privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

-அறிமுகக் குறிப்பு: அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.

இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்த பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான் அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் தி.மு.க அரசின் சதிகளை விளக்கும் வண்ணம் தொடர் பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இங்கே அதை ஒட்டி சமீபத்தில் மதுரையில் அந்த அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தை ம.உ.பா.மை நடத்தியது. அதன் பதிவு கீழே தரப்படுகிறது.

___________________________________

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மதுரையில் 10.3.2010 புதன்கிழமை காலை 9.00 மதி முதல் 5.00 மதி வரை மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் சற்றும் கலையாமல் அமர்ந்திருந்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 29 பேர் அர்ச்சகர்களாகவே கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிதம்பரம் நடராசர் கோவிலை மக்கள் சொத்தாக்கியதைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் பிற போராட்ட அமைப்புகளும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய ராஜூ “அரசியல் சட்டம் 17வது பிரிவு தீண்டாமை குற்றம் என்று கூறுகிறது. ஆனால் ஆலய கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் நுழைய முடியாது என்ற தீண்டாமை இருந்து வருகிறது. அரசியல் சட்டமா? ஆகம விதிகளா? என்று கேள்வி எழும்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? சட்டப்படி போராடி தீர்வு கண்டாலும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினரை நுழைய அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிதம்பரம் போராட்ட அனுபவம் உணர்த்துகிறது. எனவே மக்கள் இந்த கோரிக்கைக்கு பெருவாரியாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டம் வெல்லும்” என்று வலியுறுத்தினார்.

உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட அர்ச்சக மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மேடைகளில் பேசிப் பழக்கமில்லாதவர்கள் மந்திரம் மற்றும் பாடல் வடிவங்களில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.

“வேதம், ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது வருகிற கடவுள் நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகின்றார்கள். ஆகம விதிகளின் படி தலைவழுக்கையாக இருந்தால் கூட அர்ச்சகராக இருக்க தகுதியில்லை. திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டும் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும். ஊனம் இருக்கக் கூடாது. பத்துவிரல்களுக்கு மேலோ, கீழோ இருக்கக் கூடாது.”

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் ஆனந்தன் பார்ப்பனர்களைப் போலவே தோற்றத்தில் இருந்தார். ஆனால் பூணூல் மட்டும் இல்லை. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மிக அழகாக, துல்லியமாக மந்திரங்களை ராகத்துடன் அவர் பாடிக் காட்டி இது எந்த வகையில் பார்ப்பனர்களின் திறமைக்கு குறைவானது என்று கேட்டார்.

மேலும் “படித்து அர்ச்சகராகி நமது பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை வாழுமென்று எதிர்பார்த்த பெற்றோர்களும், நாங்களும் இப்போது வேறு வழியில்லாமல் திகைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைப்படுகின்றனர். இதற்கு யார் காரணம். உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலே, தகுதியில்லாமலே அர்ச்சகர்களாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள், முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இந்த வேலையை செய்யாமலிருந்திருக்கலாம். அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று பெயரளவில் செய்து விட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.” என்றும் குமுறினார்.

மாணவர் சங்க பொருளாளர் திரு.சண்முகம் பார்ப்பனர்களின் பகல் வேசத்தை தோலுரித்துக் காட்டினார். “தன்னை ஒரு பூஜைக்காக அழைத்துச் சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். ஹோமம் ஆரம்பிக்கும் முன் ஒரு சரம் பான்பராக்கை எடுத்து எனக்கு இரண்டு கொடுத்தார். எனக்குப் பழக்கமில்லை என்று சொன்னேன். அவரோ இதைப் போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன்னார். ஆறிப்போன காப்பியை ஹோமத்தில் சுடவைத்து குடித்தார். மறு நாள் காப்பி வரவில்லை என்பதால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை எடுத்து ஹோமத்தில் வைத்து காப்பி போட்டுக் குடித்தார். இது தான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம்.” என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாக பாடி, தான் எத்தனையோ திருமணங்கள் மற்றும் கிரகப்பிரவேசங்கள் நடத்தி வைத்திருக்கிறதாகவும் அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தள்ளியா வைத்துவிட்டார் என்று வினா எழுப்பினார்.

மாணவர்கள் சிலர் “பள்ளியில் பயிற்சி பெறும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தோம். எவ்வளவு நம்பிக்கையோடு கல்வியை கற்றோம். அத்தனையும் பார்ப்பனர்களுடைய சாதி வெறியினாலே தகர்க்கப்பட்டு விட்டது. அதற்கு சட்டமும் துணை நிற்கிறது” என்று மனம் வருந்தினர். மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர விடாமல் பல்வேறு வேண்டாத சக்திகள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மதுரை மாணவர் மாரிமுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் நாங்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தார்.

பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினர் நுழையக்கூடாது. தாங்கள் அழைக்கும் போது மட்டுமே கடவுள் வருவார் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பிள்ளைகளையெல்லாம் கலெக்டர், செக்கரட்டரி, வங்கி மேலாளர், தொழில் அதிபர்கள்  ஆக்கிவிட்டு சொகுசாக வாழ்கின்றனர். பார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பார்ப்பனர்களின் வாரிசுகள் கடல் கடந்து கண்டம் கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். பிற சாதியினர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று சொல்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்து நீங்கள் கருவறையைத் தவிர வேறு எங்கும் வரக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அர்ச்சகர் வேலையைத் தவிர வேறு வேலை கிடையாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? எல்லா இடத்திலும் அவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நமக்கெல்லாம் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது எந்த வகையான நீதி?

சாதி, தீண்டாமை, அர்ச்சகராகுவதற்கான தடை, தங்கள் மூலமாக மட்டுமே கடவுள் வருவார் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் பார்ப்பனியமே காரணம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே. ராமசாமி பேசும் போது “நித்யானந்தா, சங்கராச்சாரி போன்றவர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள்தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினுடைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் கடவுளுடைய அவதாரம் என்று சொல்வதும் உத்தமன் என்று சொல்வதும் பொய். பார்ப்பனர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏமாற்று வேலை. நான் ஒருமுறை கோவிலுக்குச் சென்ற போது அங்கே அர்ச்சகர் இல்லை. அர்ச்சகர் இதோ வருவார் அதோ வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அர்ச்சகர் வந்த பாடில்லை. பொறுமை இழந்த நான் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வேன் எனக்கு எல்லா மந்திரங்களும் என்று கூறி கருவறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். அதற்குள் பட்டரை அழைத்து வந்துவிட்டார்கள். சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயரா என்று நான் சவால் விட்டேன். மதுரையிலுள்ள திருப்புகழ் பக்த சபையை கட்டிக்காத்தவர்களிலே நானும் ஒருவன்” என்று கூறினார்.

குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனுர் கிழார் அவர்கள் “வடநாட்டு கடவுளர்களையும் கந்த சஷ்டி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு.  நம்மை அறியாமலேயே கொண்டாட வைத்து விட்டார்கள். விநாயகன், ராமன், கிருஷ்ணன், ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் தமிழர்களுக்குரியதே இல்லை” என்று அடித்துக் கூறிய அவர் சைவ சித்தாந்தம் பற்றி அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை மேடையில் அறிமுகம் செய்து பலரும் அதை வாங்கி சென்றார்கள்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் திரு.கி.மகேந்திரன் கி.மகேந்திரன் பேசியது : “1970ல் தந்தை பெரியார் கர்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாபிதி இதற்காக நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். என்னுடைய அரசு அதற்கான சட்டம் ஒன்றினை இயற்றும் என்று கூறினார். கர்ப்பக்கிரகத்துக்குள் நிற சாதியினர் நுழைய முடியாத பிலை என்னுடைய நெஞ்சிலே தைத்திருக்கின்ற முள் என்று கூறினார். பெரியார் மறைந்த போது பெரியாரின் நெஞ்சிலே தைத்த முள்ளோடு அவரை நான் புதைக்கும்படியாக ஆகிவிட்டது என்று கருணாநிதி கூறியதை” கருணாநிதிக்கு நினைவுபடுத்தினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சின்ன ராஜா, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனாதாத்தள பிரமுகர் வேலுச்சாமி, ம.க.இ.க தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு தோழர் குருசாமி, பு.ஜ.தொ.மு.தோழர் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள் சிலரும், தனிநபர்களும், தாங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும் நேரமின்மையின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை. மாலை 5.15 மதியளவில் குமுடி மூலை ஆறுமுகசாமி அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார். அனைத்து ஊடகங்களும் செய்தி சேகரித்துச் சென்றன.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் அர்ச்சக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “”””வாழ்மிகு வராது பொய்க மதிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க”” என்ற பெரியபுராண பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டம் முடிக்கப்பட்டது.

–          தகவல், புகைப்படம்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164

 1. மருவத்தூர் பங்காரு அடிகளாரு என்ன பார்பனார? அவர் karuvarikulle போறாரு அர்ச்சனை செய்யுறாரு? அப்போ அந்த கோவிலுக்கு பார்பன சாதியினர் சாமி கும்புட வர மாற்றங்களோ? உண்மையிலே தெரியலீங்க கொஞ்சம் விளக்குங்க ப்ளீஸ்.

