Friday, June 2, 2023
முகப்புசமூகம்சினிமாவானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

-

 வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ரிஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பார்ட்டிக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பார்ட்டிக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பார்ட்டிக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் தோழி ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது தோழி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டி பரத்தின் உயிரை காப்பாற்றுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

3 வருடம் கழித்து தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ரிஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

________________________________________________________________

– வெற்றிவேல்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. சும்ம்மாவே காவி தீவிரவாதம் அது இதூன்னு எழுதி சந்தோசப்படுவ…னீ இந்த படத்த விமர்சனம் பன்ட்ரதே அதுக்குத்தான்னு எனக்குநல்லாத்தெரியும்…பாராவுக்கு பாரா காவி தீவிரவாதம்….

  //////////அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” //////////

  உன்னுடைய வருத்தம் கடைசி காட்சஷியில் மூஸ்லிமை திவிரவாதியாகக் காட்டியது தான்..

  இன்டியாவில் பிரகாஷ் ராஜின் பாதிரப்படைப்பு பொலநல்ல மனிதர்கள்நிரைய இருகிரார்கள்…சில பேர் திவிரவாதியாகவும் மாருகிரார்கள்…இங்கு அப்சல் குருவும் கசாபும் சைய்த திவிரவாதத்தை விட உன்னைப்போன்ர ஆட்களே மக்களிடம் பிரிவினையை உன்டாஅக்கிவிடுவீர்கள்..

  • Maruthu//

   பிரிவினைக்கு பெயரே இந்துமதம் தான்.அதை புரியாமல் பிரிவினைக்கு மற்றவர்கள் காரணம் என்று சொல்றீங்க! நீங்க வரலாற்றை இன்னும் ஒரு முறை மனப்பாடம் பண்ணிட்டு வாங்க.

  • எப்ப மருது வெளியே வந்தீங்க! உங்களுடைய பேவரைட் கமெண்ட் கன்னுக்குட்டி வருவல் எப்பவும் நெஞ்சிலேயே நிக்குதுங்க! முதன் முறையாக பதிவை பற்றி கருத்து சொன்னதற்கு ரெம்ப நன்றிங்க!

  • மருது .. உன் பேரை முதலில் மாத்து. கண்டிப்பாக இது உன் சொந்தப் பெயராக இருக்க வாய்ப்பில்லை. உன் காவி தீவிரவாதம் தான் பச்சைத் தீவைரவாதத்தின் ஆணி வேர்.

   அதனை பாபர் மசூதியும், மாலேகான், அஜ்மீர் தர்கா போன்றவை எடுத்துரைக்கும்.

   வரலாற்றைப் படி. பின்னர் பிளிரலாம்

   • உன் பேச்சிலேயே தெரியுது அந்த மாவீரனது பெயர் உனக்கு இருக்காது என்று…

    தொப்பி…தொப்பீ…

 2. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது.//

  அதே..

  இதேதான் ரசிகர் மன்றம் அமைப்பதும், தலைவனைப்பற்றி கிறுக்கு பிடித்து அலைவதும் , கொந்தளிப்பதுமாய்..

 3. துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?//

  அவர்களைப்பற்றி எனக்கென்ன கவலை.. ரஜினி சூப் குடிச்சாரா , நகம் வெட்டினாரா என்ற கவலைதான் எனக்கு பெரிசு..

