Wednesday, March 29, 2023
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

-

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்திகள் அரசியல் உலகில் சுழற்றும் வாள் சண்டையைப் போய் ஆகா, ஓகோ என்று உளமாற உருகி ரசிப்பதற்கும் இங்கு ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டம் இருக்கிறதே?

1952இல் இது குழந்தையாக பிறந்த போது பின்னொரு நாளில் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினைக் கேட்கும் பேறு வருமென்பதை அதனது பெற்றோர்களே அப்போது நம்பியிருக்கமாட்டார்கள். பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த குழந்தையின் சுற்றமெல்லாம் பண்ணையார் உலகின் மதிப்பீடுகளோடுதான் புழங்கி வந்தன. அது என்ன பண்ணையார் உலக மதிப்பீடுகள் என்று கேட்போர், கருப்பு வெள்ளை பீம்சிங் படங்களையோ இல்லை கண்ணீர் விட்டுக் கதறும் சிவாஜி கணேசனின் அந்தக்கால படங்களையோ பார்க்க வேண்டும்.

1947க்குப் பிந்தைய தமிழக அரசியல் காலகட்டத்தில் காங்கிரசுக் கட்சியினை நிரப்பிய இந்தப் பண்ணையார்கள், மிட்டாமிராசுதார்களின் சூழலுக்கு மாற்றாக திராவிட இயக்கம் கொஞ்சம் நடுத்தரமான மனிதர்களை கொண்டு வந்தது. இதைக்கூட சகிக்க முடியாமல் அந்த மிட்டாமிராசுகள் “காலம் கெட்டுப்போச்சு, தி.மு.க காரன் அரசியல் தரத்தை கெடுத்துவிட்டான்” என்று புலம்புவது வழக்கம். அதன் இன்றைய தொடர்ச்சிதான் துக்ளக் சோ மற்றும் காங்கிரசு பெருச்சாளிகள் ஊளையிடும் காமராசரின் ஆட்சி பொற்காலம் வகையறா தொகையறாக்கள்.

ஆக 50களில் அதிகாரத்தை இழந்த காங்கிரசு பெரிசுகளின் ஆண்ட பரம்பரை திமிர்தான் தி.மு.க எதிர்ப்பாக அன்று இருந்தது. இன்று தி.மு.கவும் ஆண்ட பரம்பரை பட்டியிலில் சேர்ந்து விட்டது வேறு விசயம். இரண்டு ஆண்டான்களும் கூட்டணி வைத்து இருந்தாலும் காங்கிரசு முதலைகளின் பேச்சையோ எழுத்தையோ கவனித்து பார்த்தீர்களானால் அந்த பண்ணையார் மேட்டிமைத்தனத்தை போகிற போக்கிலேயே கேட்கலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !விஜயகாந்த் பேசும் தி.மு.க எதிர்ப்பில் இந்த ஆண்ட பரம்பரை தொனிதான் மையமாக இருக்கிறது. மக்கள் அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தி.மு.க ஊழலை யார் எதிர்த்தாலும், அதை வரவேற்கும் மனநிலையில் மக்கள் இருப்பதாலும் இதை யாரும் கவனிப்பதில்லை. மேலும் விஜயகாந்த், கொள்கை என்று பேசும் எல்லா வெத்துவேட்டுகளுக்கும், ஒழுக்கவாத நீதிகளுக்கும் இதுவே அடிப்படை என்று கூட சொல்லலாம்.

1978இல் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுல வாழ்வை துவங்கிய விஜயகாந்த் 80 களில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாகவும், 90களில் அந்த கோபம் தணிந்து கொஞ்சம் பக்குவம் முதிர்ச்சி வந்து நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், 2000த்தில் அந்த நேர்மை கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் இராணுவ கேப்டனாகவும் பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு ஏறக்குறைய முடிந்து விட்டது எனலாம்.

விஜயகாந்தின் திரைப்படங்களில் நடந்த இந்த மாற்றம் அவரது இன்றைய அரசியல் பிரவேசத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. பி, சி சென்டர்களின் உள்ள சாதாரண மக்கள் அவரது நேர்மையான போலீசு வசனங்களில் உள்ளத்தை பறிகொடுத்தார்கள் என்பது எம்.ஜி.ஆரின் ஃபார்முலா இன்னமும் மவுசை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனினும் இனி இந்த ஃபார்முலாவுக்கு தேவையிருக்காது. உலகமயமாக்கத்தின் காலத்தில் இப்போது ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகள்தான் நாயகர்களாக கொண்டாடப்படுகிறார்கள். இதன் சாட்சியமாக பிற்கால ரஜினியின் கதைகளைக் கூறலாம்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலாவின் இறுதிக் காலத்தில் இதை விட்டால் இனி கதியில்லை எனும் நேரத்தில்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ரஜினி எனும் கோமாளி அரசியலுக்கு வரமாட்டார் என்ற தைரியம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் சில கோமாளிகளின் யூகித்தறிய முடியாத மனப்போக்கு காரணமாக கூட வரலாற்றின் சில அத்தியாயங்கள் எழுதப்படுவதுண்டு. எனினும் எம்.ஜி.ஆர் கூட திராவிட இயக்கத்தின் செயல்பாட்டுப் பின்னணியோடு அரசியலுக்கு வந்தார் என்றால் விஜயகாந்திற்கு அவரது படத்திற்கு வசனமெழுதிய ஏதோ அலிகான் புண்ணியவானின் தயவில் சுலபமாக, எதையும் புடுங்காமல் குதித்து விட்டார்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற எந்த பொருளுமற்ற அவியல் வார்த்தைகளை, அதுவும் சீட்டுக்குலுக்கி தெரிவு செய்து, ராகுகாலம் எமகண்டம் பார்த்து இந்த கோமாளி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆக இந்த கட்சியின் பெயரையும், ஆரம்பித்த நேரத்தையும் ஜோசியர்கள்தான் தீர்மானித்தார்கள் என்பதிலிருந்தே கேப்படனின் வீரத்தை புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் சனீஸ்வரனுக்கு மிளகாய் யாகமும், ஊட்டியில் கஜமுக யாகமும் செய்த புரட்சித் தலைவிக்கு போட்டியாக இந்த புரட்சிக் கலைஞரும் அவதரித்து விட்டார். இனி இவர்களது கூட்டணியில் ஜோசியக்காரர்களது காலம்பொற்காலமாக இருக்கும் என்பது பதிவுலக ஜோசியக்காரர் அதியமானுக்கு இனிக்கும் செய்தியாகும்.

