Friday, December 2, 2022
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !

காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !

-

no-india-no-pakistan-we-want-free-kashmir

இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் பல பத்து காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.

ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்குமுறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி.

ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான். இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது. இருக்கட்டும்.

உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.

சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்”  கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1.       கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2.       நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடண்டியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3.       ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4.       26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி  இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5.       இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6.       கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7.       நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8.       இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9.       இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட  நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10.   பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும்.

இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !

___________________________________________________________________________

இந்த பதிவு வினவை நாடு கடத்த விரும்பி பின்னூட்டமிடும், இந்தூஸ்தான் டைம்சில் யாசின் மாலிக்கை தூக்கில் போடச் சொல்லி சாமியாடும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. காஷ்மீர் : தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !…

  இந்த பதிவு வினவை நாடு கடத்த விரும்பி பின்னூட்டமிடும், இந்தூஸ்தான் டைம்சில் யாசின் மாலிக்கை தூக்கில் போடச் சொல்லி சாமியாடும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்…

 2. பத்துக் கூற்றையும் ஆமோதிக்கிறேன். குறிப்பாக 1,2,4,8,9 ஆகியவற்றை உடனடியாக செய்ய வேண்டுகிறேன்…………… எதிர்ப்பவனுக்கு எனது பிய்ந்த செருப்ப தயாராக இருக்கிறது…………………………. .!!!!!!!!!!!

    • இக்பால் செல்வன்,

     இந்துஸ்தான் டைம்சில் உள்ள பின்னூட்டங்களைப் படித்துவிட்டு அதற்கு சரியான எதிர்வினை ஆற்ற வேண்டுமென்றுதான் இந்த கேள்விகளை தயார் செய்தோம். எனினும் நாம் விரும்பும் இந்த உண்மையான சமத்துவத்தை கருத்து, களம் இரண்டிலும் கடுமையாக போராடித்தான் கொண்டு வரமுடியும். இதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல் கருத்து ரீதியான சண்டையாக மாற்றுவதுதான் சரியாக இருக்குமென்று கருதுகிறோம்.

     ராமி அவர்கள் கூட வினவில் தொடர்ந்து விவாதிக்க வரும் நண்பர்தான். பல விசயங்களில் அவருக்கு கருத்து உடன்பாடு இல்லையென்றாலும் அந்த உடன்பாட்டை பெரும் கருத்துப் போராட்டத்திற்கு பின்னர் எட்டமுடியும் என்ற நம்பிக்கையில்தான் அவருடன் உரையாடுகிறோம்.

     ஆகவே அவரை கருத்து ரீதியாக கேள்வி கேட்பது,பதிலளிக்க்க கூறுவது முதலான போர்முறைகளே நமக்கு பொருத்தமான ஆயுதங்கள், புரிந்து கொள்வீர்கள் என்று கருதுகிறோம். நன்றி. தொடர்ச்சியா வினவில் வந்து விவாதிக்கும் உங்களைப் போன்ற நண்பர்களே வினவின் பலம்.

   • ராமி ஐயா,

    இங்கு செருப்பு என்பது ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்தை குறிக்கும் ஒரு குறியீடுதான். அதைப்பார்த்து ஒரு சாதிவெறியனுக்குத்தான் கோபம் வரவேண்டும். உங்களுக்கு வருவது அழகல்ல்ல. மேலும் நீங்கள் அதை மறுக்கிறீர்கள் என்றால் அதை கருத்து ரீதியான விவாதமாக எடுத்து வைப்பதுதான் சரி. உங்களது முந்தைய பின்னூட்டத்திற்கு கூட வினவின் சார்பில் கருத்துக்களைத்தான் தெரிவித்துள்ளோம்.

    மேலும் இதுவரை நீங்கள் இத்தனை கோபத்துடன் வார்த்தைகளை வீசியது கிடையாது என்பதையும் நினைவு படுத்துகிறோம். இந்த கட்டுரையில் உங்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதை செருப்பில் காட்டாமல் கருத்துக்களில் காட்டினால் பயனளிக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

    • வினவு அய்யா அவர்களே!

     வலையுலகம் ஒரு அற்புதமான உலகம்!
     இங்கு உலவும் பெரும்பாலானோர் கண்ணியமிக்கவர்களே!
     இது ஒரு போர்க்களமல்ல!
     அக்னி வார்த்தைகள் இங்கு தேவையில்லை!
     உணர்ச்சியைத் தூண்டும் வகையில், எழுதுவதும் அழகல்ல!

     முகமறியா நண்பர்களுடன், காற்றில் சொல்லை சுழற்றுவது அவமானம்! வருந்துகிறேன்!

    • அன்புத் தோமையின் கருத்துகளுக்கு வணக்கம், யாம் எமது கருத்துகளை தனி மனித தாக்குதலாய் ஆட்கொள்ள விரும்பவில்லை தான். திரு . ரம்மி அய்யா சற்றே சூடடைக் கிளப்பிவிட்டார்.

