Sunday, February 5, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது வணக்கம்சொன்னவர், முசுலீமாக மாறும்போது அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.

கிறித்தவர் தோத்திரம்அல்லது குட்மார்னிங்என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம்புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.

இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து.

____________________________________________________________________________

) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம், அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.

அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?

தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.

கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.

மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.

ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

) வேட்டி போய் பேண்ட், லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.

உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.

இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது

வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.

ஆனால், பார்ப்பன – மேல்சாதி  – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு  இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.

இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.

அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் மறைந்து போதல்

விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.

அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

) ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு பலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்கு மாறுகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.

பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.

விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனித நகரங்களை நினைப்பது

தன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?

அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?

வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!

பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளைமுட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது

”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.

எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில்  அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம் அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்

இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.

ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.

மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.

மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

– தொடரும்

____________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. குழப்பம் நிறைந்த முட்டாள் தனமான கட்டுரை…

  மதம் மாறினால் தேசிய உனர்வு மாறத்தாண்டா செய்யும்…

  கேரளாவில் காதல் கண்ணாமூச்சி காட்டி மதம் மாற்றி பின் தீவிரவாதியாக மாற்றுவது ஏன்?

   • எது????
    சீனு நீங்க ஆர்எஸ்எஸ் அரடவுசரோட சிம்பதைசர்னு தெரியும். அதனால அந்த ‘அது’வா இல்லேன்னா கட்டுரையில குழுப்பமா முட்டாள்தனமா அதுவா இருக்கும் விசயங்களை நீங்களே விளக்குங்களேன்..

  • உமக்கு என்ன குழப்பம் ?.. எங்கு குழப்பம்?.. என்று கூறவும் .. நான் விளக்குகிறேன்.
   ஒரு நல்ல எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கவும். விளக்க துப்பில்லை எனில் கோழை ராமனைப் போல் புறமுதுகிட்டு ஓடு.

   • உன் மதம் உயர்ந்ததுன்னா..எதுக்கு அடுந்தவன மதம் மாத்துர..

    கிரிஸ்டின் பள்ளிக்கூடங்களிள் குறி வைத்து இன்டு மாணவர்கள் கிரித்துவ மத வழிபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதேன்..

    ஒரு பத்துநிமிசம்நட்பாகப் பேசினாலும் மத மாற்ற முயற்ஷிப்பது ஏன்?

    • அவன் மதம் மாற்ற முயற்சித்தால் மதம் மாறுபவனுக்கும் மாற்ற முயற்சிப்பவனுக்கும் உள்ள பிரச்சனை அது. அது குறித்து தங்களுக்கு என்ன வருத்தம். ஐந்து நிமிடம் பேசினாலும் கூட அந்தக் காலத்திலேயே வேதத்தில் அது சொல்லப் பட்டுள்ளது , இது சொல்லப்பட்டுள்ளது என்று சில பார்ப்பன பண்டாரங்கள் கூடத் தான் சொல்லித் திரிகின்றனர்.அதற்காக கிறுஸ்தவர்கள் வருத்தப் பட்டார்களா ?.

     உங்கள் மதம் சரியாக இருக்குமானால் பிறகு எதற்கு அவர்கள் மதம் மாறப் போகிறார்கள்?..

     மதம் மாறுபவர்களை உங்கள் மததில் இருந்த போது சூத்திரன் என்று ஏன் இழிவாக நடத்தினீர்கள்?..

     இதற்கும் பதில் கூறவும்.

     • பகத்சிங்,

      மதம் மாறிய பின் அவன் தழுவிய மதத்தில் , அவனுக்கு கிடைக்கும் சிறப்புகள் என்ன? மதம் மாறியவுடன் அவன் முற்றிலுமாக குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவனாகி விடுகிறானா? அந்த மதத்தின் இயல்பான பழக்க வழக்கங்கள் அவனுக்கு வந்து விடுகிறதா? அவன் அங்கு இழிவுபடுத்த படாமல் சிவப்பு கம்பள வரவேற்பு பெறுகிறானா? அவனுக்கு அந்த மதத்தினருடன் திருமண பந்தம் செய்து கொள்ள முடியுமா? யாராவது ஒருவர் மதம் மாறிய பின் குறிப்பிட்ட இனத்தில் பெண் வேண்டும் என்று கேட்டு பாருங்களேன்,உதைதான் கிடைக்கும். அந்த மதத்தின் இயல்பான பழக்க வழக்கங்கள் அவனுக்கு வந்து விடுகிறதா?

