privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!

மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!

-

பழமையை நினைவு கூறும் வெளிறிப்போன காகிதமாய் இருக்கும் தமிழக வரைபடத்தில் படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் ஆரம்ப டைட்டில் வரும்போது ஏதோ புதுமை என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சென்டரல் ரயில் நிலையத்தின் முன் இணையும் சலனக்காட்சி வரையோவியமாய் மங்கும் போது நிச்சயமான சலிப்பே மிஞ்சுகிறது.

1945ஆம் ஆண்டு சென்னைக் கவர்னரின் மகளாய் இலண்டனிலிருந்து வந்திறங்கும் நாயகி சென்னையின் சலவைத் தொழிலாளர்கள் குடியிருக்கும் வண்ணாரப்பேட்டையில் வாட்டசாட்டமாய் இருக்கும் பரிதியை (ஆர்யா) தற்செயலாய் சந்தித்து பின் காதல் வயப்படுகிறாள். அவளைச் சுற்றியிருக்கும் வெள்ளையர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கும் போது அவள் மட்டும் மனிதாபிமானியாய் இருக்கிறாள். இருந்தாக வேண்டும்.

47இல் வெள்ளையர்கள் வெளியேறும் தருணத்தில் தன் காதல் நிறைவேறாமல் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு இலண்டன் திரும்புகிறாள். அறுபது வருடம் கழித்து ஆர்யாவின் குடும்பத் தாலியை எடுத்துக் கொண்டு பேத்தியுடன் சென்னை வருகிறாள். சலவைத் தொழிலாளியான பரிதி ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களை உருவாக்கிவிட்டு இறந்து போகிறானாம். அவனது சமாதியில் கண்ணீர் விடும் அந்த வெள்ளைக்காரப் பாட்டியின் இளைமைக்கால நினைவுடன் படம் முடிகிறது.

இலண்டனில் அந்தப்பாட்டிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நேரத்தில் அவள் சென்னையில் ஒரு கடமை இருக்கிறதென்று கிளம்புவதும், சென்னையில் பேத்தியுடன் பரிதியைத் தேடி அலைவதும் உணர்ச்சி என்ற வகையில் டைட்டானிக்கை நினைவுபடுத்துகிறது. பின்னணி இசையும் டைட்டானிக்கின் தீம் மீயுசிக்கை கண்டிப்பாய் மீட்டு வருகிறது.

டோபிகனால் கிராமம், மழைப்பாட்டு, வெள்ளை அதிகாரியுடன் மல்யுத்தம் எல்லாம் லகானை நினைவுபடுத்துகிறது. மல்யுத்தத்தில் அந்தக்கால கட்டத்தில் இல்லாத காலடி பல்டிகள் “அன்டிஸ்பியூட்டட்” படக் காட்சிகளை சார்ந்திருக்கிறது. அப்போகலிப்டோ படத்தில் அம்புகள் விரட்ட வளைந்து வளைந்து ஓடுவது போல இங்கு ஆர்யா துப்பாக்கி தோட்டக்கள் விரட்ட அப்படி ஓடி தப்பிக்கிறார். அந்த வெள்ளைக்கார நாயகியின் பாட்டுக்களும், காட்சிகளும் கூட லகானில் பார்த்தவைதான். மணிக்கூண்டு சண்டைகள் ஜாக்கிசான் படத்தில் வந்தது போலவே இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விஜய் இப்படி பல படங்களைப்பார்த்து அதன் பாதிப்பில் ஒரு கதையை எழுதினார் என்று சொல்லவில்லை. அதே சமயம் படத்தின் கருவும், உணர்ச்சியும் உண்மையாகவோ, இயல்பாகவோ இல்லை என்பாதல் ஒரு வித செயற்கைத் தன்மையைத்தான் வலிந்து உணர்கிறோம். அதனாலேயே எல்லாக் காட்சிகளும் முன்னர் கூறிய படங்களை நினைவு படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன்?

படத்தில் நாற்பதுகளின் சென்னைக் காட்சிகளை காட்டுவதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்தக்கால மவுண்ட்ரோடு, சென்டரல் நிலையம், ட்ராம் வண்டிகள், நீராவி என்ஜின் ரயில்கள், அமிர்தாஞ்சன், லக்ஸ், கோல்கேட் விளம்பரங்கள், பழைய கார்கள் எல்லாம் சரிதான். இவையனைத்தும் கழுவி துடைத்த புதுமைப் பொருட்களாகத்தான் இரசிகனால் உணரப்படுகின்றன. இந்த அருங்காட்சியக உணர்வை வரவழைப்பதில் மிகவும் சராசரியான கதை முக்கிய பங்காற்றுகிறது.

காதல் கதையின் வரலாற்றுப் பின்புலத்தில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள் இருக்கின்றன. அவையும் கூட டெக்ஸ்ட்புக் வரலாற்றின் தரத்தில் கூட இல்லை. இறுதிக் காட்சியில் இந்தியா சுதந்திரம் வாங்கும் தருணத்தில் இரசிகன் காதலர்கள் எப்படியாவது சேரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.

கால்ப் மைதானத்திற்காக டோபிகனாலை அப்புறப்படுத்தும் அநீதியை எதிர்த்து பரிதியும் அவனது நண்பர்களும் வெள்ளையர்களைத் தாக்குவது கூட காதலின் நியாயத்திற்காகவே வலிந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அதிகாரிகள் காலனிய ஆட்சியினாலும், காதலுக்கு எதிரிகள் என்ற முறையிலும் வில்லன்கள். வண்ணாரப் பேட்டையின் குஸ்தி வீரனாக நாயகன். தமிழ் வெட்கத்தை என்னவென்றே அறிந்திராத வெள்ளையினப் பெண் நாயகி. எனில் இங்கே வரலாற்றுக்கு தேவையே இல்லை என்றாகி விடுகிறது.

இலண்டனில் இருந்து வந்த இளம்பெண் வண்ணாரப்பேட்டை நாயகனை காதலிப்பதான இயக்குநரின் துணிச்சல் அந்தக்கால எம்.ஜி.ஆர் ஃபார்முலாபடி இரசிகன் ஏற்றுக் கொள்வான் என்பதில்தான் படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சுண்டினால் சிவக்கும் வெள்ளை நிறப் பெண்ணை மாநிற இரசிகர்களான தமிழ் ஆண்கள் ஒன்றிப்பார்ப்பார்கள். கூடவே வெள்ளைப் பெண்ணை அடைய வெள்ளை ஆண்களை வீழ்த்தும் தமிழ் நாயகனது ஹீரோயிசத்திலும் இரசிகன் ஒன்றுவான் என்பது இயக்குநரின் மலிவான நம்பிக்கை. அது வீண்போகாமல் கூட இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு கதையின் தேவை என்ன? வழக்கமான தமிழ் ஃபார்முலாவையே ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் எடுக்கலாம் என்பதைத் தவிர இயக்குநர் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. அதனால்தான் இங்கு வரலாறு என்பது அருங்காட்சியக அலங்காரங்களாய் உறைந்து போகிறது. இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தின் வரலாற்று உணர்ச்சியை இயக்குநர் தன்னளவில் கற்றிருக்கவில்லை.

