Friday, September 20, 2024
முகப்புசெய்திஉள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

-

ஜூன், 1, 2010 இல் மாவோயிஸ்ட்டுகளின் பொலிட்பீரோ உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான தோழர் ஆசாத்தையும், ஹெம் பாண்டே என்ற சோனல் கமிட்டி தோழரையும் நாகபுரி ரயில் நிலையத்தில் வைத்து ஆயுதங்கள் அற்ற நிராயுதபாணிகளாய் கைது செய்தது ஆந்திரப் பிரதேச சிறப்பு உளவுத் துறைப் போலிசு. பின்னர் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அதிலாபாத் மாவட்ட காடுகளில் இறக்கி சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுண்டர் மோதலில் கொல்லப்பட்டதாக கதையும் விட்டது.

ஆந்திரப் பிரதேச சிறப்பு உளவுத் துறை என்பது இசுரேலினுடைய மொசாத் கொலைகார குழுவால் பயிற்சி பெற்றதாகும். தோழர் ஆசாத்தைப் போல பல தோழர்கள் இக்கொலைகாரர்களால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்தக் கொலை அத்தோடு ஒன்று என்று மட்டும்  முடிவு செய்ய முடியாது. இதில் மிகப்பெரிய சதியும், வரவிருக்கும் பெரிய அபாயாமும் உள்ளது.

ஆபரேஷன் கீரின் ஹண்ட் நடவடிக்கையை ஆரம்பித்த மத்திய அரசு மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரும் போரை நடத்தி வருகிறது. இது குறித்து வினவில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். படிக்காதவர்கள் அதை பொறுமையுடன் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ப.சிதம்பரத்தின் தலைமையில் நடக்கும் இந்த நடவடிக்கையின் போது மாவோயிஸ்ட்டுகள் மோதலை  கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டுமென்று சும்மா ஒரு பேச்சை மத்திய அரசு பேச ஆரம்பித்தது.  ஆன்மீகவாதியும், மனித உரிமை ஆர்வலருமான சுவாமி அக்னிவேஷ் என்பவர் இதை வைத்துக்கொண்டு இருதரப்பையும் பேசவைக்கும் முயற்சியை அரசு ஒப்புதலோடு சில மாதங்களாக செய்து வந்தார்.

ப. சிதம்பரமே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில் இந்த பேச்சு வார்த்தை முயற்சியை எடுக்கும் அக்னிவேஷை ஆதரிப்பதாக எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் இரகசியமானது என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டாலும் உள்துறை அமைச்சகத்திலிருந்து இது வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அரசின் மனிதாபிமான முகத்தை காட்ட வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இப்படி கசிய விட்டார்கள்.

இதற்காக சுவாமி அக்னிவேஷுக்கு மாவோயிஸ்ட்டு கட்சியின் செய்தித் தொடர்பாளரான தோழர் ஆசாத் எழுதிய கடிதம் மட்டும் இதுவரை ஊடகங்களால் பிரசுரிக்கப்படவில்லை. அதில் இந்திய அரசின் இரட்டை நிலைகளையும், ஏமாற்று வித்தைகளையும் தோழர் ஆசாத் தோலுரித்திருப்பார். இருப்பினும் பேச்சு வார்த்தைகளுக்கு அக்னிவேஷ் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர் தடையோ, எதிர்ப்போ சொல்லவில்லை.

இந்நிலையில் தொலைதூரத்திலிருந்து ரயில் பயணம் செய்து நாகபுரி வழியாக தண்டகாரண்யாவுக்கு செல்லும் வழியில் ஆந்திர உளவுத் துறை அவர்களை கைது செய்து அதிலாபாத்தில் கொன்றுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் பார்த்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதற்கு ப.சி இது நடந்தது தனக்கு தெரியாது என்று பச்சையாக புளுகியதோடு அலட்சியமாகவும் இருப்பதை இப்போது அக்னிவேஷ் எழுதியிருக்கிறார்.

ஆக பேச்சு வார்த்தை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தலைவரை கண்டு பிடித்து கொன்றது மூலம் இந்திய அரசு தனது உண்மையான முகத்தை காட்டியிருக்கிறது. ஊடகங்கள் மூலம் மாவோயிஸ்ட்டுகள் மீது ஆளுமைக் கொலை செய்வதையும் அது செய்து வருகிறது. சுவாமி அக்னிவேஷ் போன்ற அறிஞர் பெருமக்கள் இப்போது இந்திய அரசு, ப.சியின் கொடூர வேடத்தை பட்டுப்புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி விரைவு ரயில் வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி 149 மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆதரங்களோடு தோழர் ஆசாத் வெளியிட்ட பத்திரிகை செய்தியை எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அந்த ரயில் விபத்துக்கு மாவோயிஸ்ட்டுகளே காரணமென்ற ப.சியின் பச்சைப்புளுகை மட்டும் தினசரி வாந்தி எடுக்கின்றனர்.

