Friday, August 19, 2022
முகப்பு செய்தி வினவுக்கு நன்கொடை தாருங்கள்!

வினவுக்கு நன்கொடை தாருங்கள்!

-

அன்பார்ந்த நண்பர்களே,

வினவு ஒரு தொழில் முறை நிறுவனத்திற்குரிய வசதிகள் ஏதுமில்லாமலேயே தொழில் முறை நிறுவனம் போல செயல்படுகிறது. புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்திய பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம். தற்போது வாசகர் பார்வைகள் பத்தாயிரம் என்ற அளவை எட்டியிருக்கிறது. இது அதிகரிக்கும் போது தற்போதுள்ள சர்வர் வசதி போதாது என்பதால் டெடிகேட்டட் சர்வர் வசதியை பெறவேண்டியிருக்கும் என்று எமது தொழில் நுட்ப பணிகளை ஒருங்கிணைக்கும் தோழர் கூறுகிறார். அதுதான் தேவை என்றால் கூடிய விரைவில் மாதம் சில ஆயிரங்களை கட்டணமாக செலுத்த நேரிடும்.

இதுவரை வினவின் வடிவமைப்பிற்காக கணிசமாக செலவு செய்து முடித்திருக்கிறோம். இது போக கணினி பராமரிப்பு, அதிவேக இணையக் கட்டணம், வினவு தோழரின் குறைந்த பட்ச பராமரிப்பு என்ற வகையில் எமது மாதாந்திர செலவுகள் அதிகரித்திருக்கின்றன. மேலும் எழுத வாய்ப்புள்ள சில தோழர்களுக்கு கணினி இல்லாமல் இருப்பது, படம் வரைய வாய்ப்புள்ள தோழர்களுக்கு கணினி, இணைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது முதலான தேவைகளும் இருக்கின்றன.

வினவு குழுத் தோழர்கள் அனைவரும் பகுதி நேரமாகவே இந்த வேலையை செய்து வந்தாலும் யதார்த்தத்தில் இதுவே முழுநேர வேலையாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் வினவுக்கென்றே முழுநேரமாக வேலை செய்யும் தோழர்களை ஒதுக்க நினைத்திருக்கின்றோம். அப்போது அவர்களது பராமரிப்பு ஈடு கட்டப்பட வேண்டும். வினவு ஆசிரியர் குழுத் தேவைக்காக மாதந்தோறும் பல பத்திரிகைகள் வாங்குவது, தேவையான நூல்கள் வாங்குவது என்ற முறையிலும் நிதி தேவைப்படுகிறது.

இன்னும் ஆடியோ, வீடியோ முதலான வசதிகளை நாங்கள் கிரமமாக பயன்படுத்தவில்லை. அதற்கும் ஏற்பாடுகள் செய்து அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எமது அவா. எதிர்காலத்தில் வினவு பத்திரிகையாக மட்டுமில்லாமல் இணைய ஊடகத்தின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் எமது அமைப்பு வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.  இதற்கென்று சில இலட்சங்கள் வரையிலும் செலவாகுமெனத் தெரிகின்றது. தமிழக அரசியல் உலகில் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கும் இந்தப் பத்திரிகைகள் இப்போது உங்களுக்கு மாதந்தோறும் இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நேரடி ரிப்போர்ட்டுகளை அளிக்கிறோம். இனி அவற்றை அதிகரிக்க நினைத்திருக்கிறோம். இத்தகைய அளவில் நடைமுறைச் செலவுகள் அதிகரித்திருக்கின்றன.

கூடிய விரைவில் வினவு ஆங்கிலத் தளம் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். தேவையெனில் அதற்கு தொழிற்முறை மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவையும் எமது நடைமுறைச் செலவுகளை அதிகரிக்கும்.

தற்போது சில தோழர்கள், நண்பர்களின் பொருளாதார பங்களிப்பினாலேயே வினவு தளம் நடத்தப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் செலவினங்களால் அந்த பங்களிப்பு போராது என்பதாலேயே உங்களை நாடி வருகிறோம். மேலும் வினவில் எந்த விளம்பரமும் வெளிவராது என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக  இணையத்தில் காத்திரமான கருத்துக்களையும், சமூக அக்கறைக்குரிய செய்திகளையும், ஆய்வுகளையும் சுருங்கச் சொன்னால் சமூக மாற்றத்தையும், புரட்சிகர அரசியலையும் நம்பிக்கையுடன் படிப்பவர் மனதில் வளர்க்கும் இந்த தளத்திற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். ஒன்று நீங்கள் எங்களது அரசியலை, செயல்பாட்டை மேலும் தெரிந்து கொள்வதற்கு நேரடியாக எம்மை தொடர்பு கொள்வது, மற்றொன்று உங்களால் தீர்மானிக்கப்பட்ட நிதியுதவியை மாத நன்கொடையாகத் தருவது.

நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் எவ்வளவு தேவையானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஆதரவை பொருளாதார ரீதியில் தரவேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது.

எனவே உங்களது மாத குடும்பச் செலவுகளில் ஒரு அம்சமாக வினவுக்கு நன்கொடை என்பதையும் சேர்த்து விட்டு அமுல்படுத்துமாறு உரிமையுடன் கோருகிறோம். உங்களால் இயன்றதை நன்கொடை அளிப்பதை விட இன்னதுதான் என்று தீர்மானித்து அளிப்பதை விரும்புகிறோம். நன்கொடை அளிப்பதற்கு வசதியாக பே பால் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நட்பு வட்டாரத்தையும் நன்கொடை பட்டியலில் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். பதிவின் இறுதியில் தோன்றும் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION)  மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். தோள் கொடுங்கள்!

தோழமையுடன்
வினவு

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
 1. வினவு இவ்வளவு நாள் கேட்காததே ஆச்சரியம் தான். (துவக்கத்தில் ஒருமுறை கேட்டீர்கள் என நினைக்கிறேன்) நண்பர்களிடம் நன்கொடை கேட்டு, அனுப்புகிறேன். கிரடிட் கார்டு இல்லாத ஆள் நான். மணியார்டரோ அல்லது செக்கோ அனுப்ப வேண்டுமென்றால், எந்த முகவரிக்கு அனுப்புவது என தெரிவியுங்கள்.

