privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

-

பகத் சிங் – சுகதேவ் – ராஜகுரு

தியாகத்தையும் ஆளும் வர்க்கம்
சுரண்டாமல் விடுவதில்லை.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு…
ஏகாதிபத்திய எதிர்ப்புச் சுடர்களை
ஏகாதிபத்திய ஏவல்நாயின் நீலிக்கண்ணீர்
அணைத்துக் கொல்லப் பார்க்கிறது.
கள்ள அழுகையால் கொள்ளையிடுகிறான்,
தியாகிகளது விடுதலைக் கனவுகளின்
தீராத விழிகளை!

அவர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால்
தியாகிகள் தினம் என்ற அரசு விளம்பரம்
மேற்கண்ட தீவிரவாதிகள் பற்றி
தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் என்று
தகவல் ஒளிபரப்பு விளம்பரமாய் இருந்திருக்கும்.

நக்சல் தேடுதல் வேட்டையில் பகத்சிங்கை போட்டுத்தள்ள
ப.சிதம்பரத்தின் கூலிப்படை கிளம்பியிருக்கும்…
தேசத்தின் வளர்ச்சிக்கு சவாலாய் இருப்பதால்
தேடப்படும் ‘பயங்கரவாதிகள்’ ராஜகுரு, சுகதேவை
முதலாளிகளின் சாணக்கிய குரு மன்மோகன் விழி குறிபார்த்து சுட்டிருக்கும்

செத்ததனால் நினைவஞ்சலி
இருந்திருந்தால் என்கவுண்ட்டர்!

பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக்
கொலை செய்பவனே… நினைவஞ்சலி செலுத்துவதும்,
புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே
மலர்வளையம் வைப்பதும்,
இறந்தவர்களுக்கல்ல,
இன்னும் புரட்சியை நிகழ்ச்சி நிரலாக்காமல்
உயிரோடிருக்கும் நம் இயலாமையின்
அவமானங்கள்!

வெறும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
சம்பவம் என்பதற்காக அவர்கள் தூக்கிலிடப்படவில்லை.
வர்க்க ‘ஒழுங்கை’ ஆதிக்கத்தை புரட்டிப்போடும்
அவர்களின் அரசியல் கண்டு ஆடிப்போனது
ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் ஆளும் வர்க்கமும்.

பகத்சிங்கின் அரசியலைப் பார்த்து மருண்டு போனது
பகைவர்கள் மட்டுமா?
ஏன்… இன்னும் புரட்சியின் தேவைகளுக்கு
செவிமடுக்காத நீயும் என்கிறது
அவர்களின் நினைவுகள்…

பசும்புல்லின் வேரிலும்
விசும்பின் நீரிலும்
கேட்பாரற்ற ஏகாதிபத்திய மேலாதிக்கம்.
தாய்ப்பாலும் கருப்பையும் கூட
தனியார்மயத்தின் விற்பனைச் சரக்காகும்
கார்ப்பரேட் பயங்கரவாதம்…
சூறைக்காற்றில் நடுங்கி நிற்கும்
மாடப்புறாக்களாய்…
திகைத்து நிற்கும் ஏழை மக்கள்…
உழைப்புச் சந்தையில்.. உறவுகள் யாருமற்று
அரசியல் அநாதைகளாய் நம் கண்முன்னே
பரிதவிக்கும் உழைக்கும் மக்கள்…

பகத்சிங் இருந்திருந்தால்
இதைப்பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா?

தன்வேலை பறிபோகும் என்ற அச்சத்தில்
கண்முன்னே போராடும் வர்க்கத்தை விட்டு ஒதுங்கி
சுகதேவ்தான் தானுண்டு வேலையுண்டு என நடப்பானா<?

புரட்சி கிளம்பும்போது
நாமும் படியில் ஏறிக்கொள்ளலாம் என
இராஜகுருதான் சாமர்த்தியம் நினைப்பானா?

எல்லாம் தெரிந்த உன்னால்
உழைக்கும் வர்க்கத்தோடு இணையத் தெரியாவிடில்
மூலதன ஆதிக்கத்திற்கெதிராக முழங்கத் தெரியாவிடில்…
பகத்சிங்கை நினைப்பதற்கும் உரிமையுண்டா?

