்கப்படும் வரை சீமான் போன்றவர்களுக்கு ஆதரவு நிச்சயம் அதிகரிக்க தான் செய்யும்.அது தவிர்க்க முடியாதது.எத்தனை நாள்தான் மறு கன்னத்தையே காட்டி கொண்டிருக்க முடியும் அதற்க்கு நாங்கள் காந்தி அல்லவே !.
நான் கோவையில் கடந்த மாதம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு தமிழர் கைக்குழந்தையுடன் என்னருகில் அமர்ந்திருந்தார்.பேருந்தில் ஏறிய மலையாள மாணவர்கள் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் திமுதிமுவென்று ஏறி அவர் மேல் இடித்தார்கள் உடனே அவர் மலையாளிகள் செய்யும் அடாவடியை என்னிடம் வருத்தப்பட்டு பட்டியலிட்டார் இது தான் சராசரி தமிழனின் மன நிலை.இது இன்னும் அதிகரிக்கத் தான் போகிறது குறைய வாய்ப்பு இல்லை
தமிழ் நாடு இல்லாமல் மலையாளிகளால் இருக்க முடியாது ஆனால் அவர்கள் உதவியின்றி நாம் இருக்க முடியும்.இங்கே நீங்களும் நானும் விவாதிப்பது சராசரி தமிழனை எட்டப் போவதில்லை சராசரி தமிழனை பொறுத்தவரை சீமான் செய்தது சரி.
தமிழ் நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்றால் உடனே மற்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கிறார்களே என்ற கேள்வி வந்து விடுகிறது.நாங்கள் அங்கு வரத் தயார் தான் அங்குள்ள கன்னடர்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள் அனைவரும் வெளியேறினால் நாங்கள் வரத் தயார் தான் இதை நான் கன்னட பதிவர்களிடமே தெரிவித்தேன்.நம்மால் வேற்று இனத் தவர் உதவியின்றி வாழமுடியும் என்று நான் நம்புகிறேன்.இதற்க்கு ஜப்பான் மாதிரியை எடுக்கலாம் அவர்கள் மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லை அவர்களும் இடம் பெயர்வதில்லை இந்தியா என்ற அமைப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நமக்கு பாதகமே அதிகம்.நதி நீர் பிரச்சினைகளில் நாம் வேறு வேறு நாடுகளாக இருந்தால் நிச்சயம் ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும் எப்படி பாகிஸ்தானுக்கு நாம் தண்ணீர் சரியாக வழங்குகிறோமே அதைப் போல.இது பிரிவினை கோரிக்கை அல்ல நமக்கு நீதி கெடைக்கும் வரை “சீமான் விளைவுகளை” தடுக்க முடியாது என்பது தான்
இனம் மதம் மொழி என்ற பெயரால் வெறுப்புணர்வை போதித்து பிரிவினை உண்டாக்கும் அனைத்து சக்திகளும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்.
போடா டுபுக்கு
அதெல்லாம் இருக்கட்டும். தமிழர்களை உறிஞ்சி, தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்த்திரையுலகம் எப்போது “முல்லைப் பெரியார் அணைக்காக” போராட்டம் நடத்தி தமிழ் மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத் தரப் போகிறது??? (நிச்சயம் ஜெயராம் தமிழ் திரையுலகம் சார்பில் கலந்து கொள்வார்). என் தாய் மொழி தமிழ், நான் வீட்டில் பேசுவது தமிழ். என்பிள்ளைகள் படிப்பது தமிழ் நாட்டில் (கவனிக்க: படிப்பது தமிழல்ல)…………..
சரியான பார்வையுடன் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. தோழமை வாழ்த்துகள். ஞாநி
துரோணர் வாயால் பிரம்மரிஷி பட்டம்; சங்கரன்(ஞாநி) வாயால் வாழ்த்து, சரியான பார்வை கொண்டவர்கள் என்ற சர்டிபிகேட்…சூப்பர்..கலங்குறீங்க தோழர்களே.