 2. மதம் மாறியவர்கள் மட்டுமே தீவிரவாதி மதம் மாறாத இந்துக்களெல்லாம் தேச பக்தர்கள் என்ற அறிய உண்மையை கண்டுபிடித்த திரு மர்ட்கு அவர்களுக்கு நோ பல் பரிசு கொடுக்கலாம்.

  ///மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!///
  இந்த வரிசையில் காஞ்சிபுரம் பெரியவாள் சங்கராச்சாரி மற்றும் நித்தியானந்தாவை விட்டு விட்டீர்கள்

  • //இந்த வரிசையில் காஞ்சிபுரம் பெரியவாள் சங்கராச்சாரி மற்றும் நித்தியானந்தாவை விட்டு விட்டீர்கள்//

   பழைய பதிப்பு என்பதால் அவர்கள் பெயர்கள் இல்லை. அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகும்.

 3. யார் குழப்பவாதியோ.,.,அவன் தான் முட்டால்.,.,.,மதம் மாரி பார்.,.,.,.,மிகுந்த உனர்வு வரும்.,.,கெரலா.,.,மருதுக்கு தெரியல .,.,தம்பிக்கு .,.,முச்லிமை புடிக்கிரான் .இந்துவை விடுரான் .,அவ்வலவுதான் .,.,புன்னாக்கு

 4. பாவம் மார்து

  நீங்கள் தான் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.

 5. முழுவதும் இந்து மதத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரை. ஆமாம்,வினவில் ஏன் இது போல் மாற்று மதங்களை பற்றிய விமர்சனங்கள் பெரிதாக இடம்பெறுவதில்லை? எழுத பயமா? எழுதி பாருங்களேன்? என்ன நடக்கும் என்று தெரியும். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு. எளிதில் அணுக கூடிய, எவரும் விமர்சிக்க கூடிய அமைப்பை பெற்றது எமது மதம். என் மதத்தில் இது ஒன்று தான், இது மட்டும் தான் கடவுள் என்று குறிப்பிடப்படவில்லை. நாங்கள் வணங்க கடவுளின் நிறைய வடிவங்கள் உள்ளது. மற்ற மதங்களை சாத்தான்கள் என்று குறிப்பிட வில்லை. விருப்பமுள்ளவர்கள் நாகூர் தர்காவிற்கும் செல்கிறோம், அன்னை வேளாங்கன்னியையும் முழு மனதுடன் வணங்குகிறோம், இவை எல்லாம் நம்பிக்கையின் வெளிப்பாடு தான். எனது மூத்த சகோதரி உடல் நலமில்லாமல் இருந்த காலங்களில் முழு நம்பிக்கை உடன் அருகிலுள்ள தர்காவில் தங்கி குணமடைந்தது உண்டு. இப்போதும் ஏதேனும் ஒன்றை வேண்டிக்கொண்டு வேளாங்கண்ணி சென்று பிராத்தனை நிறைவேற்றுவது என்னில் தொடர்கிறது. இதுதான் என் மதம் எனக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம். இது போல் மற்ற மதங்களில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லா மதத்திலும் பிரிவுகள், இனங்கள் , உயர்வு தாழ்வு உண்டு. சரி இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்தை தழுவுபவர்கள் யார்? தொண்ணூறு சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சகோததரர்கள் தான். மதம் மாறிய பின்னர் அவர்கள் அதே சமுதாயத்தால் சரி சமமாக நடத்த படுகிறார்களா? அவர்களால் அவர்கள் தழுவிய மதத்தை சார்ந்தவர்களுடன் இயல்பாக பழக முடிகிறதா? திருமண உறவு ஏற்படுத்தி கொள்ள முடிகிறதா? அவர்கள் முதலில் இவர்கள் தாங்கள் சமுதாயத்தை சார்ந்தவன் என்று உள்ளன்போடு பழகுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இவர்கள் மதம் மாறியதன் நோக்கம் நிறைவேறியதா? நிச்சயமாக இல்லை. இவர்களின் வறுமை ஒழிந்ததா? நிறைவான கல்வி கிடைக்கிறதா? இவர்களை தாழ்த்தப்பட்டோர் என்று அழைப்பதை நிறுத்தி விட்டார்களா? இல்லை இல்லை இல்லை.மதம் மாறும் பொது இவர்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? இல்லை. நிச்சயமாக கிடையாது. இதுதான் நிதர்சனமான உண்மை. கூட்டம் கூட்டமாக மதம் மாறியவர்கள் செய்வதறியாது திகைத்து போய் தாய் மதத்திற்கும் திரும்ப இயலாமல் ஏற்று கொண்ட மதத்தினருடனும் கலக்க முடியாமல் மனம் வெதும்பி தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி தனி பிராத்தனை செய்வதுதான் நடக்கிறது.