வெள்ளையர்களை வில்லன்களாக காட்டியிருப்பது கூட காதலின் நியாயத்தில்தான் நிற்கிறதே அன்றி காலனிய ஆதிக்கத்தில் அல்ல. காலனியாதிக்க காட்சிகளெல்லாம் சமூக தளத்திலல்லாமல் காதல் தளத்தில் நின்று கொண்டு பக்கவாத்தியமாய் அதுவும் அபஸ்வரமாய் துருத்துகின்றன. நாயகி கோரியபடி தமிழ்ப் பண்பாட்டை நாயகன் அறிமுகப்படுத்தும் பாடலில் பாம்பாட்டி, கழைக்கூத்தாடி, மசூதி செல்லும் இசுலாமியர்கள், ஐயர், இவர்கள் சர்வமத சகோதரத்துவமாக கட்டிப்பிடித்தல், யானை ஆசிர்வாதம், கடற்கரை, மாமல்லபுரம் என்று வரும் காட்சியிலேயே பண்பாடு என்றால் என்னவென்று இயக்குநர் எழுதியிருப்பது பளிச்சென்று தெரிகிறது. உண்மையில் இந்தப் பண்பாடு அற்ற பார்வை மேலோட்டமான, ஆதிக்கமான வெள்ளையறிவினால் முன்முடிவோடு கருதப்பட்ட சலிப்பூட்டும் பார்வை. ஆக வெள்ளையறிவினால் புனையப்படும் அறிவு தமிழ் இயக்குநரின் வழியே பிதுங்குகிறது என்றால் இன்னும் நமது படைப்பாளிகள் காலனிய அடிமைச் சிந்தனையிலிருந்து விடுதலையாகவில்லை என்றுதானே பொருள்?

1945களில் தென்னிந்திய வரலாறு என்பது திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், விடுதலை இயக்கம் என்று அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகள் மிகவும் ஊக்கத்துடன் இயங்கிய நேரம். தெலுங்கானா இயக்கம், கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம், பெரியார் செயலூக்கத்துடன் இயங்கிய காலம், காங்கிரசின் வழியாக ஆதிக்கத்தை தொடர நினைத்த மிட்டா மிராசுதார்கள், பத்திரிகைகள் அரசியல் அமைப்பாளனாய் வெளிவந்த தருணம், இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் புதுமைப்பித்தன் என்று எவ்வளவோ இருக்கிறது. இவை எதுவும் இயக்குநர் அறிந்திருக்கவில்லை அல்லது அவரது கதைக்கு தேவைப்படவில்லை.

அப்படி என்றால் இந்த அந்தக்கால காதல் கதைக்கு என்ன முக்கியத்துவம்? ஒரு வராலற்றுப் பின்புலத்தில் எழுதப்படும் கதை அந்த வரலாற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த வரலாற்றுணர்வு சமூகத்தை பாதித்திருக்கும் இயங்கியலை அறிந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் இதே காதல் கதையை இப்படியான மொக்கைப் பார்வையில் தந்திருக்க முடியாது.

வரலாறு எனும் மேடையில் ஒரு கதையை எழுதுவென்பது உண்மையில் சிரமமான ஆனால் மிகவும் விருப்பமான விசயம். இயக்குநர் இந்த இரண்டையும் ஒதுக்கிவிட்டு, தமிழ் சினிமா ஃபார்முலாவில் வரலாற்றை வெறும் தோற்றக் காட்சிகளாய் பயன்படுத்தி ஒரு கதை எழுதியிருக்கிறார். ஆதாலால் படம் வளர வளர நாமும் வரலாற்றுணர்வை இழந்து, வெரைட்டியான காட்சிகளில் வரும் காதல் கதையை ஒரு மாற்றத்திற்காக இரசிக்க நினைத்து பின்னர் அதுவும் இல்லாமல் இறுதியில் வெற்றுணர்வை மட்டுமே அடைகிறோம்.

தமிழ் படைப்பாளிகள் அநேகர் தமது படைப்புகளில் குறிப்பிட்ட பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல தேர்ந்த படைப்பாளி சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும். மதராசபட்டினத்தில் அந்த சூட்சுமம் இல்லை என்பதால் நாம் நிறைவான படைப்புணர்வு தரும் அனுபவத்தை பெறமுடிவதில்லை.

பிறகு?

ஆர்யா என்ற நடிகர் ஒரு நட்சத்திரமானது நிச்சயம் அதிர்ஷடம்தான். எல்லா தருணங்களிலும் அவரது முகம் ஒரே உணர்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறது. நாயகி பரவாயில்லை, வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் வெட்கத்தைக் காட்டி காதல் வயப்படுவதை செய்திருக்கிறார். கலை இயக்குநர் எல்லாவற்றையும் புதிதாக எழுப்பியிருக்கிறார். அதில் குறிப்பிட்ட காலகட்டத்தின் தேய்மானம் எந்த பொருட்களிலும் இல்லை. பாலிஷ் போடப்பட்ட அருங்காட்சியகத்தை படம் முழுக்க பார்க்கிறோம். மேலும் படத்தின் கருவுக்கு இதுதான் தேவைப்பட்டது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

இசையும், பாடல்களும், உரையாடல்களும் சலித்துப்போன வழமையான உணர்ச்சிகளையே மீட்டுவருகிறது. இயக்குநர் நேட்டிவிட்டிக்காக நிறைய மெனக்கெட்டு, தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்துதான் இந்தப்படத்தை போராடி எடுத்திருக்கவேண்டும். எனினும் அந்த போராட்டம் எதையும் நமக்கு அனுபவமாக வழங்கிடவில்லை என்பதால் ஆயாசம்தான் மிஞ்சுகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா எப்போதும், இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வாழ்க்கைக்கு  அருகாமையில் வரப்போவதில்லை என்ற நீதியை மதராசபட்டினமும் நிரூபிக்கிறது.
கஷ்டப்பட்டு பலரது உழைப்பில் எடுக்கப்படும் இத்தகைய படங்களை நோகாமல் விமரிசிப்பதுதான் வினவின் நோக்கம் என்று சிலர் இப்போதும் மறுமொழி இடக்கூடும். ஒருவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது முக்கியமல்ல, அந்த உழைப்பின் சமூக விளைவு என்ன என்பதே நம் கரிசனத்திற்குரியது.

திருடன் கூட ஜாலியாக திருடுவதில்லை. கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நோட்டம் பார்த்து, ரிஸ்க் எடுத்துதான் திருடுகிறான். என்னதான் ஊழல் செய்தாலும் அம்பானி சகோதரர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தக்கவைக்கவும், விரிவு படுத்தவும் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார்கள். என்னதான் குடும்ப ஆட்சிக்காக பாடுபட்டாலும் கருணாநிதி கூட கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார். ஆப்கானில் உள்ள அமெரிக்க இராணுவம் கூட சுடும் பாலைவனத்தில் கஷ்டப்ப்டடுத்தான் மக்களைக் கொல்கிறது. இவர்கள் அளவு நாம் கஷ்டப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனாலும் நாம் இவர்களை ஆதரிப்பதில்லையே?