என்ன செய்வது கற்பவன்???? சீமான், திருமா போன்ற கழிசடைகளின் பாராட்டுகளை பொறுத்துக்கொண்டது போலவே ஞானியுடைய பாராட்டையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்
பாராட்டுக்களையே பொறுத்து ஏற்றுக் கொண்ட தோழர்கள். அட அட, எங்கேனும் கண்டதுண்டா இது போன்ற பண்பாளர்களை. அதே சமயத்தில் இதில் ஒரு உண்மை இருக்கிறது தோழரே, அவரவர் தம்முடைய கருத்துக்களுக்கு தோதாக கட்டுரை வரும் போதும், செயல்பாடுகள் அமையும் போதும் உங்களை பாராட்டத்தானே செய்கிறார்கள். உங்களுடைய இந்த கட்டுரை சங்கரன் அவர்களுடைய கருத்துக்களுக்கு அமைவாக அல்லது நெருக்கமாக வந்திப்பதால் திருவாளர் சங்கரனுக்கு குதூகலம் போலும்.
கற்பவன், நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. எல்லாக் கருத்துக்கும் மாறுபாடில்லை என்று சொல்லிவிட்டு உங்கள் கருத்து என்று ஏதோ சொல்ல முனைகிறீர்கள். அது என்னவென்று சுருக்கமாக தெளிவாக கூறமுடியுமா?
ஜெயராமுடைய பேட்டி ஒரு முக்கியத்துவமில்லாதது என்று நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள், சாம்பல் என்ற யாரும் அறியாத பத்திரிக்கையில் வெளியான ஒரு கூட்டுக் கவிதை முக்கியமானதாகவும், ஈராக் யுத்தத்தை இழிவுபடுத்துவதாகவும் உங்களுக்கு தோன்றியதே, ஒரு தொலைக்காட்சியில் ஜெயராம் தெரிவித்த இந்த கருத்து எப்படி முக்கியத்துவமற்றதாக ஆகும் என்று நான் கேள்வி எழுப்பினேன். பதில் இல்லை. ஜெயராம் வீட்டில் வீரம் காண்பித்தவர்கள் சன்.டிவியின் முன்னால் காண்பிப்பார்களா என்று நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு, ஈராக் யுத்தத்தை இழிவு படுத்தியதாக சங்கர் ராம சுப்ரமணியத்திடம், விக்ரமாதித்தியனிடமும் வீரம் காண்பித்த நீங்கள். ‘ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க, எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க..’ என்று பாடல் எழுதி ஈராக்கை கேவலப்படுத்திய வைரமுத்துவின் வீடேறி வீரம் காண்பிப்பீர்களா? என்று கேட்டேன் பதில் இல்லை. தமிழன் சுரண்டுவதால்தான் இங்குள்ள உழைக்கும் தமிழன் கேரளத்திற்கு ஓடுவதாக நீங்கள் எழுதினீர்கள். அப்படியானால் உலகமயமாக்கத்தால் தொழிலாளி ஓடுகிறான் என்று பேசுகிறீர்களே அதெல்லாம் ச்சும்மாவா, என்று கேட்டேன், அதற்கு நீங்கள் தொழிலாளி ஓடுவதற்கு உலகமயமாக்கமும் காரணம், தமிழனும் காரணம் என்று மாங்காயும் புளித்தது, வாயும் புளித்தது என்ற பாணியில் பதில் சொன்னீர்கள். எல்லோரும் தமிழர்களே என்ற பாமரக் கருத்து எனக்கு கிடையாது, தமிழனுக்குள்ளும் வர்க்கம் உண்டு ஆனால் உலகமயமாக்கமும் சுரண்டுகிறது, தமிழனும் சுரண்டுகிறார்கள் என்கிறீர்களே, எல்லா இனத்து ஒடுக்கும் வர்க்கத்தவர்னும் தன் இனத்தை சேர்ந்தவனை சுரண்டத்தானே செய்வார்கள், அதற்காக தேசிய இன உணர்வென்ற ஒன்று இல்லையென்றாகிவிடுமா என்று கேட்டேன்.
இவ்வளவும் உங்களை போன்ற கற்றறிந்த பண்டிதர்களுக்கு புரியாமல் போனது, என்னுடைய துரதிருஷ்டமே. சரி போகட்டும் இவ்வளவும் புரியாமல் போனாலும் உங்களுடைய எல்லாக் கருத்துக்கும் நான் மாறுபாடில்லை என்று சொல்வதாக மட்டும் உங்களுக்கு புரிந்திருக்கிறது. ஆனால் உங்களது எல்லா கருத்துக்களுக்கும் நான் மாறுபாடில்லை என்று எப்போது சொன்னேன் என்றுதான் எனக்கு புரியவில்லை.