கட்சி ஆரம்பித்த காலத்தில் அதற்கு தோதாக ஐயாவின் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதும் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ” என் மண்டபத்தையா இடிக்கிறாய், என்ன செய்கிறேன் பார்” என்று கருணாநிதியை எதிர்க்க ஆரம்பித்தார். தனது சொந்த பகையைக் கூட பொதுப்பகையாக மாற்றுகிறார் என்பது கூட தெரியாத மக்கள், கேப்டனின் போர்ப்பரணியை ரசித்தார்கள்.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. ஜெயா எதிர்ப்பு அலையில் தி.மு.க கரையேறிது போல கேப்டனும் ஏதோ ஏழு, ஏட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். விட்ட சவுண்டுக்கு இது பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஊடகங்களும், துக்ளக் சோ போன்ற கருணாநிதியை கட்டோடு வெறுக்கும் பார்ப்பன தரகர்களும் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடி ஐயாவை உசுப்பி விட்டனர்.

பத்திரிகைகளைப் பொறுத்தவரை விஜயகாந்தை வைத்து வெளியிடப்படும் செய்திகள், அரசியல் கிசுகிசுக்கள், கூட்டணி பேரங்கள் அனைத்தும் பரபரப்பு தேவையை பூர்த்தி செய்வதால் அந்த நோக்கத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டனர். துக்ளக் சோவைப் பொறுத்தவரை கேப்டனை கொஞ்சம் சரிக்கட்டி போயஸ் தோட்டத்தில் சேர்த்து விட்டால் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று படாதபாடு பட்டார். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது போலவே இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் அப்போது அப்படி சேர்வதற்கான சாத்தியத்தில் இல்லை. இரண்டு தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபடாது என்பதையும் வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இது போக கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை அம்மா சொல்ல, கேப்டனும் “நீதான் கூட இருந்து ஊற்றி கொடுத்தாயா?” என்ற ஜாலி ஜம்பர் சண்டையை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். மேலாக கருணாநிதியின் துரதிர்ஷடத்தை பாருங்கள், அரசியலில் தெற்கு வடக்கு தெரியாத விஜயகாந்தையெல்லாம் மதித்து பேச வேண்டியிருந்தது.

தனக்கு கூடிய கூட்டம், தேர்தலில் வாங்கிய எட்டு சதவீத வாக்குகள் எல்லாம் சேர்ந்து கேப்டனுக்கு முழு போதையை குடிக்காமலேயே அளிக்கத் தவறவில்லை. அடுத்த தேர்தலில் தான்தான் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். இடையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் வாழமுடியாத பண்ருட்டி போன்ற பழம்பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் குவிய ஆரம்பித்தனர். கேப்டனும் தனது கட்சியில் ஏழை இரசிகன் செலவழிக்க முடியாது என்று தெளிந்து அந்த பணக்கார பெருச்சாளிகளை மானாவாரியாக சேர்க்க ஆரம்பித்தார். அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பதுதான் கேப்டனின் முக்கியக் கேள்வியாக இருந்தது.

மற்ற கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகளுக்கு இந்த கட்சி தனியாக ஒன்றும் பிடுங்கமுடியாது என்பது தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் சில பத்து தொகுதிகளையாவது கூட்டணி பலத்தில் வென்று செட்டிலாகலாம் என்று தெளிவாக கணக்கு போட்டுத்தான் வந்தனர். ஆரம்பத்தில் இது குறித்து அவர்கள் பேசும்போதெல்லாம் அதாவது கூட்டணி  குறித்து ஆலோசனை வழங்கிய போதெல்லாம் கேப்டன் அதை சட்டை செய்யவில்லை. என்ன இருந்தாலும் தனியாக ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமரப்போகும் கனவை அவர் விடமுடியாது அல்லவா. இவ்வளவிற்கும் 2006 தேர்தலில் அவர் மட்டுமே விருத்தாசலத்தில் வென்றிருந்தார். பா.ம.க, வன்னியர் பகுதியில் சாதி பலம் இன்றி அவர் வெற்றி பெற்றதற்கான பாராட்டை நாம் அந்த தொகுதி மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

இந்நிலையில் வந்த இடைத்தேர்தல்களிலெல்லாம் தி.மு.கவின் அழகிரி ஃபார்முலாவை எதிர்கொள்ள முடியாமல் புரட்சித்தலைவியே சிங்கியடித்த போது கேப்டனின் கட்சி ததிங்கிணத்தோம் போட ஆரம்பித்தது. அப்புறம் 2009இல் வந்த பாராளுமன்ற தேர்தல். இதில் கூட்டணி குறித்து கேப்டன் இருமனதாக இருந்தார். கட்சியில் உள்ள பெருச்சாளிகளெல்லாம் தாங்கள் செலவழித்த கணக்கை காட்டி நெருக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து இப்படி செலவழிக்க முடியாது என்று லேசாக மிரட்டவும் செய்தனர். ஆனாலும் ஏதோ சில கணக்குகள் படியாததால் அப்போது கூட்டணி சாத்தியமாகவில்லை. சில தற்செயலான காரணங்களால் கூட வரலாற்றின் திசை இப்படித்தான் மாறிச் செல்லும் போலும்.

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு தலா ஜம்பதாயிரம் வாக்குகளை வீதம் பெற்றது. இதுதான் இவரின் அதிகபட்ச சாதனை என்பதும் முடிவாயிற்று. இனி கூட்டணி இல்லாமல் குப்பை கொட்ட முடியாது என்பதை வேறு வழியின்றி கேப்டனும் உணரத் துவங்கியிருக்க வேண்டும்.

தற்போது தி.மு.க எதிர்ப்பு ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஊழலை வைத்து தி.மு.க கூட்டணியை கலைப்பதற்கும், அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்துவதற்கும் பெரும் பிரயத்தனங்கள் செய்து வருகின்றன. அதிலும் தனக்கு வயிற்று போக்கு என்றால் கூட ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிப்பறை செல்ல வேண்டும் என்று அன்னை சோனியாவின் ஆணைக்கிணங்க கால்கழுவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற வீராதிவீரசிகாமணிகளெல்லாம்  கேப்டனின் பிறந்த நாளைக்கு அவரது வீடு சென்று கேக்கை ஊட்டி, காங்கிரசு தலைமையில் கேப்டனின் தயவில் மூன்றாவது கூட்டணி என்ற காமெடி பீசுகளெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !அந்த வகையில் கேப்டன் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார். அந்த நம்பிக்கையில் அவரது கட்சியில் உள்ள பெருச்சாளிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த சேலத்து மாநாட்டிற்காக நிறைய செலவழித்திருக்கின்றனர். சேலத்தை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டருக்கு வரவேற்பு தோரணங்களோ, பேனர்களோ கட்டியதிலிருந்தே அவர்களது நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. போட்டதை எப்படியும் எடுத்துவிடலாம் என்று அவர்கள் துணிந்து முதலீடு செய்கிறார்கள்.