     எனது கருத்தில் நான் செருப்பு எனக் குறிப்பிட்டது, சாதி வெறியர்களின் மூடத்தனததை எதிர்க்வே ! ராமி அய்யா இனை எவ்வாறு விளங்கிக் கொண்டார் எனத் தெரியவிலலை… வினவின் பத்துக் கூற்றுகளில் பத்தாவது கூற்று எனக்கு உடன்பாடிலலை தான் , இருப்பினும் … எனது கோபம் ஒரு தனிமனிதனையோ அல்லது தனி சாதியையோ குறிப்பிடவில்லை.. எனது கோபத்தின் வெளிப்பாட அமைந்து செருப்பு என்னும் பதம். இந்நாடடை சாதி வெறி திமிர் பிடித்து ஆட்டும் அனைத்து கொழுத்துவர்களுக்கு செருப்பு என்று சொன்னால் தான் உரைக்கும் என்பதால் தான்.

     செருப்பின் மகத்துவம் பலருக்கு தெரியாது. தெருவில் போகும் கன்னிப் பெண்ணின்கையைப் பிடித்துப் பாருங்கள் ! ஒன்று செருப்பு பிய்யும் இலலையாயின் செருப்பு பிய்யும் என்னும் வார்ததை விழும். நான் கூறியதும் அத்தகு தொனியில் தான்….

     விளங்கினால் சரி ! சாதி வெறிப் பிடித்தவனுக்கு இன்னும் எனது செருப்பு பிய்யத் தயாராக இருக்கு………….

 3. எவனோ எங்கோ உளறிக் கொட்டினால்,
  அறிவுஜீவிகளான உமக்கு இங்கு ஏன் புத்தி கெட்டது!?

  எழுத்துகளில் மலவாசனை!

  நீங்கள் குறிப்பிட்ட 10ம், உங்கள் மனதில் இருக்கும் அழுக்குகள்! நாதாரித்தனமான அரிப்புகள்!

  • ராமி ஐயா,

   தலித்துக்களுக்கு சமத்துவம் வேண்டும் என்று கேட்பது உங்களுக்கு மலவாசனையா?

   ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று கேட்பது எங்கள் மனதில் இருக்கும் அழுக்குகளா?

   தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்படும் ஒரு இறைநம்பிக்கை சூத்திரனுக்கு பூஜை செய்யும் உரிமை நாதாரித்தனமான அரிப்புகளா?

   அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுட்டுவதற்கு பயன்படும் வசைச்சொல்தான் “நாதாரி” எனில் நாங்கள் நாதாரிகளாக இருந்துவிட்டு போகிறோம்.

   • வினவு அய்யா அவர்களே!

    பார்ப்பனனின் பெண்ணையும், வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணையும் தூக்குவது, எந்தவிதமான உயர்ந்த எண்ணம்? இதைப் போல எழுதவா உங்கள் கம்யூனிச பாசறைகளில் கற்றுக் கொடுத்தார்கள்?

    நான் குறிப்பிட்ட, சொல்லுக்கு வருந்துகிறேன்!
    உம்முடைய இந்த பதிவு எந்தவிதமான நல்லதையும் செய்யப் போவதில்லை!இந்தப் பதிவு தேவைதானா?

    • ராமி ஐயா,

     அரேன்ஜ்டு மேரேஜில் முதலில் முறையாக பெண் கேட்டு செல்வார்களே அதைத்தான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம். நீங்கள் அதை பெண்களை தூக்குவது என்று திரிக்கிறீர்கள்.

     அருந்த்தி இன்த்து மக்கள் பெண் கேட்டு வெள்ளாளக் கவுண்டர் வீட்டிற்கு செல்வதையே உங்களால் சகித்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு உங்களது இதயம்புண்பட்டிருக்கிறது. எனில் பலநூறு ஆண்டுகளாக சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட அந்த மக்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? சமத்துவம் வேண்டுமென்று கேட்பதையே உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்களைப் பற்றித்தான் முதலில் பரிசீலனை செய்ய வேண்டும். செய்வீர்களா?

   • வினவு அய்யா அவர்களே!

    வம்புக்கு, பெண் கேட்டுச் செல்வது ‘அரேங்சுடு மேரேஜ்” ஆகாது!

    தடுத்தால் நாக்கை அறுப்பேன் என்று சொல்லுவது , எந்த சமத்துவம் பேண?
    சில பெண்களை மணந்தாலே, சமத்துவம் காணுவோம், என்பது அறிவல்ல!
    வன்முறையால் சமத்துவம் காணமுடியுமோ?

    • பெண்க் கேட்டுப் போவது தூக்குவதோ ! பெண்க் கேட்டுப் போகிறீர்கள், ஆனால் அப்பெண்ணின் தந்தை உங்களின் ஒழுக்கம், திறமை, வசதிகளை விடுத்து, நீ பார்ப்பான் உனக்கு பெண் தர மாட்டேன் என்று, சாதியை மட்டும் ஒரு காரணமாய் எவன் சொன்னாலும் அவன் நாக்கை வெட்டுவதில் தவறில்லை. அதே பார்ப்பன – வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நானும்….. அதற்காக பார்ப்பன -வேளாள போன்று ஆதிக்கச் சாதிகள் செய்யும் மடத்தனத்தைப் பார்த்து சும்மா இருக்க முடியாது…

    • ராமி அவர்களுடன் நானும் உடன்படுகிறேன். சாதியை வைத்து காதலித்தவர்களுக்கு குறுக்கே நிற்பவர்களைச் சாடியிருந்தால் ஒப்புக்கொள்ளலாம். அந்த வீட்டுப் பெண்களே வரமாட்டோம் என்று சொன்னால் வன்புணர்வும் செய்யச் சொல்லுவீகளோ?

