Friday, September 20, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

-

தமிழ் நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா…

கேட்டால் அரசியலுக்கு வருவது அடிப்படை மனித உரிமை என்று சில அறிவாளிகள் நியாயம் பேசுவார்கள். மனித உரிமையில் பாலைவனமாய் காய்ந்து கிடக்கும் நாட்டில் இதுதான் மனித உரிமையாம், வெங்காயம்.

தினத்தந்தியின் சினிமா இணைப்பைத் தவிர வேறு எதையும் செய்தியாகக் கூட வாசித்திராத, கேள்விப்பட்டிராத இந்த குத்தாட்ட நாயகர்களுக்கு சமூக உணர்வு பொங்கும் அந்த தருணம் இருக்கிறதே, அதைக் கேட்டால் எல்லாரையும் வெட்டிவிட்டு சிறைக்கு போவதற்கு கூட நாம் தயங்க மாட்டாம். அந்த அளவுக்கு இவர்களது சமூக அக்கறை பில்டப் நம்மிடம் கொலைவெறியையே தோற்றுவிக்கும்.

வசனம் எழுதிய கருணாநிதிக்கு வரும் கூட்டத்தை விட தனது மேக்கப் போட்ட சிவப்புத் தோலுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை கருணாநிதி அங்கீகரிக்கவில்லை என்ற ஈகோ போட்டிதான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளி கட்சி ஆரம்பித்தற்கு காரணம். சினிமாவில் கையைக் காலை ஆட்டி அசைத்தற்கே முதலமைச்சாராக முடியுமென்றால் வேறு எதைச் சொல்ல?அதனால்தான் எம்.ஜி.ஆர் கட்சியில் தொண்டர்களாக மட்டுமல்ல அமைச்சர்களாகவும் கூட அடிமைகளே நீடித்தார்கள். நீடிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் மண்டையைப் போட்ட பிறகு குரலை வைத்தே வித்தை காட்டிய சிம்மக் குரலோனுக்கு ஆசை வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் கனவில் மிதந்தார். எனினும் “பிள்ளைகளே இப்படிக் கைக்காசை செலவழிக்க வைத்து மொட்டை அடித்து விட்டீர்களே” என்று “எங்கே நிம்மதி” புதிய பறவை ரேஞ்சில் துக்கத்துடன் போய்ச் சேர்ந்தார் சிவாஜி கணேசன்.

எம்.ஜி.ஆரால் கலையுல வாரிசு என்று அறிவிக்கப்பட்டதும் கே.பாக்யராஜ் எனும் முருங்கைக்காய் நாயகனுக்கும் அப்படித்தான் தலைகால் புரியவில்லை. “தாவணிக் கனவுகள்” ரிலீசான போது அவர் அதிகம் கனவு கண்டது கோட்டையில் கொடியேற்றுவதுதான். பிறகு கட்சி ஆரம்பித்து கடன் வாங்கி இப்போது இத்துப்போன கட்டிடத்தில் “பாக்ய” இதழில் கேள்வி பதில் பகுதிகளுக்கு அம்புலிமாமா கதையைச் சொல்லி காலத்தை ஓட்டுகிறார் நம்ம பாக்யராஜ்.

அப்பாலிகா டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்ததும், தி.மு.கவில் ஆஞ்சநேய பக்தாராக இருந்து கொண்டே கொள்கை பரப்பு செயலாளராக இருந்ததும், பின்னர் மீண்டும் தனிக்கட்சி ஆவர்த்தனத்தை தொடருவதும் நம்மைப் பொறுத்தவரை நல்ல வேடிக்கையான விசயங்கள். இப்போதும் ஏதாவது இடைத்தேர்தல் என்றால் இவர் போட்டியிடுவதும், அதற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரச்சாரம் செய்வதும்…. ஆசை யாரை விட்டது? ஆனாலும் ஒன்றை ஒத்துக் கொள்ளவேண்டும். டி.ராஜேந்தர் பேசும் அடுக்கு மொழி காமடிக்காகவாவது இவர் அரசியலில் தொடர வேண்டும்.!

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது கார்பவனிக்காக டிராபிக்கில் சிறிது நேரம் நின்றதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் உணர்வு பொங்கி எழ காரணம். கூடவே மணிரத்தினம் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் நமுத்துப் போன வெங்காய வெடியை போட்டதும், “தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று வெடித்தார் ரஜினி. சோ, பார்ப்பன ஊடகங்கள் பெரு முயற்சி செய்து ரஜினியின் பலூன் இமேஜை ஊதிப்பெருக்க எது எப்படியோ கடைசியில் அண்ணாத்தேயின் அரசியல் விஜயம் காமடியாக முடிந்து விட்டது.