  • அன்புள்ள போராளி,
   நீங்கள் கேட்ட விவரம்

   Bank – ICICI BANK
   Account Number – 612801107389
   Name – KANNAIAN RAMADOSS
   Type – SAVINGS
   IFSC – ICIC0006128

 2. வினவு ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக உருவெடுக்கிறதா?
  வினவுக்கு நன்கொடை அளிப்பதற்கும் அகரம் ஃபவுண்டேஷனுக்கு நன்கொடை அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

  • வினவுக்கு நன்கொடை அளித்தால் வருங்காலத்தில் பாட்டாளிவர்க்கம் இவ்வுலகை ஆளும்.
   அகரம் ஃபவுண்டேசனுக்கு நன்கொடை அளித்தால் பாட்டாளிவர்க்கத்தை பிச்சையெடுப்பவர்களாக மாற்றி விட்டு சினிமாகாரன்கள் உலகை ஆளுவார்கள்.
   இது தான் வித்தியாசம்,.

 3. ஒரு Business Consultant என்ற முறையில் எமது அரிய ஆலோசனைகள் :

  1.இந்த business model சரிப்படாது. வாசகர்களிடம் நேரடியாக கொடை பெரும் முறை வெற்றி பெற்றதாக தெரியவில்லை. சாருவின் தளம் உங்க தளத்தை விட அதிக வாசகர்கள் மற்றும் ரசிக / ரசிகைகள் கொண்ட தளம். ஆனாலும் சில்லரை புரளவில்லை.

  2. எனக்கு இந்த இணைய வாசகரக்ளின் சைக்காலஜி பற்றி கொஞ்சம் தெரியும். ஓசில தான் படிக்க முயல்வாக. நல்ல வேலைல இருந்துகிட்டு, கம்யூனிசத்தை பற்றி ஆமாம் சாமி போடுவார்கள். ஆனால் பத்து பைசா தர மனசு வராது. எதாவது பிச்ச காசு 500 ரூ ஒன் டைம் அனுப்புவாக. சிலர் தான். பணம் அளிக்க மனம்முடைய தோழர்கள் பலரும் இருக்காங்கதான். ஆனா அவர்களிடம் பணம் இல்லை.

  3. உங்களுக்கு ஆசை (ambition) அதிகமாகிவிட்டது. you are trying to bite off more than you can chew. இணையம் இல்லாத காலங்களிலும் உங்க பிரச்சாரம் விரிவாகத்தான் செய்தீக / செய்றீக. இணையத்தின் மூலம் புதுசா எத்தனை convertsகள பிடித்தீக என்று கணக்கு பாருங்க. cost / benefit analysis செய்து பாருங்க.

  4. இலவசமா கூகுள் நிறுவனம் பிளாக்குகள் நிறைய தர்ராங்க. ஒரு நாலு புதிய பிளாக் ஆரம்பிச்சுக்கங்க. ‘புதிய ஜனனாயகம்’ போன்ற இதழ்களுக்காக, ஒன்றும், படங்கள், போராட்ட அறிவிப்புகளுக்காக ஒரு பிளாகும் ஒதுக்கிக்கலாம். vinavu.blogspot.com என்று மெயின் பிளாக்கில் உங்க பதிவுகளை ஏத்துங்க. பின்னூட்டங்களை மாடரேசன் செய்துக்கலாம். இதுவே போதும். செலவு மிச்சம்.

  5. எல்லா பிளாகுகளுக்கும் லிங்க எல்லா பிளாகுகளலிலும் அளிக்கலாம்.

  6. ஒரு நாலாயிரம் செலவில் ஒரு டெர பைட் அளவில் external hard disk drive வாங்கி, முழு பேக் அப் எடுத்து சேமித்து வச்சுக்கங்க. இப்போதைக்கு இது போதும்.

  7. பதிவுகளை ஜிமெயிலில் நேரடியாக டைப் செய்து, மின்னஞ்சல மூலம் வலையேத்த முடியும். லேபிள்களும் இணக்க முடியும்.

  8. செலவு மற்றும் உழைப்பை வேறு உருப்படியான பிரச்சார உத்திகளில் செலவு செய்வதே பயன் அளிக்கும். இதற்க்கு மேல் இணையத்தில் பெருசா ஒன்னும் சாதிக்க முடியாது. உங்க கூட நேரடியாக களப்பணிக்க வரும் தோழர்கள் பெரும்பாலும் இணையம் பார்ப்பவர்கள் அல்ல. இணையத்தின் மூலம் உங்களிடம் இப்படி களப்பணிக்கு வந்தவர்கள் எத்தனை சதம் என்று அலசுங்கள்.

  9. வேறு பல நல்ல strategies உள்ளன. ’காசுக்கு ஏத்த பணியாரம்’ என்ற முதுமொழி உண்டு !

  • அதியமான் நீங்க ஜாதகம்/நேரம் கணித்து குறி சொல்வதையெல்லாம் எத்தனாந்தேதியிலிருந்து பிசினஸ் கன்சல்டன்சியில் சேத்தாங்க? கிண்டலுக்கு கேக்கல, சீரியசாவே இந்த சமூகத்தை புரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்

   • சரி, பொறுத்திருந்து பாருங்க. எத்தன பேர் பணம் அனுப்புறாக என்று ; மொத்தம் எத்தனை சேருது என்றும். இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து பாருங்க.

    //கிண்டலுக்கு கேக்கல, சீரியசாவே இந்த சமூகத்தை புரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்///

    அதெல்லாம் உமக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது கேள்விக்குறி.

   • நீ கமெண்ட் எழுதறத நிருதீட்டு காச அனுப்பு …அப்புறம் கேள்வி கேக்கலாம் ..வினவு இந்தால்ட மொதல் காச வாங்கு

  • மேலும் வாசகர்களின் சமூக பங்களிப்பு பற்றிய உங்கள் கருத்து யதார்த்த நிலைமைகளை பரிசீலிக்காமல் சில ஆண்டுகளாக நீங்கள் சொல்லிவருகிற உங்கள் மனதில் உள்ள கருத்து/ ஆசையையே மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். அது என்றைக்குமே பலிக்க போவதில்லை. ஒருவேளை உங்கள் ஆருடம் பலித்திருக்குமாயின் வினவு வாசகர் மற்றும் பங்களிப்பாளர் எண்ணிக்கை கீழேயல்லவா போயிருக்கவேண்டும்

   நடைமுறை அரசியலில் இணைந்து செயல்படமுடியாத நிலை வாசகர்களுக்கு இருக்கலாம். அதனால் அவர்களை பிற்போக்கு சக்திகளாக நீங்கள் கருதக்கூடாது. முற்போக்கான அம்சங்களை அவர்கள் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கின்றனர். விக்கிபீடியா போன்ற தளங்களுக்கு முதுகெலும்பாய் விளங்குவது வாசகர் கொடைதான். உலகெங்கும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு என்றுமே ஆதாரமாய் இருந்து வருவதும் அதுவே.

