privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

-

மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கட்டாய நன்கொடையை எதிர்த்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் எனும் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சி ரவுடி யோசுவா நடத்தும் ஆதிக்கத்தை எதிர்த்தும் பு.மா.இ.மு போராடி வருகிறது. இது குறித்து முன்னர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இதன் காரணமாக பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களுமான மணி, சதாம் இருவரையும் பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது. சாதரணமாக ஈவ் டீசிங், ராகிங், முதலான பிரச்சினைகளுக்குத்தான் மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு இரு மாணவர்கள் ரவுடியை எதிர்த்ததற்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதியை எதிர்த்து மாணவர்களிடமும், பகுதி மக்களிடமும் பிரச்சாரம் செய்த தோழர்கள் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ரவுடி யோசுவா மீதான கிரிமனல் வழக்குகள் குறித்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

இப்படி ஒரு வழக்கை நீதிமன்றம் சந்தித்திருக்காது என்பது நிச்சயம். அரசு தரப்பு வழக்குரைஞர் மாணவர்களை நீக்கியது செல்லும் என்று வைத்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. மேலும் “கட்டாய நன்கொடை ஏன் வாங்கப்பட்டது?, அதை எதிர்த்துக் கேட்ட பள்ளி மாணவர்களை எப்படி நீக்க முடியும்?, இப்படி செய்வதற்கு தலைமை ஆசிரியருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?, கிரிமினல் வழக்குள்ள யோசுவா பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் எப்படி இருக்க முடியும்? “ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார் அந்த நீதிபதி.

அதற்கு அரசு தரப்பு எந்த விளக்கத்தையும் நியாயமாக அளிக்க முடியவில்லை. எனவே இப்படி அநீதியாக பள்ளி மாணவர்களை நீக்கிய தலைமை ஆசிரியர் மீது பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார் நீதிபதி.

நீதிமன்ற உத்தரவை காண்பித்து நீக்கப்பட்ட பள்ளிமாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். பொதுவில் மாணவர்களை நீக்குவதும், மிரட்டுவதும் என்று சர்வாதிகாரம் நடக்கும் பள்ளிகளில் இரு மாணவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது பலருக்கும் அதிசயமாக இருந்தது.

ஒருபுறம் ரவுடி யோசுவாவின் ஆதிக்கம். மறுபுறம் அதற்கு ஒத்தூதும் பள்ளி நிர்வாகம். இப்படி இரண்டையுமே பு.மா.இ.மு தோழர்கள் மக்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி வென்றிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது ! | வினவு!…

    ஒருபுறம் ரவுடி யோசுவாவின் ஆதிக்கம். மறுபுறம் அதற்கு ஒத்தூதும் பள்ளி நிர்வாகம, இரண்டையுமே பு.மா.இ.மு தோழர்கள் மக்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி வென்றிருக்கிறார்கள்….

  2. //மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?//

    ஓஹோ இதுக்கு பேருதான் அரசியலா? தெரியாம போச்சே..!

    • அண்ணே முட்டா ஊ
      ரவுடியோட மாணவர்கள் மோதியிருக்காங்க, ஹெட்மாஸ்டர் அவங்கள டிஸ்மிஸ் செய்ஞ்சிருக்காரு, இரண்டையும் எதித்து அவங்க போராண்டதும், அவங்களுக்கு உறுதுணையா ஒரு நக்சல் கூரூப்பும் இருக்குதுன்னா அது அரசியல் இல்லாம உருளைக்கிழங்கு போண்டோன்னா சொல்றது, ஸ்டுபிட் முட்டா ஊ…….

    • அய்யா மூட்டூ அவர்களே,
      ஒங்களுக்குத் தெரிஞ்ச அரசியல்லெல்லாம் வெறும் கருணாநிதி, ஜெயலலிதா, இல்ல தினந் தந்தி, தின மணிதான். சரி சரி அநீதியையும், நீதியையும் பிரித்துப் பார்க்க முடியாத உங்களுக்கு பு.மா.இ.மு தோழர்களின் அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியாதுதான்.

  3. ஆனாலும் ரொம்பதான் அதிசயமா இருக்குங்க….!! வினவு குரூப் நீதிமன்ற தீர்ப்ப எல்லாம் மதிச்சி…கட்டுரை வெளியிடுறாங்க…
    அதிசயமுங்கோ…!!!!