இது தெரியாத கேப்டன், சேலம் மாநாட்டில் இலட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தை அதாவது முதலீடு போட்டு திரட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து தனது இமேஜை யானைக்கு வந்த டயனோசர் கால் நோயாக ஊதிப்பெருக்கி சுயதிருப்தி அடைகிறார். வரலாறு இத்தகைய விசித்திரங்களை எப்போதும் கண்டிருக்கிறது என்பது வரலாற்றுக்கு விதிக்கப்பட்ட சாபமா என்று தெரியவில்லை. எனினும் இனி அம்மா காலில் விழுந்து சில பல தொகுதிகளை தேற்றித்தான் தனது கட்அவுட் மகாமித்யத்தை காட்ட முடியுமென்பது அவருக்கும் தெரியாத ஒன்றல்ல.

சேலம் மாநாட்டில் அவர் கூட்டணி வேண்டுமா என்று கேட்ட போது தொண்டர்கள் அனைவரும் வேண்டுமென்று கை தூக்கினார்களாம். வேண்டாமென்று யாரும் சொல்லவில்லையாம். இதையே கேப்டனது கட்சியினர் கொண்டிருக்கும் சமரச பிழைப்பு வாதத்திற்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம். அதாவது வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மானாட மயிலாட ஒழிப்பு,  முதலான அன்லிமிட்டட் ஒழிப்புகளை யாருமே பேசாத அளவில் மாபெரும் கொள்கையாக பினாத்தும் ஒரு கட்சி அதை சாத்தியப்படுத்துவதற்காக ஊழல் நாயகியோடு அணிசேருமாம். என்ன ஒரு கொள்கை பிடிப்பு!

கூட்டணி தயவில்தான் இனி மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட முடியும் என்பதை அறிந்ததினால்தான் கேப்டன் சமீப காலமாக, கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா என்று எகத்தாளம் பேசிய தலைவி குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவும் மாலை பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு காட்டும் விளம்பரம் ஒன்று தே.மு.தி.க சார்பில் வந்ததும் கேப்டன் படாதபாடு பட்டு அதை மறுத்தார். இது கூட்டணியை பிளப்பதற்கு கருணாநிதியின் சதி என்று சாடினார். காரியம் கை கூடும் நேரத்தில் காலை வாரிவிடும் வஞ்சகம் என்றும் அதை பார்த்தார்.

சரி, கேப்டன் போயஸ் தோட்டத்திலே போய் ஊழல் எதிர்ப்பு வசனம் பேசட்டும். ஆனால் இந்த யோக்கிய சிகாமணிக்கு ஊழலை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாள் அழகர் பொறியியல் வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கல்லூரியில் அரசு நிர்ணயித்திற்கும் மேலாகவும், சொந்த ஒதுக்கீட்டில் இலட்சம் இலட்சமாகவும் பணம் பெறுவதில் என்ன எழவு நேர்மை இருக்கிறது? அந்த கல்லூரி என்ன தர்ம சத்திரமாகவா இயங்குகிறது? கேப்டன் இதுவரை நடித்த படங்களில் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கிய ஊதியத்தை வெளியிடுவாரா? இல்லை அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதைத்தான் திரும்பத் தருவாரா?

ஊரைக் கொள்ளையடித்து ஆளாகி, பிறந்த நாள் வந்தால் ஐந்து பேருக்கு தையல் மிஷன், நாலு மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சைக்கிள்கள், பத்து பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு கொடை வள்ளல் என்று போஸ்டர் அடித்து விட்டு நானும் ஊழலை எதிர்க்கிறேன் என்றால் என்ன சொல்ல? ஊழலை எதிர்ப்பது இத்தனை சுலபமா என்று கையில் பேகான்ஸ்பிரேவுடன் நாளைக்கு வடிவேலுவும், சந்தானமும் இறங்கிவிட்டால் தமிழகத்தின் கதி, மோட்சமா இல்லை நரகமா?

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் கேப்டனின் யோக்கியதை என்ன? சாம்பார் எப்படி வைக்க வேண்டுமென்பது கூட தெரியாத, தெரிந்து கொள்ள தேவையில்லாத பண்ணையாரம்மா பிரேமலாதாவை மகளிர் அணி தலைவியாக்கி எல்லா கூட்டத்திலும் அமரவைத்து அந்த அம்மாவும் தே.மு.தி.கவை தனது பிறந்த வீட்டு சீதனம்போல உரிமை கொண்டாடி செய்யும் அளப்பறைகள் ஆபாசமாக இல்லையா? கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவர். இந்த குடும்ப கிச்சன் கேபினட்தான் கூட்டணி பேரங்களுக்கான வரவு சேமிப்பு குறித்து முடிவெடுக்கிறது. இப்படி கட்சியையே முழு குடும்பத்தின் வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தமிழகத்தை வலம் வருபவர், கருணாநிதியை குடும்ப ஆட்சி என்று சாடினால் சொறிநாய் கூட காறித்துப்பாதா?

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.

சேலம் மாநாட்டில் அந்த அம்மா பிரேமலதா, ” நாங்க எங்க கைக்காசைப் போட்டுத்தான் மாநாடு நடத்துகிறோம்” என்று வேறு பீற்றியிருக்கிறார். அதே மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் 51 இலட்சம் ரூபாய் நிதியை கட்சிக்கு வழங்கியிருக்கிறார். மற்ற மாவட்டத்து கணக்குகள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காமா சோமா கட்சிக்கெல்லாம் இவ்வளவு நிதி எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள்? இதை திரட்டுமளவு யாருக்கு சாமர்த்தியம் இருக்கும்? எல்லாம் முதலீடு போட்டு திரும்ப எடுக்கும் அந்த ஏனைய கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகள்தான் காரணம். கூட்டணி தயவில் அம்மாவின் பிச்சையில் நாளைக்கு இவர்களிடமும் காரியம் சாதிக்க வேண்டியிருக்கலாம் என்று கூடவா திருவள்ளூர் மாவட்ட முதலாளிகளுக்குத் தெரியாது?

இப்போதே எல்லாவற்றையும் எழுதிவிட்டால் வரும் தேர்தலுக்கு சுவாரசியங்கள் மிஞ்சாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம். முக்கியமாக தே.மு.தி.கவின் கொள்கை, இலட்சிய முழக்கங்களை படித்தால் அதை நாள் முழுவதும் கம்பராமாயணம் போல பொழிப்புரையுடன் கலந்து கட்டி அடிக்கலாம். வாய்ப்பு இல்லாமலா போய்விடும்?

