Friday, June 21, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

-

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

 1. மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா
 2. புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்
 3. அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!
 4. திருச்சி ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் காமவெறி பாதிரி ராஜரத்தினம்
 5. காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!
 6. அரசு மருத்துவமனையா? மரண வாசலா?
 7. கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்! தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம் !!
 8. மணமேல்குடியில் நடந்த சீர்திருத்த திருமணம்: விளக்கமும் சுயவிமர்சனமும்
 9. மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!
 10. பள்ளி மாணவன் பாரத் கொலை: நீதி கேட்பது போலீசுக்கு அநீதியாம்!
 11. சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி!!
 12. தேசிய அடையாள அட்டை: மக்கள் நலனுக்கான திட்டமா? மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
 13. வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?
 14. டாடா குழுமத்தின் கோரமுகம்
 15. ராஜஸ்தான் மாநில அரசு – மான்சாண்டோ கூட்டு ஒப்பந்தம்: சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட ஈ
 16. அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்
 17. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்! அரசு பயங்கரவாதத்தின் கேடயம்!!
 18. காஷ்மீர் சலுகைத் திட்டம்: மீண்டுமொரு மோசடி நாடகம்!
 19. ரவுடியின் கொட்டத்தை ஒடுக்கிய பள்ளி மாணவர்களின் போராட்டம்
 20. பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் ! | வினவு!…

  அயோத்தி தீர்ப்பு, விடுதலைப் புலிகள் , மருத்துவர் சாந்தாராம், அரசு மருத்துவமனைகள், மணற்கொள்ளை, ஹர்மத் வாகினி, தேசிய அடையாள அட்டை, சாதிவெறி, மான்சாண்டோ, காஷ்மீர்…

 2. […] This post was mentioned on Twitter by வினவு and ஏழர, Maverick . Maverick said: RT @vinavu: புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் ! https://www.vinavu.com/2010/11/04/puja-nov-2010/ […]

 3. வணக்கம், அண்மை நிகழ்வான கன்னித்துறவி மேரி மற்றும் துறவுத்தந்தை ராசரத்தினம் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டின் சில மறுக்கமுடியாத உண்மைகள். கன்னித்துறவி தனது ஆகஸ்டு 25 நாளிட்ட கடிதத்தில் புனித ஆன் துறவக தலைமைக்கு எழுதிய கடிதத்தில் தான் துறவுத்தந்தையோடு மனமொப்பிய பாலுறவு கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் செப்டம்பர் 23 நாளிட்ட கடிதத்தில் அது ஒரு வன்புணர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது என்ன? தான் யேசு சபையிலிருந்து நீக்கப்பட்ட பிறகே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். என்ன காரணம்? கன்னித்துறவி ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர் என்றால் எப்படி அவரது சகோதரர் இலண்டனில் பணியாற்ற முடிந்தது? யாருடைய உபயம்? இதை எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், ம.க.இ.க வின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக துறவுத்தந்தையின் மீது வன்புணர்ச்சி குற்றம் சாட்டுவதன் நோக்கம் என்ன? வன்னியர்சாதி தாதா ஒருவரின் பின்னணியில் கன்னித்துறவி யேசு சபையை மிரட்டிப் பணம் பறிக்க நடந்த நிகழ்வுகள் பற்றி ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை? திருச்சி உள்ளூர் கிறித்துவ வன்னியர் பிரிவைச்சார்ந்த துறவுத்தந்தைகளின் ராசரத்தினத்தின் மீதான விரோதப்போக்கின் காரணம் என்ன? அப்படி எத்தனை துறவுத்தந்தைகள் முற்றும் துறந்தவர்களாக இருக்கிறார்கள்? துறவு என்கிற மதக் கருத்தியலே தவறான ஒன்று. அதில் சிக்கிய எந்த மனிதனும் இப்படைப்பட்ட மறைமுக பாலுறவுகள் வைத்துக்கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இயல்பே. மேலும் கன்னித்துறவி ஒப்புக்கொண்டது போல் அது மனமொத்த புணர்ச்சியாக இருந்திருக்கும் வகையில் இதில் வன்புணர்ச்சி என்ற குற்றம் எங்கே வந்தது. துறவொழுக்கத்திலிருந்து வழுவிய மதக்குற்றம் புரிந்த வகையில் ராசரத்தினம் கொண்ட இழுக்கைப் பயன்படுத்தி பிற குற்றங்களைச் சாட்டுவதும், உண்மையான ஆராய வேண்டிய பிரச்சனையை விட்டு விலகுவதும் தவறான பார்வை மட்டுமல்ல சமூகக் குற்றமும் கூட. நன்றி.

