Monday, June 17, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

-

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!

சுவாமி அசீமானந்தா
சுவாமி அசீமானந்தா

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட

அப்துல் கலீம்
நிரபராதி அப்துல் கலீம்

ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்

மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்

இந்திரேஷ் குமார்
இந்திரேஷ் குமார்

இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.

2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை

சுனில் ஜோஷி
சுனில் ஜோஷி

அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.

சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக

தயாநந்த் பாண்டே
தயாநந்த் பாண்டே

ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.

இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.

இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்

சந்தீர்ப டாங்கே
சந்தீர்ப டாங்கே

அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.

அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.

அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.

இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை

ராம்ஜி
ராம்ஜி

பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.

ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில்

புரோஹித்
புரோஹித்

வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.

தேவேந்திர குப்தா
தேவேந்திர குப்தா

இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் –  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.

அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம்,

லோகேஷ் சர்மா
லோகேஷ் சர்மா

ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.

ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.

இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

__________________________________________________________________________

மேலும் வாசிக்கhttp://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

படங்கள் – தெஹெல்கா

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !! | வினவு!…

  சுவாமி அசீமானந்தா எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து காவி பயங்கரவாதிகளை அம்மணமாய் நிறுத்தியுள்ளது….

 2. மிகச்சிறந்த பதிவு. ஆர்.எஸ்.எஸ்-இன் கொடுமைகளையும், தலைவர்களுக்கு பாசிசத்தொடர்பையும் மட்டுமல்லாது, தேவை இருப்பின் தன் சொந்த அமைப்பினரையே கொலை செய்யவும் தயாராக இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்தி ஓநாயை மிகச்சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

  • Not all fingers are in same length…no organisation can’t be judged for few people mistakes, even i used to burn in anger when Hindus living as majority in their own country get killed by Islamic terrorists, but this people had the courage and retaliated them with their same medicine….
   RSS is the only NGO organisation in India which has the distinguished privilege of having taken part in Indian republic day parade along with our army, this privilege is given to RSS by Nehru for their commendable service during 1963 war…RSS volunteers are known for their service to country when ever our nation is in crises, be it earth quake, cyclone, tsunami relief or in supporting the army during war…Jai Hind.

   • Also the liberation of Dadra & Nagar Haveli from the Portugese was possible only because of RSS whose cadets fought with the efficiency of army against the Portuguese. Please google “liberation of Dadra & Nagar Haveli” you will get the full information…

   • ஆக … ஆர்.எஸ்.எஸ். ஸின் கொலைகளை , குஜராத் படுகொலைகளை , குண்டு வெடிப்புகளை , இந்திய மாமா நேருவின் ஆசி பெற்ற ஒரு காரணத்திற்காகவும், மத துவேசம் காரணமாக தமது அல்லக்கைகளை போரில் பணியாற்றச் செய்ததற்காகவும் மன்னித்து விடலாம் என்கிறீர்கள்.

    தயவுசெய்து தங்களது உண்மையான பெயராகிய பூணூல் அரசன் என்ற பெயரில் வரவும்.

 3. பாவம் ஸார். ..இந்நாட்டு முஸ்லிம்கள். ஒரு பக்கம் வறுமை, ஒரு பக்கம் கல்வியறிவின்மை, ஒரு பக்கம் பிரிவினைவாதி, தீவிரவாதி என்று இந்துத்துவாக்கள் கொடுத்த பட்டங்கள், குண்டு வெடித்தவுடனே விசாரணையின்றி ஊடகங்களால் சுமத்தப்படும் பயங்கரவாதி என்ற அடைபெயர், ஒரு பக்கம் நீதியை மறுக்கும் நீதி மன்றம், ஒரு பக்கம் போலி மதசார்பின்மை, பறிக்கபட்ட பள்ளிவாசலுக்கு கூட வாயை திறந்து அழ முடியா நிலை, இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையெனில், சந்தேகிக்கப்படும் தேசபக்தி. யப்பா.. இந்து மதம் ஆளும் ஒரு நாட்டில் மதசார்பின்மையாவது மண்ணாங்கட்டியாவது.

