பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.
அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.
சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.
மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.
தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.
இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.
இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.
இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.
‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.
ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.
அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.
முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.
இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.
ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.
_________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
- தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
- தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!
- உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!
- நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!
- சிதம்பரம் கோவில்: சிவனடியார் ஆறுமுகசாமியைக் கொல்வதற்கு தீட்சிதர்கள் முன்னோட்டம் !!
- தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !! | வினவு!…
தங்கள் கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியாரின் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை….
ivanungale ulla vittaa perumaluku pathil periyarai vachupaanga
அம்புறான் அவர்களுக்கு,
பெரியார் சிலை வச்சா கூட எல்லாரும் போய் கும்பிடுவோம்…..
நீர் கவலை பட வேண்டாம் ……
அய்யா அம்புறான் அவ்ர்களே, கருவறைக்குள்ள பெருமாள வெக்கிறது இல்ல பெரியார வெக்கிறது என்பதா இப்ப நாட்டுல முக்கியமான பிரச்சினை? இதில கூட சப்ஜெக்ட்ட மறைக்கிற தீண்டாமையக் கடை பிடிக்கிறீங்க பாத்தீங்களா?
thappe illa…aana athukum brahmins thaan pooja pannanum naa…periyar thaan romba feel panuvaar
முறையான அரசு ஆணையை ஏற்று; அரசு அளித்த பயிற்சிகளை முறையாகப் பெற்றுக் கொண்டபிறகும் அதே அரசிடமிருந்து நியமன ஆனை பெறுவதற்காகப் போராடிவரும் அவலம் ஒருபுறம்.
மறுபுறமோ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு சுத்தமான ‘இந்து அரசியலமைப்புச் சட்டம்’தான் என்ற சமூக உண்மை மீண்டுமொருமுறை தம்மைத் தாமே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த அரசும் சட்டமும் பார்ப்பனியத்தின் இரு பாதணிகள் என்று பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. இரண்டையும் வீழ்த்தி முடக்குகின்ற புரட்சிகர போராட்டம்தான் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமான நியாயங்களைப் பெற்றுத்தரும்.
இந்து முன்னணியும் தான் ஒரு ‘பார்ப்பன அடியாள் முன்னணி’தான் என்பதை அவ்வப்போது நிரூபித்திருக்கிறது. அர்ச்சகர்கள் ஆவதற்கு சட்டப்படி தகுதி பெற்ற வேற்று சாதியினரான இவர்களைத் தாக்கியதன் மூலம் ‘யாரெல்லாம் இந்து’, ‘யாரெல்லாம் இந்துக்கள் அல்ல’ என்பதை பார்ப்பனியம் என்ற அளவுகோல் கொண்டு இரண்டாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள், இந்து முன்னணிக் காலிகள்.
கருவறைக்குள் வேற்று சாதியினர் சென்றால், கருவறைக்குள்ளிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்று பிலிம் காட்டுகிறது பார்ப்பனியம். அந்தப் பிலிமை அப்படியே ஏற்கிறது உச்சிக்குடுமி மன்றம். வேற்று சாதி அர்ச்சகர்கள் கருவறை நுழைந்தால், அங்கிருந்து கடவுள் வெளியேறுவாரா அல்லது அப்படியே இருப்பாரா என்பது யாருக்கும் தெரியாது; ஆனால் கருவறைக்குள்ளிருந்துகொண்டு இந்த சமூகத்தையே ஆட்டிப்படைக்கின்ற பார்ப்பனியம் அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றப்பட்டுவிடும்.
இந்த அபாயத்தை உணர்ந்ததினால்தான் இப்படிக் கூப்பாடு போடுகிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள்.
எப்படியிருந்தாலும், கருவறைக்குள்ளிருந்து பார்ப்பனியத்தையும் இச்சமூகத்திலிருந்து இந்து மதத்தையும் துடைதெறிய வேண்டியது இரண்டாயிரமாண்டாக அடிமை பட்டுக்கிடந்த மரபில் வந்த நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. பார்ப்பனிய-இந்து மதத்தை வீழ்த்த சபதமேற்போம்!
//தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது.//
பார்ப்பனர்களைவிட பிற்பட்ட சாதியினர்தான் எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்கிறார்கள் என்று கதறும் டோண்டு போன்ற ஜந்துக்கள், பார்ப்பனர்களின் வெட்கங்கெட்ட தீண்டாமை சட்டப்பூர்வமாகவே புனிதம் என்று பாதுகாக்கப்படுவதையும், பிற்பட்ட சாதியினரின் தீண்டாமைக்கு எதிராக குறைந்த பட்சம் சட்டத்திலாவது வழியிருக்கிறது என்பதையும் பற்றி வாய் மூடி மௌனம் சாதிப்பார்கள்.
பார்ப்பனியம் என்று ஏன் சொல்கிறோம் என்பதற்கு இதோ இதுதான் காரணம். இந்தியா எனும் பார்ப்பனிய அரசில், பார்ப்பனியத்தின் மேன்மையும், ஒடுக்குமுறையும், தீண்டாமையும் சட்டப்பூர்வமானது, புனிதமானது.
இதனை எதிர்க்கும் சூத்திர, பஞ்சமர்களின் சுயமரியாதைப் போராட்டங்களோ சட்டவிரோதமானவை (மதமாற்றம், கருவறை நுழைவு போன்றவை). அதாவது இந்த இழிவு எனக்கு வேண்டாம் என்று வெளியே போனாலும் தண்டனை (இடஓதுக்கீடு கிடையாது, மதமாற்றத் தடைச் சட்டம்), இந்த இழிவை உள்ளிருந்தே எதிர்ப்பேன் என்று சொன்னாலும் தண்டனை.
எந்த மானமுள்ள ‘இந்து’வாவது (இந்து என்றால் மானம் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்) இதைப் பற்றி பேசினால் எனது ஜென்மம் சாபல்யம் அடையும்.
[…] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!: தங்கள் கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியாரின் சிலைக்க… http://bit.ly/ae6X2c […]
தமிழன் தொட்டால் தீட்டுப்படும் சாமியை தமிழ் தெரியாத சாமியை மக்களை மதங்களால் பிரித்த சாமியை சுனாமியில் இருந்தும் பூகம்பத்தில் இருந்தும் நம்மை காப்பாற்ற முடியாத சாமியை தீண்டாமை கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் சாமியை….போங்கடா…போங்கடா….போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா..
நமது செய்திகளை விகடன் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் விகடன் குழுமம் ஏதும் உள்நோக்கம் வைத்துள்ளதா? என்ற ஐயம் எழுகிறது….
எனது ஐயம் நியாயமானதுதானே….
பார்ப்பன பத்திரிக்கைகளை,போராளிகள் படிப்பது, அடுக்குமா?
அய்யா rummy அவர்களே, போராளிகள் கோவிலுக்குதான் போகக்கூடாதே தவிர கோவில் பக்கமே போகக்கூடாதுன்னு யார் சொன்னது? போராளிகள் பார்ப்பன புத்தகங்கள படிச்சு மக்களிடம் பரப்பியே இந்த நிலைமை! இதுவும் இல்லாட்டி பார்ப்பான யாரும் கையில பிடிக்க முடியாது.
சூத்திரனை தொட்டால் தீட்டு எனக் கூறும் பார்ப்பான், தட்டுல விழும் சூத்திரனின் துட்ட மட்டும் பொறுக்கிக்கொள்வது அடுக்குமா.
பார்ப்பனர்களின் எதிர்ப்பு வலுப்படுவது…நமது போராட்டத்திற்கு வலுவும், மக்களிடம் சென்றடையவும் வழி வகுக்கும்………
அவ்வகையில் நமக்கு மகிழ்ச்சியே
We are talking too much about untouchability, but in practical nothing is changing. While we proud about our Tamil culture and glory, we need to shame on our current social system. We still follow caste
system and deprive some section the society. We need to change this immediately. All the developed castes should adopt one deprived caste people and provide them social status and security. For example the Nadars (once deprived community) should adopt Pallar, Parayar, Navithar, Vannaar and Sakkiliar and declared them as Nadars and give them social security and protection as they are the majority community in southernmost districts. This kind of act only will eradicate caste in Tamil society and uplift the deprived people.
அருமை , கடவுள் நன்பிக்கை நமக்கு இல்லை.
ஆனல் அதை வைத்து வியாபாரம் செய்யும் இந்து முன்னணி போன்ற
குண்டர் படைகளுக்கு ஒரு கேள்வி ?
நாமெல்லாம் இந்துக்கள் என்று சொல்லும் ராமகோபாலன்
ஒரு முறை ஈனும் இந்துகளின் தீண்டாமை பற்றி ஏதனும் சொன்னது உண்டா ?