 1. //இறுதிக் காட்சியில் இந்தியா சுதந்திரம் வாங்கும் தருணத்தில் இரசிகன் காதலர்கள் எப்படியாவது சேரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.//

  இந்தியா சுதந்திரம் vankiducha !?

  appadi vangina

  Yarukitta koduthanga
  Adhu Irukka illa sethuducha

 2. //இப்போதும் மறுமொழி இடக்கூடும். ஒருவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது முக்கியமல்ல, அந்த உழைப்பின் சமூக விளைவு என்ன என்பதே நம் கரிசனத்திற்குரியது.//
  நெத்தி அடி

 3. நீ என்ன மொண்ணை கூதியா? எப்ப பாரு நெகடிவ் ஆகவே எழுதிகிட்டிருக்கே?

 4. நாட்டுல எவ்வளவோ.. வேலை இருக்கு.. அதைவிட்டுட்டு.. ஏன் விமர்சனமெழுதுற வேலை.. ஒரு வேளை இதையும் வேற் யாராவது மண்டபத்தில எழுதி கொடுத்து போட்டதோ..

 5. ///தமிழ் சினிமா எப்போதும், இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வாழ்க்கைக்கு அருகாமையில் வரப்போவதில்லை///

  mudal muraiyaaga 100% correct statement sare…
  (oru kusumbu:: neer makkalidam arugamaiyil vara povathillai pola- endru eduthukalama…?- Kochikathinganna)

 6. //நாயகி பரவாயில்லை, வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும்தமிழ் வெட்கத்தைக் காட்டி காதல் வயப்படுவதை செய்திருக்கிறார்.//

  தமிழ் வெட்கம்…மயிறு….தமிழ் மூச்சு, தமிழ் குசு, தமிழ் ரோடு, தமிழ் கக்கூசு….டேய் நாயே…உலகத்தில் இருக்கிற எல்லா பெண்களுக்கும் இருக்கிற ஒருவகை பெண்மைத்தனம்தான்…அது ஒன்னும் தமிழ் என்கிற ஒரு மொழியை பேசுற ஆட்களுக்கு உடையது அல்ல.

  விமர்சனம் வழக்கம் போல மொக்கை.

 7. இந்தப் படத்தை எடுத்தவர் கம்யூனிஸ்ட்டாக இருந்தது போன்று இவ்வளவு குறைகளைச் சொல்லியிருக்கிறீர்களே? இயக்குனர் ஒரு பொழுது போக்கு படத்தைத்தான் கொடுக்க நினைத்திருப்பார். அவரளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

 8. //இறுதிக் காட்சியில் இந்தியா சுதந்திரம் வாங்கும் தருணத்தில் இரசிகன் காதலர்கள் எப்படியாவது சேரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.//

  ரசிகன் ஏங்குவதில் காரணம் இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பது தெரிந்த செய்தி, அதில் வரும் காதலின் முடிவு தெரியாத செய்தி.

 9. வினவும் கூட, தனது படைப்புகளில் குறிப்பிட்ட மனநிலைகளின் வழியே தான் சமூகத்தை பார்க்கிறது. ஆனால் ஒரு நல்ல தேர்ந்த படைப்பாளி சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதன் வழியில் விமர்சனங்களை எழுதுதல் வேண்டும். வினவு தன்னை அவ்விதம் ஆக்கி கொண்டு, பிறருக்கு எப்படி படைப்பை படைப்பது என்று சொல்லட்டும்.

  • நெருப்பு

   வினவும் கூட, தனது படைப்புகளில் குறிப்பிட்ட மனநிலைகளின் வழியே தான் சமூகத்தை பார்க்கிறது. ஆனால் ஒரு நல்ல தேர்ந்த படைப்பாளி சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதன் வழியில் விமர்சனங்களை எழுதுதல் வேண்டும். வினவு தன்னை அவ்விதம் ஆக்கி கொண்டு, பிறருக்கு எப்படி படைப்பை படைப்பது என்று சொல்லட்டும்.//

   அய்யா நெருப்பு சமுகத்தின் இயக்கத்தை முதலில் நீ புரிந்துக்கொள்.பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடு. ஒரு குறிப்பிட்ட மனநிலையில் நீங்கள் தான் உள்ளீர்கள் என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  • // வினவும் கூட, தனது படைப்புகளில் குறிப்பிட்ட மனநிலைகளின் வழியே தான் சமூகத்தை பார்க்கிறது. // ஆதாரம், எடுத்துக்காட்டுகள்….?

 10. இன்னும் வெள்ளக்காரர்களை வில்லனாக வைத்து படம் எடுக்கும் உள்நாட்டு இரத்த உருஞ்சிகளின் முகத்திரையை கிழித்த வினவுக்கு நன்றி

  • //இரத்த உருஞ்சிகளின்//

   Oh Adhan “Red Giant” nnu arthama !???

   Ippathan puriyuthu …. ennama yosikkiranaga

 11. Hello Mr ,iam read ur comments,films good ,first time tamil director try this film,only for congrats, c raavanan totally waste compare to this one ,i saw so many hindi film kisan ,Veer zara ,Laagan .ok,
  tollay film acting level is too awesome

 12. ரொம்பவும் காரம் குறைவாக இருக்கிறதே எனப் பார்த்தேன். இறுதிப் பத்தியில்தான் பதில் கிடைத்தது

 13. விளையாட்டு மேட்ச் பார்க்கும் நம் போன்ற ரசிகனுக்கு விளையாடும் விளையாட்டு வீரர்கள் இப்படி ஆடி இருக்கலாம், அப்படி ஆடி இருக்கலாம், அதை ஏன் பண்ணினாய்? இதை ஏன் பண்ணினாய்? என்று குறை மட்டுமே சொல்லத் தெரியும். நோக்கம் குறை சொல்வது அல்ல. ஆதங்கம்.ஆனால் களத்தில் இறங்கி பார்த்தால் தான் டங்குவார் கிழிவது தெரியும். குறைகள் சொல்லிக்கொண்டே இருந்தால் சொல்பவர்கள் மீது சலிப்புதான் வரும். நிறைகளை சொல்லி குறைகளையும் சொல்லினால் நன்று. “Nobody is perfect in this world ” என்று பழமொழி உண்டு. முடிந்தவரை இருக்கும் நல்லவைகள் பற்றி அன்பாக +ve ஆக சொல்லி உற்சாகபடுத்தலாமே?. அப்படி பண்ணு இப்படி பண்ணு என்பது யார் வேண்டுமானாலும் குடுக்கும் அட்வைஸ். நான் அப்படி பண்ணினேன். நீங்களும் அப்படி முயற்சி பண்ணலாமே? என்று நல்லவற்றை, தெரிந்தவற்றை, வெற்றியோ தோல்வியோ ஒன்றை பற்றி அறிந்த அன்பாக நல்ல ஆசானாக, நண்பனாக பகிர்ந்து கொள்வது அனுபவம். வினவு பண்ணுவது அட்வைஸ்-a ? அனுபவமா?.

  • என்ன positive ……………. கெட்டதை விமர்சனம் செய்யாமல் எப்படி திருத்திக்கொள்ள முடியும் . விளையாட்டு சிந்தனை அளவில் பாதிப்பது இல்லை
   ஆனால் சினிமா உளவியல் சம்பந்தப்பட்டது அது கலை கட்டாயம் விமர்சனம் தேவை .

