Thursday, March 23, 2023
முகப்புஅரசியல்ஊடகம்பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

-

பீஃப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி! -சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?

உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?

தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.

இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.

இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார்  ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.

மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை  கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை  காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?

அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.

அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!

சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!

________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. “மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?”
  என்ட்ர கட்டுரையில் MSM என்ர பெயரில் எனது ந்ண்பன் எழுதிய மறுமொழிகள் எங்கே…

  பதில் சொல்ல முடியாது என்பதால் கவனமாக அந்த மறுமொழிகள் செய்யப் பட்டுள்ளன..

  வினவிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை..

 2. //சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.//
  உண்மை தான் அவர்கள் அப்படிதான்…ஆனால்நீ கேப்பே இல்லாட்டி கூட ஒரு சர்ச்சையைக் கிளப்ப்றமாதிரி ஒரு கட்டுரை எழுதி சண்டையை ஆரம்பிச்சுவச்சுருவ..

  //முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம்.//

  இது உண்மை தான், ஆனால் ஒரு சாதாரண இந்து ஆடோ கோழியா சாப்பிடும் போது மாடு சாப்பிடுவது ஒன்னும் பாவம் கிடையாது..உழைக்கும் வர்க்கதிற்க்கு அது தான் விலை மலிவான உணவு..அதுவும் கேரளாவில் பீப் தான் பிரதான உணவு(இந்துக்கள் உட்பட)

  //விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.//இதில் என்ன திமிர் ஒவ்வொரு மதத்திற்க்கும் ஒருநம்பிக்கை..

  //கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.//

  உண்மை.. அவ்வை சண்முகி பட வசனம்..வரி மாராமல்…

  • பார்ப்பன அம்பிகலால்தான் மாமிசம் விலை ஏறியது!
   தண்ணி அடிக்காத அம்பிகள் எத்தனை பேர்?
   கையை தூக்குங்கோ!

 3. பார்பனர்களுக்கு தங்களை உயர்த்தி கொள்ள என்ன கண்றாவியும் செய்வார்கள். ஒரு காலத்தில் மாட்டு கரியையும் குதிரையையும் சோம பானத்தோடு உண்டு கொழுத்தவர்கள், இன்று கோமாதா புராணம் பாடுகின்றனர்! கடல் தாண்டி செல்ல கூடாது என்று சொன்னவர்கள், இன்று அயல் நாட்டு டாலர் வருமானம் பெரும்பாலும் இவர்களுக்கு தான்!

  அவனுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!

  அதா விடுங்க, திருவல்லிக்கேணி, ராயபேட்டை பகுதிகளில் எங்கு நல்ல மாட்டு கரி கிடைக்கும் என்று சொல்லுங்கள்! 🙂

  • உட்லண்ட்ஸ் திரையரங்கு அருகே முன்பு மிகவும் சுவையான சில்லி பீப் கிடைக்கும், இப்போதும் கிடைக்குமேன நம்புகிறேன்

  • ஸ்டார் திரையரங்குக்கு எதிர்புறம் சற்றே வடக்கே தள்ளி..திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் ஷாஹித் பிரியாணி சென்டரில் கிடைக்கும் மாட்டுக்கறி வருவல், தந்தூரி பாணி கறியும் சுவையானது..

 4. //போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை?//

  அப்படியே நம்ம அண்ணன் மதானி, தியாகி ஒசாமா மற்றும் பெண்களை பாலியல் துன்புறுத்தும் கிரித்துவ பாதிரியார்களையும் சேர்த்தால் அது மதச்சார்பின்மை, அது வரை இது ஒரு தலைப்பட்சமான விதன்டாவாதமே..

  // உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?//

  அய்யர்களின் பார்வை தவறுதான் அதை விடு…உன் பார்வை எப்படி, விதவிதமா கதை எழுதி(உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு) இந்து மதத்த விமர்சனம் செய்யாட்டி உணக்கு தூக்கம் உனக்கு தூக்கம் வருமா..