மாவோயிஸ்ட்டுகள் செயல்படும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டில் பேசிய ப.சி பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதன்படி மத்திய இந்தியாவில் சொந்த மக்களைக் கொல்லும் ஒரு பெரும் உள்நாட்டுப்போரை இந்திய அரசு நடத்தப்போவது அப்பட்டமாக தெரிய வந்திருக்கிறது.

நிறைய ஹெலிகாப்டர்களை போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது, 400 புதிய காவல் நிலையங்களை பெரும் கோட்டை பாதுகாப்புடன் தலா இரண்டு கோடி ரூபாயில் இரண்டு ஆண்டில் உருவாக்குவது, சல்வா ஜூடும் குண்டர்களை சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் சேர்ப்பது, ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் தலைமையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையை உருவாக்கி ஈடுபடுத்துவது, இந்த மாநிலங்களில் 950 கோடி செலவில் புதிய சாலைகளையும், பாலங்களையும் கட்டுவது என பிரம்மாண்டமான போர் தயாரிப்பு திட்டங்கள் முடிவு செய்யப்பட்டு அமலுக்கு வரப்போகின்றது.

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணி தங்களுக்கு வருமென்பதால் அதிகாரிகளும், வீரர்களும் தயாராக இருக்க வேண்டுமென்று இராணுவத் தளபதி பேசியிருக்கிறார். விமானப்படைத் தளபதி சட்டீஸ்கர் மாநிலத்தின் மூன்று இடத்தில் விமானப்படை தளங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

பா.ஜ.க, சி.பி.எம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த போரை ஆதரிக்கின்றன. சொல்லப்போனால் காங்கிரசு அரசின் வேகம் போறாது என்பதே அவற்றின் விமரிசனம்.

இந்த நிலையில் தோழர் ஆசாத்தின் படுகொலை மூலம் மத்திய அரசு தனது போரை தீவிரப்படுத்துவதாக அறிவித்துவிட்டது. ஊடகங்களும் அதற்கு தப்பாமல் தலையாட்டுகின்றன. சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் இந்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இனி மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுவார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ள வேட்டைக்காக தண்ட காரண்யாவை கைப்பற்றத் துடிக்கும் ப.சிதம்பரத்தின் வெறி இப்போது பெரும் போராக மாறி நிற்கிறது.

மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களின் தலைமையில் அணிதிரண்டு போராடும் பழங்குடி மக்கள் இந்த ஆக்கிரமிப்புக்கு பணியப் போவதில்லை. சொந்த நாட்டையும், மக்களையும் அவர்களின் விடுதலையையும் நெஞ்சில் ஏந்தி போராடும் மண்ணின் மைந்தர்களை புரிந்து கொள்ளவோ, ஆதரிக்கவோ யாரும் இருக்க கூடாது என்பதற்காகவும் இந்திய அரசு கடுமை காட்டிவருகிறது.

“இல்லை, எங்கள் சொந்த மக்களை கொல்லும் இந்த அநீதியான போரை நாங்கள் எதிர்க்கிறோம்” என்ற குரல் நம்மிடமிருந்து தீவிரமாக ஒலிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய கடமை. இதைக் கூட செய்யவில்லை என்றால் அதுதான் தேசத்துரோகம். என்ன செய்யப் போகிறோம்?

___________________________________________

 

  1. […] This post was mentioned on Twitter by ஏழர, சங்கமம். சங்கமம் said: உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!: ஜூன், 1, 2010 இல் மாவோயிஸ்ட்டுகளின் பொலிட்பீரோ உறுப்பினரும், … http://bit.ly/9mcJqT […]

  2. மக்களை கொன்று குவித்து, அதன் மேல் தான் தன் மூலதனத்தை நிறுவுவது என இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தடையாக இருக்கும் யாரின் மீதும் தன் தோட்டக்களின் மூலம் பதில் சொல்கிறார் ப.சி. அதே சமயம் நமக்கு கூடுதல் கடமையும் உள்ளது. ப.சி தமிழ்நாட்டுக்காரர் என்பதால், ப.சி க்கு எதிராக கூடுதல் போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

  3. vinavu007 என்ற பெயரில் தமிழ்மணத்தில் ஒரு கணக்கை துவங்கி வினவின் பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டளிக்கும் நண்பருக்கு…. ‘வேறு பெயரா கிடைக்கல?’

  4. ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ராகாசுர‌ ப‌ண‌ப்ப‌சிக்கு,
    அவ‌ரை வ‌ள‌ர்த்தெடுத்த‌ நாடுதான்
    இரையா? இறைவா, இது புனித‌ர்க‌ள்
    தியாகிக‌ள் தோன்றிய‌ பூமி.
    தான்தோன்றிக‌ள், இந்தியாவை
    இன்னுமெரு ஆப்பிரிக்க‌ண்ட‌மாய்
    ஆக்கிக் கொண்டிருக்கிறார்க‌ள்.
    ஆட்டை க‌டிச்சு, மாட்டைக் க‌டிச்சு
    க‌டைசியில‌,காட்டையும் கடிச்சு
    நாட்டையே நாச‌மாக்கும் முன் ம‌க்க‌ள்
    விழித்தெழ‌ வேண்டும்.

