privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

-

லகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

“பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி, ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும் கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில் தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக் கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப் பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக் கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..

விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள். நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?

அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும் சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல் மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச் சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ் துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப் பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 சதவீதம் என்பதை 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான் பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க பாக்கறான்.

அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள்.

பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய் வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர் கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத் துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும் இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.

________________________________________

– துரை.சண்முகம்
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. வாரன் பப்பெட் வாரான் ! சொம்ப எடுத்து உள்ளார வை !! | வினவு!…

    விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட்….

  2. தோழர் துறைசன்முகம் அய்யாவின் கடந்த சில வார கவிதைகளும் இந்த பதிவும் அற்ப்புதம். பகடியோடு சேர்த்தே வரக அணிதிரல்வுக்கான அலைப்பாகவும் இதை அதிகம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

  3. “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட்.//

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி ,

    பொணத்திலேயும் பணம் கிடைக்குமா னு பார்ப்பவர்கள்..

    http://technorati.com/politics/article/bankruptcy-in-american-ethics-the-new/

    Bankruptcy in American Ethics: The New World Order

    Read more: http://technorati.com/politics/article/bankruptcy-in-american-ethics-the-new/#ixzz1HacGz4Is

    (Billionaire investor Warren Buffett believes Japan’s devastating earthquake is the kind of extraordinary event that creates a buying opportunity for shares in Japanese companies

    While the world looks on and praises Japan for the calm orderly manner that they navigate through this crisis, and while we praise them for not looting–here we have an American Tycoon describing ways to loot Japan of its resources. How capital?)

    • jmms,

      ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்கறீங்க. ஜப்பானில் இன்று முதலீடு செய்ய பெருவாரியானவர்கள் தயங்குவாங்க. ஜப்பானியர்களின் மீது நம்பிக்கை வைத்து பப்பெட் முதலீடு செய்ய முனைவது மிக நல்ல விசியம் தான். இது ஜப்பான் மீண்டும் தலைதூக்க மிக மிக பயன்படும். இவர் செயலை பார்த்து பலரும் இவரை பின் தொடர்வார்கள். ஜப்பன் நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டால், யாரும் வாங்க முன் வராவிட்டால், அதன் விளைவு அவர்களுக்கு பாதகமாகத்தான் இருக்கும். லாபம் என்பது கெட்டை வார்த்தை அல்ல. பங்கு பரிவர்த்தனை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜப்பானிய பங்குகளை யாருமே வாங்க முன்வரவில்லை என்றால், அவை இன்னும் விலை வீழ்ச்சி அடையும் என்பது அடிப்படை.

      அதுசரி, உங்க சேமிப்புகளை எங்கு முதலீடு செய்வீர்கள் ? ஜப்பனில் செய்ய தயாரா ?

      • முகேஷ் அம்பானி 1000 கோடிகளில் வீடு கட்டுகிறார். ஆனால் 10000 கோடியில் வீடு கட்டும் அளவிற்க்கு பல பத்தாண்டுகளாக பெருஞ்செல்வம் உடைய வாரன் பப்பட் 1958இல் வாங்கிய சிறிய வீட்டில் தான் இன்றும் வாழ்கிறார். பெருசா அலட்டிக்காமல், மிக எளிமையாக, அமைதியாக வாழ்ந்து, தம் சொத்தில் பெரும் பகுதியை கொடையாக அளித்தவர்.

        His 2006 annual salary was about $100,000, which is small compared to senior executive remuneration in comparable companies.[63] In 2007, and 2008, he earned a total compensation of $175,000, which included a base salary of just $100,000.[64][65]

        He lives in the same house in the central Dundee neighborhood of Omaha that he bought in 1958 for $31,500.

        In June 2006, he announced a plan to give away his fortune to charity, with 83% of it going to the Bill & Melinda Gates Foundation.[100]

        He pledged about the equivalent of 10 million Berkshire Hathaway Class B shares to the Bill & Melinda Gates Foundation (worth approximately US$30.7 billion as of 23 June 2006),[101] making it the largest charitable donation in history, and Buffett one of the leaders of philanthro capitalism.

        அவரை பற்றி இப்படி ஒரு கட்டுரை இங்கு.

        • கட்டுரையில் கூறப்பட்டுள்ளவைகளைப் பற்றி விமர்சிக்க முடியாமல் கருணை, பொறுமை என திசைதிருப்புவது ஏனோ!

        • johnny,

          இக்கட்டுரையில் எதை பற்றி பேச வேண்டும் :

          //விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய்,/// இதை பற்றியா ?

          இன்ஸுரன்ஸ் துறையில் அன்னிய முதலீடுகள் 75 சதம் அனுமதித்தால் நல்ல விளைவுகள் தான் நிகழும் என்பது எம் பார்வை. உற்பத்தி துறையில் அனுமத்திதவுடன் ஏற்பட்ட அருமையான மாற்றங்களை ஒப்பிடுக.

          LIC, GIC : United India, Oriental, போன்ற பொதுதுறை நிறுவனங்களில் நடக்கும் ஊழலில் அளவு பற்றி தெரியுமா? claims இல் அரசு வக்கில்கள், போலிஸ், அரசு மருத்துவர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் மற்றும் வக்கில்கள் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை பற்றி முழுசா அறியாதவர் நீர். (பல வக்கில்களிடன் நெருங்கி பழகியிருக்கிறேன், பல விசியங்கள் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் இன்ஸுரன்ஸ் தேசியமயமாக்ப்படுவதற்க்கு முன்பு இல்லை. இவர்கள் ‘கொள்ளை’ அடிப்பது உமக்கு பெருசா படலை. ஆனால் ஒழுங்கா முதலீடு செய்து, நேர்மையா தொழில் செய்தா, அது ‘கூட்டி கொடுப்பது’ என்று எழுதுவீர்கள்.

          இன்சுரஸ், வங்கி துறைகளில் அன்னியர்களை அனுமதித்தால், பெரும் கேடு விளையும் என்பதெல்லாம் hysterical reaction from a bankrupt left. இதே பல்லவியை தான் 50 வருடங்களாக உற்பத்தி துறை பற்றியும் பாடி, நாட்டையே திவாலாக்கிய புண்ணியவான்களாச்சே இவர்கள்.

          இவைகளில் அரசின் கட்டுப்பாடுகள் தேவைதான். எந்த அளவில், என்ன முறையில் என்பதுதான் விவாதிக்க்பட வேண்டிய விசியம்.

        • ஒருத்தன் முன்னேருனாலும் புடிக்காது அவனைப்பாத்து முன்னேறவும் தெரியாது …..நல்ல கொள்கை நல்ல கோட்பாடு …… நீங்களும் உருப்பட மாட்டீங்க மத்தவனையும் உருப்பட விட மாட்டீங்க … பாத்து கம்முநிச்டுகளா எங்கையாவது புர்ர்ச்சி பண்ணி ஆட்சிய புடிச்சற போறீங்க!!!!!!!!! இந்தியா வெளங்கிடும்…

        • வினவு சார்ந்துள்ள லெனினிய கோட்பாடுகள் பொய்த்து போன கொள்கைகளே! எங்கு தனி மனித சுரண்டல் அத்து மீறி நடக்கிறதோ அங்கு லெனினிய கோட்பாடுகள் சரியானது போல தோற்றமளிக்கும். மற்றபடி தனிமனித முயற்சி மூலம் நியாயமான லாபம் பார்க்கும் சமுதாயங்களில் லெனினிய கோட்பாடுகள் மிகவும் அருவருக்க தக்கவையே!. வெள்ளை தோல் அனைத்தும் விபச்சாரிகளின் தோல் என்னும் ரீதியில் கட்டுரை அமைத்துள்ளார் கட்டுரைஆசிரியர்.

        • இவர்களுக்கு லாபம், வியாபாரம், தனி மனித முன்னேற்றம் எல்லாமே கேட்ட வார்த்தைகள்.

      • கடந்த வருடம் சா்வதேச பொருளாதார நெருக்கடி நோ்ந்த போது தினமணியில் தினமும் ஒருவா் வீதம் “என்ன பாதிப்பு, என்ன தீா்வு” என்ற தலைப்பில் எழுதி வந்தனர். அதில் நானும் ஒரு நாள் எழுதி எனது கருத்துக்கள் பின்வருமாறு தினமணியில் பிரசுரம் ஆகியது.

        மற்ற தேசங்களை தனது முதலாளித்துவ ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட அயராது செயல்படும் அமெரிக்காவிற்கு ஹார்ட் அட்டாக் வந்ததினால் உலக நாடுகள் பலவற்றுக்கு வேர்க்க தொடங்கியுள்ளது. முதலில் இரண்டு வீட்டு வசதி கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதனை தொடர்ந்து அங்கேயே சில பிரபல வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. விளைவு இன்று பல நாடுகளில் பங்கு வர்த்தகம் சரிந்து, சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
        சமீப ஆண்டுகளில் பணக்காரர்கள் மட்டுமே லாபமோ அல்லது நட்டமோ காணும் வர்த்தகம் பங்கு வர்த்தகம் என்பது மாறி நடுத்தர வர்க்கத்தினரையும் ஊடக விளம்பரங்கள் ஈர்த்து விட்டன. ஆன்லைன் வர்த்தகம், தினசரி வர்த்தகம் என்கிற ஆசை வார்த்தைகளினால் கொஞ்சம் தொகையைக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் பணம் பண்ண முடியும் என்ற கனவில் சேமிப்பு என்பது முற்றிலும் குறைந்து விட்டது.
        பெரிய நிறுவனங்கள் மூலதன நிதி திரட்டலுக்கான பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என்பது அத்தியாவசிய பொருள்களுக்கும் தொற்றிக் கொண்டதால் விலைவாசி உயா்வு, பணவீக்கம் போன்ற தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற போக்கின் விளைவு இது. தனியார் மயத்தினால் ஏற்கனவே அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென்கொரியா ஆகிய நாடுகள் திவாலாகியுள்ளன.
        ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகத்தில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம் வரும் என்ற மாயைக்கு மயங்குகிறவர்கள் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் உழைப்பது யார்? எல்லோரும் வட்டியில் வாழ வேண்டுமென்னால் வட்டி கட்டுவது யார்? என சிந்திக்க மறந்ததினால் இந்த நெருக்கடி மக்களிடமும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச சிக்கலில் இருந்து மீண்டு வர, காப்பீடு, வங்கிகள், மின்சாரம், போக்குவரத்து போன்றவை முழுமையாக தேசியமயமாக்கப்படவேண்டும். அஞ்சலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானைவை என்பதை உணர்த்தி சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். விவசாய விளை பொருட்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் ஊக வணிகம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
        பங்குச் சந்தை சரிவின் மீது மிகுந்த கவனம் செலுத்தும் நிதி அமைச்சகம், உள்ளாட்டு தொழில் துறையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் தனது கவனத்தை செலுத்தினால் இந்த நெருக்கடி நம்மை பாதிக்காமல் தப்பிக்கலாம்.

  4. செருப்பாலடிக்கவோ, குறைந்த பட்சம் காரித் துப்பாவோ, ஆளை அடையாளம் காண அந்த பப்பெட்டின் மூஞ்சியை வெளியிட்டிருக்கலாம்.

  5. மிக மேலோட்டமான, கீழ்தரமான கட்டுரை. அவர் தன் கொள்கை பற்றி சொன்னது இது :

    http://en.wikipedia.org/wiki/Warren_Buffett#Philanthropy

    The following quotation from 1988 highlights Warren Buffett’s thoughts on his wealth and why he long planned to re-allocate it:

    “ I don’t have a problem with guilt about money. The way I see it is that my money represents an enormous number of claim checks on society. It’s like I have these little pieces of paper that I can turn into consumption. If I wanted to, I could hire 10,000 people to do nothing but paint my picture every day for the rest of my life. And the GDP would go up. But the utility of the product would be zilch, and I would be keeping those 10,000 people from doing AIDS research, or teaching, or nursing. I don’t do that though. I don’t use very many of those claim checks. There’s nothing material I want very much. And I’m going to give virtually all of those claim checks to charity when my wife and I die. (Lowe 1997:165–166) ”

    From a NY Times article: “I don’t believe in dynastic wealth”, Warren Buffett said, calling those who grow up in wealthy circumstances “members of the lucky sperm club”.[96] Buffett has written several times of his belief that, in a market economy, the rich earn outsized rewards for their talents:

    “ A market economy creates some lopsided payoffs to participants. The right endowment of vocal chords, anatomical structure, physical strength, or mental powers can produce enormous piles of claim checks (stocks, bonds, and other forms of capital) on future national output. Proper selection of ancestors similarly can result in lifetime supplies of such tickets upon birth. If zero real investment returns diverted a bit greater portion of the national output from such stockholders to equally worthy and hardworking citizens lacking jackpot-producing talents, it would seem unlikely to pose such an insult to an equitable world as to risk Divine Intervention.[97] ”

    His children will not inherit a significant proportion of his wealth. These actions are consistent with statements he has made in the past indicating his opposition to the transfer of great fortunes from one generation to the next.[98] Buffett once commented, “I want to give my kids just enough so that they would feel that they could do anything, but not so much that they would feel like doing nothing”.[99]

    In June 2006, he announced a plan to give away his fortune to charity, with 83% of it going to the Bill & Melinda Gates Foundation.[100] He pledged about the equivalent of 10 million Berkshire Hathaway Class B shares to the Bill & Melinda Gates Foundation (worth approximately US$30.7 billion as of 23 June 2006),[101] making it the largest charitable donation in history, and Buffett one of the leaders of philanthrocapitalism.[102] The foundation will receive 5% of the total donation on an annualised basis each July, beginning in 2006. (Significantly, however, the pledge is conditional upon the foundation’s giving away each year, beginning in 2009, an amount that is at least equal to the value of the entire previous year’s gift from Buffett, in addition to 5% of the foundation’s net assets.) Buffett also will join the board of directors of the Gates Foundation, although he does not plan to be actively involved in the foundation’s investments.[103][104]

    • பாஸ் அவனை பற்றி அவனே சொன்னது சூப்பரா இருக்கு பாஸ் அவனை நம்பி இந்திய கவர்ன்மென்டையே கொடுத்துடலாம் என்ன சொல்றீங்க? எந்த நாயை பற்றியும் அவன் நல்லவனான்னு இன்டர்நெட்டில் ஒரு தட்டு தட்டினால் ஆயிரம் தளங்கள் இருக்கும் அதை லிங்க் கொடுப்பதன் மூலம் என்ன சாதனை செய்கிறார் இந்த liberty?இந்த கொசுதொல்லையை நிரந்தரமாக நீக்க வழியே இல்லையா?

      • arutperu,

        ஒரு தனிமனிதன், பாடுபட்டு சம்பாத்த பெரும் செல்வத்தை, ஏழைகளின் நலனுக்கா தானம் செய்ய முன்வருகிறார். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இதுவரை இல்லை. அவர் ‘சுரண்டி’ சம்பாத்தார் என்பது உங்கள் கோணம். இல்லை என்பதே எம் பார்வை.

