Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்ஈழம்இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

-

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. Better late than never. இனியாவது இதை போன்றதொரு கொடுமை நிகழாமல் தடுக்கவேண்டியது நம் எல்லோருடைய கடமை. அவர்களின் வலி, அதை அனுபவிப்பவர்களுக்கே புரியும்.

    “உங்களுக்கு வேண்டியதெல்லாம் பீட்ஸா, கேபிள் கனெக்க்ஷன் அப்புறம் 2 காண்டம்கள்” என்பது தான் நியாபகத்துக்கு வருகிறது.

  2. இந்த காட்சி ஆவணம் இந்த நூற்றாண்டின் மனித குல அவலத்தில் சாட்சியாக உள்ளது… இவை கடந்த நூற்றாண்டில் ஹிட்லர் செய்த படுகொலைகளின் மறு பரிமாணத்தை ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அரசுகள் நடத்தி காட்டியுள்ளன…

    1. தமிழ் நாட்டில் இதற்கும் ஒரு கூட்டம் போடுவார்கள்…. கூட்டத்தில் தங்களுக்கு பிடிக்காதவர்கள் திட்டி தீர்த்து கொள்வார்கள்…

    2. மெழுகுவர்த்தி பிடித்து அஞ்சலி செலுத்து விட்டு… ஈம சடங்கு செய்வது போல்… வேலை முடிந்தது திருப்திபட்டு கொள்வார்கள்…

    3. தி ஹிண்டு, துக்ளக் சோ போன்றவர்கள்… இதற்கு காரணம் விடுதலை புலிகள்… தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது… கொல்லபட்டது எல்லாம் விடுதலை புலிகள்… ஈழ படுகொலைகளுக்கு எதிராக பேசுவது… ஹிந்திய தேசியதிற்கு எதிரானது என்பார்கள்…

    4. கிழக்கு பதிப்பகம்… இந்த ரத்தத்திலும்… பிணங்களிலும்… வழவழ அட்டையை போட்டு வியாபாரம் செய்ய முடியுமா என முயற்சி செய்யும்…

    5. சோனியா-ராகுல் காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்… இந்த தமிழின படுகொலைகள் பற்றி பேச கூடாது… அது தீவரவாதத்திற்கு எதிரான போர்… இளம் தலைவர் ராஜிவ் காந்தியின் மரணத்தை மறக்க முடியாது என 20 ஆண்டுகளாக சுவாசிக்கும் ராஜிவ் பிணவாடையின் மனிதர்கள் என நிரூபிப்பார்கள்…

    6. இந்திய எதிர்கட்சி பாஜக… இதனை பற்றி மூச்சு விட மாட்டார்கள்…

    7. கருணாநிதி குடும்பதினருக்கு… நீதி மன்றத்திற்கும், வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் அலையவே நேரம் போத இல்லை…

    8. ஜெயலலிதா ஸ்ரீலங்கா அரசை வருடி விட்டு, விடுதலை புலிகளின் தீவிரவாதம் பற்றி பேசலாம்… ஜெவின் வார்த்தை சிதறலுக்கு காந்திருந்தது போல் புலம் பெயர் தமிழர்கள்… உலக தமிழர்களின் காவல் தெய்வம் என்பார்கள்… சீமானும் அவரது சீடர்களும் கூட்டம் போட்டு அம்மாவின் புகழ் பாடுவார்கள்… போட்டிக்கு பெரியார் திகவும் அம்மாவுக்கு உலக தமிழர்கள் சார்பில் லட்சார்ச்சனை செய்வார்கள்

    தமிழ் நாட்டு மக்கள்… இந்த இனபடுகொலையில் இந்தியாவின் பங்கை கண்டிக்க முடியாமல் இருக்கும் நிலை ஏன்?

    ஸ்ரீலங்கா அரசை கண்டித்து தீர்மானம் போட்டவர்கள்… இந்திய அரசைதானே வலியுறுத்துகிறார்கள்… ஆனால் ஸ்ரீலங்காவோடு சேர்ந்து… அதிக அளவில் ஈழ தமிழர்களை இனபடுகொலையில் பங்களிப்பை செய்தது இந்தியா என்பதை ஏன் வசதியாக மறந்து விடுகிறார்கள்?

    இதே போன்ற ஒரு படுகொலையை இந்திய அரசு தண்டாவாடாவிலோ… நாகலாந்திலோ நடத்தாது என்பதற்கு உறுதியான நிலைபாடில்லை…

    ராஜபக்சே போர் குற்றவாளி என்றால் அதனை ஆதரித்த ரனிலும் போர் குற்றவாளியே…

    ராஜபக்சே போர் குற்றவாளி என்றால்… அவனுக்கு ஆயுதம் வழங்கி… ஆள் அனுப்பிய மன்மோகன் சிங், பிரனாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோனி, சிவ சங்கர மேனன், எம்.கே.நாராயணன், சோனியா, ராகுல் போன்றவர்களும் போர் குற்றவாளிகளே, இவர்களின் படுகொலை பங்கை மறைத்து மோசடி அரசியல் செய்யும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், கருணாநிதி, ஜெயலலிதா, பிரகாஷ் காரத், டி.ராஜா, தா.பாண்டியன், நெடுமாறன், சீமான், திருமாவளவன் போன்றவர்கள் இந்தியாவின் போர் குற்றத்தை மறைத்து மோசடி செய்யும் மறைமுக போர் குற்றவாளிகளே…

    அரசியல்படுத்தாத தமிழ் நாட்டு மக்கள்… ஆடுகள் போல் கருணாநிதி பின்னும், ஜெயலலிதா பின்னும் மந்தையாக செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்… மக்களை அரசியல்படுத்தாமல் இருப்பதே மோசடிகளுக்கு மூலதனம் என தலைவர்கள் தொண்டர்கள் ஊழலை மட்டுமே பாடமாக்கியுள்ளனர்…

    தமிழீழ விடுதலை புலிகளை முதன் முதலில் தடை செய்த… அகதிகளாய் வந்த ஈழ தமிழர்கள் வீட்டு பிள்ளைகள் தமிழ் நாட்டில் கல்லூரி கல்வியே படிக்க கூடாது என சட்டம் போட்ட ஜெயலலிதா இன்று ஈழ தாய் என சில சாதி வெறி பிடித்த சீமான் போன்றவர்களால் அழைக்கபடுகிறார்…

    ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை… முடியாத இனவாதத்திற்கு பயன்படுத்த விரும்பும்… சீமான் போன்றவர்களின் அரசியல் நிலைபாடு… இழிவானாது…

    உண்மையான மக்களாட்சியில்… மக்கள் அரசியல்படுத்தபட்டு… ஆட்டு மந்தகாளக்காபடாமல்… மனித குல அநீதிகளுக்கு எதிராக போராடுவார்கள்… தமிழின படுகொலையில் கற்று கொண்ட பாடமாக மக்களை அரசியல்படுத்தி… மக்கள் போராட்டம் நடத்த யார் தயார் ஆகிறார்களோ… அவர்களே மக்களுக்கானவர்கள்…

    • \\இந்திய எதிர்கட்சி பாஜக… இதனை பற்றி மூச்சு விட மாட்டார்கள்…\\

      உலகில் ஹிந்து நாடாக இருந்த ஒரே ஒரு நாடான் நேபாளத்தை மாவோயிடு உதவியுடன் சீனா பற்றீய பொழுதே அது பிற நாட்டு உள்விவகாரம் நாம் தலையிட முடியாது என்று கூறீ பாராளுமன்றத்தில் மட்டும் கேள்வி எழுப்பி நிருத்தி கொண்டது. இவர்களை பற்றீ பேசி பயனில்லை

      ஆனால், கம்யூனிஸ்டுகளை பற்றீயோ அல்லது முஸ்லீம் லீக்கை பற்றியோ, கிறித்துவ மக்கள் கட்சியை பற்றீயோ ஏன் வாய் திறக்கவில்லை. ஏன் ம்வோயிஸ்டுகள் இலங்கையில் நடந்த படுகொலைக்கும் வாடிகன் உள்வாலி இத்தாலிய சோனியா மற்றூம் சீனா உதவி செய்த்தையும் எதிர்த்து ஒரு பந்திற்கு அழைப்பு விடுத்திற்களாமே? ஏன் செய்யவில்லை. ஏன் வினவிற்கும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லையா என்ன 🙂

      இந்த விசயங்கள் நடக்கும் பொழுது சர்வ வல்லமை படைத்தவரும். உலகின் பெரும்பான்மை மதமான் கிறீத்துவ மத தலைவரான போப்பும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். ஏன் இது போன்ற விசயமே இவர்களுக்கு தெரியாதா?

      மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது உலகில் காலம் காலமாக நடக்கும் விசயம் தானே?

    • உங்களைப்போல் ஈழ உணர்வோடு இரு‍ப்பவர்கள் இருக்கும் வரை ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது நண்பா உமது சேவை தொடர வாழ்த்துக்கள்

  3. இலங்கை அரசு, இந்த கொடூரச் செயல்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.இதை தமிழர்கள் மட்டும் செய்ய முடியாது.பல நாடுகளைச் சேர்ந்த மக்கள்,அமைப்புகள்,அரசுகளின் உதவி தேவை.அவர்களுக்கு இக்கோரிக்கையின் நியாயத்தினை புரியவைக்க வேண்டும்.
    சர்வதேச அளவில் ஆதரவு திரட்டப்பட்டால் ஒழிய இக்குற்றவாளிகளை தண்டிக்க முடியாது. பிரிட்டன் நம் கோரிக்கை ஆதரவு தந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி அரசியல் என்ற பெயரில் அதை நிராகரிக்கக்கூடாது.
    இது ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுட நேயமுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை. உங்களுடைய மாவோயிச ஆதரவு அரசியல்,காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் மற்றும் இந்துமத வெறுப்பு அரசியல்களுக்கான ஒரு வழிமுறையாக,வாய்ப்பாக இதை கருத வேண்டாம். ஒரு அமைப்பு,ஒரு கட்சி, ஒரு தனிமனிதர் மட்டுமே இதை செய்ய முடியாது. எதில் வேறுபட்டாலும் இதில் ஒன்றுபடுவோம் என்ற அணுகுமுறையுடன் இதில் அக்கறையுடைய அனைவரும் சேர்ந்து காரியாமாற்றினால் ஏதாவது நடக்கும்.
    உங்களுடைய இந்திய அரசியல்,சிபிஎம்-அதிமுக எதிர்ப்பு அரசியலை ஒதுக்கி
    வைத்துவிட்டு உங்களால் இதில் ஈடுபட முடியுமானால் ஈடுபடுங்கள்.இதை வேறு போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பயன்படுத்த வேண்டாம்.

    • //பல நாடுகளைச் சேர்ந்த மக்கள்,அமைப்புகள்,அரசுகளின் உதவி தேவை.அவர்களுக்கு இக்கோரிக்கையின் நியாயத்தினை புரியவைக்க வேண்டும்.//

      நன்றாக புரிய வையுங்கள். ஆனால் ஈராக், ஆப்கான், லிபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளின், மக்களின் பிரச்சினையை நியாயத்தை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.

