Saturday, July 20, 2024
முகப்புசெய்திவேதாந்தா - மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

-

ரிசாவின் நியாம்கிரி மலையில் டோங்கிரியா கோண்டு எனும் பழங்குடி மக்கள் இயற்கையை சார்ந்து காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மலையும், காடும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊற்று.

இந்நிலையில் இங்கு சுமார் 600 ஹெக்டேரில் வேதாந்தா அலுமினியம் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு பாக்சைட் சுரங்கம் வைத்துக் கொள்வதற்கு ஒரிசா அரசு அனுமதி அளித்தது. வேதாந்தாவுடன் ஒரிசா கனிமவளக் கழகம் எனும் மாநில அரசு அமைப்பும் தொழிலில் கூட்டு சேர்ந்துள்ளது.

தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து அந்த மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதை ஒடுக்குவதற்கு வேதாந்தா நிறுவனமும், அரசுகளும் பல மாய்மாலங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி, மருத்துவம், என பல உதவித் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக நடித்துக் கொண்டு நியாம்கிரி மலையை முழுங்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சித்து வருகிறது.

பிரதமர் அலுவலகத்தின் கீழ் வரும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் என்ற சட்ட உரிமையற்ற ஆலோசனை மட்டும் கூறும் அமைப்பு என்.சி. சக்சேனா என்பவரது தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி டோங்கிரியா மக்களின் வாழ்வு, பண்பாடு, மற்றும் இயற்கை வளம் எல்லாம் எப்படி பாதிக்கப்படும் என்று சொல்கிறது. அதை வைத்து வேதாந்தாவின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது வெறும் நாடகம்தான் என்பது முக்கியம். இடையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது தயக்கங்களை வெளியிட்டிருந்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் வேதாந்தா நிறுவனம் தனது முயற்சிகளை நிலவும் சட்டத்திற்குட்பட்டு தொடரலாம் என்று தந்திரமாக அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் என்ன செய்யலாம் என்று அரசு நிறுவனங்கள் யோசித்த வேளையில் (எல்லாம் ஒரு பாவ்லா) இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒரு கருத்தை கூறினார். அதன்படி சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு இப்போதும் கூட அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை இருக்கிறது என்றார். வேதாந்தா நிறுவனமோ தனக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டது என்கிறது.

ஆக மொத்தம் என்ன நடக்கிறது? வெளியே மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்து வரும் வேளையில் அதைத் தணிக்கும் வண்ணம் இந்திய அரசும்,  வேதாந்தா நிறுவனமும் நடத்தி வரும் கச்சிதமான நாடகம்தான் இது. பழஙக்குடி மக்களின் காவலனாக மாவோயிஸ்ட்டுகள் போராடி வரும்போது இந்த பிரச்சினையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய முடியாத நிலையில் அரசு இருப்பதுதான் இப்போதுள்ள ஒரே பிரச்சினை.

இதுபோக ஒரிசாவின் நவீன்பட்நாயக் அரசுக்கும், காங்கிரசு கட்சிக்கும் உள்ள ஓட்டுக்கட்சி முரண்பாடும் ஒரு காரணம். ஆனால் வேதாந்தா விவகாரத்தில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள். ப.சிதம்பரம் கூட வேதாந்தாவின் இயக்குநராக முன்னர் வேலைபார்த்தவர்தான்.

காங்கிரசின் திக்விஜய் சிங் என்ற முன்னாள் முதலமைச்சர் பேசும் போது மாவோயிஸ்ட்டுகளை படை கொண்டு அடக்கும் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையைக் குறை கூறியிருந்தார்.  இது கொள்கை பற்றிய பிரச்சினை என்பதை விட காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகள் பற்றிய பிரச்சினை என்பது சாலப்பொருந்தும்.

