Wednesday, October 16, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

-

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
– ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி  அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

***

கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.

இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.

இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

***

கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.

சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.

அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால்,  இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார்  கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை  நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.

தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.

***

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.

செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.

இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு,  வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும்,  சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின்  தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

உண்மைகள் அம்பலமானபோதிலும்,  ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.

இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

_______________________________________

தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011
_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள் : மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள் ! | வினவு!…

    மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்….

  2. இந்துத்துவ பயங்கரவாதம் ஒழிக்கவேண்டியது.கண்டிப்பாக ஒழியும்.அதற்காகதான் உங்களைபோல அமைப்புகள் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.அதேப்போல முஸ்லீம் அமைப்புகளையும்,அதன் மதவாதத்தையும் நீங்கள் கண்டிக்கவேண்டும்.

  3. //அதேப்போல முஸ்லீம் அமைப்புகளையும்,அதன் மதவாதத்தையும் நீங்கள் கண்டிக்கவேண்டும்.//

    கண்டித்துள்ளனர். வினவில் கட்டுரைகள் உள்ளன.

    ////அதற்காகதான் உங்களைபோல அமைப்புகள் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.//

    நீங்களும் வாங்க போராடால்ம்…..

  4. […] This post was mentioned on Twitter by வினவு, Kirubakaran S. Kirubakaran S said: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்! http://feedly.com/k/hk4a8a […]

  5. தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 என்று உள்ளது –
    2011 ன்னு மாற்றிங்க please

    • வெட்டித்தனமான கட்டுரை இதுதான் என்பதை விளக்கினால் நல்லா இருக்கும்.. சும்மா போற போக்கில சொல்லிட்டுப் போறதுன்னா..முதலில் வெட்டித்தனம்னா என்னன்னு புரிஞ்சுக்கப்பா..கூலியே கொடுக்காமல் இலவச உழைப்பைக் கோருவதுதான் ‘வெட்டி’…அந்தவிதத்தில் பார்த்தா..வினவு..கட்டுரை எவரிடமும் கூலி வாங்காமல் ‘வெட்டியா’த்தான் வந்திருக்கு..

      • Hello Tiger,

        VINAVUS aim is attacking the HINUS. They think this is called ‘MURPOOKKU’…From Periyaar to Karunaanithi all are doing the same ‘ONION’ politics…They will be always scolding hindus and hindusam, they will support all other religion people…Please throw away this dirty ‘MURPOKKU’ mask, and don’t hurt others people don’t like this..

        Have they ever written about ‘KASHMIR PANDITS’…Thousands of Kashmiri Pandits who were forced to leave their sacred land because of the war waged by Islamic terrorists…You must know that..KASHMIR is a homeland of KAShmir pandits

        During the period of Islamic rule of the Kashmir valley hundreds of Hindu and Buddhist temples in Kashmir were destroyed. As a result, Kashmiri Pandits gradually migrated to other parts of India to escape persecution. Many Kashmiri Pandits were converted which in time resulted in Kashmir becoming predominantly Muslim. The devastation wrought by Zulju, a Turkish general from Turkmenistan, in 1320, during his conquest of many regions of Kashmir Valley was especially noteworthy…

        • //During the period of Islamic rule of the Kashmir valley hundreds of Hindu and Buddhist temples in Kashmir were destroyed. A//
          இது பொய். மதச்சார்பின்மையின் கலங்கரைவிளக்காக காஷ்மீர் தன்து வரலாற்றில் இருந்துள்ளது. இந்தியாவின் தலையீடுதான் அங்கு மத அடிப்படைவாதம் வேரூண்ற வழி கோலியது.

  6. சுட்டியை சொடுக்கி படிக்கவும்

    1.ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் – “நாட்டில் சமீபகாலமாக நடக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் புதுவகையான காவிதீவிரவாதம் சம்பந்தப்பட்டுள்ளது”. இந்துமதம் இந்திய மதமா? இந்துமதம் இந்தியர்கள் இல்லாதவர் பிராமணகளின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

    2. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். .

    …..