பகத்சிங் தோழர்கள் தியாகம்
அவர்கள் சாவில் இல்லை,
பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்காக
சமரசமற்ற அவர்கள் வாழ்வில் உள்ளது.

வாழச் சம்மதமெனில் வா.. நண்பா!
பகத்சிங்கை நினைவு கொள்!

_____________________________________________

— துரை.சண்முகம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா ?…

    பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக் கொலை செய்பவனே… நினைவஞ்சலி செலுத்துவதும், புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே மலர்வளையம் வைப்பதும், இறந்தவர்களுக்கல்ல…

  2. //பகத்சிங் தோழர்கள் தியாகம்
    அவர்கள் சாவில் இல்லை,
    பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்காக
    சமரசமற்ற அவர்கள் வாழ்வில் உள்ளது.//

    உணர்வுபூர்வமான கவிதை. காலையில் தினமணியில் அரசின் அஞ்சலி விளம்பரம் பார்த்ததும், சில நினைவுகள் எழுந்தன. தோழர் அழுத்தமான வரிகளாக தந்துள்ளார்.
    ****

    மேலும் வாசிக்க :

    இன்று நமக்கு அஸ்திவார கற்கள் தான் தேவை! – பகத்சிங்

    http://socratesjr2007.blogspot.com/2011/03/blog-post_23.html

  3. பகத்சிங்கை ஏற்பது என்பது உங்கள் அரசியலை ஏற்பது என்று நீங்கள் செய்யும் பிரச்சாரம்.அதை எல்லோரும் ஏன் ஆதரிக்க வேண்டும். மக்களுக்காக போராடுபவர்களில் பலர் உங்கள் இயக்கத்திற்கு வெளியே இருப்பவர்கள்.பினாயக் சென்,மேதா பட்கர்,மகா ஸ்வேதா தேவி,அக்னிவேஷ் உட்பட பலர் இருக்கிற அமைப்பினை தூக்கி எறிந்து விட்டு புரட்சிதான் தீர்வு என்று போரடவில்லையே.
    இவர்கள் நக்ஸல் வழிதான் ஒரே வழி செயல்படவில்லையே.
    பகத்சிங்கை ஏற்பவர்கள்,மதிப்பவர்கள்
    சில தருணங்களில் உங்களுடன் சேர்ந்து செயல்படலாம் அதற்காக அவர்கள் உங்கள் அரசியலில் கலந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. பினாயக் சென் பியுசில் அமைப்பில் பொறுப்பாளர்.தமிழ்நாட்டில் பியுசிலுடன் சேர்ந்து நீங்கள் வேலை செய்கிறீர்களா இல்லை அவர்கள்தான் உங்களுடன் இணைந்து செயல்படுகிறார்களா. இரண்டும் இல்லை.அதுதானே உண்மை. எனவே பகத்சிங்கை வைத்து உங்கள் அரசியலுக்கு விளம்பரம் தேட வேண்டாம்.ஆள் பிடிக்கும் தந்திரத்திற்கு அவர் பெயரை பயன்படுத்த வேண்டாம்.

    • well said.

      மேலும், பகத் சிங்கை தூக்கிலிச காந்தி துணை போனார் என்று ஒரு கற்பிதம் தொடர்ந்து செய்யப்படுகிறது. ஆனால் அது ஒரு பச்சை பொய். பார்க்கவும் :

      http://www.hinduonnet.com/fline/fl1808/18080910.htm
      Of means and ends

      Could Mahatma Gandhi have saved the lives of Bhagat Singh, Rajguru and Sukh Dev? An analysis in retrospect, on the 70th anniversary of the execution of the three revolutionaries.

      http://jeyamohan.in/?p=2773
      காந்தியின் துரோகம்

      http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh#Mahatma_Gandhi

      Gandhi had managed to have 90,000 political prisoners who were not members of his Satyagraha movement released under the Gandhi-Irwin Pact.[citation needed] According to a report in the Indian magazine Frontline, he did plead several times for the commutation of the death sentence of Bhagat Singh, Rajguru and Sukhdev, including a personal visit on 19 March 1931, and in a letter to the Viceroy on the day of their execution, pleading fervently for commutation, not knowing that the letter would be too late.[70]

      Lord Irwin, the Viceroy, later said:

      As I listened to Mr. Gandhi putting the case for commutation before me, I reflected first on what significance it surely was that the apostle of non-violence should so earnestly be pleading the cause of the devotees of a creed so fundamentally opposed to his own, but I should regard it as wholly wrong to allow my judgment to be influenced by purely political considerations. I could not imagine a case in which under the law, penalty had been more directly deserved.[70]

      However, Gandhi did appreciate Bhagat’s patriotism and how he had overcome the fear of death, but did not support the violence involved.

