Wednesday, June 7, 2023
முகப்புஉலகம்அமெரிக்காவாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

-

லகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

“பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி, ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும் கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில் தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக் கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப் பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக் கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..

விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள். நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?

அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும் சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல் மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச் சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ் துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப் பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 சதவீதம் என்பதை 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான் பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க பாக்கறான்.

அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள்.

பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய் வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர் கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத் துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும் இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.

________________________________________

– துரை.சண்முகம்
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. வாரன் பப்பெட் வாரான் ! சொம்ப எடுத்து உள்ளார வை !! | வினவு!…

  விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட்….

 2. தோழர் துறைசன்முகம் அய்யாவின் கடந்த சில வார கவிதைகளும் இந்த பதிவும் அற்ப்புதம். பகடியோடு சேர்த்தே வரக அணிதிரல்வுக்கான அலைப்பாகவும் இதை அதிகம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

 3. “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட்.//

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி ,

  பொணத்திலேயும் பணம் கிடைக்குமா னு பார்ப்பவர்கள்..

  http://technorati.com/politics/article/bankruptcy-in-american-ethics-the-new/

  Bankruptcy in American Ethics: The New World Order

  Read more: http://technorati.com/politics/article/bankruptcy-in-american-ethics-the-new/#ixzz1HacGz4Is

  (Billionaire investor Warren Buffett believes Japan’s devastating earthquake is the kind of extraordinary event that creates a buying opportunity for shares in Japanese companies

  While the world looks on and praises Japan for the calm orderly manner that they navigate through this crisis, and while we praise them for not looting–here we have an American Tycoon describing ways to loot Japan of its resources. How capital?)

  • jmms,

   ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்கறீங்க. ஜப்பானில் இன்று முதலீடு செய்ய பெருவாரியானவர்கள் தயங்குவாங்க. ஜப்பானியர்களின் மீது நம்பிக்கை வைத்து பப்பெட் முதலீடு செய்ய முனைவது மிக நல்ல விசியம் தான். இது ஜப்பான் மீண்டும் தலைதூக்க மிக மிக பயன்படும். இவர் செயலை பார்த்து பலரும் இவரை பின் தொடர்வார்கள். ஜப்பன் நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டால், யாரும் வாங்க முன் வராவிட்டால், அதன் விளைவு அவர்களுக்கு பாதகமாகத்தான் இருக்கும். லாபம் என்பது கெட்டை வார்த்தை அல்ல. பங்கு பரிவர்த்தனை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜப்பானிய பங்குகளை யாருமே வாங்க முன்வரவில்லை என்றால், அவை இன்னும் விலை வீழ்ச்சி அடையும் என்பது அடிப்படை.

   அதுசரி, உங்க சேமிப்புகளை எங்கு முதலீடு செய்வீர்கள் ? ஜப்பனில் செய்ய தயாரா ?

   • முகேஷ் அம்பானி 1000 கோடிகளில் வீடு கட்டுகிறார். ஆனால் 10000 கோடியில் வீடு கட்டும் அளவிற்க்கு பல பத்தாண்டுகளாக பெருஞ்செல்வம் உடைய வாரன் பப்பட் 1958இல் வாங்கிய சிறிய வீட்டில் தான் இன்றும் வாழ்கிறார். பெருசா அலட்டிக்காமல், மிக எளிமையாக, அமைதியாக வாழ்ந்து, தம் சொத்தில் பெரும் பகுதியை கொடையாக அளித்தவர்.

    His 2006 annual salary was about $100,000, which is small compared to senior executive remuneration in comparable companies.[63] In 2007, and 2008, he earned a total compensation of $175,000, which included a base salary of just $100,000.[64][65]

    He lives in the same house in the central Dundee neighborhood of Omaha that he bought in 1958 for $31,500.

    In June 2006, he announced a plan to give away his fortune to charity, with 83% of it going to the Bill & Melinda Gates Foundation.[100]

    He pledged about the equivalent of 10 million Berkshire Hathaway Class B shares to the Bill & Melinda Gates Foundation (worth approximately US$30.7 billion as of 23 June 2006),[101] making it the largest charitable donation in history, and Buffett one of the leaders of philanthro capitalism.

    அவரை பற்றி இப்படி ஒரு கட்டுரை இங்கு.

    • கட்டுரையில் கூறப்பட்டுள்ளவைகளைப் பற்றி விமர்சிக்க முடியாமல் கருணை, பொறுமை என திசைதிருப்புவது ஏனோ!

    • johnny,

     இக்கட்டுரையில் எதை பற்றி பேச வேண்டும் :

     //விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய்,/// இதை பற்றியா ?

     இன்ஸுரன்ஸ் துறையில் அன்னிய முதலீடுகள் 75 சதம் அனுமதித்தால் நல்ல விளைவுகள் தான் நிகழும் என்பது எம் பார்வை. உற்பத்தி துறையில் அனுமத்திதவுடன் ஏற்பட்ட அருமையான மாற்றங்களை ஒப்பிடுக.

     LIC, GIC : United India, Oriental, போன்ற பொதுதுறை நிறுவனங்களில் நடக்கும் ஊழலில் அளவு பற்றி தெரியுமா? claims இல் அரசு வக்கில்கள், போலிஸ், அரசு மருத்துவர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் மற்றும் வக்கில்கள் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை பற்றி முழுசா அறியாதவர் நீர். (பல வக்கில்களிடன் நெருங்கி பழகியிருக்கிறேன், பல விசியங்கள் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் இன்ஸுரன்ஸ் தேசியமயமாக்ப்படுவதற்க்கு முன்பு இல்லை. இவர்கள் ‘கொள்ளை’ அடிப்பது உமக்கு பெருசா படலை. ஆனால் ஒழுங்கா முதலீடு செய்து, நேர்மையா தொழில் செய்தா, அது ‘கூட்டி கொடுப்பது’ என்று எழுதுவீர்கள்.

     இன்சுரஸ், வங்கி துறைகளில் அன்னியர்களை அனுமதித்தால், பெரும் கேடு விளையும் என்பதெல்லாம் hysterical reaction from a bankrupt left. இதே பல்லவியை தான் 50 வருடங்களாக உற்பத்தி துறை பற்றியும் பாடி, நாட்டையே திவாலாக்கிய புண்ணியவான்களாச்சே இவர்கள்.

     இவைகளில் அரசின் கட்டுப்பாடுகள் தேவைதான். எந்த அளவில், என்ன முறையில் என்பதுதான் விவாதிக்க்பட வேண்டிய விசியம்.