   மற்றபடி உங்கள் ஆலோசனைகளை மேலோட்டமாகவும், உழைப்பு இல்லாமலும், விவரங்களின் போதாமையோடும் இருக்கின்றன. நவீன முதலாளித்துவத்தின் ‘முதுகெலெம்பான’ ஜோதிட ஆராச்ச்சீயில் நிபுணத்துவம் பெற்ற நீங்கள் வினவு துவக்கப்பட்ட ஜூலை 18 2008 நாளை வைத்து வினவின் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பாட்டாளிகளை உருவாக்கிய முதலாளித்துவம் தனது குழந்தைக்கு இந்த உதவியைக்கூட செய்யாதா என்ன 🙂

   • //மற்றபடி உங்கள் ஆலோசனைகளை மேலோட்டமாகவும், உழைப்பு இல்லாமலும், விவரங்களின் போதாமையோடும் இருக்கின்றன///

    மிக்க நன்றி. சரி நான் சொன்னது வினவு குழுவினருக்குதான். உம்மை போன்ற ’மேதைகளுக்கு’ அல்ல. அவர்கள் வேறு, நீர் வேறு தானே. அவர்களிடமே பேசிக்கிறேன்.

    //நடைமுறை அரசியலில் இணைந்து செயல்படமுடியாத நிலை வாசகர்களுக்கு இருக்கலாம். அதனால் அவர்களை பிற்போக்கு சக்திகளாக நீங்கள் கருதக்கூடாது. முற்போக்கான அம்சங்களை அவர்கள் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கின்றனர். //

    ஏம்பா, நான் அப்படி எப்ப சொன்னேன். இப்படி இஸ்டத்துக்கு அனுமானித்துக் கொள்ளுவது தான் உமது வாடிக்கை. முதல்ல இந்த ’முற்போக்கு/பிற்போக்கு’ என்று black and white ஆக எல்லோரையும் வகைபடுத்தும் வியாதியிலிருந்து விடுபடுக.

    • ஏம்பா, நான் அப்படி எப்ப சொன்னேன் என கேட்கிறீர்களே அதியமான்

     @@@@@@
     ஓசில தான் படிக்க முயல்வாக. நல்ல வேலைல இருந்துகிட்டு, கம்யூனிசத்தை பற்றி ஆமாம் சாமி போடுவார்கள். ஆனால் பத்து பைசா தர மனசு வராது. எதாவது பிச்ச காசு 500 ரூ ஒன் டைம் அனுப்புவாக.
     @@@@@@

     எவ்வளவு கேவலாம பேசியிருக்கீங்க பாருங்க… இதைத்தான் கொஞ்சம் கவுரவமா சொன்னேன்

     போகட்டும், என்னோட கோரிக்கை என்னாச்சு, கணிச்சி குறி சொல்வீங்கதானே

     • ? : இது ஒன்னும் கேவலமான பேச்சு கிடையாது. உண்மையதான் சொன்னேன். எம்.என்.சி கம்பெனிகளில் ‘நல்ல’ வேளையில் இருந்துக்கிட்டு, கம்யூனிசத்த ‘ஆதரிக்கரதா’ சொல்லிக்கிட்டு, ஆனால் யாருக்கும் பைசா நன்கொடை தர மனமில்லாதவக ஏராளம் தான். ஆனா அதுக்காக அவங்கள ‘பிற்போக்கு’ என்று எல்லாம் சொல்லவில்லை. இதெல்லாம் மீண்டும் மீண்டும் உமக்கு ‘புரிய’ வைக்க வேண்டியிருக்கே. ஆள விடுங்கப்பா. பிற்போக்கு / முற்போக்கு பிசினஸ் எல்லாம் பழைய கதை.

      வினவு : நான் சொல்ல வந்ததை வேறு விதமாக சொல்கிறேன் : பெரியார் இயக்கதிற்க்கா செலவு செய்த முறை தான் சரியானது. மிக சிக்கனமாக, தேவைக்கு மட்டும் மிக மிக எளிமையாகவே செய்வார். கஞ்சன் என்ற பெயர் எடுத்தவர். உங்க குழுவும் ஏறக்குறைய அப்படி தான் செயல் படுகிறீக. நன்று. இணைய தளம் மிக எளிமையாக, basic ஆக இருந்தாலே படிக்கிறகவ எப்படியும் படிப்பாக. பெரிய ஜிகினா வேலைகள், செலவு மிக அதிகம் செய்து, ஏகபட்ட features எல்லாம் அளிக்கனும் என்று கட்டாயமில்லை. பதிவுகளை நேரடியாக படிப்பவர்கள் விகிதம், ரண்டு பக்கமும் இருக்கும் ஏரளாமான லேபில்களை தேடி, படிப்பவர்கள் விகிதம் : ஒப்பிட்டு பார்த்துக்கங்க.

      பிளாகரில் எளிமையா பதிவுகள் இருந்தாலே போதும் என்பதே எம் அபி. செலவு செய்ய பணம் தாரளமாக இருந்தால் உங்க இஸ்டம் போல் செய்யலாம். ஆனால் அது சிரமம் என்பதால் சொன்னேன்.

      மேலும் இணைய தளத்தை படித்துவிட்டு, உங்க இயக்கத்தில் சேருபர்களின் எண்ணிக்கைய ஒப்பிட்டு பார்க்கவும். பெரும்பாலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வாசகர்களுக்கு உங்க ’பிரச்சாரத்தை’ கொண்டு செல்ல வேண்டியதுதான். அதற்க்கு பெரும் செலவு, மற்றும் உழைப்பு தேவை இல்லை என்பதும் ஒரு கோணம். இதை உண்மையாக, அக்கறையாக தான் சொல்கிறேன். உள்னோக்கம், கிண்டல் எல்லாம் இல்லை.