 2. தேவை இல்லாத போராட்டம் தோழர்கள் அரசியல் தந்திரத்திற்காக கொள்கையை விட்டுகுடுக்க கூடாது

 3. குறி சொன்ன பங்காரு, அம்மா வாக மாறியது பெருங்கதை      mootoo நேரடியாக சென்று தகவல் திரட்டி ஏழுதுனா நல்லாயிருக்கும்

 4. “அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.

  இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்”

  இதை படித்த என் நண்பர் எழுதுமாறு சொன்னது:” காலவரிசைப் படி நடந்ததைச் சொல்ல வேண்டியதுதானே.ஆகஸ்ட் 2006ல் தடை உத்தரவு தரப்பட்டது. இப்பள்ளிகள் எப்போது துவக்கப்பட்டன என்பதை ஏன் மறைக்கிறீர்கள்.அவர்கள் சேரும் போது அர்ச்சகர்கள் தடை பெற்றிருப்பது தெரியாதா இல்லை யாரும் சொல்லவில்லையா.வில்லங்கமான சொத்தை அதில் சட்டச் சிக்கல் இருக்கிறது என்று தெரிந்தே விலை கொடுத்து வாங்கிவிட்டு அனுபவிக்கவும் முடியாமல்,விற்கவும் முடியாமல் திண்டாடுவது புத்திசலித்தனமா இல்லை மனித உரிமையா. வழக்கு முடியாமல் இதற்கு தீர்வு வராது. உண்ணாவிரதம் போன்ற ஸ்டண்ட்களை நடத்தி நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள்? பயிற்சி பெற்றவர்கள் வேறு வேலை கிடைத்தால் அதை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.கூட்டத்தில் பேசுபவர்கள் பேசிவிட்டு போய்விடுவார்கள்.அவரவர் பிழைப்பு அவரவர்க்கு. ஒன்று வழக்கினை விரைந்து முடிக்க வகை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு வேறு வேலைகள் கிடைக்க உதவ வேண்டும்.அதை விடுத்து அரசியல்
  ஸ்டண்ட் அடிப்பது மோசடி மோசடி. ஏமாறாதீர்கள். கோர்ட்டில் தீர்க்க வேண்டிய சட்ட விவகாரத்தை தெரு முனையில் தீர்க்க முடியாது. ”

  யாரை யார ஏமாத்தறாங்களோ ஒண்ணுமே புரியல சாமி.

 5. மதங்களை ம க இ க வேய் வளர்த்து விடும் போல் இருக்கு ..எங்க போய் முடியுமோ ? 

  • யாராவது சீக்கிரம் HIT & MORTION spray இருந்தா கொடுங்கப்பா இந்த 30/03/1985 கரப்பான்பூச்சி தொல்லை தாங்க முடியல.

  • அய்யா முதல்ல மாணவர்கள்ளோட எதிர்காலத்த பாருங்க.அரசின் கையறு நிலைய கவனிங்க இதல்லாம் எடுத்து செஞ்சாலே ம.க. இ.க வளர்ந்துடும் நினைகிறீங்க பாருங்க அதுதான் அவங்க வளர்ச்சியை தீர்மானிக்குது பயப்பட வேண்டாம் மன அழுத்தத்துக்கு ஆளகிடதீங்க.

 6. தமிழ் என்னும் மொழியின் மூலம் இறையை உணர்ந்து பருகி தெளிந்து பலரும் இன்புற வேண்டி நமது பெரியோர்கள் நமக்களித்து விட்டு சென்ற படைப்புகள் திருமுறைகள், பாசுரங்கள், அந்தாதி, ஆற்றுப்படை மற்றும் தமிழ் ஆகமங்கள். அந்த இறை உணர்வு பாமரனை சென்று அடைய விடாது தடுத்த தகைமையாளர்கள் பிராமணர்கள்.  இறையை பூசித்து பூசாரியாக இருக்க பிறந்த ஜாதி தடையாக இருக்ககொடது.  இதுவும் உண்மை.  அதே போன்று பரம்பரையாக ஒரு பூசை நிர்வாக உரிமையை அந்த குடும்பம் இழக்க இந்த சமூகம் போர்க்கோலம் பூணுவதும் தவறு.  அதே நேரத்தில் எத்தனையோ கோயில்களில் பூஜை செய்து வைத்த பூசாரிகள் வேறு வேலை தேடி வெளியூர் சென்று விட்டதால் பூசைகள் நின்ற இடங்களில் இந்த புதிய பயிற்சி பெற்ற மாணவர்களை அமர்த்தி வாய்ப்பு கொடுக்க வேண்டும் இந்த சமூகம்.

