privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

-

தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்

விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

இத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.

தற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.

ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
_______________________________________________
– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம் ! | வினவு!…

    ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்….

  2. எந்த முதலாளித்துவ கொம்பனாலும் கண்டுப்பிடிக்கப்படாத, “இயற்கையாகவே நிலத்தடியில் சேமிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரின் பொதுச்சொத்தான நிலத்தடிநீரை” எடுத்து வியாபாரம் செய்ய எவருக்கும் உரிமையில்லை.நாட்டுப்பற்றுக் கொண்ட அனைவராலும் ஆதரிக்கப்படவேண்டிய போராட்டம்.முன்கை எடுக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர் கிளைத்தோழர்களுக்கும்,போராட்டம் வெற்றியடைய துனைநிற்கும் ஜனநாயக சக்திகள்,குடியிருப்போர் நலசங்கத்தினர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
    __சுடலை

  3. //ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.//
    15-ஆண்டுகளுக்குமுன் நான் கல்லூரி விடுதியில் தங்கிப்படித்தகாலத்தில் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் இதழ்களுடன் வந்திருந்த ஒரு தோழரிடம் விவாதித்தபோது அவர் “எதிர்காலத்தில் நமது நாட்டில் குடிக்கின்ற தண்ணீரைகூட விட்டுவைக்கப்போவதில்லை எடுத்து பாலித்தீன் பைகளில் அடைத்தும்.பாட்டில்களில் அடைத்தும் விற்கப்போகின்றனர்” என்றார்.நான் உடனே குறுக்கிட்டு “உங்க புத்தகத்தை விற்பதற்காக ஆப்படியே பூம் பண்ணி பேசாதிங்க சார்,தண்ணீரைப் போயி எவனாவது பாக்கெட்லப் போட்டு விற்பானா? அப்படியே வித்தானாகூட அதபோயி யாராவது வாங்குவாங்குனா? என்றேன்.ஆனால் இன்று அது நடக்கிறதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
    எனவே,மனித உரிமை பாதுக்காப்பு மையத்தின் மேற்கண்ட எச்சரிக்கையை அபாய ஒலியாகக் கருதி பகுதிவாழ் மக்கள் பெரும்திரளாக வீதியில் இறங்கி முறியடிக்கவேண்டிய தருணம் இது.
    __சுடலை

  4. நகராட்சி முதல் நீதித் துறை வரை நாட்டின் பொதுச் சொத்துக்களான காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர், தற்பொழுது அலைக்கற்றை என அனைத்தையும் லாப வெறிக்காக தனியார்மயமாக்க துணிந்துவிட்டபின் இனி பொதுச் சொத்துக்களை நாட்டுடைமையாக்க மக்கள் புரட்சிகர தலைமையின் கீழ் அணி திரள்வதைத் தவிர வேறு என்ன மாற்று இருந்துவிட முடியும்?

  5. தண்ணீர் கொள்ளை உள்நாட்டு கம்பெனிகள் மட்டுமில்லாமல் அந்நிய நாட்டு நிறுவனங்களும் கொள்ளையை நடத்துகின்றன இதை பத்தி வினவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Leave a Reply to p.thalapathy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க