Wednesday, November 6, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!

பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!

-

பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ராம்தேவ்

து ஜனநாயகப் படுகொலை” என்று கூவுகின்றன இந்திய ஊடகங்கள். யோகாசனம் பயிலும் மேன்மக்களுக்கு பாதிப்பு வந்து விட்டதே என்று  கண்ணீர் வடிக்கிறது தினமணி. பாபா ராம்தேவ் ஒரு ஆன்மீக சுப்பிரமணியசுவாமி என்கிற உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு சில ஊடகங்களும் கூட போலீசாரின் நடவடிக்கைகளை பாசிசம் என்கிறார்கள்.

போலீசும் இராணுவமும் இந்தப் போலி ஜனநாயக அமைப்பைக் காக்கும் பாசிசக் கருவிகள் என்பதில் நமக்கும் கூட கருத்து வேறுபாடு இல்லை தான். ஆனால், இந்த மாபெரும் இரசியம் எந்த நேரத்தில் இவர்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது எந்த நேரத்திலெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்பதில் இருந்து தான் இவர்கள் எதற்காக அக்கறை கொள்கிறார்கள் என்பதையே விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணா ஹாசாரே வாழும் இதே தேசத்தில் தான் ஐரோம் ஷர்மிளாவும் வாழ்கிறார். பாபா ராம்தேவின் உடலில் ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பத்திரமாக விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள அதே தேசத்தில் தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் மத்திய இந்தியாவெங்கும் அலைந்து திரிகிறார்கள்.

ஒரு கோடீசுவர கார்ப்பொரேட் சாமியாரை ஒன்றுமே செய்யாமல் பத்திரமாக திருப்பியனுப்பியதற்கே காங்கிரசு கட்சித் தலைவரை நோக்கி செருப்பை வீசத் துணிகிறார்கள் அவரது பக்தர்கள். திக்விஜய சிங்கின் வீடு மீது கல்லெறிகிறார்கள். இந்த சில்லுண்டிச் சில்லறை சமாச்சாரத்தையெல்லாம் ஏதோ மாபெரும் மக்கள் கிளார்ச்சி போல் சித்தரிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் அவற்றைப் பெருமை பொங்க விவரிக்கின்றன.

ஆனால், அரை நூற்றாண்டு காலமாக காஷ்மீரத்திலும் வடகிழக்கிலும் இந்தியாவின் கொலைகார இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்து வீதியிலிறங்கிப் போராடி வருவதை மட்டும் இவர்கள் யாரும் போராட்டமாகக் கருதுவதில்லை.

கோழைத்தனம் என்பது சந்தர்பவாதத்தின் உடன்பிறவாச் சகோதரன். அண்ணா ஹாசாரே மற்றும் பாபாராம்தேவின் பின்னே ‘போராளிகளாக’ அவதரித்து அணிதிரண்டு நிற்கும் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு போராட்டம் என்பது இன்னொரு பொழுதுபோக்கு. அவர்களைப் பொருத்த வரையில் போராட்டம் என்பது தங்களது மனசாட்சியை ஆறுதல் படுத்த அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் உயிருக்கோ உடலுக்கோ உடைமைகளுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு வராமல் தலையைக் காட்டி விட்டுப் போகும் பொழுபோக்கு நிகழ்வு தான்.

அண்ணாவின் பின்னும் பாபா ராம்தேவின் பின்னும் பாதுகாப்பாக நின்று கொண்டு மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்திக் கொண்டு பஜனை பாடுவதையே பயங்கரமான போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ராம் லீலா மைதானத்தில் வைத்து ஒரு சிறிய முன்னுரையை அரசு கொடுத்திருக்கிறது. நாடெங்கும் விவசாயிகள் இழவு வீட்டு சோகத்திலிருந்த போது ஊடகங்கள் ஜெஸ்ஸிகா லாலுக்குக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைப் போல – இப்போது இந்த நடுத்தரவர்க்க அச்சத்தையும் கோழைத்தனத்தையும் டி.ஆர்.பி ரேட்டிங்குகளாக மாற்றிக் கொள்ள கூடுமானவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய இந்தியாவின் கோண்ட் இன மக்களைப் போன்றோ, காஷ்மீரிகளைப் போன்றோ, வடகிழக்கு மக்களைப் போன்றோ, அல்லது நாடெங்கும் தங்கள் வாழ்வுரிமைகளுக்குப் போராடும் உழைக்கும் மக்களைப் போன்றோ ராம்லீலா மைதானத்து மான்கராத்தே வல்லுனர்களுக்கு இந்தப் போராட்டம் என்பது வாழ்வா சாவா போராட்டமன்று. இதோ இந்த மண்குதிரைகளை நம்பி களத்திலிறங்கிய இந்துத்துவ கும்பல் தன்னந்தனியே ரோட்டோரத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் – சத்தியாகிரமாம்!