    • ஒருத்தன் முன்னேருனாலும் புடிக்காது அவனைப்பாத்து முன்னேறவும் தெரியாது …..நல்ல கொள்கை நல்ல கோட்பாடு …… நீங்களும் உருப்பட மாட்டீங்க மத்தவனையும் உருப்பட விட மாட்டீங்க … பாத்து கம்முநிச்டுகளா எங்கையாவது புர்ர்ச்சி பண்ணி ஆட்சிய புடிச்சற போறீங்க!!!!!!!!! இந்தியா வெளங்கிடும்…

    • வினவு சார்ந்துள்ள லெனினிய கோட்பாடுகள் பொய்த்து போன கொள்கைகளே! எங்கு தனி மனித சுரண்டல் அத்து மீறி நடக்கிறதோ அங்கு லெனினிய கோட்பாடுகள் சரியானது போல தோற்றமளிக்கும். மற்றபடி தனிமனித முயற்சி மூலம் நியாயமான லாபம் பார்க்கும் சமுதாயங்களில் லெனினிய கோட்பாடுகள் மிகவும் அருவருக்க தக்கவையே!. வெள்ளை தோல் அனைத்தும் விபச்சாரிகளின் தோல் என்னும் ரீதியில் கட்டுரை அமைத்துள்ளார் கட்டுரைஆசிரியர்.

    • இவர்களுக்கு லாபம், வியாபாரம், தனி மனித முன்னேற்றம் எல்லாமே கேட்ட வார்த்தைகள்.

   • கடந்த வருடம் சா்வதேச பொருளாதார நெருக்கடி நோ்ந்த போது தினமணியில் தினமும் ஒருவா் வீதம் “என்ன பாதிப்பு, என்ன தீா்வு” என்ற தலைப்பில் எழுதி வந்தனர். அதில் நானும் ஒரு நாள் எழுதி எனது கருத்துக்கள் பின்வருமாறு தினமணியில் பிரசுரம் ஆகியது.

    மற்ற தேசங்களை தனது முதலாளித்துவ ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட அயராது செயல்படும் அமெரிக்காவிற்கு ஹார்ட் அட்டாக் வந்ததினால் உலக நாடுகள் பலவற்றுக்கு வேர்க்க தொடங்கியுள்ளது. முதலில் இரண்டு வீட்டு வசதி கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதனை தொடர்ந்து அங்கேயே சில பிரபல வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. விளைவு இன்று பல நாடுகளில் பங்கு வர்த்தகம் சரிந்து, சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    சமீப ஆண்டுகளில் பணக்காரர்கள் மட்டுமே லாபமோ அல்லது நட்டமோ காணும் வர்த்தகம் பங்கு வர்த்தகம் என்பது மாறி நடுத்தர வர்க்கத்தினரையும் ஊடக விளம்பரங்கள் ஈர்த்து விட்டன. ஆன்லைன் வர்த்தகம், தினசரி வர்த்தகம் என்கிற ஆசை வார்த்தைகளினால் கொஞ்சம் தொகையைக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் பணம் பண்ண முடியும் என்ற கனவில் சேமிப்பு என்பது முற்றிலும் குறைந்து விட்டது.
    பெரிய நிறுவனங்கள் மூலதன நிதி திரட்டலுக்கான பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என்பது அத்தியாவசிய பொருள்களுக்கும் தொற்றிக் கொண்டதால் விலைவாசி உயா்வு, பணவீக்கம் போன்ற தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற போக்கின் விளைவு இது. தனியார் மயத்தினால் ஏற்கனவே அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென்கொரியா ஆகிய நாடுகள் திவாலாகியுள்ளன.
    ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகத்தில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம் வரும் என்ற மாயைக்கு மயங்குகிறவர்கள் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் உழைப்பது யார்? எல்லோரும் வட்டியில் வாழ வேண்டுமென்னால் வட்டி கட்டுவது யார்? என சிந்திக்க மறந்ததினால் இந்த நெருக்கடி மக்களிடமும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச சிக்கலில் இருந்து மீண்டு வர, காப்பீடு, வங்கிகள், மின்சாரம், போக்குவரத்து போன்றவை முழுமையாக தேசியமயமாக்கப்படவேண்டும். அஞ்சலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானைவை என்பதை உணர்த்தி சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். விவசாய விளை பொருட்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் ஊக வணிகம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
    பங்குச் சந்தை சரிவின் மீது மிகுந்த கவனம் செலுத்தும் நிதி அமைச்சகம், உள்ளாட்டு தொழில் துறையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் தனது கவனத்தை செலுத்தினால் இந்த நெருக்கடி நம்மை பாதிக்காமல் தப்பிக்கலாம்.

 4. செருப்பாலடிக்கவோ, குறைந்த பட்சம் காரித் துப்பாவோ, ஆளை அடையாளம் காண அந்த பப்பெட்டின் மூஞ்சியை வெளியிட்டிருக்கலாம்.

 5. மிக மேலோட்டமான, கீழ்தரமான கட்டுரை. அவர் தன் கொள்கை பற்றி சொன்னது இது :

  http://en.wikipedia.org/wiki/Warren_Buffett#Philanthropy

  The following quotation from 1988 highlights Warren Buffett’s thoughts on his wealth and why he long planned to re-allocate it:

  “ I don’t have a problem with guilt about money. The way I see it is that my money represents an enormous number of claim checks on society. It’s like I have these little pieces of paper that I can turn into consumption. If I wanted to, I could hire 10,000 people to do nothing but paint my picture every day for the rest of my life. And the GDP would go up. But the utility of the product would be zilch, and I would be keeping those 10,000 people from doing AIDS research, or teaching, or nursing. I don’t do that though. I don’t use very many of those claim checks. There’s nothing material I want very much. And I’m going to give virtually all of those claim checks to charity when my wife and I die. (Lowe 1997:165–166) ”

  From a NY Times article: “I don’t believe in dynastic wealth”, Warren Buffett said, calling those who grow up in wealthy circumstances “members of the lucky sperm club”.[96] Buffett has written several times of his belief that, in a market economy, the rich earn outsized rewards for their talents:

  “ A market economy creates some lopsided payoffs to participants. The right endowment of vocal chords, anatomical structure, physical strength, or mental powers can produce enormous piles of claim checks (stocks, bonds, and other forms of capital) on future national output. Proper selection of ancestors similarly can result in lifetime supplies of such tickets upon birth. If zero real investment returns diverted a bit greater portion of the national output from such stockholders to equally worthy and hardworking citizens lacking jackpot-producing talents, it would seem unlikely to pose such an insult to an equitable world as to risk Divine Intervention.[97] ”

  His children will not inherit a significant proportion of his wealth. These actions are consistent with statements he has made in the past indicating his opposition to the transfer of great fortunes from one generation to the next.[98] Buffett once commented, “I want to give my kids just enough so that they would feel that they could do anything, but not so much that they would feel like doing nothing”.[99]

  In June 2006, he announced a plan to give away his fortune to charity, with 83% of it going to the Bill & Melinda Gates Foundation.[100] He pledged about the equivalent of 10 million Berkshire Hathaway Class B shares to the Bill & Melinda Gates Foundation (worth approximately US$30.7 billion as of 23 June 2006),[101] making it the largest charitable donation in history, and Buffett one of the leaders of philanthrocapitalism.[102] The foundation will receive 5% of the total donation on an annualised basis each July, beginning in 2006. (Significantly, however, the pledge is conditional upon the foundation’s giving away each year, beginning in 2009, an amount that is at least equal to the value of the entire previous year’s gift from Buffett, in addition to 5% of the foundation’s net assets.) Buffett also will join the board of directors of the Gates Foundation, although he does not plan to be actively involved in the foundation’s investments.[103][104]

  • பாஸ் அவனை பற்றி அவனே சொன்னது சூப்பரா இருக்கு பாஸ் அவனை நம்பி இந்திய கவர்ன்மென்டையே கொடுத்துடலாம் என்ன சொல்றீங்க? எந்த நாயை பற்றியும் அவன் நல்லவனான்னு இன்டர்நெட்டில் ஒரு தட்டு தட்டினால் ஆயிரம் தளங்கள் இருக்கும் அதை லிங்க் கொடுப்பதன் மூலம் என்ன சாதனை செய்கிறார் இந்த liberty?இந்த கொசுதொல்லையை நிரந்தரமாக நீக்க வழியே இல்லையா?