      //சர்வதேச அளவில் ஆதரவு திரட்டப்பட்டால் ஒழிய இக்குற்றவாளிகளை தண்டிக்க முடியாது. பிரிட்டன் நம் கோரிக்கை ஆதரவு தந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி அரசியல் என்ற பெயரில் அதை நிராகரிக்கக்கூடாது.//

      நல்லது, ஈராக்கிலும், ஆப்கானிலும், லிபியாவிலும் பிரிட்டன் கொன்ற மக்களுக்கு என்ன கணக்கு என்று அந்த நாட்டு மக்கள்க கேட்கிறார்கள். அங்கு கொலைகார குற்றத்தை புரிந்திருக்கும் ஒரு நாடு ஈழத்தின் விவகாரத்தில் மட்டும் காந்தி போல நடந்து கொள்ளும் என்பது உங்களது விருப்பம். சரி நீங்கள் ஏகாதிபத்திய அரசியலை ஏற்காமல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளது ஆக்கிரமிப்புகளை ஆதரித்தால் உலக மக்களது வெறுப்புக்கு ஆளாவீர்கள், பரவாயில்லையா?

      //இது ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுட நேயமுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை. உங்களுடைய மாவோயிச ஆதரவு அரசியல்,காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் மற்றும் இந்துமத வெறுப்பு அரசியல்களுக்கான ஒரு வழிமுறையாக,வாய்ப்பாக இதை கருத வேண்டாம். //

      மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் இந்தியாவும் அதன் இராணுவமும்தான் ஈழத்தையும் ஒடுக்கியிருக்கிறது, இலங்கையின் போருக்கு உதவியிருக்கிறது. எனினும் நீங்கள் இந்திய அரசின் அடக்குமறையை ஆதரித்தால் இந்திய அரசு ஈழத்தை ஆதரிக்கும். நல்ல வியாபார சிந்தனை! ஆனால் விடுதலை என்பது வணிக நலனிற்குள் அடங்கும் ஒன்றல்ல.

      பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட காஷ்மீர் பிரச்சினை என்பது உங்களுக்கு பிரிவினை வாத அரசியல் எனில் ஈழம் என்பது பலருக்கும் பிரிவினைவாத அரசியல் என்று பேசுவதை நீங்கள் எதிர்க்கக் கூடாது. குஜராத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை கொன்றது உங்கது இந்துமத அரசியல்தான். ஆனால் நீங்கள் இந்து மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். ஈழத்தமிழனும் இந்து, இந்தியாவில் இருப்போரும் இந்து என்று ஒற்றுமை கீதம் பாடினால் ஈழம் வலுவடையும் என்று கருதுகிறீர்களா இல்லை இயல்பாகவே யாழ்ப்பாணத்து வேளாளளப் பார்ப்பனிய்த்தை ஏற்கிறீர்களா, எதுவோ இரண்டும் மக்கள் விரோத சித்தாந்தம். அந்த வகையில் நீங்களே இப்போது ஈழத்திற்கு எதிராக இருப்பது புரிகிறதா? கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.

    • ஹலோ மனிதன்,

      உங்க பேச்சு மனித நேயம் என்ற பெயரில் மனித தன்மையே இல்லாமல் இருக்கிறது…

      ஈழ பிரச்சனையில் நீங்கள் பார்க்கும் மானுட நேயம்… காஷ்மீரிலும்… குஜராத்திலும் மக்கள் படுகொலை செய்யபடுவதும் மனூட நேயம் ஆகி விடுகிறது… உங்கள் ஹிந்திய அரசு நடத்தும் படுகொலைகளையும்… மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களையும் கண்ணை மூடி கொண்டு சரி என்ன சொல்லி கொண்டே… ஸ்ரீலங்காவோடு சேர்ந்து உங்கள் ஹிந்திய ஆதிக்க வெறி ஓநாய்கள் நடத்திய இனபடுகொலைக்கு எதிராக பிரிட்டனை திரட்ட வேண்டும் என்கிறீர்களே… உங்களது பேச்சில் எத்தனை முரண்… என்ன பொறுக்கிதனம் செய்தாவது ஈழம் பேச வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது…

      உங்களுடைய மானுட நேயபடி… குஜராத்தில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்களை கொலை செய்யலாம்… காஷ்மீரில் மக்களின் மண்ணை ஹிந்திய அரசு ஆக்கிரமித்து கொண்டு… தினம்… தினம் மக்களை கொலை செய்யலாம்… பெண்களை கற்பழிக்கலாம்… ஆனால் நீங்கள் சந்து பொந்தில் பூந்து ஈழம் பேசி உத்தமர் ஆகி விடலாம் பார்க்கிறீர்கள்… நீங்கள் செய்வது பச்சை அயோக்கியதனம்… மோசடி…

      முதலில் ஹிந்தியாவில் இருக்கும் பாசிச வெறி பிடித்த ஓநாய்கள் சோனியா, ராகுல், மோடி, ஜெயலலிதா, கருணாநிதி, அத்வானி இவர்கள் காறி உமிந்து விட்டு ஈழம் பேசினால் கொஞ்சமாவது யோக்கியமான செயலாக இருக்கும்… இந்த யோக்கியமான செயலை செய்ய முடியாது என்றால் நீங்களும் ஒரு ஹிந்திய வெறி பிடித்த பாசிஸ்டு என்பதே உண்மையாக இருக்கும்… ஒரு ஹிந்திய பாசிஸ்டு… ஹிந்தியா பங்கு கொண்ட தமிழின படுகொலையை கண்டிக்க பிரிட்டனின் காலை நக்க வேண்டும் என்பது ராமன் முதல் ராகுல் வரை செய்து கொண்டிருக்கும் பேடி தனமே…

      • 🙂

        காஷ்மீரில் மக்களின் மண்ணை ஹிந்திய அரசு ஆக்கிரமித்து கொண்டு

        உங்களின் இந்த பதில் பாக்கிஸ்தான் மற்றூம் சீனா ஆக்ரமிப்பிற்கும் பொருந்துமா? 1980 ல் ஆயிர கணக்கான் ஹிந்துக்கள் கொலை செய்யபட்டு அவர்களின் வழிபாட்டு தளம் இடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்ட்வர்களுக்கும் பொருந்துமா?

        மோடி பாசிச வெறியர் என்றால், உம்மர் அப்துல்லா என்ன முஸ்லீம் வெறீயரா? சோனியா என்ன கிறித்துவ வெறியரா?

        \\ஹிந்தியா பங்கு கொண்ட தமிழின படுகொலையை கண்டிக்க பிரிட்டனின் காலை நக்க வேண்டும் என்பது ராமன் முதல் ராகுல் வரை செய்து கொண்டிருக்கும் பேடி தனமே\\

        ஹ்ம்ம்… இலங்கையில் போரை முன்னின்று நடத்துவது சீனா தான் என்பதும் இப்பொழுது அங்கு மிகப்பெரிய துறை முகத்தை நிறுவி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததே?

  4. வினவு,

    அருந்ததிராய் அவர்கள் பேசிய பொதுக்கூட்டத்தை ஈழத் தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள் என்று கேட்டுவிட்டு, இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று சொல்லுவது உங்களுக்கே அந்நியமாகப் படவில்லையா? புறக்கணிக்கும் ஒரு விடயம் தான் தனது நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் போகும். ஆகவே புறக்கணித்தார்கள் என்று சொல்லுவதே தகுதியானது.

    பார்ப்பனிய பாதுகாவலராகவே இருந்தாலும் சோ ராமசாமி தமிழர் அல்லவா! அந்தபடிக்கு தமிழராக தமிழருக்காக உருவாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிலைபாட்டை ஆதரிக்கும் ஈழ மக்கள் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தை புறக்கணித்தது ஒன்றும் வியப்பில்லை. என்ன பேசுகிறார்கள், யாருக்காக பேசுகிறார்கள் என்பதா முக்கியம்? தன் இனமாக மதமாக இருக்க வேண்டாமா? தமிழ் தேசியம் கூட இதற்குப் பின்னால் தானே ஒளிந்திருக்கிறது!

    ஆனால் இதையெல்லாம் தவிர்த்து கட்டுரையின் ஒட்டுமொத்த சாராம்சத்துடன் கூடி மக்கள் சிந்தித்து முன்னெடுக்க வேண்டிய பிரச்சனையல்லவா இது!

    • பாசிஸ்ட் நீங்கள் உண்மையிலே ஒரு பாசிஸ்டுதான்…

      சந்தில் சிந்து பாடுவது போல் பார்ப்பனர்களை தமிழர்கள் என சான்றிதழ் அடித்து கொடுக்கிறீர்கள்… இது பார்ப்பனீய மோசடி… பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் தில்லையிலும், திருஆலவாயத்திலும், திருமயிலையிலும்,திருவாரூரிலும், திருவெண்ணய்நல்லூரிலும்… சூத்திர தமிழனை கருவறைக்கு விட்டு… தேவாரம் பாட வைக்க விடட்டும்…

      நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பவர்கள் ஜெவின் காலை மண்டியிட்டு நக்கி கொண்டிருக்கும் மானமுள்ள தமிழர்கள் என்பதை உலகம் அறிந்துள்ளது… மோடி போல் கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் கேட்கும் பாசிஸ்டு சீமான் சீடர்களிடம் என்ன கொள்கையை எதிர்பார்க்க முடியும்…

      • //பாசிஸ்ட் நீங்கள் உண்மையிலே ஒரு பாசிஸ்டுதான்… சந்தில் சிந்து பாடுவது போல் பார்ப்பனர்களை தமிழர்கள் என சான்றிதழ் அடித்து கொடுக்கிறீர்கள்…//

        தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

  5. எல்லாவற்றிலும் உங்கள் நிலைப்பாட்டினை ஏற்பவர்கள் என்று பார்த்தால் பலரை தவிர்க்க வேண்டி வரும்.உங்களுக்கு ஜெ என்றால் ஆகாது,அத்தனை வெறுப்பு.இன்று சட்டமன்றத்தில் அவர்தான் தீர்மானம் கொண்டுவருகிறார்.தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையில் அவர் குரல் முக்கியமானது.அவர் இதனை முன்னெடுத்து சென்றால் அதை ஆதரிக்கத்தான் வேண்டும்.சிறு அமைப்புகளால் செய்ய முடியாததை பல அமைப்புகள்,கட்சிகள் ஒன்று சேர்ந்தால் செய்ய முடியும்.எனவே ஒரு பரந்த ஆதரவு இதற்கு தேவை.இதில் பாஜகவிற்கும் இடம் உண்டு, தெகல்காவிற்கும் இடம் உண்டு,
    பியுசிலிற்கும் இடம் உண்டு என்று செயல்பட்டால்தான் பரந்த ஆதரவு கிடைக்கும்.தமுமுகவும்,பாஜகவும் இதில் ஒன்றாக குரல் கொடுத்தால் உங்களுக்கென்ன நட்டம்/பிரச்சினை.இதில் தலித் அமைப்புகளும்,சோவும்,ராம கோபாலனும் ஒரே குரலில் பேசினால், சில கோரிக்கைகளை ஆதரித்தால் ஆதரவு கூடும், குறையாது. உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உங்களிடம் இருக்கட்டும்.அது பிறருக்கு ஏற்புடையாதாக இருக்க வேண்டியதில்லை.