கற்பவன்,
தனித்தனியான உங்கள் கருத்துக்கள் மூலம் மையமாக என்ன சொல்ல வருகின்றீர்கள்?
கூட்டுக்கவிதைக்கு எங்களது கண்டனத்தைத்தான் தெரிவித்தேமே தவிர அதை தமிழக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை என்று ஏற்கனவே எழுதியும் பதிலில்லை என்கிறீர்கள்.
ஜெயராம் வீட்டில் வீரத்தைக் காண்பித்தவர்கள் சன்.டிவியை தாக்க வேண்டாம், கண்டித்து அறிக்கை விடச்சொல்லுங்கள் பார்ப்போம். கலைஞரை தொடாமல் தமிழனது சுரணையை எழுப்புவதுதான் சீமானது வீர அரசியல்.
வைரமுத்து என்றல்லமொத்த சினிமாவும் இப்படி பல்வேறு பிரச்சினைகளை இழிவு படுத்தித்தான் வருகிறது. மொத்த திரையுலகையும் அவ்வப்போது அம்பலப்படுத்தித்தான் வருகிறோம். கோக்குக்கு ஆதரவாக ராதிகா களமிறங்கியபோது அவரது வீட்டின்முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். பெப்சி – படைப்பாளிகள் பிரச்சினையின் போது கோடம்பாக்கத்தில் சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி படைப்பாளிகளை விமரிசித்திருக்கிறோம்.
உலகமயமாக்கம் பற்றியும் எல்லா இனத்திலும் சுரண்டுபவன் இருப்பான் என்பதையும் வினவு மறுக்கவில்லை. தேசிய இன உணர்வு என்ற ஒன்று இருப்பதையும் மறுக்கவில்லை. ஆனால் அந்த உணர்வு சக இனத்து உழைக்கும் மக்களை வெறுப்பதாக ஆனால் அது இனவெறி என்பதைத்தான் சொல்கிறோம். இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு, இந்தி பேசும் ஏழைத் தொழிலாளர்களை எதிர்ப்பது வேறு. இரண்டையும் தேசிய இன உணர்வு என்று செய்ய முடியாது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் தேசிய இன உணர்வு என்ற ஒன்றை ஏற்கிறீர்களா இல்லையா என்று தெளிவாக கேட்டிருக்கலாம். அதற்கு ஈராக்கிற்கும், உலகமயத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லையே நண்பரே?
ஜெயராமை உதைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன், அதே சமயம் கேரளத்து உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இங்குள்ள எவனாவது பேசினால் அவனை உதைப்பதற்கும் கண்டிப்பதற்கும் அவர்களுக்கும் உரிமை உண்டு என்பது அடியேனின் கருத்து, நீங்கள் சொல்லுங்கள் ஜெயராமை உதைக்க வேண்டுமா இல்லையா? இந்த கட்டுரையோ சர்வதேசியம் பேசுகிறேன் என்ற பெயரில் ஜெயராமுக்கு வக்காலத்து வாங்குகிறது, இது வாசகர்களை குழுப்பும் முயற்சி என்கிறேன் நான். ஜெயராம் பேட்டியை முக்கியமற்ற ஒன்று நீங்கள் புறங்கையால் தள்ளுகிறீர்களே, ஈராக்கை பற்றி எழுதியது மட்டும் முக்கியத்துமுடையதாக எப்படியாகியது என்று கேட்டேன், அதற்கு நீங்கள் சொல்லுகிறீர்கள், நாங்கள் அதையும் முக்கியமாக நினைக்கவில்லை, நினைத்திருந்தால் பத்திரிக்கையில் எழுதியிருப்போம், மக்களிடம் கொண்டு போயிருப்போம் என்று, கண்டனம் மட்டுமே தெரிவித்தோம் என்கிறீர்களே, அதற்கு வீடு புகுந்து ‘சனநாயக நெறி’யோடு விவாதித்து வற்புறுத்தி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய முக்கியத்துவமற்ற அந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்தீர்கள். மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று சொல்லுகிறீர்கள், ஆனால் நீங்கள் அந்த கூட்டுகவிதையை அங்குள்ள மக்களுக்கு பிரதியெடுத்து கொடுத்ததாக அல்லவா நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பத்திரிக்கையில் எழுதுவதை காட்டிலும் துண்டறிக்கை கொடுப்பது பிரதி எடுத்து கொடுப்பது என்பது வீச்சானதல்லவா? அப்படியிருக்கும் போது மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று எப்படி இப்போது வாய் கூசாமல் பேசுகிறீர்கள்.