    • அண்ணே முட்டா ஊ
      நீதிமன்றம்தான் வினவு குரூப்போட நியாயத்தை மதிச்சிருக்கு, ஸ்டோரிய நல்லா படிங்க….!

    • தீபாவளி அதுவுமா அதை கொண்டாடாம வினவு போடுற கட்டுரையை முத ஆள படிச்சு கருத்து சொல்றீங்க, இது கூட அதிசயம்தான். தீபாவளிய விட வினவு முக்கியங்கறுது அண்ணன் முட்டா ஊ ஓட இரத்துத்தல கலந்துருச்சே, வாழ்க வளமுடன்!!

      • பரவால்லயே..நானும் உங்கள ரொம்ப பாதிச்சிருக்கேன் போல..என்னோட பேர அப்புடியே உல்ட்டா பண்ணியிருக்களே? புது புது பேருல வரது உங்களுக்கெல்லாம் கை வந்த கலை போல..

    • பாத்தீங்களா… பாத்தீங்களா…..சும்மா கண்ண மூடிக்கிட்டுப் பேசக் கூடாது. அந்த ரவுடிக்கும்பலுக்கு எதிரா பு.மா.இ.மு.தோழர்ங்க வழக்குத் தொடுத்தவுன்ன உடனே தீர்ப்பு வந்துடல. தோழர்ங்க சக மாணவர்களையும், பொது மக்களிடமும் பொது நியாயத்தை விளக்கி பிரச்சாரம் செஞ்சு கடும் போராட்டத்தின் மூலமாத்தான் இந்தத் தீர்ப்ப் வாங்கியிருக்காங்க. தானா வந்ததில்ல இந்தத் தீர்ப்பு.

    • mr.motoo .. what a funny -crazy -lousy -eccentric- half baked-name you have? you are thinking that you have written something clever? yes this is called politics . u don’t know dear? then u have to go back and read a lot in home. what a pity that u r roaming in funny names yar? IF THIS IS NOT POLITICS THEN WHAT IS POLITICS ??? CAN U TEACH EVERYBODY WHAT SHOULD BE DONE TO THESE SORT OF PROBLEMS FACED BY STUDENTS? MOOTOO ?

      • Mr. KRK, dont think that u asked me such a clever question. If you dont like my funny (?) name BETTER away from me. i dont think what you people did is a POLITICs approach. its not a politics. This is called democratism. you are given all rights to do anything…So you did all these things and you got good result at the end. BTW KRK means (Kaakka R. Krishnan?)

  4. புது ரவுடிமேவதே ஜெயதே!

    இந்திய நீதிமன்றங்களா, கட்டபஞ்சாயத்து மன்றங்களா! – கேட்டது யார்? அது வேற வாயா?

    மதுரவாயல் பள்ளி மாணவர்கள், தொடை தட்டி கிளம்பி விட்டனரா – அடுத்தப் போராட்டத்திற்கு?

    படிப்பா/ போராட்டமா? எது வேண்டும் அவர்களுக்கு?

    //மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?//

    இதெல்லாம் ஒரு சாதனை! கல்விப் பருவத்தில், அரசியல் அவர்களை , வன்முறை பாதைக்கு கண்டிப்பாக அழைத்துச் சென்று விடும்!

    வினவின் கேட்காத கேள்வி!— கல்வி பருவத்தில் காதலிக்கலாம்! ஆனால் அரசியலில் ஈடுபடக்கூடாதா?

    • ராமி ஐயா,

      மணிகண்டன் சொன்னா மாறி அரசியல்னா தி.மு.க, அ.தி.மு.க மட்டும்தாங்குற மொக்கை ஃபார்முலாவுல இருந்து வெளிய வாங்க, நன்கொடை கொள்ளையை மாணவர்கள திரட்டி எதிர்க்கிறதுல என்னதப்பு? இதெல்லாம் படிக்கிற காலத்துல செய்யாம பாடை ஏற காலத்துலயா முடியும்?

      • காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்!
        கல்வி பருவத்தில், படிப்பு மட்டுமே முக்கியம்!
        மாற்று வழியில் சென்றால், செல்ல வேண்டிய வழி தெரியாது!

        • Those students were dismissed from the school. Then how the hell they can concentrate on their study? Since they gone to court, now they are allowed to continue to study.