    • எபா அநாகரீகமான் போதும்பா, உன்னோட டகாலடியெல்லாம் நிறுத்துபா, குய்ச்சி, குய்ச்சி உனக்கு பிரசர் ஏறி போச்சுபா, ரீல் அந்து போச்சுபா, எங்யாவது புள்ளயார் கோயில்ல போயு கவுந்தடிச்சி படுபா.

  • ///1.இந்த business model சரிப்படாது. வாசகர்களிடம் நேரடியாக கொடை பெரும் முறை வெற்றி பெற்றதாக தெரியவில்லை. சாருவின் தளம் உங்க தளத்தை விட அதிக வாசகர்கள் மற்றும் ரசிக / ரசிகைகள் கொண்ட தளம். ஆனாலும் சில்லரை புரளவில்லை.///

   சாரு தள ரசிகர்கள் சுய சொரிதலுக்காகவும், சிங்கி அடிக்கவும் வாசிப்பவர்கள். வினவின் வாசகர்கள் சமுதாய மாற்றத்திற்காக படிப்பவர்கள். அதற்கு தான் ஏதேனும் ஒரு வழியில் தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக நன்கொடை வழங்குவர்.

   ////2. எனக்கு இந்த இணைய வாசகரக்ளின் சைக்காலஜி பற்றி கொஞ்சம் தெரியும். ஓசில தான் படிக்க முயல்வாக. நல்ல வேலைல இருந்துகிட்டு, கம்யூனிசத்தை பற்றி ஆமாம் சாமி போடுவார்கள். ஆனால் பத்து பைசா தர மனசு வராது. எதாவது பிச்ச காசு 500 ரூ ஒன் டைம் அனுப்புவாக. சிலர் தான். பணம் அளிக்க மனம்முடைய தோழர்கள் பலரும் இருக்காங்கதான். ஆனா அவர்களிடம் பணம் இல்லை./////

   உங்கள மாதிரி பெரிய முதலாளிகளுக்கு 500 ரூ பிச்சைக் காசு தான். அதற்காக எல்லாருக்கும் அப்படியே என்று எண்ணக் கூடாது. சைக்காலஜி என்ற பெயரில் ஆருடம் கூறுவதை நிறுத்திக் கொள்ளவும்.

   /////3. உங்களுக்கு ஆசை (ambition) அதிகமாகிவிட்டது. you are trying to bite off more than you can chew. இணையம் இல்லாத காலங்களிலும் உங்க பிரச்சாரம் விரிவாகத்தான் செய்தீக / செய்றீக. இணையத்தின் மூலம் புதுசா எத்தனை convertsகள பிடித்தீக என்று கணக்கு பாருங்க. cost / benefit analysis செய்து பாருங்க.//////

   இங்க பிசினஸை வளர்க்க யாரும் நிதி கேட்கவில்லை . ஆகையால் அது தேவைப்படும் இடத்தில் தங்கள் திருவாய் மலரவும்.

   /////4. இலவசமா கூகுள் நிறுவனம் பிளாக்குகள் நிறைய தர்ராங்க. ஒரு நாலு புதிய பிளாக் ஆரம்பிச்சுக்கங்க. ‘புதிய ஜனனாயகம்’ போன்ற இதழ்களுக்காக, ஒன்றும், படங்கள், போராட்ட அறிவிப்புகளுக்காக ஒரு பிளாகும் ஒதுக்கிக்கலாம். vinavu.blogspot.com என்று மெயின் பிளாக்கில் உங்க பதிவுகளை ஏத்துங்க. பின்னூட்டங்களை மாடரேசன் செய்துக்கலாம். இதுவே போதும். செலவு மிச்சம்.///

   ஏன் வினவு தோழர்கள் வாரம் இரண்டு நாள் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கொடுக்கலாமே. இன்னும் செலவு மிச்சமாகும்.

   ////5. எல்லா பிளாகுகளுக்கும் லிங்க எல்லா பிளாகுகளலிலும் அளிக்கலாம்.////

   ஓ… அப்படியா ?.. இவ்வளவு நாள் இந்த சேதி எங்களுக்கு தெரியாம போச்சே!!..

   ////6. ஒரு நாலாயிரம் செலவில் ஒரு டெர பைட் அளவில் external hard disk drive வாங்கி, முழு பேக் அப் எடுத்து சேமித்து வச்சுக்கங்க. இப்போதைக்கு இது போதும்./////

   தங்களது 4ஆம் எண் கருத்துக்கு இட்ட பதிலே இதற்கும்..

   ///7. பதிவுகளை ஜிமெயிலில் நேரடியாக டைப் செய்து, மின்னஞ்சல மூலம் வலையேத்த முடியும். லேபிள்களும் இணக்க முடியும்.////

   பரவாயில்லையே .. நிறைய மேட்டர் தெரிஞ்சு வச்சிருக்கிங்க …

   ////8. செலவு மற்றும் உழைப்பை வேறு உருப்படியான பிரச்சார உத்திகளில் செலவு செய்வதே பயன் அளிக்கும். இதற்க்கு மேல் இணையத்தில் பெருசா ஒன்னும் சாதிக்க முடியாது. உங்க கூட நேரடியாக களப்பணிக்க வரும் தோழர்கள் பெரும்பாலும் இணையம் பார்ப்பவர்கள் அல்ல. இணையத்தின் மூலம் உங்களிடம் இப்படி களப்பணிக்கு வந்தவர்கள் எத்தனை சதம் என்று அலசுங்கள்./////

   அலசுவதற்கு சோப்புத்தூள் தேவை .. தங்களது மண்டையில் இருந்து கொஞ்சம் எங்களுக்குத் தருகிறீர்களா ?..

   ////9. வேறு பல நல்ல strategies உள்ளன. ’காசுக்கு ஏத்த பணியாரம்’ என்ற முதுமொழி உண்டு !/////

   இதன் மூலம் திரு அதியமான் அவர்கள் கூறவரும் பொன்னான கருத்து ?..

   • சரி, பொறுத்திருந்து பாருங்க. எத்தன பேர் பணம் அனுப்புறாக என்று ; மொத்தம் எத்தனை சேருது என்றும். இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து பாருங்க. ஒரு முறை அனுப்பவது போதாது, ரெகுலராக மாத செலவுக்கு வேண்டும் என்றும் வேண்டுகோள். Donar fatigue என்று ஒன்று உண்டு. அதை அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்.