  7. Nov’ 26, 2008 Massacre is untolerable. Who ever in behind of this massacre is to be severe punished. There is no doubt; the massacre has done by terrorists. As you mentioned in this article this has done by is Islamic terrorists is refutable, unacceptable and untolarable. Still there are few questions to be answered and clarified.
    Particularly Mr. Karkare murder.
    Terrorists all the way came thru sea, landed in Gujarath seashore (Modi’s Territory)…????
    RDX explosives were found in CST luggage room…….????
    There was no any single demand for Hostages from terrorists…?
    Terrorists could have kill all the hostages but didn’t , even though they will be killed
    There were 3 state elections on scheduled.
    The speedy judgement for KASAB in a concealed manner of arbitrations.
    The above statement is likewise, ”Ttrain is collapsed by MAOISTS, “ MAOISTS blowed the bus “
    Indian security services conclude always for any attacks with unknown mails named as HUJI, SIMI, & Al Qaeda. Any one can create a mail in any name as they wish, even US president’s name too. This is really ridiculous, absurd and pre planned.
    I did not expect like this statement from VINAVU and Ma. Ka. E. Ka
    If your statement is true, I am the first man against of them.
    ( I DON’T HAVE TAMIL, THAT’S Y I STATED IN ENGLISH ‘SORRY I’M NOT A BORN ENGLISHMAN, PLS BE EXCUSED FOR GRAMMATICAL ERRORS’)

  8. மாலேகான்வ் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9 முஸ்லிம்கள் பெயில் கேட்டு விண்ணப்பம்.
    http://www.hindustantimes.com/News-Feed/mumbai/9-accused-in-2006-Malegaon-blast-case-seek-bail/Article1-651760.aspx

    இந்த 9 பேருக்கும் பெயில் கொடுக்கக்கூடாது என்று CBI சிறப்பு நீதிமன்றத்தில் கூறியது.
    http://www.ndtv.com/article/india/maleg … used-81923

    அஸீமானந்தாதான் “வாக்குமூலம்” கொடுத்துவிட்டாரே, அப்போ சிறையிலிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்துவிட வேண்டியதுதானே?மாலேகான்வில் வெடித்தது ஒரு குண்டுதானே? அதை வைத்ததும் ஒரு ஆளோ, ஒரு குழுவோவாகத்தானே இருக்க முடியும்? அஸீமானந்தா, மற்றும் 9 முஸ்லிம்கள் இரு தரப்பையும் உள்ளே வைத்து இருப்பது ஏன்?

  9. /*விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார்.*/

    வினவு இவ்வாறு சொல்வது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . ஹேமந்த் கர்கரே பார்பனர்களால் கொல்லபடுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது .ஏனென்றால் அவர்தான் இந்து பயங்கர வாதத்தை வெளிக்கொண்டு வந்தார் . அது மட்டுமல்லாது ஆர்.ஆர்.எஸ் இஸ்ரேல் தொடர்புகளும் வெளிவந்து கொண்டிருந்த வேளையில்தான் அவர் கொல்லப்பட்டார் . தயவு செய்து முன்னாள் காவல்த்துறை உயர் அதிகாரி முஸ்ரிப் அவர்களால் வெளியிடப்பட்ட “கர்கரேயை கொலை செய்தது யார் ” என்ற புத்தகத்தை படிக்கவும்(வேர்கள் வெளியீட்டகம் ).

    • ahamed iqbal!

      கர்கரே, முச்லீம் பயங்கரவாதிகள், மும்பை தாக்குதல் நடத்திய,இரவில் தானே பலியானார்?

      தாங்கள் சொல்ல வருவது,
      கர்கரே,பாக்.பயங்கரங்களுடன் போரிட்டு சாகவில்லை!
      சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்து பயங்கரங்கள் போட்டுத் தள்ளி விட்டனர், என்று தானே?

  10. அருணாசல பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. இந்தியா தனது பிரதேசம் என்று கூறுகின்றது. சீனாவின் இந்தா அடாவடிதனத்தையாவது வினவு கண்டிக்குமா? வினவுவின் கருத்து என்ன

    • சீனாவுக்குரிய அருணாசலப் பிரதேசத்தையும் வேறு பகுதிகளையும் வெள்ளைக்காரன் பறித்துத் தனது ராஜ்யத்தில் இணைத்தான்.
      அதைப் பேசித் தீர்க்கச் சீன அரசு எப்போதிருந்தோ முயன்றது.
      வெள்ளைக்காரனுக்கு வாரிசு உரிமை கோரும் இந்திய அரசு அதைப் பேசாமல் தட்டிக் கழித்ததாலேயே தான் மோதல் மூண்டது என்பது மறுதரப்பு வாதம்.

      அதை முறையாக விசாரித்து விட்டுப் பிறகு இந்தியாவின் மண்ணா இல்லையா என்று முடிவுக்கு வரலாம்.
      பிறகு வினவுடன் விவாதிக்கலம்.

      எல்லைத் தகராறுகளில் தேசியவாதம் ஒரு பெரிய பிரச்சனை தான்.
      ஆனால் அயல் நாடுகளுடன் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் பாணியே தனி!