  “”சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? “”

  சரி, அதுபோல் பாலைவன நாடான அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிடித்து சொன்னது சாத்தானின் குழந்தைகளாக அரேபிய முஸ்லிம் களால் கருதப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள். அதனால் அரபியர்கள் எண்ணெய் வளத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார்களா? எண்ணெய் வளம் இல்லாமல் இருந்திருந்தால் அரேபியாவும் சோமாலியா போல் சுடுகாடாகி இருக்கும். எது மக்களுக்கு நன்றாக படுகிறதோ , வசதியாய் இருக்கிறதோ, பயன் தருகிறதோ அதனை அவன் வழக்கமாக்கி கொள்கிறான். இதில் மதம் எங்கிருந்து வந்தது?

  எவ்வளோவோ சொல்லலாம். வேண்டாம்..

  பொதுவாக சொல்வதென்றால் , இது இந்து மதம், இங்கு விமர்சங்கள் வரவேற்க படுகின்றன. விமர்சனத்தை ஏற்காமல் வெறி கொண்டு அலையும் பண்பு இல்லை. யாரையும் பணம் , பொருள் ஆசை வார்த்தைகள் காட்டி வலுக்கட்டயமாக மத மாற்றம் செய்வதும் இல்லை.

  இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

  மதத்தின் பெயரால் இங்கே சிலர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் அதே வேளையில் மனதாலும் அடுத்தவர்க்கு தீங்கு நினைக்காத எண்ணற்ற மக்களை கொண்டதுதான் இந்து மதம் என்பதை மறந்து விட வேண்டாம் .

  வினவு இந்த கருத்தை வெளியிடும் என்ற நம்பிக்கையில்

  தேசநேசன் என்று அழைத்துக்கொள்ள விரும்பும் சிவசங்கரன்.

  • இவன் தொடநடுஙிப் பயநேன்…

   இவ்ன் ஒரு கட்டுரையாவது இஷ்லாம் தீவிரவாதம் பட்ரியோ, கிருச்த்துவ மதமாட்ரம் பட்றியோ எழுதியிருக்கிரானா…

   இன்டுவ மட்டமா எழுதி இவனோட முர்ப்பொக்கு வெஙாயத காட்டுரான்..

  • தேசநேசன் திர் சிவசங்கரன் அவர்களே! …

   வனக்கம்.. உங்கள் வருத்தம் புரிகிறது. கமுக்கமா திருடித் திண்ணுட்டு இருந்த என்னோட குட்டையில கல்லை விட்டு குழப்பி விட்டிருக்கிறீர்களே.. மற்ற குட்டையில் ஏன் கல்லை விடவில்லை. கல்லை விட தைரியம் இருக்கிறதா என்று கேட்டிருகிறீர்கள்.

   மற்ற மதங்களை கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகள் வினவில் வெளியாகியுள்ளன. இடது கைப்பக்க பட்டையில் மதம் என்ற தனிப் பிரிவின் கீழ் உள்ள கட்டுரைகளை படிக்கவும். உங்கள் மதமான இந்து மதம் பல டிசைன் கடவுளை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அது அப்படி அல்ல. பலதரப் பட்ட மக்களின் தனித் தனி தெய்வங்களாகிய அய்யனார், கருப்பசாமி, மாரியம்மாள், சுடலை மாட சாமி ஆகியோரை துணை தெய்வங்களாக சித்தரித்துக் காட்டி முக்கிய தெய்வமாக பார்ப்பன கடவுளாகிய உங்கள் பொம்பளைப் பொறுக்கி கிருஸ்ணனை முன் வைத்து அனைவரையும் இந்து என்றழைத்து , உழைக்கும் மக்களை ஜாதியின் பெயரால் சுரண்டித் தின்ற மதம் உங்கள் இந்து மதம். அதனை விமர்சிப்பது எந்த விதத்தில் தவறு?.

