Tuesday, December 10, 2024
முகப்புசெய்திபிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!

பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!

-

ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் என்ன?

நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு இந்தச் சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி குடும்பத்தினரை சம்மதிக்க வைத்திருக்கிறான். அப்போது ஐந்து முதல் 13 வயதுள்ள இந்த சிறுமிகளுக்கு உயர்ரக இனிப்பும், சாக்லேட்டும் கொடுத்து நிர்வாணமாக்கி அதை புகைப்படம் கூட எடுத்திருக்கிறான்.

சிறுமிகள் வீட்டில் அசாதாரணமாக நடந்து கொள்வதை அடுத்து பெற்றோர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிராசின் வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாணச் சிறார்களது புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. அவற்றை மின்னஞ்சலில் வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறான். இதனால் இது மிகப்பெரிய குழந்தை விபச்சார வலைப்பின்னலாக இருக்குமோ என்றும் போலீசு அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

தாய்லாந்து என்றால் வெளிநாட்டவர்க்கு குறிப்பாக மேற்குலக மனிதர்களின் நினைவுக்கு வருவது வகைவகையான விபச்சார – பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாதான். அத்தகைய பாலியல் வக்கிரங்களில் இப்போது உலகமெங்கும் கடும் கிராக்கியிருப்பது சிறார் விபச்சாரம்தான். வயதுக்கு வந்த விதவிதமான தேசிய இனப்பெண்களை ருசி பார்த்த காம வெறியர்கள் இப்போது கேட்பது குழந்தைகளைத்தான்.

கோவாவிலோ, மாமல்லபுரத்திலோ, இலங்கை கடற்கரையிலோ இல்லை தாய்லாந்திலோ இப்போது சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படித்தான் சுற்றுலா என்ற பெயரில் வெள்ளைப் பன்றிகள் ஆசியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிஞ்சுகளை குதறி வருகின்றன. இவை எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்தாலும் சுற்றுலா வருமானத்தை மனதில் கொண்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.

மற்ற நாடுகளை விட இந்தவகை ‘சுற்றுலாவில்’ கொடிகட்டிப்பறக்கும் தாய்லாந்தில் இதுதான் மிகப்பெரிய வருமானத்தை தருகிறது. வறண்டு போன நாட்டுப்புறங்களிலிருந்து இதற்கென்றே இருக்கும் முகவர்கள் மூலம் அன்றாடம் நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள், பெண்கள் விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

பாங்காக்கில் ஜனநாயகத்திற்காக போராடும் மக்கள் தங்கள் ஜனநாயக அரசுதான் இந்த சுற்றுலா விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதை உணரும் போதுதான் இந்த வெள்ளைப் பன்றிகளின் கொழுப்பை அடக்க முடியும். பிஞ்சுகளையும் காப்பாற்ற முடியும். உலகமயமாக்கம் வழங்கியிருக்கும் சுற்றுலா வருமானத்தின் யோக்கியதை இதுதான் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?
——————————–

  1. Dutch man arrested for child porn in India
    Published on 8 November 2009 – 11:07am

    A Dutch man has been arrested for possession of child pornography in the South Indian city of Chennai. The man has been living in India for 30 years.

    A computer at his home contained pornographic videos featuring foreign children. The arrest was made following a tip-off by an organisation against child abuse. It is not known when the man’s case will come to court. If convicted he could face a seven-year prison sentence.

    Some years ago he was also charged with child abuse in an orphanage he had opened in Chennai and since that time has been free on bail.

    ++++++++++++++++++++++++++++++

    CHENNAI: The cyber crime cell of the Central Crime Branch on Monday filed before a Saidapet court a 300-page chargesheet against Dutch national Wilhelmus Weijdeveld (57), arrested on charges of child sex abuse and posting child pornography on internet. He has been booked under section 67 (b) of the Information Technology Act (posting child pornography material on internet) and under sections 377 (unnatural sex) and 367 (abduction and kidnapping) of the Indian Penal Code.

  2. /உலகமயமாக்கம் வழங்கியிருக்கும் சுற்றுலா வருமானத்தின் யோக்கியதை இதுதான் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?/

    நிச்சயமாக!

  3. கேட்பதற்கும், படிபதற்கும் கொடுமையான விசயம் தான் பாலியல் கொடுமைகள். அதை தடுப்பது என்பது இது போன்று வரும் செய்திகளை விமர்சனம் செய்வதால் மட்டும் முடியாது. அதற்காக விமர்சனம் கூடாது என்பது இல்லை.

    பொதுவில் பல ஊடகங்களில் பாலியல் குற்றவாளி பிடிபடும் போது அவர்களை பற்றி பரபரப்பான செய்திகளை தங்கள் பத்திரிக்கையின் விற்பனை நோக்குடன் முதல் பக்கதிலும், தலைப்பு செய்தியிலும் வெளியிடுகின்றனர். அதன் பிறகு அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா? என்ன தண்டனை விதிக்கப்பட்டது, விதிக்கப்பட்ட தண்டனை நியாயமானது தானா? அல்லது விடுவிக்கபட்டார்களா? விடுவிக்க பட்டிருந்தால் உண்மையில் அவர்கள் நிரபராதி தானா? போன்ற செய்திகள் வெளியிடுவது இல்லை. அப்படியே வெளியிட்டாலும் கடைசி பக்கதிலும், சினிமா விளம்பரங்களில் நடுவில் வெளியிடுகின்றனர்.

