இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.
ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.
‘ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது. பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வெள்ளி 11 -6-10 அன்று மாலை 6 மணிக்கு இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!
வரவேற்புரை – வெங்கட பிரகாஷ்
கருத்துரை – தமிழருவி மணியன், பாமரன், வீர சந்தானம், இயக்குனர் ராம்
நன்றியுரை – ப்ரியா, கீற்று.காம்
(மின்னஞ்சலில் செய்தி/படங்கள் அனுப்பிய நண்பருக்கு நன்றி)
தொடர்புடைய பதிவுகள்
- கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
- ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான கருத்துப்படங்களின் போர் !
- ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !
- ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !
- ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!
- ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !
- ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!
- சீர்காழி ரவி- ‘தொங்க’பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!
- சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !
- கருணாநிதியின் இறுதி நாடகம்?
- ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் – கருத்துப்படம் !
- ராஜபட்சே – சிவ சங்கர் மேனன் சந்திப்பு – கருத்துப்படம்
- ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE
- ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!
- “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!
- ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!
- ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
- வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
- எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
- ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !
- அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
- ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்
- சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!
- ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!
- ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
- ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
- ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
- ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !
- ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்
- ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!
- புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
- ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை !!
- முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!
- முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !
- முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!
- முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !
- ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?
- ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!
கட்டாயம் வருகிறோம் …….. அம்மா நேரிடியாய் எதிர்ப்பார் . கலைஞர் துரோகம் செய்வார் . என்ன சொல்ல எல்லாமே சந்தை ……….மனிதர்கள் கூட சந்தை தான் ….உயிர்கள் வெறும் மயிர்கள் ….
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையில் தார்மீக விழுமியங்களை தங்கள் அறிக்கைகளினாலும், பசப்பு வார்த்தைகளினாலும், தொலைக்காட்சி ஆடல் பாடல்களிலும் மறக்கடிக்கச் செய்தவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டியவர்கள் தான், மறுப்பதற்கில்லை.
//ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வெள்ளி 11 -6-10 அன்று இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது//
நேரம் எப்போது ? காலை ? அல்லது மாலை ?
ரவுஸ், மாலை 6 மணிக்கு. சுட்டிக்காட்டியதற்கு நன்றி
படியளக்கும் பெருமாளாய் கடற்கரையில் காற்றுவாங்கப்பேன், போர்நிறுத்தம் வாங்கிவந்தேன் என்றவரை ஏதோ தூணோடு மோதவைத்து……இரத்தமெல்லாம் வழியவைத்து சீரியசாய்…. என்ன இது பாலா? 🙂
ஜெயா எதிர்ப்பார்; கலைஞர் துரோகம் செய்வார் என்பது நமக்கு தெரிந்தது தான் . ஆனால் நெடுமாறன், வைகோ, சீமான், திருமா, தா.பா. ,போன்ற வஞ்சகர்களை பற்றி பேச வேண்டிய தருணம் இது. இவர்களை பற்றி கருத்துப்படம் பேச வேண்டும். நான் சென்னை வாசி அல்ல. எனவே “ஓவிய கண் காட்சியை ” நாளை வினவில் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் பாலா!
கலந்து கொள்கிறேன்
நன்றி
மிக நல்ல பதிவு
தக்க சமயத்தில் நிகழ்வை ஒருங்கிணைக்கும் கீற்று-க்கும், கூர்மையான கார்ட்டூன்களை உருவாக்கிய பாலாவிற்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
நான் சென்னைல் இல்லை , முடிந்தால் வீடியோ லோட் பண்ணுங்கள் பார்கின்றேன்
வாழ்த்துக்கள், கண்டிப்பாக கலந்துகொள்கிறேன், நண்பர்களிடமும் சொல்லிருக்கிறேன், உங்கள் பணிக்கு மிக்கநன்றி
இலங்கையில் நடைபெற்ற இந்திய சினிமா விழாவிற்கு சீமான் நடாத்திய போராட்டத்தை பாராட்டத்தான் வேண்டும்.அந்த விழா ஒரு அலங்கோல விழாவாகியதை நாம் கண்டோம் அல்லவா.