முகப்புசெய்திகக்கூசுக்காக ஒரு போராட்டம்! ஒரு வெற்றி விழா!!

கக்கூசுக்காக ஒரு போராட்டம்! ஒரு வெற்றி விழா!!

-

பண்ணைப்புர நாயகியே மாரியம்மா” என்ற எல்.ஆர். ஈஸ்வரியின் குரலைக்கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஒன்று தான் “மாரியம்மன் கோயில் திருவிழா”. ஏப்ரல் – மே மாதங்களில் தமிழகம் முழுக்க இதுவே நிகழ்ச்சிப்போக்காக இருக்கும். இவ்விழாவை ஒட்டி ஊர் முழுக்க வசூல் செய்யப்படும். அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.”ஊர் பெரிய மனிதர்கள்” விழாவை முன்னின்று நடத்துவார்கள்.

கஞ்சி குடிப்பதற்கே வழியில்லை என்றாலும் பண்ணைப்புர நாயகிக்காக பவுசாக விழா எடுப்பதில் மக்கள் சளைப்பதில்லை. பக்திக்கு காட்டும் முனைப்பை மக்கள் தமது வாழ்வுரிமை பிரச்சினைகளுக்காக காட்டுவதில்லை என்ற நிலையினை மாற்ற முடியுமா? அப்படி மாற்றிக் காட்டியதோடு அதையே வெற்றி விழாவாக நடத்தியிருக்கிறார்கள் சென்னை சந்தோஷ் நகர் மக்கள். அவர்களை வழிநடத்தியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், மக்கள் நல இளைஞர் சங்கமும்.

சென்னையில் வசிக்கும் எத்தனை பேருக்கு சந்தோஷ் நகர் தெரியுமென்று தெரியவில்லை, சென்னை எழும்பூரிலிருந்து  பூந்தமல்லி நோக்கி வரும் போது முதல் நிறுத்தம் தாஷ் பிரகாஷ்”. அங்கே ‘மேன்மக்கள்’ உலவும் ஆடம்பரமான விடுதிகள்தான் பலருக்கும் தெரியும். அந்த ஆடம்பரங்களின் இடுக்குகளில் எண்ணிறந்த உழைக்கும் மக்கள் வாழ்வது பலருக்கும் தென்படுவதில்லை.

மூலதனங்களை உறிஞ்சும் செல்வந்தர்களை தாசப்பிரகாசுகள் வரவேற்கும். ஆனால் சந்தோஷ் நகர்கள்?  அரசால் சேரிகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்கள் தீண்டப்படாததாகவும், தாசப்பிரகாசுகள் பூஜிக்கப்படும் புனிதப்பீடங்களாக மாறிவிட்ட இச்சூழலில், புனிதர்களையும் அவர்களின் திருத்தலங்களுக்கும் அபாயமணி ஊதியிருக்கிறது சந்தோஷ் நகர் மக்களின் போராட்டம்.

தாசப்பிரகாஷ் நிறுத்தத்திலிருந்து சில அடிகள் பின்னோக்கி நடந்து இடது புறம் திரும்பினால் இருப்புப் பாதைக்கான காவல் துறை தலைவர் அலுவலகம் இருக்கின்றது. அதை ஒட்டி இருப்பதுதான் டாக்டர் சந்தோஷ் நகர். நகரின் பெயரில் டாக்டர் இருப்பதால் இது ஏதோ பெசன்ட் நகர், அடையார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு பக்கா சேரி.

குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளும், அதனூடாக உழைக்கும் மக்களின் குடியிருப்புக்களையும் பெற்றிருக்கிறது சந்தோஷ் நகர். குடிசை மாற்று குடியிருப்புக்களை பார்த்திருக்கிறீர்களா? பாழடைந்து கை கால்கள் நொடிந்து போன பிச்சைக்காரர்களைப் போல காட்சியளிக்கும். குடியிருப்பு இடம்தான் இந்த இலட்சணத்தில் இருக்கிறதென்றால் அங்கிருக்கும் மக்கள் கழிவறைக்கு போவதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத செயல். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது ஒரு கழிவறை. அது இற்று, இடிந்து, காலாவதியாகி பயன்படுத்த முடியாதபடி பாழடைந்து போய்விட்டது.

மக்கள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள ரெயில்வே இருப்புப் பாதைகளைத்தான் வெகு காலமாக பயன் படுத்தி வந்தார்கள். அப்படி பயன்படுத்துகையில் சந்தோஷ் நகரைச் சேர்ந்த பலர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து இருக்கின்றனர். தினமும் காலைக்கடனை முடிக்க செல்லும் மக்கள் திரும்பி வருவோமா என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்திருக்கிறது.