 14. விளையாட்டு மேட்ச் பார்க்கும் நம் போன்ற ரசிகனுக்கு விளையாடும் விளையாட்டு வீரர்கள் இப்படி ஆடி இருக்கலாம், அப்படி ஆடி இருக்கலாம், அதை ஏன் பண்ணினாய்? இதை ஏன் பண்ணினாய்? என்று குறை மட்டுமே சொல்லத் தெரியும். நோக்கம் குறை சொல்வது அல்ல. ஆதங்கம்.ஆனால் களத்தில் இறங்கி பார்த்தால் தான் டங்குவார் கிழிவது தெரியும். குறைகள் சொல்லிக்கொண்டே இருந்தால் சொல்பவர்கள் மீது சலிப்புதான் வரும். நிறைகளை சொல்லி குறைகளையும் சொல்லினால் நன்று. “Nobody is perfect in this world ” என்று பழமொழி உண்டு. முடிந்தவரை இருக்கும் நல்லவைகள் பற்றி அன்பாக +ve ஆக சொல்லி உற்சாகபடுத்தலாமே?. அப்படி பண்ணு இப்படி பண்ணு என்பது யார் வேண்டுமானாலும் குடுக்கும் அட்வைஸ். நான் அப்படி பண்ணினேன். நீங்களும் அப்படி முயற்சி பண்ணலாமே? என்று நல்லவற்றை, தெரிந்தவற்றை, வெற்றியோ தோல்வியோ ஒன்றை பற்றி அறிந்த அன்பாக நல்ல ஆசானாக, நண்பனாக பகிர்ந்து கொள்வது அனுபவம். வினவு பண்ணுவது அட்வைஸ்-a ? அனுபவமா?.

  • இந்தத் திரைப்படத்தில் நீங்கள் பாசிட்டிவாகக் கருதிக்கொள்ளும் விசயங்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அது எம்மாதிரியான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறது? சமூகத்தில் என்ன வினையாற்றுகிறது? அந்த முடிவிலிருந்துதான் அது நல்லதா கெட்டதா என்பதைப் பார்க்க முடியும். கலையோ விஞ்ஞானமோ எதுவாயினும் இந்த அணுகுமுறையே சரியானது.

 15. ///வழக்கமான தமிழ் ஃபார்முலாவையே ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் எடுக்கலாம் என்பதைத் தவிர இயக்குநர் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை///

  Ithuthaan sari….

 16. @மார்க்கண்டன்,
  உங்கள் பதிவுகள் மூன்றில், மக்கள் பிரச்சினை குறித்த இரண்டு பதிவுகள் குறை சொல்லும் விதமாக இருப்பவை தாமே? நீங்கள் தான் அமெரிக்கா போல இங்கே கல்விவசதி இல்லை என்று அங்கலாய்க்கிறீர்கள். வினவு ஹாலிவுட் படம் என்று எதையும் தூக்கிப்பிடிக்கவில்லையே.

  @ முத்து, மோகன்
  திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஊடகவடிவமாக உள்ள நிலையில், பண்பாடு மற்றும் சிந்தனையை பாதிக்கிற கலையாக உருவெடுத்துள்ள நிலையில், அதன் நோக்கத்தையும் வடிவத்தையும் குறித்து விமரிசனம் செய்வது எப்படி தவறாகும்? ஊக்குவிக்க வேண்டும் என்றால் எதை எதற்காக ஊக்குவிக்க சொல்கிறீர்கள்? வினவில் சினிமா மற்றும் மற்ற கலைகள் மீதான விமரிசனங்களை கலாச்சார ரசனை மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக பார்க்க முயலுங்கள். மக்களுக்கான கலை எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

  • நல்ல படம் என்பது படத்தின் உள்ளடக்கத்தில் இருந்து தான் . மக்களுக்கு தேவை இல்லாத கலை ,மக்களுக்கு தேவையான கலை அழகாய் படைத்தாலும் குப்பையே

 17. அன்புள்ள வினவு, உங்களுக்கு சினிமா எடுப்பது மற்றும் டி.வி சேனல் தொடங்கும் ஐடியா எதுவும் இருக்கிறதா? அதிக மக்களை இதன்மூலம் சென்றடைய முடியுமே,அதனால் கேட்கிறேன்.

 18. விமர்சனம் அருமை.

  ஒரு காதல் கதையை, வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான முறையில் சொல்லலாம் என்று இயக்குநர் நினைத்தார் போலும். அது, அக்காலக்கட்டத்தின் வரலாற்று நிகழ்வான சுதந்திரம், போராட்டம் எல்லாவற்றையும் கேலிக்கூத்தாக்கிவிட்டது. “விடிந்தால் சுதந்திரம் கிடைக்கப் போகிறது, வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள்” என்று சிலர் கூறும்போது, நாயகனின் முகம் வாடுகிறது; அவள் இங்கேயே இருக்க மாட்டாளா என ஏங்குகிறான். அந்த ஏக்கம், நாம் இப்படியே அடிமையாக இருக்கக் கூடாதா – என்று இயக்குநரின் ஒன்-லைன் ஸ்டோரியாய் மிளிர்கிறது.

 19. இந்தப்படம் மட்டுமல்ல அங்காடித்தெரு வந்த போதும் இப்படித்தான் சொன்னார்கள், அப்ப்ரோச் செய்யச்சொல்லி, குறிப்பாக இந்தப்படத்தில் காதல் தன் நாட்டின் விடுதலையைவிட மேலானது, அப்படித்தான் கலை, இலக்கியம் காதல் உணர்வுகளுக்கும் எந்த சாயமும் பூசக்கூடாதென்கிறாகள். இதென்ன கொடுமை? நீங்கள் படம் எடுத்து வீட்டில் வைத்துக்கொண்டால் யாரும் விமர்சிக்க வில்லை. என்னோட படத்தைப்பாரு என்றும் தான் வித்தியாச்சமான இயக்குனன் என்றும் பெருமை பொங்கும் போது அது உண்மையான பொங்குதல் அல்ல பீரை குலுக்குவதால் வந்த பொங்குதல் என்ற உண்மையை சொல்ல ஏதோ பொதுவுடமையை கரைத்து குடிக்க தேவை இல்லை உண்மையை தெரிந்து கொண்டால் போதும். சாதி ரீதியாக மிக மிக பிற்பட்ட இடத்திலிருந்த ஒருவனுக்கு பார்ப்பானீயத்தின் கொலைக்கரங்களிலிருந்து மக்களை காப்பாற்ற தவித்த கிழவனின் சொற்கள் எவ்வித உணர்ச்சியும் தோற்றுவிக்காது வெள்ளைக்காரியின் உதட்டசைவிற்கான அந்தக்காதல் அழிந்து போகட்டும். உனக்காக செருப்படி வாங்கி கற்களால் துரத்தப்பட்ட அந்த மாமனிதனின் சொற்களுக்கில்லாததை அவள் காட்டிவிட்டாள் ஏன்னா இது கதை தானே, காதலுக்கு கண் இல்லாமல் போகலாம் மானம் வேண்டுமே, முக்கியமாக தன்மானம்.

