ஹைத்தியில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அவர்கள் தான் உண்மையான நாயகர்கள். தன் நாட்டுக்கு மிக அருகிலேயே நடைபெற்ற இந்த மனிதப்பேரழிவிலிருந்து மக்களை காப்பது தான் எங்கள் கடமை என்று வட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியேற்ற போதிலும், அவர்களை காப்பாற்றியது என்னவோ வட அமெரிக்கா எதிரியாக கருதும் கூபா தான். ஆம் கூப மருத்துவர்களும், செவிலியர்களும் ஆற்றிய பணிகள் தான் வட அமெரிக்காவின் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டியது என்றால் அது மிகையாகாது.
1,200 கூபர்களைக் கொண்ட ஒரு மருத்துவப்படையணி நிலநடுக்கத்தாலும், காலராவாலும் பாதிக்கப்பட்ட ஹைத்தி முழுக்க பணியாற்றி வருகின்றார்கள். கூப அதிபர். பிடல் காசுட்ரோவின் பன்னாட்டு மருத்துவ திட்டம் சோசலிச கூபாவிற்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கின்றது, ஆனால் உலக அளவில் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் என்பது மிக மிக சிறிய அளவிலேயே உள்ளது ஒரு நகைமுரணாகும்.
2,50,000 பேர் உயிரிழந்து, 15 இலட்சத்திற்கும் மேலான மக்கள் வீடிழந்த ஹைத்தி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இன்னல்களைச் சரி செய்து மக்களை காப்பாற்றி வருவது பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் தான் என நீங்கள் எண்ணியிருந்தால் உங்களை ஆண்டவர் மன்னிப்பாராக. 1998லிருந்து 350 கூப மருத்துவ ஊழியர்கள் ஹைத்தி மக்களுக்கு மருத்துவம் செய்து வருகின்றார்கள். நில நடுக்கம் ஏற்பட்ட உடனே இந்த 350 பேர் கொண்ட மருத்துவக்குழு வேலையில் இறங்கியது. வட அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்து அரசிடமிருந்தும் உதவிகள் வரும் என்று உலக ஊடகங்கள் கூவிக்கொண்டிருந்த வேளையில், நூற்றுக்குமேற்பட்ட கூப மருத்துவர்களும், செவிலியர்களும் எந்த ஒரு சிறு அறிவிப்பும் இன்றி ஹைத்தியில் வந்திறங்கினார்கள். பெரும்பாலான நாடுகளின் உதவிக்குழுக்கள் வழமை போலவே கூப மருத்துவர்கள் குழுவையும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவையும்(Doctors without Borders) தனியே விட்டு விட்டு இரண்டு மாதங்களில் பெட்டியைக் கட்டிக்கொண்டு தங்கள் நாடுகளுக்கு பயணமாகினார்கள். கூப மருத்துவ குழுவும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவும் தான் ஏழ்மையில் வாடும் மேற்கிந்திய தீவு மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் முதன்மை அமைப்புகளாகும்.
2010 ஒக்டோபரில் இருந்து இன்று வரை 30,000ற்கும் அதிகமான காலரா நோயாளிகளை 40 மருத்துவ மையங்களில் உள்ள கூப மருத்துவக்குழு குணப்படுத்தியுள்ளது என தற்பொழுது வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஹைத்தியில் உள்ள 40விழுக்காடு காலரா நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ள கூப மருத்துவர்கள் குழு தான் ஹைத்தியிலுள்ள மிகப்பெரிய வெளிநாட்டு மருத்துவக்குழு ஆகும்.இதுமட்டுமன்றி அண்மையில் ஹைத்தியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒரு குறிப்பிட்ட நோயினால் மரணமடைவதை அறிந்ததும் கூபாவின் இயற்கைப் பேரழிவு, சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட அவசர காலக் குழுக்களில் ஒன்றான ஹென்றி ரீவ் மருத்துவ படையணியும் ஹைத்திக்கு வந்து சேர்ந்தது.
கூபாவில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மருத்துவ மையமான Escuela Latinoamericana de Medicina en cuba (Elam)வில் 1998லிருந்து 550 ஹைத்தி மருத்துவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளது. மேலும் பணம் இல்லாத காரணத்தினால் தனது நாட்டில் மருத்துவம் படிக்க முடியாத திறமையான 400 மாணவர்கள் இன்று கூபாவில் மிக மிக குறைந்த செலவில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றார்கள்.
கனடாவின் டல்கௌவுசி பல்கலைக்கழகத்தில் இலத்தின் அமெரிக்க கற்கைகளுக்கான விரிவுரையாளர் சான் கிர்க் கூபாவின் பன்னாட்டு மருத்துவக்குழுக்களைப் பற்றி பகுப்பாய்வு (Research) செய்துள்ளார். அவர் கூறுகையில்
“ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்”.
இது ஏதோ இன்று புதிதாக நடக்கும் ஒன்றல்ல, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டுக்கு 1960ல் ஒரு மருத்துவ படையணி சென்றதையும், 1963ல் அல்சீரியா நாட்டிற்கும் 50 பேர் கொண்ட மருத்துவக்குழு சென்ற தகவல்களும் உலகால் மறைக்கப்பட்ட ஒன்று தான். புரட்சி நடந்து நான்கு ஆண்டுகளில் மேற்கூறிய நிகழ்வுகளை கூபா நடத்தி காட்டியது. இந்த காலகட்டத்தில் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட(7,000) மருத்துவர்கள் வட அமெரிக்காவை நோக்கி பறந்து கொண்டிருந்த காலம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்று பல நாடுகளுக்கு பயணம் செய்யும் மருத்துவ குழுக்கள் மூலமாக கூப நாட்டிற்கு பல நண்பர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளார்கள் .
இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த திட்டம் என்றால் “ஒப்பரேசன் அதிசயத்தை” கூறலாம். கூபாவிற்கு வெனிசுவேலா கொடுக்கும் எண்ணெய்க்கு பதிலாக கூப கண் மருத்துவர்கள் வெனிசுவேலாவில் ஏழ்மையில் வாடும் கண் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே அத்திட்டமாகும். இந்த திட்டத்தை தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் கண் தொடர்பான பிரச்சனைகள் கூப மருத்துவர்களால் களையப்பெற்று அவர்களுக்கு எல்லாம் கண் பார்வை மீளக்கிடைத்துள்ளது. இதில் 1967 சே குவாராவைக் கொன்ற பொலிவிய காவலாளியான மரியோ தெரனும் அடங்குவார் (அவரது கண் பார்வையையும் மீட்டுக்கொடுத்தது கூப மருத்துவக்குழுவே).
கத்ரினா புயலுக்குப் பின்னர் பல வட அமெரிக்க மருத்துவர்களும் (முன்னாள் கூபர்கள்) ஹென்றி ரீவ் மருத்துவ படையணியில் சேர்ந்துகொண்டார்கள். இந்த மருத்துவ படையணி தான் 2005ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிசுதானுக்கு முதலில் சென்று மருத்துவ உதவி செய்தது, வழமை போலவே மற்ற எல்லா தொண்டு நிறுவனங்கள் கிளம்பிய பிறகும், ஆறு மாதங்கள் கழித்தே இவர்கள் நாடு திரும்பினார்கள்.
விரிவுரையாளர் கிர்க் மேலும் கூறுகையில்
“உலக நாடுகளில் வாழும் மக்களுக்கு ஆதரவளிப்பது(Solidarity) என்ற கொள்கைக்காக மட்டும் இல்லாமல் கூப அரசியலமைப்பில் உள்ள வறுமையில் வாடும் நாடுகளுக்கு தேவைப்படும் பொழுது எல்லாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே இம்மருத்துவ படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. “கூபாவில் குறைந்த அளவு மட்டுமே ஊதியம் பெறும் இம்மருத்துவர்கள் இந்த குழுக்களுடன் பயணிப்பதன் மூலம் அதிகமான ஊதியம் கிட்டுவதுடன், தாங்கள் படித்த நோய்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு அதை தடுக்கும் வழிமுறைகளில் அவர்கள் ஈடுபடவும் உதவுகின்றது. அதிபர் பிடலின் முக்கியக் கொள்கையான இந்த மருத்துவ குழுக்களினால் ஐக்கிய நாடுகள் சபையில் கூபாவிற்கு ஆதரவாக வாக்குகளும் விழுந்துள்ளது”.
எல் சாவேதார், மாலி, கிழக்கு திமோர் உள்பட 77 வறிய நாடுகளில் 25,000 கூப மருத்துவர்களும்(கூபாவின் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு), 10,000ற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களும் வேலை செய்து வருகின்றார்கள். இவ்வளவு மருத்துவர்கள் கூபாவை விட்டு வெளியே பணியாற்றி வந்த போதும் கூபாவில் 220 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் உள்ளது என்பதும், இது தான் உலகிலேயே முதல் பெரிய விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 370 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே இதற்கு அடுத்ததாகும். எங்கெல்லாம் கூப மருத்துவர்கள் அழைக்கப்படுகின்றார்களோ அந்த பகுதிகளில் எல்லாம் அவர்கள் நோயை தடுக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியும், வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்வதும், குறிப்பாக பிரசவ கால பெண்களின் உடல்நிலையையும், குழந்தைகளின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்தும் வருகின்றார்கள். இந்த முறைகளின் மூலமாக “மிகப்பெரிய வித்தியாசத்தை” எல் சாவேதார், கௌதமாலா, கோண்டுராஸ் நாடுகள் கண்டுள்ளன. பிரசவ கால, குழந்தைகள் இறக்கும் விகிதம் குறைந்துள்ளது, குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் விழுக்காடு குறைந்தும் உள்ளது. மேலும் அந்தந்த நாடுகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு தேவையான் பயிற்சியையும் இந்தக்குழு அளிக்கின்றது என சான் கிர்க் தனது பகுப்பாய்வின் மூலம் நிறுவி உள்ளார்.
கூபாவில் மருத்துவ பயிற்சி ஆறு ஆண்டுகாலமாகும்(இங்கிலாந்தை விட ஒரு ஆண்டு அதிகம்). பயிற்சி முடிந்த பின்னர் ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர்களாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வேலை செய்யவேண்டும். இவர் வாழும் சமூக கூட்டமைப்பில் உள்ள 150லிருந்து 200 மக்களுக்கு மருத்துவம் பார்க்கவேண்டும், இவருக்கு உறுதுணையாக ஒரு செவிலியர் இருப்பார்.
இந்த திட்டத்தின் மூலமாக கூபா உலகில் எந்த நாடும் அடைய முடியாத பல்வேறு மருத்துவ முன்னேற்றங்களை அடைந்துள்ளது, ஆனால் ஒரு இதற்காக ஒரு ஆண்டிற்கு நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செலவு 400 டாலர் மட்டுமே. இதுவே இங்கிலாந்தில் நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செல்வு 3000 டாலர்களாகவும், வட அமெரிக்காவில் 7,500 டாலர்களாகவும் இருக்கின்றது என பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டிலுள்ள மருத்துவதுறையில் செயல்பாடுகளை அறியும் மிக முக்கியமான குறியீடான பிரசவத்தின் போது குழந்தைகள் இறக்கும் விகிதம் 1000ற்கு 4.8 ஆக உள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள விகிதத்திற்கு சமமாகவும், வட அமெரிக்காவில் உள்ள விகிதத்தை விட குறைவானதும் ஆகும். நீண்ட கால உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிறந்த குழந்தையின் எடையாகும். கூபாவில் 5 விழுக்காடு குழந்தைகளே பிறக்கும் போது குறைவான எடையுடன் பிறக்கின்றார்கள். மேலும் பிரசவ காலத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதத்தில் இலத்தின் அமெரிக்காவிலேயே கூபா தான் மிகக்குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடாகும். இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) எடுக்கப்பட்டவையாகும். கூபாவில் உள்ள மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவசர மற்றும் சிறப்பு மருத்துவ மையங்கள் குடும்ப மருத்துவமையங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவையாகும், இந்த மையங்களில் முழு நேர மருத்துவ ஆலோசகர்களும், சிறப்பு மருத்துவர்களும் உள்ளார்கள். இந்த இரண்டு மையங்கள் மூலமாகவும் 15,000லிருந்து 20,000 வரையிலான நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெறுகின்றார்கள்.
கூபாவின் மூன்றாவது பெரிய நகரமான காமாகுவேயில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ ஊழியர்களுக்கான பயிற்சிப்பட்டறையை தலைமை ஏற்று நடத்தும் டெர்பியைச்(இங்கிலாந்து) சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான இமிதி சோனாரா கூறுகையில் “கூபாவில் உள்ள மருத்துவத்துறை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக குடும்ப மருத்துவர்கள், அவர்களின் தன்னார்வம் நோய் உருவாகும் வாய்ப்புகளை தடுக்கின்றது…இதில் வேடிக்கையான நிகழ்வென்னவென்றால் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்து வந்து தேசிய சுகாதார மையம்(NHS) எவ்வாறு வேலை செய்கின்றது என பார்த்து கற்றுக்கொண்டு, அதை மேலும் முறைப்படுத்தி அடுத்த நிலைக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளார்கள், ஆனால் இங்கிலாந்தோ இன்று வட அமெரிக்கா மாதிரியை( (தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்தது) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது”.
கூப மருத்துவதுறையில் பெரும்பாலான இடங்களில் அரசியல் ஊடுவிச்செல்கின்றது. வட அமெரிக்காவின் தடையின் மூலமாக(வட அமெரிக்கா மற்ற நாடுகள் கூபாவுக்கு மருத்துவ கருவிகள் ஏற்றுமதி செய்வதையும் தடுத்து வருகின்றது) தங்களுக்கு கிடைக்காத மருந்துகள், மருத்துவ கருவிகளின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் மருத்துவ மனைகள் தயார் செய்து அரசிடம் கொடுக்கின்றன. 2009/10 ஆண்டிற்கான பட்டியலில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள், எச்.இ.வி, அர்திரிடீசு நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள், சில மயக்க மருந்துகள், நோய்களை கண்டறியவும், உடல் உறுப்புகளை பாதுகாப்பாக வைக்க உதவும் சில வேதிப்பொருட்களும் தங்களிடம் இல்லை என அறிவிக்கின்றது. கூபாவில் உள்ள மருந்தகங்களை ஒரு நீண்ட வரிசையிலான மக்களைக் கொண்டு எளிதாக அடையாளம் காணலாம், ஒரு சில முறையான மருந்துகள் மட்டுமே ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள மருந்துகள் எல்லாம் ஒழுங்கற்றே வைக்கப்பட்டிருக்கும்.
சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் அந்தோனியோ பெர்ணான்டசு கூறுகையில் “எங்களுக்கு தேவையான் 80 விழுக்காடு மருந்துகளை நாங்களே உற்பத்தி செய்கின்றோம், மீதமுள்ள 20 விழுக்காடு மருந்துகளை சீன, முன்னாள் சோவியத் நாடுகள், ஐரோப்பிய நாடுகளிடமமிருந்து(எங்களுக்கு மருந்துகளை கொடுக்கும் மற்ற நாடுகளிடமிருந்தும்) இறக்குமதி செய்து கொள்கின்றோம். தொலைத்துரத்திலிருந்து இந்த மருந்துகள் வரவேண்டி இருப்பதால், இதற்கான செலவு மிக அதிகமாகின்றது” என்கின்றார்.
மொத்ததில் பார்க்கையில் ஹைத்தியிலும், மற்ற வறிய நாடுகளிலும் தாங்கள் செய்யும் பணிகளைக் கண்டு கூப மக்களுக்கு மகிழிச்சியே, உலக நாடுகளில் தங்களது தகுதிக்கும் அதிகமான மருத்துவ பணிகளையே அவர்கள் செய்துவருகின்றார்கள். வெளிநாடுகளில் பகுதி மருத்துவர்கள் இருப்பதால் உள்நாட்டில் மருத்துவர்களைப் பார்க்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக சில மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். எல்லா பொருட்களைப் போலவே மருந்துப் பொருட்களும் கூபாவில் கள்ளச் சந்தைகளில் கிடைக்கின்றது. இதை கள்ளச்சந்தையில் வாங்கும் போதோ, விற்கும் போதோ பிடிபட்டால் அவர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.
பன்னாட்டு பயணம் என்பது கூபர்களுக்கு இயலாத ஒன்று, ஆனால் தகுதி வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது பயிற்சி முடிந்து பின் இது போன்ற மருத்துவ குழுக்களில் இருப்பதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு பல நாடுகளைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது.
எல்லா உழைக்கும் மக்களைப் போலவே, மருத்துவர்களுக்கும் குறைவான மாத ஊதியமே(20 டாலர்) வழங்கப்படுகின்றது. அரசு தரப்பு ஆவணங்களில் இல்லாத ஊழல் மருத்துவ துறையின் சில இடங்களில் காணப்படுகின்றது. தங்களுக்கு தேவையான சிகிச்சைகளில் முன்னுரிமை வழங்குவதற்காக மருத்துவர்களுக்கு தேவையான உணவையோ அல்லது சில பெசோக்களையோ(கூப நாட்டு ரூபாய்) நோயாளிகள் மருத்துவர்களுக்கு கொடுக்கின்றார்கள்.
பன்னாட்டு மருத்துவதுறையை கட்டமைப்பதென்பது கூபாவின் மிக முக்கியமான செயலுத்தியாகும். ஹைத்தியில் அரசின் பொது மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக கூப அரசு அதிகாரிகள் பிரேசிலுடனும், வெனிசுவேலாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். இதில் இவ்விரண்டு நாடுகளுமே இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஏதுவாக உள்ளன.
கூபா நடத்தும் மருத்துவ பயிற்சிகள் மற்றுமொரு முன்மாதிரியாகும். 30ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள 8,281 மாணவர்கள் Escuela Latinoamericana de Medicina en cuba (Elam)ல் மருத்துவ பயிற்சி மேற்கொண்டுவருகின்றார்கள். Elam மருத்துவ மையம் கடந்த மாதம் தனது பதினொன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள வறிய சமூகங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனையையும் மாணவர்கள் மனதில் பதியவைக்க எண்ணியுள்ளது கூப அரசு.
வட அமெரிக்காவிலிருந்து கூபா வந்து மருத்துவம் பயிலும் 171 மாணவர்களில்(இதில் 47 மாணவர்கள் ஏற்கனவே படித்து முடித்து விட்டார்கள்) ஒருவரான டேமியன் சோயல் சுவாரேசு கூறுகையில் “இங்கு சேகுவார ஒரு தேசிய தலைவர் ஆவார், ஆனால் அவரை நாங்களும் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு ஒருவரும் எங்களை வற்புறுத்துவதில்லை” என்கிறார். மேலும் அவர் கூபாவின் பரப்புரை இயந்திரங்களில் Elam ஒன்று என்பதையும் அவர் மறுதளித்துள்ளார்.
இலத்தின் அமெரிக்க கண்டத்தில் ஒரு இலட்சம் மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று 2005ல் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பிடல் காசுட்ரோவும், ஊகோ சாவேசும் இணைந்து உருவாக்கிய El Nuevo Pograma de Formacion de Medicos Latinoamericonos திட்டத்தில் இதுவரை 41,000 மாணவர்கள் இதுவரை பதியப்பட்டு அவர்களுக்கான மருத்துவ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விமர்சிப்பவர்கள் இதில் பயிற்சி பெறும் மாணவனின் திறமை எவ்வாறு இருக்கும் என கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.
ஆனால் மேற்கூறிய விமர்சனத்தை மறுக்கும் விரிவுரையாளர் கிர்க்
“இலண்டன், டோராண்டோவில் மக்களுக்கு வழங்கப்படும் அதி நவீன மருத்துவ சிகிச்சை என்பது மூன்றாம் உலக நாடுகளில் வறுமையில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவை இல்லாதது. கூபர்கள் வழங்கும் மருத்துவ பயிற்சிகளை விமர்சிப்பதென்பது இவர்களுக்கு எளிதான ஒன்று, ஆனால் மருத்துவர்களே இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவர் கிடைப்பதென்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வேயாகும்”.
கண்டிப்பாக கிர்க் மேற்கூரிய கருத்தை தொன்னூறு இலட்சம் ஹைத்தி மக்களும் ஒப்புக்கொள்வார்கள்.