      • அடடே … அதியமான் …

        வாருமைய்யா… பிழைப்புவாதத்தின் மொத்த உருவம் இலக்கியக் கழிசடை செயமோகனை உதாரணத்திற்கு இழுக்கும் போதே உமது மற்ற உதாரண கட்டுரைகளையும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட தகவலையும் எழுதிய திருவெண்ணைகளின் வக்கனை தெரிகிறது.

        காங்கிரசில் கூட காந்தியக் காட்டிலும் நேதாஜிக்கு அதிக ஆதரவு இருந்தது என்பது எவ்வளவு மறுக்க முடியாத உண்மையோ அதே அளவிற்கு நேதாஜி காங்கிரசை விட்டு வெளியேறியதற்கு காந்தியின் பங்கு தான் அதிகம் என்பதும் உண்மையானது.

        தன்னை விட மக்கள் வேறு யாரையும் உயர்த்திப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக உண்மையான பல சுதந்திரப் போராட்ட வீரர்களை கழுத்தறுத்தவன் தான் இந்தக் காந்தி.

        அதை அவனது ஹரிஜன் பத்திரிக்கையை வாசித்துப் பார்த்தாலே தெரியும். விக்கிபீடியாவை பார்த்து எதுவும் ஆகப் போவது இல்லை,…

        ஆகையால் BETTER LUCK NEXT TIME.

      • libert,
        விக்கிபீடியாவில் இருப்பவற்றையெல்லாம் உண்மை என்றுதான் கருதுகிறீர்களா? பகத் சிங் தூக்கில் போடப்படுவதற்கு முன்தான் காந்தி-இர்வின் ஒப்பந்தம் போடப்பட்டது. இது பற்றி காந்தி அப்போது ஒன்றும் வாய் திறக்காதது ஏன்?

        • johnny,

          நல்ல கேள்வி. இதை வினவுவிடம் முதலில் கேளுங்க. விக்கிலீக்ஸ் பற்றிய சமீபத்திய பதிவில் ஆதாரங்கள் என்று பெரிய லிஸ்டே இட்டுருக்கிறார்கள். விக்கிபீடியாவில் இருந்து. அதாவது உங்களுக்கு தோதுபட்டால், விக்கிபீடியாவை மேற்கோள் காட்டுவீக. என்ன ஒரு இரட்டை வேடம்.

          பகத் சிங்,

          ஃப்ரண்ட் லைன் பத்திரிகையும் தான் விரிவான கட்டுரை எழுதியுள்ளது. லார்ட் இர்வின் சொன்னதை பற்றியெல்லாம் ஆராய கூட மாட்டீக. நீங்க தான் scientific marxisit method of historical analysis செய்யப் போறீக. முதல்ல அந்த சுட்டிகளை முழுசா படித்து உள் வாங்குக.

        • nankadavulillai,

          வினவு எழுதிய இந்த பதிவின் இறுதியில் ‘ஆதாரங்கள்’ என்று அளிக்கப்பட்டுள்ள பட்டியலை முதல்ல ஒழுங்கா பார்க்கவும் : https://www.vinavu.com/2011/03/18/american-slave-manmohan-singh/

          பிறகு யார் மெத்த படித்த மேதாவி என்று பேசலாம். விக்கிபீடியா என்றாலே பொய் என்று ‘நம்புவதும்’ ஒரு வகையான மூடநம்பிக்கை / மதவாதம் தான்.

          ‘எப்பொருள் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.’