  5. //மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? //

    படிக்கும் காலத்திலேயே அநீதிக்கும் ரவுடித்தனத்திற்கும் எதிராக உறுதியாக களத்தில் நின்ற அந்த மாணவர்களைக்
    கண்டு பொறாமைப் படுகிறேன். வெள்ளேந்தியாய் – யார் மிரட்டினாலும் பயந்து கொண்டு அலைந்த எனது பள்ளி நாட்களும்
    நினைவுக்கு வருகிறது. இவர்கள் உண்மையில் சிங்கங்கள் – இளம் சிங்கங்கள்; பகத் சிங்கின் வாரிசுகள்..! வாழ்த்துக்கள்
    தோழர்களே… உங்களைப் போன்றவர்களின் கால்களில் மிதிபடவே இங்கே எதிரிகள் நிறைய காத்து நிற்கிறார்கள்….

  6. //நீதிமன்ற உத்தரவை காண்பித்து நீக்கப்பட்ட பள்ளிமாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்//

    //இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??//

    //இந்த லட்சணத்தில்…
    இந்தியாவில் நீதிமன்றம் மட்டும்
    சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
    நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
    யாராவது நம்பினால்…?//

    பார்ப்பண படித்துறையிலிருந்து கூட நீதி கிடைக்கும் போல தெரிகிறதே?

    • ராம் சார்,

      இந்த பிரச்சினையில கீழ்நீதிமன்றம் மாணவர்களுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுக்கல, சட்டப்படி எது சரின்னு பாத்து கொடுத்துருக்கு. ஒரு வேளை தீர்ப்பு எதிரா இருந்தா அந்த மாணவர்கள் சும்மா இருக்கமாட்டாங்க, மக்கள் மன்றத்துல வைச்சு போராடுவாங்க,

      இதையும் உச்சி குடுமி நீதிமன்றத்தையும் சேத்து பாக்காதீங்க, அது எப்பையுமே பார்ப்பன படித்துறைதான்! இல்லேன்னா சேது சமுத்திர திட்டமெல்லாம் ராமர் பால புரட்டு புரூடாவுனாலா அந்தரத்துல தொங்குறது எந்த நாட்டுல நடக்கும்?

  7. வாழ்த்துக்கள்.

    நீதி மன்றங்களின் மூலம் நீதி கிடைப்பது அரிதானது. மக்கள் திரள் போராட்டங்கள் மட்டுமே நீதி தேவதையின் கண்களையும் சில சமயங்களில் திறக்க வைக்கும் என்பதை தோழர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.

    ம.க.இ.க தோழர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற தொடர் போராட்டமே திருச்சி பிரேமானந்தா சாமியார் கம்பி எண்ணுவதற்குக் காரணமாய் அமைந்தது.

    எங்கே புரட்சிகர அமைப்புகள் வலுவாய் செயல்படுகின்றனவோ அங்கே அயோக்கியர்களின் கொட்டம் அடக்கப்படும். அதற்கு மதுரவாயல் ஒரு முன்னோட்டம்.

    ஊரான்.

  8. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது ! http://j.mp/9Bhzak #vinavu #rsyf […]

  9. //மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?//

    இந்திய சுதந்திரப் போரில் மாணவர்கள் அரசியலில் குதித்ததும், அதன் தாக்கம் சுதந்திரம் அடைந்த பின்னரும் தொடருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்துக்காக, கல்லூரி எலக்ஷன்களில் மாணவர்களை ரௌடிகளாக மாற்றும் வேலையைத்தான் செய்கின்றன.
    http://timesofindia.indiatimes.com/city/ahmedabad-times/Student-politics-Hour-of-shame/articleshow/1973539.cms

    இந்த போராட்டத்தில் மணி, சதாம் என்ற இரண்டு மாணவர்களை ஈடுபடுத்தாமல் நன்கொடையை எதிர்த்தும், ரௌடியிஸத்தை எதிர்த்தும் போராடியிருக்கமுடியாதா?
    கோலியத்தை வீழ்த்த இன்னும் டேவிட்களை எதிர்பார்ப்பது போல் இருக்கிறது இந்த நிலைமை.