பிறகு சரத்குமார். தானிருக்கும் போது நடிகர் விஜயை வைத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தபால் தலை வெளியிடுவதா, என்று கோபித்துக் கொண்டு விஜய் மல்லையாவின் தனி விமானத்தில் மதுரை பறந்து ஆண்டிப்பட்டியில் ஜேவை சந்தித்து அ.தி.மு.கவில் அங்கமாகி பிறகு அங்கும் பருப்பு வேகாமல் சமத்துவ கட்சி கண்ட சரத்குமார் அடுத்த தேர்தலில் கூட்டணி தருமத்தில் ஒரு இரண்டு சீட்டாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். ஆனாலும் இவர் விடும் சவுடால்களுக்கு குறைவில்லை.

போலீசு கெட்டப்பில் தீவிரவாதிகளை பந்தாடும் விஜய்காந்த் நிஜத்திலும் அப்படி ஒரு ஃபவர் தன்னிடம் இருப்பதாக தவறாக கருதி அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டார். கட்சியை குடும்பத்தின் பிடியிலும், கட்சி பிரமுகர்களாக ஊழலில் கொட்டை போட்ட பெருச்சாளிகளை வைத்தும் காலத்தை ஓட்டுகிறார். அம்மா தயவுக்காக காத்திருக்கிறார்.

கடைசியாக இளைய தளபதி விஜய். ஒரு படத்துக்கு ஊதியமாகவும், சென்னை நகரின் விநியோக உரிமையாகவும் சேர்த்து பதினைந்து கோடி வாங்கும் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த நான்கு படங்கள் ஓடவில்லை. இன்னும் எத்தனை நாள்தான் மக்கள் குத்தாட்டங்களை இரசிக்க முடியும்? ஒன்னுக்கு நாலு படமாய் முதலுக்கு மோசமாப் போச்சே என்று வயிறெரிந்த திரையரங்க அதிபர்கள் நட்டத்தில் கொஞ்சமாவது திருப்பி கொடுங்கள் என விஜய் தரப்பைக் கேட்டனர். அதில்தான் நம்ம இளைய தளபதி முறுக்கிக் கொண்டு அரசியல், இரசிகர் மன்றம் என்று உதார் விடுகிறார்.

வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

80களில் ‘புரட்சி’ப் படங்களை எடுத்து பிரபலமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாரிசை திட்டமிட்டே களத்தில் இறக்கினார். ஆரம்பத்தில் அது சங்கவியா? போன்ற நடிகைகளை அரை அம்மணமாக்கி அவர்களோடு ஸ்டெப் கட்டிங் விஜயை ஆடவைத்து கிட்டத்தட்ட கொஞ்சம் பலான ஸ்டைலில் படங்களை வெளியிட்டார், சந்திரசேகர். அப்போதெல்லாம் இரசிகர்கள் விஜயைப் பார்ப்பதற்க்காக செல்வதில்லை. சங்கவி போன்ற கவர்ச்சி நடிகைகளை பார்ப்பதற்கே சென்றார்கள். இப்படி ஆரம்பித்த விஜயின் திரையுலக வாழ்க்கை பின்னர் ஒரு நட்சத்திரமாக செட்டிலானது. இதில் கடுமுழைப்புதான் அவரை நட்சத்திரமாக்கியது என்பதெல்லாம் ‘கடவுளே’ தாங்க முடியாத வார்த்தைகள். நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.

இப்போது என்ன பிரச்சினை? மு.க.ஸ்டாலின் மகனது மன்மத அம்பு படத்திற்காகவும், சன் டி.வியின் ஆடுகளம் படத்திற்காகவும் தமிழக திரையரங்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவலன் படத்திற்கு திரையங்கு இல்லையாம். அதிலும் திரையரங்க அதிபர்கள் பழைய தோல்வியடைந்த படங்களுக்கான நட்டத்தையும் கேட்கின்றனராம். குருட்டு அதிர்ஷடமாக கிடைத்த நட்சத்திர வாழ்க்கை அதோகதியாகிவிடுமோ என்ற பயம் விஜய் தரப்பினருக்கு வந்துவிட்டது.