        அவரின் கொடையால பல லச்சம் மக்கள் பயனடைகிறார்கள். உம்மால ஒருவருக்காவது உதவ முடிந்ததா ? பல பணக்காரகள் இது போல் செய்வதில்லை. கவலைப்படுவதில்லை. இவரும், பில் கேட்ஸ் போன்றவர்களிம் பெரும் கொடை அளிப்பதை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை, இப்படி கீழ்தரமாக இகழ்வது கேவலமான செயல்.

        அவரின் கொடைதன்மை, எளிமை மற்றும் மனிதனேயத்திற்காகத்தான் அவர் மிக மதிக்க்பபடுகிறார். அதெல்லாம் உம்மை போன்ற வீணர்களுக்கு புரியாது. சூரியனை பார்த்து நாய் குலைத்த கதை தான் இங்கு. போய் புரட்சி பன்னுங்கடே. உருப்படியா, produtiveஆ ஒரு காரியத்தை கூட செய்ய துப்பிலாத நீர், பெருசா, இழி சொற்களை சர்வ சாதாரணமாக பேச வந்திட்டீர்.

        மனிதனேயம் பலருக்கும் உண்டுதான். உம்மை போன்ற வீணர்களுடன் பேசுவதே வேஸ்ட்…

        • பப்பெட் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள், Libertarian! என்னுடைய ஹீரோ பப்பெட் தான்! இந்த கட்டுரை, அதீத பயத்தின் விளைவாக (Paranoid) எழுதப்பட்டுள்ளது. அவரை பற்றி கொஞ்சம் இணையத்தில் அலைந்து தெரிந்து கொண்டால் இப்படி இகழ மாட்டார்கள். நம் ஊரில் இது போன்ற ஒரே ஒருவரை காட்ட முடியுமா? வாதத்திற்கு மருந்து உண்டு. விதண்டா வாதத்திற்கு இல்லை!

        • விடுங்க libertarian..

          நமது மக்களுக்கு எவனாவது நல்லது செய்ய வந்தான்னா புடிக்காது.. கொடிக்கணக்குல கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்குற இந்த அரசியல்வாதிகளுக்குக் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் கடைசி குடிமகன் இருக்கும்வரை இந்தியத் தலை எழுத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. வாரன் பற்றிய புத்தகத்தை வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள்.. சும்மா மேலோட்டமாகப் படித்து விட்டு, கேவலமான இழி சொற்களில் திட்டும் முன்பு, நான் என்ன செய்தோம் என்று ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்.. அவர் வைத்திற்கும் சொத்து மதிப்பிற்கும், அவர் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.. இதைச் சொன்னால் புரியப் போவதும் இல்லை.. சும்மா சண்டைக்குன்னு நிக்கறவங்க கிட்ட ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா மக்களே தயவு செஞ்சு, அவர் சொல்ற திட்டங்களால இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள்னு கொஞ்சம் சிந்தியுங்க..

          அப்புறம் இழிசொற்களால் திட்டுபவரைக் கூட அமைதியான நாகரிகமான வார்த்தைகளில் புரியும்படி பதில் சொல்வதில் இருந்து நீங்கள் பண்பட்டவர் என்பது புரிகிறது.. நன்றி..

    • “The spirit is willing but the flesh is weak”

      அப்படின்ன என்னன்னு அதியமான் அண்ணன் கிட்ட கேட்டிங்கீன்னா,” சாராயம் நல்லயிருக்கு ஆன கறி தான் டேஸ்ட் கம்மி” ம்பாரு..இப்படி சகல விஷயங்களையும் தப்பா புரிஞ்சி வச்சிகிட்டு. சொம்ப தூக்கிட்டு வந்து “நான் கேக்குர‌ கேள்விக்கு யாரும் பதில் சொல்லல”.. “நான் கேக்குர கேள்விக்கு யாரும் பதில் சொல்லல”னு வீராப்பு வேற. ஆனால் இந்த மாதிரி காமடி பீஸ்கள் இல்லைன்ன எப்படி?

      டி ராஜெந்தர், சுப்‌ரமணிய சாமி வரிசையில பதிவுலக டி ஆர் தான் அண்ண அதியமான் கே ஆர்…..

      இனி அதியமானை எல்லாரும் கே ஆர் என தான் அழைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  6. //நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?//

    இடது வலது மட்டுமல்ல தெற்கு மேற்கையும் சுற்றி நின்று போராடுவோம்

    //வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்//

    இவிய்ங்கள மெதல்ல செருப்ப கழட்டி அடிக்கனும்

    //தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது.//

    இப்படி துடைத்துக் கொள்வது அசிங்கம்

  7. புணர்நிர்மானத்திற்கு இரக்கத்துடன் 1000கோடி முதலீடு. 5000கோடி இலாப உத்திரவாதத்துடன்.
    நாட்டை மீட்க ஜப்பானியத் தொழிலாளி இனி 24மணி நேரமும் தியாகம் செய்யவேண்டும் என மனிதாபிமான லிபர்டேரியன்களின் கோரிக்கை.
    வழமையாக தொழிலாளி நாட்டின் நலன் என்ற பெயரில் தன் தலையில் ஜப்பானை சுமக்க பட்பெட்களும் ஒட்டுண்ணிகளும் தங்களின் தலைமுறை தலைமுறைக்கும் கொழுக்க உத்திரவாதம்.

  8. பொது துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன… இப்போது அதன் பெரும் பங்கை வாரனுக்கு தாரை வார்த்து கொடுத்த அதில் வரும் லாபத்தில் வாரன் விருப்பதிற்கு மனித நேய செலவு செய்ய வேண்டுமாம்…

    அறிவு கெட்ட முண்டங்களே… உங்களின் ஆட்சியாளர்கள் மடையன் மன்மோகன், பாசிச சோனியா-ராகுல், பிரனாப், பசிதம்பரம், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், தயாநிதி போன்ற அத்துனை பேருக்கும்ம் மனிதாபிமானம் இல்லை என்பதால்… இங்கிருக்கும் உழைக்கும் மக்களின் பணத்தை அமெரிக்க வாரன் மனிதாபிமான செலவு செய்ய வேண்டும் என்கிறீர்களே… இப்படி பேசும் அரைகுறைகளின் மூளையில்… அமிலத்திற்கு பதில்… ஏகாதிபத்திய சாக்கடைதான் ஓடுகிறதோ?

    • அறிவு கெட்ட முண்ட்டம் யார் என்று நீரே முழங்க வேண்டாமே ? லூசுங்க தான் இப்படி பேசும் என்பது எம் அனுபவம் !! :)))

      அந்நிய முதலீடுகள் 1991இல் பல துறைகளில் ‘தாரளமாக’ அனுமதிக்கப்ட்ட போதும், இதே போல் தான் லூசுகள் அருமையான சொல்லாடல்களை பிரோயோகித்தன. அன்று அவர்களின் பேச்சை கேட்டிருந்தால், 1992இல் சோவியத் ரஸ்ஸியா திவாலாகி உடைந்ததை போல், இந்தியாவும் திவாலாகி, அழிந்து, சிதறியிருக்கும். இந்த உரையாடல் இங்கு சாத்தியமாகாமல், நாம் இன்றைய வட கொரிய மக்களை போல் பிச்சை எடுத்துக்கொண்டிருப்போம்.

      இன்ஸுரன்ஸ் துறையில் ஏற்கெனவே அன்னிய முதலீடு உள்ளதுதான். பொதுதுறைகளில் செயல்பாடுகளை பெரிடா அவற்றால பாதிக்க முடியவில்லை. 100 % அனுமதித்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது. இன்றும் வங்கி துறையில் 75 % க்கு மேல் அரசு துறைதான்.

      எது எப்படியே, உம்மை போன்ற அன்பர்கள் இருக்கும் வரை, வக்கில்கள், அரசு மருத்துவர்கள், போலிஸ், நீதிபதிகள், பொதுதுறை இன்ஸ்சுரன்ஸ் அதிகாரிகளின் கூட்டு கொள்ளை பிரச்சனை இல்லாமல் தொடரும். உம்மை போன்ற ‘இடதுசாரிகளை’ கேடையமாக பயண்படுத்தி அவுக சுகமா கொள்ளையடிகிறாக. தொகை அளவு பற்றி தெரிந்தால் மயக்கம்ப்போட்டு விடுவீக.

      எனக்கு ஒரு யோசனை காம்ரேட் : சும்மா இங்கு முதலாளித்துவம் பற்றி பேசி போரட்டிக்கிறது. இது வரை வாழ்க்கையில் நேர்மையாக முயன்று பெரிசா சம்பாதித்து செட்டிலாகவும் முடியல. ஒரு GIC வக்கில் டீல் பேச அழைக்கிறார். நல்ல சான்ஸ். அவருடன் ‘கூட்டு’ சேர்ந்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று சபலம் தோன்றுகிறது. பார்ட்டன்ர்ஷிப்புக்கு ஒரு கை குறைகிறது. வர்ரீகலா. உம்மை போன்ற ’அக்கினகள்’ தான் தேவை. நல்ல front அமைக்க சான்ஸ். பல தோழர்களிடமும் கேன்வாஸ் செய்து, ’கேஸ்’ பிடித்து, குபேரர்களாகளாம். என்ன சொல்றீக ? உருப்பட வழி பார்ப்போம்.

      ’புரட்சி ஓங்குக’ என்றும் குரல் கொடுத்தக்கலாம், அப்பப்ப. ஒரு கவர்தான். ரொம்ப சுலபம்.

      • //நாம் இன்றைய வட கொரிய மக்களை போல் பிச்சை எடுத்துக்கொண்டிருப்போம்//

        நீங்களும் நானும் பிச்சை எடுக்கவில்லை என்பதற்காக இந்தியாவில் பிச்சைக்காரர்களே இல்லை என்று அர்த்தமில்லை. இந்தியாவில்தான் பிச்சைக்காரர்கள் அதிகம்.

    • பொதுதுறை வாகன விபத்து காப்பீட்டில் பல காலமாக நடக்கும் ஒரு வகை ஊழல் இது :

      எனக்கு தெரிந்த ‘பெரிய’ வக்கில் ஒருவர், பினாமி பெயரில் லாரி வைத்திருக்கிறார். (ஆறு மாதத்திற்க்கு ஒருமுறை இதை வித்துவிடுவார்). அந்த லாரி ‘விபத்துக்குள்ளாகும்’ ; ‘அடிப்பட்டவர்’ , அவரின் வழக்கறிஞர், அரசு காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர், அரசு மருத்துவர், போலிஸ்கார்கள், நீதிபதி, மற்றும் இதர அரசு அலுவலர்கள் : எல்லோரும் ஒரே அணி. கேஸை ‘வேறு’ மாதிரி முடித்து, இழப்பீடு பெற்று, பிரித்து கொள்வார்கள். அரசு நிறுவந்த்தை ‘சுரண்டுகிறார்கள்’ ; சில காலம் முன்பு நாமக்கல் பகுதிகளில் இதில் ஒரு பகுதியை மட்டும் ‘கண்டுபிடித்து’ சி.பி.அய் கேஸ் போட்டது. அவர்களும் ‘பங்கு’ வாங்கிக்கிட்டாங்க போல. அதுக்கப்பறம் ஒரு தகவலும் இல்ல.

      அரசாங்க காப்பீட்டு நிறுவன வக்கில்கள் தன் கேஸ்களில் ‘தோற்றல்’ யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. இழப்பு பொது நிறுவனத்திற்க்கு தானே. யாருக்கி கவலை. அதுதான் பொது சொத்தாச்சே. ஆனால் ICICI Lombard போன்ற தனியார் வாகன விபத்து காப்பீட்டு நிறுவனத்தில் இப்படி பகல் கொள்ளை சாத்தியமில்லை. ஒழுங்கீனம் என்றால் முதலில் வேலை போய்விடும். பிறகு கிரிமினல் கேஸை சந்திக்க வேண்டி வரும்.

      அரசாங்கம் தொழில் செய்தால், இப்படி தான் சீரழியும். LIC was the only monopoly for decades in life insurance. and GICs in other type of insurances. The level of penetration of insurance in India is terribly low and only a small percentage of total population is covered by any kind of insurance. Only reason : govt monopoly until recently. it can be compared to the
      level of service of BSNL when it was similarly the only service provider until the 90s. tele density was abysmally low. compare and judge.

      • libert,
        //கிரிமினல் கேஸை சந்திக்க வேண்டி வரும்//

        அந்தக் கேசையும் தனியார்தான் விசாரிக்க வேண்டுமா! அல்லது அரசா? ஏன் கேக்குறேன்னா நீதிபதிங்க அத்தனை பேரும் ஊழல்வாதிகளா இருக்குறானுவலே. பேசாம நீதித் துறையையும் தனியார்ட்ட தூக்கிக் கொடுத்துறலாம்.

    • //பொது துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன//

      ரயில்வேயில் நடக்கும் மெகா ஊழல் தனிக்கதை. இந்திய அரசுகள் ராணுவத்திற்க்கும், இதர வெட்டி இலவசங்களுக்கும் வீணாக்கும் தொகைகளை ரயில்வேயில் போட்டாலே more than enough. and no need for LIC and GIC money.

      சரி, தெற்க்கு ரயில்வேயில், SRMU என்று ஒரு பெரிய, பலம் வாய்ந்த தொழிற்சங்கம் உள்ளது. தோழர் கண்ணையா அதன் முக்கிய தலைவர். 25 வருடங்களாக. ஒரு காலத்தில், நேர்மை, அர்பணிப்பு மிகுந்த கம்யூனிஸ்டுகளால் கட்டி எழுப்பப்பட்ட சங்கம் இது. இன்று ஊழலின் ஊற்றுகண் இது. அதன் தலைவர்கள் இன்று சுமார் 300 கோடிகள் ‘சம்பாதித்து’ விட்டனர். விசாரித்து பாரும். அதன் உறுப்பினர்கள் பெரும் பாலானோர் என்ன முறையில் ‘வேலை’ செய்கிறார்கள், அவர்களின் அடிப்படை நேர்மை எந்த அளவு உள்ளது என்றும் விசாரித்து பாரும். இவர்களை எந்த கொம்பனாலும், ஒன்றும் கேட்க முடியாது. எந்த ரயில்வே அமைச்சர், அதிகாரி, போலிஸ் யாரும் இவர்களை கண்டுக்க மாட்டாக, எதுக்கு வம்பு என்று. மேற்படி அதிகாரிகள், அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளை தனிக்கதை. ரயில்வேயில் ஒரு ஆறு மாதம் வேலை செய்து பார்க்கவும். அப்ப தான் புரியும்.

  9. Warren buffet is a nice person. It is very bad to write something bad about someone without knowing anything about him. he has not earned single penny in bad way like our politicians. he is a real philanthrapist. so please remove this worst article. Thanks.