தங்கநாற்கரச் சாலைத் திட்டம், ஐ.டி பார்க், சாலையோர சுவர்களுக்கு வண்ணம்  என என்னதான் சென்னைக்கு விதவிதமாக மேக்கப் போட்டாலும் உண்மை என்னவோ மக்கள் தினமும் கக்கூசுக்கு போவதென்பது காலனைத்தேடி போவதாகவே  இருக்கிறது. தெருவில் மலங்கழிக்காதே !  சுகாதாரம் கெடும் !! என்று தெருச்சுவர்களில் எழுதும் அரசு தான் இழைத்த குற்றத்தை மறைத்துவிட்டு அம்மக்களையே குற்றவாளிகளாக்குகிறது.

தொடர்ந்து பல்லாண்டுகளாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த சந்தோஷ் நகர் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக எவனிடமும் கெஞ்சினாலும் பயனில்லை, இந்த மாட்டை காலைப் பிடிக்கக்கூடாது , மாறாக அதன் காலை ஒடித்தால்தால் நம் வழிக்குவருமென்பதை புரிந்து கொண்டார்கள். புரிந்து கொண்ட மக்களை அணிதிரட்டி போராடுவதற்கு பு.மா.இ.மு & ம.ந.இ.ச அமைப்புகள் தயாராகின.

மக்களிடையே தொடர்ச்சியான பிரச்சாரத்திற்குபின் 2010, 12 -ஏப்ரலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்து மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. கழிவறை பிரச்சினையால் பாதிக்கப்படாத குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களும் முழுமையாக இம்மறியலில் கலந்து கொண்டார்கள். தனக்கு பிரச்சினை இல்லாத பட்சத்தில் வீட்டுக் கதவை சாத்தியே பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம் இங்கே தனக்கு பிரச்சினை இல்லையென்றாலும் போராட முன்வந்த உழைக்கும் மக்களின் உணர்வை புரிந்து கொண்டால் மிகவும் பயனளிக்கும்.

சந்தோஷ் நகர் மக்கள் அனைவரின் பங்கேற்போடு நடைபெற்றப் போராட்டம் கழுகின் மூக்கின் மீதேறியதைப் போன்று காவல் துறை அலுவலகத்திற்கு அருகே நடைபெற்றது முக்கியமானது. காவல்துறை தலைவர் அலுவலகத்தின் வாசலில் மக்கள் நக்சல்பாரிகளோடு இணைந்து போராடுவதை எப்படி போலீசால் பொறுத்துக்கொள்ள முடியும்?

அதற்கான நேரம் காலம் முடிந்து விட்டது, பொறுத்துக்கொள்ள முடியுமா இல்லையா என்பதை இப்போது மக்கள் முடிவு செய்வதற்கான காலம் வந்து விட்டது. சாலைமறியல் செய்த மக்களை மிரட்டிப்பார்த்தது போலீசு, பின்னர் கெஞ்சிப் பார்த்தது. மக்களின் எஃகுறுதியை எந்தக் கெஞ்சலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை.

“மறியலை விடுங்கள் நாளைக்கு செய்கிறோம்” என்ற வழக்கமான அதிகார வர்க்க பசப்பல்களை மக்கள் அலட்சியத்துடன் ஓரமாக வீசியெறிந்தார்கள். இறுதியில் கழிப்பறைக்கான கட்டிடம் கால இலக்கிற்குக்குள் கட்டிக்கொடுக்கப்படும் என்று  எழுதி வாங்கிக்கொண்டு அதிகாரிகளை மக்கள் அனுப்பினார்கள். மிரட்டி, அதட்டி, கெஞ்சிய அரசு நிர்வாகம் கடைசியில் மக்களின் உறுதியான போராட்டத்தால் வாலைச் சுருட்டிக்கொண்டு சரணடைந்தது.

கழிவறைக்காக கட்டுமான வேலைகள் தொடங்கியது முதல் டிச.5 அன்று அதை திறக்கும் வரையில் அரசு இதை தானாக செய்யவில்லை. ஒவ்வொரு தடவையும் மக்களின் தொடர்ச்சியான போராட்டமே அதை சாதித்துக் காட்டியது. தனது ஏரியாவில் யாராவது செத்தால் கூட நான் வராமல் எடுக்கக்கூடாதென சண்டித்தனம் செய்ய்ம் அரசியல் ரவுடிகள் சும்மா இருப்பார்களா என்ன? ஆனால் இங்கு வேறு வழியில்லாமல் அவர்கள் வாய் மூடிக்கிடந்தார்கள். அதனால்தான் கவுன்சிலரிடம் அதிகாரிகள் கழிவறையைத் திறக்க நாள் கேட்க வில்லை. மக்களிடம்தான் நாள் கேட்டார்கள்.