   • arutperu,

    ஒரு தனிமனிதன், பாடுபட்டு சம்பாத்த பெரும் செல்வத்தை, ஏழைகளின் நலனுக்கா தானம் செய்ய முன்வருகிறார். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இதுவரை இல்லை. அவர் ‘சுரண்டி’ சம்பாத்தார் என்பது உங்கள் கோணம். இல்லை என்பதே எம் பார்வை.

    அவரின் கொடையால பல லச்சம் மக்கள் பயனடைகிறார்கள். உம்மால ஒருவருக்காவது உதவ முடிந்ததா ? பல பணக்காரகள் இது போல் செய்வதில்லை. கவலைப்படுவதில்லை. இவரும், பில் கேட்ஸ் போன்றவர்களிம் பெரும் கொடை அளிப்பதை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை, இப்படி கீழ்தரமாக இகழ்வது கேவலமான செயல்.

    அவரின் கொடைதன்மை, எளிமை மற்றும் மனிதனேயத்திற்காகத்தான் அவர் மிக மதிக்க்பபடுகிறார். அதெல்லாம் உம்மை போன்ற வீணர்களுக்கு புரியாது. சூரியனை பார்த்து நாய் குலைத்த கதை தான் இங்கு. போய் புரட்சி பன்னுங்கடே. உருப்படியா, produtiveஆ ஒரு காரியத்தை கூட செய்ய துப்பிலாத நீர், பெருசா, இழி சொற்களை சர்வ சாதாரணமாக பேச வந்திட்டீர்.

    மனிதனேயம் பலருக்கும் உண்டுதான். உம்மை போன்ற வீணர்களுடன் பேசுவதே வேஸ்ட்…

    • பப்பெட் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள், Libertarian! என்னுடைய ஹீரோ பப்பெட் தான்! இந்த கட்டுரை, அதீத பயத்தின் விளைவாக (Paranoid) எழுதப்பட்டுள்ளது. அவரை பற்றி கொஞ்சம் இணையத்தில் அலைந்து தெரிந்து கொண்டால் இப்படி இகழ மாட்டார்கள். நம் ஊரில் இது போன்ற ஒரே ஒருவரை காட்ட முடியுமா? வாதத்திற்கு மருந்து உண்டு. விதண்டா வாதத்திற்கு இல்லை!

    • விடுங்க libertarian..

     நமது மக்களுக்கு எவனாவது நல்லது செய்ய வந்தான்னா புடிக்காது.. கொடிக்கணக்குல கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்குற இந்த அரசியல்வாதிகளுக்குக் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் கடைசி குடிமகன் இருக்கும்வரை இந்தியத் தலை எழுத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. வாரன் பற்றிய புத்தகத்தை வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள்.. சும்மா மேலோட்டமாகப் படித்து விட்டு, கேவலமான இழி சொற்களில் திட்டும் முன்பு, நான் என்ன செய்தோம் என்று ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்.. அவர் வைத்திற்கும் சொத்து மதிப்பிற்கும், அவர் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.. இதைச் சொன்னால் புரியப் போவதும் இல்லை.. சும்மா சண்டைக்குன்னு நிக்கறவங்க கிட்ட ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா மக்களே தயவு செஞ்சு, அவர் சொல்ற திட்டங்களால இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள்னு கொஞ்சம் சிந்தியுங்க..

     அப்புறம் இழிசொற்களால் திட்டுபவரைக் கூட அமைதியான நாகரிகமான வார்த்தைகளில் புரியும்படி பதில் சொல்வதில் இருந்து நீங்கள் பண்பட்டவர் என்பது புரிகிறது.. நன்றி..

  • “The spirit is willing but the flesh is weak”

   அப்படின்ன என்னன்னு அதியமான் அண்ணன் கிட்ட கேட்டிங்கீன்னா,” சாராயம் நல்லயிருக்கு ஆன கறி தான் டேஸ்ட் கம்மி” ம்பாரு..இப்படி சகல விஷயங்களையும் தப்பா புரிஞ்சி வச்சிகிட்டு. சொம்ப தூக்கிட்டு வந்து “நான் கேக்குர‌ கேள்விக்கு யாரும் பதில் சொல்லல”.. “நான் கேக்குர கேள்விக்கு யாரும் பதில் சொல்லல”னு வீராப்பு வேற. ஆனால் இந்த மாதிரி காமடி பீஸ்கள் இல்லைன்ன எப்படி?

   டி ராஜெந்தர், சுப்‌ரமணிய சாமி வரிசையில பதிவுலக டி ஆர் தான் அண்ண அதியமான் கே ஆர்…..

   இனி அதியமானை எல்லாரும் கே ஆர் என தான் அழைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

 6. //நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?//

  இடது வலது மட்டுமல்ல தெற்கு மேற்கையும் சுற்றி நின்று போராடுவோம்

  //வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்//

  இவிய்ங்கள மெதல்ல செருப்ப கழட்டி அடிக்கனும்

  //தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது.//

  இப்படி துடைத்துக் கொள்வது அசிங்கம்

 7. புணர்நிர்மானத்திற்கு இரக்கத்துடன் 1000கோடி முதலீடு. 5000கோடி இலாப உத்திரவாதத்துடன்.
  நாட்டை மீட்க ஜப்பானியத் தொழிலாளி இனி 24மணி நேரமும் தியாகம் செய்யவேண்டும் என மனிதாபிமான லிபர்டேரியன்களின் கோரிக்கை.
  வழமையாக தொழிலாளி நாட்டின் நலன் என்ற பெயரில் தன் தலையில் ஜப்பானை சுமக்க பட்பெட்களும் ஒட்டுண்ணிகளும் தங்களின் தலைமுறை தலைமுறைக்கும் கொழுக்க உத்திரவாதம்.

 8. பொது துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன… இப்போது அதன் பெரும் பங்கை வாரனுக்கு தாரை வார்த்து கொடுத்த அதில் வரும் லாபத்தில் வாரன் விருப்பதிற்கு மனித நேய செலவு செய்ய வேண்டுமாம்…

  அறிவு கெட்ட முண்டங்களே… உங்களின் ஆட்சியாளர்கள் மடையன் மன்மோகன், பாசிச சோனியா-ராகுல், பிரனாப், பசிதம்பரம், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், தயாநிதி போன்ற அத்துனை பேருக்கும்ம் மனிதாபிமானம் இல்லை என்பதால்… இங்கிருக்கும் உழைக்கும் மக்களின் பணத்தை அமெரிக்க வாரன் மனிதாபிமான செலவு செய்ய வேண்டும் என்கிறீர்களே… இப்படி பேசும் அரைகுறைகளின் மூளையில்… அமிலத்திற்கு பதில்… ஏகாதிபத்திய சாக்கடைதான் ஓடுகிறதோ?