  10. Buffet இங்கே வந்த நோக்கம் – இங்கு உள்ள பெரு முதலாளிகளை தங்கள் சம்பாதித்த செல்வதை மக்களுக்கு செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்தவே. IT company மற்றும் சில பெரும் companyகளின் முதலாளிகள் தங்கள் சொந்த charity வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் பெயரில் பெரும் சொத்துக்கள் சேர்த்து ஒன்றுக்கும் உதவாத தன்மை உள்ளது. அதை மாற்றவே Buffet முயன்றார். ஆனால் very poor response from our corporate lords.
    Japanல் invest செய்ய சொன்னால் என்ன தவறு? ஏற்கனவே பலர் தங்கள் invest செய்ததை exit பண்ணிவிட்டனர். இப்போது invest செய்தால் அவர்களுக்கு நலமே.
    ஜப்பானியர்கள் மன வலிமையோடு இருக்கிறார்கள், அது, இது எல்லாம் சரி – உணர்ச்சிபூர்வமாக இருந்தால் போதுமா? பூவாவிற்கு என்ன வழி? கொஞ்சம் மண்டையும் வேண்டும்.

  11. திருவாளர் libertarian அவர்களே பொதுத்துறையில் ஊழல் நடப்பது உண்மை தான். அதற்கு தீர்வு ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தான். அதை விட்டு விட்டு தனியாருக்கு தாரை வார்ப்பது அல்ல. ஏற்கனவே போபாலில் விஷ வாயு தாக்கிய குற்றத்திற்கு அமெரிக்காவின் ஆண்டர்சனை தண்டிக்க துப்பு கெட்ட இந்திய அரசாங்கம் இப்பொழுது வாரன் பப்பட்டிற்கு பொது துறையை தாரை வார்க்க சொல்கிறீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதை எதிர்த்தால், நீங்கள் உள்ளூர் அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஊழல் என்பதை தனியாக ஒழித்து விட முடியாது சகோதரரே, மேலும் பொது துரையின் பங்குகளை விற்கும் போதே நிறைய முறைகேடுகள் நடக்கிறதே, அதை பற்றி என்ன சொல்வீர்கள்? ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது இவை எல்லாம் தவிர்க்க முடியாது என்று சொல்வீர்களா?

    • sarvan,

      இதற்க்கு பல முறை பதில் சொல்லி அலுத்துவிட்டது. ‘தாரை வார்ப்பது’ போன்ற சொற்க்களின் தாக்கம் தான் உங்களுக்கு. ஏற்கெனவே பங்கு சந்தை, இந்திய தொழில்துறை இவற்றில் அன்னிய முதலீடு 1991க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட போதும், இதே சொல்லாடல் பெரும் உணர்ச்சிய (உணர்ச்சியை மட்டும் தான், அறிவை அல்ல) தூண்டியது. எதையும் தாரை வார்க்கவில்லை. 1991 திவால் நிலை பற்றி எமது பதிவுக்கு பதில் முதலில் சொல்லுங்கள். பிறகு இதை பற்றி பேசலாம்.

      பொதுதுறை ஊழலை கடுமையாக ‘தண்டித்து’ கட்டுப்படுத்தலாம் என்பது வெறும் பகற்கனவு. இப்படியே ’பேசிக்கிட்டே’ இருக்க வேண்டியதுதான். தனியார் போட்டிகள் (தனியார்வசம் என்பதை விட இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய சொல் : போட்டிகள்) உருவானவுடன் தான் பி.எஸ்.என்.எல் லைன்மேன்கள் மற்றும் அலுவலர்களின் லஞ்சம் முற்றாக ஒழிந்தது. இப்ப புது போன் கொடுக்க யாரும் லஞ்சம் கேட்பதில்லை. முடியாத நிலை. ஒப்பிடுக.

      சரி, இதையே தொடர்ந்து இங்கு ‘விவாதிப்பது’ அலுப்பை தான் தருகிறது. எல்லாத்தையும் நிறுத்திவிட்டு, பேசாம் ’அந்த’ பொதுத்துறை அதிகாரியுடன், அந்த ‘டீலை’ பேசி செட்டிலாகிவிடலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். உங்களை போன்றவர்களில்
      தனியார்மய ’எதிர்ப்பு’ மற்றும் போராட்டங்கள், அவர்களை போன்ற ’தொழிலாளர் தோழர்களை’ கடைசி வரை பாதுக்கும் என்பது தெளிவு. அவர்களோடு கூட்டு சேர்ந்து ‘பிழைப்புவாதியாக’ மாறுவதுதான் விவேகம். ஏன் இங்க வீண் வாக்குவதம் செய்து, சண்டை போட்டு அலுக்க வேண்டும்….

      • ரிலையன்ஸ் முதல் வீடியோகான் வரையிலும் ரீசார்ஜ் செய்த ந்மது பணத்தை சிறுகசிறுக லபக்குவதைப் பற்றியும் கூறுங்களேன்.

      • BSNL பற்றிய உங்களின் கருத்து முற்றிலும் உண்மை.. இப்ப என்ன சொன்னாலும் ஓடி ஓடி வந்து சர்வீஸ் பண்றான்.. முன்னெல்லாம் ஏதாவது கம்ப்ளைண்டுன்னு சொல்லி ஆபீஸ்க்கு போனா என்னவோ அவன் காச நாம வாங்குன மாறி பேசுவான்.. இப்ப கூட அந்த நிலை நிலவுகிறது.. முற்றிலும் தனியார் மயமாக்கல் என்று எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்..

        ஒரு அரசால் ஒரு துறையை முற்றிலும் கண்காணிக்க முடியாத அல்லது வக்கில்லாத நிலையில் எதற்க்காக பொதுத்துறை என்று போர்டு மாட்டிக்கணும்..?? உலகம் முன்னேறும் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டாமா..?? எல்லாருமே லாபப் பெருச்சாளிகள் தான்.. ஆனால் பொதுத் துறையாக மட்டும் இருந்தால் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்.. போட்டி வேண்டும்..

        நீங்கள் சொன்னது சரியே..

  12. // ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல //
    // விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய் //
    // ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… //

    இந்த மொழி நடையும், இதில் வெளிப்படும் ஆணாதிக்க, பிற்போக்குக் கண்ணோட்டமும், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேச்சு கேட்பது போல இருக்கிறது. மான உணர்ச்சி என்பது ‘பொண்டாட்டியிலிருந்து தான்’ துவங்க வேண்டுமென்பதில்லை. இத்தகைய உரைநடை ‘புதிய கலாச்சாரம்’ அல்ல. தோழர்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

    • போராட்டம், ஆணாதிக்க கண்ணோட்டத்தை விழிப்புடன் எழுந்து சுட்டிக் காட்டுவது என்ற தங்களின் பொறுப்புணர்ச்சியை வரவேற்கும் அதேவேளை, கட்டுரையாளன் என்ற முறையில் சில விசயங்களை சொல்ல வேண்டியுள்ளது.

      தாங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு வரிகளும் எழுதியவரின் ஆணாதிக்க பிற்போக்கு கண்ணோட்டம் என்ற வகையில் தோதாக வரிகளைப் பயன்படுத்துவது விசமமாகப்படுகிறது. உதாரணத்திற்கு ஜெயலலிதாவைக் குறிப்பிட்ட பாடல் உழைக்கும் வர்க்கமாக வேடமிட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு இளநீர் விற்பது போல நடிப்பதை அம்பலப்படுத்தும் வரிகள் அவை. ஜெயலலிதாவும் ஒரு பெண் என்பதால் உழைக்கம் வர்க்கமாக நடிக்கும் அந்த ஆளும் வர்க்கப் பேர்வழியை அம்பலப்படுத்தாமல் இருக்க முடியாது. அதைப்போல வாரன் பப்பெட்டும் கஷ்டப்பட்டு வந்தவன் போல காட்டுவதற்காகத்தான் ஜெயலலிதாவின் பாடல்வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வெற்றி கொண்டான் வார்த்தையிலேயே வேறு கோணத்தில் திரும்பி நிற்பதற்கு கட்டுரை பொறுப்பல்ல.

      அதுபோலத்தான் கந்துவட்டி தராவிடில் உன் பெண்ணைக் கொடு என்று தூக்கிச் செல்லும் கொடுமையும் சமுதாயத்தில் நிகழ்கிறது. எல்லா ஆதிக்கமும் கடைசியிலும் கடைசியிலுமாய் பெண்கள் மேல் கையை வைக்கும் தீவிரத்தை அன்றாடம் காணும் சமூகத்தின் நடப்பிலிருந்து உணர்த்தவே கீழ்க்கண்ட வரிகளும் கையாளப்பட்டுள்ளது. சமூகத்தின் நடத்தையிலிருந்து ஒன்றை உணர வைப்பதாலேயே அவ்வாறு உணர்த்துவதை ஆணாதிக்க கண்ணோட்டம் என்று முத்திரை குத்துவது தவறான கண்ணோட்டமாகவே படுகிறது.

      மேலும் மான உணர்ச்சி, பொண்டாட்டியிலிருந்துதான் துவங்க வேண்டும் என்றோ, இதுதான் புதிய கலாச்சாரம் என்றோ அறுதியிடுவது என் நோக்கமல்ல, அதை முன்மொழியும் தங்களின் கண்டுபிடிப்பு. சிறிது மாதங்களுக்கு முன்பு லீனா மணிமேகலையின் கவிதையைக் கண்டிக்க தாங்கள் கையாண்ட மொழிநடை என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதோ அதேபோல ஆதிக்கத்தின் தீவிரத்தை சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்வதற்காகவே கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எதார்த்த மனிதர்களுக்கு புரியக்கூடியதுதான்.

      – துரை.சண்முகம்

  13. //அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.//

    வச்சானையா வேட்டு
    பள்ளிக் கூடத்துல!
    அவாளப் பத்தி இவாள்
    வாயத் தொறக்கலே!
    ஊரையெல்லாம்
    காறித்துப்பியே
    காஞ்சி போச்சோ!

    http://www.rediff.com/news/report/maoists-blast-middle-school-mobile-tower-in-bihar/20110316.htm

    http://www.hindu.com/2011/03/26/stories/2011032657380100.htm

  14. வாரன் பஃபெட் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஒரு கட்டுரையைப் படித்து இந்தக் கருத்தை வெளியிட்டு உள்ளீர்கள்..

    உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவன் உங்களைத் தவறாகச் சித்தரித்து ஒரு கட்டுரை எழுதினால் அதை வேறொருவர் மேலோட்டமாகப் படித்து விட்டு இது போன்று ஒரு பின்னூட்டம் போட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..??

    வாறன் பஃபெட் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன்.. ஆனால் எளிமையாக வாழ்கிறார்.. நம்மில் எத்தனை பேர் அப்படி வாழ்கிறோம்…??

    என்னைப் பொருத்தவரை, நமது உள்ளூர்க் கம்பெனிகள் இன்சூரன்ஸ் துறையில் போடும் ஆட்டங்களும், சுரண்டும் செல்வங்களும் ஏராளம்.. இதற்கு அரசியல்வாதிகளும் உடந்தை. பன்னாட்டு முதலீடுகளை ஆதரிப்பதன் மூலம் இது குறைய வாய்ப்புள்ளது.. மேலும் தரமும் வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளவுக்கு உயரும் என்பது என் கருத்து.

    இங்கே ஜெர்மனியில் உடம்புக்கு என்ன என்றாலும், எங்கேயாவது விழுந்து அடிபட்டு விட்டாலும் கூட, சிறு சிறு சில்லறை விலை மருந்துகளைத் தவிர வேறு எதற்கும் பர்சை வெளியில் எடுப்பதே இல்லை. அவற்றை அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன.. நமது ஊரின் இன்சூரன்ஸ் துறை ஊழல் மற்றும் ஏமாற்றும் கொள்ளைக் கும்பலாக இருக்கின்றது. என்ன நடந்தாலும் உங்களால் முழு இழப்பீடை பெற முடியாது..

    இருபுறமும் அலசி ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

  15. நான் எதார்த்த மனிதனாக இல்லாததற்கு வருந்துகிறேன் தோழர் துரை.சண்முகம்.

    முதல் விசயம், லீனா மணிமேகலையின் கவிதைக்கான எதிர்வினை என்பது, நமது சித்தாந்தத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கான எதிர்த்தாக்குதல். “எமது ஆயுதத்தை எமது எதிராளியே தீர்மானிக்கிறான்” என்ற மார்க்சின் சொற்களின்படியே, எனது கவிதை உட்பட வினவின் கட்டுரையும் விளங்கியது. எனவே, அக்கவிதைக்கும் தற்போதைய விவாதத்துக்கும் முடிச்சுப் போடுவது பொருத்தமற்றது. ஏனெனில், இது எதிர்த்தாக்குதல் அல்ல. மாறாக, மக்களிடம் நமது கருத்துக்களை எடுத்துச் செல்வது குறித்தது.

    இரண்டு, ‘விசமம்’, ‘முத்திரை குத்துவது’ எனப் பல தவறுகளைக் கண்டறியும் அதே வேளையில், எனது பொறுப்புணர்ச்சியை வரவேற்கவும் செய்திருக்கிறீர்கள். நன்றி. ஒரு கருத்தை விளக்குவதற்கு பொண்டாட்டி, வயசுப் பொண்ணு, ஜெயலலிதா இளநி வித்தது போன்ற ஆழமான உதாரணங்கள்தான் அவசியம் என்று படவில்லை. ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல, வாரன் பப்பட்டை அம்பலப்படுத்துவது என வரும் பொழுது, ஏன் ஜெயலலிதா பாடல் கருத்தாக முளைக்கிறது? வேறு உதாரணங்களே இல்லையா என்ன? கருணாநிதி அல்லது அம்பானி குறித்து அவ்வாறு எழுதினால் ‘கார சாரமாக’ இருக்காதோ? இந்த சிந்தனை முறையில்தான் ஆணாதிக்கக் கண்ணோட்டம் விளங்குகிறது என விமர்சிக்கிறேன்.

    ஒரு அமெரிக்க முதலாளியின் ஏகாதிபத்தியத் தன்மையை அம்பலப்படுத்த, ‘பொண்டாட்டியைக் குடு’ என்று கூறுவதாகக் கூறுவது, பெண்களையும், நாட்டையும் ‘காப்பாற்றும்’ பொறுப்பில் உள்ள ஆண்களின் வழக்கமான ஆணாதிக்க கூப்பாடுதான். இதில் முத்திரை குத்துவதோ, தாங்கள் கண்டறிந்துள்ள ‘விசமமோ’ எதுவும் இல்லை. மாறாக, பொதுக் கண்ணோட்டத்தில் நிறைந்து நிற்கிற பாலுறவுக் கண்ணோட்டத்திலேயே நமது கருத்துக்களையும் கட்டமைக்கும் போக்கு தங்களிடம் வெளிப்படுவதாலேயே விவாதிக்க நேர்கிறது.

    ஆனால், தாங்கள் இதற்கு கந்து வட்டிக் கொடுமையை உதாரணமாகக் காட்டுகிறீர்கள். உண்மை தான். எல்லா ஆதிக்கமும் கடைசியில் என்ன, முதலிலேயே கூட பெண்கள் மேல் கையை வைக்கிறது. ஆனால், இது பதிலில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு. ஏனெனில், கட்டுரையில் அத்தகைய கண்ணோட்டத்தில் தங்கள் கருத்து வெளிப்படவில்லை. மாறாக, ‘விருந்துக்கு வரும் சமூக நடத்தையிலிருந்தே’ விளக்கியிருந்தீர்கள்.