 7. நல்ல பதிவு வினவு. பார்பனர்கள் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஏன் கடவுளுடன் பேச அவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்பது மிகை. நல்ல அற்புதமான பதிவு

 8. Hello Friend,  Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is “Bloggers, Internet users and their intelligence”.  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire’s to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

   
  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore – 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com
   
   
  (Pls ignore if you get this mail already)

 9. மேல்மருவத்தூர் அடி்களார் அவர் கட்டிய கோவி்லில் மட்டுமே கருவரைக்கு்ள் போக முடியும்.ஆகம விதிப்படி கட்டப்பட்ட மதுரை மீனாட்சி ;பழனி முருகன் ;ஸ்ரீரங்கம் ;சிதம்பரம் ……அவாள் கோவில்களீல்
  போக முடியாது.அவர் மட்டுமல்ல மன்மோகன்,த்மிழக முதல்வர்;சுப்ரிம் கோர்ட் CJ கூடப் போக முடியாது.

  • நண்பா தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜ சோழன் கட்டினது ஆச்சே. அவரு பார்பனன் இல்லை தானே. அங்கேயும் பார்பனன் தான் பூஜை செயுரன்களோ?

 10. ஆகலாம்;ஆகலாம்;அனைத்து சாதியினரும்
  ஜனாதிபதி ஆகலாம் ;பிரதமர் ஆகலாம்
  முதல்வர் ஆகலாம் ;ஜட்ஜும் ஆகலாம்
  ஆனால் ஆக முடியாது;
  அர்ச்சகர் ஆக முடியாது; தடுக்குது ;தடுக்குது;பார்ப்பனீயம் தடுக்குது

 11. அர்ச்சகர் வேலையில் வருமானம் அதிகம் கிடையாது. பெரிய கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு வருமானம் அதிகம், அர்ச்சனை தட்டில் போடப்படும் பணத்தில் பங்குண்டு என்பதால். மற்றப்படி அரசு ஊழியராக இருப்பதால் கிடைக்கும் சில சலுகைகள் உண்டு. இதற்கு குரூப் ௨ அல்லது 3 பரிட்சை எழுதி உருப்படியான வேலைகளுக்கு போகலாம். ஐ ஏ எஸ் ஆவது கௌரவம் அர்ச்சகர் ஆகி என்னத்தை கிழிக்க போகிறீர்கள். அரசு அலுவலகத்தில் கடை நிலை ஊழியர் வேலை அற்சகர் வேலை யை விட மேல், தொழிற்சங்கம் உண்டு, யாரும் மிரட்ட முடியாது இங்கு அதில்லை நிர்வாக அதிகாரிக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் அவர்கள் தயவு வேண்டும் . எனவே புத்தியுள்ளவர்கள் வேறு வேலைக்கு முயல வேண்டும். கேஸ் எப்போது முடிந்து எப்போது வேலையில் சேர்வது. யாரோ அரசியல் நடத்த பலியாடுகள் இவர்களா.

  • அப்படியா… இது தெரியாம சுப்ரீம் கோர்ட் வரை போயுள்ள தீட்சிதர்களுக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கப்பா …

 12. மனித உ.பா.மையத்தினருக்கு இப்பிரச்சனையின் சட்ட சிக்கல் குறீத்த புரிதல் உண்டு.அதனால்தான் பல மாதங்களாக போராடி அர்ச்சக மாணவர்களூக்கு சங்கம் உருவாக்கி உச்ச நீதிமன்ற் வழக்கில் ஒரு தரப்பினராக இனைந்துள்ளோம்.ஆனால் வீதீயில் இறங்கிப் போராடாமல் சட்டப் போராட்டத்தில் வெற்றீ அடைதல் சாத்தியமில்லை என்பதையும்
  நாங்கள் அறீவோம்.கோவாலு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பத்து பேரை திரட்டி போராட்டம் நடத்தினால் புரியும் எது மோசடி என்று.

 13. ஒருபுறம் சட்டம் தன் கடமையை செய்யட்டும். சமுதாயம் இந்த மாணவர்களை அர்ச்சகர்களாக ஏற்கவேண்டும். புரோகிதத்திற்கு முதலில் இவர்களை மக்கள் ஏற்றால் பார்ப்பனர்களுக்கு சமூக பொருளாதார போட்டிசூழல் ஏற்படும். அதுவே ஒரு நல்ல துவக்கமாக இருக்கக்கூடும்.

 14. வெட்டி வேலை…..