//’ஜெயராம் வீட்டில் வீரத்தைக் காண்பித்தவர்கள் சன்.டிவியை தாக்க வேண்டாம், கண்டித்து அறிக்கை விடச்சொல்லுங்கள் பார்ப்போம். கலைஞரை தொடாமல் தமிழனது சுரணையை எழுப்புவதுதான் சீமானது வீர அரசியல்.//
பாருங்கள் நீங்கள் அடிப்பதற்கு வாகான இடத்தில் என்னை வந்து நிறக சொல்லி வற்புறுத்துகிறீர்கள். சீமானது அரசியலுக்கு ஜவாப்தாரியாக சொல்லுகிறீர்கள். அய்யா சீமானின் அரசியலுக்கு பரிந்து பேசுவது என் வேலையல்ல, சீமான் ஒரு சமயத்தில் இராமதசை போய் பெரியாரோடு ஒப்பிடும் அளவிற்கு போனவர்தான், அது எனக்கு அருவெறுப்பை கொடுத்ததுதான், ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், இங்கு பேசப்படும் விசயம் ஜெயராமின் கருத்து, அது ஏற்படுத்திய விளைவு.
வைரமுத்து விசயத்தை பற்றி ஏன் பேசினேன் எனில் நீங்கள் சன் டி.வியை போய் நாம் தமிழர் இயக்கத்தவர் அடிப்பார்களா என்று கேள்வி எழுப்பியதை மறுத்து, ஈராகை பற்றி இழிவு படுத்தியதாக ஒருவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ‘சனநாயக நெறி’ப்படி விவாதித்து எழுதி வாங்கிய நீங்கள். வைரமுத்து வீடேறி எழுதி வாங்க முடியுமா? என்பதே என் கேள்வி அதற்கு நீங்கள் சொல்லும் பதில் நாங்கள் சினிமாக்காரர்களையும் விமர்சித்திருக்கிறோம். நீங்கள் சினிமாவை விமர்சித்திருப்பது யாரும் அறியாததா என்ன? கேள்வி சங்கர் ராம சுப்பிரமணியனிடம் நடந்தது போல் வைரமுத்துவிடம் உங்களால் நடக்க முடியுமா என்பதே. அது முடியாதவர்கள் ஏன் அடுத்தவர்களை போய் சன். டி.வி யை உடைப்பியா என்று சண்ட பிரசண்டம் செய்ய வேண்டும். கலைஞரை எதிர்த்து கண்டன அறிக்கையாவது விடச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சொல்லுகிறீர்கள், சீமானை காவந்து செய்வதற்காக சொல்லவில்லை ஒரு தகவலுக்கு சொல்லுகிறேன், செம்மொழி மாநாட்டை கருணாநிதி அறிவித்த பொழுது அதனை விமர்சித்து ஒரு காட்டமான அறிக்கை சீமான் வெளியிட்டதாக நினைவு.
/ஆனால் அந்த உணர்வு சக இனத்து உழைக்கும் மக்களை வெறுப்பதாக ஆனால் அது இனவெறி என்பதைத்தான் சொல்கிறோம்.//
எனக்கு ஒரு கேள்வி ஒரு சக தேசிய இனத்து உழைக்கும் மக்களை காக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அந்த சக தேசிய இனத்திலிருந்து கொண்டு மற்ற தேசிய இனத்தை இழிவுபடுத்தும் ஒருவனை காப்பதற்கு என்ன பெயர் அய்யா?