    சரி, எனது கருத்துகள்/ அனுமானங்கள் தவறாக போய் விட்டால் எனக்கு மகிழ்ச்சியே.

    பகத் சிங் : வினவு குழு இதற்க்கு பதில் சொல்வார்கள், தேவை பட்டால். உம்மை போன்ற போலி பகத் சிங்களுக்கு தொடர் விளக்கம் அளிக்க தேவையில்லை எமக்கு.

    • போலி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப் பட்டிருக்கிறேன். போலி பகத் சிங்கைக் கண்டு பிடித்த அண்ணன் அதியமான் .. வால்க …

 4. வினவுவை கட்டணத்தளமாக ஆக்கிவிடலாம்,நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் தேவையானது என எண்ணும் சுமார் 10,000 பேர் படிக்கும் வினவின் தளத்தை கட்டணத்தளமாக ஆக்குவதே சால சிறப்பு,இன்னும் 6 மாதத்தில் தினமலரையே கட்டணத்தளமாக ஆக்கப்போகிறார்கள் என்று அதன் சமீப சர்வே சொல்லுகிறது.வினவுவை ஆக்க என்ன தடை?எல்லோரும் பெருமையுடன் லாகின் செய்து படிப்பர்.

  • இல்லை. கட்டண தளமாக மாற்றினால் படிப்பவர்கள் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துவிடும் என்பதே நிதர்சனம். காசு கொடுத்து படிப்பவர்கள் எண்ணிக்கை will always be only a fraction of the current readers.

  • வினவு ப்ளாக் ah மூடறதுக்கு ஐடியா குடுக்கிறார் …நம்பீராத

 5. //வினவுவை கட்டணத்தளமாக ஆக்கிவிடலாம்,நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் தேவையானது என எண்ணும் சுமார் 10,000 பேர் படிக்கும் வினவின் தளத்தை கட்டணத்தளமாக ஆக்குவதே சால சிறப்பு,இன்னும் 6 மாதத்தில் தினமலரையே கட்டணத்தளமாக ஆக்கப்போகிறார்கள் என்று அதன் சமீப சர்வே சொல்லுகிறது.வினவுவை ஆக்க என்ன தடை?எல்லோரும் பெருமையுடன் லாகின் செய்து படிப்பர்.//

  Are you joking?

 6. வங்கி அக்கவுண்ட் நம்பர் கொடுத்தால் நேரடியாக அனுப்ப விரும்பும், கிரிடிட் கார்டு வசதி இல்லாத, பேபால் பயன்படுத்தாதா தோழர்கள்/நண்பர்களுக்கு வசதியாக இருக்கும்.

 7. உங்களுக்கு நன்கொடை கொடுத்தா வருமானவரி விலக்கு கிடைக்குமா?

 8. Dedicated server-ன்னு போயி முதலாளித்துவத்தின் சூழ்ச்சி வலையினில் வீழ்ந்து விடாதீர்கள். அப்புறம் அவுங்க எப்ப வேணும்னாலும் server-ஐ முடக்கி உங்களுக்கு ஆப்படிக்கலாம். Dedicated server மட்டுமில்ல data back-up, fail-over, load-balancing, business-continuity oops.. disaster-recovery, denial-of-service attack பத்தியும் யோசிக்கணும். ஒரு நல்ல IT architect தோழரிடம் ஆலோசனை கேளுங்கள்.

  அதியமான் சொல்றாப்புல இலவசத் தளங்களைப் பாவிப்பது உங்கள் செயல்பாட்டை என்றைக்கும் முடக்காது.

 9. கன்டிப்பாக அனுப்பனும் .,.,.,.,.,னிரய..,.,.,. வரும் .,.,.,சம்பலம் கிடைக்கட்டும் .,.,முலுவதும் உமக்கெ .,.,.,.,எல்லார் இடதிலும் சொல்லுரென் .,.,.,.,ஒ என் அருமை தமில் அன்பனெ .,.,சொல்லுஙல் .,சொல்லுஙல் .,.,.அனுப்புஙல்.,அனுப்புஙல் .,.,.,னல்ல விசயம் .,.,.

 10. ::கேள்வி கேள் கேலி செய்:: இதோ ஒரு டிப்ஸ். உங்கள் விளம்பரத்தில் ‘உண்டியல்’ படம் போட்டிருந்தால் கச்சிதமாக இருக்குமே. டொனேட் என்று ஏன் ஆங்கிலத்தில். குறியீடு முக்கியம் தோழர். .ஹி.ஹி.ஹி. நன்றியுடன் முரசு.

  • அணுகுமுறைகளின் அனைத்து அம்சத்திலும் உழைக்கும் வர்க்கமும், மேல்தட்டு நடுத்தரவர்க்கமும் வேறுபடவே செய்கின்றது.

 11. .

  வினவு குழுவின் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளலாமா?

  நீங்கள் கொடுத்துள்ள https://www.vinavu.com/we/
  என்ற இணைப்பில் நீங்கள் “மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள்” என்று சொல்லியுள்ளீர்கள்.

  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கொள்கைதான் உங்களின் கொள்கையா(100%) அல்லது அதில் இருந்து எந்த இடத்திலாவது வேறுபடுகிறீர்களா?

  அப்படி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கொள்கைதான் உங்களின் கொள்கையும் (100%) என்றால், “மக்கள் க‌லை இலக்கியக் கழகத்தின் கொள்கை” யை விளைக்கும் அவர்களின் இணையச் சுட்டி தந்து உதவ முடியுமா?

  Why do they exist as a organization?

  .

  • எல்லா மண்ணும் மண்ணே என்றும், மண் எல்லாம் சில பல வேதியியல் மூலகங்களால் ஆனது என்றும் விஞ்ஞானப் பூர்வமாகவே புரிந்துகொண்டு, சிறப்புத்தன்மைகளையே முதன்மைத் தன்மையாகப் புரிந்துகொள்ளாமல் செயலாற்றுபவர்கள் என்று எனக்கு புரிதல்

   • கொள்கைகள் எனக் குறிப்பிட்ட தலைப்பில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை.

