Tuesday, October 3, 2023
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !

காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !

-

விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் கூடிய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்திரவு வந்துள்ளது. மேலும் இரண்டாயிரம் துணை இராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட விருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு வீதியிலும் இந்த உத்தரவை ஒலிப் பெருக்கியில் கூறி மக்களை மிரட்டி வருகிறது இந்திய இராணுவம். ஆனால், “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் இராணுவத்தின் மிரட்டலையும் விஞ்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கிறது.

மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலிகொடுத்தும் அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் 27 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ சதி, பிரிவினைவாதிகள் சதி எனப் பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களின் இந்தப் போராட்டத்தைக் கொச்சைபடுத்தி எழுதி வருகின்றன. “நம்காலத்து ஜெனரல் டையர்” மன்மோகனோ ஊரடங்கை மீறுபவர்கள் அப்பாவிகள் அல்ல தீவிரவாதிகள், அவர்களைச் சுட்டுக் கொல்வதில் தப்பில்லை என கொலை வெறியுடன் உத்தரவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள், குடும்பத் தலைவிகள், என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களது சுதந்திரத்திற்காகப் போராடி வரும்போது, இதனை தீவிரவாதிகள் சதி என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கித் தள்ளிவிடத் துடிக்குது இந்திய அரசு.

இந்திய இராணுவத்தின் பெரும் பகுதியை காஷ்மீரில் நிறுத்தி, கடந்த 30 வருடங்களாக துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து வருகிறது இந்தியா. துப்பாக்கியின் நிழலில் வாழும் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். தங்களது இளைஞர்கள் தீவிரவாதி என முத்திரை குத்திக் கொல்லப்படுவதையும், தங்கள் வீட்டுப் பெண்கள் இராணுவத்தால் சூறையாடப்படுவதையும் இனியும் காசுமீரிகளால் சகித்துக்கொள்ள இயலாது. அவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க வெறியாட்டம் போடும் இந்திய இராணுவத்தையும், அரசையும் காஷ்மீரிலிருது வெளியேற்றாமல் அவர்கள் ஓயப்போவதில்லை.

ஆனால் இந்திய அரசின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.

அதனால் தான் இவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வெத்துச் சவடாலுக்கும், மிரட்டலுக்கும் மக்கள் அஞ்சப் போவது இல்லை. இதோ ஆயிரக்கணக்காண காஷ்மீரத்து ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி இந்திய இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவன் துப்பாக்கியால் சுடுவான் எனத் தெரிந்தும் சிப்பாய்கள் மீது கல்லெறிகிறார்கள். ஊரடங்கு உத்தரவைக் காலில் போட்டு மிதித்து ஊர்வலமாகச் சென்று முழங்குகிறார்கள். 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்.

_________________________________
— பாலன். (வாசகர் படைப்பு)
_________________________________

 1. காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!…

  விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது….

 2. \\*இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.*//
  The ruling FASCIST CONGRESS government have to be demolish by the people..We are seeing North-East states,Kashmir,Telangana,Khalistan,Bodoland,gurkhaland,Eelam etc., but……….? REVOLUTION WILL BE POSSIBLE IF YOU PEOPLE ARE READY ONLY..BE READY FOR A DEMOCRATIC REVOLUTION

  • // DEMOCRATIC REVOLUTION //

   பகற் கனவு … ஆயுதமின்றி மயிரையும் புடுங்க முடியாது காஷ்மீரில் …

   • Naan oruginaintha Indiavil Indhiargallaga vazhum mattra ina makkalai kuripitten…yaar yaaruku ena mozhi theriyumo adhil pesi thaan puriya vaikka mudiyum…(kashmir,north-east sates)thuppakki mozhi mattumthaan puriyum endral adhil pesalam thavarillai…

 3. இப்போது தான் எழுதிக் கொண்டிருந்தேன் ;காஷ்மீர் குறித்து ..அதற்குள் நீங்கள் ,நானெடுத்து வைத்திருந்த அதே புகைப் படத்துடன் …

 4. […] This post was mentioned on Twitter by வினவு, சங்கமம். சங்கமம் said: “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”: விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எ… http://bit.ly/deSuTE […]

 5. *** 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்****

  …கண்டிப்பாக உங்கள் வார்த்தைகள் வெகு விரைவில் நடந்து அம்மக்களுக்கு விடியல் வரும் என்பது உண்மை. மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் அரசாங்கங்களுக்கு அது ஒரு படிப்பினையாக அமையும்.

 6. கடந்த 2009 ஏப்ரல் மாதம் தமிழீழ மக்களை… சிங்கள அரசு… ஹிந்தியாவின் துணையுடன் நடத்திய போது… உணர்ச்சி வசப்பட்டு பேசிய வைகோவை ஆங்கில ஊடங்கத்தில் பிரிவினைவாதி என சொன்ன ஹிந்தியாவின் ஏவல் அடிமை உமர் அப்துல்லாவின் ஏவல் படையும்… பாசிச ஹிந்தியவின் கொடூர படையும் என்ன அடக்குமுறை செய்தாலும்… அந்த மண்ணுக்கு சொந்தகாரர்களான காஷ்மீர் மக்களின் விடுதலையை தடுக்க முடியாது…

 7. விடுதலை கேட்டு போராடும் காஷ்மீர் மக்களின் கோரிக்கை தவறு.மக்களுக்காக இல்லாமல் ஓட்டுக்காக ஆட்சி செய்யும் தலைவர்களின் செயல்கள் தவறு ..”சுயநிர்ணயத்துக்கான அவர்களது போராட்டம் வெல்லும்” என்று கூறி கட்டுரை எழுதிய பாலனின் கருத்து தவறு…என் கருத்து, இந்தியா ஒரு கூட்டு குடும்பம். அதை கலைக்கவோ சிதைக்கவோ எந்த சக்தியாலும் முடியாது.

  • அன்பு சூர்யா!
   மேலே “சசியின் டைரி” என்றொரு லிங்க் இருக்கின்றது.தயவு செய்து படித்துப் பாருங்கள் தோழர்!

   • neo, நான் சசியின் கட்டுரைகளை படித்து இருக்கிறேன் .அனைத்தும் உண்மை என்று ஒப்புகொள்ளமுடியாது. நாம் இன்றயை சூழ்நிலையில் 1948 சுயநிர்ணய உரிமை என்ற ஒன்றை எடுத்துக்கொண்டு காஷ்மீருக்கு விடுதலை கொடுத்தால் அது ஒரு தீவிரவாத ஆப்கானிஸ்தான் அல்லது சர்வதிகார பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டினை உருவாக்குவது போல் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த இந்தியாவில் பல பின்விளைவுகளை எற்படுத்தும்.சரித்திரங்களை படித்துவிட்டு இன்றைய பிரச்சனைகளை காலத்துக்கு ஒவ்வாத கண்ணோட்டத்துடன் தீர்வுகாண முடியாது.