__________________________________________________
மூலப்பதிவு: Cuban medics in Haiti put the world to shame
உலகம் இதுவரை கற்பித்து வந்த கம்யூனிசுட்டுகள் எல்லாம் உலகை அழிக்க வந்தவர்கள் என்ற மெக்கார்த்தேயிச கற்பிதத்தை பொடிப்பொடியாக்கும் இது போன்ற உண்மையான நிகழ்வுகள் எல்லாம் உலக ஊடகங்களில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்ப்பது அறிவீனம். “நடுநிலைமை” எனக்கூறும் உலக ஊடகங்கள் எல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மருத்துவர்களின் பணி நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல அந்த நோய் வராமல் தடுப்பது என்ற அடுத்த கட்ட தாவலை கூப மருத்துவ துறை எப்பொழுதோ எட்டிவிட்டது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ மனைகள் எல்லாம் இறந்த பிணத்தை வைத்துக் கூட எப்படி பணம் கறக்கலாம் என எண்ணும் போது, அவர்கள் நோயை குணப்படுத்தினாலே அது ஒரு பெரிய விடயம் தான், இதில் நீங்கள் கூபாவைப் போல நோயை தடுக்கும் நிலை வேண்டும் என்று எண்ணினால் கண்டிப்பாக உங்களுக்கு பித்து பிடித்து விட்டது எனத்தான் உங்கள் உறவினர்களும், நண்பர்களும் எண்ணுவார்கள். மக்களின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் இந்திய சனநாயகவாதிகள் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான மருத்துவ துறையை இலாபத்தை மட்டுமே தனது குறியாகக் கொண்ட தனியாரிடம் முழுமையாக விற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையே நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நமக்கு கூறுகின்றன. இதைப் பற்றி ஒரு நண்பரிடம் விவாதிக்கும் போது அவர் கூறியது “இந்தியாவில் இந்நிலையில் உங்களுக்கு இருக்கவிருப்பமில்லை எனில் நீங்கள் ஏன் மருத்துவம், கல்வி போன்றவற்றை இலவசமாகவே வழங்கும் கூபாவிற்கோ, வெனிசுவேலாவிற்கோ செல்லக்கூடாது” என்பதே. இது தான் இன்றைய இந்தியாவின் சனநாயகம் (சர்வாதிகாரம்)………மொழிபெயர்ப்பு : ப.நற்றமிழன்
__________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!
- மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!
- உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?
- பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
- ஏழையின் கண்கள் என்ன விலை?
- பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- பெற்ற மகளை விற்ற அன்னை !
கூபா மருத்துவத்துறை ஹைத்தியில் என்ன செய்தது என உங்களில் யாருக்காவது தெரியுமா ? | வினவு!…
ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்…
இதனால் அறியப்படும் நீதி யாதெனில் கம்யூனிஸ்ட்களே யோக்கியர்கள்… அவர்களே நீதிமான்கள்…
[…] This post was mentioned on Twitter by வினவு, Kirubakaran S. Kirubakaran S said: கூபா மருத்துவத்துறை ஹைத்தியில் என்ன செய்தது என உங்களில் யாருக்காவது தெரியுமா? http://feedly.com/k/ga1NL2 […]
கம்யூனிஸ்ட்டுகள் வேறு, மக்கள் வேறு இல்லை என்கிறபோது கம்யூனிஸ்ட்டுகள்தான் நீதிமான்கள்.
கூபா மருத்துவர்களின் சேவை பாராட்டிற்க்குரியது.
கூபாவில் இதர துறைகள் ஊழல் மலிந்து சீரழிந்துவிட்டன். ஃபிடல் பற்றி வினவு இதுவரை பேசவே இல்லை. ஒரு கட்டுரை எழுதலாமே ?
இந்திய மருத்துவதுறை தனியார்வசமாவது பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
முற்றாக தனியார்வசம் ஆகபோவதில்லை. யாரும் அப்படி சொல்வதில்லை.
அடிப்படை பிரச்சனையே அரசு அளிக்கும் / அளிக்க வேண்டிய சேவைகளில் ஊழல் மற்றும் அக்கரையின்மை. அரசு ஊழியர்கள் என்பதால், வேலை போகும் அபாயம் இல்லாதவர்களாக இருப்பதால், பலரும் மெத்தனம் மற்றும் பொறுப்பில்லாமல், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், பணிகளை நேர்மையாக செய்யாமல் ஓ.பி அடிக்கின்றனர். இதற்க்கு விதிவிலக்குகள் பல உண்டு. அதிகாரிகள், அமைச்சர்கள் அளவில் நடக்கும் கொள்ளை / ஊழல் மிக மிக மிக அதிகம்.
பல ஆயிரம் கோடிகள் கொட்டினாலும், சரியாக பயன் படுத்தப்படவில்லை. அரசு இந்த அடிப்படை தேவைகளுக்கு ஒழுங்காக வரி வருமானத்தை செலவு செய்யாமல், இலவசங்கள்யும், ராணுவ செலவுகளையும் செய்வதற்க்கு, ‘தனியார்களை’ குறை சொல்லி பிரயோசனமில்லை.
ஏழைகளும் முடிந்தவரை தனியார் மருத்துவர்களையே நாடுகின்றனர். வேறு வழியில்லாவிட்டால் தான் அரசு மருத்துவமனைகள். காரணம் என்ன ? 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவ சேவைகளில் இருந்த நேர்மை மற்றும் அர்பணிப்பு இன்று இல்லை. இதிலும் பல விதிவிலக்குகள் உள்ளன. ஒரு குறிப்பிட சத பணியாளர்கள் நன்றாக, நேர்மையாக, திறம்பட பணி புரிகின்றனர்.
ஊழல்மயமானதை மாற்ற ஒரே வழி : ஒப்பந்த அடிப்படையில் அனைத்து பணியாளர்களையும் நியமித்து, அவர்களின் செயல் திறன் மற்றும் நேர்மை அடிப்படையிலே மட்டும் சம்பளம் மற்றும் பதவி உயர்வை அளிக்க வேண்டும். ஆனால் பணியாளர்கள் சங்கங்கள் மற்றும் இடதுசாரிகள் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். நிலைமை அப்ப இப்படியே தொடர வேண்டியதுதான்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அரசு மருத்துவ சேவைகள் மிக சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் வட மாநிலங்களின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை.
திருவாளர் தாராளவாதி இதையாவது ஏற்றுக் கொண்டாரே மெச்சாமல் இருக்கலாமோ!
ஆனலும்செய்தி இருட்டடிப்புப் பற்றி ஒரு வார்த்தை இல்லையே. ஏன்?
கியூபாவின் கல்விச் சேவை பற்றி யாராவது சொன்னால் அதுவும் பரவாயில்லை என்று திருவாளர் தாராளவாதி ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்.
கியூபாவின் பொருளாதரப் பலவீனத்துக்குக் காரணமே அமெரிக்கா விதித்துள்ள வணிகத் தடை தான். அதைப் பற்றியும் பேசலாமே!
கியூபா இயற்கை அனர்த்தங்கட்கு அடிக்கடி முகங்கொடுக்கும் ஒரு நாடு. எனினும் 2009இல் வீசிய ஒரு பெரும் புயலில் யாரும் உயிரிழக்காமல் மக்கள் அப்புறப் படுத்தப்பட்டுவிட்டனர். இது “சீரழிந்த” எந்தத் துறையின் சாதனையோ தெரியவில்லை.
(அமெரிக்கா கத்ரீனாவுக்கு முகம் கொடுத்த விதம் பற்றி இங்கு நான் யாருக்கும் நினைவூட்ட வேண்டியதில்லை).
கியூபாவின் சாதனைகளை கியூபா முகங்கொடுக்கும் பலமான பகைச் சூழல் ஒன்றின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
அமெரிக்க கஸ்ற்ரோவைக் கொல்ல எடுத்த முயற்சிகளளவுக்கு உலகத் தலைவர் வேறெவர் மீதும் கொலை முயற்சிகள் மேற்கொள்ளாப்பட்டனவா என்று நிச்சயமில்லை.
கியூபா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாடல்ல.
ஆனால் தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு.
செய்தி இருட்டடிப்பு என்பதை ஏற்க்கவில்லை. கூபா மருத்துவர்களுக்கு இணையாக, Doctors Sans Borders என்ற அமைப்பும் பணி புரிவதாக இக்கட்டுரை கூறுகிறது. அவர்களை பற்றி மட்டும் செய்திகள் இருட்டடிப்பு செய்யாமல் வெளிவருகிறதா என்ன ? இரண்டு குழுவினருக்கும் ஒரே அளவில் தான் செய்திகள் என்றே படுகிறது. இதில் எல்லாம் பெரிய சதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
வணிக தடை ஒரு காரணம் தான். ஆனால் சீர்கேடுகளுக்கு அதை மட்டும் காரணமாக சொல்ல முடியுமா என்ன ? ஊழல் மற்றும் அதிகாரம் ஒரு குடும்பத்தினரிடன் நிரந்தரமாக குவிக்கப்பட்டதற்க்கும் அமெரிக்கா தான் காரணமா ? 1991 வரை சோவியத் ரஸ்ஸியாவின் ஆதரவு இருந்தது. ஆனாலும் பல லச்சம் கூபார்கள் அகதிகளாக வெளியேரிக்கொண்டே இருந்தனர். கூபா பற்றி புகழும் மார்க்சியர்கள் யாரும் கூபாவிற்க்கு புலம் பெயர முயலவில்லை. அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்குதான் சென்றனர்.
கியூபாவைப் பற்றி அவதூறுகள் பரப்பப்பட்ட அளவுக்கு முக்கியமான உண்மைகள் சொல்லப்படாமைக்குப் பேர், இருட்டடிப்பு இல்லையானால் வெள்ளையடிப்பா?
கியூபாவில் குடும்ப ஆட்சியோ அதிகாரமோ இல்லை.
ரவுல் கஸ்ற்றோ தொடக்கக் கால விடுதலைப் போராளித் தலைவர்களில் எஞ்சியிருக்கும் ஒருவர்.
சே இறந்திராவிடின் அவர் அந்த இடத்தில் இருந்திருக்கக் கூடும். (எனினும், சே ஒரு வித்தியாசமான சர்வதேசப் புரட்சிவாதி. ஆர்ஜென்டினாவில் பிறந்து கியுபாவுக்காகப் போராடிய அவர் அனேகமாக கியூபாவுக்கு வெளியே தான் தனது பணியைத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருந்திருப்பார்).
கியூபாவின் அரச நிர்வாகத்தில் சற்றுத் திறைமைக் குறைவு இருக்கலாம்.
அது ஏற்றுக் கொள்ளப் பட்ட விடயம். ஆனால் ஊழல் பற்றி யாருமே பேசியதில்லை.
ஆதாரமிருந்தால் தாருங்கள்.
அமெரிக்கா ஒரு குற்றவாளி அரசு.
“அகதிகள்” வெளியேற்றத்துக்கு முக்கிய காரணம் பொருளாதரம் அமெரிக்காவால் திட்டமிட்டு முடக்கப் பட்டமை தான்.
போக, கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா செங்கம்பளம் விரித்துள்ளதே.
//கியூபாவைப் பற்றி அவதூறுகள் பரப்பப்பட்ட அளவுக்கு முக்கியமான உண்மைகள் சொல்லப்படாமைக்குப் பேர், இருட்டடிப்பு இல்லையானால் வெள்ளையடிப்பா?//
இருட்டடிப்பும் இல்லை, வெள்ளையடிப்பும் இல்லை. கியூபாவின் medical diplomacy பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பதுதான். அமெரிக்காவின் PBஸ் T.V யில் கியூபாவின் மருத்துவ கல்வி பற்றிய காணொளி இதோ
கியூபா பற்றித் தமிழர்களுக்குச் சொல்லப் பட்டு வருவது என்ன?
உலக அளவில் பெரும் ஊடகங்கள் சொல்லுவன என்ன?
யூ-ட்யூப் எல்லாரும் படிக்கிற ஒரு இணையத்தளமா?
//கியூபா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாடல்ல.
ஆனால் தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு.//
உண்மைத் தானுங்க !!!
//கியூபா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாடல்ல.
ஆனால் தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு.//
இந்த உயர்ந்த பண்பிற்கு ஒரு உதாரணம் தர முடியுமா?
//கியூபா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நாடல்ல.
ஆனால் தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு.//
இது க்யூபாவின் சார்பாக உங்கள் கருத்தா? அல்லது க்யூபாவின் நிலைப்பாடா என்பதை அறிய ஒரு உதாரணம் தர முடியுமா?
//முற்றாக தனியார்வசம் ஆகபோவதில்லை. யாரும் அப்படி சொல்வதில்லை.//
ஆமாம் ஆமாம் நீங்கள் மக்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டு விவாதம் நடத்தித்தான் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துகிறீர்கள் பாருங்க. ஏன் சார் அடிக்கடி காமடி பண்றீங்க.
வினவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும், வினவு தளம் ஜனநாயகத்தோடு தான் இயங்குது. எப்படின்னா குறை கண்டு பிடிச்சு சொல்றதுல வினவு சரியான விகிதாசாரத்தில் தம் பணியை செய்யுது. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக படுகொலைகள், இந்துத்வாவின் அக்ரமங்கள், முதலாளித்துவம்ன்னு மாறி மாறி வாய்ப்பு தர்றிங்க. அதே நேரம் சிறுபான்மையினருக்கும் சரியான விகிதாசார முறைப்படி இடம் தந்து பாதிரிகளின் காமம், முஸ்லீம் பெண்களின் நிலைன்னு கட்டுரை ஒதுக்கீடு அற்புதமா இருக்கு. என்ன ஒரு வருத்தம்னா”நீங்க திட்டுறதுக்கு கூட அருகதை இல்லாம்ம கம்யூனிஸ்டகள் இருக்காங்களே”ன்னு. அடுத்த மக்கள் புரட்சி சீனாவில்ன்னு ஒரு பதிவு போடுங்க. த்ரில்லா இருக்கும். எங்களுக்கும் ஒரே மாதிரி பதிவு படிச்சு படிச்சு ஃபோர் அடிக்குது.
உண்மைத் தான் இதனால் என்னவோ சீனாவில் திடிர்னு ட்விட்டர் ( சீனா வெர்சனாம் ) தடைப்பண்ணிட்டாங்க .. எங்கே தக்ரீர் சதுக்கம் இன்னொரு தியன்னமன் சதுக்கம் சீனாவில் சாங்காய் வட்டத்தில் வந்துரும் என்று ஒரு பயம்…..
வினவு ஆசைப்படுகிற சுத்த சன்மார்க்க கம்யூனிசம் உலகில் எங்குமே இல்லை, க்யூபாவும் சீனாவின் பாணியை பின்பற்றத் தொடங்கி விட்டது. 76 தொழில் செய்ய உரிமைக் கொடுத்துடுச்சு !!! உலகத்தொடு ஒட்ட ஒழுகல் !!
Good article
pidal is the real hero
இந்திய மருத்துவத்தின் பண நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் இந்திய மக்களுக்கு உண்மையான மருத்துவம் இல்லை.
///ஏழைகளும் முடிந்தவரை தனியார் மருத்துவர்களையே நாடுகின்றனர். வேறு வழியில்லாவிட்டால் தான் அரசு மருத்துவமனைகள்.///
மேலும், நீங்கள் ஏழைகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? நடுத்தர வர்க்கத்தையா!
சோசலிச வரையரையில் க்யூபாவை சேர்க்கும் எனறு வினவை எதிர்பார்க்கவே இல்லை.
பன்னாட்டு மருத்துவத் திட்டம் என்றால் என்ன?
///இது ஏதோ இன்று புதிதாக நடக்கும் ஒன்றல்ல, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டுக்கு 1960ல் ஒரு மருத்துவ படையணி சென்றதையும், 1963ல் அல்சீரியா நாட்டிற்கும் 50 பேர் கொண்ட மருத்துவக்குழு சென்ற தகவல்களும் உலகால் மறைக்கப்பட்ட ஒன்று தான். புரட்சி நடந்து நான்கு ஆண்டுகளில் மேற்கூறிய நிகழ்வுகளை கூபா நடத்தி காட்டியது. இந்த காலகட்டத்தில் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட(7,000) மருத்துவர்கள் வட அமெரிக்காவை நோக்கி பறந்து கொண்டிருந்த காலம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.///
இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, இது போன்ற மருத்துவக் குழு 1960 கால கட்டங்களிலேயே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுவது உலகால் மறைக்கப்பட்டதாக கட்டுரையில் சொல்லியிருப்பது. உண்மைதான். ஆனால் இதற்கு முன் வினவில் கூட இவை பற்றிய செய்தி வரவில்லையே, ஏன்? கியூபா பற்றி ஒருவித மௌனம் காத்து வந்தது ஏன்? இரண்டாவது கேள்வி, கியூபாவைப் பற்றி பொதுவாக ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லுவார்கள். ஆனால் வினவு தன்னுடைய பதிவுகளில் இது குறித்து (கியூபா ஒரு கம்யூனிச நாடு) தன்னுடைய நிலைப்பாட்டை எதுவும் சொல்லாமல் திடீரென மேலே உள்ள பாராவில் “புரட்சி நடந்து நான்கு ஆண்டுகளின் மேற்கூறிய நிகழ்வுகளை கூபா நடத்திக் காட்டியது” என்ற சொற்களை பயன்படுத்தியதால் புதுக் குழப்பம் ஏற்படுகிறது.
தயவு செய்து கியூபாவின் ஆட்சி, நிர்வாக முறை, அரசியல், பொருளாதார மற்றும் உலக முதலாளித்துவ கட்டமைவுடன் அதன் உறவு பற்றி வினவு விளக்க வேண்டும்.
பிரேம்,
கம்யூனிசம் என்பது நாடு என்ற எல்லைகளற்ற ஒரு நிலைக்குரியது. உலகில் எங்குமே கம்யூனிஸ நாடுகள் இருந்ததில்லை.
சோஷலிச நாடுகள் இருந்துள்ளன. அவற்றில் சோஷலிசம் எவ்வளவு நிறைவானது என்பதிற் கருத்து வேறூபாடுகள் உள்ளன. மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
வினவு கியூபாவை முதலாளிய நாடென்று ஒருநாளும் சொல்லவில்லையே.
அது போக வினவு எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது? எத்தனை நாடுகளைப் பற்றி எத்தனை கட்டுரைகளை வழங்கியுள்ளது?
“சோசலிச வரையரையில் க்யூபாவை சேர்க்கும் என்று வினவை எதிர்பார்க்கவே இல்லை.” என்று தொடங்கிப் பின்னூட்டங்களை அடுக்குகிறீர்கள்.
இது சேர்க்க வேண்டும் என்ற உங்கள் ஆசையா, அல்லது சேர்த்து விட்டது என்ற உங்கள் ஆட்சேபமா?
அன்று, சீனப்புரட்சிக் காலகட்டத்தில் இந்திய மருத்துவர்
Dr. கோட்னிசு, சீனா சென்று மருத்துவ சேவை செய்தார்.
ஆனால், இன்று ஏழை, எளிய, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு
மருத்துவ சேவை புரிந்த இந்திய மருத்துவர் Dr.பினாயக் சென் ஐ
கைது செய்து, சிறையில் அடைத்து, ஆயுள் தண்டனை
வழங்கியுள்ளார்கள்.செத்த பிணத்திற்கு வைத்தியம் செய்து
கொள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்டவர்களும்
இந்தியாவில்தான் உள்ளனர்.கியூபா போன்று புரட்சியில் புடம்
போடப்பட்டால்தான்,மனித நேயம் மிகுந்த, கியூபா,கெய்த்தி
போன்ற மருத்துவ சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாறுவது எப்பொழுது, இல்லை எனில்,
மாற்றுவது எப்பொழுது.
//கூபா பற்றி புகழும் மார்க்சியர்கள் யாரும் கூபாவிற்க்கு புலம் பெயர முயலவில்லை. //
கூபா எத்தனை நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியது தெரியுமா? கூபாவில் அகதித் தஞ்சம் கோரிய எல்லோரும் மார்க்சியர்கள் அல்ல, சில முற்போக்கு கத்தோலிக்க பாதிரிகளும் அடங்குவர்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய Black Panthers தலைவர் ஒருவரும் வேறு சில உறுப்பினர்களும் கூபாவில் புகலிடம் கோரி இப்போதும் அங்கே வாழ்கின்றனர். சிலியின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அதன் ஆதரவாளர்களுக்கு கூட அகதித் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, கியூப குடியுரிமையும் வழங்கப்பட்டது. எல்சல்வடோர், பிரேசில் போன்ற நாடுகளை சேர்ந்த “விடுதலை இறையியல்” பாதிரிகளும் சில வருடங்கள் கூபாவில் அகதியாக வாழ்ந்து விட்டு நாடு திரும்பியுள்ளனர்.