  • இதுவரை 800க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியாயிற்று, ஒரு இயகத்தின் கருத்தும் அதன் சார்பு நிலையும் அதன் கொள்கையிலிருந்து தான் வரும். கட்டுரைகள் வாசித்தால் தெரிந்துவிட போகிறது. அதை தொடர்ந்து வாசிக்க முடியாத்வர்களுக்கும் புதியவர்களுக்கும் தான் நீங்கள் சொன்ன சுட்டி. வினவு மார்க்ஸியெ-லெனினிய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட இயக்கம்.

   மேலும் தகவல்கள் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளுங்கள், அனைத்தையும் எழுதியே விள‌க்க முடியுமா என்று தெரியவில்லை, தொடர்புகொண்டாள் மேலதிக தகவல் பெறவும் விவாதிக்கவும் வசதியாக இருக்கும்.

   • ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
    ————————————–
    @ அக்னிபார்வை
    கருத்து1:
    //இதுவரை 800க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியாயிற்று, ஒரு இயகத்தின் கருத்தும் அதன் சார்பு நிலையும் அதன் கொள்கையிலிருந்து தான் வரும். கட்டுரைகள் வாசித்தால் தெரிந்துவிட போகிறது. //

    கருத்து2:
    //அனைத்தையும் எழுதியே விள‌க்க முடியுமா என்று தெரியவில்லை//

    கருத்து1 மற்றும் கருத்து2 ம் நீங்கள் சொன்னதுதான். ஒரு இலட்சம் கட்டுரை எழுதினாலும் விளக்கமுடியாது என்றால் ஏன் எழுத வேண்டும்? அல்லது அப்படி விளக்கமுடியாத அளவிற்கு என்ன கொள்கை?

    ———————————–

    இயக்கம் என்றால் கொள்கை இருக்க வேண்டும்.
    கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்வது , கதையைப் படித்து தெரிந்து கொள்வது அனுமானங்களைக் கொடுக்குமே தவிர “இதுதான் நான்” என்று சொல்லாது.

    ———————————
    @ அக்னிபார்வை
    //வினவு மார்க்ஸியெ-லெனினிய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட இயக்கம்.//

    அக்னிபார்வை, இது உங்கள் கருத்தா?
    நீங்கள் வினவு குழுவின் சார்பாகப் பேசினால், வினவு அடையாளத்திலேயே பதில் சொல்லலாம். வினவின் பக்கத்தில் அவர்கள் நீங்கள் “மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள்” என்றுதான் சொல்லியுள்ளார்கள்.

    நீ என்ன வேலை செய்கிறாய் என்றால், அப்பவிற்கு உதவியாய் இருக்கேன் என்று சொல்வதும் அப்பா என்ன செய்கிறார் என்றால் அப்பாவை பார்த்து தெரிந்துகொள் என்று சொல்வதும் வாழைப்பழக் கதை போன்றது.

    “மக்கள் கலை இலக்கியக் கழகம்” இணையச் சுட்டி இருந்தால் கொடுங்கள். ஏன் என்றால் வினவிற்கு தனிக் கொள்கை இல்லை. மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் ஆதரவாளர்கள்தான் சொல்லியுள்ளார்கள்.

    ——————————————-

    @ ரிஷி
    விக்கி பக்கம்….. இது பொதுவான தளம் யார் வேண்டுமானலும் ஒன்றை உருவாக்கி எது வேண்டுமானாலும் சொல்லலாம்.

    இதுதான் அங்கே கொள்கையாகச் சொல்லப்படுகிறது.
    ********************************************
    புதிய பொருளாதாரக் கொள்கையை மறுகாலனியாக்கம் என்றும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளின் செயல்பாடுகளை பார்ப்பன பாசிசம் என்றும் வரையறுக்கும் இவ்வமைப்பு, மேற்குறிப்பிட்ட போக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.
    *************************************************

    இதுதான் கொள்கையா? இதில் எங்கே கம்யூனிசம் வருகிறது?

    ———————————-

    ரிஷி மற்றும் அக்னிபார்வை உங்களில் உரையாடலுக்கு க்கு நன்றி.
    நேரடியாக வினவு இதுதான் எங்கள் கொள்கை என்று “மக்கள் கலை இலக்கியக் கழகம்” சுட்டி அல்லது கொள்கைப் புத்தகத்தின் பிரதியை இணையத்தில் போடாதவரை இது குறித்து பேச ஒன்றும் இல்லை.
    ——————————–

    • கல்வெட்டுஜி, வினவு அதன் வலைத்தள பராமரிப்புக்காகவும், அதை முழுநேரமாக நடத்தும் தோழர்களின் பராமரிப்புக்காகவும், புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்காகவும், தொழில்முறை மொழிபெயர்ப்பாளருக்கு கூலி கொடுப்பதற்க்காகவும் நன்கொடை கேட்கிறார்கள். அதாவது 3 வருடமாக நடத்திவரும் வினவு தளத்தை காட்டி தொடர்ந்து இதை இலவசமாக நடத்தவும், இதை மேன்மையடையச் செய்யவும் ஆதரவு கேட்கிறார்கள், இதற்கு எதற்காக மகஇகவின் கொள்கை கோட்பாடு உங்களுக்குத் தேவைப்படுகிறது? அவர்கள் மகஇக வளர்ச்சி நிதி கேட்டிருந்தாலாவது உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது……

     • @ கேள்விக்குறி,

      //, இதற்கு எதற்காக மகஇகவின் கொள்கை கோட்பாடு உங்களுக்குத் தேவைப்படுகிறது? அவர்கள் மகஇக வளர்ச்சி நிதி கேட்டிருந்தாலாவது உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது……//

      https://www.vinavu.com/we/ என்ற இணைப்பில் “மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள்” என்று உள்ளது.

      வினவு என்ற குழு தங்களின் கொள்கையாக மகஇக வைச் சுட்டும் போது மகஇக வின் கொள்கையை அறிந்து கொள்வது என்னளவில் அவசியம்.

      தெரிந்து என்ன செய்யப்போகிறேன் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் அதற்கான பதில் என்னிடம் இல்லை. ஆனால் கொள்கை என்ன என்று தெரியாமல் பொது இயக்கங்களில் பங்கெடுப்பது அல்லது நேரமோ / பணமோ கொடுப்பது இல்லை என்பது என்னளவில் நான் வைத்துக்கொண்ட நிலைப்பாடு.