 4. அந்த ஒன்பதாவதா சொல்லியிருக்கீங்களே,நச்சுன்னு இருந்திச்சு!///அதற்கு மேல் ராஜபட்ஷேயின் சிங்களக் கடற்படை பார்த்துக் கொ(ல்)ள்(லு)ளும்!!!!!!!!!!!!

 5. சுத்த பேத்தல் கட்டுரை… ஒருவரை மணம் புரிவதோ பெண் கேட்பதோ அதை மறுப்பதோ கூட எனது உரிமை.. நான் ஏதோ இடத்தில் வசிப்பதோ அதில் நீர் போய் அமர்ந்து கொள்வேன் என்பதோ எதையோ நினைத்து எதையோ இடித்த கதை… இந்த மாதிரி கட்சியை வளர்த்தால் போதும்….விளங்கிடும்…… உம்மை இப்படிக் கிறுக்குப் பிடித்த மாதிரி வளர்வதைத்தான் ஆளும் வர்க்கம் எதிர்ப் பார்க்கிறது.. அதை செவ்வனே செய்கிறீர்கள்.. வாழ்க….

  • //சுத்த பேத்தல் கட்டுரை… ஒருவரை மணம் புரிவதோ பெண் கேட்பதோ அதை மறுப்பதோ கூட எனது உரிமை..//

   ஏம்பா இதே உரிமை தேசியக் கொடிய எங்க வூடு, எங்க ஊருல ஏத்தக் கூடாதுன்னு சொல்றதுக்கு உண்டில்லையா? அத மட்டும் தேசத் துரோகம்னு சொன்னாக்க, ஒடுக்கப்பட்ட சாதியச் சேந்தவனுக்கு பெண் கொடுக்க மறுப்பதையும் தேசத் தூரோகம்னு சொல்வதை நீங்க ஏத்துக்கனும்.

   இல்லைனா லாஜிக் மீறலாயிரும் சாக்கிரத…

 6. I have seen lot of hard core Hindutva ideologues in the comment section may English papers / magazines. Though this article is bit above the danger mark , i sincerely welcome this based on the fact that others are hugely deviating the danger line.

  >>வம்புக்கு, பெண் கேட்டுச் செல்வது ‘அரேங்சுடு மேரேஜ்” ஆகாது!

  Rammy i agree that is not perfect . But what about huge no of love affairs (i have personally seen many) being stopped just due to caste difference . To put his point of view on a strong note ,author has used this language style . Leave the style and consider the fact under it . Do we not see the matrimony section in newspapers indexed by caste . Accept the fact .

  Vinavu Well done . My heart beats with you .

  PS: Apologize for english comments due to lack of time

  • MR.Premkumar SJ !

   வெறியேற்றும் எழுத்துக்களும், பிரச்சாரங்களுமே, அரசியல்/மத தீவிரவாத இயக்கங்களின், பிரதானம், பாலபாடம், மூளைச்சலவையின் அடிப்படை என்பது தங்களின் பதிலால் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது!

 7. முகம் இல்லாத முண்டமோ நீங்கள்?//

  இறுதியாக ஒரு வார்த்தை முகம் இல்லா முண்டம் என்றால் எனது முகம் நன்கு இங்கு தெரிகிறது. கண் இருப்பவர்கள் அதனைப் பார்த்திருப்பார்கள்.

  உங்களுக்கு தைரியம் இருந்தால் முகத்தை காட்டுங்கள்……. உங்களின் முகப்படம் தான் எதோ முண்டம் போல தெரிகிறது. ஹிஹி. நகைச்சவைக்காக

  • இளவல் இ.செ!

   இத்தளத்தின் பதி வினவிற்கும், தப்பாமல் தாளம் போடும், தோழர்களுக்கும் இங்கு முகமது தென்பட அனுமதியில்லையே?

   தப்புத் தாளம் போடும் என் போன்றோரின், முகம் தெரிய வசதியில்லையே!

   தஙளுடையது ஆசீர்வதிக்கப்பட்ட முகமே!

 8. எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது உங்களுக்கு பிடிக்கவில்லையா பாகிஸ்தானுக்கு போங்கள் சூடானுக்கு போங்கள் அங்கு பிச்சை எடுங்கள் மற்ற மதத்தை பற்றி பேசுங்கள் பார்க்கலாம் உண்டியல் ஏந்தும் கமுநிச்டுகள் கோடி பிடுத்து நாட்டை குட்டிசுவர் ஆக்குவர்
  உண்மையான கமுநிசம் எதுவென்றால் இதுதான்
  பொது மக்கள் 33 .33 %
  ஊழியர்கள் 33 .33%
  அரசாங்கம் 33 .33 %
  இப்படி இருந்தால் தான் நாடு உருப்படும்
  எல்லோருக்கும் பொதுவான சட்டம் வேண்டும்

 9. கம்யுனிசம் தெறிக்கிறது கட்டுரையில். மிகவும் உயிரிய சிந்தனைகள். அடுத்து வரும் தலைமுறைக்கு மிகுந்த ஒழுக்கத்தை போதிக்க இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வழங்கவும். சமூகத்தில் நல்லுறவு மலர இடைவிடாது பாடுபட உங்களின் கம்யுனிச உணர்வுகளைப் பார்த்து புல்லரிக்கிறது

 10. Haa Haa my comment wait for moderation. But the content does not passed through any moderation or the ten points are moderated?? What a communist and the communism.