    தண்டனை என்பது குற்றங்கள் தடுப்பத்தற்கு வழங்கப்படுவது. குற்றங்களையும், குற்றவாளிகளையும் விமர்சிப்பதை விட தண்டனைகளை விமர்சிப்பது குற்றங்கள் குறைவதற்கு ஒரு வழியாக அமையும். இந்த பாலியல் கட்டுரை எழுதிய நண்பர் அந்த 90 வயது காமகனுக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதையும் அந்த தண்டனை பற்றி விரிவான விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.

  4. பதிவுக்கு என் ஆதரவு. ‘ருசி பார்த்த’ இந்த சொற்பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம். ‘கொழுப்பை அடக்க’ திமிரைத்தான் அடக்கமுடியும்.கொழுப்பை குறைக்கத்தானே முடியும் ?

  5. இது போன்ற விசயங்களில் உள்ளூர் மாமா பயல்களுக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும்

  6. இத்தகைய காம கொடூரங்களை என்ன செய்ய ……….இதற்க்கு தனி மனிதன் வக்கிரம் என்பதை
    விட ……… உலகமயமாக்கலுக்கு மாறியதே காரணம் ….. நல்ல கட்டுரை வினவு

  7. வெள்ளைப் பன்றி என்ற சொற்பிரயோகம் திரும்பத் திரும்ப வருகிறது. அந்தக் குற்றவாளிக்கும் அவன் தோல் நிறத்திற்கும் தொடர்பு இல்லை. சிறு பிள்ளைகளிடம் பாலியல் குற்றங்கள் செய்பவர்கள் எல்லா இன மத நாட்டு அடையாளங்களிலும் இருக்கிறார்கள். பம்பாயில் விபச்சாரத் தொழிலிலிருந்து காப்பாற்றப் பட்ட பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இக்கொடுங்குற்றம் நாம் பயப்படுவதை விடப் பரவலாகவே நடக்கிறது. வெள்ளைதோலுடையவர்களைத் தனிப் படுத்திக் குற்றஞ்சாட்டுவது தவறு என்று நினைக்கிறேன். தயவு செய்து நிறவெறியை வெளிப்படுத்தும் அப்பதத்தை எடுத்து விடுங்கள்.

    • உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதிக்கின்றேன். இந்த மாதிரி மிகக்கொடிய பாலியல் வன்முறைகள் எல்லா இனத்தவராலும் நடத்தப்படுகின்றது. Race has nothing to do with this particular incident at all.

    • வித்தகன், எனக்கு புரிந்த வரை தமிழில் வெள்ளைப்பன்றி என்று எழுதுவது நிறவெறி அல்லது Racism ஆகாது. இங்கே வெள்ளைப்பன்றி என்று குறிப்பிடுவது தின்றுவிட்டு தினவெடுத்து திரியும் சோம்பேறி கூட்டத்தை என்ற பொருளில்தான் பரவலாக பேசப்பட்டு வருக்கிறது.

      இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ள நபர் வெள்ளைகாரராக இருப்பதை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு ? பாலியல் சுற்றுலாவுக்கு போகின்ற கூட்டத்தில் கறுப்பர் எண்ணிக்கை வெள்ளையினத்தவர்களை விட பல நூறுமடங்கு குறைவு என்பதுதானே உண்மை.

      மேலும் அந்நிய சுற்றுலாவுக்காக ‘திறந்து’ விடப்பட்ட நாடுகள் இதுபோன்ற வெள்ளைக்காரர்களை வரவேற்பதும், அவர்கள் விளம்பரங்களில் வெள்ளைக்காரர்களை போட்டு அவர்களை முதல்தர மனிதர்களாக நடத்துவதும்தானே நடக்கிறது….?நம்மூரிலும் வெள்ளைக்கார சுற்றுலா பயனிகளுக்கு ஸ்பெசல் மரியாதைதானே? அப்படியாப்பட்ட வெள்ளைக்காரர்கள் யோக்கியதை உலகுக்கு தெரிய வேண்டாமா?? 

      இதுவரை இது போன்ற சிறார் பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களிலும் கூட வெள்ளைக்காரர்களேதான் அதிகம். உலகெங்கிலும் கருப்பாக இருப்பவர்களை நிறவெறி கொண்டு ஒடுக்கிய கூட்டத்தின் ஒய்யார கொண்டையில் ஒளிந்திருக்கும் ஈரும் பேனும் இதுதான்..என்பதை வெள்ளையன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை என்று சொல்வது போல்தான் எனக்கு படுகிறது.

