மீனவர் படுகொலைக்களுக்கு எதிராக ட்விட்டரில் நடைபெறும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/
இதுவரை இலங்கை கடற்படையால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஜெயலலிதா ஓடோடிப் போய் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட மீனவர் குழந்தைகளின் படிப்புச் செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்த கையோடு, வருகிற தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியோ “1991-96-ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.” என்று வழக்கமான பாணியில் பழியை புள்ளிவிவரங்களின் மீது போட்டு விட்டு லாவணி பாடுகிறார்.
மேலும் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தந்து மீனவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சாணக்கியத்தனமாக முயன்றார். மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தந்து தன்னை கருணை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஆகவே மீனவ மக்களிடம் ஓட்டு கேட்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று ஆபாச அரசியல் செய்கிறார் கருணாநிதி.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் வருகிற சனிக்கிழமை(29.1.2011) இலங்கை செல்கிறாராம். அவர் மீனவர் கொலைகள் குறித்து ராஜபட்சேவிடம் பேசுவாராம். ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.
இதோ 6-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் அறிவித்து விட்டார், சரத்குமார் போராடக் கிளம்பிவிட்டார். இனி போராட்டங்கள் ஒரு சடங்கைப் போல நடத்தப்படும். கருணாநிதிக்கு எதிரான ஒரு தேர்தல் அஸ்திரமாக மீனவர் விவாகாரம் மாற்றப்படுவதை எதிர்கொள்ள கருணாநிதியும் ஒரு அரை மணி நேர உண்ணாவிரத்தை துவங்கினாலும் துவங்கி விடுவார் போலிருக்கிறது. அதன் முன்னோட்டமாக மீனவ சமூகத்திலிருந்து பொது உடமை இயக்கத்திற்கு வந்த சிங்காரவேலரின் 151 நினைவு நாளை அரசு விழாவாகாக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு. மீனவர்களுக்காக தான் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் கருணாநிதி.
தேர்தல், ஓட்டு, என்று வந்து விட்டாலே கொலை செய்யப்பட்ட மீனவர் பிணங்களுக்கு உயிர் வந்து விடுகிறது. தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும். தேர்தல் வாக்குச் சீட்டுகளை நம்பி பிழைப்பை ஓட்டும் அரசியல்வாதிகள் இதன்றி வேறு என்ன நினைப்பார்கள்?
ஜே என்றால் “இப்போது நான் எதிர்கட்சி ஆகவே இப்போது எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சுடு. அது எனக்கு ஆதாயமாக முடியும். நான் ஆட்சிக்கு வந்தவுடன் சுடாதே.” கருணாநிதியோ “இப்போது வேண்டாம், ஏனென்றால் நானும் ஆளும் கட்சி, நாளை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் சுட்டுத் தள்ளு”. இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மீனவர் பிணங்கள்மீது நடத்தும் விளையாட்டு.
இந்த அரசியல்வாதிகளின் மோசடி நாடகங்களில் இருந்தோ இந்தியா போன்ற விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட அரசிடம் இருந்தோ தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த வைகோ “சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். ஆகவே இந்திய அரசு ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
பெரும்பலான இலக்கியவாதிகள், தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்க ஆர்வலர்களின் கருத்துமே இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் அரசு ஒடுக்குமுறையை, கட்சி ஒடுக்குமுறையாக சித்தரிப்பதன் மூலம் “இந்தியா நல்ல நாடுதான், அதை ஆள்வோர்கள்தான் சரியில்லை”, என்கிறார்கள். காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷமும் இதிலிருந்தே பிறக்கிறது. உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது இந்திய அரசும் அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கமுமே. அந்த பெருமுதலாளி வர்க்கங்களின் நலனை முன்னெடுப்பவர்கள்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவருமே.
விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட ஒரு அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்கள் அரசு என்னும் ஆக்ரமிப்பு இயந்திரத்தை எதிர்க்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே அதை லாவகமாக கட்சி சார்ந்து திருப்பி தேர்தல் ஆதாயமாக மாற்ற நினைக்கிறார்கள். ஈழப்படுகொலைகள், விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையிழப்பு, மீனவர் படுகொலை என எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அரசு-ஆளும் வர்க்கங்களின் கட்டுமானம்தான் காரண்ம். அதுவல்லாமல் காங்கிரஸ் போய் பிஜேபி வந்தவுடன் “நாம் கனவு காணும் ஈழம் அமைந்து விடும்” என நினைப்பது எவளவு அபத்தம். அல்லது “பிஜேபி வந்தாலும் ஈழம் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் ஆதரிக்கிறோம்” என்றால் அது எவளவு அயோக்கியத் தனம்.
தற்போது டிவிட்டரில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு பா.ஜ.க கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்த பா.ஜ.க கட்சி என்ன செய்தது?
இலங்கை தனது உள்நாட்டுப் போரை முடித்து விட்டு இராமேஸ்வரம் போரைத் துவங்கியிருக்கிறது. இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும். ஆக இக்கொலைகளை நியாயப்படுத்த தொடர்ந்து இலங்கை ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அது எல்லை தாண்டுதல். இந்த வார்த்தையை இலங்கை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவும் சொல்கிறது.
சென்ற ஆண்டு மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிகாரத்துறை அமைச்சர், “இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
அதேசமயம் “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” என்றும் திமிராகப் பதிலளித்தார் எஸ்.எம் கிருஷ்ணா.
மராட்டியம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது. அரபு நாடுகளில் எல்லை தாண்டுதல் என்பது மிக சாதாரணமான விஷயம். காற்றின் போக்கு, கடல் நீரோட்டம், இரவு, இயற்க்கைச் சீற்றம், என ஒரு மீனவன் எல்லை தாண்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.
இதுவல்லாமல் சர்வதேச கடல் எல்லையை வகுத்துள்ளவர்கள். இது சர்வதேச கடல் எல்லை என்று அடையாளக் குறிகளையோ, ஒளிரும் மிதவைகளையோ கடலில் மிதக்க விடுவதில்லை. அதிலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் இந்தியா இன்று வரை தனது தெற்கு எல்லையை மர்மமான முறையிலேயே வைத்துள்ளது.
2008- இல் இலங்கை அரசோடு இந்தியா செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடல் எல்லை குறித்த அம்சங்களும் உண்டு. இரு நாடுகளுக்குமிடையில் இன்று வரை மன்னார் வளைகுடா கடல் எல்லை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் இல்லை.
2009 ஜனவரியில் தங்கள் நாட்டு கடல் எல்லை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தினேஸ் குணவர்த்தன “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறி இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.”
தினேஸ் குணரத்னாவின் இந்தக் கருத்தின்படி இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் கூட இறங்க முடியாது. கட்டுமரத்தை கடலில் செலுத்தி பாய்மரத்தை மடக்கி மீன் பிடிக்க துவங்க வேண்டும் என்றால் கூட ஆழிக்கடலுக்கு அப்பால் சென்றாக வேண்டும் என்ற நிலையில் தினேஸ் சொல்லும் எல்லைக் கோடு நமது அலைவாய்க்கரை வரை வந்து விடுகிறது.
கடற்கரை மேலாண்மைச் சட்டம்
மீனவர் கொலை என்னும் கொடூரத்தை வெறும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் நமது பாரம்பரிய கடற்கரையை கடற்கரை மேலாண்மைச் சட்டம் என்னும் நில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் கடலோரங்களையும் கடலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஏக போக பன்னாட்டுச் சுரண்டலின் ஒரு அங்கமாகவும் பார்க்க வேண்டும்.
இலங்கைக்கு ஒரு நோக்கமும் இந்தியாவுக்கு ஒரு நோக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நோக்கமும் இருக்க முடியாது. ஒரே நோக்கம்தான் கடல், நிலம், மீன் வளம் யாவும் எங்களுக்கே உரியது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தின் இடையூறாக மீனவன் இருப்பதும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வலதுகரமாக இந்த மக்கள் விளங்கினார்கள் என்பதுமே இக்கொலைகளுக்குக் காரணம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தல் அமைப்பாலோ, ஓட்டுச் சீட்டுக்கட்சிகளாலோ இனி இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது.
