Thursday, June 13, 2024
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!

-

டவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு மதுரை பார்ப்பன அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதும் அதனால் தி.மு.க அரசு ஜகா வாங்கியது குறித்தும் முன்னர் நிறைய எழுதியிருக்கிறோம். தொடர்புடைய கட்டுரைகளை கீழே வாசிக்கலாம்.

அதை எதிர்த்து திருவண்ணாமலை பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் படிப்பு படித்த அனைத்து சாதி மாணவர்களையும் அணிதிரட்டி ம.உ.பா.மை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே அவர்களை சங்கமாக்கியதோடு இந்த சமத்துவ போராட்டித்திற்காக விடாதும் போராடி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான பெரியார் சிலைக்கு அர்ச்சக மாண்வர்கள் மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றிருக்கிறது. பெரியார் கண்ட சமத்துவம் கோவிலில் வருவதற்கு இது முன்னோட்டம் என்பதோடு ஆலயத்தில் தொழில் செய்யும் அர்ச்சகர்கள் சமூகத்தோடு சமமாய் இரண்டறக் கலப்பதற்கும் இது உற்சாகமளிக்கும் செய்தி.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்கள்!!

________________________________________________________________________________________

இது தொடர்பாக ம.உ.பா.மை வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்னைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது; அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.

இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மாணவர்கள் சார்பில் நாங்களும் வழக்கு தரப்பினர்களாக சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம் ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!

அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில்
இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி, மிரட்டி கோயில் கருவறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரியார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்துக்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை, வரதராஜ பெருமாளின் கண் முன்னாலேயே போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்; ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான். ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.

போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா? பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்? ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள். இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.

இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம். ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம். ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.

இதற்கு எதிராகத்தான் அன்று பெரியார் குரல் எழுப்பினார். இன்று நாங்கள் போராடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம். ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு கடந்த 4
ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள
தடையாணையை நீக்க விரைந்து நடவடிக்கை எடு!
ஆலயங்களில் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்

_________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164, 94437 24403
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 1. ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!…

  நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை….

 2. சொல்லுவது பொய் , செய்வது புரட்டு இந்த அர்ச்சக தொழில். இதனை ஆயிரம் ஆண்டுகளாக ஏக போகமாக அனுபவித்ததை இப்போது மற்றவருக்கு பங்கு கொடு எனும் போது ஏற்படும் வலி அதிகம். அதனால் உச்ச நீதி மன்றம் சென்று உள்ளனர். அங்கு கிடைப்பது இன்னும் பெரிய ஆப்பு என்பதை உணராமல். நோகாமல் எய்த்து பிழைத்து வந்ததில் இப்போது மண் விழுந்து விட்டது. பலரும் இந்த தொழிலுக்கு வந்து விட்டால் அங்கே இருப்பது கல் , ஒரு புனிதமும் இல்லை என்பது மக்களுக்கு புரியும். அர்ச்சக தொழில் என்பது , ஆடு மாடு மேய்ப்பது போல், செருப்பு தைப்பது போல், சவரம் பண்ணுவது போல், பள்ளியில் சொல்லி கொடுப்பது போல், வண்டி ஓட்டுவது போல், இன்னும் உள்ள பற்பல தொழில் போல் அல்லாமல் அத்தனையையும் விட கிழ்மையனது . ஏனெனில் இது திருட்டுக்கு சமம். திருடனாவது சில இடங்களில் தெரியாமல் திருடுவான். இவர்கள் யாரும் பார்க்காத ஒன்று இருப்பதாக சொல்லி மனதை முடமாக்கி பிறகு அம்மக்களின் உழைப்பாகிய வருமானத்தை திருடுவார்கள். எந்த கடவுளாவது காசு கேட்டதா? கடவுளுக்கு எதற்கு காசு?

  • for thousands of years we use kitchen to make food, bedroom to take bed, toilet to do piss etc…suddenly you want to change these customs and traditions…definitely people will get angry and oppose it…why dont you do change these traditions at your home first?

    • Mr. PP.
     சமையல் செய்யுற எடத்துல சமையல் தான் செய்யணும். கக்கா போற எடத்துல கக்கா தான் போவனும். மாத்தி செய்யமுடியுமா?

