Sunday, September 26, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

-

’’யாரு… காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக தன்னோட மாமனாராலயே ஆள் வச்சு சாவடிக்ப்பட்டிச்சே… அந்த பார்த்தசாரதியை பார்க்க வந்தீங்களா? ம்… என்னத்த சொல்ல… நானும் இந்த ஏரியாக்காரன்தான். அம்பது வருஷங்களா இங்கதான் இருக்கேன். ஒரு ஈ,எறும்பு அசைஞ்சா கூட எனக்கு தெரிஞ்சுடும். அப்படியிருக்கிறப்ப அந்தத் தம்பி இருபது வருஷங்களா இதே ஏரியாவுலதான் இருந்திச்சுன்னு பேப்பர்ல பாத்ததும் அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. சத்தியமா சொல்றேன்… பேப்பர்ல பார்த்தசாரதியோட ஃபோட்டோவை பார்த்ததும் முன்னபின்ன பார்த்தா மாதிரியோ, பேசினா மாதிரியோ நினைவேயில்ல. அந்தளவுக்கு தானுண்டு… தன்வேலையுண்டுனு அந்தத் தம்பி இருந்திருக்கு. எனக்கு மட்டும் இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிருந்தா அப்படியே கோயில் கட்டி கும்பிட்டிருப்பேன். ஆனா, பணக்காரனுங்களுக்கு எங்க மனுஷனோட குணம் தெரியுது? ஒரு தும்மல் கூட எவ்வளவு விலை போகும்னுதான கணக்கு பார்க்கறாங்க? என்னவோ போங்க… முன்னாடியெல்லாம் தெற்குப் பக்கம்தான் சாதி, அந்தஸ்தை பார்த்து இப்படி கொலை செய்வாங்கனு படிச்சிருக்கேன்… இப்ப இந்தப் பழக்கம் சென்னைக்கும் வந்திருக்கு… இதெல்லாம் நல்லதுக்கில்ல… ஆமா…’’

என்றபடி அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் சாலையில், மீன் மார்கெட்டுக்கு எதிர்புறமாக செல்லும் சாலையை அடையாளம் காட்டினார். அதுதான் அய்யாவு முதலி தெரு. பார்த்தசாரதியின் குடும்பம் அத்தெருவில்தான் வசிக்கிறது. சாலையின் தொடக்கத்தில் ‘சிந்தாதிரிப்பேட்டை உதவி காவல் மையம்: உபயம் சிந்தாதிரிப்பேட்டை வணிகர் பெருமக்கள்’ என்னும் பெயிண்ட் உதிர்ந்த போலீஸ் பூத், காவலர்கள் இன்றி காற்றாடிக் கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே ஓடையை போல் ஓடுகிறது கழிவு நீர். அதைத் தாண்டினால் சாலையின் இருபுறகும் கடைகள். பெரும்பாலும் சந்தன மாலை உட்பட செயற்கையான மாலைகளை விற்கும் கடைகள். இதனையடுத்து ஒரு சின்ன ஹார்டுவேர். பிறகு புரொவிஷன் ஸ்டோர். பெட்டிக் கடைகள். இக்கடைகளின் மாடிகளில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக துணிகள் வெயிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. பிறகு வருபவை அனைத்தும் குடியிருப்புகள்தான்.

வீடுகளோ, கடைகளோ இடைவெளியின்றி அடுத்தடுத்து இருக்கின்றன. ஒரு வீடு அல்லது கடையின் எல்லை அடுத்த வீடு அல்லது கடையின் ஆரம்பமாக இருக்கிறது. ஐம்பதடி தூரம் நடந்தால் இடது புறத்தில் சின்னதாக மசூதி. மேலும் ஐம்பதடி நடந்தால் வலப்புறம் ‘சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்’. இக்கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் வெள்ளை சுண்ணாம்படித்த வீட்டின் மாடியில்தான் பார்த்தசாரதியின் குடும்பம் வசித்து வருகிறது.

ஆங்காங்கே சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களில், இடைவெளி விட்டு ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அனைத்துமே மர ஜன்னல்கள். எல்லாமே திறந்திருக்கின்றன. எந்த ஜன்னலுக்கும் கொக்கியும் இல்லை. அவை நேராக நிற்கவும் இல்லை. ஒரு புறமாக சாய்ந்த நிலையில் காணப்படும் அந்த ஜன்னல்களின் கம்பிகள் துருவேறி, எளிதில் வளைக்கக் கூடிய அல்லது பிடுங்கக் கூடிய நிலையில் இருக்கின்றன.

வாசலில் காலிங்பெல் இல்லை. வாசக் கதவும் மரக் கதவுதான். சாயம்போன பழுப்பு நிறம். இடுப்பு வரை வெறும் மரச்சட்டங்கள். அதன் பிறகு நீள வடிவ மரப் பலகையின் நடுவில் நான்கு, நான்கு கம்பிகள். அந்தக் கம்பியின் இடைவெளியில் கைவிட்டால் உட்புறமாக இருக்கும் தாழ்பாளை அணுகலாம். ஆனால், கவனமாக அந்தத் தாழ்பாளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வாயைப் பிளந்தபடி காட்சியளிக்கும் அந்த இரும்புத் தாழ்பாளின் முனைகள் கைகளை கிழித்துவிடும்.

தாழ்பாளை நீக்கியதும் கைகளை அழுத்தி கதவைத் திறந்தால்… கரகர ஒலியுடன் கதவு திறக்கிறது. அதுதான் காலிங் பெல் போலும். சரியாக மூன்றடி நீளமுள்ள தாழ்வாரம். அதன் பிறகு கீழ் வீட்டுக்கான கதவு. அக்கதவை ஒட்டினால் போல வலது புறத்தில் மாடிக்கு செல்லும் படிக்கெட்டுகள்.

கைகள் இல்லாத கறுப்பு பனியனை அணிந்திருந்த, சுமாராக எட்டு வயதுள்ள சிறுவன் கீழ் வீட்டின் கதவை திறந்தபடி வந்தான். ”நீங்க யாரு..? யாரைப் பார்க்கணும்..?” என்றெல்லாம் கேட்காமல், ”பார்த்தசாரதி வீடுதான? மேல போங்க. ஆனா, சத்தம் போடாம போங்க. என் தம்பி தூங்கிட்டு இருக்கான்…” என்றபடி மாடிப் படிக்கெட்டை சுட்டிக் காட்டினான்.

மாடிப்படியின் அகலம் இரண்டடி இருக்கும். நீளம் என்று என்று பார்த்தால் அதிகபட்சம் ஓரடித்தான். சற்றே தாட்டியான உடலுள்ளவர்கள் அப்படிகளில் நேராக ஏற முடியாது. படிக்கெட்டின் நடுவில் ஆங்காங்கே உடைந்திருப்பதால் கால்களை கவனமாக ஊன்ற வேண்டும். ஏழு படிக்கெட்டுகள் வரை ஏறியதும் சராசரி உயரமுள்ளவர்கள் கூட குனிவது நல்லது. இல்லாவிட்டால் தலை இடிக்கும். இதன் பிறகு குறுகலான இரண்டு படிக்கெட்டுகள். அதன் பிறகு இடப்புறமாக முன்பைப் போல் மூன்று படிக்கெட்டுகள்.

பார்த்தசாரதியின் வீடு திறந்தே இருக்கிறது. கீழே சிறுவன் பேசியது கேட்டிருக்க வேண்டும். எனவே கதவின் அருகில் காலடி சத்தம் கேட்டதுமே, ”உள்ள வாங்க…” என குரல் அழைக்கிறது.

செவ்வகமான ஹால். தரைத்தளம் சிமெண்டினால் பூசப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே விரிசலும், சில இடங்களில் சற்றே பெயர்ந்தும் காணப்படுகிறது. கூரையை மரச் சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. வாசக் கதவுக்கு எதிர்முனையில், மர ஈசி சேரில் பெரியவர் ஒருவர் சாய்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் சாயம் போன சாம்பல் நிற பிளாஸ்டிக் சேர் காலியாக இருக்கிறது. பெரியவருக்கு அந்தப் பக்கம், சுவற்றுடன் ஒட்டியபடி பழைய மர டேபிள். அதன் மீது புதியதாக ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, பார்த்தசாரதியின் புகைப்படம், ரோஜா மாலையுடன் சுவற்றில் சாய்ந்தபடி வருபவர்களை வரவேற்கிறது.

அந்த மர டேபிள் ஆடாமல் இருப்பதற்காக, கால் பகுதியின் அடிப்பாகத்தில் சின்னதாக ஒரு கருங்கலை வைத்திருக்கிறார்கள். டேபிளுக்கு கீழே, புதியதாக ஒரு சின்ன எவசில்வர் குடமும், அதன் மீது மஞ்சள் தடவப்பட்ட தேங்காயும், தேங்காயை சுற்றிலும் மாவிலையும் இருக்கிறது.

”உட்காருங்க…” என தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை அந்தப் பெரியவர் காட்டினார். அவரது உறவினர்கள் ஏழெட்டு பேர், சுவற்றுடன் ஓட்டியபடி நின்றிருந்தனர்.

”நீங்க பத்திரிகைக்காரங்கனு தெரியுது. ஆனா, எந்தப் பத்திரிகைனு நீங்க சொன்னாலும் என்னால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, எனக்கு படிப்பறிவு கம்மி. அதனால நானே நடந்ததை சொல்ல ஆரம்பிச்சுடறேன்.

என் பேரு சந்திர மோகன். டைலர். இப்ப தொழில் செய்யறதில்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். பையன்தான் கடைசி. என் பொண்டாட்டி ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டா. கொஞ்ச நாள் பிராட்வேல இருந்தோம். அப்புறம், இதோ இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம். சுமாரா ஒரு பதினேழு, பதினெட்டு வருஷங்களா இதே வீட்லதான் குடியிருக்கோம். நாங்க குடிவந்தப்ப இந்த வீட்டுக்கு வாடகை இருநூறு ரூபா. இப்ப இரண்டாயிரம் ரூபா வாடகை தர்றோம். பசங்களை கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். பொண்ணுங்களை கட்டி கொடுத்ததும் தொழிலை விட்டுட்டேன்.

என் பையன் நல்லா படிப்பான். கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சான். ப்ளஸ் 2 முடிச்சதும் இன்ஜினியரிங் படிக்கறேன்னு சொன்னான். அந்தளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால அவனாவே பேங்க்ல லோன் வாங்கி படிச்சான். படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை கிடைக்கலை. சின்னச் சின்ன வேலையாதான் கிடைச்சது. வீட்டு சூழ்நிலை புரிஞ்சு கிடைச்ச வேலைக்கு போனான். நைட் ஷிப்ட் வேலைதான் பெரும்பாலும் கிடைச்சது. அவனுக்கு கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணத் தெரியும். அதனால பகல்ல அந்த வேலையை பார்த்தான். இந்த வருமானத்துலதான் படிப்புக்காக அவன் வாங்கின லோனையும் கட்டினான். குடும்பத்தையும் பார்த்துகிட்டான்.

இதுக்கு நடுவுல ஒரு பொண்ணை காதலிக்கறதா சொன்னான். அந்தப் பொண்ணு பேரு சரண்யா. நாங்க முதலியாருங்க. அவங்க நாயுடு. இதுபோக ஏணி வைச்சா கூட எட்ட முடியாத அளவுக்கு அவங்க பணக்காரங்க. அதனால இது சரிப்பட்டு வருமானு நான் யோசிச்சேன்.

ஆனா, சரண்யாவ பார்த்ததும் இப்படியொரு மருமக கிடைச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சேன். அந்தளவுக்கு பந்தா இல்லாம, பணக்கார திமிரு இல்லாம எங்கிட்டயும், என் பொண்ணுங்க கிட்டயும் அன்பா பழகினா.

இவங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் சரண்யாவோட அப்பாவும், அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்களையும் சரி, எங்க வீட்டையும் சரி, அவங்களுக்கு பிடிக்கலை. ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது. என் பொண்ணை மறந்துடு’னு என் பையன் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, என் பையனும், சரண்யாவும் உறுதியா நின்னாங்க. அதனால அவங்க வீட்ல திரும்பவும் பேச நான் போனேன்.

அவங்க வீடு பங்களா. என்னை நிக்க வைச்சு பேசி ‘இந்தக் கல்யாணம் நடக்காது’னு சொல்லி அனுப்பிட்டாங்க…” என்று அவர் சொல்லும்போதே அவருக்கு இருமல் வந்தது.

”பார்த்துப்பா… பார்த்து…” என்றபடி அழுது வீங்கிய முகத்துடன் உள்ளறையிலிருந்து ஒரு பெண் வேகமாக வந்து அவரது மார்பை தடவி விட்டார். ”இவதான் சரண்யா… என் மருமக…” இருமலின் வழியே அந்தப் பெரியவர் அறிமுகப்படுத்தினார்.

சரண்யா
சரண்யா

”அதிகம் பேசினா இவருக்கு இருமல் வரும். அதுக்காக, பேசாமயும் இருக்க முடியாது. ஏன்னா, நடந்த கொடூரத்தை உங்கள மாதிரி பத்திரிகைகாரங்ககிட்ட இப்ப சொன்னாதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பறோம். அதனாலதான் திரும்பத் திரும்ப எங்க துக்கத்தை சொல்லிகிட்டே இருக்கோம்…” என பெரியவரின் மார்பை தடவியபடியே சரண்யா பேச ஆரம்பித்தார்.

”கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரம்பூர், பெரியார் நகர்ல எங்கப்பா அம்மா கூடதான் நான் இருந்தேன். எங்கப்பா நரசிம்மன். அவரு வில்லிவாக்கம் குடிநீர் வடிகால் வாரியத்துல உதவி செயற்பொறியாளரா இருக்காரு. அம்மா பேரு லதா, கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். ஒரேயொரு அண்ணன். பேரு அரவிந்த். இன்ஜினியரிங் முடிச்சுட்டு வெளிநாடு போக டிரை பண்ணிட்டு இருக்கான். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.

சின்ன வயசுலேந்தே எங்க வீட்டை எனக்கு பிடிக்காது. எங்கப்பாவும், அம்மாவும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ்தான். ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்தா அதிகபட்சம் மாசம் முப்பதாயிரம் ரூபாதான் வரும். ஆனா, எங்களுக்கு சென்னைல மட்டுமே 5 வீடுகள் இருக்கு. இதுதவிர எங்க சொந்த ஊரான அரக்கோணத்துல சொத்துக்கள் இருக்கு. நிச்சயம் இதெல்லாம் அவங்க சம்பளத்துல வாங்கியிருக்க முடியாது. வேற வழியில சம்பாதிச்ச பணம்தான். ஒருமுறை லஞ்சம், ஊழல் தொடர்பா எங்கப்பா மேல விசாரணை கூட நடந்தது. ஆனா, எப்படியோ தப்பிச்சுட்டாரு.

வீட்ல எங்கப்பா சாது. அம்மா வைச்சதுதான் சட்டம். பண ரீதியா எல்லாத்தையும் எங்கம்மாதான் பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் பணத்தை வைச்சே மதிப்பிடுவாங்க. பணக்கார ஃப்ரெண்ட்ஸோட பழகினா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பாங்க. அதுவே ஏழையாவோ அல்லது சுமாரான நிலைல இருக்கிற ஃப்ரெண்ட்ஸாவோ இருந்தா ‘அவங்க கூட எல்லாம் ஏன் பழகற’னு என்னை திட்டுவாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அடிக்கடி அவங்களோட சண்டை போடுவேன். எங்கண்ணன் எப்பவும் அம்மா பக்கம்தான். அப்பா வாயே திறக்க மாட்டாரு. அதனால தனிமைப்பட்டு நின்னேன்.

இந்தநேரத்துலதான் ‘சாட்டிங்’ மூலமா 5 வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தசாரதி அறிமுகமானாரு. ஒருத்தரையொருத்தர் சந்திக்காமயும், ஃபோட்டோ கூட பரிமாறிக்காமயும் நட்பா பழகினோம். காஞ்சிபுரம் பக்கத்துல எம்.பி.பி.எஸ். படிக்க எனக்கு சீட் கிடைச்சது. உண்மையை சொல்லப் போனா பணம் கொடுத்து சீட் வாங்கினோம்னு சொல்லணும்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி நானும் பார்த்தசாரதியும் நேருக்கு நேர் ஒரு பொது இடத்துல சந்திச்சோம். பணத்தை பெரிசா நினைக்காத பார்த்தசாரதியோட குணம் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிதான் அவரோட நான் வெறும் நட்பா மட்டும் பழகலை… காதலிக்கவும் செய்யறேன்னு புரிஞ்சுது. ஏறக்குறைய பார்த்தசாரதியும் அதே மனநிலைதான் இருந்தாரு. அதனால பரஸ்பரம் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.

நான் வீட்லேந்து தினமும் காலேஜுக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். சீக்கிரமா காலேஜ் விட்டு வர்றப்ப அல்லது வார கடைசில நாங்க ரெண்டுபேரும் ஊர் சுத்துவோம். இதை யாரோ பார்த்துட்டு எங்க வீட்ல போட்டுக் கொடுத்துட்டாங்க.

எங்க காதலை பத்தி எங்கப்பா என்ன நினைச்சார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா, எங்கம்மாவும், அண்ணனும் இதை ஏத்துக்கலை. பலமா எதிர்த்தாங்க. பார்த்தசாரதியை நான் மறக்கணும்னு என்னை அடிச்சாங்க. ஆனா, நான் உறுதியா நின்னேன்.

அதனால ஃபைனல் இயர் படிக்கிற எனக்கு அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோட கடந்த ஜனவரி 27-ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடத்தினாங்க. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாதுனு காலேஜ் ஹாஸ்டல்ல தங்கினேன். ஆனா, வார கடைசில வீட்டுக்கு வர்றப்ப பார்த்தசாரதியை நான் சந்திக்கக் கூடாதுனு ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி செஞ்சாங்க. என்னுடைய செல்ஃபோனையும், லேப்டாப்பையும் பிடுங்கிட்டாங்க. ‘பார்த்தசாரதிய நீ எங்களுக்கு தெரியாம கட்டிகிட்டாலும் உன் தாலிய அறுத்து உனக்கு இரண்டாவது கல்யாணம் செஞ்சு வைப்போம்’னு சொன்னாங்க.