  அனைத்து சாதியினரும் மருத்துவர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகசேவகர்களாகவும் பெண்ணுரிமைப் பாதுகாவலர்களாகவும் அறிவியல் கணித பொறியியல் சட்ட வல்லுனர்களாகவும் ஆக வேண்டும்.

  முட்டாள்களாலும் ஆதிக்க சாதியினராலும் இழிவாகப் பேசப்படும் மாடு மேய்த்த்தலும் முடி வெட்டுதலும் மலம் அள்ளுதலும் கூட உலகிற்குத் தேவையான தொழில்களே.

  அர்ச்சகர் தொழில்தான் எதற்கும் பிரயோசனம் இல்லாத ஈனப் பிழைப்பு. இதற்கோ பிற மதங்களில் இதற்கு உள்ள சமானமான வழிபாடு செய்விக்கும் தொழில்களுக்கோ போராடுவது பகுத்தறிவிற்கும் மானுட முன்னேற்றத்திற்கும் பெரும் இழுக்கு.

 15. வித்தகன் நான் சொல்ல நினைத்தை நீங்கள் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

 16. அர்ச்சகர் பிரச்சனை -பார்க்க குமுதம் ரிப்போர்ட்டர் இந்த வார இதழ்.

 17. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! ஆலய தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் ! என்ற கோரிக்கை வெறும் கூலிக்காக மட்டுமல்ல நண்பரே! பார்ப்பனர் அல்லாதவர்கள் பிறப்பால் இழிந்தவர்கள் என்று சொல்லும் கேவலத்திற்கு எதிரான தன்மான போராட்டம் .இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதும் உள்நோக்கம் கற்பிப்பதும் பார்ப்பனர் அல்லாத வர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரி போட்டுக்கொள்வதாகும்.சாதி இழிவுகளை ஏற்றுக்கொள்வதாகும்.பார்ப்பனியத்தின் எத்தனையோ கேடுகளில் இதுவும் ஒன்று.அதை ஒழிக்காவிட்டால் இல்லை விடிவு !

 18. கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார். பிறகு, வசதிக்காக கட்டப்பட்ட ஒரு சிலையை தொட இவளவு போரட்டமா? சிரிப்புதான் வருகிறது எனக்கு!

 19. க‌டவுள் எங்கும்தானே இருக்கிறார். தன்னிலும்தானே இருக்கிறார். தன்னை தொடுவதைக் கூட அனுமதிக்க போராடும் பக்தனுக்கு உதவாத அவர் எங்கே ஒளிந்திருக்கிறார். தூணிலா, துரும்பு எதுவும் படாத கருவறையிலா

 20. ஐயா .வினவு & கம்பனி நக்சல் தோழர்கள் அனைவரும் சீக்கிரம் அர்ச்சகர் ஆகிவிடுங்களேன்.நாடு பிழைத்து போகட்டுமே.நீங்க அர்ச்சகர் ஆகி விட்டால் .ரஷ்யன் மற்றும் மேன்டரின் மொழியில் கூட அர்ச்சனை செய்யலாம்னு சிதம்பரம் ஐயா சட்டமே போட்டாலும் போடுவார்.ஸ்டாலின்,மாவோ கோவில் கூட கட்டிக்கலாம்.இந்த மாறி புரட்சியெல்ல்லாம் நீங்க செய்யலாமே.

 21. நாத்தீகர்களூக்கு எதற்கு கடவுள் பிரச்சனை?இதுதான் பலரின் கேள்வி? இது வெறும் கடவுள் பிரச்சனை அல்ல.மிகக் கேவலமான சாதிப் பிரச்சனை.ஆகமத்தின் பெயரால் சாதி -தீண்டாமையை சட்டப்படி நிலை நிறுத்தும் பார்ப்பனீய சூழ்ச்சி இது.மனித உரிமை மீற்லின் மிகக் கொடூரமான வடிவம் சாதி தீண்டாமை.அதனால்தான் தந்தை பெரியார் கோயில் நுழைவுப் போராட்டம் ; கருவரை நுழைவுப் போராட்டம் நடத்தினார்.பார்ப்பனீய சாதி எதிர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியே இது.

 22. பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது எல்லோருடைய கடமை . ஆதிக்கம் செய்கிறவர்களுக்கு எதிராக போராடுவது தேவை தானே?மாவோஉக்கும் மார்க்சுக்கும் கோவில் கட்டுவது மிக எளிமையானது .மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பது தான் கடினமானது. அதற்க்கு முன்வாருங்களேன் !