    காஷ்மீர் பிரச்சினையை பேச இதுவல்ல நேரம்.காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் ஈழ மக்கள் என்று வரும் போது இலங்கை அரசை ஆதரித்தது,ஆதரிக்கிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஈழமக்கள் கோரிக்கைகளை ஆதரித்தார்களா.அவர்களுக்கு ஆதரவு ஜிகாதிகளிடமிருந்து வருகிறது.அது தவிர அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கிறீர்களே, அது போதாதா :). ஜிகாதிகள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அதை ஆதரிக்க மறுக்கவில்லையே.
    அதே போல்தான் பாஜக ஆதரித்தால் அதை ஏற்பது தவறில்லை.ஜிகாதிகள் ஆதரிக்கும் எதையும் ஆதரிக்க மாட்டோம் என்று அறிவிப்பிர்க்ளா.

    நீங்கள் உலகில் எல்லோரையும் திட்டிக் கொண்டு நாங்கள் மட்டுமே புனிதர்கள்,புரட்சியாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருக்கலாம்.அதனால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஈழத்தமிழரும்,அவர்களின் ஆதரவாளர்களும் தம் கோரிக்கை ஆதரவாக செயல்படுமாறு ஜெர்மனியை,பிரிட்டனை,ஸ்வீடனை கோருவதும், அதற்காக முயற்சி செய்வதும் சரியானது .ஏகாதிப்பத்திய எதிர்ப்பு பேசும் க்யுபாவும்,வெலிசூலாவும் யார் பக்கம் என்பது உலகறிந்த உண்மை.

    • மனிதன்,

      இன்று தீர்மானம் கொண்டு வந்த ஜெவால்… மிக அதிகம் நட்டப்பட்டவர்கள் ஈழ போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பு… ஆனால் ஜெவின் பாசிச குரலை ரசிக்க வேண்டும்…

      மனுதர்மம், வர்ணசிரமவாதிகள் சோ, ராம.கோபாலன் போன்ற பார்ப்பனீய வெறிபிடித்த குரலை ரசிக்க வேண்டும்…

      பாசிச பாஜக குஜராத்தில் நடத்திய கொலைகளை ரசித்து கொண்டே… அவர்களின் பாசிச வெறி குரலை ரசிக்க வேண்டும்…

      காஷ்மீரில் பாகிஸ்தான் பற்றி பேசும் நீங்கள்… காஷ்மீரில் இந்தியா நடத்தும் படுகொலைகளை ரசிக்க வேண்டும்…

      பிரட்டன், ஜெர்மனி, ஸ்விடன் ஆதரவு கேட்டு மண்டியிட்டு நக்கி கொண்டிருக்கும் நீங்கள்… உங்கள் இந்தியாவின் ஆதரவு யாருக்கு என தெளிவுபடுத்தி கொள்ளவும்… இனபடுகொலை செய்த பாசிச இந்தியாவை ரசிக்கும்… உங்களை போன்றவர்கள் இனபடுகொலை பற்றி பேசுவதும்… ரனிலும், ராஜபக்சேவும் தமிழின படுகொலை பற்றி பேசுவதும் சமமான ஒன்று…

  6. //வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா?//

    வினவு என்ன செய்ய போகிறது?

    • ஸ்ரீலங்காவோடு சேர்ந்து இனபடுகொலை செய்த இந்தியா பாசிசத்தை… வினவு அம்பலபடுத்தி வருகிறது… பாசிச இந்திய அரசை, பாசிச ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை காறி உமிழ்கிறது… போராடுகிறது… போதாதா… சூத்திரன்…

      • செயலலவில் இன்னும் அதிகமாக எதிர்பாரிக்கிறேன். வினவின் சக்திக்கு இது குறைவாக கருதுகிறேன்.

  7. இதில் உங்களால் முடிந்தது ஜெ.இந்திய அரசு,பாஜகவை வசை பாடிக் கொண்டே ராஜபக்சேயை திட்டுவது என்பதாக முடிந்து போகும், எழுதுவீர்கள்,ஆர்ப்பாட்டம் நடத்துவீர்கள்,அதன் தாக்கம் மிகச்சிறியது.ஆனால் ஜெ முன்னெடுத்தால் தாக்கம் அதிகம்,நன்மை விளையலாம்.ஜிகாதிகள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக காஷ்மீர் பிரச்சினையில் நீங்கள் ஆதரவு தர மறுக்கவில்லையே.அப்படி இருக்க ஈழத்தமிழர்
    பிரச்சினை என்று வரும் போது இன்னார் இன்னர் ஆதரவினைக் கோருவது தவறு என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்.ஜிகாதிகள்,தலிபான்கள்,அல்கொய்தா,ஈரானின் கொமெனி போன்றார் ஆதரிக்கும் ஒரு போராட்டத்தினை ஆதரிக்கும் வினவு ஈழத்
    தமிழர் மட்டும் பிரிட்டனின் ஆதரவை,ஜெ ஆதரவை கோராக்கூடாது என்று எழுதுவது இரட்டை வேடம்.இதுதான் உங்கள் புரட்சியின் உண்மையான முகம்.
    இதற்கு மேல் உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.உங்கள் ‘புரட்சிர’ அரசியல் போதைக்கு ஈழத்தமிழர் பிரச்சினையை ஊறுகாய் ஆக பயன்படுத்துவது தவ்று.

    • மனிதன்,

      எனக்கு தெரிந்து வினவு தோழர்கள்… காஷ்மீர் விடுதலை போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்… விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடுகிறார்கள்… ஏழைகளின் கல்விக்காக போராடுகிறார்கள்… கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்காகவும் போராட்டம் நடத்துகிறார்கள்…

      ஆனால் ஜெவின் தீர்மானம் மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சொல்ல முடியுமா? காஷ்மீரிகளையும், இஸ்லாமியர்களையும் வெறுக்கும் உங்களை போன்ற பார்ப்பனீய இந்துத்துவா… ஹிந்திய போதையில் இருப்பவர்களின் போதைக்கு இப்போது ஈழ மக்களின் சதையையும், ரத்தத்தையும் சுவைத்து கொண்டு… ஈழம் பேசி கொண்டு இருக்கிறீர்கள்… உங்கள் போதைக்கு சுவையானவற்றை படைத்ததே ஸ்ரீலங்கா-ஹிந்தியா கூட்டணிதானே… அதாவது தமிழின மக்களை படுகொலையில் பங்கு கொண்டவர்கள் உங்கள் ஹிந்திய நாடு… முதலில் குளித்து விட்டு… ஹிந்திய போதை தெளிந்து வந்து உண்மையை எழுத பாருங்கள்…

      ஜிகாதிகள், தலிபான்கள், அல்கொய்தா பற்றி எழுதும் முன் நேரு காலத்து மோசடி, சாஸ்திரியின் ஹிந்தி(ய) வெறி, இந்திராவின் பாசிச காட்டுமிராண்டிதனம், ராஜிவின் பொறுக்கி பேடிதனமான பாசிசம், நரசிம்மராவின் பிக்பாக்ட் திருட்டுதனம், வாஜ்பாய் கூட்டத்தின் கோர முகம், மன்கோகன் – சோனியா-ராகுல் கூட்டம் நடத்தும் பாசிச படுகொலைகள் பற்றி எழுதினால் மகிழ்ச்சியாக இருக்கும்…

      முடிந்தால் ஹிந்திய, பார்ப்பனீய இந்துத்துவா போதையில் இருந்து விடுபட வேண்டுமானால்… சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் போதையில் இருந்து விடுவிக்கும்… மறுவாழ்வு மையத்தை அணுகவும்… உங்களுக்கு இருக்கும் ஹிந்து/ஹிந்திய போதை… சாராய… கஞ்சா… அபின் போதையை விட ஆபத்தானது… போதை நீங்கிய பின் மனிதாபிமானத்தோடு ஈழம் பேச வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்…

      • \\தில்லையிலும், திருஆலவாயத்திலும், திருமயிலையிலும்,திருவாரூரிலும், திருவெண்ணய்நல்லூரிலும்… சூத்திர தமிழனை கருவறைக்கு விட்டு… தேவாரம் பாட வைக்க விடட்டும்…\\

        இதற்கு தான் கம்யூனிஸ்டு புத்தகத்தையும் கிறித்துவ மிஷினரிகளின் புத்தகத்தை மட்டுமே படிக்க கூடாது என்பது.

  8. பெரியார் தி.க என்பது பெரியாரை,பெரியாரை மட்டுமே தத்துவ தலைவராக கொண்ட அமைப்பு.
    பார்ப்பனீய எதிர்ப்பு என்பது பெரியார் தி.க வின் அடிப்படை கொள்கை.

    பெரியார் தி.க, ஜெயலலிதாவை எப்படி பார்க்கிறது அரசியல் புரிந்தவர்கள் அனைவரும் அறிந்த விடயம்.

    ஆனால், ஈழப்பிரச்னையிலும்,கச்சத்தீவு பிரச்னையிலும் ஆளும் அதிமுக அரசு,ஆக்கபூர்வமான தீர்மானங்களை கொண்டுவந்துள்ளது.

    அத்தீர்மானங்களை,அரசியல் ரீதியாக வரவேற்றது. அவ்வளவே!
    அதே நாட்களில்,சமச்சீர் கல்விக்கு எதிராக ஆளும் ஜெயா அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் பெ.தி.க தான்.

    சீமானுக்கு,வேண்டுமானால்,பார்ப்பனீய எதிர்ப்பு குறித்த பார்வை இல்லாமல் இருக்கலாம்.

    எனவே, பெரியார் தி.க வை, நாம் தமிழருடன் இந்த விடயத்தில் ஒப்பிடுவது தேவையற்ற ஒன்று.

    • /////பெரியார் தி.க, ஜெயலலிதாவை எப்படி பார்க்கிறது அரசியல் புரிந்தவர்கள் அனைவரும் அறிந்த விடயம்.////

      ஈரோட்டுக் கண்ணாடி அவர்களே, எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
      (புதசெவி © கோப்பிரைட் டீபிசிடி 2007-2011)

      • 2011- தமிழக சட்டமன்ற தேர்தலில், இரு அணிகளையும் புறக்கணித்த பெரியார் தி.க, பார்ப்பன ஜெ பற்றி கொண்டிருந்த கருத்து இது தான் :

        ஜெயலலிதாவோ பார்ப்பன உணர்வோடு ‘இந்துத்துவா’ப் பண்புகளில் ஊறிப் போய் நிற்பவர். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு சேது சமுத்திரத் திட்டத்தையும் ‘இந்துத்துவ’ உணர்வோடு எதிர்த்தவர். ஈழத் தமிழர்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் ஆதரவாக பேசியவர்களை அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு சிறையில் அடைத்தவர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முயன்று தோல்வி அடைந்த நிலையில் இடதுசாரிகள் மற்றும் தே.மு.தி.க.வோடு தேர்தல் உடன்பாடு கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உறுதியாக குரல் கொடுத்து வந்த ம.தி.மு.க.வையும் அவமானப்படுத்தி, தமது கூட்டணியில் தொடாந்து நீடிக்க விடாமல் செய்துவிட்டார்.