  இதோ இந்த காதல் கதையை பாருங்கள்

  இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

  http://kalagam.wordpress.com/2010/07/13/722/

  எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது படத்தில் நண்பர் சொன்னார் “விடுதலை நேரத்தில் காதலன் கவலையோடு இருப்பானென்றும் காதலி போய்விடுவாளென்ற கவலையில் ஆழ்ந்திருப்பதாக” “ஒரு வேளை அது போலிசுதந்திரம் என்று அவனுக்கு தெரிந்தாலும் தெரிந்து இருக்கலாம்”

 20. நான் விமர்சனம் பண்ணகூடாது என்று சொல்லவில்லையே.! விமர்சனம் பண்ணும் முறையைத் தான் சுட்டிகாட்ட விரும்புகிறேன். கதை சொல்வதை விட அதை காட்சிபடுத்துவது கஷ்டம். படத்தில் நீங்கள் சொன்ன குறைகள் உள்ளதை ஒப்புகொள்கிறேன். ஆனால் நிறைகளையும் சொல்லலாமே? 1 படம் பார்க்க போகும் போது நிறைய எதிர்பார்ப்பு, என்ன குறைகள் உள்ளன என்று பார்த்தால் சிறு குறை கூட பூதாகரமாக தான் தெரியும். நான் இந்த பட விமர்சனம் பற்றி மட்டும் சொல்லவில்லை. உங்கள் எல்லா அணுகுமுறைகளும் தவறு என்று நினைக்கிறேன். காரணம், எதை பார்த்தாலும் அதில் என்ன குறை உண்டு? என்ன தவறு உண்டு? எப்படி குறை கண்டுபிடிக்கலாம்? என்று தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்று தோன்ற வைக்கிறீர்கள். குறை சொல்லும் போது நிறைகளையும் சொல்வதுதானே நல்ல விமர்சனம். 1 நிறை கூட இல்லை என்று இருந்தாலும் இதுவரை வந்த 1 படத்தில் 1 நிறை கூடவா உங்களுக்கு தெரியவில்லை? அல்லது சொல்லவில்லையா? எல்லாவற்றிலும் ஏன் குறைகளை மட்டும் பார்க்கிறீர்கள்? உங்களுடைய இந்த அணுகுமுறை தான் சலிப்படைய வைக்கிறது. 1 விமர்சனத்தில் கூட எங்களை போல ரசிகர்களை சலிப்படைய வைக்கும் நீங்கள் 1 முழு திரைப்படம் உங்களை சலிப்படையாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்? மன்னிக்கவும். உங்கள் மனம் புண்படும்படி எழுதிருந்தால்.

  • அன்பான முத்து உங்கள் விமரிசனங்களை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறோம். ஆனால் உங்கள் விமரிசனம் அதன் முழுமையில் தவறு என்று வாதிட்டால் அது மட்டும் நெகட்டிவாக மாறிவிடுவது ஏன்? ஒரு முழுத்திரைப்படம் அதன் படைப்பு என்ற நோக்கில் பார்வையாளனுக்கு என்ன அனுபவத்தை தருகிறது என்ற முழுமையில்தானே இந்த விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது? பகுதி பகுதியாக படத்தில் இருப்பதாக நீங்கள் கருதும் நல்ல விசயங்கள் முழுமையில் என்ன சொல்லவருகின்றது என்பதுதானே முக்கியம்? நல்ல நடிப்பு, அழகான அரங்குகள், இனிமையான பாடல்கள், நேர்த்தியான படத்தொகுப்பு என்ற விசயங்களெல்லாம் நமக்கு என்ன உணர்வை அல்லது கருத்தை தருகின்றது என்பதையே வினவு விமரிசனம் நோக்குகிறது.

   பொழுதுபோக்கு, ஏதோ கொஞ்சம் இரசிப்போம் போன்ற சமாதானங்களைச் சொல்லி சொல்லியே இன்னும் எத்தனை நாள் நமது இரசனையை வளரவிடாமல் செய்யப் போகிறோம்?

   • //நல்ல நடிப்பு, அழகான அரங்குகள், இனிமையான பாடல்கள், நேர்த்தியான படத்தொகுப்பு என்ற விசயங்களெல்லாம் நமக்கு என்ன உணர்வை அல்லது கருத்தை தருகின்றது என்பதையே வினவு விமரிசனம் நோக்குகிறது.
    பொழுதுபோக்கு, ஏதோ கொஞ்சம் இரசிப்போம் போன்ற சமாதானங்களைச் சொல்லி சொல்லியே இன்னும் எத்தனை நாள் நமது இரசனையை வளரவிடாமல் செய்யப் போகிறோம்?//

    ஆமாம் ஆமாம் .. கோடி கோடிyai பணம் போட்டு படம் எடுபவனுக்குதான் தெரியும் அந்த உணர்வு எப்படிப் பட்டதென்று.
    நோவாமல் விமரிசனம் எழுதுரவனுங்களுக்கு எங்க தெரிய போவுது.. ..

    • முட்டாஊ அண்ணே , ஜவுக்கியமா???
     கோடிக்கணக்கா பணம் போட்டு ஓட்டல் நட்தறான், சாப்பாட்டுக்கு நீங்க போறீங்க… சார், வாங்க சாருன்னு வணக்கம் சாருன்னு தடபுடல் மரியாதையன்ன, நாற்காலிய இழுத்து உக்காற வைக்குறதென்ன, அளவான லைட்டிங்கு என்ன, உருத்தாத சில்லிப்போட ஏசியன்ன, கையுறை போட்ட பணிவான சப்ளையரென்ன, மெல்லிய கஜல் மியூசிக்கென்ன, நாசுக்கா சாப்புடற மக்களென்ன…. இதெல்லாத்தும் நடுவுல உங்கள சைசா கவனிச்சு, நல்ல தலவாழையில போட்டு, தும்பைபூ மாதிரி அரிசியும் போட்டு, சைடுல ஊருகாயளவுக்கு, இத்துனூட்டு மலத்தை வச்சா.. தொட்டு திப்பீங்களா இல்ல செவுள திருப்புவீங்களா? உண்மையை சொல்லோனும்… சொல்லுங்கண்ணே

 21. சினிமா விமர்சனம்

  – விகடன் விமர்சனக் குழு

  ஆங்கிலேய அதிகாரியின் மகளுக்கும், தமிழ் சலவைத் தொழிலாளிக்கும் காதல் நிகழும்
  களம் பழைய ‘மதராசபட்டினம்’!

  இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு சென்னை வருகிறார் அம்மாகாண கவர்னரின் மகள் ஏமி ஜாக்சன் (அறிமுகம்). கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக சலவைத் துறையை ஆக்ரமிக்கிறார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். இதை எதிர்க்கும் ஆர்யா மீது அதிகாரிகளுக்குக் கோபம். அதே நேரம், ஏமிக்கு ஆர்யா மீது காதல் பிறக்கிறது. இது தெரிந்ததும், தனது கடைசி ஆணையில், ஆர்யாவைச் சுட்டுப் பிடிக்க உத்தரவிடுகிறார் ஏமியின் அப்பா. ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் காதல் ஜோடி தங்களையும் காதலையும் காத்துக்கொள்ள சென்னை வீதிகளில் ஓடுகிறார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் காதலுக்கு?!