 23. நாய்கள் எல்லாம் போகலாம்! எலிகள் எல்லாம் போகலாம்! கொலைகாரன் சங்கராச்சாரி!காமக் கொடூரன் தேவநாதன்! பார்ப்பன கிரிமினல் எல்லாம் கருவறைக்குள் போகலாம்! ஆனால் போகக் கூடாதா?முறையாய் பயிற்சி பெற்ற படித்து பட்டம் பெற்ற!அர்ச்சக மாணவர்கள்! நாங்கள் போகக் கூடாதா?அர்ச்சனை செய்யக் கூடாதா? எங்கேடா சமத்துவம்?வெங்காய சமத்துவம்?

 24. மலையப்பன் அவர்களே! பார்ப்பனீய சாதி தீண்டாமை இந்திய நாட்டின் பிரச்சனை இல்லையா?மக்களின் பிரச்சனை இல்லையா?மாவோ ;மார்க்சுக்கு கோயில் கட்டுவது எளிமையானதுதான்!எளிமையை யாரும் கோரவில்லை.கொஞ்சம் கடினமான அவர்களின் சமத்துவக் கொள்கையை கடை பிடிக்கக் கோருகிறோம்!அதற்கு முன்வாருங்களேன்!

 25. நண்பரே !நான் மார்க்சுக்கு கோவில்கட்ட சொல்லவில்லை .போராட முன் வாருங்கள் என்று தான் சொல்கிறேன்! !

 26. இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்றார் தந்தை பெரியார். இங்கே பெரியாரின் பேரன்கள் எந்த இழிவு வந்தாலும் பிரச்சினை இல்லை கொஞ்சம் அந்த மேல் சாதியினர் செய்யும் வேலைகளை outsourcing செய்து எங்களுக்கும் தந்தால் நாங்களும் தேவனுக்கு பணி செய்து சுபிட்சமாக வாழ்வோம் என்கிறார்கள். 
  எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆனால் நாட்டில் சமத்துவம் மேலோங்கி சுபிட்சம் தலை தூக்கும். ஒரு வேளை இதுதான் புதிய ஜனநாயகமோ? . தோழரே வாழக உமது புரட்சி 

 27. If the government is not appoint these guys then why they give training to these people..and waste their life and the government also waste the people’s money…

 28. temple is not only made for bramins,it’s a common to all,so god not saying bramins only to do the pooja’s and mantra’s,and give the chance to these persons to do the pooja’s ….

 29. பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது எல்லோருடைய கடமை . ஆதிக்கம் செய்கிறவர்களுக்கு எதிராக போராடுவது தேவை தானே?மாவோஉக்கும் மார்க்சுக்கும் கோவில் கட்டுவது மிக எளிமையானது .மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பது தான் கடினமானது. அதற்க்கு முன்வாருங்களேன் !

  If the government is not appoint these guys then why they give training to these people..and waste their life and the government also waste the people’s மோனே

  நாத்தீகர்களூக்கு எதற்கு கடவுள் பிரச்சனை?இதுதான் பலரின் கேள்வி? இது வெறும் கடவுள் பிரச்சனை அல்ல.மிகக் கேவலமான சாதிப் பிரச்சனை.ஆகமத்தின் பெயரால் சாதி -தீண்டாமையை சட்டப்படி நிலை நிறுத்தும் பார்ப்பனீய சூழ்ச்சி இது.மனித உரிமை மீற்லின் மிகக் கொடூரமான வடிவம் சாதி தீண்டாமை.அதனால்தான் தந்தை பெரியார் கோயில் நுழைவுப் போராட்டம் ; கருவரை நுழைவுப் போராட்டம் நடத்தினார்.பார்ப்பனீய சாதி எதிர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியே இது.

  அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! ஆலய தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் ! என்ற கோரிக்கை வெறும் கூலிக்காக மட்டுமல்ல நண்பரே! பார்ப்பனர் அல்லாதவர்கள் பிறப்பால் இழிந்தவர்கள் என்று சொல்லும் கேவலத்திற்கு எதிரான தன்மான போராட்டம் .இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதும் உள்நோக்கம் கற்பிப்பதும் பார்ப்பனர் அல்லாத வர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரி போட்டுக்கொள்வதாகும்.சாதி இழிவுகளை ஏற்றுக்கொள்வதாகும்.பார்ப்பனியத்தின் எத்தனையோ கேடுகளில் இதுவும் ஒன்று.அதை ஒழிக்காவிட்டால் இல்லை விடிவு !