  11. வெடிகுண்டு பயங்கரவாதம், முஸ்லீம்களுக்கும், நக்சல்களுக்குமே உரித்தானதல்ல!

    என்ன! இந்து பயங்கரவாதிகள், கேனத்தனமாக மாட்டிக் கொள்ளுகிறார்கள்!
    லூஸுப் பயல்கள்!
    இன்னும் பயிற்சி பத்தாது!

    மேலும் இவர்களுக்கு சொல்லிக் கொள்ள, தகுந்த பயங்கரவாத எழுச்சிப் பெயர், இன்னும் கிடைக்கவில்லை! –

    ஜிகாத்! அழித்தொழிப்பு! எனபதைப்போல!

    • தீமைகளுக்கு எதிராக போராடுவதுதான் ஜிஹாத். நீங்கள் கேனத்தனமாக ஒரு அர்த்தத்தை கொடுத்து அதன் புனிதத்தை கெடுக்க வேண்டாம். ஏற்கனவே பார்ப்பனர்களும் யூதர்களும் அதை செய்து விட்டனர்.

  12. 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். IDHAN UNMAI INNUM VINAVU ARIYA VILLAI POLUM

    • ச்சே! என்ன ஒரு எதிரொலி! இது பார்ப்பனியத்தின் வார்த்தை.

  13. இதுவே, “இஸ்லாமிய தீவிரவாதிகள்” என்றொரு தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தால் பின்னூட்டங்கள் நீண்டுருக்கும். ஆனால் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு மீடியாவில் டிஆர்பி ரேட்டிங் இல்லை தான். பின்னூட்டங்கள் இல்லாமல் காத்து வாங்குதே. இந்திய இந்து சமூகம் இந்துத்துவ தீவிரவாதத்தோடு அனுசரித்துப் போக பழகிக்கொண்டனர். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் என்னும் அரக்கன் நம்மிடையே தேசபக்தி பேசிக்கொண்டு பயங்கரவாதம் செய்ய முடிகிறது. வாழ்க இந்துக்களின் இந்தியா!! நரேந்திர மோதியைப் பற்றி சிறப்பு புலனாய்வு குழுவால் கொடுக்கப்பட்ட அறிவிக்கை தெகல்காவில் படித்தேன். அதை தமிழாக்கம் செய்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வினவு அளித்தால் நல்லது. ஏனென்றால் இதையெல்லாம் வெகுஜன ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள் சங்பரிவார்கள். நரேந்திர மோதி முஸ்லிம்களை வேட்டையாடி கொன்றொழித்து இன்றளவும் தண்டனை இல்ல்லாமல் நடமாட முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, இந்துத்துவ தீவிரவாதம் ஒருவேளை அரசினாலேயே பாதுகாக்கப்படுகிறதா???????????????

    • ஐயா உதயம் அவர்களே 4000 சீக்கியர்களை கொன்றார்களே அதற்க்கு என்ன தீர்வு? ஏன் நரேந்திர மோடியை மட்டும் தனியாக விமர்சனம் செய்கிறீர்? ராஜீவ் என்ன உத்தமரா?

  14. * சுவாமி அஸீமானந்தின் வாக்குமூலம் ஸஃப்தர் நகோரியின் வாக்குமூலத்தை நகலெடுத்தது போலவே ஓரெழுத்தும் பிசகாமல் இருப்பது எப்படி?

    * Narco பரிசோதனையில் தாங்கள் தான் குண்டு வைத்ததாக நகோரியின் கும்பல் ஒப்புக்கொண்டதே? அந்த வாக்குமூலத்தின் நிலை என்ன? Narco பரிசோதனை பொய்யா?

    மேலும் http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_17.html
    இங்கே வினவப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா வினவிடம்?

  15. After reading this content, i understand that the communism itself is a…kind of religious..

    religious – founder – book – goal

    Islam – Muhammad – kuran – spread Islam
    christian – Christ – bible – spread Christianity
    Communism – Karal marx – Das Kapital – spread communisum

    Hinduisum – Name itself is not correct – the hinduisum itself is not an religious – who is founder of this – no one knows – western Christians and their derived so called philosophy says….they are from western aryans… it is like.. says something about communist based on the opinion given by RSS…

    Books – no end – fore vedhas – Upanishads – two ithigasas – aurvedha – yoga – sidha – n number of philosopher – n number of books derived from core vedhas – including kama sutra 🙂 n number of languages – n number of muslical concepts – n number of classical dances – never ends

    Goal – inner engineering – understand yourself – dont spread anything – let people come and learn from you

    by the way…

    the communist asked us why we should we fight for lord rom who lived 1000 of years back and protected the good people.
    Now, why they are agitating in west bengal over the tomb of lenin who lived 100 years back and killed millions.

