கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

22
35

அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களை ரீமிக்ஸ் செய்து சுடச்சுட தருகிறோம். கேளுங்கள், சுரணை கொள்ளுங்கள்!

1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம்

தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க,  அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது…

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி!
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில்
கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது

(சோதனை மேல்..)

அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல
நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள…
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல
ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த
தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல

(சோதனை மேல்..)

விஜயகாந்த்: மாமா! காய்ஞ்சி போன கட்சியெல்லாம்
வத்தாத போயசைப் பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த போயசே நமக்கு காய்ஞ்சி போனா?
துன்பப்படறவங்க எல்லாம் கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க – அந்த தெய்வமே
நம்மள தெருவுல நிறுத்துனா…

தானாக அறிக்கைவிட்டாள்… சதையாடுது – அது
இடது என்றும் வலது என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் புரட்சி என்பது… அதில்
புரட்சித்தலைவி புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது உன் அறிவிப்பு தாங்குமா
இடி போல தொகுதி வந்தால் மடி தாங்குமா?

(சோதனை மேல்…)

____________________________________________________________________

2. வைகோ பாடுகிறார்…..

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD0747%27&lang=en

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே..
பம்பரத்தைப் பார்த்து இலை சொன்னது என்னைத் தொடாதே..
தாயகத்தைப் பார்த்து போயசு சொன்னது என்னைத் தொடாதே..
அண்ணன் வை.கோ.வைப் பார்த்து அம்மா சொன்னது என்னைத் தொடாதே..

(நிலவைப் பார்த்து..)

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொல்வது
சொன்ன வார்த்தையும் இரவல் தானது – அது
கருணாநிதியின் வாய் சொன்னது

(நிலவைப் பார்த்து…)

முப்பது சீட்டை தராத போதிலே – ஒரு
மூணு சீட்டுக்கும் தகுதி இல்லையா
புரட்சித் தலைவரை நீ தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இல்லையே

(நிலவைப் பார்த்து…)

தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
கூட்டணி வைத்த கை தொகுதி பார்த்ததா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை – அண்ணன்
வைகோ இன்றி உனக்கு அழகேயில்லை

(நிலவைப் பார்த்து…)

__________________________________________________________

3. அம்முவுடன் கூட்டணி செட் ஆகுமா, ஆகாதா ? கன்பீசனில் கறுப்பு எம்.ஜி.ஆர்

அம்மாடி அம்முக்கு தங்க மனசு கொட்டுது இந்த முரசு
ஸ்காட்சுக்கு பண்ணெண்டு வயசு அவ சொல்லுக்கு நாலு கிளாசு

ஓஓஓஓஓஓ

எண்ணையில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்தது வியப்பு
என்னவோ நடக்குது நடப்பு – அதில் ஏதோ சுகமும் இருக்கு

யாருக்கு அம்மு கதை தெரியும் எம்.ஜி.யாருக்கு மட்டும் இது புரியும்.
கூட்டணி குழப்பங்கள் இருக்கும் பண்ருட்டியார் கன்னம் சிவக்கும்

(அம்மாடி..)

அடித்தால் அழுவேன் ஒருநாள்
அம்மு அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை

அம்முக்கு தமிழ்நாடு சொந்தம்
மிச்சம் மீதி கேப்டனுக்கு சொந்தம்
போயசுக்கு ரெட்ட இலை சொந்தம் – அவ
போட்ட எச்சிலைக்கு இந்த உள்ளம் சொந்தம்

(அம்மாடி…)

______________________________________________________________

4. காங்கிரசின் அடிமை கருணாநிதியின் அங்கலாய்ப்பு…

http://www.raaga.com/player4/?id=27042&mode=100&rand=0.4054366296121451

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காங்கிரஸ்காரன் குழப்பத்திலே

(அண்ணன் என்னடா..)

தங்கபாலுவே ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா..
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
கோஷ்டி சண்டைகள் நூறடா..

(அண்ணன் என்னடா..)

தேர்தல் கமிசனை கொண்டு வந்து
கட்டி வைத்தவன் யாரடா
ஸ்பெக்ட்ரம் கட்டுகள் வைத்திருந்துமே
அவன் போடும் கண்டிஷன் பாரடா
அடித்த கொள்ளையில் கிடைத்த காசுகள்
அமுங்கிக் கிடப்பது வீணடா
பணத்தின் மீதுதான் பாசம் என்றபின்
பயந்து பயந்து ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்க இருக்கிறார்
போய் அழகிரியைப் பாரடா

(அண்ணன் என்னடா..)

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்தான் காங்கிரசு நாயடா – ராசாவை
உள்ளே வைத்தபின் யோக்கியன் போலே
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…

(அண்ணன் என்னடா..)