      நீண்டநாளுக்கு பிறகு உங்களை வினவில் கண்டதில் மகிழ்ச்சி…

      • கேள்விக்குறி… கோபம் தீர பன்றி என்று திட்டிக் கொள்ளுங்கள். நானும் உங்களுடன் சேர்ந்தே திட்டுகிறேன். ஆனால் வெள்ளை இனக் குற்றவாளியை வெள்ளைப் பன்றி என்று சொல்லிவிட்டால் நாளை கறுப்பு இனக் குற்றவாளியை கறுப்புப் பன்றி என்று சொல்ல வேண்டியிருக்கும். பன்றி குணத்தை சுட்டிக் காட்டுங்கள். தோல் நிறத்தை விட்டு விடுங்கள் என்று மட்டும்தான் சொல்கிறேன். உங்கள் வரவேற்புக்கு நன்றி.

        • வித்த்தகன் நலம்தானே?
          அமெரிக்காவில் கூட வெள்ளைநிறவெறி என்று சொன்னால் கருப்பநிறவெறி என்றும் தேவைப்பட்டால் சொல்ல வேண்டும் என்று சில வெள்ளை அறிவாளிகள் கூறுவதுண்டு. இப்படி ஒடுக்குபவரையும் ஒடுக்கப்படுபவரையும் சமப்படுத்தி பொதுமைபடுத்துவது இறுதியில் ஒடுக்குகின்றவருக்கே உதவும். ஒரு தலித் ஒரு தலித் கட்சியில் இருப்பதும், ஒரு பார்ப்பனர் பிராமண சங்கத்தில் இருப்பதும் ஒன்றல்ல. இருவரையும் சாதிக் கட்சிகளில் இருப்பவர்கள் என்று சொன்னால் அது தவறு என்கிறோம். காரணம் தலித்துக்கள் சாதி ரீதியாக யாரையும் ஆதிக்கம் செய்யும் சமூக நிலைமையில் இல்லை, மாறாக ஆதிக்கத்துக்கு உட்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அதேபோல அமெரிக்காவில் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் ஆதிக்கம் செய்வதினூடகத்தான் வெள்ளை நிறவெறி ஆதிக்கம் செய்கிறது.

          அடுத்து மூன்றாம் உலகநாடுகளில் உள்ள சுற்றுலா மையங்கள் அத்தனையும் வெள்ளைக்காரர்களின் வருமானத்திற்காகவே குழந்தைகள் விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது. இது பற்றி பல ஆய்வுகள் உள்ளன. சதவீத அடிப்படையிலும் இவர்களே இந்த கொடுரத்திற்கான தோற்றுவாயாக இருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் எல்லா இனமும் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் வைத்து நடக்கும் விபச்சாரத்தில் ஆகப் பெரும்பான்மை வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள். ஆகவே வெள்ளைக்காரப் பன்றி என்று எழுதியது வெறும் வசைச்சொல் அல்ல. அது குறிப்பிட்ட அரசியல் உட்கிடக்க்கையை மனதில் கொண்டே எழுதப்பட்டது.

        • இந்தக் கட்டுரையை நான் திசை திருப்ப விரும்பவில்லை. ஆனாலும் கடைசி முறையாக என் எண்ணப் போக்கைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். செய்யும் குற்றத்தில் நிற வெறி கலக்காத போது, குற்றவாளியின் இனத்தைச் சுட்டிக் காட்டுவது சரியல்ல என்பது என் வாதம்.

          நீங்கள் கொடுக்கும் உதாரணத்தின் நீட்சியாகவே சொல்கிறேன். ஒரு பிராமண சாதிக்காரன் மேலாண்மையோடு நடக்கும் போது பார்ப்பனத் திமிர் என்று வருணிக்கலாம். குற்றம் இன வெறி சார்ந்து நடக்கும் போது குற்றவாளியின் இனம் வசைச் சொல்லோடு இணைவதில் தவறில்லை.

          ஆனால் ஒரு பிராமணன் திருடும் போது அவனை பார்ப்பனத் திருடன் என்று வருணிப்பதோ அல்லது அவன் கொலை செய்யும் போது பார்ப்பனக் கொலைகாரன் என்பதோ தவறு. இல்லையேல் தலித்/ கிறுத்துவ/வன்னிய/முஸ்லீம் திருடன், என்று ஒவ்வொரு முறையும் இனத்தையோ மதத்தையோ இணைத்துத் தான் திட்டவேண்டும். அது சரியல்ல.

          சிறு பிள்ளைகளோடு உறவு வைத்துக் கொள்ளும் ஈனப் பழக்கம் வெள்ளைத்தோலால் வரும் வியாதி அல்ல. வெள்ளைக்காரர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் இத்தகைய விபச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களாக இருப்பதற்கு அவர்களிடம் இருக்கும் அதிகப் படியான பணமும், இக்குழந்தைகளின் பெற்றோரின் வறுமையுமே காரணம். அரபு ஷேக்குகளும், இந்தியர்களும், இன்ன பிற இனத்தவரும் கூட இந்த நீசத்தனத்தில் பங்கு வகிப்பவர்கள் தான். வெள்ளையர்கள் மட்டும்தான் இத்தொழிலுக்குக் காரணம் என்றோ, அவர்கள் இனத்தின் தனிப்பட்ட கோளாறு இது என்றோ உங்கள் வார்த்தைகளால் பொருள் வந்து விடக் கூடாது.

