Friday, October 7, 2022
முகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

-


“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

 • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
 • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
 • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
 • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 1. ///இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன/// இராயிரம் ஆண்டாய் இது கவிழ்ந்த இருழடா இருளய் அகற்ற வாளய் உருவடா.

 2. @@@பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும்@@@

  ஓ அப்படியா சேதீ.. இந்த லீனாப்போன..ச்சீய், வீனாப்போன மூளைக்கு இது புரியாம போச்சே?????

  • நீங்களும் சேவத்துலயும் முக்கியமான கட பஜாரிலும் நெறைய ஒவியம் வரைச்சு போடுறீக ஒங்க யாரும் அடிக்க வரலே என்கிற ஆதங்கம் ஒன்னு செய்யுவேம் அவுங்க அடிச்ச நீங்க திருப்பி அடிக்ககூடாது (நம்ம சி.பி.ம்.சி பி.ஐ மாதிரி) அப்பாத்தான் வீரத்தோட ஒங்கள அடிக்க வருவாய்ங்க

   • மருதமலை என்ற படத்தில் வடிவேலுவும் ஒரு ரவுடியும் போலீஸ் நிலையத்தில் உரையாடிய காட்சிதான் நினைவிற்கு வருகிறது. 

    இந்த காவிக் காலிக்கும்பலுக்கு பாடம் புகுத்துவது மற்றும் எதிர்கொள்வதென்பது அசலான கம்யூனிஸ்டுகளாகிய மகஇக வினரால்தான் முடியும். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்

 3. இராமர் படத்துல ஜட்டியைப் போட்டு ச்சீ….ஜட்டியில் இராமர் படத்தைப் போட்டு இப்படி புண்படுத்துறேளே உங்களுக்கே ஞாயமா வினவு ?
  🙂

  • கிறிஸ்தவங்க வெப் சைட்டுல இந்து சாமிய அவமானப்படுத்தாம பூ மாலையா போடுவாங்க. இதுங்கள பத்தி நம்ம தான் விழிப்போட இருக்கனும்.

 4. இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.

  காங்கிரஸ் காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு ப.ஜ.க வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தித் தோற்றவன் தான் இந்த முட்டா லிக். தெரிந்தோ தெரியாமலோ இவனை எக்ஸ்போஸ் செய்து இந்துத்துவத்திற்கு மாபெரும் உதவி செய்திருக்கிறீர்கள்.

  • //இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.///

   அப்போ இந்துக்களை வெடி குண்டு வைத்து கொன்று முஸ்லீம் வெறுப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையலாம் எனத் திட்டம் போட்டு தான் வைத்த குண்டில், தானே மாட்டிக் கொண்ட ஆர்எஸ்எஸ் பன்னிகளுக்கும் இதே லாஜிக் பொருந்துமில்லையா? (கோவா வெடி குண்டு)

 5. கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள். இது போன்ற எதிர் நடவடிக்கையை சிவில் சமூகம் செய்தால் தான் இந்த காவி கிரிமினல்களை பின்வாங்க செய்ய முடியும். இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் ராம் சேனா என்பது சரியான ஒப்பீடு. மத நல்லிணக்கம் என்பது மக்களிடம் இயல்பாக இருக்கும் ஒன்று. இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை ஒழிக்காமல் இது சாத்தியமில்லை.கருணாநிதி கூட அடிக்கடி மத நல்லிணக்கத்தை வளர்ப்போம் என்று சொல்கிறார். உண்மையில் வளர்க்க வேண்டியது மதச்சார்ப்ன்மையே தவிர மத நல்லிணக்கம் அல்ல.

 6. பாப்புலர் ஆகணும்மான என்ன செய்ய?
  பாப்புலர் ஆனவனை தேடிப் பிடி!
  பாரதமாதவுக்கு லூஸ்மோஷன்னு கொளுத்திப் போடு!
  பேதிக்கு வைத்தியம்னு கலவரத்துல காட்டு!
  அப்புறம் நீதான் டி.வியில மாஸ்டர்பீட்டு!
  பிறகென்ன இனி பிக்ஸ் பண்ணு ரேட்டை!
  ஆர்ட் எக்சிபிசனுக்கு இலட்சுத்தல ரேட்டு!
  டாஸ்மார்க் அளப்பறைக்கு ஆயிரத்துல ரேட்டு!
  அழகிய பெண் கவிதையின்னா இலவசம்ணு காட்டு!
  இந்துத்வ மகிமையை பூலோகம் பரப்பு!
  பாப்பானின் திறமைக்கு முத்தாலிக்தான் டாப்பு!

 7. ஜட்டியில் ராமர் படத்தை போட்டு ஒரு மததினரை இழிவு படுத்த வேண்டாமே.??

  யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!

  • மின்னது மின்னல்,

   முதலில் இந்துக்கள் என்று எல்லோரையும் ஒன்று சேர்ப்பது யதார்த்தமாகவே தவறு. இந்துக்கள் ஒன்று என்றால் அக்ரகாரமும், ஊருக்கு வெளியே இருக்கும் சேரியும் என்னவாம்? அடுத்து ராமன் என்ற கடவுள் இந்தி பேசும் மாநிலங்களின் பார்ப்பன மேல்சாதியினர் பகுதிகளைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கடவுளாக ஏற்கப்படவில்லை. இந்தியப்பழங்குடிகளை வேட்டையாடிதின் தொல்கதையே இராமயணம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன். இந்த வில்லனை உங்கள் கடவுள் என்று மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை.

   • எங்களுக்கும்,எங்கள் மக்களுக்கும் என்பது தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் குறிக்காது சரியா?

    ராமரை கடவுளாக வணங்கு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு குடுங்கனு தான் சொல்கிறேன்…

    இதே ஜட்டியில் முட்டாலிக் படம் இருந்தால் நானும் கொண்டாடுவேன்

    • ஸ்ரீராம சேனாவின் தலைப்பிலேயே ராமன் இருக்கிறான். ஏதோ தீடிரென்று இந்தப் பெயர் வைக்கவில்லை. ரொம்ப நாளா ஊடகங்களில் அடிபட்ட பெயர்தான். அப்போதெல்லாம் எந்த ‘இந்துவும்’ கொதித்தெழாத மர்மென்ன? இப்போது கூட நீங்கள் ராமன் சேனா பெயரை மாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. கர்நாடகாவிலும் அப்படி வீரமுள்ள ‘இந்து’ எவரும் அப்படி கோரமாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பும், அதை ஒட்டி இந்துமதவெறியர் நடத்திய கலவரமும், பல நூறு முசுலீம் மக்கள் கொல்லப்பட்டதும் கூட இந்த ராமன் பெயரில்தான். இப்படி ரத்தக் கறை படிந்த ராமனை எந்த இந்துவும் இதுவரை ஆட்சேபிக்கவில்லை. இதெல்லாம் இருக்கும்போது பிங்க் ஜட்டி ராமன் எவ்வளவோ மேல்.

   • இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன்.
    //

    ::)

   • உண்மை வினவு . இந்துக்கள் எல்லாம் ஒன்று என்றால் சில இடங்களில் தலித்துக்கள் கோவிலுக்குள் விடப்படுவதில்லையே அது ஏன்….சங்கரர்
    கல்லூரியில் பார்பனர்களுக்கு தனி விடுதி பூணல் இல்லை என்றால் தனி விடுதி …இங்கே ராமர் படம் இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள்
    ஏன் அதை விமர்சனம் செய்வதில்லை

   • வினவு, உனக்கும் உங்கள் மக்களுக்கும் யார் கடவுள் என்று சொல்லுங்கள். நான் இழிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறன்.

    • மனிதனை மனிதனாக பார்க்கும் யாரும் கடவுள் தாண்ட , சில சமயம் நீ கூட இப்போ இழிவு பண்ணு டா 

   • ஏன்பா வினவு , இந்த பார்ப்பனீய கூடம் ஒரு முட்டாள் கூட்டம். ஏன் ராமனை கும்பிடுகிறார்கள். அவன் தான் க்ஷத்ரியனாசே.
    பாதி பிராமணனான ராவணன் தானே கும்பிடனும் . 

    அது என்ன “எங்களுக்கு எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை. ”  அப்படின்னு யார் உங்களுக்கு சொன்னங்க. ஊர்ல ராமன் பெற சொல்லி தான் ஏமாத்த  செய்ய முடியும், இராவணன் பெற சொல்லி எப்படி செய்யா முடியும்.

    இதே உங்க கடவுளான கார்ல் மார்க்ஸ், லெனின்  படாத ஜட்டில  போட்டா என்ன பீலிங்க்ஸ் காட்டுவீங்க !!!! செத்த பிணத்த ஒன்னு புதைக்கணும் இல்ல எரிக்கணும். அத எதுக்கு பதபடுதறீங்க ??? இது enna நம்பிக்கை. எங்க இதுல எல்லாரும் சமம்னு காமெடி நடத்துறீங்களே . ரஷ்ய ல் எ செத்தவன்  எல்லாத்துக்கும்  இப்படி தான் பண்நீங்கலாக்கும் .  ஊரை குத்தம் சொல்லறதுக்கு முன்ன கொஞ்சம் உங்க முதுகையும் பாருங்க. 

  • //யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!//

   மின்னுது மின்னல்,

   உங்களது உணர்வுகள் புரிகின்றன உங்களிடம் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

   1)
   பிஹாரில் பசு தோலை உரித்த ‘குற்ற’த்திற்காக 5 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் தோலை உரித்துக் கொன்றனர் ஆர்எஸ்எஸ் கும்பல், அவர்களை இழிவுபடுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

   2)
   கிராமங்களில் பொதுக் கிணற்றை பயன்படுத்துவது உள்ளிட்ட ‘குற்றங்க’ளுக்காக தலித் குடும்பங்கள் கொல்லப்படுவது போன்றவற்றை செய்பவர்களை இழிவுபடுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   3)
   தனது மனைவியை வெறும் செக்ஸுக்கான சதைப் பிண்டமாக கருதி அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

   4)
   தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த ஒருவனிடம் ஐ லவ் யூ சொன்னதற்காக அவளை குத்தி கிழித்து சித்திரவதை செய்பவனை இழிவுபடுத்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

   5)
   ஒருவன் பார்ப்பன சாதியில்லை என்பதாலேயே அவன் கோயிலில் பூசாரியாகக்கூடாது என்று விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்கின்ற ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

   6)
   தனது சாதி நம்பிக்கைகளை நம்பாதவர்களை விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்தவர்களை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

   7)
   சாதி சரியானது என்று சொல்பவனை இழிவுபடுத்துவ பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

   எல்லாவற்றுக்கும் இல்லாவிடினும் முதல் 5க்கும் மட்டும் கூட விளக்கம் சொன்னால் போதும் மின்னுது மின்னல். நம்மிடையே இருக்கும் புரிதல் போதாமையை சரி செய்ய உதவும்

   அன்புடன்,
   பூச்சாண்டி

   • 5.கருத்துகளுடன் ஒத்துபோகிறேன் தவறு செய்தவர்களை சாட்டையடி அடிப்பதில் தப்பு இல்லை

    அதே சமயம் பூச்சாண்டி திருடிவிட்டால் ஒட்டுமொத்த ம.க.இ.க வையும் கூண்டில் ஏற்றுவது சரியில்லையே?

    • Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?

     When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?

     Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)

    • மகஇக பெயரைப் பயன்படுத்தி திருடும்போது மகஇக வேடிக்கை பார்த்தால் நீங்க சொல்வது போன்று கூண்டில் ஏற்றலாம். ஆனால்……..

    • இந்த ஐந்து(மற்றும் 7 தவறுகளையும்) தவறுகளையும் செய்துள்ள அந்த இழிவுபடுத்த வேண்டியவன் வேறுயாருமல்ல சாட்சாத் ராமனேதான்.(ஆதாரம் வால்மீகி ராமாயணம் ஒரிஜினல் வெர்ஷன்)

     மேதகு ராமன் செய்த தவறுகளுக்கு அவனை எவ்வாறு இழிவுபடுத்தலாம் என்றும் மின்னுது மின்னல் ஆலோசனை சொல்லலாம்:

     Rama’s achievements (Crimes) include:
     http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

     · Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

     · Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

     · Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

     · Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.

     · Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.

     · Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

     · Killed Vali and Dadagai in a most cowardly manner.

     · Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
     expressed her love. It is definitely inhuman act.

     · He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.

     We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.

    • ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
     இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெண்றால்
     ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??