    • Mr. surya ////அது ஒரு தீவிரவாத ஆப்கானிஸ்தான் அல்லது சர்வதிகார பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டினை உருவாக்குவது போல் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த இந்தியாவில் பல பின்விளைவுகளை எற்படுத்தும்.சரித்திரங்களை படித்துவிட்டு இன்றைய பிரச்சனைகளை காலத்துக்கு ஒவ்வாத கண்ணோட்டத்துடன் தீர்வுகாண முடியாது.//// ஏன் மதநல்லினக்கமுள்ள மலேஷியா. மாலத்தீவு போன்ற நாடுகளாக மாற வாய்ப்பில்லைய என்ன புலம்பல் இது பிரிட்டிஷ்காரன் சுகந்திரம் கொடுக்கும் போது ஒங்கள மாதிரி யோசித்து இருந்திருக்கனும் தப்புச்சிட்டீங்க

 8. VINAVU, Another immatured article ,.. The same was enacted in Punjab by pakistan in early nineties and SIKHS were provoked to fight for Khalistan which existed only in speeches delvered by sikh radicals.

  The author without knowing the geography of Kashmir has written this article,..Even if we give freedom to kashmir it will be occupied by pak forces and it will become another Afghanistan,..

  YES there is a very big lapse in central government to treat this as a law and order problem ; Instead they must CUT THE pakistani hands who provoke and organise stone throwings on security forces..

  ACHA do you know few lakh kashmiri pandits(Oops Brahmins!) have migrated to other parts of India and living in refuge camps..

  I bet you will not write anything about this since the sufferes are brahmnis …

  These type of articles dont even deserve to be published in Vinavu…

  • உலகத்தில் உள்ள எல்லா ரவிகளுக்கும்…

   காஷ்மீரத்தில் நடப்பதை கண்டித்து தலையால் தண்ணி குடிக்கிறீர்கள். ஹிந்துக்களை அப்பாவியாக கொல்லப்படுகிறார்கள் என்று காஷ்மீரத்தில் இருந்தது கன்னியாகுமரி வரை ஒரே மாதிர் ஓலம. அதில் ஒரு தவறும் இல்லை. முற்றிலும் சரி.

   அனால சூத்திர தமிழன் இலங்கையில் செத்தா அதை ஆதரிக்கிறீர்கள். அவங்களும் தான் ஹிந்து! அங்க மட்டும் ஹின்துக்கள் சாகலாமா?

   • ஆட்டையாம்பட்டி அம்பி, அது மட்டுமா சொன்னங்க குஜராத் கலவர சமயத்தில் அப்துல் கலம் சுற்றுபயனம் குஜராத்துக்கு போனரு அப்ப கலவரத்துல பதிக்கப்பட்டு தற்காலிக நிவாரன முகமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திச்சு ஆறுதல் சொல்லுவார் என்று ஊடகங்கள் விளம்பரபடுத்தியபோது நம்ம தொகடியா இன்ன சொன்னாரு தெரியுமா. வேனுமென்றால் அப்துல் கலம் கஷ்மீர் சென்று தீவிரவாதிகளால் பதிக்கப்பட்ட கஷ்மீர் பன்டிட்கலுக்கு ஆறுதல் சொல்லட்டும் அப்புடியின்னு அறிவுரை சொன்னாரு எனா பார்ப்பனர்கள் மட்டும் தான் மனிதர்கள்

    • நண்பர்களே, நான் ஏட்டிக்கு போட்டியாக பேசவில்லை. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக மற்றும் மதசார்பற்ற நாடு இந்தியா …இதுக்கு ஏன் மலேசியாவுக்கும் மாலதீவுக்கும் போகவேண்டும் mr.pakki. உரிமைக்காக போராடலாம் ஆனால் உரிமை என்ற பெயரில் மற்றவர் உயிரை பறிக்க போரடதே.தனி நாடு என்பது உரிமையில்லை தீவிரவாதம்.அதை ஆதரிப்பவர்களும் தீவிரவாதிகளே.காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இது காஷ்மீர் மக்களுக்கும் தெரியும் .ஏன் கட்டுரை, கருத்துக்கள் என்ற பெயரில் நாட்டில் கலக விதையை தூவுகிறீர்கள்.

 9. This comment is not related to this article…

  Idhuvarai naan pagutharivuvaadhi,periyar pin nadappavan endru koorivandha karunanidhiyin moogamoodi kizhindhu vittadhai gavanitheergala thozhargale..,Idhu naal varaiyil kalainger tholaikaatchiyil Hindukkalin pandigaigali pothu vidumaraidhina sirappu nigazhchi yendru oli parapinaargal(Each and every sunday is holiday only.,but they never telecasted spl programmes for sundays!!!?)..Aanal kadantha buthanandru saayam veluthupoivittathu..Aadi kiruthigai endru (Illatha)kadavulgalin paadalgalaiyum, poojaigalai Murugan vazhipattu thalangalil irrundhu neradi olipparappu seithukondirunthaargal..ivargalukellam periyar medaiyil pesavatharkkum bannaer-il pottukolvadharkku mattumae thevaipadugirargal..

 10. Makkal ketta udane pirichu kodutha makkalatchi irukkadhu. India oru kootu kudumbam, Oru kuruvi koodu. adhai kalaikka nenaikaadheenga please. Evlo kastapattu ondru patta Indiavai uruvakkinom enbadhyum marandhu vidakoodahu.

 11. பிரிவினை சக்திகளை ஆதரிக்கும், உம்முடைய செயல்,கண்டிக்கத் தக்கது! ஏன் திபத்திய மக்களின், சுதந்திர தாகத்தை, உங்களின் கொக்கிப் படையினர் ஆதரிப்பதில்லை! திபெத்தை, அடக்குமுறையில் இருந்து விடுவித்துவிட்டு, பிறகு இங்கு வந்து, யாரெல்லாம் விடுதலை கேட்கிறார்களோ, போராடி வாங்கி கொடுங்கள்!

  • ரம்மி … இந்த கேள்வியை சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் போராடும் போது வெள்ளைக்காரன் முன்னால் சென்று சொல்லியிருந்தால் உங்களை சர். ரம்மி என்று அழைத்திருப்பார்கள்.

   ”மாட்சிமை பொருந்திய பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து இந்தியா என்ற தனிப் பகுதிக்கு மட்டும் சுதந்திரம் வேண்டும் என்று கொக்கரிக்கும் பிரிவினைவாதிகளை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று முழக்கமிட்டிருப்பார் ரம்மி ..

   என்ன ரம்மி சரி தானே ?.. வாழ்க உங்கள் தேசப் பற்று .. வளர்க வளமுடன் ..

   • திரு.செங்கொடி மருது!
    என் கேள்வி, திபெத்தைப் பற்றி!
    புரட்சியால் வளர்ந்த செங்கொடி சீன ஆதிக்கத்தில், திபெத் திண்டாடுவதை ஏன் இந்திய செங்கொடித் தோழர்கள், எதிர்ப்பதில்லை! திபெத்தியப் புரட்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை?
    அடுத்த தொழிலாளர் தினத்தன்று, திபெத்துக்கு ஆதரவாக, சீனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை மெரினா சாலையில்,ஆர்ப்பாட்டத்தை தோழர்கள், நடுத்துவார்கள் என்று கனவு கண்டேன் தோழா!