ஆனல் பெரியார் போன்ற தலைவர்கள் இல்லை என்றல் நம் இன்னும் அடிமை சமுதயமாக தான் இருக்க முடியும் .
மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கும், ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
WELL SAID
இன்றைக்கு பார்ப்பனியத்தை எதிர்ப்பதிலும், எதிர்கொள்வதிலும் மிகக் கட்சிதமான எதிர்வினை நாங்கள்தான் என்று யார் மார்தட்டிககொண்டாலும் அதைக் களத்தில் நின்று நிரூபித்துக்காட்டி வருவது ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மட்டும்தான் என்பதை ம உ பா மையம் தலைமையில் அர்ச்சக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறது. தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான உண்மையான போராட்டம். தீண்டாமையை தீவிரப்படுததுவதில் பார்ப்பனியமும் அதன் அதிகார பீடமுமான உச்ச (அ )நீதிமன்றமும் சேர்ந்து மக்கள் முன் பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற வகையில் நகர்கிறது தோழர்களின் போராட்டம். அர்ச்சக மாணவர்களை பெரியார் சிலைக்கு மாலை அணிய உணர்தியது ஆன்மீக உணர்வா? அல்லது போராடட உணர்வா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுப்பார்க்கும் பொழுது இது விளங்கும்.
ஆலயத்தில் உருவ வழிபாடு செய்வது தவறு, கல் எப்படி கடவுளாகும், கல்லை கடவுள் என்று சொல்லி மாலை மரியாதை செய்வது மூட நம்பிக்கை என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு வருடமும் பெரியார் பிறந்தநாள் அன்று முதல்வர் கருணாநிதி, திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பகுத்தறிவு வாதிகள் பெரியார் சிலைக்கு வரிசையாக நின்று மாலை போட்டு, சிலை முன் நின்று மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். பெரியார் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வது எப்படி பெரியாருக்கு மரியாதை செலுத்தியதாகும்? அதுவும் வெறும் கல் தானே? தலைவர் சமாதியில் மலர் வளையம் வைக்கிறார்களே, அங்கே தலைவர் எங்கே இருக்கிறார்? அவர் தான் செத்துப் போய்விட்டாரே, அவர் அங்கே இருந்து உங்கள் மரியாதையை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அந்த இடத்தில் அஞ்சலி என்ற பெயரில் மவுனமாக நிற்கும் போது உங்களுக்கும் அந்தத் தலைவருக்கும் ஏதாவது நடக்கிறதா? இந்த மாதிரி கேள்விகளுக்கு பெரியார் கட்சியினர் கொடுக்கும் சப்பையான பதில், “நாங்கள் குறைந்த செலவில் தான் சிலை வைத்தோம், மேலும் மாலை, தேங்காய் பழத்திற்கு கம்மியாத்தானே செலவு செய்தோம்” என்பது. இவ்வளவு கேனைகளாகவா இருப்பார்கள் பெரியார் தொண்டர்கள்?
ஒரு நாத்தீகனின் மூட நம்பிக்கைகள் என்ற பெயரில் விவாதம் நடந்தது. பெரியார் மூட நம்பிக்கைகளை நீக்குகிறேன் என்று சொல்லிவிட்டு என்னென்ன மூட நம்பிக்கைகளைச் செய்தார், இன்னும் அவருடைய தொண்டர்கள் மூட நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள் என்று போட்டு கிழி கிழி கிழித்தெடுத்திருக்கிரார்கள். இந்த வாதத்தில் சரியாகப் பதில் சொல்ல முடியாமல் பெரியார் கட்சிக் காரர்கள் தவிடு தின்னுவதை கண்டு ரசிக்கலாம். மொத்தம் நாற்பதுக்கும் மேல் விடியோக்கள் உள்ளன, பார்க்க ஆரம்பித்தால் விடவே முடியாத அளவுக்கு சுவராஸ்யம், ஆனால் பெரியார் கட்சிக்காரர்கள் பேசும்போது அந்த சுவராஸ்யம் இருக்காது. இருப்பினும் விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள இருதரப்பு வாதங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. பெரியார் கட்சிக் காரர்கள் வாதத்தை பல்லைக் கடித்துக் கொண்டு பாருங்கள். அதற்க்கு எதிர் வாதம் நேரம் போவதே தெரியாமல் சுவராஸ்யமாக இருக்கும்.
one good Talk Link:
http://www.youtube.com/watch?v=lB1Jmp7XCDw&feature=related
First Video Link:
நீங்க கொடுத்த அந்த லிங்குல போய் பார்த்தேன் அந்த தொப்பி போட்டா ஆளு இந்து மத விஷயங்களே தெரியாமல்ல பேசிக்கிட்டு இருக்காரு.