இதனால் ஆத்திரமுற்ற சிதம்பரம், தன்னை விட திறமையாக யாரும் வேலை செய்ய முன்வந்தால் மகிழ்ச்சிதான் என்று பணிவாக கூறுவது போல அளந்து விட்டு விசயத்திற்கு வருகிறார். அதாவது மாவோயிஸ்ட்டுகளை அடக்குவது மாநில அரசுகளாம். அதற்கு மத்திய அரசு உதவி மட்டும் செய்கிறதாம். தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெரும் பணக்காரர்களாக மாறிவருகிறார்களாம். பல முதலாளிகளிடம் வரி வசூலித்து வருகிறார்களாம். இதனால் மத்திய அரசுக்கு வரவேண்டிய பணம் மாவோயிஸ்ட்டுகளுக்கு போகிறது என்று ஒநாய் போல வருத்தப்பட்டு கண்ணீர் விடுகிறார் சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் கூற்றை நன்கு உற்று நோக்குங்கள். மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை என்பது பழங்குடி மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளின் பால் எழுந்தது என்று அவர் கருதவில்லை. முதலாளிகளின் பணம் வசூலிக்கப்படுவதுதான் அவரது கவலை. அதில் நைசாக இந்திய அரசுக்கு வரவேண்டிய பணம் போச்சே என்று வடை போன மாதிரி ஒரு அக்கறை. ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்டிநாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு! ஆக மாவோயிஸ்ட்டுகளுக்கு பணம் ‘கட்டும்’ அபயாத்திலிருந்து முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கே “ஆபரேஷன் கீரீன் ஹண்ட்”. மற்றபடி பழங்குடி மக்களெல்லாம் கொசுமாதிரி புகை போட்டே ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆக இருவழிகளில் மத்திய அரசு செயல்படுகிறது. ஒன்று மாவோயிஸ்ட்டுகளை இராணுவ ரீதியில் ஒடுக்குவது. மற்றொன்று பழங்குடி மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல கமிட்டி,சுற்றுச்சூழல் என்று பேசியே நீர்த்துப் போகச்செய்வது. இறுதியில் வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் சுரங்கத்தை ஆரம்பிக்கப் போகிறது.

ஆனாவிலும் ஒரிசாவிலும், தண்டகாரண்யாவிலும் அடிபணியாமல் போரிடும் பழங்குடி மக்கள் இந்த நாடகத்தை தூக்கி எறிவார்கள். வேதாந்தா நிறுவனம் எத்தனை தடவை முயற்சி செய்தாலும் நியாம்கிரி மலையின் ஒரு குன்றைக்கூட கைப்பற்ற முடியாது. ஏனெனில் அந்த மலையில் ஒவ்வொரு அணுவிலும் பழங்குடி மக்களின் இரத்தமும், வேர்வையும் கலந்திருக்கிறது. அது இறுதி வரை பணியாது. போராடும். கடைசி பழங்குடி மனிதன் இருக்கும் வரையிலும் போராட்டம் தொடரும்.

_______________________________________________________________________

 1. வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!…

  ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்ட நாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு!…

 2. புதுடெல்லி : ‘அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் தெரிவித்த அச்சம் இப்போது உண்மையாகி கொண்டு இருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
  ஒரிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள ‘மகாநதி நிலக்கரி லிமிடெட்Õ என்ற பொதுத் துறை நிறுவனத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அதில் நிவாரணம் கிடைக்காதவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இது கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று விசாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நீதிபதிகள் அடாப் ஆலம், சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்து தீர்ப்பு அளித்தது. அதில் கூறி இருப்பதாவது:

  சமத்துவம் இன்மை மற்றும் பாரபட்ச தொல்லையால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள், ஒரு கட்டத்தில் நாட்டின் அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே தகர்த்து விடுவார்கள் என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் அரசியல் சாசன தந்தை அம்பேத்கர் அச்சம் தெரிவித்து இருந்தார். நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதை பார்க்கும்போது அவருடைய இந்த அச்சம் உண்மையாகி வருவதாகவே தெரிகிறது.

