முகப்புசமூகம்சாதி – மதம்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….

-

திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
கல்லூரியில் நுழைய முயன்ற தோழர்களை போலீசார் கைது செய்கிறார்கள்

திருச்சபையின் காம ஊழல்கள் சமீப காலமாக உலகமெங்கும் நாறி வருவதை அறிவோம். இதில் அமெரிக்கா தொடங்கி வாட்டிகன் இருக்கும் ரோம் வரையில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளில் பாதிரியர்களின் பாலியல் முறைகேடுகளுக்கெதிராக  பல வழக்குகள் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவெளியில் ஒரு பாதிரியாரின் குற்றம் தெரிந்த பின்தான் திருச்சபைகள் ஏதோ பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுக்கின்றன. கூடுமானவரை குற்றம் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுவதற்கு திருச்சபையில் அதிகார வர்க்கம் எப்போதும் முயன்று வருகிறது.

திருச்சியில் பிரபலமான ஜோசப் கல்லூரியில் அப்படி ஒரு மோசடி சமீபத்தில் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில்  முதல்வராகவும், பாதிரியாராகவும் இருக்கும் ராஜரத்தினம் என்பவர் உடன் பணியாற்றும் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதை அந்த கன்னியாஸ்திரி முன்பே ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்பதற்கு திருச்சபையின் அடக்குமுறையான சூழலே காரணம்.

இப்போது வேறுவழியின்றி இந்த பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. இதை அறிந்த திருச்சி நகர ம.க.இ.க தோழர்கள் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு 13.10.2010 அன்று காலை கல்லூரி அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். இது திருச்சி நகரெங்கும் மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பத்து தோழர்கள் மட்டும் கல்லூரியில் நுழைவதற்கு முயன்றனர். அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க செயலர் தோழர் ராஜா தலைமை வகித்தார்.

இந்த உடனடி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது. இந்த குறைந்த பட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றால் திருச்சபையின் ஊழல் இன்னும் பல வடிவங்களில் வெளிவரும் என்பதாலேயே இந்த நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தால் அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்களில் அனைத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தியாக பெரும் வரவேற்பைப் பெற்றது பெருவாரியான மக்களிடம் ஆதரவை உருவாக்கியிருக்கிறது.

_____________________________________________________________

ம.க.இ.க, திருச்சி .
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக…….

  புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்….

 2. போராடிய தோழர்களுக்கு செவ்வணக்கங்கள் மதத்தின் பெயரால் பல கொடுமைகள்
  ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கிறது . கோவில்களும் அதிகரிக்க மடங்கள் அதிகரிக்க
  அங்கே கற்பழிப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன . சங்கரமடம் புண்ணியமான
  இடமாய் இருந்து இருந்தால் ஆதிசங்கரர் ஆன்மா ஜெயேந்திரனை எப்படி அனுமதிக்கும் அந்த
  இடத்தில் . மதம் என்பது அபின் , மக்கள் அந்த போதையில் இருக்கும் பொழுது ,ஆளும் வர்க்கம்
  அதை பயன்படுத்துகிறது.

 3. இந்து மதத்தை மட்டும் தான் வினவு விமர்சிப்பதாக கூறும் ‘இந்து’ மத பக்தர்களே இக்கட்டுரைக்கு பதில் சொல்லுங்களேன்!
  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கின்ற “தமிழ்” இரத்தம் கொண்டது வினவு!

  • மதத்தை விமர்ச்சிபதற்கும் மதவாதிகளை விமர்சிற்பதற்கும் வேறுபாடு உள்ளது . மற்ற மதங்களை எந்த இடத்தில் விமர்சித்துள்ளனர் என சொல்ல முடியுமா?

   என்னை பொறுத்தவரை மதங்கள் அனைத்தும் மற்றவர்களை முட்டாளாக்கி சிலர் பயன் பெறுவதற்காக உருவாக பட்டவை . ஹிந்து மதம் போல முஸ்லிம் மதம் போலி கிருத்துவ மதம் போலி என வினவால் சொல்ல முடியுமா?

   பதில் சொல்ல விரும்புபவர்கள் தன் வீட்டு பெண்கள், குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி பதில் சொல்ல முடியுமா?

   • நண்பர் ராஜசேகர்,

    வினவின் பழைய கட்டுரைகளைப் படித்ததில்லை என்று எண்ணுகிறேன். பழைய கட்டுரைகளை சிறிது படித்துப் பார்க்கவும். மதம் எதுவாயினும் கம்யூனிசத்தின் பார்வையில் அது குப்பைக்கு ஒப்பானதே .. கண்டிப்பாக கொழுத்தப்பட வேண்டியது.
    இஸ்லாமிய மதமோ , இந்து மதமோ, கிருஸ்தவ மதமோ எதுவாயினும் அது மக்களை சுரண்ட உருவாக்கப்பட்ட சிறுதொழிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று கார்ப்பரேட் வியாபாரமாக வளர்க்கப் பட்டுள்ளது.