  • அப்படி போடு நைனா, இதான் கதையா? கன்சென்சுவல் செக்ஸ் வச்சுக்கிட்ட ஃபாதர், சிஸ்டர் மேல முரசு சொன்னாப்பல ‘மதக்குற்றம்’ வேணும்னா சாட்டலாம்? உள்ளுக்குள்ள என்ன பிரச்சனைன்னு விரிவா வெளிய வராம வெளிய கொண்டுவராம ஃபாதரை மட்டும் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்? ம.க.இ.க வசமா மாட்டினியா? ஏன்யா ஓன் கடுப்புக்கு இப்படி மண்ண வாரி தூத்துர? பாப்பான் சங்கராச்சாரி தப்புச்சதுக்கும் பாப்பானில்லாத பிரேமானந்தா வகையறாக்கல் மாட்டுனதுக்கும் என்னப்பா வித்தியாசம்? குத்தம் ஒன்னு தான். ஆனால் மாட்டுறது மட்டும் யாரு? அப்படின்னா இது சமூக கோளாறு நைனா. சாதிக்கோளாறு. இப்ப ம.க.இ.க தன் மூஞ்சியிலேயே சேற வாரி பூசிக்கிச்சா?

  • அந்த வெள்ளுடைப் பேர்வழி ராசரத்தினம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனமொத்த புணர்ச்சி செய்யக்கூடாதுன்னு ம க இ க சொல்லுச்சா? செய்யுறது திருட்டுத்தனம் இந்தப் பேர்வழிங்கள தட்டிக் கேட்டா சமூகக் குற்றமா? நல்லாயிருக்குது ஒங்க அறநெறி!

  • அந்த வெள்ளுடைப் பேர்வழி கல்யாணம் பண்ணிக்கிட்டு மனமொத்த புணர்ச்சி செய்யக்கூடாதுன்னு ம.க.இ.க சொல்லுச்சா? செய்யறது திருட்டுத்தனம். இவர அம்பலப்படுத்தினா ச்மூகக் குற்றமாம்! நல்லாயிருக்குங்க ஒங்க அறநெறி!

 4. அப்படி போடு நைனா, இதான் கதையா? கன்சென்சுவல் செக்ஸ் வச்சுக்கிட்ட ஃபாதர், சிஸ்டர் மேல முரசு சொன்னாப்பல ‘மதக்குற்றம்’ வேணும்னா சாட்டலாம்? உள்ளுக்குள்ள என்ன பிரச்சனைன்னு விரிவா வெளிய வராம வெளிய கொண்டுவராம ஃபாதரை மட்டும் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்? ம.க.இ.க வசமா மாட்டினியா? ஏன்யா ஓன் கடுப்புக்கு இப்படி மண்ண வாரி தூத்துர? பாப்பான் சங்கராச்சாரி தப்புச்சதுக்கும் பாப்பானில்லாத பிரேமானந்தா வகையறாக்கல் மாட்டுனதுக்கும் என்னப்பா வித்தியாசம்? குத்தம் ஒன்னு தான். ஆனால் மாட்டுறது மட்டும் யாரு? அப்படின்னா இது சமூக கோளாறு நைனா. சாதிக்கோளாறு. இப்ப ம.க.இ.க தன் மூஞ்சியிலேயே சேற வாரி பூசிக்கிச்சா?