இரண்டகர்கள் தான் கற்பவன் அவர்களே !! வரலாற்று காலத்தில் எட்டப்பன் கொஞ்சம் முன்பு “கருணாக்கள்” இப்போ வினவு காலம் மாறலாம் துரோகிகள் மாறுவதில்லை
துரோகிகள் – பழைய தேர்தலில் அம்மையார் துரோகி, இந்த தேர்தலில் கருணாநிதி துரோகி, மன்னார்குடி வகையறாவும் தியாகி, திடீர் நண்பர் பொன்சேகாவும் தியாகி. எச்சில் காசும் பிச்சை பதவியும் அளித்தால் நாளை ராஜபட்சேவும் தியாகி. இப்படித்தேர்தலுக்கு தேர்தல் துரோகிகளை மாற்றும் நீங்களல்லோ தமிழினத்துக்கு நிர்ந்தர துரோகிகள்.
எது துரோகம்
விமர்சித்தாலே துரோகமா ?
நம்ப வச்சு கழுத்தறுத்த
நாடாளுமன்ற தேர்தல் துரோகமில்லையா..?!
கருணாநிதி துரோகி… ஜெயா மாமி நல்லவா
ஜெயின் கமிசன கேட்டுப்பாரு
தொன்னூறுகளின் முற்பாதியில்
உயிரோட, மனசிலாவது ரோசத்தோட
இருந்த இனவாதிகள கேட்டுப்பாரு..
துரோகியா, எதிரியான்னு
காலமே பதில் சொல்லும்.
கற்பவன்,
//ஜெயராமை உதைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன், அதே சமயம் கேரளத்து உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இங்குள்ள எவனாவது பேசினால் அவனை உதைப்பதற்கும் கண்டிப்பதற்கும் அவர்களுக்கும் உரிமை உண்டு என்பது அடியேனின் கருத்து, நீங்கள் சொல்லுங்கள் ஜெயராமை உதைக்க வேண்டுமா இல்லையா?//
ஜெயராமை உதைக்க வேண்டும் என்பதற்கு முன்னால் ஜெயராம் யார்? தமிழனா, மலையாளியா? அவர் தனது தாய்மொழி தமிழென்று கூறுகிறார். உங்கள் விருப்பப்படி அவர் மலையாளி என்றே வைத்துக்கொண்டாலும் அது ஜெயராம் என்ற தனிநபரின் கருத்தா? இல்லை மலையாளிகளின் பிரதிநிதி என்ற கருத்தா? ஜெயராம் மலையாளிகளின் பிரதிநிதி என்றால் அந்தத் தகுதியை யார் கொடுத்த்து? அடுத்து ஜெயராமை உதைக்க வேண்டுமென்றால் அது யார் உதைக்கப்போகிறார்கள்? அவர்கள் தனிநபராக உதைக்கவேண்டுமா? இல்லை தமிழர்களின் தன்மானம் காக்க வந்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக உதைக்க வேண்டுமா? அந்த உதை நபர் தமிழர்களின் பிரதிநிதி என்ற தகுதியை யார் கொடுத்த்து? தமிழ் மக்கள் அப்படி கொடுத்திருக்கிறார்களா?
இங்கு கேரள உழைக்கும் மக்களை இழிவு படுத்திப்பேசினால் அவனை உதைப்பதற்கு கேரள மக்களுக்கு உரிமை உண்டு என்கீறீர்கள். அப்படி கேரள மக்கள் உதைக்கும்போது சகதமிழன் அடிபடுவதைக் கண்டு சகதமிழர்கள் பொங்கி எழுவார்களே? எப்படி எழக்கூடாது என்று எப்படி உத்தரவு போடுவது? எண்ணிக்கையில் பார்த்தால் கேரளாவைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். இப்படி அதிகமான தமிழர்கள் மலையாளிகளை தாக்க வந்தால் குறைவாக இருக்கும் மலையாளிகள் என்ன செய்வது? உதவிக்காக அமெரிக்காவிடம் செல்ல்லாமா, இல்லை கன்னடம், சிங்களம் என்று அருகாமை மக்களிடம் உதவி கோரலாமா?