    ஒரு அடிப்படையான விசயம் உள்ளது. லெனினும், மார்க்சும், ஏங்கெல்சும் கூடத்தான் எத்தனையோ கருத்துக்களை “சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்வது” என்ற அடிப்படையில் வைத்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தகைய மொழி நடையை, ஒரு கருத்தை விளக்க பெண்டாள்வது எனும் அடிப்படையில் உதாரணங்கள் தந்து எழுதுவதை, அவர்களிடம் காண இயலவில்லை. எனவே, தங்கள் அளவுகோல்படி பார்த்தால், தீப்பொறி ஆறுமுகம் கூட, “சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்ளும்” நோக்கில்தான் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் போலும்.

    • /////“எமது ஆயுதத்தை எமது எதிராளியே தீர்மானிக்கிறான்” என்ற மார்க்சின் சொற்களின்படியே/////

      இல்லை மாவோவின் சொற்படி.

      விவாதம் குறித்து பிறகு..

    • //ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல, வாரன் பப்பட்டை அம்பலப்படுத்துவது என வரும் பொழுது, ஏன் ஜெயலலிதா பாடல் கருத்தாக முளைக்கிறது?//

      புரட்சியாளர்களுக்கு கவர்ச்சி பஞ்சம் போலும்!

  16. வினவு கட்டுரை இன்சூரன்ஸ் துறையை அபகரிக்க முயலும்
    அந்நியக் கம்பெனிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

    இது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதும், மக்களைத்
    திரட்டுவதுமே தீர்வுகளுக்கு வழி வகுக்கும். அதை விடுத்து பொதுவாக
    கோபப்படுவதும், கனல் கக்குவதும் ஓரளவு கவனத்தை ஈர்க்க உதவலாம்.
    அடுத்து இன்னொரு அபாயத்தை இப்படி கனல் கக்கத் தேடுவதோடு
    மன நிறைவு அடைந்து விடக் கூடாது. எழுதுவது என் வேலை, திரட்டுவது
    யாரோ ஒருவரின் வேலை என்ற போக்கு எஸ்கேப்பிசம் ஆகும்.

    இன்சூரன்ஸ் துறையை திறந்து விடுவதற்கான சாலை வரைபடம் 1994 லேயே
    போடப்பட்டது. அன்று மல்ஹோத்ரா குழு பரிந்துரைகள் என்ன தெரியுமா?

    1 அந்நிய நிறுவனங்கள் தாராளமாக அனுமதிக்கப்படும்.( 26 % கட்டுப்பாடு
    உச்சவரம்பு எல்லாம் சாலை வரை படத்தில் கிடையாது)
    2 எல் ஐ சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பங்குகளில்
    50 % விற்கப்படும். ( இன்று வரை இந்நிறுவனங்கள் 100 % அரசுப் பங்குகளைக்
    கொண்ட நிறுவனங்கள் ஆகவே தொடர்கின்றன)

    இது தவிர பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தால் எல் ஐ சி க்குள்ள
    “அரசு உத்தரவாதத்தை” ( SOVERIGN GUARANTEE ) பறிக்கவும் முயற்சித்தார்கள்.

    இப்படித் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் எல்லாவற்றையும் மீறி இன்றைக்கும் எல் ஐ சி
    73 % சதவீத சந்தைபங்கு உள்ள நிறுவனமாக எப்படித் திகழ்கிறது? இதை விவாதிக்காமல்
    இன்சூரன்ஸ் அல்ல.. வங்கிகளில், சிறுவணிகத்தில், கல்வியில்… எங்கேயுமே பன்னாட்டு
    மூலதனத்தின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்த இயலாது.

    இன்சூரன்ஸ் துறையின் தொழிற்சங்கங்கள், இடதுசாரிகளின் தலையீடு ஆகியன
    இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு தூரம் இத் துறையை பாதுகாத்திருக்க இயலாது.
    இரண்டு மிகப் பெரிய கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டு முறையே 65 லட்சம், I .5 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் பெறப்பட்டன. எனக்குத் தெரிய தமிழகத்தில் 5000 பேர் 45 நாட்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள்,
    திருவிழாக்கள், பொதுக் கூட்டங்கள் என எங்கு பார்த்தாலும் நின்று கையெழுத்து
    வாங்கியதை வேறு எந்தப் பிரச்சினையிலும் பார்த்ததில்லை. பல எழுத்தாளர்கள் கூட
    வெகு ஜன ஊடகங்களில் இடம் பெற்றால்தான் அறிந்து கொள்வது என்கிற பலவீனத்தோடு இருப்பது வேதனைக்குரியது. ஊடகங்கள் மறைக்கப் பார்த்தாலும் இவ்வியக்கத்தின் விரிவு பல அரசியல் இயக்கங்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியது. ஒன்றை சர்ச்சைக்குரியதாக மற்ற எவ்வளவு பெரிய முயற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

    தொடர்ந்த மக்கள் சந்திப்பு இயக்கங்கள், மனித சங்கிலிகள், சைக்கிள் பேரணிகள், முகப்பு
    உடை அணிந்து பிரச்சாரம், கலைப்பயணங்கள் என ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் 16
    ஆண்டுகளாக இவ்வளவு இடையறாத இயக்கத்தை வேறு எந்த அரசியல் கட்சியோ, தொழிற் சங்கமோ செய்திருக்குமா என்பது ஐயமே! ( யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக சொல்லவில்லை. நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்க்கிற எவரும் ஏற்றுக் கொள்வார்கள்)

    1 இத்தகைய போராட்டங்களே இன்சூரன்ஸ் “சீர் திருத்தங்களுக்கு” வேகத் தடைகளை
    உருவாக்கியது. ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் நிதியமைச்சர் ப சிதம்பரம்
    “பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாப்போம்” என்ற உறுதி மொழியை
    பெற முடிந்தது.( தற்காலிக தந்திரம் எனினும் போராடுவதற்கான நம்பிக்கையையும்,
    கால அவகாசத்தையும் அது தந்தது) 1994 லேயே திட்டமிட்ட பங்கு விற்பனையை
    16 ஆண்டுகள் வரை செய்ய முடியவில்லை.

    2 பி ஜே பி ஆட்சி காலத்தில் ஐ ஆர் டி ஏ மசோதா நிறைவேற்றப்பட்டாலும் 26 % என்ற
    அந்நிய முதலீடிற்கான வரையறையை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

    3 அரசு உத்தரவாதம் ( soverign guarantee ) இன்று வரையிலும் தொடர்கிறது.

    இன்னும் மிக நுட்பமான அம்சங்களில் கூட பொதுத்துறைக்கு எதிரான தாக்குதல்கள்
    தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

    இநதிய நிதியமைச்சர் பகிரங்கமாகவே ‘ இந்தியத் தொழிலதிபர்கள் கூட்டத்தில்
    ( பின் பட்ஜெட் கூட்டத்தில் ) ” உங்களுக்கு அரசியல் கட்சிகளிடம், மாநில அரசுகளிடம்
    உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இன்சூரன்ஸ் மசோதாக்களை நிறைவேற்ற
    உதவுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தது செய்தியாக வந்துள்ளது. நீரா ராடியாக்கள்
    மூலமாக கருத்தொற்றுமையை உருவாக்குங்கள் என்பதுதானே இதன் அர்த்தம்?

    ஆளும் வர்க்கங்களின் சாதுர்யமும், நிதானமாக நிகழ்ச்சி நிரலை நகர்த்துகிற லாவகத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.

    பிரணாப் முகர்ஜியின் கருத்துருவாக்கத்திற்கு மாற்றாக நாம் என்ன செய்யபோகிறோம்?
    வினவு கட்டுரைகள் போன்ற முயற்சிகள் பாரட்டத்தக்கது. இவையெல்லாம் களத்தில் நடைபெறுகிற பணிகளோடு இணையவேண்டும்.

    ஒரு வாசகர் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவு திறப்பதை ஆதரித்து இருந்தார். சிலர் இடதுசாரிகளை எதிர்ப்பது என்ற பெயரால் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுகொள்வது வியப்பை தருகிறது.
    கடந்த 31 மாதங்களில் அமெரிக்காவில் மட்டும் 330 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன. ஏ ஐ ஜி என்கிற பன்னாட்டு பகாசுர இன்சூரன்ஸ் கம்பெனி திவால் விளிம்பிற்குப் போய் அமெரிக்க அரசினால் அதன் 80 % பங்குகள் வாங்கப்பட்டு காப்பற்றப்பட்டது என்பது ஓராண்டிற்கு முந்தைய நிகழ்வு.

    இன்னொரு வாசகர் தேசிய மயத்திற்கு முன்பு ஊழலே இல்லை என்று எழுதியிருக்கிறார். முந்திரா ஊழல் பற்றித் தெரியாது போலும். நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி “அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் பட்டியலிட்ட மோசடிகளை விட அதிகமான மோசடிகளை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்துள்ளன” என்று பேசியது பதிவேடுகளில் உள்ளது.

    இன்றைக்கு உலகத்தில் அதிகமான பாலிசிகளை கொண்ட முதன்மையான நிறுவனம் எல் ஐ சி தான். 99 .86 % உரிமப் பட்டுவாடா ( claim settlement ) உள்ள முதன்மையான நிறுவனமும் எல் ஐ சி தான். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 40 % உரிமங்களை (claims) கூட வழங்காமல் உள்ளன.

    பொது இன்சுரன்சில் சில தவறுகள் நடப்பதாக ஒரு வாசகர் எழுதியிருந்தார். எங்கோ சில தவறுகள் இருந்தால் அவற்றைக் களைவதும், தண்டிப்பதும் அவசியம். குறிப்பான குற்றச் சாட்டுகள் இல்லாததால் பதில் அளிக்க இயலவில்லை. ஆனால் உலக அனுபவம், தேசத்தின் தேவை, பாலிசி தாரர் பாதுகாப்பு என்ற விரிந்த பார்வையோடு அணுகுவதே சரியான இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கும்.

    • //வினவு கட்டுரை இன்சூரன்ஸ் துறையை அபகரிக்க முயலும்
      அந்நியக் கம்பெனிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

      இது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதும், மக்களைத்
      திரட்டுவதுமே தீர்வுகளுக்கு வழி வகுக்கும். அதை விடுத்து பொதுவாக
      கோபப்படுவதும், கனல் கக்குவதும் ஓரளவு கவனத்தை ஈர்க்க உதவலாம்.
      அடுத்து இன்னொரு அபாயத்தை இப்படி கனல் கக்கத் தேடுவதோடு
      மன நிறைவு அடைந்து விடக் கூடாது. எழுதுவது என் வேலை, திரட்டுவது
      யாரோ ஒருவரின் வேலை என்ற போக்கு எஸ்கேப்பிசம் ஆகும்.//

      மதுரை இன்சூரன்ஸ் சிபிஎம் தொழிற்சங்க தோழர் சுவாமிநாதன் தான் என எண்ணுகிறேன். தோழரின் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதே சமயம் மேலே தாங்கள் சொல்லியுள்ளது போல் வினவு தளம் அனல் கருத்துக்களை தெரிவிப்பதோடு எஸ்கேப் ஆவதில்லை. இது போன்ற கருத்துக்களை வெளியில் சொல்லுவதன் மூலமே அணிதிரட்டல் என்பது சாத்தியம். அந்த வகையில் இன்று பல புதிய பொருளாதார மண்டல தனியார் நிறுவனங்களில் அணிதிரட்டல் வேலையை செய்து வருகின்றது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி. கடந்த வருடம் புதுச்சேரியில் அணிதிரண்ட தொழிலாளர் எண்ணிக்கையை பார்த்து அரண்டது யூனியன் பிரதேச அரசு. தனியார் மய எதிர்ப்பு மற்றும் தொழிற்சாலை சார்ந்த பிரச்சனை தொடர்பான கட்டுரைகளின் இறுதியில் அணிதிரள வேண்டிய அவசியத்தையும் கண்டிப்பாக தெரிவிக்கும் பணியையும் செய்து வருகிறது. இன்சூரன்ஸ் துறையில் தாங்கள் ஒரு சிறந்த தொழிற்சங்க நிர்வாகி என்பதை நான் அறிவேன். இன்றைய தேவை துறை கடந்த தொழிலாளர் ஒற்றுமை.

    • LIC பங்குகளை விற்க்க சொல்லி கேட்டு வாரன் பப்பட் இங்கு வரவில்லை. தனியார் இன்ஸ்டுரன்ஸ் நிறுவனங்களில் அந்நிய முதலீடுகளின் அளவை 25 % இல் இருந்து 49க்கு உயர்த்த வேண்டுகோள் விடுத்துள்ளார். (வேண்டுகோள் தான். முடிவு நம் கையில் தான்).
      LICக்கு போட்டிகள் தனியார்களிடம் இருந்து உருவாக இது ஊக்கமளிக்கும். போட்டிகள் மிக நல்ல விளைவைதான் ஏற்படுத்தும். அதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிநாதம். (free competition).

      பி.எச்.என்.எல் மட்டும் இருந்த காலங்களும், இன்று அதற்க்கு தனியார்களிடம் இருந்து கடும் போட்டி நிலவும் காலங்களையும் ஒப்பிட்டால் புரியும். இன்று பி.எஸ்.என்.எல் இன் சேவை சிறப்பாக உயர்ந்துள்ளது. எப்படி இப்ப மட்டும் ‘வேலை’ செய்றாங்க ? பல பத்தாண்டுகள் இல்லாத சேவை தரம் மற்றும் வளர்ச்சி சாத்தியமானது எதனால் ?

      LIC முன்பு இருந்ததை விட இன்று சிறப்பாகவே செயல்படுகிறது. இன்னும் செம்மைபடுத நிறைய சாத்தியங்கள் உள்ளன. போட்டிகள் உருவானால், மனிதன் ஒழுங்கா வேலை செய்வான். இதுதான் அடிப்படை தத்துவம். இன்ஸுரன்ஸ் துறையில் போட்டிகளை ஊக்குவிக்க தனியார்களை அனுமதிப்பதுதான் சரியான வழி. எதிர்காலத்தில் இது நிருபனமாகும்.

      ’தாரை வார்ப்பது’, ‘கொள்ளை அடிப்பது’ போன்ற சொல்லாடல்கள் வெறும் உணர்ச்சியை மட்டும் கிளப்பி, அறிவை மழுங்கடிக்கும். அது தான் இங்கு நடக்கிறது. 1991 வரை இதே பூச்சாண்டியை காட்டியே நம்மை முடக்கி வைத்திருந்தனர். 1991க்கு பிறகு இந்திய பங்கு சந்தையில், இந்திய தொழில் துறையில், இந்திய வங்கி துறையில் அந்நிய முதலீடுகள் முதன் முதலில் அனுமதிக்க்பட்ட போதும் இதே வெற்று கூச்சல். ஆனால் அன்று அதை மட்டும் அனுமதிக்காமல் இருந்திருந்தால், அந்நிய செலவாணி பற்றாமல், கடனும் வாங்கு முடியாமல், ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்க்கு சரிந்து, திவலாகி, 1992இல் சோவியத யூனியன் திவாலாகி, சிதறுண்டு அழிந்து நாசமானதை போல் நாமும் அழிந்திருப்போம். நல்ல வேளையாக, சாதுர்யமாக மீண்டு வந்தோம்.