    தோழமையுடன்,
    மருது

    • அதலென்னங்க… பரவாயில்ல… சில தினமா முசுலீம் இப்ப கிறிஸ்துவம்னு அம்பலப் படுத்தி ”முற்போக்கு” தெர்மாமீட்டர்ல பாதரசம் எறங்கிப் போச்சு… சரி..போதும்.. இனிமே… பார்ப்பனீயம் இந்து மதவெறின்னு ஒரு 5000000 கட்டுரை வெளியிட்டிங்கன்னா மறுபடியும் முற்போக்கு முகாம்ல எடம் புடிச்சிடலாம்… இந்தியாவில பாப்னீயம் இந்துவ திட்டானதான முற்போக்கு பட்டம் கிடைக்கும்.. சரி ஜீட்… எடத்தப் புடிங்க…
     நாகராசு

    • அய்யா நாகராசு ..

     கட்டுரைக்கு உருப்படியா எதாவது பின்னூட்டம் போடுங்க .. சம்மந்தமே இல்லாம பின்னூட்டம் போடக் கூடாது.

     நீங்கள் பிற்போக்குத்தனம் முற்போக்குத்தனம் என்று எதுவும் இல்லை என்று வாதிட விரும்புகிறீர்களா ?..

     என்ன சொல்ல வருகிறீர் என்று தெளிவாகச் சொல்லவும்.. சும்மா பொலம்பக் கூடாது ..

    • மருது அவர்களே , சில மாதங்களாக வினவு படிக்கிறேன். இது வரை நான் பார்த்ததில்லை.url இருந்தால் கொடுக்கவும். அதுவும் பிற மத அமைபுககை பற்றி எழுதும் பொழுது வார்த்தைகளில் கடுமை இல்லை. ஒரு மென்போக்கு உள்ளது.. எனது பார்வையில் வினவிடம் மத விசயத்தில் ஒரு நடு நிலை இல்லை.. இது நம் ஒட்டு பொறுக்கிகள் காசி யாத்திரையை முட்டாள் தனம் என்று சொல்லி விட்டு, மெக்கா ஹஜ் யாத்திரையை சலுகைகளுடன் அனுப்பி வைப்பது போல உள்ளது. ஹிந்து மதவாதிகள் பற்றி விமர்சிக்கும் பொழுது வுள்ள கடுமை தவ்ஹீத் ஜமாத்தின் மதவாதம் பற்றி ( https://www.vinavu.com/2010/10/13/alaudin-tntj/ ) விமர்சிக்கும் பொழுது இல்லை.

    • அய்யா ராஜசேகர் அவர்களே,

     பிற மத அமைப்புகளைப் பற்றி எழுதும் போது வார்த்தைகளில் கடுமை இல்லை என்ற பொத்தாம் பொதுவாக எழுதுவதை விடுத்து விவரங்களைக் குறிப்பிட்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே.

     வார்த்தைப் பிரயோகம் என்பது குறிப்பிட்ட நிகழ்வு மற்றும் நடவடிக்கைகளில் ஒரு மத அமைப்பு எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதிலிருந்தே அமையும். மோடியை மோசடி என்றும் பிதற்றலை பிதற்றல் என்றும் அயோக்கியத்தனத்தை அயோக்கியத்தனம் என்று தானே எழுது முடியும். எல்லா செயலுக்கும் ஓரே சொல்லைப் பயன்படுத்துவது எப்படி அறிவுடமையாகும்?

     முன் அனுமானங்களை (prejudice) ஒதுக்கி வைத்துவிட்டு பரிசீலனை செய்யுங்கள். உங்கள் ஐயத்திற்கு விடை கிடைக்கும். வினவுக்கும் வேலை மிச்சம்.

     ஊரான்.

    • முதலில் எனது கேள்வியை புரிந்து கொள்ளுங்கள். மோடி ஒரு கீழ்த்தரமான மதவாதி. எனது கேள்வி மதத்தை பற்றியது . கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு பதிலளித்தால் மற்றவர்களின் நேரம் மிற்றமாகும் .. 🙂

    • அந்த விவாதத்தை முழுவதுமாக பார்க்கவும், url கொடுகபட்டுள்ளது … ( https://www.vinavu.com/2010/10/13/alaudin-tntj/ )
     அப்படியெனில் ஹிந்து மதம் அயோக்கியத்தனம் , முஸ்லிம் மதம் பிதற்றல் என்று சொல்லுறிங்களா?
     உங்கள் கருது படி பிராமண ஜாதி வெறி என்பது அயோக்கியத்தனம் , மற்ற ஜாதி வெறி பரவா இல்லை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பது போல உள்ளது. ..