     மனுசாளுங்க அதாங்க நம்ப முன்னோருங்க அத அத அப்படி அப்படி தான் இருக்கொனுமுன்னு அத அத அங்க அங்கதான் செயோனுமுன்னு சாத்திரம் சம்ப்ரதாயம் செய்ஞ்சி வச்சி நாமளும் அத தான் follow பண்ணிக்கின்னு வரோம். (நீங்க?)
     அது மாதிரிதான் அவாலுங்கோ பெருமாளு சிவாலு நடராஜலு மீனாட்சிலு ன்னு பல சாமிகள உருவாக்கி அந்த சாமிகளுக்கு எல்லாம் இப்படி இருக்கவாளு தான் மணி ஆட்டனுமுன்னு eligibility criteria உருவாக்கி வசிருக்காவளு. நீங்க ஏன் அவாளு மானிய ஆட்டறதுக்கு இப்படி
     வரிஞ்சி கட்டிகினு வாரேல்?

     கக்கா ரூமுல பக்கோடா செய்ய ஆசைப்படலாமா? அடுப்பங்கரைல ஆய் போவ ஆசைப்படலாமா?
     உங்கள நீங்க கக்கா ரூமா நெனைச்சாலும் சரி அடுப்பங்கறையா நெனைச்சாலும் சரி அது உங்க நெனைப்பை பொருத்து? அவாளு சாமிய அவா கும்புட்டுக்கரா…உம்மா சாமிய நீங்க கும்புட்டுக்குங்க…

    • அன்பார்ந்த வினவு வாசகர்களே ,

     இதோ இங்கே ஒரு பார்ப்பன பயங்கரவாத பொறுக்கியாய் mootoo என்ற ஒருவன் அம்பலமாகி நிற்கிறான் பாருங்கள்.

     சமையலறையில் சமையல் தான் செய்யவேண்டுமாம், கழிவறையில் கழிவு இருக்க வேண்டுமாம்.

     என்ன ஒரு வக்கிர புத்தி. இந்த அயோக்கியனின் யோக்கிதை இந்தப் பதிவிலேயே மிகத் தெளிவாகத் தெரிகிறது. முதலில் இவனெல்லாம் ஒரு மனிதனா ?..

     பார்ப்பன இந்திய அரசே தீண்டாமைத் தவறு என்று கூறி சட்டங்கள் இயற்றிய பிறகே இந்த அயோக்கியன் இவ்வாறு கொக்கரிக்கிறான் என்றால்… அம்பேத்கர், பெரியார் போன்றோர் இல்லாமலிருந்திருந்தால் பாப்பானுக்குத் தான் இந்தியா ,முழுவதும் சொந்தம் என்று இவனைப் போல் பல வெறி பிடித்த மலக்குட்டைகளும் உருவாகியிருக்கும்.

     இவனைப் போன்ற பார்ப்பன மூளை கொண்டவர்களைக் கண்டு தான் பெரியார் அன்றே கூறியிருந்தார் போலும் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானைக் கொல் என்று. இவ்வளவு தீண்டாமை பார்க்கும் இந்த நாய்கள் திண்ணும் சோற்றில் மட்டும் பார்ப்பான் உழுத நெல்லைத் தேடி திண்பதில்லை.

     கோவில் கர்ப்பககிரகத்திற்குள் பார்ப்பானைத் தவிர வேறு யாரும் சென்றால் அது சமயலறையில் சமையல் செய்யாமல் அங்கு மலம் கழிப்பதற்கு சமம் என்று கூறும் இந்த அயோக்கியனின் வாதத்தையே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக கருதி இவனது மற்ற கருத்துக்களையும் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

     இந்த மாதிரி சாதிவெறி பிடித்த நாய்களை வினவு தோழர்கள் இங்கு அனுமதியாமல் இருப்பது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் மற்றொரு தொண்டு.

    • PP avargale ,
     தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். முன்னுக்கு வாருங்கள். அசிங்கமாய் பேசுவதை தவிருங்கள். வாழ்க் வளமுடன்…

    • இன்னா நைனா …. இப்டுல்லாம் பேசுனா நீ நல்லவனா ?/ ஒயுங்கா இண்துக்கோ .. இல்லாங்காட்டி … காவிப்பன்னிங்கள கறிசமைச்சு சாப்பிடுற நாள்ல நீயும் சைடிஷ் ஆகிடுவ நைனா … சாக்கிரத ..

    • உம்மோட நன்றியை எல்லாம் நான் எதிர்பார்க்க வில்லை Mr . PP .
     BTW , Mr . KK நீங்க யாரை திட்டுறீங்க?