  • //அய்யர்களின் பார்வை தவறுதான் அதை விடு…உன் பார்வை எப்படி, விதவிதமா கதை எழுதி(உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு) இந்து மதத்த விமர்சனம் செய்யாட்டி உணக்கு தூக்கம் உனக்கு தூக்கம் வருமா..//

   பீப் சாப்பிடுறது இந்து மதமில்லை என்று சொன்னதன் மூலம பார்ப்பஸும், மிச்ச சொச்ச ஆதிக்க சாதியினரும் மட்டும்தான் இந்து என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி

 5. மாட்டுக்கறி சமைப்பதற்கான இன்னும் சில சமையல் குறிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

 6. சென்னையில் மிக சிறந்த பீஃப் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடங்கள்…

  சில்லி பீஃப்: பெசன்ட் ஃபாஸ்ட் ஃபுட்(பெசன்ட் நகர் பஸ் நிலயம் அருகில்)
  பீஃப் ரைஸ்:பெசன்ட் ஃபாஸ்ட் ஃபுட், பிஸ்மில்லா ஃபாஸ்ட் ஃபுட்(பெருங்காளத்தூர்)
  பீஃப் பிரியாணி: தாஜ் மொகல் பிரியாணி(அண்ணா நகர்)

  • //வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. //

   ஏன் வேத காலம். சில வருடம் முன்பு காமக் கேடி பீடையாதிபதி சங்கரன் செய்த யாகத்தில் எருமைகள், பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன. இது குறித்து கல்கி கேள்வி பதிலில் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு கல்கி பின்வருமாறு நாசுக்காக பதில் சொல்லியிருந்தது – ‘அவர் அப்படி யாகம் செய்திருந்தால் அது தவறு’ என்று.

   பீப் வறுவல், பீப் 65, பீப் பிரியாணி, உலர்த்திய பீப் வறுவல் இவை சுவையுடன் கிடைக்குமிடம் குமரக்கம் எனப்படும் கேரள உணவகங்கள்.

   இது தவிர தரமான பீப் உணவு வகைகள் கொஞ்சம் சிரமமெடுத்து தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பாஸ்ட் புட் வகை கடைகளில் பீப் உணவு வகைகள் (சிக்கனும் கூட) என்று போடப்படுபவை உடலுக்கு நல்லது அல்ல.

   • Dear Mr. Ahmed

    ok LET it Be a brahminical tradition. And let all of us eat Beef. What about eating Pork?. will revolutionary poet comrade Inquilab recomend his students in New college the merits of eating Pork. Or our Vinavu comrades will engage in educating the muslims in thousand lights or parrys corner that there is nothing wrong in eating pork. Pork is a food of working classes in India. We should be judicious

 7. //அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?//

  அவர்களுக்கு மாட்டை வணங்குவது மட்டும் தான் வேலை அதற்கு புல் அறுத்துப் போடுவது குளிப்பாட்டுவது எல்லாம் அவன் வீட்டில் வேலை பார்க்கும் மாட்டுக்கறி திங்கும் தாழ்த்தப்பட்டவன் வேலை.

  மாட்டுக்கறி எதிர்ப்பாளர்களே! உங்களோடு சேர்ந்து நானும் எதிர்க்க ரெடி ஆனால் ஒரு கண்டிஷன் கன்றை நக்க மட்டுமே விட்டு இழுத்து கட்டி கறந்து நீ குடிக்கும் பாலை முதலில் நிறுத்த வேண்டும். தயாரா???