     இந்து என்று குறிப்பிட்டது உங்களை அல்ல 🙂

    • மின்னுது மின்னல் ,

     //ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
     இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு
     தெரிவிக்கவில்லையெண்றால்
     ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??//

     இதையே தான் மற்ற மதத்தினரும் கேட்கிறார்கள்.
     இப்படி மற்ற மதத்தினரை திட்டமிட்டு அவதூறு
     பரப்பினதில் உம்மா கூட்டம் தானேயா
     மன்னனிவகித்தது.வகித்துக்கொண்டு இருக்கிறது.

    • இங்க பூச்சாண்டி ரொம்ப பூச்சாண்டி காட்றார் .

     பெரியார் ஸ்கூல் ல ரொம்ப படிசுட்டார்  போல இருக்கு. 
     என்ன படிச்சதெல்லாம் தப்பு நு அவருக்கு தெரியல .
     சூர்பனகை “அபோரிகினல் கேர்ள் ” ஆம் . ரொம்ப சுத்தம்.

     இல்லாத கதைய நீங்களா கிளப்பி விடறீங்களே . கேக்கறவன் எவனுக்கும் ஒன்னும் தெரியாதுன்னு நீங்களே முடிவு பண்ணிகிறதா ??

      பாதி பாப்பாத்தி அவ தெரியுமா ?? மீதியும் அவங்க பங்காளி சஇடு தான். apadi தான் கதை எழுதி இருக்கு.  

      ஆஅம எனக்கு ஒன்னு புரியவே இல்ல. பூணுல் போட்ட பாப்பான் நான் தாண்டா பெரியவன் ன்னு சொன்னா இந்த க்ஷத்ரியன் வைசியன் எல்லாம் எப்படி நம்பினாங்க ?? அவனுங்க லும் ஏன் பூணுல் போடறானுங்க ?? 
     உங்களுக்கு தான் இந்த மந்திரம் வசியம் ல எல்லாம் நம்பிக்கை இருக்காதுன்னு நினைக்கிறன், வேற என்னவா இருக்கும் ?? ஓஹோ அவனுங்க எல்லாம் முட்டாள் அப்படி தானே ?? அத கார்ல் மார்க்ஸ் தானே  கண்டு பிடுச்சு சொன்னார் ?? ரைட் ங்கண்ணா புரிஞ்சுருச்சு 

     “ராம சென ”  பேர் வச்சு ஊற எமதறாங்க 
      அந்த ” திராவிடர் ” இந்த “திராவிடர் “நு  கூட தான் ஊற எமாதரங்க 
     எதாவது திராவிடன் படத்த ஜட்டில  போடறது ??
     கம்முநிசம் வர்க்க போராட்டம் நு உலகம் போற கலகம் பண்ணறீங்களே ? உங்களுக்கு காசு குடுக்கற சீனா உங்க பரம எதிரி அமெரிக்காவோட என்ன பண்ணிக்கிட்டு இருக்கு ?? என்ன உறவாடி கேடுகரீங்கள ?? நல்ல பிளான் தான். என்ன இப்போ நீங்க உறவாடற கூட்டம் எல்லாம் ஜாக்கிரதைய இருக்கணும்.   

 8. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

  உள்குத்து ‘லீலை’ ‘மணி்’ மணியாய் அ’மேக’மாய் இருக்கிறது…

 9. அந்த ஏக இறைவனின் அமைதி நம்மீது நிலவட்டுமாக..

  தயவு செய்து வினவு இணையதளம் இந்த கட்டுரைக்கு பயன்படுத்தியிருக்கின்ற இராமர் படத்தினை நீக்கி விட வேண்டும். முத்தாலிக் மற்றும் இந்துத்துவ வெறியர்கள் செய்யும் அயோக்கிய வேலைக்கு கடவுளாக (பலராலோ அல்லது சிலராலோ) நினைத்து வணங்கப்படும் இராமரின் படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

  உங்களின் கம்யூனிச ஆசான்கள் காரல் மார்க்ஸ், ஸ்டாலின் மற்றும் மாசேதுங் படத்தை இவ்வாறு கொச்சைப்படுத்தினால் நீங்கள் சும்மா விடுவீர்களா? கவிதை எழுதியதற்கே லீனாவை அசிங்கப்படுத்திய நீங்கள்
  கடவுள் என்று மக்களால் உருவகப்படுத்தபட்டு வணங்கப்படுகின்ற இராமரை கொச்சைபடுத்துவது எந்த வகையில் நியாயம்? இராமரை பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஆரோக்கியமான வகையில் வெளிப்படுத்த வேண்டுமேயொழிய இத்தகைய அருவருப்பூட்டும் படங்களை போட்டு அடுத்தவர்களின் மனங்களை காயப்படுத்துதல் சரியான வழியாக இருக்காது.

  ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றின் விஷக் கிளைகளாக நாடு முழுவதும் பரவியுள்ள பல்வேறு இயக்கங்களாக இருக்கின்ற வி.எச்.பி, பஜ்ரங் தள், சனாதன் சேனா, சிறிராம் சேனா, இந்து முன்னணி , இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ இயக்கங்களின் அடிப்படை சிறுபான்மையினர்கள் மீதான வெறுப்பும் உயர் சாதிய அடுக்குமுறையை தக்க வைப்பதும் தான். எனவே அவர்கள் இந்த நாட்டை விட்டு துடைக்கப்பட வேண்டிய அழுக்குகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  சொந்த இந்து மக்களையே குண்டுகள் வைத்து சாகடிக்க தயங்காதவர்கள் இந்த கருங்காலி காவிக் கும்பல்கள். குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியை கொளுத்தியதே இந்த இந்துத்துவ கருங்காலிக் கும்பல்கள் தான். இதை தெஹல்கா வீடியோ அம்பலப்படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தென்காசியில் தங்கள் அலுவலகத்தில் தாங்களே குண்டுகள் வைத்துக் கொள்ளக் கூட தயங்காத இவர்களை இந்து மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டும். சட்டம் இவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தை நிலைநிருத்துவார்களா?

 10. ஹாஹாஹா!

  நரியின் சாயம் வெளுத்து போச்சா!?
  காசுக்கு பீ திங்கிர நாய்களெல்லாம் ஆன்மிகம்/கலாச்சாரம் பேசுதா!?

 11. இன்றைக்கு பெரியார் பெயரை வைத்து இன்று பல அரசியல் கும்பல் கொள்ளை அடிக்கிறது என்பதற்காக பெரியார் படத்தை ஜட்டியில் போடலாமா? முதலில் சக மனிதனை மதிக்க பழகுங்கள். பார்பானர்கள் மட்டுமே இந்துக்கள் அல்ல. கலாசாரத்தை காசுக்கு விட்டுவிடாமல் இன்னும் என்னை போல பல பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து மதத்தில்தான் உள்ளோம். இந்து மதம் பார்ப்பானால் உருவாக்கப்பட்டது எனில் பிற மதங்களும் பிற நாட்டிலிருந்துதான் வந்தது. எனவே 1000 வருடத்திற்கு முன்னாள் போய் வாழ்வதை விட இப்ப நாட்டுல இருக்குற மக்களை மதிச்சி வாழ கத்துக்குங்க.

 12. யோவ் ஏன்யா எல்லாரும் டென்சன் ஆவுரீங்க.. சங்கரன் கோவணத்த காயவைக்க குச்சியில சுத்தி அத புனிதமாக்குன மாதிரி.. கிடைச்ச பிங்கு ஜட்டியில ராமர் படத்த பிரிண்டு பண்ணி ஸ்ரீராம் சேனாவோட ‘ஆண்’மீகத்துக்கு பாதுகாப்பு குடுத்திருக்காருய்யா முத்தாலிக்கு… வாங்குற 60 லட்சரூபாயில எல்லாருக்கும் பேண்டா வாங்கி குடுக்கமுடியும்???? விவரம் புரியாத ஆளா இருக்கீங்களே…. 

 13. இன்னும் புரியுற மாதிரி சொல்லனுமின்னா… பொந்து மதத்துல அழிக்குற கடவுள் சிவன், சிவனோட குறி லிங்கம் (என்னா மேட்சிங்கு…) லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் லிங்கத்துக்கு பாதுகாப்பு ஜட்டிதான்… பொந்து மத்ததோட பாதுகாக்குற கடவுள் மஹாவிஷ்னு alais ராமன், படத்துல இருக்க இருக்கேவேண்டிய எடத்துல ‘பாதுகாப்பா’ இருக்காரு… வினவு ஜே கிருஷ்ணமூர்த்தியோட சூக்குமமா ஆன்மீகத்த புட்டு புட்டு வச்சிட்டீங்களே????? அட்டா அடட்டடா

  • அடடடா, அடடடட.. கலக்குறேள் கேள்விகுறி சாரே .. ரொம்ப நல்ல மாட்சிங் பண்ணறே சாரே. உன்ன மாதிரி ஆளுங்கதாம்லே இந்த வினவு கூட்டத்துக்கு லாய்க்கு. என்னா ஒரு thinnkingu . பொந்து கடவுளுக்கு பொறந்த அந்த கோவண கடவுள விட்டுடீங்களே. ஏன் அந்த கடவுள் தமிழ் கடவுளுனால்யா?

  • அய்யா கேள்விக்குறி , லிங்க வியாக்யானம் சூப்பர்.

    உங்க புனைபெயர்ல கூட அது ஓடிகிட்டு இருக்கே ?? என்ன தமிழ்ல இருக்கு…

   காமாலை கண்டவனுக்கு கண்ண்டதேல்லாம் மஞ்சள்லம் .
   அப்படியே அது ஆண்குறிய குறிச்சாலும், உங்களக்கு அதில என்ன பிரச்சனை ?? அது என்ன உடல் உறுப்பிலேயே மட்டமானதா  ???

   உங்க வர்ணனைல இருக்க வக்கிரம் உங்களுக்கே தெரியலையோ ?? 

   “லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல”

   சந்து போனதுன்னு பேசிட்டு என்ன decency  வேண்டிகிடகுது ???
   அது சேரி உன்ன்களுக்கு இந்த அர்த்த யார் சொன்னது ?? பெரியாரா  ??
   இல்ல சமஸ்க்ரிதம் தெரியுமோ ?? ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் உங்களுக்கு இது தான் வசதியா இருக்கு , என்ன செய்ய ??

 14. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

  தமிழ்நாட்டு இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..

 15. இராமனுக்கும் மகஇகவுக்கும் 10 பொறுத்தம்! சீறங்கத்துலேயே இராமன் படத்த கொளுத்துன ஆளுங்க அவங்க… என்னமோ ஜட்டியில இராமன் படத்த போட்டதுக்கு இப்படி பீல்பண்ணுறீங்களே.. இராமனை ஜட்டியில்லாம போடாம விட்டாங்களே அந்தமட்டுமாவது சந்தோசப்படுங்கடே!

 16. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். //

  தமிழ்நாட்டுல இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..

 17. .
  ஜட்டி காப்பாளர்களுக்கு….

  சின்னப் புள்ளைங்க ஜட்டியில் மிக்கி மெளஸ் , டிஸ்னி ப்ரின்சஸ், சூப்பர்மேன் என்று கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கும்.

  தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்கக்கூடாதா?

  கல்யாண‌ நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் யோனிக்கு காவலாக சில தெய்வங்களே இருப்பதாகச் சொல்கிறது.

  “ஆண் பெண் குறியிரண்டும் அயில்வேல் காக்க…பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க” என்று உடல் உறுப்புகளைக் வேல் காக்கிறது என்று கந்தர்சஸ்டி பாட்டு சொல்கிறது.

  ஆண்டாள் உருகி உருகி உடல் உறுப்புகள் எப்படி நோகின்றன என்று பாடுகிறார்.

  இவை எல்லாம் பக்தி.

  தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்குமாறு வினவு படம் போட்டால் தெய்வகுத்தமாம். என்ன கொடுமை?

  **

  கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..

  1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?

  2. கம்யூனிச‌க் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,

  உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?

  ” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்ட‌மாக வந்து கேள்வி கேட்பீர்களா? :-(((((((
  .
  .
  உங்களுக்கு ஒரு கம்யூனிசத் தலைவர்களின் மீது பக்தி. அவர்களை யோனி குறியிடன் யாராவது கவிதை சொன்னால் கடுப்பு வருகிறது.
  .
  இந்த ஜட்டியில் உள்ள படத்தில் உள்ள உருவங்களின் மீது சிலருக்கு பக்தி. அவர்களுக்கு கோவம் வருகிறது.

  same blood
  .