 4. இந்த மானங்கெட்ட காரியத்த நீங்க எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும் இந்த நாயிங்க திருந்தரமாதரி தெரியலீங்க தோழர்.

 5. கை நிறைய பணம் பை நிறைய பாவம் இப்படித்தான் போகிறது பெரும்‘பாலன’ பாதிரிகளின் பாவ வாழ்க்கை.
  ஆன்மீக போர்வையில் ஊருக்குள் அலையும் இந்த பாவிகள்தான் பாமர மக்களுக்கு பாவசங்கீர்த்தனம் தருகிறார்கள் என்பதுதான் ஒரு வேதனையான் வேடிக்கை இந்து போலிளுக்கு காவியுடை ஒரு கவசமென்றால் இந்த கத்தோலிக்க காலிகளுக்கு வெள்ளை அங்கி ஒரு கவசம்.
  பாதிரிகளுக்கு திருச்சபை எந்த கட்டுப்பாடுகளும் விதிப்பது மாதிரி தெரியவில்லை. பல கத்தோலிக்க பாதிரிகள் இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் வாழ்கிறார்கள்.
  மாளிகை வாசம் மைனர் வாழ்க்கை என சிற்றி்ன்பபிரியர்களாக அலையும் இவர்களில் பலரது கடந்தகாலம் வறுமையும் துயரமும் நிறைந்த்தாக இருக்கும்.
  எல்லா பாதிரிகளுக்கும் வங்கி கணக்குகள் இருக்கின்றன.வெளி நாட்டு நிதியுதவிகளை தங்கள் சொந்த கணக்குகளில் பெற்று சுக போகமாய் வாழும் பல பாதிரிகளை நான் அறிவேன். வெளி நாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டதும் தனியாக டிரஸ்ட்கள் ஆரமித்து அதன் மூலமே வாழ்வை வழமாக்கிக்கொண்ட பல போலி பாதிரிகள் இருக்கிறார்கள்.
  இவர்களில் பலர் ஜாதி வெறியர்கள் உடையார் வன்னியர்,மீனவர், நாடார்,வெள்ளாளர்,தேவர் தலித்துகள் என்று இந்த தேவனின் குழந்தைகள் போடும் கூச்சல்கள் கர்த்தரின் காதுகளையே பங்சராக்கிவிடும்..
  நல்ல உணவு நாகரீகமான ஆடை பெருமளவு பணம் இவை அனைத்தும் இருந்தாலும் வேலையென்று ஒன்று இல்லாததால் இவர்களில் பலர் காமப்பித்துபிடித்து அலைகிறார்கள்.
  பாதிரிகளின் பாலியல் தொடர்புகளைப் பொறுத்த மட்டில் அவர்கள்ன் கன்னியாஸ்திரி்களோடு மட்டுமல்லாது பல குடும்ப பெண்களுடனும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர்.
  ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரோடு கடுங்கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, புதிதாக ஒரு கன்னியாஸ்திரியை பிடித்தவுடன் பழையவரை வெட்டிவிடுவது,இதெல்லாம் இவர்களுக்குள் சாதாரண விஷயம்.
  கன்னியாஸ்த்திரிகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு தனியே .கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு
  கல்லூரி முதல்வராக வேலைபார்த்து மாதம் அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் மாதம் முன்னூறு ரூபய்தான் அவர்களுக்கு கைசெலவுக்கு வழங்கப்படும்.இதில்தான் அவர்கள் எண்ணை சோப்பு முதல் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். வங்கி கணக்கு வைக்க அனுமதி ஏதும் கிடையாது.
  கான்வென்டுகளில் சீனியர்கள் ஜூனியர் கன்னியாஸ்த்திரிகளை சிறுமை படுத்துவதும் குடும்பம் குலம் கோத்திரம் பார்த்து முக்கியத்துவம் தருவதும் ரொம்ப சாதரண விஷயம்.
  பல சபைகளில் தலமை பொறுப்பில் இருக்கும் மூத்த கன்னியாஸ்த்திரிகள் தங்கள் இளம்பருவத்தில் முறைகேடான பாலியல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அல்லது இன்னும் அத்தகைய வாழ்வைத் தொடர்பவர்கள்.அதனாலேயே அவர்களால் புதிதாக வரும் கன்னியாஸ்த்திரிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதை சாதகமாக பன்படுத்தி அவர்களும் தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
  மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பல கன்னியாஸ்த்திரிகள் பாவ பாதிரிகளின் அன்பொழுகும் பேச்சில் மங்கி அவர்களிடமோ அவர்களோடு தொடர்புடைய வேளி நபர்களிடமோ தங்கள் மனதை பறி கொடுத்து விடுகிறார்கள்.
  இப்போஒது பல சபைகளில் கன்னியாஸ்த்ரீகள் செல்போன் வைக்க அனுமதிக்கப் படுகின்றனர்,இதுவே இவர்களின் காதல் சேட்டைகளுக்கு மிகவும் வசதியாகி விடுகின்றன.
  செல்போன்கள் வைத்தருக்கும் கன்னியாஸ்திரிகளில் பெரும்பான்மையோரின் செல்போன்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் என்கேஜ்டாகவே இருக்கும். அவர்கள் யாருடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கர்த்தருக்கே வெளிச்சம்
  இப்படி ஆரம்பித்து .காதல் பல பேருடன் தொடர்பு கருக்கலைப்பு என்பதெல்லாம் இவர்களில் பலருக்கும் சகஜமான விஷயம்.
  காதல் வந்து துறவைத் துறந்து கல்யாணம் கட்டி குழந்தை குட்டிகளோடு வாழும் பல கன்னியாஸ்த்திரிகளும் பாதிரிகளும் நம் ஊர்களில் வாழ்கிறார்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
  சிறுபான்மையினர் என்ற அனுதாப கவசத்தை மாட்டிக்கொண்டு நமது கவனத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கும் இந்த கபட வேடதாரிகளின் முகத்திரையையும் கிழிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது.
  அதே சமயத்தில் துறவில் உறுதியாய் இறை பணியிலும் சமுகப் பணியிலும் தங்களை முழுமையாக அற்பணித்து வாழும் பல பாதிரிகளும் கன்னியாஸ்த்திரிகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  ARUL