   உங்கள் மதத்தின் தீண்டாமைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?.

   பதில் கூறவும்.

   • பகத்சிங்,
    முதலில் நான் பிராமின் வகுப்பை சார்ந்தவன் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    வினவின் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறேன்.. வினவு இந்து மதத்தை விமர்சிப்பது போல் மற்ற மதங்களை மிகவும் காட்டமாக விமர்சிப்பதில்லை. இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
    பொம்பளை பொறுக்கி, என்று தாங்கள் விளிப்பதால் கண்ணன் அவ்வாறு ஆகி விட மாட்டான்.
    உங்களுக்கு இருக்கும் பொறுமையும் , தகுதியும் அவ்வளவுதான் நினைத்து கொள்கிறேன்.
    தாங்களது கோபத்தில் இருந்து உழைக்கும் வர்கத்தின் வேதனை வெளிப்படுகிறது.. தாங்கள் இந்து மதத்திலிருந்து விலகி, அல்லது கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்து, அல்லது மாற்று மதத்தை தழுவி , அதனால் தாங்கள் நிலை மாறி இருந்தால் , அந்த உழைக்கும் வர்கத்தின் நிலை மாறி இருந்தால் , நிச்சயமாக , நூறு சதவீதம் இந்து மதத்தை விமர்சிப்பதில் தவறே இல்லை. தொடர்ந்து விமர்சியுங்கள்.
    தீண்டாமை , இது பற்றி பல்வேறு உண்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தாங்கள் ஏற்று கொள்ளப்போவதில்லை.
    இருந்தும் சொல்கிறேன், இவை அனைத்தும் இந்த நாட்டின் செல்வத்தின் மீது பற்று கொண்டு, இந்த நாட்டை போர்கள் பல புரிந்து கைப்பற்றி , எங்கிருந்தோ இருந்து இங்கு வந்து புகுந்த வந்தேறிகளால் இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைத்து வேற்றுமை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அது முகலாயர்,ஐரோப்பியர்கள் மற்றும் பல்வேறு இனத்தவர்களால் புகுத்தப்பட்டது.

    இன்னும் நிறைய சொன்னாலும் உங்களுக்கு புரியாது. ஏன் என்றால் தீண்டாமையின் வலியை தெரிந்தவன் இந்த விஷயத்தை புரிந்து கொண்டதே இல்லை.

    • நண்பர் சங்கரன்,

     நீங்கள் ஒரு சராசரி ‘இந்துவின்’ பார்வையில் இருந்து உங்கள் கருத்துக்களை வைத்துள்ளீர்கள். முதலில் இக்கட்டுரை மக்களை மத ரீதியாக கூறு போடும் இந்து முன்னணி, ஆர்,எஸ்.எஸ் கும்பலின் சிறுபான்மை மக்கள் மீதான அவதூறுகளுக்கு எதிரான கட்டுரை என்பதை புரிந்து கொள்க. ஆர்.எஸ்.எஸின் அவதூறுகளும் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தர்காவுக்கும், வேளாங்கண்ணி திருத்தலத்துக்கும் செல்லும் நீங்கள் ஆர்.எஸ்.எஸ் -இடமிருந்து எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்களுக்கு மவுனம் சாதிப்பது சரியா?
     இந்து மதத்தில் நிலவுவதாக நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம் என்பது ஏதோ இந்து அமைப்புக்கள் என்று ‘தினமணி’ குறிப்பிடும் இந்துத்துவ பயங்கரவாதிகள் போராடி பெற்ற ஒன்றல்ல. பல நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளை உட்செரித்து, மெஜாரிட்டி பலத்திற்காக செய்யப்பட்ட சதி. இந்த நாட்டார் மரபுகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அழித்து வருகிறது பார்ப்பன மதம். குமரி மாவட்ட கோயில்கள் பெரும்பாலும் தட்டையான roof கொண்டவை. அவற்றை அழித்து இப்போது கோபுரங்கள் அமைத்து குடமுழுக்கு செய்யப்படுகின்றன. இசக்கியும், லெச்சியையும் இடம்பெயர்த்து துர்க்கை கொண்டுவரப்படுகிறாள். ஆடு, கோழி வெட்ட ஜெயலலிதா முன்பு ஆணை வெளியிட்டதும் அதை ஆர்.எஸ்.எஸ் வரவேற்றதும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். இந்து மதத்தின் ஜனநாயக உணர்வுக்கு பெருமை படுகிறவராக இருந்தால் பார்ப்பன மதத்தின் இத்தகைய சூழ்ச்சிகளை எதிர்த்து குரல் கொடுங்கள்.