  • நரேந்திர மோதியின் நரவேட்டை நாட்களில் கோத்ராவில் நான் வசித்திருந்தேன். ஒரு 12 நாள் அலுவலகமே செல்ல முடியாத ஊரடங்கு. அதற்கு முன் முஸ்லீம் தெருக்களின் சென்று மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டில் சமைத்திருந்தேன். அந்த கொலை வெறி நாட்களில் அவர்கள் தெருப்பக்கம் போகக்கூட முடியாத நிலைமை. இருப்பினும் ஒரு சக ஊழியர் மூலம் பெற முடிந்தது. ஆனால் ஆர் எஸ் எஸ், சங் பரிவார் போன்ற அமைப்புகளிடமிருந்து கடும் மிரட்டல் இருந்தது. பணம் ஒரு மாட்டை வெட்டினால் இவ்வளவு என்று வசூல் வேறு செய்து கொள்வதாகவும் மாட்டுக்கறி வாங்கி வந்த நண்பர் குறிப்பிட்டார். அவன் பெயரைப்பாருங்கள் சுக்லா

    • ஊரையே தீ வச்சவனுங்க இந்துத்துவா வாதிகள்தானே நண்பா!. எனக்கு எப்படி மாட்டுக்கறி குலக்கறியோ அதேபோலத்தானே சாப்பிடாதே என்பவனுக்கும் குலக்கொள்கை. எது எப்படியாகினும் வாழ்வதற்கான போராட்டத்தில் யாரும் பின் தங்கி விட முடியாது.

     • //ஊரையே தீ வச்சவனுங்க இந்துத்துவா வாதிகள்தானே நண்பா!. எனக்கு எப்படி மாட்டுக்கறி குலக்கறியோ அதேபோலத்தானே சாப்பிடாதே என்பவனுக்கும் குலக்கொள்கை. எது எப்படியாகினும் வாழ்வதற்கான போராட்டத்தில் யாரும் பின் தங்கி விட முடியாது.//
      திலிப்நீசொல்வது மிகச்சரியே

 8. As usual some intelligent idiots (who else followers of Vinavu, blindly) took vommit on the net on supporting cow slaugters. Cruel people.. they can’t think beyond cruelty

 9. //ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.//

  Every 3 I eat chilly beef and beef fried rice. I was so weak and lean before. Now, I feel healthy, more stronger and improved stamina. Thanks to beef. Now the beef-shop bai is my friend. So beef has other benefits too 🙂

 10. பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும் — சரியான காமெடி பீசு பாசு நீங்க

 11. மாட்டுக்கறி உண்பவரிடமிருந்து ரத்தமோ உறுப்போ தானம் வேண்டாம் என்பார்களா?.

  • It really happened to me. I was studying second year college. Before semester exam, I donated blood to a Hindu(they are not brahmins). After taking my blood they asked if I eat beef. I said yes. The lady said, I could have died than to live in a beef-eater’s blood. I really cried that day as people are like this.

   Myself eating beef is their problem than my blood saving their life 🙁

   • The lady said, I could have died than to live in a beef-eater’s blood. //

    அறியாமைதான்.. அப்படியே சின்ன வயதிலிருந்து வளர்க்கப்படுவது..

    இதைத்தான் நாம் போக்கிடணும் ..

    //I really cried that day as people are like this//

    நீங்க பெருமைப்படவேண்டிய விஷயமல்லவா?..

    மனநோயாளியை பார்த்து அய்யோ இவன் என்னை திட்டிவிட்டானே னு வருந்தலாமா?..

    கம்பீரமாக அல்லவா செல்லணும்.?

   • நல்ல வேளை நீங்க ரத்தம் கொடுக்கல…!!! இல்லைனா அது ஒரு ‘சாக்கடையோட’ கலந்திருக்கும்….!!! இதுக்கு பேரு தான் ‘தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சி பாக்குறது’ங்கிறது..!!!

 12. பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே நீயும் உயர் நிலைக்கு வா உன்னை யார் தடுத்த ? உண்மையான துரோகி எல்லா ஜாதியிலையும் இருக்கிற முதலாளிகள் தன் அவனை டச் பண்ணமாட்றையே அவன தொட்ட ராணுவத்தில அனுப்புற! பிராமணனுக்கு அது இல்லையில்ல அதான்.