  • அறிவு கெட்ட முண்ட்டம் யார் என்று நீரே முழங்க வேண்டாமே ? லூசுங்க தான் இப்படி பேசும் என்பது எம் அனுபவம் !! :)))

   அந்நிய முதலீடுகள் 1991இல் பல துறைகளில் ‘தாரளமாக’ அனுமதிக்கப்ட்ட போதும், இதே போல் தான் லூசுகள் அருமையான சொல்லாடல்களை பிரோயோகித்தன. அன்று அவர்களின் பேச்சை கேட்டிருந்தால், 1992இல் சோவியத் ரஸ்ஸியா திவாலாகி உடைந்ததை போல், இந்தியாவும் திவாலாகி, அழிந்து, சிதறியிருக்கும். இந்த உரையாடல் இங்கு சாத்தியமாகாமல், நாம் இன்றைய வட கொரிய மக்களை போல் பிச்சை எடுத்துக்கொண்டிருப்போம்.

   இன்ஸுரன்ஸ் துறையில் ஏற்கெனவே அன்னிய முதலீடு உள்ளதுதான். பொதுதுறைகளில் செயல்பாடுகளை பெரிடா அவற்றால பாதிக்க முடியவில்லை. 100 % அனுமதித்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது. இன்றும் வங்கி துறையில் 75 % க்கு மேல் அரசு துறைதான்.

   எது எப்படியே, உம்மை போன்ற அன்பர்கள் இருக்கும் வரை, வக்கில்கள், அரசு மருத்துவர்கள், போலிஸ், நீதிபதிகள், பொதுதுறை இன்ஸ்சுரன்ஸ் அதிகாரிகளின் கூட்டு கொள்ளை பிரச்சனை இல்லாமல் தொடரும். உம்மை போன்ற ‘இடதுசாரிகளை’ கேடையமாக பயண்படுத்தி அவுக சுகமா கொள்ளையடிகிறாக. தொகை அளவு பற்றி தெரிந்தால் மயக்கம்ப்போட்டு விடுவீக.

   எனக்கு ஒரு யோசனை காம்ரேட் : சும்மா இங்கு முதலாளித்துவம் பற்றி பேசி போரட்டிக்கிறது. இது வரை வாழ்க்கையில் நேர்மையாக முயன்று பெரிசா சம்பாதித்து செட்டிலாகவும் முடியல. ஒரு GIC வக்கில் டீல் பேச அழைக்கிறார். நல்ல சான்ஸ். அவருடன் ‘கூட்டு’ சேர்ந்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று சபலம் தோன்றுகிறது. பார்ட்டன்ர்ஷிப்புக்கு ஒரு கை குறைகிறது. வர்ரீகலா. உம்மை போன்ற ’அக்கினகள்’ தான் தேவை. நல்ல front அமைக்க சான்ஸ். பல தோழர்களிடமும் கேன்வாஸ் செய்து, ’கேஸ்’ பிடித்து, குபேரர்களாகளாம். என்ன சொல்றீக ? உருப்பட வழி பார்ப்போம்.

   ’புரட்சி ஓங்குக’ என்றும் குரல் கொடுத்தக்கலாம், அப்பப்ப. ஒரு கவர்தான். ரொம்ப சுலபம்.

   • //நாம் இன்றைய வட கொரிய மக்களை போல் பிச்சை எடுத்துக்கொண்டிருப்போம்//

    நீங்களும் நானும் பிச்சை எடுக்கவில்லை என்பதற்காக இந்தியாவில் பிச்சைக்காரர்களே இல்லை என்று அர்த்தமில்லை. இந்தியாவில்தான் பிச்சைக்காரர்கள் அதிகம்.

  • பொதுதுறை வாகன விபத்து காப்பீட்டில் பல காலமாக நடக்கும் ஒரு வகை ஊழல் இது :

   எனக்கு தெரிந்த ‘பெரிய’ வக்கில் ஒருவர், பினாமி பெயரில் லாரி வைத்திருக்கிறார். (ஆறு மாதத்திற்க்கு ஒருமுறை இதை வித்துவிடுவார்). அந்த லாரி ‘விபத்துக்குள்ளாகும்’ ; ‘அடிப்பட்டவர்’ , அவரின் வழக்கறிஞர், அரசு காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர், அரசு மருத்துவர், போலிஸ்கார்கள், நீதிபதி, மற்றும் இதர அரசு அலுவலர்கள் : எல்லோரும் ஒரே அணி. கேஸை ‘வேறு’ மாதிரி முடித்து, இழப்பீடு பெற்று, பிரித்து கொள்வார்கள். அரசு நிறுவந்த்தை ‘சுரண்டுகிறார்கள்’ ; சில காலம் முன்பு நாமக்கல் பகுதிகளில் இதில் ஒரு பகுதியை மட்டும் ‘கண்டுபிடித்து’ சி.பி.அய் கேஸ் போட்டது. அவர்களும் ‘பங்கு’ வாங்கிக்கிட்டாங்க போல. அதுக்கப்பறம் ஒரு தகவலும் இல்ல.

   அரசாங்க காப்பீட்டு நிறுவன வக்கில்கள் தன் கேஸ்களில் ‘தோற்றல்’ யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. இழப்பு பொது நிறுவனத்திற்க்கு தானே. யாருக்கி கவலை. அதுதான் பொது சொத்தாச்சே. ஆனால் ICICI Lombard போன்ற தனியார் வாகன விபத்து காப்பீட்டு நிறுவனத்தில் இப்படி பகல் கொள்ளை சாத்தியமில்லை. ஒழுங்கீனம் என்றால் முதலில் வேலை போய்விடும். பிறகு கிரிமினல் கேஸை சந்திக்க வேண்டி வரும்.

   அரசாங்கம் தொழில் செய்தால், இப்படி தான் சீரழியும். LIC was the only monopoly for decades in life insurance. and GICs in other type of insurances. The level of penetration of insurance in India is terribly low and only a small percentage of total population is covered by any kind of insurance. Only reason : govt monopoly until recently. it can be compared to the
   level of service of BSNL when it was similarly the only service provider until the 90s. tele density was abysmally low. compare and judge.

   • libert,
    //கிரிமினல் கேஸை சந்திக்க வேண்டி வரும்//

    அந்தக் கேசையும் தனியார்தான் விசாரிக்க வேண்டுமா! அல்லது அரசா? ஏன் கேக்குறேன்னா நீதிபதிங்க அத்தனை பேரும் ஊழல்வாதிகளா இருக்குறானுவலே. பேசாம நீதித் துறையையும் தனியார்ட்ட தூக்கிக் கொடுத்துறலாம்.

  • //பொது துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன//

   ரயில்வேயில் நடக்கும் மெகா ஊழல் தனிக்கதை. இந்திய அரசுகள் ராணுவத்திற்க்கும், இதர வெட்டி இலவசங்களுக்கும் வீணாக்கும் தொகைகளை ரயில்வேயில் போட்டாலே more than enough. and no need for LIC and GIC money.