 11. How to name it? Your above article is superb. instead of writing lengthy essays .. this is like thiru kural. short crisp and clear. no need further explanation. perfect ok.
  ______
  Regards
  RV

 12. Kashmir is an integral part of India. What is wrong in hoisting national flag there. If BJP can do that it is their choice.Why does that upset you.
  Just as you can hoist your organization’s flag anywhere in India they also can hoist national flag at Srinagar. There is nothing illegal in that.

  • Ask the majority in Occupied Kashmir.
   They have a different view. Kashmir is only as much part of India as parts of India and Africa were of the British Empire or Indochina was of France.

   The Kashmiri sees the Indian flag as that of an occupying force.
   Hoisting it in a provocative fashion will produce a strong reaction in a context of Indian armed oppression.
   That may exactly be what the BJP desires.

  • \\Kashmir is an integral part of India. What is wrong in hoisting national flag there. If BJP can do that it is their choice//

   கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ஆளும் வர்க்கங்கள் என்னதான் தொண்டை வரள மூச்சு முட்ட கூச்சலிட்டு வந்தாலும் உண்மை என்னவோ வேறாக உள்ளது என்பதையே இந்த பா.ச.க.வின் லால் சவுக் கொடியேற்ற அறிவிப்பு காட்டுகிறது. இந்தியாவின் ”ஒருங்கிணைந்த”பகுதியொன்றில் நாட்டுக்கொடி ஏற்றுவதையே ஒரு போராட்டமாகவும்,சாதனையாகவும் ஆளும் வர்க்க கட்சி ஒன்றே சொல்லிக் கொள்கிறது என்றால் கசுமீர் உண்மையில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல என்று மறைமுகமாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

  • Dear sir,
   Kashmir had never been part of India even before 1947, when British colonised India. It was made part of India with a temporary agreement reached between the then Prime Minister Nehru and Kashmir king Harisingh. The treaty clearly said a plebiscite would be conducted in Kashmir to let the people take an independent decision. Decades have passed. Indian government has not kept its promise. But the security forces unleash violence against their protests for the right to self-determination. If one narrates the sufferings of Kashmir people it would take into the shape of a book. Now tell us who is wrong in Kashmir. I feel sorry for your ignorance and blame your utter insensitivity for your rejoinder here which is devoid of facts.

 13. முற்றிலும் முட்டாள்தனமான பதிவு.இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதினால் சாதி வெறியற்றவன் கூட சாதி வெறி பிடித்து மிருகமாகிவிடுவான்.
  இந்த அருந்ததியர்கள் என்பவர்கள் தெலுங்கு வந்தேறிகள். அவர்களை அழைத்து வந்தது இன்னொரு வந்தேறிகளான நாயுடுகள் தான்.
  அவர்களை ஏன் அவர்களின் உண்மையான எஜமானர்களான நாயுடுக்களிடம் பெண் கேட்க சொல்லலாமே ?
  இப்படி வந்தேறிகளுக்கு சலுகை கொடுத்தே தமிழன் நாசமாகப் போய்விட்டான்.

  வினவு ஒரு தமிழினத்துரோகி என்பதை மீண்டும் நிருபித்துள்ளீர்கள்.

  • அடுத்து அருப்புக்கோட்டை வந்தேரிகளான நாயுடுவிடம் பிற்படுத்தபட்ட தமிழ் விவசாயிகள் நிலத்தை பிடுங்க வேண்டும் என்று சொன்ன வினவு ஒரு தமிழின தியாகி என இந்த எழில் கவுண்டர் வந்து சொல்லிவிடுவாறோ என பீதியில் இருக்கிறேன்.

   • தோழர் கே கே நான் எப்பொழுது கௌண்டர் சாதி என்று சொன்னேன் நான் தமிழ் சாதி மேலும் நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் கௌண்டர் சாதி அல்ல

    • எழில் அது என்கவுண்டர் மாதிரி எழில்கவுண்டர் — சின்ன கௌண்டர்னு நெனச்சிட்டீங்களாக்கும்…. ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு

  • அய்யா எழில் தமிழகத்தில் நகர சுத்தி வேலைகளை அருந்ததி இனமக்கள்தான் செய்கிறார்கள். அவர்கள் வந்தேறிகள், ஆய் போய்விட்டு ஆட்டம்போடும் உங்களவர்கள் ஆண்டைகளா?

   சரி, இருக்கட்டும்.அருந்ததி இன மக்களை ஆந்திராவிற்கு அனுப்பிவிடுவோம். இனி அவர்கள் செய்த வேலைகளை நீங்களும் உங்கள் உறவினர்களும், சாதிக்காரர்களும் செய்ய வேண்டும். நாங்களும் அருந்ததி இன மக்களை அந்த வேலையிலிருந்து விடுதலை செய்வதற்கு ரொம்ப நாளாக போராடி வருகிறோம். உங்களைப் போன்ற சுரணையுள்ள தமிழர்கள் அதை செய்வார்கள் என்றால் மகிழ்ச்சியே

   நாளை முதல் எழில் என்பவர் சென்னை பாதாளச் சாக்கடை அடைசலை நீக்கும் வேலை செய்து உண்மையான தமிழனாக வாழப்போகிறார் என்பதற்கு வாழ்த்துக்கள்!