          எல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களுமே முகம் தெரியாத ஆசாமிகள் எல்லோரிடமுமே கவனமாகத்தான் தங்கள் பிள்ளைகளைப் பழக விட வேண்டும். வெள்ளைக் காரர்களிடம் மட்டும் பயந்து பிரயோசம் இல்லை. முன்பு ஒரு முறை குமுதத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் ஒரு கட்டுரையில் குமுதம் செட்டியார் என்று வினவில் குறிப்பிடப் பட்டு அப்போதும் அதற்கு நான் இதே தொனியில் மறுப்பு எழுதிய நியாபகம் வருகிறது.

          மற்றபடி, கட்டுரையின் உள்கருத்திலிருந்து கொஞ்ச தூரம் தடம் மாறிப் பேசியதற்கு மன்னிக்கவும்.

        • “செய்யும் குற்றத்தில் நிற வெறி கலக்காத போது, குற்றவாளியின் இனத்தைச் சுட்டிக் காட்டுவது சரியல்ல என்பது என் வாதம்.”

          வழிமொழிகின்றேன்.

          இலங்கையில் கிட்டத்தட்ட 20% சிறுவர்களும் 10% சிறுமிகளும் பாலியல் வன்முறைக்குள்ளாவதாக எங்கோ படித்த ஞாபகம். இது கூட சரியான under reporting எனக்கருதுகின்றேன். ஏனெனில் எமது சமுதாயத்தில் இது சரியான taboo subject. எப்படி மூடி மறைக்கலாமெனத்தான் பார்ப்பார்களே ஒழிய அந்த‌ கொடியவனை உலகிற்குக்காட்டி வேண்டியன செய்வது எப்பவுமே priority ஆக இருந்ததில்லை. அத்தோடு பாதிக்கக்பட்டவர்களே பல சமயம் பெரியவர்களிடம் சொல்வதில்லை. எனது personal அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், நாம் எதிர்பார்ப்பதை விட நிறைய இம்மாதிரி கொடூரங்காள் எமது சமூகத்தில் நடக்கின்றது.

          அத்தோடு child marriages ஜயும் இதே வகைக்குள் சேர்க்கலாமென நினைக்கின்றேன்.

          உலகிலேயே அதிகமான rapes நடப்பது ஆபிரிக்காவில். அங்கு கன்னியுடன் உறவுகொண்டால் எயிட்ஸ் குணமாகும் என்றவொரு மூடநம்பிக்கை இருப்பதால் பல சிறுமிகளும் குழந்தைகளும் இக்கொடூரத்திற்குள்ளாகின்றார்கள்.

          இவற்றையெல்லாம் உதாரணங்களாக் காட்டியது, இதுவெல்லாம் வெள்ளையரால் செய்யப்படவில்லையென்பதைச்சொல்வதற்கே.

          “வெள்ளைக்காரர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் இத்தகைய விபச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களாக இருப்பதற்கு அவர்களிடம் இருக்கும் அதிகப் படியான பணமும், இக்குழந்தைகளின் பெற்றோரின் வறுமையுமே காரணம். அரபு ஷேக்குகளும், இந்தியர்களும், இன்ன பிற இனத்தவரும் கூட இந்த நீசத்தனத்தில் பங்கு வகிப்பவர்கள் தான்.”

          completely agree with you.

        • வித்தகன்,

          உலகில் மைனர் பெண்களை மணமுடிப்பதில் அரபு ஷேக்குகளுக்கு ஒரு தனி இடம் உண்டு… இப்போ என் கேள்வி என்னவென்றால் ”அரபு ஷேக்கு” என்று சொல்வது ஒரு இனத்தை குறிப்பதாகாதா? இங்கே அரபு ஷேக்கு என்று குறிப்பது அவரின் இனத்தை கேவலப்படுத்தவா?

          தமிழ்நாட்டில் தான் சாதி பெயர் சொல்லி கிரிமினல் என பெரும்பான்மையாக ”மீடியாவில்” வருவதில்லை, (உண்டியல் திருடிய குருக்கள், சைக்கிள் திருடிய தீட்சிதர் என் வரும் , தென்மாவட்டங்களில் பார்ப்பனர் அல்லாத சாதிப்பெயர் வரும்) ஆனால் கேரளாவோ அல்லது வடக்கிலோ சாதி பெயரில்லாமல் ஒருவர் பெயர் மீடியாவில் வருவதே அதிசயம். கிட்டத்தட்ட அனைத்து குற்றவாளி கிரிமனல் பெயர்களும் கூட சாதி-இன பெயருடன் சேர்த்தே தான் இன்றளவும் விளிக்கப்படுகின்றன. வடநாட்டு செய்ததித்தாள்களின் தென்னாட்டு பதிப்பில் கூட இப்படித்தான். அவையனைத்தையும் இனவெறி – சாதிய வெறி என பார்க்கமுடியுமா?