பன்னாட்டு நிறுவனங்களையும், இந்நாட்டு முதலாளிகளையும் இவர்களை தாங்கிப்பிடிக்கும் அரசு, அரசியல் கட்சிகளையும் எதிர்த்து இந்திய மக்கள் நடத்தும் விடுதலைப் போரே மீனவர்களது படுகொலையையும் தடுத்து நிறுத்தும். அத்தகைய அரசியல் எழுச்சியை எழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இந்த மீனவர் படுகொலைக்கு செய்யப்படும் அஞ்சலியாக இருக்கும்.
____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!
ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!
- ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ
- “இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!
- ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
- ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
- முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!
- ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்
- புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
- ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
- ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE
- ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்
- பரிதாபத பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!
- ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை !!
- ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!
- ஈழம்: உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!
மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman | வினவு!…
#tnfisherman தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும்….
\\மேற்குவங்கம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது //
மேற்கு வங்கத்தில் உள்ள மீனவன் எப்படி பாகிஸ்தான் கடலுக்குள் செல்வான்.. உங்கள் பாகிஸ்தான் ஜால்ரா புல்லரிக்க வைக்கிறது.. எத்தனை இந்திய மீனவன் பாகிஸ்தான் சிறைக்குள் இருக்கிறான் என்பது உங்களுக்கு தெரியுமா.
சிறையில்தானே?
தவறினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டோம். ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் எனும் உங்களது தவறை எப்போது திருத்தப் போகிறீர்கள்?
ஊருக்குத்தான் உபதேசம் (அதுவும் தப்பு தப்பாக) எனக்கில்லை என்பதுதான் எடிசனின் கொள்கை.
சிறுபான்மை சமூகங்களின் பெயர்களில் போலியாக வந்து இந்த மாதிரி துவேஷங்களைப் பொழிவது சரியல்ல. மிகச் சாதாரணமாக குஜராத் மீனவர்கள் நூற்றுக்கணக்கில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குச் செல்வதும். அப்படி செல்கிறவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் முறையாக இந்திய அமைச்சக்த்திடம் தகவல் தெரிவித்து அவர்களை விடுதலை செய்கிறது பாகிஸ்தான். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட 111 மீனவர்கள் வாஹா எல்லை வழியாக இந்தியா வந்தனர். சின்ன சிராய்ப்பைக் கூட பாகிஸ்தான் படைகள் செய்யவில்லை.
மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!
https://www.vinavu.com/2010/01/18/privatization-of-nature-2/
இந்த சுட்டியை பொறுத்தமான இடத்தில் இணைக்கவும். கீழேயும் பட்டியலிடவும்.
அப்புறம் எடிசன், உங்களோட மீனவப் பாசம் புல்லரிக்க வைக்குது. நீங்க எப்படி மேற்கு வங்க பார்ப்பன்ர்கள் மற்றும் காவி பயங்கரவாதி மலர்மன்னன் போல மீன் சாப்பிடுவீங்களா இல்லை சைவப் பாம்பா?
ஏம்பா அசுரா ஒன்னோட எடுப்பு அல்லக்கை சொம்பு தூக்கற வேலைக்கு எலும்பு மட்டும் தான் போடுவாங்களா இல்ல பிரியாணியும் குவார்ட்டரும் சேர்த்து போடுவாங்களா. இந்த பாய்ச்சல் பாயற..
மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman | வினவு!…
#tnfisherman தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும்….
இன்றைய அவலமான அரசியல் சூழலை அம்பலப்படுத்தும் கட்டுரை இது. தேர்தல் நேர்மாக இல்லை என்றால் இது பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.http://www.savetnfisherman.org/ நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
[…] This post was mentioned on Twitter by வினவு, Jaypee Rajendran, sidhardh, maryshan, Uma and others. Uma said: RT: மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman https://www.vinavu.com/2011/01/28/tnfisherman/ @vinavu […]
/////// “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” ///
வாயில வண்டையா வருது ..,கடலில் எல்லையே கிடையாது ….,தெரியுமா வினவு ..,
நல்ல பெரிய விஷயங்கள், ஆனால் நமது மூட அரசியல்வாதிகளுக்கு புரியுமா என்பது சந்தேகமே.