ஆனால் தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !…

    ஒரு அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்திகளின் வாள் சண்டையையெல்லாம் சகிக்கும் ‘ஐயோ பாவம்’ நிலையில் தமிழகம் இருக்கிறது…

  2. வினவுக்கு கட்டுரை எழுத பின்வரும் வார்த்தைகளை ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி எடுத்து எழுதினாப் போதும் போல.
    ————————————
    பைசாவுக்கு அருகதை இல்லாத
    அட்டைக்கத்திகள்
    பண்ணையார்கள்,மிட்டாமிராசுகள்
    வகையறா தொகையறாக்கள்
    காங்கிரசு முதலைகளின்
    பண்ணையார் மேட்டிமைத்தனத்தை
    வெத்துவேட்டுகளுக்கும், ஒழுக்கவாத நீதிகளுக்கும்
    சூப்பர் கோமாளியாக
    கோமாளி
    புண்ணியவானின்
    எதையும் புடுங்காமல் குதித்து விட்டார்
    பார்ப்பன தரகர்களும்
    தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள்
    ஜாலி ஜம்பர் சண்டையை
    பெருச்சாளிகளுக்கு
    பிடுங்கமுடியாது
    சிங்கியடித்த
    ததிங்கிணத்தோம்
    வயிற்று போக்கு
    வீராதிவீரசிகாமணிகளெல்லாம்
    காமெடி பீசுகளெல்லாம்
    பெருச்சாளிகளும்
    கட்அவுட் மகாமித்யத்தை
    யோக்கிய சிகாமணிக்கு
    ——————————–

    • பனமரத்துப்பட்டி: சேலத்தில் தே.மு.தி.க., மாநில மாநாடு எந்த இடையூறுமின்றி சிறப்பாக நடந்ததால், மாநாட்டு திடலில் பனமரத்துப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள், கருப்பு நிற ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள கெஜ்ஜல்நாயகன்பட்டியில் கடந்த 9ம் தேதி தே.மு.தி.க., மாநில மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில், மாநாடு சிறப்பாக நடந்ததால், அப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கிடா வெட்டும் நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். 12 கிலோ எடைகொண்ட கருப்பு நிற ஆட்டுக்கிடாவை வெட்டி ரத்தத்தை மண்ணில் விட்டு, பலி கொடுத்தனர்.

      தினமலரில் வந்த செய்தி!

  3. பொறமை பொறமை!! அடுத்தவன் வளர்ச்சி உங்களுக்கு பிடிக்காதே!!
    உங்களுக்கு ஒன்னு சொல்ல கடை பட்டுள்ளேன். அதே காலம் உங்களுக்கும் பதில் சொல்லும்..!!

    • கூட இருப்பது யார்?
      பண்ருட்டி ராமச்சந்திரன்….இவரது சொந்தக் குடும்பத்தில் தி.மு.க.பெருசு கைவைதுவிட்டது.(அது வாலிபக் காமக் கோட்டி)
      அதனால் பழி வாங்கத் துடிக்கிறார் பண்ருட்டி.விஜயகாந்த், வடிவேலு, மீனா இவர்கள் மூவருக்கும் வெளிநாட்டுப் பணம்
      கணக்கில் அடங்காத அளவு வந்ததாம்.இதனை சூரியக் குடும்பம் கட்டை பஞ்சாயத்து பண்ணிக் கொஞ்சம் எடுக்கும்போது
      வடிவேலுவும்-மீனாவும் மாட்டிக் கொண்டனர்.தயவு செய்து கேப்டன் என்று அழைக்காதீர்கள்.உண்மையான கேப்டங்களுக்குக் கேவலம்.
      கோட்டையில் உட்கார கனவு கண்டவர்களில் (ராமராஜன் உட்பட) ஐவரும் ஒருவர். ஆனால் -பெருசு சட்டசபையை இடம் மாற்றிவிட்டது.
      இப்பொழுது அரசியலை விட முடியாது—புலி வால் ஆயிற்றே!ஆமா தொகுதிப் பங்கீடு கேள்விப் பட்டு இருக்கீங்களா?
      பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள்,தி.மு.க. சிறுத்தைகள், புதிய தமிழகம், பார்வேர்ட் ப்ளாக், மூவேந்தர் கழகம், இஸ்லாமிக், கிருஸ்துவ சன நாயகம் , புதிய பாரதம், முலும் லீக், இந்து முன்னணி, பி.ஜே.பி….இன்னும் உதிரிக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஒரு நாடகம் நடத்தினாலும் —–ஆச்சர்யமில்லை. பாவம் வை.கோ…….தா.பாண்டியன்…..ஐயோ! மக்களே…தூக்குங்கள் விளக்குமாற்றை.

  4. //தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்//

    சரிதான்…

    இவர் பெயரிலும் கலைஞர் இருக்கே! அதுவும் புரட்சிக்(?) கலைஞர்!
    ஆமாம் இத்தனை போட்டோ எதுக்கு போட்டுருக்கீங்க?

  5. //ஆனால் தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.

    //

    கொடுமை கொடுமை என்றுக் கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை தலையைவிரித்து ஆடிக்கிட்டு நின்னதாம் என்கிற கதையாப் போச்சுங்க………. அருமை அருமை. விஜயகாந்தின் தெலுங்குப் பேசும் கல்லூரிகளின் தமிழ்பற்றையும், சகாதேவன் மகாதேவன் கணக்கான வருங்கால வாரிசுகளையும் பற்றி சொல்ல்வே இல்லையே

  6. //இனி இவர்களது கூட்டணியில் ஜோசியக்காரர்களது காலம்பொற்காலமாக இருக்கும் என்பது பதிவுலக ஜோசியக்காரர் அதியமானுக்கு இனிக்கும் செய்தியாகும்//

    🙂

    இது டாப்பு !

    • கோவி, நீங்க அடுத்த முறை எம்மிடம் ஜோசியம் பற்றி ’பேசும்’ போது வச்சுக்கிறேன்.

      எனது profile இல் ‘ஜோதிட ஆராய்ச்சி’ என்றுதான் எழுதி தொலைத்திருக்கிறேன். ஜோதிடர் என்று அல்ல. மார்க்சியம் பற்றி ‘ஆராய்வது’ போல ஜோதிடம் பற்றியும் ஆராய்கிறேன். அதுக்கு போய் இத்தனை ‘விளைவுகளா’ ? வேறு ஏதாவது (பொருளாதார, அரசியல் )விசியத்தில் எம்மை பற்றி ‘விமர்சனம்’ செய்யுங்கப்பா…

  7. //பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.//

    🙂

    செம நக்கல் ! சூப்பர்

  8. உங்கள் பதிவுகளிலேயே ரசித்துப் படித்தது. காரம் குறைவாகவும், நகைச்சுவை ஓங்கியும்.