  5. ////////////14/07/2010 – புதன்

    அருந்ததிராய்க்கு சில கேள்விகள் -கே.ஆர்.

    அருந்ததிராய் அண்மையில் சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்தித்து ஒரு பேட்டி எடுத்து பிரசுரித்திருக்கிறது ஆனந்த விகடன். அவரை ‘இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்’ என்று அறிமுகம் செய் கிறது விகடன். மத்திய இந்தியாவின் தண்ட காரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங் கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத்துடன் போரிட் டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந் தனியாக நின்று போராடுகிறார் அருந்ததிராய் என்கிறார் பேட்டி கண்ட நிருபர்.

    அண்மையில் தண்டகாரண்யா காடு களுக்குச் சென்று மாவோயிஸ்ட்டுகளைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் ராய்.

    “நான் சாதாரண மக்கள் கொல்லப்படு வதை, அதை யார் செய்தபோதிலும் ஒரு போதும் ஆதரிக்கப்போவதில்லை. ஆனால் ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே இதை மாவோ யிஸ்ட்டுகள்தான் செய்தார்கள் எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும் போதும், காடுகளை விட்டுத் துரத்தப்படும் போதும் எங்கு போயிருந்தனர்?” என்று பதி லளிக்கிறார் ராய்.

    அருந்ததிராய் சாதாரண மக்கள் கொல்லப் படுவதைத் தான் ஆதரிப்பதில்லை என்று கூறினாலும், அதைச் செய்துகொண்டிருக்கிற மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவே பேசு கிறார் என்பது வெளிப்படை. பழங்குடி மக்க ளுக்கு ஆதரவாக மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிற- மேற்குவங்க அரசுக்கு எதி ராக திரிணாமுல் காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் தொடுப்பதற்கான காரணத்தை ராய் விளக்கு வாரா? மேற்குவங்க அரசு பழங்குடி மக்களை அவர்களது காடுகளை விட்டு விரட்டியதாக இடதுசாரி எதிர்ப்புப் பத்திரிகைகள் கூட இதுவரை எதையும் எழுதியதில்லையே…? இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட உபரி நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதியை ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ள ஒரே மாநில அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட் டுகள் அராஜகக் கொடியை உயர்த்தியிருப்பது ஏன் என்பதை அவர் விளக்குவாரா?

    ஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்டி கண்டு நாம் எழுப் பியுள்ள கேள்விகளுக்கான அவரது விடை களைப் பிரசுரித்தால் நல்லது. ‘முற்போக்கு முகம்’ என்றால் சகட்டு மேனிக்கு மாவோ யிஸ்ட்டுகள் தவிர உள்ள எல்லோரையும் வசைபாடுவதுதானா என்பதை ஆனந்த விகடன் நமக்குச் சொன்னால் நல்லது.

    நன்றி : புதிய ஆசிரியன்/////////////////

    தோழர்களே!

    மேற்கண்ட செய்தி போலிகம்யூனிஸ்டு கட்சியின் தினசரி பத்திரிக்கையான தீக்கதிரில் சென்ற (14.07.2010) அன்று வெளியாகியிருந்தது. “அருந்ததி ராய்க்கு சில கேள்வி”களைத் தொடுத்து ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கிறது, தீக்கதிர்.

    சிங்கூரில் தொடங்கி நந்திகிராம், லால்கார் என்று அரச பயங்கரவாத வெறியாட்டம் போட்ட சி.பி.எம். அரசு பற்றி, அக்கட்சியினைச் சார்ந்த சிலர் கேட்ட கேள்விகளுக்கே யோக்கியமாக பதிலளிக்கத் துப்பில்லாத ‘மார்க்சிஸ்ட்’ கட்சி, அருந்ததிராய்க்கு கேள்விக்கனை தொடுத்திருப்பது கேலிக்குரியது.

    //////பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிற- மேற்குவங்க அரசுக்கு…./////

    மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் ஆதிவாசி மக்களை விரட்டிவிட்டு அல்லது கொன்றொழித்துவிட்டு, காடுகளையும் மலைகளையும் வனங்களையும் வளைத்து, அதனடியில் புதைந்துள்ள கனிவளங்களை திருடிச்செல்வதற்கு, வெறிநாயாய் அலையும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்வதை மறைக்க பழங்குடி மக்களுக்காகப் போராடுவதாகக் கதையளக்கிறது, இப்போலிக்கூட்டம்.

    ///////எதிராக திரிணாமுல் காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் தொடுப்பதற்கான காரணத்தை ராய் விளக்கு வாரா?//////

    பழங்குடிகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து போராடுவதாகச் சொல்கிறார்கள் போலிகள். அந்த மத்திய அரசில் திரிணாமுல் காங்கிரசும் ஒரு அங்கமாக இருக்கிறது. காங்கிரசு அரசுடன் நேர்முகமாகவும், அந்த அரசை முட்டுக்கொடுத்துக் கொண்டு நிற்கும் திரிணாமுல் கட்சியினை மறைமுகமாகவும் சேர்த்துக் கொண்டு பழங்குடி மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுப்பது சிபிஎம் கட்சிதானேயொழிய, மாவோயிஸ்டுகள் அல்ல.