     • நிச்சயமாக சுகதேவ் ,

      ஆர் எஸ் எஸ் ய் ஆதரிப்பவனாக இருந்தால் என்றைக்கோ அதில் இணைத்திருப்பேன், நான் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்துக்கள் இணைந்திருக்க முடியும். இந்தியாவிலேய மிக பலம் வாய்ந்த அமைப்பாக அதை மாற்றி இருக்க முடியும். அப்படி நடந்திருந்தால், என்ன நடக்கும், பாலாறு ஓடும் இங்கே ரத்த ஆறு தான் ஓடும். இந்து மதம் வன்மத்தை வன்முறையை போதிக்க வில்லை.மாறாக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்துகிறது , உண்மையான இந்து இது போன்ற வன்முறை வெறியாட்டத்தை ஆதிரிப்பவன் அல்ல.

      நமது வேதனை என்ன வென்றால் ஆர் எஸ் எஸ் அமைப்பை விமர்சிக்கும் போக்கில் கடுமையாக இந்து மதத்தையும் அதனை பின்பற்றுபவர்களையும் விமர்சிப்பதுதான்.

      யாரோ ஒரு சில அமைப்புகள், தனி நபர் செய்யும் தவறுகளால் ஒரு மதமே தவறான கண்ணோட்டதால் பார்க்கபடுகிறது..

      வினவின் பணி குறிப்பிட்ட அமைப்பை சீர் செய்ய வேண்டுமே தவிர, அந்த அமைப்பு சார்ந்துள்ள மதத்தை புண்படுத்துவதாக இருக்க கூடாது. வினவின் போராட்டத்தில் யாமும் பங்கேற்க முடியும்.

    • குற்றம் செய்பவர்களை தான் விமர்சிக்க முடியும் … ஒரு இடத்தில் 8 திருடன் இருந்தால் அந்த 8 திருடன் மீதும் சார்ஜ்சீட் போடனும், மீதி 2 திருடன் இருந்தால் 2 சார்ஜ்சீட் போடனும்.. ஏன் எங்களுக்கு 8 அவங்களுக்கு 2-னு கேள்வி கேட்டால் என்ன பாஸ் ???

     • இக்பால் செல்வனா?

      நண்பரே பெயரே குழப்பமாக இருக்கிறது.. தாங்கள் பெயரையும் முழுமையாக மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதலென்ன பாதி வேறு மீதி வேறு. இதுதான் நான் குறிப்பிடுவது. எங்கே போனாலும் தாய் மதத்தின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். நீங்கள் முழுமையாக மாறி விட முடியாது. அது பிறப்பால் வர வேண்டும். போகட்டும்..

      திருடன் போலீஸ் கணக்கு எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. எண்பத்து எட்டு கோடிக்கு எட்டு சார்ஜ் சீட், ரெண்டு கோடிக்கு ரெண்டு சார்ஜ் சீட் , உங்க கணக்கு கரெக்ட் தான்..

      • இறைவா இது போன்ட்ர த்ரோகிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்று எதிரிகளைநாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

      • அன்புத் தோழரே – பெயரில் என்னக் குழப்பம் வேண்டி இருக்கு. ஒருவரின் பெயரை வைத்து அவர் நம்மாளா? இல்லையா ? எனக் கணக்குப் போடும் மனோபாவத்தை மாற்ற வேண்டும் என்பதால் இந்தப் பெயரே !!!

       தவறாக எடுக்க வேண்டாம் … தங்களின் பெயரில் சிவசங்கரனில் வெறும் அன் என்னும் விகுதி மட்டும் தான் தமிழ், பாதி சமஸ்கிருதம் + பாதி தமிழ் இருக்கின்றது அல்லவா?

       அப்படி இருக்க இக்பால் என்ற ஸ்வாகிலி மொழிச் சொல்லும், செல்வன் என்ற தமிழ் மொழிச் சொல்லும் கலந்த எனது பெயரில் குழப்பம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

       எதுக்கு பிரச்சனை நீங்கள் நினைப்பது போல நான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களான முஸ்லிமோ, தலித்தோ, அடக்கப்பட்ட சாதியில் சேராதவன்.. இன்னமும் எனக்குப் பேச உரிமைத் தரமாட்டீர்கள் என்றால். ஏனையோரின் நிலைமை என்னவென்று நன்கு புரிந்துவிடும் …

       • Hindu, is not our base religion. before that we was Buddhist. Before 1500 BC, Only Arian (Parppaa) came from East Germany with Rig Veda. Historical researchers clearly explain you. Note: Don’t as (parppans).