          தமிழக தினசரிகளில் கூட பிகாரி குரூப் திருடர்கள், ஒரிசா கேங் கொள்ளையர்கள் எனவும் மதராஸி, மலையாளி என வடக்கிலும் திருட்டுத்தனங்கள் இன அடையாளங்களோடு பதியப்படுகிறது.. இவைகளை எப்படி பார்க்கவேண்டும்?

          என்னுடைய கருத்து என்னவென்றால் … குற்றவாளி வெள்ளைக்காரன் என்ற அடையாளப்படுத்துதல் மிகச்சரியானது. செய்திகளை விளக்கும் போது இத்தகைய விளக்கங்கள் தேவை. அதே நேரத்தில் பதிவை படித்த எனக்கு இது நிறவெறி சார்ந்த ஒன்றாக தெரியவில்லை.  .நீங்களும் ஆனாவும் சொல்லியிருப்பது பொலிடிகலி கரெக்ட்தான்.. ஆனாலும் கன்வின்சிங்காக இல்லை…

        • கேள்விக்குறி…. கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான தீவிரவாத நிகழ்வுகள் இஸ்லாமின் பெயரால் இஸ்லாமியர்கள் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்பவர்களால் நடந்து உள்ளன. அதற்காக அடுத்த முறை இதே காரணங்களுக்காக ஏதோ ஒரு நகரத்தில் ஒரு உணவகத்திலோ திரையரங்கிலோ குண்டு வெடிக்கும் போது (கண்டிப்பாக வெடிக்கும்) அதற்காக கைதாகும் குற்றவாளியை “முஸ்லீம் தீவிரவாதி” என்று எழுதி விடாதீர்கள். அப்போதும் நான் கண்டனம் தெரிவிப்பேன். காரணம் தீவிரவாதம் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ தனிச் சொத்து அல்ல, அம்மதத்தின் பெயராலேயே வன்முறை நடத்தப் பட்டாலும். தனித்தனிக்குற்றங்களுக்கு வெவ்வேறு இன அடையாளங்கள் வழங்கப் படுவது மேலும் மேலும் பிரிவினைவாதத்தை வளர்க்குமே தவிர பிரச்சினைக்கு உண்மையான தீர்வாகி விடாது. இந்துக்களும் யூதர்களும் சிக்கியர்களும் கிறித்துவர்களும் பௌத்தர்களும் தங்கள் மதங்களுக்காக கொலை செய்துள்ளார்கள். குண்டு வைத்துள்ளார்கல். சமீக ககல நிகழ்வுகளில் 90% மேலாக இஸ்லாமியர்கள் பெயர்களே இத்தகைய நிகழ்வுகளில் அடிபடுவதால் அவர்கள் இனத்தை குற்றத்தோடு இணைத்து எழுதும் உரிமை யாருக்கும் வந்து விடாது.

          இனத்தின் பெயரை வசைச்சொல்லிலோ குற்றச்சாட்டிலோ இணைப்பதற்கு மறுக்க முடியாத லாஜிக் வேண்டும். அவ்வகையில் நீங்கள்தான் என்னை கன்வின்ஸ் செய்ய வேண்டும்.

  8. கொடைக்கானல் ’கல்வி வள்ளல்’ கிழம் ஒருவன் தன் பள்ளியில் படித்த திபெத்திய சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறு்த்தியதால் கைது செய்யப்பட்டுள்ளான். இவர்களுக்கு வெறும் சிறையும், அபாரதம் மட்டும் கொடுக்காமல் அவர்களின் சொத்து, குடும்ப அட்டை, வாக்கு அட்டை, ம்ற்றும் “குடிமகன்” என்ற் தகுதிற்குறிய அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

  9. this is very dangerous virus,our government should take serious action against the bastard person and the response parents should want to watch the character of their child even in home and out side because the children does not have much knowledge about the unnatural sex happening strictly advice to the parents please to avoid the western modification in their life and keep away the children in front the television it cause big sex revolution to all soul.our Indian tradition was prodded one. parents think them-selfs

  10. ஏற்கனவே லீனா,மங்களூர்சிவா மேட்டர்ல வினவு பேரு கொஞ்சம் ரிப்பேர் ஆயிட்டதா நான் நினைக்கிறேன். இதுல ‘வெள்ளைப்பன்றி’ மற்றுமொன்றா?

    • சேலம் ஆனந்த், உங்கள் பெயரை பிளாகர் டேஷ் போர்டிலும், ஜிமெயில் செட்டிங்கிலும் மாற்றிப்பார்தீங்களா? (நீங்கதானே வேறொரு இடத்துல பெயரை எப்படி மாற்றுவது என்று கேட்டது? ) போகட்டும்.. லீனா விசயத்திலும் மங்களூரு சிவா விசயத்திலும் வினவுக்கு என்ன ரிப்பேர்? கொஞ்சம் புரியும்படியா எழுதுங்களேன்?

  11. லீனா சந்திக்கும் பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் பாலியல் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதால் எல்லா கம்யூனிஸ்டுகளும் அப்படித்தான் என்று பொதுமைபடுத்தி அவதூறு செய்வதற்கும்,நீங்க வெள்ளைபன்றி என்று எல்லா வெள்ளையர்களையும் பொதுமைபடுத்தி அவதூறு செய்வதற்கும் ஏதேனும் வித்யாசம் இருக்கிறதா?