நண்பர் கே.ஜெயதேவதாஸ், உங்களிடம் இரண்டு கேள்விகள். ஒன்று நீங்கள் மூட நமபிக்கை உள்ள நாததிகத்தை ஆதரிக்கிறீர்களா? அல்லது மூட நம்பிக்கை அற்ற நாத்திகத்தை ஆதரிக்கிறீர்களா? மற்றொரு கேள்வி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது நாத்திகமா? ஆத்திகமா?
பெரியாருக்கு சிலை எதற்கு?
🙂
கும்பிடுவதற்கு அல்ல. பார்ப்பனியத்தின் வயிற்றில் புளியைக் கரைக்க.
பார்பன வயற்றில் புலியை கரைக்க என்றால் சிலை மட்டும் இருந்தால் போதுமே!
பிறகு எதற்கு பூ மாலை, மவுன அஞ்சலி இதெல்லாம் ஆத்திகம்தானே?
Dear VINAVU,
Instead of giving preachings to HINDUS how to run or by whom it should run the temples you better build temples at your cost and risk at every city and start your collections. WHO KNOWS HINDUS IN INDIA AND ESPECIALLY TN ARE SO DIVIDED THEY WILL COME TO YOUR TEMPLES TOO AND PUT MONEY.
WE HINDUS KNOW HOW TO MANAGE OUR AFFAIRS ; SO PLEASE KEEP AWAY FROM HINDU TEMPLES AND HINDUISM ESPECIALLY.
Who is hindu all are hindus or only brahmins. if all are hindus why
they dont get allowed to perform poojaas………
பஞ்சாப் ரவி,
// WE HINDUS KNOW HOW TO MANAGE OUR AFFAIRS ; SO PLEASE KEEP AWAY FROM HINDU TEMPLES AND HINDUISM ESPECIALLY.//
உங்களிடம் நாகரீகமாக ஒரு விஷயம் கேட்க வேண்டியுள்ளது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியார் மீதான பாலியல் புகார் பற்றிய பதிவில் நீங்கள் சொன்ன கருத்து.
https://www.vinavu.com/2010/10/15/st-josephs-trichy/#comment-31385
//VINAVU, SISTER JESME( JESUS &ME) எனும் சிஸ்டரின் புக் உள்ளது, பெயர் ,”AMEN” . மிகவும் புனிதமானத கருதப்படும் கேரளா காதொலிக் பிஷப் களின் எல்லா விஷயங்களையும் வெளுச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் . அதன் சில பகுதிகளை வெளியிடலாமே ….//
அங்கு மட்டும் கிறிஸ்துவ மேட்டர்களில் மூக்கை நுழைத்தீர்களே , எதற்கு? அவர்கள் ‘affairs ‘ களை அவர்களே ‘manage ‘ செஞ்சுக்க மாட்டார்களா? இல்லை, பாலியல் கதைகள் படிக்கிற ஆசையில் சொன்னீர்களா?
அப்படித்தான்னா, சவுந்தர்ய லஹரியையும் , கிருஷ்ணா லீலாவையும் படிங்க..
ரங்கநாதனுக்கு செவ்வணக்கம் பார்பனர்கள் திமிரு ஒடுக்க படவேண்டும் ஜெயந்திரன் உள்ளே செல்லலாம் கருவறைக்குள் காமம் செல்லுபடிஆகிறது மேலும் அனைவரும் ஹிந்துக்கள் என்று சொல்வதே அபத்தம் பார்பனர்கள் மட்டுமே ஹிந்துக்கள் மற்றவர்கள் உழைக்கும் மக்கள் , சுரண்டுவதர்க்காய் ஹிந்துக்களாக சேர்த்துக்கொள்ள படுகின்றன இதை அனைத்து மக்களும் உணரவேண்டும்
நண்பர் rummy, உங்களுடன் விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் கொள்கைகள் தமிழகத்தில் நடைமுறையில் இருந்திருக்குமேயானால் நிச்சயம் பெரியாருக்கு சிலை தேவையில்லைதான் என்பது என் கருதது.
sundharji!