தமிழ் சினிமா என்பது ஒரு சூதாட்ட விடுதி போலத்தான். இங்கே ஆண்டாண்டு காலமாக ஏதோ ஒரு பிரிவினர்தான் வருமானத்தை அள்ளுகின்றனர். அது தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸ் செய்பவர்கள் என்று மாறிக் கொண்டே இருந்தது இப்போது எல்லாம் தி.மு.க குடும்பத்தின் பிடியில் என்று ஆகிவிட்டது. அதன்படி இனி நட்சத்திரங்களின் இமேஜூம், வருமானமும் கூட சன்.டி.வியின் பிடியில்தான். இந்த காலமாற்றத்தை இளைய தளபதியால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுளர்களைப் பொறுத்தவரை அவர்களது ஆட்சி முடிந்து விட்டது என்பதை எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் பிரச்சினை.

இந்நிலையில் இரசிகர் மன்றக் கொடி, இரசிகர்களை விஜய் சந்திக்கிறார், என்ற ஆர்ப்பாட்டங்களெல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துவிட்டன. எல்லாம் தமிழகமே தனது பின்னே அணி திரண்டிருக்கிறது என்று காட்டத்தான். இதன் பின்னிணைப்பாக அப்பா சந்திரசேகர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தித்திருக்கிறார். கருணாநிதியிடம் தனது மகன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பை கேட்டாராம் தந்தை. ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.

காவலனை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை தவிர இவர்களது அரசியல் ஆவேசத்துக்கு எந்த எழவும் அடிப்படையல்ல. காவலன் படத்தை நாற்பது  கோடிக்கு வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம் ஒரு சிறு முதலீட்டு தயாரிப்பாளர். இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்றால் எல்லாம் அ.தி.மு.க பெருந்தலைகள் கொடுத்தது என்று அவரே கூறுகிறார். சன்.டிவியின் ஏகபோகத்தை தடுப்பதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி புரட்சித் தலைவியின் ஏகபோகமாகும். இதில் நமது சி.பி.எம் நண்பர்கள் காவலன் ரிலீசு ஆகவில்லை என்று ஏக கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தி.மு.க குடும்பத்தின் ஏகபோகமாகிவிட்டது என்று சவுண்டு விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இவர்களும் போயஸ்தோட்டத்திற்குத்தான் செல்கிறார்கள். அய்யா குடும்பத்தின் ஏகபோகத்தை தடுப்பதற்கு அம்மா குடும்பம். தோழர்களும் என்ன செய்வார்கள், பாவம்.

ஆக அடுத்த தேர்தலில் விஜய் அ.தி.மு.க அணிக்கு பிரச்சாரம் செய்வாரா, இல்லை கட்சியில் சேருவாரா, இல்லை தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்விகளெல்லாம் காவலன் படம் ரிலீசாவதைப் பொறுத்தது. ஒரு படம் பதினைந்து கோடி ரூபாயை தருகிறது என்றால் அதைத் தவிர இவர்கள் கவலைப்படத்தக்க பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆஃப்டரால் ஒரு படம் ரிலீசாக முடியவில்லை என்பதற்காக நாட்டு மக்களை காப்பாற்ற அரசியிலில் குதிக்கிறேன் என்று ஃபிலிம் காட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

இனி அடுத்த அஜித் படமும் இதே போல ரிலீசாகவில்லை என்றால் என்ன நடக்குமோ தெரியவில்லை. சினிமாவில் சூரத்தனம் காட்டும் இந்த வீரர்கள் உண்மையில் ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? சன் டி.வியின் ஏகபோகம் பிரச்சினை என்றால் அதை வெளிப்படையாக கூறி திரையுலகை அணிதிரட்டி போராடலாமே, ஏன் செய்ய வில்லை?

தமது நட்சத்திர இமேஜ் சன் டி.வியால் உயர்ந்த போது மகிழ்ந்தார்கள். இப்போது தாழ்த்தும் போது எதிர்க்க முடியாமல் அரசியல் பலம் என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தை வைத்து பேரம் பேசுகிறார்கள். இதுதான் இவர்களது அவர்களது அரசியல் பிரவேசத்துக்கு காரணம் என்றால் தமிழகத்தை யாரால் காப்பாற்ற முடியும்?

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

  1. அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?! | வினவு!…

    சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா……

  2. இந்த பதிவுக்கு எத்தனை/எப்படி பின்னூட்டம் வருதுன்னு பாக்கலாம்… அதுலையே தெரிஞ்சிடும்…விஜையின் அரசிய எதிர்காலம்…

  3. //மனித உரிமையில் பாலைவனமாய் காய்ந்து கிடக்கும் நாட்டில் இதுதான் மனித உரிமையாம், வெங்காயம்.//

    வெங்காயம். இந்த வார்த்தையை அதிகம் யூஸ் பண்ணாதிங்க. ரொம்ப காஸ்ட்லியான வார்த்தை.