 4. கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.//

  இதை படத்தில் துணிவா சொன்னதுக்காகவே ஒரு சபாஷ்

 5. வினவு, உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். ஆனால், ஹிந்துதுவாதான் முஸ்லீம் தீவிரவாதம் உருவாக காரணம் என்று சொல்லி இருப்பது ஏற்றுகொள்ள முடியாது ஒன்று. என்னமோ ஹிந்துக்களால் தான் முஸ்லீம் தீவிரவாதம் உருவான மாதிரி விமர்சனம் இருக்கிறது. ஆப்கனில், பாக்கிஸ்தானில், ஈராக்கில், கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஹிந்துக்களே இல்லையே ஆனால் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறதே? ஆனால் அவர்களின் ஆதிக்கம் இந்தியாவில் எப்படி வந்தது? நீங்கள் விமர்சம் செய்திருப்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முஸ்லீம் ஆதரவும் ஹிந்து எதிர்ப்பும் போல இருக்கிறது. இந்தியாவில் ஹிந்துத்துவா எப்போது ஆரம்பித்தது? நீங்கள் சொல்லும் இந்த ராமசேனா ஆரம்பித்தது எப்போது? முஸ்லீம் தீவிரவாதம் ஆரம்பித்தது எப்போது? ஒருதலை பட்சமாக, முஸ்லீம்களுக்கு ஆதரவாக உங்கள் விமர்சனம் இருக்கிறது. நம் நாட்டில் எப்போது வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கி அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் குண்டு வைத்தும், சுட்டும் கொல்ல ஆராம்பித்தார்களோ அப்போதுதான் ஹிந்துத்துவா என்ற ஒன்று இந்தியாவில் தலை தூக்க ஆரம்பித்தது. வானம் ஒரு சினிமா அவ்வளவே, அதில் சில விசயங்கள் மிகை படுத்தப்பட்டும் இருக்கலாம், படாமலும் இருக்காலாம். ஆனால் காவிகள் ராக்கி கட்டு இல்லையென்றால் தாலி கட்டு என்று சொல்வதில் என்ன தவறு? மெரீனா பீச்சில் மதியம் ரெண்டு மணிக்கு ஷாலை போர்த்தி கொண்டு முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து கொண்டு இருப்பதுதான் காதலோ? உங்கள் வீட்டு பெண்கள் இப்படி இருந்தால் பார்த்து கொண்டு சந்தோஷ படுவீர்களோ? ஒரு முஸ்லீம் வீட்டு பெண் இந்த மாதிரி இருந்தால் அவர்கள் என்ன பார்த்துகொண்டு சும்மா இருப்பார்களோ? இந்த விஷயம் வானம் படத்தில் மிகை படுத்த பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா முஸ்லீம்களும் இருந்துவிட்டால் நாட்டில் ஏன் மத சண்டை வர போகிறது? எந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீமை கொன்றார்கள்? முஸ்லீம் இளைன்ஞர்களை திசை திருப்பி எப்படி தீவிரவாதியாக்குகிரார்கள் என்பதையும் சொல்லி இருப்பார்கள் அதை விட்டு விட்டேர்களே ஏன்? நான் ஹிந்துதுவாவிற்கு ஆதரவாக பேசவில்லை, நீங்கள் ஏன் ஒருதலை பட்சமாக விமர்சம் செய்துள்ளீர்கள் என்றுதான் கேட்கிறேன். ஒரு கட்சி தலைவர் உங்கள் ஊருக்கு வரும் போது குண்டு வைக்கவேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது? (கோயமுத்தூர் பிரச்சினை) காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மதவாத, பிரிவினைவாத தலைவர் மிக சுலபாமாக இந்தியா முழுவது செல்லலாம் ஆனால் அத்வானி வந்தால் மட்டும் குண்டு வெடிக்கும் அப்படித்தானே? இயேசு அழைக்கிறார் வாருங்கள் முடவர் நடக்கிறார், குருடன் பார்கிறார் என்று மெரினாவில் வருடாவருடம் மாநாடு போடுகிறார்கள் அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை, அப்போது ட்ராபிக் ஜாம் ஆகவில்லை, விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் பெரிதாக தெரிகிறது அப்படித்தானே? மிகை படுத்தப்பட்ட விசயங்கள் நிறைய உள்ளன. முஸ்லீம்கள் ஊர்வலமோ அல்லது மாநாடோ நடத்தினால் எந்த ஹிந்துத்துவா காரன் வந்து குண்டு வைக்கிறான்? ஆனால் விநாயகர் சதூர்த்தியில் மட்டும் ஏன் குண்டு வைக்க வேண்டும்? நாட்டின் சுதந்திர தினத்தை கூட ராணுவ பாதுகாப்புடன் கொண்டாடுகிறோமே ஏன்? ஹிந்துதுவாவிர்க்கு பயந்து கொண்டா?

  • ////வினவு, உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். ஆனால், ஹிந்துதுவாதான் முஸ்லீம் தீவிரவாதம் உருவாக காரணம் என்று சொல்லி இருப்பது ஏற்றுகொள்ள முடியாது ஒன்று ///

   நண்பர் பாலா .. இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் ஆரம்பித்ததற்கு காரணம் இந்துத்துவ வெறி மட்டுமே … பாபர் மசூதி இடிப்புக்கு முன் எங்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தால் குண்டு வெடித்தது ?.. அதற்கு பிறகு பல இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் இவை தான் அவ்ர்களை தூண்டுகின்றன.

   அத்வானி எல்லாம் ஒரு ———— என்று அவனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். கர சேவையின் நாயகன். இந்திய அமைதியைக் கெடுத்த ———- அவன்.