  • “இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையெனில், சந்தேகிக்கப்படும் தேசபக்தி. யப்பா.. இந்து மதம் ஆளும் ஒரு நாட்டில் மதசார்பின்மையாவது மண்ணாங்கட்டியாவது”

   just typed Pakistan in the news, I got the three below in one week, please read and let me know…
   http://www.nytimes.com/2011/01/11/world/asia/11pakistan.html?ref=pakistan
   http://www.nytimes.com/2011/01/12/world/asia/12iht-letter12.html?ref=pakistan
   http://www.nytimes.com/2011/01/07/opinion/07iht-edhasan07.html?ref=pakistan

   Just because of this one issue, you can’t blame all Hindus to be religious intolerant. If there is one terror cell in RSS, there are THOUSANDS of Islamic terror organizations across the globe affecting millions of people. I believe Hindus are the most tolerant lot in all of the religion.

  • When India got independence population of Muslims was just 4.5% but now this has become almost 17% where as in Pakistan Hindus have become 2% from 36% this itself shows the nature of two different religion…you can clearly say which religion is tolerant from the population of minority community increase and decrease between India and Pakistan…Jai Hind.

   • பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னால் ஒரு இஸ்லாமிய பின்னணி குண்டுவெடிப்பைக் காட்டுங்கள் பார்க்கலாம். ஒரு வேளை நீங்கள் இஸ்லாமியராகப் பிறந்திருந்தால், உங்கள் சகோதரி ஒரு வெறியனால் ஒரு வெறித்தனமான மத நம்பிக்கையினால் தூண்டப்பட்ட ஒருவனால் கற்பழிக்கப் படுவதைப் பார்த்து இதம் கொள்வீரோ ?..

    அப்பட்டமாக தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட வெறியர்களைப் பார்த்தும் அந்த பூணூல்களுக்கு அடிச்சவரம் செய்ய மனம் எப்படித்தான் ஒப்புகிறதோ உமக்கெல்லாம்?..

 4. //59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளைராம்ஜிபகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார்//

  “மனிதன் நல்லவன் மனிதர்கள்தான் கெட்டவர்கள்”

  நல்ல கட்டுரை நன்றி!

 5. முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO அப்பட்டமான உண்மைகள்.

  இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும்
  இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
  இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

  நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
  இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக‌ முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத‌
  இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

  இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
  இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

  ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தயாரிப்பான‌
  ‘ஊடகங்களில் ‘பிறப்புரிமை’
  Documentary Film .

  CLICK AND SEE VIDEO
  ‘பிறப்புரிமை’. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.

  OR COME TO THIS SITE AND SEE VIDEO

  http://vanjoor-vanjoor.blogspot.com/2011/01/video.html

 6. C B I வாங்குற வாக்குமூலத்தை எல்லாம் நீங்க அப்படியே கேள்வி கேக்காம ஏத்துக்குவீங்கனா இங்க நீங்க அவுத்து விட்டிருக்கிற கதையையும் நம்பலாம்.

  • ஆதாரமே இல்லாமல் முசுலீம் மேல் குற்றம் சுமத்துவீர்கள்….

   இன்றைக்கு இத்தனை ஆதாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் லங்கோட்டை அவுத்து எறிந்துள்ள பின்னும் – வீடியோ கேமராவின் முன் வந்து நான் தான் முசுலீம் பெண்களைக் கற்பழித்தேன், நான் தான் முசுலீம் குழந்தைகளைக் கொன்றேன்” என்று காவிப் பொறுக்கி நாய்கள் ஒப்புக் கொண்ட பின்னும், குண்டு வைத்து கையும் களவுமாய் மாட்டிய பின்னும், ஒருத்தன் வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும் -சந்தேகத்தின் “பலனை” டவுஜருக்குள் உட்டுக் கொள்வீர்கள் அப்படித்தானே?

   நீங்க ரொம்ம்ம்ம்ப்ப நல்லவருங்க

 7. அய்யா,

  நேற்று புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் “ஆர்.எஸ்.எஸ்” எனும் ஒரு நூலை வாங்கினேன். அட்டைப் படத்தில் “நடுநிலை” என்று சொல்லப்பட்டிருந்ததால் ஏதோ நடுநிலையான நூல் என்று நினைத்து வாங்கி விட்டேன். வாங்கிய பின் தான் தெரிந்தது, அதன் நூலாசிரியர் ஒரு சரியான “நூல்” ஆசிரியராக இருப்பார் என்று. ஆசிரியர் பெயர் இராம கோபாலனா என்று பார்த்தேன் – அது பா. ராகவன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு வேளை ராம கோபலனின் புனைப் பெயரோ என்னவோ..