  பழைய மதராசபட்டினம் பின்னணியில் நெகிழ்ச்சியான ஒரு காதல் கதை. ‘ச்சே… எப்படிப்பட்ட சென்னையை மிஸ் செய்துவிட்டோம்!’ என்று ஏங்க வைக்கும் வகையில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரமாத மான உழைப்பினைக் கொட்டியிருக்கிறார்கள் படக் குழுவினர். கச்சிதமான செட்டுகள், உடைகள், உடல் மொழி என அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் பொருத்தமான ஒரு லிங்க் மூலம் 60 வருடங் கள் முன் பின் பயணிப்பது இயக்குநர் விஜய்யின் கதை சொல்லும் பாணியில் அழகு.

  முறுக்கிய உடல், முறைக்கும் கண்கள் என குஸ்திக்குக் களம் இறங்கும்போது மிரட்டுகிறார் ஆர்யா. ‘தேங்க்யூ’ சொல்லத் தெரியாமல் அதை ‘மங்க்யூ’, ‘டிங்க்யூ’ என்று மனனம் செய்வதும், ‘ஏ, பி, சி, டி’ கற்றுத்தரும் வாத்தியாரிடம், ‘எ, ஏ’, ‘பி, பீ’ என்று ‘அ, ஆ’ போல திருத்தம் செய்வதுமாகக் காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிகாலைப் புல்வெளிப் பனித் துளிபோலப் பரிசுத்தமான அழகு ஏமியிடம். கனிவு ததும்பும் கண்களும் இந்தியர்களைப் பார்க்கும்போது உற்சாகமாகும் உடல் மொழியும்… கிளாஸிக்! ஆங்கில வார்த்தைகள் தெரியாமல் ஆர்யா முழிக்கும்போது, ‘மறந்துட்டியா?’ என்று மழலைத் தமிழில் ஏமி கேட்குமிடம்… காதல் ஹைக்கூ!

  வி.எம்.சி ஹனீஃபாவின் கடைசிப் படம். மனிதர் மறக்க முடியாதபடி நடித்துக் கொடுத்திருக்கிறார். ‘எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது’ என்று ஏமி ஆர்யாவிடம் சொல்வதை, ‘உன் கழுதையப் பிடிச்சிருக்காம்’ என்று மொழிபெயர்ப்பது, ‘ஐந்து தாய்(!) மொழிகள் தெரியும்’ என்று உதார்விடுவது, கேமராவைப் பார்த்ததுமே உறைந்து நின்றுவிடுவது என்று சிக்குமிடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹனீஃபா. குஸ்தி வாத்தியார் நாசர், ‘குண்டு’ப் புரளி கிளப்பும் அப்பாவி, ஆர்யாவின் தெலுங்கு பேசும் நண்பன், ‘ஏ டு இஸட்’ சர்வீஸ் ஆள், குடிகார ஓவியர் என அக்கால – இக்காலக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு டீடெய்ல்!

  படத்தின் பலங்களில் ஒன்று ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. நா.முத்துக்குமார் வரிகளில் ‘வாம்மா துரையம்மா’, ‘மேகமே… ஓ மேகமே’, ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடல்கள் மனம் மயக்கும் மெலடிகள். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பலமடங்கு உயர்த்தி இருக்கிறது. பழைய மதராசபட்டினத்தைக் கிட்டத்தட்ட மீள் உருவாக்கம் செய்திருக்கும் கலை இயக்குநர் செல்வகுமாரின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்!

  வைர டாலருக்குப் பதில் தாலி, கப்பலுக்குப் பதில் கூவம் படகு, வயதான மூதாட்டியின் ஃப்ளாஷ்பேக் என்று ‘டைட்டானிக்’கைத் தமிழ்ப்படுத்திய தொனியைத் தவிர்த்திருக்கலாமே. அதிலும் ஊகிக்க முடிந்த முடிவை நோக்கிப் பயணிக்கும் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘துரையம்மா அறக்கட்டளை’ காட்சிகளில் செயற்கைத்தனம்.

  இடைவேளை முடிந்ததும் துவங்கும் ஆர்யா – போலீஸ் சேஸிங்… அடேங்கப்பா… எவ்வளவு நீளளளம்?

  தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் ‘சென்னை’ மீது காதல் பூக்கவைத்த வகையில், இந்த ‘மதராசபட்டினம்’ வெற்றிதான்

 22. வினவு, விகடன் விமர்சனத்தை இங்கு அனுமதித்துள்ளீர்களே. இதனால் ஏதும் சட்டசிக்கல் வராதா?

 23. intha maathiri cinema vai ellaam communistukal paakka koodaathu avarkal 1917 kkum 1991 kkum idaippatta russiya padangalai mattume paarkka vaendum athu thaan “puratchikku” idum “viththu”

 24. ஒங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு அடுத்தவனை குறை சொல்லிட்டே இருக்க வேண்டியது… ஒங்களுக்கு எந்த படம் தான் புடிச்சிருக்கு? சொல்லுங்க..
  மதராசபட்டினம் உண்மையிலேயே நல்ல படம் தான்… உங்க பார்வை தான் சரி இல்ல…
  எவனாவது ரஷ்யாகாரன் குய்யா, முய்யானு பேசி ஹீரோவா நடிச்சா, படம் சூப்பரு, டூப்பருனு சொல்வீங்க..
  தமிழ் வெட்கம்னா எப்படி இருக்கும்னு சொல்றீங்களா?

  //திருடன் கூட ஜாலியாக திருடுவதில்லை. கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நோட்டம் பார்த்து, ரிஸ்க் எடுத்துதான் திருடுகிறான்.//

  என்னவொரு கண்டுபிடிப்பு? உங்களுக்கு நோபல் பரிசு தான் கொடுக்கணும் போங்க… ஓ, அது கூட ரஷ்யாகாரன் கொடுத்தா தான் வாங்குவீங்க இல்ல?

  வாழ்க ரச்சியா… வளர்க புரச்சீ…

 25. மதராசபட்டினம் – ‘நக்கீரன்’ விமர்சனத்திற்கு ஒரு மறுகுரல் http://www.frames4you.blogspot.com/

  இது மதராசபட்டினம் படத்திற்கு ‘நக்கீரன்’ இணைதளத்தில் வெளியான விமர்சனத்திற்கு நான் கொடுக்கும் ஒரு மறுகுரல். நக்கீரன் விமர்சனத்தை கீழ்காணும் ‘லிங்’கின் மூலம் பார்வையிடலாம்.

  http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=50

  விமர்சனத்தில் நீங்கள் படத்தின் கதையை சொல்லியிருந்த விதம் மிகவும் அபத்தம்… இப்படி சொல்வதானால் உலகின் எந்த மிகச்சிறந்த படத்தின் கதையையும் மோசமாக சொல்லாம்.