   மூலக்காரணம் அவன் தான். டிசம்பர் 6 எங்காவது குண்டு வெடித்ததா ?.. அரசாங்கம் கொடுக்கும் பில்டப்புகள் தான் அதிகம். மாலேகான் , அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்கு யார் காரணம். பதில் கூறவும். பாபர் மசூதி பகுதியை மூன்றாய் பங்கிட்டு கேவலமான தீர்ப்பு வழங்கிய அன்று எங்கவது பொட்டு வெடி கூட வெடித்ததா ?..

   ஒரு வேளை மசூதி இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் எவ்வலவு பெரிய கலவரம் செய்திருப்பார்கள் இந்த இந்துத்துவ வெறியர்கள்.

   சிந்தியுங்கள். நீங்கள் பிராமனராக இல்லாத பட்சத்தில் முதலில் நீங்கள் இந்துவா என்பதையே வரலாற்று ரீதியாக பரிசீலனை செய்து கொள்ளுங்கள். பிராமணர் இல்லாத பட்சத்தில் நீங்கள் கோவில் கருவரைக்குள் நுழைய முடியுமா?..

   முயற்சி செய்யுங்கள் .. வாழ்த்துக்கள்…

  • //இந்தியாவில் ஹிந்துத்துவா எப்போது ஆரம்பித்தது? நீங்கள் சொல்லும் இந்த ராமசேனா ஆரம்பித்தது எப்போது? முஸ்லீம் தீவிரவாதம் ஆரம்பித்தது எப்போது?//

   ஹிந்துத்துவா என்பது சாவார்க்கர் முதலான நான்கு மராத்திய ஆதிக்க சாதி வெறி பிடித்த மருத்துவர்கள்தான் ஆரம்பித்து வைத்தார்கள். அவர்களது கொள்கை நாயகன் ஹிட்லர். அப்பொழுது அதன் பெயர் வேறு. ஹிந்துமகா சபா என்பதாகும். அதன் பின்னரேநாடு இரண்டாக உடைந்ததும் இசுலாமிய எதிர் தீவிரவாதம் உண்டானதும்.

   //மெரீனா பீச்சில் மதியம் ரெண்டு மணிக்கு ஷாலை போர்த்தி கொண்டு முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து கொண்டு இருப்பதுதான் காதலோ?//
   அது காதல் இல்லைதான். ஆனால் கிந்து கலாசாரம் என்று இவர்கள் தங்கள் மதவெறியை காட்டுகிறார்கள்.
   //எந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீமை கொன்றார்கள்?//

   திலகர் என்னும் மற்றும் ஒரு மத பயங்கரவாதியினால் உண்டாக்கப்பட்டதே இந்த வினாயகர் ஊர்வலம்

 6. வினவில் இந்த படத்திற்கு இப்படி நல்ல விமர்சனம் செய்விங்களா!அதிசயமாக இருக்கிறது.

 7. திருடி/கொலை/கொள்ளை/விபச்சாரம்/எப்படியாவது “வானம்” பார்க்கவும்.

 8. பஞ்சபூத “வானம்” போல்

  பஞ்ச முகமாக காணக்கிடக்கும்

  இந்தியாவிற்கு கம்யூனிஸமே “சர்வ ரோக நிவாரனி”

  என்ன ? வினவு !!!

   • உலகத்திற்கே அது தான் நிவாரணி. நமக்கு எப்படி ’காவி’யா காம்ரேட் ?…

    “நான் அப்புரானி” பாஸ் !!!

 9. தமிழில் சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் , ஜீவா நடித்த கோ படத்தப் பற்றிய உங்கள் விமர்சனத்தை எழுதவும். அதில் ஏனோ தெரியவில்லை நக்சலைட்டுகள் எனும் கருத்தை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். நீங்கள் விமர்சனம் எழுதினால் என்னுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

  • குருதி புனல் படம் நக்சல் எல்லாம் மீன் குழம்புக்கும் விலை மாதுக்கும் மயங்குவதை போல் கான்பித்து சேறு வாரி வீசினார் கமல் ஆனால் கே.வி.ஆனந்த் அதை மற்றொரு வடிவில் அவர்கள் பதவிக்காக எதயும் செய்வர்கல் என்றும் எல்லா இடத்திலும் அவர்கள் இறுப்பார்கள் அதாவது வினவு போன்று பினாயக்சென், அருந்த்ததி ராய் போன்று பதவி வெறியுடன் இருப்பார்கள் என்பது போன்று காட்டியுள்ளார் ஆனந்த். ஆனால் சட்டிஷ்கர், பீகார் மக்கள் சொலுவார்கல் யார் பதவி வெறியுடன் உள்ளார்கள் என்பதை,இது நாம் கவலை கொல்லும் அளவு எடுதுக்கொல்ல வேண்டிய விசயம் இல்லை.நீங்கள் நக்சல் பற்றி நடுநிலையக தெரிந்து கொள்ல வேண்டுமென்றால் மாவோயிஸ்டுகலின்புரட்சிகருவிலே சிதைக்கப்படுவது ஏன் என்ற நூலினை படிக்கவும் கீழைகாற்று நூலகத்தில் இது கிடைக்கும்.
   நன்றி.