 3. //தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது// பெரியாரை கடவுள் மறுப்போடு சுருக்கி மற்றவற்றை பேசினால் அது தனக்கே ஆபத்து என அ.தி.மு.க விற்கு எம்.ஜி.ஆர் போல, காங்கிரசுக்கு காமராஜர் போல ஆக்கிவிட்ட பிழைப்பு வாத கூட்டத்திற்கு மாற்றாய் பெரியாரை சாதி ஒழிப்பு,சமூக நீதி, சமதர்மம், சீர்திருத்தம், பெண்ணுரிமை என்று விசாலப்பட்ட பெரியாரை தொடர்ந்து உண்மையான கம்யூனிஸ்ட்களும்,பெரியாரிஷ்ட்டுகளும் , பிரச்சாரப்படுத்தியதின் விளைவே இந்த நல்ல ஆரம்பம். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது தேர்விற்கு கூட செல்லாமல் திருச்சி சட்டக்கல்லூரியில் எங்களோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 மாணவர்களில் 2 பேர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தவர்கள் பெரியாரை எந்த தமிழரிடமிருந்தும் யாராலும் பிரிக்க முடியாது ஏனெனில் அவர் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார். ம.உ.பா.மை க்கு வாழ்த்துக்கள்..

 4. இந்த மாலை மரியாதையெல்லாம் பெரியார் போற்றிய சுயமரியாதைக் கோட்பாட்டுக்கு நேர்மறையானது. இருந்தபோதும் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்த இந்த மரியாதை தமிழகச்சூழலில் இதுவரை தோன்றிய ஒரு தனிப்பெரும் மக்களுக்கான தலமை பெரியார் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

  • அப்ப யாருக்காவது ஏன் வேலை இல்லைனு கேட்டா நம்மளே கம்பெனி கட்டி வேலை கொடுக்கனும? உங்களுக்கு தேவையான்வை அரசிடம் கிடைக்கலைன்னா நீங்களே செஞ்சுக்குவீங்களா? உதாரணத்திற்கு உணவாதாரம்.

    • ஹரிஜனங்களுக்குத் தனியா கேணி தோண்டிக் குடுக்கனும், குடியிருப்பு கட்டி வைக்கனும்னு காந்தி சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இல்லை. சில ஊர்களில் பார்ப்பணம் பண்ணாடைகள் ரத்த பலி கொடுக்கிற சந்தி வீரப்பனுக்கும், முனியாண்டவனுக்கும் கூட கும்பாபிஷேகம் செய்து வைத்து மணியாட்டுகின்றன. ஆனால் முனியாண்டவனையும், சந்தி வீரப்பனையும் கும்பிடுகிறவர்கள், இவர்கள் மணியாட்டுகிற இடத்தில் மணியாட்டக் கூடாது!

     இந்த பயிற்சி மாணவர்கள் எது முன்னாடி மணியாட்டனும்ங்கறதில்லை இப்போ பிரச்சனை. எங்கே மணியாட்டனும்ங்கறதுதான் பிரச்சனை. அதுக்கு நீங்க சொல்றது தீர்வாகாது.

    • அட அப்புடியெல்லாம் எந்த கவர்மெந்தையும் வெட்கப் பட வைக்க முடியாதுங்க. அவங்க வேலையை நீங்க செஞ்சா அதுக்கு வச்சிருக்குற பணம் மொத்தத்தையும் உருவிக்குவாங்க. எங்க வேலை இல்லாத எல்லாருக்கும் ஒரு கம்பெனி கட்டி வேலை கொடுங்க பாப்பம். எல்லாத்தையும் நாம செஞ்சிக்கலாம். எவனாவது என்.ஜி.ஓ வந்து செஞ்சிக் குடுப்பான். அரசாங்கத்துக் கிட்ட நாம கேக்க வேணாம்னு நெனப்பு இருக்குற வரைக்கும் மக்கள் எவருக்கும் கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்காது.

   • aprom ennathuku anne makalir suya uthavi kulu.. kooturavu moorai ponrah suya munnetra kulukal.. there are so many temples around where any one can enter karpa grakam (eg: what I know is kasi).. when temple becomes politics God never lies there.. ithu kadavulai nambum enkalai ponravarkalin vatham.. anbu karunai unmai nermai suya muyarchi vanchakam inmai yarudun irukinratho anku kadavul irukinrar ena enaku periyavarkal sonna padam.. first clear urself do u belive or not belive.. if u dont believe and fight u will fail ..