ரொம்ப அருவெறுப்பா ஆகிடுச்சு. கொஞ்சமா ஒட்டிட்டிருந்த பாசம் கூட விட்டுப் போயிடுச்சு. பணம் பணம்னு அலையற எங்கம்மாவையும், அண்ணனையும் பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பணத்தை பத்தி பெரிசா நினைக்காத, சின்ன வயசுலேந்து நான் தேடிக்கிட்டிருந்த அன்பை மட்டுமே முக்கியமா கருதற பார்த்தசாரதியோட குடும்பம் எனக்கு பெரிசா தெரிஞ்சது. எந்தக் காரணத்தை கொண்டும் இவங்களை இழந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.

நடுவுல எங்கண்ணன், பார்த்தசாரதியை கூப்பிட்டு மிரட்டினான். ஆனா, ‘சரண்யாவ உயிருக்கு உயிரா காதலிக்கறேன். அவளை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்’னு பிடிவாதமா நின்ன பார்த்தசாரதிய பார்க்க பிரமிப்பா இருந்தது. உண்மைய சொல்லணும்னா அந்தக் கணத்துலேந்துதான் நான் அதிகமா பார்த்தசாரதியை நேசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லணும்.

உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலை. நீங்க சின்ன வயசுலேந்து எதை தேடிட்டு இருந்தீங்களோ… எது கிடைக்கவே கிடைக்காதுனு நம்பிட்டு இருந்தீங்களோ… அது உங்க முன்னாடி வந்து நின்னு ‘உனக்காகத்தான் நான் காத்திருக்கேன்’னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படியான மனநிலைதான் நான் இருந்தேன்.

அதனால கடந்த பிப்ரவரி மாசம் 10ம் தேதி நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். பிப்ரவரி 23ம் தேதி சின்னதா ஒரு ரிசப்ஷனை வச்சோம். எங்க வீட்லேந்து யாருமே வரலை.

நான் வாழ்ந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அது பல் விலக்கறதுலேந்து ஆரம்பிக்கிற வேறுபாடு. ஆனா, இந்த வீட்லதான், இந்த நாலு சுவத்துக்குள்ளதான் நான், நானா இருக்கேன். எந்தவிதமான மன சங்கடமும் இல்லாம சந்தோஷமா இருக்கேன். இருக்கிற சாப்பாட்டுல எனக்கும் ஒரு வாய் கொடுக்கிறாங்க. ஆனா, வயிறார நான் சாப்பிடறேன்.

எங்க கல்யாணத்துக்கு பிறகுதான் பார்த்தசாரதிக்கு ஒரு நல்ல வேலை டைடல் பார்க்குல கிடைச்சது. நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். வார கடைசில இங்க வந்துடுவேன்.

திருமணத்துக்கு பிறகு எங்கம்மாவும், அப்பாவும் அமைதியா ஆகிட்டாங்க. அண்ணன் கூட எந்த ரியாக்ஷனும் காட்டலை.  இது அவங்க வழக்கத்துக்கு மாறானது. அதனாலயே ஏதோ பெரிசா ப்ளான் பண்ணறாங்கனு என் மனசு கடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. பார்த்தசாரதிகிட்ட என் பயத்தை சொன்னா, ‘எதுக்கு வேண்டாததை போட்டு குழப்பிக்கற’னு என்னை டைவர்ட் பண்ணிடுவாரு. ஆனாலும் நான் சமாதானமாகலை.

தினமும் காலைலயும், மாலைலயும் நான் பார்த்தசாரதியோட பேசுவேன். அப்படித்தான் ஜூன் 2-ம் தேதி காலைலயும் அவரோட பேசினேன். ஆனா, கொஞ்ச நேரத்துலயே கால் கட்டாகிடுச்சு. திரும்பவும் கூப்பிட்டேன். அப்ப பார்த்தசாரதி யார் கூடவோ வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாரு. ‘என்ன பிரச்னை? யாரோட சண்டை போடறீங்க’னு கேட்டேன். அவர் பதில் சொல்றதுக்குள்ள அவரோட செல்ஃபோன் கீழ விழுந்து, ஆஃப் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு விடாம தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப்னே வந்தது.

பயந்து போய், பார்த்தசாரதியோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன். அவருக்கும் எந்த விவரமும் தெரியலை. பகல் பூரா பார்த்தசாரதியை தொடர்பு கொள்ளவே முடியலை. வீட்டுக்கும் அவர் வரலை. ஆபீசுக்கும் அவர் போகலை. அதனால அலறியடிச்சு சென்னைக்கு வந்தேன். நிச்சயம் இது எங்க அப்பா, அம்மாவோட வேலையாதான் இருக்கும்னு உறுதியா நம்பினேன்.

மாலையே சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்தோம். பார்த்தசாரதோட செல் நம்பரை வாங்கி, டிரேஸ் பண்றதா சொன்னாங்க. நான் தெளிவா எங்கப்பா, அம்மா, அண்ணனை விசாரிங்கனு சொன்னேன். எங்கப்பாவோட பெயரையும், வேலையையும் கேட்டவங்க சட்டுனு ஜர்க் ஆனாங்க. அதுக்குப் பிறகு அவங்க போக்கே மாறிடுச்சு.

‘பார்த்தசாரதிக்கு வேற அஃபேர் இருந்துச்சா… பணம் கேட்டு என்னை டார்ச்சர் பண்ணினாரா… கெட்டப் பழக்கங்கள் அவருக்கு இருக்கா’னு தேவையில்லாத கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த நிலைலதான் கடந்த 7-ம் தேதி ராத்திரி திண்டிவனம் பக்கத்துல ஓலக்கூர் பாலத்துக்கு கீழ எரிஞ்ச நிலைல ஒரு உடலை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சாங்க…”

துக்கத்தை கட்டுப்படுத்தி சரண்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது, பார்த்தசாரதியின் அப்பா வாய்விட்டு அழ ஆரம்பித்தார். ”அழாதீங்கப்பா… நான் இருக்கேன்… அக்கா, கொஞ்சம் இவரை உள்ள கூட்டிட்டு போங்க…” என்று சரண்யா சொன்னதையடுத்து பார்த்தசாரதியின் சகோதரிகள் அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, உடைந்த குரலில் சரண்யா தொடர்ந்தார். ”இந்தத் தகவல் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் போச்சு. சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரங்க, அப்பாவை (சந்திரமோகனை) திண்டிவனம் கூட்டிட்டு போனாங்க. கேசியோ வாட்ச், சிவப்பு நிற உள்ளாடை, காப்பி கலர் பேண்ட்டை வச்சு அந்த உடல், பார்த்தசாரதியுடையதுதான்னு அடையாளம் காட்டினாரு…”

கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், ”டிஎன்ஏ ரிசல்ட்டும் அதை ஊர்ஜிதபடுத்திச்சு. எந்த பார்த்தசாரதியோட நான் வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேனோ, அந்த பார்த்தசாரதியை என்னை பெத்தவங்களே உயிரோட எரிச்சு கொன்னுட்டாங்க. உண்மைல அவங்களுக்கு நான் மகளாதான் பொறந்தேனா அல்லது என்னை எங்கேந்தாவது வாங்கினாங்களானு தெரியலை.

பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு…”

பார்த்தசாரதி - சரண்யா
சரண்யா - பார்த்தசாரதி

துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அழுதார் சரண்யா. மெளனமாக நிமிடங்கள் கரைய சட்டென ஆவேசத்துடன் நிமிர்ந்தார். ”நான் புகார் கொடுத்தப்பவே எங்க வீட்டாரை கூப்பிட்டு விசாரிச்சிருந்தாங்கனா என் புருஷனை காப்பாத்தியிருக்கலாம். நான் ஏதோ, வேணும்னே எங்க அப்பா, அம்மா, அண்ணன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா நினைச்சுட்டாங்க. எங்கப்பாவோட வேலைய பார்த்து அடங்கிட்டாங்க. ஆனா, இப்ப என்ன ஆச்சு..?”

அருகிலிருந்த 12-ம் தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழின் 3ம் பக்கத்தை விரித்தார். ”எங்கப்பாவே நான்தான் கூலிப்படையை ஏவி கொன்னேன்னு சரணடைஞ்சிருக்காரு. இதுக்காக 5 லட்சம் ரூபாய கொடுத்தாராம். நூறு ரூபாய கூட எங்கம்மாவுக்கு தெரியாம எடுத்து எங்கப்பா செலவு செய்ய மாட்டாரு. அப்படியிருக்கிறப்ப இவ்வளவு பெரிய தொகைய எங்கம்மாவுக்கு தெரியாமயா கொடுத்திருப்பாரு? எங்கம்மாவையும், அண்ணனையும் காப்பாத்தறதுக்காக குற்றத்தை தானே செஞ்சதா வாக்குமூலம் கொடுத்திருக்காரு. போலீசும் அதை நம்புது. ஆனா, நான் சும்மா விட மாட்டேன். எங்கப்பாவ தூண்டிவிட்ட எங்கம்மாவும், எங்கண்ணணும் கைது செய்யப் படணும். மூணு பேருமே தண்டிக்கப்படணும்…”

மூச்சு வாங்க பேசிய சரண்யா, சற்று நிதானத்துக்கு வந்தார். ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்-க்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்… நாசமா போற அந்தஸ்துக்காக பெத்தவங்களே இப்படியா கொடூரமா நடந்துப்பாங்க…” உதடு துடிக்க பேசிய சரண்யா, சட்டென எழுந்தார். ”ஐ’ம் சாரி… தப்பா நினைக்காதீங்க… நான்… நான்… உள்ள போறேன்…” என்றபடி உள்ளறைக்கு சென்றார்.

வெளியே வந்த பிறகும் சரண்யாவின் கேவல் கேட்டுக் கொண்டே இருந்தது.

______________________________________________________________________

வினவு செய்தியாளர், சென்னை – சிந்தாதரிப்பேட்டையிலிருந்து….
_______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்-க்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்…//

  இந்த பெண்ணை உடனே பார்த்து கட்டிப்பிடிக்கணும்போல இருக்கு..

  நாம் கூட இருந்து உதவணும் இந்த மாதிரி பெண்ணுக்கு..

  பெத்தவங்கன்னு கூட பார்க்காம தண்டனை வாங்கித்தருவதும் , கணவன் குடும்பத்தை காப்பாத்த துடிப்பதும்..

  நல்லா இருப்பே சரண்யா..

  — கண்ணீருடன்..

  • ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்ஹ்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்…//

   இந்த பெண்ணை உடனே பார்த்து கட்டிப்பிடிக்கணும்போல இருக்கு..

   அய்யா ஜிம்!

   தன் கணவனைக் கொன்றவனின் பணத்தில், அதுவும் கள்ளப் பணம், இவர் மெடிக்கல் படிப்பை முடிக்கப்போகிறார். பின்னர் ஐஏஎஸ் எழுதப்போகிறார். அதில் இவர் கணவனின் குடும்பத்தைக் காப்பாற்றப்போகிறார்

   அனைத்துக்கும் மூலம் கறைபடிந்த பணம் வேண்டும.!

   This is called ‘Money laundering’. Pour black money, or illegally gotten wealth, into Tirupathi Hundi, educate ur children and make doctors and engineers, and spend for Philanthropic activities and get 80C IT concessions. Ur money becomes white. U become a saint.

   Some years ago, Madras police caught a pickpocket. He confessed that he had been active in the city buses for the past 20 years and was never caught. Where s he from ? Chitoor. Police went there and was surprised to see his house. It was a mansion and he had a good and beautiful children: one is a doctor and the other is in an eng college. There s a wide spread respect for the family and the pickpocket. He told every one there he was running a business. U can become a doctor and your pickpocket daddy will buy u a medical seat.

   Is Saranya is principled, shd shd not touch the money of her father who killed her husband. And then find other ways to survive and prosper in life. Only then, jimms can write the emotional congradulatory mge to her as he has done here, cant he?

   • அய்யா ஜிம்!

    தன் கணவனைக் கொன்றவனின் பணத்தில், அதுவும் கள்ளப் பணம், இவர் மெடிக்கல் படிப்பை முடிக்கப்போகிறார். பின்னர் ஐஏஎஸ் எழுதப்போகிறார். அதில் இவர் கணவனின் குடும்பத்தைக் காப்பாற்றப்போகிறார்

    அனைத்துக்கும் மூலம் கறைபடிந்த பணம் வேண்டும.! //

    என்ன தப்பு.. கறைபடியாத பணம் னு இருக்கா?..

    நான் படித்தத் இந்தியாவில். இந்திய அரசு எனக்கு செலவழித்தது… ஆனா நான் வெளிநாட்டுக்கு வந்துட்டேன்.. ஏன்னா சாதியால எனக்கு கிடைக்கவேண்டிய வேலை மற்றொருவருக்கு கிடைத்தது..

    ஜோ உங்க வாதம் முட்டாள்தனமா இருக்கு..

    அந்த பையனின் அப்பா இப்படி ஒரு பொண்ணு மருமகளா வரணும்னு ஆசப்பட்டது தப்பா?..

    நாளைக்கு நானும் இதே போல ஆசப்படுவேன். என்கிட்ட பாசமா இருக்கிற பொண்ணு எனக்கு மருமகளா வரணும்னு..

    இப்ப நேரமில்ல வந்து மீதி கருத்தாடுவோம்..

    அன்பு இல்லாம எத்தனை குடும்பம் சீரழியுதுன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..

    :((

    பணம் பணம் மட்டுமே நிம்மதிய தந்திடாது.. அது வெறுத்து போகும் சிலருக்கு..

    அன்புக்காக எது வேணா செய்ய துணிவாங்க..

    இப்பவும் சரண்யா அவங்க பெற்றோர் பணத்துலதான் ஐஏஎஸ் படிக்கணுமா என்ன?..

    இந்த பாடல் தான் நினைவுக்கு வருது.

    ” நான் கேட்டு தாய் தந்தை பெற்றாரோ,?. இல்லை எனை கேட்டு என் பிள்ளை பிறந்தானோ?.”

    • அய்யா ஜிம்!

     கறைபடியாத பணம் இருக்கு. இராணுவத்தில் பணிபுரிவோனுக்கு ஆர் கையூட்டுப்பணம் கொடுக்கிறார்கள் ?. அவர்கள் பிள்ளைகளும் எஞினியர் படிப்பில் செல்கிறார்கள். இப்படி பலபல தொழில்களில் வெறும் ஊதியம் மட்டுமே. பலர் படிக்கிறார்கள்.. தன் தந்தை பிக்பாக்கெட் என்று தெரியாமல் படிக்கிறார்கள். தெரிந்தால் படிப்பது தவறு. சரண்யா தன் தந்தை நேர்மையாக உழைக்கவில்லை என்று வினவிடமே சொல்லிவிட்டார். பல லக்கங்கள் கொடுத்துத்தான் சீட்டு வாங்கியிருக்கிறார். கள்ளப்பணம் எனத்தெரிந்தே படிப்பது சரியல்ல. அதுவும் தன் கணவனைக் கொன்றவனின் பணத்தில் கடைசியாண்டை முடிக்கப்போகிறார்.

     Lot of people work hard in their jobs; and their children too study and go to good jobs. U cant summarily say all earnings are through illegal channels.

     ஜிம்,..வாழ்க்கையில் முட்டாத்தனம் என்பதெல்லாம் கிடையாது. பார்வைகளே உள. நமக்கு என்ன தெரிகிறது என்பதே. இதில் அறிவான பார்வை, முட்டாத்தனமான பார்வை என்று கிடையா.

     எல்லாரும் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகளைச் செயல்படுத்தும்போது கவனம் தேவை. பொருந்தா ஆசை, பொருந்தும் ஆசை என்றெல்லாம் உண்டு. Reaslistic expectations and unrealistic expectations. A beggar can’t desire to marry his son to a daughter of a wealthy jeweller. But he can fantasise that. Fantasies shd remain fantasies. When they r attempted b realised, tragedies occur and young lives r lost, as in this case.

     பையனின் தந்தை, தனக்கு நல்ல மருமகள், குணவதியான மருமகள் வேண்டும் என ஆசைப்படலாம். ஆனால், பணக்காரி வேண்டும் என ஆசைப்படக்கூடாது. பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தால், பழகினால், இவள் நல்ல பெண், இவளை மாதிரி மருமகள் வேண்டும் என நினைக்கலாம். ஆனால் அப்பெண் பணக்காரப்பெண் என்று தெரிந்த உடனே மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அப்பெண்ணை அவர்கள் வீட்டில் விடச்சொல்லி, பின்னர் அவனுக்கு வேறு பெண்ணைப் பார்த்து மணம் செய்விப்பதே ஒரு நல்ல தந்தையின் கடமை. நம் கதையில் வரும் தந்தை அடுத்தவன் மகளை தன் மகனுக்காக கவர்ந்திருக்கிறார்.

     • Status Status னு சொல்றீங்களே எது அது?.. இந்த சோஷியல் ட்ரிங்கிங் பண்றவனா?..

      வெளிநாட்டுல மாப்பிள்ளை பார்க்கும்போதே சொல்லிடுவாங்க. ஆண் னா அப்படி இப்படித்தான் இருப்பான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..

      அடுத்து பெண் பிரசவத்துக்காக வரும் ஆண்டீஸ் டூ பீஸ் போட்டுட்டு நீச்சல் குளத்தில் குளிக்கிறாங்க.. ( அங்கே தமிழ்நாட்டுல இழுத்து மூடி சேலை கட்டியிருப்பாங்க ) .

      ஆக தனக்கு நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்ற துடிக்கும் பெற்றோர் அதிகம்..