  4. என்ன பொரட்சிகர வினவு அண்ணாச்சி இப்பல்லாம் நம்ம கடை ரொம்ப காத்து வாங்கி கல்லா வெறுமையா ஆகிவிட்டது போல..

    பாவம் நீங்களும் எவ்வளவு நாளைக்கு தான் பாகிஸ்தான்காரனுக்கு வால் பிடிக்க முடியும். கடையையும் பார்க்கணும் இல்ல. அதான் இபாடி பைசா பெறாத எளிமூஞ்சி விஜய் பற்றியெல்லாம் எழுதி ஹிட்ஸ் வாங்க வேண்டுயிருக்கு. பாவன் உங்க நெலம..

  5. //நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.//

    //ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.//

    படு நக்கல்.

  6. நெத்தியடி பதிவு …நடிகர்களை வெளுத்து வாங்கிட்டிங்க குறிப்பா அரசியல் எனும் பொம்மையை வைத்து இந்த நடிகர்கள் ஆடும் ஆட்டம் இருக்கே யப்பா ..
    இதில் விஜய் அரசியல் பிரவேசம் எனும் செய்திகள் விளையாட்டு செய்தி பக்கத்தில் மட்டுமே வரக்கூடியது

  7. முதலில் ஏன் நடிகர்களுக்கு இப்படி ஒரு ஆசை வருகின்றது?

    இவர்கள் கக்கூஸ் போகும் போது எரிச்சல் அதிகமாக இருந்தது என்று கூறுவதைக்கூட படிக்க பார்க்க மக்கள் தயாராக இருக்கும் அளவிற்கு உருவாக்கியவர்கள் யார்?

    ரஜினியை பார்க்கனும்ன்னு தொங்கிட்டு போனவரு எமலோகம் போய்ச் சேர்ந்தும் புத்தியில் உரைக்காத அடுத்த கூட்டம் அல்லாடிக்கிட்டு அலையுதே ஏன்?

    சிநேகா இடுப்பை கிள்ள வரம் வாங்கி வந்து வார்த்தைகளால் வாங்கிக்கட்டிக்கொண்டவர் வீட்டில் உள்ள பொஞ்சாதி அந்த கணவனை எப்படி பார்ப்பார்?

    இந்த நடிகர் அந்த நடிகர் அரசியல் ஆசை முதல்வர் ஆசை என்று பொதுப்படையாக குற்றம்சாட்டுவதை விட மக்களின் மனோபாவ எரிச்சலில் ஏதோவொரு மாறுதல்களை எதிர்பார்க்கத் துவங்க இது போன்ற ஆட்களுக்கு கொஞ்சம் ஆசை அதிகமாகவே வந்து விடுகின்றது.

    இல்லாவிட்டால் இன்று விஜயகாந்த் ஒரு முக்கியபுள்ளியாக மாறியிருப்பாரா?

  8. நாலு தையலு மெசின கொடுத்துகினு இந்தாளு பண்ற இம்சை தாங்க முடியலைய்யா……..

  9. விஜய்: அவன் அவன் ஊரில நாலு அஞ்சு கட்சி நடத்துறவன் எல்லாம் சந்தோசமாக இருக்கான், நான் ஒரு கட்சியை தொடங்கு முடியமா படுற அவஸ்தை இருக்கே. அய்யோயோ……………………………..

    சன்டிவி: அவன் அவன் லட்சக்கணக்காக கொள்ளையடிச்சுட்டு சந்தோசமாக இருக்கான், ஆனா கோடிக்கணக்கா அடிச்சிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே … அய்யோயோ……………………………..

    மக்கள்: டேய் நிறுந்துங்கடா !!! நாங்க சொல்லவேண்டிய டயலாக்கை கூட நீங்களே சுட்டு. எங்களை டார்ச்சர் பண்ணிட்டு. இப்போ விடுற கதையப் பாரு…………. உங்க போதக்கு நாங்க தான் ஊறுகாயா

  10. நான்கு நாட்களுக்கு முன்தான் ‘ந‌டிகர்களும் அரசியலும்’ என இது சம்பந்தமாக ஒரு பதிவை போட்டேன்.

    http://kurippugal.wordpress.com/2010/12/16/actor-politics/

    புதியதாக சொல்ல எதுவுமில்லை. நடிகர்களின் இது போன்ற அரசியல் நாடகங்கள் தங்கள் படத்தை ஓட வைக்க மட்டுமே என்பதை மக்கள் புரிந்துகொள்ளும்வரை இது போன்ற காமடிகளுக்கு பஞ்சம் இருக்காது.