   சரி, தெற்க்கு ரயில்வேயில், SRMU என்று ஒரு பெரிய, பலம் வாய்ந்த தொழிற்சங்கம் உள்ளது. தோழர் கண்ணையா அதன் முக்கிய தலைவர். 25 வருடங்களாக. ஒரு காலத்தில், நேர்மை, அர்பணிப்பு மிகுந்த கம்யூனிஸ்டுகளால் கட்டி எழுப்பப்பட்ட சங்கம் இது. இன்று ஊழலின் ஊற்றுகண் இது. அதன் தலைவர்கள் இன்று சுமார் 300 கோடிகள் ‘சம்பாதித்து’ விட்டனர். விசாரித்து பாரும். அதன் உறுப்பினர்கள் பெரும் பாலானோர் என்ன முறையில் ‘வேலை’ செய்கிறார்கள், அவர்களின் அடிப்படை நேர்மை எந்த அளவு உள்ளது என்றும் விசாரித்து பாரும். இவர்களை எந்த கொம்பனாலும், ஒன்றும் கேட்க முடியாது. எந்த ரயில்வே அமைச்சர், அதிகாரி, போலிஸ் யாரும் இவர்களை கண்டுக்க மாட்டாக, எதுக்கு வம்பு என்று. மேற்படி அதிகாரிகள், அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளை தனிக்கதை. ரயில்வேயில் ஒரு ஆறு மாதம் வேலை செய்து பார்க்கவும். அப்ப தான் புரியும்.

 9. Warren buffet is a nice person. It is very bad to write something bad about someone without knowing anything about him. he has not earned single penny in bad way like our politicians. he is a real philanthrapist. so please remove this worst article. Thanks.

 10. Buffet இங்கே வந்த நோக்கம் – இங்கு உள்ள பெரு முதலாளிகளை தங்கள் சம்பாதித்த செல்வதை மக்களுக்கு செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்தவே. IT company மற்றும் சில பெரும் companyகளின் முதலாளிகள் தங்கள் சொந்த charity வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் பெயரில் பெரும் சொத்துக்கள் சேர்த்து ஒன்றுக்கும் உதவாத தன்மை உள்ளது. அதை மாற்றவே Buffet முயன்றார். ஆனால் very poor response from our corporate lords.
  Japanல் invest செய்ய சொன்னால் என்ன தவறு? ஏற்கனவே பலர் தங்கள் invest செய்ததை exit பண்ணிவிட்டனர். இப்போது invest செய்தால் அவர்களுக்கு நலமே.
  ஜப்பானியர்கள் மன வலிமையோடு இருக்கிறார்கள், அது, இது எல்லாம் சரி – உணர்ச்சிபூர்வமாக இருந்தால் போதுமா? பூவாவிற்கு என்ன வழி? கொஞ்சம் மண்டையும் வேண்டும்.

 11. திருவாளர் libertarian அவர்களே பொதுத்துறையில் ஊழல் நடப்பது உண்மை தான். அதற்கு தீர்வு ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தான். அதை விட்டு விட்டு தனியாருக்கு தாரை வார்ப்பது அல்ல. ஏற்கனவே போபாலில் விஷ வாயு தாக்கிய குற்றத்திற்கு அமெரிக்காவின் ஆண்டர்சனை தண்டிக்க துப்பு கெட்ட இந்திய அரசாங்கம் இப்பொழுது வாரன் பப்பட்டிற்கு பொது துறையை தாரை வார்க்க சொல்கிறீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதை எதிர்த்தால், நீங்கள் உள்ளூர் அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஊழல் என்பதை தனியாக ஒழித்து விட முடியாது சகோதரரே, மேலும் பொது துரையின் பங்குகளை விற்கும் போதே நிறைய முறைகேடுகள் நடக்கிறதே, அதை பற்றி என்ன சொல்வீர்கள்? ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது இவை எல்லாம் தவிர்க்க முடியாது என்று சொல்வீர்களா?

  • sarvan,

   இதற்க்கு பல முறை பதில் சொல்லி அலுத்துவிட்டது. ‘தாரை வார்ப்பது’ போன்ற சொற்க்களின் தாக்கம் தான் உங்களுக்கு. ஏற்கெனவே பங்கு சந்தை, இந்திய தொழில்துறை இவற்றில் அன்னிய முதலீடு 1991க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட போதும், இதே சொல்லாடல் பெரும் உணர்ச்சிய (உணர்ச்சியை மட்டும் தான், அறிவை அல்ல) தூண்டியது. எதையும் தாரை வார்க்கவில்லை. 1991 திவால் நிலை பற்றி எமது பதிவுக்கு பதில் முதலில் சொல்லுங்கள். பிறகு இதை பற்றி பேசலாம்.

   பொதுதுறை ஊழலை கடுமையாக ‘தண்டித்து’ கட்டுப்படுத்தலாம் என்பது வெறும் பகற்கனவு. இப்படியே ’பேசிக்கிட்டே’ இருக்க வேண்டியதுதான். தனியார் போட்டிகள் (தனியார்வசம் என்பதை விட இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய சொல் : போட்டிகள்) உருவானவுடன் தான் பி.எஸ்.என்.எல் லைன்மேன்கள் மற்றும் அலுவலர்களின் லஞ்சம் முற்றாக ஒழிந்தது. இப்ப புது போன் கொடுக்க யாரும் லஞ்சம் கேட்பதில்லை. முடியாத நிலை. ஒப்பிடுக.

   சரி, இதையே தொடர்ந்து இங்கு ‘விவாதிப்பது’ அலுப்பை தான் தருகிறது. எல்லாத்தையும் நிறுத்திவிட்டு, பேசாம் ’அந்த’ பொதுத்துறை அதிகாரியுடன், அந்த ‘டீலை’ பேசி செட்டிலாகிவிடலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். உங்களை போன்றவர்களில்
   தனியார்மய ’எதிர்ப்பு’ மற்றும் போராட்டங்கள், அவர்களை போன்ற ’தொழிலாளர் தோழர்களை’ கடைசி வரை பாதுக்கும் என்பது தெளிவு. அவர்களோடு கூட்டு சேர்ந்து ‘பிழைப்புவாதியாக’ மாறுவதுதான் விவேகம். ஏன் இங்க வீண் வாக்குவதம் செய்து, சண்டை போட்டு அலுக்க வேண்டும்….

   • ரிலையன்ஸ் முதல் வீடியோகான் வரையிலும் ரீசார்ஜ் செய்த ந்மது பணத்தை சிறுகசிறுக லபக்குவதைப் பற்றியும் கூறுங்களேன்.

   • BSNL பற்றிய உங்களின் கருத்து முற்றிலும் உண்மை.. இப்ப என்ன சொன்னாலும் ஓடி ஓடி வந்து சர்வீஸ் பண்றான்.. முன்னெல்லாம் ஏதாவது கம்ப்ளைண்டுன்னு சொல்லி ஆபீஸ்க்கு போனா என்னவோ அவன் காச நாம வாங்குன மாறி பேசுவான்.. இப்ப கூட அந்த நிலை நிலவுகிறது.. முற்றிலும் தனியார் மயமாக்கல் என்று எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்..