  வளர்ச்சிப் பணிகள் இன்றி பாதிக்கப்படும்போது பயங்கரவாதமும், அரசியல் தீவிரவாதமும் தோன்றி விடும். ‘வளர்ச்சிப் பணி’ என்ற வார்த்தை, நாட்டின் பல கோடி மக்களுக்கு இப்போது அருவருப்பான, வெறுக்கத்தக்க வார்த்தையாகி விட்டது. அவர்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரம் கூட மறுக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்கள் அமைந்துள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் சமீபத்தில் 550 கிலோ வெடிப்பொருட்களை தீவிரவாத கும்பல் கொள்ளையடித்து சென்றதாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தோம். இதை பயன்படுத்தி ரயில் நிலையத்தை தகர்த்து இருக்கிறார்கள்.

  அரசியல் தீவிரவாத அமைப்பால் (நக்சலைட்) பாதிக்கப்பட்டு உள்ள 7 மாநிலங்களில் ஒன்றான ஒரிசாவில் இருந்துதான் இந்த வழக்கு வந்துள்ளது. அவர்களின் பலம் அரசுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறது. எனவே, நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை மத்திய அரசும், மகாநதி நிலக்கரி நிறுவனமும் 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

  -தினகரன்
  http://www.dinakaran.com/indiadetail.aspx?id=11102&id1=1

 3. பழங்குடியினரின் நிலங்களை பாதுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள், இதுவரை அந்த நியாமகிரி பகுதிகளில் தங்கள் தாக்குதல்களை எதுவும் தொடுக்கவில்லை. வேதாந்த்தா நிறுவனத்தை தாக்க முயலவில்லை. அந்த பகுதியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள பகுதிகள்ல் தான் அவர்கள் ‘ராஜியம்’ ; 30 ஆண்டுகளுக்கு முன் இந்த தனியார்மயம் எல்லாம் இல்லை. அரசு பொதுதுறை நிறுவனங்கள் தான் கனிம வளங்களை வெட்டி எடுத்தன. ஆனால் அன்றே மாவோயிஸ்டுகளின் போராட்டம் நிகழ்ந்தன. அவர்களின் நோக்கம் பழங்குடி மக்களுக்கு உதவுவதல்ல. அவர்களின் பிரச்சனையை சாக்கக வைத்து, ஒரு செம்புரட்சி அரசை நிறுவி, அதிகாரத்தை கைபற்றுவது தான். இதை பற்றி ஒரு முக்கிய கட்டுரை :

  Arms Over the People:
  What Have the Maoists Achieved in Dandakaranya?
  http://epw.in/epw/uploads/articles/14878.pdf

  ஒரே ஒரு கேள்வி மட்டும் :

  பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி விட்டு, முதலாளித்துவ ‘பயங்கரவாத’ சக்திகளை முறியடித்து, ஒரு சோசியலிச ஆட்சியை இவர்கள் நிறுவினால், அதன் பிறகு நியாமகிரி குன்றை அப்படியே விட்டுவைப்பார்களா ? அல்லது தாங்களே சுரங்கங்களை நடத்துவார்களா ? அன்று பழங்குடிகளின் உரிமைகளை எப்படி மதிப்பார்களா ?

  பழங்குடிகளின் நிலங்களை இன்றை முறையில் பிடுங்குவதை யான் ஆதரிக்கவில்லை / நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு தருவதில் தான் இன்றைய அநீதிகள். மாவோயிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்தாலும், நிலங்களை பிடுங்கி, சோசியலிச பாணியில் சுரங்க தொழிலை தொடரத்தான் போகிறார்கள். அன்று இழப்பீடு மற்றும் மறுவாழ்வு என்ன முறையில் அளிப்பார்கள் ? அல்லது கனிம வளங்களை எடுப்பதையே நிறுத்தி விடுவார்களா என்ன ?

  • can anyone give me the address of MR.K.R.ATHIYAMAN. i need to take class (whole day class) for him.he always talking like this only he never understand these things.
   Mr athi what a imagination u have over the mavo.

   intha jinji adipatha eppo than nirutha poringa mr athi

   • nakkeeran//

    நல்ல கேட்டிங்க கேள்வி.அதியமான் இதற்க்கெல்லாம் அசைந்துக்கொடுக்கர ஆளா!

    அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் உண்மை,நேர்மை.மத்ததெல்லாம் பொய் என்று நினைக்கிற ராஜ குமாரங்க அவரு.தூங்குபவனை எழுப்பிடலாம்.தூங்குபவன் மாதிரி நடிக்கிரவனை எழுப்பவே முடியாது. அவரு இரண்டாவது வகை.

    ராஜாக்கள்,முதலாளிகள் பலப்பேர்களை கொலைசெய்யலாம்,ஆனால் சிவப்புச்சட்டைப்போட்டவன் ஒரு குண்டு ஊசியில் குத்திவிட்டால் கூட பயங்கரவாதம்,திவிரவாதம்,மனிததன்னையே அற்றது என்று புலம்புவாறு.

    • என்னங்க நீங்க இன்னும் நம்ம ஆள புரிஞ்சுக்கலையே!!!!

     நம்ம அதியமானுடைய முன்னோர்களும் பழங்குடிகள் தான். இது தெரியுமா உங்களுக்கு??? சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவருடைய முன்னோர்களும் பழங்குடிகள் தான். அதனால், இன்று மாடர்ன் உலகத்தில் கம்ப்யூட்டர் தட்டிக்கொண்டு, போலி ஐடியில் வரும் யாரும் பழங்குடிகள் பிரச்சனை பற்றி பேச யோக்கியதையும் இல்லை! அப்படி பேசினால் அது உண்மையும் இல்லை! ஆமா சொல்லிப்புட்டேன்!………

     (என்னை திருப்பூர் என்று சரியாக கணித்து (!!!!) 🙂 சொன்ன அதியமானுடைய சோதிட அறிவு, எவ்வளவு பழம்பெருமையானதெனில், நாலாயிரம் ஆண்டு பழமையானது! 🙂 )

  • EPW-இல் மே 8, 2010 அன்று வெளியான மாவோயிஸ்டு கோபால்ஜி – அல்பா ஷா நேர்காணலின் தமிழாக்கம் கீற்றில் வெளிவந்தது.

   http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9732:2010-06-23-21-11-12&catid=1142:10&Itemid=407

   சில பகுதிகள் மட்டும் இங்கே.

   அல்பா ஷா : கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

   கோபால்ஜி : அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
   ….
   ….
   ….

   முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

   நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்

   • அதே ஈ.பி.டபள்யூ பத்திர்க்கையில் வெளியான ஆய்வு கட்டுரை இது. இதில் மாவோயிஸ்டுகளின் ‘சாதனைகள்’ பற்றி ஒரு விரிவான அலசல் உள்ளது. அவர்களின் தலைவர் அளித்த பேட்டியில் சொன்ன அய்டியல் திட்டத்திற்க்கும், நடைமுறையில் இத்தனை ஆண்டுகள் அவர்களின் செயல்பாடுகளுக்கு உள்ள முரண் இந்த கட்டுரையில் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பேசுவது எல்லாம் உயர்ந்த லச்சியவாதம். ஆனால் நடைமுறையில் ?

    Arms Over the People:
    What Have the Maoists Achieved in Dandakaranya?

    http://epw.in/epw/uploads/articles/14878.pdf

 4. உண்மை தோழர் . //தண்டகாரண்யாவிலும் அடிபணியாமல் போரிடும் பழங்குடி மக்கள் இந்த நாடகத்தை தூக்கி எறிவார்கள். வேதாந்தா நிறுவனம் எத்தனை தடவை முயற்சி செய்தாலும் நியாம்கிரி மலையின் ஒரு குன்றைக்கூட கைப்பற்ற முடியாது. //
  உண்மை ,,,,,,,,,

 5. அதியமான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு எனக்கும் பதில் தேவைப்படுகிறது.

 6. தோழரே நீங்கள் அடித்து ஆடும் ஆட்டம் குறைந்து விட்டது. அரசாங்கம், மாவோயிஸ்ட், நிறுவனங்கள் மூன்றுக்கும் உள்ள
  முக்கோண பிரச்சனைகளை இன்னும் கூட சற்று தொடர் போல கொண்டு செல்ல முடியும். இது குறித்து வேறு தலைப்புகள் உண்டா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க