  • ராமனும் மார்க்சும் ஒன்னு….. அடடட்டா கல்வெட்டுக்கு என்னா அறிவு என்னா அறிவு… ஒன்னு பண்ணேன்.. உன் பொன் மொழியை கல்வெட்டுல பொரிச்சு வச்சுட்டு அது பக்கத்திலேயே நீயும் உக்காந்துக்க..வருங்கால சந்ததியெல்லாம் அத பாத்து படிச்சு விவரமாயிக்குவாங்க… 

   வந்துட்டானுங்க அறிவாளி பக்கெட்டுன்னு.. ஏன்யா, 2000 முசுலீம கொண்னு போட்டுட்டு மோடி அங்க ஜமாத்தா ஆட்சிக்கு இன்னொரு தடவ வற்றான் அதுக்கே இங்க எவனாலயும் ஒன்னும் புடுங்க முடியல..  படம் போட்டா என்னாத்த கயட்ட முடியும்.. மொதல்ல இந்த ஆர்எஸ்எஸ் வாந்தி எடுக்கறத நிறுத்துய்யா

   உலகத்துலேயே கம்மூனிச தலைவருங்களுக்கு  இணையா யாருமேல அவதூறு வந்திருக்குன்னு கொஞ்சம் சொல்லேன் பாப்போம்.. லீனாவுக்காக பலூன் ஊதறத்துக்கு முன்னால கொஞ்சம் என்ன நடந்திச்சுன்னு முழுசா விவரம் தெரிஞ்சுக்க… அறைகுறையா இங்க வந்து காத்த பிரிக்க வேணாம்… 

   • கேள்விக்குறி,

    அவ்வளவுதானா? இன்னும் திட்டலாம். பக்தர்களுக்கு கோவம்வரும்படி நான் நடந்து இருந்தால் மன்னித்து விடுங்கள். :-((

    **

    கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

    மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
    அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
    எந்த உருவங்களின் பக்தனும் அல்ல‌.

    .
    புனிதத்தை காயப்படுத்தினால் பக்தனுக்கு கோவம் வரும். உங்களுக்கு கேள்வி கேட்டாலே இந்த அளவு கோவம் வருகிறது.

    .
    .

    • “மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை”
     மக்களுக்காக உழைப்பவனுக்கு ஒரு க்ண்ணோட்டம் வேண்டும். மக்களுக்காக போராடும் போராளிகளின் போராட்டங்களேல்லாம் ஆண்குறிகளின் சதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதை சகித்துக்கொள்ளமுடியாது.
     உருவங்களுக்காகத் தான் வினவு சாமியடியது என்றால் வினவுக்கு 24 மணிநேரமும் சாமியாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்திருக்காது.

    • //நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//

     இதைச் சொல்வதன் மூலம் தான் யாரென்று உணர்த்த விரும்பும் கல்வெட்டு கீழே உள்ளதையும் சொல்கிறார்.

     //எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
     அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
     எந்த உருவங்களின் பக்தனும் அல்ல‌. //

     அப்போ ஆர் எஸ் எஸ் போன்ற உருவங்களுக்கு எதிரியா நீங்கள்? ஆர் எஸ் எஸ் இல்லையெனில் நீங்கள் யார்? NGOவா?

  • // கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..

   1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?

   2. கம்யூனிச‌க் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,

   உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?

   ” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்ட‌மாக வந்து கேள்வி கேட்பீர்களா? 🙁 ((((((//

   கல்வெட்டுவின் வாதங்கள் அதி புத்திசாலித்தனமாக இருப்பதால் என்னால் பேசவே இயலவில்லை.

   இருந்தாலும் என்னோட மரமண்டைக்கு தோணியதை இங்க சொல்லிக்க விரும்புகிறேன்.

   ராமன் என்கிற சாதி வெறித் தலைவனின் சாதிவெறி நடவடிக்கைகளை மின்னுது மின்னலுக்கு பட்டியலிட்டுள்ளார் தோழர் பூச்சாண்டி..

   இதே போல ஏசு, நபி போன்றோர் மற்றும் கல்வெட்டுவின் வெறுப்புக்கு இரையான கம்யூனிச கடவுளர்கள் பற்றி கல்வெட்டு பட்டியலிட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ராமனை இழிவுபடுத்துகிறோம். இதை மின்னுது மின்னலும் ஒத்துக் கொண்டுள்ளார்.

   இதே போல ஏசு, நபிகள் பற்றி எதுவும் உள்ளதா? அவர்கள் அவர்களது காலத்தில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகவே இருந்துள்ளனர்,.

   அதே போல கல்வெட்டுவின் வெறுப்புக்கு ஆளான கம்யூனிச கடவுளர்களுக்கு இதே போல பட்டியல் போட வருமா?

   கல்வெட்டு போன்ற மானமுள்ள, சூடு சொரனையுள்ள நல்லவர் தமது பின்னூட்டத்தில் வழங்கிய தீர்ப்புக்கு ஆதாரம் வழங்குவாரா?

   அல்லது என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?

   எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்

   அசுரன்

   • //கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//

    அசுரன் தான் மேலே கேள்வி கேட்டுள்ளேன் பதில் சொல்லுங்கள். என்ன? உங்களது நடையை அப்படியே அடியொற்றி நானும் எதிர்வினை புரிந்துள்ளேன். நீங்கதான் ‘கருத்துரிமை’ காவ’லா’ளி ஆயிற்றே. பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

    • //தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
     அல்லது
     நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?

     “புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில். //

     ஏதோ கம்யூனிச தலைவர்களை இதுவரை யாரும் கேள்வியே கேட்க்காதது மாதிரி பேசுகிறார் கல்வெட்டு. இதே வினவு தளத்தில் கூட பலர் விமர்சித்திதுள்ளனர். அதற்கும் பதில்தான் கூறப்பட்டுள்ளது.

     அவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் பேர்வாதி பேர் கல்வெட்டு மாதிரி முன்முடிவுடன் திமிர்பிடித்த சொல்லாடல்களை பயன்படுத்த வில்லை.

     அடிப்படையில் பணிவற்ற ஒருவனால் எந்த மாற்று கருத்தையும் வலுவுடன் விவாதிக்க முடியாது என்பதற்கு கல்வெட்டு ஒரு உதாரBஅம்

   • அசுரன்.

    1. கம்யூனிசம் ஏன் தோன்றியது?
    2. அதன் தேவை என்ன அது?
    3. எதை எதிர்த்தது அது?
    4. அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன?

    என்று ..உங்கள் கையில் உள்ள இறக்குமதி சித்தாங்களின் மொழி பெயர்ப்புகளைப் படியுங்கள்.

    சித்தாங்களும் இசங்களும் ஒருவரின் வழி வந்தது என்பற்காக அவரை ஜன்னி வந்து தொழுதே தீருவேன் என்றால் தொழுது கொள்ளுங்கள்.

    ***

    பொண்டாட்டியை விரட்டிய இராமனை நான் கம்யூனிசத் தலைவர்களோடு ஒப்பிடுவது இரண்டு பேரின் பேரின் கொள்கைக்காக அல்ல.

    இரண்டையும் சாமியாகப் பார்க்கும் கருத்துக்காக. மக்களிடம் செல்ல வேண்டியது கருத்துக்களே அல்ல உருவங்கள் அல்ல.

    உங்களுக்கான கேள்வி

    தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
    அல்லது
    நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?

    “புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில்.

    ===

    Vi> // ..அதி புத்திசாலி
    .. என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?

    .. எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்

    நன்றி அசுரன்.

    பக்தப் பதர்கள் இரசிகக் கண்மணிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    பக்தர் கூட்டங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும்.

    நன்றி அசுரன்.
    நல்ல உரையாடல்.

    .

    • கல்வெட்டு எனது கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மைட்யில்லையே உங்களிடம்

    • //நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும். //

     கம்யுனிச கடவுளை வழிபடுபவர்கள் என்று தோழர்களை முன்முடிவுட ன் அறிவிக்கும் அராஜகவாதி கல்வெட்டு நம்மை முன்முடிவுடன் அனுகுபவர்கள் என்று விமர்சிப்பது நகைச்சுவையே அன்றி வேறல்ல.

     கல்வெட்டுவிடம் குறைந்த பட்ச நேர்மையிருந்தால் கேட்டுள்ல கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்

 18. முத்தாளிக்கை விமர்சிக்க இப்படி ஒரு படம் தேவையில்லை. தெகல்கா உண்மையை சொல்ல அப்படி ஒரு படத்தை போடவில்லை. தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். அதை எடுத்து விடுங்கள்.

 19. //இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன//

  இது ஊடகங்களின் மேலோட்டமான போக்கை காட்டுகிறது

 20. தக்க சமயத்தில் அருமையான பதிவு. சுகதேவ் குறிப்பிட்டிருப்பது போல “கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள்.” அந்த அற்புதக் காட்சியை கண்ட பொழுது எழும்பிய உவகை, தற்பொழுதும் ஏற்படுகிறது. ஏற்கெனவே கரி பூசப்பட்ட முகத்தில் தற்பொழுது ஓங்கியறைந்ததன் மூலம், தெஹல்கா ஏடு தனது கடுமையான, போராட்டமிக்க பத்திரிக்கைப் பயணத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை நிறுவியிருக்கிறது. நாம் அனைவரும் அவசியம் தெஹல்காவுக்கு வாழ்த்துக் கடிதம் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். பல் பிடுங்கப்பட்ட்ட முத்தாலிக் பாம்பிற்கும் கூட அந்த வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைக்கலாம். என்ன இருந்தாலும், நோயாளிகளை ஒதுக்கி வைக்கக் கூடாதல்லவா?

  முத்தாலிக்கின் திருமுகத்தை சாரமாக தொகுத்து அம்பலப்படுத்தி, அதே வேளையில், கேமராவில் சிக்காத தமிழகத்து ‘ஓவியர்களின்’ கலைத் தாகத்தையும், தமிழக இந்து மக்கள் கட்சினருக்கும் அத்தகைய கலகக்கார ‘ஓவியர்களுக்கும்’ இருக்கக் கூடிய கொடுக்கல், வாங்கலையும் வெளிச்சமிட்டு காட்டி, ஒரு சாட்டையடி கட்டுரையை தக்க சமயத்தில் எழுதிய வினவுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

 21. இந்து makkal கட்சி yenbadhu tamizhnaatil paarppanargalaal நடத்தப்படும் வியாபார niruvanamalla , arjun sambath&kannan aakiyor paarppanarum alla tamizhargalaaga இந்து iyakkathil இருந்துகொண்டு eezha பிரச்சனையில் உண்மையாக seyalpadum unmai tamizhina unarvaalargal என்பதை குறுக்குபுத்தி ullavargal thavira unmai தமிழர்கள் arivaargal!leena மணிமேகலையை ,அவளது seyalai niyaayapaduththum yevarum unmaiyaana தமிழர்கள் அல்ல!

 22. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுமையான அநிதிகள் இலைக்கப்ப்படும்போதல்லாம் ‘நாமெல்லாம் இந்து ‘என்று பரப்புரை மேற்கொள்ளும் அத்வானி முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை
  தன உடம்பில் உள்ள அத்தனை ஒட்டைகளைய்ம் பொத்திகொள்கிரர்கள்
  இந்துமதம், இந்து கடவுள் என்று சர்சை வந்து விட்டால் மனம் புண்பட்டு விட்டது என்று கொதிக்கிறார்கள். .இந்து மதம் , இந்துமதத்தை தாங்கி நிற்கும் கடவுள்கள் .. என்று அணைத்து குப்பைககலையம் அசிங்கபடுத்தி அதற்கு உன்டான பிம்பத்தை அடித்து நொறுக்குவதுதான் நமக்கு முன்னிற்கும் முதன்மையான வேலை.அந்த பணிஇல் நிற்கும் வினவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  i

  •  குட்டி. இத விட வேடிக்கையான ஒரு விஷயம் எங்க ஊருல நடந்துச்சு ப.ஜ.க இளைஞர் அணியில் இருக்கும் ஆதிதிராவிடரான ஒரு பேச்சாளர் வாஜ்பாய் வழும் அம்பேத்கர் அப்புடின்னு பேசினார் என்னத்த சொல்ல  

   • ஹைதர் அலி,
    அவர் அம்பேத்காரை படிக்காத
    கறுப்பு பார்ப்பனரக இருக்கலாம்

 23. இந்து மத வெறியர்கள் இப்படி அவர்கள் சொந்த முயற்சியில் அம்பலபட்டு போகும் தருணத்திலாவது அவர்களை பாராட்ட வேண்டும் என்பது போல இருக்கிறது. ஆர்,எஸ்.எஸ் மற்றும் அதன் தொங்கு சதைகளின் மன அமைப்பையும், செயல்பாட்டையும் அறிந்தவர்கள் யாருக்கும் இந்த ஸ்டிங் ஆபரேசன் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது என்றே எண்ணுகிறேன். எனினும் இது நமக்கு தெரிந்த உண்மை என்ற புரிதலோடு விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து அடி விழ வேண்டும். பொதுவாக டி.வி விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கை மேலோங்கியே இருக்கும். ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆர்வமோ. விருப்பமோ அற்ற சி.பி.எம், காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல் வகைபட்ட மொன்னையான வாதங்களை வைக்கும் போது பார்ப்பவரை ஆத்திரம் கொள்ள வைக்கும். மணி சங்கர் அய்யர், மனீஷ் திவாரி ஆகியோர் மட்டும் விதிவிலக்கு. ஒரு NGO செயல்பாட்டாளரின் மொழி பிரயோகமும், உடல் மொழியும் பிருந்தா காரத்தினுடையது. இவர்களிடம் எதிர்பார்க்க வேறு என்ன இருக்கிறது. நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு வரையிலும் தொடர்ந்து முத்தாலிக் செய்தி Headlines Today- யில் ஒளிபரப்பானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 24. கலை..
  //மக்களுக்காக உழைப்பவனுக்கு ஒரு க்ண்ணோட்டம் வேண்டும். //

  கண்ணோட்டமும் சமுதாயப் பார்வையும் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை கலை.