    ஒரு அரசால் ஒரு துறையை முற்றிலும் கண்காணிக்க முடியாத அல்லது வக்கில்லாத நிலையில் எதற்க்காக பொதுத்துறை என்று போர்டு மாட்டிக்கணும்..?? உலகம் முன்னேறும் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டாமா..?? எல்லாருமே லாபப் பெருச்சாளிகள் தான்.. ஆனால் பொதுத் துறையாக மட்டும் இருந்தால் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்.. போட்டி வேண்டும்..

    நீங்கள் சொன்னது சரியே..

 12. // ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல //
  // விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய் //
  // ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… //

  இந்த மொழி நடையும், இதில் வெளிப்படும் ஆணாதிக்க, பிற்போக்குக் கண்ணோட்டமும், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேச்சு கேட்பது போல இருக்கிறது. மான உணர்ச்சி என்பது ‘பொண்டாட்டியிலிருந்து தான்’ துவங்க வேண்டுமென்பதில்லை. இத்தகைய உரைநடை ‘புதிய கலாச்சாரம்’ அல்ல. தோழர்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

  • போராட்டம், ஆணாதிக்க கண்ணோட்டத்தை விழிப்புடன் எழுந்து சுட்டிக் காட்டுவது என்ற தங்களின் பொறுப்புணர்ச்சியை வரவேற்கும் அதேவேளை, கட்டுரையாளன் என்ற முறையில் சில விசயங்களை சொல்ல வேண்டியுள்ளது.

   தாங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு வரிகளும் எழுதியவரின் ஆணாதிக்க பிற்போக்கு கண்ணோட்டம் என்ற வகையில் தோதாக வரிகளைப் பயன்படுத்துவது விசமமாகப்படுகிறது. உதாரணத்திற்கு ஜெயலலிதாவைக் குறிப்பிட்ட பாடல் உழைக்கும் வர்க்கமாக வேடமிட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு இளநீர் விற்பது போல நடிப்பதை அம்பலப்படுத்தும் வரிகள் அவை. ஜெயலலிதாவும் ஒரு பெண் என்பதால் உழைக்கம் வர்க்கமாக நடிக்கும் அந்த ஆளும் வர்க்கப் பேர்வழியை அம்பலப்படுத்தாமல் இருக்க முடியாது. அதைப்போல வாரன் பப்பெட்டும் கஷ்டப்பட்டு வந்தவன் போல காட்டுவதற்காகத்தான் ஜெயலலிதாவின் பாடல்வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வெற்றி கொண்டான் வார்த்தையிலேயே வேறு கோணத்தில் திரும்பி நிற்பதற்கு கட்டுரை பொறுப்பல்ல.

   அதுபோலத்தான் கந்துவட்டி தராவிடில் உன் பெண்ணைக் கொடு என்று தூக்கிச் செல்லும் கொடுமையும் சமுதாயத்தில் நிகழ்கிறது. எல்லா ஆதிக்கமும் கடைசியிலும் கடைசியிலுமாய் பெண்கள் மேல் கையை வைக்கும் தீவிரத்தை அன்றாடம் காணும் சமூகத்தின் நடப்பிலிருந்து உணர்த்தவே கீழ்க்கண்ட வரிகளும் கையாளப்பட்டுள்ளது. சமூகத்தின் நடத்தையிலிருந்து ஒன்றை உணர வைப்பதாலேயே அவ்வாறு உணர்த்துவதை ஆணாதிக்க கண்ணோட்டம் என்று முத்திரை குத்துவது தவறான கண்ணோட்டமாகவே படுகிறது.

   மேலும் மான உணர்ச்சி, பொண்டாட்டியிலிருந்துதான் துவங்க வேண்டும் என்றோ, இதுதான் புதிய கலாச்சாரம் என்றோ அறுதியிடுவது என் நோக்கமல்ல, அதை முன்மொழியும் தங்களின் கண்டுபிடிப்பு. சிறிது மாதங்களுக்கு முன்பு லீனா மணிமேகலையின் கவிதையைக் கண்டிக்க தாங்கள் கையாண்ட மொழிநடை என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதோ அதேபோல ஆதிக்கத்தின் தீவிரத்தை சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்வதற்காகவே கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எதார்த்த மனிதர்களுக்கு புரியக்கூடியதுதான்.

   – துரை.சண்முகம்

 13. //அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.//

  வச்சானையா வேட்டு
  பள்ளிக் கூடத்துல!
  அவாளப் பத்தி இவாள்
  வாயத் தொறக்கலே!
  ஊரையெல்லாம்
  காறித்துப்பியே
  காஞ்சி போச்சோ!

  http://www.rediff.com/news/report/maoists-blast-middle-school-mobile-tower-in-bihar/20110316.htm

  http://www.hindu.com/2011/03/26/stories/2011032657380100.htm

 14. வாரன் பஃபெட் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஒரு கட்டுரையைப் படித்து இந்தக் கருத்தை வெளியிட்டு உள்ளீர்கள்..

  உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவன் உங்களைத் தவறாகச் சித்தரித்து ஒரு கட்டுரை எழுதினால் அதை வேறொருவர் மேலோட்டமாகப் படித்து விட்டு இது போன்று ஒரு பின்னூட்டம் போட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..??

  வாறன் பஃபெட் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன்.. ஆனால் எளிமையாக வாழ்கிறார்.. நம்மில் எத்தனை பேர் அப்படி வாழ்கிறோம்…??

  என்னைப் பொருத்தவரை, நமது உள்ளூர்க் கம்பெனிகள் இன்சூரன்ஸ் துறையில் போடும் ஆட்டங்களும், சுரண்டும் செல்வங்களும் ஏராளம்.. இதற்கு அரசியல்வாதிகளும் உடந்தை. பன்னாட்டு முதலீடுகளை ஆதரிப்பதன் மூலம் இது குறைய வாய்ப்புள்ளது.. மேலும் தரமும் வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளவுக்கு உயரும் என்பது என் கருத்து.

  இங்கே ஜெர்மனியில் உடம்புக்கு என்ன என்றாலும், எங்கேயாவது விழுந்து அடிபட்டு விட்டாலும் கூட, சிறு சிறு சில்லறை விலை மருந்துகளைத் தவிர வேறு எதற்கும் பர்சை வெளியில் எடுப்பதே இல்லை. அவற்றை அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன.. நமது ஊரின் இன்சூரன்ஸ் துறை ஊழல் மற்றும் ஏமாற்றும் கொள்ளைக் கும்பலாக இருக்கின்றது. என்ன நடந்தாலும் உங்களால் முழு இழப்பீடை பெற முடியாது..

  இருபுறமும் அலசி ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

 15. நான் எதார்த்த மனிதனாக இல்லாததற்கு வருந்துகிறேன் தோழர் துரை.சண்முகம்.

  முதல் விசயம், லீனா மணிமேகலையின் கவிதைக்கான எதிர்வினை என்பது, நமது சித்தாந்தத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கான எதிர்த்தாக்குதல். “எமது ஆயுதத்தை எமது எதிராளியே தீர்மானிக்கிறான்” என்ற மார்க்சின் சொற்களின்படியே, எனது கவிதை உட்பட வினவின் கட்டுரையும் விளங்கியது. எனவே, அக்கவிதைக்கும் தற்போதைய விவாதத்துக்கும் முடிச்சுப் போடுவது பொருத்தமற்றது. ஏனெனில், இது எதிர்த்தாக்குதல் அல்ல. மாறாக, மக்களிடம் நமது கருத்துக்களை எடுத்துச் செல்வது குறித்தது.