கூபாவில் இருந்து தப்பிக்க முயலும், தப்பி சென்ற பல லச்சம் மக்க்ளை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ? அவர்கள் அனைவரும் திரிபுவாதிகள், துரோகிகள் அல்லது முதலாளித்துவ கைக்கூலிகளா என்ன ? ஈழத்தில் இருந்து புலம் பெயன்ற அகதிகளுக்கு இணையானவர்கள் அவர்கள்.
ஒரு பினாயக் சென் கைதை பற்றி இத்தனை அறச்சீற்றம் காட்டுபவரகள், பல ஆயிரம் பினாயக் சென்களை கூபாவில் சிறையில் அடைத்தை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ?
http://polarch.sas.ac.uk/pdf_documents/TropicalGulag.pdf
n 1986 a “Tribunal on Cuba” was held in Paris to present testimonies by former prisoners of Cuba’s penal system to the international media. The gathering was sponsored by Resistance international and The Coalition of Committees for the Rights of Man in Cuba. The testimonies presented at the tribunal, before an international panel, alleged a pattern of torture in Cuba’s prisons and “hard labor camps”. These included beatings, biological experiments in diet restrictions, violent interrogations and extremely unsanitary conditions. The jury concurred with allegations of arbitrary arrests; sentencing by court martial with neither public audience nor defense; periods in hard labour camps without sufficient food, clothes and medical care; and the arrests of children over nine years old..
இன்றைய நிலை :
http://filipspagnoli.wordpress.com/2010/01/04/the-most-absurd-human-rights-violations-24-cuba-jailing-the-unemployed-for-dangerousness/
http://www.huffingtonpost.com/2010/09/13/cuba-government-layoffs-private-enterprise_n_715681.html
Castro has long complained that Cubans expect too much from the government, which pays average monthly salaries of just $20 but also provides free education and health care and heavily subsidizes housing, transportation and basic food. Because unemployment is anathema in a communist society, state businesses have been forced to carry many people who do almost nothing.
“Our state cannot and should not continue supporting businesses, production entities and services with inflated payrolls, and losses that hurt our economy are ultimately counterproductive, creating bad habits and distorting worker conduct,” the union said.
Fidel Castro caused a stir around the globe when he was quoted by visiting American magazine writer Jeffrey Goldberg as saying Cuba’s communist economy no longer works.
“Not only has he said things like this before, but the on-the-ground reality is that it is a truism that the Cuban model is not working, and that is why they are starting this large-scale experiment with privatization,” Goldberg told reporters.
//கூபாவில் இருந்து தப்பிக்க முயலும், தப்பி சென்ற பல லச்சம் மக்க்ளை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ? //
ஐம்பது மைல் தொலைவில் ஒரு பணக்கார நாடு இருந்தால் யார் தான் போக விரும்ப மாட்டார்கள்? அவர்கள் யாரும் தப்பிச் செல்லவில்லை. சோவியத் உதவி நிறுத்தப்பட்டவுடன் எழுந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஓடினார்கள். கூபா நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஹெய்த்தியில் இருந்தும் படகுகளில் சென்றார்கள். ஆனால் அமெரிக்கா கூபா நாட்டவரை மட்டும் அகதிகளாக ஏற்றுக் கொண்டது. அன்று அகதிகளாக சென்றவர்கள் கூபாவில் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். விடுமுறையில் கூபா சென்று திரும்புகின்றனர். அவர்கள் கூபா செல்வதையும், உறவினருக்கு பணம் அனுப்புவதையும் அமெரிக்க அரசு தான் தடுத்து வருகின்றது.
//சோவியத் உதவி நிறுத்தப்பட்டவுடன் எழுந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஓடினார்கள்.///
இல்லை. 70களிலும், 80களிலும் சோவியத் யூனியன் இருந்து, கூபாவிற்க்கு பெரும் உதவிகள் (முக்கியமாக அதன் சர்கரையை வாங்கிக்கொண்டு, குறைந்த விலையில் பெட்ரோலியம் மற்றும் இதர பண்டங்களை விற்று உதவி செய்த முறை) செய்த காலங்களிலும், கூபா மக்கள் படை படையாக நாட்டை விட்டு வெளியேற முயன்றனர்.
சோவியத் யூனியன், சீனா, வியட்நாம், வட் கொரியா, கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் என்று செம்புரட்சி உருவாகி, சோசியலிச பாணி அமைப்பு உருவான நாடுகளில், ஆரம்ப நாட்க்கள் முதலே மக்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்கள். பெர்லின் சுவர் உருவானதற்க்கு இது தான் காரணம். Vietnamese boat people பற்றி அறிந்திருப்பீர்கள்.
பணத்திற்க்கு ஆசைபட்டு மட்டும் அனைவரும் தப்பிக்க முயலவில்லை. அடிப்படை சுதந்திரம் தான் மிக மிக முக்கிய தேவை. சர்வாதிகாரத்தின் கீழ் அடிமை வாழ்வு வாழ விருப்பமில்லாத மக்கள் அவர்கள். அது என்ன வகை சர்வாதிகாரம் என்றாலும். இதெல்லாம் இப்ப எப்படி சொன்னாலும் உங்களுக்கு புரியாது. நிஜத்தில் அனுபவித்தால் தான் புரியும்.
க்யூபாவின் சில முதலாளித்துவ சீர்திருத்தங்களைத் தாண்டி புகழ்வதற்கு வேறு என்ன இருக்கிறது? ஒரு உண்மையான மார்க்சியவாதி க்யூபாவின் திசை வழியை ஆதரிக்க முடியுமா?
ஏன் கூபா இலங்கை அரசுக்கு வாக்களித்தது?
சீனாவின் தயவு க்யூபாவுக்கு தேவை. நண்பணின் நண்பன் நமக்கும் நண்பே…ண்டா!
இதற்கான விளக்கங்கள் பல இடங்களில் பலராலும் தரப்பட்டுள்ளன.
நான் கண்டவற்றுள் விளக்கமான ஒன்று:
http://radicalnotes.com/journal/2009/11/23/a-rejoinder-to-ron-ridenours-essay-on-sri-lanka/
சுருக்கமாக:
நீங்கள் வெறுமனே தமிழர்-இலங்கை அரசு என்ற கோணத்தில் பார்க்கிறீர்கள்.
ஐ.நா. தீர்மானம் வந்ததன் பின்னணியில், அமெரிக்கா மனித உரிமை மீறல்களைத் தண்டித்தல் என்ற பேரில் செய்து வந்துள்ளவற்றின் ஆழமான நோக்கம் இருந்தது. அது கியூபாவுக்கு முக்கியமானது.
.
.
[நாம் மறக்கக் கூடாத ஒன்று:
இலங்கைத் தமிழர் தலைமைகள், குறிப்பாகப் புலிகளும் 60 வருட அரசியலையுடைய பாராளுமன்றத் தமிழ்க் கட்சிகளும், ஏகாதிபத்தியத்தைத் தவிர எதையும் என்றும் ஆதரித்துப் பழக்கமற்றவர்கள்.
காஷ்மீர் விடயத்தில் கூட இந்திய அரசை நியாயப்படுத்துவோர்.
இப் பின்னணியில் அவர்கள் தமிழரைச் சர்வதேச ரீதியாக மிகவும் தனிமைப் படுத்தியுள்ளமையும் கவனிக்கத் தக்கது.]
//ஏன் கூபா இலங்கை அரசுக்கு வாக்களித்தது?//
“கூபா ஒரு கம்யூனிச நாடு – கூபா இலங்கை அரசுக்கு வாக்களித்தது – கூபா தமிழருக்கு எதிரானது – ஆகவே கம்யூனிசம் தமிழருக்கு எதிரானது.”
இது ஒரு நூதனமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்.
வழி மொழிகிறேன்..!
///கூபா பற்றி புகழும் மார்க்சியர்கள் யாரும் கூபாவிற்க்கு புலம் பெயர முயலவில்லை. அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்குதான் சென்றனர்.////
அதியமான், நீங்க கூட தான் free market capitalism சிறப்பாக செயல்படுத்தப்பட்ட நாடுகள் என்று புகழ ஒரு லிஸ்டே வெச்சிருக்கீங்க…
முதலாளித்துவத்தை, சுதந்திர வர்த்தகத்தை தேய்ந்த ரிகார்டு மாதிரி திரும்ப திரும்ப பேசும் எந்த முதலாளித்துவவாதியும் ஏன் இங்க இருந்து எங்க ஜீவனை உறிகிறீர்கள்??? உங்களுக்கு சுதந்திரமாக-சிறப்பாக இருக்கும் அந்த நாடுகளுக்கே கிளம்பிப்போக வேண்டியது தானே? 🙂 உங்களுக்கு வேண்டியது சுதந்திரம் தானே அங்கன போயி கூப்பாடு போட வேண்டியது தானே?
///முதலாளித்துவத்தை, சுதந்திர வர்த்தகத்தை தேய்ந்த ரிகார்டு மாதிரி திரும்ப திரும்ப பேசும் எந்த முதலாளித்துவவாதியும் ஏன் இங்க இருந்து எங்க ஜீவனை உறிகிறீர்கள்??? உங்களுக்கு சுதந்திரமாக-சிறப்பாக இருக்கும் அந்த நாடுகளுக்கே கிளம்பிப்போக வேண்டியது தானே? உங்களுக்கு வேண்டியது சுதந்திரம் தானே அங்கன போயி கூப்பாடு போட வேண்டியது தானே?///
அகாகி,
விசா தரமாட்டேங்கிறாங்களே. என்ன செய்வது ? அதனால் உம்மை போன்றவர்களுடன் இங்கு மாரடிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவும் கொஞ்சம் கொஞ்சமாக மேற் சொன்ன நாடுகளை போல வளமும், உண்மையான ஜனனாயகமும் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, in spite of people like you trying your best to prevent it !!
நான் பல விசியங்களை பற்றி பல தரவுகளுடன் விரிவாக எழுதிகிறேன். உருப்படியாக, ஆதாரபூர்வமாக விவாதிக்க துப்பில்லாமல், இப்படி எழுதுவது மட்டும் தான் உம்மை போன்றவர்களால் முடியும். தோழர் லெனின் அன்றே சொன்னார், உம்மை போன்ற ‘கம்யூனிஸ்டுகளை’ பற்றி : ‘useful idiots’ என்று !!!!! :))))))
http://answers.google.com/answers/threadview?id=135140
அதியமான்,
நீங்கள் கம்யூனிஸ்டுகள் ஏன் க்யூபாவில் சென்று குடியேறக்கூடாது என்று கேட்டால் அது விவாதம்… நான் உங்களை உங்கள் சுதந்திர நாட்டில் சென்று குடியேற சொன்னால் அது ‘விவாதிக்க துப்பில்லை’….
//இந்தியாவும் கொஞ்சம் கொஞ்சமாக மேற் சொன்ன நாடுகளை போல வளமும், உண்மையான ஜனனாயகமும் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது///
உங்களுக்கு இருந்தால் நம்பிக்கை!
நாங்கள் க்யூபாவை விட சிறப்பான, உண்மையான ஜனநாயகமுள்ள ஒரு நாடாக இந்த நாடும் மாற வேண்டும் என்று வேலை செய்தால், நம்பிக்கை கொண்டால் அது ‘useful idiots’ !!!!
என்னே ஒரு ஜனநாயக பண்பு?
இதில் தோழர்.லெனின் மேற்கோள் வேறு!
அரச்ச மாவ அறைக்காம, உருப்படியா விவாதிக்க துப்பில்லை என்றால், இப்படி தான்…
அகாகி,
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ?
விசா கிடைகாத காரணம் என்று சொன்ன பிறகும்,
இப்படி பிதற்றுகிறீர். கூபா, வட கொரியா போன்ற
நாடுகளுக்கு செல்ல அங்கு பெரிய தடை எதுவும் இல்லை.
கம்யுனிஸ்டுகளை தாரளமாக அனுமதிப்பார்கள். உங்களை
போன்றவர்களை அங்கு புலம் பெயர சொல்ல வில்லை.
ஆணையிடவும் இல்லை /கூடாது. ஆனால் நீர் தான் எம்மை
ஆணையிடுகிறீர். நான் கேட்டது, புலம் பெயர்பவர்கள் கூபாவை
தேர்வு செய்வதில்லை, ஏன் என்று தான் ?
//உங்களுக்கு இருந்தால் நம்பிக்கை!
நாங்கள் க்யூபாவை விட சிறப்பான, உண்மையான ஜனநாயகமுள்ள ஒரு நாடாக இந்த நாடும் மாற வேண்டும் என்று வேலை செய்தால், நம்பிக்கை கொண்டால் அது ‘useful idiots’ !!!!
என்னே ஒரு ஜனநாயக பண்பு?
இதில் தோழர்.லெனின் மேற்கோள் வேறு!///
இந்தியாவை உங்க விருப்பபடி மாற்ற வேலை செய்துகொள்ளுங்கள். அதை பற்றி
நான் ஒன்றும் சொல்லவில்லை. ’சோவியத் ரஸ்ஸியாவில் எந்த கொடுமைகளும் அன்று
நடக்கவில்லை. எல்லாம் முதலாளித்துவ ஊடகங்களின் பொய் பிரச்சாரம்’ என்ற வாதத்தை
அப்படியே நம்பிய அப்பவி கம்யூனிஸ்டுகளை பற்றிதான் லெனின் அப்படி சொன்னார்.
///அரச்ச மாவ அறைக்காம, உருப்படியா விவாதிக்க துப்பில்லை என்றால், இப்படி தான்…//
எது அரச்ச மாவு ? தர்க்கரீதியாக, தகவல்களுடன் எம் கருத்துகளை மறுக்க முடியாமல்,
தொடர்ந்து வெறு ஏச்சுகளை மட்டும் தான் நீர் செய்கிறீர். உருப்படியாக பதில் அளிக்க உமக்கு
துப்பில்லை என்று அதனால் தான் சொன்னேன். அசுரன் மற்றும் சதுக்க பூதம் போன்ற்வர்களுடன்
விவாதம் செய்யலாம். ஆனால் உம்மை போன்ற வெத்துவேட்டுகளுக்கு பதில் சொல்வது வீண்.
//ஒரு நாட்டிலுள்ள மருத்துவதுறையில் செயல்பாடுகளை அறியும் மிக முக்கியமான குறியீடான பிரசவத்தின் போது குழந்தைகள் இறக்கும் விகிதம் 1000ற்கு 4.8 ஆக உள்ளது.//
உலகிலேயே அபார்ஷன்கள் (கருச்சிதைவுகள்) அதிகம் நிகழ்த்தப்படும் நாடுகளில் கியூபாவுக்கு இரண்டாவது இடம் என்பதும் அதன் காரணமாகக்கூட infant mortality குறைவாக இருக்கலாம் என்ற வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?
While Cuba spends about $363 per capita, the United States spends about $6,714 and outcomes on life expectancy and infant mortality run neck and neck. It should be noted however, that Cuba does have a very high abortion rate which may be attributable to its enviable infant mortality rate.
http://lanic.utexas.edu/project/asce/pdfs/volume19/pdfs/scheye.pdf
http://www.alanguttmacher.org/pubs/journals/25s3099.html
///ஊழல் மற்றும் அக்கரையின்மை. அரசு ஊழியர்கள் என்பதால், வேலை போகும் அபாயம் இல்லாதவர்களாக இருப்பதால், பலரும் மெத்தனம் மற்றும் பொறுப்பில்லாமல், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், பணிகளை நேர்மையாக செய்யாமல் ஓ.பி அடிக்கின்றனர்.////
லிபர்டேரியன்,
வேலை போகும் அபாயம் இல்லாமல் மெத்தனத்துடன் இருப்பதற்கு காரணம் என்ன?
(நீட்டி முழக்காமல் சுருங்க கூறுங்கள்…)
///40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவ சேவைகளில் இருந்த நேர்மை மற்றும் அர்பணிப்பு இன்று இல்லை. இதிலும் பல விதிவிலக்குகள் உள்ளன. ஒரு குறிப்பிட சத பணியாளர்கள் நன்றாக, நேர்மையாக, திறம்பட பணி புரிகின்றனர்.///
அரசு துறையிலாவது குறிப்பிட்ட சதம் நன்றாக, நேர்மையாக, திறம்பட பணி புரிகின்றனர் என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!
ஆனால் தனியாரில் 100 சதம் நேர்மையாக பணி புரிகின்றனரா? (இதையும் பேசனும்ல சாரே?) அரசு துறையில் கொஞ்ச பேர் தான் சரியா வேலை பாக்குறாங்க, தனியாரில் அனைவரும் சரியா வேலை பாக்குறாங்கன்னு சொன்னா ஏத்துக்கலாம்!
தனியாரிலும் குறைவான சதம் தானே சரியான மருத்துவம் செய்கிறார்கள்? மீதி அனைவரும் கொள்ளை தானே அடிக்கிறார்கள்? தனியாரின் கொள்ளைக்கும் அரசு துறைகள் தான் காரணமா சாரே?
அகாகி,
///வேலை போகும் அபாயம் இல்லாமல் மெத்தனத்துடன் இருப்பதற்கு காரணம்
என்ன? (நீட்டி முழக்காமல் சுருங்க கூறுங்கள்…)////
நீட்டி முழக்கிதான் பதில் சொல்ல முடியும். (ஆனால் உம்மை போன்ற
ஆணவக்கார்களுக்கு பதில் சொல்லும் அவசியம் எமக்கு இல்லை)
ஆனால் முதலில் நான் கேட்ட கேள்விக்கு நீர்
ஒழுங்கா பதில் சொல்ல முயல்க. அப்பறம் பதில் சொல்கிறேன்.
///ஆனால் தனியாரில் 100 சதம் நேர்மையாக பணி புரிகின்றனரா?
(இதையும் பேசனும்ல சாரே?) அரசு துறையில் கொஞ்ச பேர் தான்
சரியா வேலை பாக்குறாங்க, தனியாரில் அனைவரும் சரியா வேலை
சொன்னா ஏத்துக்கலாம்!
தனியாரிலும் குறைவான சதம் தானே சரியான மருத்துவம்
செய்கிறார்கள்? மீதி அனைவரும் கொள்ளை தானே அடிக்கிறார்கள்?
தனியாரின் கொள்ளைக்கும் அரசு துறைகள் தான் காரணமா சாரே?
////
தனியார் துறை பற்றி இங்கு விவாதம் இல்லை. தனியார்கள்
அனைவரும் யோக்கியர்கள் என்றும் சொல்லவில்லையே. ஆனால்
தனியார் துறையில் ஊழியர்கள் ஒழுங்கா வேலை செய்யவில்லை
என்றால் வேலை போய்விடும். அதனால் அரசு துறை அளவிற்க்கு
ஊழியர்களின் ஒழுங்கீனம் இல்லை.
மக்கள் ஏன் தனியார் துறைய அதிகம் நாடுகிறார்கள் என்ற எம்
கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல முயல்க. நீர் எந்த
மருத்துவரை நாடுகிறீர் ? ஏன் ?
லிபர்டேரியன்,
///ஒப்பந்த அடிப்படையில் அனைத்து பணியாளர்களையும் நியமித்து, அவர்களின் செயல் திறன் மற்றும் நேர்மை அடிப்படையிலே மட்டும் சம்பளம் மற்றும் பதவி உயர்வை அளிக்க வேண்டும். ஆனால் பணியாளர்கள் சங்கங்கள் மற்றும் இடதுசாரிகள் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ////
இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பது இருக்கட்டும். இதை (ஒப்பந்த தொழிலாளர் முறையே) சரியானது என்று ஸ்ரீபெரும்பத்தூர் பக்கம் ஒப்பந்த தொழிலாளர்களாக ரூ.4000 க்கு எந்த சலுகையும் இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் பேசுவீர்களா??