    தமிழக வாக்காளன் என்ன தான் செய்வான்?

  9. வெரி குட்… ஆனா கருணாநிதியை சகித்துக்கொள்வோம் என்று சொல்லாதீங்க. நாங்க அதுக்கு இதையே சகித்துக்கொள்வோம்

  10. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

    * கருணாநிதியை குனியவெச்சி குத்திரிங்க…

    * ஜெயலலிதாவை கிழி கிழின்னு கிழிக்கிறீங்க …

    * விஜயகாந்தை போட்டு எடுக்கிறீங்க …

    * சீமானை ஓட ஓட விரட்டுரிங்க ….

    சரின்னு விட்டா….

    * கம்யூனிஸ்ட்களையும் பின்னி பெடல் எடுக்குரிங்க

    அப்பா யாருக்குதான் ஓட்டு போடணும்னு தயவு செய்து சொல்லி விடுங்க
    இல்லாட்டி என் தலையே வெடுசிடும் ….

    • //அப்பா யாருக்குதான் ஓட்டு போடணும்னு தயவு செய்து சொல்லி விடுங்க
      இல்லாட்டி என் தலையே வெடுசிடும் ….//

      அறிவியல் பாடத்தில் உணவு, காற்று, தண்ணீர் அடிப்படைத் தேவைகள் என்று படித்துள்ளேன். இங்கே ஒருவர் பரிணாம வளர்ச்சியில் வோட்டுப் போடுவதும் உயிர்வாழ அவசியத் தேவை என்ற நிலையை அடைந்துள்ளதாக அறிவிக்கிறார். வோட்டு போடவில்லையெனில் தலை வெடித்துவிடும் என்பது விந்தையானதே.

    • அய்யோ பாஸு நமக்கு தொழில் வசை பாடல் மட்டுமே.. நமக்கு ஒரு கொள்கை இருக்குன்னு சொல்லிபுட்டா.. நம்மள கும்மி அடிச்சிருவாய்ங்க!!! அதுனால திட்டுவோம் திட்டுவோம்.. திட்டிகிட்டே இருப்போம்

  11. கட்டுரை அருமை.

    //ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது போலவே இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் அப்போது அப்படி சேர்வதற்கான சாத்தியத்தில் இல்லை. //

    🙂

  12. […] This post was mentioned on Twitter by வினவு and thamizhsasi. thamizhsasi said: அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம் :))) – https://www.vinavu.com/2011/01/12/vijayakanth/ […]

  13. இந்த கோட்டானை நக்கலுக்குக்கூட கேப்டன் என்று விளிக்கவேண்டாம். அருவெறுப்பாக இருக்கிறது.

    வினவில், ஈழ அழிப்பு நடந்த நேரத்தில் தமிழக அரசியல் சூழலைப் பற்றி விரிவான் அலசல் கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக கருணானிதி என்ன செய்திருக்க முடியும், அப்படி ஏதாவது செய்யா நினைத்திருந்தால் அதன் விளவுகள், தாக்கம் ஈழத்திலும், தமிழக்த்திலும், கிந்தியாவிலும் எப்படி அமைந்திருக்கும்?

    மற்றவர்கள் (ஜெயலலிதா, விஷகாந்து), அரசியல் ஆதயம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் அதை முன்னெடுக்காமல் சென்றதற்கான காரணிகள் என்ன?

    ———————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் – ஜன’2011)

  14. மிகச்சரியாக எழுதியுள்ளதாக எனக்குதோன்றுகிறது.. அந்த கிழவனை விட இவனும் இவன் குடும்பமும் மலைமுழுங்கிகள். சில அரைவேக்காட்டு பிளாக்கர்கள் இவனை மாற்றுசக்தி என்று எழுதி பிதற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் கடைசிவரை அட்டைக்கத்தி வீரர்களை நம்பியே நரகத்தில் வீழ்ந்து நரகலாக புழுத்து வாழவேண்டும் என்பது தமிழ் சமுகத்தின் வீழ்ச்சியே.

  15. ஏனுங்கோ… அரசியல் வாதிகளின் டவுசரை டர்ருனு கிழிக்காம விடவே மாட்டீரா?
    நல்ல நக்கல் கலந்த சிந்திக்க வேண்டிய அரசியல் கட்டுரை.
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  16. கருனாநிதியவது ஆரம்ப காலத்தில் மனசாட்சியோடு திராவிட இயக்கத்திற்கு உழைத்திருக்கிறார்.இந்த விசயகாந்த் என்ன செய்தார்.நாலு தையல் மேசின கொடுத்துட்டா ஆட்சிய இவர் கையில கொடுதுருனுமா…பிரேமலதா,சசிகலா இன்னும் யார் யாரெல்லாம் தமிழக அரசியலுக்கு வரபோறாங்களோ.

    • திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து,
      ஊழலை ஒழிப்பேன்! லஞ்சத்தை ஒழிப்பேன்! என்கின்ற இவர்களின் லட்சணம் என்ன?
      இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? சம்பளம் வாங்கியதற்கு ரசீது- வவுச்சர் -ல கையெழுத்து போட்டு வாங்குறாங்களா? வெள்ளையா? கருப்பு பணமாகவா??? –
      சரி ஊழலை ஒழிப்பதாக வாய் கிழிய பேசும் நீங்கள் உங்கள் திரைப்பட வருமானங்கள்-இழப்புகள் குறித்து தணிக்கை உண்டா??
      திரையரங்கத்தில் என் திரைபடத்திற்கு மிகச் சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படவேண்டும் என எவனாவது சொன்னதுண்டா?
      தன் ரசிகர்களிடம் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு நான் ஒன்றும் புதிய சமுதாய புரட்சியை படைக்க, நடிக்கவில்லை என சொன்னவருண்டா?
      திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா, உண்மையா வருமானவரி கட்டின ஒரே
      ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்!

      போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே! சிந்தியுங்கள்!

      அப்புறம் இவர்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது எதற்க்காக???
      நீங்களே ஒழுங்காய் வரி கட்டாமல் நாட்டை அரசை ஏமாற்றுகிறீர்கள்?
      நீங்கள அரசியலுக்கு வந்து சாதிக்கப் போவது என்ன? யாரை ஏமாற்றுகிறீர்கள்?