 10. இன்னும் நான் படம் பார்க்க வில்லை .,சரியான அலசல் .,.,இப்ப ஷென்னயில் விமானநிலயடதில்.,.,என்னை விட வில்லை.,காரனம் .,என் பெயர் அப்படி.,இதில் வெடிக்கை என்ன தெரியுமா ???நான் 30 வருசமா பயனம் சென்ரு வந்து கொன்டு இருக்கென் .,.,.,அதுவும் ஒரெ நாட்டில்., மஷ்கட்டில்.,.,.மனம் ரொம்ப வலிக்குது .,.,.,

  • வணக்கம் ஃபிரோஸ். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, எனினும் உங்களுடைய விமர்சனத்தையும் வாசித்தேன். இந்த திரைப்படத்தை நீங்கள் காவி ஆதரவுப் படம் என்று கூறியுள்ளீர்கள், உங்களுடைய கருத்து சரியானதாகக்கூட இருக்கலாம் ஆனால் அது உங்களுடைய விமர்சனத்தில் நிறுவப்படவில்லை,அதாவது காட்சிகளை உங்களுடைய கூற்றுக்கு ஆதாரமாக நீங்கள் முன்வைக்கவில்லை,எனவே உங்களுடைய விமர்சனத்தை முழ்ழுமையாக ஏற்க இயலவில்லை. எனினும், நீங்கள் கூறியதைப்போலவே தான் படத்தை பார்த்துவிட்டு வந்த வேறு ஒரு தோழரும் கூறினார், இசுலாமிய பயங்கரவாதம் குறித்த இயக்குனரின் கண்ணோட்டம் மிதவாத இந்துத்துவ கண்ணோட்டம் தான் என்று கூறினார். பாடத்தை பார்த்தால் தான் தெரியும்.

 11. If we look back at the history, we can see how Muhammad(founder of Islam) treated people of other religion. He slaughtered thousands of pagans and Jews. The evidence is their own Hadith. If you want I can give many references from their “holy scripture”. There was no Hinduism, no America, no Israel etc during his life. Then why he commanded muslims to fight unbelievers? Why he asked muslims not to be friends with Jews and Christians? Why he killed people of other faith?

  You fail to acknowledge that the man Muhammad and his irrational character is the core motivation of Islamic terrorism. When some atheists in Denmark drew cartoons of Muhammad, muslims killed innocent Christians as response. Where is the kavi or america?

  • மிஸுட்டர் பொலவு ..

   இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா ?..

   பாபர் மசூதியைஅ என்ன மசுத்துக்கு அத்வானி கும்பல் இடிச்சது?..

   அதை இடிக்கிறதுக்கு முன்னாடி இந்தியாவுல எங்கயாவது குண்டு வெடிச்சதா ?..

   பதில் சொல்லுங்க பொலவு.

   • இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா…………….Who destroyed Nalanda University in India during Mogul rule.2000 temples destroyed in Kashmir any thought.At the same time 100s of Mosque daily worshiped are demolished in Pak for Highway projects funded by WB any thoughts

   • What is the reason behind creating Sikh relegion.who unskinned Sikh religious gurus 2 or 3? during Islamic rule in India………SO KEEP DISTANCE TO ALL RELIGION and point finger to that deficiancies in serving to mankind

   • Bhgath Singh, It shows your knowledge on History.I would request you to read the below History which will throw you more light. I have already commented; Still i would like tp paste them.

    http://en.wikipedia.org/wiki/Islam_in_India

    http://www.kashmirherald.com/featuredarticle/indiacensus.html

    http://www.cfr.org/india/indias-muslim-population/p13659

    http://en.wikipedia.org/wiki/Political_history_of_Mysore_and_Coorg_(1565%E2%80%931760)

    பகத் சிங்க் என்று பெயர் வைத்து கொண்டு பொய் பேசுவது கொஞ்சம் ஓவர்.