  • //பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே நீயும் உயர் நிலைக்கு வா உன்னை யார் தடுத்த ? //

   அதுக்கு ட்ரை பன்னுற மாதிரி கருவறைக்குள்ள நுழையவும், சிதம்ப்ரம் கோயிலில் தமிழில் பாடவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. இவர்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து போராடுபவர்கள் பார்ப்பன ……… இது கோயிலில் மட்டுமல்ல, கல்வி, அரசுப் பதவிகள் என பல இடங்களில். யார் தடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். அவர்களை நீங்கள் எதிர்ப்பீர்களா? இவர்களை எதிர்க்காமல் எப்படி ஐய்யா நாங்கள் உயர் நிலைக்கு வர முர்டியும்?

   • அக்கவுண்ட் அகமது: ஒரு தலித்தை, உங்களின் உலீமாவின் தலைவர் ஆக்க தயாரா? இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றிப் பேசும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?

    • //ஒரு தலித்தை, உங்களின் உலீமாவின் தலைவர் ஆக்க தயாரா? //
     தலித் என்பவன் இந்து மத்தில் உல்லவன் அஙகு அவனுக்கு உரிமை மருக்கபடுகிரது. ஆனால் முஸ்லீம் மததில் தலித் என்ர பாகுபாடு கிடையாது. அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆக மாரினால் ஜமாத் தலைவராகவும் ஆகலாம். இன்சா அல்லா சிரிதர் முஸ்லீம் ஆக மாரினால் ஜமாத் தலைவராக துஆச் செய்கிரேன். ஆமின்.

  • //பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே//
   தோடா…. இது தான் சந்துல சிந்து பாடுரதுங்கிறது…!!! பிராமணன் உயர்ந்தவன்னு இங்க எந்த கேனையனும் சொல்லல…!!! ‘பிராமணன் வர்ணாசிரம அடிப்படையில் தன்னை தானே உயர்ந்தவன் என்று கூறி கொள்கிறான்’ என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.

   • //தோடா…. இது தான் சந்துல சிந்து பாடுரதுங்கிறது…!!! பிராமணன் உயர்ந்தவன்னு இங்க எந்த கேனையனும் சொல்லல…!!! ‘பிராமணன் வர்ணாசிரம அடிப்படையில் தன்னை தானே உயர்ந்தவன் என்று கூறி கொள்கிறான்’ என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.//

    +1

 13. மாட்டை இறைச்சிக்காக விற்பவர்கள் சில நேரங்களில் நோயுற்ற மாடுகளையும் விற்று விடுகிறார்கள். இது என் கண் முன்னே நடந்த ஒரு சம்பவம். இதை பார்த்த பின்பு நான் மாட்டு இறைச்சி சாப்பிட நினைக்கும் போதெல்லாம் அந்த மாட்டுக்கு இருந்த நோய் என் கண் முன்னே வருகிறது. நாம் சாப்பிடுவதும் அது போல் ஒரு மாடாக இருக்குமோ என்று ஒரு நினைவு வரும்போது நமக்கு அதை சாப்பிடவே அச்சமாக உள்ளது. நாம் என்றைக்கு இறைச்சிக்காக மாடுகளை வளர்த்து அதை மட்டுமே வேட்டுகிரோமா அன்றைக்கு எல்லோரும் ஆரோக்கியத்தை பற்றி கவலை இன்றி சாப்பிடலாம். மற்றபடி பசு வதை என்பதெல்லாம் டுபாகூர். இதுபோன்ற இறைச்சி கூடங்கள் கோவையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  • நோய் இருந்தாலும் நல்லா வேகவைத்துத்தானே சாப்பிடுறோம்..எல்லாக் கிருமிகளும் அழிஞ்சிடும்…பயப்படத் தேவை இல்லை.. கோழிக்கு சீக்கு வந்து தலையைக் கவித்திடறப்போ கூடுத்ல் வேக்காட்டில் வேகவைத்து சாப்ப்பிடுவாங்க..அதுமாதிரிதான் செய்யணும்…கோமாதா கறியவும்

