சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’’யை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.
அரசு பயங்கரவாத அடக்குமுறையால் மாவோயிஸ்டுகள் பின்வாங்கியுள்ள நிலையில், இப்போது அப்பகுதிகளில் தமது குண்டர் படைகளைக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது, சி.பி.எம். கட்சி. போலீசும் துணை இராணுவப் படைகளும் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு புறப்பட்டதும், சி.பி.எம். குண்டர்படையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் வந்து வெற்றி ஊர்வலங்களை நடத்துகின்றனர். இது எல்லாப் பகுதிகளிலும் சொல்லிவைத்தாற் போன்று நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட சி.பி.எம். கட்சியின் குண்டர்படைத் தலைவன் அனுஜ்பாண்டே தலைமையில் வெற்றி ஊர்வலங்களை நடத்தி, லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்து விட்டதாக சி.பி.எம். கட்சி அறிவித்தது.
இவ்வாறு ‘விடுவிக்கப்பட்ட’ கிராமங்களில்கூடப் பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஊர் எல்லையில் சி.பி.எம். குண்டர்படை காத்திருக்கும். ஊருக்குள் நுழைந்தால் மாவோயிஸ்டுகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; அல்லது அப்பகுதியின் சி.பி.எம். குண்டர்படைத் தலைவரின் துணையோடு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
லால்கார் மக்களின் பேரெழுச்சியில் சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது. நந்திகிராமத்தில் கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படையின் துணையோடு சி.பி.எம். கட்சியினர் எவ்வாறு மீண்டும் அப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனரோ, அவ்வாறே மேற்கு மித்னாபூரின் ஜங்கல் மகால் பகுதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடிக்கின்றனர். சி.பி.எம். கட்சியின் இந்தக் குண்டர்படைகள் மாவோயிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களைத் தாக்குவது, வீடுகளைச் சூறையாடுவதுடன் ஆள்காட்டி வேலையையும் செய்து வருகின்றன. மேலும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைப் பற்றிக் கூட்டுப் படைகளுக்குத் தகவல் தெரிவிக்கும் உளவுப் படையாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதை அம்மாநிலத்தின் உள்ளூர் நாளேடுகளே அம்பலப்படுத்தியுள்ளன.
இப்போது மீண்டும் இப்பகுதியில் சி.பி.எம். குண்டர்களின் கை மேலோங்கியதும், பழிவாங்கும் வெறியோடு எதிர்க்கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் இக்குண்டர்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு மித்னாபூர் மாவட்டம், புரிபால் எனும் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி, சி.பி.எம். குண்டர்படையின் முகாமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அந்தப் பள்ளியைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த மண்டல் எனும் பத்திரிகையாளரின் இடது கை சி.பி.எம். குண்டர்களால் முறிக்கப்பட்டது. இப்பகுதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் கட்சி கணிசமாக வெற்றி பெற்றுள்ள போதிலும் தமது ஆதிக்கத்தை இழக்க சி.பி.எம். தயாராக இல்லை. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சித் தலைவர்கள் அடித்து விரட்டப்பட்டுகின்றனர்; அல்லது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு முடக்கப்படுகின்றனர்.
கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் சி.பி.எம். கட்சி குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பும் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தின. தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக மைய அரசின் உளவுத்துறை இது பற்றி கடந்த ஏப்ரலில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேற்கு மித்னாபூரில் சி.பி.எம்.கட்சி ஆயுதமேந்திய குண்டர் படையைக் கொண்டு ஆயுதப் பயிற்சி நடத்துவதையும், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் முதலானவை குண்டர் படையின் முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதையும், சி.பி.எம். குண்டர்படைத் தளபதி அனுஜ் பாண்டேவின் சகோதரர் ஷியாம் பாண்டே தலைமையில் குண்டர்படை இயக்கப்படுவதையும் உளவுத்துறை அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரின் மூங்கீரிலிருந்து அசன்சால் வழியாக ஆயுதங்கள் வருவதும், மே.வங்க அமைச்சர் தபன்கோஷின் மகன் நிர்மல்கோஷ் இதற்கு ஏற்பாடுகள் செய்து ஆயுதமேந்திய குண்டர் படையை நடத்துவதும் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளன. இந்த அறிக்கையிலுள்ள விவரங்கள் “தெகல்கா” வார இதழிலும் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் மே.வங்க அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில் சி.பி.எம். கட்சி ஊழியர்களின் ஆயுத முகாம்கள் நிலவுவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாகவே இப்போது ‘தற்காப்புக்காக ஊழியர்களின் முகாம்கள்’ உள்ளதாக சி.பி.எம். கட்சி பசப்புகிறது.