      3 நேரம் 365 நாளும் பிரியாணி சாப்பிடமுடியாதுங்க வசதி இருக்கு என்பதற்காக..

      காதல் வந்துட்டா அது எவராயிருந்தாலும் தூக்கி எறியத்தான் தோணும்.. ஏன்னா இது ஈருடல் ஓருயிர்… அவன் இல்லாம வாழவே முடியாது என்ற நிலை.. அந்த நேரம் ஏழை பணக்காரன் லாம் பார்க்காது..

      அடுத்து பார்த்தசாரதி ஆண்பிள்ளை,.. இன்றைய தமிழ்நாட்டு நிலைமைக்கு அவனுக்கு ஆண் என்ற ஒரே தகுதிக்கே லட்சமோ கோடியோ கொடுத்து அள்ளிகிட்டு போக பெண் வீட்டார் தயாரா இருக்காங்க..

      அவனுக்கு என்ன குறை கண்டீர்கள்..?.

      கட்டிய மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றால் மாமனார் வன்புணர்ச்சி தொல்லை தருகிறான் நீங்க சொல்லும் அதே ஸ்டேட்டஸ் குடும்பங்களில்..

      அதைவிட தனக்கு பிடித்த மாதிரி , மிக கேவலமாக தாம்பத்யம் செய்ய சொல்லி வர்புறுத்தும் ஸ்டேட்டஸ் கணவன்மார் உண்டு..

      போன வாரம் படித்திருப்பீங்க பஸ் எரிந்த விபத்து.. அதிலும் திவ்யா என்ற பெண் நிச்சயம் செய்வதற்காக சென்றவள்..

      ஒரே நாளில் மகளை இழக்கலையா?..

      அதை மட்டும் விபத்துன்னு எடுக்கிறோமே..?

      அதே மன நிலைமைதான் வேணும் நமக்கு.,.

      நாம் விரும்பியபடி நமக்கு குழந்தை பிறக்கும்னு உறுதியா சொல்ல முடியுமா? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலுமே..?

      மன வளர்ச்சி குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவோமா?..

      ஆக ஸ்டேட்டஸ் என்பதெல்லாம் சோம்பேறிகளுக்கும், சுகவாசிகளுக்கும் அடுத்தவரை மதியாதவருக்குமே..

      ஏன் இந்த பார்த்தசாரதியை அவர்கள் ஸ்டேட்டஸ் கு உயர்த்தி இருக்கலாமே?..மனிதர்கள் என்றால்?..

     • //அப்பெண் பணக்காரப்பெண் என்று தெரிந்த உடனே மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அப்பெண்ணை அவர்கள் வீட்டில் விடச்சொல்லி, பின்னர் அவனுக்கு வேறு பெண்ணைப் பார்த்து மணம் செய்விப்பதே ஒரு நல்ல தந்தையின் கடமை. //

      ரொம்ப கேனத்தனமான வாதம் தோழர்…
      இன்னாரோடுதான் படுக்க வேண்டும்..என்று சொல்ல எந்த மூன்றாம் மனிதனுக்கும் உரிமை கிடையாது, பெற்றதால் எவனும் தன் பிள்ளையை தனது அடிமை என்று நினைத்துக் கொண்டு திரியும் பைத்தியக்காரர்களின் குரலில் பேசுகிறீர்கள்..

      பார்த்தசாரதியின் வருமானம் போதுமென்று தோன்றியிருக்கிறது சரண்யாவுக்கு உங்களுக்கென்ன பிரச்சினை…

      தன் மகனை அனுப்பி சொத்தை கொள்ளையடிக்கச் சொன்னதா பேசுறதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்..

      பணம் இருக்கிறது என்றும், சாதி ஒரே சாதியாய் இருக்கிறதென்றும்..இவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்றும் 1000 ரேட் உள்ள பெண் இருக்கிறதென்றும் படுக்க கிளம்பும் புத்தியில் வளர்ந்த அரை லூசுகள்….மெய்யாலுமே நம்புங்க உங்களை மாதிரிதான் பேசும்

   • Simple reply to you…..

    Everyone should depend on their parents till their maturity. So they can’t avoid their parents expectations from them even if it is wrong. we should appriciate that girl saranya.

    If its the bribe money its not a mistake of saranya.

   • The poor girl is not doing money laundering. Money laundering is not relating to 80C IT concession. This commentator not knowing what is money laundering. Money laundering is about some big level players like sharad pawar, a.rasa, mauritius, db realty, anil & mukesh ambanis, channel islands etc.,. These people never attempt to use 80C in IT Act. Rather they are not using or abusing IT Act. Vinavu is a medium followed by all strata of the society. Wrong information by commentators may make them talk like this commentator quoting Vinavu.

    • I didnt connect money laundering with IT. I only said money laundering will make black money into white. One of the ways of money laundering is to give donations to charity which will give the benefit of IT exemption.

     • Tuition fees paid for children r exempted from ITax. Black money can b used to pay tuition fees. For instance, in the Public Schools in high demand, the bureaucrates admit their children and pay Rs.10 k per month as tuition fees Their salaries dont permit that. Still they pay and show it to IT for concession. It s black money laundered to become white. It s just an e.g

 2. சின்ன வயசுலேந்து நான் தேடிக்கிட்டிருந்த அன்பை மட்டுமே முக்கியமா கருதற பார்த்தசாரதியோட குடும்பம் எனக்கு பெரிசா தெரிஞ்சது.//

  எத்தனை குழந்தைகள் இது மாதிரி??…

  குழந்தைகள்தான் இன்றைய முக்கிய முதலீடு..

  அமெரிக்கா போகணும் அதிகமா சம்பாதிக்கணும்.. இதுதான் திணிக்கப்படுது.. போட்டி பொறாமை படிப்புகளில் , வேலையில் , திருமணத்தில்…

  குழந்தைகளாக வளர்க்கப்படாமல் அடிமைகளாக வளர்க்கப்படுவது..

  ———

  //பண ரீதியா எல்லாத்தையும் எங்கம்மாதான் பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் பணத்தை வைச்சே மதிப்பிடுவாங்க. பணக்கார ஃப்ரெண்ட்ஸோட பழகினா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பாங்க. அதுவே ஏழையாவோ அல்லது சுமாரான நிலைல இருக்கிற ஃப்ரெண்ட்ஸாவோ இருந்தா ‘அவங்க கூட எல்லாம் ஏன் பழகற’னு என்னை திட்டுவாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அடிக்கடி அவங்களோட சண்டை போடுவேன்.//

  பணப்பேய்கள்.. இதுங்கள தூக்கி உள்ளே போடணும்..

  நாளை மருமகளையும் வரதட்சணை கொடுமை செய்யும் பெண்தானே இவள்..?

  நன்றாக அமைய வேண்டிய தாய், தந்தை , போன்ற உறவுகளே இப்படி இருக்குதுன்னா?..

  வெளியில் தெரிவது இது. இன்னும் தெரியாமல் பெற்றோருக்காக திருமணம் செய்து வெளிநாடு சென்ற ஆண்/பெண்கள்..?//

  ( நான் பதிவெழுத நினைத்தேன் .. வினவே எழுதியதுக்கு நன்றி )

 3. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்த அருமையான கட்டுரை!
  குடும்பத்துக்குள் ஒரு போராளி!

 4. Supreme Court:Honour killings should be Treated as Rarest of Rare Cases –
  09 May 2011
  |
  The Supreme Court of India on 9 May 2011 directed the high courts and trial courts in India to award the death sentence to people convicted in crimes related to honour killings.

  A bench of Supreme Court comprising Justice Markandey Katju and Justice Gyan Sudha Mishra gave the judgment. The bench stated that honour killings come within the category of rarest of rare cases deserving death punishment.

  The bench observed that death penalty is needed to stamp out the barbaric and feudal practice of honour killings. Honour killings have become common in many parts of India and death penalty is required as a deterrent for such uncivilised behaviour. According to the Supreme Court there is nothing honourable in honour killings.11:04 am (edited 11:04 am)

 5. அந்தப் பெண்ணின் உறுதி மலைக்க வைக்கிறது. இந்த நிலையிலும் உடைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் அவரது பண்பு பாராட்டுக்குறியது.

  மேன்மக்களின் வக்கிரங்களும் விகாரங்களும் பல்லிளிக்கிறது. சரண்யாவின் பெற்றோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்…

 6. அப்பெண் சொல்கிறாள்: பணம், பணம் என்றலகிறார்கள் என் அம்மாவும் அண்ணாவும்.

  No she is wrong.

  Money s not the only issue here Saranya. The issue is one of status that comes from wealth. Status can come from many sources: wealth is one. No one will like to give away his daughter to a beggar. But a beggar can claim to have won her heart by ingenious methods of conning, cant he? The beggar should be chased away; and the daughter is to be saved ! Tell why shd it be treated wrong to hold on to status ? Why shd one give up that?

  வினவும் வழக்கம்போல ஒரு கட்சியை மட்டுமே பேட்டி கண்டு எழுதிநியாயம் தேடும். இல்லையா ? கொலக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அது வேறே. இது வேறே.
  நான் கேட்பது;

  • Why did she accept the medical seat after knowing that it was bought using black and corrupt money?
  • Why did she continue to study up to the final year ? On whose money did she do that?
  • Did she go to college to study or enter into romance with an unknown guy through chat ? Will she tolerate the same conduct if her daughter does it from her hostel ?
  • She says she chatted; and then, met him. She was attracted by the guy’s style of ignoring her wealth and accepting her only?
  • What is wrong with wealth? All guys who ensnare rich girls do say at the beginning that they r for the girl as she is, i.e w/o wealth. If the marriage was accepted by her family, suppose, he wd accept the money given as dowry.

  Now, to the boy’s father, the tailor:

  He says he is a poor tailor. But he did not stop his son trying to ensnare a rich girl. Rather he went to her parents and begged them to give their daughter in marriage to his son. Does he think a rich man should give away his daughter for the asking? What qualifications will he expect from a boy to choose for his own daughter? Will he give her to every fellow from any background?

  வந்து கேட்டவனுக்கெல்லாம் பெண்ணைக்கொடுப்பதற்கா வளர்க்கிறோம் ? எவனும் வந்து மகளை ஏமாற்றலாம்: நான் உன்னைக் காதலிக்கிறேன். உன் பணத்தை அல்ல என்று சொல்லிவிட்டால் உடனே அவனுடன் ஓடிப்போய் விடவேண்டுமா ? சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றோர் என்ன செய்யவேண்டும்? ஆசிர்வதிக்கவேண்டுமா? ஏட்டுப்படிப்பு போதாது. வாழ்க்கைக்கல்வியும் வேண்டும்.

  From beginning to end, the girl, the boy’s father showed a bad conduct.

  He says:

  ஆனா, சரண்யாவ பார்த்ததும் இப்படியொரு மருமக கிடைச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சேன். அந்தளவுக்கு பந்தா இல்லாம, பணக்கார திமிரு இல்லாம எங்கிட்டயும், என் பொண்ணுங்க கிட்டயும் அன்பா பழகினா.

  He encouraged the romance instead of telling his son that it is wrong.

  அப்பனா இல்ல மாமாவா ? தன் மகன் ஒரு பெண்ணை வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறான். அப்பெண் ஆர்? அவளை அவளின் வீட்டிற்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவருதல் தகுமா ? என்று இவனுக்கு ஏன் தெரியவில்லை ? தனக்கொரு மகள் இருந்து அவளையும் இப்படி இன்னொருவன் வீட்டில் வைத்திருந்தால் விடுவாரா இவர்?

  I hold the boy’s father guilty. Because the girl has not seen life; so will take false conclusions. The tailor is experienced. The moment his son broke the news abt the romance, he shd have put his foot down and say no. If he had, the romance wd have ended; she wd have finished her degree; or wd have gone as a bride to a man of equal status. But the old tailor spoilt everything. When he came to know that her daughter was in the tailor’s house oftern, her father Narasimhan shd have gone to police against this tailor for misguiding his daughter. And even a case of kidnapping an innocent girl shd have lodged against this tailor. She wd have been saved. And his own son, too, wd have seen a better future; and a better married life with one of his own status.

  சுருங்கச்சொன்னால்,

  இரு இளம் நபர்களின் வாழ்க்கைச்சீரழிவுக்கு கொல்லப்பட்ட பையனின் தந்தையே மூல காரணம்.

  • இன்னும் எத்தனை காலம்தான் பெண்ணை அடிமையாகவே பார்ப்பீர்கள்?

   • ஓவியா!

    பெண் மட்டுமல்ல; ஆணும் பெற்றோருக்கு அடிமையே !

    பையனிடம் கேட்டால் தெரியும். கலியாண வயது வந்தவுடன் நினைத்தவளைக் கட்டிக்கொள்ள முடியாது. ஓடத்தான் செய்ய வேண்டும். பெற்றொரை விட்டுவிட வேண்டும்.

    ஆணுக்கும் இதே கதியே. பெண்ணுக்கும் இதே கதியே.

    ஏன் ஏன் பெற்றோர் இதைச்செய்கிறார்கள் ? அவர்கள் உங்களை அடிமையாக்கி உங்கள் இரத்தத்தை உறிஞ்சாக்குடிக்கிறார்கள்?

    இல்லை…உங்கள் நல் வாழ்க்கைகுத்தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் பெறுவது நீங்கள் நன்றாக வாழ்ந்தால் பெறும் மகிழ்ச்சி மட்டுமே. ஏழைப்பெற்றொராவது பணம் எதிர்பார்ப்பார்கள். பணக்காரன் அதைக்கூடச் செய்ய மாட்டான். தன் பெண் நன்றாக வாழ வேண்டும் எல்லாவிதத்திலும். வெறும் ஆசை, அல்லது, அன்புக் கணவனாக இருந்தால் மட்டும் போதாது. அவளுக்கு வசதியான வாழ்க்கையை அவன் தரவேண்டும்.

    இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கள் குற்றங்களா ? சொல்லு தாயீ!

    இந்தக்கதையில் தன் மகனுக்கு நல்ல மருமகள் வேண்டும் என நினைத்த பையனின் தந்தை குற்றமற்றவர், ஆனால் அப்பெண்ணின் பெற்றோரும் தமக்கு நல்ல மருமகன் வேண்டும் என நினைத்தால் குற்றம்! அப்படித்தானே தாயீ!

    பெண்ணைப்பெற்றவர்கள் அடிமடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். எவன் வந்து ஏமாற்றிவிடுவானோ என்று.

    ஆணைப் பெற்றோரும் அப்படியே. கஷ்டப்பட்டு கடன் உடன் வாங்கி அவனை பொறியாளர் ஆக்கி அமெரிக்காவுக்கு அனுப்பினால், எங்கிருந்தோ ஒரு பாப்பாத்தி லபக்கென்று கவ்விக்கொண்டு போய்விட்ட கதைகள் ஏராளம். அழுதுகொண்டிருக்கும் பெற்றோர் தமிழகக்கிராமங்களில் உண்டு. எங்கேயும் வ‌ருவேன்..ஆனால் உங்க‌ அம்மா அப்பாவைப் பார்த்தால் ச‌கிக்க‌ல்லே என்று ம‌க‌னை கால‌டியில் வைத்திருக்கும் க‌தைக‌ள் ஏராள‌ம்.

    பெற்றோர் உண‌ர்வுக‌ளைப்புரியுங்க‌ள். விரும்பியவரைக்கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மணவாழ்க்கை நன்றாக அமையவில்லையென்றால், அழபவர்கள் ஆர்? பெற்றோர்கள்.உடன்பிற்ந்த அண்ணன்மார், அக்காமார், தம்பிமார்.

    Have empathy. அடடே நானும் உணர்ச்சித் தொப்பி அணிந்து விட்டேன் ஓவியாவுக்காக மட்டும்.

    • கொலை செய்த்தாக சரண்டைந்திருக்கும் நபரின் வக்கீலாக ஜோ அமலனும், அவ்வீகீலின் குமாஸ்தாவாக சீனுவும் கோர்டில் ஆஜராகி, இந்த ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து அந்த அப்பாவித் தந்தைக்கு விடுதலை வாங்கித்தருமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

     அதோடு காதலை அனுமதித்த ஒரே காரணத்தினால் இந்த கொலையின் குற்றவாளியான நீங்கள் தீர்பளித்திருக்கும் பார்த்தசாரதியின் தந்தையையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

     அப்படியே போய் கப் பஞ்சாயத்தில் நிரந்தர உறுப்பினராக ஜோ அமலனை சேர்ந்தால் இனி இந்தியாவில் நடக்கும் எல்லாவிதமான கௌரவக் கொலைகளுக்கும் காரணமான கொலைகாரர்களை தனது அறிவுபூர்வமான வாதத்தை வைத்து வெளியே கொண்டு வந்து மனுநீதியை நாட்டிவிடுவார் என்பதை புரிந்து கொண்டு அவரை சீக்கிரமே ஷத்ரிய குலத்துக்கு டிரான்ஸ்பர் செய்யும் படி ஆர்.எஸ்.எஸ் அரைடவுடர் ஆச்சாரியாவுக்கும், சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கும் பரிந்துரை செய்கிறேன். இவரைப்பற்றி தினமலரில் ஒரு இசுபெசல் கவரேஜ் செய்ய வேண்டும் என ராமசுப்பையர் வாரிசுகளுக்கு இமெயில் அனுப்பலாமென்றிரிருக்கிறேன்

     • கேள்விக்குறி தற்குறியானா இப்படித்தான் பேசத்தோன்றும். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வைத்தாலே உடனே நான் பெண்ணோட அப்பனுக்கு சப்போர்ட் செய்கிறேன்னு எப்படித்தான் முட்டாளதனமா முத்திரை குத்த முடியுதோ. இது தானே உங்க பொழைப்பு.

      இல்லை, நான் எந்த கட்சின்னு தெரிஞ்சுக்க துடிக்கிற மனநிலையோ?