  ஆனால் தலைவரின் படங்களை புனிதமாகப் பார்ப்பதும் கதையின் நாயகனை கடவுளாகப் பார்ப்பதும் ஒன்றே. அது மட்டுமே எனது கருத்து. எந்தக்காலத்திலும் பொண்டட்டியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பிய கதையின் நாயகர்களை மனிதராகக் கூட பார்ப்பது இல்லை நான்.

  ===

  தலைவர்களுக்கு புனிதம் என்பது தேவை இல்லை.

  இந்திய அல்லது தமிழக மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் நடப்புக்காலப் பிரச்சனைகளுக்கு வழிதேடும் புதிய சித்தாத்தங்களை உருவாக்கி போராட வேண்டுமே தவிர சர்வ ரோக நிவாரணிபோல இறக்குமதிக் கொள்கைகளின் கீழே இருந்துகொண்டு எல்லாவற்றுக்கும் கம்யூனிசக் கசாயம் கொடுக்கக்கூடாது.

  ==

  • எட்டு மணிநேர வேலைக்காக செந்நீர் சிந்தி போராடினார்கள் சிக்காகோ தொழிலாளர்கள். இதுவே மே தினமென்று போராட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனினும் இது வெளிநாட்டு சரக்கு எனப்தால் கல்வெட்டு பாரத பண்பாட்டின் படி தொழிலாளிகள் 16 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்பதையே பிரச்சாரம் செய்வார். அவரும் கூட அப்படித்தான் வேலை செய்வதாக கூறுகிறார்கள்.

  • பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் பார்வைப்படி இந்தியாவின் தொழிலாளர் தினம் எது? பார்ப்பன புராணங்களில் தொழில்களின் குருவான விசுவகர்மாவின் ஜயந்திதான் தொழிலாளர் தினமாக கொண்டாட முடியும். இந்த தினத்தன்று தொழிலாளர்கள் பாரத பண்பாட்டின் படி பூஜை செய்து, படியளக்கும் ஆண்டவர்களான முதலாளிகள் காலுக்கு பாலாபிஷேகம் செய்து தொடர்ந்து கொத்தடிமைகளாக வேலை செய்வதாகவும், கம்யூனிசம் என்ற இறக்குமதி சரக்கைப் புறந்தள்ளி அது வாங்கித் தந்திருக்கும் எந்த தொழிலாளர் உரிமையும் வேண்டாமென்று உறுதி எடுத்துக் கொண்டு விசுவகர்ம ஜயந்தியை கொண்டாடவேண்டும். இதைச் செய்யாதவன் பாரத பண்பாட்டின், தமிழ் பண்பாட்டின் விரோதி என்று கல்வெட்டு அறிவிக்கிறார்.

   • .
    வினவு,

    தத்துவத்தைச் சொன்னவன் சாமியல்ல. சிந்தனையாளன்.
    அவனது சிந்தனகளைச் செயலாக்கம் செய்வதுதான் அவனுக்குச் செய்யும் மரியாதை.

    விஜயின் இரசிகனாய் இருப்பதும், இராமனைப் புனிதமாகக் கருதுவதும், எழுத்தைவிட்டுவிட்டு எழுத்தாளனுக்கு சொம்புதூக்குவதும் பிம்பங்களை தொழும் கேவலம்.

    அப்படித்தான் நீங்கள் உள்ளீர்கள் என்று சொன்னால் அதையெல்லம் விட்டுவிட்டு “நீங்கள் நம்பும் பாரதத்தையும்” அதன் பண்பாடையும் என்மீது ஏற்றிச் சொல்ல வேண்டாம். பாரதமும் அதன் பண்பாடும் உங்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.

    ********
    வர்ணாசிரமக் கீதையைப் படித்துவிட்டு இந்துவாக இந்துக் கடவுளுக்கு பக்தனாக இருப்பதும், பைபிள்படித்து கிறித்துவனாக மாறுவதும்,
    குரான் படித்து முஸ்லீமாக மாறுவதும் ..அப்படி மாறி அதன் காவலர்களாக இருப்பதும்….. கம்யூனிசக் கருத்துக்கள் பிடித்ததாலே கம்யூனிசவாதியாக நாமகரணம் செய்து கொண்டு , இராம பக்தர்கள் இராமனைக் காப்பதைப்போல் கம்யூனிசத் திருவுருவங்களை காப்பதும் ஒன்றே.

    நீங்கள் இல்லாவிட்டாலும்…
    நான் இல்லாவிட்டாலும் கம்யூனிசக் கருத்துக்கள் இருக்கும்.

    லீனா சொல்வதாலோ அதற்கு பங்கமும் அல்லது நீங்கள் சாமியாடிக் காப்பதாலோ அதற்கு சிறப்பும் வரப்போவது இல்லை.

    உரையாடல் கம்யூனிசக் கொள்கைபற்றியது அல்ல.
    இராமனைப்போல கம்யூனிசத் தலைவர்களின் உருவவழிபாட்டைப் பற்றியது. அதைப் பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. ஆனால் இப்படிச் சொல்லத் தெரிகிறது…….


    // கல்வெட்டு பாரத பண்பாட்டின் படி //
    // அவரும் கூட அப்படித்தான் வேலை செய்வதாக கூறுகிறார்கள். //
    // பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் //
    // கம்யூனிசம் என்ற இறக்குமதி சரக்கைப் புறந்தள்ளி அது வாங்கித் தந்திருக்கும் எந்த தொழிலாளர் உரிமையும் வேண்டாமென்று உறுதி எடுத்துக் கொண்டு விசுவகர்ம ஜயந்தியை கொண்டாடவேண்டும். இதைச் செய்யாதவன் பாரத பண்பாட்டின், தமிழ் பண்பாட்டின் விரோதி என்று கல்வெட்டு அறிவிக்கிறார்.//

    * பாரதம் என்றால் என்ன என்று நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

    * பண்பாடு என்றால் என்ன என்று நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

    * விஸ்வகர்மா மற்றும் பார்ப்பனீயம் என்பதுபற்றி நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

    ஆனால் … உங்களின் பொதுப்புத்தியில் இருக்கும் மலிவான கருத்துக்களை நான் கொண்டுள்ளதாக, என் மேல் ஏற்றிச்சொல்வது என்னமாதிரியான உரையாடல்?

    நான் யார் என்பதை நீங்களே தீர்மானம் செய்துவிட்டபின் எதற்கு கேள்வி?

    முத்தாலியின் சாயம் வெளுத்ததைப்போல பொதுப்புத்தியில் பாரதம் பண்பாடு என்று பேசும் உங்களின் சாயமும் இங்கே வெளுக்கிறது.

    பண்பாடு என்பது இறந்தகாலம் அதைச் சவங்கள்தான் காக்க நினைக்கும். வரலாற்றைத் தெரிந்து கொள்வது வேறு ,வரலாற்றில் வாழ நினைப்பது வேறு.

    பண்பாட்டில் இருக்க நினைப்பது கல்லறையில் வாழ நினைப்பதுபோல.
    அடிப்படை தெரியாத பொதுப்புத்தியாளர்களிடம் என்ன பேசுவது?

    எல்லாம் படியுங்கள் வினவு ஆனால் ஒரு இடத்திலேயே தேங்கி விடாதீர்கள். அப்படி தேங்குவதுதான் பக்தனாக மாறுவதன் முதல் அடையாளம்.

    நீங்கள் காக்க நினக்கும் மக்களுக்கு நல்லது என்று நீங்கள் நம்புவதை எல்லா இடத்தில் இருந்தும் தேடிக் கொடுங்கள்.

    கம்யூனிசக்கிணற்றில் மட்டுமே தண்ணீர் எடுப்பேன் என்பதும், எனது மதம் மட்டுமே சிறந்தது என்பதும் ஒன்றே.
    .

    • //அடங்குங்கள் வினவு.
     உங்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் அடைமொழிகள் எனக்குத் தேவை இல்லை. என்னைக் கல்வெட்டு என்றே சொல்லலாம். அது போல உங்களின் பாரத நம்பிக்கையும் அதன் பண்பாட்டுக் குப்பைகளும் எனக்குத் தேவை அல்ல.//

     ஓ இதுக்கு மட்டும் கல்வெட்டுக்கு கோபம் வருகிறது? அப்போ அவர் புனிதமாக கருதும் நம்பிக்கை என்ன? அதை புண்படுத்தும் போது வரும் கோபம் ஏன்? அவர்தான் உருவமற்றவராயிற்றே? யார் எதை எப்படி சொன்னாலும் எருமை மாதிரி செல்பவராயிற்றெ என்று நினைத்தால் வினவை அடங்கு என்று அதட்டுகிறார்? இது எப்படி சாத்தியம்?

    • வேறொன்றுமில்லை நண்பர்களே, கல்வெட்டு போன்றவர்கள் யாருக்கும் பதில் சொல்ல தேவையற்ற புனித முற்போக்காளர்கள் என்பதுதான் அவரது இந்த திமிர்த்தனமான அனுகுமுறைக்கு அடிப்படை. இதுதான் அட்சரசுத்தமான குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம்.

     அராஜகவாதிகளின் புனித கூட்டணியில் இன்னுமோருவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் உரிமைக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஓரமாய் நின்று எனக்கு எந்த இசத்திலும் நம்பிக்கை இல்லை என்று சுய விளம்பரம் செய்து கொண்டு மக்களுக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பார்கள்.

    • நண்பர் கல்வெட்டு,

     கம்யூனிசம் என்ற வெளிநாட்டு சரக்கு எனக்கு தேவையில்லை என்று சொன்னது நீங்கள். அதன் பொருள் உள்நாட்டிலேயே உங்களுக்கு சரக்கு இருக்கிறது அல்லது தேடிக்கொள்வீர்கள் என்பதுவே. எனவே மே தினம் என்ற வெளிநாட்டு சரக்கை புறக்கணிக்கும் கல்வெட்டு அதற்கு மாற்றாக உள்நாட்டு சரக்கை எப்படி தயாரிப்பார் என்று பாவம் பார்த்து தேடிப்பிடித்து உதவி செய்யப் போய் அதை இப்படி உதாசீனம் செய்வது நியாயமா?

     வெளிநாட்டு சரக்கு என்ற பதம் அழுத்தமாக உங்கள் வாதத்தில் வந்து விட்டாலேயே அது சுதேசி நாட்டுப்ப்ற்றின் அடையாளமில்லையா? அதுவும் தவறு என்று சொன்னால் என்ன செயவது? இப்படி சொல்ல்லாம். வெளிநாட்டு சரக்கு அல்லது உள்நாட்டு சரக்கு எதுவும் கல்வெட்டுக்கு தேவைப்படாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வை கல்வெட்டே அவரது சொந்த மூளையில் அவர் மட்டுமே யோசித்து கண்டுபிடித்து கூறுவார். இதைத் தவிர எந்த சிந்தனையும் அவரால் அடிமை சிந்தனை முறையே என்று சாபமிடப்படும். வெளிநாட்டு சரக்கான கம்யூனிசத்தை வைத்து பேசுபவர்கள் கல்வெட்டின் சுதந்திர மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியாது.

     இது ஓக்கேவா அருமை நண்பர் கல்வெட்டு?

   • .

    //வினவு..
    பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் பார்வைப்படி இந்தியாவின் தொழிலாளர் தினம் எது?//

    அடங்குங்கள் வினவு.
    உங்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் அடைமொழிகள் எனக்குத் தேவை இல்லை. என்னைக் கல்வெட்டு என்றே சொல்லலாம். அது போல உங்களின் பாரத நம்பிக்கையும் அதன் பண்பாட்டுக் குப்பைகளும் எனக்குத் தேவை அல்ல.