  16. Solan:
    “Hinduisum – Name itself is not correct –”
    YOU ARE CORRECT
    It represents a whole range of religions WITH NOTHING IN COMMON. What has passed for Hinduism over the years is the interests of an elite caste and class. So who becomes a Hindu is a highly political issue.

    “Books – no end – etc. etc. – never ends”
    YOU ARE MIXING UP TEXTS OF PARTS OF THE CULTURE OF A SUB-CONTINENT WITH RELIGIOUS TEXTS.
    It is not possible to have a common text because there is very little in common between the Hindu religions.

    “Goal – inner engineering – understand yourself – dont spread anything – let people come and learn from you”
    IF THEY DO NOT WANT TO SPREAD ANYTHING, WHAT DID THE SAFFRON CLAD MAN DO ALL ALONG?
    The history of conflicts with Jain and Buddhist faiths and followers apart, what about the clashes within the different brands of “Hinduism’.
    Hinduism, since Hindutva, has become very intolerant towards humanity as a whole.

    1. Ram, as described in the classics, never existed.
    2. Lenin is respected as a liberator by not merely Russians but the people the world over. (Ambedhkar, Martin Luther King et al. are respected too as liberators).
    To willingly insult someone who was essentially good to humanity is unacceptable.

  17. தீவிர வாதம் எந்த நிறத்தில் வந்தாலும் கண்டிக்கபட வேண்டியது தான். அப்புறம் அதில் என்ன காவி தீவிரவாதம் பச்சை தீவிரவாதம் என்று. ஏன் வினவுக்கு காவி தீவிரவாதம் மட்டும் தான் அதன் கண்களுக்கு தெரிந்ததா பச்சை தீவிரவாதத்தில் என்ன தீபாவளி பட்டாசா விட்டாங்க ஏன் ஐயா உண்மையை நடுநிலையுடன் எழுதுங்கள்

  18. இந்து பயங்கரவாதத்த பற்றி விளக்கமாக எழுதினீர்கள். வாழ்த்துக்கள். அதே போல முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றி ஏன் எழுதவில்லை? அப்சல் குருவிற்க்கே வக்காலத்து வாங்கும் உங்களிடம் இதை எதிர்பார்ப்பது சற்று அதிகம் தான். இந்தியாவில் இவர்கள் செய்யும் பல தீவிரவாத செயல்களையும் நடுநிலையோடு அம்பலப்படுத்தலாமே?

  19. //இதையெல்லாம் வெகுஜன ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள் சங்பரிவார்கள்//

    உங்கள் அகராதியில் “வெகுஜன” ஊடகம் என்றால் தினத்தந்தி மட்டும் தானா?

  20. /*விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார்.*/
    இந்த விஷயத்தில் எங்கோ லாஜிக் இடிக்குதே!!கர்காரே இந்து தீவிரவாதிகளுக்குத்தான் தலைவலீயாக இருந்து வந்துள்ளார்…அவரை அபீட்டாக்க இஸ்லாமியர்களுக்கு எந்த அவசியமும் இல்லை!மேலும் அந்த கஷாப் எந்த நாட்டைச் சேர்ந்தவன் பாகிஸ்தானியா,நேபாளியா,மணிப்பூரியா என்பது தெளிவாகாத விடயம்!!மும்பை குண்டுவெடிப்பும் ஆர் எஸ் எஸ்,பஜ்ரங்தல் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கைவரிசை வரும் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்தாலும் வரலாம்!!!

  21. வினவுடைய முயற்ச்சி பாரட்டுதலுக்குரியது…இதுபோன்ற கட்டுரைகளின்மூலம் உண்மைகள் வெளிச்சத்திற்க்கு வருகிறது மேலூம் ஒரு சமூகத்தின் மீது சாட்டப்ப்பட்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி,வெறுப்பரசியல்,கொடுமைகள் போன்றவைகள் களையப்பட வழிவகுக்கும்..ஆனால் இந்த கட்டுரைக்கு ஆரோக்கியமான,நடுநிலையான பின்னூட்டங்களுக்கு பதிலாக மததுவேஷம்தான் வெளிப்படுகிறது..அதாவது இந்திய இந்துக்களின் மனநிலை…catching a cat and beating until it accepts that it is a tiger!!!இந்த மனநிலை மாறும் காலம் எப்போது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க