சென்னையை சுற்றி உள்ள பல தொழிலகங்களில் இன்று ஒப்பந்த தொழிலாளர் முறை அறிமுகப்படுத்தப்பாட்டு தொழிலாளிகள் 12மணி நேரத்திற்கும் மேல் பிழியப்பட்டு, பின் சக்கையாக வேலையை விட்டு துரத்தி அடிக்கப்படுகிறார்களே? அதற்கு அரசின் கொள்கைகளும், தனியாரின் லாப வெறி காரணமா? அரசு/பொதுத்துறை தான் அதற்கும் காரணமா?
(க்யூபா பற்றிய பதிவில் சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிடுவதற்கு தோழர்கள் மன்னிக்கவும்!)
எல்லா தொழிலாளர்களும் 4000 சம்பளம் பெறுவதில்லை.
நோக்கியாவில் கொல்லப்பட்ட அந்த பெண் ரூ.8000 சம்பளம்
பெற்றார் என்ற உண்மையை இதுவரை யாரும் இங்கு
சொல்லவில்லை. சராசரி சம்பளம் 4000 இல்லை.
பலரும் லோக்கல் சிறுதொழில் துறையை விட அதிக
சம்பளம் மற்றும் உணவு மற்றும் இதர சலுகைகளை
பெறுகின்றனர். சிறு தொழில் துறையில் இதை விட
அதிக வேலை, மோசமான சூழல்கள். விசாரித்து பாரும்.
இந்த வேலையாவது இன்று கிடைத்ததே நல்ல விசியம் தான்,
25 ஆண்டுகளுக்கு முன் இதற்க்கும் வழியில்லை. உமக்கு
வயசு பத்தாது. சொன்னாலும் புரியாது.
சரி, அப்ப இந்த தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்கி
நடத்தி பாருங்க. அல்லது மூடிவிடுங்க.
கரம்மசாலா, க்யூபா ஒரு முதலாளித்துவ நாடு இல்லை என்றால் எந்த வகை நாடு? க்யூபாவை சோசலிசத்துடன் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ, ஆட்சேபமோ எனக்கு இல்லை. அதை நான் என் அக விருப்பத்தில் தீர்மானிக்க முடியாது. ஆனால் ஒரு முழ நிறைவான சோசலிசம் குறித்த மதிப்பீட்டில் வேறுபாடு இருந்தாலும் அதற்கான அடிப்படை கூறு க்யூபாவில் உள்ளதா என்ற பொருளில் க்யூபா ஒரு சோசலிச நாடா?
என்னுடைய மதிப்பீட்டில் கியூபா அடிப்படையில் சோஷலிசக் கட்டுமானங்களைத் தொடர்ந்தும் விருத்தி செய்து வந்துள்ள ஒரு நாடு.
அதன் குறைபாடுகளை அது முகங் கொடுக்கும் பகையான சூழலின் அடிப்படையில் மதிப்பிடுவது தகும் என்பது என் கருத்து.
ஒரு பினாயக் சென் கைதை பற்றி இத்தனை அறச்சீற்றம்
காட்டுபவரகள், பல ஆயிரம் பினாயக் சென்களை கூபாவில்
சிறையில் அடைத்தை பற்றி ஏன் பேச மாட்டேன்
என்கிறீர்கள் ?
http://polarch.sas.ac.uk/pdf_documents/TropicalGulag.pdf
தயவு செய்து பினாயக் சேனுடன் ஒப்பிடக் கூடிய ஒருவரைக் கியூபாவில் வாழும் ஏகாதிபத்திய முகவர்களிடையே காட்ட முடியுமா?
.
கியூபாவின் கொலைக்குற்றாவாளிகள் கூட மேற்குலக ஊடகங்கள் சொல்லும் இந்த 1000க் கணக்கில் அடங்குவர் என்று தெரியுமா?
1970களில் அமரிக்கா வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட படி கியூபா சிறைக் கைதிகளை அமரிக்காவுக்கு அனுப்பி வைத்ததும் அமெரிக்கா அவர்களைத் திருப்பி எடுக்கும் படி கியூபாவைக் கேட்டுக் கொண்டதும் பற்றி ஒரு வேளை அறிவீர்கள்.
//தயவு செய்து பினாயக் சேனுடன் ஒப்பிடக் கூடிய ஒருவரைக் கியூபாவில் வாழும் ஏகாதிபத்திய முகவர்களிடையே காட்ட முடியுமா?///
கரம்மசாலா,
சுதந்திரத்திற்க்காக குரல் கொடுத்தவர்கள் அவர்கள். உடனே அவர்களை ஏகாதிபத்திய முகவர்கள் என்று முத்திரை குத்தி, அவர்களை நசுக்குவது சரி என்று நியாயப்படுத்துகிறீர்கள். சர்வசாதாரணமாக இப்படி செய்யும் நீங்க தான் மனித உரிமை பற்றி பேசுகிறீர்கள்.
உதராணமாக சிலர் :
http://en.wikipedia.org/wiki/Sebastian_Arcos_Bergnes
செபஸ்டியான் ஒரு கம்யூனிஸ்டாக கூபா புரட்சியில் பங்கு பெற்றபவர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
http://en.wikipedia.org/wiki/Jorge_Luis_Garc%C3%ADa_P%C3%A9rez
இவர் கம்யூனிச கொள்கைகளை மறுத்த குற்றத்திற்க்காக 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்ட்டார். கூபாவின் நெல்சன் மண்டேலா என்று கருதப்படுகிறார்.
மாற்று கருத்தாளர்களை உடனே ஏகாதிபத்திய முகவர் என்று நீங்கள் வேண்டுமானால் சர்வ சாதாரணமாக சொல்லி, அவர்களை சிறிதும் நியாயம் இல்லாமல், சிறையில் அடைத்து வதைப்பதை நியாயப்படுத்தலாம். ஆனால் அறிவுலகம் அப்படி கருதுவதில்லை
http://en.wikipedia.org/wiki/Manuel_V%C3%A1zquez_Portal
சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் இவர்.
இவர்களை வதைப்பது சரி என்றால், பிறகு ஈழத்தில் சிங்கள் அரசு செய்வதையும் நியாயப்படுத்த முடியும்.
மிக முக்கிய ஆதாரம் இங்கு பல முறை அளித்தும், அதை படிக்காமல் தொடர்ந்து தட்டையாக வாதாடும் உங்களிடம் மேற்கொண்டு என்ன பேசுவது :
http://polarch.sas.ac.uk/pdf_documents/TropicalGulag.pdf
//கியூபாவின் கொலைக்குற்றாவாளிகள் கூட மேற்குலக ஊடகங்கள் சொல்லும் இந்த 1000க் கணக்கில் அடங்குவர் என்று தெரியுமா?
1970களில் அமரிக்கா வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட படி கியூபா சிறைக் கைதிகளை அமரிக்காவுக்கு அனுப்பி வைத்ததும் அமெரிக்கா அவர்களைத் திருப்பி எடுக்கும் படி கியூபாவைக் கேட்டுக் கொண்டதும் பற்றி ஒரு வேளை அறிவீர்கள்.///
காஸ்ட்ரோ மிக தந்திரமாக, கூபாவின் பழைய குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள் அனைவரையும் வெளியேற வகை செய்தார். அதை தான் இங்கு இப்படி சொல்கிறீர்கள்.
சிறிதும் மனிதாபிமான நோக்கு இல்லாமல், தொடர்ந்து அடக்குமுறைகளை, மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துகின்றீர். அடிப்படை ஜனனாயகம், மாற்று கருத்துகள் பற்றி வேறு தொடர்ந்து வினவு மற்றும் உங்களை போன்ற மார்க்சீயர்கள் பேசுகின்றீர்.
சுமார் 17 லச்சம் கூபார்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்றால், உஙகளை போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களை என்ன சொல்லலாம் ?
பினாயக் சென் மாவோயிஸ்டுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அவர் தலைவராக செயல்படும் PUCL என்னும் மனித உரிமை அமைப்பு, மாவோயிஸ்டுகளின் வன்கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்க்கிறது தான்.
மாவோயிஸ்டுகள் எதிர்காலத்தில் தம் போராட்டத்தில் வென்று, ஒரு செம்புரட்சி அரசை உருவாக்கி, பிறகு தம் கொள்கைகளை அமலாக்க முயன்றால், கண்டிப்பாக அதில் உருவாகும் மனித உரிமை மீறல்களை பினாயக் சென் (இன்று செயல்படுவது போல்) எதிர்த்து குரல் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதன் விளைவாக, மாவோயிஸ்டுகள் அவரையும் சிறையில் அடைப்பர் என்ப்தே அடிப்படை.
கம்யூனிசத்தை நோக்கிய பயணத்தில், இது போன்ற மனித உரிமையாளர்களை நசுக்காமல், சிறையில் அடைக்காமல், அந்த பயணம் சாத்தியமே இல்லை என்பதே வரலாறு தரும் செய்தி. இதற்க்கு விதிவிலகே கிடையாது. மாற்றுகருத்துகள், அடிப்படை ஜனனாயகம் பற்றி இன்று பேசும் வினவு தோழர்களும், அதிகாரத்தை கைபற்றினால், கூபா போல, மாற்றுகருதாளர்களை, மனித உரிமையாளர்களை அடக்கவே செய்வார்கள். அதற்க்கு அன்று ஒரு நியாயம் கற்பிப்பார்கள்.
சரி, நான் இறுதியாக அளித்த சுட்டி மிக மிக முக்கியமானது. மீண்டும் இங்கு தருகிறேன்.
http://polarch.sas.ac.uk/pdf_documents/TropicalGulag.pdf
அதை முழுமையாக படித்துவிட்டு, அதில் இருக்கும் வாக்குமூலங்கள் பொய்களா, அதில் உள்ள நடுவர்கள் எல்லோரும் ‘எகாதிபத்திய அடிவருடிகளா’ அல்லது உண்மையான மனித உரிமையாளர்களா என்பதை உம் மனசாட்சியிடமே கேட்டுக்கொள்ளுங்கள்
ஒருவர் புரட்சியில் பங்கு பற்றினார் என்பதால் அதன் பிறகு அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர் தண்டனைக்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார்.
இந்தியாவின் சுதந்திரப் போரட்டத் “தியாகிகட்கும்” அப்படி ஒரு சலுகை இல்லை.
கியூபாவில் முறையான வழக்கு விசாரணைகள் உள்ளன.
பினாயக் சேனைப் போல, ஒரு அரச சார்புக் குண்டர் படையை அம்பலப் படுத்தியதத்காக மட்டுமே பொய்க் குற்றம் சோடிக்கப்பட்டு யாரும் தண்டிக்கப் பட்டதில்லை.
அரசாங்காத்தை விமர்சிப்போர் பலர் இன்னமும் கியூபாவில் சுதந்திரமாகவே உள்ளனர்.
1990களில் ஹிப்-ஹொப் இசை கூட ஒரு விமர்சனமாகத் தான் அங்கு விருத்தி பெற்றது.
அது சில காலம் பின்னர் அரச அங்கீகாரமும் பெற்றது.
அமெரிக்கா முட்டாள்தனமாகக் கியூபாவிடம் விடுத்த கோரிக்கைக்கு கியூபாவின் பொருத்தமான பதில் அது.
இன்றைய அரசியல் கைதிகள் பட்டியலும் அதே முட்டாள்தனத்தின் தொடர்ச்சியே.
கியூபாவிலிருந்து பலரும் வெளியேறக் காரணம் அரசியலல்ல, பொருளாதாரம்.
அதற்கான பொறுப்பு அமெரிக்க வணிகத் தடைக்குரியது.
கியூபாவில் எஞ்சியுள்ளா 90%க்கு மேலானோர் ஏன் வெளியேறவில்லை என்று விசாரித்துள்ளிர்களா?
வாழ்க்கை என்பது சோறுந்தான், ஆனால் சோறு மட்டுமல்ல.
//கியூபாவில் முறையான வழக்கு விசாரணைகள் உள்ளன.///
அத நீங்க சொல்ல கூடாது அனானி. முதலில் குற்றம் என்றால் என்ன, தண்டனைகள் மற்றும் jurisprudence எனப்படும் நீதி விசாரனை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மனித உரிமைகள் அமைப்புகள், லிபரல் ஜனனாயகவாதிகள், Amnesty International மற்றும் மனித நேயர்கள் கருதுவதை புரிந்து கொள்ளுங்கள். அதை நிராகரித்துவிட்டு, ஃபாசிச முறையில் அடக்குமுறை செய்வது தான் ‘கம்யூனிச’ நீதி.
இந்தியாவில் ஆயிரம் பிரச்சனைகள், அக்கிரமங்கள் நடந்தாலும், பினாயக் சென் உச்ச நீதி மன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மிக முக்கியமாக, இங்கு எதிர் கட்சிகள், பத்திர்க்கை சுதந்திரம் மற்றும் dissidents மற்றும் social and political activits சுதந்திரமாக செயல் பட முடியும். மே. அய்ரோப்பா அளவிற்க்கு இல்லாவிட்டாலும், சொல்லிகொள்ளும் அளவிற்க்கு சுதந்திரம் மற்றும் காந்திய முறைகளில் போராட வாய்ப்புகள் உண்டு. பினாயக் சென்னை விடுவிக்க கோரி போராட்டங்கள், செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள் நடக்கின்றன. அப்பீல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. பொய்யான சாட்சிகள் என்று நாம் வாதாட இங்கு சந்தர்ப்பம் உண்டு. இதெலாம் ‘பாட்டாளி வர்க சர்வாதிகார’ அமைப்பில் சாத்தியமே இல்லை.
செம்புரட்சியில் பங்கு பெற்றவ்ர், புரட்சிக்கு பின் நடப்பவை பற்றி ஒரு நேர்மையான விமர்சனம் செய்தாலே, அது ‘குற்றமா’ ? உடனே அவர் ‘சதிகாரர்’ ஆகிவிடுவாரா ?
சவுதி அரேபியாவின் உள்ள நீதி முறை போல் உள்ளது இது.
அரசியல் கைதிகளை சித்தரவதை செய்வது பற்றி பேசமாட்டேன் என்கிறீர்கள் ? அந்த முக்கிய சுட்டியில் விரிவாக, ஆதாரத்துடன் தகவல்கள், வாக்குமூலங்கள் உள்ளனவே.
முழுசா படிக்கவும். அவர்கள் எல்லோரும் ‘குற்றவாளிகளா’ என்ன ? இதே லாஜிக்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் கவுடமாலா சிறையில் கைதிகளை சித்தரவதை செய்வதை நியாயப்படுத்த முடியுமா என்ன ?
மனித உரிமைகள் தான் அடிப்படையானவை. அவற்றை எந்த சித்தாந்ததை கொண்டும், என்ன இறுதி லட்சியத்திற்க்காவும் நசுக்கவது மானிட விரோத செயல்கள்.
இந்தியாவில் கம்யுனிசதை கொண்டுவர போராடும் பல அமைப்புகள், குழுக்கள் உள்ளன.
அவை பல குழுக்களாக, பல உள் முரண்பாடுகளுடன் செயல்படுகின்றன. பிரிகின்றன.
ஒரு குழு வென்று அதிகாரத்தை கைபற்றினால், மற்ற குழுக்களை உங்க ‘நீதி’ முறையில் குற்றம் சாட்டி, சிறையில் அடைக்க வாய்ப்பு நிறைய உண்டு. எனென்றால், நீதி முறை சர்வாதிகார அமைப்புகளில் (அது கம்யூனிச, முதலாளித்துவ, மதவாத சர்வாதிகார முறைகள் எதுவாகினாலும்), கண்டிப்பாக ஒழுங்காக, நியாயமாக, வெளிப்படையாக, நடுனிலையோடு, மனித உரிமைகளின் அடிப்படையில், ஜனனாயக ரீதியில் செயல்படாது. சாத்தியமே இல்லை.
நான் வெறும் ‘முதலாளித்துவத்தை’ முன்மொழியவில்லை. அடிப்படை ஜனனாயகம், மனித உரிமைகள் தாம் எம் ஆதார்சங்கள். சர்வாதிகாரம், அடக்குமுறைகள் தாம் நாங்கள் எதிர்ப்பவை. சுதந்திரம் தான் எங்கள் ஆதர்சம்.
///இன்றைய அரசியல் கைதிகள் பட்டியலும் அதே முட்டாள்தனத்தின் தொடர்ச்சியே.///
அருமை தோழர். நீங்க இங்கு சுகமா, சுதந்திரமா வாழ்ந்து கொண்டு, கட்டற்ற சுதந்திரம் உள்ளா இணையத்தில், சர்வ சாதாரணமாக இப்படி சொல்ல முடிகிறது. நீங்க கூபாவில் பிறந்திருக்க வேண்டும். அல்லது வட கொரியாவில் பிறந்திருக்க வேண்டும்.
‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்ற பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது. மேலும் நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும்.
அரசியல் கைதிகள் என்னும் கருத்தாக்கமே மிக மிக அயோக்கியத்தனமான, மானுட விரோத கோட்ப்பாடு. லிபரல் ஜனனாயகம் தழைத்தோங்கும் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பிரிவு உள்ளாதா ? சொல்லுங்கள்.
குற்றங்கள் எவை, நீதி விசாரணை முறைகள் எப்படி இருக்க வேண்டும், கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதை அப்படியே ஏற்க்க நாங்கள் அடிமைகளோ அல்லது மூடர்களோ அல்ல.
///ஒருவர் புரட்சியில் பங்கு பற்றினார் என்பதால் அதன் பிறகு அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர் தண்டனைக்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார்.///
‘குற்றச்செயல்கள்’ என்பதற்க்கு என்ன definition ? அதை யார், எப்படி நிர்ணியப்பது ?
natural justice என்ற அடிப்படையிலா ? மனித உரிமைகளை முற்றாக புறந்தள்ளும் நீதி விசாரணை முறைகளை ஏற்க சொல்கிறீர்களா ? விமர்சனம் செய்தாலே, மாற்று கருதுக்களை சொன்னாலே, உடனே ஒரு ‘தோழர்’அய் ’துரோகி’ என்று முத்திரை குத்தி, ஜோடிக்கப்ட்ட வழக்குகள், அயோக்கியத்தனமான முறைகளில் தண்டிக்கப்ட்டு, சிறையில் அடைப்பது அல்லது மரண தண்டனை வழங்கும் வழக்கம் தான் உங்க ‘ஆதர்ச’ அமைப்புகள் நடந்தது / நடக்கும். அதுதான் சரியான நீதி முறை என்பதை அறிவுலகம் ஏற்பதில்லை.
பொய் குற்றம் சாட்டுவது சர்வாதிகார நாடுகளில் மிக மிக சுலபம். பெரும் அச்சத்தில் தான் பெரும்பாலான மக்கள் வாழ்வார்கள். சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த வழக்குகள் பற்றி மிக விரிவாக பேச முடியும். கே.ஜி.பி யின் முறைகள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலம் பெறும் முறைகள் பற்றி மணிக்கணக்கில் பேசமுடியும்.
முதலில் குற்றங்கள் என்றால் எவை என்பதை பற்றி விரிவாக பேசலாமே. கருத்து சுதந்திரம், தம் கொள்கைளை பரப்ப பிரச்சாரம் செய்தல், அரசியல் விமர்சனங்கள், ஆய்வுகள் செய்தல், உண்மைகளை வெளிபடுத்துதல், சுதந்திரமாக எங்கும் செல்லுதல்,
நாட்டை விட்டு வெளியெற முயலுதல் : இவை ‘குற்றம்’ என்று லிபரல் ஜனனாயகம் சொல்வதில்லை. (உங்க கோட்ப்பாடு நடைமுறையில் அப்படி கருதுகிறது). மாற்றாக இவை எல்லாம் ஒரு உண்மையான மக்களாட்சியின் அடிப்படை தேவைகள் என்றே கருதப்படுகிறது. மிக மிக மிக அவசியமான, இயல்பான தேவைகல் மற்றும் உரிமைகள்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் : ‘உரிமைகள்’
அடிப்படை உரிமைகளே எம் புனித பசுக்கள். இதை எத்தணை முறை வலியுறித்தினாலும் போதாது. உங்களை போன்றவர்களுக்கு புரிய வைப்பது கடினம்.