    • லீனா மணி மேகலை உடன் பழகிய “போலிக் கம்யூனிஸ்ட்டுக்கள்” என்று திருத்திக் கொள்ளவும் …

      எல்லா வெள்ளையர்களும் என்று இங்கு எங்கேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா ?..
      வெள்ளைப் பன்றி என்பது வெள்ளை என்பது உயர்வு என்ற வெளி நாட்டினரின் (உங்களைப் போன்ற உள்நாட்டினருக்கும்) கருத்தை குத்துவதற்காகவே இங்கு பிரயோகப் படுத்தப் பட்டுள்ளது. அந்த ”உயர்வான” வெள்ளை நிறம் செய்த “உயர்வான” காரியங்களை குறிப்பிடுகையில் வெள்ளைப் பன்றி என்று குறிப்பிட்டதில் தவறு ஏதும் இல்லை, அனைத்து வெள்ளைப் பன்றிகளின் கொழுப்பை அடக்க வேண்டும் என்று போட்டிருந்தால் நீங்கள் கூறியதற்கு நான் ஆதரவு தருகிரேன். ஆனால் தவறு செய்தவனை தானே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். .

  12. வெள்ளைப்பன்றி என்ற சொல்லை ஆராய புகுந்தவர்கள் அம்மனித பன்றி என்ற குணாம்சத்தின் எச்சமே வெள்ளை என்ற பண்பு நிறம் எனப் புரிந்து கொள்வதுதானே மொழியறிவுள்ளவர்கள் அறிந்த ஒன்று. இதனைக் கூடப் புரிந்து கொள்ளாமல் லீணா என்றோ லாணா என்றோ லாவணி பேசுவது சரியா… மற்றபடி இது ஒரு இனத்தின் மீதான அவதூறு என எப்படி புரிந்து கொள்ள முடியும்.

  13. @கேள்விக்குறி ஆமாம்.அந்த ‘ஆனந்த்’ம் நான்தான்.பல சமயங்களில் எனக்கு பின்னூட்ட பெட்டி காணாமல் போய்விடுகிறது.Technical fault.எனவே தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

  14. வாழ்வுகொடுப்பது இறைவன் தொண்டு என அறிவித்து, எழுந்து நிற்க மூச்சுதிணறும் கிழடுகளும் பாலகர்களை மணம்புரிந்து அறியாப் பருவத்திலுள்ள அவர்கள்மேல் காமலீலைகள் புரிவதை, மதத்தின் பெயராலும், சமூகச் சட்டங்களான அரசுகளினால் கட்டுப்படுத்த முடியாத சட்டங்களையும் பன்படுத்தி இன்றைய நாகரீக உலகில் மனித இனங்கள் வாழ முற்படும்போது, வெள்ளைப்பன்றி, கறுப்புப்பன்றி, சிவப்புப்பன்றி என வேறுபாடுகள் காண முயல்வதால் இதற்கு முடிவுகாண முடியுமா?. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்பதுபோலத்தான் இதுவும்.

  15. வெள்ளையினத்தவர் அல்லாதவர்கள் யாரும் சுலபமாக வேறோர் நாட்டுக்குச் சென்று இவ்வாறான Sexual Exploitation, குறிப்பாக குழந்தைகளை, செய்யத்துணிவார்களா? ஒருவேளை சில மிருகங்கள் செய்தாலும் என்ன கூப்பாடு போடுவார்கள். வறிய நாடுகளில் உள்ள ஏழ்மையும், வறுமையும் அதிகமாக யாரால் exploit செய்யப்படுகிறது? குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது எல்லா நாடுகளிலும் அல்லது சமூகங்களிலும் உள்ள பிரச்சனை தான். ஆனால், நாடு விட்டு நாடு போய் குழந்தைகளை (உதாரணம் பிலிப்பைன்ஸ்) Sexual Exploitation செய்பவர்கள் யார்? 
    Tourism ஆபிரிக்கா தவிர்ந்த மற்றைய வறிய நாடுகளுக்கு தந்த இன்னோர் இலவச கொடை HIV. 

    ஆபிரிக்காவில் எய்ட்ஸ் பற்றிய மூட நம்பிக்கைகளைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓர் சமூகத்தின் மூட நம்பிக்கைக்கும், sexual exploitation வறுமையின் பெயரால் இன்னோர் நாட்டில் வேற்றினத்தவர் ஒருவரால் நடத்தபடுவதற்கும் உள்ள வேறுபாட்டை கொஞ்சம் விளக்குங்கள் Analyst? குற்றம் ஒன்றுதான். ஆனால், களங்கள் காரணங்கள் இடிக்கிறதே, ஏன்?