 14. Wonderful article…really appreciate for this article. Each and every Indian should read this. I have eaten beef so many time in my home. Even early morning my father has brought beef from the shop. Please Brahmanism arrogant keep away from our livelihood. let people enjoy with their own wish. If anybody tells about your origin will you leave them…please don’t open our mouth. we are people of pain. Dear friends please make so many comments about this beef article. I will catch you later…Thank you Vinavu….

 15. Give data; not judgement. If I say your only aim is to show that you are a Secularist by brahmin beating, it might be stupidity. So come clean; speak truth; don’t thrust yr pre-judged vales only on and against Hindus.

 16. கரி தின்னாதே என்ட்ரு கோரும் பாப்பாஙலுக்கு வக்காலத்து வாஙலை, அவனுஙக தான் அதிகமா மாட்டுக்கரி தின்பதாக செய்தி… புலால் உன்னக் கோடாதுன்னு சொன்ன திருவல்லுவருக்கு என்ன பதில் சொல்லப் பொரேஙக…

 17. i am not supporting any caste, according to me there is no caste only humans… the thing what are we going to answer to mr.tiruvalluvar who had also stated kattra pinn nirkka atharkku thaga…

 18. வேதத்தில் மாட்டுக்கறி சாப்பிடலாம் எனச் சொல்லி இருக்கின்றது … அதனால் மாட்டுக் கறி உண்பது என்பது ஒன்றும் இந்துக்களுக்கோ, பிராமணர்களுக்கோ தடை செய்யப்பட்டவை அல்ல … !!!

  வேண்டுமெனில் பிராமணர்களும், இந்துக்களும் – பௌத்தத்திலோ, சமணத்திலோ மதம் மாறிவிட்டு பின்னர் போராடினால் நியாயம் என்பேன் … வெறும் 1 சதவீதம் இருக்கும் இந்த சமூகத்தின் கொள்கைகளை 99 சதவீதம் இருக்கும் பிறரிடம் திணிப்பது சரியாகவும் படவில்லை ….

  • Mr, Ikbal,

   Can you kindly quote in which veda — which saga beef is approved? Pashu has many meanings in sanskrit. Pashupaasha vimochini — deliverer of ignorants, here pashu means ignorance. Likewise there are other meanings.

   Please quote the vedic text — next time I visit Veda prasaar samithi I will right away put this question and clarify you.

   Please dont do cow slaughter — I fall at your feet. Please dont even think of that greatest sin —

   • வேதங்களின் மாடுகளைப் படையலாக்கி உண்பதற்கு தடை இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. ரிக் வேதம் 10-ம் புத்தகத்தில் 149-ம் பாடலில் தெளிவாக மாடுகளை அக்னிக்குப் படையலாக்கி அவற்றை உண்ணலாம் எனக் கூறியுள்ளது.

    மஹாபாரத்தில் ( சாந்திபார்வை – அத்தியாயம் 29-யில் ) ரந்திதேவர் என்னும் மன்னன் செல்வம் செழிக்க ஒன்பது வகை தானியங்களையும், மாட்டிறைச்சியையும் பிரமாணர்களுக்கு பரிசில் வழங்கியதான குறிப்புகள் இடம்பெறுகின்றன.

    தைத்திரிய ப்ராமணத்தில் ( II.1.11.1 ) ” அதோ அன்னம் வியா கௌ ” எனக் கூறுகின்றது, அதாவது மாட்டின் மானிசமும் அன்னமாக உட்கொள்ளக் கூடியதே எனவும், யஜ்னவால்கியரும் சதாபாத ப்ராமணத்தில் ( III.1.2.21 ) மாட்டின் மாமிசத்தை உண்வது இயல்பே எனவும் கூறுகின்றார். இளம் கன்றின் மாமிசம் புசிப்பதற்கு உரியது என ( IV.5-2.1 ) கூறுகின்றார்.