  • சரியா சொன்னீங்க அருள். தமிழ்நாட்டு கத்தோலிக்கர்களின் பல கால மனக்குமுறல் இது. கல்லூரி இளசுகளெல்லாம் இவங்க ரொமான்ஸுக்கு முன்னால ஒண்ணுமே இல்லை. பணம், பெண், ஜாதி வெறின்னு இவர்களுடைய எல்லாப்பக்கமும் ரொம்ப அசிங்கமானது. கத்தோலிக்கத்தை அழிக்கிறத்துக்கு வேற யாரும் வேண்டாம். இவங்களே அதை ரொம்ப சரியா பண்ணிட்டு இருக்கானுங்க.

 6. Munnal manavan enrah vakaiyil nadantha nikalchi ennai ponru kalluriyai nesikum ayyeram munnar manavarkalai thalaikuniya veithu irukinrathu athee samiyam muthal muraiyaka oru pen munvanthu police compliant pannathu ithu ponrah nikalvukalai thadukum.. I dont see still the father is arrested.. we used to hear lot of gossips when we are in college and hostel days.. anyway good start ..

 7. Just one more news..SunTV news says father sabestian has become new principal.. if my guess is right he should be from English department.. veenaka avar male pali poda nan virumba villai.. we heared GOSSIP saying that he is Homo.. so ivar maleum kannu vecha matta vaipu undu….

 8. தமிழ் ரத்தம் எங்கே கொதிக்கிறது, உனக்கும் விளம்பரம் வேணும் அவ்வுளவு தானே

  “ஊடகங்களில் அனைத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தியாக பெரும் வரவேற்பைப் பெற்றது பெருவாரியான மக்களிடம் ஆதரவை உருவாக்கியிருக்கிறது”. எப்படி, அவன் பிளைட் ஏறி போய்க்கிட்டே இருப்பன் நீ இங்கே போராட்டம் நடத்திகிட்டு இருப்பே ,

  • ஏம்பா லூசுப்பையா தோழர்களின் போராட்டம் தாம்பா பாதிரியின் டிரவுசரை கழட்டியிருக்கு. திருச்சபையின் போலி முகத்தை அமலப்படுத்தி எல்லா சாக்கடையும் ஒண்ணுதானு காடுட்னது தோழர்களோட போராட்டம் தாமா.

   • கண்டிப்பா , ஆனா முடிவு என்ன, முடிவை எட்டும் வரை ஒயகுடாது, ஆணி புடுன்குறு நக்கல் எல்லாம் ஆன்லைன்ல தாண்டி மாப்ளே,
    சரியா

    • அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள், வெற்றியும் நீதியும் பெற்றுள்ளார்கள், நம் பங்குக்கு நாம் என்ன செய்தோம் செய்யப்போகிறோம் என்பதை யோசிப்போமே. அதைவிட்டு இதிலும் கிண்டல் செய்வது ஒட்டவில்லை.

  • ஆமா லூசுப் பையா .. அவன் பிளைட் ஏறிடுவான். ம.க.இ.க போராட்டம் நடத்தும்..

   நீ சும்மா இங்க உக்காந்துட்டு மணி ஆட்டிக்கிட்டு நொட்டை மட்டும் சொல்லிட்டு இருப்ப ?..

   பாத்து ஆட்டு தம்பி .. நோவப் போவுது ..