    • வெள்ளையினத்தவர் மற்றைய இனத்தவரை விட கூடிய பாலியல் வன்புணறும் tendency உடையவர்களென எங்கும் காட்டப்படவில்லை.இங்கு குறிப்பிட்டுல்ல குற்றவாளியான வெள்ளையினத்தைச் சேர்ந்தவன் அச்சிறுமிகள் ஆசியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக‌ வன்புணரவில்லை. அது ஒரு காரணமாகவே இருந்திருக்காது. அதனால் வெள்ளைப் பன்றி என்ற சொற்பிரயோகம் ஒரு தேவையற்ற racial remark என்பது என் கருத்து.
      The Coalition Against Trafficking in women (CATW, http://www.catwinternational.org/index.php) says that foreign paedophiles are usually American or European. Of 160 foreign pedophiles arrested on child sex-abuse charges in Southeast Asia between 1992 and 1994, the largest portion — 25% — were American, 18% German, 14% Australian and 12% English. chances are that அநேகமான எல்லாச் சுற்றுலாப் பயணிகளும் இதே developed நாடுகளிலிருந்தே வருவார்கள். அதனால் அநேகமானவர்கள் வெள்ளையர்களாகவே இருப்பார்கள். ஆனால் மற்றைய இனத்தவர்கள் இதில் எத்தனை சதவீதம் இருக்கிறார்களெனத் தெரியாது. உதாரணத்திற்கு (extreme example) வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% வெள்ளையர் 50% மற்றைய இனத்தவர் என்றும் இருந்து, 50% வெள்ளையரில் 40% மானோர் இக்கொடிய செயலைச் செய்பவர்கள் ஆனால் மற்றைய இனத்தவரில் யாரும் செய்வதில்லையெனில் நீங்கள் சொல்லலாம் வெள்ளையன் தான் செய்கின்றானென.

      Chances are more that,
      இக்குற்றவாளி தனது நாட்டிலேயே கிடைத்தால் வேறு சிறுமிகளை (வெள்ளையினச் சிறுமிகளை) வன்புணர்ந்திருப்பான். தாய்லாந்தில் அவனுக்கு மலிவாகவும் சுலபமாகவும் கிடைக்குமளவு அவுஸ்ரேலியாவில் கிடைக்காது. எம் சமூகத்தில் பிடிபடாமல் இதைச் செய்பவர்களுக்கு பணமும் வசதியும் இருப்பின் இவ்வாறு செய்யமாட்டார்களென உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா? எமது சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களைச் சுற்றியிருப்பவர்களோ வாயே திறக்க மாட்டார்கள் என்பதால் இம்மாதிரிக் கொடியவர்கள் மிகச் சுலபமாக‌த் தப்புகின்றனர். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. ஆனால் எம் சமூகத்தில் இது very prevalent.

      “ஓர் சமூகத்தின் மூட நம்பிக்கைக்கும், sexual exploitation வறுமையின் பெயரால் இன்னோர் நாட்டில் வேற்றினத்தவர் ஒருவரால் நடத்தபடுவதற்கும் உள்ள வேறுபாட்டை கொஞ்சம் விளக்குங்கள்?
      முதல் உதாரணம் மற்ரைய சமுகங்களிலும் வேறு வேரு விதங்களில் same crime நடபெறுகின்றதெனச் சுற்றிக்காட்டவே சொன்னேன்.

      Sexual exploitation in a similar manner என்று பார்த்தால்,
      The CATW also suggests that 4.6 million Thai men regularly, and 500,000 foreign tourists annually, use prostituted women, of which a third are minors.
      ஒருவன் வேறொரு நாட்டிலிருந்து அங்கு வந்து sexual exploitation செய்வதற்கும், அங்கத்தைய நாட்டவன் தனது நாட்டவர்களின் மீது செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? Should Thai men somehow held less responsible for their actions than the Australian man? If so, why?

      “Tourism ஆபிரிக்கா தவிர்ந்த மற்றைய வறிய நாடுகளுக்கு தந்த இன்னோர் இலவச கொடை HIV. ”

      இதில் நீங்கள் என்ன சொல்கிறீர்களென எனக்கு முழுதாக விளங்காமல் இருக்கலாமென நினைக்கின்றேன். உலகம் முழுவதும் எயிட்ஸ் பரவ முக்கியமாக வெள்ளையர் தான் காரணம் என்கிறீர்களா? எப்படி? வெள்ளையர் வறிய நாடுகளில் வந்து prostitutes ஜ‌ பாவிப்பதனாலா? Prostatitutes உடன் அவர்கள் மட்டும் தான் உறவு கொண்டார்களாயின் எப்படி எயிட்ஸ் இவ்வளவு தூரம் பரவியது? இந்தியாவில் ஒரு சராசரிப் பெண் HIV positive ஆக‌ வருவதற்கு காரணம், அவளது சுற்றம் அவளுக்குப் பார்த்து கட்டி வைக்கும் அவளது கணவன் (one resource (but there are many):http://www.newscientist.com/article/mg17723795.000-culture-shock.html?full=true). So இந்த ஆண்கள் செய்வது அந்த ஆண்கள் செய்வதை விட some how less severe என்கிறீர்களா?