      • சீனு, I hold the boy’s father guilty என்பது ஜோவோட கருத்து, நீங்க ஜோவை வழிமொழிஞ்சீங்கன்னா அது உங்க கருத்தாயிடுமே… என்னை திட்டுவதற்கு பதிலாக உங்க கருத்தை மறுபரிசீலனை செய்யுங்களேன்

       • பையனின் தந்தை’யும்’ தவறு செய்திருக்கிறார் என்பது என் வாதம். ஜோ அதை சொல்லவில்லை என்பதற்காக நீங்களாகவே உங்கள் சொந்த கருத்தையெல்லாம் போட்டுக்ககூடாது.

     • //அப்படியே போய் கப் பஞ்சாயத்தில் நிரந்தர உறுப்பினராக ஜோ அமலனை சேர்ந்தால் இனி இந்தியாவில் நடக்கும் எல்லாவிதமான கௌரவக் கொலைகளுக்கும் காரணமான கொலைகாரர்களை தனது அறிவுபூர்வமான வாதத்தை வைத்து வெளியே கொண்டு வந்து மனுநீதியை நாட்டிவிடுவார் என்பதை புரிந்து கொண்டு அவரை சீக்கிரமே ஷத்ரிய குலத்துக்கு டிரான்ஸ்பர் செய்யும் படி ஆர்.எஸ்.எஸ் அரைடவுடர் ஆச்சாரியாவுக்கும், சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கும் பரிந்துரை செய்கிறேன். இவரைப்பற்றி தினமலரில் ஒரு இசுபெசல் கவரேஜ் செய்ய வேண்டும் என ராமசுப்பையர் வாரிசுகளுக்கு இமெயில் அனுப்பலாமென்றிரிருக்கிறேன்// சூப்பரான பதில். காதல் எதிர்ப்பு, சாதி அபிமானம், அந்தஸ்து திமிர் இவற்றைத்தான் மேற்படி வக்கீல் வண்டுமுருகன்கள் பாசம், ரோசம் என்று பல வேசம் கட்டிச் சொல்கிறார்கள். கேள்விக்குறி ஒரே போடாக உடைத்து விட்டார்.

    • திரு அமலன், உங்களுக்கு வயது 50ஐ கடந்திருந்தால்

     உண்மை உங்களுக்கு புரியவில்லை அல்லது
     உண்மையான அன்பை அனுபவிக்க வில்லை அல்லது
     வயதிற்குறிய பக்குவம் உங்களுக்கு வரவில்லை.

     வசதிபடைத்தவர்களால் மட்டும் தான் ஒருபெணை சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா?

     வசதி இல்லதது எங்கள் குடும்பம் எனது மாமாவின் குடும்பமும். எனது பட்டியை (அம்மாவின் அம்மா) எனது அப்பா, அம்மா என்றே அழைப்பார். மருமகன் என்றாலும் ”மற்றொரு வீட்டிலிருந்து வந்த மகன்” என்றே பொருள் என்பார். பாட்டியோ எனக்கு கிடைத்த மருமகனைப்போல் யாருக்கும் கிடைக்கது என்பார்.

     என் அம்மாவின் நவீன கால உணவு பழக்கம் பிடிக்கத எனது பட்டி(அப்பாவின் தாய்) தனியாக அவரின் விருப்பதிற்க்கு சமைத்து கொண்டாரே அன்றி இருவரும் அன்புடன் தான் இருந்தனர்.

     இப்பொது பதிவுக்கு வருவோம்.

     இந்த பெற்றோர் சரண்யாவை அதிக பணம் செலவளித்து படிக்கவைத்தது அவரின் நல்வழ்க்கைக்காக அல்ல. ஒரு வெளிட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க வேண்டும். அதை கொண்டு தன் மகள் வெளி நாட்டில் இருக்கிறாள் என பெருமை சொல்லிகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

     உண்மையான அக்கரை இருந்தால், இருவருக்கும் ஒரு target வைத்திருக்கலாமே. இருவரையும் ஊக்கபடுத்தி, உற்ச்சாகபடுத்தி நல் வாழ்வுக்கு வழிசெய்துரிக்கலாமே. ஏன் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ய வேண்டும்.

    • //ஆணும் பெற்றோருக்கு அடிமையே !//
     ஆணின் அடிமைத்தனம் அவன் விழித்துக்கொள்ளும் வரைதான்.

     //அப்பெண்ணின் பெற்றோரும் தமக்கு நல்ல மருமகன் வேண்டும் என நினைத்தால் குற்றம்!//
     தன் மகளின் உணர்வை கொன்றுவிட்டு, நல்ல மருமகன் பெற்று என்ன பலன்?

     //கஷ்டப்பட்டு கடன் உடன் வாங்கி அவனை பொறியாளர் ஆக்கி//
     மகனை வத்து வியாபாரம் பேசாதீர்கள்…

  • ஜோ அமலன்,

   காதலுக்கு மரியாதை படத்தில் பாசில் உதிர்த்த பெற்றோர் செண்டிமெண்ட் எவ்வளவு செல்வாக்கானது என்பது உங்களது பாசிச உளறலை பார்க்கும் போது தெரிகிறது.

   காதல் திருமணங்கள் மோசமானது, பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்கள் நல்லது என்பதெல்லாம் பா வரிசை படங்கள் காலத்து கருத்து. இன்று கல்லறைக்கு போய்விட்ட யதார்த்தமும் கூட.

   நீதிமன்றங்களில் உள்ள குடும்ப கோர்ட்டுகளுக்கு போய் பாருங்கள், அங்கே பெற்றோர் செய்து வைத்த திருமண தம்பதியினர் விவாகரத்துக்காக அணிவகுப்பதை பார்க்கலாம். ஜோசியம், ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் நீடிக்கும் என்பதற்கும் உங்களது பெற்றோர் திருமண உளறலுக்கும் மயிரளவும் கூட வேறுபாடு கிடையாது.

   பணத்திமிரும், அந்தஸ்து வெறியும் கொண்ட குடும்பத்தில் கிடைக்காத அன்பையும், பாசத்தையும், மனித உணர்வுகளையும் அந்த பெண் அந்த ஏழை டெய்லரது குடும்பத்தில் கண்டிருக்கிறாள். கூலிப்படை வைத்து கொலை செய்யுமளவு வெறி கொண்ட அந்த குடும்பத்தில் பெற்றோர் பொறுப்பு என்ன இலட்சணத்தில் இருக்கும் என்பதைக்கூட புரிந்து கொள்வதற்கு உங்களால் முடியவில்லை. காரணம் உங்களிடத்திலும் அதே திமிர் குடி கொண்டிருக்கிறது.

   அமலனின் வாதத்தை மற்றவர்களுக்கும் பொருத்திப்பார்த்தால்…..

   தீண்டாமையை எதிர்த்து சிறை, கைது, துப்பாக்கி சூடு என்று வாழ்வை இழக்கும் தலித்துகள் ஆதிக்க சாதியினரின் மனதை புரிந்து கொண்டு அந்த தீண்டாமை எழவுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையுமில்லையே?

   குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்இன் மன உணர்வுகளையும், பாரத தேசம் குறித்த அவர்களது பொறுப்பையும் கணக்கில் கொண்டு அந்த மாநில முசுலீம்கள் அப்படியே பாக்கிற்கு சென்றிருந்தால் 2000 உயிர்களை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லையே?

   ஒரிசாவில் போஸ்கோவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடும் பழங்குடிகள் அந்த கம்பெனியின் கார்ப்பரேட் ரெஸ்பான்சிபிளிட்டியை உணர்ந்து கொண்டு அமைதியாக இருந்தால் போலிசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாக வேண்டியதில்லையே?

   ஹிடல்ர் கூட உலக காட்டுமிராண்டிகளை திருத்தும் ஆரியக் கடமைக்காகத்தானே போர் தொடுத்தான். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அமலனது உள்ளத்தில் குடி கொண்டிருப்பது பாசிசம் என்பது சொல்லாமலே புரிகிறது.

   சரி, ஜோ அமலன், உங்களுக்கும் வயது பெண் இருந்தால் அவளும் இதே மாதிரி ஏதாவது பிச்சைக்காரனை திருமணம் செய்து கொண்டால் கூலிப்படையை வைத்து கொன்று விடாதீர்கள். இல்லை உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை தாருங்கள். ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரையாவது காப்பாற்ற முயல்கிறோம்.

   • //சரி, ஜோ அமலன், உங்களுக்கும் வயது பெண் இருந்தால் அவளும் இதே மாதிரி ஏதாவது பிச்சைக்காரனை திருமணம் செய்து கொண்டால் கூலிப்படையை வைத்து கொன்று விடாதீர்கள். இல்லை உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை தாருங்கள். ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரையாவது காப்பாற்ற முயல்கிறோம்.// இதுவும் நல்ல பதில்

    • A/c

     Ur thought reminds me of the popular male view. The men think that the women novelists who write abt rape, do indeed like to be raped; or have enjoyed the experience of the rape. Otherwise, she cd not write abt rape in detail.

     Similarly on romance too. In a few generations b4, it was the norm for women not to come out; and not to write also. Coz. writing a novel involves variety of negative emotions of the characters and that will be used against them by men.

     Fearing the backlash from men, women novelists, when such scenes need to be written, do so in a few hint words.

     E.g

     She came in with a pitcher of milk. He asked her to sit near. She did. He gently placed. his hands on her shoulder. She blushed (after this, Pushpaa Thangadurai or Sujatha will go further) but Sivasankari wrote,

     avan thottavudan vanna vilakkukal erinthana aval ullaththil.

     In all literature world over, women r afraid to enter such field for fear of adverse comments.

     A/c, y not see things impersonally. Y to be so juvenile ?

  • Why did she accept the medical seat after knowing that it was bought using black and corrupt money?//

   நல்லா கேட்டீங்க..

   ஏனுங்க அவள் குடிச்ச தாய்ப்பாலை ஏன் கக்கவில்லைனு கூட கேட்பீங்க…

   • jimms

    it cant be simplified thus. The comparision is also inappropriate. Buying a medical seat with ill gotten money as bribes, and mother feeding her baby, r not even remotely connected.

    • Sometimes, it too happens. Parents regret having offered all succor to their children who turned against them.

     uutti uutti valarthanee paavi ippadi pannitteeyaadaa

     is often heard in life.

     • Jimm

      Life is not arithmetics. 1 + 1 wont make 2 many times in practical life.

      Mothers shd not ask back for the affection she showed.
      Fathers shd not ask back etc.

      are illusionary statements.

      The hard and bitter fact is that,as we grow old from childhood to adulthood, our equation with parents too undergoes change.

      How many families face the ungratefulness of children and the breaking up of all kinds of relations.

      Look at life and write.

  • Hello Mr Amal,

   Even if you remove your emotional cap, you will have nothing but law. Does the law honour prestige killings? Do you even know what your are trying to defend? Because one’s daugther has eloped with some one, the Girl’s family should not resort to such stupid measures.

   Where do you see the mistake of the Boy’s father? Did he advice his son to Kidnap thier daughter? Should every poor boy’s advice thier son’s not to love? or to love someone who is below poverty line? If you think so, I pity you deeply.

   -Shankar.

   • Recently SC has said Honour killing will be given death penalty. That is, no leniency to anyone and the killing deserves death penalty only.

    Law is far better than emotions. Emotions will mislead and miscarriage of justice will happen.

    The innocent will suffer and the guilty will go scot free, playing upon the emotions of people.

    Therefore, Law shd be supreme and override all.

    Keeping a girl someone else’s daughter w/o the permission of her parents, in your house, can be charged as kidnapping.

    Generally, the aggrieved parents make such complaint. It is in law also.

    The tailor had connived with the act of the girl to stay at his home. That is his cardinal error,which I have pointed out.

    Read me again. U will know, Shankar.

 7. Dear vinavu,
  Excellent reporting . I never read this type of full article regarding this sarroful incident. hats off to the reporter. it made us just to sit in front of them.
  it is really paining. heart is paining to read .
  regards
  V.G

 8. எனக்கு என்ன சொல்வதென்றே எழுதுவதென்றே தெரியவில்லை.சாதிக்காக பணத்துக்காக தம் சொந்த மகளின் வாழ்வையே பாழ் செய்த பாவிகள் மனிதர்களே அல்ல. ஆடை உடுத்தியுள்ள மிருகங்கள். மனிதத்துக்கு மரண தண்டனை கூடாது என்பது பல நாடுகளின் முடிவுதான். எனினும் அதை மறுபரிசீலனை செய்யலாம் என்று இந்தக் குடும்பத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. சரண்யாவின் நேர்மை; துணிச்சலைப் பார்க்கும்போது அவரின் இலட்சியம் வெல்லட்டும் என்ற வாழ்த்த ஆசைப்படுகிறேன்.இதெற்கெல்லாம் இதுபோன்ற ஒரு பாவமும் செய்யாதவர்களுக்கு நேரும் இழப்புகளுக்கு நாமும் நாடும் என்ன செய்து ஈடு கட்டப் போகிறோம் என்ற சந்தேகமே எழுகிறது. மொத்தத்தில் மாந்தரிடை நல் ஒழுக்கம் மிகவும் அவசியம் அதிலும் இந்த அரசு ஊழியர்களிடம் இது மருந்துக்கும் இல்லாதிருப்பது நாட்டைப் பிடித்த பீடை. பீடைகளை துடைத்தெறிய முனையும் கைகளில் எனதும் ஒன்றாகும்.

  • சாதிக்காக இங்கு நடக்கவில்லை. அவர்கள் நாயுடுக்கள்; இவர்கள் முதலியார்கள். இரண்டும் மேல்சாதியினர்தான். பணத்துக்காகவும் இது நடக்கவில்லை. ஏன் அப்பையனை கட்டிவைத்தால், பணமா கொட்டபோகிறது ?

   ஸ்டேடஸ், மற்றும், கிளிபோல் ஆசையாக வளர்த்த மகன் ஒரு பிச்சைக்காரக்கூட்டத்தில் மாட்டி கூழ் குடிக்கவேண்டுமா என்பது போன்ற கேள்விகள் வதைக்குமல்லவா ?

   பெண்ணைப்பெற்றவனுக்குத்தான் அருமை தெரியும்?

   • //பிச்சைக்காரக்கூட்டத்தில் மாட்டி கூழ் குடிக்கவேண்டுமா // பணத்திமிர் பிடித்த உங்களை போன்றவர்களை எல்லாம் மனிதர்களாக மதித்து மரியாதையாக எழுதவே வெட்கமாக இருக்கிறது . ஏழைகளின் கூழில் உள்ள அன்பும் அரவணைப்பும் சரண்யா சொல்வது போல //இருக்கிற சாப்பாட்டுல எனக்கும் ஒரு வாய் கொடுக்கிறாங்க. ஆனா, வயிறார நான் சாப்பிடறேன்.// பணக்கார போலி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு தெரியாது. கூழ் குடித்து வாழும் ஏழைகளை பிச்சைகாரர்கள் என பார்க்கும் இந்த பணக்கார திமிருக்கும், கொலை வக்கரம் பிடித்த அவர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

    • தம்பிக்காக தமிழ்

     ஏழைகளில் கூழில் தப்பில்லையப்பா. அஃதை எங்கே வைத்துக் குடிக்கவேண்டுமோ அங்கேதான் குடிக்க வேண்டும். 5 ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் குடிப்பேன் என்று அடம்பிடித்தால் தப்பு.

     கிழிந்த சட்டைபோட்டுக்கொண்டு ஆபிஸ் செல்வீர்களா ?

   • பாசிஸ்ட் ஜோ அமலன்,

    அந்த டெய்லர் உழைத்துத்தான் தனது மகனையும், மகள்களையும் படிக்க வைத்துள்ளார். பார்த்த சாரதியும் வங்கியில் கடன்வாங்கி படித்து நல்ல வேலையில் இருந்துள்ளார். இதை பிச்சைக்காரத்தனம் என்று சொல்வதற்கு வெட்கமாயில்லை? நீங்க வசதியான வாழ்க்கை கொண்டிருந்தால் அது நல்லது என்றும், வசதியற்றவர்களெல்லாம் உழைத்து வாழாத பிச்சைக்காரர்கள் என்றும் சொல்வதற்கு உங்களிடம் பத்து ஹிட்லர் இருக்க வேண்டும். உங்களது குடும்பத்து பெண்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    • பிச்சைக்காரர் என்பது ஒப்பீடில்தான் வரும்.

     தெரியுமா வினவு? பிச்சைக்காரகளிடையே கூட ஏழை பணக்காரன் என்று உண்டு. அனைவரும் கோயில் முன்புதான் குத்த வைத்திருப்பர். ஒருவன் பாங்க் பாலன்ஸில் எவ்வளவு என்று இன்னொருவனுக்குத்தான் தெரியும். அவர்களில் எவனிடம் லக்கங்கள் இருக்கின்றன? எவனிடம் ஆயிரங்கள் மட்டுமே உள்ளன? என்பது தெரின்ந்து போட்டியும் பொறாமையும் உண்டு.

     எனவே பிச்சைக்காரன் என்ற சொல் கான்டெக்ஸைப் பொறுத்தது.

     In this blog story, இங்கு ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிடும்போது ஒருவர் ஏழை; இன்னொருவர் பணக்காரர்.

     பிச்சைக்காரன் என்ற சொல் நான் பொதுவாக எடுத்துக்காட்ட பயன்படுத்தியது. Dont quote me out of context.

   • The girl once attained the 21 years old, she will decide with whom she should marry. It may beggar house or it may be multi millionaire. You don’t have any right. At the best if your property is self earned you can spend as you wish before you die. If it is ancestral property you have to give her a share. It is unavoidable. The problem of in the middle of beggars is because of your property.

    • The relationship between parents and children will break if money and share in property are taken to be the criteria of life. V accuse her parents in the story for being money minded. V commit the same error if v say shd get her share and marry any one she likes.

     If ur point is valid, then all children when they cross their 21, shd abandon their parents by quitting their home, demanding their share in the ancestral property.

     Hav u thought abt this all?