///கியூபாவிலிருந்து பலரும் வெளியேறக் காரணம் அரசியலல்ல, பொருளாதாரம்.///
இல்லை. தவறான வாதம். 60களில், 70களில், கூபா ரஸ்ஸிய உதவியோடு, அமெரிக்க பொருளாதார தடையை வெற்றிகரமாக எதிர்கொண்டது. 1991க்கு பின் சோவியத் ரஸ்ஸியாவின் வீழ்ச்சிக்கு பிறதுதான் இந்த பொருளாதார தடை கூபாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்தது. ஆனால் 1991கு முன்பே பல ஆயிரம் மக்கள் வெளியேறினர். நான் அளித்த அந்த முக்கிய சுட்டி 1986ஆல் பாரிஸில் கூட்டப்பட்ட ஒரு ‘டிரிப்யூனல்’ இன் வாக்குமூலங்கள். அவை 1991க்கு முந்தைய வருடங்களில் நிகழ்ந்த கொடுமைகளை சித்திர்பவை. படித்து பார்க்கமலேயே பேசினால் எப்படி ?
சரி, பெர்லின் சுவர் ஏன் கட்டப்பட்டது ? கிழக்கு ஜெர்மனியில் இருந்து லச்சகணக்கானோர் அன்று ஏன் தப்பிக்க முயன்றனர் ? அனைவரும் பொருளாதார காரணங்களுக்காக தான் முயன்றனரா ? இல்லை. அரசியல் காரணங்கள் தான் பிரதானம்.
ஈழத்திலுருந்து அகதிகளாக கடந்த 40 ஆண்டுகளாக பல லச்சம் தமிழர்கள் வெளியேறினர். அவர்கள் புலம் பெயர காரணம் பொருளாதார காரணிகளா அல்லது (மனித உரிமைகள் நசுக்கப்படும்) அரசியல் காரணிகளா ? இந்த மானிட அவலத்தை கம்யூனிச நாடுகளில் இருந்து வெளியேற முயலும் மக்களின் நிலைக்கும் ஒப்பிடலாம்.
கியூபாவைப் பற்றிய இந்தப் பதிவு தமிழ் கூரும் நல்லுலக அறிவாளிகளுக்கு புத்தி புகட்டி இருக்கும் என நம்புகிறேன் ! ஆனால் கியூபாவின் இந்த பணியை மட்டும் அல்ல இதர பணிகளை மேற்கு முதலாளித்துவ நாடுகள் இருட்டு அடிக்கிறது என்று இங்கு கூற விழைபவர்கள் கிணற்றுத் தவளைகளே ! அமெரிக்காவுக்கும் கியுபாவுக்கும் தீராப்பகை இருப்பது உண்மை. அது அரசியல் காரணங்களால் தான். ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும் கியுபாவை பற்றி அறியாதவர் இல்லை. கியுபாவைப் பற்றிய செய்திகள் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்துக் கொண்டே இருக்கு. லட்சக் கணக்கன பேர் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவுக்கு இந்நாடுகளில் இருந்து சுற்றுலா செல்கின்றனர். கியூபாவைன் சிஸ்டத்தை பலர் ( மக்கள் ) ஏற்றுக் கொள்கின்றனர் . நம் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தான், அது இடதாக இருந்தாலும், வலதாக இருந்தாலும் கியூபாவைப் பற்றி எழுதுவது இல்லை, சொல்வது இல்லை, இந்திய அரசு அதை விரும்புவதும் இல்லை. பின்ன கியுபாவைப் பற்றி தெரிந்துக் கொண்டால். நம் அரசுகள் இலவசம் என்ற பேரில் பீற்றிக் கொள்வதும், அலட்டிக் கொள்வதும் புஷ்வாணம் ஆகி விடாதா?????
யூடுபில் எல்லாம் யாருங்க படிக்கிறதா ஒருத்த கேட்டார். வினவை விட உலகில் யூடுபினைப் பார்க்கிறவர் தொகை அதிகமுங்க…..
யூ ட்யூபை விட மிக மிக அதிகம் படிக்கப் படுவன New York Times, Daily Telegraph, Sun, etc. etc. பார்க்கப்படுவன NBC, CNN, BBC, Sky, Fox, etc. (What does a comparison with Vinavu prove?)
.
கியுபாவுக்கு எதிரான ஒவ்வொரு சிறு தகவலும் பெறுகிற முக்கியத்துவத்தில் (வாசகர்/பார்ப்போர் எண்ணிக்கையில்) சிறு பங்கையேனும் கியூபா பற்றிய நல்ல செய்தி எதுவும் தில்லை.
.
கஸ்ட்றோ சாகப் போகிறார் என்ற ஆரூடம் பெற்ற முக்கியத்துவதுடன் ஒப்பிட்டால், கியூபா இயற்கை அனர்த்தங்களுக்கு எவ்வளவு திறமையாக முகங் கொடுத்துள்ளது என்பது ஏறத் தாழப் புறக்கணிக்கப் பட்ட விடயககிவிடும்.
.
கத்ரினா புயலால் பாதிக்கப் பட்டோருக்குக் க்யூபா வழங்க முன்வந்த மருத்துவ உதவி அமரிக்காவால் மறுக்கப் பட்டது எத்தனை அமெரிக்கர்கட்குத் தெரியும்?
.
இருட்டடிப்பு என்பது, நிறுவனங்களில் ஏலவே உள்ள மனத்தடைகளால், தகவல்களின் தெரிவில் நிகழ்வது.
Corprel Zero,
நியூயார்க் டைம்ஸில் வெளியான, கியூபா தொடர்பான செய்திகள் தொடர்பான சுட்டிகள்.
http://www.nytimes.com/2008/09/05/world/americas/05iht-05cuba.15916359.html
http://www.nytimes.com/2009/08/04/health/04cuba.html
http://www.nytimes.com/2007/05/27/weekinreview/27depalma.html
கத்ரினா புயலுக்குப்பின், கியூபா அமெரிக்காவிற்கு மருத்துவ உதவி செய்கிறேன் என்றது “அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு இலவசமா ஆஸ்பிரின் மாத்திரை சப்ளை பண்ணறேன்னு” ஒரு பெட்டிக்கடைக்காரர் சொல்வதற்கு ஒப்பாகும்.
அதுசரி, காஸ்ட்ரோவின் கியூபாவில் பாலாறும், தேனாறும் ஓடும் போது 17 லட்சம் கியூபர்கள் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
கியூபாவில் செல்வம் கொழிக்கிறதாக யார் சொன்னார்?
அமெரிக்காவின் வணிகத் தடையை மீறிக் கியூபா தன் மக்களின் நலனைப் பேணுகிறது.
கல்வி, உடல் நலம். சமூகப் பாதுகாப்பு, குற்றச்செயல்களின்மை என்பவற்றில் ஏழை கியூபா எப்படி அமெரிக்காவை விட உயர்வாக உள்ளது என்பது தான் இங்கு கவனத்துக்குரியது.
ஒரு பெட்டிக் கடைக்காரர் செய்யக் கூடியளவு உதவியைக் கூட அமெரிக்கா தனது மக்களுக்குச் செய்யத் தவறியது என அறிவீர்களோ தெரியாது.
தயவு செய்து கியூபா செய்துள்ள சர்வதேச மருத்துவ உதவியின் தரமும் பரிமாணமும் பற்றி விசாரித்து விட்டு எழுதுங்கள்.
இது முற்றிலும் தவறான செய்திகள் ! இந்தியாவில் இருப்போருக்கு க்யூபாவை தெரிந்ததை விட மேற்கு நாடுகளில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும், தெரிகிறது நெகடிவ் கியூபா மட்டுமில்லை பாசிடிவ் கியூபாவைப் பற்றி நன்கு அறிவர்………… கியூபா / அமெரிக்கா என்பது இந்தியா பாகிஸ்தான் போன்று தான் .. ஆனால் கியூபாவில் இருக்கும் நல்ல விசயங்களை இங்கு இருட்டடிப்பு செய்வதில்லை…………
கத்ரினா புயலில் கியூபாவின் நிவாரணங்களை மறுத்தது கௌரவ பிரச்சனைக்காகத் தான் ஒழிய வேறு ஒன்றும் இல்லை. ஏன் சுனாமி ஏறபட்ட போது மேற்கு நாடுகளின் நிவாரணங்களை ஏற்க மறுத்தது இந்தியா.. இன்றும் சுனாமி பாதிக்கப்பட்டவருக்கு இந்தியா ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது கௌரவ பிரச்சனை. தோழரே எதோ இந்திய கம்யூனிஸ்ட்களால் தான் கியூபாவின் புகழ் உலகெங்கும் பரவுகிறது என்ற மனப் பிம்பத்தில் இருந்து வெளியே வாரும். உங்களை விடவும் அமெரிக்கர்களுக்கு கியூபாவை நன்கு தெரியும், ஒவ்வொரு சம்மரிலும் கியூபா என்ற ஒரு நாட்டுக்குப் போகவில்லை என்றால் அவர்களுக்கு மண்டையே வெடித்துவிடும்………………………….
நியு யோர்க் டைம்ஸ், சன், போன்றவற்றில் க்யூபாவை மட்டுமே வா எழுதிட்டு இருப்பாங்க.காமெடி பண்ணாதீங்க…………. யூடுயுப் அனைத்துலகத்துக்காமானது. அமெரிக்க பத்திரிக்கை அவர்கள் லோக்கல்சரக்கைத் தான் எழுதுவார்கள். ஏன் இந்தய ஊடகங்கள் யானா குப்த ஜட்டிகளுக்கு கவர் ஸ்டோரி வைக்கவில்லையா. இந்த லோக்கல் கிராக்கிகள் லோக்கல் ஊடகத்தில் தான் விலைப் போகும்…. கியூபாவை நன்கு தெரிய வேண்டும் என்றால் கியூபா ஊடகங்கள் மூலமாகத் தான் தெரிந்துக் கொள்ள முடியும்…………………………..
“கியூபா / அமெரிக்கா என்பது இந்தியா பாகிஸ்தான் போன்று தான்”
அடடா!
என்ன அருமையான உவமை!!!
@ அக்காகி //முதலாளித்துவத்தை, சுதந்திர வர்த்தகத்தை தேய்ந்த ரிகார்டு மாதிரி திரும்ப திரும்ப பேசும் எந்த முதலாளித்துவவாதியும் ஏன் இங்க இருந்து எங்க ஜீவனை உறிகிறீர்கள்???//
@ அக்காகி // நீங்க எந்த கம்யூனிஸ்ட் நாட்டில இருக்கிறீங்கனு சொன்னா நல்லாருக்கும். சீனாவா? அதுவும் இப்போ கம்யூனிசத்தில இருந்து திசை மாறிப் போய் 20 வருஷம் ஆச்சுங்க !!!
இந்தியானு சொல்லி காமெடி பண்ணிடாதீங்க
இக்பால் செல்வன்,
நான் இந்தியாவில் தானிருக்கிறேன்… இந்தியா கம்யூனிச/சோசலிச நாடென்று நான் எங்கும் சொல்லவில்லையே?
நாம் இங்கு இருக்கும் அயோக்கிய தனங்களை பேசினால், அதியமான் இங்கு இருக்கிற பிரச்சனைகளுக்கு காரணம் சுதந்திர வர்த்தகத்தில் இருக்கும் அரசின் தலையீடு என்கிறார்…
நாம் முன்னாள் சோசலிச நாடுகளையோ, இன்றைய க்யூபாவையோ பேசினால் அங்கு போய் குடியேற வேண்டியது தானே என்கிறார்…
(இதை கம்யூனிசம் பேசினாலே சீன கைக்கூலி என்று கூவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் காட்டு கூச்சலுடன் ஒப்பிட்டு பார்க்கவும்)
அதனால், நீங்களே சொல்லும் சுதந்திர நாட்டில் குடியேற நீங்கள் ஏன் முயற்சிக்க கூடாது அதியமான் என்கிறேன்…
https://www.vinavu.com/2011/02/14/cuban-medical/#comment-37020
நம் பின்நவீனத்துவ பூணூல்காரர்களிடம் வாக்குவாதம் செய்வது (நம்)மூளையை கசாப்புக்கடையில் வைத்து விட்டு, வீட்டுக்கு தொடைக்கறி வாங்கி வருவது போல !!! அவர்களிடம் வாக்குவாதம் செய்யிறது நோ யூஸ் அக்கு !!
பிரேம்
கியூபா தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு என்பதற்கு ஒரு உதாரணம் கேட்டீர்கள்:
தன்னினப் பாலுறவாளர்களைப் பலகாலமாகக் குற்றவாளிகளாகக் கருதி வந்த கியூபா அதைத் தவறென ஏற்றுத் திருத்திக் கொண்டது.
சேக்குவாரா பற்றி வினவின் பார்வை என்ன?
சேகுவேரா: T-shirt முதல் செருப்பு வரை விற்பனையாவதில் முதலாளிகளுக்கும், விற்கும் முதலாளிகளை எதிர்த்துப் போராட கம்யூனிஸ்டுகளுக்கும் பயன்படுபவர். (வினவு வளைத்து வளைத்து ஒரு பத்து பதிவுகள் சேகுவேரா பற்றி எழுதலாம்)
நாம் இங்கு இணைந்திருப்பது சமுதயத்தில் உள்ள அநீதி களையவும், அதற்க்கு எதிரக போரடவும் தானே அல்லமல். தவறுகண்டு விலகிபோக அல்ல.
நாயின் தாக்குதலுக்கு பயந்து விலகி போக நாம் பூனை அல்ல, மதம் மாரி போவதும் அதுபோல் தான்.
அநீதிக்கு எதிராக போரடுவோம், அனைவருக்கும் போராட கற்று கொடுப்பொம்.
துஷ்டணைக் கண்டால் தூர விலகுனு சொல்லி வளர்த்துப்புட்டானுங்க .. என்ன செய்ய பாஸ் !!! போராடும் துணிவும் வலுவும் நம்மிடம் துளியும் இல்லை…………………….
//“ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்”.//
சுனாமி இயற்கைப் பேரழிவின் போது தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆற்றிய அரும்பணி இந்தியப் பத்திரிக்கைகளால் மறைக்கப்படவில்லையா?
ஹரியாணா மாநிலம் சக்ர்-தாத்ரியில் சவூதி அரேபிய வி்மானமும், கஜாகிஸ்தானிய விமானமும் மோதிச் சிதறியதில் 349 பேர் இறந்த போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இரவு பகலாக விழித்திருந்து எஞ்சிய உடல்களை மீட்டனர். பத்திரிகைகள் அதுபற்றி வாய்திறக்கவில்லையே!
அது போலத்தான் க்யூபா விஷயமாக நீங்கள் சொல்வதை ‘பொதுவான’ பத்திரிகைகள் மறைப்பதும். உலகில் நடப்பது தான். புதிதல்ல.
நல்லதை யார் செயதாலும் வரவேற்கும் பக்குவம் வேண்டும்……………… !!! பிரதிபலன் பாராத உதவி என்றால் , அதை சொல்லிக்காட்டத் தேவை இல்லை. மெய்வருத்த கூலி தரும்………………..
//பிரதிபலன் பாராத உதவி என்றால் , அதை சொல்லிக்காட்டத் தேவை இல்லை. மெய்வருத்த கூலி தரும்………………..//
கூபா கூபா என்று மட்டும் ஏன் தம்பட்டம்?
தம்பட்டமடிப்பது கியூபா அல்லவே!
ஹைற்றியில் அமெரிக்க செய்கிற கொடுமைகளையும் கியூபா செய்கிற நற் செயல்களையும் பற்றி அறிந்த ஒருவர் சொன்னார்.
அவ்வளவு தான்.
1974இல் அங்கோலா முதல் அன்மையில் பல கரிபியன், லத்தின் அமெரிக்க நாடுகள் வரை கியூப மருத்துவ சேவை அனுபவம் ஒன்றுதான்.
//தம்பட்டமடிப்பது கியூபா அல்லவே!//
கியூபா aka கூபா தம்பட்டமடிக்கிறது என்று நான் சொல்லவில்லையே! அந்நாடு செய்த நற்செயல்கள் மறைக்கப்பட்டுவிட்டன என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியிருக்கிறீர்களே…. இது உலகில் நடப்பது தான் புலம்புதற்கேதுமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவைகள் மறைக்கப்படுவதை உதாரணம் காட்டினேன்.
அதற்கு இக்பால் செல்வன் “பிரதிபலன் பாராத உதவி என்றால் , அதை சொல்லிக்காட்டத் தேவை இல்லை. மெய்வருத்த கூலி தரும்……………….” என்று தத்துவம் பேசினார்.
அப்படியிருக்க கூபா செய்தது கூபா செய்தது என்று ஏன் வினவில் கூவிக் கூவித் தம்பட்டம் அடிக்கிறார்கள் என்ற பொருள்பட நான் கேட்டேன். பிரதிபலன் எதிர்பாராத உதவி என்றால் சொல்லிக் காட்டாமல் போகலாமே? மெய்வருத்தக் கூலி முழுதும் கிடைக்கும் வரை கம்பெனி கதவுக்கு வெளியே தொடர் போராட்டம் என்பது போல ஏன் எழுதுகிறார்கள்?
வினவு,
//பிடல் காசுட்ரோவின் பன்னாட்டு மருத்துவ திட்டம் சோசலிச கூபாவிற்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கின்றது,//
க்யூபா ஒரு போலி சோசலிச நாடு. பிடல் காஸ்ட்ரோ, சேக்குவாரா போன்றோர்கள் போலி புரட்சிவாதிகள். கட்டுரையில் சோசலிச க்யூபா என்று சொல்லியிருப்பது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல. ஜீரணிக்க முடியாத ஒன்று. க்யூபா ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் ஒரு தொங்கு சதை நாடாக இருந்தது என்பதை பு.ஜ. விலேயே வந்திருக்கிறது. க்யூபா ஒரு சோசலிச நாடு இல்லை என்று சொல்வது அவரவர் விருப்பத்திலிருந்து வருவதல்ல. அது ஒரு புற நிலை யதார்தம். அது மட்டுமல்ல, இன்று உலகில் எங்குமே சோச்லிச நாடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது இன்றைய உலகு தழுவிய சமூக நிலைமைகள் குறித்த புதிய ஜனநாயக அரசியல் நிலைபாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று. அப்படியிருக்கும்போது இதி பற்றி சுட்டிக்காட்டிய பிறகும் வினவு அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை. சுய விமர்சனத்துடன் கூடிய பதிலை முன்வைப்பதுதான் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
அதே போல் துனிசிய, எகிப்திய மக்கள் எழுச்சிகளை “புரட்சி” என்ற சொல்லாடல்களைக்கொண்டு எழுதுவதும் சில கேள்விகளை எழுப்புகின்றது. அந்த மக்கள் எழுச்சியில் நீங்கள் எந்த அம்சத்தை புரட்சி என்கிறீர்கள்? அது புரட்சி என்றால் அந்த மக்கள் எகிப்திய சமூக அடிப்படைத் தன்மையில் எதைப் புரட்டிப் போட்டார்கள்? ………? தனியார்மயம், தாராளமய்ம என்ற கொள்கை ஏற்படுத்திய நெருக்கடியால் அம்மக்கள் ஒன்று குவிந்து போராடிய பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எகிப்து, துனிசிய் மக்கள் எழுச்சியை புரட்சி என்றால் காஷ்மீர் மக்கள் எழுச்சியையும் புரட்சி என்றே அழைக்க வேண்டும். இரண்டிற்கும் ஒரு சிறு வித்தியாசம்தான் அங்கு அந்த அதிபர்களை பதவியிலிருந்து மக்கள் தூக்கிவிட்டார்கள். இங்கு இல்லை. ஆகையால் இது குறித்தும் வினவிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
“தன்னினப் பாலுறவாளர்களைக் பலகாலமாகக் குற்றவாளிகளாகக் கருதி வந்த கியூபா அதைத் தவறென ஏற்றுத் திருத்திக் கொண்டது.” சோசலிசக் கொள்கையை இதற்கு மேல் கொச்சைபடுத்தவும், கேவலப்படுத்தவும் முடியாது. வினவும் சோசலிசத்தின் மீதான இது போன்ற கருத்தாக்கத்தை சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது.
பிரேம்
கியூபா தன் கடந்த காலத்தைத் தயங்கது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு என்பதற்கு ஒரு உதாரணம் கேட்டீர்கள்:
தந்தேன்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதையை எங்கேயோ கொண்டு போக முயலுகிறீர்கள். பயனுள்ள உரையாடல் என்றால் தொடரலாம்.