    • பள்ளிக்கூடத்துல நடக்குற தப்பை அதே பள்ளிமாணவர்களை திரட்டி எதுக்குறதுதான சரி, இதுக்காக ராபின் ஹூட்டுமாதிரி வீரருங்கள டெம்போவுல இறக்கியா போராட முடியும்? அப்படி போராடாடினாலும் வீரருங்க போன பெறகு ரவுடிங்க திரும்ப வருவாங்களே?

      ஒரு தப்பு எந்த மக்கள் கூட்டத்துல நடக்குதோ அந்த மக்கள் கூட்டம் திரண்டு போராடினாதான் இந்த உலகத்துல எல்லா அயோக்கியத்தனங்களையும் ஒழிக்க முடியும். நீங்க அமெரிக்கன் டைப் கமாண்டோ படங்கள ரொம்ப விரும்பி பாப்பீங்க போலிருக்கு. ஹாலிவுட்டு கப்சாவெல்லாம் வேலைக்காகாது ராம் சார்!

  10. மாணவர்களான இத் தோழர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்….அவர்களின் ஒத்துழைப்பின்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை……
    சிறு வயதிலேயே இப்படி புரட்சிகர அரசியலுடன் புடம் போட்டு வளரும் வாய்ப்பு நிறைய பேருக்கு கிடக்காது.

    புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்களே!!!

  11. முழுக்க சட்ட வாதத்தில் மூழ்குவதன் அறிகுறி மேற்கண்ட செயல்கள். CPM போல் ஆகி கொண்டிருக்கிறது அமைப்பு. ம.உ.பா மையம்(HRPC) என்ற அமைப்பே இந்திய சட்டத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு தான். அதாவது புரட்சியின் மீதும்,மார்க்சியத்தின் மீதும் நம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடு.புரட்சி ,மார்க்சியத்தின் அடிப்படையில் மக்களை திரட்ட முடியாமல் சட்ட வாதத்தில் மூழ்குவது CPM போல.

      • அமைப்பின் அனுபவம் என்னவென்றே தெரியாமல் “சட்டவாதத்தில்“ மூழ்குவதாகச் சொல்வது அறியாமையின் அனுமானமே. நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் புரட்சியை நேசிப்பவர் என்றே நான் நம்புகிறேன். இரா.மணிகண்டன் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடை தேடுங்கள். உங்களது ஐயங்களுக்கு விடைகிடைக்கும்.

        ஊரான்.

      • புதிய ஜனநாயகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்ககூடாது என்று ஒவ்வொரு இதழிலும் எழுதிவிட்டு நீதிமன்றம் வாதம் பேசுவது சரியா தோழரே.
        தவிர்க்க முடியாமல் நீதிமன்றங்களை பயன்படுத்துவது சரிதானா?
        சரிதானதுதான் என்றால் இத்தனை ஆண்டுகாலம் நீதிமன்றங்களை புறக்கனித்தது தவறு என்று எந்த இடத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறீர்கள்.

        • மார்க்ஸியவாதின்னு சொல்லிட்டாக்கா, ஊட்டுல கொலையே வுழுந்தாலும், பொலிஸ் டேசன், கோர்ட்டு பக்கம் தலை காட்டக்கூடாது. சரிதானே தோழர்!

          கெவுர்மெண்ட்டு உங்க மேல கேசப் போட்டாலும், நீங்க கோர்ட்டுக்கு போயி வாதாடக்கூடாது. உங்களுக்குத்தேன் இந்த சட்டத்துல நம்பிக்கை இல்லையில்ல…
          சரி தானே தோழர்!

          இப்புடி சில பல பாலிசி வெச்சுகிட்டுத்தேன் பாலீசா நாங்க (சி.பி.எம்) புரட்சி பன்றோம்! என்ன நாஞ் சொல்றது…

      • சட்டவாதத்தில் மகஇக மூழ்குகிறதா இல்லையா என்பதை நேரடியாக பதில் சொல்லுங்களேன். ஒரு தோழர் வைத்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அதை விடுத்து எதிர் கேள்வி கேட்பதும் சுற்றி வளைத்து பின்னூட்டமிடுவதும் அரசியல் நேர்மையில்லை.

        • //சட்டவாதத்தில் மகஇக மூழ்குகிறதா இல்லையா என்பதை நேரடியாக பதில் சொல்லுங்களேன்.//

          சட்டவாதம்னு எதைச் சொல்கிறார்கள் என்றே தெரியாமல் எப்படீங்க சர்டிபிகேட்டு கொடுக்க முடியும்?