      Manufacturing and Services துறைகளில் இன்று அசுர வளர்ச்சி, பெரும் வேலை வாய்ப்பு, பல பொருட்கள் மிக மலிவாக, தரமாக கிடைக்கின்றன. இதெல்லாம் அந்நிய முதலீடுகள் மற்றும் தாரளமயமாக்கல் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

    • //பொது இன்சுரன்சில் சில தவறுகள் நடப்பதாக ஒரு வாசகர் எழுதியிருந்தார். எங்கோ சில தவறுகள் இருந்தால் அவற்றைக் களைவதும், தண்டிப்பதும் அவசியம். ///

      இதெல்லாம் tip of the iceberg வகை. உள்ள நடப்பதை நீங்களே அறிவீர்கள்.

      1950களில் முத்தாரா ஊழல் பற்றி : சோசியலிச கொள்கைகள் கோலோச்சிய காலங்களில், இது போல் ஊழல்களுக்கு வழி வகுத்தது. இந்திய இன்ஸுரன்ஸ் துறை 1947க்கு பல காலம் முன்பே தனியார்களால் துவக்கி வெற்றுகரமாக நடத்தப்பட்டு வந்தது. இதர பல துறைகளும் தான் : இரும்பு, சிமெண்ட், விமான சேவை, வங்கி, மின்சாரம், போன்றவை. வெள்ளிகார ஆட்சியில் இத்தனை ஊழல் ஏன் உருவாகவில்லை. காரணம் அன்று சோசியலிசம் என்ற பெயரில் அரசின் கட்டுபாடுகள், லைசென்ஸ் ராஜ்ஜியம், தேசியமயமாக்கும் செயல்கள் எதுவும் இல்லை. ஒப்பிட்டு பார்க்கவும்.

      நேருவிற்க்கு பதில் பட்டீல் அல்லது ராஜாஜி முதல் பிரதமராகி, சோசியலிஸ்டுகளையும், கம்யூனிஸ்டுகளையும் சமாளித்து, அன்றே சுதந்திர பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் இந்தியா தைவான், ஜப்பான் போல வளர்ந்த நாடாக, ஊழல் மிக குறைந்த நல்ல நாடாக மாறியிருக்கும். வறுமை மிக குறைந்திருக்கும். ஹும். இதெல்லாம் எப்படி சொன்னாலும் பலருக்கும் புரியாது.

      தைவான், ஜப்பானின் வளர்ச்சியை ஒப்பிடுங்கள்.

    • ///இன்னொரு வாசகர் தேசிய மயத்திற்கு முன்பு ஊழலே இல்லை என்று எழுதியிருக்கிறார். முந்திரா ஊழல் பற்றித் தெரியாது போலும். நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி “அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் பட்டியலிட்ட மோசடிகளை விட அதிகமான மோசடிகளை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்துள்ளன” என்று பேசியது பதிவேடுகளில் உள்ளது.///

      தேசியமயமாக்கப்பட்ட பின் தான் இந்த ஊழல் உருவானது. அதற்க்கு பல பத்தாண்டுகள் முன்பு வரை இல்லை. எப்படி மாறியது ? அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து ஊழல் புரிய தனியாரில் சில கயவர்கள் எல்லா காலங்களிலும் இருப்பார்கள் தான். இதை தடுக்க ஒரே வழி அரசு எந்த தொழிலையும் செய்யக் கூடாது. முடிந்த வரை.

      The first major financial scandal of independent India was what is popularly known as the Mundhra scandal. The government owned Life Insurance Corporation of India (LIC) had bypassed its investment committee and, under pressure from the government, had purchased Rs 124 lakh worth of shares in six companies belonging to the Calcutta-based industrialist Haridas Mundhra in order to bail him out. LIC’s investment committee was informed of this decision only after the deal had been struck.

      http://www.tribuneindia.com/2000/20000409/spectrum/books.htm#5

    • இன்சூரன்ஸ் சிபிஎம் தொழிற்சங்க தோழர் சுவாமிநாதன் அவர்களின் பொதுத்துறை அவசியத்தை தூக்கிப்பிடித்த கருத்துக்களுக்கு நன்றி, மற்றும் பாராட்டுக்கள். அதேசமயம்

      //வினவு கட்டுரை இன்சூரன்ஸ் துறையை அபகரிக்க முயலும்
      அந்நியக் கம்பெனிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

      இது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதும், மக்களைத்
      திரட்டுவதுமே தீர்வுகளுக்கு வழி வகுக்கும். அதை விடுத்து பொதுவாக
      கோபப்படுவதும், கனல் கக்குவதும் ஓரளவு கவனத்தை ஈர்க்க உதவலாம்.
      அடுத்து இன்னொரு அபாயத்தை இப்படி கனல் கக்கத் தேடுவதோடு
      மன நிறைவு அடைந்து விடக் கூடாது. எழுதுவது என் வேலை, திரட்டுவது
      யாரோ ஒருவரின் வேலை என்ற போக்கு எஸ்கேப்பிசம் ஆகும்.//

      எதில் அபாயம் இருக்கிறது, அது எவ்விதமாய் நம்மை துரத்துகிறது என்ற கருத்தை பரவலாக்குவதன் மூலமே தொழிலாளர்களை அணிதிரட்டுதல், அல்லது மக்களை அணிதிரட்டுதல் என்பது சாத்தியம் என்பதில் தாங்கள் மாறுபட மாட்டீா்கள் என நம்புகிறேன். அத்தகைய பணியைத்தான் வினவு செய்கிறது. தொடர்ந்த கருத்து விதைப்பின் பலனாக இன்று பல புதிய பொருளாதார மண்டல தனியார் தொழிற்சாலைகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் தோன்றியிருக்கிறது, பல முன்னணி போராட்டங்களுக்கு தொழிலாளர்களை அணிதிரட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மே தினத்தில் புதுச்சேரியில் திரண்ட தொழிலாளர் அணிவகுப்பை பார்த்து யூனியன் பிரதேச அரசு அரண்டது.

      • திரு சித்ரகுப்தன் எதிர்வினைக்கு நன்றி. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடே!
        ஆனால் ஒரு பிரச்சினை பற்றிய கட்டுரையில் 17 ஆண்டு கால களப் போராட்டம்,
        அதன் தாக்கம் பற்றிய ஒரு சில வரிகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
        அது யார் நடத்தினாலும் அது ஏற்படுத்துகிற நம்பிக்கை விரிவான திரட்டலுக்கு
        வலு சேர்க்கும். இணைய தளக் கட்டுரைகள், சிறு பிரசுரங்கள் போன்றவை கருத்துருவாக்கத்திற்கு
        உதவலாம். ஆனால் மக்களை நேரில் சந்தித்து திரட்டுவதோடு ஒப்பிட இயலாது.

        ஒரு கட்டுரை மீதான விமர்சனத்திற்கே எதிர்வினை சி.கு விடம் இருந்து வரும்போது
        17 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டம் குறிப்பிடப் படாதது எப்படி எதிரொலி இல்லாமல்
        போகும்?

        க சுவாமிநாதன்

        • திரு.சுவாமிநாதன்,

          //ஆனால் ஒரு பிரச்சினை பற்றிய கட்டுரையில் 17 ஆண்டு கால களப் போராட்டம்,
          அதன் தாக்கம் பற்றிய ஒரு சில வரிகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.///

          உங்க சி.பி.எம் அணியை போலி கம்யூனிஸ்டுகள் என்று வினவு குழு முற்றாக நிராகரிக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். எனவே அவர்கள் உங்களோடு ‘கூட்டு’ சேர்ந்தெல்லாம் போராட மாட்டர்கள்.

          மேலும், அவர்கள் தலைமையுல் ‘செம்புரட்சி’ உருவானால், உங்களை போன்ற ‘போலி’ கம்யூனிஸ்டுகளை எல்லாம் பிறகு கூண்டோடு கைலாசத்திற்க்கு அனுப்பிவிடுவார்கள். எதுகும் ’சாக்ரதையாக’ இருக்கவும் !!! லியான் ட்ராட்ஸ்கி, நிக்கலாய் புக்காரின் போன்றவர்களையும், பல லச்சம் இதர ‘கம்யூனிஸ்டுகளையும்’ போலி என்று சொல்லி போட்டு தள்ளிய வரலாறு நியாபகம் இருக்கட்டும். எம்மை போன்ற ‘முதலாளித்துவ கைக்கூலிகளை’ அதற்க்கு முன்பே போட்டு தள்ளிவிடுவார்கள் என்பது வேறு விசியம்.

  17. 26% தனியார் துறை போட்டி இருக்கும் போதும் LIC நன்றாகவே செயல் படுவதாகத் தான் தோன்றுகிறது.

    http://www.financialexpress.com/news/LIC-beats-private-insurers-posts-35-growth-in-AprFeb/767534/

    கானடாவில் insurance துறை முழுவதும் தனியார் மயம் தான். Health, Auto insurance பிரீமியங்களில் Sunlife, Manulife, போன்ற கம்பெனிகள் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது.
    LIC யில் இருக்கும் குறைகளை களைந்து இன்னும் சிறப்பாக செயல்பட வைப்பதை விட்டு competition வேண்டும் என்பதற்காகவே இன்னும் 49% தனியார் மயம் வேண்டும் என்பது சரியாகப் படவில்லை.

  18. ராம்,

    ஜெர்மனியில் இருந்து ‘சாமக்கோடங்கி’ என்பவர் மேலே இட்ட பின்னூட்டம் :

    ///இங்கே ஜெர்மனியில் உடம்புக்கு என்ன என்றாலும், எங்கேயாவது விழுந்து அடிபட்டு விட்டாலும் கூட, சிறு சிறு சில்லறை விலை மருந்துகளைத் தவிர வேறு எதற்கும் பர்சை வெளியில் எடுப்பதே இல்லை. அவற்றை அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன.. நமது ஊரின் இன்சூரன்ஸ் துறை ஊழல் மற்றும் ஏமாற்றும் கொள்ளைக் கும்பலாக இருக்கின்றது. என்ன நடந்தாலும் உங்களால் முழு இழப்பீடை பெற முடியாது..
    இருபுறமும் அலசி ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..///

    மேலும், rate of penetration on insurance in India is terribly low. less than 10 % or ever less % of the population was covered. why ? similar lowest rate of penetration of telephones (tele density) existed here until liberalisation. now look at the dramatic change.

    மேலும், அரச துறை நிறுவனங்களுக்குள் உள்ளே நடக்கும் மெகா ஊழல்களை பற்றி மேலே எழுதியுள்ளேன். அதையும் பாருங்கள். வெளி வந்தது only a tip of the iceberg தான். சென்ற மாதம் ஒரு பெரும் அரசு தொழில் நிறுவனத்தின் சேர்மனை கைது செய்தனர். மெகா ஊழல். நெய்வேலியில் அதை விட கொடுமை. சொல்லிமாளாது. எல்லா மட்டங்களிலும் ஊழல், ஊழல்.

    தனியார் துறையில் ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த அளவு இருக்காது. முக்கிய வித்யாசம், ஊழலின் ‘விலையை’ அரசும், பொதுமக்களும் சுமக்கத் தேவையில்லை. only the investors, customers and creditors of private sector loose their money if there is loss by corruption within the company / sector. the tax payer will not face the burden. இதற்க்கு விதிவிலக்குகள் உண்டு. அமெரிக்காவில் இப்ப நடந்ததை மட்டும் மேற்கோள் காட்டுவீக என்று தெரியும். நான் பொதுவாக சொன்னேன். பஸ் போக்குவரத்து துறையில் இதே போல் ஊழல் மற்றும் பற்றாகுறையினால், நாங்க இங்க படும் துன்பம் சொல்லி மாளாது. உங்களை போன்ற upper middle class NRIக்கள் அடுத்த முறை தமிழகம் வரும் போது, ஆட்டோ / டேக்ஸிகளை அமர்த்தாமல், பஸ்களில் ‘மட்டும்’ பயணம் செய்து பாருங்க. பிறகு இந்த விவாதத்தை தொடரலாம்.

    • நண்பர் அதியமான் அவர்களுக்கு-
      தாங்கள் வசிக்கும் சென்னையில் 3000 பேருந்துகள் இருக்கிறது ஆனால் 6000 பேருந்துகள் தேவை என்கிறீர்கள். 1972ல் தேசியமயப்படுத்தி தமிழகம் முழுவதும் 1200ற்குள்ளாக பேருந்துகள் கையகப்படுத்தப்பட்டு இன்று சுமார் 21000 பேருந்துகள் எண்ணிக்கையில் 365 பணிமனைகள், லட்சத்தி நாற்பதாயிரம் தொழிலாளர்கள், பல கோடி அசையாச் சொத்துக்கள் என வளர்ந்து இருக்கிறது. பேருந்து கட்டணம் என்பது ஓட்டு வங்கியோடு தொடர்புடையதாக இருப்பதால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. அன்றாடம் ஆயிரக்கணக்கில் மற்ற நகரங்களில் நூற்றுக்கணக்கில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இருக்கிற சாலை வசதியில் இருக்கிற வாகன எண்ணிக்கையிலேயே பல மணி நேரம் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. மேலும் பீக் அவர் என சொல்லப்படுகிற அலுவலக துவக்க நேரம் மற்றும் முடியும் நேரத்தில் இருக்கும் கூட்டத்தை மட்டும் வைத்து பேருந்து எண்ணிக்கையை முடிவு செய்ய இயலாது. நாள் முழுவதும் இயக்க வேண்டும். தனியார் மிகுதியாக உள்ள ஆம்னி பேருந்துகளின் நாளுக்கொரு, தேவைக்கேற்ப கட்டணம் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள். எதிலும் தனியார் மயம், எல்லாம் தனியார் மயம் என்பது தவறான முடிவு. அரசுத் துறைகளில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் செயல்பாடுகளினால், அதிகாரிகள் சுயமாக செயல்பட விடாமல் அரசியல் தலையீடுகளினால் ஊழல் இருக்கிறது. அதை சரியென்று சொல்லவில்லை. ஆனால் தாங்கள் சொல்லும் வழிமுறை தலையில் பேன் இருந்தால் கொள்ளிக்கட்டையை வைத்து சொறிந்து கொள் என்பது போலாகும்

      • நண்பர் சித்திரகுப்தன்,

        அரசு போக்குவரத்து கழகங்கள் நஸ்டத்தில் ஓடுவதற்க்கு, பயணச்சீட்டின் விலை, below operating costs இல் (ஓட்டு வங்கி கட்டாயங்களால்) இருப்பதால் மட்டும் அல்ல. அது ஒரு பகுதிதான். தமிழக் போக்குவரத்து துறை அமைச்சர் ‘மான்புமிக’ நேரு வருடம் எத்தனை நூறு கோடிகள் அடிக்கிறார் ? துறையின் உயரி அதிகாரிகள் தொடங்கி, டெப்போ மேனேஜர்கள், ஊழியர்கள் வரை : purchase of buses, spare parts, tyers, etc இல் நாள்தோறும் எத்த்னை கோடிகள் கமிஸனாக கைமாறுகின்றன என்பதை எம்மை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். தனியார் பஸ்களில் இப்படி ஊழல் இல்லாத நிலை எப்படி ?