     • வெளிநாடுகளில் அப்படித்தான்நடக்கிரது. உன்னைபோல் ஒரு தகப்பன் இருந்தால் இனி இங்கும் விரைவில் வந்துவிடும்

 9. //இரு இளம் நபர்களின் வாழ்க்கைச்சீரழிவுக்கு கொல்லப்பட்ட பையனின் தந்தையே மூல காரணம்.//

  வாயில ஏதாவது அசிங்கமா வந்துடப் போகுது.

  • U can say it out, but with convincing argument.

   Tell me will u allow ur daughter to visit another man’s house before marriage and getting introduced to his parents as his fiancee, all w/o the knowledge of her parents?

   Will u forgive the father of the man who encourages such relationship w/o the approval of her parents?

   After answering my qns, come with your asingkamaa vanthudappoovathu. Paarpoom

   • ஒரு கண்ணியமான உறவைக்கூட புரிஞ்சுக்க முடியாம, துளிக்கூட ஜனநாயகப் பண்பு இல்லாம, பொண்ணு யாருக்கும் தெரியாம பிராத்தலுக்கு போன மாதிரி பேசுறாரு பாரு.. இந்த டயனோசர் காலத்து பாசில்களையெல்லாம் எங்கேந்துதான் தோண்டியெடுக்கறாங்களோ.. தாங்க முடீலடா சாமீஈஈஈஈஈஈ

    • Mr.?
     antha ponnu thapu panna innoruthar veetukku ponatha Mr.Jo sollalai…
     but aduthavangalukku theriyama pannura entha vishayamum thavaru thaan.. athuvum pethavangalukku theriyama pannurathu thavaru.. thats what Jo meant..

    • It s not a personal matter for me. If I hav to write so, i cd write differently. Since u put up it for public debate, I am recording all shades of opinion, which may hurt u if u take all personally.

   • உங்களோட பார்வையில பெண்ணோட அப்பா அம்மா ஏத்த்துக்காதப்போ, அதை பையனோட அப்பா மட்டும் ஏத்துக்கிட்டாருன்னா அவரு அப்பா இல்லை மாமா, அப்படித்தானே? அருமையான சிந்தனை.

    //Will u forgive the father of the man who encourages such relationship w/o the approval of her parents?//

    என்ன தப்பு பண்ணிட்டாருன்னு அவ்ரை மன்னிக்கணும்னு சொல்றீங்க. இரண்டு மேஜரானவர்கள் காதலிக்கும் போது அதை ஆதரிக்கிறவன் கெட்டவன், எதிர்த்து கல்யாணம் ஆயி மூணு மாசம் ஆனாலும் வன்மம் வெச்சு கொலை பண்றவன் நல்லவன்.

    பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சாதீய ஏற்றத் தாழ்வுகள் இருக்கிற இரணு பேர் காதலிக்கவே கூடாது. அப்படியே காதலிச்ச்சாலும், அதில் பணம் அல்லது அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால், அதை ஆதரிக்கிறவங்க எல்லாம் அயோக்கிய பயலுங்க. பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி திருப்பி அனுப்பாம வஞ்சகம் செய்பவர்கள்.

    உங்களுடைய கருத்துக்களில் இருக்கும் ஓட்டைகளை நீங்களே யோசித்துப் பாருங்கள். எவ்வளவு மோசமான கருத்தியலை நீங்கள் முன் வைக்கிறீர்கள் என்று தெரியும்.

   • ஜோ அமலன்,

    சட்டப்படி 18 வயது இருக்கும் பெண் யாரையும் மணந்து கொள்ளலாம். அது பெற்றோர் பார்த்த பையானாக இருந்தாலும் சரி, இல்லை அவளே பார்த்து காதலித்து செய்தாலும் சரி. இதைத்தாண்டி இதில் பெற்றோர்கள் தங்களது கருத்தை சொல்ல்லாம். ஆனால் முடிவெடுக்க வேண்டியது அந்த பெண்தான். அவள் அப்படி முடிவெடுத்துவிட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் கூலிப்படை வைத்து கொல்லாமலாவது இருக்க வேண்டும். நான் பெற்ற பெண் நான் முடிவு செய்தும் பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பதும் இல்லையென்றால் கூலிப்படை வைத்து கொல்வது சரிதான் என்பது பச்சையான பாசிசம்.

    • ஆனால் முடிவெடுக்க வேண்டியது அந்த பெண்தான்

     It depends on the character of the girl. If her parents – coz they know her better than others – think she lacks maturity in deciding things for her – and if they feel that in the love affairs she is being tricked by the boy – they can interefer with the intention to save her.

     U cant say they shd leave her to herself. It is parents’ concern for her that makes them interefere. Jaathi, matham, anthasthu ellaam appuramthaan.

    • குழந்தைகளை அடிமைகளாக எண்ணி வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களின் 18 வயதுக்கு மேல், தன் அடிமை தன்னை விட்டு பிரிவதை(அ) விடுதலை அடைவதை விரும்பாமல், அவர்களின் உணர்வுகளை கொலை செய்வார்கள். கூலிப்படையை விலைக்கு வாங்கும் வசதி உள்ளோர், வேறு விதமாக கொலை செய்கின்றனர்.

   • foreign return மாப்பிள்ளை வெளியே shopping கூட்டிட்டு போகலாம், நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம், பக்கத்து வீட்டு மாப்பிள்ளை செய்தால் தப்பா?

   • Very simple. Whats wrong if an adult boy comes to the house with an adult girl and getting introduced as he is going to marry that girl. It is the Indian feudal mind set that these simple things are wrong. Every adult boy has the right to select his fiancee. The worst side of the right to property plays its havoc; it is the base for your questions. You go hell with your questions where answers are secondary to the crime committed.

   • இவன் இந்த நூற்றாண்டில் வாழ்பவனா? அல்லது 16ம் நூற்றாண்டில் வாழ்பவனா.

  • ஓம் பிரகாஸ் சாரோ, நமஸ்காரம். கொச்சி எப்படி இருக்கு? மழை ஆரம்பிச்சுட்டா? நானு கொச்சி போகனும் அடுத்த வாரம். பட் ஒன்லி ஸ்டாப் கேப்புதான். அவ்விடயிருந்து மூணார். பின்னே கொச்சி. ஞாயிறு காலேலே திரும்புறேன். கொச்சியில் ஒரு இரண்டு மனினேரம்.

   குழந்தை பொறந்தாச்சா ? என்னா பேரு ? நல்ல சுவாமி பேரு வையுங்கா. நான் எழுதுவேனே கருத்தில் அந்த சுவாமி பேரை வையுங்கோ. கேட்டதற்கு நன்னி.

   இந்த வினவுவை ஒரு பத்துநாளு சாத்திரதா இருக்கிறேன். பின்னே என்ன ஒரேயடியா எகிறிக்கிட்டு இருக்கானுக‌ !

   • இந்த வினவுவை ஒரு பத்துநாளு சாத்திரதா இருக்கிறேன். பின்னே என்ன ஒரேயடியா எகிறிக்கிட்டு இருக்கானுக‌ !////

    அரசன் சோப் – அடிவாங்குன ஜோவுக்கே இந்த கதின்னா அடிச்ச மத்தவங்களுக்கு என்ன கதி..

    ஜோஅமலன் – இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே #அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 10. Amalan,

  Your points not having nay basic. First think how a boy who is taking care of his family will have influence his own desires even his father can’t stop it. Do you think his father should have stopped it? NO you should let people to live their life and face what ever comes out of it. Are you encouraging honor killing? If that boy’s father did that mistake, killing the boy is right?

  You statements are totally wrong because you didn’t empathize the real situation. Better luck next time.

  • Dear Paamaran,

   When I argue a point, I do only after taking off my cap of emotions, feelings and empathy.

   If I don’t do that, and continue to see the issue like you wearing that cap, I will of course write differently. I am capable of such emotive writings

   So, when u read me, u shd also take off that cap. If u cant, sorry. Don’t read me.

   If u charge me with lack of empathy, I wd return it to u saying that u lack empathy for the parents of the girl and her bro.
   They lost our consideration and empathy, only coz a murder had been committed by them. Imagine if there was no murder and they went to police with the request to take back their daughter. With whom will u have empathy – with the man’s family or her family?

   Coming to the boy’s case. Admitted, a father can’t have influence; and all influence to change his mind will be called coercion only.

   This case is explained by Vinavu; and we go by what is written here according to which we don’t find anywhere any effort taken by the dad of the boy to deposit her back to their parents. He can’t change his son’s mind; but he can tell her to come with her parental permission. He shd not arrange a secret marriage or bless it w/o involving her parents. What has he done here ? Has he told his son that tragedy will occur if he gets married to her? Any evidence ? Instead we see here that she was brought to his house frequently and allowed to socialise with his family. The tailor allowed all. If not, show me the evidence here.

   W/o the knowledge of his own son, he cd have told her:
   அம்மா தாயே, இதெல்லாம் தப்புமா…அம்மா அப்பா ஆசையா வளர்த்து படிக்கவச்சுக்கிட்டு இருக்காங்க உன்னை. அவங்களுக்குத் தெரியாம இங்கே வராதே. என் பையனை நான் சொன்னா கேட்பானோ மாட்டானோ தெரியாது. ஆனால் உன்னைச்சொல்லலாம். என் வீட்டுக்கு வராதே.

   Has he told her that? Has Vinavu’s post any evidence to that? If there r any, I will appreciate his dutiful nature.

   The only part in the post that raises my wrath most is his audacity to allow the girl to live in the house before marriage; and how dare he to say: I like to have such a girl as my daughter-in-law?

   • ஒரு ஏழை ஒரு பணக்கார பெண்ணை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டது உங்களது பணக்காரத்திமிருக்கு பொறுக்க வில்லை. பள்ளன், பறையன், சக்கிலியப் பயல்களுக்கெல்லாம் கவுண்டச்சி பெண்ணு கேக்குதா என்பதற்கும் அமலனது திமிருக்கும் மயிரளவு வேறுபாடு கூட இல்லை.

    • கவுண்டச்சி கவுண்டனைக் கட்டனும். பறைச்சி பறையனையும் பள்ளி பள்ளனையும் பாப்பாத்தி பாப்பானையும் கட்டட்டும். இதில் என்ன பிரச்சனை வினவுக்கு ?

     • சரண்யா பார்த்தசாரதியை கட்டட்டும். உமக்கு எங்கய்யா எரியுது?

      • பெத்த வயிறு பத்தி எரியும். அதைத் தடுக்க முடியுமா ?

       If u ask this qn to Mrs Narasimhan, the girl’s mom, she will tell u like this. U r a third person. but she is her mother.

       She will ask u back: Who r u to tell my daughter to marry that boy ?

   • Imagine if there was no murder and they went to police with the request to take back their daughter. With whom will u have empathy – with the man’s family or her family?//

    ஹ சிரிப்பா இருக்கு .. நீங்க செய்திகள் படிப்பதில்லையா?..

    18 வயதுக்கும் குறைந்த பெண்கள் கூட பெற்றோருடன் செல்ல மாட்டோம்னு பிடிவாதம் பிடித்து சேவை இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு 18 நிறைவானதும் காதலன் கரம் பிடித்ததை?..

    நீங்க ஒரு கனவுகளோடான பெற்றோருக்கு பரிதாபப்படுறீங்கன்னு புரியுது.. ஆனால் அந்த கனவே நியாயமற்றது என்கிறேன்..

    நாம் பெற்றுவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக நம் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பது?..

    கண்டிப்பா எல்லா பெற்றோருக்கும் தம் குழந்தை நல்லா வாழணும்னு ஆசை இருக்கும்தான்.. ஆனாலும் வாலிப வயது வரும். காதலில் விழலாம் .. அதை எப்படி சமாளிப்பது என தெரியாதா?.. நாம் அந்த வயதை கடந்து வந்தவர்கள்தானே?..

    அளவுக்கு மீறிய கனவுகள் மூலமே நொறுங்கிப்போய்விடுகிறார்கள்.. நல்லபடியாக வளர்ப்பதும் , நன்மை தீமை சொல்லிக்கொடுப்பதுமே நம் கடமை.. அதற்குமேல் எது வந்தாலும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேணும்.. இது போலி மனிதருக்கு இருப்பதில்லைதான் என்ன செய்ய?..

    ஜப்பானில் எத்தனை பேரழிவு வந்தாலும் மீண்டும் மீண்டும் எழுகிறார்கள்..

    நம்ம நாட்டில் தான் படிக்கும் குழந்தை கூட முதலீடாக ஆக்கப்பட்டு வறுத்தெடுப்பது.. டிவியில் ஆட பாட வைப்பது..

    ஸ்டேட்டஸ் என்பதே பயத்திலே வாழ்வை நடத்தும் போலித்தனம் மட்டுமே..

   • //If u charge me with lack of empathy, I wd return it to u saying that u lack empathy for the parents of the girl and her bro.//

    What about your empathy for that girl…. Mr. Amalan?

    • I like this qn.

     The marriage happened. She became his wife, disregarding her studies. She lived with him for months. She s now determined to be his widow and shoulder the responsibility of her man’s relations.

     So, there are two scenes: b4 and after widowhood.

     My empathy is with her only in the post murder scenario.

     She shd leave all to law and cooperate with police investigations. She herself cant do anything. Law will take its course; she can help with the police hoping the killers will get their right punishment. No need to go back to her parents. No need to forgive them also. Forgiveness comes in the realm of religion. If she s religious, she can. If not, no.

     Carry on with life w/o husband. Forget all ; or try to forget. Move on. IAS is not an easy cake walk. Get a job first; and try to put the disorganised life in order. Then, u can try for a better job.

     No children. That s good one way. No extra burden. As years pass by, and the memories slowly recede, think of another life with another suitable man, but not love at first sight please. That s repeating the error. Be mature emotionally. Start a new marrie life; but not now. Time s the great healer and turner of events. Every day s not the same day. Change s the law of life.

     W/o empathy, I cant hav written the above Haran.

  • ஜோ மற்றும் சீனு,
   உங்களை இங்கே கேள்வி மேல் கேள்வி கேட்ட எல்லோர்மே இந்த உலகத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை.. இவர்களெல்லாம் தேவ குணம் பொருந்திய தேவர்கள்..

   இவர்களுக்கு காதல் / அன்பு என்ற தேவமிர்தம் ஒன்று மட்டும் இருந்தால் போதும்.. உணவு, உடை, உறைவிடம்.. போக்குவரத்து எதுவுமே தேவை இல்லை… யாராவது ஒருவர் இவர்கள் மேல் அன்பாக இருந்த போதும்… இவர்களுக்கு பசிககவே பசிக்காது…

   இவர்கள், காதலித்து கல்யாணம் செஞ்சு, பிள்ளை பிறந்ததும் அப்பிள்ளைகளை தெருவில் விட்டு எப்படியோ வளரட்டும் எப்படியோ வாழட்டும் என்று விட்டு விடுவார்கள் போலும்.. அப்படிப்பட்டவர்கள் மட்டுமே தன் பிள்ளைகளிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது…

   ஆனால், பிறந்தது முதல் அவர்களை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என்பது இவர்களது வாதம்…
   யார் என்ன செய்தாலும் அவர்கள் 18 வயது கடந்து விட்டால் அவர்களை தட்டி கேட்பது பெரும்பாவம்.. பெற்றவர்கள் கூட அவர்களை கேள்வி கேட்க கூடாது… என்ன கொடுமை சராவாணா…

   இங்கு யாருமே அந்த பெண்ணின் குடும்பத்தார் செய்த கொலையை நியாயப்படுத்தவில்லை..
   அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்… ஆனால், ஜோ மற்றும் சீனு அவர்கள் சொன்ன பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்புகாளை தவறு என்றும், அவர்கள் காதலுக்கு எதிராணவர்கள் என்றும், சாதி வெறி பிடித்தவர்கள் போலவும் சித்ரிப்பது ஏற்புடையதல்ல..

   There is nothing wrong in loving some one… but a guy /girl is not able to love people in their family, when they are not ready to understand their family’s wish and expectations, how the hell she/he can love only their lover? will that be true?

   how can some one love anyone even after knowing that it will hurt parents/family for whatever reason??

   again to remind: This does not apply to Saranya’s family, but in general the valid expectation of a “deserving” parent.

 11. @அமலன்,
  காதல் என்பது ஒரு உணர்வு. பூ பூத்தாற்போன்று மென்மையாய் நம்மையும் அறியாமல் நிகழும். அந்த நிகழ்வை மகளிடமோ/மகனிடமோ பார்க்கும் பெற்றோர்கள், அதைக் கசக்கியெறியாமல் பாதுகாக்கவேண்டுமே ஒழிய, அந்தஸ்துக்காக அதை பந்தாடக்கூடாது. பணமும் அந்தஸ்தும் இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். “உண்மையான” அன்பு எக்காலத்திலும் உங்களைக் கைவிடாது. குடும்பத்திற்குள் பரஸ்பர புரிதல்களும், அன்பும்தான் மேலோங்கவேண்டுமே ஒழிய அந்தஸ்தும், ஜாதித்திமிரும் ஆட்சி புரியக்கூடாது. இல்லையேல் வேதனையே மிஞ்சும்.

  • வாழ்க்கையில் காதல் என்பது ஒரு அத்தியாயம் மட்டுமே. கல்யாணம் முடிந்தால் அந்த பழைய காதலுடன் வாழ்க்கை முழுவதுல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. கல்யாணம் முடிந்த பின்பு தவறு செய்துவிட்டோமே என்று வருந்துவது என்பது காலம் கடந்த நிகழ்வாகிவிடுகிறது. காதல் தவறில்லை என்றாலும், அது கல்யாணம் கடந்தும் நிற்குமா என்பதும் சந்தேகமே. இன்றைய சினிமா இளம் பருவத்தினருக்கு தவறான புரிதலையே தருகிறது.

   இந்த கொலை வெறும் பணம் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. மாறாக, சாதியும் அந்தஸ்தும் சேர்ந்து இருக்கிறது.