    • இதோ .. அடுத்த அறிவுஜீவி.. இன்றும் சீனாவை கம்யூனிச நாடாக புதிய கண்டுபிடிப்பை சாதித்திருக்கும் அடுத்த அப்துல்கலாம். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியானது தேசிய இன விடுதலையை ஆதரிக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் அல்லாத முதலாளித்துவ சீனா ஆதரிக்காததற்கு காரணம் தனது சந்தை வேறு நாடுகளுக்கு கை மாறிவிடும் என்ற அச்சத்தினாலேயே … மேலும் உங்களின் கவனத்திற்கு …

     ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு தேசிய இனத்தின் போராட்டத்தில் நோக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில் அந்த போராட்டம் ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்தின் வால் பிடிக்கும் போராட்டமாக இருக்கும் பட்சத்தில் அதனை ஆதரிக்க இயலாது.

     தேசிய போராட்டமானது மற்ற எந்த ஏகாதிபத்தியங்களின் உந்துதலோ தலையீடோ இல்லாமல் மக்களின் தன்னெழுச்சி போராட்டமாக இருக்கும் பட்சத்தில் தான் உண்மையான மக்களுக்கான் போராட்டமாக இருக்க முடியும்.

     எனவே அமெரிக்க , இந்திய ஏகாதிபத்தியங்களின் வால் பிடிக்கும் தலாய்லாமாவின் பிற்போக்கான போராட்டத்திற்கு ஆதரவு தர முடியாது.

   • மருது!

    நீர் நியூட்டனுக்கு தாத்தாவோ? சீனா கம்யுனிச நாடல்ல என்று, அது எப்பொது அய்யா சொன்னது!? பிரமாதக் கண்டுபிடிப்பு!

    போராட்டம் செய்ய வேண்டியது, ஆதரவு கொடுக்க வேண்டியது ஒடுக்கப்பட்ட,அடக்கப்பட்ட திபெத்திய மக்களுக்குத் தானே ஒழிய, தலாய் லாமாவுக்கு அல்ல!

    சரி! சீனா தான், உனது கூற்றுப்படி, முதலாளித்துவ நாடாயிற்றே! பிறகு ஏன் அதை, எதிர்க்க உம்மக்களுக்குத் தயக்கம்! மயக்கம்!

    சீனா போன்ற ஒரு பயங்கரவாத நாட்டை, திபெத்திய மக்களால், பிறரின் ஆதரவின்றி,எதிர்க்க முடியுமா?

    • To RAMMY …
     ********************************
     நீர் நியூட்டனுக்கு தாத்தாவோ? சீனா கம்யுனிச நாடல்ல என்று, அது எப்பொது அய்யா சொன்னது!? பிரமாதக் கண்டுபிடிப்பு!

     *^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

     ஹா ஹா ஹா .. இன்னைக்கு இந்தியாவில் இருக்கக் கூடிய சி.பி.எம். , சி.பி.ஐ கூட தாம் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக் கொள்கிறார்கள் .. அட நம்ம கமலஹாஸன் கூடத்தான் ஒரு கம்யூனிஸ்ட் பற்றாலன் என்று சொல்கிறார். அது போலத் தான் சீனா தான் ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லிக் கொள்கிறது.

     கம்யூனிஸ்ட் என்று பீத்திக் கொள்பவன் எல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல .. கம்யூனிஸ்ட்டாக வாழ்பவன் தான் கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் அமைப்பாக தனது ஒவ்வொரு செயலிலும் செல்படும் கட்சி தான் கம்யூனிஸ்ட் கட்சி .. உழைக்கும் மக்களுக்கான சட்டங்களை இயற்றி அதனை நடைமுறைப் படுத்தும் நாடு தான் கம்யூனிஸ்ட் நாடு … சும்மா நா ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்.. நானும் பெரிய ரவுடி தான் என்ற வடிவேலு காமெடி போல் .. நானும் கம்யூனிஸ்ட் தான் என்று ஊழையிட்டுக் கொண்டு மக்கள் விரோத போக்கை கொண்டு இயங்கும் சீனா கம்யூனிஸ்ட் நாடல்ல ..

     புரியுதா ரம்மி மாமா ..
     ************************************************************************************************************************************************
     போராட்டம் செய்ய வேண்டியது, ஆதரவு கொடுக்க வேண்டியது ஒடுக்கப்பட்ட,அடக்கப்பட்ட திபெத்திய மக்களுக்குத் தானே ஒழிய, தலாய் லாமாவுக்கு அல்ல!
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
     ஓ .. அப்படியா … அந்த மக்கள் யாரைப் பின் தொட்ர்ந்து நிற்கிறார்கள் ?..
     யாரை முன்னிலையாய் வைத்து போராடுகிறார்கள் ?.. அந்த முன்னிலை / தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் பணிகிறார்கள். ஆக அங்கு இருக்கும் தலைமை எதை நோக்கி செல்கிறது என்பதை வைத்தே .. அந்த போராட்டத்தை ஆதரிப்பதா இல்லை எதிர்ப்பதா என்று முடிவு செய்ய இயலும்.

     ************************************************************************************************************
     சரி! சீனா தான், உனது கூற்றுப்படி, முதலாளித்துவ நாடாயிற்றே! பிறகு ஏன் அதை, எதிர்க்க உம்மக்களுக்குத் தயக்கம்! மயக்கம்!
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

     எங்களுக்கு என்ன தயக்கம் ?.. எங்கு மயக்கம் ?.. சீனா இந்தியாவில் ஏகாதிபத்திய கால் பதித்தால் அவனையும் எதிர்ப்போம் ..
     எதில் எங்களுக்கு எதற்கு தேவை மயக்கம் ?..

     கம்யூனிஸ்ட்டுகளுக்கு சீனா உதவும் என்று உங்களது ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளில் சொல்லித் தந்ததை மூளை வரை ஏற்றி வைத்திருக்கிறீர்கள். ஆனால் தற்போது சீனா கம்யூனிஸ்ட் நாடே அல்ல என்பதை எப்படி மறந்தீர்கள் ?..

     ஆகையால் சீனாவும் அமெரிக்காவும் முதலாளித்துவ நாணயத்தின் இரு பக்கங்கள்.
     அதனால் எங்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்று தான் … சீன நாட்டின் முதலீடுகளை விட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகள் தான் இந்தியாவில் அதிகம்.

     **************************************************************************************************************
     சீனா போன்ற ஒரு பயங்கரவாத நாட்டை, திபெத்திய மக்களால், பிறரின் ஆதரவின்றி,எதிர்க்க முடியுமா
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
     ஏன் முடியாது ?.. இந்தியா போன்ற கொடூரமான நரிகள் ஆளும் நாட்டை பிறரின் ஆதரவு இன்றி வடகிழக்கு மாநிலங்களும் , கஸ்மீர் மக்களும் வீதியில் வந்து எதிர்க்கவில்லையா ?.. அவர்கள் என்ன அமெரிக்காகாரனை கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ண சொன்னார்களா ?.. இல்லை உங்கள் எதிரி பாக்கிஸ்தானை கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ண சொன்னார்களா ?..

     காஸ்மீர் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை திபெத்திய போராட்டங்களுடன் ஒப்பிடுவதே உங்கள் காமெடியின் உச்சகட்டம் ..

     ************************************************************************************************************

    • @ rammy

     சீனா – திபெத் பற்றி அப்புறமா பேசி கொண்டே ரம்மி ஆடலாம்.. இப்ப காஷ்மீரில் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது, இதற்கு பதில் சொல்லுங்க!

     காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியென்றால், அங்கு சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு குறிப்பாக சிறார்களைக் கூட கொன்று குவித்ததற்கு நீங்களும் போராடி இருக்கலாமே? உங்கள் கூற்றுப் படி அவர்களும் இந்தியர்கள் தானே?

     காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியா இல்லையா என்பது இருக்கட்டும்! காஷ்மீர் பிரிந்து செல்வதை எதிர்க்கும் இந்திய ‘பற்றாளர்’ நீங்கள்! சரி இருந்துவிட்டு போகட்டும்…

     இந்தியாவின் அங்கமாகவே வைத்துக்கொண்டாலும், குறைந்த பட்சம் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடும் மக்களை ஆதரிக்க உங்களை எது தடுக்கிறது?

     மக்கள் விடுதலைக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடும் காரணத்தால், நீங்கள் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துகிறீர்களா???

   • மருது தாத்தா! நரிக்கு நாட்டாமை தந்தால் என்பதைப் போல, எல்லாரும் அயோக்கியன், தான் மட்டுமே யோக்கியன்! எல்லாக் கம்யூனிஸ்டும் போலி, வன்முறைக் கம்யூனிஸ்டுகள் தான் அசல்!

    காஷ்மீர் கல்லெறியும், தானே நடப்பதில்லை! கல்லெறியும் வன்முறையே! கல்லெறிபவனிடம் காந்தீயமா பேச முடியும்!? உலகத்தில் எந்த மூலைக்கும் சென்று,தொடர் கல்லெறி நடத்திப் பாருங்கள்! குண்டு பரிசா? பூக்கள் பரிசாவென்று?!

    சீனாவை பற்றிய, உமது மழுப்பல்கள், நல்ல செங்கொடி வழி, மூளைச் சலவைகள்!

    திபெத்திய மக்கள் விடுதலைக்கு போராடுவது, உமக்கு கேலிக் கூத்தாக இருக்கிறது! இது தான் கோயபல்ஸ் பிரச்சாரம்!

    yes Mr.AKKAKI AND TIPPU,

    ME ALSO KNOW SOME ENGLISH, LIKE YOU PEOPLE!

    VIOLATIONS OF HUMAN RIGHTS NOT ONLY FROM GOVT.! ALL VIOLENT AND WARING PARTIES DOING THE SAME!

    VIOLATIONS OF RIGHTS ARE PART AND PARCEL OF ALL VIOLENT ACTS! you cant victimize one side!

 12. //YES there is a very big lapse in central government to treat this as a law and order problem ; Instead they must CUT THE pakistani hands who provoke and organise stone throwings on security forces..// அப்படியா /? பதிவில் உள்ள புகைப்படத்திலேயே, பாகிஸ்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் என்று மக்கள் போராடுவதைப் பாருங்கள். காஷ்மீர் பற்றி நிறையப் பதிவுகள் வினவில் வந்துள்ளன. படித்துப் பாருங்கள். காஷ்மீர் இளைஞர்கள், பாக் ஆதரவு தீவிரவாதிகளாலும், இந்திய இராணுவத்தாலும் கொல்லப்படுகிறார்கள். பாகிஸ்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் – தனிநாடு வேண்டும் என்று போராடும் காஷ்மீர் விடுதலை இயக்கங்கள் பாகிஸ்தானிய, இந்திய திட்டமிட்ட சதியில் காணாமல் போய்விட்டன.

 13. குருவிக்கூட்டைக் குரங்கு காப்பாத்தும் கதையை உங்களிடம்தான் கேட்கவேண்டும் நண்பர் வனராஜா. அறுபது வருடத்துக்கும் மேலாய்ப் போராடுகிறார்கள். கேட்ட உடனே கொடுத்துட்டா…! மக்களாட்சி இருக்காதுங்குறீங்களே… இருக்குறது மக்களாட்சியான்னு என்னைக்காச்சும் யோசிச்சுப் பாத்தீங்களா? இருக்குறது மக்களாட்சியா இருந்தா, ஒருக்கால்.. பிரிச்சுக் கேட்குற வேலையே கூட இருந்திருக்காது. பிரிந்து போயிருந்தாலும், தோழமையுடன் இருக்கும், அல்லது சேர்ந்துகொள்ள விழையும். குருவிக் கூட்டையும் மரத்தையும் யாராவது சங்கிலியால் இணைப்பார்களா?

 14. இந்தியா ஒரு கூட்டுக் குடும்பம் என்கிறார் சூர்யா. கூட்டுக் குடும்பத்தில் குடுமிப் பிடி சண்டையும் குத்தும் வெட்டும் விழும் அழகை இன்னும் எத்தனைத் தலைமுறைக்கு விலகி நின்று ரசிக்க நினைகிறார்? உருளுவது யார் தலையோ என்பதாலா?

 15. பஞ்சாப் ரவி மற்றும் அவருடன் கருத்தொற்றுமையைத் தெரிவித்தவர்களின் பார்வைக்கு,
  The author without knowing the geography of Kashmir has written this article,..Even if we give freedom to kashmir it will be occupied by pak forces and it will become another Afghanistan,..
  பிரிட்டிஷ் காரன் நமக்கு சுதந்திரம் வழங்கினான் என்று படித்துப் படித்து, ஒருவர் மற்றவருக்கு சுதந்திரத்தை வழங்க முடியும், மற்றவர் அதை கையேந்தி வாங்கிக் கொள்ள முடியும் என்ற வகையில் வளர்ந்திருக்கும் சிந்தனை, அடிப்படையில் ஒரு அடிமை சிந்தனையாகவோ, அல்லது அடக்குமுறை சிந்தனையாகவோ இருக்கிறது என நினைக்கிறேன்.
  ராணுவமும், போலீசுக்காரனும் கூட சொன்னதக் கேட்க மறுக்கிறார்களே அவர்களை வைத்து இவர்கள் எப்படி இந்தியாவை ஆள்வார்கள் என்றுதான் பிரிட்டிஷ்காரன் தயங்கினான். அதன் பின்னால் மறைந்திருப்பது அவனது சுயநனம்.
  காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுத்தால் அது ஆப்க்கானிஸ்தான் ஆயிடும், பாக் படை அதை ஆக்கிரமிச்சுடும். சரித்திரம் தெரியாது, பூகோளம் தெரியாது என்பது எந்த வகை என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
  YES there is a very big lapse in central government to treat this as a law and order problem ; Instead they must CUT THE pakistani hands who provoke and organise stone throwings on security forces..
  ‘POK’ யை ஆதரிப்பவர்கள் ‘IOK’ யை எதிர்க்கிறார்கள், குமுறுகிறார்கள். ‘IOK’ யை ஆதரிப்பவர்கள் ‘POK’ யை எதிர்க்கிறார்கள், குமுறுகிறார்கள். இதில் உங்கள் கருத்து எந்தத் தரப்பினது என்பது தங்களுக்கே தெரியும். சீவப்படும் தலை எப்படியும் உங்களுடையதாக இருக்கப் போவதில்லை. ஆனாலும், இந்த இரு தரப்புக்கும் ’O.K.’ .. OKAY தான். அது அவரவர் சொத்துப் பிரச்சினை. ’O.K.’ யை மறுப்பவர்கள்தான் அது ’I’ ஆக இருந்தாலும் ‘P’ ஆக இருந்தாலும் இரண்டும் ஐ.பி. கொடுத்து ஓடவேண்டும் என விழைகிறார்கள். ‘K’யின் – காஷ்மீர மக்களின் நியாயத்தை அங்கீகரிக்கிறார்கள்.
  ACHA do you know few lakh kashmiri pandits(Oops Brahmins!) have migrated to other parts of India and living in refuge camps.. I bet you will not write anything about this since the sufferes are brahmnis …
  காஷ்மீரத்து ரோஜாக்களை இதழிதழாய்ப் பிய்த்தெரிந்து அதை முட்புதராக்கியவர்கள், குத்துது குடையுது என்கிறார்கள்… தன் பிரச்சார பலத்திற்காக. காஷ்மீரத்து சுஃபி சகோதரர்களுக்கு இல்லாத நேசம், காஷ்மீரத்துப் பண்டிதர்கள் மேல் தங்களுக்கு வந்த மர்மம் என்ன? இந்த சதித்தனமான வரலாற்றைப் பக்கச் சார்பற்றுப் பார்த்தால், தங்கள் பக்க-வாதத்தின் காரணம் புரியும். நோய் நீங்கும் என்று கருதுகிறேன்.. விரும்புகிறேன். எனவே, தொடர்ந்து வினவுங்கள் … உங்களையும்.