      பொதுவாழ்க்கையில் தனி மனித ஒழுக்கம் பேணவேண்டும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லாமல், இவர்களின் திரை மறைவு வாழ்க்கையும், தனி மனித ஒழுக்கமும்,கூடாநட்பும் பற்றி, ஒருவரை பற்றியாவது நல்ல முறையில் முன் மாதிரியாக இவரை போல என்று சொல்ல முடியுமா???
      ஒரே ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்!

      (விவரமாக சொல்ல ஆரம்பித்தால் பதிவின் நோக்கம் திசை மாறும்- தெரியாததொன்றுமில்லை -)

      போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே! சிந்தியுங்கள்!

      சரி! அரசியலுக்கு வந்தவர்கள், வந்துள்ளவர்கள் செய்யாத ஊழலா? அல்லது புதிதாய் அரசியலுக்கு வரும், வந்துள்ள உங்களின் பக்கத்திலுள்ளவர்கள், உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?

      சரி உங்கள் ரசிகர் மன்ற செலவுகளை, கட்சியின் செலவுகளை எந்த எதிர்பார்ப்புமின்றி செலவு செய்யக் கூடிய நல்ல ரசிகர்கள் ஏன் உங்கள் பின்னால் அணி திரள்கின்றனர்? அந்தந்த ஊரில் உள்ளாட்சி நிர்வாகத்தில் அவர்களே பங்குகொண்டு அந்த நற்பணிகளை அவர்கள் செய்யலாமே! ஏன் உங்கள் பின்னால் வருகின்றனர்? அத்தனை உத்தமரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் முதல் படத்திலிருந்து இன்றுவரை உங்கள் சொத்துக் கணக்கை, வருமானவரிக் கணக்கை திறந்த புத்தகமாக மக்களிடம் முன் வைக்க வேண்டியது தானே??

      (அடுத்து, நேற்று விஜயகாந்தின் மச்சான் சதீஷ் ஒரு பேட்டியில், ஒரு பேனரை கிழித்தால் அங்கு நூறு பேனரை வையுங்கள் என்கிறாரே! பேனர் செலவு யாருடையது? அந்த பணம் மீண்டும் ஊழலின்றி சம்பாதிக்க முடியுமா?)

      முதலில் இப்படிப்பட்ட ஆடம்பர, விளம்பர, சினிமா & அரசியலை ஒழிப்போம்!

      பின்னர் அந்த பாலக்காடு- மருதூர் கோபாலகிருஷ்ண இராமச்சந்திரன்(MGR )காலத்திலிருந்து, பிளான் பண்ணி,ரொம்ப நல்லவன் மாதிரியே, மக்கள் சேவகனாய் நடிக்கிறது! வேர்வை சிந்தி,
      (ங்கொய்யால!!! வயல்ல, வெயில்ல, மூட்டை சுமந்து) சம்பாரிக்கற பணத்தில ஒரு சதவிகிதத்தை தையல் மெஷின், மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பேட்டி (எனக்கு தெரிஞ்சு மூணு தான், இப்போ 50 கிலோ அரிசி மூடையும், காலேஜிலே பயன்படுத்த முடியாத பழைய Computers -இது தான் லேட்டஸ்ட்) இப்போ அரசியலுக்கு வந்த, வர்ற நடிகர்கள் இலவசமா, இல்லாதவங்களுக்கு- கொடுத்து, தன் கட்சியினராக ஆக்கி கொள்ளும், ஏதோ தான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த காரி-யை போல வள்ளல்களாய் காட்டி, அவர்களின் திரைமறைவு, தனி மனித ஒழுக்கக் கேட்டை மறைக்க பொய் வேஷமிட்ட, வேஷமிடும் இவர்களை நம்பியா நம் தமிழகத்தை ஆட்சி செய்ய ஒப்படைப்பது???

      கிழிச்சானுங்க சினிமாக்காரனுங்க! அரசியலுக்கு வராதிங்க! உங்களுக்கு தகுதியில்லை!
      போயும் போயும் இந்த கூத்தாடிகளிடம் நாட்டை கொடுத்து குட்டி சுவரானது போதாதா?

      Pl visit before voting to Cine Field Artists.,
      http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_499.html

  17. இப்போதே எல்லாவற்றையும் எழுதிவிட்டால் வரும் தேர்தலுக்கு சுவாரசியங்கள் மிஞ்சாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம்………………/////////////////////

    நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் ……………….

  18. காரமான பச்ச மிளகாயக் கடிச்சா சும்மா சுர்ருன்னு உச்சந்தலைல ஏறுமே.. அப்டி இருக்கு இந்தப் பதிவு.

    நைய்யாண்டி என்பதற்காக வெறுமனே சிரித்து விட்டு மட்டும் போக விடாமல் ஒவ்வொரு வரியும் உள்ளே புகுந்து வினையாற்றும் விதம் இருக்கிறது.

    பலவண்ணங்களில் நிலவும் கருணாநிதி எதிர்ப்பு என்பது எந்த வகையிலும் மக்கள் நலன் சார்ந்து இல்லாமல் இருக்கும் நிதர்சனத்தை விரிவாக அம்பலப்படுத்தும் இது போன்ற கட்டுரைகள் மிக அவசியம்.

    வாழ்த்துக்கள்!

  19. என்ன இருந்தாலும் அப்பாவி வாசகர்களான எங்களை அந்த முதலிரண்டு போட்டோக்களைப் போட்டு பயமுறுத்தி இருக்க வேண்டாம்.

  20. இந்த கோமாளி கேப்டன் மாநாட்டு 4 மணி வாக்குல வருவதாக இருந்ததாம். ஆனா 4 – 6 எமகண்டமாம். அதனால் இந்த ’ஊழல் ஒழிப்பு போராளி’ 6 மணிக்கு மேல தான் வந்தாராம்.

    கட்சி கொடியையும் நல்ல நேரம் பாத்துதான் ஏத்துவாராம்(நல்ல நேரத்துல தான் ஒன்னுக்கு ரெண்டுக்கு போவாருபோல) நல்ல நேரம் பாத்து கொடியேத்துற இவரெல்லாம் ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு ரொம்ப ’நொந்த நேரம்’ தான்..

    ஈழப்பிரச்சனையில், ஈழ மக்களை அந்த கடவுள் காப்பாற்றுவார் என்று ஆன்மீகவாதி போல பேசிய இந்த ஆந்தை மூஞ்சிக்காரனையெல்லாம் நம்பி ஒரு கூட்டம் இருக்கிறத பாத்தா பாவமா இருக்கு!