   இப்போது இருக்கும் உறுதி அந்த பெண்ணுக்கு கடைசி வரை இருக்குமா என்று தெரியவில்லை. வாழ்க்கை இன்னும் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்.

   • கல்யாணம் முடிந்தபின்பு, தவறு செய்துவிட்டோமோ என்று ஒரு ஆணோ பெண்ணோ வருந்தினால் அவர்கள் உண்மையாகக் காதலிக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கொருவர் தத்தம் குறைகளை மறைத்து, நிறைகளை மிகைப்படுத்தி பழகி வந்தனர் என்றுதான் சொல்ல முடியும்.

    • திருத்தம். குறைகளை மறைக்கவில்லை. குறைகள் தெரிவதில்லை.

     மிகச்சரி. இன்றைய காதல்கள் பெரும்பாலும் Fastfood + Matching காதல்களாக இருப்பது தான் வருத்தத்திற்குறியது.

     நான் இந்தப் பெண்ணை குறிப்பிடவில்லை (என்ன எழவுடா இது? இதுக்கெல்லாம் டிஸ்கி போடவேண்டியிருக்குது…தூ).

   • //வாழ்க்கையில் காதல் என்பது ஒரு அத்தியாயம் மட்டுமே. கல்யாணம் முடிந்தால் அந்த பழைய காதலுடன் வாழ்க்கை முழுவதுல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே// அவரோட அனுபத்தில சொல்றாரு போல. பிற் காதலர்கள் யாரும் இதை உலக உண்மை என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

   • சீனு காதல் உண்மையாக இருப்பதினால்தானே அது பொய்யென்று ஆன பிறகு பிரிய நேரிடுகிறது? ஆனால் பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் அந்த உறவுகள் பொய்யென்று ஆனாலாம் கூட வேறு வழியின்றி செயற்கையாக நீடிக்கிறதே இதுதான் இழிவானது.

    நீங்கள் காதல் திருமணம் அவசரத்தில் எடுக்கப்பட்ட அசட்டுத்தனம் என்றும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆயிரங்காலத்து பயிர் என்றும் பா வரிசை பட நாட்டாமைகள் போல பார்க்கிறீர்கள்.

    ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சேர்ந்திருப்பதும், அப்படி தொடர முடியவில்லை என்றால் பிரிவதும்தான் சரியானது. ஜனநாயகப்பூர்வமானது.

    அந்த வகையில் விவாகரத்து அதிகம் நடந்தால் துக்கப்படத்தவையில்லை. சமூகம் ஜனநாயகமயமாகி வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்?

    • //சீனு காதல் உண்மையாக இருப்பதினால்தானே அது பொய்யென்று ஆன பிறகு பிரிய நேரிடுகிறது? ஆனால் பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் அந்த உறவுகள் பொய்யென்று ஆனாலாம் கூட வேறு வழியின்றி செயற்கையாக நீடிக்கிறதே இதுதான் இழிவானது.//

     வேறு வழியின்றி செயற்கையாக நீடிப்பது என்பது சூழலுக்கு தகுந்தார் போல இருக்க வேண்டும். இருவரும் பிரிய நேர்ந்தால் பாதிக்கப்படுவது குழந்தைகள் தாம். Single parent child-ஆக இருப்பது தான் பிரச்சினையே. பிடிக்கவில்லையென்றால் பிரியலாம். தவறில்லை. ஆனால், அதனால் பாதிப்பு ஏற்படும் என்னும் போது அதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து.

     //நீங்கள் காதல் திருமணம் அவசரத்தில் எடுக்கப்பட்ட அசட்டுத்தனம் என்றும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆயிரங்காலத்து பயிர் என்றும் பா வரிசை பட நாட்டாமைகள் போல பார்க்கிறீர்கள்.//

     நான் அப்படித்தான் பார்க்கிறேன் என்று நீங்காளகவே ஏன் assume செய்து கொள்கிறீர்கள்? காதல் திருமணம் என்பது பெரும்பாலும் அவசரத்தில் எடுக்கப்படும் போது அது வலியைத்தான் தருகிறது. அதை தவிற்கலாம் என்கிறேன்.

     //அந்த வகையில் விவாகரத்து அதிகம் நடந்தால் துக்கப்படத்தவையில்லை. சமூகம் ஜனநாயகமயமாகி வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்?//

     இவர்களின் பிரிவால் யாரும் பாதிக்கப்படாதவறை தவறில்லை. ஆனால், சமூகம் என்பது ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பம். ஒருவரின் முடிவுகள் அடுத்தவரை பாதிக்கும் என்பது தான் பிரச்சினையே. உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்த பிறகு இருவரும் பிரிவது என்பது பல தடவை யோசித்த பிறகு எடுக்கப்படவேண்டிய முடிவு. வாரத்தில் 5 நாட்கள் என்னுடன், 2 நாட்கள் உன்னுடன் என்ற ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு அந்த குழந்தையை பாதிக்கும் என்பது தான் பிரச்சினையே.

     குற்றவாளிகள் பெரும்பாலும் உருவாவதற்கு அவர்களின் குடும்ப நிலையும், சிறு வயது அனுபவங்களும் காரணம், இல்லையா?

     • சீனு,

      திரும்பவும் நீங்கள் பா வரிசைப் பட மனநிலையில்தான் இருக்கிறீர்கள்.

      ஒருவரை ஒருவர் கடுமையாக வெறுக்கும் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளை விட பிரிந்து விட்ட பெற்றோர்களது குழந்தை ஆரோக்கியமாகவே வளரும். அது தந்தையிடமோ, இல்லை தாயிடமோ யாரிடம் இருந்தாலும்.

      போலியான உறவு சூழ்நிலையை விட பிரிந்து விட்ட உண்மையான உறவு சூழல் என்பது ஆயிரம் மடங்கு மேம்பட்டது. அப்பா அம்மா பிரிந்தால் குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடாது. உரிய வயது வரும்போது அவர்கள் அதை புரிந்து கொள்வார்கள். மேலும் குழந்தைகளை வைத்து பொய்யான உறவுகளை நீட்டிக்க செய்தவதுதான் அந்த குழந்தையின் சூழலில் ஆரோக்கியமின்மையை கொண்டு வரும்.

      நீங்கள் பாரத குடும்பங்களின் தனித்துவமான பாச உணர்வு போன்ற மாய மான்களது செல்வாக்கிலிருந்து விடுபடாத வரைக்கும் இதைப் புரிந்து கொள்ள முடியுமா, தெரியவில்லை.

      • //அப்பா அம்மா பிரிந்தால் குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடாது. உரிய வயது வரும்போது அவர்கள் அதை புரிந்து கொள்வார்கள்.//

       !!!!!!!!!!!!!!

     • சீனு,

      //காதல் திருமணம் என்பது பெரும்பாலும் அவசரத்தில் எடுக்கப்படும் போது அது வலியைத்தான் தருகிறது. அதை தவிற்கலாம் என்கிறேன்.//

      காதல் திருமணங்கள் அவசரமாகவோ, சூப்பர் ஃபாஸ்ட்டாகவோ இருக்கட்டும். அதனால் நிதானமாக அமர்ந்து யோசித்து செய்யப்படும் பெற்றோர் நடத்தும் திருமணங்கள் மேலானவையா? ஆம் என்றால் விளக்குங்கள்.

      அடுத்து காதல் திருமணங்கள் இன்றைய சமூக சூழ்நிலைக்கேற்போ நன்மைகளும், தீமைகளும் கொண்டிருக்கும். ஆனால் இங்கே நாம் விவாதிப்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதலிக்கும் உரிமை, அதை அமல்படுத்தும் உரிமை பற்றிய பிரச்சினை. அப்படி உரிமை இல்லை என்கிறார் அமலன், நீங்கள் வழிமொழிகீறீர்கள். இதுதான் பாசிசம் என்கிறோம்.

      ஒரு காதல் தகுதியானதா, தரமில்லாதாகவோ இருந்து விட்டு போகட்டும். அது குறித்து பெற்றோர்களோ, இல்லை குடும்ப நண்பர்களோ ஆலோசனை, கருத்து, விமரிசனம் எல்லாம் செய்யலாம். ஆனால் அந்த காதலர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மறுப்பது பாசிசம். இதில் சீனு எந்தப் பக்கம் என்பதை விளக்க வேண்டும்.

      • //ஆனால் அந்த காதலர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மறுப்பது பாசிசம். இதில் சீனு எந்தப் பக்கம் என்பதை விளக்க வேண்டும்.//

       நிச்சயம் ஏற்க வேண்டும்.

      • நன்றி சீனு,

       இருப்பினும் ஜோ அமலனை வழிமொழிந்த உங்களது தவறுக்கு ஒரு மன்னிப்பு கேட்டால் நன்றாக இருக்குமே?

       • //இருப்பினும் ஜோ அமலனை வழிமொழிந்த உங்களது தவறுக்கு ஒரு மன்னிப்பு கேட்டால் நன்றாக இருக்குமே?//

        அப்படியா? ஜோ என்ன தவறாக சொன்னார் என்று கூற முடியுமா?

        • திரும்வும் முதல்ல இருந்தா? ஆளை விடுங்க சாமி, நடுத்தர வர்க்க ஈகோ நோய்க்கு சட்டென்று முறித்திடும் மருந்து இல்லை. என்ன செய்வது?

         • ம்ம்…ஒரு கேள்வி கேட்டீங்க. அதுக்கு ‘பதில்’ சொன்னேன் (முன்னது தவறு என்று சொல்லவில்லை). உடனே, நீ முதல்ல பேசினது ‘எல்லாமே’ தவறு, மன்னுப்பு கேள்னு சொல்றீங்க.

          “அந்த காதலர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மறுப்பது பாசிசம்.” இதுக்கு ஜோ மறுத்தாரா? அதை சொல்லுங்க…அப்புறம் மன்னிப்பு கேக்குறத பத்தி பேசலாம்…

          • ஜோ அமலன் சொன்னவை…

           //I hold the boy’s father guilty.//

           // And even a case of kidnapping an innocent girl shd have lodged against this tailor. She wd have been saved. And his own son, too, wd have seen a better future; and a better married life with *one of his own status*.//

           //He says he is a poor tailor. But he did not stop his son trying to ensnare a rich girl. Rather he went to her parents and begged them to give their daughter in marriage to his son. Does he think a rich man should give away his daughter for the asking? What qualifications will he expect from a boy to choose for his own daughter? Will he give her to every fellow from any background? //

           இதையும் சேர்த்து தானே வழிமொழிந்தீர்கள்?

          • //“அந்த காதலர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மறுப்பது பாசிசம்.” இதுக்கு ஜோ மறுத்தாரா? அதை சொல்லுங்க…அப்புறம் மன்னிப்பு கேக்குறத பத்தி பேசலாம்…// ஜோ மாலன் அதைத்தானய்யா திரும்ப திரும்ப சொல்றாரு. காதல் தப்பு. காதலித்து எடுக்கும் முடிவு தப்புன்னுதானே அவர் சொல்றாரு. அத நீங்க வழிமொழியலயா என்ன? வழிமொழியலைன்னா இந்த கேசுல நீங்க வக்கீல் வண்டுமுருகன் தரப்பில் ஆஜராகவில்லையென்றாகிறதே?

 12. ரிஷி,

  காதல் என்பது என்ன என்று எப்பவோ சொல்லப்பட்டது. அது என்னால் இங்கு விவாதிக்கப்படவில்லை. ஒரு மகளின் வளர்ப்பில் பெற்றோரின் கடமையென்ன ? அக்காதலைக் கசக்கிபிழியாமல் விட்டு விடும்போது அக்காதல் கலியாணம் தோல்வியடைந்தால் வேதனையை அனுபவிப்பவர் ஆர்?

  காதலிப்பவன் பொருத்தமானவன் என்று பெண் எதை வைத்துச்சொல்கிறாரள்? அவன் மனதை வைத்து மட்டுமே. ஆனால் கலியாண வாழ்க்கையென்பது காதல் மட்டுமா ? எத்தனை காலம் அக்காதல் வரும்? குழந்தைகள் வந்தவுடன், பெண்ணின் நாட்டம் குழந்தைகளின் மேலே பாய காதல் தொய்ந்து விடும்.

  காதல் என்பது இளமை வீச்சு. இளம் கன்று பயமறியாது. காதல் உணர்வுகள் ஒரு குறுகிய காலத்துப் பயிர். கலியாணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர். இதை குழந்தைகள் உணரா. பெற்றோரே உணர்வர்.

  அக்குழந்தைகள் வளர்ந்து தாங்களும் பெற்றோரானபின் தங்கள் குழந்தைகள் காதலிக்கும் போதுதான் தம் பெற்றொர் எப்படி உணர்ந்தனர் என அறியத்தொடங்குவார்கள்.

  காதல் தெய்வீகமானதல்ல. அஃது உணர்ச்சிப்பூர்வமானது. உணர்ச்சிகளின் அடிப்படையில் நிலையான மகிழ்ச்சி என்றுமே வராது. குறுகிய மகிழ்ச்சி வரலாம்.

  திருமணம் நிலையான மகிழ்ச்சியைத் தரவேண்டும். இப்படி சிந்தித்து முடிவெடுக்க கல்லூரிப்பருவத்தில் பக்குவம் வராது.

  • அமலன்,
   அந்தஸ்தில் சரிசமமாக இல்லாதோர் காதல் கல்யாணம் செய்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று ஏன் நினைக்கிறீர்கள். பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களும் கூடத்தான் தோல்வியில் முடிகிறது. அப்போது மட்டும் அவர்கள் வேதனையை அனுபவிக்கமாட்டார்களா??

   கல்யாண வாழ்க்கையில் உண்மையான நேசம் இருந்தால் – அது காதல் திருமணமோ பெற்றோர்கள் பார்த்து செய்த திருமணமோ – யாரும் தோல்வியுற மாட்டார்கள். காதல் உணர்ச்சிப்பூர்வமானது என்பது தவறு. உணர்வுப்பூர்வமானது என்பதே சரி. உணர்வில்லாத ஜடங்களே காதலை நிராகரிக்கும்.

   இப்பெண் ஐந்து வருடங்கள் தன் காதலனுடன் பழகியிருக்கிறாள். இதுதான் ஆரம்ப கட்டம் என்றால் கூட பரவாயில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளது நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும். நாளை வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அது அந்த புதிய மாப்பிள்ளைக்குச் செய்யும் துரோகம். இவளும் அவனுடன் மரக்கட்டை போல, பிணத்தைப் போல படுத்துக் கிடப்பாள். உணர்வே வராது. நாளை குழந்தை குட்டி பிறக்கும். அவளுக்கும் priorities மாறும். ஆனால் மூளையில் காதலனின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கும். காதலிக்கும் பெண்ணின் மனநிலையில் இருந்து பாருங்கள், தெரியும்.

  • //அக்காதலைக் கசக்கிபிழியாமல் விட்டு விடும்போது // இதுக்கு யாருங்க இவருக்கு உரிமை கொடுத்தது? இவர் வீட்டு பெண்களை நினைத்தால் மிகப் பரிதாபமாக இருக்கிறது. மகா மொக்கையான பாசிஸ்டாக இருக்கிறாரே?…. எனக்கென்னவோ அவரது சொந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு காதல் எபிசோடால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். டாக்டர் ருதரனை அனுகலாம் (உங்களை கோத்து விட்டதற்கு ஸாரி டாக்டர் ருதரன்)

  • //காதல் என்பது இளமை வீச்சு. இளம் கன்று பயமறியாது. காதல் உணர்வுகள் ஒரு குறுகிய காலத்துப் பயிர். கலியாணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர். இதை குழந்தைகள் உணரா. பெற்றோரே உணர்வர். // இப்படி ஒரு சீரியசான பதிவிலும் காமெடியா பின்னுட்டமிடுகிறாரே..

   காதலென்றாலே இளம் கன்றுகளுக்கு மட்டுமானது என்ற இவரது ஒன்னாங்கிளாஸ் மனநிலையை எங்கே கொண்டு போய் சொல்லுவது? இவர்களது வீட்டில் கனவன் – மனைவி உறவுகள் காதல் என்பதே இல்லாத ஜடங்கள் (அல்லது ஆயிரம் காலத்து பயிர் – பயிர் என்றால் உணர்வற்ற ஜடம்தானே?) என்று பெருமையுடன் எப்படி இவரால் சொல்ல முடிகிறது?

   சாதி மீறி, பெற்றோர் எதிர்ப்பை மீறி மணம் புரிந்து பல போராட்டங்களிடையே வாழ்ந்து காட்டி தனது பிள்ளைகளை படிக்க வைத்து, பெற்றோரின் கடமையென்னவோ அதைச் செய்து, சரியானதை தேர்ந்தெடுக்கும் பகுத்தறிவை கற்பித்து, சரியானதை பிள்ளைகள் தேர்ந்தெடுத்த போது அவர்களுக்கு மனதுக்கு ஒப்பாத போதும் ஆதரித்து துணை நின்று இன்று உறவுகளின் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கும் எனது தாயும், தந்தையும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். அவர்களது மண உறவில் காதல் கடுகளவாவது குறைந்திருக்க வேண்டுமே? ம்ஹூம்…. மனிதன் உருவாக்கிக் கொள்ளும் சமூக உறவுகளிலேயே ஆக உன்னதமானது ஆண்-பெண் இடையே அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவே என்கிறார் மார்க்ஸ். அந்த உணர்வு மனிதர்களுக்குத்தானே புரியும்? மந்தைகளுக்கா புரியும்?

  • //ஒரு மகளின் வளர்ப்பில் பெற்றோரின் கடமையென்ன ? // இந்தப் பார்டை திருவாளர் வக்கீல் வண்டுமுருகன் -1 விளக்கினாலே போதும் அவரது கருத்து எந்தளவிற்கு பிற்போக்கானது, சமூக விரோதமானது என்பது புரிந்து விடும்.