    தொழிலாளர் தினம் எனது ஒரு குறியீடு. மேதினம் என்பது உலக அள‌வில் ஒரு பொது அடையாளம் அவ்வளவே. கிராமத்தில் நெல் வயலில் கூலிக்காகச சணடை போட்டு மானபங்கப்பட்டு இறுதியில் வெற்றிபெற்ற எளிய தொழிலாளியின் பிறந்த நாளைக்கூட தொழிலாளர் தின அடையாள‌மாக வைத்துக் கொள்ளும் உரிமை அந்த கிராமத்திற்கு உண்டு. சிக்காகோ தெரியாவிட்டால் அதற்காக உழைப்பின்வலியும் உழைப்பின் மரியாதையும் தெரியாது என்று அல்ல.

    **

    குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் சிவகாசி பட்டாசு மற்றும் பரவலாக கொத்தடிமையாய் இருக்கும் செங்கல் சூளை, கல் குவாரி இப்போது அதிகமாகி வரும் கட்டிடட காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலார்களுக்கு இதே 8 மணி நேர வேலை சாத்தியமாகும்போது கொண்டாடிக் கொள்ளலாம் அந்த நாளை தமிழ் நாட்டின் உழைப்பாளர் தினமாக.

    சிக்காக்கோவில் நடந்துவிட்டது. அதனால் இராம‌நவமி போல மேதினத்தைச் சடங்காகத்தான் செய்வேன் என்றால் செய்து கொள்ளுங்கள் நீங்கள்.

    .
    .

    • கல்வெட்டு …. ””’தமிழக”” பாட்டாளி வர்க்த்துக்காக புரட்சிகர கம்யூனிஸ்டு இயக்கங்களான மகஇகவும் அதன் தோழமை அமைப்புகள் செய்ததை விட அதிகமாக நீங்க என்ன புடுங்கிட்டீங்க என்பதை இங்கே எழுதிவிட்டு பின்னர் க்ம்யூனிசத்தை விமர்சித்தால் அது நேர்மை….. அப்படி எழுதும் அளவுக்கு ஒன்றும் புடுங்கவில்லையா … இருக்கவே  ””புனிதமான””’ லீனா ஒவ்வொன்றாய் பிடுங்கிப்போட்ட யோனி மயிர்… அதில் கம்யூனிச அவதூறு பலூன்களை கட்டி பறக்கவிடுங்கள்…. வருடிவட நகங்கள் காத்துக்கிடக்கின்றன… 3க்கு 4 கோடுகள் இனாமாய் கிடைக்க வாய்ப்பும் உண்டு ….

    • “சிக்காக்கோவில் நடந்துவிட்டது. அதனால் இராம‌நவமி போல மேதினத்தைச் சடங்காகத்தான் செய்வேன் என்றால் செய்து கொள்ளுங்கள் நீங்கள்”.

     உலகத் தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலைநேரத்தை தன் இரத்தம் சிந்தி பெற்றுத் தந்த அந்த சிகாகோ தொழிலாளர்களை இதைவிடவும் கேவலப்படுத்திட முடியாது.

   • அதுதான் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைன்னு ஏற்கனவே இருக்குதே வினவு! 😉

    • கம்யூனிசம்ங்கறத சரக்குங்கிறீங்க, கசாயம்ங்கறீங்க…ம்ம்ம்.பொதுவுடைமை என்ன சீன தொழிற்சாலையில செஞ்சி ‘உற்பத்தி பொருளாயென்ன, குறைஞ்ச விலைக்கு இறக்குமதி பண்ண? அது ஒரு உணர்வு இல்லையா.

 25. “இதே போல ஏசு, நபிகள் பற்றி எதுவும் உள்ளதா? அவர்கள் அவர்களது காலத்தில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகவே இருந்துள்ளனர்,.

  இப்படி உங்கள் கட்சியின் ஆவணங்கள் சொன்னால் அவற்றை வெளியிடவும். ராமரை கடவுளாக தொழுபவர்கள், ராமயாணன் அறிந்ஜர்கள் ராமன் வாலியை கொன்றது சரியா தவறா போன்ற பட்டிமன்றங்களில் தகராறு செய்யவில்லை. உங்களிடம் இருப்பது வெறி.அது மத வெறியைப் போன்ற வெறி. ஆகவே இப்படி ஒரு படம் போடுவதால் வம்பு வரும் என்று எதிர்பார்த்து போடுகிறீர்கள். அதை அவர்கள் லட்சியம் செய்யாவிட்டால், நாய் குறைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்ன செய்வீர்கள். இப்படி ஒரு படம் போடுவதால் ராமரின் மீதான நம்பிக்கை பக்தி குறையுமா. பெரியார் அன்று என்ன செய்தார் என்று தெரியும்தானே இன்று தமிழ் நாட்டில் ராமன் புகழ் அதிகரித்து உள்ளது. ராமன் கோயில்கள் இன்றும் கட்டப்படுகின்றன.

 26. நீங்கள் லீனாவுக்கு செய்ததை அவர்கள் மற்றவர்களுக்கு செய்கிறார்கள் … வாழ்க

 27. பாரத பண்பாடு ,தமிழ் பண்பாடு என்று கூச்சளிடுவதேல்லாம் பார்பனீயத்தை தூக்கி நிறுத்தவே.பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்திய அயோக்கியர்களில் முதன்மையானவன் ராமன் என்ற பேடி.
  கம்யூனிச கசாயம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தான் இன்றைய உலகம் போய் கொண்டிருக்கிறது.

 28. Arrested, Muthalik bats for BJP, he shared stage with political bigwigs day after attack

  With public outrage mounting over the attack on girls in a Mangalore pub, the Karnataka police today arrested Pramod Muthalik, president of the right wing Sri Rama Sene which claimed responsibility for the attack, along with other key leaders including vice-president Prasad Attavar, deputy convenor Subhash Padil. The BJP and Sangh Parivar sought to distance themselves from the Sri Rama Sene but Muthalik, always at the centrestage of politics, told reporters in Belgaum before his arrest that “the Congress is trying to politicise the situation to give the BJP a bad name” ahead of the Lok Sabha elections.Last Sunday, he addressed the Bahubhashik Brahmin Mahaadhiveshan (multi-lingual Brahmin meet) in Pune that was attended, among others, by Delhi Chief Minister Sheila Dikshit, Swami Ramdev, Suresh Prabhu and three Shankaracharyas. Muthalik spoke on why Brahmins should not marry outside the community fold.

  “We wanted to honour those who have done the community proud with the Brahmkirti Puraskar. While Sheila Dikshit beat all odds to win a second term in Delhi, Bahujan Samaj Party’s Satish Chandra Mishra pioneered the concept of social engineering in north India. Digambar Kamat is today the only other Brahmin CM besides Dikshit. This is the reason we invited them to the function,” Moreshwar Ghaisas Guruji, associated with drawing the invitees’ list for the two-day meet, told The Indian Express. Mishra failed to turn up, Kamat sent a deputy while Dikshit inaugurated the meet.
  Asked why she was there, Dikshit said: “I went there only because (Congress leader and Pune MP) Suresh Kalmadi insisted that I come. I went there only when I was told that Sushil Kumar Shinde had been honoured in one of the earlier meets of the organisation. How can anyone even think of me being a leader of any one community? If various associations like the Vaishya Samaj or some Muslim body invite me, I do go there,” she told The Indian Express.
  Asked if she saw Muthalik there, Dikshit said “as a leader” she meets “hundreds of people everyday”. “Am I expected to know everyone whom I meet? I didn’t know about the man you are talking about. But if he’s the same man behind the vandalism (in Mangalore), he needs to condemned in the strongest possible terms.”
  In Pune, there is talk that Kalmadi and the Congress tried to steal the thunder from the saffron parties by reaching out to the four-lakh Brahmin voter base there via the two-day gathering. Kalmadi was not available for comment.
  Ghaisas Guruji, who runs an institution to impart Vedic education in Pune, said: “While we were organising a local meet in Dharwad (in Karnataka), we were told Muthalik should be invited to the Pune meet because he had been doing good work among the Brahmins. We didn’t known about his background at all. We were taken aback when we learnt the truth about him from television.” — (With ENS reports from Pune, Bangalore)

 29. நண்பர் கல்வெட்டின் காலம் சரியாகப் பிடிபடவில்லை. இன்று உலகம் முழுவதும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவம் நடப்புக்கால பிரச்சினையில்லை என்கிறீர்களா! அல்லது இதற்கு மாற்று கம்யூனிசம் இல்லை என்கிறீர்களா! மக்களுக்கா உழைக்க இறக்குமதிக் கொள்கைகள் தேவையில்லை என்றால் கம்யூனிசம் மக்களுக்கானதல்ல என்கிறீர்களா! நாங்கள் ஒரு இசத்திற்கு பக்தர்கள் என்றால் அந்த இசம் செத்துவிட்டதா! தெளிவாகச் சொல்லவும். உழைக்கும் மக்களை நேசிப்பதின் மூலம்தான் கம்யூனிசக் கருத்துக்கள் பிடிக்க ஆரம்பிக்கும். போகிற போக்கில் ஒரு இந்து சிவசிவ என்று கன்னத்தில் அடித்துக்கொள்வதும் ஒரு கம்யூனிஸ்டு மக்களுக்காக போராடுவதும் ஒன்றா?  புதிய சித்தாந்த்த்தை உருவாக்க வேண்டும் என்றவர் உரையாடல் கம்யூனிச கொள்கை பற்றி அல்ல எனப் பின்வாங்கியது ஏனோ! நடப்புக்கால பிரச்சினைகளை களைய ஒரு புதிய சித்தாந்த்த்தை நீங்கள் உருவாக்கி முன்கை எடுங்களேன், அதில் தண்ணீர் எடுத்துப் பார்ப்போம் தாகம் தீருமா என்று.

  லீனாவிஷயத்தில் வினவின் எதிவினை ஏன் என்பதற்கு ”எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை” என்ற பதிவில் ந்ந்தா என்பவருக்கு வினவு எழுதிய மறுமொழியைப்(8.1) படிக்கவும். மீண்டும்மீண்டும் உருவகப் படுத்த முயல்வதினால் உருவகமாகிவிடாது

 30. //தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
  அல்லது
  நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?//

  கல்வெட்டு ஒரு பெண் பித்தன், பலரோட வாழ்க்கையை கெடுத்த அயோக்கியன் என்று சொல்லுவதை விடுங்கள், வெறுமனே அவரை பாரதப் பண்பாடு காக்கும் பிதாமகன் என்று சொன்னதற்கே ‘அடங்கு’ என்று கூறி வினவை மிரட்டுகிறார்.

  லீனாவோ உழைக்கும் மக்களையும், கம்யூனிச தலைவர்களையும், போராடுபவர்க்ளையும் செக்ஸ் வெறிபித்த ஆண்குறி என்று எழுதுகிறார். இதற்கு விளக்கம் கேட்டால் அதை தவறு என்றும் மதவாதிகள் என்றும் கூறி முத்திரை குத்துகிறார் கல்வெட்டு. அவருக்கு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்கும் சூடு சொரனையற்ற தடித்த தோல்கள் இருக்கலாம். எமக்கு அவ்வாறு கிடையாது.

  இங்கு கூட ராமனை அவ்வாறு குறிப்பிட்டது தவறு என்று சாடி மின்னுது மின்னல் விளக்கம் கேட்ட பொழுது தோழர்கள் கொடுத்துள்ளனர். உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் போது அவ்வாறு விளக்கம் கேட்க்கும் உரிமை கூட மக்களுக்கு கிடையாது என்று கூறுகிறார் கல்வெட்டு. நல்ல நியாயம்.

  அராஜகவாதத்தின் மறுமுனை மக்களின் ஜனநாயகத்தைக் கொல்வதே என்பது இங்கு சரியாகத்தான் இருக்கிறது.

 31. இப்படி உங்கள் கட்சியின் ஆவணங்கள் சொன்னால் அவற்றை வெளியிடவும். ராமரை கடவுளாக தொழுபவர்கள், ராமயாணன் அறிந்ஜர்கள் ராமன் வாலியை கொன்றது சரியா தவறா போன்ற பட்டிமன்றங்களில் தகராறு செய்யவில்லை. உங்களிடம் இருப்பது வெறி.அது மத வெறியைப் போன்ற வெறி. ஆகவே இப்படி ஒரு படம் போடுவதால் வம்பு வரும் என்று எதிர்பார்த்து போடுகிறீர்கள். அதை அவர்கள் லட்சியம் செய்யாவிட்டால், நாய் குறைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்ன செய்வீர்கள். ITHU THAN VINVUUUUUU.. PONGADA MUTTALKALA

 32. மதிப்புக்குரிய வினவு அவர்களுக்கு,
  இந்த சேனா பற்றி ஏன் வெவெவெகு சன பத்திரிகைகளில் உடனடியாக வரவில்லை?
  உங்களைப் போல் தேடுதல் இல்லாமல் இருக்கலாம்.
  போகட்டும்.
  நீங்களே இது பற்றி தகவல் (பிரஸ் ரிலீஸ் போல) தகவல் அனுப்பினால் என்ன?