________________________________________________________

துரை. சண்முகம்

__________________________________________________

சந்தா

22 மறுமொழிகள்

 1. கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் ! | வினவு!…

  அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களின் ரீமிக்ஸ்……

 2. வைகோ கேட்ட நேயர் விருப்பப் பாடல்:

  சில பேருக்கு நாம் சொல்லும் நியாயம், அது அநியாயம் ஆனாலும் ஆகும்…..இந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்….செய்த குற்றங்கள் எதனாலே தீரும்…….

 3. கவலையில் இருக்கும் கூட்டணித் தொண்டர்களே! கவலையை மறக்க கடைக்குப் போகாதீர்கள். காசு விரயம். உடலும் கரையும். வினவைப் பாருங்கள்.எல்லாம் மறக்கும்.

  “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்”
  என்பார்களே, அது உண்மைதான் போல. பாட்டைக் கேட்டுக் கொண்டே வரிகளைப் படித்த போது திரைப்படப் பாடல்களை நாடாத நானே
  மயங்கிவிட்டேன் என்றால் பாருங்களேன்.

  “மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு…..
  என உங்களைப் பார்த்து பாடத் தோன்றுகிறது கவிஞர் துரை சண்முகம் அவர்களே!

  வினவின் “டாப் ஃபோர்”. வாக்குப் போட்டு வரிசைப் படுத்த வேண்டிய வேலை எங்களுக்கு இல்லாமல் செய்து விட்டீர்களே. எங்கள் வாக்கை ஏன் பறித்தீர்கள்?

  இருந்தாலும் வரிகளுக்கு நான் வாக்களிக்கிறேன். இதோ முதலிடம் பிடித்த வரிகள்.

  “முப்பது சீட்டை தராத போதிலே – ஒரு
  மூணு சீட்டுக்கும் தகுதி இல்லையா
  புரட்சித் தலைவரை நீ தொடாவிடில்
  நீயும் இல்லையே நானும் இல்லையே”

 4. //அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல
  நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள…
  பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
  எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல
  ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த
  தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல//

  இந்த வரிகளுக்காகத்தான் ஒருக்கால் இசையமைப்பாளர் மெட்டுப் போட்டிருக்கலாம் என்கிற அளவுக்கு கச்சிதமான பாடல் வரிகள்; பாடல் வரிகளில் கச்சிதமான கருத்துக்கள். அனேகமாக தேர்தல் பொறுக்கிகளின் பிரச்சார மேடைகளில் இடத்துக்குத் தகுந்தாற்போல பாடப்படவும் இருக்கலாம்.பாடப்படவும் வாய்ப்பிருக்கிறது. என்ன செய்வது? தோழர். துரை சண்முகத்தின் வரிகள் சில சமயங்களில் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்!

 5. தோழர் கிளப்பிட்டீங்க போங்க,

  போக்குவரத்தில் சிபிஎம் தொழிற்சங்கத்தின் மாநில அளவிலான தலைவர் ஒருவருடன் மாலையில் பேசும் போது என்ன ஆச்சு கூட்டணி என்றவுடன் நாங்கள் நொந்து நூலாகிக் கிடக்கோம் என்றார். தங்களின் ரீமிக்ஸ் பாடல்களைப் பார்த்து சிரித்து வயிறு அறுந்துவிட்டது. நன்றி

 6. /அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல
  நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள…
  பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
  எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல
  ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த
  தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல/

  பாடல்கள் மிகவும் அருமை.

 7. Please Mr. Praveen Kumar allow the concerned parties to sing the above remix songs througout their election compaign.Mr.Poet please compose some other lyrics for PMK,CONGRES,VC Party etc..

 8. //விஜயகாந்த்: மாமா! காய்ஞ்சி போன கட்சியெல்லாம்
  வத்தாத போயசைப் பார்த்து ஆறுதல் அடையும்…
  அந்த போயசே நமக்கு காய்ஞ்சி போனா?
  துன்பப்படறவங்க எல்லாம் கவலையை
  தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க – அந்த தெய்வமே
  நம்மள தெருவுல நிறுத்துனா…///

  🙂 🙂 🙂

 9. Dear Vinavu

  Generally I am totally against this website as it is fully anti brahminic and always finds faults and criticizes others.

  But even then this particular article and the innovated poems are simply awesome. I laughed to the core of my heart and it is truly a creative humorous piece.

  My heartfelt good wishes to you on this occasion.

  Keep posting to make people laugh.

  Best regards,
  Krishna

 10. பட்டைய கிளப்புது… ரீமிக்ஸ்

  ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு எதிரான தொடர்ச்சியாக கட்டுரை, பாடல் என வெளியீட்டு வரும் வினவுக்கு நன்றி!