  • அமலன்,

   பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் எல்லாம் அறிவுப்பூர்வமானதா? சாதி, பணம், அந்தஸ்து, வரதட்சணை இன்னபிற பிற்போக்குத்தனங்களையெல்லாம் நிபந்தனையாகக் கொண்டு பெற்றோர்கள் நடத்தம் திருமணங்களை விட நீங்கள் சொல்லும் உணர்ச்சிவசப்படும் காதல் எவ்வளவோ மேலானது. ஏனெனில் இங்கே உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. பெற்றோர் நடத்தும் திருமணங்களில் இருக்கும் அயோக்கியத்தனங்கள் எதுவும் இங்கே இல்லை.

 13. ஜோ அமலன் பேசுவதையும் அதை சீனு ஆதரிப்பதையும் பார்த்தால் அசப்பில் ஜுராசிக் பார்க் திரைப்படத்திலிருந்து எஸ்கேப்பாகி வந்தவர்கள் போலவே இருக்கிறது.

  இதே தெருவில் என்றால் @#$#@%% (obscured) அடி செருப்பாலே நாயே என்று சொல்லியிருப்பேன். ஆனால், வினவு தளம் என்பதைக் கருத்தில் கொண்டு அவ்வாறு பேசாமல் தவிர்க்கிறேன்.

  போகட்டும்…

  அதெப்படி…? பொண்ணு வசதி குறைந்த பைய்யனைக் கட்டிக் கொண்டால் பைய்யனைக் கொன்றுவிடுவீர்களா? முதலில் இது போன்ற காட்டுமிராண்டிகளைப் பிடித்து சிறையில் போட வேண்டும். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பாச நேசத்தைக் கூடவா பணத்தைக் கொண்டு மதிப்பிடுவார்கள்? இவர்களுக்கு வரும் மறுமகள்களை நினைத்தால் இப்போதே நெஞ்சு பதறுகிறது. இவர்களின் தகுதிக்கு ஏற்ற வரதட்சனை கொண்டு வரவில்லை என்று கேஸைத் திறந்து விட்டு உயிரோடு கொளுத்தி விடக்கூட தயங்கமாட்டார்கள்.. இது போன்ற தாலிபான்களைக் கட்டிக் கொண்டு இவர்களின் மனைவிமார்கள் என்ன பாடுபடுகிறார்களோ… அவர்கள் உண்மையாகவே பாவப்பட்டவர்கள் 🙁

  சீனு ஒரு ஆர்.எஸ்.எஸ் தாலிபான் என்பது முன்பே தெரியும்.. ஆனால், அதே போல் வேறு சில மொள்ளமாரிகளும் வலைத்தளத்தில் நடமாடுவது இன்று தான் தெரியும் 🙁

  //When I argue a point, I do only after taking off my cap of emotions, feelings and empathy//

  இந்த எழவெல்லாம் மனசும் மனசாட்சியும் உள்ளவனுக்கு மட்டும் இருக்கக் கூடியது. சீனு ஜோ போன்ற நியான்டிரதால் மனிதர்களுக்கு இது அப்ளை ஆகாதே?

  நடுநிலையாளர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கல்வி, வேலை, இணையப் பரிச்சயம் போன்றவை மட்டுமே பண்பட்ட மனிதர்களை உண்டாக்கிவிடாது.. ஜோவும் சீனுவுமே இதற்கு நல்ல உதாரணம்.

  • மன்னார்சாமி, நந்தா இத்தனைக்கும் ஜோ ஒரு பார்ப்பனிய எதிரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வர். இன்னிக்குதான் அவர் டவுசர் கழண்டு போச்சு.. உள்ளார கோவால்கர் கட்டியிருக்ந்த அதே காவிக்கறை படிந்த கந்தல் கோவணம்தான்

   • பார்ப்பனீய எதிரி அல்ல. பார்ப்பனீயத்தின் சிலகூறுகளின் எதிர்ப்பவனும் அவற்றைச்சரியென ஏற்றுக்கொண்டோரை எதிர்ப்பவனும் ஆவேன். பார்ப்ப்னர்களுக்கு எவரும் எதிரிகள் கிடையா. அது வெறும் கற்பனை. அக்கற்பனையை பார்ப்ப்னர்களின் சிலரும் மற்றவர்களில் பலரும் தூண்டிவிடுகிறார்கள்.

    பார்ப்பனீயமட்டுமல்ல. எல்லா ஈயங்களும் குறை, நிறையுள. அவற்றை எதிர்க்கும்போது அவர்களின் எதிரியா நீங்கள் என்று கேட்பது மட்டுமில்லையேன் ?

    What am I doing here? What abt u? Am I not accusing u for various lapses in ur approach and attitudes?

    So, resist things which u r sure harmful to society. Whichever ism that may b. Hate the sin, not the sinners.

  • //இதே தெருவில் என்றால் @#$#@%% (obscured) அடி செருப்பாலே நாயே என்று சொல்லியிருப்பேன். ஆனால், வினவு தளம் என்பதைக் கருத்தில் கொண்டு அவ்வாறு பேசாமல் தவிர்க்கிறேன்.//

   நானும் வினவு தளம் என்பதால் தான் &^^#$%#%$#5 என்று சொல்லாமல் இருக்கிறேன். நாகரீகத்திற்கு நன்றி.

   //அதெப்படி…? பொண்ணு வசதி குறைந்த பைய்யனைக் கட்டிக் கொண்டால் பைய்யனைக் கொன்றுவிடுவீர்களா? முதலில் இது போன்ற காட்டுமிராண்டிகளைப் பிடித்து சிறையில் போட வேண்டும். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பாச நேசத்தைக் கூடவா பணத்தைக் கொண்டு மதிப்பிடுவார்கள்? இவர்களுக்கு வரும் மறுமகள்களை நினைத்தால் இப்போதே நெஞ்சு பதறுகிறது. இவர்களின் தகுதிக்கு ஏற்ற வரதட்சனை கொண்டு வரவில்லை என்று கேஸைத் திறந்து விட்டு உயிரோடு கொளுத்தி விடக்கூட தயங்கமாட்டார்கள்.. இது போன்ற தாலிபான்களைக் கட்டிக் கொண்டு இவர்களின் மனைவிமார்கள் என்ன பாடுபடுகிறார்களோ… அவர்கள் உண்மையாகவே பாவப்பட்டவர்கள்//

   எங்கேயும் பெண்ணின் தந்தை உத்தமர், அவர் செய்தது சரி என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அவரை தூக்கிலோ இல்லை கல்லால் அடித்தோ கொல்லட்டும். (இப்போ திருப்தியா?)

   ஆனால், இதுக்காக என்னை (தேவையில்லாமல் மதத்தை இழுத்து) ஆர்.எஸ்.எஸ். தாலிபான் என்று முத்திரை குத்தினால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். ஒத்துக் கொண்டு போகிறேன். இன்னும் சொல்லப்போனால் உங்களுக்காகவே அதை ஒத்துக் கொள்கிறேன். சந்தோஷமா?

   தமிழில் தான் படிக்கிறீர்களா என்றே சந்தேகமாக உள்ளது. ஒரு மாற்றுக் கருத்து வைத்தால் முத்திரை குத்தும் ‘தொழில்’ உங்களை விட்டு போகவே போகாதா?

   //நடுநிலையாளர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கல்வி, வேலை, இணையப் பரிச்சயம் போன்றவை மட்டுமே பண்பட்ட மனிதர்களை உண்டாக்கிவிடாது.. ஜோவும் சீனுவுமே இதற்கு நல்ல உதாரணம்.//

   அப்படியே இருந்துவிட்டு போகிறேனே…விடுங்க…

   • சீனு அவர்களே,

    மிக அருமை தோழரே…மிக அருமையான வாதம்..

    ஆனால் இவனுகள்ட்ட பேசி எந்தப்புண்ணியமும் இல்ல…

   • சீனு ஜூராசிக் பாசிலான ஜோவினுடைய கருத்தை பொத்தாம் பொதுவாக வழிமொழிகிறேன்னு நீங்க சொன்னதுதான் இந்த குயப்பத்துக்கு காரணம், மத்தபடி நீங்க ஆர்.எஸ்.எஸ்னு சொன்னா அதை ஏன் முத்திரை குத்துவதா பீல்பண்றீங்க.. நீங்க அதான்னுதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே….

    • கேள்விக்குறி,

     இப்பவும் அதையேத்தான் சொல்றேன்.

     //மத்தபடி நீங்க ஆர்.எஸ்.எஸ்னு சொன்னா அதை ஏன் முத்திரை குத்துவதா பீல்பண்றீங்க..//

     முத்திரை குத்துதல் என்பது, எந்த இடத்திலும் என்ன சொன்னாலும் அவன் ஆர்.எஸ்.எஸ்.காரன், அவன் போலி கம்யூனிஸ்ட், அவன் $%@!$%#!@$# என்று சொல்லி அவன் சொல்ல வந்த கருத்தை எதிர்க்கப்பார்ப்பது. அவன் என்ன சொன்னாலும் அதை தப்பு என்று சொல்வது. புரியுதா?

     //நீங்க அதான்னுதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே//

     நான் அப்படியே இருந்துவிட்டு போகிறேனே. உங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் சேருகிறேனே…போதுமா?

 14. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சேர்ந்திருப்பதும், அப்படி தொடர முடியவில்லை என்றால் பிரிவதும்தான் சரியானது. ஜனநாயகப்பூர்வமானது.//

  ஆனால் அதுகூட நடைமுறையில் பல இடங்களில் சாத்தியமில்லை..

  எப்படி பெண் பெற்றோரால் காதலுக்கு பிளாக்மெயில் மிரட்டல் இருக்கோ , அதே போல விவாகரத்துக்கும் இருக்கிறது குடும்பங்களிலிருந்து…

 15. பெற்றோர் தான் பார்க்கும் மணமகன்/ மணமகளை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரிப்பதை போல், மகன்/ மகள் விரும்பும் விசாரித்து, நல்ல பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் இருவரையும் ஊக்கபடுத்தி, உற்ச்சாகபடுத்தி நல் வாழ்வுக்கு வழிசெய்யலாம்.

  நடவடிக்கையில் குற்றம் இருந்தால் உண்மையை எடுத்து கூறி நல் வழிபடுலாம். இதுதான் இன்று மட்டும் அல்ல எக்காலத்திற்க்கும் ஏற்றது. இதில் மற்று கருத்து இருந்தால் எனது முந்தைய reply யை பார்க்கவும்.

 16. //“அந்த காதலர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மறுப்பது பாசிசம்.” இதுக்கு ஜோ மறுத்தாரா? அதை சொல்லுங்க…அப்புறம் மன்னிப்பு கேக்குறத பத்தி பேசலாம்…// விடிய விடிய கத கேட்டு சீதைக்கு ராமன் உத்தம புருஷன்னு காவிகள் வரலாற்றை திரிப்பது போலவே சொல்கிறார் சீனு. எதற்கும் வக்கீல் வண்டுமுருகன் – 1ன் பின்னூட்டங்களை வண்டுமுருகன் – 2 வாகிய சீனு ஒரு முறை படித்துவிட்டால் திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கும் பிரச்சினையை கடந்த அடுத்த கட்டத்திற்கு செல்லுவது சாத்யமாகலாம்.

 17. தான் பெற்று வளர்த்து செலவு செய்து படிக்க வைத்த படிக்க பெண் தான் சொல்லும் பையனையே கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிசம். இலவசமாக தரமான கல்வியையும் உணவையும் அளித்துவிட்டால் இவர்கள் எல்லாம் செலவு செய்தேன் என்ற ஒரே காரணத்தினால் திருமணத்தை திணிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே முடிவு எடுக்க வேண்டிய விஷயம்.நடக்க கற்றுத்தருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாதையையும் முடிவு செய்து அவர்கள் வாழ்கையை நீங்கள் வாழாதீர்கள்.

 18. கட்டுரையைப் படித்துமுடித்தபோது எனக்குக் கண்கள் தெரியவில்லை. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்ணிரைத் துடைத்துக் கொண்டேன். சில பின்னூட்டங்களைப் படித்தபோது சற்றே எரிச்சல். சாதித்திமிருக்கும் பணத்திமிருக்கும் சவக்குழி தோண்டியாக வேண்டும்.

 19. சிலர் நினைப்பதை போல எல்லா ஏழைகலும் நல்லவர்கலும் அல்ல.எல்லா பனக்காரர்கலும் கெட்டவர்கள் அல்ல.
  தனது மகள் பிரிவு தந்த துயரம் காரனம்.அடி உதை கொடுத்து பையன் மனதை மாற்ற்லாம் என என்னியது பின்னர் கொலையில் முடிந்து விட்டது என் கருதுகிறென்.
  பெண்ணின் தந்தை இன்னும் சில மாதஙகள் காத்திருந்து இருக்கலாம் .சில மாதங்களில் காதல் கசந்து அல்ல்து வறுமை கோரப்பிடி இருந்து விடுபட ரம்யா தாய் தந்தை யிடம் திரும்பி வந்து இருக்க வாய்ப்பு உள்ள்து .இதை போன்ற சம்பவங்கள் முன்னர் நிறைய
  னடந்துலள்ள்து .
  ஒரு வெளை பையன் தனது மகளை நல்லநிலையில் வைகக திரானி உள்ள்வன்
  என்ரால் அவர்கலை வாழ் வ் இருக்கலாம் எனக்கு தெரிந்து இதில் ஜாதி பிரட்ச்னை இல்லை

 20. உறுதி கொண்ட அப்பெண் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியடைவார். அன்பு என்பது திருப்பி செலுத்துவது. அதுவும் வாழ்க்கை துணை…….. அப்படிப்பட்ட அன்பை குறுகிய காலத்தில் இழந்துவிட்ட அப்பெண்ணுக்கு ஆறுதல்….. காலம் மட்டுமே….

  மற்றபடி இங்கே விவாதத்தில் அமலனும், சீனுவும் சமூகத்தில் இருக்கிறார்கள், அப்பெண்ணின் தந்தையை போல அவர்களை மாற்றுவது சற்று கடினம்தான்

  இவ்விவாதத்திற்கு தேவையில்லாது எனினும் மேற்கண்டவர்களில் விவாதத்தால் எனது அனுபவத்தை இங்கே பதிவிட நேருகிறது.

  இதுபோன்றதொரு காதல், பெற்றோரும் இப்படிதான் வெட்டு குத்து என்கிறார்கள், இங்கும் பெண் மிக உறுதியானவர். பெற்றோர் விருப்பமின்றி திருமணம் கிடையாது என்கிறார்கள். தந்தை யூனியன் ஒன்றில் பொறுப்புள்ளவர். பையன் தாழ்த்தப்பட்ட சாதி.

  பையனின் அப்பா, அம்மாவோடு நான் பெண் வீட்டிற்கு செல்கிறோம். பெண்ணின் தந்தை கண்ணீர் விட்டார். அம்மாவோ உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டேன் என்றார். ஆம் எனக்கு பெண்ணும் பையனும் நண்பர்கள்.

  ஜாதக்ப் பொருத்தம் இல்லை, சாதி பொருத்தமில்லை, இதே போன்று பணப்பொருத்தமும் இல்லை. ஆனால் உறுதி இருந்தது. காதலித்து 5 ஆண்டுகள் கழித்து திருமணம் பெற்றோர் நடத்தி வைத்தனர்.

  இன்று அனைவரும் நலம். பையனிடம் படிப்பும், உழைப்பும் இருந்தது. குறைந்த சம்பளம் பெற்றவன், இன்று அவனுடைய முயற்சியில்தான் கை நிறைய சாம்பாதிக்கிறான்.

  இவர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள்.

  அவ்வாறு அமலனும், சீனுவும் மாற வேண்டும்

 21. hey joe vadivelu comedy mathri, enna kaiya pudichu eluthiya nu comedy panitu erukingaaaaaa……….valkai 1000 kalathu pairu mairu nu yovvvv evanga valkiya apdiya karachu kudicha mathriiii……. tamil nadu corner la brain a elama ukanthutu perusa valkiya pathi pesituu….. poya pooo . unkau therincha oraaa valaki panakara ponna panakara payan katikanum, infoysis infosisa fcuk pananum wipro wiprova fcuk pananum dr a dr engg engg podangaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

 22. வினவு,
  சரண்யா, பார்த்தசாரதி பிரச்சினையில் இன்றைய தலைமுறையும்,நாளயதலைமுரையும் தெரிந்துகொள்ளவேண்டியதுஅதிகம்.கூலிப்படைக்கு பணம் கொடுத்தால் தமது வன்மம் தீரும் என்று ஒரு தந்தையாக நினைக்கப்பட்டவர் மாட்டிக்கொண்டார்.
  பணத்திமிர்,சமூக அந்தஸ்து (போலியான ) அவரது சாயத்தை வெளுக்கவைதுவிட்டது.காதல் என்ற வார்த்தை இந்த சமூகத்திற்கு பிடிக்கவில்லை ,அதற்குபதிலாக வேறொரு சொல்லை இந்த போலிகளுக்கு சொல்லி புரியவைத்தால்
  வாழவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.( அமலன் = நாகரீக கூலிப்படை)
  — மெய்தேடி .

 23. நல்ல வேளை, அந்த அமெரிக்க மாப்பிள்ளை தப்பிச்சான்! இந்த மாதிரி பெண்களால்( காதல் தோல்வி அடைந்த / தோற்கடிக்கப்பட்ட ) கஷ்டப்படும் அமெரிக்க மாப்பிள்ளைகளை நேரிலும் பார்த்திருக்கேறேன்/ கேள்விப்பட்டிருக்கிறேன்.இங்கே வந்ததும் 2 வருடத்துக்கு கணவனை உண்டு இல்லைஎன்று பண்ணுவார்கள்.
  911 போன் செய்து பொய் கேஸ் ( domestic violence ) கொடுப்பார்கள். Divorce settlement என்று இது வரை சம்பாதித்த பணத்தில் பாதியை பிடிங்கிக் கொள்வார்கள்.
  “பாதிக்கப்பட்ட பெண்” என்பதால் இவருக்கு உடனடியாக கிரீன் கார்டு கொடுக்கப்படும். அதன் பிறகு இவர்கள் முன்னாள் காதலனையோ அல்லது புதிய காதலனையோ தேடித் போவார்கள்.
  இந்தப் பெண்ணைப் பற்றி அறியாமல் அவரைப் நான் எதுவும் சொல்லவில்லை, காதல் தோற்கடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு export செய்யப்படும் பெண்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளைகளின் பிரச்சினையை பற்றி சொல்லுகிறேன்.