    \\பாபர் மசூதியைஅ என்ன மசுத்துக்கு அத்வானி கும்பல் இடிச்சது?..\\

    ஒசாமா பின் லேடன் எந்த மசுருக்கு WTO வை இடித்தரோ அதே மசுருக்கு தான் அத்வானி கூட்டம் அந்த கட்டிடத்தை இடித்தது.

   • திரு பகத் சிங்க் அவர்களே முகலாய மன்னர்கள் இந்திய நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்ற போது இங்கே இருந்த பல உருவ வழிப்பாட்டு இடங்களை இடித்தார்கள் என்பது வரலாறு. அதன் மீது நிருவப்பட்டதே இந்த “பாபர்” மசூதி இடிப்பு சம்பவம். சம்பவம் நடை பெற்றது தற்கால வரலாறு ஆகினும் அதன் ஆணி வேர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் இருக்கிறது. அதை வைத்து அரசியல் செய்ததே இன்றைய இன் நிலைமைக்கு காரணம். மெய்யான கம்யூனிஸ்ட் ஆக தன்னை கூறிக்கொள்ளும் வினவு எந்த ஒரு மதத்தையும் ஆதரிப்பதுபோல் கருத்துக்கள் அமைக்காமல் இருந்தால் நல்லது. பெரும்பான்மை மதம் சிறுபான்மை மதத்தை அல்லது குழுவினரை அடக்கி ஆழ நினைப்பது எல்லா மத, மொழி இனங்களிலும் உள்ளது. இதை பற்றி விவாதித்தல் எந்த ஒரு முடிவையும் தந்து விடாது. மதத்தை விட்டு அரசியல் நீங்கும் வரை இந்த பிரச்சனை உலகில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

  • And to note, the brahmin prakash raj will not take up a role which justifies the plight of innocent and peaceful Muslims of India. So please double check if the film is really in opposition of saffron terror. Unless these religions are eradicated, freedom is theory… 😉

  • Qualities of MUHAMMAD from the Final Testament:

   003:159. It was a mercy from God that you were soft towards them; had you been harsh and mean hearted, they would have dispersed from you; so pardon them and ask forgiveness for them, and consult them in the matter; but when you are convinced, then put your trust in God; God loves those who trust.

   quranist@aol.com

  • Question:

   Why he asked muslims not to be friends with Jews* and Christians**?

   Answer:

   005:051. O you who believe, do not take the Religious Professionals*/Spiritual leaders* and the Political volunteers/reformers** as allies, for they are allies to one another; and whoever takes them as such from amongst you is one of them.

   quranist@aol.com

 12. அருமையான விமர்சனம்.

  கோ படத்திற்கு தோழர்கள் இவ்வளவு நாள் விமர்சனம் எழுதாததைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. வினவின் பார்வையை எதிர்பார்க்கிறோம்.

 13. படம் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகிற்று. தங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது

 14. தத்தெடுக்கப்பட்ட கிராம மக்களுக்கு துரோகம் செய்த கந்தசாமி பட இயக்குனரும் தயாரிப்பாளரும்