    ப்ராமணர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் மனுஸ்மிரிதியில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

    சாரக் சம்ஹிதா என்னும் பண்டைய மருத்துவ நூலில், மாட்டின் இறைச்சி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என கூறுகின்றது. யாகங்களில் காளை, கன்றுக் குட்டி, ஆடு ஆகியவைப் படையலாகப் பயன்படுத்திய செய்திகள் பழைய நூல்கள் பலவற்றிலும் இருக்கின்றன.

    ப்ரிஹாதாரண்யக உபநிடத்தில் ( VI.4.18 ) தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறக்க வேண்டுமானில், அவர்கள் மாலை வேளையில் மாட்டிறைச்சியினை உண்டு, பசுவும் – காளையும் போல உறவுக் கொண்டால் ஆண் குழந்தைக் கிடைக்கும் எனக் கூறுகின்றது.

    ரிக் வேதம் விவாக சுக்த புத்தகம் 10 பிரிவு 85 பாடல் 13-யில் திருமணத்துக்கு வரும் விருந்தினருக்கு மாமிசம் வழங்குவதன் சிறப்புனைக் கூறுகின்றது.

    அதர்வ தேவம் புத்தகம் 9 பிரிவு 4 வரிகள் 37-38-39 யில் பசுவின் பாலும், பசுவின் மாமிசமே எந்த உணவை விடவும் ருசி மிகுந்த உணவு என கூறுகின்றது.

    மஹாபாரதம் அனுஷாசன் பார்வை அத்தியாயம் 88 யில் மாடு உட்பட அனைத்து விலங்குகளின் மாமிசத்தின் உன்னதத்தை விளக்குகின்றது, அத்ல் காளையின் மாமிசம் புசிப்பதற்கு உகந்தது எனவும் கூறுகின்றது.

    மனுஸ்மிருதி அத்தியாயம் 3 பாடல்வரிகள் 266 -272 யில் – இங்குள்ளப் பலருக்கும் முதலில் கூறிக் கொள்ள விரும்புவது – நான் ஒரு முஸ்லிமோ, கிறித்தவனோ அல்ல … நானும் ஒரு இந்து மதத்தவனே ஆவேன். இந்து மத வேதங்களும், புராணங்களும் மாமிசம் உண்பதையோ, மாட்டின் இறைச்சியினை உண்பதையோ தடுக்கவில்லை. சில இடங்களில் அவற்றை ஆதரித்துள்ளன என்பதே உண்மை.

    உதா.

    இறுதிச் சடங்கு செய்யும் ப்ராமணன் மாட்டின் இறைச்சியினை உண்ண வேண்டும் எனவும், மக்கள் பிராமணருக்கு அசைவ உணவையே படைக்க வேண்டும் எனவும் கூறுகின்றது.

    விஷ்னு தர்மோத்தார் புராணம் புத்தகம் 1 பகுதி 140 வரிகள் 49 & 50 -யில் இறுதிக் கிரியையின் போது மாமிசம் உண்ணாத ப்ராமணரும், மக்களும் நரகத்துக்குப் போவார்கள் எனவும்.

    மனுஸ்மிரிதி பகுதி 5 வரிகள் 35யில் – கிரியைகள் செய்யும் மனிதன் மாமிசம் புசிக்காமல் விட்டால் 21 பிறவிகளுக்கு பலிக் கொடுக்கப்படும் விலங்காக பிறப்பான் எனக் கண்டிக்கின்றது.

    இவைகள் போதுமா சகோ. இந்துக்களில் மாட்டி இறைச்சியினை உண்ணத் தடைப் போடுவதும், அல்லது புனிதம் என பிரச்சாரம் செய்வதும்.. வேதங்களையும், புராணங்களையும் படிக்காமல் இருக்கும் அரைக் குறை இந்துக்களே ஆவார்கள் என்பதே உண்மை.