  ஹீரோ எதுவும் செய்ய வில்லை என்கிறீர்.. நீங்கள் என்ன எதிர்பாரக்கிறீர்கள்.. வெள்ளையனை ஒற்றை ஆளாய் நின்று டைவ் அடித்து, ட்ராம் வண்டி மேல் எகிறி குதித்து, ஓட ஓட விரட்டி, வெள்ளையனிடம் இருந்து சுதந்திரத்தை பிடுங்கி மக்களுக்கு கொடுத்து விட்டு, வெள்ளையர்களை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்றா…

  முதலில் ஒன்றை புரிந்த கொள்ளுங்கள்.. மதராஸபட்டினத்தை பொறுத்தவரை ஹீரோ அதன் இயக்குனர் விஜய் தான். இந்த கதையில் ஒரு இளைஞன்.. சலவைத் தொழிலாளி ஒரு வெள்ளைக்கார பெண்ணை காதலிக்கிறான். அவ்வளவே அவன் வேலை. மேலும் அவன் மல்யுத்த வீரன் ஆகவே அவனுக்கு ஒரு வாய்ப்பு.. வெள்ளைக்காரனுடன் மோதி அவர்கள் இடத்தை மீட்க கிடைக்கிறது. அதை செய்கிறான். மற்றபடி அவன் ஒரு சாதாரண இளைஞன். எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை. கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதால் ஹீரோ கொடியை ஏந்திக் கொண்டும், வெள்ளையனை விரட்டி அடிக்க வேண்டும், போராட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அப்படி அந்த கால்த்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்த்திருந்தால் வெள்ளையனால் இவ்வளவு வருடம் தாக்குபிடித்திருக்கவே முடியாது. அப்படி இல்லை என்பது தான் வருத்தமே. அதுவும் போக அவன் வெள்ளையன் மீதுள்ள வெறுப்பை அவ்வப்போது காட்டத்தான் செய்கிறான்.. அவனால் முடிந்த அளவுக்கு.. கார் பின்னால் போகும் போது தனது கழுதையை மட்டும் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். அவர்களுக்கு சேவகம் பண்ணிக்கொண்டிருக்க வில்லை. மேலும் அவன் எமியை தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்னாக மட்டும் தான் பார்க்கிறானேயொழிய வெள்ளைக்காரியாய் அல்ல.

  சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பல வழிமுறைகளில் பங்காற்றினார்கள்.. அத்தனை தலைவர்களை பற்றியும் சொல்வதற்கும், காட்டுவதற்கும் இது சுதந்திர போராட்டம் பற்றிய படம் இல்லை. இதன் நோக்கம் காதல். முன்பு சொன்னது போல் கதைக்களம் தான் சுதந்திர போராட்ட காலம். அதனால் அவரைப் பற்றி சொல்ல வில்லை இவரைப்பற்றி சொல்லவில்லை என்பது தேவையில்லாத பேச்சு. இந்த படத்தில் எந்த தலைவரையும் ப்ரேமில் காட்டவில்லை என்பதே அதற்கொரு சரியான ஆதாரம். ஏனெனில் இங்கு நோக்கம் அதுவல்ல.

  ”பகத்சிங் ஆதரவாளராக வரும் பருதியின் தோழர், ஆங்கிலேயரிடம் அகப்பட்டு துப்பாக்கியால் சுடப்படும் போது பயப்பட்டு பீதி அடைவதாக காட்டியுள்ளார் இயக்குனர்..” இதிலென்ன தவறு இருக்கிறது.. மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும்.. மேலும் துப்பாக்கியால் சுடும் போது நெஞ்சை நிமிர்த்திக் காட்ட அவர் பகத்சிங்கின் ஆதரவாளர் தானே ஒழிய, பகத்சிங் கிடையாதே. இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. ஆர்யா தைரியமாக துப்பாக்கி முன் நிற்கிறாறே என்றால்… காதல் இதுவல்ல.. இதைவிட மடத்தனத்தையும் செய்யத் தூண்டும்… காதல் வந்துவி்ட்டால் அங்கு அறிவுக்கு என்ன வேலை இருக்கிறது.. புரட்சிக்காரனை விட காதலில் மரணம் அடைபவன் தான் அதிகம் (பேப்பரை பாருங்கள் சார் புரியும்) புரட்சியாளனை எதிரிதான் கொல்வான்.. காதலனை அந்த காதலே கொல்லும்.

  நண்பனை, அவன் காதலை காப்பாற்றத்தானே ‘பகத்சிங் வாழ்க’ என்று சொன்னார்… வேறு தவறான தொழில் செய்பவர்களை தப்பிக்க வைக்க அல்லவே.. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பகத்சிங் இரு உயிர்கள், காதலர்கள்.. அதுவும் ஒரு இந்தியனை நம்பி வந்த ஆங்கிலேயப் பெண்ணை காப்பாற்ற தன்பெயரை பயன்படுத்தியதற்காக பகத்சிங் கோபித்துக் கொள்ள மாட்டார்..

  எப்போதும் தனக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள் என்று ஏற்படுத்திக் கொண்டோ அல்லது யாராவது சொன்னதை அதன் உண்மையான அர்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் கூட அறியாமையே… உங்கள் விமர்சனம் அதைத்தான் இங்கு காட்டுகிறது… பெரியார் சொன்ன சீர்திருத்தம் சாதி விட்டு சாதி கல்யாணம். இங்கு மதம், இனம், நாடு எல்லாம் கடந்த ஒரு காதலுக்காக அந்த தலைவர்கள் பெயரை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

  காதல் என்று வந்த பின் ஒடுக்கப்பட்ட இனம், தாழ்ந்த இனம், மேல் வர்க்கம்… இதெல்லாம் ஒன்றுமில்லை…

  மேலும்,

  மதராஸபட்டினம் படத்தில் இருந்த நுட்பமான விஷயங்களை நிறைய பேர் கவனிக்க தவறியுள்ளனர். தேவையில்லாத சில குறைகளையும் சொல்கின்றனர்..

  ”லகான் படத்தை பார்த்து காப்பியடிச்சிருக்காம்பா” – இது சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.. காரணம் லகானில் வெள்ளையனுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி வரியை நீக்குவார்கள்… இதில் மல்யுத்தம் செய்து தங்களது நிலத்தை மீட்பார்கள்… இதிலும் அந்த படத்தில் வருவதைப் போன்றே ஆடையணிந்திருக்கிறார்கள்…

  இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. அப்போது ஏறத்தாழ இந்தியா முழுவதும் இதே போன்ற ஆடையைத்தான் அணிந்திருந்தார்கள்… அதன் பின் இரண்டிலுமே விளையாடுகிறார்கள்… இரண்டிலும் கிரிக்கெட் விளையாண்டால் சொல்லலாம்.. இதில் நாயகன் ஒரு மல்யுத்த வீரன்.. அவன் அதை செய்வதில் தப்பில்லை. லகானிலாவது ஆங்கிலேயரின் விளையாட்டான கிரிக்கெட்டை நம்மவர்கள் வேறுவழியில்லாமல் முறையான பயிற்சி இல்லாமல் விளையாடுவார்கள்.. ஜெயித்தும் விடுவார்கள். இதில், இவன் முறையாய் பயிற்சி பெற்ற சிறந்த வீரன் என்று தான் காட்டுகிறார்கள்.. அற்கேற்ற உடல்வாகும் (அந்த வெள்ளையனை விட நல்ல உடல்வாகு) இவனிடம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவன் அதை விளையாடி ஜெயிக்கிறான் என்று காட்டுவதில் தப்பில்லையே.. மேலும் அவன் அப்போதும் கூட முறைப்படி விளையாடுவதாகத் தான் இயக்குனர் காட்டுகிறார். ஒரு விறுவிறுப்புக்காக பறந்து பறந்து சண்டை போடுவது கிடையாது. இறுதிக்காட்சியில் மணிக்கூண்டிற்குள் அவன் சண்டை போடும் போதும், வெள்ளைக்காரனை தூக்கி வீசும் போதும் அவன் மல்யுத்த பாணியிலேயே சண்டை செய்கிறான். எங்கும் லாஜிக் மீறல் இல்லை.