          அதான் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக தோழர்கள் கேள்வி கேட்கிறார்கள். நீங்க ரொம்பத் தெளிவாக விசயங்களை அனுகுவது போலத் தெரிகிறீர்களே? இதையும் விளக்கிவிட்டு போவதில் என்ன சிக்கல்?

        • ////சட்டவாதத்தில் மகஇக மூழ்குகிறதா இல்லையா என்பதை நேரடியாக பதில் சொல்லுங்களேன்./////

          பதில்: மூழ்கவில்லை.

          ’எவ்வாறு மூழ்கவில்லை என்கிறீர்கள்’ என கேட்கும் முன், எப்படி மூழ்குகிறது என்பதை விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்…

          ////நீதிமன்றம் வாதம் பேசுவது சரியா தோழரே.////

          முதலாளி தொழிலாளைய சுரண்டுகிறான், முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும், அதனால் நாமெல்லாம் தொழிற்சாலைக்கே போகாமலிருப்போம், முதலாளி மூடிட்டு போய்விடுவான்! சரியா தோழரே?

          [இப்ப பாருங்க, இதை அப்படியே பன்றி தொழுவத்திற்க்கும் பொருத்தி, சிறப்பாக விவாதிப்பார்கள்…. 🙂 ]

  12. இங்கே நண்பர்கள் சிலர் மாணவர்களுக்கு அரசியலா…? என்று அங்கலாய்த்துள்ளார்கள்.

    அவர்கள் அரசியல் என்பதை திமுக போன்ற ஆளும் வர்க்க கட்சிகளின் சந்தர்பவாத அரசியலோடும். அதிமுக / காங் / பா.ஜ.க போன்ற பாசிஸ்டுகளின் பொறுக்கி அரசியலோடும் நாம் முன்வைக்கும் அரசியலைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

    நடந்துள்ள சம்பவத்தைக் கவனியுங்கள் நண்பர்களே, மற்ற ஓட்டுக் கட்சிகள் ரவுடி யோசுவாவின் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள் – அதை எதிர்த்து தனியே புரட்சிகர ஜனநாயக அரசியலைக் கையிலேந்தி மாணவர்கள் நிற்கிறார்கள். வீழ்த்துகிறார்கள். ரவுடித்தனத்தை ஆதரித்து அதன் பின்னே ஒளிந்து கொள்ளும் ஒரு அரசியலையும் அதனை எதிர்த்து நிற்கும் உறுதியைக் கொடுத்த அரசியலையும் உங்களால் எப்படி ஒரே தராசில் நிறுத்த முடிகிறது?

    மாணவர்கள் சமூகத்தோடு கொண்டுள்ள உறவை மேலும் பட்டை தீட்டி, அவர்களின் பொறுப்புகள் புத்தக மூட்டைக்குள் மட்டுமே முடங்கி விடாமல் சமூகத்தின் கசடுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற முணைப்பை மாணவர்கள் பெற்றுள்ளதை கவனியுங்கள்..

    ஏதோ பிறந்தோம் – ஏதோ பிழைத்தோம் – ஏதோ சந்ததியை உருவாக்கினோம் – செத்துப் போனோம் என்கிற வழக்கமான
    காரியங்களை சாக்கடையில் உழலும் பன்றிகள் கூடத்தானே செய்கின்றன? ஆனால், இந்த மாணவர்களைப் பாருங்கள் -தமது சமூகத்திலிருக்கும் ஒரு மக்கள் விரோதியை இந்த இளம் வயதிலேயே துணிவோடு எதிர்த்து நிற்கிறார்கள். உங்களால் செய்ய முடியாதவொன்றை இவர்கள் சாதிக்கிறார்கள். உங்களின் வழமையான வாழ்க்கையிலிருந்து
    வித்தியாசமான வாழ்க்கையொன்றை வாழ முற்படுகிறார்கள்.