    போன தேர்தல்ல தன் கூட்டணி கடவுளோட கூட்டணின்னு சொன்ன இந்த காமெடி பீசின் அரசியல் அறிவை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. விஜயகாந்துக்கு நிகரான தலைவர்கள் இன்னும் அரசியல்லுக்கே வரல.
    பிற்காலத்தில் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்..
    அதாங்க.. நம்ம இளையத்தளபதியும் சூப்பர்ர்ர்ர்ர் ஸ்டாரும். அவங்க வந்தாங்கன்னாதான் கேப்டனின் காமெடியை முறியடிக்க முடியும்.

    சிந்தியுங்கள்!

  21. கலக்கலான பதிவு.

    ஈழத்தில் இந்திய காங்கிரஸ் அரசு இழவு நடத்திக் கொண்டிருந்த போது, விஜய்காந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்பார்த்திருந்தார். அதனால் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஏன் அதனை ஆயுத உதவி என்று சொல்கிறீர்கள், ஆயுத விற்பனை என்று சொல்லுங்கள்” என்று கொடூரமாக ஜால்ரா தட்டியவர் இந்த விஜய்காந்த்.

    இவருடைய விருதகிரியைப் பற்றி, “Discovery” பார்த்தாச்சா என்றுதான் கிண்டல் செய்தார்கள்.

  22. //ஆனால் தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.//

    Vankina kasukku kuviyachi poi velaiya parunga

    CM Family members and relatives are 2000+ members after next election when plan to involve in rice, agri, salt, veg, non-veg etc. please dont vote DMK this time otherswise noone will save tamil nadu

  23. Dear Vinavu, A classic alasal from you and following are the ULKUTHU in Captain’s avatar ;

    1.IN TN he was promoted by Congress to divide the votes and retain power for MOONA KAANA/cong coalition.

    2.In AP Chiranjeevi (AP YODA CAPTANUNGO) was promoted by cong to prevent Chandrababu into coming to power.He is now hobnobbing with Cong and is almost like our Vaiko…

    3.In Maharshtra Raj Thackrey was promoted again by cong to prevent BJP&ShivSENA to split the votes.

    So ALL THE THREE ARE STILL PROMOTED BY CONG ONLY TO KEEP THEIR powers intact.

    BUT why should we tolerate KARUNANIDHI ? I think J will somehow be better than these people….is my humble opinion…

    BUT TAMILNADU AND WE TAMILIANS ARE PAYING A VERY HEAVY PRICE FOR PROMOTING THE DRAVIDIAN CULTURE

  24. ஆனா கருணாநிதியை சகித்துக்கொள்வோம் என்று சொல்லாதீங்க. நாங்க அதுக்கு இதையே சகித்துக்கொள்வோம்

  25. தமிழகத்தில் கடந்த இடைத் தேர்தலில் வைக்கப்பட்ட ‘டிஜிடல் பேனர்களைப்’ பற்றிய வரிகளிவை. வினவின் அரசியல் கட்டுரைகளுக்கு பொருந்திவந்ததால் இருமுறை பின்னூட்டமிட்டிருக்கிறேன். இம்முறையும்!

    ***

    நதிக்கரை நாகரிகம் – ஆனாலும் திராவிடம் :
    _______________________________________

    வெள்ளையன் ஓடம் விட்ட நதி
    பச்சையப்பன் நீராடிய நதி
    கட்டாந்தரையை கண்டிராத நதி
    வற்றாத ஜீவ நதி.

    துணி வெளுக்கும் படித்துரைகள்;
    படகுத்துரை மண்டபங்கள்;
    பஞ்சகாலம் வந்தபோதும்
    சஞ்சலமின்றி ஓடும் நதி!

    ***

    ஆற்றின் அமைதியும்,
    இருளும் நிலவும்,
    சூரியனும் சூனியமும்
    அழகுச் சித்திரம்தான் – ஆனாலும்
    கண்களை மூடிக்கொண்டுதான்
    காணவேண்டும்!
    ____

    எங்களின் பிறப்பிடம், வசிப்பிடம்
    வாய்ததெல்லாம் இங்கேதான்.
    அதனால் – இது ஆறறங்கரை நாகரிகம்:
    ஆனாலும் திராவிடப் பாரம்பரியம்!
    தெளிவாய்த்தான் கூறுகிறோம்;
    உங்களின் குழப்பதிற்கு
    நாங்கள் எப்படி பொறுப்பாவோம்?

    ***

    அமேசான் வாசிகள் போல்
    ஆற்றங்கரைக் குடில்கள்.
    எட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.
    கரையை சரித்துவிட்டால்
    குந்திக்கொள்ளத் தரை!
    நேரான கோடுபோட்ட தெரு –
    ஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.
    பதினாறடிச் சறுக்கலில்
    மலைக் கிராமம்போல.
    ஆனால் ஊரில்லை, பேரில்லை,
    முகவரியுமில்லை!
    தெருவுக்கும் பெயரிடவில்லை,
    தெருவிளக்குமில்லை – அதனால்
    மின்சாரமுமில்லை!!!

    ***

    ஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்
    கூரைகள்?
    வியந்துபோவீர்கள்:
    அத்தனையும் சித்திரங்கள்;
    கண்ணைப் பறிக்கும் வண்ணமயம்.
    வர்ண ஜாலம் வீசும்;
    வர்ண வாசமும் வீசும்!

    ***

    அதோ…
    அந்தப் படகுதுறைக்குப் பக்கதில்
    எமது குடில்.
    வியப்பாயிருந்தால் வந்து பாருங்கள்
    கண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…!

    ***

    இதோ…
    செல்வியின் சிரிப்பு,
    கண்களில் தெறிக்கும் குறும்பு.
    கன்னத்துக்குக் கன்னம் எட்டடி.
    நெற்றிக்கும் கழுத்துக்கும் எட்டடி.
    கனச்சிதமாய் கூரையில்
    கவிழ்ந்து கிடக்கிறார்.

    “அறுபைத்தைந்தின் அகவையை எட்டும்
    தங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.
    …ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”
    எனும் எச்சம் தென்னங்கீற்றில்
    சுருண்டு கிடக்கிறது!
    அந்தக் குறும்புச் சிரிப்பு
    உடம்பின் வருணணைக்கா
    என்பது புரிந்தபாடில்லை.
    மயிலை மாங்கொல்லையில்
    கருவாடாயக் காய்ந்து கிடந்ததை
    முந்தின மாதம் மீன்பாடி வண்டியில்
    எங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்!

    ***

    இந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…
    மதுரைக்கார அழகிரி!
    ஊருக்குப் புதுமுகம்.
    அண்ணா சாலையில்
    ஆளுயரத் தட்டியில்
    அனாதையைய் நின்றிருந்தார்.
    இதோ… இப்போது இங்கே!
    முட்டிவரை வெட்டிவிட்டதால்
    நாலடி உயர வாசலில்
    கச்சிதமாய் நிற்கிறார்.
    போகும்போதும் வரும்போதும்
    கைகூப்பி வணக்கம் போடுவார்!