  கந்தசாமி படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தின் விளம்பரத்திற்காக சில கிராமங்கள் தத்தேடுக்கப்பட்டன.அதை ஊடகங்கள் மிகை படுத்தி காட்டின. இதில் ருசி கண்ட கந்தசாமி பட இயக்குனரும், தயாரிப்பாளரும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்திற்கு ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தனர், அது விளம்பரமாக பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது. பல கிராமங்களில் இருந்தும் தங்கள் கிராமங்களை தத்தேடுக்கவேண்டி பலரும் கடிதம் எழுதினர். இதில் இருந்து முப்பது கிராமங்கள் ததேடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அந்த கிராமங்களுக்கு நேரடியாக கந்தசாமி பவுண்டேசன் பார்வையாளர்கள் பார்வையிட்டுவிட்டு வந்தனர் . அந்த முப்பது கிராமமக்களும் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்தக மையத்தில் மே 17 , 2009 அன்று தத்தெடுக்கப்பட்ட அனைத்து கிராம மக்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தத்தேடுக்கப்பட்டதிற்கு அடையாளமாக அந்தந்த ஊரின் பெயர் , ரூபாய்.3,00,000/- அச்சிடப்பட்ட பெரிய அளவிலான காசோலையை நடிகர் விக்ரம் , ஸ்ரேயா, எ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை கொண்டு வழங்கப்பட்டது, தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவ உதவி திட்டங்கள் , கல்வி உதவி தொகைகள் அறிவிக்கப்பட்டன. இதற்காக கந்தசாமி பவுண்டேசன் என்ற ட்ரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு 30 தொழிலதிபர்களிடம் இருந்து தல ரூபாய்.3,00,000/- லட்சம் விதம் நன்கொடை வாங்கப்பட்டது.அந்த தொழிலதிபர்களும் அந்த மேடையிலையே கவுரிவிக்கப்படனர்.இந்த நிகழ்ச்சி முழுவதும் சன் தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டது. கந்தசாமி படம் 21 ,ஆகஸ்ட் 2009 இல் திரைக்கு வந்தது , படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  படத்திற்கு 100 வது நாள் விழா 30 டிசம்பர் 2009 அன்று தென் னிந்திய நடிகர்கள் சங்கத்தில் வைத்து எளிய முறையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் சுசி கணேஷன் சொந்த ஊரான வன்னி வேலம்பட்டியை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள் ,அந்த கிராமத்திற்கு மட்டும் நல உதவித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றுமுள்ள 29 கிராமங்களுக்கு இன்றுவரை எந்த உதவி திட்டமும் செய்யவில்லை . 3 மாதங்களுக்குள் அனைத்து நல உதவியும் செய்யப்படும் என்றார்கள். ஆனால் ஆண்டுகள் இரண்டு ஆகிவிட்டது பல முறை கடிதங்கள் அனுப்பியும் , போன் செய்து கேட்டும் எதற்கும் பதில் இல்லை இவ்வாறு அப்பாவி கிராம மக்களை ஆசை காட்டி அவர்களின் புகழுக்கு உபயோகப்படுத்தி விட்டு துரும்பை போல தூக்கி எரிந்து விட்டனர்.பல தொழிலதிபர்களும் நல் இதயத்தோடு ,உதவி செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ரூபாய்.3,00,000/- கொடுத்த பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை உங்களை போன்ற பத்திரிக்கைகள் தான் இந்த செய்திகளை வெளிக்கொண்டு வரவேண்டும் . தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு நல உதவி திட்டங்கள் செய்யப்படுமா அல்லது ஐயோ தானா என்பதும் தெரியவேண்டும்.

 15. விபச்சாரி என்ற சொல்லை தவிர்த்து பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டிருக்கலாம்.

  • விபச்சாரி என்ற சொல்தான் சரி,அதை கவுரவமான தொழிலாக ஏற்றுக்கொள்வது

   முறையல்ல.சமுதாயத்தால் இழிவான செயலாக கருதப்படும் ஒன்றை தொழிலாக

   குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள இயலாது.

   • கணவனுக்கு பணிவிடை செய்தால் உபச்சாரம்.

    கள்ளக்காதலனுக்கு பணிவிடை செய்தால் விபச்சாரம்.

    அதை விடுங்க பாஸ்.

    கம்யூனிஸ [obscured] அகராதியில்/அரசியலில்/ஆட்சியில் என்ன செய்தாலும்

    “பாலியல்”

    ரொம்ப கிண்டினீங்கன்னா வந்துடும் அசிங்கமா !!!

  • பாலியல் தொழிலாளி என்றால் அவருக்கு துணை சேருபவர் பாலியல் முதலாளி என்றாகிறது. ஆகவே கட்டுரையில் விபச்சாரி என்று குறிப்பிட்டிருக்கலாம்.

  • இல்லை, அங்காடி தெரு படத்தையும் விமரிசனம் செய்தாலும் நல்ல முயற்சின்னு வரவேற்றிருக்காங்க..
   https://www.vinavu.com/2010/04/08/angadi-theru/
   அவங்க சினிமா விளம்பரத்தில் கூட வினவு தளத்தின் பெயரையும் வரிகளையும் எடுத்து போட்டிருந்தாங்களே

 16. தலைவா yeh mera india மற்றும் traffic signal போன்ற இந்திப்படங்களும் ஓப்பிட்டு பார்க்கவும்

 17. இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா…………….Who destroyed Nalanda University in India during Mogul rule.2000 temples destroyed in Kashmir any thought.At the same time 100s of Mosque daily worshiped are demolished in Pak for Highway projects funded by WB any thoughts

  வீரா அவர்களே ! நீங்கள் இரண்டு களங்களை ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

  நாலந்தா அழிக்கப்பட்டது ஜாதி மதவெறி கோலோச்சிய காட்டுமிராண்டித்தனமான வரலாற்றுக் காலக்கட்டத்தில்.