  • //@trypannu//
   .. ரெண்டு சதவீதமிருக்குற பார்ப்பார இருக்குற கோவிலில் மணியாட்டுவீங்க்ளாம் .. மற்றவர்களுக்கு புதுசா கோவில் கட்டி தரணுமா ?..

   தமிழ்நாடு தமிழின மக்களுக்கானது. அதுல பிச்சை எடுக்க வந்த பாப்பாரப் பயலுக நீங்க எங்களைத் தனியா கோவில் கட்டிக்க சொல்லுறீங்களா?..

   • Aiyya Periyariyan.. unaku kovil venum enral nee sambi kumbidaranu othuka aporm ulla irunthu poradhu.. nee samiya namburavan illaina periyar seithiya parapu.. theliva ellorum kolapareenkha..

 5. kadaisiya Periyarium malai pottu arachanai panni avarin veeriyahtai mudamakkum nikalachi.. UKla Gandhi yenra oru nabar irukavee mudiyathu enru makkal inraiya kalakattathil ninaikinranar.. ippadiye periyarukum poojai punaskaram arambinkal nalaiku avaruku kavadi yedukaren guru poojai pannarenu thiurumbavum back so zero … naathekam natthekavathikalal alium aanmeekam aanmeeka vathikalal alium.. nankal nonehtu povome..

 6. இவர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுப்போம். பாப்பானின் புனிதத்தை உடைப்பது, ஜாதிய ஒழிவுக்கு முதல் படி.

 7. A few years ago, when the court verdict on Ayothya case, was not in favour of Hindu relegion, the safron group argued saying court should not interfere into Hindu relegion temple matters.

  But the same safron group went to court while non-brahmins wanted to become Archagas in certain Hindu temples. Hope, we can understand their double stand on the Hindu relegion matters.

 8. ஆலயத் தீண்டாமையை ஒழிப்பது பெரியாரின் மிக முக்கியமான கனவுகளில் ஒன்று. இதை நிறைவற்றாமல் சாதி, மதமற்ற சமுதாயத்தை காண்பது அரிதே. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

 9. மனிதருக்குள் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்கச் செய்யும் முயற்சியாக இந்நிகழ்விற்கு பாராட்டுதல்கள் கண்டிப்பாக உண்டு. ஆனால் இன்னமும் சிலைகளுக்கு மாலை அணிவித்துதான் அடையாள ரீதியாக சம உரிமை நிலைநாட்டப் படுவது வருந்தத்தக்கது. இந்தியச் சமூகம் முழுமையான பகுத்தறிவு பெற பல தலைமுறைகள் ஆகும் என்று உணர்வதால் எழும் வருத்தம் இது. வழி பாட்டுத் தலங்கள், கடவுள்கள், பூசனைகள், மதச்சார்பான சிலைகள், பூசாரிகள், மத போதகங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும். தீபாராதனை, பூமாலை, பொட்டு, தீமிதி, அலகு போன்ற காட்டுவாசிகள் காலத்து அடையாளங்கள் உட்பட…

  • //வழி பாட்டுத் தலங்கள், கடவுள்கள், பூசனைகள், மதச்சார்பான சிலைகள், பூசாரிகள், மத போதகங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும். தீபாராதனை, பூமாலை, பொட்டு, தீமிதி, அலகு போன்ற காட்டுவாசிகள் காலத்து அடையாளங்கள் உட்பட..//
   அப்படியே மசூதிகள், சர்ச்சுகள், சந்தணக்குடங்கள், தர்காக்கள் இவையும் ஒழிய வேண்டும் என்று நடுநிலையாக எழுதினால் நன்றாக இருக்குமே.

   • ராம் காமேசுவர் ..
    வழி பாட்டுத் தலங்கள், கடவுள்கள், பூசனைகள், மதச்சார்பான சிலைகள், பூசாரிகள், மத போதகங்கள் இவை அனைத்து மதங்களுக்கும் உரியவை. உங்களில் வினவு விரோத எண்ணமே இவ்வாறு வினவின் மீது குற்றம் காணச் செய்யத் தூண்டுகிறது.
    உங்கள் மதச்சார்பான கண்ணாடியைக் கழட்டி வைத்து விட்டு வினவு தளத்தைப் பார்க்கவும் ..