 24. அந்த பெண்ணின் அப்ப்னை மட்டும் கைது செய்தால் பத்தாது,அம்மா அண்ணனையும் கைது செய்ய வேண்டும்.இந்த காலத்திலும் மனித உருவில் வாழும் மிருகங்கள்.
  இதில் சில பேர் பார்த்த சாரதியின் தந்தை இக்கல்யானத்திற்கு ச்ம்மதித்தார் ஆக்வே அவர் ஒரு பேராசைக்காரர் என்ற தொனியில் பேசுவது சரண்டயாவின் தந்தை தப்பு செய்து மாட்டிக் கொண்டார்,மாட்டாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.பார்த்தசாரதியின் அப்பா மகன் நேசித்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. சரண்யாவின் அம்மாவுக்கு(அப்பன்தான் டம்மி பீஸ் ஆச்சே) இல்லை.பிடிக்கவில்லை என்றால் சொத்தில் ஒரு சல்லிக் காசு கொடுக்கமாட்டேன் என்று கூறி உறவை அறுத்துக் கொள்ள வேண்டியதுதானே.!!!!!!!!!.
  கூலிப்படை அனுப்பி கொலை செய்வது எல்லாரும் செய்ய முடியாது.இவன் இத்ற்கு முத்லில் இந்த மாதிரி பல விஷயங்களில் சம்பந்த பட்டிருப்பான்.இவன் சரித்திரத்தை தோண்டினால் பல கொலைகள் வரும்.
  அந்த கொலைகார அப்பனுக்கு ஒரு கள்ளக் காதலி.அவள் மூலம் நடந்த கொலை.இவன் இந்த வயசில் கள்ளக் காத்லி வைப்பானாம்.ஆக கள்ளக் காதலுக்கு அந்தஸ்து,சாதி கிடையாது.காதல் செய்து திருமணம் செய்தால் மட்டுமே.இந்த கள்ளக் காதல் கூட ஆதரிக்க சில மாமாக்கள் முன்வரலாம். முன்

  //இந்த கொலை குறித்து சலுஜா அளித்த வாக்குமூலம்:

  சென்னையில் உள்ள திருமண தகவல் மையத்தில் பணிபுரிந்து வந்தபோது நரசிம்மன் தனது மகள் சரண்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க திருமண தகவல் மையத்திற்கு வந்தார். அவர் கலகலப்புடன் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது.

  இதனை தொடர்ந்து நான் தியானம் செய்ய ஒரு தியான மையத்திற்கு சென்றேன். அங்கேயும் நரசிம்மன் வந்திருந்தார். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் நட்புரீதியாக அவருடன் பழகினேன். பின்னர் நண்பர்களானோம்.

  இந் நிலையில் தனது ஒரே மகள் சரண்யா, வேறு ஜாதியைச் சேர்ந்த பார்த்தசாரதியை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பார்த்தசாரதியை கொலை செய்ய உதவி செய்யும்படியும் நரசிம்மன் என்னிடம் கூறினார்.

  நானும் உதவி செய்வதாக நம்பிக்கை தெரிவித்தேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜானகிராமன், ஹேமந்த்ராமிடம் இது குறித்துக் கூறினேன். அவர்கள் 2 பேரும் மற்றொருவரான திலீப்பை அழைத்து வந்தனர். அவர்களிடம் பார்த்தசாரதியை காரில் கடத்தி சென்று, மிரட்டி சரண்யாவை பிரிக்கும்படி கூறினேன்.

  அவர்கள் வாடகை காரில் பார்த்தசாரதியை கடத்தி சென்று மிரட்டியுள்ளனர். ஆனால் பார்த்தசாரதி பணியவில்லை. உடனே அந்த 3 பேரும் நரசிம்மனின் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பார்த்தசாரதியை கொலை செய்து விதிடுங்கள் என்றார்.

  இதையடுத்து பார்த்தசாரதியை கொலை செய்து எரித்துவிட்டு, தடயங்களை அழித்தனர். இந் நிலையில் போலீசில் மாட்டிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.//

 25. ஒரே ஜாதியில் தன் பெண் அளவுக்கு படித்த தன் அந்தஸ்துக்கு ஏத்த ஒரு ஆணை ப்ரோக்கர் வைத்து பார்த்து நகை மற்றும் தொகை எல்லாம் பேசி ஒரு தேதி வைத்து ஊரை கூட்டி ஒரு மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டவைத்து விட்டால் அன்றிரவே அந்த பெண்ணை உடலுறவு கொள்ளலாம்…அவன் எப்படி இருந்தாலும் சகித்துக்கொண்டு பெண்கள் வாழ வேண்டும்.

 26. ஜோ அமலன் பெரிய பருப்பு மாறி பேசிக்கிட்டுருக்கு …அதுக்குபோயி பதில் சொல்லிக்கிட்டு …..

  எவ்வளவு கேவலமான எண்ணம்….காதல் தப்புன்னு பையனோட அப்பா எடுத்து சொல்லணுமாம் ….இப்பிடி சொல்ல வெக்கமா இல்ல?? தூ
  ஏன் தப்பு ? அதுவுமில்லாம வேணாம்னு சொல்வதற்கு பையனோட அப்பாவுக்கு கூட எந்த உரிமையும் இல்ல….

  இவங்க பாத்து பாத்து வளத்துட்டா …குழந்தைகள் என்ன இவங்க அடிமையா ??? அப்டின்ன அப்படிப்பட்ட வளர்ப்பே தேவையில்லை. சுதந்திரம் முக்கியம்…..பெத்ததுக்கு ரொம்ப சாதாரணமாவே வளர்த்துங்க போதும் …..அது உங்க கடமை. ரொம்ப பாசம் கொட்டி குழந்தைகளை உங்க அடிமையாக ஆக்கணும்னு நெனைக்காதீங்க.

 27. //I hold the boy’s father guilty.//

  // And even a case of kidnapping an innocent girl shd have lodged against this tailor. She wd have been saved. And his own son, too, wd have seen a better future; and a better married life with *one of his own status*.//

  //He says he is a poor tailor. But he did not stop his son trying to ensnare a rich girl. Rather he went to her parents and begged them to give their daughter in marriage to his son. Does he think a rich man should give away his daughter for the asking? What qualifications will he expect from a boy to choose for his own daughter? Will he give her to every fellow from any background? //

  இப்பிடி தப்பு தப்பா இங்கிலீஷ்-ல எழுதறதுக்கு ஒழுங்கா தமிழிலேயே எழுதிருக்கலாம்.

  எவ்வளவு கேவலமான, முட்டாள்தனமான , திமிர்த்தனமான வாதங்கள்.

  அந்த பொண்ணு தான் அவ்வளவு பாசமா உறுதியா இருக்கும் போதே, பையனோட அப்பா மேல ஆள் கடத்தல் வழக்கு போடணுமாம்.
  எவ்வளவு அகங்காரம். இவ்வளவு ஆணவத்துடன் பேசும் அமலன் எத்தகைய கேடுகெட்ட செயலும் செய்ய தயார் என்று தெரிகிறது.

  பாவம் அவரது அடிமை குழந்தைகள். இவர் பாசத்தை கொட்டி வளர்த்துவிட்டார். எனவே உங்களுக்கென்று சுய விருப்பு வெறுப்பு தேவையில்லை. அனைத்தையும் இவரே முடிவுசெய்துவிடுவார். குதிரைக்கு கடிவாளம் போல இவர் சொல்கிற பாதையில் செல்லுங்கள், போதும். கஷ்டமே வராது. (ஜெயில் போல – ஜெயிலர் சொல்பேச்சு கேட்டு நடந்தா சுகமா இருக்கலாம் )

 28. கண்களைப் பிழியவைத்த கட்டுரை.
  விவாதங்கள், கருத்துக்களைப் பிழிந்தன.

  ‘வினவின் பின்னூட்ட விவாதங்களில் முதன்மையானது’ என்று நானிதைக் கூறுவேன்.

  ஜோவின் முந்தைய பின்னூட்டங்களின் வாயிலாக, நான் கூட ஜோ பெரிய்ய்ய்ய்ய அறிவாளி என்று நினைத்திருந்தேன். ஏனெனில், அவரின் சில பின்னூட்டங்கள் வினவின் கட்டுரையைவிட மிகச் சிறப்பாயிருந்தன.
  ஆனால் அவர் அறிவில் கறை படிந்துவிட்டது – இந்தக் கட்டுரையில் ஜோவின் பின்னூட்டம் மூலமாக.

  நான் உங்களுக்காக, இதோ, இந்த வினவு மன்றத்தில் வதாடுகிறேன் ஜோ :
  “தவறு செய்வது மனித இயல்பு. தன் இயல்பிலிருந்து ஜோ பிறழ்ந்துவிட்டார். அவர் மன்னிப்புக் கேட்பார்.”

  எனக்கென்னவோ ஜோ விவாதங்களைப் பார்த்து திருந்தியிருப்பாரென்று நினைக்கிறேன்.
  வந்து மன்னிப்புக் கோரினாலும் கோரலாம்…!

  Take care… Mr.Jo…!

 29. பணக்காரப்பெண் என்று தெரிந்த உடனே மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அப்பெண்ணை அவர்கள் வீட்டில் விடச்சொல்லி, பின்னர் அவனுக்கு வேறு பெண்ணைப் பார்த்து மணம் செய்விப்பதே ஒரு நல்ல தந்தையின் கடமை…….இந்த ஆள் சொந்த வாழ்க்கையில் கடுமையாய் பாதிக்கபட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.ஈசீஆர் ரோட்டில் உள்ள அனைத்து ரிசார்ட்களிலும் காலேஜ் டைமுக்கு ரூம் போட்டுட்டு வீட்டுக்கு தினம் ஒருத்தனோட போறவர்கள் எல்லாம் ஏழை பெண்களா பாஸ்?

 30. மணம் என்பது ஒரு ஆண்- ஒரு பெண் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயம் அன்று நம் இந்தியப் பண்பாட்டில். ஒரே நாளில் முடிந்துவிடும் விடயமன்று. ஒரே முதலிரவில் முடிந்துவிடும் விடயமும‌ன்று.

  மணம் மட்டுமல்ல, வாழ்க்கையில் பிற விடயங்களும் அப்படித்தான்: ஒரு தனிநபர் அல்லது இருவரோடு முடிந்துவிடுவது அல்ல. வாழ்க்கைத் தளைகளால் கட்டப்பட்டது. எவரும் தப்பிக்க முடியாது.

  Man is born free
  But found himself everywhere in chains

  வெளிநாட்டில் தனிநபர் வாழ்க்கை உயர்த்தி வைக்கப்படுவதால் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. நமது நாடு அவ்வளவு தூரத்திற்குப் போகவில்லை இன்னும். வருங்காலத்தில் போகலாம். அப்படிப் போகும்போது நான் இப்படி எழுதத்தேவையிருக்காது.

  அது கிடக்க.

  இந்தப் பதிவில் வரும் பெண், மிகவும் தன்னலத்தோடு செய்ததுதான் காதல். காதல் என்பதே ஒரு தன்னலமாகும். திருமணம் தன்னலமான செயல் அன்று.

  மணம் செய்து மகிழ்ச்சியாக வாழும்போது நாம் மட்டுமல்ல. நம் உற்றார், பெற்றோர், நண்பர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். நமக்கு முதல் குழந்தை பிறந்ததும், நம்மை விட மகிழ்ச்சியடைவது நம் பெற்றோர்: அவர்களுக்கு ஒரு பெயரன், அல்லது ஒரு பெயர்த்தி. அதைத் தூக்கும் அவர்களின்பம் கொள்ளையோ கொள்ளை.

  ஒரு பெண் – ஒரு மகளாக‌, ஒரு மருமகளாக‌, ஒரு ஓரகத்தியாக‌, ஒரு அண்ணியாக‌ – என்று தன் கணவனின் வீட்டாருக்கு ஆகிறாள் மனைவியான பின்.

  இதே போல, ஒரு ஆணும்.

  எனவே திருமணம் என்பது ஒரு பந்தம். அதன் அடிப்ப‌டை இருவர் மட்டுமே என்றாலும், அம்மணத்தின் வெற்றிக்கு பலரின் முயற்சி தேவைப்படுகிறது.

  A girl who has been sent to study in college won’t dissipate her student years in romance. She knows well it is for study she came to college. Recreation is allowed like chatting up with friends and even strangers; but not seeking a lover and romancing with him, neglecting the prime purpose for which her parents sent her to college. In Chennai, boys are on the prowl online, as Podhigat TV discussions last night informed. The murdered boy was on prowl and saranya came on his way. Saranaya fell. She called it ‘love’.

  Love is not pre-arranged. It blossoms, unknown to us first; and when we become conscious of it, we want to experience it; so, we move ahead and the love matures not in a day, not in a meeting, but only gradually. Mature love requires not only emotions but a good intellect also. Strange to say, it is both emotional and intellectual too. The love between Satre and Simone de beavoir, Marx and Mrs Marx in London poverty, Albert Swhweitzer and Mrs Swhweitzer in African forests curing the black lepers for e.g., are legendary mature love which will bring tears to your eyes. Only such love can be called divine and true. Together in a cause, we share our souls. Only such love are worthy of our admiration. Only such love can be a beacon for all of us. But for ordinary people like us, in bringing up our children, and our own sharing and caring, such love is possible: the Wedded Love. These things cant be understood when u romance as a student.

  The wedded love that is, between married partners Its effect is soul lifting and to be savoured bit by bit. It radiates happiness in the home; and the children are overjoyed to see their parents loving one another.

  “With secret course, which no loud storms annoy,
  Glides the smooth current of domestic joy.”

  Love can be forestalled if we have self control in college years. Girls, more than boys, possess such self control. Psychology has evidenced that they have emotional maturity. Hence we see boys tendering love letters to girls and getting reprimands or rebukes from them as the girls want to study, not to romance.

  It is the betrayal of the trust of our parents in us if we abuse our student years for romancing.

  Saranya’s lack of self control or maturity led her to abuse her college years which had a chain reactions which are tragic. Will any college mater or the teacher take her as a role model? Never! She will be treated as a bad influence on others.

  I am not referring to other players in the episode. Each one has some error, some like her parents having errors which became unpardonable guilt and some like the parent of the murdered boy who let down his own son by not taking any proactive action to guide the immature youth properly. Instead, he went on instigating them to tread the same error prone path. His action led to the loss of his son. Unpardonable !

  The last para is the reiteration of my stand regarding the old tailor.

 31. மருத்துவ படிப்பு (எம் பி பி எஸ்) ஒரு இலகுவான படிப்பு அன்று. வேறு விடயங்களைப்பண்ண நேரமே கிடைக்காது. பேப்பர்கள் நிறைய. ஐந்தாண்டுகள். மாணாக்கர்கள் ஒவ்வொரு பேப்பரையும் கிளியர் பண்ணுவதைப்பற்றித்தான் சிந்திக்க்வும் செயலாற்றவும் முடியும்.

  இப்படிப்பட்ட படிப்பை பொழுது போக்காக அலட்சியப்படுத்துபவர்கள் மட்டுமே ஆன்லைன் சாட் பண்ணி ஆண் நண்பர்களையோ பெண் நண்பர்களையோத் தேடி ரோமாண்ஸ் பண்ணுவார்கள். டொனேசன் சீட்டு பணம் கொடுத்து வாங்கியவர்கள் தங்கள் படிப்பை மதிப்பதில்லை.

 32. வினவுக்கு :

  1. வினவு என்பது ஒரு தினத்தந்தி அல்லது தினமலர் போன்று வியாபாரத்துக்காக கண்டதைப் போடும் பத்திரிக்கையல்ல என்று இதுனாள் வரை நினைத்திருந்தேன். ஏனென்றால், இந்தக் கட்டுரையில் நீங்கள் இருதரப்பின் கருத்துக்களையும் கேட்டு எழுதி, அதை அடிப்படையாக வைத்து உங்கள் கருத்தைச் சொல்யிருந்தால் அதில் தவறில்லை. ஆனால் நீங்கள் ஒரு தரப்பினரைமட்டும் பேட்டி கண்டு எழுதி, அதை விவாததில் விடுவது எந்த விதத்தில் நியாயம்?

  2. கொலை செய்த பெற்றோர் கொலை செய்து தவறிழைத்துவிட்டார்கள்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். அவர்களின் பணப் பேராசையும் இதில் இருக்கிறது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துமில்லை.ஆனால், அவர்களின் மன நிலையையும் நீங்கள் விசாரித்து எழுதியிருக்க வேண்டும்.

  3. கொலை செய்யப்பட்ட பார்த்தசாரதியின் தந்தை தன் மகனை நல்லவன் என்றுதான் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நல்லவனிடத்தில் தம் தகுதிக்கு மேலே இருக்கும் சம்பந்தம் வேண்டாம் என்று அவர் எடுத்துச் சொன்னாரா; அல்லது அவ்வாறு சொல்லி அந்தப் பையன் கேட்கவில்லையா? அப்படியென்றால் இவர்கள் இருவரில் யார் கெட்டவர்? இதையெல்லாம் ஏன் நீங்கள் எழுதவில்லை?

  4. இதே தந்தை தனது பெண், சரண்யா செய்த தவறை செய்திருந்தால் ஒத்துக்கொண்டு போயிருப்பாரா என்று விசாரித்தீர்களா?

  5. பார்த்தசாரதி ஒரு வீட்டு வேல