 11. Dedicated to அருமை நண்பர் திரு வினவு அண்ட் மற்ற சவுண்ட் பார்டிகளுக்கு
  ————————————————————————–

  என்னப்பா வினவப்பா உன் நெஞ்சுல பொய்யு
  யாரு வெச்ச பொய்யு இது மாவோ வெச்ச பொய்யு
  நீ முன்னாலே போனா புரட்சி பின்னாலே வாரும்

  இன்டர்நெட்டு ஓரத்துல கையை வைக்கா தூரத்துல
  ஓவராக ஓலம் போடும் வினவப்பா
  நீ காண்பதெல்லாம் பகலில் வரும் கனவப்பா

  அட என்னப்பா வினவப்பா உன் நெஞ்சுல பொய்யு…………….
  ……

  சீனா புள்ள ரஷ்சிய புள்ளே சிவப்பு கலர் போட்ட புள்ள
  நாக்கு நீண்ட புள்ள நீயப்பா
  இனி நீ சொன்னா புரட்சி வரும் வீராப்பா

  அட என்னப்பா வினவப்பா உன் நெஞ்சுல பொய்யு…………….
  ……

  வேலயில்லா வெட்டி பல வாய்மூடி இருக்கயில
  சட்டிகுள்ள சாமி ஆடும் தலையப்பா
  அது மட்டும்தானே உங்களோட கலையப்பா

  என்னப்பா வினவப்பா எங்கப்பா மெய்யு
  நாங்க சொன்ன பொய்யு அத்த நீங்க சொன்னா மெய்யு
  பொய் சொல்லாம போனா நீ இல்லாம போவ!!

 12. நோ,உம் பாட்டை குப்பையில போடு,பாட சரியா வரமாட்டேங்குது.

 13. இதை போல் இன்னும் நூறு காரணங்கள் என்னால் பட்டியலிட முடியும்.., வை.கோ_விற்கு தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த தெரியவில்லை என்று இங்கே பலர் விமர்சிப்பதுண்ட ு. என்ன செய்வது என் தலைவனுக்கு அரசியல் விளையாட்டாகவோ சூதாட்டமாகவோ தெரியவில்லை மாறாக அவருக்கு அரசியல் ஒரு நெறிமுறையான ஜனநாயக சேவையாக தெரிகிறது. ஒரு வேளை சூத்திரதாரிகளும ் சூன்யகாரர்களும் துரோகிகளும் சதியாளர்களும் மட்டுமே இங்கே வெல்ல முடியும் என்று ஏதேனும் எழுதப்படாத இழி நெறி உள்ளதோ என்னவோ..? இங்கே நல்ல அரசியல்வாதி அவனுடைய “மக்கள் பணியால்” அங்கீகரிக்கப்பட ுவதை விட “தேர்தல் வெற்றியால்” மட்டுமே அங்கீகரிக்கப்பட ுகிறான்.., விளாத்தி குளத்தில் வை.கோ_வை வீழ்த்தியவன் “பின்னாளில் கொள்ளைக்காரனாய் ” மாறினான். இங்கே தோல்வி வை.கோ_விற்கு அல்ல அந்த கொள்ளைக்காரனுக் கு வாக்களித்த மக்களுக்கே.., இது போன்ற தோல்வி இன்னும் 10 வருமென்றால் அவற்றையும் தாங்கி கொள்ளும் பக்குவம் உள்ள தொண்டர்கள் இன்னும் வை.கோவுடன் இருக்கிறோம்.., நாங்கள் அவருடன் இருப்பது “அதிகாரம்” சுவைக்க அல்ல “இன உணர்வு” காத்திட போராடும் அவனின் வளையா குணத்திற்காக.., ஆம்.., தீ கதிரை எப்படி ஏந்தி பிடித்தாலும் அது மேல் நோக்கி தானே எறியும்.., நாங்கள் மேல் நோக்கியே எறிகிறோம்.., தேங்கி நிற்க நாங்கள் ஒன்றும் குட்டை அல்ல.., 17 ஆண்டுகளாய் ஒடுகிறோம்.., வெற்றியின் அளவு குறைந்திருக்கலா ம் ஆனால் வை.கோ_வின் மக்களுக்கான போராட்டத்தின் வீச்சு குறையவில்லை என்பதை மனசாட்சியுள்ளோர ் ஏற்று கொள்வர்.., இம்மண்ணில் வீரனால் எதிரியை எளிதாய் வீழ்த்திட இயலும் ஆனால் அவ்வளவு எளிதாய் துரோகத்தை வீழ்த்திட முடியாது காரணம் எதிரி கண்ணுக்கு தெரிவதுண்டு ஆனால் துரோகம் உருவமில்லாதது.., எங்களுக்கான களம் எப்போதும் உண்டு.., அக்களத்தில் நாங்கள் இறங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்..,

 14. Guna Says,
  வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள்.
  1. “மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது.

  2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது.

  3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது.

  4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது.

  5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது.

  6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது.