    • Mr. Ikbal,

     You have quoted many scriptures — I made a quick call to my Guru and used few of your quotations. First he scolded me to have visited such evil promoting sites.

     Secondly he told this thing simply: “Not only the wise, learned, humble, merciful, equal minded people will quote vedas and quran. Even the saataan and the demonica will also try to quote, misinterpret the same scriptures to prove their point.”

     There was a great asura Bandaasuraa who is the illusion creative Asura –means he will change his forms, pretend to follow scriptures and later will cheat the Rishis, Devas and other gods. His kingdom is called sunya nagaram which is nothing but full of void. I think that Asura has started manifesting himself and his principles through various physical forms like you guies.

     Please dont fall prey under Maya. There was a magazine called Kalyana Kalpathaaru from Kerala — where all your misinterpretations were largely addressed.

     Bottom line is this as Jesus told — as thou thy sow shall they reap. If your motive is to enjoy killing cows it is very wrong.

     I cannot even dream of how you guies derive pleasure in killing an animal. Are you going to live for thousands of years — if end approaches you all will realize how too late you are and what you did to these innocent animals when they were young and healthy. But by that time it will really be too late.

     Dont incur more papas — stop this false propaganda. Instead do some meditatio and practice humility . Otherwise you will be finished as so happened to Hiranya Kasippu, Ravana, Kumbakarna, Hiranyaaksha and off late to the DMK empire.

     • @ கிருஷ்ணா – உங்களின் குரு உங்களிடம் பல உண்மைகளை மறைக்கின்றார்கள். ஒன்று தாங்கள் சம்ஸ்கிருதத்தை நன்கு படித்து – வேதங்களை உணர வேண்டும், அல்லது சம்ஸ்கிருதம் கற்று உண்மை பேசும் குருவிடம் பேச வேண்டும், அல்லது மொழிப் பெயர்ப்பில் படிக்க வேண்டும். எனது தாத்தனார் ஒரு வேத பண்டிதர் அவர் ஊடாகவே நான் இவற்றை அறிந்தேன் … இவற்றில் பொய்மை ஒன்றும் இல்லை என்பது உண்மை….

      18 புராணங்களை இந்து மதம் என தாங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல .. புராணங்கள் வெகு காலம் பின்ன எழுந்தவை. வேதங்கள் பௌத்த மதங்களுக்கு முன்னர் எழுந்தவை … வேதங்களில் தான் இந்து மதம் பற்றியுள்ளது. வேதங்களில் மாமிசம் சாப்பிடுவதையோ, மாட்டிறைச்சி சாப்பிடுவதையோ தடுக்கவில்லை என்பதே உண்மை ..

      நீங்கள் சொன்ன அரக்கர்களின் கதை எல்லாம் வேதங்களில் கிடையாது – இவை எல்லாம் பிற்கால புருடாக்கள்.

    • selvan, in all your reference veda’s could have agreed to consume beef in either or other form. But its being mentioned for non-brahmins since they need physica fitness. Whoever is doing these religious activities(homam) should not consume non-veg. Can you show me from any of your reference that brahmins should eat non-veg.

     In General -> I read somewhere, all Govt. positions are occupied by brahmins and dalits are trying to reach. Padikumpode siripu varala? for past 15 years, after reservation, getting an govt. job for a brahmin is literally non-existant. Do you folks think that doing below is going to improve your status? or demolish the ‘so called’ non-existent parpanium – NNNEEEVER

     “கருவறைக்குள்ள நுழையவும், சிதம்ப்ரம் கோயிலில் தமிழில் பாடவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் “

     • @ ஸ்ரீநிவாஸ் – வேதங்களில் மாமிசம் சாப்பிட அனுமதி இருக்கா – ஆம் இருக்கு. வேதங்களில் மாட்டின் மாமிசம் சாப்பிட அனுமதி இருக்கா – ஆம் இருக்கு. வேதங்களில் வேள்வியில் விலங்குகளைப் போட சொல்லி இருக்கா – ஆம் இருக்கு. வேள்வியில் போட்ட படையலை எல்லாம் பிராமணர் உண்டு தான் ஆகவேண்டுமா – ஆம்.