  ஏற்கனவே நான் கஸ்ட்டப்பட்டு சம்பாதித்த காசை கிழக்குப் பதிப்பகம் நடுநிலை என்று பொய் சொல்லி களவாண்டு விட்ட கடுப்பில் இருந்த நிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் மேலும் மேலும் வெறுப்பேற்றுகிறது.

  புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் எவரும் என்னைப் போல் ஏமாறாமல் இருக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

  கிழக்கினால் ஏமாற்றப்பட்ட,

  மன்னார்சாமி

  🙁

  • கிழக்கு போன்ற பார்பனிய அடிவருடிகளின் நூல்களை தயவு செய்து வாங்காதீர்கள்.போன கண்காட்சியில் முகலாயர் வரலாறு என்ற புத்தகம் வாங்கினேன்.அப்பட்டமான பொய் செய்திகளை எழுதி இருந்தார்கள்.ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் வளர்ந்தது எப்படி என்று கீழை காற்றில் ஒரு அருமையான புத்தகம் உள்ளது.விலை 20 மட்டும்தான்.

   • இந்த டவுன்லோடு பதிப்பகத்தை புறக்கணிப்போம். இது ஆரம்பித்த நாளிலேயே புளுகுணித்தனத்தையும் ஆரம்பித்துவிட்டது. 2006இல் அது வெளியிட்ட சந்திரபாபு வரலாறு நூலில் இருந்து

    “சந்திரபாபுவின் அப்பா காங்கிரஸ்வாதி. வ.உ.சி.யுடன் சேர்ந்து தூத்துக்குடி உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்”

    இந்த இரு வரிகளிலே 2 தவறுகள்

    1) தூத்துக்குடியில் உப்பு சத்தியாகிரகம் நடைபெறவில்லை
    2) உப்பு சத்தியாகிரகத்தின்போது வ.உ.சி காங்கிரஸ் கட்சியில் இல்லை.

 8. Eppadi? eppadi ippadi ellam think panna mudiyudhu? ohhh room pottu yosipeengalo?
  Andha time la uruppadiya yosicha atleash unga veetukku sila nanmaigal nadakkalam allava !!!

 9. யாரு பயங்கரவாதிகள்னு நீங்க தீர்மானிக்க கூடாது, இது மாதிரி முசுலீம்களுக்கு ஆதரவா எழுதி அவங்களோட தீவிரவாதத்தை மறைக்க பார்க்கீறீர்கள், ஆனாலும் இந்துக்கள் இதை நம்ப மாட்டார்கள்… இந்தியாவோட வளர்ச்சிக்கு தடையாக இருப்பது முசுலீம் தீவிரவாதம் தாம்… இது இந்து குண்டு அல்ல… முசுலீம் குண்டு…
  முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…முசுலீம் குண்டு…

  • எல்லா முஸ்லிமும் குண்டுன்னு தெரியுமா ஒனக்கு.ஒல்லியாவும் நெறய பேர் இருக்காங்க.எப்புடி.

  • //இந்தியாவோட வளர்ச்சிக்கு தடையாக இருப்பது முசுலீம் தீவிரவாதம் தாம்//

   இந்தியாவோட வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அமெரிக்க தீவிரவாதம். ஆர் எஸ் எஸ், பாஜக, காங்கிரஸ், சிபிஎம் இவையெல்லாம் அமெரிக்க தீவிரவாதத்தின் ஏஜெண்டுகள்.

 10. ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதம் என்று தலைப்பில் சொல்லியிருக்க வேண்டும்.. காவி முக்கியம் தோழரே…. 🙂 சரியான தருணத்தில் இடப்பட்ட கட்டுரை.

 11. தீவிரவாதி,பயங்கரவாதி என்ற பட்டத்தை ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுத்து வந்ததை இந்த இந்துத்துவாக்கள் விரும்பவில்லை. அந்த பட்டத்தை தட்டிப்பறிக்கவே நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகள். கோவை, மும்பை குண்டு வெடிப்புகள் தவிர நாட்டில் நடைப்பெற்ற அனைத்து பயங்கரவாத குண்டு வெடிப்புகளும் இந்துத்துவா காவி தீவிரவாதிகளின் கைங்கர்யம் தான், அப்படி இருந்து அவர்களுக்கு போதுமான பயங்கரவாத பட்டம் கிடைத்தபாடில்லை, எனவே முஸ்லிம்களுக்கு கிடைத்த தீவிரவாத புகழ் தங்களூக்கும் வேண்டும் என்றே குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தியின் வெளிப்பாடு. அஸிமானந்தா ஆர்.எஸ்.எஸ். பிரச்சாகரே இல்லை; அவர் தனிப்பட்ட ஆர்வத்தின் வெளிப்பாடாக இந்த குண்டு வெடிப்புகளை செய்திருக்கிறார். கடந்த 75 ஆண்டுகளாக சுயம் சேவக் தேசாபிமானிகளை உருவாக்கி வருகிறது என்றால் நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? குண்டு வைப்பது இந்துத்துவாவினர்,பழி போடுவது முஸ்லிம்கள் மேல் என்று சொல்லும் நபர்களின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டும்.