    தீபாராதனை, பூமாலை, பொட்டு, தீமிதி, அலகு ஆகியவை காட்டுமிராண்டி காலத்து இறைவழிபாடல் முறையே .. இன்றும் அவை இருப்பது நியாயம் என்கிறீர்களா ?.. அபடி என்றால் இன்னொரு விதமான வழிபாடு அந்தக் காலத்து முறையில் இருக்கிறது அதை நீங்கள் ஆரம்பித்து வைக்கிறீர்களா ?.. நரபலி கொடுத்து வழிபடுதல் என்ற முறைதான் அது .
    என்ன கொடுக்கலாமா ?. உங்கள் இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் முதல் பலியாக வந்து இறைவனுடன் ஐக்கியமாகத் தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் ?..

   • ராம் காமேஸ்வரன்… ‘வழி பாட்டுத் தலங்கள், கடவுள்கள், பூசனைகள், மதச்சார்பான சிலைகள், பூசாரிகள், மத போதகங்கள்’ என்பது எல்லா மதங்களையும்தான் குறிக்கிறது. உங்களது குறுகிய பார்வைதான் ஏதோ இந்து மதத்தை மட்டும் பிறர் குறை சொல்வது போல் தோன்ற வைக்கிறது.

 10. உங்கள் போராட்டத்தின் logic எனக்கு புரியவில்லை. இந்தப்போராட்டம் பெரியாரை கேவலப்படுத்துவதுபோல இருக்கிறது. பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தால் போதும்,கடவுள் என்ற கற்பிதம் அப்படியே இருக்கட்டும் என்று முடிவெடுத்து இருக்கிறீர்களா? இலையை எடுத்துவிட்டால் போதும், நச்சுச்செடி அப்படியே இருக்கலாமா?

  • நண்பரே .. பெரியார் கூட நிறைய தாழ்த்தப் பட்டவர்களை இஸ்லாமியர் ஆக மாறச் சொன்னார். அதற்காக பெரியார் இஸ்லாமிய மதத்தை ஆதரிக்கிறார் என்று பொருளா ?..

   • நீங்கள் சொல்வதும் எனக்கு புரியவில்லை. இதற்கும் நான் கேட்டதற்கும் என்ன தொடர்பு?

    • ”பார்ப்பன ஆதிக்கம் போதும் கடவுள் அப்படியே இருக்கட்டும் என்கிறீர்களா ?”.. என்ற உங்கள் கேள்விக்கான பதிலாகத் தான் ”பெரியார் தாழ்த்தப் பட்ட மக்களை இஸ்லாமிற்கு மாறச் சொன்னார். அதனால் அவரும் பார்ப்பன எதிர்ப்பு போதும் கடவுள் அப்படியே இருக்கட்டும் என்று இருந்தார் என்று கூறுவீர்களா?…” என்று கூறினேன்..

     புரிந்ததா இல்லையா ?..

 11. பாவம் பலஆயிரம் நூற்றாண்டுகளாக உழைக்காமல் மிக ஆடம்பரமாகவும் அதிகரமகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் உரிமையே எப்படி விட்டு கொடுப்பது. இதற்காக சர்வதேச நீதிமன்றம் , மேலுலகம் ,சொர்க்கம் , செல்லவும் தயாராக இருப்பார்கள்.

 12. நான் பெரியார் பாசறையில் வந்த நாத்திகன் அல்ல…!
  ஆனால், தீண்டாமைக்கு முற்றிலும் எதிரானவன்…!
  எனவே, இந்தக் கட்டுரை வலியுறுத்தும் தீண்டாமைக்கு எதிரான வாதங்களை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன்…!

  மேலும், கோவில்களில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் கருவறைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான
  மாற்றுக் கருத்தும் இல்லாதவன்…!

  காலம் கனிய வேண்டும்… ஒரு கால் யாவரும் கருவறை சென்று அவரவர் விருப்பப்படி அவரவர் நம்பிக்கையின்படி (கடவுள்) சிலையைத் தொடவோ அதைப் பூஜிக்கவோ அனுமதிக்க வேண்டும் என்று எல்லோரும் போல் நானும் காத்திருக்கிறேன்….!

  கு. இராதாகிருஷ்ணன்,
  தஞ்சாவூர்.

 13. தேவநாதன் போன்ற கேவலங் கெட்ட பார்பன நாய்கள் அர்ச்சகர்கள் ஆகலாம். ஆனால் ஒழுக்கமாக வாழும் பிற சாதியிஜினர் பூசை செய்தால் தீட்டு. கேவலமான தீர்ப்பு. கேவலமான தீர்ப்பு.

 14. In the name of God… very fee people (2%) still doing crime in the Temple. who are they?
  You do not know!
  “parpanarkal”
  examples are தேவநாதன்,sankarachary!
  Any one can oppose my words?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க