        மேலும், the management system is your govt PSUs is top heavy and lop sided with too much bureacracy. staff costs are much much higher (for per km) when compared to any private bus operator who will operate in a lean and mean management style. All these add to the costs and losses.

        சரி, போகட்டும். மதுரைல எதாவது டிப்போவில், ‘நல்ல’ காண்டராக்ட் இருந்தா சொல்லுங்க. ஒரு டீல் பேசி, ஒரு அள்ளு அள்ளீரலாம். உருப்படியான காரியமா இருக்கும்.

        • ஹலோ மிஸ்டர் அதியமான்,

          //மேலும், the management system is your govt PSUs is top heavy and lop sided with too much bureacracy. staff costs are much much higher (for per km) when compared to any private bus operator who will operate in a lean and mean management style. //

          நீங்கள் தனியாரின் லோ காஸ்ட் லேபர் என்பதை நாங்கள் உழைப்புச் சுரண்டல் என்கிறோம். குறைந்த சம்பளம் பல மணிநேர உழைப்பு சுரண்டல் என்பது தான் தனியார் ஸ்டைல்.

        • சித்தரகுப்த்தன் அய்யா,

          ஊழலை பற்றி பேச மாட்டேங்கிறீஙகளே. வளர்ந்த நாடுகளில் தனியார் பஸ்களில் பணிபுரியும் தொழிலாளார்களில் உழைப்பு ’சுரண்டல்’ எந்த அளவு உள்ளது ? சுரண்டல் என்பதே இல்லை என்பதுதான் எம் கோணம். பார்க்கவும் : http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html

          சரி, இங்கு பஸ் பற்றாகுறையை தீர்க்க ஒரு realistic solutionஅய் சொல்லுங்களேன்.

    • libert
      அரசு நிறுவனம் = ஊழல்.
      தனியார் நிறுவனம் = ஊழல் + கொள்ளை
      இப்படி புரிந்து கொள்ளலாமா

    • அனைத்திலும் தனியார்மயத்தை ஆதரித்ததன் விளைவு பொலிவியாவில் கொசபாம்பா நீர் விநியோகம் அமெரிக்க பெக்டெல்லுக்கு குத்தகை விடப்பட்டது. விளைவு மழை நீரைப் பிடித்தால்கூட பெக்டெல்லுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிலை அம்மக்களுக்கு. கட்டணம் 300% கும் அதிகம். இதனால் கொதித்த்ழுந்த அம்மக்கள் ஜனவரி 2000 அன்று தன்னெழுச்சியாக போராடி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் பின்பே பெக்டெல்லின் ஒப்பந்தத்தை பொலிவியா அரசு ரத்து செய்தது. தனியார்மயம் இறுதியில் இது போன்ற நாசகார விளைவுகளையே ஏற்படுத்தும். இதனுடன் மருந்துப் பொருட்களின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் நமது உயிர்வாழ்வாதாரப் பிரச்சினைகளில் எது தேவை என்பதில் கவனம் செலுத்துங்கள். செல்போன் சேவை மலிவாக இருப்பதினால் அதைக்கொண்டு மனிதன் உயிர்வாழ முடியாது.

    • நண்பர் லிபெர்டரியன் நல்ல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
      ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கு அது உதவும்.
      அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் எனது கருத்துக்களும் கீழே..

      *ஜப்பான் நெருக்கடியில் இருக்கும்போது அங்கு போய் வாரன்
      பப்பே பங்குகளை வாங்குவது பொருளாதாரத்தை உயிர்பிக்க
      உதவாதா?

      பங்குச் சந்தையை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு இது ஓர்
      வணிக தந்திரம் என்பது தெரியும். ஏனெனில் இதற்கு கீழே
      பங்கு விலைகள் சரிய வாய்ப்பு இல்லாததால் இப்போது வாங்குவது
      நிச்சயம் எதிர்காலத்தில் லாபத்தைத் தரும். எனவே இதை பெரிய
      தியாகம் எனக் கருத வேண்டியதில்லை.

      * வாரன் பப்பே இவ்வளவு நல்லவர்! ஏன் அவரது வருகையை எதிர்க்க
      வேண்டும்?

      லிபெர்டரியன் விக்கிபீடியா உள்ளிட்ட சில இணைய தளங்களைச்
      சார்ந்தே இக் கருத்தை முன்வைக்கிறார். ஆனால் வாரேன் பப்பேயின்
      முற்போக்கு முகம் பற்றிய மாறுபட்ட பதிவுகளையும் இணையதளத்திற்குள்
      காண முடிகிறது. உதாரணமாக வாரிசுரிமைச் சொத்து மீதான வரிகள் போடவேண்டுமென்ற
      அவரது கோரிக்கை. பார்க்க முற்போக்காக தெரியும். ஆனால் அவரது இன்சூரன்ஸ்
      வினையில் சொத்துவரிகளுக்கான இடர்களுக்கும் காப்பு தருகிற வணிகம்
      இருப்பதால் இக் கோரிக்கை அவருக்கு லாபம் தருவதே என்று விமர்சனம் உள்ளது.
      இன்னும் ஆழமாக வாரேன் பப்பே பற்றி தேடலாம்.

      * தேசிய மயத்திற்கு முன்பு ஊழலே இல்லை !

      லிபெர்டரியன் 1956 க்கு முந்தைய நாடாளுமன்ற பதிவுகள், செய்தியேடுகள் போன்றவற்றைப்
      பார்த்து விட்டு முடிவுக்கு வரட்டும். முந்திரா ஊழல் தேசிய மையத்திற்குப் பின்னர்தான் என்று
      லிபெர்டரியன் சுட்டிக் காட்டியிருப்பது சரிதான். ஆனால் பெரோஸ் காந்தியின் நாடாளுமன்ற
      விமர்சனம் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதற்கு பதில் என்ன?

      1956 க்கு முன்பு ஆர்.கே.டால்மியா நடத்திய பாரத் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ 2 கோடி
      கையாடல் செய்தார். அரசு பத்திரங்களில் முதலீடு என்று கணக்கு காண்பித்து விட்டு ஆனால்
      சோதித்துப் பார்த்தல் அவர்களது இருப்பில் அப் பத்திரங்களே இல்லை.( ரூ 30 லட்சம் மும்பை
      நிறுவனங்களிலும், 12 லட்சம் கொல்கத்தா நிறுவனங்களிலும் ). 1955 மார்ச்சில் சமர்ப்பிக்க
      வேண்டிய கணக்குகளை 66 கம்பெனிகள் மே மாதம் வரையிலும், 23 நிறுவனங்கள் அக்டோபர்
      வரையிலும் கூட சமர்பிக்கவில்லை. 11 நிறுவனங்கள் திவால் ஆயின.1944 முதல் 1954 வரை
      திவாலான நிறுவனங்கள் 25 . நிதிச் சிரமத்தால் வேறு நிறுவனங்களோடு இணைந்தவை 25 .
      இப்படி நிறையச் சொல்லலாம்.

      * போட்டி இருந்தால்தான் சிறப்பான செயல்பாடு உறுதியாகும்!

      அமெரிக்காவில் நிறைய தனியார் வங்கிகளும்,இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இருக்கின்றன. அங்கு
      ஏன் இவ்வளவு திவால்கள்! 2008 க்கு பின்னர் மட்டுமல்ல! அமெரிக்க செனட் அங்குள்ள இன்சூரன்ஸ்
      நிறுவனங்கள் பற்றி 1980 களின் பிற்பகுதியிலேயே சமர்ப்பித்த ” பொய்யான வாக்குறுதிகள்”
      ( FAILED PROMISES ) அறிக்கையில் பித்தலாட்டக் காரர்கள் போன்ற சொல்லாடல்களைப்
      பயன்படுத்தி இருப்பது தெரியுமா?

      * FREE MARKET என்பதுதானே முதலாளித்துவத்தின் அடிநாதம்!

      அது முதலாளிகளைதானே ஈர்க்க வேண்டும். ஏன் லிபெர்டரியானை கவர்ந்திருக்கிறது?

      இருக்கட்டும். சுதந்திரச் சந்தை என்பதே மாற்று. நாம் பேருந்துகளில் எழுதி வைத்திருந்த
      ‘இந்தியனாக இரு! இந்தியப் பொருள்களையே வாங்கு ‘ என்ற வார்த்தைகளையெல்லாம்
      அழிக்கச் சொல்லிவிட்டு இன்றைக்கும் ‘அமெரிக்க பொருள்களையே வாங்கு’ ( BUY AMERIKA
      ACT ) சட்டம் ஒபாமாவால் அமலாக்கப் படுகிறதே! என்ன புடலங்காய் சுதந்திரச் சந்தை.
      இன்றைக்கு உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடே முடங்கியிருப்பதற்கு காரணம்
      வளர்ந்த நாடுகள் சொந்தச் சந்தையை மட்டும் ” மூடி வைத்திருப்பதுதானே!”

      * வயர் மேன், லயன் மேன் ஊழல் எல்லாம் பொதுத் துறைகளில் உள்ளது!

      பணிக் கலாச்சார மேம்பாடு, ஊழலின்மை ஆகியன கீழ் மட்டங்களில் மேம்பட வேண்டியிருப்பதை
      நானும் ஏற்றுக் கொள்கிறேன். எறும்பு கண்ணில் படுபவர்களுக்கு யானை தெரியாமல் போவது ஏன்
      என்பதுதான் வியப்பாக உள்ளது. முன்திரா ஊழல், யு டி ஐ வீழ்ச்சி , ஸ்பெக்ட்ரம் ஆகிய எல்லாவற்றிலும்
      பயனாளிகள் மிகப் பெரிய தொழிலதிபர்கள்தானே. நீரா ராடியாக்கள் போன்றவர்கள் அமை ச்சர் நியமனங்கள்
      வரை தலையிடுகிறார்களே! அவர்கள் முதலாளித்துவத்தின் செல்லக் குழந்தைகள் என்பது
      விளங்கவில்லையா!

      * இந்தியாவில் இன்சூரன்ஸ் பரவலாக்கல் போதுமானதாக இல்லையே!

      வளர்ச்சியடைந்த நாடுகளின் GDP ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) க்கும் இன்சூரன்ஸ் வணிகத்திற்கும் இடையேயான
      விகிதத்தை விட இங்கு குறைவாக உள்ளதே. அதனால் போட்டி வேண்டும் என்கிறார் லிபெர்டரியன். நுட்பமான
      கேள்வி. ஆனால் இன்சூரன்ஸ் பரவலாக்கலை மதிப்பிட அது சரியான அளவுகோல் அல்ல. இநதிய சராசரி தனிநபர்
      வருமானத்தில் எத்தனையாவது இடம், இன்சூரன்ஸ் வணிகத்தில் எத்தனையாவது இடம் என்று பார்ப்பதே சரியானது.
      முந்தைய அளவுகோல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட மூலதனத்தின் அளவுகோல். இரண்டாவது அளவுகோல்தான் உண்மையில் சமுகத்தின் கடைசி மனிதனை இன்சூரன்ஸ் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கான ஒப்பீட்டளவில் மேம்பட்ட அளவுகோல். தனியார் கம்பெனிகள் வருவதற்கு முந்தைய 1997 ன் தகவல் இது. தனிநபர் சராசரி வருமானத்தில் உலகத்தில் 83 வது ரேங்கில் இருந்த இந்தியா இன்சூரன்ஸ் பரவலாக்கலில் 33 வது ரேங்கில் இருந்தது. தனியார் வருகைக்குப் பின்னும் என்ன நிலைமை?

      2000 லிருந்து இந்தியாவில் இயங்குகிற ஒவ்வோர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் சராசரி பிரிமியத்தை
      ( மொத்தப்பிரிமியம் / மொத்தப் பாலிசிகள்) கணக்கிட்டுப் பாருங்கள். எல் ஐ சி யின் சராசரிப் பிரிமியமே
      மிக மிகக் குறைவாக இருக்கும். ஆனால் எல் ஐ சி யின் மொத்தப் பாலிசிகளோ 35 கோடிகளைத் தொட்டுவிட்டன.
      என்ன காரணம்? தனியார் கம்பெனிகள் ஏற்கனவே இன்சூரன்ஸ் பயன் பெறத் தக்கவர்களாக இருந்தவர்களையே
      மீண்டும் தொட்டிருக்கிறார்கள். ஆனால் எல் ஐ சி யோ சாதாரண மக்களைத் தொடுகிற நிறுவனமாக உள்ளது.
      எது பரவலாக்கல்?

      க சுவாமிநாதன்

    • திரு அதியமான் (லிபர்டேரியன்)

      சிபிஎம் சார்ந்த சிஐடியு தொழிற்சங்கத்தைச் சார்ந்த திரு சுவாமிநாதன்- தான் இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிவதால் அத்துறை சார்ந்த பல விபரங்களை தனது மறுமொழியாக தெரிவித்துள்ளார். அதன் மீதான கருத்து முரண்பாடுகள் இருந்தால் விவாதிப்பதில் எவ்வித தவறுமில்லை.
      மாறாக //உங்க சி.பி.எம் அணியை போலி கம்யூனிஸ்டுகள் என்று வினவு குழு முற்றாக நிராகரிக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். எனவே அவர்கள் உங்களோடு ‘கூட்டு’ சேர்ந்தெல்லாம் போராட மாட்டர்கள்.

      மேலும், அவர்கள் தலைமையுல் ‘செம்புரட்சி’ உருவானால், உங்களை போன்ற ‘போலி’ கம்யூனிஸ்டுகளை எல்லாம் பிறகு கூண்டோடு கைலாசத்திற்க்கு அனுப்பிவிடுவார்கள். எதுகும் ’சாக்ரதையாக’ இருக்கவும் !!!//
      இப்படி கருத்து தெரிவிப்பது எந்த வகை நாகரீகம்?