//ஜெயராமை உதைக்க வேண்டும் என்பதற்கு முன்னால் ஜெயராம் யார்? தமிழனா, மலையாளியா?அவர் தனது தாய்மொழி தமிழென்று கூறுகிறார். உங்கள் விருப்பப்படி அவர் மலையாளி என்றே வைத்துக்கொண்டாலும் ?//
அவருடைய தாய் கும்பகோணத்தை சேர்ந்தவர், தந்தை பாலக்காட்டை சேர்ந்தவர், வளர்ந்தது முழுக்க கேரளத்தில்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அவருடைய குடும்பம் வளசரவாக்கம் குடிவந்தது, இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பாக விஜய் டி.வியில் ஒரு பேட்டியில் ஜெயராம் கூறியது. பேட்டி கண்டவர் ம.க.இ.க மேடையில் முழங்கிய ‘பெயரியல் & ராசிக் கல்’ புகழ் பெரியார்தாசன். அந்த பேட்டி கூட மலையாளி தமிழர் உரையாடலாக தற்செயலாக அமைந்திருந்தது எனவேதான் அந்த பேட்டியை முழுமையாக கவனித்து பார்க்க நேர்ந்தது. தான் பாதி மலையாளி பாதி தமிழன் என்று கூறியவுடன் பெரியார்தாசன் சிரித்துக் கொண்டே கிண்டல் செய்யும் தொனியில் அங்க படம் வரும்போது மலையாளின்னு சொல்லுவீங்க, இங்க படம் வரும் போது மேடையில தமிழன்னு சொல்லுவீங்க என்றார், அப்படித்தான் என்பது போல ஜெயராம் சிரித்தார். எனினும் தான் வளர்ந்தது முழுக்க பாலக்காடு என்ற முறையில் தான் ஒரு மலையாளி என்றே குறிப்பிட்டார். அந்த பேட்டியில் பெரியார்தாசனோடு சேர்ந்து கேள்வி எழுப்பிய டெல்லி கணேஷ் முட்டாள்தனமாக ஜெயராமை கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு அது என்ன மலையாளிகள் மட்டும் தனி இங்கிலீஷ் பேசுகிறீர்கள் ‘கோஃபி, ‘ஓஃபீஸ்’ என்று கேட்க போக உடனே ஜெயராம் நீங்களும்தான் பேசுகிறீர்கள் ‘காப்பி’, ஆபீசு’ என்று கிண்டல் செய்தார், உடனே பெரியார்தாசன் கொஞ்சம் சுதாரித்தவராக நாங்க பேசுற இங்கிலீஷ் ‘ஆங்கிலோ சாக்சன்’ உச்சரிப்பு கொண்டது என்று ஏதோ சொன்னார். அந்த பேட்டியில் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல தமிழ் சினிமா சேச்சிகளை காட்டும் விதம், டீக்கடை நாயாராக காட்டுவது என்று பலவற்றை சொல்லி குறைப்பட்டுக் கொண்டார் ஜெயராம். சரி, ஒரு சாதாரண பேட்டியில் வெளிப்பட்ட இவ்விசயங்கள் ஜெயராம் மலையாளியா? தமிழரா என்று மதிப்பிடுவதற்கு போதுமானது என்று கருதுகிறேன். எனவே என்னுடைய ‘விருப்பப்படி’ ஜெயராமை நீங்கள் மலையாளி என்று கொள்ள வேண்டியதில்லை. எதார்த்தம் எதுவோ அதையே கொள்ளுங்கள்.
//அது ஜெயராம் என்ற தனிநபரின் கருத்தா? இல்லை மலையாளிகளின் பிரதிநிதி என்ற கருத்தா? ஜெயராம் மலையாளிகளின் பிரதிநிதி என்றால் அந்தத் தகுதியை யார் கொடுத்த்து? அடுத்து ஜெயராமை உதைக்க வேண்டுமென்றால் அது யார் உதைக்கப்போகிறார்கள்? அவர்கள் தனிநபராக உதைக்கவேண்டுமா? இல்லை தமிழர்களின் தன்மானம் காக்க வந்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக உதைக்க வேண்டுமா? அந்த உதை நபர் தமிழர்களின் பிரதிநிதி என்ற தகுதியை யார் கொடுத்த்து? தமிழ் மக்கள் அப்படி கொடுத்திருக்கிறார்களா?//
ஜெயராமின் கருத்து மலையாளிகளால் விரும்பி நேசிக்கப்படும் ஒரு நடிகரின் கருத்து. அது திமிர் பிடித்த தறுதலை ஒன்றின் தனிப்பட்ட கருத்தெனினும் பொது தளத்தில் அது முன்வைக்கப்படும் பொழுது அதற்கு தகுந்த முறையில் எதிர்வினையாற்றப்படவேண்டுமா இல்லையா?