வினவில் நாம் இந்த அற்பர்களின் போலித்தனங்களை தோலுரித்துக் காட்டிய போதெல்லாம் தவறாமல் ஆஜராகும் சில அன்பர்கள், ‘யாருமே போராடாமல் இருக்கும் நிலையில் இதுவாவது நடக்கிறதே; தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்று உருகுவதைக் கண்டிருக்கிறோம். அந்த உருகல்  உணமையான அறவுணர்ச்சியின் பாற்பட்டதே என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான் – தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் வாழ்வுரிமை இழந்து பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இழந்த தங்கள் வாழ்க்கையை மீட்க நாடெங்கும் போராடியே வருகின்றனர்.

மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிற உங்கள் உணர்ச்சி உண்மையானதென்றால் நீங்கள் மக்களோடு தான் கைகோர்க்க வேண்டும் – கார்ப்பொரேட் சாமியார்களின் குடுமிக்குள் முகம் புதைத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி என்கிற மார்க்சின் முழக்கத்திற்கான மெய்யான பொருள் என்னவென்பது உங்களுக்கு விளங்கும். அதற்கு நீங்கள் தயாரா?

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கோடீஸ்வரன் ரஜினிக்காக அழுவது பெருமை..

    கோடீஸ்வர அம்மாவுக்காக நாக்கை அறுப்பது பெருமை..

    கோடீஸ்வர பாபாக்களுக்காக மெழுவர்த்தி பிடிப்பதும் பெருமை..

    எப்படியாவது எம் மதத்தை காப்பாற்றுவதில் பெருமை..அதில் எந்த அயோக்கியத்தனம் நடந்தாலுமே..

    ஆனால் வாழ்வுரிமை இழந்து பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் போராடுவது பெருமை தருமா ?.. நீங்களே சொல்லுங்க.. அதுல ஏதாச்சும் நியாயமிருக்கா?..

    அட்லீஸ்ட் ஊடகத்திலாவது வருமா எம் போராட்ட செய்தி?..

  2. ஊழலுக்கெதிராக ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் என்றுதான் செய்தி ஊடகங்கள் அனைத்தும் தெரிவிக்கின்றன. எங்குமே மக்கள் போராட்டத்தில் குதித்தனர் என்று செய்தியே இல்லை. யாராவது போராடுவார்கள்.. நமக்கும் பயன் கிடைக்கும் என்றுதான் பார்க்கிறோமே ஒழிய, நாம் வெகுஜன மக்கள் ஒன்றிணைந்து களமிறங்கி போராட வேண்டும் என்று நினைப்பதில்லை. வெட்கப்படவேண்டிய ஒன்றுதான்.

  3. 500 மீனவர்கள், லட்சக்கணக்கில் ஈழதமிழர்கள், ஆயிரக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்தபொழுது எங்கே சென்றன இந்த டிவிகள், மிடியாகள், மனித உரிமைகள்……….!!! ???. ராம்த்தேவ் ..,ராம்த்தேவ்.., ராம்த்தேவ்… பல்லவி பாடுகின்றன. SHAME

  4. “போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி” ….
    எனக்கு பிடித்த சொல்.

  5. “”அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்”

    உண்ணாவிரத மேடையில் திலீபன் பேசிய உரை இது இதன் பெயர்தான் உண்ணாவிரதம்

    அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்றாம் நாள்
    “மலம் போகவேணும் போலதான் இருக்கு’ என்றார் திலீபன். “இறங்கி வாருங்கள்’ – உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். “வேண்டாம் விடுங்க… நானே வருகிறேன்.’ சிறுநீர் கழியவில்லை…சிரமப்படுகிறார். “தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்’ என்கிறார் டாக்டர். “என்ன பகிடியா பண்ணுறீங்க – சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்’ என்றார் திலீபன் உறுதியோடு.

    1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது

    இறுதியாக பன்னிரெண்டாம் நாள் கவிஞர் காசி ஆனந்தல் கவிதை படிக்க அவர் உயிர் பறந்தே போனது
    அவர் கவிதையில் சில பகுதிகள்

    திலீபன் அழைப்பது சாவையா?
    இந்த சின்ன வயதில் இது தேவையா
    உலகம் இதை எண்ணி பார்க்குமா?
    இங்கே ஒரு தமிழ் ஈழம் பூக்குமா?