 9. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: மத அடையாளத்துடன் இயங்கும் தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும்! http://j.mp/ae88VO #Vinavu […]

 10. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பல பேர் தங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவரின் வேண்டுதலுக்காக அற்ப்பணிக்கப்பட்டவர்கள்தான். மிகமிக குறைவானவர்களே கடவுள் பணிக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள். இவர்களில் சிலரும் அங்கே ஏற்கனவே உள்ளவர்களால் மாற்றப்படுகின்றனர். இதனை கிருத்துவ மதத்தினர் பெரும்பாலோனோர் அறிவர். என்னிடம் இதைப் பற்றி சொன்னதும் தன் தந்தையின் வேண்டுதலுக்காக துறவறம் ஏற்கப் போகும் நண்பன் ஒருவன் தான்.

  இவர்களின் தவறுகள் பெரும்பாலும் அங்கேயே மறைக்கப்படுகிறது. அதனை வெளிக்கொணரும் துணிச்சல் கொண்டவர்கள் வெகு சிலரே. மகஇக‍வினரின் இந்தப் போராட்டம், இது போன்ற பல கயவர்களை வெளிக்கொணரும் உத்வேகத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன்.

  • கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சொன்னது இது. “இது முன்னமேயும் இருக்கத்தான் செஞ்சுது. ஆனால் அரசல் புரசலா ஃபாதர் அப்பிடி இப்பிடின்னு சில ஊர்களில் பேசிக்கிடுவாங்க. எங்க ஊர் சர்ச் கிட்டவே ஃபாதர் பங்களா இருக்கு. சில பொம்பளைங்க அடிக்கடி ஃபாதரப் போய் பாத்திட்டு வருவாங்க.. ஆனா அப்போல்லாம் சர்ச்சுக்கு வர்ர சில பொண்ணுகளே ‘இந்த மாதிரி ஃபாதருக்கும் …அந்தப் பொம்பளைக்கும் கனெக்சனாம்’னுல்லாம் சொல்வாங்க..அப்போல்லாம் ஃபாதர் மேல தப்புத்தப்பா சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தோணும். ஆனால் இப்ப யோசிச்சிப் பாத்தா எல்லாக் காலத்திலேயும் இப்படி வேசம் போட்டுக்கிட்டு பொம்பளைகளை வேட்டை ஆடுறவங்க திருச்சபைல நிறைய இருந்துருக்காங்கன்னு தோணுது.. இப்புடி ஊர் உலகத்த ஏமாத்தாம கல்யாணம் செஞ்சுகிட்டே ஃபாதர்ங்க செர்வீஸ் பண்ணலாமே.. இப்பல்லாம் நான் சர்ச்சுக்கு தனியா போகவே பயப்படுறேன். ஹஸ்பண்ட், அல்லது அப்பா துணைக்கு வந்தாதான் போறேன்.”

 11. VINAVU,

  SISTER JESME( JESUS &ME) enum sisterin book ulladhupeyar,”AMEN” .Mihavum punidhamanadha karudhapadum Kerala catholic bishop galin ella vishayangalayum veluchathu kondu vandhullar. Adhan sila pahudhigalai veliyidalame….

  • வாங்க பஞ்சாப் ரவி,
   அயோத்தி தீர்ப்பு கார்டூன்களுக்கு நீங்க சொன்ன கருத்து.

   https://www.vinavu.com/2010/10/11/ayodhya-cartoons/#comment-31070

   “செங்கொடி மருது , உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே பின் வீணாக ஏன் இதில் நுழைந்து ஆதாயம் தேட பார்கிறீர்கள் .

   எப்படி உங்களுக்கு (உலகெங்கும் செத்து போய் விட்ட ) கம்முநிசம் மேல் நம்பிக்கையோ அப்படியே என் போன்றவர்களுக்கு ராம் மீது நம்ம்பிக்கை ; நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் நங்கள் முஸ்லிம்களுடன் பேசி தீர்த்துகொள்ளுகிறோம் . உங்களை கூபிட்டால் பஞ்சாயத்துக்கு வாருங்கள்”

   சிஸ்டரும் ஃபாதரும் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும் என்றல்லவா நீங்க சொல்லணும்.

   மத்த மதங்கள சொன்னா என்னமா குசியா இருக்குல்ல?

 12. இவர் தலித் என்பதால், இவர் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு
  பழி சுமத்தப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. இது குறித்தும் வினவு எழுதலாமே

  • இப்போது தன்னை தலித் என்று சொல்லும் இந்த தேவதூதன் இதற்கு முன் எப்போதாவது தன்னை தலித் என்று சொல்லியிருக்கிறாரா..?ஏழை தலித் மாணவர் எவருக்கேனும் உதவியிருக்கிறாரா..?(உறவினர்கள் தவிர!) என்பதனை வேண்டுமானால் வினவு விசாரித்து எழுதலாம்.மற்றபடி பாதிரிகளின் பாலியல் தொடர்புகள்பற்றி அக்கம் பக்கம் விசாரித்தாலே பல வண்டிகளில் கதைகள் கிடைக்கும்.திருச்சி பாதிரியார் விசயத்தில் அவர் தன்னை காத்துக்கொள்ள ஜாதியை இழுப்பது அவரது பலவீனத்தை காட்டுகிறது.எல்லா அயோக்கியர்களும் தப்பு செய்து மாட்டிக்கொள்ளும் போது ஜாதியை கேடயமாக பயன்படுத்துவது நம்மூரில் சாதரண விஷயம் தானே.திருச்சபையில் ஜாதி வெறி எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களிலேயே தெளிவாகிறது.