அது இருக்கட்டும். வரும் தேர்தலில் இதே மீனவர்கள் 1000 ரூபாய் பணத்துக்கும் குவாட்டருக்கும் கால் பிளேட் பிரியானிக்கும் சோடை போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதுவரை ஒரு மீனவ சங்கத்தை சேர்ந்த தலைவர் கூட வாய் திறக்கவில்லயே?
எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால், இன்று போக்குவரத்து தொழிலாளிகள் இன்றைக்கு வேலை நிறுத்தம் போராட்டம் என்று நடத்துவதற்க்கு அன்று தேர்தலில் சோடை போனதே காரணம். நம்ப தமிழன் திருந்தவே போறதில்லை. மேலும் நாம் இன்னமும் சினிமாக்காரங்களை தான் பின்னால்தான் வாழ்கிறோம். உண்மை கசக்கத் தான் செய்யும். நாக்கில் சக்கரை தடவிக்கொண்டு பேசினால் நோய் தீராது.
தமிழக மீனவர்களின் படகுகளுக்கு பார்ப்பனர்களை பாதுகாப்பிற்கு அனுப்ப வேண்டும்… சிங்களர்களின் சகோதர பந்தங்கள் ஸ்ரீமான் சோ ராமஸ்வாமி ஐயர், ஸ்ரீமான் ஹிந்து ராம் ஐயர், குமாரி ஜெயலலிதா ஐயங்கார், ஸ்ரீமதி சோனியா பண்டிட், ஸ்ரீ/ஸ்ரீமதி ராகுல் பண்டிட், ஸ்ரீமான் ஸுப்ரமணிய ஸ்வாமி ஐயர், பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிஷ்ங்கர ஐயர் குருஜி, மீன் சாப்பிடும் ஸ்ரீமான் மணிஷங்கர ஐயர் இவர்களின் படங்கள் போட்ட கொடிகள் கட்டி செல்ல வேண்டும்…
ஆந்திரா கடல் பகுதியில் சிங்கள மீனவர்கள் வாரக் கணக்கில் தங்கி மீன் பிடித்த போது ஹிந்திய அரசு கொஞ்சி ராஜ உபசாரம் செய்துதானே அனுப்பி வைத்தது…
சிங்கள படைகள் தமிழக மீனவர்களை கொலை செய்வதை ஹிந்திய அரசு ரசிப்பதை காணும் போது ஈழ தமிழர்களை மட்டுமல்ல… தமிழக தமிழர்களை சித்ரவதை கொலை செய்யும் உரிமையை ஹிந்திய அரசு சிங்கள படைகளுக்கு கொடுத்துள்ளது போல் தெரிகிறது…
தமிழக மீனவர்களை ஹிந்திய அரசும், ஆதிக்க வர்க்கமும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை… 1965இல் மீனவர்களின் இடத்தை பிடுங்கி ஆர்.எஸ்.எஸ். சொரி நாய்களுக்கு வழங்கி மீனவர்களை வஞ்சித்த போதும்… 1974 இந்திரா எனும் பேய் சிரிமாவோவுக்கு கச்ச தீவை தாரை வார்த்த போதும்… தமிழ் தேசியம் பேசி கொண்டே ஹிந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர்களாக நினைத்து கொண்டிருக்கும் வைகோ, நெடுமாறன் போன்ற பார்ப்பன எடுபிடிகள் என்ன பிடுங்கி கொண்டிருந்தார்கள் என யாராவது சொல்ல முடியுமா?