        தேர்தல் முடிவுக்கு பிறகு ஜெயலலிதா அணி வெற்றி பெற்றால், காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டால், காங்கிரசோடு அவர் அணி சேரவும் தயங்கமாட்டார். காங்கிரசும் அதற்கு தயாராகவே இருக்கும். காஞ்சி ஜெயேந்திரன் எனும் பார்ப்பன சங்கராச்சாரியை கொலை வழக்கில் கைது செய்த ஜெயலலிதாவின் துணிவை நாம் பாராட்டத் தான் வேண்டும். ஆனால், தி.மு.க.வோ, காஞ்சி ஜெயேந்திரன் மீதான கிரிமினல் வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆனாலும் கூட பார்ப்பனர் சங்கம் ஜெயேந்திரனை கைது செய்த ஜெயலலிதா வுக்கே ஆதரவு தெரிவித்துள்ளது, பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான துக்ளக் சோ – பார்ப்பனர், பா.ஜ.கவை ஆதரிப்பது வீண் முயற்சி என்று கருதி ஜெயலலிதாவையே ஆதரிக்கிறார்.

        இப்படி பார்ப்பனர்கள் தெளிவாக இருந்தும் தி.மு.க.வோ, பார்ப்பன எதிர்ப்பில் சமரசத்துக்கும் தடுமாற்றத்துக்கும் உள்ளாகி, காங்கிரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஈழத்தில் உச்சகட்டமான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சி சிங்கள அரசுக்கு திட்டங்களைத் தீட்டித் தந்து கொண்டிருந்தது. அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டால் தமிழினப் படுகொலையை நிறுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று கருதி காங்கிரசுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. அதற்காக கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது. எதிர்த்துப் போட்டியிட்டவர் அ.இ.அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக, அ.இ.அ.தி.மு.கவை ஆயுதமாகப் பயன்படுத்தி வாக்களிக்க பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது.

        ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. ஆயுதமாக இல்லை; அரசியல் அதிகார சக்தியாக களத்தில் நிற்கிறது. எனவே நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட அதே பார்வையோடு சட்டமன்றத்தில் செயல்பட முடியாது. இந்த நிலையில்தான் இரண்டு அணிகளுக்குமே ஆதரவில்லை என்று முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க, பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

        இத்தோடு, 1995 -ல் திராவிடர் கழக பொது செயலர். கி.வீரமணி, அரசியல் நிலையைத் தாண்டியும், திராவிட இயக்க அடிப்படை கொள்கையை மீறியும், பார்ப்பன ஜெயாவிற்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்ததும், ஊழல் வழக்கில் சிக்கி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ.வை சென்று சந்தித்த அசாதாரண நிலையை காரணம் காட்டி திராவிடர் கழகத்திலிருந்து விலகிய பெரியார் தொண்டர்களால்(ஆனூர்.ஜெகதீசன்,விடுதலை.ராசேந்திரன் போன்றோர்) உருவாக்கப்பட்டது தான் பெரியார் திராவிடர் கழகம்.

        2000 ஆம் ஆண்டில், தோழர்.கொளத்தூர்.மணி அவர்கள் தி.க விலிருந்து விலக்கப்பட்டது வீரமணி அவர்களின் அதீத ஜெ.ஆதரவு போக்கினால் தான்.
        எனவே,பார்ப்பன எதிர்ப்பிலேயே கருக்கொண்ட பெரியார் தி.க, ஒரு போதும் பார்ப்பன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காது.

  9. 2006இல் இலங்கையில் போர் மீளத் தொடக்கப்பட்டது முதல் அதன் இறுதி வரை நடந்த ஒவ்வொன்றுமே இந்திய ஆட்சியாளர்கள் நன்கறிய நடந்தவை தாம்.
    அது மட்டுமல்ல.
    இந்திய ஊக்குவிப்புடன் தான் போர் தீவிரப்படுத்தப்பட்டது.
    இந்திய இராணுவ ஆலோசகர்கள் இறுதிக் கட்டம் வரை இலங்கைப் படையினருடன் கூட இருந்துள்ளனர்.

    விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவது என்ற இந்திய நோக்கத்தை இலங்கை அரசு எப்படி நடத்தி முடிக்கிறது, அதற்கான விலை என்ன என்பன இந்திய அரசின் அக்கறைக்குரிய விடயங்களாக என்றுமே இருக்கவில்லை.

    இன்றும் இலங்கை அரசின் இக்கட்டான நிலையை இந்திய அரசு தனக்குச் சாதகமாகிக் கொள்ள முயலுகிறதே ஒழிய, அதற்கு இலங்கையை ஆளுவது எந்த விபீஷணன் என்றோ அதை எரித்துச் சுடுகாடாக்குவது எந்தக் குரங்கு என்றோ கவலையில்லை.

    இலங்கையில் நடந்த பெரும் மனிதப் படுகொலையில் இந்திய அரசு இரண்டாவது குற்றவாளி என்பதையும், எவ்வாறான இந்தியத் தலையீடுமே நல்லதல்ல என்பதையும் தமிழர்கள் விளங்கிக் கொண்டால்நல்லது.

  10. //அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் //

    ஏன்டா நாயே உனக்கு தப்பிப் போகும் மக்களை புலிகள் சுட்டது அப்படி என்ன ஏளனமாப் போச்சோ? நீ இதுவும் கதைப்பாய் இன்னமும் கதைப்பாய். வெளிநாட்டிள போய் வெள்ளக்காரன்ற மலத்த அள்ளி பிழப்ப நடத்திற நீயெல்லாம் ஏன்றா ஈழத் தமிழனைப் பற்றிக் கதைக்கிற.

  11. “கொல்;
    கொன்றுவிடு;
    கொன்றே அவனை
    கூறு போடு!”

    “இல்லை,
    இல்லவே இல்லை;
    நில்; நில்.
    நில் சற்றே;
    அவனைக் கொல்லாதே;
    கொன்றுவிடாதே…!”

    “ஏன்?
    ஏ மனிதா…!
    ஓ…,
    உன் உள் மனம்
    உறுத்துகிறதா?”

    “இ…
    இல்லை…
    இல்லவே இல்லை.”

    “சொல்.
    சொல்லிவிடு.
    யார்,
    யாருக்காக
    இந்த பயம்?”

    “முள்ளி வாய்க்கால்
    தென்னை மரத்தில்
    கையுங்காலும் கட்டிவைத்து,
    கத்தியொன்றால்
    கழுத்தறுத்தும்…
    அந்தத் தமிழிளைஞன்
    ஆற்றியேதும் பதறவில்லை.
    கண்ணீரால் கபடமிட்டு
    கத்திக் கதறவில்லை.

    அவன் மட்டும் –
    ஆற்றாமை தாங்காமல்,
    கண்ணீர் மல்கி,
    கதறியழுதால்……
    பின் பதம் பார்த்து
    கழுத்தறுத்தே
    கொலை செய்வோம்.”

    “நடவாது;
    நடக்கவே நடக்காது;
    அவன்
    அழமாட்டான்…!
    அதனால் கத்தியெடு.
    கழுத்தைக் கிழி.
    அவனைக் கொன்று
    கூறு போடு.”

    ***

    “குறி பார்.
    கொலை செய்.
    பத்தடி தூரத்தில்
    பனங்கொலைக் குவியல்போல்
    கொத்துக் கொத்தாய்
    கொய்து போட
    கத்தைக் கத்தையாய்
    காத்திருக்கும் தலைகள்.
    கைகளையும் கண்களையும்
    கட்டிபோட்ட நிலையில்;
    நினைவு தப்பாமல்
    நிர்வாணமாய்!
    சுடு.
    கூர் பார்த்து.
    குறி பார்த்து.
    வீரம் பழக,
    சுடு.
    கிட்டத்தில் சுட்டு
    வீரம் பழகு.”

    “இல்லை;
    இவர்களுள் பயமில்லை;
    பின்னந்தலையில்
    படபடவென்று சுட,
    அது வீரமுமில்லை.
    அத்தனை கண்களிலும்
    கண்ணீர்த் துளிகளில்லை;
    கதறியழுதோர் யாருமில்லை.”

    “நடவாது;
    நடக்கவே நடக்காது;
    அவர்கள்
    அழவேமாட்டார்கள்…!
    அதனால்
    அவர்களைக் குறி பார்.
    பின்னந்தலைப் பிடரிகளை
    பிள.
    குருதிப் பீரிட
    குறுந்தூரத்துக் குறியில்
    உன் வீரம் பழகு.”

    ***

    “புணர்.
    பிணமென்றாலும்
    புணர்ந்துவிடு.
    புதிய பிணம்.
    புது அழகு.
    குதறிக் குதறி
    குறிபார்த்துப் புணர்ந்துவிடு.”

    “இல்லை;
    இந்தப் பிணத்தின்
    கண்ணோரத்தில்
    கண்ணீரில்லை.
    அவளைப் புணர்வதில்
    அர்த்தமில்லை…!”

    “நடவாது;
    நடக்கவே நடக்காது;
    அவள்
    அழமாட்டாள்…!
    அவளின் கண்களில்
    கண்ணீரில்லை;
    அவளுடலில் உயிரில்லை.
    ஆனாலும்
    அதைப் புணர்.
    அதனின் குறியில்
    குறிபார்த்து…!”

    ***

    “சரிதான்;
    சாவைச் சந்திக்க
    கையறு நிலையிலும்
    கை தூக்கியவர்களை
    குறி பார்த்துச் சுட்டோம்;
    குறி பார்த்துப் புணர்ந்தோம்.

    இருப்பினும் –

    தமிழகத்து
    தொப்புள்கொடிகள்
    துவண்டு போகாதா?
    தானைத் தமிழன்;
    தன் குடிவளர்த்த
    தற்குறி தமிழன்;
    மூத்தப் பெருங்குடி;
    முத்தமிழ் வித்தகன்;
    நாம் தமிழர் அல்லது
    நாம் அல்லாத தமிழர்;
    விடுதலைச் சிறுத்தைகள்;
    விட்டுப்போன சிங்கங்கள்;
    தங்கத் தாரகையின்
    தவிக்கும் இரத்தங்கள்;
    இந்தியா முழுதும் காணும்
    மெழுகுவர்த்திப் போர்கள்;
    தும்பை விட்டுவிட்டு
    வலிய வந்து வால் பிடிக்கும்
    தூங்கிவழிந்த
    தூரத்து ஐக்கிய நாடுகள்;

    இத்தகையோர் கையுயர்ந்தால்
    யாம்
    இல்லாமல் போய்விடுவோம்.”