    என்று உருக்கமுடன் ஆரம்பிக்கும் அந்த கவிதை

    என் தமிழ்தாய் மார்
    பானை அடுப்பேற்றி
    ஐந்து நாள் ஆகிறது
    அடுப்பும் அழுகிறது
    புலிகள் அழுவதில்லை என்பர்
    உன் மரணம்
    புலிகளையும் அழ வைக்கும்
    பொல்லாத மரணமய்யா

    மேடை கட்டினோம்
    நல்லூரிலே உனக்கு
    பாடை தான் கட்டினோம்
    உயிரோடு பாடையிலே
    உட்கார்ந்த தமிழ்புலியே
    வயிறு எறியுதடா
    வயிறு எறியுதடா

    என்று கண்ணீருடன் முடிக்கிறார்

    உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஒரு முறை தீலிபன் வரலாற்றை படியுங்கள்
    http://www.eegarai.net/t57430-topic

    • ஆனா இந்த அண்ணா ஹசாரே மட்டும் எப்படி ரெண்டு மூனு நாளு உண்ணா விரதம் இருந்து தெம்ப பேசுராரு… காந்தி உண்ணா விரதம்ணா இது தானா…

    • இந்தியாவில் இது எல்லாம் சகஜமப்பா !!! இங்கு வாயில் மட்டும்தான் பேசுவோம் செய்வது எல்லாம் அயோக்கியத்தனம். அதற்கு மொழி கட்சி இனம் எந்த பாகுபாடும் கிடையாது . நாங்கள் இதில் ஒற்றுமை வாதிகள் என்றால் தவறு ஊழலிளும்தான் . எங்களிடம் போய் அண்டை நாட்டு கதை சொன்னால் ஏறுமா? நாங்கள் எப்போதும் பேச மட்டும்தான் விரும்புகிறோம் . ஏனென்றால் நாங்கள் ஊழலின் மொத்த உருவம். இந்தியா என்றால் ஊழல் ஞாபகம் வர வேண்டும் உலக மக்களுக்கு அதுவே எங்கள் உயரிய லட்சியம்.

  6. உலகில் எந்த ஒரு புரட்சியும் 18 கோடி செலவில் அரம்பமானது இல்லை

  7. “மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிற உங்கள் உணர்ச்சி உண்மையானதென்றால் நீங்கள் மக்களோடு தான் கைகோர்க்க வேண்டும் – கார்ப்பொரேட் சாமியார்களின் குடுமிக்குள் முகம் புதைத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி என்கிற மார்க்சின் முழக்கத்திற்கான மெய்யான பொருள் என்னவென்பது உங்களுக்கு விளங்கும். அதற்கு நீங்கள் தயாரா?”

    ஆனால் மக்களுக்காக எவ்விதம் போரடுவது என்பதையும் தெளிவுபடுத்தவும் , ஏனெனில் இஙுகு போராட நிறைய பேர் உள்ளனர் ஆனால் வழ்கிகாட்டுதல் தான் இல்லை.

  8. ராம்லீலாவிற்கு போலீஸ் வந்தவுடன் யோகா குரு சுமார் 2 மணி நேரம் போக்கு காட்டி மோகினி அவதாரம் எடுத்திருக்கிறார். ஹா ஹா…. ஆனாலும் பிடித்து விட்டார்கள்.

    இதை வெறுமனே ‘மான்கராத்தே’ என்று மட்டும் சொல்வது சரியான வார்த்தையா என்பதை அடுத்தக் கட்டுரைகளில் வினவு பரிசீலிக்க வேண்டும்!

  9. பன்டாரம் என்று சொல்ல்லி சாதாரன மக்கலை அவமதிக்க வேண்டாம். சாமிகல் அல்லது துறவிகள் என்ட்ரு சொல்லுஙகல். பன்டாரதுக்கு சாதி இல்லை.

    • சாமிகள் அல்லது துறவிகளுக்கு ஏன் 5 ஆயிரம் கோடிக்கு சொத்து அனைத்தையும் பொதுமக்களிடம் தரவேண்டியது தானே அமல்

  10. ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த போராட்ட மேடையை தீ வைத்து கொளுத்தி,அதன் மூலம் நாடெங்கும் மீண்டுமொரு இனப் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் சதி திட்டம் தீட்டியதாக செய்தி வெளியாகி உள்ளதே.அந்த செய்தியை கார்ப்ரேட் ஊடகங்கள் வெளியிடவே இல்லை. இது குறித்து விரிவான கட்டுரையை வினவு தருமா?