இதில் கருணாநிதி என்ன செய்கிறார் என கேட்டால்… கலாநிதி/தயாநிதியோடு சிங்களர்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க வந்தால் மொத்த தமிழ் நாட்டையும்… கலாநிதி/தயாநிதி-சிங்கள கூட்டத்திற்கு தாரை வார்த்து கொடுப்பார்…
பாவம் கருணாநிதி கனவில் கூட உரிமை, உணர்வு போன்ற சொற்களை சொல்ல முடியாது… அரசியல் அதிபர் ஆகி விட்டதால் எதுவாக இருந்தாலும் பண பேரத்தில் முடித்து விடலாம் என விரும்புவார்…
சர்வதேச கடல் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பெருவாரியான மக்களின் உணவாக உள்ள கடல் உணவினை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொள்ளை அடிக்க ஏகாதிபத்தியங்கள் முயல்கின்றன.
அதற்குதான், இப்படி எல்லாம் மீனவர்கள் கொல்லப்படுகின்றார்கள். மேலும் இவர்கள் ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் விவசாயத்தின் சார்புத்தன்மையை ஒழித்து உணவினையும் தமது கட்டுப்பாடில் கொண்டுவர முயல்கின்றார்கள்.
அதனால்தான் இந்தியாவில் விவசாயப் புறக்கணிப்பு நடந்து பெரிய அளவிலான தற்கொலைகளும், பட்டினி மரணங்களும் நடக்கின்றன.
விவசாயிகள், மீனவர்கள் என்று ஒன்றுபட்ட தொழிலாளிவர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் மட்டுமே இதனை ஒடுக்கும்.
ஆதவன்
எடிசன் அவர்களுக்கு, கட்டுரையில் குஜராத்,மராட்டியம் என்று தான் இருக்கிறது.மேற்குவங்கம் என்று இல்லை.தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதற்கு காரணம் தமிழர்கள் மீதான சிஙகள இனவெறியும் தான்.அது மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்பும் கூட.ஈழத்தை அழித்ததில் இருந்து இப்போது வரை இந்திய அரசு பொய்யான நாடகத்தை நடத்தி வருகிறது.கருணானிதி உள்ளிட்ட தானை தலைவர்கள் வாய் சவடால்,லாவணி,ஒப்பாரி,கண்துடைப்பு நாடகஙகளை நடத்தி ஓட்டு பொறுக்கத் தயாராகின்றனர்.மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் மக்கள் விரோதிகள்.இப்போது மீனவர்கள் பல இடஙகளில் போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்த போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும்.வளர்த்தெடுக்க வேண்டும்.ஓட்டுக்கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.போலி ஜனனயகத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்.ஒரு புதிய ஜனனாயகத்திற்காகத் தயாராக வேண்டும்.
அதை வினவு திருத்தி விட்டதாக பின்னுட்டம் வந்து இருக்கிறது, படித்துவிட்டு எழுதவும்…
“ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.”
நம்புவோம்.
இதே போன்ற நிலைமை மலையாளி களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் நடந்து இருந்தால் , சிங்களர்களின் நிலைமையே வேறாக ஆகி இருக்கும்.
ஹ்ம் அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் . சுரணை என்று ஒன்று இருக்கிறது . நம்மை போன்றா ? எங்கே , சோ , ராம் போன்ற மாமா
பயல்கள் நிரம்பி இருக்கும் இந்த சமுதாயத்தில் அதை எல்லாம் நாம் எதிர் பார்க்க முடியாது தான். தியாகி முத்து குமார் வழியை வேண்டும் மானாலும்
தேர்தெடுத்து கொள்ளலாம் .
awpoet engira mayavaram rowdyya vitta eppati?
உங்களுடைய கேள்வியும், கொபமும் நியாயமானது. ஆனால் முத்துக்குமாரின் தியாகம் தமிழகத்தை கிளர்ந்தெழச் செய்யத்தானேயொழிய, அவரின் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல.