      • சித்தரகுப்தன் சார்,

        இங்கு இதெல்லாம் சகஜம் தான் !! சீரியசா எடுத்துக்காதீங்க. ஆனால் நான் சொன்ன விசியம் சீரியசான மேட்டர் தான். நிகாலை புக்காரி, டிராட்ஸ்க்கி மற்றும் பல லச்சம் கம்யூனிஸ்டுகளை ‘திரிபுவாதிகள்’ , போலிகள் அல்லது துரோகிகள் என்று முத்திரை குத்தி போட்டு தள்ளிய வரலாறு :

        http://en.wikipedia.org/wiki/Great_Purge
        http://en.wikipedia.org/wiki/Great_Purge#Number_of_people_executed

        According to the declassified Soviet archives, during 1937 and 1938, the NKVD detained 1,548,366 victims, of whom 681,692 were shot – an average of 1,000 executions a day (in comparison, the Tsarists executed 3,932 persons for political crimes from 1825 to 1910 – an average of less than 1 execution per week).[65]

        நாளை மாவோயிஸ்டுகள், வினவு தலைமையில் இந்தியாவில் செம்புரட்சி நடந்தால், இதே போல் தான் மீண்டும் சரித்திரம் திரும்பு என்பதே நிஜம். பல கோடி மக்களை (நான் உள்பட) போட்டு தள்ளாமல் புரட்சியை செயல்படுத்தவே முடியாது. இன்றே மாவோயிஸ்டுகளின் கொலைகளை எண்ணிப்பார்க்கவும். அதிகாரம் இவர்கள் கையில் வந்தால் என்ன ஆகும் ? சி.பி.எம் தொண்டர்கள் நந்திகிராமில் செய்ததையும் எண்ணிப்பாருங்க. கம்யூனிஸ்ட் என்று தம்மை கருதிக்கொள்பவர்கள் எல்லோரும் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

        • libert,
          அடிக்கடி உங்களைப் பார்த்து பரிதாபம்கொள்ள வைக்கிறீர்கள், Mr. Libert. விக்கிப்பீடியாவைப் படிப்பது தவறல்ல.ஆனால் விக்கிபீடியாவில் இருப்பது அனைத்தும் உண்மையானது என்று நம்புவது, அதை நம்பி நாலு பேரு வருகிற இடத்தில் உளறுவதுதான் தவறு. வரலாற்றில் தன்னுடைய பெயரை பதிந்துவிட்டுச் செல்ல விரும்பிய ட்ராட்ஸ்கி தன்னுடைய சோவியத் எதிர்ப்பை, சோவியத்திற்கெதிரான தன்னுடைய சதியைப் பற்றி தன்னுடைய வாயாலேயே நிறைய சொல்லியிருக்கிறான். அது அவனுக்கு புகழ்ச்சியாக தெரிந்திருக்கலாம். அவனுடைய வார்த்தைகளிலிருந்தே அவன் திரிபுவாதி, நயவஞ்சகன் என்பதை நிரூபித்தும் இருக்கிறான்,

          ///இதே போல் தான் மீண்டும் சரித்திரம் திரும்பு என்பதே நிஜம்///.
          துரோகிகள் தயாரா இருக்கோம்னு சொல்லவற்ரீங்களா?

        • கம்யூனிசம் என்றவுடன் அதனுடைய எதிரிகள், உடனடியாக ஸ்டாலினை ஒரு கொலைகாரன் என்ற சித்திரத்தை வரைந்து புளுகித் தள்ளுவார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன் ஹிட்லரால் ஊக்குவிக்கப்பட்ட இந்தப் புளுகுனி வேலை இன்று லிபர்டேரியன்கள் வரையிலும் தொடர்கிறது. இன்று ஹிட்லருக்குச் சமமான கொடுங்கோலனாக காட்டப்படுகிறார் ஸ்டாலின். ஆனால், அன்று ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா சென்ற அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய அதிபர்களும், அதிகாரிகளும், நிருபர்களும், மருத்துவர்களும் ஸ்டாலினைப் பற்றியும், சோவியத்தின் மக்களைப் பற்றியும், சோவியத்தில் நடந்த நேர்மையான நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியும், சோவியத்தின் முன்னேற்றத்தைப் பற்றியும், தங்களுடைய அனுபவங்களிலிருந்து கூறியிருக்கிறார்கள். நேர்மையாக ஆய்வு செய்ய விரும்புபவர்கள் அவர்களின் குறிப்புகளையும், லிபர்ட் கூறும் விக்கியையும் படித்து, ஆய்வு செய்து அறிந்துகொள்ளுங்கள்.

          சோவியத்திற்கெதிராக சதிசெய்த வழக்கில் கைது செய்யபட்ட புகாரின் (அதாவது லிபர்டால் திரிபுவாதி அல்ல என கூறப்படுபவர்) நீதிமன்றத்தில் தனது இறுதி வேண்டுகோளாக புகாரின் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீதிமன்றத்தில் புகாரின் இறுதியாக கூறுகிறார்…………..இந்த விசாரணையில் முற்றுமுழுக்க அம்பலப்படுத்தப்பட்ட எதிர்புரட்சி சதிகார்ர்களாகிய எங்களை அருவருக்கத்தக்க தலைமறைவு வாழ்க்கையில் இழுத்துச் சென்றது. போராட்டத்தில் இருந்த நியாயம் அல்ல என்பதை நான் அளித்த முதன்மை வாக்குமூலத்தில் தெரிவித்துவிட்டேன். இந்தப் போராட்ட்த்திற்கான தாக்கத்தில் தரம் தாழ்ந்த சிந்தனைகள், தரம் தாழ்ந்த மனோபாவம், தரம் தாழ்ந்த எங்களின் நிலை, மனிதர்களின் தரத்தாழ்வு ஆகியவையும் இணைந்துள்ளன. குற்றத்தை நிருபிக்கும் சாட்சியம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை ஐயத்துக் கிடமின்றி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக நான் எதையும் சொல்ல மறுத்து வந்தேன். நான் சிறையில் இருக்கும்போது எனது கடந்த காலம் முழுவதையும் நான் மதிப்பீடு செய்தேன். “நீங்கள் இறக்கவேண்டும் என்றால், எதற்காக அதைச் செய்கிறீர்கள்? என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டால்,அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு வெற்றிடம்தான் உங்கள் முன் தோன்றுகிறது தவறுக்கு வருந்தாமல் ஒருவன் இறக்க விரும்பினால் அவன் இறப்பதற்கான காரணம் ஏதுமில்லை சரி,நீங்கள் இறக்கவில்லை ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து நீங்கள் வாழவேண்டிய நிலை நீடிக்கிறது என்று கொள்வோம். எதற்காக என்கிற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மனிதாபிமானமற்ற நிலையில் மக்களின் எதிரியாக எல்லாரிடமிருந்தும் முழுமையாக தனிமைப்பட்டு நிற்பதுதான் வாழ்க்கையின் சாரம் என்றாகிவிடுகிறது. உடனடியாக அதே பதில் மீண்டும் எழுகிறது. மக்கள் நீதிபதிகளே, இத்தகைய தருணங்களில் தனிப்பட்ட முறையிலான அனைத்து முகமூடிகளும் வீழ்ந்து மறைந்துவிடுகின்றன. எனது வாழ்க்கையில் நான் கடைசி முறையாகப் பேசுவதாக நினைக்கிறேன். டிராட்ஸ்கியும், குற்றச்சாட்டுக்குள்ளான எனது கூட்டாளிகளும் அதேபோல் இரண்டாவது அகிலமும் குறிப்பாக என்னைக் காப்பாற்ற முயற்சி செய்யும். நான் அதை நிராகரிக்கிறேன். தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.

  19. நாம் அடுத்து நடக்க இருப்பதை பார்கலாம். போராட்ட களத்தையும், மக்களையும் தயார் படுத்துவோம். ஊழல் மட்ரும் அரசு நிர்வாக சீர்கேட்டிர்கு எதிராக போராடுவோம். தாங்கள் ஏதாவது இயக்கதில் இருந்தால் தயவு செயது சொல்லுங்கள். இனணந்து போரடுவொம்.

  20. வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

    தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாதுதான்.

  21. பல முறை விவாதம் செய்து அலுத்து போய் அரசு அதிகாரிகளின் ஊழலுக்கு ஒத்து போய் விடலாம் என்ற முடிவுக்கு வந்த libertarian அவர்களே, சமீபத்தில் நம் நாட்டின் மிக பெரிய ஊழலாக கருதப்படும் 2g spectrum ஊழல் எதனால் நடந்தது அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் என்பது உங்கள் கருத்தா? முதலாளிகளின் லாப வெறிக்காக இத்தகைய ஊழல் பேர்வழிகளை உருவாகுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து. அதில் இந்த ஊழல் பேர்வழிகளும் பொருக்கி தின்கிறார்கள் அதில் எந்த விதமான மாற்று கருத்தும் எனக்கு இல்லை. இதை நான் சொல்லா விட்டால் நீங்கள் ஊழல் செய்த ராசா மற்றும் அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக என்னை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். சரி விசயத்துக்கு வருகிறேன். நீங்கள் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை விட இது போன்ற லாப வெறி பிடித்த முதலாளிகளிடம் உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் நம் இந்தியாவை முன்னேற்ற துடிக்கும் முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டால் உங்களுக்கு நிறைய வருமானம் கிடைத்து நீங்கள் எதிர்பாத்ததை விட மிக அருமையாகவே செட்டில் ஆகி விடலாம்.

    • saravan,

      none of you had bothered to go thru my posts and links about the co-relation between corruption and economic freedom. let me ask you a ques : why no 2G corruption in developed nations in spectrum issues there. after all, mobile telephony and spectrum allocation was there well before they were allowed in India. ans : there is no govt player there and auctions were transparent.

      Mr.Chitraguptan,

      Till date you had not replied to my post about bus transport system in TN and shortages, which you assured, you will do. Why ? and here u state in a sweeping statement that all bus tranport should be nationalised along with banks and insurance. Good. why not lorry transport too. Let us start by nationalising all Lorry transport in India, and create govt corporations to run them. All tempos, mini vans, etc too should be nationalised.

      all private banks and insurance cos too should be nationalised immediately. All foreign investments within India are to be stopped with immediate effect and all MNCs thrown out. for foreign exchange, we can get back to borrowing from IMF.

      Mr.Swaminathan,

      You had left out the mega corruption case of Arbuthnaut Bank collapse in India in 1905.
      there will be crooks always and the only way to flush out them out is thru real free markets. this financial crisis was created by too much paper money issued by govts, the foolish policy of US govt subsidy to housing loans thru Fannie Mae and Freddie mac, artificial lowering of Fed interest rates to near 0 % during Allan Greenspan years. I have written enough about them here and in my blogs.

      • திரு அதியமான்-

        உங்களின் போக்குவரத்து நெரிசல் குறித்த இடுகையை படித்துவிட்டு அதற்கு பதில் அளிக்குமாறு கேட்டிருந்தீர்கள். படித்துப் பார்த்தேன் உங்கள் மொத்த இடுகையில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது
        1) அந்தக்காலத்தில் டிவிஎஸ், எல்ஜிபி போன்ற தனியார்கள் சிறப்பாக இயக்கவில்லையா?
        2) அரசுத்துறை என்றால் ஊழல் நிறைந்திருக்கும்- அதனாலேயே போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை
        3) சென்னையில் நிறைய மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்
        4) கரூரில் நல்ல லாபமுள்ள தடங்களின் பெர்மிட்டுகள் கள்ளப்பணத்திற்கு விற்கப்படுகிறது
        இவற்றின் காரணமாக தனியார்மயம்தான் வேண்டும்.
        (1) 1972ல் தேசியமயம். அப்போது மக்கள் தொகை என்ன?, இப்போது மக்கள் தொகை என்ன? டிவிஎஸ்-ம் எல்ஜிபி-யும் இயக்கும் போது காலை 5-30 மணிக்கு துவங்கி சர்வீஸ்கள் இரவு 9-00 மணியிலிருந்து 9-30 மணிக்குள் முடிந்து விடும். முதல் பஸ், கடைசி பஸ் என்கிற வரையரையெல்லாம் உண்டு. அன்றைய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி புறநகர் பேருந்து என்றாலும், இரவு 11-00 மணிக்கு மேல் காலை 4-00 மணி வரை இயங்கும் வகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டயம் அனுமதிக்கக் கூடாது. அது பின்னர் தேவைக்கேற்ப மாறிவிட்டது. இன்று அரசுப் பேருந்துகளுக்கு முதல் பஸ் என்கிற நேரமோ அல்லது கடைசி பஸ் என்கிற நேரமோ கிடையாது. அனைத்து மாவட்ட தலைநகரிலிருந்தும் பிற ஊர்களுக்கு 24 மணி நேர சர்வீஸ்.
        (2) அரசுத் துறையில், அதிகாரிகள் மட்டத்தில், அமைச்சர் காரணமாக ஊழல் என்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றால் அதற்கு தனியார் மயம் தீர்வல்ல. மக்கள் எழுச்சியும், விழிப்புணர்ச்சியும் தீர்வை கொண்டுவரும்.
        பெர்மிட்டுகள், லாபமுள்ள தடங்கள் விற்கப்படுகிறது – அது தனியாரின் பெர்மிட் வேறொரு தனியாருக்கு விற்கப்படும். அரசுத் துறை பெர்மிட்டுகள் விற்க முடியாது.

        • போக்குவரத்து துறையில் அரசின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் TVS போன்ற தனியார் நிறுவனங்கள் மக்களை தங்கு தடையின்றி கொள்ளையிட்டிருப்பார்கள்.இது கற்பனை அல்லவென்று மெய்ப்பிக்க பெரிய சிரமம் ஏதும் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை.இப்போது தனியார் இயக்கும் தொலைதூர ”ஆம்னி” பேருந்துகள் வசூலிக்கும் கட்டணத்தையும் அதே தொலைவு பயணத்திற்கு அரசு பேருந்து கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும்.

        • போக்குவரத்து துறையில் மட்டுமல்ல, அன்று கல்வியையும் இன்றுபோல் தனியார்மயமாக்கியிருந்தால் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் அதாளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும். லிபெர்டேரியன் கூட படித்திருக்க முடியாது என்றே கருதுகிறேன். இதெல்லாம் அவருக்குத் தெஇரியாததும், புரியாததும் அல்ல.

      • இன்று வரை இயங்கி வருகிற அனைத்து மாவட்ட மினிபஸ் களும் வாங்கு கின்ற பெர்மிட் பேருந்துகளே இயங்காத கிராம சாலைகள் தடத்தில் இயக்குவதற்காக என்றும், சில கி.மீ. மட்டும் பேருந்து நிலையங்களை இணைப்பதற்காக டவுன் பேருந்து நிலையத்திற்குள் வரலாம் என்ற நிபந்தனையுடன் பெர்மிட் வாங்கிவிட்டு, ஆனால் லாபநோக்கில் முழுமையாக violation of permit condition சட்ட விரோத இயக்கம் மட்டுமே மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் தோறும் வ.போ.அலுவலகங்களில், காவல்நிலையங்களின் இது குறித்த புகார்கள் உள்ளது தெரியுமா திரு அதியமானுக்கு

        • ஆம். நன்றாக தெரியும். இந்த பெர்மிட், ’அனுமதிக்கப்பட்ட’ வழி தடங்கள் என்ற கருத்தாக்கமே ஒழிக்கப்பட வேண்டியவை என்பதே எம் கோட்ப்பாடு. மினி பஸ்கள் 1996இல் அறிமுகப்படுத்தப்படுவதற்க்கு முன்பு இருந்த ‘நிலை’ பற்றி பேசலாமா ? அல்லது மினி பஸ்களே அறிமுகப்படுத்தாமல் அப்படியே தொடர்ந்திருநால் எப்படி இருந்திருக்கும் ?

          கரூர் பகுதிகளில் மட்டும் தான் தனியார் ரூட்கள் கருப்பில் கைமாறுகின்றன என்று நான் சொல்லவில்லை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தான்.

          சரி, ஏன் நமக்குள் வீண் விவாதம். நிலைமை இப்படியே தொடர வேண்டும் என்பதே உங்க நிலைபாடு. சரி தொடரட்டும். நாம் சொந்த வண்டி வைத்திருக்கிறோம். எவன் செத்தா நமகென்ன. யார் கொள்ளை அடித்தா யாருக்கென்ன. status quo தொடரும்.