    அரசியல் என்பது வன்முறைப் பாதையில் மாணவர்களை கொண்டு விட்டுவிடும் என்று ஒரு நண்பர் சொன்னார் – நீங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்றிய கட்டுரையை வாசித்துப் பாருங்கள் நண்பரே… வழிப்பறி, போதை, பேருந்தில் வன்முறை, கத்திக்குத்து, ஓட்டுக் கட்சிக் கூட்டங்களுக்குப் போய் கூச்சலிட்டு வருவது என்று இருந்த மாணவர்கள்
    புரட்சிகர ஜனநாயக அரசியலைப் பற்றிக் கொண்டதும் அது அனைத்தையும் துறந்துள்ளனர். இன்று அம்மாணவர்களின் போராட்டங்களில் வன்முறையில்லை – ஆனால் அதை விட வலிமையான; ஆளும் வர்க்கத்தை அச்சுருத்தும் அரசியல் உள்ளது. கட்டுப்பாடு உள்ளது. ஒழுக்கம் உள்ளது.

    ஆளும் வர்க்கத்தின் அச்சம் எங்கேயிருந்து வருகிறது நண்பர்களே? நடப்பிலிருக்கும் செத்துப் போன சமூக அமைப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவர்களின் முனைப்பிலிருந்து வருகிறது. இவர்களுக்கு மாணவர்கள் வன்முறை செய்வது பிரச்சினையில்லை – அவர்கள் புரட்சிகர அரசியலைப் பற்றிக் கொள்வது தான் பிரச்சினை. அந்த அச்சம்
    அவர்களுக்கு வரட்டும். உங்களுக்கும் ஏன் வர வேண்டும்?

    அடுத்து சிலர் “நீங்கள் நீதிமன்றங்களை விமர்சிக்கிறீர்கள்; ஆனால் சட்ட ரீதியான வெற்றியையும் கொண்டாடுகிறீர்கள்” என்று சொல்கிறார்கள். நீதி மன்றங்கள் வழங்கும் இப்படியான தீர்ப்பு என்பது அவர்கள் தவிர்க்கவியலாத சூழலில் வேறு வழியில்லாமல் தான் வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தெரியும் இத்தீர்ப்பை மாற்றி வழங்கியிருந்தால் அதை
    அப்படியே கேட்டுக் கொண்டு அமைதியாகச் செல்ல இது ‘சுப்பனோ குப்பனோ’ இல்லை என்று. அப்படி ஒரு தீர்ப்பு வருமானால் அதை இம்மாணவர்கள் மக்கள் மத்தியில் எடுத்துப் போயிருப்பார்கள் – அம்பலப்படுத்தியிருப்பார்கள். எனவே தமது இருப்பிற்கு பாதிப்பு வராத அளவில் இப்படி அவ்வப்போது முறையான தீர்ப்பை வழங்கத் தான் செய்கிறார்கள்..

    ரவுடிக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி, அது ஊரெங்கும் சுவரொட்டிகளில் நாறும் ஒரு நிலையை யோசித்துப் பாருங்கள் – அப்படியொரு நிலையைத் தவிர்க்கவே இப்படி ஒரு தீர்ப்பு….

  13. மாணவர்களை அப்பகுதி மக்களை பாரட்டுகிறேன்,நான் படித்த காலத்தில் செய்யாதது, அப்போது இந்த மாதிரி அரசியலை செரல்லித்தர அமைப்புகள் எனக்கு அறிமுகம் இல்லை,

  14. it is not politics- it is only joint action to safe guard themselves
    when the person who are responsible to safeguard them, are not only failed but also physically assault them. The public are not come forward to save them
    it is natural they raise and fight for their life. . If they are not raise and save them, who save them.
    If not we only see a news item in the paper 2 students are dismissed from the school and etc. the public never care about the news. Even the court have not take the mater seriously because it have so many cases.
    joint action is the natural habit/habitat for the human being only.If people are not jointly oppose the emergency , even today we live in emergency.
    every criminal never fear because he thinks his caste people to save him.
    In India caste is the main danger for every one.. The younger must come forward to take inter caste marriage and inter religious marriages
    come to our point what is the use of education, if the student lost their dignity and respect.
    not only today it is very beginning the parents – teacher association – spoils the school atmosphere and loot the poor parents, and implement the caste rule in the school.
    we must first to work for the removal of the parents- teacher from the school.
    we request the legal eminent and N.G.O to take this to find out a solution.
    I am very sorry to write this in English, because my computer have no provision to type in Tamil

    • ஸிம்பிள்,
      எந்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமல் தமிழில் எழுத கீழ்காணும் வலைத்தளத்தில் உள்ள யூனிகோட் எடிட்டரை பயன் படுத்தவும்.

      http://www.alltamil.com/unicode.html

  15. அமைப்பின் அனுபவம் என்னவென்றே தெரியாமல் “சட்டவாதத்தில்“ மூழ்குவதாகச் சொல்வது அறியாமையின் அனுமானமே. நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் புரட்சியை நேசிப்பவர் என்றே நான் நம்புகிறேன். இரா.மணிகண்டன் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடை தேடுங்கள். உங்களது ஐயங்களுக்கு விடைகிடைக்கும்.