    “சீச்சீ…
    சற்றும் பதறாதே
    மா வீரா,
    நீ நம்பு.
    இத்தனை வீராப்புகளையும்
    கோத்தபய ராஜபக்சே
    கொத்துக் கொத்தாய்
    கைக்குலுக்கி
    உச்சி மோந்து
    வீரம் அடக்கி,
    நட்சத்திர அறைகளில்
    அடைத்து வைத்து
    அமைதி காண்பார்.

    அதையும் மீறி
    அத்து மீறினால்,
    தின் பண்டங்களாலும்
    தே நீர்க் கோப்பைகளாலும்
    திகட்டவைத்து
    திருப்பியனுப்புவார்.

    அதையும் மீறினால்
    அவர்களின் இருப்பிடமே சென்று
    அளவளாவி விட்டு,
    திருப்பதி சென்று
    தியானம் செய்துவிட்டு,
    தடையேதுமின்றி
    தடபுடலாக
    தாயகம் திரும்புவார்.

    ஆதலால்,
    என்றோ ஓர் நாள்,
    யாரோ சிலரால்,
    நம் கைகள் கட்டப்பட்டு
    நீதி கேட்கப்படும் வரை…

    நீ
    பிடரியில் சுட
    இடரிலிருக்கும்
    தமிழனைத் தேடு.
    குறி பார்த்துச் சுடு.
    பிணமாக்கு.
    குறி பார்த்து
    பிணத்தைப் புணர்…!”

  12. நீங்கள் பல பிரச்சினைகள் பற்றி குழப்புகிறீர்கள். எவ்வளவு மக்களுக்கு ஈழம் பற்றி தெரியும்? மக்களுக்கு பிரச்சினைகளை தெரிவிக்க இரு ஊடகம் வேண்டாமா?

  13. எல்லாரும் ரொம்ப மனசு கஷ்ட படுவது போல உள்ளது ..
    இப்படி தாங்க தம்பி பிரபாவும் அகப்பட்ட “சகோதர போர்ராளிகளை” எல்லாம் டயர் போட்டு எரிச்சாப்போல ..
    அவங்க விட்ட கண்ணீர் தான் இப்படி ஆச்சுதோன்னு இருக்கு..
    என்ன பிரபா செஞ்ச கொலையோட படங்கள் எல்லாம் பெரிசா வெளியே வரல்ல…
    பிரபா போர் குற்றவாளியா??

  14. மிஸ்டர் வினவு ஈழத்தமிழர்கள் உங்களிடம் ஐயா எங்களுக்கு அரசியல் வழிகாட்டுங்கள் என்று கேட்கவில்லை.அவர்களால் இயன்றதை செய்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கு உதவ பலர் இந்தியாவில் இருக்கிறார்கள்.அது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தருகின்றன.அம்னெஸ்டி ஆதரிக்கிறது.ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள்.
    ராஜபக்சே என்ன சொல்கிறார்- என்னை கேட்க மேற்குலகிற்கு என்ன உரிமை இருக்கிறது, உங்கள் யோக்கியதை என்னவென்று தெரியாதா.மிஸ்டர் வினவு சொல்கிறார்
    மேற்குலகை நம்பாதீர்கள்,அவர்கள் மோசமானவர்கள் என்று.ராஜபக்சேயை மேற்குலகம் கண்டிக்கிறேன்,தண்டிக்கிறேன் என்று சொல்ல முற்பட்டாலே உனக்கு என்ன யோக்கியதை என்று கேட்கிறார்கள் சிங்கள பேரினவாதிகள்.வினவு மறைமுகமாக சொல்வதை ராஜபக்சே நேரடியாகச் சொல்கிறார்.இரண்டு பேருமே ஒன்று சேரும் விஷயம்-ராஜபக்சேயை கேள்வி கேட்க,தண்டிக்க மேற்குலகிற்கு தகுதி இல்லை.சிங்கள பேரினவாதம் சொல்வதை வினவு எதிரொலிக்கிறார்-வேறு வார்த்தைகளில்.புரிகிறதா, வினவின் அரசியல் எதில் முடிகிறது என்று.

    ஜெக்கு தகுதி இல்லை,வைகோவிற்கு தகுதி இல்லை,அவர் அப்படி இவர் இப்படி என்று குறை கூறியே அரசியல் நடத்தும் அற்ப வினவு கும்பலின் அரசியல் வலு என்ன,இவர்களால் என்ன செய்ய முடியும் என்று எல்லோருக்கும் தெரியும்.வினவு கும்பல் மாவோயிஸ்ட்கள் போல் ஆயுதம் ஏந்தி போராடும் அமைப்பும் அல்ல, லட்சக்கணக்கான
    மக்களின் ஆதரவை பெற்று வெளிப்படையாக அரசியல் செய்யும் கம்யுனிஸ்ட் கட்சியும் அல்ல.வெகு மக்கள் அரசியலில் அவர்களை யாரும் பொருட்படுத்துவதில்லை.சிபிஎம்
    அவர்களை விட அமைப்பு ரீதியாக,மக்கள் ஆதரவு ரீதியாக வலுவானது,பெரியது.
    ஜெ ஒரு மாநில முதல்வர்,ஒரு அரசியல் கட்சியின் தலைவர்,அகில இந்திய அரசியலில்
    ஒரு சக்தி.எனவே இவர்கள் ஆதரவு இருந்தால் போதும், வினவு கும்பலின் ஆதரவு தேவையில்லை.வினவு கும்பல் எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கட்டும்.

    • நீங்கள் சொல்லுகிற தகுதியும் அக்கறையும் உள்ள அத்தனை பெரியவர்களும் என்ன செய்தார்கள்?
      அவர்களில் யாருக்கும் தமிழர் பற்றியோ சிங்களவர் பற்றியோ அக்கறை இல்லை. சும்மா நாடகமாடுகிறர்கள். (ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்).

      வினவு அதை அம்பலப் படுத்துகிறதால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

      இலங்கையில் எந்த அந்நியத் தலையீடும் வேண்டாம் என்பது தான் இலங்கைத் தமிழரின் பட்டறிவு.
      இலங்கையில் உள்ள இந்தியாவின் கொத்தடிமைக் கட்சிகளும் புலம் பெயர்ந்த மேற்குலகின் தரகர்களும் இன்னொரு முறை தமிழர்களை அழிவுக்குள் தள்ள இடமளிக்கக் கூடாது.

  15. உண்மைதான்!
    தமிழர்களிடம் ஒற்றுமை கிடையாது:
    சூப்பர் மார்க்கட்டில் கிடைக்குமா?

  16. கட்டுரையாளர் கடைந்தெடுத்த தமிழினத்துரோகி…..தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் தெரிகிறார்…..அப்படி இல்லை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது

  17. வினவு தெளிவான பதிவு. ஈழத்தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு போர் குற்றத்தில் என்ன பங்கு இருக்கிறதோ,அதே பங்கு விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் உண்டு.தவறுகளை திருத்திக்கொண்டு மக்களை ஒன்றி திரட்டி போராடுவதை விடுத்து,திரும்பியும் பழைய பயங்கரவாத செயல்தந்திரங்களையே செய்ய துடிக்கிறார்கள் புலிஆதரவாளர்கள்.மக்களை நம்பாத தனிநபர் வழிபாட்டையே நம்பி இருக்கும் புலம்பெயர் தமிழர்கள், மீண்டும் இப்படி ஒரு படுகொலையை ஏற்படுத்தத்தான்
    செயல்ப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் மக்கள் மீண்டும் ஏமாற தயாராக இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறென்.

    • மக்கள்……ரொம்ப தெளிவா இருக்காங்களா?…….தனிநபர் வழிபாடா………..கட்டுரையாளரே பரவாயில்லை……….

      • இந்த ஒலக நாயகனோ உள்ளூர் நாயகனோ அதான் கமலஹாசன் குணா படத்தில் சொல்வார்.”நடு நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்” அதாவது பாடல் எழுதுபவர்களை கிண்டல் அடித்திருப்பார்.
        அது போல வினவின் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறுவது:”பார்ப்பன,பாசிச,கோயபல்ஸ்,காவி கும்பல்,கார்பரேட்டு,போலீசு இதெல்லாம் தவறாமல் இடம்பெறும்.

  18. மனசு பதைக்கிறது… என்ன செய்தாலும் ஆக்க முடியாது என்று அழிவைப் பற்றி மட்டுமே பேசி மாய்கிறோம்… ஒவ்வொருவராய் கை காட்டி ஒன்றும் செய்யாமல்… ரஜினி இட்லி சாப்பிட்டால் மட்டும் போதும் நமக்கு…!

  19. *&**(^^ எல்லாத்தையும் அழிச்சிட்டானுங்க…மனிதர்களையும்,நம்பிக்கைகளையும்…..இனி செய்வதற்கு ஒன்றும் இல்லையோ என்றே அஞ்ச தோன்றுகிறது …..

  20. கொத்து குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன.சரி இதை சப்ளை செய்தது யார்?ரசியா!!
    அப்புறம் எய்ட்ஸ் நோய் கொண்ட சீன கைதிகளை விட்டு தமிழச்சிங்க புனரப்படுகின்றனர்.இதுவும் இன அழிப்புதான்.இது போருக்குப்பின் இன்னும் நடக்குது.
    கம்யூனிச க்யூபா இலங்கையை ஆதரிக்கிறது.இது பற்றி நீங்க வசதியா வாய்திரக்களை!
    இங்கிலாந்தின் உதவியை புறக்கணிக்க வேண்டுமென்கிறீர்கள்.சரி ஓங்க கம்யூனிச க்யூபா உதவிக்கு வருமா?இல்லை ரசியா சீனா வருதா?இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையைத்தான் ஆதரிக்கிறது.

    • விடுங்க ரவி…..தூங்கறவன எழுப்பலாம்…..இவங்க தூங்கற மாதிரி நடிக்கிறவங்க…..

  21. விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தப்போ நாங்கள் முன்பே சொன்னோம்னு சேடிசம் கலந்த ஒரு கட்டுரையை ஓங்க இயக்கம் எழுதியதே அதுக்கு என்ன சொல்றீங்க?ஓங்க வழி தவிர எல்லா வழியும் ஓட்டை.அப்படித்தானே?சரி நீங்க ஏன் இன்னும் ஒரு மாநிலத்துலகூட ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை?ஏன் இப்போது மேற்கு வங்கத்திலும் ஒட்டு விழுக்காடு 75 % மேல் இருந்தது?அங்கதான நீங்க வலுவா இருந்தீங்க!