        • அய்யா அதியா … நானும் பல முறை படிச்சி பாத்துட்டேன் .. அந்த லின்க்குல ஒரு ஆதாரமும் இல்லையே ?..
          மாகாத்மா என்ற இந்த அயோக்கிய சிகாமணி இர்வினுக்கு எழுதிய கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு தான் நாங்கள் இந்த ….. க்கும் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்று கூறுகிறோம். இரவின் பிரபுவும் காந்தியும் கூட்டுக் களவாணிகள் என்பது ஊர் அறிந்த விஷயம் . காந்தி போன்றவர்களின் ஆதரவு தான் பிரிட்டிஷ் அரசை பலப்படுத்துவதாக இருக்கிறது என்று வெள்ளைக்காரத் துரைமார்களே எழுதியதற்கும் ஆதாரம் இருக்கிறது . அப்படி இருக்கையில் இவர் அவரிடம் பிச்சை கேட்டாராம் , அவர் முடியாது என்று சொல்லிவிட்டாராம். எங்கு வந்து கதை விடுகிறீர்கள் ?.. ஒப்பந்தத்தை முன்னமே முடிக்கவேண்டும் என்று இந்த விபச்சாரன் கூழைக் கும்பிடு போட்டு கேட்டுக் கொண்ட கடித ஆதாரத்திற்கு உமது பதில் என்ன ?.அல்லது இதை எழுதிய பரேஷ் வைத்தியா வின் பதில் என்ன ?..

        • பகத் சிங்குன்னு பெர வச்சுக்கிட்டா நிஜ பகத் சிங்ன்னும் நினைப்பா. முதல்ல ஒழுங்கா பேச கத்துக்க. ]

          அந்த இந்து / ஃப்ரண்ட்லைன் பதிவை முழுசா படிச்ச மாதிர் தெரியல. சாய்நாத் எழுதியதை மொழிபெயர்த்து போடுவது போல இந்த பதிவையும் மொழிபெயர்க்க சொல்லுக. அப்பறமும் உம்மை போன்ற மேதைகளுக்கு ‘புரிவது’ சந்தேகம் தான். ஆதாரம் உம்ம ’கண்ணுல’ தென்படாதுதான். ’மெய்ஞான’ கண் பாருங்க..

    • avar sonnathu ungala mathiri kazhutthula kotta, netthiyila patta pottu kittu murpokku pesaravangalukku illa mr.singh. indha mannaiyum, makkalaiyum thannoda uyirukku samamaa nesikkaratha solravangala.
      neenga than apdilam kedaiyathey, appuram en ullukulla kurukurukkuthu?

    • ////பினாயக் சென்,மேதா பட்கர்,மகா ஸ்வேதா தேவி,அக்னிவேஷ்///

      மேற்கூறியவர்கள் ஜனநாயகவாதிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்கள் நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களாக இருப்பது குறித்து
      அறிவார்ந்த கேள்விகளை எழுப்புவதாக நினைத்து பிடரியில் அடிவாங்கும் அண்ணன் ஜெகத்சிங்கின் கருத்து என்ன ?..

      பினாயக் சென் – தேசத்திற்கு எதிராக போர் தொடுத்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையில் ஜனநாயகவாதிகள் எவ்வாறு தேசத்திற்கு எதிராக போர் தொடுத்திருக்க முடியும்?..

      கொஞ்சம் முரண்பாடாகவே இருக்கிறது அல்லவா ?..

      பகத்சிங்கை வைத்து ஆள் பிடிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோமே ?.. மக்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டம் எத்தனை ?..
      ம.க.இ.க தோழர்கள் எனக்குத் தெரிந்து கையிலெடுக்காத போராட்டங்கள் எதுவும் கிடையாது.. அவர்களுக்கு பகத்சிங்கின் பெயரை பயன்படுத்த இருக்கும் உரிமையை விட வேறு யாருக்கு உரிமை உண்டு என்று கூறவும்.
      உம்மைப் போன்று போலீஸ்காரன் முன் குசு விட நேர்ந்தாலும் அமுக்கி விடும் பிழைப்புவாதிகளுக்கு பகத் சிங்கை பற்றி நினைப்பதற்கு கூட என்ன அருகதை இருக்கிறது?..

    • We thought pakadhsingh represent a system what now we want build. Now you tell me arundadhi, medha padkar, agnivesh, are all representing which the system, Then we can tell that we be accept or not.