  11. BOSS, KEEP IT UP !!!. THESE TYPE OF ARTICLES MUST BE PRINTED AND DISTRIBUTED TO COMMON MAN.

    WHENEVER I COME ACROSS HIS FANS OUTSIDE THEATRES , I FEEL A PANG OF ANXIETY AND PITY FOR THE MISGUIDED YOUTH.

    THIS NUISANCE IS PREVALAENT ONLY IN SOUTHERN STATES where AFTER ACTING IN FEW FILMS AND FEW PUNCH DIALOGUES ACTORS DREAM OF BECOMING CM….

    ONLY GOD CAN SAVE THE POOR GUYS WHO ARE RALLYING BEHIND THESE FOOLS…

  12. நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதில்லையே!!!அண்ணா தொடங்கிய இந்த கூத்து இன்றும் தொடர்வது சோகக்கதை.ஆந்த்ராவில் கூட மக்கள் திருந்தி விட்டார்கள்(என் டி ஆர் க்கு மட்டும் மயங்கி ஒட்டு போட்டனர்.ஆனால் சிரஞ்சீவிக்கு ராடு ஏத்தி விட்டனர்.)தமிழகம் என்று உருப்படும் என்றால் இந்த கோமாளிகள் கூத்தாடிகளான கருணாநிதி, ஜெயா ,விஜயகாந்த் ,இப்போ விஜய், சரத் போன்ற கோமாளிகள் ஒழிந்தால்தான் .அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.கொடுமையடா.

  13. அரசியலில் சாதிக்க, கலைஞர்கள் முயன்றால் அது தவறல்ல!
    அது அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட உரிமை!

    ஒரு நாட்டின் தலைவர்கள், அந்தப் பகுதி மக்களின் சிந்தனையையும், எண்ணத்தையும், கலாச்சாரத்தையுமே, பிரதிபலிக்கிறார்கள்!

    சினிமா கலைஞர்களின் அரசியல் குற்றமல்ல!

    சினிமாவில் இருந்து மட்டுமே தலைவர்களைத் தேர்வு செய்வது, மக்களின் குற்றம்!

  14. இதற்கு முக்கிய காரணம் உங்களை போன்ற கொள்கை கோட்பாடு கொண்ட இயக்கங்கள்.. பிரதான அரசியலுக்கு வராமல் இப்படி கட்டுரை எழுதுவது.. வெளிநாட்டுத்தலைவர்கள் அவர்களது கொள்கை கோட்பாட்டுகளை பரப்புவது.. இன்னும் சொல்லப்போனால் தீவிர அரசியல் சொல்லாடல்களை கையாள்வது. முடிந்தவரை எளியமக்களின் பிரச்சினைகளோடும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை நேர்க்கொள்ளும் மக்களிடம் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளாமல் விட்டதுதான்.. இந்த பன்னாடைகள் பன்றிபோல் அரசியலில் வந்து மேயக்காரணம். மக்கள் கலை இயக்கம் கடந்த ஒரு வருடமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதன் செயல்பாடுகள் சுருங்கிப்போய்விட்டது.. உங்களுக்கு அதிகம் அறிவுஜீவிகள் பற்றிய கிசுகிசு எழுதவே பெரும்பாலான நேரத்தை விழுங்கிவிட்டிர்கள் என்று நிணைக்கிறேன். (லீணா ஒரு உ.ம்.) அதில் காட்டிய தீவிரத்தை நீங்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல், கருணாநிதி அயோக்கிய அரசியல் பற்றி தீவிரமான எதிர்வினை ஆற்றவதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  15. அகில இந்திய மக்கள் கட்சி கண்ட என் தலைவன் நடிகர் கார்த்திக் அவர்களை இந்த பதிவில் கண்டுகொள்ளாமல் விட்ட வினவை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு ரசிகனாக மிக்க மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை இதில் பதிவு செய்கிறேன்.

  16. நல்ல கருத்து வினவு நண்பர்களே. அரசியலை சாக்கடையாக்கும் இந்த கேடுகெட்ட மனிதர்களை விரட்டி அடிப்போம்.