      தனிநபர் அல்ல ஒரு இயக்கம் / குழு என்றால் என்றால் தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், கொள்கைகளை செயல்படுத்த தெளிவான திட்டமிட்ட பாதையும் , அப்படி பாதை தவறினால் செய்யப்படக் கூடிய சிர்திருத்த திட்டங்களும் பொதுவெளியில் (உதாரணம்: இணையத்தில்) அறிவிக்கப்படவேண்டும்.

      நான் வெசயகாந்திடமோ அல்லது காங்கிரசிடமே இதைக் கேட்கவில்லை. அவர்கள் அதைத்தாண்டிய புனிதர்கள்.

      வினவின் மீது கேள்வி கேட்பது என்பது மேலும் அறிய ஆவலும், உங்களின் அவர்களின் மீதுள்ள சின்ன நம்பிக்கையின்பால் ஏற்பட்டது.

      **

    • கல்வெட்டு நான் எழுதியே விள‌க்க முடியுமா என்று சொன்னது கொள்கையையல்ல கொள்கையை பற்றிய விவாதங்களை, அதை சரியாக எழுதாது என் தவறு தான்.

 12. ’நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் தேவையானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஆதரவை பொருளாதார ரீதியில் தரவேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது.’
  அதை எப்படி நீங்கள் முடிவு செய்ய முடியும்.வினவு இருக்க வேண்டும்,வளரட்டும் நல்லது ஆனால் அதற்கு காசு தர நான் தயாரில்லை என்று கூட சொல்ல முடியுமே.அப்படி நான் காசு தராவிட்டால் வினவு நின்றுவிடுமானால் நின்று போகட்டும் என்றும் சொல்ல முடியுமே.
  கீற்று தோழர்கள் கீற்று தொடர வேண்டும், உதவிடுக என்று நிதி உதவி கேட்டார்கள், எவ்வளவு கிடைத்தது, எத்தனை பேர் கொடுத்தார்கள்,எத்தனை பேர் படித்தார்கள் என்று கீற்று நந்தனிடம் கேட்டுப் பாருங்கள்.

 13. வினவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். விஜயாகாந்திடம் அடிபட்ட வேட்பாளர் தன்னை விஜயகாந்த் அடிக்கவில்லை என்று குழைந்தது நமக்கு நினைவிருக்கிறது. பதிவுலக விஜயகாந்த் ஜெயமோஹனிடம் அடிபட்ட கே. ஆர். அதியமானின் savage glee ஐ இங்கு பார்க்கிறேன். நிச்சயமாக நிதி பங்களிப்பு செய்கிறேன்.

 14. தோழரே. இங்கே கிண்டலடிக்கிறவங்களை நினைச்சா ஆத்திரமும் கோவமும் தான் வருது. ஆனா ஒரு வகையில அதியமான் சொல்ராப்பல என்னைப் போல பலர் ஓசியில படிச்சிட்டு ஒன்னும் பன்னாம விடுர கும்பல் தான். அதுக்கு வெட்கப்படவேண்டியது நாங்களே தவிர நீங்க இல்ல. எனக்கு கம்யூனிசத்த அப்படியே ஏத்துக்கரதுல ஒப்புதல் இல்ல. இருந்தாலும் இன்னைய தேதிக்கு உங்களோட களப்பனி நிச்சயம் தேவை. உங்களோட மற்றும் புதிய கலாச்சார இதழ்ல வெளிவந்த எத்தனையோ கட்டுரைகள் மிக ஆழ்ந்த கருத்தோட வெளிவந்திருக்கு. தயவு செய்து உங்களோட வங்கி கனக்கு எண் மற்றும் விவரங்கள் அனுப்புங்க. நானும் தொகை அனுப்புறேன். என்னோட நண்பர்களையும் உற்ச்சாகப்படுத்துறேன்.

 15. உங்கள் தளம் குறித்த நேர்,எதிர் பார்வை கொண்ட காரணத்தால் நான் தொடர் வாசகனல்ல.இருந்தாலும் உங்கள் சமூக அக்கறை குறித்த காரணத்தால் இரண்டு முறை Paypal மூலமாக பணம் அனுப்பியுள்ளேன்.

  பணம் பெற்ற விபரங்களை தனி மடலுக்கு அனுப்பவும்.

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 16. வினவு இவ்வளவு நாள் கேட்காததே ஆச்சரியம் தான். தோழரே. ஆனா ஒரு வகையில அதியமான் சொல்ராப்பல என்னைப் போல பலர் ஓசியில படிச்சிட்டு ஒன்னும் பன்னாம விடுர கும்பல் தான். அதுக்கு வெட்கப்படவேண்டியது நாங்களே தவிர நீங்க இல்ல. எனக்கு கம்யூனிசத்த அப்படியே ஏத்துக்கரதுல ஒப்புதல் இல்ல. இருந்தாலும் இன்னைய தேதிக்கு உங்களோட களப்பனி நிச்சயம் தேவை. உங்களோட மற்றும் புதிய கலாச்சார இதழ்ல வெளிவந்த எத்தனையோ கட்டுரைகள் மிக ஆழ்ந்த கருத்தோட வெளிவந்திருக்கு. தயவு செய்து உங்களோட வங்கி கனக்கு எண் மற்றும் விவரங்கள் அனுப்புங்க. நானும் தொகை அனுப்புறேன். என்னோட நண்பர்களையும் உற்ச்சாகப்படுத்துறேன். என் கருத்துகல் சொல்ல தமிழ் சரியா வரவில்லை

 17. உங்கள் இணையத்தளத்தையே கொண்டு நடத்த வக்கில்லாமல் பிச்சை கேட்டும் நீங்கள் எப்படி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த போகின்றீர்கள்? உங்களை போன்ற திட்டமிடல் மற்றும் சரியான இலக்கு இல்லாதவர்களின் கருத்துக்களைக் கேட்கும் சமூகம் எப்படி உருப்படும்? உங்களைப்போல மற்றவர்களையும் பிச்சை எடுத்து முன்னுக்கு வரவேண்டும் என்று செல்கின்றீர்களா? இது தான் கம்யூனிசமா?

  • தங்களால் இதே கேள்வியை சர்வ வல்லமைப் பொருந்திய கடவுளர்களை நோக்கி எழுப்பமுடியுமா!