  • //”The Kashmir valley was mostly inhabited by many people that included sun worshippers, Zorastarians, and Buddhists. Kashmir became an important centre of Brahman learning. Brahaman art, literature and philosophy flourished. After the 8th century the message of Islam was heard in the Valley. It was the Sufis who carried the message of Mohamamd to Kashmir”. //mr.anamadeyan,உங்களுக்கு தெரியமா சுஃபி மக்களின் வரலாறு. அவர்கள் ஒன்றும் காஷ்மீரின் பூர்வக்குடிகள் அல்ல.எனவே வரலாறு தெரியாமல், கதைகளை எழுதி இந்திய மக்களிடையே (காஷ்மீர் மக்களும் இந்தியர்களே )பிரிவினையை தூண்ட வேண்டாம்.இந்திய தாயை வணங்குவோம் .உலக மக்களை நேசிப்போம் .தீவிரவாதத்தை ஒழிப்போம்.இனி பூமியில் எந்த ஒரு இடத்திலும் எந்த உயிரும்,ஒரு செல் உயிராக இருந்தாலும் தீவிரவாதத்துக்கு பலியாகவேண்டாம். மனித நேயம் காப்போம்.

   • நீங்க சுகந்திரம் கொடுத்த பாகிஸ்தான் மாதிரி ஆயிடும் ஆப்கான் மாதிரி ஆயிடுமுன்னு பயமுறுத்துவீக நான் பதிலுக்கு மலேஷியா மாதிரி மாலத்தீவு (இதுவும் சூபி மக்கள் நிறைந்த நாடு) போன்றுன்னு சொன்ன நான் தீவிரவாதிய நல்லயிருக்கு ஒங்க ஞாயம் இப்படித்தான் நேபாளத்தில் புரட்சி ஏற்பட்டு கம்யூனிஸ்ட்கள் கை ஒங்கியதும் பீகாருக்கு ஆபத்து ஜர்கன்ட்க்கு ஆபத்துன்னு புலம்கீன்னு கேடந்தீக

 16. அண்ணாச்சிகளா! இதற்கு பதில்?

  காஷ்மீரத்தில் நடப்பதை கண்டித்து தலையால் தண்ணி குடிக்கிறீர்கள். ஹிந்துக்களை அப்பாவியாக கொல்லப்படுகிறார்கள் என்று காஷ்மீரத்தில் இருந்தது கன்னியாகுமரி வரை ஒரே மாதிர் ஓலம. அதில் ஒரு தவறும் இல்லை. முற்றிலும் சரி.

  அனால சூத்திர தமிழன் இலங்கையில் செத்தா அதை ஆதரிக்கிறீர்கள். அவங்களும் தான் ஹிந்து! அங்க மட்டும் ஹிந்துக்கள் சாகலாமா?

  • You are good in twisting news . We are talking about India, Indian Kashimir which is controlled by india….why you are jumping to Srilanka issue ??

   Srilanka even never care about Obama or UNO …then you are assuming they will care about india ??

   1. Some of you talking about kashimir can become like malaysia ?? What you know about malaysia ? In malaysia if you are minority you are dead …in india only govt gives subsidy, reservation..etc for minorities in malaysia they write rules to crush minority … no muslim country have human rights or simple ethic. Show me any one ?

   2. You all cry india should put election for kashmir people ?? You think india is fool ? We spent billions for them for the past 60 years, we lost so many lives.. now if india have himalaya as a safe guard from china and paki …if kashimir given out then tomorrow paki will come there and easily infiltrate inside india …then why india need to be a fool ??

   Do you all know how many agreements are not followed by paki and many other country ??

   3. Prob in indian kashmir ? Yes we have free media that can show you what ever prob happens anywhere in india …in pak , china you cant hear anything. Are andra, TN-KN, TN-KR dont have probs???

   If you are immature you will ask separate country for everything, even after separated another group will form and ask to separate again.

   4. Why you all talk Muslims are like so innocents ???

   Yes its very sad and punishable things about gujarat … but its not because of Hindu – Muslim…its about Majority Vs Minority……how about last year china state where muslim are majority and those Muslim killed so many Chinese ?… did you talk about that ? or how about paki muslims fight them self and killing game between two muslim groups ?? …. the actual prob is people need education and good wealth…until that every human will act like animal only… we have to fight those criminals…

   5. Can you show me a developing country which giving so much reservations, benefits..etc to minority other than india ?? How about Middle east muslims ? how about malaysia ??

   Indian Muslims if they talk bad about inida means they are talking bad about their own mother.

   There is no king in india, everyone has their voice…. if you blame congress then you vote for the one u like or u can be stand in the election too and get votes of people (if you can) then change the law as like wish…no one going to stop it.

   But please stop talking non sense about india … this is to vinavu

   • ///இந்தியன் said..
    You are good in twisting news . We are talking about India, Indian Kashimir which is controlled by india….why you are jumping to Srilanka issue ??///

    திரும்பிப்பார்!, சாரி மன்னிக்கணும், திரும்பிபாருங்கள் இந்தியன் அம்பி அவர்களே! எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக எழுத தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    Please turn back and see the old issues written by முழு முட்டாள், சாரி மன்னிக்கணும், முழு மொட்டை writing in சாணி பேப்பர் in a stupid fortnightly that is read by ALL அவாள், and our, சூத்திர கண்மணிகள், who are nothing but: இரு கையால் ஒரே ஒரு சொம்பை, அவாளுடைய சொம்பை, தூக்கும் அடிவருடிகள். நான் சொல்லும சொம்பு வேற!

    All along this has been portrayed as a war between Hindus and Muslims, while, the fact it is not a war at all in reality; it is just to protect the Kashmiri Bandits. What pandits? If you know a couple of slogans, you are a Bandit. Period. Unnecessarily, these bigots have created a deep-rooted animosity between two major religions, in order to control us: I mean, to control our சூத்திர கண்மணிகள் in the name of Hindus. அடி ஒதை வாங்கிரதிர்க்கு எங்கள் சூத்திர கண்மணிகள். வெல்லம் சாப்பிடுவது அவாள் தான்!