//இங்கு கேரள உழைக்கும் மக்களை இழிவு படுத்திப்பேசினால் அவனை உதைப்பதற்கு கேரள மக்களுக்கு உரிமை உண்டு என்கீறீர்கள். அப்படி கேரள மக்கள் உதைக்கும்போது சகதமிழன் அடிபடுவதைக் கண்டு சகதமிழர்கள் பொங்கி எழுவார்களே? எப்படி எழக்கூடாது என்று எப்படி உத்தரவு போடுவது? எண்ணிக்கையில் பார்த்தால் கேரளாவைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். இப்படி அதிகமான தமிழர்கள் மலையாளிகளை தாக்க வந்தால் குறைவாக இருக்கும் மலையாளிகள் என்ன செய்வது? உதவிக்காக அமெரிக்காவிடம் செல்ல்லாமா, இல்லை கன்னடம், சிங்களம் என்று அருகாமை மக்களிடம் உதவி கோரலாமா?//
உதைப்பது என்றால் படை நடத்தி வந்தோ அல்லது வண்டி கட்டிக் கொண்டோ வந்தா உதைப்பார்கள். கேரள மக்கள் அனைவரும் ஒரு சேர திரண்டு வந்து ஒண்டிக் ஒண்டி நின்று, கடைசியில் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் தமிழர்கள் ஜெயிப்பதற்கு இது என்ன மனோகர் காலத்து நாடகமா? போங்க பாஸ் நீங்க ரொம்ப காமெடி பன்றீங்க,
///ஜெயராமின் கருத்து மலையாளிகளால் விரும்பி நேசிக்கப்படும் ஒரு நடிகரின் கருத்து. அது திமிர் பிடித்த தறுதலை ஒன்றின் தனிப்பட்ட கருத்தெனினும் பொது தளத்தில் அது முன்வைக்கப்படும் பொழுது அதற்கு தகுந்த முறையில் எதிர்வினையாற்றப்படவேண்டுமா இல்லையா?///—-கண்டிப்பாக வேண்டும்.
எழுத்தால், நாவால், கரத்தால் தம் கண்டனத்தை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள். கரத்தால் கண்டனம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், வினவின் எதிரிகள். ஆக, வினவு, வழக்கம்போல எழுத்தால் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, கண்டனம் தெரிவிக்கவேண்டியவர்களை அதற்கு அருகதையற்றவர்கள் என்று தம் பதிவால் நையப்புடைத்துள்ளார். வினவுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயராம் எவ்வளவோ மேல் போல ஆகிவிட்டது இப்போது….
நெத்தியடி தமிழக மக்களால் விரும்பி நேசிக்கப்பட்ட முத்துக்குமாரை கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய் இப்போது ஜெயராமுக்கு எதிராய் வினை செய்யப் பேசுகிறது, பேசட்டும், ஆனால் உங்கள் உளரல்களை சீரியசாக எடுத்துக்கொண்டால் தமிழர்களை இழிவு படுத்திமைக்க்காக உங்கள் வாயிலும் கூட பெட்ரோல் குண்டு வீசலாம், எதர்க்கும் சீமானுக்கு உங்கள் விலாசத்தை அனுப்பி வையுங்கள். ஆட்டோ அனுப்புவார்
//கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய்//
நிரூபிக்க வேண்டும்….
எதர்காக இந்த ஆதாரம் கேட்கும் நாடகம் ……கூர்ந்து முத்துக்குமார் மன்னித்து விடு கட்டுரையின் ஒத்துவராத மறுமொழிகள் பகுதியை பாருங்கள். உங்கள் ‘சகோதரர்’ ஷாஜஹானின் உளரல்களும் அதையெல்லாம் தொகுத்து நீங்கள் வெளியிட்ட மலரும். அப்படியேத்தானே இருக்கின்றன.. அது உங்களுக்கு தெரியாதா?
முத்துக்குமார் கோழை என்ற உங்கள் பழைய கருத்தை நீங்கள் மாற்றிக்கொண்டிருந்தால் ””முத்துக்குமார் தமிழரின் வீரத்தியாகி”” என்று இந்த பின்னூட்டத்தில் பதிலளித்தால், உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு எனது பின்னூட்டத்தை நீங்கசெசொல்லி வினவுக்கு கடுதாசி போட நான் தயார். நீங்கள் தயாரா???