  “ஏண்டா கோழி திருடினாய்” என்றால், வாடிப்பட்டியில் வாத்து திருடினவனைப் பிடித்தாயா? ஆண்டிப்பட்டியில் ஆடு திருடினவனைப் பிடித்தாயா? என்று கேட்பது போல் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை துணைக்கழைப்பதும் இந்துத்தீவிரவாதத்தின் பரிணாம வளர்ச்சி தான் என்று சொல்பவர்களை கண்டிக்க வேண்டும்.

 12. நல்ல பதிவு. இந்த குண்டுவெடிப்புகள் மட்டுமல்ல , நாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவை தூக்கில் போடச்சொல்லும் அவர்களின் அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .

 13. சரியான தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை.தெஹல்காவில் விரிவான கட்டுரை ஒன்றும் வெளியாகி உள்ளது.இந்த வாரம் மக்கள் உரிமை இதழில் அதன் தமிழாக்கம் வருகிறது.என்னை பொறுத்தவரை இந்த நாட்டில் அரசு,காவல்துறை மற்றும் மீடியா பயங்கரவாதிகளால் மிகவும் மோசமாக பாதிக்க பட்டவர்கள் முஸ்லிம்கள்.இந்த பயங்கரவாதிகளை வீழ்த்த ஒரு புரட்சிக்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும்.அதற்கு மனித உரிமை போராளிகள் மற்றும் மதசார்பற்ற சிந்தனயலர்களின் உதவியை பெற வேண்டும்.நாட்டில் நக்சலைட் என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்டும் கொடுமைகளையும் பினாயக் சென்,அருந்ததி ராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்து களம் காண வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான அணைத்து போராட்டங்களிலும் முஸ்லிம் சமூகம் தம்மை இணைத்து கொள்ள வேண்டும்.கூட்டு முயற்சியால் மட்டுமே இது போன்ற பயங்கரவாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.(வினவின் மீது எனக்கு பல விமரிசனங்கள் இருந்தாலும் இது போன்ற கட்டுரைகளை எழுத தகுதி உள்ள ஒரே முற்போக்கு அமைப்பு என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை.)

 14. ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

  • இந்த ——- நேரடியாக மோதினால் கழுத்து அறுபட்டு சாவது நிச்சயம்.அதுதான் அரசின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்டம் காட்டுகிறார்கள்.

 15. I will never call this people terrorist because they have not done anything against our country…when ever a bomb blast happens inside a temple or train and scores of Hindus gets killed – I used to burn in anger inside me and never had the courage to retaliate them, but I really appreciate this men for retaliating so that they also know what pain we Hindus go through when our brothers and sisters get killed…Media in India is very biased because around one million Hindus and Sikhs have been butchers and thrown out of their home overnight and living as refuge in our own country but our media and politicians least bothered but on the other hand when few Muslims got affected in Gujarat then our entire pseudo seculars came to road dancing naked, where they went when a entire population of Kashmir Hindus and Sikhs thrown out of their home land, it’s only the RSS who talks on behalf of Hindus…

  One more information Muslims keep bombs in public places only during the Friday namaz time so that none of their faithful followers get killed, also can any one give me a single locality in India where Muslims are in majority and other faith people live peacefully, as soon as Muslims become majority in any area or country they start attacking the minority community this is fact and best example is Kashmir…

  Thanks, Tamil from Nellai….

 16. ஆயிரம் முறை நீங்கள் கரடியாக கத்தினாலும், முஸ்லீம் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா முடியாதல்லவா.

  ஜிகாதி தீவிரவாதம் ஒர் 25 வயது வாலிபன் என்றால்

  காவி தீவிரவாதம் ஒர் 2 வயது குழந்தை

  அகையால் அது வளரவேண்டும்.