  அதன் பின்,

  ”படம் டைட்டானிக் மாதிரி இருக்கு”

  சில விஷயங்கள் ஒத்து போவது உண்மைதான். டைட்டானிக்கில் பலவருடங்களுக்கு பின் அந்த கப்பலை கண்டெடுப்பதை பார்த்த பெண் பழைய நினைவுகளால் தூண்டப்பட்டு கப்பலை பார்க்க வருகிறாள். இங்கு தான் வாழ்வின் விளிம்பில் உள்ளோம் என்று தெரிந்த பெண் தன் பழைய காதலனை பார்க்க (தனக்கு சொந்தமில்லாத(!) தாலியை அவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க) இந்தியாவிற்கு வருகிறாள்… இரண்டிலும் வெளிநாட்டு வயதான பெண், என்பதும் அவள் ஒருசில காட்சிகளில் இரு ஹீரோயின்களும் தொப்பியை ஒரே மாதிரி வைத்திருக்கிறார்கள் என்பதும், ஒரு காட்சியில், ப்ளாஸ்பேக் முடிந்து தற்போதை நிகழ்வுக்கு திரும்பும் ட்டிரான்ஸெக்ஷன் எஃபெக்ட் இளம் வயது பெண்ணின் கண்களில் ஆரம்பித்து வயதான பெண்ணின் கண்ணில் முடிவதும், ஹீரோயின் படுத்துக் கொண்டு ஆங்கிலப் பாடல் பாடுவதுமாக ஒருசில ஞாபகப்படுத்தும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் கதையின் மையம் வேறு.. கதையும் வேறு.

  ஆனால் பொக்கிஷம் படம் போல் உள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்… என் புருஷன் மாதிரியே தான் பக்கத்துவீட்டுக்காரனும் சட்டை போட்டிருக்கான் அதனால அவனும் என் புருஷன் தான் என்பது போன்றது. இரண்டும் பழைய காலத்தில் நடக்கும் கதை என்பதால் இரண்டு படமும் ஒன்றாகுமா?

  அதுபோக, இந்த விமர்சனத்தில் ஒரு வார்த்தை கூட அதன் டெக்னாலஜி பற்றி இல்லை. பழைய சென்னையை ஒரு குறைந்த பட்ஜெட்டில், போதுமான டெக்னாலஜி வசதிகள் இன்றி உறுத்தாமல்,
  சிறப்பாக செய்திருப்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை…

  எமி இந்தியா வரும் போது ஏர்போர்டில் அவளது சூட்கேஸில் ஏர்லைன்ஸால் மாட்டிவிடப்படும் ‘Tag’ ஆக இருக்கட்டும், ஹனிபா உடம்பு சரியில்லை என்று படுத்திருக்கும் போது அருகில் இருக்கும் அமிர்தாஞ்சன் பாட்டிலாக இருக்கட்டும், மவுண்ட் ரோட்டில் இரு சாலைக்கும் இடையே கயிறு கட்டி நடுவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தெருவிளக்கு, துப்பாக்கி, அரசு முத்திரை, வண்ணான் தாளி, தண்ணீர் கொண்டு போகும் கலன்கள், பித்தளைக் குடங்கள், பழைய சைக்கிள், மின்சாரகம்பங்கள், வேஷ்டி கட்டும் முறை (சாதாரணமாய் கட்டும் போதும் ஒரு மாதிரியும், குஸ்தி போடும் போது இறுக்கமாய் பிடித்து இழுத்தாலும் அவிழாதபடி ஒரு மாதிரியும் கட்டுவார்கள்) மேலும் ரயில், கார், ரயில்வே ஸ்டேஷன், விளம்பர பலகைகள், பூட்டுகள், புத்தகங்கள், செருப்பு, காடா துணி ஆடைகள், என செட்ஒர்க்கில் அவ்வளவு டீட்டெயில்கள்…

  மேலும் உறுத்தாத மொழிவழக்கு, திறனாக கையாளப்பட்ட பின்புலம், (இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது பற்றி அறிந்த அப்போதய ஆள் விமானம் கடந்து போகும் போதெல்லாம் “குண்டு போடுறாங்க, குண்டு போடுறாங்க” என்றபடி ஓடுவது, நம்பி (ஹனிபா) போன்ற ஒரு சிலர் வெள்ளையர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு தான் வசதியாய் வாழ்வது, சுதந்திரம் சோறு போடுமா என்று வறுமையில் வாழும் மக்கள்) என்று ஒவ்வொரு சிறு விஷயத்திலும் டீட்டெயில் காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். அவரது முந்தைய படங்களில் இருந்து இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் தான்.. அதற்காகவே இவரை மிகவும் பாராட்டலாம்.

  மேலும், தனியறையில் எமியும், ஆர்யாவும் இருக்கும்போதாகட்டும், இருவரும் இன்னலுக்கு பின் சந்திக்கும் இடத்திலாகட்டும் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் பெயரளவுக்கு கூட படத்தில் ஆபாசத்தைக் காட்டவில்லை. வெள்ளைக்காரி நடித்திருந்தும் முத்தக்காட்சி கூட இல்லை. இந்த “நல்லபிள்ளை தனத்தை” இவரது முந்தைய படங்களிலும் காணலாம். (தைரியமாக வயசு பிள்ளைகளுடனும், வயதானவர்கள் பி்ள்ளைகளுடனும் பார்க்கக் கூடிய (வேண்டிய) படம்.

  விஜய் சார், இதோ மக்கள் உங்களை நல்ல இயக்குனர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் விமர்சனங்களும், பாரட்டுகளும் குவிய ஆரம்பித்துவிட்டதே அதற்கு சாட்சி.. உங்கள் வீட்டு ஷோக்கேஸையும் காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.. விருதுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

 26. விமர்சனம் சிறப்பு. ஒரு கருத்தைச் சேர்த்திருக்கலாம்.
  ஆங்கிலப் பெண், நம்ம ஊர் இளைஞனை காதலிப்பது என்கிற ஆணாதிக்க அற்ப உணர்வை ரசிகர்களிடையே எடுபடும் என்ற எண்ணம்தான்.
  ஆனால் உண்மையில், ஆங்கில ஆண்கள்தான் பல இந்தியபப் பெண்களை… அந்தபப் பெண்ணின் விருப்பததோடோ இல்லாமலோ திருமணம் செய்துகொண்டார்கள் பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அதனால் ஆங்கிலோ இந்தியன் என்ற இனமே உருவானது.
  அவர்களின் கடந்த கால வாழ்க்கை, அல்லது தற்போது அவர்களின் நிலையைப் பற்றி படம் எடுக்க ஆளில்லை.
  தனது சகோதரன் காதல் திருமணம் செய்து கொண்டதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பலர், தனது சகோதரியயின் காதல் திருமணத்தை மறைப்பதைப் பார்க்கிறோம்.
  அது போன்ற முட்டாள்த்தனமான ஆணாதிக்க உணர்வுதான் இங்கே நிலவுகிறது.
  சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது நிர்ப்பந்திப்பது போன்ற உணர்வுதான் இது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க