        We are not Hindu. We people are converted to Hindu 2000 year before. Every one commonly accept “Thirukkural” is Reflect Buddhism thoughts.

        Some Tamil Gods are converted into Hindu. Like Kannan as Kirushnan, Muragan as Kandhan, Murugan’s wife is Valli but, they marriage Theivanai, and make relationship with Vinayagar and Siva.

        Before 1000 years, South Indians unaware of “Vinayagar”. All are Created for Cheat Tamils.

        It makes long history….It will take too time explain…

    • //**பொம்பளை பொறுக்கி, என்று தாங்கள் விளிப்பதால் கண்ணன் அவ்வாறு ஆகி விட மாட்டான்.**//
     யண்டா பெண்கள் குளிகரத மறைஞ்சி பாத்துட்டு அவங்கள டிரஸ் இல்லா ம வெளிய வர சொல்லி அவங்க மார்புல இருந்த கைய எடுக்க சொல்லி ரசிச்சவன் பொம்பள பொறுக்கியா இல்லையா? !!! உட்டா அதுக்கும் எதனா அறிவியல் விளக்கம் தர போறயா …திருந்துங்கட ..

    • Brahmins are the real foreign people. They are Greek and came to India when they had famine in their own country before 4000 years. Muslims and christians are the real original peopleof India.

  • Mr.Sivasankaran, are you Brahmin? If you are nonbrahmin you are our friend eventhough you say you are Hindu. Because nonbrahmin hindus are cheated by brahmins. Brahmins will diplomatically exploit you. 88 crore Hindus? If you are a nonbrahmin hindu, can you marry the daughter of a brahmin hindu. Remember. Even this generation brahmins are doing all kinds of cheating in the working spots. They are heartless people. They will never work hard. They will flatter the people in power and will get benefits in shortcut way. And brahmins are intelligent than others. This statement is the greatest joke of this century. Nonbrahmins started studying just before 70 years and now they are in top positions in government and private organizations. But these so called “intelligent brahmins” are studying for 3500 years. Now they can not compete with nonbrahmins(nonbrahmin hindus, muslims and christians). Nonbrahmin hindus, muslims and christians are very very much related. Brahmins are the only enemies for us. Becaues they are the most selfish people in the world. A brahmin should clean the toilet and repair the ditches. Then only we can believe that equality has become practical. Every one should work hard and overtake brahmins in all sort of social status. Each and every nonbrahmin should stand together to oppose this criminal brahmins.

 6. 1. வணக்கம்,நமஸ்காராம்,அஸ்ஸலாமு அலைக்கும்,தோத்திரம்,குட்மார்னிங்

  -இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும்.

  சீக்கிரமா கண்டுபுடிச்சு சொல்லுங்க! தோழர்கள் சிரமப்படுவாங்கண்ணே !

  2. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போகப்பொருள் வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம்.

  திறந்துகாட்டினாலும் போகப்பொருள் !

  ஒன் பீஸ் டூ பீஸ் போட்டாலும் போகப்பொருள் !

  சேலை தாவனி உடுத்தினாலும் போகப்பொருள் !

  சல்வார் கமீஸ் போட்டு உடம்ப மூடினாலும் போகப்பொருள் !

  பர்தா அணிந்து முழுசா மறைத்தாலும் போகப்பொருள் !

  போகப்பொருளின் மெய்ப்பொருள் என்னவென்று சொல்லுங்கண்ணே !!!

  தோழி சகீலா கூட கேமராவுக்குமுன்னே காட்டுவதை பப்ளிக்ல காட்டுவதில்லையே !!!

  அவங்க போகப்பொருளா இல்ல போகாதப்பொருளா?

  ஒரு விசாரனைக்கமிஷன் போடுங்கண்ணே !!!

 7. //இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்//

  இந்தியாவில் சாட்சாத் ராமராஜ்யம் தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கூற முடியாது.

  • ஹ்ம்ம்.. சரியாகச் சொன்னீர்கள் ..
   தினமும் பல சம்பூகன்கள் அநியாயமாக பிறந்த ஜாதியின் பலனால் கொல்லப் படுகிறார்கள் என்பதற்கும் இதுவே சாட்சி..