    Please read the constitution, etc as what is said about Kashmir. Kashmir does not belong to India. Period. Leave it for voting. These Hindi bigots wanted to turn the country upside down to support the kashmiri Bandits. Their argument was that Hindus were killed. Now when we, சூத்திர கண்மணிகள், questioned that Sri Lankan Tamils are also Hindus, these bigots changed the argument…

    Now, we, சூத்திர கண்மணிகள், are also equally educated though we cannot match you in your mastery over English, however, we can question your lies…damn lies…

    • Seriously i dont understand what you are tying to say.. anyway i know my english is not good … but i no need to ashame for that right ? Its just a tool to communicate … Please stick with the topic instead of talking about unrelated issues … 🙂

   • எனது அருமை நண்பர் இந்தியனுக்கு .. நீங்கள் விருப்பப் படாவிடாலும் உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு அவ்வளவு இஸ்டம் நண்பா ?.. உங்கள் சந்தேகங்களுக்கு பதில் சொல்வது ரொம்ப சாலியா இருக்கு .. :p

    1. Some of you talking about kashimir can become like malaysia ?? What you know about malaysia ? In malaysia if you are minority you are dead …in india only govt gives subsidy, reservation..etc for minorities in malaysia they write rules to crush minority … no muslim country have human rights or simple ethic. Show me any one ?

    இஸ்லாமிய நாடுகளில் பல நாடுகள் அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் நாடுகளாகிவிட்ட இந்த நிலையில்,
    ஒரு மிகப் பெரிய தேசியப் போராட்டத்தை சந்தித்திருக்கும் இஸ்லாமிய நாடான ஈராக் நாட்டின் மக்களின் போராட்டம் அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைக்கும் என்பது உறுதி. மற்றபடி நீங்கள் கூறிய படி இஸ்லாமிய நாடுகளில் கண்டிப்பாக இஸ்லாமியர்களைத் தவிர்த்து வேறு மக்களுக்கு சரியான உரிமை கிடைக்காது. அப்புறம் … இந்தியா என்ன சலுகைகள் கொடுத்திருக்கிறது இஸ்லாமியர்களுக்கு ?..

    ஒரு வேளை இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை கூட இல்லாமல் சிறையில் ஆண்டு கணக்கில் வைத்திருந்து சிறைச்சோறு போடுகிறார்களே .. அதை சலுகைகளில் சேர்த்து விட்டீர்களா?..

    இல்லை கலவரத்தில் 3000 இஸ்லாமிய மக்களையும் , போலி என்கவுண்டரில் பல இளைஞர்களையும் போட்டுத் தள்ளி சொர்க்கத்திற்கு முன்பதிவை இந்திய அரசின் சொந்த செலவில் செய்ததை ரிசர்வேசன் என்று சொல்கிறீர்களா ?..

    பல இடங்களில் குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ்சை வீடியோ ஆதாரங்கள் இருந்தும் இன்னும் தடை செய்யாமல் இருக்கும் இந்திய அரசின் இந்து மத பாசத்தை என்ன சொல்லி மெச்சுவது என்று எனக்கும் தெரியவில்லை இந்தியன் நண்பா …
    ஓ ,. இது தான் மதச் சார்பற்ற இந்தியாவா ?.. இந்தியனுக்கும் , மோடிகளுக்குமே தெரியும் ரகசியம்…

    2. You all cry india should put election for kashmir people ?? You think india is fool ? We spent billions for them for the past 60 years, we lost so many lives.. now if india have himalaya as a safe guard from china and paki …if kashimir given out then tomorrow paki will come there and easily infiltrate inside india …then why india need to be a fool ??

    பில்லியன் கணக்கில் செலவளிக்க கூறி அந்த மக்கள் அன்றிலிருந்து இன்று வரை போராடவில்லை. இந்திய முதலாளிகளுக்கு நிரந்தர சந்தையாக காஸ்மீரைப் பயன்படுத்திக் கொல்லவும்(எழுத்துப் பிழை அல்ல), வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் மூலம் தனியார் முதலாளிகளின் வருமானத்தை பெரு(பொறு)க்கவும் தான் இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்து பில்லியன்களை வாரி இறைத்திருக்கிறது இந்தியா . பல ஆயிரம் அப்பாவி இராணுவ வீரர்களின் உயிரையும் அதற்கு காவு வாங்கி இருக்கிறது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த முதல் சதிகாரனான இந்தியாவையே எதிர்த்துக் கல்லெறிந்த மக்கள், இனியும் இன்னொரு சதிகாரனின்(பாகிஸ்தான்) கையில் சிக்கமாட்டார்கள் என்பது உறுதி. அது அந்த மக்களுக்கு தெரியும். ஆடு நனைகிறது என்று உயர்திரு ஓநாய்கள்(மரியாதை) அழுக வேண்டாம். காஸ்மீருக்குள் நிழைந்தால் தானே இந்தியாவுக்குள் நுழைவதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டும்.
    ஆகையால் நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்களுக்காக காஸ்மீர் மக்கள் காப்பாற்றுவார்கள். மற்றும் இந்திய இராணுவப் படை வீரர்கள் இமய மலையின் கடுங்குளிரில் மாட்டிக் கொண்டு கஸ்டப்பட தேவையில்லை.

    Do you all know how many agreements are not followed by paki and many other country ??

    அது அனைத்தும் முதலாளியத்தின் வெளிப்பாடு காரணமாகத் தான் என்று நாங்கள் கூறுகிறோம். மதத்தினால் அல்ல ..

    3. Prob in indian kashmir ? Yes we have free media that can show you what ever prob happens anywhere in india …in pak , china you cant hear anything. Are andra, TN-KN, TN-KR dont have probs???
    If you are immature you will ask separate country for everything, even after separated another group will form and ask to separate again.

    ஓ … பிரீ மீடியாவா ?.. அந்த பிரீ மீடியா தண்டகாரன்யாவில் நடந்த கொடுமையைக் காட்டியதா ?..
    கயர்லாஞ்சியில் நடந்த கொடுமையை விவாதித்ததா ?.. இலங்கையில் கொத்து கொத்தாக இனப்படுகொலை நடந்த போது வாயில் எதை வைத்துக் கொண்டிருந்தது உங்கள் மீடியா ?..
    அது ஏன் இம்மெச்சூராக இருந்தால் தான் தனி நாடு கேட்பார்களா ?.

    இப்படி யோசிப்பது உங்களுக்கு ஏன் கஸ்ட்டமாக இருக்கிறது . எப்படி தனித் தனி நாடாக இருந்த இலங்கை, பர்மா,இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை கிழக்கிந்தியக் கம்பெனி என்ற கம்பெனியின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சி செய்ததே .. அதே போலத் தான் தனி தனி நாடாக இருந்த தமிழ் நாடு , கேரளா , ஆந்திரம், கர்னாடகம், பஞ்சாப்,காஸ்மீர் போன்றவற்றை காங்கிரஸ் என்ற கம்பெனியின் மூலம் பார்ப்பனக் கும்பல் இராணுவத்தை காட்டி மிரட்டி ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தது.
    எப்படி இலங்கை , இந்தியா,பர்மா , அமேரிக்காவில் உண்மையான சுதந்திரப் போராட்டம்(உண்மையான மக்கள் எழுச்சிப் போராட்டம்) மற்றும் போலி சுதந்திரம் (காந்தி போன்றவர்களின் காயவாலித் தனமான போராட்டம்)நடந்து தனி தனி நாடாக சுதந்திரம் பெற்று பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேறினார்களோ அதே போல இன்று காஸ்மீர் போராட்டத்தை ஆதரிக்கலாமே நீங்கள் … உங்களுக்கு என்ன பிரச்சனை ?..