  • நன்கொடைக்கும் பிச்சைக்கும் வேறுபாடு தெரியாதா,
   கோயில் மணியாட்டி பார்ப்பான் வாங்குகிறானே அதுதான் பிச்சை. இணையதளத்தில் புரட்சிகர கருத்துக்களை பரப்புரை செய்வதற்காக வினவு கேட்பது நன்கொடை இது கம்யூனிச அமைப்புகளுக்குரியதுதான், உமது கேள்விய காஞ்சி பீடை சங்கராச்சாரிக்கு அனுப்பு அவனுக்குரியதுதான் உன்னோட கேள்வி.

  • தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க.

   அமெரிக்காவுல கழுதைக் கட்சி, யானைக் கட்சி தொடங்கி இங்குள்ள அய்.ஜே.கே கட்சி வரைக்கும் நன்கொடை வாங்கித்தான் அரசியல் பணி செய்றாங்க. யாரும் கைக்காசப் போட்டு கட்சி நடத்துறதில்ல.

   சமூகப் பங்கில்லாத எந்த இயக்கமும் விரைவில் ஒழிந்துவிடும்.

   நிற்க.

   அதே நேரம் தெருவில் நடந்து செல்வோரிடம் கழுத்தில் துண்டு போட்டு வசூலிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

  • சமூக இயக்கத்திற்கான கொடைதான் நன் கொடை.

   மணியாட்டக் கொடுக்கும் பணம் கொடை அல்ல . அப்படிச் சொல்லுவதே அபத்தம். அது விலை. அதாவது தனது நலனுக்கு அல்லது தனது கோரிக்கைக்கு சாமியை செவிமடுக்க வைக்கும் மணியாட்டிக்கு( முகவ‌ர் அல்லது ஏஜண்ட்)கொடுக்கும் முகவர் கமிசன் அல்லது ஊதியம்ம்.

   மகக்ளுக்கான இயக்கம் மக்களின் நேரடிப் பங்கில் செயல்பட வேண்டும். அந்த வகையில் மக்களிடம் நேரடியாகப் பணம் கேட்கும் முறை மட்டுமே சரியானது.

   முதலாளிகளிடம் கேட்டுப் பெற்றால் அது சலுகை எதிர்பார்த்துக் கொடுக்கபப்டும் இலஞ்சம். ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்.

   மக்க‌ளிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி கேட்பதில் இரண்டு நல்லது.
   1. மக்களையும் அதில் பங்காளிகளாக ஆக்குவது.
   2. நேர்மையான செயல்பாடு. முதலாளிகளிடம் அடியக இருக்கத் தேவை இல்லை.
   .

 18. Vinavu,

  Nice talking with you at uncomfortable time(I am Really Sorry).I get u back after…(paid your work).Insha Allah really i surprised and ashamed myself as communist,how you are able to write a article like …every aspect..Really i honouryou and respect you.we need ur service for sometime to eliminate ***”mannar attchi” from tamilnadu.insha allah i,we shall meet at chennai beginning of july.

  • Then you will try your best to implement sharia… One doubt… Your name says “Yesa(Christian)” but you mention “allah” many times in this small comment itself. First sort out what you believe and what you write. Then you can talk about “mannar attchi”

 19. கேள்வி கேள் கேலி செய்:: இரும்பைக் கண்டுபிடிக்கும் முன்பே தகரத்தைக் கண்டுபிடித்து, தகரத்தைக் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்து, உண்டியலைக் கண்டுபிடிக்கும் முன்பே பேபாலைக் கண்டுபிடித்த உங்களுக்கு 1,76,000 கோடி வசூலாக வாழ்த்தும் முரசு. முரசு. முரசு.

 20. சாப்டுவேர்ல சம்பாதிச்ச காசுதான் இருக்கு. பரவாஇல்லயா

 21. சாருவின் தளத்தையும் வினவையும் ஒப்பிடும் அந்த பிசினெஸ் கன்சல்டன்ட் என்ன ஊர் சார்?அவரோ அல்லது அவரின் தந்தையோ நிச்சயம் பார்ப்பனராக இருக்க வேண்டும்.இங்கே ஆயிரம் பேர் வந்தால் அங்கே ரெண்டு பேர் போவான் எந்த உலகில் இருக்கிறார் அவர்?

 22. கண்டிப்பாக அளிக்கிறோம். நண்பர்களிடமும் பேசுகிறோம். களத்திலும் வலையுலகிலும் உங்கள் பணிக்கு வாழ்த்துகள்.

 23. வினவிற்கு நன்கொடைக்கு ஐசிஐசிஐ வங்கியா.ஏன் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு துவங்க முடியாதா.ஐசிஐசிஐ என்ற தனியார் வங்கியில் கணக்கு (நன்கொடை வாங்க), வைத்திருக்கும் நீங்கள் உண்மையாகவே முதலாளித்துவ விரோதியா.ஐசிஐசிஐ வங்கி கடனை வசூலிப்பதில் அடாவடித்தனம் செய்வதை நீதிமன்றங்களே கண்டித்துள்ளன.ஐசிஐசிஐ வங்கியின் மூலத்தனத்தில் யார் யாருக்கு பங்கு இருக்கிறது, அதில் வெளிநாட்டவர் முதலீடு எவ்வளவு என்பதையும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி,அத்தகைய வங்கியில்தான் கணக்கு வைத்து நன்கொடை வாங்குவோம் என்று அறிவிக்க தயாரா.

  பேசுவது கம்யுனிசம், நன்கொடை கணக்கு வைப்பது ஐசிஐசிஐ வங்கியா. இதையே வேறு எந்த அமைப்பாவது செய்திருந்தால் வினவில் வசைமாரி பொழிந்திருப்பார்கள்.என்ன செய்வது வினவில் எழுதுபவர்கள், ஆதரவாளர்கள் உலகமயத்தினால் கிடைக்கும் வசதிகளை, நல்ல வருவாயை வைத்துக்கொண்டு வினவில் எழுதி புர்ச்சி செய்வதில்லையா, அது போல்தான் இதுவும்.

  • Exactly what these communists do… They just use Google, WordPress, Internet etc which are from America, IT industry, capitalist. They have no shame in all these things. Why can’t they employ few software engineers and develop a non-profitable software for running their website? They are just chameleons. No wonder why China is number one Capitalist in the world.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க