  எப்போது போலி மதச்சார்பற்றவர்கள் ஒழிகிறார்களே அன்றே

  நிச்சயம் இந்துக்களும் முஸ்லீம்களும் கண்டிப்பாக ஒற்றுமையாக இருக்க முடியும்

  • very well said மஞ்ச மாக்கான் sir, if you compare this guys with Islamic terrorism then this is nothing – equalent to comparing a mountain with mole hill…also could you please write on same length and breath on the Jehadi terror mr.vinavu???, you will never write because you are afraid of minority terrorists…

 17. திருச்சூர்,ஜன.12: ஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த் பட்வர்தன் தெரிவித்துள்ளார்.

  திருச்சூரில் 6-வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத் தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:

  //பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு “ராம் கீ நாம்” என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

  அத்வானியின் ரதயாத்திரையும், மோடி நடத்திய கோத்ரா ரயில் எரிப்பும் ஏற்கனவே தீட்டப்பட்ட சதித்திட்டமாகும். ‘எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்’ என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களில் சிலர் வழி தவறிச் செல்லவும் காரணமானது.

  கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்தின் மிரட்டல்களுக்கெதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.

  பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வந்தபிறகுதான் ஊடகங்கள் ‘ராம் கீ நாம்’ ஆவணப்படம் அளித்த செய்தியை புரிந்துக்கொண்டன. மூன்று தனியார் சேனல்கள் அச்சூழலில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. அப்பொழுதும்கூட ஒளிபரப்பு அசோசியேசனின் எதிர்ப்பு தொடரத்தான் செய்தது.

  நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒளிபரப்பு அசோசியேசன், இந்த ஆவணப்படத்தைக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ஆபத்து நிறைந்தது என குறிப்பிட்டது.

  அரசும், போலீசும் இரண்டுவிதமாக தீவிரவாதத்தை அணுகுகின்றனர். எங்கேயாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் தீவிரவாத இயக்கங்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்சென்று சிறையிலடைத்து கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர்.

  மூன்றாம் தரமான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். நீதிமன்றத்தில் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளியாக்கி சிறையிலடைக்கின்றனர். நிரபராதிகள் தண்டிக்கப்படும் பொழுது மக்கள் நீதிபீடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.

  ஆர்.எஸ்.எஸ் உற்பத்திச் செய்யும் தீவிரவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவை தகர்த்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிரிகளாக பாவிக்கும் அவர்கள் மனிதத் தன்மையற்றவர்களும், ஜனநாயகத்திற்கு எதிரானவர்களுமாவர். ஹிட்லரும், முசோலினியும்தான் அவர்களின் வழிகாட்டிகள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மரியாதை அளித்தது 1979 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கமாகும்.

  காந்தியின் படுகொலை மூலம் மக்களால் வெறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஜனதா கட்சி ஆட்சியின் மூலம் தங்களுடைய மரியாதையை பலப்படுத்திக் கொண்டார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும், இனக் கலவரங்களைக் குறித்தும் விசாரணை நடத்தினால் சங்க்பரிவாரின் ஆக்டோபஸ் கரங்கள் இவற்றின் பின்னணியில் இருப்பதை கண்டறியலாம்.

  தங்களது இயக்கத் தலைவர்களையும், உறுப்பினர்களையும், அரசியல் லாபங்களுக்காகவும், பயங்கரவாத யுக்திகளுக்காகவும் கொலைச் செய்யவும் தயங்காதவர்கள்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

  ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்திய நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத வரலாற்றைக் குறித்த விழிப்புணர்வு ஊட்டவேண்டும்//

  இவ்வாறு பட்வர்தன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

  ஆனந்த் பட்வர்தன் தேஜஸ் பத்திரிகையின் ரெஸிடென்ட் எடிட்டரான மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் தனது உற்ற நண்பர் என தெரிவித்த ஆனந்த் பட்வர்தன், பாசிசத்தோடு சமரசத்திற்கு இடமில்லாமல் போராடிய முகுந்தன் சி மேனன் மனித உரிமை களத்தில் விலைமதிப்பில்லா சேவைகளை புரிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

  செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

 18. Hindu bomb endru sollavendam yalla hindukalum bomb vaipadu illai annal indiavil vaikum annaithu bombkum RSS ku mattum than thodarbu so hindu bomb endru sollavendam RSS bomb endru sollavum.

  Gandhi ji avargalai kondavan than Gandhi ji ku malai poduran.
  Idu than kodndral pavam thindral pochu enpada ????????????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க