    4. Why you all talk Muslims are like so innocents ???
    Yes its very sad and punishable things about gujarat … but its not because of Hindu – Muslim…its about Majority Vs Minority……how about last year china state where muslim are majority and those Muslim killed so many Chinese ?… did you talk about that ? or how about paki muslims fight them self and killing game between two muslim groups ?? …. the actual prob is people need education and good wealth…until that every human will act like animal only… we have to fight those criminals…

    கிரிமினல் நரேந்திர மோடியை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் இந்தியனே .. இந்து முஸ்லீம் இல்லாமல் என்ன பிரச்சனைக்காக் அவர்களுக்கிடையே சண்டை வந்தது .. பாரதிய ஜனதா பார்ட்டிக்கும் முஸ்லீம் லீக்குக்கும் இடையே நடந்த சண்டையாக இருக்குமோ ?.. அப்படி தானே இந்தியன் ?..
    பீகார், ஒரிசாவில் குஜராத்தை விட படிப்பறிவும் குறைவு மற்றும் சொத்து வளங்களும் குறைவு ..
    அங்கே நடக்காத அந்தப் படுகொலை குஜராத்தில் மட்டும் ஏன் நடந்தது ?..
    கம்யூனிஸ்டுக்கள் சதியோ ? ..

    5. Can you show me a developing country which giving so much reservations, benefits..etc to minority other than india ?? How about Middle east muslims ? how about malaysia ??
    Indian Muslims if they talk bad about inida means they are talking bad about their own mother.
    There is no king in india, everyone has their voice…. if you blame congress then you vote for the one u like or u can be stand in the election too and get votes of people (if you can) then change the law as like wish…no one going to stop it.
    But please stop talking non sense about india … this is to vinavu

    சரியாக சொன்னீர்கள் இந்தியன். ஆமாம் .. எந்த நாடும் கொடுப்பதில்லை … ரிசர்வேசன் , சலுகைகள் எவ்வளவு சலுகைகள் கொடுக்கிறது இந்தியா ?.. என்னால் வேறு எந்த நாட்ட்டையும் காட்ட முடியவில்லை.

    சரி … இந்தியாவைப் போல் … சாதி தீண்டாமைக் கொடுமை உள்ள நாட்டை இந்த உலகில் காட்டுங்கள் பார்க்கலாம் .. ரிசர்வேசன் இருப்பது உங்களைப் போன்றவர்களின் கண்ணில் உறுத்திக் கொண்டு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். சரி .. இந்தியாவைப் பற்றி தவறாக பேசும் இஸ்லாமியர்கள் தங்கள் தாயைப் பற்றி தவறாகப் பேசுவதைப் போன்றதைப் பற்றி பிறகு பேசலாம். ஒரு இஸ்லாமியப் பெண்ணின் யோனிக்குள் கைவிட்டு அவளது கருப்பையில் இருக்கும் சிசுவை வெளியில் எடுத்துக் கொன்ற இந்து மத வெறியர்களின் வெறியாட்டத்தை ஏதோ நாயர்கடையில் சாயா குடித்ததைப் போல் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாங்குடையவர்கள் கருவில் தன்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தங்களின் தாயினை தவறாக எண்ணுபவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ?.. வெறும் வாயளவில் கூட வருத்தத்தை முழுமையாக (Yes its very sad and punishable things about gujarat … but its not because of Hindu – Muslim…) தெரிவிக்காத உம்மைப் போன்றவர்களை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை …

    ஏற்கனவே பலமுறை உங்களுக்கு தெளிவாக கூறியாயிற்று .. நாங்கள் தேர்தலில் நிற்பதில்லை என்று. ஏன் பழையபடி ஓட்டை ரெக்கார்டை திரும்ப திரும்ப ஒட்டி ஓட்டுகிறீர்கள் ?.

 17. India is too soft on these Paki Agents and Maoists.
  India should start doing another clean uo operation like the one done for Khalistan terrorists.
  It is time India..get rid of these scums and whims….
  Jai Hind…

  • சரியாகச் சொன்னார் காந்தி … அன்று மகாத்துமா பேசிய அதே வார்த்தைகள் .. இந்திய மக்களின் உண்மையான உணர்ச்சிப் பூர்வமான விடுதலைப் போரான மும்பை கப்பல்படை எழுச்சியின் போது அதனை ஆதரிக்காத காந்தி, அங்கு போராடிய ஆயிரக்கணக்கான மாலுமிகள் , சிப்பாய்கள், மும்பையின் பொது மக்கள் ஆகியோரைக் கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொன்று தீர்த்த பிறகு காந்தி ‘மகான்’ தன்னுடைய அரிஜன் இதழில் “ இந்த காலிகளின் போராட்டம் வென்றிருக்குமானால் இந்த காலிகளின் கையின் நாடு இருந்திருக்கும். அதனைக் காண நான் இருனூறு வருடம் வாழத் தேவை இல்லை. அப்பொழுதே அக்கினிக்கு இறையாகி இருப்பேன்.” என்று எழுதினார்.

   இன்று இந்த காந்தியும் மக்களுக்காக் போராடும் நக்சல்பாரிகள் மற்றும் வீதியில் வந்திறக்கி போராடும் மக்களும் இந்திய அரசால் நசுக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார்.

   வாழ்க காந்திகள் !! .. . வளர்க காந்தி தேசம் !!

 18. வினவு ஏன் உங்கள் அனைத்து கட்டுரையும் இந்தியாவை எதிர்த்தே இருகின்றது ? இதை போன்ற அர்த்தமில்லாத , முதிர்சியட்ட்ற கதைகள் செல முட்டாள்களை வேண்டுமானால் கவரலாம் ஆனால் பெரும்வரியான மக்கள் எமரமாடர்கள்

  • Vinavu and co are useless fellows..
   all they can do is BASHING India because..only India will aloow any kind of stupidity… India is “அகழ்வாரையும் தாங்கும் பூமி போல இகழ்வாரையும் வாழவைக்கும்”

  • உங்களை போய் யாராவது முட்டாளாக்க முடியுமா திருவள்ளுவன் அவர்களே?..
   (அறிவாளியையோ அல்லது ஏதோ ஒரு அறைகுறையையோ முட்டாளாக்கலாம். ஆனால் எப்படி ஒரு முட்டாளை மறுபடியும் முட்டாளாக்க முடியும்?)

   வினவில் இந்திய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு வெளிப்படுத்தப் படும் எதிர்ப்பை எப்படி இந்தியாவிற்கெதிரான எதிர்ப்பாக எடுக்க முடியும் உங்களால் ?..

   இந்தியா என்பது வெறும் இலாபத்தை காணும் முதலாளிகளையும் , பார்ப்பணிய திமிராளர்களையும் மட்டுமே கொண்ட களர் நிலமாக இருந்தால் நாங்கள் இந்தியாவையும் எதிர்த்திருந்திருப்போம். ஆனால் இது பெரும்பாலான உழைக்கும் மக்களையும் , பகத் சிங் போன்ற உண்மையான தியாகிகளையும் பெற்றெடுத்த விளை நிலம்.