 33. கலை லீனா விஷயத்தில் ம.க.இ.கவின் செயல்பாடுகள் குறித்து நான் சமாதானமாகி விட்டதாக இன்னும் சொல்லிக் கொள்ள வில்லை. வினவு பதிலளித்திருக்கிறார் அவ்வளவே. இந்த விஷயத்தில் எனது கேள்விகளை உங்களது தோழரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறேன்.

  கல்வெட்டிற்கும் மற்றவர்களுக்கும் நடந்த உரையாடல் நல்ல வாசிப்பனுபவம். ஆனால் கேள்விக் குறி எடுத்த எடுப்பிலேயே வந்து கல்வெட்டைத் திட்ட ஆரம்பித்ததும்,  கடைசியில் சொன்ன எளக்காரமான பதிலும் இன்னமும் வினவு தளம் அல்லது அனைத்து தோழர்களும் ஆரோக்கியமான விவாதத்திற்கு தகுதியாகி விட வில்லை என்பதை தெளிவாய் உணர்த்துகிறது.

  • நத்தா !!! தோழர் அசுரனின் இந்த மறுமொழியை உங்கள் பாதாரவிந்தத்தில் சமர்பிக்கிறேன்

   /////வேறொன்றுமில்லை நண்பர்களே, கல்வெட்டு போன்றவர்கள் யாருக்கும் பதில் சொல்ல தேவையற்ற புனித முற்போக்காளர்கள் என்பதுதான் அவரது இந்த திமிர்த்தனமான அனுகுமுறைக்கு அடிப்படை. இதுதான் அட்சரசுத்தமான குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம்.அராஜகவாதிகளின் புனித கூட்டணியில் இன்னுமோருவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் உரிமைக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஓரமாய் நின்று எனக்கு எந்த இசத்திலும் நம்பிக்கை இல்லை என்று சுய விளம்பரம் செய்து கொண்டு மக்களுக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பார்கள்.///////

   பின்  குறிப்பு – கல்வெட்டின் இந்த திமிருக்குத்தான் 
   @@@@@
   கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?
   @@@@
   இந்த திமிருக்குத்தான் செருப்படி கிடைத்தது…  கம்யூனிஸ்டுன்னா கரண்டு கம்பம் மாதிரி எந்த நாய் வேணுமின்னாலும் கால தூக்கி ஒன்னுக்கு அடிச்சிட்டு போகலாம் அப்படித்தானே நந்தா.. நீங்க மட்டும் என்ன கேள்விக்குறியையும் வினவு தளத்தையும் தானே கேட்டீங்க கேட்டீங்க.. கல்வெட்டின் திமிரையும் உளரலையும் விமரிசனம் பண்ணலயே..???

   பின் பின் குறிப்பு – கல்வெட்டோட விவாதத்துல என்ன ஆராக்கியமிருந்துன்னு நான் உங்ககிட்ட சத்தியமா கேக்க மாட்டேன்

   பின் பின் பின்குறிப்பு — இன்னும் எத்தனை வருசத்துக்கு அமைப்புக்குள்ளார வராம தோழரிடம் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருப்பது… வயசாயிடப்போவுது நத்தா???? அப்புறம் இதுவும் சரியில்ல அதுவும் சரியில்ல எவனும் சரியில்லன்னு  இங்க கல்வெட்டு பினாத்துற மாதிரி ஆயிடும்.. ஏற்கனவே அதுக்கான சுவடுகள் தெரிய ஆரம்பிச்சாச்சு

   • கேள்விக்குறி,

    பதிவர் நந்தா நம்முடன் சில கருத்துக்களில் முரண்படுகிறார் என்பதாலேயே அவரை நீங்கள் விமர்சிக்கிற முறை, அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. அவர் உரையாட, விவாதிக்க விரும்புகிறார். உங்கள் அணுகுமுறையோ உரையாடலை கசப்பானதாக மாற்றி, நம்மிடம் பேசிப் பிரயோசனமில்லை என அவர் உரையாடலை நிறுத்திக் கொள்ளவே வழி செய்யும். நீங்கள் உங்கள் அணுகுமுறையை மனம் திறந்து பரிசீலிக்க வேண்டுகிறேன். வினவு மற்றும் வேறு சில தோழர்களின் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய, கருத்து வேறுபாடுகள் கொண்ட வாசகர்களுடன் சாத்தியமான வரை ஒரு உரையாடலை கட்டியமைக்க முயல்கிற, அனாவசியமான சொற்களற்ற கருத்துச் செறிவான விவாத முறையை நீங்கள் அவர்களது பின்னூட்டங்களிலிருந்து பரிசீலித்து, உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

   • இது சரி இல்லை கேள்விகுறி இன்னும் நீங்கள் பதில் சொல்லும் பக்குவம் வரவில்லை என்றே இருகிறீர். அமைப்பு என்பதால் அது சொல்லும் எல்லாம் சரி ஆகி விடாது.பிறகு மதத்திற்கும் அமைப்புக்கும் வித்தியாசம் கிடையாது.எப்படி சாமி கும்பிட வீட்டில் சொல்லி தண்டர்களோ அதே போல் இப்படி தன இரக்க வேண்டும் இதை தன செய்ய வேண்டும் என்பதும் கம்யூனிஸ்டு ஆகாது

  • நந்தா, நீங்கள் சமாதானம் ஆகிவிட்டதாக நானும் சொல்லவில்லை. வினவின் அம்மறுமொழியை படித்துப் பாருங்கள் என்றுதான் நண்பர் கல்வெட்டிடம் கூறினேன்.

 34. ///ஆனால் கேள்விக் குறி எடுத்த எடுப்பிலேயே வந்து கல்வெட்டைத் திட்ட ஆரம்பித்ததும்,  கடைசியில் சொன்ன எளக்காரமான பதிலும் இன்னமும் வினவு தளம் அல்லது அனைத்து தோழர்களும் ஆரோக்கியமான விவாதத்திற்கு தகுதியாகி விட வில்லை என்பதை தெளிவாய் உணர்த்துகிறது/// என்ன இப்புடி சொல்லிபுட்டீக என்னுடைய அனுபவத்திலிருந்து நிறைய உதரானங்களை சொல்ல முடியும் நான் முதன் முதலில் பின்னூட்டம் சீமான் விஷயத்தில் எழுதியபோது அய் கணினியில் என்னுடைய பெயர் தெரிகிறது ஹைதருன்னு என்னுடைய பெயர் தெரிகிறது அப்புடின்னு முதன்முறையாக பார்த்து சந்தோஷப்பட்டேன் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை பல்லி அப்புடின்னு சொல்லி ஒருவர் என்னுடைய எழுத்து பிழைகளை பார்த்து இப்புடி திட்டினார் 
  ///உன்னை மாதிரி அரைகுறை அறையவேககடுல்லாம் இருந்தா தமிழ் தேசியம் எங்க?// அதற்கு பிறகு வினவு போன் நம்பருக்கு நான் கூப்பிட்டு அப்பவியாக என்ன வினவு அண்ணே இப்புடி திட்டுறாங்க எனக்கு எழுத்து பிழை வருகிறது நான் பின்னூட்டம் எழுதமாட்டேன்னு சொன்ன போது வினவு சொன்னது எழுத்து பிழை பிரச்சனை இல்லை தோழரே துனிந்து எழுதுங்கள் நாங்கள் சாமளித்து படித்துக்கொள்கிறேம் என்று சொன்ன வார்த்தைகள் என்னை தகுதியடைய வைத்தன வினவுத்தளம் எற்படுத்தியிருக்கின்ற எழுத்து சுகந்திரம் மிகப்பெரிய புரட்சியாகவே நான் பார்க்கிறேன்.

 35. கேள்விக்குறி,
  ஏற்கெனவே சொன்ன கருத்துக்களோடு கூடுதலாக சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஒரு ஆதரவாளருக்கும், ஒரு தோழருக்குமான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். ஒரு தோழர் என்பவர் நமது எல்லா நிலைப்பாடுகள், கருத்துக்களுடனும் உடன்படுகிறவர். அதனால்தான் அவர் தோழராக இருக்கிறார். ஒரு ஆதரவாளர் என்பவர் நமது பல நிலைப்பாடுகளை ஆதரிக்கும் வேளையில், சில நிலைப்பாடுகளை எதிர்க்கலாம். மற்றொரு ஆதரவாளர் சில நிலைப்பாடுகளை ஆதரிக்கும் வேளையில், பல நிலைப்பாடுகளை எதிர்க்கலாம். எனினும், இருவரும் ஆதரவாளர்களே. இவ்வாறு நமது எல்லா நிலைப்பாடுகளுடனும் ஒத்துப் போகாத அதே வேளையில், நமது பல்வேறு நிலைப்பாடுகளை ஆதரிப்பதால்தான் ஒருவர் ஆதரவாளர் என்ற நிலையில் நிற்கிறார். எனவே, ஒரு ஆதரவாளரை நாம் விமர்சிப்பதற்கும், நமது எல்லா நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் நிராகரிக்கும் ஒரு எதிரியை விமர்சிப்பதற்கும் துலக்கமான வேறுபாடு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

  ஒரு ஆதரவாளர் எத்தகைய முறையில் நம் மீது விமர்சனம் முன்வைக்கிறார் என்பதிலிருந்து அவர் குறித்த அணுகுமுறையை தீர்மானிக்க வேண்டுமேயன்றி, ஒரு விமர்சனம் வைக்கிறார் என்பதற்காகவே, எதிரி மீதான கருத்துக் கூறலில் நாம் அவசியம் பயன்படுத்த வேண்டிய கடுமை, எள்ளல், குத்தல், கிண்டல் ஆகியனவற்றை ஆதரவாளரிடம் பயன்படுத்தக் கூடாது. ஒரு ஆதரவாளர் ஆளும் வர்க்க கருத்தை, எதிரியின் கருத்தையே கூட கூறலாம். ஆனால், குறிப்பிட்ட விசயத்தில் அவர் எதிரியின் கருத்தை கொண்டிருப்பதால், அவர் அனைத்து விசயங்களிலுமே நமக்கு மாறான கருத்துக்களையே கொண்டிருக்கிறார் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.

  ஐக்கியம்-போராட்டம் என்ற அடிப்படையில்தான் ஆதரவாளர்களை அணுக வேண்டும். போராட்டம் எனும் அம்சத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது மட்டுமல்ல, எதிரியுடன் நிகழ்த்துவது போன்ற முறையில் போராட்டத்தை நடத்துவது மிகவும் கேடானதும், தவறானதுமாகும்.