 5. dear vinavu,
  i am reading lot of blogs in main stream media and leftist blogs too. but i can see in your blogs there is an active participation from lot of persons from different walks of life. only a very few sites are having this much use ful discussion threads . if i compare to big websites with big news i have to say the fact is that the readership involement is very little only. unlike in vinavu it is different. so i need to congrats the vinavu authors for their practical approach towards the every day issues . from nokia sez labour issues to international issues the views are precsion and perfect .
  i request vinavu to make aggressive advertisement campain so that the readership will increase. there can be such a sitiuation that vinavu can be a leading light in tamil internet space for political and current issues. there is lot of potential for becoming a true leader because there is a real stuff in your contributors. so make sure that is not catering only the same routine observers and activists people who is already well informed rather focus on the vast majority of the masses who are still out there without the the knowledge of these kind of websites. my humble suggestion.
  1, Mass mail – but make sure it should not hit the junk box.
  2,Advt in other leading websites- sure it is not a crime or ideological deviation. so pls think of this. it will pay.
  3,advt in magazines – it is not a mistake to be later self critisized. it will work.
  4,mirror website in english – of course – it is internationalism and that is a tribute to your valuable authors who are brilliant to touch LPN (london – paris -newyork) level.
  5,A bit of hard work to the next level in design and youthfull attraction.
  you can . we wait for that to happen.
  sincerly
  rk

  • நண்பர் rkk
   வினவு மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் ஆலோசனைகளை கணக்கில் கொள்கிறோம். தோழர்கள், வாசகர்கள், நண்பர்கள் பங்களிப்போடு நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அம்சங்களை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம். மீண்டும் நன்றி

 6. ”மாணவன் பாரத் படுகொலை” பதிவில் வந்துள்ள எனது பின்னூட்டத்தை இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

  ”தவறிழைத்தவன் – அது கற்பழிப்புக் குற்றமாயினும் – தன் சாதிக்காரன் என்றால் அவனைக் காப்பாற்றவே அச்சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். ஒரே சாதிக்குள்ளேயே ஒருவன் தவறிழைத்தால் அவன் வசதியானவன் என்றால் அவனைக் காப்பாற்றவே அச்சாதியைச் சேர்ந்த பிழைபுவாதிகள் அணிசேர்கிறார்கள். இதைத்தான் மக்களை அணிதிரட்டி வைத்திருக்கும் ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதியச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பார்க்க முடிகிறது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விதி விலக்கு அல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது”.

  ராஜரத்தினம் விசயத்திலும் மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டு நிற்கிறார்கள் சிறுத்தைகள். பெரியார் தி.க இவர்களோடு சேருவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இவர்கள் பகுத்தறிவு பேசினாலும் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த சாதிக் கேற்ப ‘நம்ம ஆளு’ கலாச்சாரம் பேசுபவர்கள்தான். இவர்கள் பயின்ற தி.க பாசரையிலிருந்து இவர்கள் இதைத்தான் கொண்டு வந்துள்ளார்கள்.

  இங்கே முரசு, கலாட்டா, குலேட்டா பெயர்களில் பின்னூட்டமிட்டுள்ளவர்களின் வக்கிர புத்தி மிகத் தெளிவாகத் தெரிகிறது இவர்களும் ‘நம்ம ஆளு’ கலாச்சாரம் பேசுபவர்கள்தான் என்று.

  ”இது நம்ம ஆளு” என்கிற சாதிக் கலாச்சாரமே குற்றவாளிகளைக் காக்கும் கேடயமா இருக்கிறது. சாதி உணர்வு வேறு, சாதி வெறி வேறு என்று பேசும் கனவான்களே! சாதிய உணர்வுதான் மெல்ல மெல்ல சாதி வெறியாக மாறுகிறது. சாதி வெறிதான் ராஜரத்தினம் போன்ற காமுகர்களையும் பாதுகாக்க முயல்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க