    /////அவரை ‘இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்’ என்று அறிமுகம் செய் கிறது விகடன்.///////

    ’மார்க்சிஸ்டு’கள்தான் முற்போக்குக்கு அத்தாரிட்டி என்பதை விகடன் மாமா அறிந்திருக்கவில்லை போலும்! இவர்களின் முற்போக்கு முகத்தைத்தான் சாதி வெறியன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போடுவதிலிருந்து லீனா மணிமேகலை விவகாரம் வரை அனைத்திலும் பார்த்தோமே!

    ஜெயாமாமியை மதச்சார்பற்றவர் என்று அடையாளப்படுத்துவதில் தொடங்கி, இதோ ஏகாதிபத்திய எடுபிடியான ப.சிதம்பரத்தை சகபோராளியாக அறிவித்திருப்பது வரையிலான சிபிஎம் கட்சிகளின் நடவடிக்கைகள், போலிகள்தான் உலகிலேயே தலைசிறந்த முற்போக்காளர்கள் என்பதற்கான அடையாளங்கள் தானே!

    த்த்த்தூ…..

    • இந்த பக்கமா மிஸ்டர் மங்குனி அமைச்சர் மாதவராஜ் வந்தால் அவரிடம் உங்களது துப்பை கொடுக்க வேண்டும் தோழர் ஏகலைவன்.

  6. lission all the above commented people there is a way for peace but they kill the 26 & 72 police in one time but you are wire the letter for one man kill by police ,stupite lission dont write these things 72 police are citizen of india

    by indian

  7. Arms Over the People: What Have the Maoists Achieved in Dandakaranya?

    Nirmalangshu Mukherji

    It has hitherto been impossible to assess the approach and activities of the Maoists in the Dandakaranya region in central India. We now have four documents – two authored by senior leaders of the Maoists and two sympathetic accounts – which allow us to evaluate in a limited fashion the work of the Maoists over the past quarter century of operations. The story that comes across is a dismal one. The State earlier did nothing for the adivasis but, considering the time the Maoists have spent in the region, they themselves have achieved little by way of adivasi welfare, be it in wages, education, health or agriculture. This is because the Maoists’ politics of waging guerrilla warfare on the road to seizure of state power has meant that they must focus on using the adivasis for their war….

    http://epw.in/epw/uploads/articles/14878.pdf

    • You are single real brain guy in front of this gruop of brain washed people.

      They are sick and Muslim terrorists who try to destroy india in every way. So sad india is so soft until these culprits can live in india and do their plan.

      • Asuran, EPW tries to analyse the TRUTH from facts. They have their policy and idealogy and are anti-capitalistic. that is all. that doen’t mean they are communists. First of all you are incapable of analysing these reports objectively and with a open mind. Instead you use shallow and crude labels and words abuses. try to prove that this report is false or wrong if you can. I bet you are totally incapable of that kind of useful work.

        • //First of all you are incapable of analysing these reports objectively and with a open mind.//

          ஈபிடபிள்யூ வுல ஆன இருக்கு பூன இருக்குன்னு கத விட்டு நீங்க கொடுத்திருந்த வறுமை ஒழிப்பு(??) கட்டுரையில நீங்க சொன்ன எதுவும் இல்லனு எங்க தோழர்கள் சொல்லியிருந்தாங்களே அதுக்கு என்ன பதில் உங்களிடம் இருக்கு?

          வறுமை ஒழிப்புக்கு ஆத்ரம்னு நீங்க கொடுத்திருந்த கட்டுரையில் அப்படி எதுவும் இல்லனு உங்களால படிச்சி புரிஞ்சிக்க முடியல நீங்க ஊருக்கெல்லாம் உபதேசம் ப்ரியா வாரி இறைக்கிறீங்க…

          யாராவது கேள்வி கேட்டாக்க நீ இம்மெச்சூர், நான் அதப் படிக்கிறேன் நீ படிக்கிறயான்னு மேதாவித்தன விளம்பரம் வேற….

        • //is this your reply ? till you are unable to argue about the contents of those articles.//

          நீங்க் கொடுக்குற சுட்டிகளை தேவைப்பட்டாலொழிய படிப்பதில்லை என்பது எனது அனுபவப் படிப்பினை. இதுவரை கொடுத்த சுட்டிகளை படித்து நேரம் விரயமானதுதான் எனக்கு மிச்சம்.

          ஆனால், தோழர்கள் சிலர் ஈ பி டபிள்யூவின் மீது நம்பிக்கை வைத்து படித்து அந்தக் கட்டுரையில் இல்லாததைச் சொல்லிய உங்களது புரட்டை அம்பலப்படுத்தியிருந்தனரே அதற்கு ஏன் பதில் சொல்லவில்லை அதியமான்?

          நான் சொன்னால்தான் பதில் சொல்வீர்களா?