   • அருந்ததிகளை ஆந்திராவுக்கு அனுப்பும் போது கூடவே நாயுடு, பலிஜா, நாயக்கர், அனைவரையும் ஆந்திராவுக்கு அனுப்பிவிடுவோம் சரியா? பிராமணரை காசிக்கும், நாயர்களை மலபாருக்கும், என அனைவரையும் அனுப்பிவிட்டால் இங்கு மிஞ்சுவது ராமதாஸ்களும், திருமாவளவன்கள் மட்டுமே !!! அப்படியே வடக்குக்கு போய் சோனியாவையும் அவர் குடும்பத்தையும் இரானுக்கோ அல்லது இத்தாலிக்கு அனுப்புவோம். அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்……..

   • வினவு,
    //ஆய் போய்விட்டு ஆட்டம்போடும் உங்களவர்கள் ஆண்டைகளா? //

    இங்கே மண்ணின் மைந்தர்கள் அல்லது தமிழர்கள் என்று தானே வர வேண்டும் ஆண்டை எங்கிருந்து வந்தது ?

    ஒரு வேலை .டி.ஆர் பாணியில் ஆய்,ஆண்டை என்று எதுகை மோனையில் விளையாடுகிறீர்களா ?
    அருந்ததியர்கள் இல்லையென்றால் என்ன ஆகும் ? வெற்றிடத்தை காற்று நிரப்பும்.
    எனது தெருவில் குப்பை அள்ளுபவர்களின் நிலையை எண்ணி கடும் வேதனையை அடைந்திருக்கிறேன்.அவர்கள் குப்பைகளின் மீதே அமர்ந்து செல்கிறார்கள் எந்த அருவருப்பும் இன்றி.
    இதெற்கெல்லாம் தொழில்நுட்பம் வந்துவிட்டது அதை பயன்படுத்தாமல் இருப்பது அரசியல்காரர்களின் குற்றம்.
    எனது வீட்டில் கழிவறையை நான் தான் தூய்மை செய்கிறேன் ஏனெனில் இங்கே அந்த வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். வீட்டு வேலைக்கு வருபவர்கள் கழிவறை பேசினை தூய்மை செய்ய மாட்டார்கள். அப்படி செய்ய சொல்வது கூட முறையற்றது.மேலும் சாக்கடை அடைப்பதற்கு என்ன காரணம் ? திறந்த சாக்கடைகளும் அதில் மக்கள் தான் குப்பையை இஷ்டத்துக்கு வீதியில் விட்டெறிந்தால் அது சாக்கடையில் தான் விழுகிறது.
    இதை தவிர்க்க திறந்த சாக்கடைகளை மூடிய சாக்கடைகளாக மாற்றுவது தான் தீர்வு.பெங்களூர் இல் அப்படி தான் இருக்கிறது.இங்கு அடைபடும் சாக்கடைகளும் திறந்திருக்கும் அடைப்பு மூடிகளையும் பார்ப்பது அரிது.நீங்கள் தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுபவர்களாயிற்றே.
    சரி இதை தடுக்க நீங்கள் என்ன ஆக்கபூர்வமாக செய்துள்ளீர்கள் ?
    மூடப்பட்ட வசந்தா மில் சுவர்களில் “மலம் அள்ளுவதையும் வெட்டியான் வேலையையும் அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணி ஆக்கு ” என்று எழுதியதை தவிர்த்து.
    அவர்களின் குழந்தைகளை படிக்க வைத்தீர்களா ? அல்லது தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவாது போராடிநிர்களா ?
    சொல்லுங்கள் வினவு சொல்லுங்கள் வினவு

  • திராவிடர்கள் சிந்து சமவெளியில் இருந்தும், மீதியவர்கள் லெமூரியாவிலும் இருந்தும் இங்கு வந்து குடியேறியதாக கேள்வி! சரிதானா எழில் சார்?

   • அய்யா ரம்மி லெமுரியா கண்டம் என்பது மூழ்கி விட்டது ஆனாலும் அங்கு மட்டுமே தமிழன் வாழ்ந்ததில்லை தமிழன் இங்கும் வாழ்ந்தான் அங்கும் வாழ்ந்தான். மேலும் இன்று இந்தியா என சொல்லப்படும் எல்லா இடங்களிலும் தமிழன் வாழ்ந்துள்ளான் (சிந்து சமவெளி உட்பட) . திராவிடம் என்பதுவும் ஒரு மாயையே. சமத்கிருதத்தின் காலை நக்கிப் பிழைக்க வேண்டிய தேவை இருக்கும் மற்ற மொழிகளை எல்லாம் நாங்கள் ஏன் கூட்டு சேர்க்க வேண்டும்?. உங்களைப் போன்ற ஆரிய வந்தேறிகள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.இது ரத்த பூமி தேவை இல்லாமல் பின்னூட்டம் இட்டால் பதிலாக ரத்தம் வரும் வரை பின்னூட்டம் அடிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்க!

    • எழில் அய்யா!
     தங்களின் கருத்தைக் கேட்ட எனக்கு ஆரிய வந்தேறி எனும் பட்டத்திற்கு நன்றி!