—-அப்படியா, ரொம்ப நல்லதாய்ப்போச்சு, போய் பார்த்துவிட்டு வந்து நிரூபிக்கவும். இல்லையேல், இனி இங்கு பின்னூட்டமே போடா வரக்கூடாது, உலகமகா பொய்யரே…
பொய் சொன்னதுக்கு முதலில் என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கத்தயாரா?
நெத்தியடி, கண் பார்வை கோளாரா… அதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே
முத்துக்குமார் கோழை என்ற உங்கள் பழைய கருத்தை நீங்கள் மாற்றிக்கொண்டிருந்தால் ””முத்துக்குமார் தமிழரின் வீரத்தியாகி”” என்று இந்த பின்னூட்டத்தில் பதிலளித்தால், உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு எனது பின்னூட்டத்தை நீங்கசெசொல்லி வினவுக்கு கடுதாசி போட நான் தயார். நீங்கள் தயாரா??? தயாரா???? தயாரா?????
ஜெயராம் சொன்னதை எதிர்த்து ‘உங்கள் எதிரி’ சீமான், தீக்குளித்து தற்கொலை செய்திருந்தால் ””சீமான் தமிழரின் வீரத்தியாகி”” என்று நீங்கள்/வினவு ஒத்துக்கொள்வீர்கள். தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவீர்கள். ஆனால், அச்செயலை நான் எதிர்ப்பேன்.
அப்பட்டமாய் என்மீது பொய் சொன்ன வாய் இன்னும் தன் பொய்யை பொய் என்று ஒத்துக்கொள்ளவே இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
மனிதன் என்றால் கொஞ்சமாவது…….
நிரையை ஒட்டி போங்க பாய்
நெத்தியடி, உடைத்து சொல்லுங்க முத்துகுமார் தியாகியா இல்லையா. நான் தியாகி என்று சொல்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?????
//கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய்//
—-சொன்னவர் யார்…?
நெத்தியடி நீங்க முத்துக்குமாரை தியாகின்னு ஒத்துகிட்டா இந்த கீபோர்ட உங்க காலாய் நெனச்சு தொட்டு மன்னிப்பு கேக்க நான் ரெடி? நீங்கதான் ஒத்துக்க மாட்டேங்கறீங்க அதான் ஏன்னு புரியல??????
நெத்தியடிபாய், தம்பி கேள்விக்குறி எவ்வளவு ஞாயமா மல்லுக்கட்டுது, உங்க வாயால முத்துக்குமார தியாகின்னு சொல்லி ஆட்டத்த நல்ல படியா முடிச்சுக்கிடுங்க, நாங்க எல்லாரும் ஆசைப்படுதோம்லா
என்னா அண்ணாச்சி….
///ஜெயராம் சொன்னதை எதிர்த்து ‘உங்கள் எதிரி’ சீமான், தீக்குளித்து தற்கொலை செய்திருந்தால் ””சீமான் தமிழரின் வீரத்தியாகி”” என்று நீங்கள்/வினவு ஒத்துக்கொள்வீர்கள். தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவீர்கள். ஆனால், அச்செயலை நான் எதிர்ப்பேன்///
—- உங்களுக்குமா நான் சொல்வது புரியவில்லை…
உங்க பொய்யன் தம்பி, தன் லூஸ்டாக் பொய்யை மறைக்க ஏதோ உளறிக்கொட்டுறார்ணா நீங்களுமா…
ஜனங்களே ஈழத்தமிழனுக்காக தீக்குளிச்ச முத்துக்குமார தியாகின்னு சொல்ல இந்த நெத்தியடி முஹம்மதுவுக்கு வாய் வரல அதெல்லாம் ஏன்னு கேக்க மாட்டீங்களா????? இதுதான் நீங்க முத்துக்குமாருக்கு செய்யும் மரியாதையா?????
நெத்தியடி, முத்துக்குமார நீங்க தியாகின்னு சொல்லி நான் உங்கள பத்தி சொன்னது பொய்யென நிரூபியுங்களேன் .. என்ன தயக்கம்???
‘ முத்துக்குமார் ஒரு தியாகி’ மூன்றே வார்த்தை சொல்லுங்கள் …அது போதும் பாய் அது போதும்..