 13. பின்னூட்டமிடும் நண்பர்கள் ஆங்கில தமிழில் எழுதுவது படிப்பதற்கு சிரமமாக உள்ளது பலருக்கும் இந்த சிரமம் இருக்கும் என்றே நம்புகிறேன்.ஆதலால் சற்று சிரமம் பார்க்காமல் தமிழ் எழுதி மூலம் தமிழில் மாற்றி பின்னூட்டமிட வேண்டுகிறேன். எனக்கு தெரிந்தது தமிழச்சி எனக்கு அறிமுக படுத்திய இந்த தொடர்பில் நீங்கள் எழுதியவைகளை இங்கு அப்படியே பதிவு செய்து தமிழில் பின்னூட்டமிட வேண்டுகிறேன்.
  http://www.google.com/transliterate/indic/Tamil
  வினவு தளத்தில் உள்ள தமிழ் எழுதி வெகு நாட்களாக வேலை செய்ய வில்லை சற்று கவனியுங்கள்

 14. ம.க. இ. க பேனரை மறைப்பதில் போலீஸ் எவ்ளோ வேகமா செயல்படுறாங்க.

  இதுக்கு பேசாம ஃபாதருக்கு அங்கிள் வேல பாக்கலாம்.

 15. தோழர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் ..

  மதம் என்பது மக்களின் முன் போடப்பட்டிருக்கும் திரை. இந்தத் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இவர்கள் போடும் தாளத்திற்கு அதிகாரவர்க்கம் ஆடும் ஆட்டத்தை இந்தக் காணொளியில் காண முடிகிறது. இந்தத் திரையை கிழித்தெறிவது என்பது நக்சல்பாரிகளால் மட்டுமே முடியும் ..

  இதை ம.க.இ.க தொடர்ந்து நிரூபித்துள்ளது.
  ம.க.இ.க, பெ.வி.மு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்..

 16. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  எங்கே அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கே கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே களத்தில் நிற்பார்கள் என்பதற்கு இப்போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு.

  முன்பு இந்து மதப்போர்வையில் காமக் களியாட்டம் போட்ட பிரேமானந்தாவை சந்திக்கு இழுத்து வந்து அவனை கம்பி எண்ண வைத்தவர்களும் இதே திருச்சி ம.க.இ.க தோழர்கள்தான். சங்கரராமன் கொலைவழக்கைப்போல சாட்சிகள் தடம் புரளாமல் இருந்தால் ராஜரத்தினமும் கம்பி எண்ணித்தான் ஆக வேண்டும்.

  தொடரட்டும் தோழர்களின் போராட்டம்.

  ஊரான்

 17. தன் குடும்பத்தினருக்கே கூட இதுபோன்ற வல்லுறவு, பலாத்காரம் போன்றவை நிகழ்ந்தாலும் மதத்திற்காக வெளியில் சொல்லுவதில்லை. அப்படியே சொன்னாலும் மக்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை மட்டுமே குற்றம் சொல்லுவார்கள். இதுபோன்ற உண்மைச் செய்திகள் மீடியாக்களில் பரவலாக வரும்போது இப்படிப்பட்ட பாதிரிகளின் மீது மக்கள் கவனமாக இருக்கவும், மக்களின் (கிறிஸ்தவ) மதவெறி அடங்கவும் வாய்ப்புகள் உள்ளது. மக்கள் கலை இலக்கிய கழ(ல)க தோழர்களுக்கு நன்றிகள்.

 18. //உடன் பணியாற்றும் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.//

  பெண் பாதிரியார்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது வேதா வாக்கு.
  பெண் பாதிரிகள் உடலுறவில் நாட்டம் கிடையாது என்பது வேதா வாக்கு .
  “நான்கு ஆண்டுகள் காம சுகம் அனுபவித்து விட்டு இப்போது உள் நோக்கத்துடன் குற்றம் சொல்லுகிறார் பெண் பாதிரி.” என்று சொல்பவன் ஆணாதிக்க வாதி.
  இந்த பெண்களை சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் சுய பச்சாதாபம் உள்ளவர்கள் என்றும் சித்தரித்து வோட்டு மற்றும் பணம் கேட்பவர்கள் பெண் உரிமை வாதிகள்.
  பாவம் பெண்கள்!!!