  சோழர்கள் படை செய்த கொடூரங்களை கலிங்கத்துப் பரணியில் காணலாம். ஆர்.எஸ்.எஸ் அம்பி மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் நூலிலேயே, பல முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பின் போது பல மசூதிகளையும் சேர்த்து சூறையாடி விட்டுச் சென்றனர். ஜாதிய இன மாச்சரியங்கள் மற்றும் வல்லவனே ஆள்வான் என்னும் காட்டுமிராண்டித்தனமான காலக்கட்டத்தில் நடந்தது இவை !

  காஷ்மீரை யார் முதலில் ஆக்கிரமித்தார்கள் ? இந்து அமர்நாத் யாத்திரைக்கு சகல உதவிகளையும் செய்த – மற்ற இஸ்லாமிய சமூகங்களிலிருந்து முழுதும் மாறுபட்ட – சகோதரத்துவம் நிறைந்த உன்னதமான அந்த ரோஜா தேசத்தை ஆக்கிரமித்தது யார் ? அதனால் தான் முஸ்லீம் வெறியர்களால் அந்த மக்கள் பலியெடுக்கப்பட்டு தீவிரவாதம் மேலோங்குகின்றது. வினவின் காஷ்மீர் பற்றிய பதிவுகளை தேடிப் பிடித்துப் படியுங்கள் !

  பாக்கிஸ்தானில் மசூதிகள், இந்தியாவில் கோவில்கள், இந்திய இதயங்களான கிராமங்கள் என்று எல்லாம் இடிக்கப்படுகின்றதே ? உத்திரப்பிரதேசம் பற்றி எரிகின்றதே ? ஏன் ? இது ஏகாதிபத்தியக் காலக்கட்டம். அமுல் பேபி மற்றும் உத்திரப்பிரதேச பிரச்சனை பற்றிய வினவின் கட்டுரை இதனை விரிவாக விளக்குகின்றது.

 18. தோழரே,

  படங்களுக்கு விமரிசனம் எழுதி நேரத்தை வீணடிக்கும்/கம்யூனிஸ அரிப்பை தீர்த்துக்கொள்ளும்

  நீங்கள் உங்கள் கம்யுனிஸ சகாக்கள்

  செய்த வரலாற்று பிழையை அதாவது போலிக்கம்யூனிஸ்டுகள் செய்தவற்றை கரையை ஸ்ரீ

  ராமஜெயம் என்ற நாமகரணம் போல் எழுதி பரிகாரம் தேடலாமே ?

  Criticism

  Some of the primary criticisms of socialism and by extension communism are distorted or absent price signals,[51][52] slow or stagnant technological advance,[53] reduced incentives,[54][55][56] reduced prosperity,[57][58] feasibility,[51][52][53] and its social and political effects.[59][60][61][62][63][64]

  Part of this criticism extends to the policies adopted by one-party states ruled by communist parties (known as “communist states”). Some scholars are specially focused on their human rights records which are claimed to be responsible for famines, purges and warfare resulting in deaths far in excess of previous empires, capitalist or other regimes.[65][66][67] The Council of Europe in Resolution 1481 and international declarations such as the Prague Declaration on European Conscience and Communism and the Declaration on Crimes of Communism have condemned some of the actions that resulted in these deaths as crimes.

  Stéphane Courtois argues that Communism and National Socialism are slightly different totalitarian systems, and that communism is responsible for the murder of around 100 million people in the 20th century. He also argues that Nazi repressive methods were largely adopted from Soviet methods.[68]

 19. தாடி வச்ச ஒரெ கரானத்திர்காக .6 மனிநெரம் காவல் துரை இடம் அடி வாங்கிய அனுபவம் உன்டு எனக்கு.,.,கெட்டென் .,திவிரவாதி பொல இருக்கெனாம்.,.,இப்பொ தினமும் கிலின் செவிங்.,.,அந்த் அடி இப்ப்வும்??????? அம்மா?????.,பயமா இருக்கு.,.என் பெயரும் அப்படி .,.,இப்பொ கால் வலி.,காரனம் காலில் மிதித்து.,.,அடித்தார்கல் என் அருமை காவல் துரை .,.,

 20. சார் கொஞம் அவ்வாலுக்க்கும் .,.,சப்பொர்டா எழுதுங்கல் .,.,அப்பொதான் .,.,.,???????????????????

  • வணக்கம் பிரோஸ். நான் ஏற்கெனவே உங்களுக்கு இட்டிருந்த பின்னூட்டத்தில் ( பி.எண்- 14.1) உங்களுடைய விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளேன், அதற்கு பதிலளிக்காமல் மீண்டும் இங்கே சுட்டி கொடுப்பது சரியல்ல.