     தங்களின் விளக்கம் அருமை! மேற்கொண்டு ஒரேக் கேள்விக்கு விளக்கம் தேவை! உலகின் பிற பகுதிகளில், “போய் குடியேறி” இருக்கும், தமிழர்களைப் பற்றி! அவர்களுக்கு உள்ள உரிமை, அருந்ததியர் போன்ற வந்தேறிகளுக்கு இல்லையா?

     கருத்தில் மோதுங்கள்! ரத்தத்தில் மோதினால், சேதாரம் இரண்டு பக்கமும் என்பதை நினைவில் கொள்க! ரத்தம் பார்க்காத பூமி எதுவும் இல்லை!

    • அய்யா ரம்மி. உரிமை இருக்கலாம், இருக்கிறது. ஆனால் தேவையற்ற சலுகை தருவதை,கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் கருநாடகத்தில் தான் இருக்கிறேன் இங்கே இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே நான் பயன்படுத்திக் கொள்ளமுடியும்,வேண்டும் அதை விடுத்து தமிழ் நாட்டில் இருப்பது போல எனக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கோர முடியுமா? அது முறையாகுமா? மேலும் நான் கன்னடம் பேசினால் கன்னடியன் ஆகி விட முடியுமா ? இதில் உச்ச காமெடி என்னவென்றால் இந்த வந்தேறிகள் தங்களை “ஆதி” தமிழர்கள் என்று குறிப்பிடுவது தான். அது “போய் குடியேறி” அல்ல “சென்றேறி” (வந்தேறி X சென்றேறி) என்று தான் வர வேண்டும். நிற்க,ரத்த பூமி என்பது வடிவேலு குறிப்பிட்டது போல நகைச்சுவையாக சொல்லப்பட்டது.
     தமிழன் நிலம் இல்லாமல் இருக்கிறான் ஆனால் வந்தேறிகள் தமிழ் நாட்டின் நிரந்தர பச்சை பகுதிகளான பவானி ஆற்றங்கரை, தேனீ கம்பம் போன்ற இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.

 14. 7வது சரியான ஒன்று. இன்று வரை காஞ்சி சங்கரமடம் ஒரு சாராரின் கூடாரமாகவே உள்ளது. அதுவும் கர்நாடகவை சார்ந்தவர்களின். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து கோரிக்கையையும் பார்க்கும் பொழுது இது வெறும் வாய்சவடலாகவே பார்க்க தோன்றுகிறது.

  இந்திய தேசியத்தின் மதசார்பின்மை தேசஒற்றுமையை பற்றி கேள்வி கேட்க வேண்டியது நமது கடமை தான் ஆனால் தங்கள் கேள்விகள் அந்த இந்திய தேசியத்தை நோக்கி இருக்க வேண்டுமே ஒழிய இந்தியமக்களின் உணர்வுகளுடன் இல்லை.

  பெண் கேட்டு போகும் நீங்கள் சொல்லும் பெற்றோர்கள் நடத்தும் திருமணத்தில் பெண்வீட்டார் வரசொன்ன பிறகு தான் போவார்கள். சரி அதையும் தாண்டி போகும் பொழுது அவர்கள் வரவேற்று அமரவைத்தபிறகு பெண் மாப்பிள்ளையை பிடிக்க வில்லை என்றால் என்ன செய்வதாக உத்தேசம்…

  • இதென்ன சோழர் காலத்து கல்வெட்டா, அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்ள? 🙂

   சொந்த சாதிக்குள்ளே வரன் தேடுகிறவர்கள் 95 % இருக்கிற நாட்டில் தேசபக்தி ஒரு கேடா, என்ற கருத்தின் வெளிப்பாடு அது …

   1 -10 அனைத்தையும் வழிமொழிகிறேன்.

 15. வினவின் பத்து கருத்துகளை ஏற்றுகொள்வதோடு மேலும் சில கருத்துகளையும் வழிமொழிகின்றேன்.
  இனி இஸ்லாமியப் பெண்களும் அனைத்து பள்ளிவாசலுக்கும் சென்று தொழுகை நடத்தலாம். இதை தடுப்பவன் முகத்தில் ஓங்கி குத்துவோம்

  இஸ்லாமிய பெண்களும் பல மணம் புரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் வாழலாம். இதை மறுப்பவன் முதுகில் சாட்டையால் சாத்துவோம்

  • ஆக மொத்தம் காஷ்மீரில் கொடி ஏற்றும் தேசபக்தி ஒருவழியா ஒழிஞ்சுதே, ரொம்ப சந்தோஷம்! இதிலிருந்து ஒன்னு நல்லாப் புரியுது. காஷ்மீர் போராட்டத்தை எதிர்க்கும் புருடா தேசபக்தி நெஞ்சங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டால் பீதியாகி, தேசபக்தியாவது, வெங்காயமாவது என்று ஓடுகிறார்கள், இவ்வளவு நாளும் இது தெரியாமப் போச்சே!

   • Please tell me one thing. How does a marriage come into the kashmir issue? Please explain me. I don’t find a word called dalit in any of the ancient sanathan (hindu) scripts.. By the way… Do you mean the so called SC/ST community? how does a marriage between a Indian guy and Pakistan girl … will solve the problem of south Asia… Nothing wrong in cast system. but, the discrimination among the cast system is completely unacceptable. No sense in your article. Each and every community has its own customs.. It is not possible for others to follow…

    Is it possible for a tamilnadu guy to marry a girl from tunisia? Does it mean that tamilnadu is superior than tunisia. Is it possible for a tamilnadu girl to marry a guy from angola? Please wake up from your deep sleep. Don’t be a narrow minded person. The more inter community marriage happens because of the western way of business and its corporate culture…

    Government gives 69% of reservation to other community. Apart from this, they also get all the educational benefits… Muslims ruled this country for more than 1000 years.. still they are in OBC list… the so called bhramin community who was doing the servant job in temple is in unreserved list. The current way of education system came to India only after British rules… bhramins were just a temple servants. they are infact beggars… as per your way of thinking, vedas are nothing but a foolish crap document. How could this crap document educate the so called lower caste people?