  11. எல்லாம் சரி .. but பண்டாரம் என்று சொல்வது நன்றாக படவில்லை .. அவாறு இழிவுபடுத்தும் நோக்கில் கூறியதை போல உள்ளது. நீங்கள் வாரதையில் தடம் புரளகூடது புரண்டால் உங்கள் சொல்லுக்கும் மதிப்பு இருக்காது.

  12. அந்த பாபாவை விட்டு விடுங்க.நீங்க போனீஙலா இல்ல நான் போனேனா?

    • நான் காலை 7 .30 மணிக்கு காயிதேமில்லத் மணிமண்டபம் முன்பு போனேன் . கசப்பான அனுபவம் ஏற்ப்பட்டது. அதனால் திரும்பி வந்து விட்டேன். போராட தெரியாதவர்களா ? விளம்பர போராட்டகரர்களா ? நல்லவர்களா ?கெட்டவர்களா ? என்னுடைய விளக்கம் உங்களுக்கு பிடிக்காது. இந்தியர்கள் திருந்த வேண்டியது அதிகம் உள்ளது!!!

  13. போலீஸின் அராஜகத்தை நாம் என்றுமே எதிர்க்கிறோம். இந்நிகழ்விலும். ஆனால், ஏன் காங்கிரசு அரசு முதலில் ஒப்புதல் அளித்துவிட்டு தனது பிரதிநிதிகளை விட்டு ஒப்பந்தம் பேசி பின்பு ஒப்புதலை வாபஸ் செய்து அடுத்து போலீஸை ஏவி, இப்படி நடந்துகொள்ளவேண்டும்? இந்த நாய் பாபா ராம்தேவ் ஒரு காப்பரேட் பொறுக்கி, கருப்புப்பண முதலை, ஹவாலா ஏஜெண்டை இத்தனை நாள் ஏன் சும்மா விட்டுவைத்திருந்தாய்? இன்று போலீசை விட்டு விரட்டுகிறாய், சி.பி.ஐயை ஏவ திட்டமிடுகிறாய்? இத்தனை நாள் என்ன செய்தாய்? இதற்குப்பின் என்ன இருக்கின்றது? இப்படித்தான் யோசிக்கவேண்டும். தயவு செய்து போலீசின் அராஜகத்தை ஒத்துக்கொள்ளாதே. தேவைப்பட்டால் ஒன்று இல்லையென்றால் மற்றொன்று என்று அரசு செயல்படும் விதத்தை விமர்சிக்க இதுதான் நமக்கு நல்ல வேளை. எல்லாரையும் முகத்திரை கிழிக்க வேண்டும். //கேள்வி கேள் கேலி செய்//

  14. ராம் தேவ்,அன்னாவிற்கு ஈர்ரோட்டிலும்,மதுரையிலும் ஆதரவுக் கூட்டங்கள் போடுகிறார்கள்-சாதி,மதம் பாராது கலந்து கொள்கிறார்கள்.இது இன்னும் பெருகும்.எனவே நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள், எங்களுக்கான ஆதரவு பெருகும்.ஒரே நாளில் சென்னையில் மருதையன் பேசும் கூட்டத்திற்கும்,அன்னா பேசும் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தால் அதிகக் கூட்டம் அன்னா பேசுவதை கேட்க வ்ரும்.ஏன் நீங்களே கூட வருவீர்கள்.கூலிக்கு மாரடிப்பது போல் உங்கள் தலைமையை திருப்திப்படுத்த நீங்கள் இப்படி எதையாவது எழுதித்தான் ஆக வேண்டும்.அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். போலி புரசிகர இயக்கத்திற்கு ஒரு நாள் தலைமுழுவீர்கள் என்று நம்புகிறோம்.

    • அன்னாவின் மேடைக்கு எதிராக, நடிகர் தவக்களை மேடை போட்டு பேசினால், அவருக்குத்தான் அன்னாவைவிட கூட்டம் அதிகமாக வரும்!

    • தங்களுக்கு நன்றி ஐயா. மன்னியுங்கள் அவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் . பாமரர்களுக்கு போராடும் சிவப்பு கட்சிக்கு உயர் சாதியினர் மட்டுமே தலைவர்கள் இவர்கள் எதைத்தான் புரிந்து கொள்வார்கள் . ஆனால் நேர்மையாக போராடுங்கள் தங்களுக்கு என் வாழ்த்துக்கள் .

  15. சுவாமிகளின் கார்ப்பரேட் போராட்டத்தை கார்ப்பரேட்ன் ஊடகங்கள்தான் வெளியீடும் பாசமுள்ள பங்காளிகள் அல்லவா! மேடையிலிருந்து குதித்து போராட்டம் பன்னியதை
    யெல்லாம் சுட்டிகாட்டாமல் விட்டிர்களே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க