இந்திய அரசின் மேலாதிக்கவாதத்தை கேள்விக்குள்ளாக்காமல் வெறுமனே இந்தியம் ஒழிக, டில்லி ஏகாதிபத்தியம் ஒழிக என்று சவடால் அடிப்பது யாரும் இதைக் கேட்க தயாராக இல்லாத சமயத்தில் சக தேசிய இன மக்களை எதிரிகளாக சித்தரிப்பது என்ற கண்ணோட்டமே தமிழ் தேசியர்களின் “அரசு” பற்றிய கண்ணோட்டமும் தவறுதலாக உள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனையில் துனிசியாவின் சாயல் தெரியப்போக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தகவல், தொழிநுட்ப கருத்துப் பரிமாற்ற ஊடகங்களும் முடக்கப்படுமோ என்று தோன்றுகிறது. இது தேர்தல் தருணங்கள் என்பதால் அனேகமாக பாதகம் வராது.
ஒரு இனப்படுகொலையை 2G அலைக்கற்றையைக் கொண்டு மறைத்தாயிற்று. இதை தணிக்கவும், மறைக்கவும் ஏதாவது இருக்குமோ….?
சமூக வலைதளங்கள் , வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?
சிங்கள ராணுவத்தின் கையில் செத்து மடியும் தமிழ் மீனவர்களுக்காக
ஒன்றிணைவோம் .
Post ur tweets with #tnfisherman at the end
மிக நல்ல பகிர்வு. நன்றி நண்பரே.
Sombu thukki Cho, Ram and samy எல்லாம் எங்கே போயுடனுங்க? ஒரு வேலை rajapakese- வுக்கு விளக்கு புடிக்குரதில busy போல
விளக்கு புடிகுரதுகு இல்ல , வேற வோன்னுக்கு. அதை எல்லாம் இங்க எழுத முடியாது !
அது ஏன் தமிழன் உயிரென்றால் கிள்ளுக்கீரையாக உள்ளது? ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு அளிப்பது இந்திய அரசின் கடமை. எல்லையில் பிரச்சனை என்றால் நமது கடற்படை நமது மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உழைக்கச் செல்லும் இடத்தில் (மீன் பிடிக்கக் கடலில் செல்வது) உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும்? எம் சகோதரி கணவனைக் கடலுக்கு அனுப்பிவிட்டுக் கவலையில் உறங்காமல் எத்தனை இரவுகளைக் கழிப்பது? மனதிற்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது:-(
சோ , ராம் இவர்களுக்கு எத்தனை தொண்டர்கள் ? பதவியில் இருக்கிறர்களா? திராவிட கட்சிகள் தானே 30 வருடமாக ஆழ்கிறார்கள்? என்ன செய்தார்கள் ? blaming anything to parpaneeyam is kind of escapism. Who is the real culprit? if any fishermen died, storm whole tamilnadu by all parties. then only center will come down, even for kaveri issue they did not raise voice jointly?. Whatever casteism in Tamil nadu. the same is in other states also. But how they join in raising voice when there was an issue.
தமிழன் என்ற வார்த்தையை வைத்து கட்சி நடத்துவது போல் தெலுகு மலையாளிகள் சொல்வதில்ல்லை. அவர்களுக்கு நிஜமாகவே உணர்வு இருக்கிறது? எல்லா பிரச்சினைகளிலும் ஒன்று சேர்கிறார்கள்?(தெலுங்கான) தமிழ்நாட்டில் எதற்கு அப்படி நடத்திருக்கிறது?
நீங்கள் சொல்வதை போல் வைகோ வேஷம் போடவில்லை? அவர் இதற்கு முன்நும் போராட்டம் செய்திருக்கிறார். அப்போது மற்ற கட்சிகள் கண்டு கொள்ள வில்லை. தேர்தல் நேரமாதலால் விளையாட்டு நடக்கிறது.
தமிழ் நாட்டின் சாபகேடே நமது அரசியல் தலைவர்கள் தான்.
என்னதான் செய்கிறது இந்திய அரசு? குடிமகனைக் காக்க வக்கில்லாத நாட்டுக்கு எதற்கு இத்தனை கோடி செலவில் ராணுவத் தளவாடங்கள்?
———————
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன’2011)
#tnfishermen
சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.
———————
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன’2011)
Revolutionary Wishes to the blog and web.
This should be taken as Principle based and People’s Political Movement.
YOV Bugger EDISON !
Instead of putting comments, come and join us to propagate these in field for single day. Then you will know !