    ஊரான்.

  16. //13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர்.//

    பிரச்சினையின் ஆரம்பம் மாணவன் ஒருவரை ஆசிரியர் தரக்குறைவாகப் பேசி அடித்தது. எந்தவிதமான காரணமுமே இல்லாமல், தன்னிச்சையாக இப்படி செய்திருந்தால் அந்த ஆசிரியர் கண்டிக்கதக்கவர். ஆனால் அந்த மாணவர் மீது ஏதாவது தவறு இருந்தால், அதன் பின் நடந்தவை அனைத்தும் தரங்கெட்ட அரசியலே.

    வினவு அனைத்து தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும் வெளியிடும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன், ஒரு 11ம் வகுப்பு மாணவர் மீது கைஓங்கத் தூண்டிய விஷயம் என்ன?

    • ராம் காமேஷ்வரன்,

      இந்த பள்ளியில் பு.மா.இ.மு தோழர்களாக இருக்கும் மாணவர்கள் நன்கு படிப்பவர்கள். ஆசிரியர் பாடம் நடத்தும் போது சந்தேகங்களை நிறைய கேட்பார்கள். இதை அந்த ஆசிரியர் விரும்புவதில்லை. ஏதோ நமக்கு அடங்கிக் கிடக்க வேண்டிய அடிமைகள் இப்படி கட்சி என்று சொல்லிக் கொண்டு அரசியல் பேசுவதும் அவருக்கு பிடிக்கவில்லை. அன்று எந்த காரணுமுமின்றி அவர் குறிப்பிட்ட மாணவனை அடித்திருக்கிறார். பின்னர் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் நியாயம் கேட்டு சென்ற போது அந்த ஆசிரியர்தான் போன் போட்டு ரவுடி யோசுவாவை பள்ளிக் கூடம் வரவழைத்து மாணவர்களை தாக்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நீங்கள் நேரில் வர வாய்ப்பு இருந்தால் அந்த பள்ளிக்கு சென்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து முடிவு செய்யலாம். நன்றி

  17. sri.Ram wants some details, before getting details, he pronounced his judgment as it is a dirty politics.
    For argument sake, even the student commit some
    mistake, who give power to the teacher to assault
    the student in the class room.
    there is so many legal ways to correct the student for his mistake, no one have right to physically punish the student. Here the student is not L.K.G BOY,he is 11 standard student. school is not a jail, students are not condemned criminals.
    whatever the mater may be the teacher is the main responsible for all the problem. he is the guardian for the student. He is the part of the school management. how can a student defense himself against the powerful managements. the court gives correct judgment,

    • ஸிம்பிள்,
      இங்கே நான் தீர்ப்பு ஏதும் வழங்கி விடவில்லை. மாணவரை அடித்த ஆசிரியர் கண்டிப்பாக தண்டிக்க தக்கவர் தான் சந்தேகமில்லாமல். ஆனால் அந்த ஆசிரியரை “தட்டி” கேட்க மற்ற மாணவர்களான (பு.மா.இ.மு தோழர்களுக்கு) அதிகாரம் வழங்கியது யார்?

      //there is so many legal ways to correct the student for his mistake/
      ஏன் அந்த ஆசிரியரை திருத்த சட்டபூர்வ வழிகளே இல்லையா? முதலில் சம்மந்தப்பட்ட மாணவர் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டாரா? தங்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது என்கிற தைரியத்தில் இதே மாணவர்கள் நாளைக்கு மற்ற ஆசிரியர்களையும் தங்கள் “வழிக்கு கொண்டு” வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

      இதன் பின்புலம் தெரிந்து கொள்ளத்தான் அந்த மாணவர் செய்த தவறு என்ன (தவறு செய்திருந்தால்) என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.

    • //whatever the mater may be the teacher is the main responsible for all the problem.//
      தீர்ப்பு வழங்கியிருப்பது நானா நீங்களா?

Leave a Reply to kris பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க