  பெண் உரிமை என்பது ஆண்களை இழிவு படுத்துவது அல்ல.

 19. vinaviRku vaazhththukkaL….
  ithu aethoe thiruchchiyil mattum uLLa paathiriyaarkaLin thozhil alla…ennaal kanyaakkumari maavaddaththil uLLa koeddaar maRaimaavaddaththil paathiriyaaga uLLa porumpaanmaiyaanavargaLin kaLLa thodarpugaL KuRippaaga thirumaNam aagaatha peNgaL,veLinhaadugaLil paNipuripavargaLin manaivigaL ena thinamum onRu ruchi paarkkiRa veLLai angi thariththa kaama kooDDaththai adaiyaaLam kaadda mudiYum….ungaL punitha paNi thodara vaazhthukkaL…

 20. இந்த பாதிரியார் அந்த கன்யாஸ்திரியை தொடர்ந்து கற்பழிக்கவும், அந்த கற்பழிப்பை நியாயப்படுத்தவும் துணை போனது கத்தோலிக்க நிறுவனம். அந்த பெண் பலமுறை கத்தோலிக்க அமைப்புகளில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவற்றை கத்தோலிக்க மத நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.

  இப்போது அவர் புகார் கொடுத்த பின்னால், அவரை பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் புரபசர் பணியிலிருந்து எடுக்கவில்லை.

  அந்த கன்யாஸ்திரிக்கும், இது போல பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கும் கத்தோலிக்க நிறுவனம் மேற்கு நாடுகளில் மில்லியன் டாலர்கள் கணக்கில் பணத்தை கொடுத்து செட்டில் செய்கிறது. ஆனால் இந்தியாவில் எவ்வளவோ நடந்தும் (அவற்றை இங்கே விலாவாரியாக விளக்கப்போவதில்ல. நான் முன்பு கத்தோலிக்கனாக இருந்து பிறகு விலகி பெந்தகொஸ்தே கிறிஸ்துவனானவன். அதிலும் சபை சாராமல் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் கிறிஸ்துவனாக இருக்கிறேன்) இங்கே பத்திரிக்கை பலம், பண பலம் மூலமாக அமுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்துவ அமைப்புக்கும் (கத்தோலிக்க, புராடஸ்டண்டு, எவாஞ்சலிக்கல் எல்லோருக்குமே) பத்திரிக்கைகளில் ஆள் உண்டு. எல்லா பத்திரிக்கைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பொதிகை தொலைக்காட்சியிலிருந்து சன் டிவி ஜெயா டிவி, விஜய் டிவி எல்லாவற்றிலும் ஆட்கள் உண்டு. கிறிஸ்துவத்துக்கு எதிரான எந்த கருத்துக்களும் வராமல் பார்த்துகொள்வதற்காகவும், அவர்களது பிரிவு பாதிரிகள் பெயர் வெளிவராமல் பார்த்துகொள்வதற்காகவும் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் வருடந்தோறும் செலவிடப்படுகின்றன. இந்த ஊழல்களுக்கான பணம் அப்பாவி கிறிஸ்துவர்களிடமிருந்து தசமபாகம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்களாக சுரண்டப்பட்ட பணம் இன்று கோடிக்கணக்கான ரூபாய்களாக ஆகியிருக்கிறது. இது மாதிரி சுரண்டல் இந்துக்களிடமும் இல்லை. இஸ்லாமியரிடமும் இல்லை. தசமபாகம் கொடுக்காதவர்களை கொடுக்க முடியாத ஏழ்மைச்சூழலில் இருப்பவர்களை தனிமைப்படுத்துவதும் கேலி செய்வதும், கடைசி பெஞ்சில் உட்காரவைப்பதுமாக தொல்லைகளும் துன்பங்களும் ஏராளம். தசமபாகம் கொடுக்காதவர்களை இயேசு நரகத்தில் தள்ளி வதைப்பார் என்று சபையில் ஓப்பனாக பேசும் பாஸ்டர்களும் உண்டு.

  இந்த பணத்தை வைத்துகொண்டு சபைக்கு வரும் அழகான பெண்களை தள்ளிகொண்டு போவதும், சிறுமிகளை உபயோகப்படுத்திகொள்வதும் இங்கே ஏராளம். ஆனால் வெளிநாடுகளில் வெளிவந்த விஷயம், இந்த பெண்ணால் இங்கே வெளியே மெல்ல கசிகிறது. உள்ளே இருப்பது பெரிய புழுத்து நாறும் அசிங்கம்.