சும்மா அரிப்பெடுப்பதனால் கேட்கிறீர்கள் என்றால், எதாவது குட்டிச் சுவரில் போய்ச் சொறிந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே,
இந்தக் கட்டுரை “இன்டிபென்டண்ட்” பத்திரிகையின் தளத்தில் வெளிவந்துள்ளது. அதையே தோழர் நற்றமிழன் இங்கு மொழிபெயர்த்து தந்திருக்கிறார். எனவே இது வினவு எழுதிய கட்டுரை அல்ல. இதில் உள்ள அரசியல் நிலைப்பாடுகளும் வினவு சொன்னதாக எடுக்க வேண்டாம். இதில் கூபாவில் சோசலிசம் எப்படி செயல்படுகிறது என்பது ஆராயப்படவில்லை. மாறாக அங்கு மருத்துவம் என்பது மக்களுக்கு உதவும் சிறப்பையும், வெளிநாடுகளுக்கு கூபா வழங்கும் மருத்துவ உதவியும்தான் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.
மற்றபடி கூபா குறித்தும், சே குவேரா குறித்தும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம்.
வினவுத் தோழர்களுக்கு, வினவில் ஒரு செய்தியை வெளியிடுகிறீர்கள். அது குறித்து விமர்சித்தால், அது வினவின் நிலைபாடு இல்லை என்கிறீர்கள். அதுவும் அரசியல் நிலைப்பாடு குறித்த விசயத்தில். செய்தியில் உள்ள குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டிலோ, கண்ணோட்டம் குறித்த லிசயத்திலோ விமர்சனம் வந்தால் அதற்கு யார் பொறுப்பு? வினவுதானே! ஒரு தனிப்பட்ட கட்டுரையாளர் இதற்கு நேரடி பொறுப்பு எப்படி ஏற்க முடியும்? அடுத்து க்யூபா ஒரு போலி சோசலிச நாடு என்பது ம.க.இ.க. வின் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிலைப்பாடு. அப்படியிருக்கும் போது அதன் ஆதரவு தளமான வினவு அது குறித்து ஆராயவில்லை என்று சொன்னால் எப்படி? தோழர்கள் இது குறித்து பொருததமான விளக்கத்துடன்கூடிய சுய விமர்சனம் ஏற்பதே நமது அரசியல் நேர்மைக்கும், கமாயூனிசப் பண்பிற்கும் அழகு.
கார்ப்பரல் ஸீரோ, விவாதம் கருத்தின் மீது நடத்தப்பட வேண்டும். நபரின் மீது அல்ல. இந்தப் பண்பை நான் மீறவில்லை. தன்னின பால் உறவு என்பது இயற்கைக்கு முரணானது. இந்த சீரழிவு என்பது முதலாளித்துவ சமூகத்திற்குச் சொந்தமானது. இது சோசலிசத்தில் மிச்ச சொச்சம் இருந்தால் அது ஒவ்வொரு தனிநபரிடமும் தார்மீக ரீதியாக மறைந்து போகும் வகையில் சோசலிச அரசால் விழிப்புணர்வு ஊட்டப்படும். அப்படியிருக்கும்போது க்யூபா இந்த சீரழிவை அங்கீகரிக்கிறது என்றால் அது சோசலிசத்தை கொச்சைப்படுத்துகிறது என்றுதான் அர்த்தம். இந்தப் பொருளில்தான் நானும் சொல்லியிருந்தேன். “எப்படி” என்று நீங்கள் இதன் மீது கேள்வி எழுப்பியிருக்கலாம். அதை விட்டு விட்டு தனி நபர் அவமதிப்பில் இறங்குவது ஆரோக்கியமான விவாதத்திற்கு பயன்படாது.
கியூபாவைப் பற்றி நீங்கள் அடுத்தடுத்து எதையோ கேட்டீர்கள். கேட்டவற்றிற்குத் தெளிவுடன் பதில் சொல்லி விட்டேன்.
பொறுமையாகப் பதில் சொன்னால் வேறேதோ விவாதத்தை என் பக்கம் திருப்பினீர்கள்.
இந்த விதமான உரையாடல் பயனற்றது.
அரிப்புப் பற்றிய குறிப்பு, தனிப்பட உங்கள் மீதானதல்ல.
உங்கள் கேள்விகள் போய்க் கொண்டிருந்த திசையைப் பற்றியது. அது உங்களை மனம் வருத்தியிருந்தால் வருந்துகிறேன்.
நீங்கள் இப்போது சொன்னதை அப்போதே எதிர்வினையாகச் சொல்லியிருந்தால் பதிலிறுத்திருக்க இயலும்.
தன்னினப் பாலுறவு பற்றிய சோஷலிச நிலைப்பாட்டுக்கும் திருச்சபையினது நிலைப்பாட்டுக்கும் வேற்றுமை உண்டு. சோஷலிசம், சமூகத்தில் உள்ள எல்லாவற்றையும் முன்கூட்டியே சரி பிழை எனக் கோடுகிழித்துப் பிரிக்கும் வழமை உடையதல்ல.
என்னளவில் தன்னினப் பாலுறவு, ஆக மிஞ்சினால், ஒரு பிறழ்வே ஒழியக் குற்றச் செயலல்ல.
அதற்கும் இந்திய, சீன மரபுகளில் இருந்து வந்துள்ள “மூன்றவது பாலினருக்கும்” பெரும் வேறுபடில்லை.
கம்யூனிஸ்ட்டுக்கள் ஆட்சியில் இல்லாமலே, நேபாளம், அண்மையில் “மூன்றவது பாலினரை” அங்கீகரித்துள்ளது.
மனித வாழ்வு இயற்கையிலிருந்து மிக விலகி விட்டது.
சமூகம் திணிக்கும் கட்டுப்பாடுகள் மனித நடத்தையைப் பெரிதும் பாதிக்கின்றன.
மனிதரைக் குற்றவாளிகளக்கி அப் பிரச்சனைகளைக் கையாள முடியாது.
பிலிப்பினிய கம்யூனிஸ்ட்டுக்களிடையே தன்னினப் பாலுறவுக்கு கியூப ஆட்சியினரை விடக் கூடியளவு சகிப்பு –மட்டுமல்ல அங்கீகாரமும்– இருந்ததைப் பற்றி 3 ஆண்டுகள் முன் படித்தேன்.
புராண மரபில், சிவன் தனது மைத்துனரையும் புணர்ந்தார் என இருப்பதாக வாசித்த நினைவு. (தவறான தகவலெனில் மன்னிக்கவும்).
காம சூத்திரம் கூறுகிற எல்லாமே இயற்கையின் பாற்பட்டனவல்ல. ஆண் பெண் பாலுறவு முற்றாக இயற்கை விதித்த படி நிகழ்வதுமில்லை.
ஒன்றை நாம் விரும்பலும் விரும்பாமையும் நம் தெரிவு. மற்றவர்களது சமூகக் கேடற்ற விருப்பு வெறுப்புக்களை நாம் ஏற்காவிடினும் விளங்கிக் கொள்ளவாவது முயலலாம்.
பாலுறவில் தீயது ஏமாற்றும் வஞ்சகமும் வன்முறையுமே.
என்னளவில் கியூபா திருத்திக் கொண்ட பல தவறுகளில் தன்னினப் பாலுறவு பற்றிய கடுமையை நீக்கியது மெச்சத் தக்கது.
கார்ப்பரல் ஸீரோ,
“கியூபா தன் கடந்த காலத்தைத் தயங்காது விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் ஆயத்தமான நாடு” என்று பதிவர் “க” வின் கருத்துக்கு ஒரு உதாரணம் கேட்டிருந்தேன்.
அதற்கு,” தன்னினப் பாலுறவாளர்களைப் பலகாலமாகக் குற்றவாளிகளாகக் கருதி வந்த கியூபா அதைத் தவறென ஏற்றுத் திருத்திக் கொண்டது.” என்று நீங்கள் பதிலளித்தீர்கள்.
கேட்ட கேள்விக்கு, பதிலளித்தீர்கள். பொறுப்புணர்வு என்ற இந்த அம்சத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதை விமர்சிக்கவும் முடியாது. அதிலிருந்து திசை திருப்பவும் இல்லை. ஆனால் உங்களின் பதிலில் (உதாரணத்தில்) தன்னின பாலுறவு என்ற முதலாளித்துவ சீரழிவை சோசலிச சமூகத்த்தின் அங்கீகாரமாக சொல்ல வருதலைத்தான் இங்கு நான் ஒரு விவாதப்பொருளாக எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்துள்ளேன்.
தன்னின பாலுறவு குறித்து உங்களுக்கோ, அல்லது கியூபாவுக்கோ ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது ஒரு சோசலிச சமூக அமைப்பில் ஒரு நீண்ட நெடிய நிகழ்ச்சிப்போக்கில் தார்மீகமாக மறைந்து இல்லாமல் போகும் ஒரு விசயமாகும். தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தையும், செயல்பாடையும் ஆளும் வர்க்கத்தால் கற்பிப்பதன் விளைவுகளில் ஒன்றுதான் இந்த தன்னின பால் உறவு என்பது. மனிதத் தன்மைக்கு எதிரானதும், இயற்கைக்கு முரணானதுமான இந்த சமூக சீரழிவு என்பது சோசலிச சமூகத்தில் மறைந்து போவதற்கான புறநிலையே செல்வாக்கு செலுத்தி அதனை மறையச்செய்யும். சோசலிசத்தின் மேண்மை இவ்வாறு இருக்கும்போது கியூபாவின் இந்த் நிலைப்பாடு என்பது உண்மையிலேயே சோசலிசத்தை கொச்சைப்படுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் முதலாளித்துவ சீரழிவிற்கு துணைபோவதாகவும்தான் உள்ளது என்று விமர்சித்திருந்தேன்.
அடுத்து,”என்னளவில் தன்னினப் பாலுறவு, ஆக மிஞ்சினால், ஒரு பிறழ்வே ஒழியக் குற்றச் செயலல்ல.” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
தன்னளவில் ஒரு மனிதன் சிந்தனை ரீதியாகவும், செயல்பாட்டு ரிதியாகவும் எப்பொழுது தனது சுய கட்டுப்பாட்டை இழந்து தவிக்கிறானோ அப்பொழுதுதான் அவன் பிறழ்வு நிலைக்கு ஆளாகிறான். அதாவது நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்று அர்த்தம்.இது பரிதாபத்துக்குரிய ஒரு விசயம். இந்த மனிதன்(நோயாளி) மேல் எள்ளளவும் கோபம் கொள்ள முடியாது. ஆனால் பாலியல் விசயத்தில் திட்டமிட்டுத்தான் எல்லை மீறுகிறார்கள். இதை பிறழ்வு என்று அழைப்பதைவிட வெறி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு என்பதை தாங்கள் பரிசீலிக்க வேண்டும்.
திருடுவதற்கான அனைத்துக் காரணமும் ஒழிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் திருட்டுக் குற்றம் என்ற பேச்சுகே இடமில்லை. ஆனால அதற்கான அடிப்படையையே ஒரு விதியாக வைத்துக் கொண்ட ஒரு சமூகத்தில் ஒருவர் திருடினால் அச்சமூகம் அவரை திருட்டுக் குற்றம் சாட்டுவது அயோக்கியத்தனம் இல்லையா? அது போலத்தான் இந்த தன்னின பாலுறவாளர்களை குற்றவாளி ஆக்குவதும், குற்றமற்றவராக்குவதும்.
அடுத்து மூன்றாவது பாலினர் என்பது ஒரு பாலின ஊனம். இதுவும் இயற்கையின் ஒரு விளைவு. இவர்களை நேபாளம் அங்கீகரித்ததில் என்ன தவறு உள்ளது?
அடுத்து புராணப் புனைவை நாம் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கருதுகிறேன்.
“ஆண் பெண் பாலுறவு முற்றாக இயற்கை விதித்த படி நிகழ்வதுமில்லை.”
ஆனால், அதற்கான பரிசாக நோயை விலைக்கு வாங்குகிறார்களே!
//என்னளவில் கியூபா திருத்திக் கொண்ட பல தவறுகளில் தன்னினப் பாலுறவு பற்றிய கடுமையை நீக்கியது மெச்சத் தக்கது.//
மீண்டும் ஒரு முறை இது குறித்து பரிசீலியுங்கள்.
புராணம் புனைவு தான். ஆனால் அதிலிருந்து தெரிவதென்ன? அவ்வகையான நடத்தை வழக்கில் இருந்ததும் அதற்கு எதோ வகையான சமூக அங்கீகாரம் இருந்ததுமே.
பிறழ்வ்வு நோயாயிருக்கத் தேவையில்லை. அது இயற்கை இயலுமாக்கும் இன்னொரு சாத்தியபாடாகவும் இருக்கலாம்.
நம் உடலில் ஒவ்வொரு உறுப்பினது செயற்பாடும் இயற்கை விதித்ததென நாம் எண்ணும் கறாரான எவ் விதிப் படியும் நிகழ்வதில்லை. மனித மனமும் விசித்திரமானது. எந்த உடற் பிறழ்வையும் பற்றிக் கேவலமாகப் பேசுவது இன்று மேற்குலகில் நாகரிகமானதல்ல.
எல்லாப் பிறழ்வுகளையும் இழிவானவை என்றும் கொள்ள மாட்டேன், ஏனெனில் ஒருவர் மேதையாயிருப்பது கூட ஒரு பிறழ்வின் விளைவாக இருக்கலாம்.
பல ஊனங்களுக்கும் பிறழ்வுகளுக்கும் மனித நாகரிகம் பதில் கூற வேண்டும். சமூக விதிகள் பிறழ்வுகட்குக் காரணமாகின்றன. தன்னினப் பாலுணர்வு எல்லாவிடத்தும் வலிந்து திணிக்கப் படுவதெனவும் நான் ஏற்க மாட்டேன்.
இயற்கையாகவும், தனிப்பட்ட அனுபவங்களின் விளைவாகவும், சில சமூக நெருக்குவாரங்களலும் ஒருவர் அவ்வாறு ஈர்க்கப்படலாம்.
பலர் தமது “மற்றப் பால்” தன்மையை வாழ்வில் எப்போதோ உணர்கின்றனர். உணர்வை வெளிப்படுத்த இயலாதவாறு சமூக நிர்பந்தங்கள் அமைகின்றன. கொஞ்சம் சகிப்புள்ள சமூகம் அவர்கள் வாழ வாய்ப்பளிக்கிறது. இல்லாதது அவர்களை அழிக்கிறது, அவர்களைப் பிற குற்றங்களுக்கும் தூண்டுகிறது.
ஏற்பதற்கும் சகிப்பதற்கும் பெரும் வேறுபாடுண்டு.
ஏற்பது இயலாவிடினும் சகிப்பத்ற்குத் தேவை உண்டு.
முறையான பாலியற் கல்வி நமது சமூகத்தில் இல்லாமை நமது மனத்தடைகள் பலவற்றுக்குத் துணை போகிறது.
இன்று பல நாடுகள் ஒரே பாலினரின் திருமணத்தை ஏற்கின்றன. அதற்கான நியாயங்களை நாம் பொறுமையாக ஆராய வேண்டும்.
இங்கிலாந்தில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சட்டங்கள் கடுமையாயிருந்தன.
ஆஸ்கார் வைல்டுக்கு நடந்ததை அறிவீர்கள்.
அவரைத் தண்டித்தோரிடையே இரகசியமாக அதே பாலியற் போக்குடையோர் இருக்கவில்லையா? அது எத்தகைய நேர்மையீனம்!
இன்று நிலைமைகள் வேறு.
என் யூத நண்பர் ஒருவரின் படி யூதர்களிடையே 5%க்கும் குறையாதோர் (10% கூட இருக்கலாம்) தன்னினச் சேர்க்கையாளர்கள் எனச் சொன்னார். அதற்கு வரலாற்றுக் காரணங்களும் உள்ளன. அது யதார்த்தம். அவர்களை சிறையிலிடுவதோ வேறு விதமாகத் தண்டிப்பதோ சரியாகவோ சாத்தியமாகவோ தெரியவில்லை.
எந்த விதமான கட்டாயத்தின் பேரிலும் பாலுறவு கொள்வது கொடிய குற்றம் என்பதில் எனக்கு மறுப்பில்லை.
அது பாலுறவின் வகையால் வேறுபடுத்திப் பார்க்கத் தகாதது.
கியூபாவின் சட்டங்கள் அவ்வாறான நடத்தையை ஏற்கா.
காப்புறை பாவிக்காத எல்லா வகையான பாலுறவும் நோயைப் பரிசாக வழங்கலாம். நம்மால் எதைப் பற்றியும் நிச்சயமாக இருக்க முடியாது. எயிட்ஸ் இரத்த ப்ளாஸ்மா மூலமும் பரவியிருக்கிறது.
வரலாற்றில் முக்கியம் பெற்றோர் பலரும் தன்னினப் பாலுணர்வுடையோர்.
நான் மிகவும் மதிக்கும் தனிப்பட்ட நண்பர்கள் பலர் தனிமனித விடயங்களிலும் சமூக விடயங்களிலும் மிக நல்லவர்கள். அவர்களில் எவருடனும் என் இள வயது மகன் நட்பாகப் பழகியதைப் பற்றி நான் கவலைப் பட்டதே இல்லை.
தன்னினப் பாலுறவு பற்றிய கடுமையை நீக்கியது ஒரு மனிதாபிமான நடவடிக்கை.
மனிதாபிமான நடவடிக்கைகள் மெச்சத்தக்கன என்றே நினைக்கிறேன்.
கார்ப்பரல் ஸீரோ,
முதலாளித்துவ சீரழிவுகள் எதுவும் சோசலிச சமூகத்தில் நீடிக்க முடியாது. அப்படி அங்கே நீட்டிப்பதாக சொல்ல வருவது, அல்லது கியூபா போன்று ஏற்பது சோசலிசத்தின் மேண்மையை கொச்சைப்படுத்துவதாகும் என்பதுதான் இங்கே மீண்டும் நான் சொல்ல வருவதாகும். மாறாக நீங்கள் தனிப்பட்ட முறையில் இவ்விசயத்தை ஏற்றுக்கொள்வது பற்றி நீங்கள் விரும்பினால் ஒழிய இது குறித்து விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
பிரேம்
யாருடனும் விவாதிப்பது என் நோக்கமல்ல.
விடயங்களைத் தெளிவுபடுத்தும் கருத்துப் பரிமாற்றம் என்ற முறையிலேயே உங்களுடன் உரையாடுகிறேன்.
தன்னினப் பாலுறவை நீங்கள் எற்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பல்ல.
அது மனிதர் நிலை பற்றிய ஒரு பிரச்சனை; அதைச் சமூகம் சற்று விளங்கிக் கொள்ள முயல வேண்டும் என்பதே என் அக்கறை.
கியூபா திருத்திக் கொண்ட விடயங்களில் அது மிக மனிதாபிமானது என்பதால் அதை எடுத்துரைத்தேன்.
உங்களுக்கு அது நல்ல உதாரணமாகப் படவில்லை என்றால் அதைப் பற்றி வருந்துகிறேன்.
.
.
பின்வருவன தெளிவுபடுத்தலுக்கானவை மட்டுமே:
1. தன்னினப் பாலுறவு முதலாளியச் சீரழிவல்ல. அது நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒரு மனித நிலை.
சோஷலிசம் அதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுமாயின், அது சோஷலிச மனிதாபிமானத்தின் பாற்பட்டதல்ல.
இன்று கிறிஸ்தவ திருச்சபைகள் தன்னினப் பாலுணர்வாளர்களை மதத் தலைவர்களாக ஏற்கிறது.
(பவுத்தம் அதை ‘நல்லதல்ல’ என்கிறதே ஒழியக் குற்றம் என்று கருதவில்லை என எனது பவுத்த நண்பர்கள் மூலம் அறிகிறேன்).
பழமைவாதக் கத்தோலிக்கத் திருச்சபையினரும் தீவிர மதவாதிகளுமே அதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகின்றனர். (கியூப ஆட்சியும் கத்தோலிக்க விழுமியங்களில் இருந்து விடுபடாமை முன்னைய கடுமைக்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம்.
2. நாங்கள் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பும் கால்த்தை இன்னமும் கடந்து விடவில்லை. பிரதான முரண்பாடுகளையும் பகை முரண்பாடுகளையும் கையாளுவது போல இரண்டாந்தர முரண்பாடுகளையும் மக்கள் மத்தியிலான முரண்பாடுகளையும் கையாள இயலாது.