குண்டர் படை இல்லாமல் பாசிஸ்டுகளால் ஒரு நிமிடம் கூட அதிகாரத்தில் நீடிக்க முடியாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான். பாசிஸ்டுகள் ஆளும் சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். ஆளும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாஹினி!
________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________
வினவுடன் இணையுங்கள்:
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
- லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!
- திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு
ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!…
அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான்…
இந்திய ஜனநாயகத்துக்குள்ளே ‘புரட்சியை’ (அதாவது தமது அதிகாரத்தை) தேடும் சி.பி.எம். கட்சி, “துரோகி” என்ற குணாம்சத்திலிருந்து “எதிரி” என்ற புதிய பரிணாமத்தை வந்தடைந்து சரித்திரம் படைத்துள்ளது. ஆகவே இக்கட்சியை இன்னமு பழைய பாணியிலேயே “போலி கம்யூனிஸ்ட்டுகள்” என்று அழைத்து அவர்களின் ‘அந்தஸ்தை’ குறைப்பதை விட் இனி இவர்களை கட்டுரையில் சொன்ன மாதிரியே “சமூக பாசிஸ்ட்டுகள்” என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். மக்கள் படையை கட்டுவோம் என்று சொல்லிவிட்டு இப்படி குண்ட படையை கட்டி வளர்க்கும் இக்கட்சியில் இனியும் நீடிக்கலாமா என அக்கட்சியின் நேர்மையான அணிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.
இன்று யார்தான் உலகில் உண்மையான கம்யூனிஸ்ட் என்று அடையாளம் காணக் கிடைக்குமா?
ரம்மி,
அதை மற்றவர்கள் சொல்லித் தெரிந்துகொள்வதற்கு அது வெறும் தகவல்களைக்கொண்ட விலாசம் போன்றதல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்டது. ஆகையால் அதை நமது சொந்த ந்டைமுறை அனுபவத்தின் மூலம் அறிவதே சரியாக இருக்கும். எனினும் யார் இயக்கவியல் அடிப்படையிலான ஒரு வேலைபாணியில், அமைப்பாக திரண்டு, மக்களை அணிதிரட்டி சமூக மாற்றத்திற்காக போராடுகிறார்களோ அவர்களே உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்.
ஆரம்பிக்கும்போது எல்லாரும் கொள்கை வீரர்கள் தான்! காலப் போக்கில், தேய்ந்து போகிறார்கள்! அடையாளத்தை தொலைத்து, போலிப் பட்டம் சுமத்தப்படுகிறார்கள்!
[…] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: மேற்கு வங்க கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இண்டியா ரவுடியிஸ்டுகளின் – குண்டர் படை – http://j.mp/gnOZCo #HarmadVahini […]
ரம்மி,
நீங்கள் அவநம்பிக்கை கொண்டவர் என்பதற்காக “எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள்” என்று நீங்களே முடிவு செய்துகொள்கிறீர்கள் பாருங்கள் அது கூட நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு கொள்கையின் வெளிப்பாடுதான். யாருக்கும் உபயோகமில்லாத உங்கள் கொள்கையிலே நீங்கள் இவ்வளவு உறுதியாக இருக்கும்போது பெரும்பானமை மக்களின் விடுதலையின் மீது நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் தமது கொள்கையில் உறுதி இல்லாமல் போய்விடுவார்களோ! வரலாற்றைப் புரட்டுங்கள் உண்மை தெரியும்.
இரா.மணிகண்டன் அவர்களே!
மற்றவர்களைப் போலி என்று கூறத் தெரிந்தவர்கள், நாங்கள் தான் உண்மையான கம்யூனிஸவாதிகள் என்று, உங்களாலே ஏன் உறுதியாக கூறமுடியவில்லை! தன்னம்பிக்கையின்மை, அவநம்பிக்கை உமக்குத்தான்!
