privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

-

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

  • மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
  • ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
  • நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
  • ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
  • 1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
  • கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
  • அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
  • 1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
  • 1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
  • 500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
  • அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
  • இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
  • அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

கேள்விகளுக்கு விடை காண வாருங்கள்…

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்,  செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்! | வினவு!…

    அரசியல், சமூக, சட்ட ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் அயோத்தி நில விவகாரம் மீதான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடைகாண அனைவரும் வருக!…

  2. //நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?//

    அடப்பாவிகளா! அப்போ எங்க ஊரு காச எடுத்துதான் ஸ்ரீரங்கத்தில் கோவில் கட்டுனிங்களா? நான் ஊருக்கு போய் உடனே பஞ்சாயத்தை கூட்டுறேண்டா..

    சுரேஷ் தோழர் கட்டாயமா வருகிறோம்!

  3. […] This post was mentioned on Twitter by வினவு and ஏழர, ஏழர. ஏழர said: Very Important Meeting/Discussion on #Ayodhya (in)justice, On Nov 24, Sunday, Chennai http://j.mp/eOwtYE #Retweet […]

    • //Ithanai logic pesum neengal yendha mathathin sarathayum kolladha ‘Podhu civil sattathirkku’ porada vendiathu thaanae//

      பொது சிவில் சட்டம் எந்த மதத்தையும் சாராதத் என்ற பித்தலாட்ட வாதத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இன்னொரு பித்தலாட்டத்தின் துணை கொண்டுதான் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

      அந்த பித்தலாட்டம் என்னவென்றால், அதுதான் இந்து மதம் என்பதற்கான வரையறை.

      மதம் என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட எந்த மதத்தையும் சாராதவர்கள் எல்லாம் இந்து என்று கோயல்பல்ஸுத்தனமாக இந்திய சட்டம் வரையறுத்துள்ளது.

      அதாவது எல்லா மதங்களுக்கும் வெளியில் உள்ள எல்லா பொதுவானவர்களும் இந்து. பொதுசிவில் சட்டம் யாருக்கானது என்றால் இப்படி எல்லா வரையறுக்கப்பட்ட மதங்களுக்கும் வெளியே இருப்பதாகச் சொல்லப்படும் இந்து மதத்திற்கு.

      இந்து மதம் என்ன சொல்கிறது? சாதி சேமகரமானது, பாப்பானுக்கே சகல உரிமையும் என்று.

      பொது சிவில் சட்டத்தின் டூபாக்கூர்த்தனம் ‘இந்து’ய அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.

      அதனால்தான் பெரியார் கொளுத்தினார் அதனை அரசியலமைப்புச் சட்டம் வ்ரைய பேனாவாக உபயோகிப்பட்டேன் என்று வருத்தப்பட்ட அம்பேத்கர் ஆதரித்தார்.

      • yeripadhai vida andha ‘podhu civil’ sattathin amsangal yeppadi irukka vendum yena oru puthagam podalame.

        ella matra madha sattangalum adhan nambikayil thaan yetru kolla pattu ulladhu. oru sila nambikaigal mattum matra nambikaigalai vida mukkiamaanadha!

      • ayya naan BJP sollum podhu ‘civil sattathai’ solla villai.

        oru nalla sirandha pahutharivu vaadhigal ippadithaan podhu civil sattam irukka vendum’ yendru edavathu puthgam irukiradha? yedhavadhu muyarchi nadanthulladha?
        reservation 2nd thalai muraikku/3rd thalai mattum thaan.
        odukapatta sadhigalil innum reservation poyi seraadhavar kanakku eduppu nadatha edhavthu muyarchi seyya pattulladha?

        periyaar mudhal padiyai pottu vittar. andha samayathil indha sattathai erithadhey oru miga peria puratchi. Innum adhey neengal seidhu kondu irundhaal……….!!!

  4. பொது சிவில் சட்டம் இந்து மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும்.அதன்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கும்.
    ஆணுக்கு சொத்தில் பாதி என்றால் பெண்ணிற்கும் பாதி, ஆண் கார்டியன் ஆக முடியுமானால் பெண்ணிற்கு அது முடியும்,
    ஆண் தத்து எடுக்க முடியும் பெண்ணும்
    தத்து எடுக்க முடியும். அப்படி ஒன்று இருந்திருந்தால் அருந்ததி ராயின் தாய்
    சிரியன் கிறித்துவ சட்டத்தில் சொத்துரிமையில் உள்ள பாகுபாட்டினை
    எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்க மாட்டார்.