 16. //இனி இஸ்லாமியப் பெண்களும் அனைத்து பள்ளிவாசலுக்கும் சென்று தொழுகை நடத்தலாம். இதை தடுப்பவன் முகத்தில் ஓங்கி குத்துவோம்//

  இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு எந்த தடையும் இல்லை. அரபு நாடுகளில் இந்த காட்சியை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். நம் நாட்டிலும் பெண்களை பள்ளி வாசலுக்கு தற்போது சிறுக சிறுக கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

  • நல்ல விளக்கம். இனி எவனாவது மசூதிக்கு பெண்கள் போவதை இந்தியாவில் விமர்சிக்கட்டும் அவனை அந்த இடத்திலேயே போட்டு மிதிப்போம்.

 17. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி ! https://www.vinavu.com/2011/01/14/indian-rights/ […]

 18. வெறும் வெத்து வேட்டு கட்டுரை இது

  அனாவசியமாக எங்களுக்குள் மத வெறியை / ஜாதி வெறியை தூண்டுகிறீர்கள்.

  உங்கள் கம்யூனிஸமே உலகம் முழுதும் செல்லாக்காசாகி போனபின் (ரஷ்யா உடைந்ததை தடுக்க முடிந்ததா? கிழக்கு ஜெர்மனியை தாரை வார்த்தது பத்தாதா?, சீனாவில் கம்யூனிஸம் என்ற போர்வையில் அராஜகம் பண்ணுவது தெரியாதா) உங்களை போல் சிலர் கூலிக்கு மாரடிப்பதை பார்த்து நகைப்புதான் வருகுதையா

  இளிச்சவாயன் தமிழனை விட்டு நீங்கள் கடைசியாக ஆளும் மேற்கு வங்கத்தில் போய் துர்கா பூஜைக்கு விடுமுறை கிடையாது என சொல்லிப்பாரும் அல்லது துர்கா பூஜையை பற்ரி வாய் திறந்து பாரும்

  தங்கள் சொந்த அரிப்பை தீர்த்து கொள்ள இதுவா வழி

  • // அனாவசியமாக எங்களுக்குள் மத வெறியை / ஜாதி வெறியை தூண்டுகிறீர்கள்.//

   உங்களுக்குள் இருக்கும் இரண்டு வெறியையும் ஒத்துக் கொண்டதற்கு நன்றி. அந்த வெறி இனியும் வாலாட்ட முடியாத படி செய்வோம.

   பிறகு எத்தனை முறை சொல்வது, சீனாவில் இப்போது இருப்பது கம்யூனிசம் இல்லை, முதலாளித்துவம்தான். மேற்கு வங்கத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியினரை நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று விமரிசனம் செய்து எழுதிய கட்டுரைகள் வினவில் ஏராளம். தேடிப்படியுங்கள்.

   முக்கியமாக காஷ்மீரில் இந்திய தேசியக்கொடியை காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஏற்றக்கூடாது என்று ஓத்துக்கொண்டதற்கு நன்றி.

   • வினவு எனக்கொரு சந்தேகம். ஏன் கம்யூனிஸ்ட்கள் மட்டும் ஆட்சியை பிடித்தவுடன் போலி கம்யூனிஸ்ட்களாக மாறிவிடுகிறார்கள்?

    • 🙂 சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் கேள்வி. நல்ல பதிலை வினவிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

    • இது கம்யூனிஸ்டுகள் என்று இல்லை, புரட்சிகரமான சிந்தனைகள் என்று சொல்லி மேலே வருவார்கள் அதன்பிறகு ஊரோடு ஒத்து வாழ்கிறேன் என்று ஒத்து ஊதுவார்கள்..

     அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் போல்…

    • முக்கியமான கேள்விதான் இது.

     செம்புரட்சி நடந்த நாடுகளில் முதலில் ஒரு ‘பாட்டளி வர்க சர்வாதிகார’ அரசு நிறுவப்பட்டு சோசியலிச அமைப்பை உருவாக்க பாடுபடும். படிப்படியாக அது ‘தூய’ கம்யூனிச அமைப்பை நோக்கி பயணிக்கும். இதுதான் தியரி. ஆனால் அனைத்து சோசியலிச அரசுகளும் இடையில் ‘திரிபுவாதிகளால்’ சீரழிக்கப்பட்டு சிதைந்துவிட்டன என்பது தோழர்களின் standard explanation for the fall of ‘communism’ across the world.

     நடைமுறையில் இந்த ‘பாட்டளிவர்க சர்வாதிகாரம்’ கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் சர்வாதிகாரமாகதான் பரிணாமித்தன. தனிமனித துதிக்கு இட்டு சென்றன. Personality cult of Stalin and Mao. மார்க்ஸ் கனவு கண்ட progression towards pure communism from socialism where the state will wither away, வெறும் கனவுதான். மானுட யதார்த்தை முற்றாக உணராத கனவு. அனைத்து வகை சர்வாதிகார அமைப்புகளும் உள்ளுக்குள் ஊழல் மயமாகி, சீரழிந்து, implode ஆகும் என்பதே வரலாற்று பாடம்.