  4. தோழர் பகத்சிங் நினைவுநாளில்
    சிறப்பான கவிதை தந்த தோழருக்கு
    நன்றி மற்றும் பாராட்டுக்கள்

  5. மிதவாதிகளின் கை ஓங்கும் போது – தீவிரவாதிகள் கொல்லப்படலாம். தீவிரவாதிகளின் கை ஓங்கும் போது – மிதவாதிகள் கொல்லப்படலாம். இது உலகெங்கும் நடப்பது. அவர்களின் புரட்சியின் கீழ் நாடு சுதந்திரமடைந்திருந்தால் – அவர்களின் சர்வாதிகாரத்தின் கீழ் எம் சுதந்திரம் பறி போயிருக்கும்.

  6. Long live comtrades ! View long the working class !!

    this poem is good as the book “viduthalai porin veera marabugal”. anyone to know historical background of Bhagath Singh, they can start from viduthalai porin veera mabugal.

  7. திருவாளர் ஜெகத் சிங்க் அவர்களே, பகத் சிங்க் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவர் நிச்சயமாக நக்சலைட் ஆக தான் இருந்திருப்பார் என்று தான் தோழர் சொல்கிறார், அதற்காக பினாயக் சென் போன்றவர்கள் தேச துரோகிகள் என்றா அர்த்தம்.. மேலும் நீங்கள் சொல்வது போல் பகத் சிங் அரசியலும் நக்சலைட் அரசியலும் வேறு வேறு அல்ல. அது சரி பினாயக் சென் போன்ற உண்மையான ஜனநாயக வாதிகள் வரிசையில் மேத்தா பட்கர் போன்ற ngo க்களை எதற்கு சேர்கிறீர்கள்

  8. தியாகிகள் பகத் சிங், ராஜகுரு , சுகதேவ் போன்ற சமரசமற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அடிமை இந்தியாவை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுவிப்பதோடு , நில்லாமல் அது இந்திய முதலாளிகளிடம் அரசின் அதிகாரம் சென்று சேராமல் தொழிலாளிகளும் ,விவசாயிகளுமான பாட்டாளி வர்க்கத்திடம் கைகளில் சுதந்திரம் சென்று சேர வேண்டும் என்று பாடுபட்டனர்,வெள்ளை அராசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையால் அந்த இளம் சிங்கங்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டதோடு அந்த இளம் குருத்துகள் தாய் நாட்டின் விடுதலையை முழங்கியவாறு துக்கில் ஏற்றப்
    பட்டனர் .அவர்கள் தாங்கள் இவ்வாறு மாரணம் அடைவதன் மூலம் இந்தியாவில் இளைஞர்கள் எழுச்சி பெற்று பாட்டளி வர்க்கதை அணிதிரட்டுவார்கள், அதன் மூலம் உழைக்கும் வர்க்கம் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பினார்.

    அவர்களின் உன்னதமான லட்சியத்திற்கு மாறாக இந்திய முதலாளிகளின் கைகளில் இந்திய சுதந்திரம் அடைமானம் வைக்கப்பட்டது. அதற்கான பலனை நாம் அனுபவித்து வருகிறோம். ஒப்பற்ற அந்த தியாகிகளை நினைவு கூறுவோம் புரட்சிவீரர்களின் உயர்ந்த லட்சியத்தை சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்க அந்த தியாகிகளின் பாதசுவடுகளில் நடை பயில்வோம் , பாட்டாளி வர்க்க அரசை நிர்மாணிக்க இயக்கம் அந்த மாவீர்களின் மறைந்த மார்ச் 23 நினைவு நாளில் அறை கூவி அழைக்கிறது.