கக்க்கூஸை தான் திறந்து சீன் காட்ட காத்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ருக்மாங்கதனோ “என்னையே வுடமாட்டியா ” என்றவாறு கழிப்பறையை திறக்கமுடியாதென உறும, மக்களோ டிச.5 திறக்கப்படவில்லையெனில் எதுவும் நடக்குமென எச்சரிக்கையை விட்டார்கள். பதறிப்போன அதிகாரிகள் வேறுவழியின்றி டிசம்பர் 5 திறப்போமென அறிவித்து விட்டார்கள்.

புத்தாண்டு, கோயில் திருவிழா முதலானவற்றுக்கு திரளுவதை விட அதிகமாக மக்கள் திறப்பு விழாவிற்கு திரண்டார்கள். கொடுக்காத சாமிக்கு விழா எடுத்த மக்கள் , தாங்கள் தான்  சாமி என்றும் அதை  உருவாக்கிய புரட்சிகர அரசியல் தான்  சக்தி   என்பதை உணர்ந்து, தெளிந்து விழாவை நடத்தினார்கள்.

விழா நாள் முழுவதும் புயல் மழையடித்தாலும் அதை  போராட்ட வெற்றி அலை காணாமல் போகச்செய்து விட்டது. கொட்டும் மழையில் மாலை கலைநிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. “டாடி மம்மி வீட்டில் இல்லை” என்று கூத்தடிக்கும் ஆட்டங்கள் இல்லை.பகுதிக் குழந்தைகள் புரட்சிகர பாடல்களை மட்டும் தான் பாடினார்கள். “தூங்குறியா நடிக்குறீயா ரங்கநாதா” என்று பாடிய அந்த பிஞ்சுக்குழந்தைகளின் குரல் மெல்லியதாக இருந்தாலும் அப்போது இடித்த இடியை விட வலுவாக இருந்தது.

கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் குழந்தைகள் நடுங்கிக்கொண்டே பாடியதையும், சாராய எதிர்ப்பு நாடகத்தை நடத்திக் காட்டியதையும் மக்கள் வரவேற்றார்கள். மழை காரணமாக நிகழ்ச்சியை சீக்கிரம் முடித்துக்கொள்ள தோழர்கள் வலியுறுத்திய போதும், போராட்டத்தின் வெற்றியை கொண்டாடித்தீருவதென்று மக்கள் உறுதியாயிருந்தார்கள்.

கக்கூஸ் கட்டி திறப்பதையெல்லாம் ஒரு விழாவாகா கொண்டாடுவார்களா என்று சிலர் வியக்கலாம். சென்னையின் காங்கீரீட் காடுகளில் கழிப்பறை இல்லாமல் வாழும் ஏழைகளே அதிகம். பல இடங்களில் கட்டணக் கழிப்பறைகளே மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன. சேரிப்பகுதிகள் அனைத்தும் கழிப்பறை இல்லாமல் அவதிப்படுகின்றன. இதில் பெண்களின் துயரங்கள் சொல்லி மாளாதது.

தனது நகரத்தை மேம்பாலங்களாலும், அடுக்கு மாடி மாளிகைகளாலும் அழகுபடுத்தும் அரசு இந்த மாநகரத்தின் இயக்கத்திற்கு அஸ்திவாரமாக இருக்கும் ஏழைகளுக்கு கேவலம் ஒரு கழிப்பறையைக்கூட கட்டித்தர மறுப்பது ஏன்? அவர்களது நகர நல மேம்பாட்டு திட்டத்தில் ஏழைகளுக்கு என்றுமே இடமில்லையோ?

கட்சிகளும், கவுன்சிலர்களும் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று விளம்பரம் செய்து எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டுவதையே தொழிலாக செய்கிறார்கள். ஆனால் கழிப்பறை கட்டுவதில் அவ்வளவாக கமிஷன் கிடைக்காதோ என்னமோ?