  16. நான் பொதுவாகச் சொன்னாலும் அதை வெள்ளை இனத்தவரோடு சம்பந்தப்படுத்தியே பார்ப்பீர்கள் போல. :). சுற்றுலா என்கிற பெயரில் ஆட்கொல்லி நோய் (HIV) பரவுகிறது என்பது தான் நான் சொன்னது. வெள்ளை இனத்தவர்கள் தான் சுற்றுலாப்பயணிகளாக ஆட்கொல்லி நோயை பரப்புவதாக நான் எங்குமே குறிப்பிடவில்லை.

    ஆபிரிக்காவில் தான் ஆட்கொல்லி நோய் ஆரம்பத்தில் தோன்றியதாக சொல்கிறார்கள், இல்லையா?

    அடுத்து, “வெள்ளைப்பன்றிகள்” என்ற வார்த்தைப் பிரயோகம் என்னை அப்படி ஒன்றும் பாதிக்கவில்லை. தமிழ் சினிமாவில், “ஏன்டா பன்னி, பன்னிக்கு பொறந்தவனே, விருந்தாளிக்கு பொறந்தவனே….(Dehumanizing)” என்றெல்லாம் ஒருவர் மற்றவரை திட்டும் போது அதை நகைச்சுவையாய் எண்ணி சிரிக்கிற கூட்டம் தானே நாங்கள். அதற்கெல்லாம் குறைந்த பட்ச எதிர்ப்பையாவது காட்டாத போது இதற்காக மட்டும் ஏன் பொங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    மேற்குலகில் தங்கள் நாடுகளில் சிறுவர்களை துன்புறுத்துபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை போட்டு, தங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை நேர்த்தியாக கையாளுகிறார்கள். தங்கள் நாட்டிலுள்ள வக்கிரம் பிடித்தவர்களை வடிகால் தேட மட்டும் மூன்றாம் உலக குழந்தைகளிடம் அனுப்புவார்களா? அதுவும் சுற்றுலாப்பயணம் என்கிற பெயரில். வறிய நாடுகளின் வரவு செலவு திட்டத்தில் வராமலேயே GDP க்கு இந்த குழந்தைகள்/பெண்கள் விபச்சாரம் மூலம் கிடைக்கும் வருமானம் உதவுகிறது. அப்படிப்பட்ட அரசுகளை தட்டிக்கேட்க முடியாமல் “வெள்ளைப்பன்றிகள்” என்ற வார்த்தைப்பிரயோகத்திற்கு மட்டும் ஏன் கோபப்படவேண்டும் என்பது தான் எனக்கு புரியவில்லை.

    வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் கூட சொல்லத்தெரியாமல் பயங்கரவாதம் என்ற ஒன்று உலகையே ஆட்டிப்படைப்பதாக, “One World Order” ஒன்றை கொண்டுவரவேண்டும் என்று மேற்குலகமும் கூடவே இந்தியாவும் துடிக்கிறது. சட்டம், தர்மம், நியாயம் என எல்லாவழியிலும் வரையறுக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை தண்டிக்க ஏன் அப்படி ஓர் ஏற்பாடு இல்லை?

    மறுபடியும் நான் சொல்வது , உள்ளூர்க்காரன், வெளிநாட்டுக்காரன் யார் செய்தாலும் குற்றம் ஒன்றுதான். அது வக்கிரம் தான். முதலாமவர் அரசியல் செல்வாக்கு அல்லது பணத்தை வைத்து தப்பிக்கலாம். இரண்டாமவர் இவையிரண்டும் இல்லாமலேயே குற்றத்திலிருந்து தப்பிக்க முடிகிறது, எப்படி? யாராக இருந்தாலும் மனிதர்கள் தான். இதிலுள்ள அரசியலை புறந்தள்ளிவிட்டு இந்தப்பிரச்சனையை தனிமனித உடல், உள பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும் என்று யாராவது சொன்னால், அது வருத்தமளிக்கிறது.

  17. சிறுவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை தண்டிக்கும் சட்டங்களை நான் அறிந்தவரை உலகநாடுகள் எல்லாமே கொண்டிருக்கின்றன. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமைக்கும் தனிமனித சிந்தனைகளே காரணமாகவுள்ளது. உலகில் இன்றுள்ள அரசியல், ஆட்சிமுறைகள்கூட தனிமனிதர்களின் சிந்தனைவழியே நகர்த்தப்படுவதை அனுபவரீதியாகவே காணமுடிகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் இலங்கையில் மகிந்தசிந்தனை, தமிழ்நாட்டில் கருனாநிதியின் ஆட்சி இதனை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. தனிமனித உடல், உள பிரச்சனைகளை ஆரோக்கியமான வழிகளில் ஒருவன் வளர்ச்சிபெறச் செய்யும் நிலமைகளை அவனே உருவாக்கிக்கொள்ளும் வரையிலும், 90 வயதிற்கு அப்பாலுள்ளவர்களாலும் கொடூரங்கள் ஏற்படுவதை தடுக்கமுடியாது.

  18. ///கோவாவிலோ, மாமல்லபுரத்திலோ, இலங்கை கடற்கரையிலோ இல்லை தாய்லாந்திலோ இப்போது சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இவை எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்தாலும் சுற்றுலா வருமானத்தை மனதில் கொண்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன///

    மல்லபுரத்திலே சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. உண்மையா??

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க