   எங்களது எதிர்ப்பு .. இந்திய மக்களின் மீது அல்ல. அந்த மக்களை சுரண்டித் திண்ணும் கொடூர முதலாளிகளையும் அதற்கு துணை போகும் ஆளும் கட்சி , எதிர்கட்சி என்ற வித்தியாசம் இல்லாத இந்த அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளையும் அவர்களது கேவலமான மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் ..

 19. காஷ்மீர் விடுதலைப் போரின் ஒரு அங்கமாக தற்போது நடந்து வரும் கல்லெறித் திருவிழாவை குறிக்கும் ராக் பாடல் ஒன்று வெளிவந்துள்ளது. இது ஏற்கனவே வெளிவந்த ஸ்டோன் இன் மை ஹாண்ட் என்ற பாடலின் இசை கோப்பை காஷ்மீர் கல்லெறி திருவிழாவுக்கு பின்னணியாக ஓட விட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

  இந்த பாடலை பயன்படுத்தி வினவில் எழுதினால் நன்றாக இருக்கும். ஒரேயொரு எச்சரிக்கை. இந்தப் பாடலின் ஒரிஜினல் ஒளிக் கோவை பொதுவாக எல்லா தேசிய இன போராட்டத்தையும் காட்டினாலும், சீனா திபேத்தை குறிப்பாக முன்னுக்குத் தள்ளுகின்ற வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

  http://www.youtube.com/watch?v=rIpM6_vq13k

  With english subtitle
  http://www.youtube.com/watch?v=5jn3EcC_5jM

  original version
  http://www.youtube.com/watch?v=NtmemsBdd_c&feature=fvw

  Ride with the devil, hide with the lord
  I got no pistol, ain’t got no sword
  I got no army, ain’t got no land,
  Ain’t got nothing but the stone that’s in my hand
  Stone in my hand, stone in my hand
  Ain’t got nothing but the stone that’s in my hand

  You say you want a revolution, well get on board
  We’ll start a new crusade; we’ll start a holy war
  Don’t need no orders, don’t need no plan
  I don’t need nothing but the stone that’s in my hand

  Stone in my hand, stone in my hand
  I don’t need nothing but the stone that’s in my hand
  Stone in my hand, stone in my hand
  I don’t need nothing but the stone that’s in my hand

  You build your fighter jets, you drop your bombs
  You kill our fathers, you kill our moms
  You kill our brother and our sisters, and our uncles and our aunts
  Still I’m fighting with the stone that’s in my hand

  Stone in my hand, stone in my hand
  Still I’m fighting with the stone that’s in my hand
  Stone in my hand, stone in my hand
  All the love that’s in my heart and the stone that’s in my hand

  Blood runs in the gutters, smoke fills the sky
  Every son that suffers, every mother cries
  So if you’ve had enough and you’re ready for your stand
  I’ll be waiting with the stone that’s in my hand

  Stone in my hand, stone in my hand
  I’ll be waiting with the stone that’s in my hand
  Stone in my hand, stone in my hand
  All the love that’s in my heart and the stone that’s in my hand

  • தம் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் இப்படி வீதியில் திரண்டு வந்து ஏன் கல் எறிகிறார்கள் என்பதை மட்டும் ஊடகங்கள் சொல்வதில்லை

  • இந்த கல்லெறித் திருவிழாவிற்கு காரானமானவன் ஜனவரி எட்டாம் தேதி காஷ்மீரில் கொல்லப்பட்ட இனாயத்கான் என்ற பதினாறு வயது இளைஞன் தான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற துடிப்பான பையன் டூவிஷன் வகுப்புக்குப் போகும் வழியில் பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டு கொன்றனார் அவனை அடக்கம் செய்யும் போது, இனாயத், தேரே கூன்ஸே இன்கிலாப் ஆயேகா” (இனாயத் உன்னுடைய உதிரத்திலிருந்து புரட்சி வந்தே தீரும்) எனும் முழக்கம் விண்ணை அதிர வைத்தது இறந்த உயிர்களுக்கு நீதி கேட்டு சொந்த உயிர்களை பணயம் வைத்து முடிவுறாத முழக்கங்களுடன் தெருவுக்கு வருகிறார்கள் இனியும் வருவார்கள்

 20. TO
  vinavu and team!

  with love

  Mon, Aug 23 03:00 PM

  Sumir Kaul Srinagar, Aug 23 (PTI) Fed up with repeated strikes by separatists in Kashmir Valley, shopkeepers are up in arms against protestors, who are tasting their own bitter pill as locals are attacking them with stones. Clerics have also started making fervent appeals from mosques to open shops and restore normalcy in violence affected areas.

  An incident of clash was recently reported from Peerbagh in Budgham district of Central Kashmir – the scene of violent protests during the last few weeks. As separatists and their goons reached the area to enforce the strike, they were greeted with stones.

  Local shopowners showered stones on these rowdy elements who tried to force them to close down their establishments. The police could not do anything to quell the locals and shopkeepers as securitymen were outnumbered.

  These shopkeepers and locals reached the police station later and filed an FIR against 10 people of neighbouring Nabir Gund village holding them responsible for spoiling peace and threatening the locals. Far away in Anantnag in South Kashmir, an appeal for opening of shops was made as people were facing lot of hardships on account of frequent strikes during the Holy month of Ramzan.

  The separatists” strike calls have hit the economy and at many a places people have been seen selling off their belongings at distress rates. The business of shopkeepers has suffered a lot as the turmoil not only brought tourism to an abrupt halt but also forced establishments to remain closed for nearly two months now.

  In Ompura area in central Kashmir, there have been instances of exchange of hot words between locals and anti-social elements when businessmen were forced to shut down their shops. In Meehama Pulwama in South Kashmir, four men were beaten up by locals three days back when they were trying to enforce a strike in the area.

  Senior police officials said people were voicing their concern and police was only intervening to prevent situation from turning worse. These issues are not limited to villages only.

  In Natipora area of the city, anti-social elements ransacked a bakery shop. The owner”s only fault was to supply fresh traditional Kashmiri bread in his area.

  The incident triggered resentment among the public against the separatist agenda. “It is heartening that people have started coming out to register their protest against the separatists though such protests are scattered,” said a senior police official.

  PTI SKL DKS SMI.

  thanks to yahoo.com news!

  • o.k.the message,one can drive from these news stories is people of kashmir are fed up with protests and against separetists.so, now,can we expect Government of India to take these news at face value and come forward to hold referandum as per UN resolutions to determine the status of kashmir

  • o.k.the message,one can drive from these news stories is people of kashmir are fed up with protests and against separatists.so, now,can we expect Government of India to take these news at face value and come forward to hold referandum as per UN resolutions to determine the status of kashmir.

    • ஐயோ .. பயமாயிருக்கே … ரம்மிய பார்த்தாலே ஈரக்குலை நடுங்குதே …

     இப்படி கர்ஜனை பண்ணிருக்காரு .. காஸ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாதா ?..

     இரத்தப் ப.சி யே அடக்கித் தான் வாசிக்கிறான்