இப்படி அரசு, அதிகார வர்க்கம், கட்சிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு தம்முடைய உறுதியான போராட்டத்தின் மூலமாக மக்கள் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். கழிப்பறைக்கு மட்டுமல்ல, நாட்டையே விற்று கொள்ளை அடிக்கும் மறுகாலனியாக்க கொள்ளையர்களையும் இதே மக்கள் ஒரு நாள் வீழ்த்துவார்கள்.

______________________________

தகவல்: பு.மா.இ.மு, சென்னை
______________________________

சந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழாசந்தோஷ் நகர் கக்கூசுக்காக ஒரு போராட்டம் ஒரு வெற்றி விழா

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. கக்கூசுக்காக ஒரு போராட்டம் ! ஒரு வெற்றி விழா !!…

  கக்கூஸ் கட்டி திறப்பதையெல்லாம் ஒரு விழாவாகா கொண்டாடுவார்களா என்று வியப்பவர்கள், சென்னையின் காங்கீரீட் காடுகளில் கழிப்பறை இல்லாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உணராதவர்கள்…

 2. […] This post was mentioned on Twitter by வினவு and Anitha Jebarajs, sandanamullai. sandanamullai said: கக்கூசுக்காக ஒரு போராட்டம்! ஒரு வெற்றி விழா!!- https://www.vinavu.com/2010/12/16/rsyf-santhosh-nagar/ […]

 3. இங்கு எதுவுமே சாத்தியம்தான்.ஒற்றுமை என்னும்
  கயிற்றை பற்றி பிடித்து கொண்டால்.
  வாழ்க! வளர்க!! ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை.
  “புன்னைநல்லூர் நாயகியே மாரியம்மா” என்று நான்தான் பாடலை தவறாக புரிந்து கொண்டேனோ?

 4. மக்கள் சக்தி மாபெரும் சக்தி என மீண்டும் புரியவைத்துள்ளார்கள்..

  இதே அரசியலிலும் வரணும்… ஒற்றுமை வளரணும்..

  வாழ்த்துகள்..

 5. இதே போன்று எல்லா பிரச்சனைகளுக்கும் மக்கள் இணைந்து போராட வேண்டும்.

 6. சந்தோஷ் நகர் மக்களை சந்தோஷப்படுத்திய போராட்டம். ‘சேரிப்புயல்களால்’ செய்ய முடியாததை புரட்சிப்புயல்கள் சாதித்துள்ளார்கள். வாழ்த்துக்கள்.

 7. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், மக்கள் நல இளைஞர் சங்கமும்
  சாதித்திருக்கின்றன.வாழ்த்துக்கள்.

 8. வாழ்த்துக்கள் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் இதை தமிழ் நாடு முழுவதும் முன்னெடுங்கள்
  மேலும் கழிப்பறையை முறையாக பயன்படுத்துகிறார்களா ? என்றும் கண்காணியுங்கள்

 9. ஆகா.பேஷ்.பேஷ்.ரெம்ப சந்தோசம்.இதமாதிரி மறுகாலனிகொள்ளையர்களை அடிபணியவைக்கும் நாள் எந்நாளோ???

 10. மதுரவாயல், சந்தோஷ் நகர் என புமாஇமு -வின் போராட்டங்களும் வெற்றிகளும் மாணவ – இளைஞர் சமூகத்திடம் தான் இந்த நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என மீண்டும் நிரூபிக்கிறது.

  புமாஇமு-வினற்கு வாழ்த்துக்கள்…

 11. வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைத்து தோழர்களுக்கும் வணக்கம் .

 12. சென்னையில் சரிபண்ண வேண்டிய கழிப்பிடங்கள், கழிப்பிடமே இல்லாத இடங்கள் ஆகியவற்றிற்கு கணக்கே இல்லை. ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் கழிப்பறைகளின் அவல நிலையை எதிர்த்து மனித உரிமை கழகத்திடம் கூட முறையிட்டாகி விட்டது.
  http://www.hindu.com/2009/04/20/stories/2009042057770300.htm

  வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் நிலைமை பரிதாபம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து யார் கண்ணிலும் படாமல் திறந்த வெளியில் குளிக்க வேண்டிய அவலம்.

  போராடிய பு.மா.இ.மு & ம.ந.இ.ச அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்.

 13. இதையும் எதிர்த்து குரல் கொடுங்கள்:

  http://www.hinduonnet.com/fline/fl2601/stories/20090116260110800.htm

  மனித மலத்தை மனிதனே சுமப்பது, சாக்கடையில் அடைப்பை சரிசெய்ய மனிதர்களையே இறக்குவது ஆகிய அவலங்களையும் எதிர்த்து போராடுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க