  இரண்டு, ‘விசமம்’, ‘முத்திரை குத்துவது’ எனப் பல தவறுகளைக் கண்டறியும் அதே வேளையில், எனது பொறுப்புணர்ச்சியை வரவேற்கவும் செய்திருக்கிறீர்கள். நன்றி. ஒரு கருத்தை விளக்குவதற்கு பொண்டாட்டி, வயசுப் பொண்ணு, ஜெயலலிதா இளநி வித்தது போன்ற ஆழமான உதாரணங்கள்தான் அவசியம் என்று படவில்லை. ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல, வாரன் பப்பட்டை அம்பலப்படுத்துவது என வரும் பொழுது, ஏன் ஜெயலலிதா பாடல் கருத்தாக முளைக்கிறது? வேறு உதாரணங்களே இல்லையா என்ன? கருணாநிதி அல்லது அம்பானி குறித்து அவ்வாறு எழுதினால் ‘கார சாரமாக’ இருக்காதோ? இந்த சிந்தனை முறையில்தான் ஆணாதிக்கக் கண்ணோட்டம் விளங்குகிறது என விமர்சிக்கிறேன்.

  ஒரு அமெரிக்க முதலாளியின் ஏகாதிபத்தியத் தன்மையை அம்பலப்படுத்த, ‘பொண்டாட்டியைக் குடு’ என்று கூறுவதாகக் கூறுவது, பெண்களையும், நாட்டையும் ‘காப்பாற்றும்’ பொறுப்பில் உள்ள ஆண்களின் வழக்கமான ஆணாதிக்க கூப்பாடுதான். இதில் முத்திரை குத்துவதோ, தாங்கள் கண்டறிந்துள்ள ‘விசமமோ’ எதுவும் இல்லை. மாறாக, பொதுக் கண்ணோட்டத்தில் நிறைந்து நிற்கிற பாலுறவுக் கண்ணோட்டத்திலேயே நமது கருத்துக்களையும் கட்டமைக்கும் போக்கு தங்களிடம் வெளிப்படுவதாலேயே விவாதிக்க நேர்கிறது.

  ஆனால், தாங்கள் இதற்கு கந்து வட்டிக் கொடுமையை உதாரணமாகக் காட்டுகிறீர்கள். உண்மை தான். எல்லா ஆதிக்கமும் கடைசியில் என்ன, முதலிலேயே கூட பெண்கள் மேல் கையை வைக்கிறது. ஆனால், இது பதிலில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு. ஏனெனில், கட்டுரையில் அத்தகைய கண்ணோட்டத்தில் தங்கள் கருத்து வெளிப்படவில்லை. மாறாக, ‘விருந்துக்கு வரும் சமூக நடத்தையிலிருந்தே’ விளக்கியிருந்தீர்கள்.

  ஒரு அடிப்படையான விசயம் உள்ளது. லெனினும், மார்க்சும், ஏங்கெல்சும் கூடத்தான் எத்தனையோ கருத்துக்களை “சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்வது” என்ற அடிப்படையில் வைத்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தகைய மொழி நடையை, ஒரு கருத்தை விளக்க பெண்டாள்வது எனும் அடிப்படையில் உதாரணங்கள் தந்து எழுதுவதை, அவர்களிடம் காண இயலவில்லை. எனவே, தங்கள் அளவுகோல்படி பார்த்தால், தீப்பொறி ஆறுமுகம் கூட, “சமூகத்தின் நடத்தையில் வைத்துப் புரிந்து கொள்ளும்” நோக்கில்தான் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் போலும்.

  • /////“எமது ஆயுதத்தை எமது எதிராளியே தீர்மானிக்கிறான்” என்ற மார்க்சின் சொற்களின்படியே/////

   இல்லை மாவோவின் சொற்படி.

   விவாதம் குறித்து பிறகு..

  • //ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல, வாரன் பப்பட்டை அம்பலப்படுத்துவது என வரும் பொழுது, ஏன் ஜெயலலிதா பாடல் கருத்தாக முளைக்கிறது?//

   புரட்சியாளர்களுக்கு கவர்ச்சி பஞ்சம் போலும்!

 16. வினவு கட்டுரை இன்சூரன்ஸ் துறையை அபகரிக்க முயலும்
  அந்நியக் கம்பெனிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

  இது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதும், மக்களைத்
  திரட்டுவதுமே தீர்வுகளுக்கு வழி வகுக்கும். அதை விடுத்து பொதுவாக
  கோபப்படுவதும், கனல் கக்குவதும் ஓரளவு கவனத்தை ஈர்க்க உதவலாம்.
  அடுத்து இன்னொரு அபாயத்தை இப்படி கனல் கக்கத் தேடுவதோடு
  மன நிறைவு அடைந்து விடக் கூடாது. எழுதுவது என் வேலை, திரட்டுவது
  யாரோ ஒருவரின் வேலை என்ற போக்கு எஸ்கேப்பிசம் ஆகும்.

  இன்சூரன்ஸ் துறையை திறந்து விடுவதற்கான சாலை வரைபடம் 1994 லேயே
  போடப்பட்டது. அன்று மல்ஹோத்ரா குழு பரிந்துரைகள் என்ன தெரியுமா?

  1 அந்நிய நிறுவனங்கள் தாராளமாக அனுமதிக்கப்படும்.( 26 % கட்டுப்பாடு
  உச்சவரம்பு எல்லாம் சாலை வரை படத்தில் கிடையாது)
  2 எல் ஐ சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பங்குகளில்
  50 % விற்கப்படும். ( இன்று வரை இந்நிறுவனங்கள் 100 % அரசுப் பங்குகளைக்
  கொண்ட நிறுவனங்கள் ஆகவே தொடர்கின்றன)

  இது தவிர பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தால் எல் ஐ சி க்குள்ள
  “அரசு உத்தரவாதத்தை” ( SOVERIGN GUARANTEE ) பறிக்கவும் முயற்சித்தார்கள்.

  இப்படித் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் எல்லாவற்றையும் மீறி இன்றைக்கும் எல் ஐ சி
  73 % சதவீத சந்தைபங்கு உள்ள நிறுவனமாக எப்படித் திகழ்கிறது? இதை விவாதிக்காமல்
  இன்சூரன்ஸ் அல்ல.. வங்கிகளில், சிறுவணிகத்தில், கல்வியில்… எங்கேயுமே பன்னாட்டு
  மூலதனத்தின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்த இயலாது.