பெரியார் சிலை, ஹீரோ வொர்ஷிப்பின் அடையாளம்?
where there is oppression in any form on any man or section of people there should be a voice against oppression, called the feeling of democracy.Brahminisam approves and upholds caste discrimination in Indian socieity.moreover it is the only religion or sect in this world which impose discrimination on mankind by birth itself.so it is the only religion put itself above all ie above GOD it says ,BRAHMINS say.Those who accept this concept known or not known certainly loosing their self respect, may be called lower than pigs .installing statues for their leaders is quite differant from the statues of gods.latter is only on belief :leaders are from real and practical life ofthe people,that s all.
Nathika poli arivalikaluku.. there is nothing called Hindu in India.. Hindu yenral thirudan enru solvathai matri kollunkal.. http://www.youtube.com/watch?v=gSFlmOK4c-E&feature=related
கருவறை, கோவில் அனைத்தும் கடவுள் சார்ந்தது, கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கோவிலுக்கு செல்வதற்கும் கருவறைக்கு செல்வதற்கும் எதிர்பார்பதேன்,
இது உங்களுடைய கொள்கைக்கு எதிராக இருக்கவில்லையா? கடவுள் இல்லை என்று கூறுபவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்வது உங்கள் கொள்கைக்கு சரியானதா? அதில் உண்மை இருக்குமா?
kaasu irukum….athuku thaana neenga porathu…… hm meenakshi temple la pooja panna vendam neenga road ora kovilku pooja panna anumathi thara neenga…kadavul bakthiya pathi pesareengala illa kaasa parkareengala…
hello carbon whether god is there or not is unnecessary for us but how can we tolerate our people not allowed in a place in the name of caste? discriminating my folks makes me angry and calling him a lower being than you makes me ridiculous since i know everything about you.GOD,PUROHITHAM and JOTHIDAM were your weapons which made you 2% people masters over the rest 98%people.your PARUPPU will be extracted in the coming years.
அவனியில் சிறந்த மொழி – பல்
லாயிரம் ஆண்டுகள் கடந்த மொழி!
வந்தாரை வாழ வைக்கும் வளமான மொழி
வரையாது அள்ளித்தந்த வள்ளல் மொழி!
பல மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி
அதுவே எங்கள் தமிழ் மொழி!
தமிழில் பாடினால் தீட்டென்று உரைக்கிறாய்
பாடும் தமிழனை வேசி மகன் என்கின்றாய்
தமிழை படைத்தவன் முருகன் என்பது
தமிழை வளர்த்த பக்தர்கள் கருத்து
தமிழே தீட்டென்று நீயுரைத்தால்
தமிழைப் படைத்தவன் நிலை என்ன?
இனியும் நாங்கள்
இல்லை ஏமாளிகள்
பெரியார் வழிவந்த
பகுத்தறிவு செல்வங்கள்!
Akave Periyarai Murugan bhakthan enru alaipathil perumitham adaikinren..
So sad to see innocent people attacked for putting garland for a great leader. If periyar is not there, we will still be taming cows or cleaning toilets. I always respect periyar. If all tamils understand his doctrines, tamil nadu will become a role model for all societies.
போராடும் அர்ச்சர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நியாயமான கோரிக்கைகளுக்காக ஒருவன் போராடினால் அவன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் அதை முதலில் ஆதரிக்க வேண்டும்.
நாத்திகர்களுக்கு இங்கே என்ன வேலை; இந்து மதத்தை திட்டுகிறவர்களுக்கு இந்து மத விவகாரங்களில் மூக்கை நுழைக்க என்ன உரிமை இருக்கிறது என்பன போன்ற கேள்விகளை இங்கே சிலர் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. முறையாக பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர்கள் தங்களின் படிப்புக்கு உகந்த அர்ச்சகர் வேலையை கேட்கிறார்கள், இவர்களது கோரிக்கை நியாயமானதா இல்லையா. நியாயமானது என்றால் ஆர்ச்சகர் மாணவர்களுக்கு ஆதரவாக ஏன் ஒருவரும் குரல் கொடுக்க முன்வரவில்லை? இந்துக்களுக்காக அவதாரம் எடுத்துள்ள, கிராமப் பூசாரிகளுக்கெல்லாம் ‘குரல் கொடுக்கிற’ இந்து மதவாத அமைப்புகள் இம்மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை என்பதால்தானே அவர்கள் நாத்திகர்களை நாடுகிறார்கள். அப்படித்தானே ஆறுமுகச்சாமியும் நாடி வந்தார்.
ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்கிறது இந்து மதம். அதனாலேயே கீழ்ச்சாதி மக்கள் தங்களோடு கருவறைக்குள் நுழைவதை அவாள்கள் (பார்ப்பணர்கள் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறதே) விரும்பவில்லை. அவாள்களின் கூடாரமாக இந்து மத அமைப்புகள் இருப்பதாலேயே கீழ்சாதி இந்துக்களின் கோரிக்கையை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. பஞசாபி ரவி, கார்பன் கூட்டாளி போன்றவர்கள் கீழ்ச்சாதி இந்துக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தால் நாத்திகர்கள் ஏன் மூக்கை நுழைக்கப் போகிறார்கள?.
ஊரான்.
Ivarkal vetham olunkaka padithu irunthal athee vethathil pirapin pal yarum brahmin akka mudiyathu yenru pala idankalil solla pattuirupathi courtil solla vendum… Devanathan seitha kama lelaikalal avan pirapalum olukathalum manithanee illai yenru ivarkal vathida vendum… Yentha piraviyal thannai brahmanukum kidaikatha irai arul Kannapa nayanaruku siva peruman kathi koduthathai solli vathida vendum.. hindukalal potrapadum Ramayanam piravi brahmanan iyatra pada villai yenru vathida vendum.. Nattai anda Bharathan thanaku pinnal than kudumba urupinarai nattai alla sollama thakuthi udaiya oruvanai thernthu edutha kathaiyai courtil solli vathida vendum… Thannai padaithavan thanku mele oruvan irukinran yenru nambi avanai adaivatharkaka than valkai muraiyai thernthu yedukum kootathiruku peyaree brahmin (Brahmanai(padaipatral) nookubavan brahmin)….
பறைச்சியாவதேதடா பனத்தியாவதேதடா இறைச்சி தோல் எலும்பினும், இந்திய அரசியல் சட்டத்தினும் இலக்கமிட்டிருக்குதோ? என உச்சிக் குடுமி மன்றத்தை உலுக்கும் வேளையில், லோபாவுக்கு வேதாந்த விளக்கம் அளித்த யாக்ஞவல்கியரின் வாரிசுகள் சுயமரியாதையுள்ள கற்றறிந்த அர்ச்சகர்களைத் தாக்குகிறார்கள் போலும்.
எந்தக் கருவறையில் இருந்து வந்தாய் அந்தக் கருவறையில் நுழைய என்று அவர்கள் வெளிப்படையாகக் கேட்கட்டுமே.
பாரதூரமான இந்த விசயத்தில் உளப்பூர்வமான ஒத்துழைப்பும் ஆதரவும் நல்காமல் குறுக்குச்சால் ஓட்டுபவர்கள் தற்செயலாய் அல்ல அப்பட்டமாய் பார்ப்பன ஆதரவாளர்களே.. பார்ப்பனீய வாதிகளே.
உறுதிகுலையாமல் போராடும் பட்டதாரி அர்ச்சகர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
மிக அருமை
\\அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. \\ ஆஹா………… பெரியார் இன்னும் உசிரோடதான் இருக்காரா……….. உங்க பகுத்தறிவு உங்க மண்டைய உடசிகிட்டு வெளியே வருது போல இருக்கே…….
இந்து மதம் தனது பார்ப்பன மூடத்தனத்தைக் கொண்டு பார்ப்பனர் அல்லாத மற்ற சாதியினர் அனைவரையும் அடிமைப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் வந்ததின் வலியும்,வேதனையும்தான் இங்கே பெரியார் சிலையை வணங்க காரணம். தனது சொந்த இந்து மதத்தால் கொடுமைப்படுத்த ஈ.வெ.ராமசாமியின் இந்து மதத்தின் மீதான கடும் கோபமும் கொந்தளிப்பும்தான் இங்கே பெரியார் என்னும் நாத்திகம் தோன்ற காரணம். இங்கே உள்ள ஏற்றதாழ்வுகளால் ஏழைகள்தான் அதிகம், அதற்கு ஒரே காரணம் மூடநம்பிக்கைகளும்.அடிமைத் தனமும் தானே தவிர வேற என்ன இருக்க முடியும். பெரியாரின் இந்து மதத்தின் மீதான கோபம் நியாயமானதே…