   • ஆமாம் பகத்சிங்,

    ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் சற்று குறைவுதான்.. இதற்காகவாவது சந்தோஷம் அடையுங்களேன்.

    • /இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு , பண்டைய பாரம்பரிய முறைகளை ஏற்றுக்கொண்டும், நடைமுறை படுத்தியும், சிறப்பாக வாழ்ந்து வரும் எண்பத்து எட்டு கோடி மக்கள் இங்கு உண்டு. எங்களது இல்லத்தில் நிலவும் மகிழ்ச்சி நிச்சயமாக மாற்று மதம் தழுவியவர்களின் இல்லங்களில் நிலவ வில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்//

     //இந்தியாவில் சாட்சாத் ராமராஜ்யம் தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கூற முடியாது.//

     //ஹ்ம்ம்.. சரியாகச் சொன்னீர்கள் ..
     தினமும் பல சம்பூகன்கள் அநியாயமாக பிறந்த ஜாதியின் பலனால் கொல்லப் படுகிறார்கள் என்பதற்கும் இதுவே சாட்சி././

     //ஆமாம் பகத்சிங்,

     ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் சற்று குறைவுதான்.. இதற்காகவாவது சந்தோஷம் அடையுங்களேன்.//

     88 %இந்துக்கள் வாழ 12% முஸ்லீம்களை யாகவேள்வியால் கொல்ல விட்டுவைச்சுருக்காங்க போல!!!

 8. ந்தப் பள்ளிக்கூடம் அந்த ஊரிலேயே முக்கியமான பள்ளிக் கூடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 1500 பிள்ளைகளுக்கு மேல் வாசிக்கிறார்கள். கிறிஸ்துவப் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே சர்ச் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுப் பரீக்ஷைக்கு முன்னால் சர்ச் சென்று, ஸ்தோத்திரித்தால்தான் ஹால் டிக்கெட் தருவார்களாம். புனித நீரும் தெளிப்பார்களாம். எல்லாப் பிள்ளைகளும் இதனைச் செய்கின்றன. ஒரு பையன் தன் வீட்டில் இதைச் சொல்லி, எனக்கு அப்படி கும்பிட மனம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறான். பையனின் அப்பா பள்ளிக்கூடத்துக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பையனுக்கு ஹால்டிக்கெட் தரவே இல்லை பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். பையனின் அப்பாவும் பரீக்ஷைக்கு ஒருவாரம் வரை பார்க்கலாம், இல்லை என்றால் பிரச்சினை பண்ணிவிடலாம், ஆனால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்த வண்ணம் இருந்திருக்கிறார். கடைசியில் இந்தப் பையன் வந்து கும்பிடமாட்டான் என்று தெரிந்ததும், பரீக்ஷைக்கு இரண்டு நாள் முன்பு அந்தப் பையனுக்கு ஹால் டிக்கெட்டை ஒரு பியூனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் பள்ளிக்கூடக் காரர்கள். அத்தனை நாள் அந்தப் பையனும் அந்தப் பையனின் குடும்பமும் அனுபவித்த கஷ்டங்கள் தேவைதானா? யாரையும் இப்படி, இவரைக் கும்பிடு என்று கட்டாயப் படுத்துவது தவறு என்று பள்ளிக்கூட நிர்வாகத்துக்குத் தெரியாதா என்ன?

  நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவப் பள்ளிகளிலும்நடப்பது என்ன?

  கட்டாய கிறிஸ்தவ மத வழிபாடு..

  • //////கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…////

   என்ன நடந்திருக்கும் ?..

   கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்று தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே விட மறுக்கும் நிலையில் இந்த நாட்டில் அப்படி என்ன பெரியதாக நடந்து விட்டது?..

   பார்ப்பானைத் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் செல்லவிடாமல் இன்று வரை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் அப்படி என்ன பெரியதாக நடந்து விட்டது?..

   திண்ணியத்திலும் கயர்லாஞ்சியிலும் நடந்த கொடுமையைக் கண்ட பிறகும் நடக்காதது இனி அப்படி என்ன பெரியதாக நடந்து விடப் பொகிறது?.

   கிறுஸ்தவ மதம் ஒரு சாக்கடை என்றால் இந்து மதம் ஒரு அக்மார்க் மலக்குட்டையே ..