    ***

    அந்த முனுசாமி வீட்டிலேதான்
    வைகோ இருக்கிறார்.
    ஐயகோ, கலங்கிய கண்கள்.
    வைகோ கைகாட்டிய இடத்தில்
    நட்சத்திர வடிவில்
    முத்துக்குமார் படம்.
    அதற்குக் கீழே
    ஈழப் படுகொலைப் படங்கள்.
    “ரத்த ஆறு ஓடும்” என்று
    ‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…
    சித்தம் கலங்குகின்றார்;
    சிந்தையும் கலங்கினாரே…!

    ***

    கஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே
    விஜயகாந்த் இளிக்கிறார்.
    கருப்பு எம்ஜியாராம் – ஆனால்
    கண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.
    கருப்பு எம்ஜியாருக்குப் பக்கதில்
    பொறுப்பான பொண்டாட்டி.
    அவருக்குப் பக்கதில்
    ஆசை மச்சான்.
    அதற்கும் பக்கத்தில்?
    ரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு!

    கேப்டனின் ஆக்ரோஷம்
    துல்லியமாகத் தெரிகிறது…
    இந்த முறைக்கு பழுக்கப்போவது
    எந்தத் தொண்டனின் கன்னமோ…?

    ***

    முந்தானாள் வரையிலே
    மங்காத்தா கூரையிலே
    மருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.
    கூடவே அன்பு ‘மனி’ மகனும்.
    அருமைத் தங்கையும்கூட இருந்தார்கள்.
    ஆனால்… ஏனோ தெரியவில்லை –
    ‘வீட்டுக்கு விளங்கலை’யென்று
    மங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.
    இப்ப்போது அவள் கூரையில் ரித்தீஷ்!
    ராமனாதபுரத்துச் சொந்தம்
    ராசி பார்த்து
    ரயிலேறி கொண்டுவந்தது!

    ***
    ஆனால் ஐயா,
    சிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –
    இந்த நடிப்புக்கு!
    ஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.
    அதிலே மகிழ்ச்சியும் இருக்கும்,
    சோகமும் ததும்பும்.
    சூழ்ச்சியென்பது இருக்காதைய்யா.
    இந்தச்சிக்கலான முகம்
    இங்கிருந்து மூன்றாவது குடிசை!
    யாரெனக் கேட்பீரேல்…
    அவர்தான் அண்ணன் திருமா.

    எப்படி ஐயா, எப்படி முடியும்?
    ஆண்டாண்டு காலத்துக்கும்
    இந்த ஆண்டையின் நடிப்பை
    மறக்க முடியுமா?
    மறுக்கத்தான் முடியுமா?

    ***

    முக்கால்வாசிக் கூரைகளிளும்
    ஓய்வெடுக்கும் முதியவர், கலைஞ்சர்.
    இவர் –
    ஏழயின் சிரிப்பில்
    இரைவனைக் கண்டுவிட்டால் –
    திண்ணை காலியாகக் காத்திருக்கும்
    சென்னைத் தளபதி
    பதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்!

    ***

    கூட்டிக் கழித்தால்
    தமிழகத்து எதிர்காலங்கள்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன –
    எங்கள் கூரைகளில்!
    எப்படியென்று கேட்கிறீர்களா?
    கர்ம வீரர்களாகவும், கலைஞ்சர்களாகவும்,
    புரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,
    தளபதி / இளைய தளபதிகளாகவும்,
    கேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,
    சிறுத்தைகளாகவும், பன்றிகளாகவும்,
    கருப்பு நிலாக்களாகவும்,
    சூரியன் களாகவும், நட்ச்சத்திரங்களாகவும்,
    அமாவாசைகளாகவும்,
    விடிவெள்ளிகளாகவும், வெட்டுக் கத்திகளாகவும்,
    வெங்காயங்களாகவும்,
    மொத்ததில்…,

    மொத்ததில்…
    ஆரியர்களாகவும், திராவிடர்காளாகவும்!

    ***

    அடடா…
    அது அவர்கள் நாகரீகம்!
    அவர்களுக்கு அவர்களாகவே
    போர்த்திக் கொண்ட
    நாமகரணத் துண்டுகள்!
    புரியாமல் தவிக்கும் பிண்டமே…
    இதுதாண்டா அரசியல் நாகரீகம்…!
    ஆனாலும் எங்களுக்கு
    ஆற்றங்கரை நாகரீகம்.
    ஆனாலும் நாங்கள் ஆரியர்களல்ல…
    திக்கற்றுப் போன திராவிடர்கள்தான்!

    ***
    இன்னொரு நாகரீகம்…
    சினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு?
    பம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்
    கரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.
    இந்திய சேரி நாய்களைப் பற்றிய
    இங்கிலீசுப் படம் –
    அள்ளிக் கொண்டுவந்தது ஆஸ்கார்களை…!
    மேட்டுக்குடி மகிழ்ந்தது.
    நடுத்தரம் சிலிர்த்தது.
    வறுமைக் கோட்டில் இருந்தவர்களும்
    கொண்ண்ண்டாடி விட்டார்கள்.
    கொண்டுவந்துவிட்டான் ஒரு இந்தியன்.
    அதுவும் ஒரு தமிழன் – டமிளிலேயே பேசினவன்.
    கவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –
    இந்தியக் கவுரவத்தை
    சந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு!

    ***

    ஆரிய மாயையும்
    திராவிட சூழ்ச்சியும்
    உங்கள் நீரோட்டத்தின்
    ஊற்றகிப் போனது.
    அதன் ஜனனாயக ஒழுக்குத்தான்
    இந்தக் கருப்புச் சாக்கடை.
    இந்தச் சாக்கடையின் விளிம்பில்
    சிக்கிக்கொண்டுவிட்ட நாங்கள் –
    இதோ…
    இந்தக் கரைச்சறுக்கலை
    இறுகப் பிடிது மேலேறிவிட்டாலோ…

    எங்களின் நெரிசல்
    உங்களை நசுக்கிவிடும்.
    எங்களின் வியர்வை நாற்றத்தில்
    உங்களின் மூச்சுத் திணறும்.
    எங்களின் வயிற்றில்
    சோற்றுக்காய் சுரந்த அமிலம்
    உங்களை சுட்டெரித்துவிடும்.
    இந்தக் கருப்புச் சாக்கடையில்
    ரத்த வீச்சம் வீசும்!

    – புதிய பாமரன்.