          தொலைபேசி துறையிலும் இதே லாஜிக்படி பி.எஸ்.என்.எல் மட்டும் இருந்த காலங்களை மீண்டும் கொண்டு வரலாம். அதாவது அனைத்து தனியார் நிறுவனங்களையும் நாட்டுடைமையாக்கி, அதிகாரிகள் வசம் ஒப்படைத்து, முதலாளிகளின் கொள்ளை லாபத்தையும், சுரண்டலையும் ஒழிக்கலாம். 1990களுக்கு முன்பு இருந்தது போல் தனியாரே இல்லாத நிலை மீண்டும் வந்தால் நல்லா இருக்கும் தான். அனைத்து அய்.டி நிறுவனங்களையும் அரசுடைமையாகலாம். நல்ல சேவை, மலிவாக கிடைக்கும். சுரண்டலையும் தடுக்கலாம்.

  22. //தற்போது இருக்கிற சாலை வசதியில் இருக்கிற வாகன எண்ணிக்கையிலேயே பல மணி நேரம் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. மேலும் பீக் அவர் என சொல்லப்படுகிற அலுவலக துவக்க நேரம் மற்றும் முடியும் நேரத்தில் இருக்கும் கூட்டத்தை மட்டும் வைத்து பேருந்து எண்ணிக்கையை முடிவு செய்ய இயலாது.////

    இந்த தனியார் வாகன பெருக்கமே, போதுமான பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாதால் என்பதை பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.

    மதுரைல நீங்க எப்படி பயணிக்கிறீங்க ? டூ வீலரிலா அல்லது பேருந்துகளிலா ?

    சரி, எதுக்கு விதண்டாவாதம். பேருந்துகளில் பயணம் செய்யும் துர்பாக்கியம் எனக்கு இல்லை. சொந்த வண்டி உள்ளது. யார் விழுந்து செத்தா எனக்கென்ன. ஏழைகள் மற்றும் lower middle class தான் பஸ் பற்றாமல் தொங்கிகொண்டு சென்று விழுகின்ற்னர். அதை பர்றி நாம் ஏன் கவலை பட வேண்டும். இங்கு விவாதிப்பவர்கள் யாரும் கவலைபடாத போது. பொழப்ப பார்ப்போம்.

  23. //இன்றைக்கு உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடே முடங்கியிருப்பதற்கு காரணம்
    வளர்ந்த நாடுகள் சொந்தச் சந்தையை மட்டும் ” மூடி வைத்திருப்பதுதானே!”//

    உண்மையான சுதந்திர சந்தை 100 சதம் இன்னும் எங்கும் வரவில்லை. (உண்மை கம்யூனிசம் வரவே இல்லை என்று சொல்வீர்களே, அதே போல் தான்). அமெரிகாவை மட்டும் ஏன் பார்க்கிறீர்கள். ஜெர்மனி பற்றி பேசலாமே. அதன் பொருளாதார கொள்கைகள் மற்றும் நிலை பற்றி. ஃபின்லாந் பற்றி பேசலாமே..

  24. திரு.சுவாமிநாதன்,

    LICஅய் உடனே, தனியார் மயமாக்க சொல்லவில்லை. ஆனால் போட்டிகள் உருவானால் உங்களுக்கு ஏன் வீண் பயம். மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும், எந்த நிறுவன சேவைகளை வாங்குவது என்று. Free to Choose என்னும் நூல் மிக முக்கியமான நூல். தொலைதொடர்பு துறையில் 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் போல. (அதில் தனியார்மயமே இல்லாமல் தொடர்ந்திருதால், இன்று நிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லுங்களேன்).

    தனியார் துறையில் பித்தலாட்டங்கள், fraudகள் எப்போதும் உண்டு. மனிதர்களில் ஒரு குறிப்பிட சதம் அயோக்கியர்கள் என்பதால், இதை எல்லா நாடுகளுலும் நடக்கும் விசியம் தான். ஆனால் அதனால ஏற்படும் விளைவுகளை யார் சுமப்பாத் என்பதுதான் கேள்வி.
    இந்தியன் வங்கி, யு.டி.அய் போன்ற அரசு நிறுவனங்கள் ஊழலினால் திவாலான போது அரசு பல ஆயிரம் கோடிகளை கொட்டி தூக்கி நிறுத்தியது. ஆனால் தனியார் வங்கியான Global Trust Bank திவாலான போது, அதன் பங்குதாரர்கள் அனைவரும் மொத்த முதலீட்டை இழந்தனர். அந்த வங்கி வேறு வங்கியுடன் இணைக்கப்பட்டது. விலையை அளித்தவர்கள் பங்குதார்கள்.

    பொதுதுறையில் ஊழல் பற்றி நான் எழுதிய விரிவான பதிவு இது :

    http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html
    பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி.

  25. லிபர்டேரியன்,
    >>
    “The credit that fueled these risky mortgages was provided by the cheap money policy of the Federal Reserve. Following the 2001 recession, Fed chairman Alan Greenspan slashed the federal funds rate from 6.25 to 1.75 percent.”
    >>
    >>
    The actual causes of our financial troubles were unusual monetary policy moves and novel federal regulatory interventions. These poorly chosen public policies distorted interest rates and asset prices, diverted loanable funds into the wrong investments, and twisted normally robust financial institutions into unsustainable positions.
    >>
    இந்த மாதிரி அரசும், அதன் தவறான பாலிசிகளும் தான் தனியார் மயத்தின் தீய விளைவுகளுக்குக் காரணம் என்று கூறுவது தனியார் மயத்தின் தந்திரங்களில் ஒன்று. அரசு வேறு. தனியார் வேறு என்பது போல் காட்டும் பாவ்லா. உண்மையில் பல சட்டங்களும் பாலிசிக்களும் தனியார்களின் ‘தேவை’ கருதி தான் இயற்றப்படுகின்றன.
    உண்மையில் ‘அரசும்’, ‘கார்ப்பரேட் தனியாரும்’ ஒன்றே தான். தனியார் கார்ப்பரேட்டுகள் ‘மக்களின் காவலன்’ என்கிற முகமூடி அணிய உபயோகப் படுத்தும் எந்திர பொம்மை தான் ‘அரசு’.
    இதை நம்ப உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? நம்ம மன்மோகன் அல்லது உங்க ஒபாமா செல்லும் உலக நாட்டுப் பயணங்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரோடு துணையாகச் செல்வது எல்லாம் கார்ப்பரேட் பெருச்சாளிகளே. இவர்கள் போய் பிரதமர், ஜனாதிபதிகளுடன் கைகுலுக்க அவர்கள் போய் அங்கிருக்கும் காண்ட்ராக்டுகளுடன் கைகுலுக்குவார்கள்.
    சமீபத்தில் இந்தியா வந்த ஒபாமா காட்டுவாசி மக்களுடன் நடனமாடி போஸ் கொடுத்தபோது அவருடன் வந்த கார்ப்பரேட்டுகள் 3 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள காண்ட்ராக்டுகளை இந்தியாவிடமிருந்து அமெரிக்காவில் உள்ள கம்பெனிகளுக்கு நைசாக லவட்டிக் கொண்டார்கள்.
    இரண்டு லட்சத்துக்கும் மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தான் நம் நாட்டின் தனியார் தொழில் மயத்தின் முக்கிய நன்மை. நீங்கள் கையில் 4 செல்போன் வைத்திருப்பது மட்டுமே முன்னேற்றம் என்று நம்பினால் நம்பிக்கொள்ளுங்கள். சோறு கிடைக்க வழி இல்லாமல் திண்டாடுபவனுக்கு செல்போன் கிடைத்து என்ன பயன்?

    • அப்பாடா. யரோ ஒருவராவது நான் பல முறை அளித்த சுட்டிகளில் ஒன்றையாவது படித்த்து புரிந்து கொள்ள முயற்சித்தாரே. நன்றி அம்பேத்தன். மூன்றாவதாக அளித்த சுட்டியையும் முழுசா படிக்கவும். உங்க கேள்விகளுக்கு விடை அதில் உள்ளது.

      அரசும், தனியாரும் ‘ஒன்றாக’ அதாவது செம்புல நீரும், சேரும் ஒன்றாக சேர்ந்தது போல் சேரவே கூடாது என்பது தான் லிபர்ட்டேரியனிச பாணி முதலாளித்துவம். சேர்ந்ததன் விளைவை தான் இன்று அனுபவிக்கிறோம். முழுசா படிக்கவும்.

      • லிபர்ட்டேரியன்,
        அபத்தமாக இருந்த நீங்கள் சொன்ன அந்த மூன்றாவது கட்டுரை சொல்லும் முடிவு மேலும் அபத்தம். அதாவது Fannie Mae, Freddie Mac போன்ற கம்பெனிகளால் வீட்டுக் கடன் சந்தையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து அவற்றை அமெரிக்க அரசு கையகப்படுத்தியிருக்கக் கூடாது. அவர்கள் சாகட்டும் என்று அக்கம்பெனிகளை மூடிவிட்டிருக்க வேண்டும். இது தான் அந்தத் தீர்வு. இதை நம்புமளவுக்கு அப்பாவியா நீங்கள் ? எந்திரம் அதை இயக்கும் சூத்திரதாரியை வெல்ல முடியுமா ?

        அக்கம்பெனிகளை மூடினால் அதில் வேலை செய்யும் சாதாரண சம்பளக்காரர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் ஐயா. அதன் CEO க்களுக்கும் அதில் சுளையாய் பணம் பார்த்தவர்களுக்கும் சிறு கீறல் கூட உண்டாகாதே ஐயா.
        Fannie Mae, Freddie Mac அப்புறம் Sallie Mae இவை எல்லாம் அரசின் கையிலுள்ள மக்கள் பணத்தை மக்களுக்குத் தருவதற்காக என்கிற பெயரில் தனியார் சுருட்ட ஏற்படுத்தப்பட்ட கம்பெனிகள். Fannie Mae 1938லேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதிலிருந்தே இந்தச் சுருட்டல்கள் 1800களிலேயே பிரமாண்டமாக வளர்நது விட்ட தனியார்களுக்காக, இது போன்ற ‘அரசு திட்டங்கள்’ (தனியார்களால்)ரொம்ப ப்ளான் பண்ணி செய்யப்பட்டு வருகிறது என்பதற்கான வெளிப்பாடு.

        ஆரம்பத்தில் கவர்மெண்ட் ஸ்பான்சார்டாக (அதாவது சுருக்கமாக பணம் அரசினுடையது லாபம் தனியாருடையது) இருந்த இந்தக் கம்பெனிகள் பின்பு முழுத் தனியாராக மாறிக்கொண்டன. நன்றாக சுருட்ட வசதியாக அவ்வப்போது சட்டங்கள் வேறு இயற்றப்பட்டன. பணம் சுருட்ட கடைசியாக கண்டுபிடித்த ஐடியா தான் ‘கடன் பத்திரங்களை உறுதிப் பத்திரங்களாக்கும் வேலை'(Converting mortgage documents into securities). அதாவது வீடு வாங்கக் கடன் வாங்குபவர் கண்டிப்பாக மாத வட்டியை கட்டி விடுவார் என்று இவர்களும் Lehman Brothersம் சர்டிபிகேட் கொடுத்து கடன் பத்திரங்களை செக்யூரிட்டிகளாக விற்றார்கள். இதைச் செய்யத்தான் 1970ல் Freedie Macஐ தனியாக ஸ்பெஷல் சட்டம்(Charter) போட்டு உருவாக்கினார்கள்.

        2008ல், எல்லாம் சுருட்டி முடிந்தவுடன் பார்ட்டிகள் எல்லாம் எஸ்கேப். இப்போது சந்தை விழுந்து விட்டது. என்ன செய்யலாம் ? இருக்கவே இருக்கிறது மக்கள் பணம். கூப்பிடு அரசை. உடனே அரசு செனட்டில் கூட்டம் போட்டு உடனே Freddie Mac மற்றும் Fannie Mae ஐ அரசுடைமயாக்கிக் கொண்டது. இனி கொஞ்ச வருஷத்தில் திரும்ப எல்லாம் ஓரளவிற்கு சரியாகப் போனால் மறுபடியும் இவற்றை தனியார் ஆக்கிக் கொள்வார்கள்.

        சரி தனியார்களின் இந்தக் கொள்ளைப் பணமெல்லாம் எங்கே போகிறது?
        ஸ்விட்சர்லாந்தின் வங்கிகளில் பிச்சைக்காரர்கள் நாடு என அழைக்கப்பட்ட இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கள்ளப் பணம் மட்டும் 70,00,000 கோடிகள். இன்னும் முப்பது லட்சம் கோடி சேர்ந்தால் அந்தப் பணத்தை இந்தியாவில் இருக்கும் 100 கோடிப் பேருக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு லட்ச ரூபாய் தரலாம்.

        இந்த லட்சணத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் நாம், நம் இன்சூரன்ஸ் துறையையும் அந்த மகாப் புண்ணியவான்களின் கையில் கொடுப்பது தான் இப்போதைய சரியான முடிவு என்று லிபர்ட்டேரியன் சொல்கிறார்.

        நன்னா இருங்கோ !!

        • Ambethan,

          Your ‘understanding’ of the twin govt sponsored companies is very wrong. our stand is that govt should not have ‘sponsored’ or stood gurantee to ANY loans by anyone. read thru correctly. and more terrible was the effect caused by artifically low interest rates of US Federal reserve bank, which is an ‘anti-market’ policy and which unleashed the ‘mother of all liquidities’.

          these anti-market policies created huge distortions and bubbles which burst, hurting all of us.

        • லிபர்ட்டி ஏதோ சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு இப்படி விரிவாக பதில் தராதீர்கள் அம்பேதன் லூஸ்ல விடுங்க பார்ட்டி வெறும் லிங்க்க மட்டும் தேடி கொடுக்கும் சத்தியமா அதுக்கு இங்கிலீஷ் தெரியாதென்பது கொடுத்த லின்க்லேயே புரியுமே?

  26. வளர்ந்த நாடுகளில் ஊழல் நடக்கவில்லை. அவர்கள் கொள்ளை அடிப்பதற்கு இந்தியா போன்ற வளரும் நாடுகள் இருக்கிறதே. சரி நீங்கள் சொல்வது போலவே பன்னாட்டு கம்பெனிகளுக்கே கொடுத்து விடுவோம் அனைத்தையும் இந்தியாவும் லத்தின் அமெரிக்க நாடுகளை போல் முன்னேறட்டும். என்ன அந்த நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். அந்த மாதிரி போராட்டம் எதுவும் இந்தியாவில் ஏற்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க லிபெர்டரியன் போன்ற பொருளாதார மேதைகள் பார்த்துக்கொள்வார்கள்.

  27. /வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!/

    உள்ளார கம்முனி பிடுங்கி கொள்வான். சொம்ப என்னிடம் கொடு!!!

  28. மேலும் அதில் :

    The commission stated:

    Stalin committed a very grave crime against the Communist party, the socialist state, Soviet people and worldwide revolutionary movement… Together with Stalin, the responsibility for the abuse of law, mass unwarranted repressions and death of many thousands of wholly innocent people also lies on Molotov, Kaganovich, Malenkov….

    However, soon Khrushchev was deposed and the “Thaw” ended, so most victims of the three show-trials were not rehabilitated until Gorbachev’s time.

Leave a Reply to ஹைதர் அலி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க