  • என்ன நடந்திருக்கும் ஒன்னும் நடக்காது ….. !!! எனது தோழன் கிருத்தவப் பையன் நாங்கள் கோயில் சென்ற காலத்தில் அவனும் வருவான் திருநீறுக் கொடுப்போம் – பூசிக் கொள்வான் … இது அவரின் பெற்றோருக்கும், எமது கிருத்தவப் பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியும் ..

   ஒன்னியும் நடந்தது இல்ல !! அதிகம் சினிமாப் பார்ப்பீங்களோ சகோ ?

  • மருது,
   நீங்கள் சொல்வது போல் கிறித்துவ பள்ளிகளில் அனைத்து மத மாணவர்களையும் தேவாலயத்திற்கு அழைத்து சென்று பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் செய்வது தவறுதான்.மறுப்பில்லை.

   அதே சமயம் இது சரிதானா.
   \\நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள்.//

   அந்த பள்ளியில் கடவுள் நம்பிக்கை இல்லாத பெற்றோரின் குழந்தைகளும் படிக்கலாம் அல்லவா. உழைப்பை நம்பி தேர்வு எழுத வேண்டும் என அந்த பெற்றோர் சொல்லி அனுப்பிய குழந்தைகளை கடவுள் மதிப்பெண் தருவார் என நம்ப வைத்து பிரார்த்தனையில் ஈடுபடுத்துவது சரிதானா.

   எந்த நியாய உணர்வின் அடிப்படையில் கிருத்துவ பள்ளிகளை கண்டிக்கிறீர்களோ அதே நியாய உணர்வின் அடிப்படையில் இந்து பள்ளிகளின் அனைத்து மத பிரார்த்தனையையும் கண்டிக்க முன் வரவேண்டும். மாறாக அந்த பள்ளிகளை உயர்த்தி கூறுகிறீர்கள்.இதிலிருந்தே உங்களின் இந்து மதவாத சார்பு தெளிவாகிறது.

   அடுத்த பொருள்.தமிழக அரசு பாடநூல் கழகம் வெளியிடும் பாடநூல்களின் முகப்பில் அரசு முத்திரையாக உள்ள கோயில் கோபுரம் அச்சிடப்படுகிறது.அனைத்து மத குழந்தைகளும் படிக்கும் புத்தகத்தில் ஒரு மதத்தின் வழிபாட்டு தல குறியீட்டை அச்சிட்டு தருவது முறையா. மதசார்பற்ற தமிழக அரசு தனது முத்திரையாக இந்து மதக் கோவில் கோபுரத்தை [திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்] வைத்திருப்பது சரிதானா.

   தமிழ் பாட புத்தகங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெறுவதுதான் மதசார்பின்மையா.அதுவும் கம்பராமாயணத்தில் இருந்து கடவுள் வாழ்த்து பாடலை தேர்வு செய்வதுதான் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதா.நியாயமாக பார்த்தால் தமிழ் தாய் வாழ்த்து மட்டும் போதுமே.

  • மருது,

   விவேகானந்த கேந்திரம் நடத்தும் பள்ளிகளில் தினமும் காளியும் மாலையும் சம்ஸ்கிருத சுலோகங்களை பாடச் சொல்வது ஏன்?
   பிள்ளையார் சதுர்த்தியின் போது பிள்ளையார் பொம்மை வைத்து பத்து நாட்களுக்கு நாளொரு வகுப்பு வீதம் பூசை செய்வது ஏன்?
   தனது பள்ளியில் உள்ள ‘அவைக்கூடத்தை’ ஆர். எஸ். எஸ் மதவெறியன்களுக்கு கூட்டம் நடத்த கொடுப்பதேன்?
   அடிக்கடி லோக்கல் ஆர். எஸ். எஸ் தறுதலைகளை அழைத்து லெக்சர் கொடுக்கச் சொல்வதேன்?

   அப்படி ஒரு பள்ளியில் தான் நானும் பயின்றேன். இவைகள், கடவுள் வழிபாடுகள் செய்யாத ஒரு குடும்பத்தில் பிறந்த என்னை ஒரு அரைகுறை இந்துதேசிய வெறியனாக பள்ளிப் பருவத்தில் உருவாக்கின என்பதால் அதன் பாதிப்பை உணரமுடிகிறது. அந்தக் காவிபுழுதியைக் கடந்து வருவது அவ்வளவு சுலபம் அல்ல.