     எதிர்காலத்தில் சோசியலிச அரசை செம்புரட்சி மூலம் நிறுவி, பின்பு அதை கொண்டு தூய கம்யூனிசத்தை நோக்கி செல்ல முடியும் என்று வினவு தோழர்களும், மாவோயிஸ்டுகளும், இன்ன பிற குழுக்களும் முழு மனதாக நம்புகின்றனர். (தேவ குமாரன் வருவான், பொன் உலகிற்க்கு இட்டு செல்வான் என்று நம்புவதற்க்கு ஒப்பானதுதான் இது).

     ஆனால் சர்வாதிகாரம் என்றாலே அது போக போக இறுகி, ஒரு வகை ஃபாசிசமாக மாறி, பிறகு இறுகி அழியும் என்பதுதான் இயற்க்கை நியதி. கண்டிப்பாக அது மிக உயர்ந்த ரக ஜனனாயகமாக மாறாது. அதவாது மார்க்ஸ் சொன்ன தூய கம்யூனிச அமைப்பு, மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்வார்கள், அரசு எந்திரம் இலை உதிர்வது போல ‘தானே’ உதிர்ந்துவிடும் என்ற பெருங் கனவு. அது வெறும் கனவுதான்.

     Anyway, good luck to you comrades, who still retain faith and hope in spite of all historical evidences.

    • அவங்க ஆட்சியப் பிடிக்கிறதுக்கு முன்னாடியே போலிக் கம்யூனிஸ்ட்டுதான்.

   • வினவு அய்யா!

    தற்போது உண்மையான கம்யூனிஸ்டுகள் யார் என்பதை அடையாளம் காண்பிக்க முடியுமா? (திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன் பலமுறை! நேரடி பதில் இல்லை இதுவரை)

 19. Rarely vinavu writes good articles… Thoroughly enjoyed… Especially fishermen from kanyakumari eating fish in vivekananda parai…. WOW!! In my office, they still send me to separate table if I take non-veg. I can’t even get a house for rent without telling my caste… Equality is in papers… not in practice

 20. //5. இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.//

  I personally know a friend who was in love with a muslim girls. But her parents threatened him and forcibly married her to a muslim. So this point should be applied to all stupids who divide humans on caste/race/religion etc. Man is just a sexual animal. No one has the right to say who and who can marry. Why? Can’t a muslim girl can’t sleep with a jew/christian/hindu/buddhist/shik?

 21. Hi Vinavu,

  Can you ask these questions to Muslims apart from kashmir?
  Because they will cut your hand, when u write those sentence…

  Reply me as a clean way……dont get anger…
  i dnt knw i ask a right way or not

 22. I agree with you on your many comments, especially on doing “நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடண்டியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.”….and on preparing the fish curry inside the temple I am least bothered…but bugger how on earth you can support Kashmir separatist – when i read your article I burnt in anger Just recently I lost one of my cousin in Kasmir battling the terrorist Baxxtaxd and still lacks of my Indian brothers are fighting the Islamic terrorist in Kashmir and I am concerned about their lives…

  By the way if you can question on so many Hindu customs and tradition then why don’t you question same on other religion – especially on Islam…

  Why the hell they pray in India in a Saudi Arabian language, ask them to pray in Tamil daily, why Allah can’t understand Tamil or not???

  Why on earth Muslims in Tamil Nadu fallowing the dress code of Saudi Arabia, burkha and mullah beard is not Tamil culture…

  Tamil culture preaches one women for one man so ask Muslims to stop marrying four women…

  Afzal, Mohammed, Ramzan, Islam, Khan etc etc all are not Tamil name so ask them to change their name to pure Tamil names…

  Stop them from learning Quran and Arabic instead ask them to learn Thirukural and Tamil…

  By the way I am from Nadar caste and my brother has married a high caste Nair girl from Kerala after love, and you know my father was against this marriage not my Sister In Law’s parents, so don’t parrot your same old story of upper cast and lower caste, because those barriers are slowly getting wiped in Hindu society in metro cites and soon it will reach other parts, but Islamic terrorism is the true enemy to India and to World so talk about that…

  • I just stumbled on “vinavu” website just by an accident and after going through his articles, I agree on few of his view points and disagree on many….but appreciate whole heartedly “vinavu” for giving me opportunity to post my opinion too on their website…

   I would like to add one more question on my postings…if “vinavu” can question on preparing fish curry inside a temple – then I don’t have any objection because we in our village temple do sacrifice of all crawling, flying & walking things (except humans)…my question is many mosques in India are built on lands previously belonged to low caste Hindus like me, so will they allow me to prepare PORK inside a mosque??? if they can – then I will be the first one to enter inside a big ‘vegetarian’ 🙂 temple with fish to offer my sacrifice to god….

  • Tamil Arasan, yoiu said:
   “Why on earth Muslims in Tamil Nadu fallowing the dress code of Saudi Arabia, burkha and mullah beard is not Tamil culture…”

   Can you please define the “Tamil” dress code.
   Has it remained that way for the 2000+ year