 30. \\இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்றார் தந்தை பெரியார்.//ஆனால் பெரியார் இசுலாமிற்கு மாறவில்லை.மாறாக சாதி;மதம்;கடவுளை(அல்லாவையும் சேர்த்து) ஒழிப்பதே சமத்துவத்திற்கு வழி என்றார்\\.எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆனால் நாட்டில் சமத்துவம் மேலோங்கி சுபிட்சம் தலை தூக்கும். ஒரு வேளை இதுதான் புதிய ஜனநாயகமோ? . தோழரே வாழக உமது புரட்சி//ஒருவேளை எல்லாரும் முசுலீம் ஆனால் சமத்துவம் மேலோங்கி சுபிட்சம் தழைக்குமோ?முசுலீம்கள் மட்டும் வாழக் கூடிய ஆப்கானிஸ்தான்;இராக்கில் சுபிட்சம் மேலோங்காமல் இரத்தம் ஓடுவதேன்?அல்லா உலக மக்கள் எல்லோருக்கும் உதவ மாட்டாறா?முசுலீமாக மாறினால்தான் உதவுவாறா?என்னே சமத்துவக் கடவுளின் கருணை!அர்ச்சகர் போராட்டம் சாதி ஒழிப்பிற்க்கான முதல்படி.

 31. அன்புள்ள நண்பன்,
  பெரியாரை விட ஒரு படி மேலே போய் யோசிப்பதற்கு பாராட்டுக்கள். இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்ற தலைப்பில் பெரியார் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுங்கள். தொடர்ந்து விவாதிப்போம். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரத்தம் ஓடுவதின் காரணம் அமெரிக்காவின் அரசியல். சும்மா ஒன்றுமே தெரியாத மாதிரி நடிக்காதீர்கள்.

  • அன்புள்ள அமைதியின் சிற்றோடை,

   “கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;
   கடவுளை கற்பித்தவன் முட்டாள்
   கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.”

   என்பது பெரியாரின் சிக்நேசர் ஸ்டேட்மென்ட்.. விவாதத்தை இங்கேயிருந்து துவங்குங்கள், எல்லோரும் தெளிவுறலாம்

   அது சரி பெரியார் கருத்துக்களை விவாதிக்க உங்கள் ஜமாத்தில் அனுமதி பெற்றுவந்தீர்களா???, எதற்கும் குரானில்அன்றே பெரியாரை பற்றிய சிறு குறிப்பு உள்ளதாக ஒரு விளக்கத்தை தயார் செய்து வைத்திருந்தால் நெத்தியடி, ஷாஜூ, தமிழ் முஸ்லிம் மற்றும் ஷேக் தாவூத்திடம் சொல்ல வசதியாக இருக்கும்.. இல்லை உங்களை கண்டபடி ஏசுவார்கள்

  • @@பெரியாரை விட ஒரு படி மேலே போய் யோசிப்பதற்கு பாராட்டுக்கள். @@ பாராட்டுக்கு ரொம்ம்ம்ம்ப நன்றி .. இதே மாதிரிதான் சிலபேரு ஒரு 1500 வருச பழைய்ய்ய்ய்ய்ய புஸ்தகத்த வச்சுகிட்டு இதுக்கு மேல சிந்திக்கு ஒரு _____ம் இல்லேன்னு சொல்லிகிட்டு திரியிராங்க… அவங்களும் அதுக்கு ஒரு படி மேல போய் சிந்திக்கனூம்கறதுதான் அடியேனின் அவா..

  • Dear Streamzz,
   It’s not rare to see people harp on decorum and other trifle issues when they’ve run out of answers to question… also the last thing anybody would mention about Periyar was his decorum 🙂 Wish you had a sense of humor that would’ve cast its shadow over your hypocrisy.. tsk.tsk alas its stark naked 🙁

 32. கேள்விக்குறி, you put dashed words on something people respect and you call it trifle issue?. I am not talking about periyar’s decorum here but the decorum of blogging. Now, you are diverting again by talking about my hypocrisy. You are so great that you found it by gazing through a crystal ball. Have you read that book i mentioned?. Is the title the same?. Did periyar write it?. Did periyar say tht casteism and racism can be wiped by islam?. Please bring up points disputing that.

  • ஸ்டீரீமு..  __________ போட்டது ரெண்டாவுது பின்னூட்டத்துல.. அதுல விவாதிக்க எதுவுமில்ல..  அது நேரடியான விமரிசனம்.. கேள்வி முதல் பதில்ல இருக்கு… நைசா அதுக்கு பதில் சொல்லாம எஸ்கேப்பு ஆகி, சம்பந்தமில்லாம டக்கோரம் அக்கோரமுன்னு பீட்டர் எதுக்கு?என்னமோ பெரியார் அல்லாவுக்கு கொ.ப.சே மாதிரி சீன் போடாதீங்க.. பெரியார்ன்னா மொதல்ல கடவுள் மறுப்பு அப்புறம்தான் மத்தது.. பெரியார விவாதிக்கனுமின்னா மொதல்ல கடவுள் மறுப்புலேருந்து தொடங்கனும் அப்புறம் மதம், சாதி எல்லாம பேசலாம் ஓகேவா..  .. இல்ல உங்களுக்கு பெரியாரோட கடவுள் மறுப்பு கொள்கையில முழு உடன்பாடு உண்டுன்னா அத சொல்லிட்டு போங்க???