  17. இந்தப் பொறம்போக்கு திரைத்துறையோட தன்னோட கோமாளித்தனத்த நிறுத்தியிருந்தா பிரச்சனை இல்ல. எத்தனையோ கருமாந்திரங்கள் கூத்தாடுது. அதுல இதுவும் ஒன்னு.

    ஆனால், கொத்து கொத்தா செத்தப்போ அந்த உளறுவாயன வலிய போயி சந்திச்சானே, அந்த மிருகத்த…..

    —————————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-டிச’2010)

  18. வெளிநாட்டுக்காரன் நம்ம தமிழ்நாட்டு நடப்ப பாத்தானா, காரிதுப்புவான்
    தோழர் மருதையன், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய என்ன நாடு இது, என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

  19. நாலு படத்துலயும் ஸ்கரீன கிளிச்சிருந்தா இந்த காமேடிலாம் நடந்திருக்காது….

  20. சிரிப்பான சிரிப்பு இந்த பதிவு …
    இந்த நடிகர்கள் என்ன சாதித்து விட்டார்கள்? நடிப்பது என்ன மிகவும் சிரமமான தொழிலா.? செயற்கரிய காரியமா? …அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.?
    எதோ ஒரு அரிய செயல் செய்தது போல் மக்கள் இவர்களை தூக்கி கொண்டாடுவது மகா அவலம். ஒரு நடிகையாவது மானத்தை ஓரளவு விற்று நடிக்கிறாள்.. நடிகன் எதை செய்தான்? கதை/பாடல்/இயக்கம் (இதெற்கெல்லாம் சற்றேனும் புத்தாக்க திறன் வேண்டும்) மற்றும் பல காரணத்தால் மக்கள் படங்களை பார்த்தால், இவர்கள் எதோ தம்மால் மட்டுமே படம் ஓடியதாக நினைத்து கொண்டு அதனால் மக்களுக்கு தலைவனாக ஒரு தகுதி வந்ததாக நினைப்பதை என்ன சொல்லுவது? ஒரு சவர தொழிலோ, உழவு தொழிலோ, செருப்பு தைக்கும் தொழிலோ, சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலோ மற்றும் பல தொழில் போல் எதாவது சற்றேனும் மக்களுக்கு பயன் தரும் விஷயம் உண்டா? மக்களின் மனத்தை பல நச்சு விசயங்களை காட்டி ஆளுக்கு செய்து சமுகத்தை கெடுத்து வருவதை தவிர.. இதற்கு இவர்களுக்கு கோடிகணக்கில் பணம்.. அவலம் அவலம்.

  21. ////நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.//

    //ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.//

    hehehe….சூப்பர்ங்கணோவ்….

    தலைப்பை அப்படியே ரிப்பிட்டிக்கிறேன்…. .தமிழ்நாட்டின் எதிர்காலம் அரோகரா…..:))

  22. ஏன்னே! இவுனுங்கேல்லாம் அரசியல்ல குதிக்கிறேன், குதிக்கிறேன் நு சொல்றானுங்கலே, என்கிருன்ஹ்டு எவளவு ஒசரத்தில் இருந்து எவளவு ஆழம் குதிக்கிரானுகனு தெரியுமா? சிம்புவுக்கு பரவால்ல அவுங்க அப்பா சொல்லுவாரு எதுன்னாலும். அடுக்கு மொழியிளியே ஒரு லேவலா ஆழத்த செப்ட்டிக் தேங்குக்குள்ள எரான்கியாவுதுய் அளந்துடுவாறு, விஜய்க்கு ஆட்ரதையும் புள்ள புடிக்கிரவன் மாதிரி பயமுருத்தரத்தையும் தவிர வேறொண்ணும் தெரியாது, அவுங்க அப்பா இப்ப இருக்கிற தேங்குக்குள்ள எல்லாம் எறங்க முடியுமான்னு யோசிக்க வேண்டாமா?

    எப்படியோ, இவனுங்க கழிஞ்சு நாடு ஒளிஞ்சா போதும்.
    வருமானம் முக்கியம் அமைச்சரே

  23. “அரசியலுக்கு வருவது அடிப்படை மனித உரிமை என்று சில அறிவாளிகள் நியாயம் பேசுவார்கள்”.
    அப்படியென்றால் பலர் அறிவாளிகள் அல்ல என்றாகிறது. சிலரால் ஒருவரை அரசியலுக்கு தேர்ந்தெடுக்க முடியாது. இந்நிலையில் முட்டாள்களே முட்டாள்களை, அதாவது கலைஞனையும், காவாலியையும் அரசியலுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாகிறது. இதில் வியப்பென்ன?.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க