        • //ஆனால், தோழர்கள் சிலர் ஈ பி டபிள்யூவின் மீது நம்பிக்கை வைத்து படித்து அந்தக் கட்டுரையில் இல்லாததைச் சொல்லிய உங்களது புரட்டை அம்பலப்படுத்தியிருந்தனரே அதற்கு ஏன் பதில் சொல்லவில்லை அதியமான்?///

          what nonsense is this ? which thozar proved what purattuu so far ? no one has got the full content of that report fully so far for arguing coherently. As you had declared you don’t read my links, then there is no use arguing with a nut who only gives his proof while ignoring all counter proofs. Is this how you got your Ph.D ? i must meet your professor once. I am curious. :))))))

          You have proved that you are incapable of coherent and logical arguments. Till date you have not answered the basic point about the different parameters used for different surveys. For e.g surverys about distances and speed using kms and miles will give different numbers. or using various indexs will give different numbers. Yet you compare the absolute figures put of by the Oxford report with a new index, with the EPW figures which use different parameters. This is crazy and cheating. Try this with ANY academican, if you can. and all you can quote is the link for the website but not for any specific report about comparitive analysis. So far no answer to my repeated questions regarding this basic matter. You are just evading because you cannot give any answer.

          and if i quote Oxford / UN reports about poverty REDUCTION in India for recent decades, as usual u are not going to read or argue to the point. Anyway, the readers will understand the facts and arguments best.

        • //what nonsense is this ? which thozar proved what purattuu so far ? no one has got the full content of that report fully so far for arguing coherently. As you had declared you don’t read my links, then there is no use arguing with a nut who only gives his proof while ignoring all counter proofs//

          அடேயப்பா எம்புட்டு கோவம்… இதோ தோழர் பொதெம்கின் உங்களது ஈ பி டபிள்யூ வறுமை குறைஞ்சிடுச்சி என்று கருத்துக்கு ஆதரவாக இல்லை என்று சொல்லிய பின்னூட்டங்கள்.

          #1)
          https://www.vinavu.com/2010/07/21/sachin-blood-book/#comment-27026
          //போதெம்கின்

          நீங்கள் சொன்ன EPW அறிக்கையே கூட, வறுமைகுறைவுக்கான ‘trend’ உருவாகியிருக்கிறதென இப்போது ஊர்ஜிதப்படுத்த முடியாதென்று தானே கூறுகின்றது . 1990 -க்கு பின் நாட்டின் உற்பத்தியும், இயற்கை வளங்களின் பயன்பாடும் பலமடங்கு உயர்ந்திருக்கும் போது, வறுமை மட்டும் ஏன் குறையவில்லை?//

          #2)
          https://www.vinavu.com/2010/07/22/indian-poverty/#comment-26885

          //ஆனால் அறிக்கை எழுதிய கெளரவ் தத், ரேவலியன் ‘அது டவுட்டு தான்’ என்கிறார்கள்.
          ” There are two important caveats on these findings. First, the difference between the trend rates of poverty reduction for the two periods is not statistically significant; it is too early to say if a statistically robust new trend has emerged.//

          //இப்படி இந்த நாட்டின் ஏழைங்களுக்கும் பொதுவான எல்லா இயற்கை வளங்களையும் நல்ல சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு, அவங்க பங்கை குடுத்தீங்களான்னு கேட்டா ‘டவுட்டு தான்’-னு அறிக்கை வருது EPW -இல்.

          போங்க சார்… நீங்களும் உங்க ரிப்போர்ட்டும்!!!//

          //அதாவது, ஏழைகளின் எண்ணிக்கை குறைவு புள்ளிவிவரங்களின்படி மிகச்சிறிய அளவினதாக இருப்பதால் அதை தொடருகிற போக்காக எடுத்து கொள்ள இயலாது. அதை வைத்து உ.தா.த வுக்கு பின் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததென இப்போது சொல்ல முடியாது.

          ஏன்னா 1990 -இல் 28கோடியாக இருந்தது 1999 -இல் 36கோடியாகி பின்னர் 2007 -இல் 23 கோடியாகி இருக்கு. இது கெளரவ் தத், ரேவலியன் போடுற கணக்கு. ஐ.நா வின் (அதியமானுக்கு பிணக்காகி போன) கணக்கு யாதெனில், இந்தியாவில் வளர்ச்சி குன்றிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42 .1 கோடி ஏழைகள். மற்ற மாநிலங்களையும் சேர்த்தால் 60 கோடி வரலாம்- மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல். //

        • //no one has got the full content of that report fully so far for arguing coherently. //

          இதெல்லாம் ஒரு விவாத முறையா அதியமான்? ஒன்று நீங்கள் அந்தக் கட்டுரையில் என்னவுள்ளது என்று ஆதரப் பூர்வமாக விளக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஆயிரத்தெட்டு தடவை வைத்துவிட்டேன். அதையும் இதுவரை செய்யவில்லை.