    இன்றும் இந்துப் பெண்களுக்கு இந்துச் சட்டம் தரும் உரிமை பிற மதப் பெண்களூக்கு இல்லை.விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இந்துச்சட்டம்
    தரும் உரிமை என்னவென்றாவது தெரியுமா.
    கிறித்துவச் சட்டப்படி மணவிலக்கு பெறுவது பெண்களுக்கு எளிதல்ல. பதில் எழுத வ்ருவோர் முஸ்லீம் சட்டப்படி பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ள உரிமை
    பூர்விக சொத்தில் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு,அது இந்துச் சட்டத்தில் எப்படி உள்ளதையும் அறிந்து கொண்டு பதில்
    எழுதுங்கள்.பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யார்- சிறுபான்மையினருக்கு ஜால்ரா போடும் பிற்போக்குவாதிகள்.

    • //இன்றும் இந்துப் பெண்களுக்கு இந்துச் சட்டம் தரும் உரிமை பிற மதப் பெண்களூக்கு இல்லை.//

      அதெல்லாம் சரிதான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உங்க இந்து சட்டம் என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க. கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பானுக்கு மட்டுமே உண்டு பிற சாதிக்காரன் நுழைஞ்சா அங்க இருக்குர நகைக்கு ஆபத்துன்னு சிதம்பரம் தீட்சிதப் பாப்பான் நீதிமன்றத்துல சொல்றான், அதை 2000 வருச பாரம்பரியம்னு சொல்றான், அதுதான் இந்து சட்டம்னு சொல்றான். அதை அம்பேத்கரை தனது பெயரில் தாங்கிய நீதிபதி அங்கீகரிக்கிறார்.

      இந்த அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க பெண்ணுரிமை வேசமா? தேவையில்லை. மதங்களைத் தாண்டி வெளியே வரும் பெண்கள் தமது உரிமை மதங்களிடமிருந்து பறித்து பிடுங்குவர். அதுதான் இதுவரையான வரலாறு.

      • முதல்ல யார் இந்துன்னு சொல்லுங்க மிஸ்டர் இந்து.

        யாரெல்லாம் சங்கர்/ரியோட மனைவி/கணவன் இல்லையோ,

        யாரெல்லாம் குமார்/குமாரியோட மனைவி/கணவன் இல்லையோ,

        அவர்களெல்லாம் ராமு/ராமாயியோட மனைவி/கணவன் சொல்லி ஊர்ல மிச்ச்ம் மீதி இருக்குற ஆம்பள/பொம்பள எல்லாத்தையும் குடும்ப உறுப்பினராச் சேர்த்துக் கொள்வது எவ்வளவு வக்கிரமும்,கோமாளித்தனமு, பித்தலாட்டத்தனமும் ஆனதோ அது போன்றதுதான் இந்து என்பதற்கு சட்டம் தரும் விளக்கம்.

        இதை வைத்துக் கொண்டு எல்லா அயோக்கியத்தனமும் நீதிமன்றங்களில் நிலைநாட்டப்படுகின்றன – கௌரவப் படுகொலை என்ற பெயரில் நடக்கும் சாதிவெறிப்படுகொலைகள், மதவெறிபடுகொலைகள், பாபர் மசுதி தகர்ப்பு, தாழ்த்தப்பட்டவர்களை கொளுத்துதல், கோயில் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம்.

        அதனால் பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசும் முன்பு முதலில் இந்து யார் என்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வாங்க.

      • ////இன்றும் இந்துப் பெண்களுக்கு இந்துச் சட்டம் தரும் உரிமை பிற மதப் பெண்களூக்கு இல்லை.////

        இது ஒரு பொய்யான கருத்து. இந்து என்று அடையாளப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஆணாதிக்கமும், சாதியமும் என்ற இரட்டைத் தண்டனைக் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த ஆதிக்க சாதி வெறியர்களை விடுவித்த நீதிமன்றம் அதற்கு சொன்ன காரணங்களில் ஒன்று, மேல் சாதிக்காரன் எப்படி கீழ்சாதி பெண்ணைத் தொடுவான். அதனால் இந்தக் குற்றச்சாட்டு பொய் என்பதாகும்.

        இது ஒரு சோற்றுப் பருக்கை மட்டுமே.

  5. இதே நிகழ்ச்சி கோவையிலும் வரும் ஞாயிறு(28 /11 /10) மாலை 5 மணிக்கு சாந்தி தியேட்டர் அருகில் இருக்கும் அண்ணாமலை ஹோட்டலில் அண்ணாமலையார் அரங்கில் நடைபெற உள்ளது வாய்ப்புள்ள அனைவரும் வாரீர்

  6. இதே நிகழ்ச்சி கோவையிலும் வரும் ஞாயிறு(28 /11 /10) மாலை 5 மணிக்கு சாந்தி தியேட்டர் அருகில் இருக்கும் அண்ணாமலை ஹோட்டலில் அண்ணாமலையார் அரங்கில் நடைபெற உள்ளது வாய்ப்புள்ள அனைவரும் வாரீர் மனித உரிமை பாதுகாப்பு மையம்(கோவை)
    நடத்துகிறது

Leave a Reply to யோவ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க