  பதிவர் நந்தா எனக்கு நேரடி அறிமுகமில்லை. ஆனால், வினவில் அவரது பின்னூட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் அவர் நமது ஆதரவாளர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். வினவின் எந்தக் கருத்தை ஆதரித்தாலும், அவர் அதனைப் பின்னூட்டமாக, சில சமயங்களில் முதல் ஆளாகக் கூட பதிவு செய்திருக்கிறார். அதே வேளையில் அவர் மாறுபடும் கருத்துக்களை, மனம் திறந்த முறையில், அரசியல் நேர்மையோடு உடனடியாக பதிவு செய்திருக்கிறார். இதுதான் அவரது நடைமுறை. இது மட்டுமல்ல, நமது கருத்துக்களில் மாறுபாடு கொள்வதும், அதனை பகிரங்கமாகத் தெரிவிப்பதும் ஒரு ஆதரவாளரது உரிமையாகும். சில ஆதரவாளர்கள் தமது எல்லாக் கருத்து மாறுபாடுகளையும் பகிரங்கமாக தெரிவிக்கவும், உரையாடவும் தயங்கலாம். சிலர் பகிரங்கமாக தெரிவிக்கவும், விவாதிக்கவும் செய்யலாம். சிலர் பின்னூட்டமாக இடலாம். சிலர் தனிமடலாக அனுப்பலாம். சிலர் தோழர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இது அவர்களது விருப்பம் சார்ந்தது. ஆனால், இவ்வாறு விவாதிப்பது, விமர்சிப்பது அவர்களது உரிமை என்பதை நாம் நிபந்தனையின்றி அங்கீகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

  எல்லா விவாதங்களிலும் ஒரு ஆதரவாளர் நமது கருத்துக்களை விவாத முடிவில் ஏற்றுத்தான் தீர வேண்டும் எனக் கட்டாயமில்லை. ஒரு நட்பு முரண்பாடு என்ற அடிப்படையில், அவர் தமது கருத்தில் தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால், அவர் ஏற்றுத்தான் தீர வேண்டும் என்ற தோரணையில், அவசியத்திற்கும் மீறி விவாதிப்பது, சொன்ன கருத்துக்களையே திரும்பத் திரும்பச் சொல்வது, கிண்டல் செய்வது, குத்தலாக, ஏளனமாகப் பேசுவது ஆகியனவற்றைச் செய்தால், நட்பு முரண்பாடு பகை முரண்பாடாகி அவர் நம்முடன் உரையாடலை நிறுத்திக் கொள்வது மட்டுமல்ல, அவர் நமக்கு எதிரான நிலைக்கும் சென்று விடுவார். மேலும், ஒரு தோழர் கைக்கொள்ளும் இந்த அணுகுமுறையின் விளைவாக, ஒட்டுமொத்த அமைப்புமே இத்தகைய அணுகுமுறையைத் தான் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் தள்ளப்பட்டு விடுவார். எனவே, இந்த ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தில் நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

  இந்த கருத்துக்களை உங்களை மாத்திரம் மனதில் வைத்து எழுதவில்லை. வேறு சில தோழர்களும் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு அளவுகளில் இப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துமீறல் நடைபெற்ற இடங்களில், தனது சாத்தியத்தையொட்டி வினவு இதனை சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது. எனவே, நீங்கள் வினவின் பல்வேறு விவாதங்களில் உற்சாகத்தோடு பங்கேற்கும் தோழர் என்ற முறையில் உங்கள் மீது உரிமையோடு இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

  உங்கள் விமர்சன முறையை ஒரு வரியில் சொல்வதானால், “மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாகும்.” இந்த விமர்சன முறையின் மூலம், ஊசலாடும் ஆதரவாளர்களை நாம் இழப்பதும், நமக்குள் மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவதும் தான் நிகழும். எனவே, தங்கள் விமர்சன முறையின் மீதான எனது விமர்சனத்தை, தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், நிதானமாக பரிசீலிக்க வேண்டுகிறேன்.

  • நந்தாவுக்காக களத்தில் இறங்கி இவ்வளவு பெயிய விமர்சனம் எழுதியிருக்கும் தோழர் போராட்டத்திற்கு நன்றி. உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள்  வினவு தளத்தில் ஜல்லியடிக்கும் கம்யூனிச எதிரிகளுக்கு எதிராகவும் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எதிர்வினை அளித்தா ல்என்னைப் போன்றவர்கள் மல்லாக படுத்தோ குப்புற படுத்தோ துப்புற வேலை இருக்காது.

   நன்றி 

   • ஆதரவாளர்களை அணுகும் போக்கில்…போராட்டம் தோழரின் கருத்து சரியென்று கருதுகிறேன்.

    விவாதிக்கும் பொழுது…அணுகும் போக்கு எப்படியிருக்க வேண்டும் என்று வினவு பலமுறை வழிகாட்டியிருக்கிறார்.

    முன்பு வினவின் வாசகராய் இருந்தவர்.. இப்பொழுது அமைப்பில் வேலை செய்கிறவர்… வினவின் பின்னூட்டங்களில் விவாதிக்காமல்…’அடிக்கிற போக்கை’ சொல்லி.. இந்த போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டார். இந்த அனுபவத்தை வினவிற்கு மெயிலில் தெரியப்படுத்த சொல்லி, அப்பொழுது தெரிவித்தேன்.

    கம்யூனிச எதிரிகளை நீங்கள் தினமும் எதிர்கொள்வதினாலேயே…ஆதரவாளர்களை விமர்சிக்கும் போக்கை கேள்வி கேட்க கூடாது என்பீர்களா!

    • இல்லீங்க குருத்து நான் ‘என்னை’ கேள்விகேட்கக்கூடாதுன்னெல்லாம் சொல்லல,
     நந்தாவுக்கான காக்டெயில் தேவதை எதிர்வினையை விட நான் ஒன்னும் ”துப்பல்” அளவுகோலின் படி காஆஆஆரித்துப்பும் அளவிலான பதிலை நந்நாவுக்கு நான் எழுதவில்லை என்பதை மட்டும் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

  • விவாதத்தில் முகம் கோணுச்சி மூக்கு கோணுச்சின்னு எல்லாம் போக முடியாது. இந்த நந்தா என்பவர் எப்போதாவது கருத்து வேறுபாட்டுடன் ஒரு பின்னூட்டத்தை போடுவார் அதன் பிறகு டீசன்டாக போய் விடுவார். பிறகு வரவே மாட்டார். நான் இனி இங்கு பின்னூட்டம் போட மாட்டேன் என்று அறிவிக்கவும் வேறு செய்வார். அவர் என்றைக்கும் விசயத்தில் நின்று விவாதித்ததும் இல்லை. இவர்களுடைய மனம் கோணாதபடி எல்லாம் விவாதிக்க முடியாது என்ப‌தை முதலில் போராட்டம் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இதற்காக இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை போடும் போராட்டம் அவர்கள். கேள்விக்குறி தன்னந்தனியாக நின்று விவாதித்த போதெல்லாம் எங்கே போனார் ?

   எனவே இறுதியாக நான் கூற வருவது என்ன என்றால். விவாதத்தில் இப்படி தான் சொல்ல வேண்டும் அப்படி தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் இரு தரப்பிடமும் எதிர்பார்க்க முடியாது. யாருடைய மனமும் கோணாதபடி விவாதிக்கவும் முடியாது. பிளாக் உலகில் அசுரனிலிருந்து இது தான் அனுபவம். வேண்டுமானால் தோழர் போராட்டம் அவர் கூறுவதைப்போல விவாதித்து காட்டட்டுமே.

   • // இந்த நந்தா என்பவர் எப்போதாவது கருத்து வேறுபாட்டுடன் ஒரு பின்னூட்டத்தை போடுவார் அதன் பிறகு டீசன்டாக போய் விடுவார். பிறகு வரவே மாட்டார். நான் இனி இங்கு பின்னூட்டம் போட மாட்டேன் என்று அறிவிக்கவும் வேறு செய்வார்.//

    திருவாளர் கரன் என்னை உங்களுக்குத் தெரியுமா? இங்கே வினவு தளத்தில் இனி பின்னூட்டம் இட மாட்டேன் என்று எங்கே சொல்லி இருக்கிறேன் என்று ஒரே ஒரு இடத்திலாவது காட்டுங்களேன். நானாவது அதைப் பார்த்து திருந்திக் கொள்கிறேன். இப்போது என்றில்லை இதற்கு முன்பும் பல முறை தோழர்களின் பின்னூட்டத் தரம் குறித்து விமர்சித்திருக்கிறேன். என்றுமே தோழர் கேள்விக் குறி விவாதத்திற்குகந்த மொழியிலோ, குறைந்தபட்சம் அதற்கேற்ற விஷய அறிவுடனோ பேச முற்பட்டதில்லை என்பதை தெளிவாய் சொல்லிக் கொள்கிறேன். 
    கல்வெட்டுடன் அசுரன் செய்தது விவாதம். கேள்விக் குறி செய்ததற்குப் பெயர் விவாதமா?  முதலில் கேள்விக்குறி விவாதம் செய்யப் பழகிக் கொள்ளட்டும். அதற்குப் பின்பு அது சூடானதாகவோ, காட்டமான ஒன்றாகவோ இருக்கட்டும்.

 36. ///உங்கள் விமர்சன முறையை ஒரு வரியில் சொல்வதானால், “மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாகும்.”///தோழர் போராட்டம் இது ரோம்ப ஒவாரக தெரிகிறது 

 37. போராட்டம் அவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் சரியாக இருக்கிறது

  • தியாகு இது உங்க சொந்த பின்னூட்டமா இல்ல அசாதி சுகுணா திவாகர் எழுதிக்கொடுத்ததா?

   • கேள்விக்குறி உங்கள் புரிதலுக்கு நன்றி
    இப்படியே இருங்க சூக்கிரம் புரட்சி வந்துடும்

    • அத பத்தி நீங்க ஏங்க கவலை படுறீங்க அது அதுக்காக வேலை செய்யுறவங்களோட கவலை… தெருவுல வேடிக்க பாத்தவங்க கருத்தையெல்லாம் யாரும் இங்க கேக்கல

    • அவ்வப்போது தோழர்களுக்கிடையில் எழும் சிறு சிறு கருத்துவேறுபாட்டு பிரச்சனைகளை பயன்படுத்து இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டு கேவலமான முறையில் கோஷ்ட்டி சேர முயர்சிக்கும் உன்னை நினைத்து உனக்கே வெட்கமாக இல்லையா தியாகு ?

    • தோழர்கள் இரண்டுப்பட்டல் ஒனக்கு கொண்டாட்டம் இன்னைக்கி ஒனக்கு மகிழ்ச்சியான நாளுன்னு நேனைக்கிறேன்

 38. //தெருவுல வேடிக்க பாத்தவங்க கருத்தையெல்லாம் யாரும் இங்க கேக்கல//

  ஏனுங்க உள்ள இருப்பவங்க சொன்னாலும் கேட்கமாட்டேன்
  தெருவுல போரவன் சொன்னாலும் கேட்கமாட்டேன்னு
  கிளம்பிட்டீக

  நடத்துங்க நடத்துங்க

 39. //முறையில் கோஷ்ட்டி சேர முயர்சிக்கும் உன்னை நினைத்து உனக்கே வெட்கமாக இல்லையா தியாகு ?//

  கோஸ்டி சேர்ந்து என்னத்த கிளிக்க போறோமுனு சொல்லுங்க பனியன் கம்பெனி

  ஏற்கனவே இருக்கிற கோஸ்டு ஒன்னும் பண்ணல புதுசா எதுக்கு கோஸ்டி புடலங்காய் எல்லாம்

  ஆனா பாருங்க போராட்டம் சொன்ன கருத்துக்கு மட்டும் தெளிவா ஒரு மடல் வராது உங்க நண்பர்களிடம் இருந்து

  அவ்ளோதான் இயக்கவியல் பூர்வமான சிந்தனை அவர்களுக்கு

  மிச்சமெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி திட்டுவதுதான்
  இப்போ வினவு வந்தார்னா நான் போட்ட மடலெல்லாம் தூக்கி குப்பையில போடுவாரு

  ஆனா கேள்விகுறியின் சம்பந்தமில்லா மறுமொழிகள் மட்டும்
  துருத்தி கொண்டு நிக்கும்
  “அதான் பாட்டாளி வர்க்க ” சர்வாதிகாரம்

 40. //அராஜகவாதத்தின் மறுமுனை மக்களின் ஜனநாயகத்தைக் கொல்வதே என்பது இங்கு சரியாகத்தான் இருக்கிறது.//

  அசுரன் சரியா சொன்னார் அதைத்தான் கேள்விக்குறி செய்துட்டு இருக்கார்

  அசுரனுக்கு ஒரு விசயம் தெரியலை அவர்தான் அராஜகவாதி மாதிரி பேசுகிறார் என்ற விசயம்தான்

 41. //உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள் வினவு தளத்தில் ஜல்லியடிக்கும் கம்யூனிச எதிரிகளுக்கு எதிராகவும் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எதிர்வினை அளித்தா ல்என்னைப் போன்றவர்கள் மல்லாக படுத்தோ குப்புற படுத்தோ துப்புற வேலை இருக்காது.//

  //இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை போடும் போராட்டம் அவர்கள். கேள்விக்குறி தன்னந்தனியாக நின்று விவாதித்த போதெல்லாம் எங்கே போனார் ?//

  கேள்விக்குறியும், கரனும் முன்வைத்த இந்தக் கருத்துக்களுக்கு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆம், நான் வினவின் எல்லாப் பின்னூட்ட விவாதங்களிலும் கருத்து சொல்வதில்லை. மேலும், பின்னூட்டமிடும் தெளிவாக அறியத்தக்க, முற்போக்கு முகமூடிணியந்த பலவண்ண கம்யூனிச எதிரிகளுக்கும் எதிராக எல்லா சமயங்களிலும் நான் விவாதத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்:

  1.ஜல்லியடிக்கிற எதிரிகள் பெரும்பாலும் தாங்களாகவே அம்பலப்பட்டு விடுகிறார்கள். ஆனால், ஆழமான கருத்தை முன்வைப்பது போல நடிக்கும், கம்யூனிச வெறுப்பில் வெந்து கொண்டிருக்கும் எதிரிகளுக்கு வினவு, அசுரன், இப்பொழுது இல்லையானாலும் சில காலம் முன்பு வரை ஏகலைவன், மா.சே போன்ற தோழர்கள் சாட்டையடி பதில்களை முகத்திலறைந்தாற் போல அளித்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்கு மேலும் கருத்து சொல்வது தோழர்கள் சொல்வதை வழிமொழிவது, அல்லது மீண்டும் சொல்வது என்பதாகவேதான் இருக்கும் என்பதால் நான் கருத்து சொல்லாமல் இருந்து விடுகிறேன். சில சமயங்களில் ரதி, சந்தனமுல்லை, வால்பையன் போன்ற நமது ஆதரவாளர்கள் கூட எதிரிகளுக்கு சரியான முறையில் பதிலளித்திருக்கிறார்கள். எனவே எனது நிலை சரியானது என்று கருதுகிறேன். அதே வேளையில், இதன் பொருள் கேள்விக்குறி போராடக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்பதல்ல. மாறாக, அவரது உற்சாகத்தை நான் அங்கீகரிக்கிறேன் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.அதே வேளையில் அவரிடம் உள்ள புரிதல் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக் காட்டுவது சக தோழர் என்ற முறையில் எனது கடமை என்று கருதியே எனது விமர்சனத்தை முன்வைத்தேன். அவ்வாறு முன்வைத்தது சரியானது என்றும் கருதுகிறேன்.