          அல்லது EPW கட்டுரையைப் படித்து உங்களது கருத்துக்கு ஆதாரமாக எதுவும் அதில் இல்லை என்று மறுத்துள்ள பொதெம்கினின் வாதங்களை மறுத்து ஆதாரம் வைக்க வேண்டும்.

          இதையும் நீங்கள் செய்யவில்லை. சும்மா அந்தக் கட்டுரை ரொம்ப காம்ப்ளீகேட்டட், ரொம்ப கஸ்டம், நெம்ப பெருசு அதனால் நான் சொல்றத ஏத்துக்கோங்க ஆ ஜீஞ்ஜிலிக்கா, ஆ.. ஜிமிக்கீலிக்கான்னு பிலிம் காட்டும் புரட்டை நிறுத்துங்கள்.

        • Asuran,

          since your latest proof is from the much maligned UN, try this if you can :

          http://www.samachartoday.com/india-made-significant-progress-in-poverty-reduction-un/6168

          India made significant progress in poverty reduction: UN

          A UN report says India has made significant progress in poverty reduction and the number of poor people in the country is expected to half of the 1990 level by 2015.

          According to the 2010 report of the United Nations on the Millennium Development Goals (MDGs), While India is expected to reduce its poverty rate from 51 per cent in 1990 to 24 per cent in 2015, reducing its number of extremely poor by 188 million. The report said, India has also contributed to the large reduction in global poverty.

        • //அல்லது EPW கட்டுரையைப் படித்து உங்களது கருத்துக்கு ஆதாரமாக எதுவும் அதில் இல்லை என்று மறுத்துள்ள பொதெம்கினின் வாதங்களை மறுத்து ஆதாரம் வைக்க வேண்டும்.
          இதையும் நீங்கள் செய்யவில்லை. ///

          Potamkin mentioned the term trends. But the title of that EPW post in “Shining for the poor too” and the conclusion proves beyond doubt about the reduction of poverty post reforms. Potomkin does not try to argue about this core point of that article. and you are incapable of even this attempt. just sweeping statements which will fool no one who has been following all this.

          Now you guys are talking about trends, while all these days, u were point blank in denying all points about trends and insisting that poverty in rising in India.

          If you have any honesty, try that last month UN report whose link is :

        • //Potamkin mentioned the term trends. But the title of that EPW post in “Shining for the poor too” and the conclusion proves beyond doubt about the reduction of poverty post reforms.//

          முதல்ல கட்டுரை பெரிசி, காம்ப்ளிகேட்டட்னு சொன்னாரு அதியமான். இப்போ இன்னொரு சுட்டி(சுட்டி மட்டும்) கொடுக்குறாரு. அப்படியே EPW கட்டுரையின் தலைப்பிலேயே இருக்குன்னு சொல்றாரு, கன்குலூசன்ல இருக்குன்னு சொல்றாரு….

          தலைப்பிலேயே/கன்குலூசன்லேயே இருக்கும் விசயத்தையே கட்டுரை காம்ப்ளிகேட்டட்டா இருக்குனு சொல்லி இன்னவரை ஜூ காட்டுனீங்க அதியமான்?

          ஆக மொத்தத்தில் EPW கட்டுரை மூலமாக நீருபிக்கத் தகுந்த ஆதாரம் எதுவும் இன்ன வரை அதியமான் தரவில்லை என்பதுடன் அல்லாமல் எம்மை மூடர்கள், இம்மெச்சூர், டிஸ்கானஸ்ட்என்று இழிவுபடுத்தவும் செய்துள்ளார் இந்த ‘ஜனநாயகவாதி’

        • //If you have any honesty, try that last month UN report whose link is ://

          தோட அடுத்த சுட்டி…. எங்களப்பாத்தா காமெடியங்களா இருக்கா அதியமான்? அடுத்தடுத்த சுட்டிகள் எதுன்னும் சொல்லிருங்க, இன்னும் என்னென்ன சுட்டி வைச்சிருக்கீங்கன்னு மொத்தமா ஒரு பதிவு போட்டுருங்க எல்லாருக்கும் வசதியா இருக்கும்.

          உங்க நிலைமை உண்மையிலேயே மிகப் பரிதாபகரமாக அவலட்சணமாக இருக்கிறது.. 🙂

          வேனுமின்னா உங்களுக்கு சுட்டிய(வெறும்)மான் என்று கூட புதுப் பெயர் வைக்கலாம்.. (இப்போ அவர் எவ்வளவு கோபப்படுவாருன்னு பாருங்களேன்)

          மிகுந்த நக்கலுடன்
          அசுரன்

        • அதியமான்,

          இந்த பாலாப்போன கம்யூனிஸ்டுங்க மக்களை ஏமாத்துறதுக்குல்ல வாங்க, நாம போயி மக்கள்ட்ட பிரச்சாரம் பண்ணி மக்களை காப்பாத்திடலாம்ன்னு உங்களை எத்தனை தடவ கூப்பிடுறது?

          இவங்க கிட்ட திரும்ப திரும்ப சொன்னதையே சொல்றது வேஸ்டு அதியமான்! வாங்க மக்கள்கிட்டயும், தொழிலாளர்கள் கிட்டயும் போய் சொல்வோம்ன்னா கேட்குறீங்களா???