  கிறிஸ்துவ பிரச்னை என்றால் உடனெ வெளிச்சம் போடும் பாஜக கூட எடுத்துகொள்ளாத பிரச்னையை நீங்கள் எடுத்துகொண்டு போராடுவதில் எனக்கு சந்தோஷம். ஆனால், இந்த ஒரு பெண்ணொடு மட்டுமில்லை இந்த பிரச்னை என்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
  (இதனை பின்னூட்டத்திலிருந்து நீக்குவதாக இருந்தாலும் சரி. தெரிந்துகொள்ளுங்கள். பல ஆண் சிறுவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது கத்தோலிக்க ஹாஸ்டல்களில் மட்டுமல்ல, உதாரணமாக் திருச்சி பிஷப் ஹீபர் காலேஜ், பிஷப் ஹீபர் பள்ளி ஹாஸ்டல்களில் பிரின்ஸிபாலின் சகோதரரே ஹாஸ்டல் வார்டன். அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஹாஸ்டல் ஏழை சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம்)

  இவர்களுக்கு ஒரு நீண்ட போராட்டம் மூலமாகவும், இந்த அசிங்கங்கள் வெளியில் வருவதன் மூலம் அங்கு நடக்கக்கூடிய சீர்திருத்தம் மூலமாகவுமே கிறிஸ்துவம் நல்ல பெயரை மீண்டும் எடுக்க முடியும்.

 21. Vinavu anne ippa neenkha yen periyar dravida kalakathuku yethiraka poradah koodathu.. avanka thalithunu kapatha parkarankale.. parpome unkha netrikan yevloo thooram therakuthunu..

 22. மதம் என்னும் மடமையை தீயீலிட்டு கொளுத்தும் வேளை வந்துவிட்டது.தோழர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

 23. //இந்த உடனடி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது.//

  :))

  இதை போன்ற கதைகள் பலவற்றை என்னுடன் படித்த (முன்னாள்) பிரதர்ஸ் சொல்லி கேட்டிருக்கிறேன்…மற்றும் என் நண்பன் ஒருவனுக்கும் இதை போன்று நடந்திருகிறது. பள்ளி பருவத்தில் விளையாடப்போன அவனுக்கு பந்தையும் பேட்டையும் தருவதாக அழைத்து போனவர், தன் சில்மிஷன்களை செய்திருக்கிறார். பயந்து போய் வெளியே ஓடிவந்துவிட்டான். (இது நடன்டது சுமார் 20 வருடங்களுக்கு முன்).

 24. எனது பதிலில் ”மோசடியை” என்பதற்கப் பதிலாக ”மோடியை” என்று வந்தவிட்டது. எழுத்துப்பிழையால் வந்த தவறு.

  உங்கள் கேள்வியை புரிந்துகொண்டுதான் பதில் அளித்துள்ளேன். கடுமையான செயல்பாடுகளுக்கு ஏற்பவே கடுமையான வார்த்தைப் பிரயோகம் இருக்கும் என்று. நீங்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள். எந்தெந்த கட்டுரைகளில் நீங்கள் சொல்வது போல ”மென்மை“ கையாளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுச் சொன்னால் என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  ஊரான்.

 25. அய்யா ராஜசேகர்,

  நீங்கள் குறிப்பிடும் அந்த விவாதத்தில் முழமையாக படித்துவிட்டே எனது கருத்தையும் பதிவு செய்துள்ளேன். அந்தக் கட்டுரையில் ”மென்மை” கையாளப்பட்டிருந்தால் இஸ்லாமிய மதவெறியர்கள் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வாதாட வரவேண்டும?

  ”ஹிந்து மதம் அயோக்கியத்தனம் , முஸ்லிம் மதம் பிதற்றல் என்று சொல்லுறிங்களா?உங்கள் கருது படி பிராமண ஜாதி வெறி என்பது அயோக்கியத்தனம் , மற்ற ஜாதி வெறி பரவா இல்லை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பது போல உள்ளது”

  இவ்வாறு எங்குமே நான் சொன்னதில்லை. நீங்களே இட்டுக்கட்டிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

  ஊரான்.

  . ..
  Posted on 27-Oct-10 at 11:04 am | P

 26. ஹ்ம்ம், பிற மதங்களை எங்கும் விமர்சிக்கவில்லை, .. நம் மஞ்சள் துண்டு பகுத்தறிவு ராமன் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தான் என கேட்கும். அனால் இயேசு நோய்களை குனபடுதுவதற்கு எந்த மருத்துவ கல்லூரியில் படித்தான் என கேட்காது சந்தர்ப்ப வாத அரசியல் செய்யும். அது போல நீங்கள் செய்வது சந்தர்ப்பவாதமா இல்லை காவி தீவிரவாதத்தை, ஹிந்து மதத்தை விமர்சிப்பது போல பச்சை தீவிரவாதத்தை, முஸ்லிம் மதத்தை விமர்சித்தால் உருப்படியாக வீடு பொய் சேர முடியாது என பயமா?

  இதற்கு வினவு ஆதாரம் கொடுக்குமா? ஆதாரம் கொடுக்காமல் சும்மா அங்க பொய் பார், இங்க பாரு என சொல்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க