  22. வினவு இணையத்தளத்தை தேடலில் கண்டு பிடித்த போது அதில் பிரசுரித்து இருக்கும் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆவலை இத்தளம் ஏற்படுத்தியது. சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள், செய்திகள் , குறிப்பாக சாதீயத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிரான விடயங்களை எழுதியிருக்கும் விடயங்களே என் ஆவலைத்தூண்டியது.

    ஈழத்தைக்குறித்து எழுதியிருக்கும் செய்திகளிலும் நடுநிலை தவறாத போக்கை கடைப்பிடித்திருப்பது சிறப்பு. ஆனால் இந்த மனப்பாங்கு இந்திய வாழ் தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்குமாயின் மகிழ்ந்திருப்பேன். இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழச்சி என்றாலும் இந்திய வம்சாவளியினத்தவள் என்ற காரணத்தால் எனக்கும் இந்திய நாட்டிற்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். அந்த உரிமையில் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் தோன்றியது.

    1. ஈழம் என்று நீங்கள் இங்கே விழித்திருப்பது இலங்கை தேசத்தையா அல்லது இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு பிரதேசத்தையா(யாழ்ப்பாணம், மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள்)?

    2. இலங்கையில் வடக்கில் மட்டும் அல்ல , முழு இலங்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். முக்கியமாக மலையகம் என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில். இங்கு இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்படும் ஒரு தமிழ் வர்க்கத்தினர் வாழ்வது இந்திய மக்களுக்கோ தமிழக மக்களுக்கோ குறைந்த பட்சம் ஊடகத்துறைக்காவது தெரிந்திருக்குமா? அவர்கள் இந்திய நாட்டிலிருந்து அடிமைகளாக பிழைப்பு தேடி இலங்கைக்கு வந்து இந்தியன் என்ற அடையாளமும் தொலைக்கப்பட்டு இலங்கை நாட்டவன் என்று தன்னை அடையாளப்படுத்தவும் முடியாமல் தேயிலைக்காடுகளில் குளிரிலும் அட்டைக்கடியிலும் வேலை பார்த்து அடிப்படை வசதிகள் கூட இன்றி பட்டிக்காட்டு சமூகமாக மறக்கடிக்கப்பட்ட மக்களாக குறைந்த பட்ச கூலிக்காக போராடிக்கொண்டு இருக்கும் இந்த முகவரி தொலைத்தவர்களை பற்றி கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? உன் சகோதரனை மறந்து விட்டு ஈழத்தை பற்றி நீ எழுதி நிரூபிக்க முயல்வது எதை?

    3. ஈழ மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று போராடும் நீங்கள் இலங்கையிலிருந்து பிழைப்புத்தேடி அல்லது படிப்பிற்காக இந்திய மண்ணுக்கு வருபவர்களை தீவிர வாதி என்று முத்திரை குத்தி அலைக்கழிப்பதும் ஏனோ?

    4. இங்கு இருக்கும் தமிழனின் முதலும் கடைசியுமான நம்பிக்கை என்னவென்று தெரியுமா? இங்கு சிங்களவன் அடித்தால் தமிழனை இந்திய நாடு இரு கரம் நீட்டி ஓடி வந்து அரவணைக்காவிடினும் புகலிடம் தந்தாவது ஆதரவளிக்கும் என்பது தான். ஆனால் ராமேசுவரம் அகதி முகாம்களிலும் அதற்கு அருகாமையிலும் இலங்கைத்தமிழர்கள் பிச்சையெடுத்து உண்பதையும் அப்படி உன்ன தன்மான உணர்ச்சி இடம் கொடுக்காமல் இங்கு அடி பட்டு சாவதே மேல் என்று திரும்பி வருபவனைப் பற்றி தெரியுமா உனக்கு?

    5. ஈழத்தைக் குரித்தாண இந்தியாவின் போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவும் சுயலாபத்துக்காக மட்டுமே என்று மாறி விட்டனவா? முத்துக்குமாரின் சாவை நாங்கள் மறக்கவில்லை. அவன் தெய்வமாக மாறிய ஒரு மனிதன். ஆனால் அவன் ஒருவனுக்கு மட்டுமாக எம்மீதான அக்கறை சுருக்கி விட்டதா? வெறும் கடிதங்கள், தந்திகள் வாயிலாக போரை தடுத்து நிறுத்த முயற்சி செய்து விட்டு செம்மொழி மாநாடு என்றும் பாராட்டு விழா என்றும் ஒரு அரசியல் வாதி சுய புராணம் பாடிய போது அங்கு கூடிய லட்சக்கணக்கான மக்களை நாங்கள் எந்தக்கணக்கில் சேர்க்க?

    6. இலங்கை மக்களுக்காகத்தான் ஒவ்வொரு தடவை ராஜ பக்சே இந்திய விஜயம் செய்யும் போதும் கோடிக்கணக்கில் உதவியாக கொட்டிக் கொடுக்கின்றோமே என்று கேட்கிறாயா? பணத்தை தின்றால் பசி தீருமா? குறைந்த பட்சம் அந்த பணம் உரிய மக்களுக்கு போய் சேர்ந்ததா என்று பார்க்க மாட்டாயா? அல்லது கொடுத்த பணத்தை என்ன செய்தாய் என்று கேள்வி கேட்க மாட்டாயா? அகதி மக்கள் கூரையில்லா கொட்டிலுக்குள் அடைந்து கிடக்கும் போது உனக்கு எதற்கு கப்பலே வராத இடத்தில் புதிய துறை முகமும் விமான நிலையமும் என்று ராஜ பக்செவின் கழுத்தில் இருக்கும் சிவப்புத்துண்டாலேயே அவன் கழுத்தை இறுக்கி கேட்க மாட்டாயா? உதவிக்கு கணக்கு கேட்கக் கூடாது என்று எந்த @%#&*( சொன்னான்?

    7. அனுபமா ராவ் இற்கு அரசியல் அலுத்துப்போனால் இலங்கை சுற்றுலா. ஒரு குன்று மணியைக் கூட பொறுக்கிப் போட்டதாகக் காணோம். இந்த அம்மணியின் வருகைகள் சாதித்தது என்ன?

    8. தினம் தினம் இலங்கைப் போர் குற்றங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருக்கும் நிலையில் நீ இதற்கு காரணமானவர்களை தண்டிக்கவிடினும் தட்டிக்கேட்க மாட்டாயா? இந்திய அரசாங்கமும் மன்மோகன் சிங்கும் ராஜ பக்சே வை இன்னும் தனது டர்பனுக்குள்(durban) ஒளித்து வைத்து காப்பாற்ற முயல்வதுவும் ஏனோ? அவன் உனக்கு மாமனா மச்சானா அல்லது ________ a?

    இது ஒரு சாமானியனின் கேள்வி மட்டும் அல்ல, அனைத்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் கேள்வி.

    • ஈழத்தைக்குறித்து எழுதியிருக்கும் செய்திகளிலும் நடுநிலை தவறாத போக்கை கடைப்பிடித்திருப்பது சிறப்பு. ///
      .
      .
      ஆமாமா நடுநிலைதான்.ரசியாவின் கொத்து குண்டு பத்தி சொல்லாமை,சீனக்கைதிகளின் அட்டகாசம் கம்யூனிச கியூபாவின் இலங்கை ஆதரவு இது பத்தி சொல்லாதது நடுநிலைதான்.

    • குறிப்பாக சாதீயத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிரான விடயங்களை எழுதியிருக்கும் விடயங்களே என் ஆவலைத்தூண்டியது. ///
      .
      .
      இவுங்க வூட்டு கக்கூசுல அடைப்புன்னாலும் அதுக்கு பார்ப்பனர்கள்தான் காரணம்.தலித்துகளை இன்னும் துன்புறுத்துவது எந்த பார்ப்பனனும் இல்லை.பிற்படுத்தப்பட்ட சாதிகள்தான் குறிப்பாக மருத்துவர் கொய்யாவின் கட்சி.அதை பத்தி பேசுங்க.பெண்ணியம் பத்தி பேசும் வினவு சவுதியில் பெண்கள் கார் ஓட்டினால் அவர்கள் கைது செய்யபடுகின்றனர்.அதபத்தி எழுதுங்க.பாகிஸ்தான்ல மத துவேஷத்த எதிர்த்த கவர்னர் மத வேரியனுன்களால் கொல்லப்பட்டார்.அதா ஏன் சொல்லல?தஸ்லிமா நஸ்ரின் இங்குள்ள முஸ்லீம் மத வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டார் அதா பத்தி சொல்லுங்க.சொல்ல மாட்டீங்க.ஏன்னா நீங்க பின்பற்றுவதும் அதே கருணாநிதி வழிவந்த போலி நாத்திகம்தான்.அதாவது ஹிந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது மற்ற மதங்களை கண்மூடி ஆதரிப்பது

  23. […] ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது. Turn off the lights […]

  24. பெரிய சுண்ணாம்பு களவையில், தினமலம் றமேசையும்,மண்டு ராமையும்,சப்ரமணிய சாமியையும் போட்டால் தமிழனுக்கு வாழ்வு உண்டு!

  25. இலங்கைப் பொருளாதாரமும், உள்நாட்டு வளர்ச்சியும் அதள பாதாளத்தில் கிடக்கின்றன. கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சுவாசம் அளிப்பதே இந்திய மற்றும் சீன அரசுகளின் பண, ஆயுத உதவிகளே! சீனக் கம்யூனிச அரசின் இந்த அராஜகம் பற்றி இதுவரை வினவு எழுதியிருப்பதாகத் தெரியவில்லை!

  26. ஒரு மனிதனுக்கும் தனக்கு சார்பான விடயத்தை இன்னொருவன் பேசும்போது அது நடுவு நிலமையாக இவன் கண்ணோட்டத்தில் தோன்றுவது இயல்பு தானே. 😛 இதற்காக வினவு எழுதும் எதையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பவளும் இல்லை நான்.

    சாதியத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான செய்திகள் என்று குறிப்பிட்டேனே தவிர பார்ப்பனத்துக்கு எதிரான என்று குறிப்பிடவில்லை. இதில் எந்த சாதிக்கும் ஆதரவாக நான் வக்காலத்து வாங்கவில்லை. எவன் ஒருவன் சாதியை குறிப்பிட்டு இன்னொருவனை இழிவு படுத்துவானோ அல்லது அடிமைப்படுத்த முயல்வானோ அவன் தான் கரை படிந்தவன். அவன் மேல் சாதியா கீழ் சாதியா என்பதில் எனக்கு அக்கறை இல்லை.

    பலர் சாதீயத்தை அல்லது குறிப்பிட்ட சாதியை ஆதரித்து அரசியல் செய்கிறார்கள். வினவு குறிப்பிட்ட சாதியை எதிர்த்து அரசியல் செய்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.