          உங்க ராஜ தந்திரமெல்லாம் இங்கன வினவு தளத்துலயா வீணாப்போகனும்?
          இப்ப பாருங்க அசுரன் நக்கலடிக்குறார்! இப்பவாது கோவப்பட்டு கிளம்பி வாங்க.. வாங்க…

        • ///and all you can do is verbal play and idiotic phrases which has no meaning in serious debates.////

          அதுக்கு தான் வாங்க தெருவுக்கு ன்னு கூப்பிடுறேன்!

          அய்ய தப்பா நினைச்சுக்காதீங்க! தெருவுக்கு வந்து பிரச்சாரம் பண்ணுங்கன்னு சொல்றேன்!

          ஆனா அங்கன வந்தும் தஸ் புஸ்ஸு ன்னு இங்கிலிபீஸ்ல சம்பந்தா சம்பந்தமில்லாம எடுத்து வுட்டீங்கன்னு வெச்சுகோங்க! நாய் புடுங்கினாலும் புடுங்கிடும்! பாத்து…… 🙂

        • //I have to accept your UN-Oxford link without questions, while you won’t even look at a recent UN report :

          http://www.un.org/millenniumgoals/pdf/MDG%20Report%202010%20En%20r15%20-low%20res%2020100615%20-.pdf

          and all you can do is verbal play and idi//

          அடடேஎன்னவொரு பரிதாபகரமான அட்டெம்டு….

          முதலில் ஆக்ஸ்போர்டு புள்ளிவிவரத்தை வெறுமனே உங்களைப் போல சுட்டி மட்டும் கொடுத்து பேசவில்லை நாங்கள். கட்டுரையே எழுதப்பட்டுள்ளது வினவில். அதில் வெகு தெளிவாக வறுமை இந்தியாவில் இருக்கும் நிலையை சுட்டுகிறது. அது ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசம்.

          ஆனால், நீங்கள் கொடுத்துள்ள EPWல் உங்களது வாதங்களுக்கான விவரஙக்ள் ஆணித்தரமாக எதுவும் இல்லையென்று பொதெம்கின் சொல்கிறார். மேலும், அவை பழைய புள்ளிவிவர அளவிடும் முறையை பின்பற்றுகின்றன. இன்றைய புதிய வாழ்க்கைத் தரங்களை அடிப்படையாகக் கொண்டு அவை அளவிடப்படவில்லை. அதாவது ஆக்ஸ்போர்டின் முறை போல புதிய குறீட்டு எண்களைக் கொண்டு அளவிடப்படவில்லை.

          உடனே நீங்கள் ஐநாவின் சுட்டி கொடுக்கிறீர்கள். இது வெளிவந்தது ஆக்ஸ்போர்டு முறையிலான விவரங்களுக்கு முந்தைய பழைய விவரமே ஆகும். ஆக்ஸ்போர்டு அளவீட்டு முறைதான் இனி ஐ நாவால் பின்ப்பற்றப்டும் எனும் நிலையில் பழைய முறையிலான அளவீடு சரியானது அல்ல என்றும் அது ‘வறுமை குறைந்த’ அளவை மிகைப்படுத்துகிறது என்றும் ஆக்ஸ்போர்டு குழுவினர் தமது தளத்தில் தெரிவித்துள்ளனர்.

          விசயம் இப்படி உங்களது ஒவ்வொரு ஆதாரங்கள் என்ற பெயரிலான சுட்டிகளும் வலுவின்றி இருக்கையில் நீங்களோ தாவித் தாவி மான் போல சென்று கொண்டிக்கும் உங்களுக்கேயுரிய வாத முறையை கை கொள்கிறீர்கள். மாட்டிக் கொள்ளும் இடத்திலெல்லாம் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறீர்கள்.

        • 55% of India’s population poor: Report
          http://timesofindia.indiatimes.com/India/55-of-Indias-population-poor-Report/articleshow/6169549.cms

          NEW DELHI: India’s abysmal track record at ensuring basic levels of nutrition is the greatest contributor to its poverty as measured by the new international Multi-dimensional Poverty Index (MPI). About 645 million people or 55% of India’s population is poor as measured by this composite indicator made up of ten markers of education, health and standard of living achievement levels.

        • அதியமான்,
          //But the title of that EPW post in “Shining for the poor too” and the conclusion proves beyond doubt about the reduction of poverty post reforms.//

          1. “Shining for the Poor Too?” – அந்த கேள்விக்குறியை (?) குறிவைத்து அழித்து விட்டீர்களே? நீங்கள் வாசகர்களை படிக்கச் சொன்ன அறிக்கையை நீங்களே படித்திருக்க மாட்டீர்கள் என்றே சந்தேகிக்கிறேன்.

          2. முடிவுரையில், கடைசி பத்தியில் ‘NSS புள்ளிவிவரத்தில் டவுட்டு இருக்கு’ன்னு சொல்றாங்களே!!! நீங்கள் சொல்வது போல
          ‘conclusion proves beyond doubt’- என்றால் ஏன் எச்சரிக்கை கொடுக்க வேண்டும்?