   நான் இப்போது தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன், ஒரு முறை அல்ல இரு முறை, நேற்றும் இன்றும். இப்போது உறுதியாக கூறுகிறேன் உங்களுடைய விமர்சனம் அடிப்படையற்றது !

   அப்பாவி இசுலாமியர்களையும் இசுலாமிய பயங்கரவாதிகளையும் இயக்குனர் தெளிவாகவே வேறுபடுத்திக் காட்டியுள்ளார். விமர்சனத்தில் கூறியுள்ளது போல மருத்துவமனையில் நடக்கும் இறுதிக்காட்சிகளை மட்டுமே ஏற்க இயலாது மற்றபடி நீங்கள் கூறுவது போல இசுலாமியர்களை காவிக்கண்ணோட்டத்தில் அவதூறு செய்யவில்லை. படத்தில் மிகப்பெரிய குறையாக நான் கருதுவது, இசுலாமிய பயங்கரவாதத்தின் அடிப்படை உறுதியாகவும், திருத்தமாகவும் கூறப்படவில்லை, அதாவது அதற்கு போதுமான காட்சிகளை அமைக்கவில்லை. வேறு வகையில் சொன்னால் அவர்களை, அதாவது நசீரையோ, மன்சூர் கானையோ பேச வைத்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு காட்சியை பயணம் என்கிற படத்தில் பேருக்கு வைத்திருப்பார்கள் ஆனால் அந்த படம் ஒரு மிதவாத RSS படம். இந்தப்படத்தை அவ்வாறு கூற இயலாது. இதை ஒரு மதச்சார்பற்றவரின் பார்வை என்று உறுதியாக கூறலாம்.

   திரைப்படத்தில் மேற்கூறியது ஒரு அம்சம் மட்டுமே இது தவிர இன்றைய மறுகாலனியாக்க இந்தியாவின் வேறு ’சில’ முகங்களையும் தமிழ் சினிமாவின் வரம்பிற்குள் நின்று இயக்குனர் கூறியுள்ளார். அந்த வகையில் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல இது வரவேற்க்கப்பட வேண்டிய படம் என்றே கருதுகிறேன்.

   • தமிழ்
    மன்னிக்கவும் எதோ தவறுதலாக எனது பதிவு இருமுறை ஆகிவிட்டது . நான் இப்போதுதான் பார்த்தேன் .இப்பொழுதும் சொல்கிறேன் இது மிதவாத இந்துத்துவ படம்தான் . உன்னைப்போல் ஒருவன் பார்த்து சில இசுலாமிய இளைஞர்களே படம் நடுநிலையாக இருப்பதாக கூறினார் எங்கள் பகுதி R S S காரனுக ஓசில டிக்கெட் வாங்கி குடுக்கும் வரை இந்த உண்மை உரைக்காமல் என் கருத்துடன் நீண்ட விவாதம் நடத்தியவர்கள்தான் அந்த அப்பாவி இளைஞர்கள். எனது கருத்து சரியாக இல்லை என்கிறீர்கள் . உங்களுக்கு எல்லாம் வெறும் செய்திகா இருந்த குண்டு வெடிப்பு எங்களுடைய வலிகள்(அதாவது கோவை மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின்) எனவே இங்கே என்ன நடந்தது உண்மையில் . படத்தில் காட்டுவது போல விநாயகர் ஊர்வலத்தில் ஒரு அரை அறைந்து அனுப்பி வைக்கும் காவலர்கள் அல்ல 97 நவம்பர் படுகொலையில் நா(ன்)ங்கள் கண்ட காவலர்கள் . அவர்கள் துப்பாக்கியுடன் முசுலீம் இளைஞர்களை துரத்தியவர்கள் சிக்கியவர்களை சுட்டுக்கொன்றவர்கள் . பார்க்க உண்மை அறியும் குழுவின் ரிப்போர்டில் முஸ்தபா எனும் இளைஞனுக்கு நேர்ந்த கொடுமையை . எனவே வானம் மீண்டும் வெற்றியடைந்த பார்ப்பனீயம்

 21. வினவு அண்ணன்… பயணம் படத்த பத்தின விமர்சனம் எழுதணும்’னு ஒரு வேண்டுகோள்.. அதுல எந்த தீவிரவாதத்த ஆதரிக்கிறீங்க.. எதை எதிர்க்கிறீங்க’னு பாக்கணும் அண்ணன்…