  9. பகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன் அரசியலுக்கு இழுக்கும் மகஇக-வும்

    நேற்று அதிகாலை மணி 3.20. நம்மைக் கேட்காமலேயே நம் உடலில் ஒரு பாகமாக வந்து ஒட்டிக் கொண்டுவிட்ட செல்போனில் முன்நாளிரவு சொல்லி வைத்த அலாரம் சிணுங்கத் துவங்கும் முன்பே அதை சமாதானப் படுத்தி எழுந்தாகி விட்டது. விழித்துக் கொண்ட மனது உடலின் மற்ற அவயவங்களை எழுப்பி உட்கார வைப்பதற்காக வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 10 நிமிடங்களும் இன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை.
    read more
    http://ieyakkam.co.cc/

  10. “முதல்ல ஒழுங்கா பேச கத்துக்க.”
    யாருக்கு யாரு ஆர்டர் போடறாங்கோ?
    தன் முதுகு ஒரு போதும்…

    • கார்பரல் ஸீரோ என்ற பெயரில் தொடர்ந்து தனி மனித தாக்குதல் மட்டும் தொடுக்கும் கோழைக்கு : (உமது தாக்குதலுகளுக்கு பதிலடியாகத்தான் நானும் அவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது)

      சென்னை, கோடம்பாக்கம் பவர் ஹவஸ் வழியாக அடிக்கடி செல்கிறேன். அங்கு தான், மாநகராட்சி கட்டிட வளாக மேல் தளத்தில் வினவு அலுவலகம் உள்ளது. அங்கு நேரில் வர்ரியா ? நேரில் ’பேசித்’ தீர்த்துக்களாம். நான் எப்ப வேண்டுமானாலும் ரெடி. உம்மை போன்ற அனானி கோழையல்ல நான்.

  11. வழிகளும் விழிகளும்

    அன்று நீங்கள்
    கொல்லப்பட்டிருக்கலாம்
    மகாத்மாக்களின் ஆசியோடு….

    உங்கள் குரல் வளைகளை
    யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
    எம் விடுதலையை யுடைக்க
    காத்திருக்கிறது….

    மார்ச் 23

    மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டதாம்
    இல்லை
    இல்லை
    இல்லவே இல்லை

    உடல்கள் விதைகளாக
    விண்மீண்களாக
    எங்களின் குருதியாக
    உணர்வாக
    மாறிய நாள்

    கைராட்டைகளின் முகமூடி
    கிழித்து வஞ்சகர் தம்
    குலை நடுங்க
    தூக்குக்கயிற்றை
    முத்தமிட்ட
    தியாகத்தின் விழிகளே!

    அன்னியனுக்கு அடிபணிய
    மறுத்த
    விதையின் வழிகளே

    உங்களுக்கெங்கள் வீரவணக்கம்

  12. பகத்சிங் என்றால் தனிமனிதனல்ல
    பகத்சிங் என்றால் இளமை
    இளமை என்றால் துடிப்பு
    மானுடம் வாழவேண்டுமென்ற விருப்பு

    காந்தியம் மக்களை காவு கொடுத்துக்கொண்டிருந்த போது விடிவெள்ளியாய் உதித்த விண்மீன்
    சூறாவளியின் சுழல் மையம்
    பாராளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கத்திற்காக
    புரட்சி தீ மூட்டிய போர்முழக்கம்

    ”இந்தப்போர்
    எங்களோடு தொடங்கவுமில்லை
    எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.”

    கேளாதசெவிகள் கேட்கட்டும் என
    அதிர்வேட்டு மூலம் அறிவித்த
    முளைவிட துடித்த புரட்சியின்
    வீரியமிக்க விதைகள்

    இன்று காத்திருக்கின்றன

    இளமை துடிப்புமிக்க
    மனிதகுல மாண்பு நிறைந்த
    பாட்டாளிவர்க்க உணர்வு எழுச்சிபெற்ற
    இளம் தோழர்களின் இதயங்களுக்காக

    இதயங்களைத் திறந்து
    புரட்சியின் விதைகளை தாங்குவோம்
    பாட்டாளி வர்க்க விடுதலை ஓங்கவே
    அன்று ஆங்கிலேய காலனியாதிக்கத்தை
    அறவோடு அழிக்கவே சூறாவளியாய்
    சுற்றிவந்த பகலவன் பகத்சிங் போலவே

    மறுகாலனி ஆதிக்க கார் இருளை
    சுட்டுப்பொசுக்கும் சூரியனாய்
    சுழன்று அடிக்கும் புரட்சிப்புயலாய்
    எழுகவே, எழுகவே, எழுகவே*

Leave a Reply to Libertarian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க