          3. பல நாடுகளில் ‘ஏழ்மையை’ ஏற்றத்தாழ்வை (Inequality) வைத்து தானே கணக்கிடுகிறார்கள். அது தானே ‘ethical ‘? கட்டுரை முழுக்க வருமான ஏற்றதாழ்வுகள் (increase in income inequality) உயர்ந்திருப்பதை பற்றி அடிக்கடி சொல்கிறார்களே?

          உ.தா: “However, there are signs that new inequality-increasing forces have emerged. A more labour-intensive growth process in a poor open economy need not reduce income inequality, and may well increase it, given how the growth process interacts with the antecedent inequalities in other (“non-income”) dimensions, particularly in human capital, which can mean that the poorest are left behind.”

          தோழர்கள் உங்கள் ‘சுட்டி’த்தனமான விவாதத்தால் அலுத்துப் போயிருப்பார்கள் என்பதால் தான் நான் வாசகர்களுக்காக அதை படிக்க நேர்ந்தது. இதுக்கும் பதிலாக ஏதோ ஒரு சுட்டியையோ நூறு பக்க அறிக்கையையோ கொடுப்பீர்களானால்… “ஐயாம் சாரி. நான் ரொம்ப பிசி’ -என்று வாசகர்கள் அலறுவார்கள்.

        • ////தோழர்கள் உங்கள் ‘சுட்டி’த்தனமான விவாதத்தால் அலுத்துப் போயிருப்பார்கள்////

          ஹெஹெஹே….ஹே..

          அய்யோ அய்யோ!

          எப்புடி போனாலும் அடையப்போட்டா, என்னதான் பன்றது? ம்..

        • Potomkin,

          ///பல நாடுகளில் ‘ஏழ்மையை’ ஏற்றத்தாழ்வை (Inequality) வைத்து தானே கணக்கிடுகிறார்கள். அது தானே ‘ethical ‘? கட்டுரை முழுக்க வருமான ஏற்றதாழ்வுகள் (increase in income inequality) உயர்ந்திருப்பதை பற்றி அடிக்கடி சொல்கிறார்களே?///

          Increase in inequality does not mean that the poor are becomming poorer. The issue is whether the percentage of poor below poverty line (the parameter for this line is the debatable issue) is decreasing or not.

          //பல நாடுகளில் ‘ஏழ்மையை’ ஏற்றத்தாழ்வை (Inequality) வைத்து தானே கணக்கிடுகிறார்கள்./// no. very much incorrect. poverty ratio is simply the percentage of the poor against the total population of the nation.

          the EPW report and the UN milleniam developement report clearly states that the poverty levels in India in DECREASING. there are some cautions and caveats regarding maintaining this trend continiously. but that is only a opinion and noway does it express that the poverty ratio has not decreased (as Asuran is repeatedly bluffing).

          the title expresses a question ? yes, and the answer is, Yes, it is shinning for the poor too. not NO, it is not shinning. that is the conclusion of the report.

        • ///உடனே நீங்கள் ஐநாவின் சுட்டி கொடுக்கிறீர்கள். இது வெளிவந்தது ஆக்ஸ்போர்டு முறையிலான விவரங்களுக்கு முந்தைய பழைய விவரமே ஆகும். ஆக்ஸ்போர்டு அளவீட்டு முறைதான் இனி ஐ நாவால் பின்ப்பற்றப்டும் எனும் நிலையில் பழைய முறையிலான அளவீடு சரியானது அல்ல என்றும் அது ‘வறுமை குறைந்த’ அளவை மிகைப்படுத்துகிறது என்றும் ஆக்ஸ்போர்டு குழுவினர் தமது தளத்தில் தெரிவித்துள்ளனர். ////

          but your link is also from UN. then is that UN lying and contradicting itself ?
          most importantly, this UN recent report says :

          According to the 2010 report of the United Nations on the Millennium Development Goals (MDGs), While India is expected to reduce its poverty rate from 51 per cent in 1990 to 24 per cent in 2015, reducing its number of extremely poor by 188 million. The report said, India has also contributed to the large reduction in global poverty.///

          But the figures quoted in the UN-Oxford report gives a higher figure by using different parameters for measuring ‘poverty’ ; as i had repeatedly asked, there is no data for previous years using the same parameter from the UN-Oxford report.
          no doubt if that data is available, it too will confirm the trends as in the millennium report.

        • Comrade Potomkin,

          /////பல நாடுகளில் ‘ஏழ்மையை’ ஏற்றத்தாழ்வை (Inequality) வைத்து தானே கணக்கிடுகிறார்கள். அது தானே ‘ethical ‘? கட்டுரை முழுக்க வருமான ஏற்றதாழ்வுகள் (increase in income inequality) உயர்ந்திருப்பதை பற்றி அடிக்கடி சொல்கிறார்களே?/////

          this is my old english post about the ‘bogey of inequality’ :

          http://athiyaman.blogspot.com/2009/07/bogey-of-inequality.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க