கியூபா தன்னினப் பாலுறவை ஒரு குற்றச் செயலாகப் பார்த்தது. அந்த நிலைப்பாட்டை மாற்றியமை, அதனளவில், தன்னினப் பாலுறவை ஏற்பதாகாது.
கியூபா என்றும் அதை ஊக்குவிக்கவில்லை.
அது ஒரு சமூக யதார்த்தத்தை விளங்கிச் சரியாகக் கையாளுகிறது என்பது என் மதிப்பீடு.
3. தனிப்பட்ட முறையில் தன்னினப் பாலுறவில் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை.
என் விருப்புவெறுப்பைப் பிறர் மீது திணிக்க எனக்கு என்ன உரிமை?
நான் சில வகையான உணவுகளை உண்பதில்லை. மற்றவர்கள் அவற்றை உண்பதை என்னால் ஏற்க முடிகிறது.
இதுவும் அது போலத்தான்.
எதுவும் சமூகக் கேடானதெனத் தெரிந்தால் அதை நான் எதிர்ப்பேன். என் பார்வையிற், பாலுறவு விடயத்தில், விரும்பாத ஒருவருடன் வலிந்து பாலுறவு கொள்வது சமூகக் கேடானதும் தண்டனைக்குரியதுமாகும்.
அமெரிக்க நீதி முறையை விட கியூப நீதி முறை யோக்கியமானது. அரசியல் கைதிகளைத் துன்புறுத்துவதை அமெரிக்க அரசு அனுமதித்துவந்துள்ளது. இன்னமும் அனுமதிக்கிறது.
அப் பட்டியல் வெகு நீளம்.
கியூபாவில் சித்திரவதைகள் பற்றி ஏதேதோ சொல்லுகிறீர்கள். அதுபற்றி அமெரிக்கப் பிரசாரங்கள் தவிர அம்னெஸ்ட்டி போல யாராவது என்ன சொல்லியுள்ளனர்?
கியூபாவில் அரசியல் கைதிகள் இருக்க வேண்டிய நிலைக்குக் காரணம் பெருமளவும் அந்நியச் சக்திகளது ஆக்கிரமிப்பும் குழிபறிப்புமே. (பே ஆப் பிக்ஸ் அம்பலப்பட்ட ஒரு பெரிய தோல்வி. ஆனால் அத்துடன் அமெரிக்கக் குறுக்கிடும் குழிபறிப்பும் ஓயவில்லை).
சர்வாதிகாரம் என்று முத்திரை குத்தி விட்டு, அங்கே இப்படி நடக்கிறது அப்படி நடக்கிறது என்று சொல்லிவிடலாம். அது வசதியுங் கூட. ஆனால் உண்மையாகிவிடாது.
கியூபாவிலிருந்து அரசியல் காரணத்திற்காக வெளியேறியோர் பட்டிஸ்டா என்ற “உன்னதமானா ஜனநாயகவாதியின்” ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரும் அமெரிக்க எடுபிடிகளுமே.
கியூபாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் முற்றுகையும் வணிகத்தடையும் காரணமாகவும் அதன் தொடர்விளைவாக அளவுக்கதிகம் ஒரே உற்பத்தி மீது தங்கியிருக்க நேர்ந்ததாலும் சிரமமானதாகவே இருந்தது. கியூபாவின் பொருளாதாரம் நடுத்தர வர்க்கத்தின் திருப்திக்குரியதாக என்றுமே இருந்ததாகச் சொல்ல இயலாது.
நடு-1970கள் தொட்டு அரசியலை விடப் பொருளாதரமும் உறவினர் ஏலவே புலம் பெயர்ந்தமையுமே மிக முக்கிய காரணங்கள்.
கியூபாவுக்குப் போய் வந்தவர்களிடம் விசாரித்துவிட்டுப் பேசினால் நல்லது. அமெரிக்கர்களும் போய் வந்துள்ளனர். பலதும் பற்றிப் பேசியுள்ளனர்.
இலங்கைத் தமிழர் யாருமே பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியேறவில்லை என்று சொல்லுகிறீர்களா?
(பெரும்பாலோர் என்று கூற மாட்டேன்) கணிசமானோர் மேற்குலகுக்குப் போனதன் காரணம் பொருளாதாரமே.
கொழும்பில் விமானமேறக் காத்திருப்போரைப் பற்றி அறிவீர்களா?
எத்தனை லட்சம் செலவழித்துப் போகிறர்கள் தெரியுமா?
தமிழகத்துக்கு ஓட்டைப் படகுகளில் வந்தோர் கதை வேறு.
இலங்கயுடன் ஒப்பிட்டு எல்லாரையும் சிரிக்க வைக்காதீர்கள்.
இலங்கையை வேண்டுமானால் காஷ்மீருடன் ஒப்பிடலாம். (இப்போது இலங்கை அடக்குமுறையின் கொடூரம் காஷ்மீரை விடப் பரவாயில்லை).
கரம்மசாலா,
அந்த சுட்டி பாரிஸில் நடந்த ஒரு வெளிப்படையாக டிரிப்யூனலில், கூபா சிறைகளில் கொடுஞ் சித்திரவதைகளை அனுபவித்தவர்களின் வாக்குமூலங்களை அப்படமாக, நேர்மையாக பதிவு செய்துள்ளது. அவை ‘அமெரிக்க’ பொய் பிரச்சாரங்கள் என்று ஒற்றை வரியில் நிராகரிக்கும் உம்மை என்னவென்று சொல்வது ? அவை அய்ரோப்பிய நடுவர்களால விசாரிக்கப்பட்டது. அந்நடுவர்களின் நடுனிலைமை பற்றி படித்து பார்க்க சொன்னேன்.
அமெனிஸ்டி இண்டர்னேசல் சுட்டி கேட்டிருந்தீர்கள் :
http://www.amnesty.org/en/region/cuba
///கியூபாவிலிருந்து அரசியல் காரணத்திற்காக வெளியேறியோர் பட்டிஸ்டா என்ற “உன்னதமானா ஜனநாயகவாதியின்” ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரும் அமெரிக்க எடுபிடிகளுமே.///
அத நீங்க சொல்ல கூடாது மிஸ்டர். நீங்களும் ஒரு புலம் பெயர்ந்த அகதி என்பதை மறந்துவிட வேண்டாம். உம்மை பற்றியும் இதெ போல் பொய்யான அவதூறு செய்ய அதிக நேரம் ஆகாது. சுமார் 17 ல்ச்சம் கூபர்கள் அகதிகளாக இதுவரை வெளியேறி உள்ளனர். அனைவரும் மேற்படி ‘எடுபிடிகள்’ என்று சர்வசாதாரணமாக முத்திரை குத்தும், உங்களை என்னவென்பது ? ஒரு குலாக் சிறையில் நீரும் அடைப்பட்டு, சித்தரவதை அனுபவித்திருக்க வேண்டும். அப்ப தான் புரியும். (வறட்டு இழுப்பு கேஸ் என்று எங்க பக்கம் சொல்வார்கள், உம்மை போன்றவர்களை.)
///அமெரிக்க நீதி முறையை விட கியூப நீதி முறை யோக்கியமானது. அரசியல் கைதிகளைத் துன்புறுத்துவதை அமெரிக்க அரசு அனுமதித்துவந்துள்ளது. இன்னமும் அனுமதிக்கிறது.அப் பட்டியல் வெகு நீளம்////
இல்லை. பொய். அமெரிக்க மண்ணில், சிறை கைதிகளை சித்தரவதை செய்ய முடியாது. அதனால் தான் அமெரிக்காவிற்க்கு வெளியே கவுடமாலா சிறையில், ஆஃப்கன் ‘கைதிகளை’ சி.அய்.ஏ சித்தரவதை செய்து ‘உண்மைகளை’ வெளி கொண்டுவர முயன்றது. அது ரிப்பளிக்கள் கட்சி ஆட்சியில். ஒபாமாவின் டெமாக்கரட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், இது நிறுத்தப்பட்டது. மிக முக்கியமாக, இந்த சித்தரவதைகளை பற்றி பெரும் எதிர்ப்பு, சர்ச்சை, விவாதம், கடும் எதிர்ப்புகள் அமெரிக்காவினுல், ஊடகங்களில் நடந்தது. தவறுகளை திருத்திக்கு கொள்ளும் அடிப்படை ஜனனாயகம் அங்கு ஓரளவு உள்ளது. (அதற்காக அமெரிக்க செய்யும் குற்றங்களை யான் நியாயப்படுத்துவதில்லை). அமெரிக்க செய்கிறது என்பதற்க்காக அதை ஏற்க்கமுடியுமா ? அல்லது அதை ஒப்பிட்டு கூபா பரவாயில்லை என்று கூபாவை நியாயப்படுத்த முடியுமா ? நல்ல கதை.
51 வருடமாக ஒரே நபர் சர்வாதிகாரியாக ஆண்ட கூபா உமக்கு ‘ஜனனாயகமாக’ படுகிறது. ஆனால் நீர் வாழ தேர்ந்தெடுத்தது, ‘முதலாளித்துவ’ நாட்டில். இரட்டை வேடம் என்று உம்மை போன்றவர்களை இதனால் தான் சொல்ல வேண்டியிருந்தது.
///இலங்கயுடன் ஒப்பிட்டு எல்லாரையும் சிரிக்க வைக்காதீர்கள்.///
1986இல், பாரிஸில் வெளிவந்த வாக்குமூலங்களை, சித்தரவதைகளை பட்டியில் முக்கிய அறிக்கை இது : (மீண்டும் மூன்றாவது முறையாக அளிக்கிறேன்) :
http://polarch.sas.ac.uk/pdf_documents/TropicalGulag.pdf
இதை படித்துவிட்டும். சிரிக்கும் நீர் தான் அய்யா உண்மையான மனிதாபிமானி. வாழ்க உம் மனிதாபிமானம். இலங்கையில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும், அது அடிப்படையில் ஒரு ஜனனாயக நாடு. தேர்தல்கள் உண்டு. அதில் அனைவரும் வாக்களிக்க உரிமை உண்டு. எதிர்கட்சிகள் உண்டு. மாற்றுகருத்துகள் உண்டு. பத்திரிக்கை சுதந்திரம் உண்டு. (இவை நசுக்கப்ட்டாலும், கூபா போல் முற்றாக தடை செய்யப்படவில்லை). எதிர்காலத்தில் ராஜ பக்ஷே ஆட்சியை தேர்தல்களில் வீழ்த்த அங்கு வாய்ப்பு உண்டு. (கூபாவில் சாத்தியமே இல்லை). எதிர் கட்சி ஆட்சியை பிடித்து, ஒரு புதிய தலைமுறை தலைவர் வந்து, தென் ஆப்பிரிக்க போல் ஒரு truth and reconcillation commission அமைத்து, போர் குற்றங்களை விசாரணை செய்ய சாத்தியம் உண்டு. இவை நடக்காமலும் போலாம். ஆனால் கூபாவை விட இலங்கையில் அடிப்படை ஜனனாயகம் மற்றும் உரிமைகள் அதிகம் தான்.
இறுதியாக உம்மை ஒரு denial of truth செய்யும் மார்க்சியவாதி என்றே சொல்கிறேன்.
உமக்கு அடைகலம் அளித்த மே.அய்ரோப்பிய நாடு (அனேகமாக அதே ஃபரான்ஸாக இருக்கும்) பெரும் தவறு செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்நாட்டில் கண்டிப்பாக கூபார்கள் இருப்பர். மற்றும் மெய்யான மனித உரிமையாளர்கள் பலரும் இருப்பர். அவர்களிடம் ‘விசாரித்து’ பாரும்.
//கியூபாவில் அரசியல் கைதிகள் இருக்க வேண்டிய நிலைக்குக் காரணம் பெருமளவும் அந்நியச் சக்திகளது ஆக்கிரமிப்பும் குழிபறிப்புமே.///
இல்லை. மிக மிக தவறான, அநியாயமான வாதம்.
அரசியல் கைதிகள் என்னும் கருத்தாக்கமே மிக மிக அயோக்கியத்தனமான, மானுட விரோத கோட்ப்பாடு. லிபரல் ஜனனாயகம் தழைத்தோங்கும் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பிரிவு உள்ளாதா ? சொல்லுங்கள். நீங்கள் வாழும் ஃப்ரானிஸில் இப்படி இருக்க முடியுமா ? அல்லது அங்கு இதை நியாயப்படுத்தி பேச முடியுமா ? உங்களுக்கு அடிப்படை நேர்மை இருந்தால், அங்கு இதை ஊடகங்களில், பொது மேடைகளில் பேசி, விவாதம் செய்யுங்களேன் பார்க்கலாம்.
குற்றங்கள் எவை, நீதி விசாரணை முறைகள் எப்படி இருக்க வேண்டும், கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதை அப்படியே ஏற்க்க நாங்கள் அடிமைகளோ அல்லது மூடர்களோ அல்ல.
//சர்வாதிகாரம் என்று முத்திரை குத்தி விட்டு, அங்கே இப்படி நடக்கிறது அப்படி நடக்கிறது என்று சொல்லிவிடலாம். அது வசதியுங் கூட. ஆனால் உண்மையாகிவிடாது.//
எது உண்மை என்று வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். சர்வாதிகாரம் என்று ‘முத்திரை’ எல்லாம் குத்தவில்லை. அதுதான் அடிப்படை உண்மை. சர்வாதிகாரம் என்றால் என்ன, ஜனனாயகம் என்றால் என்ன என்று பேசலாமா ? மிக விரிவாக எமது பின்னூட்டங்களின் இங்கு சொல்லியிருந்தேனே ?
வினவு,
இதை பற்றி உங்கள் கருத்துகளை உடனடியாக, நேர்மையாக, வெளிப்படையாக இங்கு எழுதவும்.
///கியூபாவுக்குப் போய் வந்தவர்களிடம் விசாரித்துவிட்டுப் பேசினால் நல்லது. அமெரிக்கர்களும் போய் வந்துள்ளனர். பலதும் பற்றிப் பேசியுள்ளனர்.///
உண்மையில் சீரியாசாக தான் பேசுகின்றீரா ? அமெரிக்கா ‘போய் வந்தவர்கள்’ என்ன பெரிய சொல்லாடல் ? அங்கு வசிக்கும் லச்சகணக்கான தமிழர்களை கேட்க்கலாமா ? இங்கு பின்னூடம் இடுப்வர்களில் பலரும் அங்கு வசிப்பவர்கள் தானே ? கூபாவில் இருந்து புலம் பெயர்ந்த யாராவது கூபர் ஒருவரை நீங்க வசிக்கும் நாட்டில் சந்திக்க வாய்ப்பு அதிகம். அவர் என்ன சொல்வார் என்று பார்க்கலாமா ?
உங்கள் “ஆயிரங்கள்” போலத்தான் அமெரிக்காவில் வாழும் தமிழரது “லட்சக்கணக்கும்”. கனடாவில் தான் ஈழத்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். (கனடா அமெரிக்கக் கண்டத்தில் உள்ளது என்று இன்னொரு பாட்டம் தொடங்காதீர்கள்).
அவர்களில், எத்தனை தமிழர் கியூபாவுக்குப் போயுள்ளார்கள்?
“உண்மையில் சீரியாசாக தான் பேசுகின்றீரா ?”
உறுதியாக, உங்களை விடப் மிகப் பொறுப்புடன் தான் இதுவரை எழுதியுள்ளேன்.
“நீங்களும் ஒரு புலம் பெயர்ந்த அகதி என்பதை மறந்துவிட வேண்டாம்.”
“உமக்கு அடைகலம் அளித்த மே.அய்ரோப்பிய நாடு (அனேகமாக அதே ஃபரான்ஸாக இருக்கும்) பெரும் தவறு செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. ”
இந்த விதமாக வாய்க்கு வந்த படி பயனற்ற கூற்றுக்களைக் வழங்கக்கூடிய ஒரு *யோக்கியரிடமிருந்து யரும் என்ன உண்மையை எதிர்பார்க்க முடியும்?
(இதற்கு முதலும் ஒரு கேவலமான பேர்வழி எனக்குச் சினமூட்டி என் ஊர் பேர் விவரங்களை அறிய முயன்றதை நான் மறக்கவில்லை)
முடிவில் எல்லாவற்றையும் தனிப்பட்ட விடயமாகத் தான் மாற்றித் திசை திருப்ப உங்களுக்கு இயலும். உங்கள் ஆற்றாமை மிகுந்த அனுதாபத்துகுரியது.
உங்களதை விட சீரியசாக ஒன்று:
நான் இப்போது செவ்வாய்க் கிரகத்தில் இருக்கிறேன்.
மகிழ்ச்சியா?
//முடிவில் எல்லாவற்றையும் தனிப்பட்ட விடயமாகத் தான் மாற்றித் திசை திருப்ப உங்களுக்கு இயலும். உங்கள் ஆற்றாமை மிகுந்த அனுதாபத்துகுரியது///
ஆம், உம்மை பற்றி, முக்கியமாக உமது நிஜ வாழ்க்கை முரண்பாடுகளை பற்றி, பேசும் கொள்கைகளுக்கும், வாழும் தேசத்தின் ஜனனாயக அமைப்பிற்க்கு உள்ள முரண்பாடுகளை பற்றி பேசத்தான் வேண்டியுள்ளது. இது தனி மனித தாக்குதல் அல்லது திசை திருப்ப அல்ல.
அரசியல் கைதிகள் என்ற பிரிவே மிக மிக மிக மிக கொடூரமான, அயோக்கியத்தனமான, மானிட விரோத செயல் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அறிவுலகம் அதை தான் வழிமொழிகிறது. உங்களுக்கு அடைகலம் அளித்த நாடும் அந்த அடிப்படையில் தான் அடைகலம் மற்றும் நல்வாழ்வு அளித்துள்ளது. ஆனால் அதி தேவை என்று மனித நேயமே இல்லாமல், கூசாமல் பேசுகிறீர்கள். மேலும் கைதிகளை கொடூரமாக சித்தரவதை செய்வதை ஆதாரத்துடன் மீண்டும் மீண்டும் நிருபித்தும், அதை பற்றி பேசாமால், அலட்சியப்படுத்தி, விவாதத்தை திசை திருப்பும் உம்மை பற்றி பேசுவதில் என்ன தவறு ?
அம்னெஸ்டி இண்டெர்னேசல் தரவுகள் கேட்டீர்கள். ஒரு சுட்டி தான் அளித்தேன். இன்னும் பல ஆயிரம் ஆய்வுகள், கட்டுரைகள் அளிக்க முடியும். ஆனால் அதை பற்றி பேசமாட்டீர்கள். உம்மை பற்றி விமர்சிப்பதாக அங்கலாயிப்பீர்கள். தரவுகளை பற்றி ஒரு வரி கூட விவாதிக முயலமாட்டீர்கள்.
வினவில் இப்போது மனித உரிமை போராளி, காலஞ்சென்ற திரு.கே.ஜி.கண்ணபிரான் அவர்களை பற்றி கட்டுரை வந்துள்ளது. அவரும், அவர் சார்ந்த மனித உரிமை அமைப்பும், கூபா பற்றி, இதர மார்க்சிய போராளிகளின் வன் கொடுமைகள் பற்றி என்ன கருதுகின்றனர் என்பதை பற்றி விவாதிப்போமா ?
வினவு : இந்த பதிவில் நடந்த விவாதங்களை பற்றி, மனித உரிமைகள், அடிப்படை ஜனனாயகம், கருத்து சுதந்திரம் பற்றி இதுவரை நீங்களோ, உங்கள் தோழர்களோ ஒரு வரி கூட விவாதிக்க முயலாமல், கள்ள மவுனம் காக்கிறீர்கள். ஆனால் திரு.கன்னபிரான் பற்றி
எழுத துணிகிறீர்கள். PUCL அமைப்பில் எமக்கும் நண்பர்கள் உண்டு. ’மனித உரிமைகளும், சித்தாந்தங்களும்’ என்ற தலைப்பில், அவர்கள்ளை நடுவராக கொண்டு, ஒரு திறந்த விவாதம், நேரில் செய்ய நான் தயார். செய்யலாமா ?
“ஆம், உம்மை பற்றி, முக்கியமாக உமது நிஜ வாழ்க்கை முரண்பாடுகளை பற்றி,..”