  27. புலிகளை குற்றம் சாட்டுவது ஏன் என்று தெரியவில்லை…..ம.க.இ.கா வின் வறட்டு பிடிவாதம் சலிப்பை ஏற்படுத்துகிறது….மக்களை எங்கே புலிகள் பார்வையாளர் களாக வைத்து இருந்தனர்…அவர்கள் தானே ஆயுதம் தாங்கி போராடியவர்கள்….மக்களில் இருந்து வந்தவர்கள் தானே புலிகள் …ம.க.இ.கா ஏன் மா.வோ படையினரை போல போராட வில்லை…காகிதத்தோடு மட்டும் போரை முடித்துக் கொள்ளும் எண்ணமா…….

    • //.மக்களை எங்கே புலிகள் பார்வையாளர் களாக வைத்து இருந்தனர்…அவர்கள் தானே ஆயுதம் தாங்கி போராடியவர்கள்….//

      புலிகள் எங்கே மக்களை பார்வையாளர்களாக வைத்திருந்தார்கள்? அவர்களை மனிதக்கேடயமாக அல்லவா பாவித்தார்கள்.

      மதம் மாற்ற முயல்வது தவறு என்று நீங்கள் கருதும்போது(இங்கிருக்கும் பலர் அல்லது சிலர்) ஒருவனை மூளைச்சலவை செய்து இயக்கங்களில் சேர்ப்பது மட்டும் சரியா? அதுவும் குழந்தைகளை. இதில் சிலர் விரும்பிச் சேர்ந்தவர்கள் சிலர் மூளைச்சலவை செய்து சேர்க்கப்பட்டவர்கள். சிலர் கட்டாயப்படுத்தி மிரட்டி சேர்க்கப்பட்டவர்கள். பென்சில் பிடித்து பாடம் எழுத பள்ளிக்கு போகும் உன் குழந்தையை இந்தியாவுக்காக என்றாலும் மழலை மொழி மாறா பாலகனை ராணுவத்திலே சேர்ப்பாயா அல்லது சேர்வதை நீ மனமொப்பி ஏற்றுக்கொள்வாயா? தவறு யார் செய்தாலும் தவறு தானே. நம் இனத்துக்காக செய்தால் அது சரியென்று ஒத்துக்கொள்ள முடியுமா?

      உரிமைக்காக போராடுங்கள், தவறில்லை. ஆயுதப்போராட்டம் கூட பரவாயில்லை. ஆனால் அது மற்ற எல்லா விதமான போராட்டத்தையும் முயற்சி செய்து பார்த்த பின் எதுவுமே பயனளிக்காத பட்சத்தில் கடைசி முயற்சியாக இருக்கட்டும். அதுவும் நீ மட்டுமே உன் தரப்பில் பாதிக்கப்படுவாய், எந்த ஒரு அப்பாவியும் அல்ல என்று உன்னால் உன் மனசாட்சிக்கு உத்தரவாதம் தரக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

      • ////. பென்சில் பிடித்து பாடம் எழுத பள்ளிக்கு போகும் உன் குழந்தையை இந்தியாவுக்காக என்றாலும் மழலை மொழி மாறா பாலகனை ராணுவத்திலே சேர்ப்பாயா அல்லது சேர்வதை நீ மனமொப்பி ஏற்றுக்கொள்வாயா? //// நிச்சயமா செய்வேன் ஈழ உறவே…என் இனமே அடிமை பட்டு கிடக்கயிலே உயிருக்கு ஆசை பட்டு ஒதுங்கி கொள்ள மாட்டேன்….ஒரு அறுபது வருஷம் அடிமையா வாழ்வதை விட வீரனாக இருபது வயதில் இறந்து விடலாம்…பகத்சிங்கின் வரலாற்றை படியுங்கள் ஈழ உறவே….நான் வினவிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்….

        • great answer. 🙂 but it is not always practical.

          வாதத்திற்காக நான் கூறவில்லை. ஆனால் விரும்பிச் சேர்வதென்பது வேறு. சேர்ந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் சேர்க்கப்படுவது வேறு.

          ஒரு விடயத்தை பற்றி சிந்தித்து பார்த்தீர்களா? இன்று புலிகளுக்காக வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழரும் மற்ற நாடுகளில் வாழும் தமிழரும் ஆர்ப்பரித்து புலிகள் புகழ் பாடுவதைப்போல ஈழ அகதி முகாம்களில் வாழும் தமிழர் பாடுவதில்லை. ஏன்? இங்கு பலர் கூறுவதைப்போல இவர்களுக்காக தானே புலிகள் பாடு பட்டார்கள்? இருந்தும் ஏன் அவர்களை தம்மை காக்க வந்த கடவுளாக இவர்கள் கருதவில்லை? இருந்து அனுபவித்தவனுக்கு தானே தெரியும் வலியும் வேதனையும்?

          ஈழம் வாழ் ஈழத்தமிழரின் இன்றைய எதிர் பார்ப்பெல்லாம் உயிருக்கு பாதுகாப்பான ஒரு அமைதியான வாழ்வே தவிர பழி வாங்கும் உணர்சியுடனான திருப்பித்தாக்கும் செயல்களல்ல. ஆழ் மனதில் காலத்தால் மறையாத வடுவும் வலியும் இருந்தாலும் அதற்கான நேரம் வரும் எமக்கு. அது இன்றல்ல. நாம் வழங்கும் தீர்வு நிரந்தரமானதாக இருக்கும். அந்தப்போராட்டம் இரு தரப்பு போராளிகளுக்கு இடையில் மட்டுமானதாக இருக்கும். இடையில் தமிழனோ சிங்களவனோ எந்தவொரு அப்பாவி குடி மகனோ பாதிக்கப்பட விட மாட்டோம். சடலங்களின் மேல் ஏறி நின்று வெற்றி கொக்கரிக்கும் தீர்வாக இருக்க வேண்டாம்.

          புலிகள் மக்களை வெறும் பார்வையாளராக வைத்திருந்தார்கள் என்று எழுதிய வினவிடமா நீங்கள் இதற்க்கு விளக்கம் எதிர் பார்க்கின்றீர்கள்? வேடிக்கை தான்.

          • I had written an article to my friend few years before… Just pasting it here again.

            ship transportation plays a major role in the economy of any country. In this perspective, Indian Ocean plays a major role. Indian Ocean connects the oil rich gulf and population / culture rich Asia.

            To know more on this i.e., please refer the below link and the importance of Indian Ocean.

            http://www.sangam.org/2007/10/International.php?uid=2566

            The looting expert called westerns always had an eye on Indian Ocean. Western people always look for long term goal. The western (American so called Buddhist Henry Steel Olcott) penetrated into the Buddhism and reformed it as a race during 19th century… for separating the srilanka from the core concept of mother land…

            http://books.google.com/books?id=aNT3q1HjY_MC&dq=isbn:0521793246

            Since the concept of mother land is corrupted, it made them to fight with Tamil people…It all started during 1956’s. I request you to read the list of srilanka presidents… (After the suyas canal issue)

            http://en.wikipedia.org/wiki/Buddhism_in_Sri_Lanka & http://en.wikipedia.org/wiki/List_of_Presidents_of_Sri_Lanka
            http://en.wikipedia.org/wiki/Suez_Canal

            After 1857 freedom fight in India, the western have done some in depth analysis to loot the world in other way. For long run, they started the party called congress where they had given some political power to westernized Indian i.e, slavish mentality people… Nehru is one of such person….The foreign studied Nehru who has poor knowledge on the political science / international affair became the leader of this country with the help of Mahatma Gandhi. Indian is the only country in the world which had a foreign president (Mount petan) even after Independence. It helped the western people to corrupt further the integration of srilanka from India during the beginning of India. Thanks God, we had persons like Patel, Rajaji and Ambedukar.. Otherwise the country would have been in bankrupt condition.

            Now, questions arise, how does it related to current problem?

            Till the 20thcentury, western people played a major role in srilanka for their business. After 2000, it is china that is doing all such black magic thing. Because, it always wants to have a strong hold on srilanka sea port.. Which Indian supposes to have….

            This is the main reason of LTTE defeat. Till 2000, LTTE had a very good relation with western christian people… Because of china intervention and Iraq war, western people lost their grip slowly. I feel china could be the reason behind the killing of fisher man now….

            The actual problem of fisher man started again by congress party leader Indira… of course, this time, our so called Dravidian party leader called karunanithi was with her. Indira sold the katcha island to srilanka… As usual, karunanithi who was the tamilnadu CM was silent because of his personal benefit…. Read the below llink

            http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

            Now Sonia Gandhi continues the destiny of… betraying this country.

            I just remembered the sentence written in the book… India is the only country in the world which haven’t learnt anything from the history

  28. மக்களை ஆட்டுமந்தைகள் போல் வழிநடத்தும் தமிழினவாதிகளும் சீமான்,வைகோ போன்ற அட்டைகத்திகளையும் அம்பலப்படுத்துவது மட்டுமல்ல, நாம் மக்களை திரட்டி போராடாத வரை இதற்க்கு தீர்வில்லை. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

    • புதியவன் …ம.க.இ.கா வினர் கையில் என்ன உள்ளது…நீங்கள் செய்தால் மக்களை திரட்டுவது…மற்றவர்கள்(அண்ணன் சீமான்..மற்ற தமிழ் தேசிய வாதிகள் ) செய்தால் ஆட்டு மந்தையா…

  29. ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வந்தா அதை எதிர்த்து வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவோம்னு மிரட்டுகிறது ரசியா மற்றும் சீனா.இந்தியா பற்றி சொல்லவே தேவையில்லை.அதுவும் போற்குற்றத்தில் பங்காளி என்பதால் வழக்கம் போல தீர்மானத்தை எதிர்த்துதான் ஓட்டளிக்கும்.ஆக கிழக்கு அல்லது மூன்றாம் நாடுகளில் இலங்கையை எதிர்ப்பவர் யார்?

  30. வினவு இப்போது இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சேனல் 4 வீடியோ பற்றி ஒரு கட்டுரை என்ற பெயரில் ராஜபக்சே தவிர அவரை எதிர்ப்பவர்கள் எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.
    தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தனி தீர்மானங்களான இலங்கை மீது பொருளாதார தடை மற்றும் கட்ச்சதீவு மீட்பு இரண்டுமே ஏமாற்று வேலையாம்.இந்த வீடியோவை வெளியிட்ட இங்கிலாந்தும் நம்பத்தகுந்தது இல்லையாம்.சரிங்க்ணா யாரை நமப் நீங்க சொல்லுங்க?!!
    கொத்து குண்டுகளை இலங்கைக்கு சப்ளை செய்த ரசியாவை நம்பனுமா?எயிட்ஸ் நோய் கொண்ட சீன கைதிகளால் தமிழச்சிகள் புனரப்படுகின்றனர்.அந்த சீனாவை நமப்னுமா?இல்லை கம்யூனிச நாடுன்னு சொல்லப்படும் இலங்கைக்கு ஆதரவு என அறிவித்த க்யூபா உடனா?யாரை நம்பனும் நீங்க சொல்லுங்க?
    இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இலங்கை போர் குற்றங்கள் பத்தி விவாதிக்கப்பட்டது.ஆனால் வினவு சொல்வதென்ன?மேற்குலக நாடுகளை நம்ப வேண்டாம் அவர்கள் ஏமாற்றுவார்கள்.சரி கிழக்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எதனா உதவிக்கு வருதா சொல்லுங்க?இல்லை ஒங்களுக்கு ஏதாவது நாட்டை அப்படி தெரியுமா?
    கட்டுரையில் வசதியாக இலங்கை போரிலும் சரி அதற்கு பின்பும் சரி ரசியா சீனாவின் பங்கை மறைக்கிறது வினவு .இலங்கைக்கு ஆதரவளித்த க்யூபாவையும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.ஏதாவது நல்லது நடக்காதான்னு அத்தனை ஈழ தமிழர்களும் இங்குள்ள இன மானமுள்ள தமிழர்களும் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கையில் “அவனை நம்பாத அவன் லொட்டு! இவன நம்பாத இவன் லொசுக்கு”ன்னு திண்ணையில் பாக்கு இடித்துக்கொண்டே தெருவில் போகிற வருபவர்களை திட்டிகொண்டிருக்கும் கிழவி போல வினவு ஆனது கொடுமையிலும் கொடுமை.அப்போ யார்தான் நல்லவங்க நீங்களே சொல்லுங்க!