      பிராமணர் மாட்டு மாமிசம் சாப்பிடத் தடை இருக்கா – இல்லவே இல்லை.

      இப்போது இந்தியாவில் நாம் கேட்பது பிராமணர்களை மாட்டு மாமிசம் சொல்லி அல்ல. பிராமணர்கள் மாட்டின் மாமிசத்தை ஒதுக்கிவிட்டார்கள். அதனால் சாப்பிடுபவர்களைத் தடுப்பது நியாயமா? பிராமணர்கள் சாப்பிடதாதால் யாருமே சாப்பிடக் கூடாது என சொல்வது நியாயமா?

      தாங்களே பதில் கூறுங்கள் சகோ. பிற பிரச்சனைகள் குறித்து பேசப் போவதில்லை. இந்த ஒரு விடயத்தில் ஏன் மாட்டு மாமிசம் சாப்பிட இந்து அமைப்புகள் தடையாக இருக்கின்றன.

      விரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே ! என்பது தான் உண்மையாக இருக்கக் கூடும் அல்லவா?

      • I never support this agitation by this group. when others prefer விரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே – i agree. My concern still is whether really its being given that brahmins has to EAT the MEAT mandatorily. can u give me exact sentence(slogam) where its given – if possible copy,paste that content. I know sanscrit.

       • Srinivas,

        Are you sure that you never came across anything about eating cow meat by brahmin in Vedhas as suggested by Iqpal? I thing you are an Iyengar or Iyer(?) who would have been taught Vedha and you also claim you knew Sanskri. I studied sanskrit only little. I checked Iqpal statement of Rig Vedha, Mandala -10, Sukta 149. It does not say anything about meat.

    • Iqpal,

     Can you give the weblink if any for the 149th Sukta of Rig vedha?

     I got this on the web as the 149 th of 10th Mandala of Rig Vedha.
     http://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_149

     Mandala->book and Hymn->Sukta or song.

     The translation goes like this:
     The Rig Veda/Mandala 10/Hymn 149
     < The Rig Veda | Mandala 10
     The Rig Veda
     Mandala 10, Hymn 149
     Translated by Ralph T.H. Griffith
     1. SAVITAR fixed the earth with bands to bind it, and made heaven stedfast where no prop supported.
     Savitar milked, as 'twere a restless courser, air, sea bound fast to what no foot had trodden.
     2. Well knoweth Savitar, O Child of Waters, where ocean, firmly fixt, o'erflowed its limit.
     Thence sprang the world, from that uprose the region: thence heaven spread out and the wide earth expanded.
     3. Then, with a full crowd of Immortal Beings, this other realm came later, high and holy.
     First, verily, Savitar's strong-pinioned Eagle was born: and he obeys his law for ever.
     4. As warriors to their steeds, kine to their village, as fond milk giving cows approach their youngling,
     As man to wife, let Savitar come downward to us, heaven's bearer, Lord of every blessing.
     5. Like the Angirasa Hiranvastupa, I call thee, Savitar, to this achievement:
     So worshipping and lauding thee for favour I watch for thee as for the stalk of Soma.

     I don't pay a shit to Vedha as for me they are very old, iron age suktas passed on to many generations without anything being written down any time until Gupta period (4th to 6th century AD). It si vailable in two different style "Padapatha" & "Samhitapatha".

     But I don't see anything about eating cow meat. Am I missing the version you saw?
     Note: I don't pay a shit to this barbarian works of iron age. Any one reads this Sukta would understand there is nothing great said in this for use by human. I did not read anything beyond this though, as I have no