அடியேனைப் பற்றி ஸ்வாமிகாள் அறிவது ஒன்றுமேயில்லை என்றும் இவ் விடயத்தில் ஸ்வாமிகாளின் அஞ்ஞானப் பெருவெளியை இட்டு நிரப்ப உதவும் நோக்கம் அடியேனுக்கு இல்லை என்றும் தாழ்மையுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு முதலும் கேவலமான ஒரு பேர்வழி எனக்குச் சினமூட்டி என் ஊர் பேர் விவரங்களை அறிய முயன்றதை நான் மறக்கவில்லை என எழுதினேன்.
இப்போது, அன்னார் ஸ்வாமிகாளாகவே இருக்கலாம் எனும் சிறு ஐயம் மனதிற் துளிர்த்தாலும் அதை அடியேன் பொருட்படுத்தப் போவதில்லை என்று மேலும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஸ்வாமிகாள் தங்களது $#ஞானப் பெரு வெளியில் தொடர்ந்தும் ஆனந்தமாகச் சஞ்சரிக்க அடியேனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் செவ்வாய்க் கிரகத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
//இதற்கு முதலும் கேவலமான ஒரு பேர்வழி எனக்குச் சினமூட்டி என் ஊர் பேர் விவரங்களை அறிய முயன்றதை நான் மறக்கவில்லை என எழுதினேன்////
My aim is not to know your real name or place of residence, etc. Only to compare your ‘principles’ vs real life practices. ok.
First try to ANSWER my points about torture of political prisioners in Cuba, about the need for ‘political’ prisioners at all. and about what constitutes a democracy and what is meant by dictatorship. Forget about what we talked about your persona. Try to answer to my basic points in a honest and forthright manner. Otherwise, i can conclude that you are eluding direct answers here.
and you asked for Amnesty International reports. I had given them and the most pertinent report from France of 1986. You do not talk about this till date. why ?
Firstly, learn to conduct discussions in a civilised way.
It may be hard, but worth a try.
Amnesty has not accused Cuba of the kind of “torture” that you talked about.
சிவசேகரம்,
வினவிற்க்கு புதுசா வருகிறீர்கள் போல. இங்கு சர்வசாதாரணமாக முன்பு பிரயோக்கிக்கப்பட்ட சொல்லாடல்களை பார்த்திருந்தால் இப்படி சொல்ல மாட்டீங்க.
மேலும், கரம்மசாலாவை ‘திட்டி’ வசை மொழிகளால் எங்கும் தாக்கவில்லையே.
அம்னெஸ்டி இண்டெர்னேசான்ல் ‘சித்திரவதைகளை’ பற்றி இன்று பேசவில்லை. இன்று அவை அனேகமாக கூபாவில் நின்று போயிருக்கலாம். ஆனால் 1986இல் வெளிவந்த பாரிஸ் டிரிப்யூனல் அறிக்கைகளை மறுக்கின்றீரா அப்ப ? அவை அனைத்தும் பொய்களா ? முழுசா படித்துவிட்டு, அதன் நடுவர்களின் பின்புலத்தை பற்றி அறிந்து கொண்டு பேசுங்களேன். சித்தரவதைகள் அன்று பெரும் அளவில் இருந்தன என்பதை மறுக்கின்றீர்களா ? அம்னெஸ்டி தவிர பிற அமைப்புகள் தரும் ஆதாரங்களை ஏற்க்க மாட்டீர்களா என்ன ? மெய் பொருள் காண்பதறிவு.
சரி, அம்னெஸ்டி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சொல்வதை பற்றி பேசமாட்டேன் என்கிறீர்கள் ? அரசியல் கைதிகள் என்ற கருத்தாக்கமே மிக கொடூரமானது என்று தொடர்ந்து சொல்கிறோம். அதை பற்றி பேச மறுக்கிறீர்கள்.
அம்னெஸ்டியில் பழைய அறிக்கைகள் இணையத்தில் இல்லைதான். 70கள், 80களில் அமெனெஸ்டி என்ன சொல்லியது என்று வேறு இடங்களில் தான் பார்க்க வேண்டும்.
பாரிஸ் ட்ரிப்யூனல் சொல்லிய விசியங்களை அன்று அம்னெஸ்டி மறுத்தாக தெரியவில்லை. அம்னெஸ்டி மனித உரிமைகளுக்கான அமைப்பு. முதலாளித்துவ பாணி சர்வாதிகாரிகள் மற்றும் நாடுகள் செய்யும் மீறல்களையும் எதிர்க்கும் அமைப்பு. யார் செய்தாலும் வெளிப்படுத்தி, எதிர்க்கும் தான்.
சிவசேகரம்,
DEATH OF CUBAN PRISONER OF CONSCIENCE ON HUNGER STRIKE MUST HERALD CHANGE
4 February 2010
Amnesty International has urged Cuban President Raúl Castro to immediately and unconditionally release all prisoners of conscience after a political activist died following a hunger strike.
Orlando Zapata Tamayo was reported to have been on hunger strike in protest at prison conditions for several weeks before his death in Havana on Monday.
“The tragic death of Orlando Zapata Tamayo is a terrible illustration of the despair facing prisoners of conscience who see no hope of being freed from their unfair and prolonged incarceration,” said Gerardo Ducos, Amnesty International’s Caribbean researcher. “A full investigation must be carried out to establish whether ill-treatment may have played a part in his death.”
Orlando Zapata Tamayo was arrested in March 2003 and in May 2004 he was sentenced to three years in prison for “disrespect”, “public disorder” and “resistance”.
He was subsequently tried several times on further charges of “disobedience” and “disorder in a penal establishment”, the last time in May 2009, and was serving a total sentence of 36 years at the time of his death.
“Faced with a prolonged prison sentence, the fact that Orlando Zapata Tamayo felt he had no other avenue available to him but to starve himself in protest is a terrible indictment of the continuing repression of political dissidents in Cuba,” said Gerardo Ducos
“The death of Orlando Zapata also underlines the urgent need for Cuba to invite international human rights experts to visit the country to verify respect for human rights, in particular obligations in the International Covenant on Civil and Political Rights.”
Orlando Zapata Tamayo was one of 55 prisoners of conscience who have been adopted by Amnesty International in Cuba.
The majority were among the 75 people arrested as part of the massive March 2003 crackdown by authorities against political activists. With no independent judiciary in Cuba, trials are often summary and fall grossly short of international fair trial standards. Once sentenced the chances of appeal are virtually nil.
http://www.amnesty.org/en/news-and-updates/death-cuban-prisoner-conscience-hunger-strike-must-herald-change-2010-02-24
இது ‘சித்தரவை’ இல்லையா ? இதை நீங்கள் கண்மூடித்தனமாக நியாயப்படுத்துகிற்ர்களா ? இதைவிட கொடுமைகள் முன்பு கூபாவிலும், சோவியத் ரஸ்ஸியாவிலும், கி.அய்ரோப்பிய நாடுகளிலும், வட கொரியாவிலும் நடக்கவே இல்லை என்று மனதார சொல்கிறீர்களா ? அல்லது அவை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் எல்லோரும் ‘எகாதிபத்திய கைக்கூலிகள்’, முதலித்துவ அடிவருடிகள் என்று ஏளனம் செய்யும் கும்பலை சேர்ந்தவரா ?
Was he tortured as you claimed?
சிவசேகரம்,
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசற்தா நினைப்பா ? ‘அரசியல்’ காரணங்களுக்காக அவரை தொடர்ந்து 36 வருடங்கள் கொடுஞ்சிறையில், நேர்மையான நீதி விசாரணை இன்று அடைத்து வைத்தது ‘சித்தரவதையாக’ தெரியவில்லையா ?
80களின் ஆரம்பத்தில், இலங்கை வெளிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுறை போன்ற ஈழப்போராளிகள், சித்தரவதை செய்து கொல்லப்பட்டனர். அதை பற்றி அம்னெஸ்டி இண்ட்டெர்னேசனல் வலைமனையில் இன்று தகவல்கள் இல்லைதான். (இணையம் உருவானது 90களில் தான் என்ற எளிய காரணத்தினால்). அதற்காக அந்த கொடுமைகளை ‘நிருபிக்கு’ மாறு இன்று யாராவது கேட்டால், என்ன நினைக்க தோன்றும்.
பாரிஸ் டிர்ப்யூனல் 1986இல் வெளியிட்ட (சித்தரவதைகள் பற்றிய) முடிவுகள் பற்றி பல பல முறை கேட்டும், ஒரு பதிலும் சொல்லாமல், அவை அமெரிக்க பிரச்சாரங்கள் என்று ஒற்றை வரியில் நிராகரிக்கும், உம்மை கூபா சிறையில், இதே போல் 36 வருடங்கள் அடைக்க வேண்டும் என்றே இப்ப தோன்றுகிறது. மனித நேயமே சிறிதும் இல்லையா உங்களுக்கு ? விதண்டாவாதம் என்பது இதுதான். பட்டினி போராட்டம் நடத்தி, இறுதியாக உயிரை விட்ட கைதி அவர். அவரின் சாவை, வாழ்வை இதைவிட கொச்சை படுத்த முடியாது.
காலஞ்சென்ற திரு.கண்ணபிரான் அவர்களைப் பற்றி வினவு ஒரு பதிவு இப்போது வெளியிட்டுள்ளது. அவர் தலைவராக இருந்து வழி நடத்திய PUCL என்ற மனித உரிமை அமைப்பினரிடம், இந்த ‘சித்தரவதைகள்’ பற்றி நேரில் பேசி தெளிவடையலாமா ?
கூபாவில், சோவியத் ரஸ்ஸியாவில், மாவோவின் சீனாவில், வட கொரியாவில், ‘செம்புரட்சி’ என்ற பெயரால் நடந்த மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை பற்றி அவர்களின் கருத்துகள் என்னவென்று கேட்டறியலாமா ? வினவு : உங்களையும் தான் மீண்டும் கேட்கிறேன். தயாரா ?
“The tragic death of Orlando Zapata Tamayo is a terrible illustration of the despair facing prisoners of conscience who see no hope of being freed from their unfair and prolonged incarceration,” said Gerardo Ducos, Amnesty International’s Caribbean researcher. “A full investigation must be carried out to establish whether ill-treatment may have played a part in his death.”
Orlando Zapata Tamayo was arrested in March 2003 and in May 2004 he was sentenced to three years in prison for “disrespect”, “public disorder” and “resistance”.
He was subsequently tried several times on further charges of “disobedience” and “disorder in a penal establishment”, the last time in May 2009, and was serving a total sentence of 36 years at the time of his death.
“Faced with a prolonged prison sentence, the fact that Orlando Zapata Tamayo felt he had no other avenue available to him but to starve himself in protest is a terrible indictment of the continuing repression of political dissidents in Cuba,” said Gerardo Ducos.
வினவு : இந்த பதிவில் நடந்த விவாதங்களை பற்றி, மனித உரிமைகள், அடிப்படை ஜனனாயகம், கருத்து சுதந்திரம் பற்றி இதுவரை நீங்களோ, உங்கள் தோழர்களோ ஒரு வரி கூட விவாதிக்க முயலாமல், கள்ள மவுனம் காக்கிறீர்கள். ஆனால் திரு.கன்னபிரான் பற்றி
எழுத துணிகிறீர்கள். PUCL அமைப்பில் எமக்கும் நண்பர்கள் உண்டு. ’மனித உரிமைகளும், சித்தாந்தங்களும்’ என்ற தலைப்பில், அவர்கள்ளை நடுவராக கொண்டு, ஒரு திறந்த விவாதம், நேரில் செய்ய நான் தயார். செய்யலாமா ?
Mr Libertarian
I think that you have to learn some manners before one can seriously continue a dialogue with you.
Good bye.
Mr.Sivasekaram,
I think you are a clever escapist who manages to dodge the basic issue here with ease by talking only about my ‘manners’ ; Let the readers here and moderators decide about ‘manners’. Anyway, congratulations on your ‘great escape’ while the poor political prisoners continue to be incarcerated in prisons of injustice in Cuba and other nations.
Adieus Amigos !!
பதிவு கியூபா உலக நாடுகளில் செய்யும் மருத்துவ பணிகளை பற்றியும், கியூபாவில் மருத்துவம் பற்றியதுமாகும்.
இதற்கும் Cubaவில் மனித உரிமை மீறலுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?
சரி, Cubaவில் மனித உரிமை மீறலே இருக்கட்டும், அங்கே மருத்துவம் (உலகின் எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி) மக்களுக்கானதாக இருக்கிறதே?
இங்கே நம் நாட்டில் மனித உரிமையும் இல்லை, மருத்துவமும் சரியா இல்லையே?
அப்படியானால் நம் நாடு Cubaவை விட மோசம் தானே?
மருத்துவம் பற்றிய பதிவில், மனித உரிமை பற்றி பேச வேண்டிய அவசியமென்ன?
இங்கே மருத்துவம் எல்லாருக்கும் கிடைத்துவிட்டதா? அல்லது உலகின் அனைத்து பணக்கார நாடுகளில் (அதியமான் சொல்லும் சுதந்திர நாடுகளில்) எல்லாம் மருத்துவம் எல்லாருக்கும் கிடைத்துவிட்டதா?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,
மருத்துவம், சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையில்லையா? அத பத்தி பேசாம இப்படி பேச காரணம் தான் என்ன?
//சரி, Cubaவில் மனித உரிமை மீறலே இருக்கட்டும், அங்கே மருத்துவம் (உலகின் எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி) மக்களுக்கானதாக இருக்கிறதே?/
மருத்துவ சேவைகள் நன்றா இருந்தா போதுமா ? அது மட்டும் தான் முக்கியமா ? மொத்த நாட்டின் நிலையையும் ஒட்டுமொத்தமாக பார்க வேண்டும். நல்ல மருத்துவ சேவைகளுக்கக அங்கு மக்கள் அளிக்கும் விலை மிக மிக மிக கொடுமையானது. அதே முறையில் உலகெங்கிலும் உருவாக்கினால் எப்படி இருக்கும் ?
கனடாவில் மருத்துவ சேவை நன்றாகத்தான் உள்ளது. அமெரிகாவில் ஒரு அடிப்படை சிக்கல், மருத்துவர்களின் சங்கம், புதிய மருத்துவர்களை, வெளிநாடுகளில் இருந்து அனுமதிக்க பெரும் தடைகளை செயற்க்கையாக உருவாக்கி வைத்துள்ளது. பொறியாளர்களை அனுமதிக்கும் அளவிற்க்கு மருத்துவர்கள் சுலபமாக நுழைய முடியாது. மிக சிக்கலான, கடுமையான நிழைவு தேர்வுகள். வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது. It is closed shop of doctors to protect thier monoploy.
@ Libertarian,
////இங்கே நம் நாட்டில் மனித உரிமையும் இல்லை, மருத்துவமும் சரியா இல்லையே? அப்படியானால் நம் நாடு Cubaவை விட மோசம் தானே?
மருத்துவம், சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையில்லையா? அத பத்தி பேசாம இப்படி பேச காரணம் தான் என்ன?////
is it some school/collage/university question paper? did any one tell you to answer any one question which you prefer ?
if you agree that indian condition is worse than cuba, as an indian, you got to talk about our conditions..
what is the need of blabbering about cuba.
neither you nor me living in cuba, we live here. here the conditions are very worse than any other country.
if you deny this, its like ”பூனை கண்ணை கட்டிக் கொள்வது, எனக்கு மூனுவேளை சப்பாடு கிடைக்குது, அதனால இங்க மூனுவேளை பட்டினி கிடக்குற மக்கள் இருக்குறாங்கன்னு சொன்னா அது பொய்.”
i hope you would nt answer this… you will just keep going like 2*pi*r 🙂
all the best Mr. Libertarian, soon you will find the area.. 🙂
as i already knew these formulas, let me go. GOOD BYE!
எ.ஒரு.உ,
அந்த கேள்வி எழுப்பியது நானல்ல. சரியா படித்துவிட்டு முழங்கவும். விவாதம் கூபாவை பற்றி. எனவே அதை பற்றி விரிவாக, தரவுகளுடன் பேசுகிறேன். முடிந்தால் அதே பாணியில், specificஆக விவாதிக்க முயலவும். பொதுபடையான பேச்சுகள் வீண். கூபா பற்றி நிறைய அறியாமை இங்குள்ளது.
யார் மருத்துவத்தைப் படிக்க வேண்டும்?
”பணம் சம்பாதிப்பதற்காக ஒருவன் மருத்துவத்தைப் பயில்வானேயானால் அவன் மருத்துவப் புத்தகத்தை மூடி வைத்துவிடுவதே நல்லது.
ஒரு மருத்துவரின் பணி என்னவாக இருக்க வேண்டும்?
”நோயுற்றவனை நோயிலிருந்து மீட்டு அல்லது நலப்படுத்தி அவனை பழைய நிலைக்கு அதாவது நல்ல நிலைக்கு (ஆரோக்கிய நிலைக்கு) கொண்டு வரவேண்டும். இது தான் நலமாக்குவதன் பொருளாகும்.
ஒரு மருத்தவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்?
”நோய் உண்டாவதற்கான காரணியைக் கண்டறிந்து அதை களைவதற்கான வழி முறைகளைத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் மேற்கொண்டு நோய்க்கு ஆட்படுவதை அவரால் தடுக்க முடியும்.
இந்த வரையறைகளை காரல் மார்க்சோ அல்லது கம்யூனிஸ்டுகளோ சொல்லவில்லை.
ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அளித்த மருத்துவர் ஹானிமன் அவர்கள் தான் இவ்வாறு கூறுகிறார்.
மைய விசயத்திலிருந்து விவாதத்ததை வேறு தளத்திற்கு இழுத்துச் செல்வதையே ஒரு வேலையாகச் செய்து கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதையே மறக்கடிக்கச் செய்யும் ஒரு சில யுக்தியாளர்கள்கூட மருத்துவர் ஹானிமன் அவர்களின் மேற்கண்ட கருத்தை மறுக்க மாட்டார்கள் என நம்பகிறேன் (!).
கியூபா நாடு ஒரு சோசலிச நாடா அல்லது போலி சோசலிச நாடா என்பதா இங்கு விவாதப் பொருள்?.
அது எந்த வகை நாடாக இருந்தாலும் தன்னலம் பாராமல் மருத்துவச் சேவையாற்றும் கியூபா மருத்துவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அப்படிப்பட்ட சேவையை ஊக்குவிக்கும் கியூபாவையும் பாராட்ட வேண்டும்.
“மருத்துவர்களின் பணி நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல அந்த நோய் வராமல் தடுப்பது என்ற அடுத்த கட்ட தாவலை கூப மருத்துவத் துறை எப்பொழுதோ எட்டிவிட்டது.”
ஹானிமன் கூற்றுக்கு இது சான்றுதானே.
மக்கள் நோயுற்றால்தான் தான் வளமாக வாழமுடியும் என கனவுகளைச் சுமந்து திரியும் மருத்துவர்கள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில் கியூபா மருத்துவர்களின் பணி மகத்தானது. பாராட்டுவோம். பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்த வினவுக்குப் பாராட்டுக்கள்.
ஊரான்,
//கியூபா நாடு ஒரு சோசலிச நாடா அல்லது போலி சோசலிச நாடா என்பதா இங்கு விவாதப் பொருள்?//
கட்டுரையின் மையப் பொருள் கியூப மருத்துவத்துறையின் மகத்தான பங்களிப்பு குறித்தது என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதே பதிவில் கட்டுரையாளர் என்ன சொல்லியிருக்கிறார்? ///பிடல் காசுட்ரோவின் பன்னாட்டு மருத்துவ திட்டம் சோசலிச கூபாவிற்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கின்றது,///
இதிலிருந்து இக்கட்டுரை வாசகர்களுக்கு உணர்த்தப்போவது என்ன?
கியூபா பாணியிலான ‘சோசலிச’ திசை வழியை நாம் ஏன் பின்பற்றக் கூடாது? அல்லது மற்ற நாடுகளிலும் ஏன் உருவாக்கப்பட கூடாது? என்ற கேள்விகள்தான் எழும். எழுப்புகிறது.
ஆனால் கியூபா ஒரு போலி சோசலிச நாடாக இருக்கும் நிலையில் சோசலிசத்திற்கான ரோல் மாடலாக சித்தரித்து உண்மையான சோசலிசத்தைப் பற்றிய மதிப்பீட்டையே தவறுதலாக ஏன் காட்ட முற்பட வேண்டும்? இதைச் சுட்டிக் காட்டினால் விவாதப் பொருளிலிருந்து திசை திருப்புவதாக கூறுகிறீர்கள். எப்படி என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்?