மற்றவர்களை குறை கூறி, அவப்பட்டம் சூட்டுவது என்ன வித உயர்ந்த நம்பிக்கை?
எந்த ரகப் புரட்சி?
எவரதும் போலித்தனத்தை விளங்கிக்கொள்ள ஒருவர் போலி செய்யப்படுகிற கொள்கையை ஏற்க அவசியமில்லையே.
கள்ளச் சண்னாசிகள் பற்றியும் காமுகப் பாதிரிகள் பற்றியும் சுட்டிக்காட்ட ஒருவருக்கு மத நம்பிக்கை தேவையில்லையே.
சி.பி.எம். நேர்மையான கம்யூனிஸ்ட் கடசியல்ல. ஆனாலும் பல நல்லவர்கள் அதை நம்பிப் போகிறார்கள். அவர்கள் உண்மைகளை அறிய வேண்டும்.
அவர்களிடமிருந்து மறைக்கப்படும் தகவல்களை வெளிப்படுத்துவதை யார் செய்தாலும் அது மெச்சத்தக்கதே.
http://natputanramesh.blogspot.com/2010/12/blog-post.html
புரட்சிவாதி,
அப்படியே மேலே இணைக்கப்பட்டுள்ள இக்கட்டுரையின் தொடர்புடைய பதிவுகள் என்ற பட்டியலுக்கும் எதிர் வினையாற்றும்படி நட்புடன் ரமேஷ் பாபுவிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லிவிடுங்களேன்?
ஓரு கருத்தையோ ஒருவரது நிலைப்பாட்டையோ கூறிவிட்டுச் சான்றாக இணைப்பு முகவரியைத் தருவது ஒரு விடயம்.
சும்மா இணைப்பு முகவரியைத் தருவது ஆக்கமான உரையாடலுக்கு ஏற்றதல்ல.
இணையத்தள முகாமையாளர் இதைக் கவனத்தில் எடுப்பது தகும்.
ரம்மி அவர்களுக்கு,
உண்மையின் சிறப்பம்சம், அது எப்பவும் போலியைக் காட்டிக்கொடுப்பதுதான். போலியின் சிறப்பம்சம் அது எப்பவும் உண்மையிடமிருந்து விலகியிருப்பதுதான். அந்த அடிப்படையில்தான் போலி கம்யூனிஸ்டான சி.பி.எம். கட்சியின் திசை விலகலை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தி வருகிறது. புதிய ஜனநாயகத்தை ஒரு சில அவதூறுகளைத் தாண்டி அரசியல் ரீதியில் ஏன் சி.பி.எம். கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை? இன்று உலகில் யார்தான் உண்மையான கம்யூனிஸ்ட்டு என்ற உங்களின் கேள்வியை சற்று மாற்றி உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கான அளவுகோல் என்னென்ன? என்று கேட்டிருந்தால் ஆரோக்கியமான விவாதத்திற்கு உதவியாக இருந்திருக்கும்.தோளில் சிவப்புத்துண்டைப் போட்டுக்கொண்டு தான் “கம்யூனிஸ்ட்டு, கம்யூனிஸ்ட்டு” என்று கம்யூனிஸ அடையாளத்தைக் காட்டிக்கொள்வதுதுதான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கான வரையறையா? கம்யூனிஸ்ட்டை வடிவத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் தேடுங்கள். “ஆரம்பிக்கும் போது எல்லோரும் கொள்கை வீரர்கள்தான்! காலப்போக்கில் தேய்ந்து போகிறார்கள்.” என்ற உங்களின் கூற்று எதிலிருந்து உதிர்த்தது? அவநம்பிக்கையையே முடிவாய் ஏற்றிருக்கும் மனோபாவத்திலிருந்து வந்தது என்பதை இதைப் படிக்கும் எவரும் சொல்வர். நமக்கும் அப்பாற்பட்டு தியாகப்பூர்வ மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்த்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையே மறுக்கும் வகையில் உங்களது கூற்று உள்ளது என்பதே எனது விமர்சனம். குறை கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.குறையாக இருந்தால் திரும்ப்பெறுகிறேன்.
//”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.”//
இதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. “ஹர்மத் வாஹினி” என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல….. அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர்.