  2. சில சமயங்களில், மிக அரிதாக, நான் சில விசயங்களில் எதிரிகளை வினவு, அசுரன் முதலான தோழர்கள் குறிப்பிடாத மற்றொரு கோணத்திலிருந்து திரை கிழிக்க எண்ணியும், எனது அலுவலக வேலை நெருக்கடிகள், அமைப்பு வேலைகள் காரணமாக ஏற்படும் நேரமின்மையின் காரணமாக, அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பின்னர் அந்தப் பதிவில் விவாதம் நின்று போன நிலையில், காலம் கடந்து பின்னூட்டமிடுவது பயனற்றது எனக் கருதி கைவிட்டிருக்கிறேன். இது எனது பணிச்சூழலின் விளைவு. இதனைத் தவிர்க்கவியலாது என்று கருதுகிறேன்.

  //நந்தாவுக்கான காக்டெயில் தேவதை எதிர்வினையை விட நான் ஒன்னும் ”துப்பல்” அளவுகோலின் படி காஆஆஆரித்துப்பும் அளவிலான பதிலை நந்நாவுக்கு நான் எழுதவில்லை என்பதை மட்டும் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்//

  1. காக்டெயில் தேவதைக் கவிதை நந்தாவுக்காக எழுதப்படவில்லை. கவிதையின் கருப்பொருள் அல்லது ஹீரோயின் லீனா மணிமேகலைக்காகவே எழுதப்பட்டது. இதனை லீனா மணிமேகலையே தனது வரலாற்றுப் புகழ்பெற்ற கூட்டத்தில், எனது பெயரையும், அவ்வாறே கவிதை எழுதிய தோழர் கலகத்தின் பெயரையும் குறிப்பிட்டு ‘அங்கீகரித்தார்’. லீனாவுக்கு புரிந்ததை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது.

  லீனா விசயத்தில், நந்தா முதலான பிற ஆதரவாளர்களின் ஊசலாட்டத்தை,

  “கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
  மிஞ்சிப் போனால்
  எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
  பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
  நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
  கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

  “இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
  “ஏன் கொச்சை வார்த்தைகள்?”
  “நீங்களா இப்படி?”

  சட்டம் சட்டம்தான்,
  முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
  கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
  கண்டபடி பேசக் கூடாது.
  கண்ணியமாக துடைத்து விட்டு,
  கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.” என்ற வரிகளின் மூலம் தோழமையோடு கண்டிப்பதையும் அந்தக் கவிதை கைவிட்டு விடவில்லை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

  2. கேள்விக்குறியும், கரனும் எனது விமர்சனத்தை பரிசீலிப்பதில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாகக் கருதுகிறேன். நான் முன்வைத்த விமர்சனம் நமது ஆதரவாளர்களுடனான நமது அணுகுமுறை பற்றியது. நமது எதிரிகளைக் குறித்த அணுகுமுறையில் நான் கருத்து மாறுபாடு இருப்பதாக நான் கூறவில்லை. மாறாக, “ஒரு ஆதரவாளர் எத்தகைய முறையில் நம் மீது விமர்சனம் முன்வைக்கிறார் என்பதிலிருந்து அவர் குறித்த அணுகுமுறையை தீர்மானிக்க வேண்டுமேயன்றி, ஒரு விமர்சனம் வைக்கிறார் என்பதற்காகவே, எதிரி மீதான கருத்துக் கூறலில் நாம் அவசியம் பயன்படுத்த வேண்டிய கடுமை, எள்ளல், குத்தல், கிண்டல் ஆகியனவற்றை ஆதரவாளரிடம் பயன்படுத்தக் கூடாது. ஒரு ஆதரவாளர் ஆளும் வர்க்க கருத்தை, எதிரியின் கருத்தையே கூட கூறலாம். ஆனால், குறிப்பிட்ட விசயத்தில் அவர் எதிரியின் கருத்தை கொண்டிருப்பதால், அவர் அனைத்து விசயங்களிலுமே நமக்கு மாறான கருத்துக்களையே கொண்டிருக்கிறார் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். எனது விமர்சனத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே “அவசியம் பயன்படுத்த வேண்டிய” என்ற சொற்களை அழுத்தம் தந்து குறிப்பிட்டிருந்தேன். எனவே, எனது விமர்சனத்தை கேள்விக்குறியும், கரனும் சற்று நிதானமாகப் பரிசீலிக்கவும், விமர்சனத்தின் உள்ளடக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கவும் வேண்டுகிறேன்.

 42. நந்தா ஒரே ஒரு முறை உங்களோடு லைப்பாய் ரேஞ்சுக்கு ஆரோக்கியமாய் விவாதிக்க முயற்சித்தேன் அதுக்கு பதிலேதும் சொல்லாமல் உங்க தோழரிடம் நேரடியாக பேசிட்டேன்னு ஓடிவிட்டீர்கள் https://www.vinavu.com/2010/01/06/leena/#comment-15256 

  உங்களோடு ஆராக்கியமாய் விவாதிக்க முயற்சி எடுக்கும் வினவு உங்களுக்கு எழுதிய கீழ்வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் நேர்மையில்ல்லாத நீங்கள் 

  https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20870
  https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20871
  https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20872
  இங்கே வந்து
  https://www.vinavu.com/2010/05/14/sriramsena-camera/#comment-23080 

  @@@கலை லீனா விஷயத்தில் ம.க.இ.கவின் செயல்பாடுகள் குறித்து நான் சமாதானமாகி விட்டதாக இன்னும் சொல்லிக் கொள்ள வில்லை. வினவு பதிலளித்திருக்கிறார் அவ்வளவே. இந்த விஷயத்தில் எனது கேள்விகளை உங்களது தோழரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறேன்.@@@

  அதாவது ஆரோக்கியமான விவாதத்தை உங்களிடம் எடுக்க முற்படுவோரிடம் விவாதிக்காமல் ஓடிவிடுவதை ஒரு கலையாக வளர்த்துவைத்துள்ளீர்கள், அதற்கு தோழரிடம் நேரடியாக பேசிவிட்டேன் என்ற கேவலமான காரணம் வேறு. 
  இப்படியாப்ட்ட நோயாளி விவாதிப்பாளரான உங்களுக்கு ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது??? 

  இதில் என்னைப்பற்றி இப்படி ஒரு கருத்து வேறு@@@என்றுமே தோழர் கேள்விக் குறி விவாதத்திற்குகந்த மொழியிலோ, குறைந்தபட்சம் அதற்கேற்ற விஷய அறிவுடனோ பேச முற்பட்டதில்லை என்பதை தெளிவாய் சொல்லிக் கொள்கிறேன். முதலில் கேள்விக்குறி விவாதம் செய்யப் பழகிக் கொள்ளட்டும். அதற்குப் பின்பு அது சூடானதாகவோ, காட்டமான ஒன்றாகவோ இருக்கட்டும்.@@@ 

  ”உங்களைப்போன்ற”  Champions of Mediocrity (அற்பவாதிகளின் அரசன்?) யின்/னின் சான்றிதழை வாங்குவது உங்களோடு விவாதிக்கும் ‘தோழருக்கு’ வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம்.. எனக்கில்லை.. என்னைப்பொறுத்தவரை உங்களுக்கும் கல்வெட்டிற்கும் வித்தியாசமே கிடையாது.. அவரும் கட்டுரைகளை பாராட்டி பின்னூட்டம் எழுதியிருக்கிறார். வினவின் படைப்புகளை அவர் தளத்தில் பிரசுரித்திருக்கிறார் அதற்காக அவறது அவதூறுக்கும் உங்களது செயலின்மைக்கும் சலுகையெல்லாம் வழங்க முடியாது. உங்கள் (பன்மை)  அறிவு சீவித்தனத்தையெல்லாம் நீங்கள் மொக்கை பின்னூட்டம் போடும் பிற தளங்களில் போய் காண்பிக்கவும்.. வினவு இரும்படிக்கும் இடம் இங்கே முதுகெலும்பற்ற மண்புழு வகையறாக்களுக்கு வேலையில்லை.. you know invertebrates..the ones which lacks the spine !

  இறுதியாக உங்களைப் போன்றவர்களையெல்லாம் ஆதரவாளர்கள் என்று கருதும் தோழர்களுக்கு – தயவுசெய்து அமைப்பிடம் ஆதரவாளர்கள் என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வினவின் பதிவுகளில் நன்றாக இருக்கிறது என்று பின்னூட்டமிடும் நண்பர்கெல்லோரும் ஆதரவாளர்கள் என்றால் இன்னும் 2 வருடங்களில் நமது அமைப்புக்கு 1லட்சம் ஆதரவாளர்கள் கூட கிடைக்கலாம். 

  • “இறுதியாக உங்களைப் போன்றவர்களையெல்லாம் ஆதரவாளர்கள் என்று கருதும் தோழர்களுக்கு – தயவுசெய்து அமைப்பிடம் ஆதரவாளர்கள் என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” என்று எனக்கு கட்டளையிட்டுள்ளீர்கள் அல்லது கருத்து சொல்லியுள்ளீர்கள். அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். தாங்கள் தங்களது விமர்சன முறை, தற்போது தாங்கள் எனது விமர்சனத்திற்கு அளித்து வரும் பதில்கள் ஆகியனவற்றை அமைப்பில் முன்வைத்து அமைப்பின் கருத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

 43. யார் ஆதரவாளர் என்றும் யார் உறுப்பினர் என்றும் பேசுவதற்கு ஏற்ற இடம் இதுவா … ஒரு பின்தங்கிய உற்பத்தி முறை நிலவும் நாட்டில் தோன்றும் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்திலிருந்து வரும் பாட்டாளி வர்க்க முன்னணிப்படைக்கு இது போன்ற கோட்பாடற்ற வாத்த்தில் சிக்கி திணறுவது ஒன்றும் புதிதல்ல

  . ஆனால் அதன் ஒரு இறுதிப்பகுதி தன்னளவில் அமைப்புகளுக்கு எதிரான சிறுகதையாடலுக்குள் திரும்புவதை அப்படை புரிந்து வினையாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

  வினவு செய்ய வேண்டிய வினையை தன்வினையாக்குவதற்கு இப்பெரியவர்கள் தயாராக உள்ளனரா எனத் தெரியவில்லை..

 44. .

  வினவு,கலை,அசுரன்,கேள்விக்குறி ..அனைவருக்கும்….

  1.
  “மதம்” “இசம்” எதுவாக இருந்தாலும் அதை அப்படியே எல்லா இடத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது. இருக்கும் இடம், சூழல், தேவை பொறுத்து தேவையானவைகளைப் பொறுக்கி நமக்கான ஒன்றை நாமே சமைக்க வேண்டும். ஏதோ ஒரு நாட்டில் ஒன்று நடந்துவிட்டது என்பதற்காக ஒரு வரி மாறாமல் அப்படியே பேசிக்கொண்டு இருப்பதைததான் இறக்குமதிச் சரக்கு என்று நான் சொல்வது.

  குரானில் சொன்னது , “நேற்று இன்று நாளை” எல்லாத்துக்கும் பொறுந்தும் என்று சொல்வதும் , லெனின்,மார்க்ஸ்…. இன்னபிற தலைவர்கள் சொன்னது “அன்றைக்கும் இன்றைக்கும் சரி . மாற்றம் தேவை இல்லை” என்று நம்புவதும் ஒன்றே.

  2.
  தேவைகள்தான் இசங்களை உருவாக்குகின்றன. உருவான இசத்