 33. “பெரியார்ன்னா மொதல்ல கடவுள் மறுப்பு”
  கேள்விக்குறி,
  அப்போ நீங்க மட்டும் என் கடவுள் மறுப்ப விட்டு எல்லாரையும் அர்ச்சகர் ஆக்குறீங்க. இது பெரியாருக்கே வராத ஐடியா வ இருக்கே. Super!!!

  • ஐயா நாங்க பெரியாரிஸ்டு இல்லீங்கோ, கம்யூனிஸ்டு… கருப்பு சட்ட இல்ல சேப்பு சட்ட.. நாங்க ஒரு திட்டத்தோடத்தான் செயல்பட்டுகிட்டிருக்கோம்… அதுக்கும் பெரியாருக்கும் பெரிய அளவு சம்பந்தம் இல்லீங்க.. ஆனா தமிழ்நாட்ட பொருந்த வரைக்கும் பார்ப்பன ஆதிக்கத்த ஒழிக்கறதுல முன்னோடி பெரியார் என்கிற வகையில அவரை கவுரப்படுத்துவது சரியான விசயம்தான்

   @@@இது பெரியாருக்கே வராத ஐடியா வ இருக்கே. Super!!!@@@
   இந்த ஐடியா பெரியாரோடதுதான் பிரதர்… கர்ணாநிதி ‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அப்டீன்னு சீன் போட்டாறே… படிக்கலயா????  
   பெரியார் காலத்திலேயே சட்டமாகி அப்புறம் பார்பனர்கள் சட்ட சூழ்ச்சியில் சிக்கி முடங்கிப்போனதை கருணாநிதி மீண்டும் உயிர்பிக்க மீண்டும் அவர்கள் முடக்க அதை முறியடிக்க நாங்கள் சட்டப்போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கிறோம்.
   this is the story my dear

 34. வித்தகன் நான் சொல்ல நினைத்தை நீங்கள் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

 35. Dear mr.raju sir and all
  friest of all 1000 time thank you so much for your effort
  i am sankar from narasingapuram it is in thiruvallur dist . we are fighting for the same for last 10 years and we have formed the sangam called sri vaishanava ellainger sangam we are almost 50 members in that 2 are completed the course in chennai (all hindu can become priest school) waiting for the possitive jugment from suprem court.

  we need your help
  thaks you so much
  by sankar 9976683906

 36. கருவறைக்குள் பிராமணர்கள் மட்டும் அனுமதி என்றால் ஏன் எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் அனுமதிக்க படுவதில்லை? அந்த அந்த கோவில் அர்ச்சகர் மட்டுமே உள்ளே செல்கின்றனர்?
  பார்பனர் அல்லாத பூசாரிகள் பூஜை செய்யும் கோவில்களிலும் பார்பனர்களுக்கு கருவறை செல்ல அனுமதி இல்லை. அந்த பூசாரிக்கு மட்டுமே அனுமதி.
  (நீங்கள் எதுக்கெடுத்தாலும் இழுக்கும் ஆரிய) வட மாநிலங்களில் பார்பனர் மற்றும் அல்லாதோர் யாவரும் கடவுளை தொட்டு வணங்கலாம். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்கம்.
  என்னை பொறுத்தவரை இது ஒரு தேவையல்லாத போராட்டம். வரும் காலங்களில் ஆக்கபூர்வமான விஷயத்திற்கு போராடினால் மக்கள் பயனுறுவர்.

 37. அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகனும். இந்து மதத்தின் தீண்டாமை ஒழிய இது தான் வழி

 38. இந்தியப்பார்ப்பனர்களின் வேலை வாய்ப்பு நிலையங்களாக மாறி வரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் முறையாகப் பயிற்சி பெற்ற தமிழர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதே நடைமுறையை சிங்கப்பூர், மலேசியா, பிஜீ போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பின் பற்றினால், சாதியொழிவது மட்டுமல்ல, தமிழர்களின் இந்து மதம் மீண்டும் தமிழாக்கப்படும். தகுதியற்றவர்களையும் பிறப்பின் அடிப்படையில் குருமார்களாக்கும் முட்டாள்தனம் நீங்கும்.

  http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_18.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க