    இரண்டு உதாரணங்கள்:நீச்சல் தெரியாத ஒருவன் காட்டாற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான்.கடைசி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு உதவிக்கு கையை மேலே தூக்கி ஆட்டிகொண்டிருக்கிறான் .அப்போது யாரோ ஒருவர் அந்த பக்கம் வந்த இவனுக்கு கை கொடுக்கிறார் அவனும் மேலே வருகிறார்ன்.கைகொடுத்தவன் ஏதோ ஒரு வகையில் தீயவன் என்பதால் சீ வேணாம் போ நான் மூழ்கிடுரேன்னா சொல்லுவான் அந்த சாககிடப்பவன் ?அப்படி இருக்குது வினவு சொல்வது.அதாவது மூழ்குபவன் தன்னை காப்பாற்ற நீளும் கைக்குரிய அந்த நபரின் கிரிமினல் ரெகார்டை சாவகாசமா ஆராய்ஞ்சி அதன் படி இவனால் காப்பாற்ற படுவதா வேண்டாமான்னு முடிவு செய்யணுமாம்,.அது சரி ஒரேடியா சுடுக்காட்டுலதான் அப்படி முடிவு செய்ய முடியும்.
    இன்னொன்று: ஒருவன் வண்டியோ காரோ சைக்கிளோ ஒட்டிக்கொண்டு போகிறான்.இடது பக்கம் திரும்ப தனது இடது கையை நீட்டி சைகை செய்கிறான்.இது வினவின் பார்வையில் எப்படி இருக்கும் தெரியுமா?அவன் சைகை செய்தது யாரவது அவனை மோதிவிட்டால் “யோவ் நாந்தான் கை காட்டுநேனுல்ல நீ என்ன குருடா”அப்படின்னு கேக்கதான் அவன் கை காடுறான்னு சொல்வது போல.
    ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வந்தா அதை எதிர்த்து வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவோம்னு மிரட்டுகிறது ரசியா மற்றும் சீனா.இந்தியா பற்றி சொல்லவே தேவையில்லை.அதுவும் போற்குற்றத்தில் பங்காளி என்பதால் வழக்கம் போல தீர்மானத்தை எதிர்த்துதான் ஓட்டளிக்கும்.ஆக கிழக்கு அல்லது மூன்றாம் நாடுகளில் இலங்கையை எதிர்ப்பவர் யார்?வினவு சொல்லுமா?இவுகளுக்கு தெரிந்ததெல்லாம் கார்பரேட்டு அமெரிக்கா பார்ப்பன,காவி கும்பல்.இலங்கை தமிழர்கள் சாகலாம்.ஆனால் மேற்குலக நாட்டின் உதவியை மட்டும் பெறக்கூடாதாம் .சே!!எத்தகைய கொடூர சேடிச மனப்பான்மை!இலங்கை இனவொழிப்பு மே 2009 இல் முடிந்ததும் வினவு&கோ ஒரு கட்டுரை எழுதியது.”நாம் அப்பவே சொன்னோம் இதெல்லாம் சரிப்படாது…….” என்று சேடிசத்தின் உச்சத்தை அந்த கட்டுரையில் காண முடிந்தது.அதன் பின் இந்த கட்டுரை.காரி உமிழ தோன்றுகிறது.
    ஒங்கள யாரும் “தமிழர்களுக்காக போராடு!கட்டுரை எழுதுன்னு கேக்கவில்லை”அதனால் இது போன்ற அபத்தத்தை நிறுத்திக்கொள்ளவும். இல்லை முடியாதுன்னா ராஜபக்சேவின் அடிப்பொடி கூட்டத்தில் சேர்ந்துடுங்க இங்க நாங்க நிம்மதியா இருப்போம்.

  31. வினவு தோழர்களுக்கு, மக்கள் சரியான பதில் கொடுத்துள்ளனர்.. மக்களை சேர்த்து போராடவேண்டும் என்ற வினவின் விருப்பத்தை, அவர்களுக்கு பிடிக்காத மெழுகுதிரி ஏந்தி ஒன்று கூடி நிறுபித்துவிட்டனர் நேற்று…

  32. don’t insert your own thought in this regarding…Ok…

    LTTE love their people.

    Your point of view….LTTE came from Heaven..? they are also one among the people.

  33. யார் மரணம் எப்படியிருக்கவேண்டும்?!

    காணொளி கண்டபின் தோன்றிய எண்ணங்கள் இது தனிப்பட்ட விரோதத்தால் பழி வாங்கும் என்னமல்ல என் போன்ற மனித இனம் தனி ஒரு குழு அல்லது அரசு இயந்திரத்தால் இப்படி சாகும் போது அவனும் அப்படியே சாக வேண்டும் என்பதுதான் நியதி

    கொலு மண்டபத்திலா?
    ஐநா மன்றத்தாலா? நோயிலா?
    துயிலும் போதா? – அல்ல
    அந்த போராளிகளாலா?….

    அடையாளம் தெரியாமல்
    அனாதையாகவா
    அரசு மரியாதையுடன் – 21
    குண்டு முழங்கவா

    ஆம் அகிலமும்
    அரசு இயந்திரமும்
    அதிகாரமும் – நான்
    அசைந்தால் அசையும்

    மாட மாளிகைகள்
    ஏவல் பணியாளர்கள்
    மகுடம் தந்த பரிசு – ஆனால்
    மாறிடுமோ?!

    மெழுகுவர்த்தியும்
    ஐநாவும்
    அரசியல் மொக்கைகளும் – என்
    ஆயுள் காப்பீடுகள்

    ஆயினும்
    அங்கிங்கொன்றாய்
    அலையும் – அந்த
    மனிதர்களால்

    ஆடையின்றி
    கைகள் பிணைத்து
    கண்களை கட்டி – மூளை
    சிதறி சாவேனோ

    உற்றார் உறவினர்
    பெற்றோர் சகோதரர்
    அங்ஙனமே அடுக்கி – அதனை
    காட்சி பொருளாக்குவீரோ

    வல்லுறவு கொண்டு
    கொல்லுவாயோ – அதனை
    செல்பேசி படமெடுத்து
    குதுகலிப்பாயோ

    எஞ்சியவன் எனைபார்த்து
    அஞ்சி அழுவானோ
    அரற்றுவனோ – என்
    நிலைகண்டு இரங்குவானோ

    வெடிசத்தம் கேட்டால்
    வேடிக்கையாயிருந்தேன்
    விரைந்தோடுகிறேன் – இன்று
    பதுங்கு குழி தேடி

    பல்லக்கில் பவனி
    பன்னீரில் குளித்த
    பளிங்கு மகளவள் – பாவிகளே
    பாடை கூட இல்லையோ

    பத்தொடு பதினொன்றாய்
    ஒட்டு துணியுமில்லாமல்
    கொட்டி வைத்த குவியலில் – ஒரு
    கோமகனின் குலமகளா

    கையிழந்து காலிழந்து
    கண்ணும் இன்னும் பிற
    உறுப்பிழந்து – குருதியோடு
    கூப்பாடிட

    குண்டடிப் பட்டு
    மண்டை உடைந்து
    மற்ற உறுப்பும் சிதைந்து – சற்று
    பாருங்கள், காப்பாற்றுங்கள்

    கொண்டு சென்ற இடமோ
    அப்பலோ அல்ல
    எப்பவோ நான் இடித்த
    ஒரு மருத்துவமனை

    சிதிலமடைந்த கூரை
    கிடைக்காத மருந்து
    உயிர் பிழைக்க – அய்யகோ
    உத்திரவாதமில்லையோ

    வீடு கட்டும் செங்கலை
    எடுத்து போடயிலே
    பார்த்து பத்திரம் என்றேன்
    உடைந்து வீணாகுமோ என்று

    காடு போக
    கண் மூடிவிட்டாரென்றால்
    கல்லை விட கேவலமா
    கன்னாபின்னாவென்று குவித்திருக்கிறீர்கள்

    காட்டில் ஓலையை இழுத்தால்
    புழுதி கிளப்மென்று தூக்கி செல்வர்
    கூட்டில் உயிரில்லை என்றா – புழுதி
    கூட்டி இழுத்துச் செல்கிறீர்

    வேளைக்கொரு ஆடை
    விருந்துக்கொரு ஆடை
    விதவிதமாய் அணிந்து – இன்று
    வெற்றுடலாய்

    யாரது
    அங்கவயம் திறந்திருக்க
    சங்கடமில்லையோ – அதனை
    காட்சி படமெடுக்கிறாய்

    எட்டி வேறு உதைப்பாயோ
    ஏதுமற்ற சடலமடா
    ஏகத்தாள பேச்சேனடா – அடேய்
    எல்லோரும் மனிதர்தானே

    எட்டுவகை உணவு
    எடுத்து வைக்க ஆளு
    என்று வாழ்ந்த – மகனின்று
    தட்டேந்தி நிற்கிறான்

    பளிங்கு மாளிகையில்
    பஞ்சணையில் படுத்துறங்கியவன்
    பிளாஸ்டிக் கூடாரத்தில்-நெருஞ்சி
    காட்டில் கண்யருகிறான்

    இத்தனையும் நடக்குமோ
    எனைகாக்க யாருமில்லையோ
    ஏற்கனவே நடந்திருக்கிறது – எனினும்
    எனக்கு நம்பிக்கையிருக்கிறது

    என் முன்னோடிகள்
    கண் முன்னாடி போனகாதை
    நான் அறிந்தாலும்- ஐநா
    தள்ளிப் போடும் சாவை

    யாரிந்த முடிமன்னன்
    ஏனிந்த புலம்பல்கள்
    இங்ஙனமாகுமோ மரணம் – இனி
    சங்கதி சொல்ல வேண்டியது நீங்கள்

  34. //இலஙகையின் கொலைக் களங்கள்// தமிழில் தறவிரக்கம் செய்வது எப்படி? தயவுசெய்து உதவுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க