  இன்சூரன்ஸ் துறையின் தொழிற்சங்கங்கள், இடதுசாரிகளின் தலையீடு ஆகியன
  இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு தூரம் இத் துறையை பாதுகாத்திருக்க இயலாது.
  இரண்டு மிகப் பெரிய கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டு முறையே 65 லட்சம், I .5 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் பெறப்பட்டன. எனக்குத் தெரிய தமிழகத்தில் 5000 பேர் 45 நாட்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள்,
  திருவிழாக்கள், பொதுக் கூட்டங்கள் என எங்கு பார்த்தாலும் நின்று கையெழுத்து
  வாங்கியதை வேறு எந்தப் பிரச்சினையிலும் பார்த்ததில்லை. பல எழுத்தாளர்கள் கூட
  வெகு ஜன ஊடகங்களில் இடம் பெற்றால்தான் அறிந்து கொள்வது என்கிற பலவீனத்தோடு இருப்பது வேதனைக்குரியது. ஊடகங்கள் மறைக்கப் பார்த்தாலும் இவ்வியக்கத்தின் விரிவு பல அரசியல் இயக்கங்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியது. ஒன்றை சர்ச்சைக்குரியதாக மற்ற எவ்வளவு பெரிய முயற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

  தொடர்ந்த மக்கள் சந்திப்பு இயக்கங்கள், மனித சங்கிலிகள், சைக்கிள் பேரணிகள், முகப்பு
  உடை அணிந்து பிரச்சாரம், கலைப்பயணங்கள் என ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் 16
  ஆண்டுகளாக இவ்வளவு இடையறாத இயக்கத்தை வேறு எந்த அரசியல் கட்சியோ, தொழிற் சங்கமோ செய்திருக்குமா என்பது ஐயமே! ( யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக சொல்லவில்லை. நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்க்கிற எவரும் ஏற்றுக் கொள்வார்கள்)

  1 இத்தகைய போராட்டங்களே இன்சூரன்ஸ் “சீர் திருத்தங்களுக்கு” வேகத் தடைகளை
  உருவாக்கியது. ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் நிதியமைச்சர் ப சிதம்பரம்
  “பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாப்போம்” என்ற உறுதி மொழியை
  பெற முடிந்தது.( தற்காலிக தந்திரம் எனினும் போராடுவதற்கான நம்பிக்கையையும்,
  கால அவகாசத்தையும் அது தந்தது) 1994 லேயே திட்டமிட்ட பங்கு விற்பனையை
  16 ஆண்டுகள் வரை செய்ய முடியவில்லை.

  2 பி ஜே பி ஆட்சி காலத்தில் ஐ ஆர் டி ஏ மசோதா நிறைவேற்றப்பட்டாலும் 26 % என்ற
  அந்நிய முதலீடிற்கான வரையறையை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

  3 அரசு உத்தரவாதம் ( soverign guarantee ) இன்று வரையிலும் தொடர்கிறது.

  இன்னும் மிக நுட்பமான அம்சங்களில் கூட பொதுத்துறைக்கு எதிரான தாக்குதல்கள்
  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

  இநதிய நிதியமைச்சர் பகிரங்கமாகவே ‘ இந்தியத் தொழிலதிபர்கள் கூட்டத்தில்
  ( பின் பட்ஜெட் கூட்டத்தில் ) ” உங்களுக்கு அரசியல் கட்சிகளிடம், மாநில அரசுகளிடம்
  உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இன்சூரன்ஸ் மசோதாக்களை நிறைவேற்ற
  உதவுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தது செய்தியாக வந்துள்ளது. நீரா ராடியாக்கள்
  மூலமாக கருத்தொற்றுமையை உருவாக்குங்கள் என்பதுதானே இதன் அர்த்தம்?

  ஆளும் வர்க்கங்களின் சாதுர்யமும், நிதானமாக நிகழ்ச்சி நிரலை நகர்த்துகிற லாவகத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.

  பிரணாப் முகர்ஜியின் கருத்துருவாக்கத்திற்கு மாற்றாக நாம் என்ன செய்யபோகிறோம்?
  வினவு கட்டுரைகள் போன்ற முயற்சிகள் பாரட்டத்தக்கது. இவையெல்லாம் களத்தில் நடைபெறுகிற பணிகளோடு இணையவேண்டும்.

  ஒரு வாசகர் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவு திறப்பதை ஆதரித்து இருந்தார். சிலர் இடதுசாரிகளை எதிர்ப்பது என்ற பெயரால் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுகொள்வது வியப்பை தருகிறது.
  கடந்த 31 மாதங்களில் அமெரிக்காவில் மட்டும் 330 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன. ஏ ஐ ஜி என்கிற பன்னாட்டு பகாசுர இன்சூரன்ஸ் கம்பெனி திவால் விளிம்பிற்குப் போய் அமெரிக்க அரசினால் அதன் 80 % பங்குகள் வாங்கப்பட்டு காப்பற்றப்பட்டது என்பது ஓராண்டிற்கு முந்தைய நிகழ்வு.

  இன்னொரு வாசகர் தேசிய மயத்திற்கு முன்பு ஊழலே இல்லை என்று எழுதியிருக்கிறார். முந்திரா ஊழல் பற்றித் தெரியாது போலும். நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி “அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் பட்டியலிட்ட மோசடிகளை விட அதிகமான மோசடிகளை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்துள்ளன” என்று பேசியது பதிவேடுகளில் உள்ளது.

  இன்றைக்கு உலகத்தில் அதிகமான பாலிசிகளை கொண்ட முதன்மையான நிறுவனம் எல் ஐ சி தான். 99 .86 % உரிமப் பட்டுவாடா ( claim settlement ) உள்ள முதன்மையான நிறுவனமும் எல் ஐ சி தான். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 40 % உரிமங்களை (claims) கூட வழங்காமல் உள்ளன.

  பொது இன்சுரன்சில் சில தவறுகள் நடப்பதாக ஒரு வாசகர் எழுதியிருந்தார். எங்கோ சில தவறுகள் இருந்தால் அவற்றைக் களைவதும், தண்டிப்பதும் அவசியம். குறிப்பான குற்றச் சாட்டுகள் இல்லாததால் பதில் அளிக்க இயலவில்லை. ஆனால் உலக அனுபவம், தேசத்தின் தேவை, பாலிசி தாரர் பாதுகாப்பு என்ற விரிந்த பார்வையோடு அணுகுவதே சரியான இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கும்.

  • //வினவு கட்டுரை இன்சூரன்ஸ் துறையை அபகரிக்க முயலும்
   அந்நியக் கம்பெனிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

   இது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதும், மக்களைத்
   திரட்டுவதுமே தீர்வுகளுக்கு வழி வகுக்கும். அதை விடுத்து பொதுவாக
   கோபப்படுவதும், கனல் கக்குவதும் ஓரளவு கவனத்தை ஈர்க்க உதவலாம்.
   அடுத்து இன்னொரு அபாயத்தை இப்படி கனல் கக்கத் தேடுவதோடு
   மன நிறைவு அடைந்து விடக் கூடாது. எழுதுவது என் வேலை, திரட்டுவது
   யாரோ ஒருவரின் வேலை என்ற போக்கு எஸ்கேப்பிசம் ஆகும்.//

   மதுரை இன்சூரன்ஸ் சிபிஎம் தொழிற்சங்க தோழர் சுவாமிநாதன் தான் என எண்ணுகிறேன். தோழரின் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதே சமயம் மேலே தாங்கள் சொல்லியுள்ளது போல் வினவு தளம் அனல் கருத்துக்களை தெரிவிப்பதோடு எஸ்கேப் ஆவதில்லை. இது போன்ற கருத்துக்களை வெளியில் சொல்லுவதன் மூலமே அணிதிரட்டல் என்பது சாத்தியம். அந்த வகையில