  7. முல்லை பெரியாறு உரிமையை நிலைநாட்ட முன்னின்று போராடுவது.

  8. 65000 சிறுவர் சிறுமியர்க்கு தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தில் மஞ்சள் காமாலை தொடர் முகாம் சிகிச்சை அளித்து அவர்களை காத்தது.

  9. சேது சமுத்திர திட்டத்தை வாஜ்பாய் அவர்கள் மூலமாய் சென்னை தீவுதிடலில் அறிவிக்க வைத்தது.

  10. வி.பி.சிங் “வை.கோ”_விற்கு மத்திய மந்திரி பதவி தருகிறேன் என்ற போது அதை மு.க நயவஞ்சகமாய் தன் மருமகன் மாறனுக்கு திருப்பி விட்ட போதும் விசுவாசத்தின் பொருட்டு அமைதி காத்தது.

  11. “வை.கோ என் மூத்த மகன்” என்று பெருமையுடன் சொல்லி நிதி/ராணுவம் தவிர்த்து உனக்கு எந்த இலாகா வேண்டுமோ அதை நீ எடுத்து கொள்ளலாம் என்று வாஜ்பாய் சொன்ன போதும் தன் சகாக்களுக்கு வழிவிட்டு தன்னை பதவிக்கு முன்னிறுத்தி கொள்ளாதது.

  12. 2004_ல் 4 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று மு.க தன் சுயரூபம் காட்டிய போது அதனால் என்ன “நான் நிற்கவில்லை” என் சகாக்கள் நிற்கட்டும் என்று 4 சகாக்களை நிற்கவைத்து வெல்ல வைத்தது.

  13. 2004_ல் தன் 4 உறுப்பினர்களையு ம் கூட்டி கணக்கு காண்பித்து கருணாநிதி 9 அமைச்சர் பதவிகளை வாங்கி தில்லுமுல்லு செய்ததை சோனியாவும் மன்மோகன் சிங்கும் சொல்லிய பிறகும் அமைதியாக இருந்தது.

 15. 14. 2006_ல் இன்றைக்கு எங்களுக்கு ஏற்பட்ட நிலையை அன்றைக்கு கருணாநிதி ஏற்படுத்தினார். வாருங்கள் போகலாம் இல்லையென்றால் நாங்கள் அங்கே(ஜெவிடம்) போகிறோம் என்று நிர்பந்தப்படுத் தி அதிமுக கூட்டணியை தேர்தெடுக்க வைத்த சில தறுதலைகளின் பேச்சை செவிமடுத்தது.

  15. கூட்டணி தர்மம் என்கிற பெயரில் 1760000000 கோடிக்கு அனுமதி தரும் கேடுகெட்ட கூட்டணிக்கு மத்தியில் ஐந்தாண்டுகளாய் கூட்டணியின் தர்மம் காத்து உடனிருந்தது.

  16. 2010_நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பு அணி மாறி 7 தொகுதியும் ஒரு ராஜ்சபா உறுப்பினர் என்று ஒப்பந்தமும் போட்டுவிட்டு தேர்தலில் தோற்றவுடன் ஒட்டளித்த மை அழியும் முன்பே ஜாகையை மாற்றிய கேவல பச்சோந்தித்தன் இல்லாமை.

  17. தேர்தலுக்கென தனி வேடம் தரிக்க தன் அலமாரியில் தனிஉடை வைத்திருக்கும் கேடுகெட்ட தலைவர்களுக்கு போல் நடிக்க தெரியாதது.

  18. பிச்சாதிபதியாய் அரசியல் தொடங்கி உலக பணக்கார வரிசைக்கு வரும் தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளை போல் இருக்காமல் பிறவி கோடீஸ்வரானாய் பிறந்து அந்நிலையிலேயே கைசுத்தமாய் வாழ்வது.

  19. எத்தனை குற்றம் சுமத்தப்பட்டாலு ம் ஊழல் குற்றம் சுமத்த வழிதராதது.

  20. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிலேயே இதுவரையில் என்னிடம் தனக்கென எதையும் கேட்காமல் தன் மாநில மக்களுக்காக மட்டுமே கேட்கும் கொள்கைக்காக வாழும் தலைவர் வை.கோ என்று மன்மோகன் சிங் சொன்னது.

  21. வாக்களித்தால் மக்களை வாழ்த்துவதும் தோற்க வைத்தால் மக்களை முட்டாள்கள் என்று தூற்றுவதையுமே பிறவிக்குணமாய் கொண்ட சண்டாள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் தோற்க வைத்த மக்களுக்காகவும் போராடும் தலைவன்.

  22.நதி நீர் இனைப்பை வலியுருதி நாடாலுமன்ட்ரதில ் தனி நபர மசோதா கொன்டு வந்தது

  23.May 1 day declared as holiday by central govt during VP singh period because of vaiko request.

  Thanks Guna

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க